Thirumozhi 5-3

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

மூன்றாம் திருமொழி

வென்றி மாமழு வேந்தி, முன் மண்

மிசை மன்னரை மூவெழு கால்

கொன்ற தேவ ! * நின் குரைகழல் தொழுவது

ஓர்வகை எனக்கருள் புரியே *

மன்றில் மாம்பொழில் நுழைதந்து

மல்லிகை மெளவலின் போது அலர்த்தித் *

தென்றல் மாமணம் கமழ் தரவரு

திருவெள்ளறை நின்றானே !              5.3.1      திருவெள்ளறை

வசைஇல் நான்மறை கெடுத்த, அம்மலரயற்கு

அருளி * முன் பரிமுகமாய்

இசை கொள் வேத நூலென்றிவை பயந்தவனே !

எனக்கு அருள் புரியே *

உயர் கொள் மாதவிப் போதொடுலாவிய

மாருதம் வீதியின் வாய் *

திசை யெல்லாம் கமழும் பொழில் சூழ்

திருவெள்ளறை நின்றானே !              5.3.2      திருவெள்ளறை

வெய்யனாய் உலகேழுடன் நலிந்தவன்

உடலகம் இரு பிளவாக் *

கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவனே !

எனக்கு அருள் புரியே *

மையினார் தரு வராலினம் பாய

வண்தடத்திடைக் கமலங்கள் *

தெய்வ நாறும் ஒண் பொய்கைகள் சூழ்

திருவெள்ளறை நின்றானே !           5.3.3      திருவெள்ளறை

வாம்பரியுக மன்னர்தம் உயிர்செக

ஐவர்கட்கு அரசளித்த *

காம்பினார் திருவேங்கடப் பொருப்ப !

நின் காதலை அருள் எனக்கு *

மாம்பொழில் தளிர் கோதிய

மடக்குயில் வாயது துவர்ப்பெய்தத் *

தீம்பலங்கனித் தேனது நுகர்

திருவெள்ளறை நின்றானே !             5.3.4      திருவெள்ளறை,

திருவேங்கடம் திருப்பதி

மானவே லொண்கண் மடவரல்

மண்மகள் அழுங்க * முந்நீர்ப் பரப்பில்

ஏனமாகி அன்று இருநிலம் இடந்தவனே !

எனக்கு அருள் புரியே *

கானமா முல்லைக் கழைக் கரும்பேறி

வெண்முறுவல் செய்து அலர்கின்ற *

தேனின் வாய் மலர் முருகுகுக்கும்

திருவெள்ளறை நின்றானே !           5.3.5      திருவெள்ளறை

பொங்கு நீள்முடி அமரர்கள் தொழுதெழ

அமுதினைக் கொடுத்தளிப்பான் *

அங்கு ஓராமையதாகிய ஆதி !

நின்னடிமையை அருள் எனக்குத் *

தங்கு பேடையோ டூடிய மதுகரம்

தையலார் குழலணைவான் *

திங்கள் தோய் சென்னிமாடம் சென்றணை

திருவெள்ளறை நின்றானே!              5.3.6      திருவெள்ளறை

ஆறினோடொரு நான்குடை நெடுமுடி

அரக்கன் தன் சிரமெல்லாம் *

வேறு வேறுக வில்லது வளைத்தவனே !

எனக்கு அருள் புரியே *

மாறில் சோதிய மரதகப் பாசடைத்

தாமரை மலர் வார்ந்த *

தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல்

திருவெள்ளறை நின்றானே !          5.3.7      திருவெள்ளறை

முன் இவ்வேழுலகு உணர்வின்றி இருள்மிக

உம்பர்கள் தொழுதேத்த *

அன்னமாகி அன்றருமறை பயந்தவனே !

எனக்கு அருள் புரியே *

மன்னு கேதகை சூதகம் என்றிவை

வனத்திடைச் சுரும்பினங்கள் *

தென்னவென்று வண்டு இன்னிசை முரல்

திருவெள்ளறை நின்றானே!             5.3.8      திருவெள்ளறை

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று

அகலிடம் முழுதினையும் *

பாங்கினால் கொண்ட பரம ! நின் பணிந்தெழுவேன்

எனக்கு அருள் புரியே *

ஓங்கு பிண்டியின் செம்மலரேறி

வண்டுழிதர * மாவேறித்

தீங்குயில் மிழற்றும் படப்பைத்

திருவெள்ளறை நின்றானே !       5.3.9      திருவெள்ளறை

மஞ்சுலா மணிமாடங்கள் சூழ் திருவெள்ளறையதன் மேய *

அஞ்சனம் புரையும் திருவுருவனை ஆதியை அமுதத்தை *

நஞ்சுலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐயிரண்டும் *

எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க் கரசு ஆவர்களே.     5.3.10                திருவெள்ளறை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.