Thirumozhi 5-2

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

இரண்டாம் திருமொழி

தாம் தம், பெருமையறியார் * தூது

வேந்தர்க்காய, வேந்தரூர் போல் *

காந்தள் விரல், மென்கலை நன்மடவார் *

கூந்தல் கமழும், கூடலூரே.   5.2.1      கூடலூர்

செறும், திண்திமி லேறுடைய * பின்னை

பெறும் தண் கோலம், பெற்றாரூர் போல் *

நறும் தண் தீந்தேன், உண்ட வண்டு *

குறிஞ்சி பாடும், கூடலூரே.   5.2.2      கூடலூர்

பிள்ளை யுருவாய்த், தயிருண்டு * அடியே

னுள்ளம் புகுந்த, ஒருவரூர் போல் *

கள்ள நாரை, வயலுள் * கயல் மீன்

கொள்ளை கொள்ளும், கூடலூரே.   5.2.3      கூடலூர்

கூற்றேருருவின், குறளாய் * நிலம் நீர்

ஏற்றான் எந்தை, பெருமானூர் போல் *

சேற்றேருழவர், கோதைப் போதூண் *

கோல் தேன் முரலும், கூடலூரே.   5.2.4      கூடலூர்

தொண்டர் பரவச், சுடர் சென்றணவ *

அண்டத்து அமரும், அடிகளூர் போல் *

வண்டல லையுள், கெண்டை மிளிரக் *

கொண்டல் அதிரும், கூடலூரே.      5.2.5      கூடலூர்

தக்கன் வேள்வி, தகர்த்த தலைவன் *

துக்கம் துடைத்த, துணைவரூர் போல் *

எக்கலிடு, நுண் மணல் மேல் * எங்கும்

கொக்கின் பழம் வீழ், கூடலூரே.   5.2.6      கூடலூர்

கருந்தண் கடலும், மலையும் உலகும் *

அருந்தும் அடிகள், அமரும் ஊர் போல் *

பெருந்தண் முல்லைப், பிள்ளை யோடிக் *

குருந்தம் தழுவும், கூடலூரே.         5.2.7      கூடலூர்

கலைவாழ் பிணையோடு, அணையும் * திருநீர்

மலைவாழ் எந்தை, மருவும் ஊர் போல் *

இலைதாழ், தெங்கின் மேல் நின்று * இளநீர்க்

குலை தாழ் கிடங்கின், கூடலூரே.           5.2.8      கூடலூர்,

திருநீர்மலை

பெருகு காதல், அடியேனுள்ளம் *

உருகப் புகுந்த, ஒருவரூர் போல் *

அருகு கைதை மலரக் * கெண்டை

குருகென்றஞ்சும், கூடலூரே.        5.2.9      கூடலூர்

காவிப்பெருநீர் வண்ணன் * கண்ணன்

மேவித் திகழும், கூடலூர் மேல் *

கோவைத் தமிழால், கலியன் சொன்ன *

பாவைப் பாடப், பாவம் போமே.    5.2.10    கூடலூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.