॥ श्रीमद्रहस्यत्रयसारे प्रभावव्यवस्थाधिकारः ॥
25.1 स्वरूपं यद्यादृग्गुणविभवलीलादि च विभो
स्तदाज्ञासेतुश्च श्रुतिभिरवसेयं तदखिलम् ।
तथा तद्भक्तानां तदुपसदनादेश्च महिमा
यथाधीतं सद्भिर्यतिपतिमुखैरद्ध्यवसितः ॥ ५५ ॥
25.2 இப்படி द्वयத்தில் द्वितीयान्तपदங்களாலே प्रकाशितமான सिद्धोपायविषयமாகவும் आख्यातपदத்தாலே சொல்லப்பட்ட साध्योपायविषयமாகவும் பிறக்கும் व्याकुलங்கள் शमिப்பிக்கும் வழி காட்டினோம். இவ்வுपायप्रभावविषयமாக प्रमाणங்கள் காட்டினவளவுக்கு ஏற நினைத்துங் குறைய நினைத்தும் வருங் கலக்கங்கள் शमिப்பிக்கவேணும். ‘‘आस्फोटयन्ति पितरः प्रणृत्यन्ति पितामहाः । वैष्णवो नः कुले जातस्सनस्सन्तारयिष्यति’’(வராஹபுராணம்) என்றும், ’’கேசவன்றமர் கீழ் மேலெமரேழெழுபிறப்பும் மாசதிரிதுபெற்’’(திருவாய்மொழி 2-7-1) றென்றுஞ்சொல்லுகிறபடியே अनुबन्धिகளுக்குமுत्तारकமான प्रभावத்தை யுடையனாயிறே யிவ்வுपायनिष्ठனிருப்பது. ‘‘यो ह्येनं पुरुषं वेद देवा अपि न तं विदुः’’(பாரதம் ஆரண்யபர்வம் 191-29 ) என்று भगवद्ज्ञानமுடையவனுடைய प्रभावம் देवர்களாலும் परिच्छेदिக்கவொண்ணா தென்றார்களிறே.
25.3 ஆனாலும் இதுக்கு विरुद्धமல்லாத प्रमाणबलத்தாலே முற்பட जातिव्यवस्थै சொல்லுகிறோம். ‘‘न शूद्रा भगवद्भक्ता विप्रा भागवतास्स्मृताः । सर्ववर्णेषु ते शूद्रा ये ह्यभक्ता जनार्दने’’(பாரதம் ஆச்வமேதிகபர்வம் 118-32) என்று भगवद्भक्तिயாகிற गुणविशेषसदसद्भावங்களாலே अपकृष्टजातीयரை उत्कृष्टजातीयवाचकशब्दத்தாலே சொல்லியும், उत्कृष्टजातीयரை अपकृष्ट जातीयवाचकशब्दத்தாலே சொல்லியுமிருந்தது, இதடியாக भगवद्भक्तரெல்லாரும் एकजातीयரன்றோவென்று मृदुप्रज्ञர் நினைப்பர்கள். இங்ஙனேயாகில் भागवतब्राह्मणணனின்னபடியே वर्तिப்பான், भागवतशूद्रனின்னபடியே वर्तिப்பானென்று आचारनियमங்கள் சொல்லும் सर्वशास्त्रங்களும் विरोधिக்கும்.
25.4 केवलब्राह्मणனுக்கும் केवलशूद्रனுக்குமுள்ள எல்லை भागवतब्राह्मणனுக்கும் भागवतशूद्रனுக்குங்கொள்ளவேணுமென்றும், இவர்களை समரென்கிற शास्त्रங்களும் परमपुरुषार्थसाम्यादिகளாலே யென்றும் கிடாம்பியப்புள்ளா ரருளிச்செய்தார்.
’’குலந்தரு’’(பெரியதிருமொழி 1-1.9) மென்கிற பாட்டுக்கு व्याख्यानம் பண்ணின अभियुक्तரும் जन्मத்தால் वृत्तத்தால் குறைந்தானொருத்தனுக்கு भगवत्संबन्धமுண்டானால் அவனை இவையுடையானொருத்தன் தாழ நினைக்கக் கூசும்படியாயிற்று भगवत्प्रभावமிருக்கும்படி; ஆனால் அவர்களோடு பெண் கொடுத்துக் கொள்ளுகிறதில்லையே யென்னில்; அது जातिनिबन्धनம்; श्लाघै गुण निबन्धनै
25.5 யென்று निष्कर्षिத்தார்கள். ’’குலந்தரு’’ மென்றதுவும், ’’பண்டைக் குலத்தைத் தவிர்ந்’’(திருப்பல்லாண்டு 5) தென்றதுவும் தொண்டக்குலத்திலுत्कर्षஞ் சொன்னபடி. देवतान्तरादिसङ्कीर्णकुलமன்றேயிவனது. ‘‘मा जनिष्ट स नो वंशे जातो वा द्राग्विपद्यताम् । आजन्ममरणं यस्य वासुदेवो न दैवतम्’’(வராஹபுராணம்) என்றிறே एकान्तिकुलத்திற் பாசுரம். இப்படி வேறொரு कुलமானாலும் जातिशब्दமும் कुलशब्दமும் भिन्नार्थமாகவும் प्रयुक्तமாகையாலே जाति भेदियाது. திருसुरभियाனாலும் गोत्वங்கழியாதிறே.
25.6 महर्षिகளும் ‘‘स शूद्र इति मन्तव्य’’(பாரமேஷ்ட்யஸம்ஹிதை) इत्यादिகளிற்படியே प्रतिपत्ति विशेषங்களைப் பற்ற उत्कृष्टர்பக்கல் अपकृष्टशब्दமும், अपकृष्टர்பக்கல் उत्कृष्टशब्दமும் प्रयोगिத்தார்
களத்தனை. ஆகையால் भगवद्भक्तரல்லாத ब्राह्मणர் शूद्रர்களைப்போலே யनादरणीयரென்றும், भगवद्भक्तரான शूद्रர்கள் ब्राह्मणரைப்போலே श्लाघनीयரென்றும் शास्त्रतात्पर्यம். இங்ஙனல்லாதபோது 9‘‘चण्डाळमपि वृत्तस्थं तं देवा
25.7 ब्राह्मणं विदुः’’(பாரதம் ஆச்வமேதிகபர்வம் 116-8), ‘‘चण्डाळाः प्रत्यवसिताः परिव्राजकतापसाः’’(தஷஸ்ம்ருதி 4-20), ‘‘न तेन वृद्धो भवति येनास्य पलितं शिरः । बालोऽपि यः प्रजानाति तं देवास्स्थविरं विदुः’’(மநுஸ்ம்ருதி 2-156) என்றிப்புடைகளிலே निन्दाप्रशंसैபண்ணுகிற वाक्यங்களைக்கொண்டு सर्वमर्यादैகளுங்கலங்கும் படியாம்.
ஆனபின்பு *‘‘प्रतिपत्तिविशेषार्थमन्यत्रान्यत्वकीर्तनम् । विशेषविधिसाकांक्षास्तत्र तत्तत् प्रवृत्तयः’’ ॥ என்றிங்குற்றைக்கும் समाधानம். श्रीविदुरரும் स्वजात्यनुरूपமாக विवाहादिகள் பண்ணினார்கள். ‘‘भुक्तवत्सु द्विजाग्र्येषु निषण्णः परमासने । विदुरान्नानि
25.8 बुभुजे शुचीनि गुणवन्ति च’’(பாரதம் உத்யோகபர்வம் 93-43, 45) என்றிதைக் கேட்டு दुर्योधनன் ‘‘भीष्मद्रोणावतिक्रम्य माञ्चैव मधुसूदन । किमर्थं पुण्डरीकाक्ष! भुक्तं वृषलभोजनम्’’(பாரதஸாவித்ரீ) என்று கேட்க, ‘‘द्विषदन्नं न भोक्तव्यं द्विषन्तं नैव भोजयेत् । पाण्डवान् द्विषसे राजन्! मम प्राणा हि पाण्डवाः’’(பாரதம் உத்யோக 91-27) என்றுत्तरமருளிச் செய்கையாலே श्रीविदुरருக்கு दुर्योधनன் சொன்ன जातिविशेषத்தை भगवाனிசைந்தானாயிற்று. ஆனால் ब्राह्मणர்க்கும் क्षत्रियர்க்கும் शूद्रனுடைய पक्वान्नத்தை भुजिக்கை निषिद्धமன்றோவென்னில்; ‘‘आर्याधिष्ठिता वा शूद्रा अन्नसंस्कर्तारस्स्युः’’(ஆபஸ்தம்பஸூத்ரம் 2-2-4) என்று आपस्तंबादिகள் சொல்லுகிறபடியே युगान्तरங்களில் आर्यपरतन्त्रரான गुणवच्छूद्रர்கள் आर्यர்க்கन्नसंस्कारம் பண்ண अनुज्ञातராகையாலே
25.9 அவ்விடத்தில் निषेधமில்லை. இது ‘‘शुचिस्तु प्रयतो भूत्वा विदुरोऽन्नमुपाहरत्’’(பாரதம் உத்யோகபர்வம் 91-43) என்று श्रीविदुरருடைய गुणविशेषங்கள் சொல்லுகையாலே सूचितம். ब्रह्मவித்துக்களான இவர் योगप्रभावத்தாலே देहन्यासம் பண்ணின பின்பு प्राप्तனான धर्मपुत्रன் செய்த संस्कारविशेषம் तूष्णीமनुष्ठितமாதல், व्यक्तिविशेष नियतமாதலா
25.10 மித்தனை. இது கொண்டு व्यक्त्यन्तरங்களில் न्यायसञ्चारம் பண்ணவொண்ணாது. இங்ஙனல்லாதபோது धर्मोत्तरரான பாண்டவர்களுக்கொரு नियतिविशेषத்தாலே வந்த दारसाधारण्यத்தைக்கொண்டு सर्वलोकமும் व्याकुलமாம்படியாம். ஆகையால் தந்தாம் जातिகளை விடாதே நின்றவ்வோ जातिகளுக்குचितप्रक्रियैயாலே यथाधिकारं भगवत्कैङ्कर्यம் பண்ணப் प्राप्तம்.
मोहनशास्त्रங்களிற்சொன்ன जात्युद्धारादिகளை प्रामाणिकர் நினைக்கலாகாது. चरुव्यत्यासादिகளான சில विशेषनिदानங்களாலே வருகிற विश्वामित्रादिகளுடைய நிலை வேறு சிலர்க்குக் கூடுமென்கை वचनविरुद्धம்.
25.11
25.12 विदुरादिகளிலுமுत्कृष्टप्रभावரான ஆழ்வார்களுடைய वृत्तान्तविशेषங்களை நம்மनुष्ठानத்துக்கு दृष्टान्तமாக்கலாகாது. அவர்கள் वृत्तान्तங்களையுமாராய்ந்தால் स्वजातिनियमத்தைக்கடந்தமையில்லை. ‘‘विष्णुर्नित्यं विद्यया तात
25.13 ईड्यस्तस्मात् ज्ञानं नित्यरूपं वरेण्यं । प्राप्यं ज्ञानं ब्राह्मणात्क्षत्रियाद्वा वैश्याच्छूद्राद्वापि नीचाद भीक्ष्णम्’’(பாரதம் ஶாந்திபர்வம் 323-88) என்கிற कத்தில் भगवज्ज्ज्ञानமवश्यம் संपादनीयமாகையாலே पूर्वपूर्वा लाभத்தில் மற்றுள்ளார் பக்கலிலும் ज्ञानमात्रம் विशदமாக पादनीयமென்றிவ் வளவு சொல்லிற்று. இப்படியானாலும் विद्यामन्त्रादिகளுடைய ग्रहणம் ब्राह्मणादिविषयத்திலேயாகவேணுமென்னுமிடம் ‘‘शूद्रयोनावहं जातो नातोऽन्य द्वक्तुमुत्सहे’’(பாரதம் உத்யோகபர்வம் 41-5) என்ற श्रीविदुरवाक्यத்தாலே सिद्धம். तुलाधारधर्मव्याधादिகளும் धर्मसन्देहங்கேட்க வந்த ब्राह्मणரைத் தாங்கள் संभाविத்து तीर्थयात्रैயிலே வழிதிகைத்தாரை வழியிலே சேர்த்தमात्रமவர்களைத்
25.14 தெளிவித்துவிட்டார்களித்தனையல்லது मुख्यமான आचार्यकம் பண்ணினார்களன்று. இப்प्रकारங்களிவ்விतिहासங்களிலே கண்டுகொள்வது.
25.15 ‘‘भक्तिरष्टविधा ह्येषा यस्मिन् म्लेच्छेऽपि वर्तते । तस्मै देयं ततो ग्राह्यं स च पूज्यो यथा ह्यहम्’’(காருடபுராணம்) என்றதுவும் कन्याप्रदानादिपरமன்று – ज्ञानप्रदानादि परமென்று व्याख्यानம் பண்ணினார்கள். ‘‘पूज्यः’’ என்கிறशब्दமும் साधारणமாகையாலே भागवतत्व முண்டானால் सर्वரும் शास्त्रஞ்சொன்ன மட்டுக்களிலே आदरणीयர், இவர்களை सजातीयரோடொக்க நினைத்தவज्ञै பண்ணின போது नरकமாமென்றிவ்வளவிலே तात्पर्यம். இவ்வर्थத்தை ‘‘यश्शूद्रं भगवद्भक्तं’’(இதிஹாஸஸமுச்சயம் 27-26) என்று துடங்கி महर्षि संग्रहिத்தான். ஆகையால் जातिव्यवस्थै குலையாதே நிற்க भागवतप्रभावம்
25.16 கண்டுகொள்வது. अतो जातेर्निकृष्टायास्सर्वस्या वा विनाशतः । साजात्यं विष्णुभक्तानामिति मन्दमिदं वचः ॥ वैष्णवत्वेन मान्यत्वं समानं मुनि सम्मतम् । जात्यादिध्वंसतस्साम्यं मुक्ति काले भविष्यति ॥ भगवद्गीतादिகளிலும் ‘‘स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्’’(கீதை 9-32), ‘‘स्वे स्वे कर्मण्यभिरतस्संसिद्धिं लभते नरः । स्वकर्मनिरतस्सिद्धिं यथा विन्दति तच्छृणु । स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ।’’(கீதை 18-45, 46), ‘‘तस्मात्सप्रणवं शूद्रो मन्नामानि न कीर्तयेत्’’(பாரதம் ஆச்வமேதிகபர்வம் 118-14), ‘‘वर्णाश्रमाचारवता
25.17 पुरुषेण परः पुमान् । विष्णुराराध्यते पन्था नान्यस्तत्तोषकारकः’’(விஷ்ணுபுராணம் 3-8-9), ‘‘न चलति निजवर्णधर्मतो य’’(விஷ்ணுபுராணம் 3-7-20) इत्यादिகளாலே भागवतனுக்கே यथापूर्वं जातिव्यवस्थैயுமதுக்கनुरूपமான वृत्तव्य वस्थैயும் सुस्पष्टமாகச் சொல்லப்பட்டது. இப்படி भागवतत्वமாகிற गुणமும், அதடியாக வரும் पुरुषार्थ विशेषமும் समानाமாயிருக்க जातिविशेषங்களும் वृत्ति विशेषங்களும் नित्यव्यवस्थिங்களென்னுமிடம் “शूद्रस्साधुः कलिस्साधु’’(விஷ்ணுபுராணம் 6-2-6) रित्यादिகளாலும் प्रसिद्धம். ‘‘तमश्शूद्रे रजः क्षत्रे ब्राह्मणे सत्वमुत्कट’’(பாரதம் ஆச்சமேதிகபர்வம் 40-11) मित्यादिகளிற் சொல்லுகிறபடியே सत्वादिगुणतारतम्यவத்தான शरीरத்தில் ब्राह्मण्यादिகள் வேறே;
25.18 मनஸ்ஸில் सत्वादिगुणविशेषமடியாக सर्वजातिகளிலும் प्रशंसावाक्यங்களாலே சொல்லப்பட்ட ब्राह्मण्यादिகளும் வேறே. இவற்றில் शारीरगुणविशेषமடியாக व्यवस्थितங்களான शारीरजातिविशेषங்கள் उत्पत्तिसिद्धங்களாய் मरणान्तமாக स्थिरங்களாயிருக்கும். मानसமான सत्वादिगुणोन्मेषமடியாகச் சொல்லுகிற ब्राह्मण्यादिகள் सर्वजातिகளுக்கும் संभावितங்களாய் प्रह्लादादिகளுக்கு जन्मसिद्धங்களாய், நீக்கியுள்ளார்க்கு आचार्यसंबन्धादिहेतुக்களாலே आगन्तुकங்களாயிருக்கும். இதில் शारीरजातिविशेषங்களையிட்டு சில शास्त्रங்கள் नियतங்களாம். मानसமான ब्राह्मण्यादिகளையிட்டு அவற்றுக்கनुरूपமான पुरुषार्थतदुपायங்களும் प्रशंसादिகளும் सर्वजातिயிலும் भावितங்களாம். இதில் ब्राह्मणादिகள் பக்கலிலே मानसமான विपरीताकारங்கள் வந்தால் शमदमादियोग्यமாக शास्त्रसिद्धமான जन्मத்திலே பிறந்து தப்பினானென்று மிகவும் निन्दै கிடைக்கும். जात्यन्तरங் களிலே பிறந்து गुणोत्तरனாய்ப்போந்தானாகில் ‘‘एतैस्समेतैश्शूद्रोऽपिवार्धके
25.19 मानमर्हती’’(யாஜ்ஞவல்க்யஸ்ம்ருதி 1-116) त्यादिகளிற்படியே प्रशंसै மிகவும் நடக்கும். இவற்றில் शारीरமாயும் मानसமாயும் வருமுत्कर्षம் गर्वहेतुவாமாகிலनर्थकरமாம். இவ்விரண்டு வழியாலுமுள்ளवपकर्षம் ’’குலங்களாய்வீரிரண்டி’’(திருச்சந்தவிருத்தம் 90) லென்கிறபாட்டிலும், ‘‘जनित्वाहं वंशे’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 61) என்கிற श्लोकத்திலுஞ்சொல்லுகிறபடியே தான் நின்ற நிலை தெளிந்து कार्पण्यத்தை விளைத்து अकिञ्चनाधिकारமான उपायविशेषத்திலே மூட்டுமாகில் पुरुषार्थकारणமாகையாலே श्लाघ्यமாம். இப்படிக்கு जाति व्यवस्थैயும் जात्यनुरूपமான वृत्तव्यस्थैயுமுண்டானாலும் सर्वருக்கும் भागवतत्व निबन्धनமாக முன்பு समर्थिத்த उद्देश्यत्व प्रतिपत्तिக்கு विरोधமில்லை.
25.20 இப் भगवत्परரில் ‘‘ऐकान्त्यं भगवत्येषां समानमधिकारिणाम्’’(கீதார்த்தஸங்க்ரஹம் 28) என்கிறபடியே देवतान्तरस्पर्शமற்றவர்கள் एकान्तिகள். அவர்களில் வைத்துக்கொண்டு ‘‘ज्ञानी तु परमैकान्ती’’(கீதார்த்தஸங்க்ரஹம் 32) என்கிறபடியே प्रयोजनान्तरस्पर्शமுமற்றவர்கள் परमै कान्तिகள். அவர்களில் வைத்துக்கொண்டு विळंबाक्षमராய் सर्वशक्तिயான शेषिபக்கலிலே भरन्यासம் பண்ணிச் செய்கிற कैङ्कर्यத்துக்கு प्रयोजनान्तरங் கோலுகை பொலிசைக்கிடுவார் मात्रமென்கிற श्रुत्यर्थத்தைத் தெளிந்து
25.21 இக் कैङ्कर्यத்துக்கு मोक्षமும் प्रयोजनமென்று கோலாதே कैङ्कर्यैकप्रयोजनராயிருக் குமவர்களுடைய परमैकान्तित्वம் षोडशवर्णस्वर्णத்தோடொக்கும். இம்மாற்றறியும் महर्षिகள் महाभारतादिகளிலே இப் परमैकान्तिகளுடைய माहात्म्यத்தைப் प्रपञ्चिத்தார்கள்.
இவன் प्रभावத்தைப் பற்ற ‘‘नारायणैकनिष्ठस्य या या वृत्तिस्तदर्चनम् । यो यो जल्प स्सस जपस्तद्ध्यानं यन्निरीक्षणम् ॥ तत्पादांब्वतुलं तीर्थं तदुच्छिष्टं सुपावनम् । तदुक्तिमात्रं मन्त्राग्र्यं तत्स्पृष्टमखिलं शुचि’’(விகஹேந்த்ரஸம்ஹிதை) என்கிற श्लोकங்கள் प्रमाणமேயாகிலும், இங்கு ‘‘या या वृत्तिस्तदर्चनं’’ என்றது शास्त्रविरुद्धवृत्तिயைச் சொன்னபடியன்று; देशकालादि वैगुण्यத்தாலே ‘‘आपत्स्वनन्तरा वृत्तिः’’() என்கிற நிலையிலே நின்றாலும் அது
25.22 समाराधनोपयुक्तமான सम्यगुपादानமாமென்றபடி. ‘‘मन्निमित्तकृतं पापमपि धर्माय कल्पते’’() என்றதுக்குமிதுவே தாத்பர்யம். இங்ஙனல்லாதபோது अतिप्रसङ्गம் வரும். ‘‘या या चेष्टा’’ என்று पाठமானாலும் अर्थप्राप्तशास्त्रप्राप्तங்கள் போலே स्वभावप्राप्तங்களான निमेषोन्मेषादिகளும் समर्पणीयங்களாக रहस्यशास्त्रसिद्धமாகை
25.23 யாலே तत् अर्चनமென்னலாம். இது निषिद्धத்தில் प्रसङ्गिயாது. प्रतिषिद्धமல்லாத स्वभावार्थशास्त्रप्राप्तங்களிறே समर्पणीयங்களாகவோதபட்டது. இதினுपबृंहणமான ‘‘यत्करोषि यदश्नासि’’(கீதை 9-27) என்கிற श्लोकத்துக்கும் இப்படி शास्त्रविरोध மில்லாதவிஷயத்திலே தாத்பர்யம். இவற்றில் शास्त्रविरुद्धங்கள் வந்தால் अधिकारानुरूपமான नैमित्तिकம் निग्रहशमनकार्यம்.
‘‘यो यो जल्पस्स स जपः’’ என்றதுவும் ‘‘पारुष्यमतिवादश्च पैशुनञ्चै वसर्वशः । अनिबद्धप्रलापश्च वाङ्मयं स्याच्चतुर्विधम्’’(மநுஸ்ம்ருதி 12-6) என்று शास्त्रप्रतिषिद्धமான वृथाजल्पத்தைச்
25.24 சொன்னபடியன்று; तत्त्वहितविषयமாக शिष्यगुरुसब्रह्मचारिशिष्टश्रेयोर्त्थिகளோடே अज्ञातज्ञापनार्थமாகவும், ज्ञातस्थिरीकरणार्थமாகவும், संशयनिराकरणार्थமாகவும் பண்ணுமுक्तिप्रत्युक्तिपरंपरैகளைச் சொல்லுகிறது. ‘‘न विगृह्य कथां कुर्यात्’’(மநுஸ்ம்ருதி 4-72) என்று सामान्येन சொல்லச் செய்தேயும் ‘‘यथाशक्ति निगृह्णीयाद्देवतागुरुनिन्दकान्’’() என்று विशेषिத்து धर्मशास्त्रसिद्धமாகையாலே बाह्यकुदृष्टिகளைப் பற்ற विजिगीषुவாகச் சொல்லும் वाक्यपरंपरैயை जल्पமென்றதாகவுமாம். ‘‘तद्ध्यानं यन्नि रीक्षणं’’ என்றது निषिद्धनृत्तादिदर्शनத்தைச்சொன்னபடியன்று; कैङ्कर्यार्थமாகப் प्रवर्तिக்கும்போதிவன் கண்ணுக்கிலக்கான पदार्थங்களெல்லாம் ‘‘अहं हरिस्सर्वमिदं जनार्दन’’(விஷ்ணுபுராணம் 1-22-87) इत्यादिகளிற்படியே ’’நிற்கின்றதெல்லாம் நெடுமா’’(நான்முகன் திருவந்தாதி 54) லென்று ब्रह्मात्मकமாய்த் தோன்றும் प्रकारத்தைச் சொன்னபடி. ‘‘तत्पादांब्वतुलं तीर्थं’’ என்றதுவும் प्राप्तविषयத்திலே गुणाधिक्यஞ்சொல்லுகிறது पादोदकம் तीर्थமாகச் சொன்னவிஷயத்தில் नारायणैकनिष्ठत्वமுண்டாயிற்றாகில் அது सर्वाधिकतीर्थமென்றபடி; அல்லது भागवतனுடைய पादத்திலே यादृच्छिकமாகப்
25.25 பட்ட निर्माल्यजलादिகளும் अतुलமான तीर्थமென்றபடியன்று. ‘‘तदुच्छिष्टं सुपावनं’’ என்றதுவும் पुनरुपनयनादिप्रकरणங்களிலே पावनமாக शास्त्रप्राप्तமான उच्छिष्टविशेषத்துக்கு இக்गुणविशेषமடியாக पावनत्वातिशयஞ் சொன்னபடி; மற்றும் शिष्यपुत्रादिகளுக்கு नारायणैकनिष्ठत्वமுண்டானால் आचार्यादिகளுக்கு மவர்களுடைய उच्छिष्टம் सुपावनமென்றபடியன்று. ‘‘निर्माल्यं भक्षयित्वैव मुच्छिष्टमगुरोरपि । मासं पयोव्रतो भूत्वा जपन्नष्टाक्षरं सदा । ब्रह्मकूर्चं ततः पीत्वा पूतो भवति मानवः’’(ஸநத்குமாரஸம்ஹிதை) என்று भगवद्धर्मनिष्ठனுக்கு समयाचारஞ்சொல்லுகிற सनत्कुमारसंहितावचनத்தை आगमप्रामाण्यத்திலே ஆளவந்தார் उदाहरिத்தருளினார். ஆகையாலே ’’போனகஞ் செய்த சேடந்தருவரேற்புனிதமன்றே’’(திருமாலை 42) யென்றதுவும் गुरुविषयமாமித்தனை. பொதுவானாலும் भगवत्सङ्कीर्तनपरர் देशकालादिवैगुण्यத்தாலே ऊनवृत्तिகளுமாய் ऊनकारकர்களுமாயிருந்தார்களேயாகிலும்
25.26 தாங்களமுதுசெய்த சேடந்தருவராகில் புனிதமாமென்றதித்தனை. இதில் शेषशब्दம் ‘‘अन्नशेषः किं क्रियतामिष्टैस्सह भुज्यता’’ मित्यादिகளில் न्यायத்தாலே भाण्डस्थविषयமானால் विरोधமில்லை. उच्छिष्टशब्दந்தானும் श्रुत्यादिகளிலே भुक्तशिष्टமாய் पाकपात्रस्थமானதிலும் प्रयुक्तம் 4‘‘परित्यजेदर्थकामौ यौ स्यातां धर्मवर्जितौ । धर्मं चाप्यसुखोदर्कं लोकसंरुष्टमेव च’’(மநுஸ்ம்ருதி 4-176) என்று मन्वादिகள் व्यवस्थै பண்ணினார்கள்.
25.27 ‘‘तदुक्तिमात्रं मन्त्राग्र्यं’’ என்றது இவன் தஞ்சமாக उपदेशिத்த भाषावाक्यங்களும் திருमन्त्रம்போலே आदरिத்தनुसन्धिக்கவேணுமென்றபடி; அல்லதிவன் சொல்லும் लौकिकव्यवहारங்கள் जपादियोग्यங்களென்றபடியன்று. ’’சொல்லுமவிடு சுருதியா’’ மென்றதுக்குமிப்படி हितार्थமான वाक्यமே விஷயம். ‘‘तत्स्पृष्टमखिलं शुचि’’ என்றது आतुरविषयத்தில் स्पृष्ट्वास्नानம்போலவும், दीक्षाकालத்தில் विष्णुहस्तप्रदानाख्यस्पर्शம் போலவும், திருप्रतिष्ठैயில் महाभागवतस्पर्शம் போலவும் மற்றும் स्पर्शம் विहितமானவிடங்களிலே இவனுடைய स्पर्शம் பெற்றதாகில் स्पृष्टமானவையெல்லாம் परिशुद्धமாமென்றபடி;
25.28 அல்லது ‘‘उदुंबरं न खादेत्तु”( பாரதம் ஆநுஶாஸநிகபர்வம் 161-97), ‘‘कालिङ्गोदुंबरालाबु बिंबानि परिवर्जयेत् । तान्यश्नतस्तु सततं नित्यं दूरतरो हरिः ॥ वृन्ताक कतकालिङ्ग बिल्वादुंबरभिस्सटाः । यो भक्षयति संमोहात्तस्य दूरतरो हरिः ॥ कालिङ्गीं क्षुद्रवार्ताञ्च दग्धान्नं मौसलीं तथा । तुंबिकाफलमश्नीयात्तस्य दूरतरो हरिः ॥ योऽक्ति वार्ताक कालिङ्ग मसूरबिसकान्यपि । अन्तकाले जगन्नाथं गोविन्दं न स्मरिष्यति ॥’’(), ‘‘तुंबंकोशात कञ्चैव पलण्डुं ग्रञ्जनं तथा । छत्राकं विड्वराहञ्च भुक्त्वा चान्द्रायणां चरेत् ॥’’(பாரதம் ஆச்வமேதிகபர்வம் 112-44), ‘‘नालिकाचण छत्राक कुसुम्भालाबु विड्भवान् ॥ कुंभी कञ्चुक वृन्ताक कोविदारांश्च वर्जयेत् ॥ क्षीरं लवणसंमि श्रमुच्छिष्टेपि च यृतं । पानं रजकतीर्थे च सुरापानसमं विदुः ॥’’(), ‘‘आरनाळं न सेवेत कदाचिद्भग वत्परः । सुराकल्पं हि तद्ज्ञेयं तस्माद्यत्नेन वर्जयेत् ॥’’(சாண்டில்யஸ்ம்ருதி 2-51), ‘‘प्रमादादपि कीलालं यस्स्पृशेद्वैष्णवो नरः । उपचार शतेनापि न क्षमामि वसुन्धरे ॥’’(வராஹபுராணம்), ‘‘एकादश्यां सुरश्रेष्ठ यो भुङ्ते द्विजजन्मवान् । प्रति ग्रासमयं भुङ्ते किल्बिषं श्वानविट्समम् ॥’’(ஸாத்வத ஸம்ஹிதை), ‘‘एकादश्यान्तु यो भुङ्ते क्तस्सन्निरुपद्रवः । सुरापानसमं पापं भवेत्तस्य न संशयः ॥ मद्यपानात्सुरश्रेष्ठ पातैव नरकं व्रजेत् । एकादश्यन्नकामस्तु पितृभिस्सह मज्जति ॥’’(), ‘‘अन्नदोषादशमनान्नानाविषयदर्शनात् । देहशौचादिविरहात् समलं जायते
25.29 मनः ॥’’(ஸ்ரீ ரங்கமாஹாத்ம்யம் 47-10), 5‘‘आलस्यादन्नदोषाच्च मृत्युर्विप्रान् जिघांसती’’(மநுஸ்ம்ருதி 5-3) त्यादिகளாலே निषिद्धமானவை யெல்லாம் இவன் தொட்டவாறே शुद्धமாமென்றபடி யன்று. இப்படி विषयव्यवस्थै பண்ணாதபோது परिगृहीततमங்களான बहुशास्त्रங்களோடும் शिष्टानुष्ठानத்தோடும் विरोधिக்கையாலே अतिवादमात्रமாய்விடும். महाप्रभावனான परमैकान्ति பக்கலிலும் இச் शास्त्रीयनियमம் குலையாதென்னுமிடம் नाथमुनिகள் ஆளவந்தார் எம்பெருமானாருள்ளிட்ட परमाचार्यர்களுடைய अन्तिमदिवसावधिயான வनुष्ठानங்களைக் கேட்டுத்தெளிந்துகொள்வது.
वेदवैदिकशास्त्रங்களிற் சொல்லுகிற नियमங்களை बाह्यரும் कुदृष्टिகளும் भ्रान्तिயாலே விடுகிறவிடம் तामसत्यागமென்னுமிடத்தை ‘‘नियतस्य तु सन्यासः कर्मणो नोपपद्यते । मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः’’(கீதை 18-7) என்கிற श्लोकத்
25.30 தாலே யருளிச் செய்தான். कुटुंबभरणादिகளுக்கலைந்து सन्यासादिகளைப் பற்றுவாரைப்போலே दुःखरूपैகளான प्रवृत्तिनिवृत्तिகளுக்குச்சோம்பி விடுகிறவிடம் राजसत्यागமென்னுமிடத்தை ‘‘दुःखमित्येव यः कर्म कायक्लेशभयात्त्यजेत् । स कृत्वा राजसत्यागं नैव त्यागफलं लभेत्’’(கீதை 18-8) என்றருளிச்செய்தான். தன்னधिकारानुरूपமாகத் தவிர வேண்டுமவை தவிர்ந்து செய்யவேண்டுமவை செய்யுமிடத்தில் நான் स्वतन्त्रனாய்ச்செய்கிறேனென்றும் எனக்கிக்कर्मம் शेषभूतமென்றும் எனக்கின்ன फलத்துக்கிதுதானே साधनமென்றும் பிறக்கும் நினைவை மாற்றி सर्वेश्वरன் செய்விக்க அவனுக்கு शेषமான कैङ्कर्यத்தை அவனுகப்பே प्रयोजनமாக अनुसन्धिத்தनुष्ठिக்கை सात्विकत्यागமென்னுமிடத்தை ‘‘कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जन । सङ्गं त्यक्त्वा फलञ्चैव स त्यागस्सात्विको मतः’’(கீதை 18-9) என்றருளிச்செய்தான். இப் भगवत्प्रीतिप्रयोजनமாக अनुष्ठिக்கிற விடத்திலே இப் प्रीतिக்கு मोक्षமும் फलமாகக்கோலாதே पूर्वप्रपत्तिயால் பிறந்த परमकारुणिकன்
25.31 प्रसादத்தாலே मोक्षம் सिद्धமென்று நினைத்து मुक्तனுடைய कैङ्कर्यம்போலவும் अरोगனுடையபால்வார்த்துண்கை போலவும் अनुष्ठिக்கை सात्विकत्यागத்தினெல்லை நிலமாகக்கடவது. இது பசித்துண்பார் मात्रம்; இங்ஙனல்லாதபோது ஒட்டத்துக்கப்பம் தின்பார் मात्रம்.
‘‘सर्वधर्मान् परित्यज्य’’ என்கிறவிடத்தில் प्रथमयोजनैயில் बुद्धिविशेषरूपமான सात्विकत्यागஞ் சொல்லுகிறதென்று भाष्यकारரருளிச்செய்தார். இப் बुद्धिविशेषம் स्वतन्त्रप्रपत्तिनिष्ठனுக்கு प्रपत्त्यनुष्ठानकालத்திலும் பின்பு स्वयंप्रयोजनமாயுपायத்தோடு துவக்கற்ற उत्तरकृत्यத்திலுपजीव्यம். द्वितीयोजनैயில் अल्पशक्तिயாய் विळंबाक्षमனானவனுக்கு दुष्करமாய் चिरकालसाध्यமான उपायान्तरத்தைப் பார்த்து
25.32 शोकம் பிறக்க, அவனுடைய शोकापनोदनार्थமாக सुकरமாய் सकृत्कर्तव्यமுமான उपायान्तरத்தை विधिத்ததாக்கி நீ उपायान्तरத்திலலையவேண்டா வென்கிற தென்றருளிச் செய்தார். இப் प्रपत्त्यनुष्ठानத்துக்கு पूर्वावस्थैயிலுपायान्तरानन्वयம் दैवादागतமாய் प्रपत्त्यधिकारத்திலே சொருகக்கடவது. उत्तरावस्थैயிலுपायान्तरानन्वयம் शास्त्रादागतமாயிப் प्रपत्तिயினுடைய नैरपेक्ष्यத்திலே நிற்கக்கடவது. ‘‘परित्यज्य’’ என்கிறவிது अनुवादமென்பார்க்கு अधिकारஞ்சொல்லுகிற தென்று தாத்பர்யம். विधिயென்பார்க்கு प्रपत्तिயாகிற उपायத்தினுடைய
25.33 नैरपेक्ष्यादिகளைச் சொல்லுகிறதென்று தாத்பர்யம்.. இப்படி ‘‘परित्यज्य’’ என்கிறவிடத்திலधिकारம் विवक्षितமானால் ‘‘मामेकं’’ என்கிறவிடத்திலே नैरपेक्ष्यம் अनुसन्धिக்கப் प्राप्तம். ‘‘परित्यज्य’’ என்று नैरपेक्ष्यம் विवक्षितமானால் ‘‘मा शुचः’’ என்கிற शोकनिषेधத்தாலே अकिञ्चनனாய் நிற்கிற நிலை தோற்றுகையாலே अधिकारமுமर्थसिद्धமாகக்கடவது.
அப்போது *प्रकृतोपासन न्यायात्तदङ्गानामुपस्थितौ । अन्येषाञ्चैतदङ्गत्व त्यागोऽत्र प्रतिपाद्यते ॥* एकशब्दம் सात्विकत्यागத்தாலே தன் பக்கலில் पराधीनकर्तृत्वादिகளை विवक्षिத்தல், फलोपायैक्यத்தைச் சொல்லுதல், एकமே सर्वोपायस्थानத்திலே
25.34 நிற்கிற நிலையைக்காட்டுதல் செய்யக்கடவது. प्रपत्तिக்காக வொன்றுமनुष्ठिக்க வேண்டாமாகிலும் स्वतन्त्राधिकारத்தாலே किङ्करனான இவனுக்கு स्वामिயினுடைய வாज्ञातिलङ्घनமாகாதென்று समर्थिத்தார்கள். *आज्ञाविरोधिभिस्स्वार्ह प्रायश्चित्तपराङ्मुखैः । स्वाधिकारोचितस्सर्वैः प्रत्यवायो दुरत्ययः ॥ आज्ञानुपालने तत्तत्प्रत्यवाय निवारणम् । स्वामिसन्तोषतः प्रीतिरिति लाभद्वयं स्थिरम् ॥ अनिच्छातो निवर्तेत स्वर्गाद्यं कर्मणां फलम् । अमर्यादस्य दुर्वारः प्रत्यवायोऽन्यहेतुकः ॥ *இப் प्रपत्ति भक्तियोगाङ्गமாக வருளிச்
25.35 செய்தது प्रपत्ति सकलफलसाधनமானபடியை प्रकृतமான भक्तियोगமாகிற फलத்திலே उदाहरिத்தபடி. இங்கு द्वितीयोजनैயில் दुष्करங்களான भक्तियोगपर्यन्तोपायங்களினுடைய स्थानத்திலே நிற்கிற उपायविशेषமும் प्रथमयोजनैயில் बुद्धिविशेषपूर्वकமான प्रपत्त्यनुष्ठानமும் कृतोपायனுடைய स्वयंप्रयोजनமான कैङ्कर्यமுமनुसन्धेयம். *किञ्च सुदुष्करेण शोचेद्यो येन येनेष्टहेतुना । स स तस्याहमेवेति चरमश्लोकसंग्रहः ॥ भावाभावौ न धर्माणां प्रपत्तेरङ्गमिष्यते । स्वतन्त्रशिष्ट्या शक्येहा शेषाभावोधिकारगः ॥ क्रत्वनङ्गतया ये तु तदानीमननुष्ठिताः । स्वकाले स्वविधेरेव कार्यास्ते तद्वदत्र नः ॥ *
25.36 ‘‘त्यज धर्ममधर्मञ्च’’(பாரதம் சாந்திபர்வம் 339-44) என்கிறதுவும் काम्यங்களையும் निषिद्धங்களையும் விடச் சொன்னபடி. ‘‘त्यज सत्यानृते अपि’’ என்கிறதுவும் आत्मानुभवத்தையும் ऐश्वर्यத்தையும் प्रयोजनமாகக் கோலாதே கொள்ளென்றபடி. वाचिकங்களை विशेषिத்துச் சொல்லிற்றாகவுமாம். இதினருமை தோற்றுகைக்காக ‘‘उभे सत्यानृते त्यक्त्वा’’ என்றनुवदिக்கிறது. त्यागத்தில் कर्तृत्वமும் पराधीनமென்று
25.37 अनुसन्धिக்கைக்காக ‘‘येन त्यजसि तत्त्यज’’ என்கிறது. இப்படியானால் आज्ञातिलङ्घनத்துக்கொரு விரகன்றிக்கே யிருக்க சிலர் ‘‘तस्मात्त्वमुद्धवोत्सृज्य चोदनां प्रतिचोदनां । प्रवृत्तिञ्च निवृत्तिञ्च श्रोतव्यं श्रुतमेव च ॥ मामेकमेव शरणमात्मानं सर्वदेहिनाम् । याहि सर्वात्मभावेन यास्यसि ह्यकुतोभयम्’’(ஸ்ரீ பாகவதம் 11-12-14. ) என்று निवृत्तिயையுங்கூடவிடச்சொன்ன படியாலும் ‘‘सर्वधर्मान् परित्यज्य’’ என்கிறவிடத்தில் सर्वशब्दத்தை सङ्कोचिயாமைக்காகவும் निवृत्तिरूपधर्मங்களையும் கூட விடவேண்டுகையால்,
அவற்றை விடுகையாவது निषेधिத்தவை யெல்லாத்திலும் यथाशक्त्यनुष्ठानமாகையால் இந்த निषिद्धानुष्ठानம் विधिबलप्राप्तமாகையாலே प्रपन्नனுக்கு बुद्धिपूर्वोत्तराघமும் लेपियाதென்று भ्रमिப்பார்கள். இது மிகவும் परिहसनीयம்; எங்ஙனேயென்னில்; अलेपकர் पापம் பண்ணினால் लेपिயாதென்பார்கள்; இவர்கள் पापமवश्यம் अनुष्ठिக்கவேணுமென்றார்களாயிற்று.
25.38 இது ‘‘भक्ष्योत्तमप्रतिच्छन्नं मत्स्यो बळिशमायसम् । अन्नाभिलाषी ग्रसते नानु बन्धमवेक्षते’’(பாரதம் உத்யோகபர்வம் 34-13) என்கிற கணக்காம். இவையெல்லாத்தையும் நினைத்து ‘‘अहो बत महत्कष्टं विपरीतमिदं जगत् । येनापत्रपते साधुरसाधुस्तेन तुष्यति’’(பாரதம் ஆரண்யபர்வம் 2-64) என்று महर्षि निर्विण्णனானான். இவர்கள் சொல்லுகிறபடிयर्थமானால் यावज्जीवமிருந்தनुष्ठिக்கும் निषिद्धानुष्ठानமெல்லாம் प्रपत्तिக்கङ्गமாகையால் साङ्गप्रपदनம் सकृत्कर्तव्यமென்னுமிடங்கழியும். प्रपत्तिक्षणத்தில் எல்லா निषिद्धங்களும் अनुष्ठिக்கையशक्यம். அப்போது यथाशक्ति निषिद्धाद्यनुष्ठानம் பண்ணிக்கொண்டு प्रपत्तिபண்ணவுங்கண்டறியோம்.
25.39 இப் पक्षத்தில் पापங்களுமग्नीषोमीयहिंसै போலே पापशब्दवाच्यமல்லாமையாலே बुद्धिपूर्वोत्तराघத்தையுங்கூட்டி ‘‘सर्वपापेभ्यो मोक्षयिष्यामि’’ என்கிறவிடத்துக்குத் தாங்கள் व्याख्यानம் பண்ணின प्रकारமும் विरुद्धமாம். यथाशक्ति त्रिविधापचारங்கள் कर्तव्यங்களாகவும் प्रसङ्गिக்கும். இது पूर्वानुष्ठानத்துக்கும் पूर्वसंप्रदायத்துக்கும் स्वानुष्ठानத்துக்கும் மற்றுமிப்போது காண்கிற मुमुक्षुக்களுடைய अनुष्ठानத்துக்கும் विरुद्धம். இப்படிச் சொல்லுமவர்கள் தம்மையொரு प्रपन्नர் अर्थकामங்களடியாக நலியப்புக்கால் இது प्रपन्नधर्मமன்றோ வென்றிவரை யுகந்திருக்கப் प्राप्तமாம். இது अनन्तप्रमाणங்களுக்கு विरुद्धமாமளவே யன்றிக்கே இங்கெடுத்த वचनங்களுக்கு विवक्षितமுமன்று.
25.40 निषिद्ध निवृत्तिरूपங்களெல்லாம் सर्वधर्मशब्दத்தாலே संगृहीतங்களென்னுமிடம் धर्मशब्दार्थமறியாமற்சொன்னபடியென்று சிலவாचार्यர்கள் निर्वहिப்பார்கள். எங்ஙனேயென்னில்; निवृत्तिகளிலேயொரு फलத்துக்கு साधनமாக नियमविशेषங்களுடனே செய்தவை धर्मशब्दार्थமாம். सामान्यமானவहिंसादिमात्रம் पापाभावமாமித்தனைபோக்கி धर्मशब्दத்துக்கு मुख्यार्थமன்று. ஆகையால் फलविशेषनियमविशेषங்களோடே கூடின अहिंसादिகளை விடுகையாவது फलங்களையும் नियमங்களையும் விடுகை. மற்றும் निवृत्तिशास्त्रத்திற் சொன்ன निवृत्तिகளை விடுகைக்கு விரகில்லை. नियमविशेषादिகளோடே கூடாத अहिंसादिमात्रமும் धर्मशब्दार्थமென்னும் पक्षத்திலுஞ்சொல்லுகிறோம்.* अधर्म परिहारेऽपि धर्मत्वेन विवक्षिते । स्यात्स्वतन्त्रविधेरेव नित्यं तस्य परिग्रहः ॥ இப்படியற்ற
25.41 பின்பு ‘‘चोदनां प्रतिचोदनाम्’’ என்கிறவிடத்தில் आनुकूल्यपरित्यागं प्रातिकूल्यपरिग्रहं । *प्रपत्त्यङ्गं प्रतिज्ञातुं न शक्यं साधुसंसदि ॥ प्रपन्नमधिकृत्यैव सदाचारानतिक्रमः । प्रपत्त्यध्यायपठितः प्रतिसन्धीयतामिह ॥ प्रवृत्तिञ्च निवृत्तिञ्च என்கிறவிடத்திலும் प्रपत्तिக்கங்கமாக வொன்றும் स्वीकरि க்கவேண்டாவென்றதாமித்தனை. मुमुक्षुमात्रத்தைப் பற்ற ‘‘त्रैवर्गिकांस्त्यजेद्धर्मान्’’(விஷ்ணுபுராணமென்று முன்னோர்கள்) என்கிற கட்டளையிலே फलान्तरसाधनமாக चोदितैகளான प्रवृत्तिनिवृत्तिகளையும் அவற்றுக்குறுப்பான शास्त्रங்களையும் விடச்சொன்னதாகவுமாம்.
இங்ஙனன்றிக்கே नित्यनैमित्तिकादिகளுடைய स्वरूपत्यागம் विवक्षितமென்னில் முன்பு சொன்ன सर्वविरोधமும் प्रसङ्गिக்கும். இந்த निष्कर्षம் सत्त्वनिष्ठராய்
25.42 विवेकिகளாயிருப்பார் தெளிந்தङ्गीकरिப்பார்கள். இவ்வर्थத்தை ’’செய்யாதன செய்யோந்தீக்குறளை சென்றோதோ’’(திருப்பாவை 2) மென்றும், ’’செய்யேல் தீவினையென்றருள்செய்யு’’ (திருவாய்மொழி 2-9-3) மென்றுமருளிச் செய்தார்கள். ’’நாயினேன் செய்தகுற்றம் நற்றமாகவே கொள்ஞாலநாதனே’’ (திருச்சந்தவிருத்தம் 111) என்றதுக்கும் तात्पर्यத்தைப்பார்த்தால் क्षमिக்கவேணுமென்றपेक्षिத்த படியாகையாலே
25.43 प्रपन्नனுக்குமपराधம் புகுந்தால் ‘‘अज्ञानादथवा ज्ञानादपराधेषु सत्स्वपि । प्रायश्चित्तं क्षमस्वेति प्रार्थनैकैव केवलम्’’(வங்கீபுரத்துநம்பிகாரிகை) என்கிறபடியே क्षमै கொள்ளப் प्राप्तம்.* ‘‘प्रायश्चित्तान्तराशक्तः कालक्षेपाक्षमोऽपि वा । पुनः प्रपद्यते नाथमभिन्दन् लोकसंग्रहम् ॥
मुमुक्षुत्वமேயடியாக बुद्धिपूर्वनिषिद्धங்கள் புகுராவென்னும் वार्तैயும் ‘‘विद्यते ब्राह्मणे दमः’’(ரமாயணம் யுத்தகாண்டம் 16-9) என்னுமாப்போலே औचित्यத்தாலே சொன்னபடியத்தனை. मुमुक्षुவுக்கு बुद्धिपूर्वनिषिद्धங்கள் புகுந்து परिहारங்கள் பண்ணுகை महर्षिகள் பக்கலிலும் ऋषिप्रायர்பக்கலிலுமுள்படக் கண்டுபோராநின்றதிறே.
25.44 இங்ஙனன்றாகில் उपासकர்களும் मुमुक्षुக்களாகையாலே அவர்களுக்கும் बुद्धिपूर्वोत्तराघம் घटिயாமையாலே उत्तराघाश्लेषம் प्रामादिकविषयம்; बुद्धिपूर्वोत्तराघத்துக்கு क्षन्तव्यत्वமில்லையென்று व्यवस्थै பண்ணவொண்ணாதொழியும். उपासकனுக்கும், प्रपन्नனுக்கும் वर्णाश्रमजातिगोत्रप्रवरचरणकुलदेशकालावस्थागुण समयादिகளை
25.45 उपाधिயாகக்கொண்டு சொன்ன निषिद्धங்கள் தவிருமிடத்தில் विशेषமில்லை. निषिद्धங்கள் புகுந்தால் प्रायश्चित्तம் थाधिकारமாகையாலே वैषम्यமுண்டு.
’’என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தா’’(பெரியாழ்வார் திருமொழி 4-9-2) ரென்கிறதுவும் अपराधம் புகுருமென்கைக்கு लिङ्गம். இங்கு ’’செய்தாரேல் நன்று செய்தா’’ ரென்றதுக்கு प्रामादिकமாகப் புகுந்தால் நாமே क्षमिப்புதோம், बुद्धिपूर्वकமாகப்புகுந்தால் அவர்கள் क्षமைகொள்ளாதவளவிலும் शिक्षाविशेषங்களாலே நாமே शमिப்புதோம், ஒரு படிக்குங்கைவிடோ மென்று तात्पर्यம். ’’நன்றுசெய்தாரென்பர்போலு’’ மென்று சொல்லு
25.46 கையாலே இது वस्तुवृत्तिயில் நன்றன்றென்னுமிடம் सूचितம். ‘‘अपायसंप्लवे सद्यः प्रायश्चित्तं समाचरेत् । प्रायश्चित्तिरियं सात्र यत्पुनश्शरणं व्रजेत्’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-91) என்று சொல்லுகையாலே बुद्धिपूर्वोत्तराघத்தில் ईश्वरனுக்கு निग्रहेच्छैயுदियाதென்ன வொண்ணாது. सर्वशक्तिயானவனுக்கு निग्रहेच्छै பிறந்தால் க்ஷமை கொள்ளாதபோது फलसिद्धिயில்லை யென்னவுமொண்ணாது. ईश्वरனுக்கு प्रीत्यभावमात्रம் பிறக்குமத்தனையென்றால் தனக்கத்தால் மேலொரு प्रत्यवायமில்லை யாகில் पुनःप्रायश्चित्तம் பண்ணவேண்டா. தனக்கும் प्रीत्यभावம் பிறக்கு மத்தனையென்றாலும் प्रत्यवायம் सिद्धமாயிற்று. அதிலும் கழிந்ததுக்கு
25.47 प्रायश्चित्तம் வேண்டா. மேலுமनुवृत्तिமாய் வரப்புகுகிற प्रीत्यभावத்தைப்பற்ற प्रायश्चित्तமென்றால் இத்தோடு तुल्ययोगक्षेमतैயாலே यथासंभवம் श्रुत्यादिसिद्धங்களான उपक्लेशங்களும் வருமென்று भीतனாய் प्रायश्चित्तம் பண்ணப்प्राप्तம். ஆகையாலுपक्लेशங்களும் இங்குற்ற भगवदनुभवத்துக்கு करणाशक्तिज्ञानसङ्कोचदुःखादिகளடியாக வரும் विच्छेदसङ्कोचங்களும் नियतायुस्सुக்களல்லாதார்க் कायुर्वृद्धिயாலே परमफलத்துக்கு विळंबமும் प्रसङ्गिயாமைக்கு पुनःप्रपदनம் பண்ணுகிறது. இது வேண்டாவென்பார்க்கும் निषिद्धங்களை क्षमिக்கிற न्यायத்தாலே இதுவும் क्षमाविषयமாகையாலேயிதுவேயுचितம். बुद्धिपूर्वोत्तराघத்துக்கு மேற்கவே प्रपत्तिபண்ணவொண்ணாதென்னுமிடமும் முன்பு கோலின फलமொழிய फलान्तरार्थமாக प्रपत्त्यन्तरம்பண்ணுகையில் विरोधமில்லையென்னுமிடமும் முன்பே समर्थिத்தோம். இப்படி भगवदाज्ञासिद्धமான सदाचारानुपालनத்திலும் विरोधமில்லாமை கண்டு கொள்வது.
25.48 *प्रपन्नस्य निषिद्धैरप्यलेपमुपपादयन् । यथाभिमतसद्वृत्तनिष्ठेभ्यः किमसूयति ॥ आज्ञातिलङ्घने यस्य रक्षकत्वं न भज्यते । आज्ञानुपालेने तस्य कथन्तदुपरुद्ध्यते ॥ न चाचारं विना किञ्चित्कैङ्कर्यमुपपद्यते । न हि शौचमकृत्वैव समाराधनमर्हति ॥ आचारप्रभवो धर्मो धर्मस्य प्रभुरच्युतः । इति पञ्चमवेदेऽपि सर्वशास्त्रार्थ ईरितः ॥ प्रपत्तिप्रतिसन्धानमाप्तैर्यदुपदिश्यते । तत् स्वाधिकार नियत हानोपादानसिद्धये ॥ प्रतिसन्धानतो हि स्यादधीपूर्वेष्वलेपधीः । बुद्धिपूर्वेष्वपि पुनः प्रपत्तेरेव संग्रहः ॥
25.49 अतो निरपराधेन वर्तितव्यं कृतात्मना । अपराध प्रसङ्गे च पुनः प्रपदनं क्षमम् ॥* அடியிலே निरपराधனாகவேணுமென்று கோலி प्रपत्ति பண்ணினவனுக்கும் பின்பிதுக்காக प्रपत्त्यन्तरம் பண்ணினவனுக்குமுत्तरकृत्यம் निरपराधமாகவே நடக்கும். इतिहासपुराणங்களில் சில वृत्तान्तदर्शनमात्रத்தைக்கொண்டு वचनविरोधத்தை अनादरिத்து भागवतனுடைய बुद्धिपूर्वोत्तराघம் क्षन्तव्यமென்று சிலர் சொல்லுவர்கள்; இதுவும் அவ்வோ प्रकरणங்களிலभिप्रायமறியாமல் வந்தது. महाराजர்க்குமுள்பட समयातिलङ्घनमात्रமான अपराधம் பெருமாள் திருவுள்ளத்திலே शोकाभिभवத்தாலே प्रतिभासिத்து, ‘‘न च सङ्कुचितः पन्था येन वाली हतो गतः । समये तिष्ठ सुग्रीव मा वालिपथमन्वगाः ।’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 30-81) என்றருளிச்செய்யக்கேட்டு, இளையபெருமாள், பெருமாள் தாமே தணியவிடவேண்டும்படி சீறியருளி
25.50 किष्किन्धैயிலே செல்ல, ‘‘कृतापराधस्य हि ते नान्यत् पश्याम्यहं क्षमम् । अन्तरेणाञ्जलिं बध्वा लक्ष्मणस्य प्रसादनात्’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 32-11) என்று ऐन्द्रव्याकरणपण्डितன் महाराजர்க்குपदेशिத்தானிறே. அவ்வளவில் महाराजருமிசைந்து ‘‘यदि किञ्चिदतिक्रान्तं विश्वासात् प्रणयेन वा । प्रेष्यस्य क्षमितव्यं मे न कश्चिन्नापराध्यति’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 36-11) என்று விண்ணப்பஞ்செய்யவேண்டிற்று. அப்போதிளையபெருமாளுக்கும் தாம் மிகுதியாகச் சொன்ன வார்த்தைகளுக்கு ‘‘यच्च शोकाभिभूतस्य श्रुत्वा रामस्य भाषितम् । मया त्वं परुषाण्युक्तस्तच्च त्वं क्षन्तुमर्हसि’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 36-28) என்று க்ஷமைகொள்ளவேண்டிற்று. இப்படி प्रपन्नனுக்கும் प्रारब्धकर्मविशेषங்களாலே बुद्धिपूर्वोत्तराघம் புகிறவுங்கூடும்; அவை புகுந்தாலनुतप्तனாய் க்ஷமைக்கொள்ளவும் வேணும். ‘‘न धर्मनिष्ठोऽस्मि’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 22), ’’குளித்து மூன்றனலையோம்புங்குறிகொளந்தணமை தன்னையொளித்திட்டேன்’’(திருமாலை 25) इत्यादिகளும் कर्मयोगादिகளுக்கு शक्तिயில்லாமை சொல்லுகிறனவத்தனை. यथाशक्ति भगवदाज्ञानुपालनத்தைத் தவிரச்சொல்லுகிறனவன்று. ஆகையால்
25.51 प्रपन्नனுக்கும் ब्राह्मण्यादि विशिष्टशरीरம் விடுமளவுமவ்வோ जात्यादिகளுக்கீடான भगवदाज्ञानुपालनம் कर्तव्यம். *आहारग्रहमन्त्रार्थ जात्यादि नियमैर्युतः । कुर्याल्लक्ष्मीशकैङ्कर्यं शक्त्यानन्यप्रयोजनः ॥ आचारात्मगुणोपाय पुरुषार्थविशेषतः । अधिकारिणि वैशिष्ट्यं प्रकृष्येतोत्तरोत्तरम् ॥* இப் प्रभावनियमம் रहस्यत्रத்தில் ईश्वरனுடைய प्रशासितृत्वादिगुणानुबन्धமாக अनुसन्धेयம்.
25.52 தகவாற்றரிக்கின்ற தன்னடியார்களைத் தன்றிறத்தில்
மிகவாதரஞ்செய்யுமெய்யருள்வித்தகன்மெய்யுரையின்
அகவாயறிந்தவராரண நீதிநெறிகுலைதல்
உகவாரெனவெங்கடேசிகருண்மையுரைத்தனரே. ( 36 )
25.53 चातुर्वर्ण्यचतुर्विधाश्रममुखे भेदे यथावस्थिते
वृत्तन्तन्नियतं गुणानुगुणया वृत्त्या विशिष्टं श्रिताः ।
त्यागोपप्लवनित्यदूरशरणव्रज्याविधौ कोविदा
श्चिन्तामभ्युपगन्तुमन्तिमयुगेऽप्येकान्तिनस्सन्ति नः ॥ ५६ ॥
इति कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे प्रभावव्यवस्थाधिकारः पञ्चविंशः ॥