[highlight_content]

तत्त्वदीपः-प्रणवार्थविचार:

श्री:

श्रीमते रामानुजाय नमः

श्री वादिकेसरि सुन्दरजामातृमुनिविरचितः

तत्त्वदीपः
प्रथमप्रकरणम्

सुन्दरजामातृमुनेः प्रपद्ये चरणाम्बुजम् ।

संसारार्णवसम्मग्नजन्तुसन्तारपोतकम् ॥

अस्मद्गुरुभ्यस्तेषाञ्च गुरुभ्यो विदधे नमः ।

निदधे च शिरस्याद्यगुरो: पादौ श्रिय:पते: ॥ 1 ॥

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
வாதி3கேஸரி அழகியமணவாளஜீயர் அருளிச்செய்த

தத்வதீ3பப்ரகாஶம்

“ அஸ்மத்3 கு3ருப்4யஸ்தேஷாஞ்ச கு3ருப்4யோ வித3தே4 நம:। நித3தே4 ச ஶிரஸ்யாத்3யகு3ரோ: பாதெள3 ஶ்ரிய: பதே:॥” என்று ஸ்வாசார்யபரமாசார்யாநுவர்த்தநபூர்வகமாக பரமகு3ருபூ4தனான ஶ்ரிய:பதி திருவடிகளை ஆஶ்ரயித்து; (1)

अस्मद्गुरुदयायातयतीन्द्राङ्गीक्रियाश्रयः ।

लभेय लब्धविज्ञानो लक्ष्मीपतिपदद्वयम् ॥ 2 ॥


“அஸ்மத்3கு3ருத3யாயாதயதீந்த்3ராங்கீ3க்ரியாஶ்ரய:। லபே4ய லப்34 விஜ்ஞாநோ லக்ஷ்மீபதிபத3த்3வயம்” என்று ஸ்வாசார்ய த3யாபூர்வகமாக பா4ஷ்யகாரருடைய அங்கீ3காரத்தைப் பெற்று லப்34 ஸ்வரூபஜ்ஞாநனாய், லக்ஷ்மீபதியினுடைய திருவடிகளைப் பெறுவேனாகவேணுமென்று கு3ருபரம்பராஶ்ரயணத்துக்கு ப்ரயோஜநத்தைச் சொல்லி (2)

मन्त्रद्वयोत्तमश्लोकविषयोर्थ (विवेचक: पा) प्रदर्शकः ।

गुरुस्नेहदशारूढस्तत्त्वदीपः प्रकाश्यते ॥ 3 ॥


“மந்த்ரத்3வயோத்தமஶ்லோகவிஷயோர்த்த2 ப்ரத3ர்ஶக: । கு3ருஸ்நேஹ த3ஶாரூட4ஸ்தத்த்வதீ3ப: ப்ரகாஶ்யதே:” என்று – திருமந்த்ரம் த்3வயம் சரமஶ்லோகம் இவற்றை விஷயமாகவுடைத்தாய், இவற்றினுடைய அர்த்த2த்தை விவேகித்து ப்ரகாஶிப்பிப்பதாய், ஆசார்யஸ்நேஹத்தினுடைய த3ஶையின் முடிந்த நிலத்திலே தோற்றுவதான தத்த்வதீ3பமென்று பேரான ரஹஸ்யவ்யாக்2யாநம் ப்ரகாஶிப்பிக்கப்படுகிறதென்று கர்த்தவ்யமான வஸ்துநிர்த்தே3ஶத்தைப் பண்ணி; (3)

तत्रार्थतत्त्वमाचार्याद्यथामति यथाश्रुतम् ।
वर्ण्यते मननार्थाय मतोह्यर्थः स्थिरो भवेत् ॥ 4 ॥

“தத்ரார்த்த2 தத்த்வமாசார்யாத் யதா2மதி யதா2ஶ்ருதம் । வர்ண்யதே மநநார்த்தா2ய மதோ ஹ்யர்த்த2: ஸ்தி2ரோ ப4வேத்” என்று அந்த ரஹஸ்யத்ரயத்தில் அர்த்த2யாதா2த்ம்யமானது ஶ்ரோதாவினுடைய பு3த்3த்4யநுரூபமாக ஆசார்யமுக2த்தால் உண்டான ஶ்ருதத்தைத் தப்பாதபடி ஶ்ருதார்த்த2 மநநம் ப்ரயோஜநமாகச் சொல்லப்படுகிறது, மநநம் பண்ணப்பட்ட அர்த்த2மிறே நிலைநிற்கிறதென்று க்3ரந்த2 நிர்மாணத்தினுடைய ஆப்தத்வத்தையும் ப்ரயோஜநத்தையும் சொல்லிற்றாய்த்து. (4)

उपोद्घातः

अयं जीवात्मा स्वयं नित्यनिर्मलज्ञानानन्दैकस्वरूपः स्वाभाविकज्ञातृत्वकर्तृत्वभोक्तृत्वस्वरूपधर्मः भगवदायत्तस्वरूपस्थितिप्रवृत्तिकतया तच्छरीरत्वेन तदनन्यार्हशेषत्वादिरूपस्वासाधारणाकारः सर्वप्रकारतत्पारतन्त्र्ययुक्ततद्दास्यैकरसः तदनुभवजनितनिरवधिकातिशयनित्यानन्दयोगयोग्योऽपि गुणत्रयात्मिकतया क्षणक्षरणस्वभावया तमःप्रकृत्यनृताऽविद्याद्यपरनामधेयया अनाकलितमूलसम्बन्धया तिलतैलवत् दारुवह्निवत् दुर्विवेचमभिव्याप्तया दुरत्ययभगवन्मायया तिरोहितस्वप्रकाशः अनाद्यज्ञानान्धतया अन्यथाज्ञानविपरीतज्ञानयुक्त: तत्कृतरागद्वेषादिदूषितः तदुचितानि विधिनिषेधविषयाणि कर्माणि कुर्वाणः तदनुगुणवासनावासितः तद्बलसंवर्धितः विशृङ्खलविपरीतरुचिः तदुपचित पुण्यपापरूपानादिकर्मसन्तानकृतब्रह्मादि सुरनरतिर्यक्स्थावरात्मकचतुर्विधशरीरप्रवेशविवशः तत्तद्देहात्माभिमानजनितावर्जनीयतापत्रयाऽभिभूतः गर्भजन्मबाल्ययौवनवार्धकमरणनरकादिसमस्तावस्थासु निरन्तरविततविविधनिरवधिकदुःखपरिपूर्णो वर्तते । एवं परस्परकार्यकारणभूताविद्याकर्मवासना- रुचिप्रकृतिसम्बन्धरूपसंसारचक्रमापन्नम् अनवधिकदुःखजालव्याकुलम् आत्मानमवलोक्य परमकारुणिको भगवान् अपरिमितसौहार्दस्वभावत्वात् अव्याजरूपां कृपां तनोति । (1)

அவதாரிகை


அநந்தரம், வக்தவ்யமான ரஹஸ்யங்கள் ஸ்வரூபயாதா2த்ம்ய-தத3நுரூபாநுஷ்டா2ந ப்ரகாஶகமாகையாலே இதினுடைய ப்ரவ்ருத்திக்கு உபயுக்தமான ஆத்மஸ்வரூபம் இருக்கும்படி ப்ரத2மத்திலே அறியவேணுமிறே. அதாவது, நிஷ்கருஷ்டஸ்வரூபனான இவ்வாத்மா நித்யநிர்மலமான ஜ்ஞாநாநந்த3ங்களை வடிவாகவுடையனாய், ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போ4க்3த்ருத்வங்களாகிற ஸ்வாபா4விக ஸ்வரூப த4ர்மங்களையுடையனாய், ப43வதா3யத்தமான ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திகளை உடையனாகையாலே தச்ச2ரீரத்வமடியாக வந்த ததே3கஶேஷத்வம், ததே3கநியாம்யத்வம், ததே3கதா4ர்யத்வமாகிற ஸ்வாஸாதா4ரணவேஷத்தை உடையனாய், இப்படி ஸர்வப்ரகாரதத்பாரதந்த்ர்யயுக்தமான தத்3தா3ஸ்யமொன்றிலுமே ப்ரீதியையுடையனாய், ஸர்வப்ரகாரபரிபூர்ண ப43வத3நுப4வத்தாலே ஜநிதமான அநவதி4காஶியமான ஆநந்த3த்தினுடைய நித்யப்ராப்திக்கு யோக்3யனாயிருக்கச்செய்தேயும் ஸத்த்வ ரஜஸ் தமோரூபமான கு3ணத்ரயங்களை வடிவாகவுடைத்தாய், ஸர்வகாலமும் ப்ரதிக்ஷணமுண்டான பரிணாமத்தை ஸ்வபா4வமாகவுடைத்தாய், தமஸ்ஸு, ப்ரக்ருதி, அந்ருதம், அவித்3யை என்று இது முதலான நாமாந்தரங்களை உடைத்தாய், இன்னநாள் முதலென்றறிய ஒண்ணாதபடி அநாதி3யான ஸம்ப3ந்த4த்தை உடைத்தாய், திலத்தில் தைலம்போலேயும், தா3ருவில் அக்3நிபோலேயும் பிரிக்க அரிதாம்படி வ்யாப்தையாய், சேதநனுடைய யத்நத்தால் கடக்க அரிதாம்படி இருக்கிற ப43வந்மாயையாலே திரோஹிதமான ஸ்வப்ரகாஶத்தை உடையனாய், இப்படி அநாத்3யஜ்ஞாநாந்த3னாகையாலே அந்யதா2ஜ்ஞாநவிபரீத ஜ்ஞாநங்களை உடையனாய், அதடியாகவந்த ராக3த்3வேஷாதி3களாலே தூ3ஷிதாந்த:கரணனாய், அதுக்கீடாக விதி4நிஷேத4 விஷயமான கர்மங்களைப் பண்ணாநின்று கொண்டு தத3நுகு3ணவாஸநையாலே வாஸிதனாய், அவ்வாஸநாப3லத்தாலே வர்த்தி4தமாய்த் தடையற்றுக் கிடக்கிற விபரீதருசியை உடையனாய், அத்தாலே திரட்டப்பட்ட புண்யபாபரூபமான அநாதி3 கர்மப்ரவாஹத்தாலே உண்டான தே3வதிர்யங்மநுஷ்யஸ்தா2வராத்மகமான சதுர்வித4 ஶரீரப்ரவேஶத்தாலே பரவஶனாய், அவ்வோ தே3ஹங்களிலே ஆத்மாபி4மாநத்தாலே பிறந்து அவர்ஜநீயமான தாபத்ரயங்களாலே அபி4பூ4தனாய், கர்ப்ப4ம், ஜந்மம், பா3ல்யம், யௌவநம், வார்த்34கம், மரணம், நரகம் என்கிற அவஸ்தா2ஸப்தகம் தொடக்கமான ஸமஸ்தாவஸ்தை2களிலும் நிரந்தரமாகப் பரம்பி நாநாவித4மான முடிவில்லாத து3:க2ஸாக3ரத்திலே அழுந்தி உந்மத்தரைப்போலே தன்னை மறந்து திரியாநிற்கும். இப்படி ஒன்றுக்கொன்று கார்யகாரணபூ4தமான அவித்3யாகர்ம வாஸநா ருசிப்ரக்ருதி ஸம்ப3ந்த4ரூபமாயிருக்கிற ஸம்ஸார சக்ரத்திலே அகப்பட்டு அநவதி4கமான து3:க2ஜாலத்தாலே வ்யாகுலனான இந்த ஜீவாத்மாவைப் பார்த்து, பரமகாருணிகனான ஸர்வேஶ்வரன் அபரிமிதமான ஸௌஹார்த்த3த்தை ஸ்வரூபமாக உடையனாகையாலே நிர்ஹேதுகக்ருபையைப் பண்ணாநிற்கும்.   1


यथोक्तं भगवच्छास्त्रे- “ एवं संसृतिचक्रस्थे भ्राम्यमाणे स्वकर्मभिः । जीवे दुःखाकुले विष्णो: कृपा काप्युपजायते ॥”  ( अहि.सं) इति । तस्यैतस्य भगवदपारकरुणामृतपरिणामरूपकटाक्षवीक्षा- सन्धुक्षितसत्त्वोद्रेकसमुत्पन्नस्वोज्जिजीविषाकस्य बाह्यकुदृष्टिमतवैमुख्यविशिष्टस्य निरवधिक शिष्टपरिग्रहातिशयनिगमनिष्ठप्रामाण्यविश्वासस्य कर्मभागावगतक्षयिष्णुफलविरक्तस्य ब्रह्मभागप्रति- पन्नानन्तस्थिरफलापरिमितोदारकल्याणैकतानस्वरूपरूपगुणविभवब्रह्मानुभवजनितनिरस्तातिशया- ह्लादसुखभावैकलक्षण (वि.पु.6-5-59) परमपुरुषार्थप्रवृद्धाभिलाषस्य तत्प्राप्त्युपायजिज्ञासया सत्सन्तान- प्रसूतसदाचारयुक्तपरमश्रोत्रियब्रह्मनिष्ठवेदविदग्रेसरसदाचार्यचरणयुगलं विधिवदुपसन्नस्य कस्यचिच्चेतनस्य तदुपदेष्टव्यतत्त्वहितयाथात्म्यप्रकाशकत्वात् रहस्यत्रयं ज्ञातव्यम् । 2

“ஏவம் ஸம்ஸ்ருதிசக்ரஸ்தே2 ப்4ராம்யமாணே ஸ்வகர்மபி4:। ஜீவே து3:கா2குலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே” – இப்படி ஸம்ஸாரசக்ரஸ்த2னாய், ஸ்வகர்மங்களாலே ப்4ராம்யமாணனாய், து3:கா2குலனான சேதநனைக்குறித்து, ஸர்வவ்யாபகனான ஸர்வேஶ்வரனுக்கு ஒரு க்ருபை பிறக்குமென்று ப43வச்சா2ஸ்த்ரத்திலே சொல்லிற்றிறே. இந்த நிர்ஹேதுகக்ருபையினுடைய பரிணாமரூபமான ப43வத்கடாக்ஷத்தாலுண்டான விஷயீகாரத்தினாலே ஸத்த்வோத்3ரேகம் பிறந்து, அத்தாலே தன்னுடைய உஜ்ஜீவநத்திலே ஒருப்பட்டு, ரஜஸ்தம:கார்யமான பா3ஹ்யகுத்3ருஷ்டிமதங்களில் விமுக2னாய், நிரவதி4கமான ஶிஷ்டபரிக்3ரஹத்தை உடைத்தான அபௌருஷேயமான வேத3த்திலே நிலைநின்ற ப்ராமாண்யவிஶ்வாஸத்தை உடையனாய், கர்மபா43த்திலே அறியப்பட்ட க்ஷயிஷ்ணுப2லங்களில் விரக்தனாய், ப்3ரஹ்மபா43த்திலே ப்ரதிபந்நமாய், அநந்தஸ்தி2ரப2லமாய், அபரிமிதோதா3ர கல்யாணைகதாநமான ஸ்வரூபரூபகு3ணவிப4வங்களை உடைய ப்3ரஹ்மாநுப4வத்தாலே ஜநிதமாய் நிரஸ்தாதிஶயாஹ்லாத3 ஸுக2 பா4வைக லக்ஷணமான பரமபுருஷார்த்த2த்திலே ப்ரவ்ருத்34மான அபி4லாஷத்தை உடையனாய், அந்த புருஷார்த்த2 ப்ராப்த்யுபாயத்தை அறிய வேண்டும் இச்சை2யாலே ஸத்ஸந்தாநப்ரஸூதனாய், ஸதா3சாரயுக்தனாய், பரமஶ்ரோத்ரியனாய், ப்3ரஹ்மநிஷ்ட2னாய், வேத3வித3க்3ரேஸரனான ஸதா3சார்யனுடைய சரணங்களை ஶாஸ்த்ரோக்தமான படியிலே ப4க்திஶ்ரத்3தை4களோடே ஆஶ்ரயித்தானொரு சேதநனுக்கு, அவ்வாசார்யனாலே உபதே3ஶிக்கப்படுமதான தத்வஹிதங்களினுடைய யாதா2த்ம்யத்தை ப்ரகாஶிப்பிக்கையாலே ரஹஸ்யத்ரயமும் ஜ்ஞாதவ்யம். 2

तत्र तत्त्वरूपस्वरूपयाथात्म्यप्रकाशको मूलमन्त्रः हितरूपस्वरूपानुष्ठानप्रकाशकं द्वयं अस्मिन्ननुष्ठाने शरण्याभिमतिप्रकाशकश्चरमश्लोकः । 3

(தத்ரேதி) தத்வரூபமான ஸ்வரூபயாதா2ம்யத்தைத் திருமந்த்ரம் ப்ரகாஶிப்பிக்கிறது; ஹிதரூபமான ஸ்வரூபாநுரூபாநுஷ்டா2நத்தை த்3வயம் ப்ரகாஶிப்பிக்கிறது; ஹிதாநுஷ்டா2நம் ஶரண்யனுக்கு அபி4மதமென்னுமிடத்தை சரமஶ்லோகம் ப்ரகாஶிப்பிக்கிறது. 3

अस्यापि हितविषयत्वात् तत्त्वहितपरं रहस्यत्रयमित्युक्तम् । ननु स्वरूपानुष्ठानस्य स्वतश्शरण्याभिमतत्वात् तदर्थं श्लोकस्य पृथगुपादानं निष्प्रयोजनमिति – मैवम् :4

(அஸ்யேதி) இதுவும் ஹிதபரமாகையாலே தத்வஹிதபரம் ரஹஸ்யத்ரயமென்று சொல்லப்பட்டது. ஸ்வரூபாநுரூபமான அநுஷ்டா2நம் ஸ்வத ஏவ ஶரண்யனுக்கு அபி4மதமாகையாலே அதற்காக ஶ்லோகத்தைத் தனித்தெடுக்கிறதுக்கு ப்ரயோஜநமில்லையே என்னில்; 4

हितरूपानुष्ठानं भक्तिः प्रपत्तिश्चेति द्विविधम् ; तत्र भक्तौ “तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् । ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥ तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः । नाशयाम्यात्म- भावस्थो ज्ञानदीपेन भास्वता (गी. 10.10,11) इति व्यवसायत्मक बुद्ध्युत्पादनतद्विरोधिसन्तमसनिबर्हणद्वारेण साहाय्यकमात्रं भगवतैवोक्तम् ; प्रपत्तौ तु “सर्वपापेभ्यो मोक्षयिष्यामि” (गी.18-66) इति प्राप्तिविरोधिसर्वपापविमोचनस्य स्वयं कर्तृत्ववचनात् अस्य शरण्याभिमततमत्वं सुस्पष्टम्; अतः पृथगुपादानं सप्रयोजनम् । तस्मात् तत्त्वहितार्थपरतया रहस्यत्रयं ज्ञातव्यमिति सिद्धम् । 5

அப்படியன்று :- ஹிதரூபமான அநுஷ்டா2நம் ப4க்திரூபமாயும், ப்ரபத்திரூபமாயும் இரண்டுபடிப்பட்டிருக்கும். அதில் – ப4க்தியில், “தேஷாம் ஸததயுக்தாநாம் ப4ஜதாம் ப்ரீதிபூர்வகம் ।  த3தா3மி பு3த்3தி4 யோக3ம் தம் யேநமாமுபயாந்தி தே ।। தேஷாமேவாநுகம் பார்த்த2 மஹமஜ்ஞாநஜம் தம: । நாஶயாம்யாத்ம பா4வஸ்தோ2 ஜ்ஞாநதீ3பேந பா4ஸ்வதா ।।” என்று – என்றுமொக்க ப்ராப்தியை ஆசைப்பட்டு ப்ரீதிபூர்வகமாக ப4ஜித்துப் போருமவர்களுக்கு, என்னை யாதொரு புத்3தி4யோக3த்தாலே பெறுவார்கள், அந்த வ்யவஸாயயோக3த்தைப் பண்ணிக்கொண்டுநிற்பேனென்றும், அவர்களுக்கே இந்த பு3த்3தி4 உதி3க்கைக்குறுப்பான க்ருபை பண்ணுவேன், அதுக்கு விரோதி4யான அஜ்ஞாநகார்யமாயிருக்கிற ஆந்தரமான தமஸ்ஸை இவர்கள் நெஞ்சுக்குள்ளே நின்று ஒளிவிடுகிற ஜ்ஞாநதீ3பத்தாலே நஶிப்பியா நிற்பனென்றும், ப4ஜநத்துக்கு ஸஹகாரியாமளவும் ப43வான்தன்னாலே அருளிச்செய்யப்பட்டது; ப்ரபத்தியில், “ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி” என்று ப்ராப்திவிரோதி4 ஸர்வபாபங்களில்நின்றும் நானே உன்னை விடுவிக்கக்கடவேனென்று தானே கர்த்தாவாக அருளிச்செய்கையாலே இப்ப்ரபத்த்யநுஷ்டா2நம் ஶரண்யாபி4மததமமென்னுமிடம் ஸுஸ்பஷ்டம், இந்த அதிஶயத்தை ப்ரகாஶிப்பிக்கைக்காக ஶ்லோகத்தைத் தனித்தெடுத்தவிடம் ஸப்ரயோஜநம். ஆகையாலே, தத்வஹிதமிரண்டுக்குமாக ரஹஸ்யத்ரயமும் ஜ்ஞாதவ்யமென்னுமிடம் ஸித்34ம்.        5

सप्रकारस्वरूपोक्तिसामर्थ्यान्मूलमन्त्रतः । तत्त्वस्वरूपयाथात्म्यं वर्ण्यते तत्त्वदर्शिभिः ॥ तत्र – स्वरूपयाथात्म्यपरो मूलमन्त्रः “अनन्ता वै भगवन्मन्त्राः” इति वेदान्तोदितसकलभगवन्मन्त्रोत्कृष्टतया “नारायणाय विद्महे वासुदेवाय धीमहि । तन्नो विष्णुः प्रचोदयात् ” (विष्णुगायत्री) इति विष्णुगायत्र्या प्रतिपादिते व्यापकभगवन्मन्त्रत्रये प्रथमोपात्तत्वात् अर्थसम्पत्तेश्च सर्वमन्त्रान्तरोत्कृष्टतम इत्यवगम्यते । 6

ஆனால், ஸ்வரூபயாதா2த்ம்யபரமான மூலமந்த்ரம் தத்வபரமானபடி என்னென்னில், “ஸப்ரகாரஸ்வரூபோக்தி ஸாமர்த்2யாந் மூலமந்த்ரத:। தத்வஸ்வரூபயாதா2த்ம்யம் வர்ண்யதே தத்வத3ர்ஶிபி : ॥” என்று ஸ்வரூபத்தை ஸப்ரகாரமாக ப்ரகாஶிப்பிக்கிற ஸாமர்த்2யத்தாலே தத்வத்தினுடைய ஸ்வரூபயாதா2த்ம்யமும் தத்வத3ர்ஶிகளாலே மூலமந்த்ரமுக2த்தாலே சொல்லப்படாநின்றது. ஆகையிறே, இம்மந்த்ரத்தை ஸ்வரூபப்ரதா4நமாகவும், ப்ராப்யப்ரதா4நமாகவும் ஆசார்யர்கள் ப்ரஸாதி3க்கிறது. ‘தத்வம் க3மயஸி’ என்கிற ப்ரகாரத்தாலே தத்வமாவது ப்ராப்யமிறே; ஸ்வரூபாவிர்பா4வம் புருஷார்த்த2மாகையாலே ஸ்வரூபதத்வங்களிரண்டும் சேரத்தட்டில்லை. அவ்விடத்தில், ஸ்வரூபயாதா2த்ம்யபரமான இந்த மூலமந்த்ரம் “அநந்தா வை ப43வந் மந்த்ரா:” என்று வேதா3ந்தத்தில் சொல்லப்பட்ட அஸங்க்2யாதமான ப43வந்மந்த்ரங்களில் வைத்துக்கொண்டு, “நாராயணாய வித்3மஹே வாஸுதே3வாய தீ4மஹி । தந்நோ விஷ்ணு: ப்ரசோத3யாத்” என்று விஷ்ணுகா3யத்ரியிலே சொல்லப்பட்ட வ்யாபகமந்த்ரத்ரயத்திலே ப்ரத2மோபாத்தமாகையாலும், அர்த்த2 பூர்த்தி நிப3ந்த4நமான அதிஶயமுண்டாகையாலும் ஸர்வமந்த்ராந்தரங்களிலும் உத்க்ருஷ்டதமமாயிருக்கும்.       6

तत्र गायत्र्यां मन्त्रत्रयप्रधानभूतनामत्रयोपादानं तेषां कृत्स्नोपादानप्रदर्शनार्थम् । व्याप्यव्यापक- तद्गुणव्याप्तिप्रकारतत्फलादिसमस्तार्थाऽभिधायितया व्याप्याध्याहारादिसापेक्षात् द्वादशाक्षरात् व्यापकत्वमात्रप्रकाशकात् षडक्षराच्च अस्यार्थसम्पत्तिरविगीता । 7

இந்த விஷ்ணுகா3யத்ரியில் நாராயண வாஸுதே3வ விஷ்ணு ஶப்33ங்களானவை, அந்த மந்த்ரத்ரயத்துக்கு ப்ரதா4நபூ4தநாமத்ரயங்களாகையாலே, ஸாதா4ரணப்ரணவ நமஸ்ஸுக்களோடே கூடின மந்த்ரத்ரயத்துக்கும் உபலக்ஷணமாகக்கடவது. இந்த ப்ரத2மோபாத்தமான திருமந்த்ரத்துக்கு அர்த்த2 பூர்த்தியால் வந்த அதிஶயம் ஏதென்னில் – வ்யாப்யஸ்வரூபத்தையும், வ்யாபகஸ்வரூபத்தையும், வ்யாபககு3ணங்களையும், வ்யாப்திப்ரகாரத்தையும், வ்யாப்திப2லத்தையும் ஶாப்33மாகச் சொல்லுகையாலே, வ்யாப்யத்தினுடைய ஸித்3தி4க்காக ‘ஸர்வ’ ஶப்33த்தை அத்4யாஹரித்தும், வ்யாபககு3ண ஸித்3தி4க்காக ப43வச்ச2ப்33த்தைக் கூட்டிக்கொண்டும் சொல்லும்படியான திரு த்3வாத3ஶாக்ஷரத்திலும், வ்யாபகத்வமாத்ரத்தையே காட்டி அல்லாததொன்றையும் காட்டாத ஷட3க்ஷரத்திலுங்காட்டில் அர்த்த2பூர்த்திநிப3ந்த4நமான அதிஶயம் திருமந்த்ரத்துக்கு ஸுஸ்பஷ்டம்.     7

किञ्च “पुरा जन्मान्तरे तात द्वादशाक्षरसंज्ञकः । मन्त्रोऽभ्यस्तो महाप्राज्ञ तत्प्रभावानुगो भवान् ॥ श्रूयतां कालदण्डोऽयं कामादीनां च सत्तम । पापानां चैव रोगाणां विविधस्य भयस्य च ॥ नमो नारायणायेति प्रणवेन समन्वितः । हृदि तिष्ठतु ते नित्यं वाचि नित्यं भवत्विति ॥” इति जन्मान्तरेष्वपि चिरकालाभ्यस्तद्वादशाक्षरफलत्वेन श्रीमदष्टाक्षरमन्त्रतदर्थाधिगमवचनात् अस्याधिकतमत्वं सुव्यक्तम् । 8

இன்னமும், “புரா ஜந்மாந்தரே தாத த்3வாத3ஶாக்ஷரஸம்ஜ்ஞக:। மந்த்ரோப்4யஸ்தோ மஹாப்ராஜ்ஞ தத்ப்ரபா4வாநுகோ34வாந் । ஶ்ரூயதாம் காலத3ண்டோ3ऽயம் காமா தீ3நாஞ்ச ஸத்தம । பாபாநாஞ்சைவ ரோகா3ணாம் விவித4ஸ்ய ப4யஸ்ய ச ॥ நமோ நாராயணாயேதி ப்ரணவேந ஸமந்வித:। ஹ்ருதி3 திஷ்ட2து தே நித்யம் வாசி நித்யம் ப4வத்விதி” என்று – முன்பு ஜந்மாந்தரத்திலே திரு த்3வாத3ஶாக்ஷரமென்று பேரான திருமந்த்ரமானது அப்4யஸிக்கப்பட்டு, அதினுடைய ப்ரபா4வத்தைப் பின் செல்லுகையாலே, காமக்ரோதா4தி3களான ஆத்மரோக3ங்களுக்கும், ஸமஸ்தபாபங்களுக்கும் ஸாம்ஸாரிக ஸகலப4யத்துக்கும் காலத3ண்ட3ம் போலே விநாஶகமான திருவஷ்டாக்ஷரரூபமான மூலமந்த்ரமானது கேட்கப்பட்டு, இதினுடைய அர்த்தா2நுஸந்தா4ந ரூபத்தாலே நெஞ்சிலேயும், ஶப்3தோ3ச்சாரணமுக2த்தாலே வாக்கிலேயும் நிற்பதாக என்று உபதே3ஶிக்கையாலே திரு த்3வாத3ஶாக்ஷராப்4யாஸப2லமாகத் திருவஷ்டாக்ஷரத்தினுடைய லாப4த்தைச்சொல்லுகையாலே, இதினுடைய அதி4கதமத்வம் ஸுஸ்பஷ்டம்.    8

अपि च “भूत्वोर्ध्वबाहुरद्यात्रसत्यपूर्वं ब्रवीमि वः । हे पुत्रशिष्याः शृणुत न मन्त्रोऽष्टाक्षरात्परः ॥”, “यथा सर्वेषु देवेषु नास्ति नारायणात्परः। तथा सर्वेषु मन्त्रेषु नास्ति चाष्टाक्षरात्परः”, “व्यक्तं हि भगवानेषः साक्षान्नारायणः स्वयम् । अष्टाक्षरस्वरूपेण मुखेषु परिवर्तते ॥”, “सर्ववेदान्तसारार्थः संसारार्णवतारकः। गतिरष्टाक्षरो नृणामपुनर्भवकाङ्क्षिणाम्॥”, “ऋचो यजूंषि सामानि तथैवाथर्वणानि च । सर्वमष्टाक्षरान्तस्थं यच्चान्यदपि वाङ्मयम्॥”, “भूयो वेदाष्षडङ्गानि छन्दांसि विविधास्स्वराः । सर्वमष्टाक्षरान्तस्स्थं यच्चान्यदपि वाङ्मयम् ॥”, “ऐहलौकिकमैश्वर्यं स्वर्गाद्यं पारलौकिकम् । कैवल्यं भगवन्तं च मन्त्रोऽयं साधयिष्यति ॥”, “ किं तत्र बहुभिर्मन्त्रैः किं तत्र बहुभिर्व्रतैः ॥ नमो नारायणायेति मन्त्रस्सर्वार्थसाधकः॥”, “ नमो नारायणायेति यो विद्याद्ब्रह्म शाश्वतम्। अन्तकाले जपन्नेति तद्विष्णोः परमं पदम् ॥”, “यत्राष्टाक्षरसंसिद्धो महाभागो महीयते । न तत्र सञ्चरिष्यन्ति व्याधिदुर्भिक्षतस्कराः ॥”, “आसीना वा शयाना वा तिष्ठन्तो यत्रकुत्र वा। नमो नारायणायेति मन्त्रैकशरणा वयम् ॥”, “चतुरन्तां भुवं भोक्तुं प्राप्तुं वाऽमरराजताम् ।  अष्टाक्षरो ह्युपाय: स्यात् त्रिवर्गस्य तु किं पुनः ॥”, “ बहवो हि महात्मानो मुनयस्सनकादयः । अष्टाक्षरं समाश्रित्य ते जग्मुः वैष्णवं पदम् ॥”, “ आयुष्यं धनपुत्रांश्च बहुविद्यां महद्यशः । धर्मार्थकाममोक्षांश्च लभते जपकृन्नरः॥”, “मन्त्राणां परमो मन्त्रो दैवतानां च दैवतम् । गुह्यानां परमं गुह्यमोङ्काराद्यक्षरात्मकम् ॥”, “ ऋचो यजूंषि सामानि योऽधीतेऽसकृदञ्जसा । सकृदष्टाक्षरं जप्त्वा फलं तस्य समश्नुते ॥”, “गुरुरप्यखिलः पाप्मा जन्मान्तरकृतोऽपि वा । अष्टाक्षरजपेनैव- क्षीयते नात्र संशयः ॥”, “ प्राणेषु क्षीयमाणेषु बुद्धया निर्गतमोहया । जपन्नष्टाक्षरं याति तद्विष्णोः परमं पदम् ॥”, “अपुरश्चरणस्यापि नित्यं जप्तुर्महात्मनः । समस्तकामसंसिद्धिर्भक्तस्य भवति ध्रुवम् ॥”, “ भगवत्प्राप्तिनिष्ठानां न पुरश्चरणं भवेत् । नानुकूल्यं न नक्षत्रपरीक्षा च विशेषतः ॥”, “ नास्ति नक्षत्रसंबन्धो न निमित्तपरीक्षणम् । श्रद्धैव कारणं पुंसामष्टाक्षरपरिग्रहे ॥”  इत्यादिभिः प्रमाणशतैः सर्वप्रकारोत्कर्षः प्रसाध्यते । एवं श्रुतिस्मृतीतिहासपुराणादिपरिग्रहाधीनमस्य माहात्म्यं प्रपञ्चितम् ।     9

அதுக்குமேலே, “பூ4த்வோர்த்4வபா3ஹுரத்3ய” என்று புத்ர ஶிஷ்யர்களைக் குறித்துக் கையெடுத்து ஶபத2பூர்வமாகச் சொல்லுகிறேன், திருவஷ்டாக்ஷரத்திற்காட்டில் பரமாயிருப்பதொரு மந்த்ரமில்லை என்றும்; “யதா2 ஸர்வேஷு தே3வேஷு நாஸ்தி  நாராயணாத் பர:” – யாதொருபடி ஸர்வதே3வர்களிலும் வைத்துக்கொண்டு நாராயணனிற்காட்டில் பரனில்லை, “ததா2 ஸர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி சாஷ்டாக்ஷராத் பர:” – அப்படியே மந்த்ராந்தரங்களிலும் வைத்துக்கொண்டு திருவஷ்டாக்ஷரத்திற்காட்டில் பரமில்லை என்றும்; “வ்யக்தம் ஹி ப43வாநேஷ ஸாக்ஷாந்நாராயண: ஸ்வயம் । அஷ்டாக்ஷர ஸ்வரூபேண முகே2ஷு பரிவர்த்ததே” என்று – ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகனான ஸாக்ஷாந்நாராயணன்தானே வ்யக்தமாம்படி அஷ்டாக்ஷரமாகிற வடிவோடே எல்லார் முக2ங்களிலும் வர்த்தியாநின்றான் என்றும்; “ஸர்வவேதா3ந்த ஸாரார்த்த2ஸ் ஸம்ஸாரார்ணவதாரக: । ௧3திரஷ்டாக்ஷரோ ந்ரூணாமபுநர்ப4வகாங்க்ஷிணாம்” என்று – ஸர்வவேதா3ந்தங்களிலும் ஸாரமான அர்த்த2மாய், ஸம்ஸாரமாகிய கடலைக்கடத்துவதுமான திருவஷ்டாக்ஷரம் மோக்ஷகாங்க்ஷிகளான புருஷர்களுக்குப் புகலிடம் என்றும்; “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததை2வாத2ர்வணாநி ச । ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த2ம் யச்சாந்யத3பி வாங்மயம்” என்று ருக்குக்களும், யஜுஸ்ஸுக்களும், ஸாமங்களும், அப்படியே அத2ர்வணங்களும், மற்றுமுண்டான ஶப்33 விகாரங்களுமெல்லாம் இவ்வஷ்டாக்ஷரத்துக்குள்ளே என்றும் ; “த்ரயோ வேதா3ஷ்ஷட3ங்கா3நி ச2ந்தா3ம்ஸி விவிதா4: ஸ்வரா: । ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த2ம் யச்சாந்யத3பி வாங்மயம்” என்று – ருக்3 யஜுஸ் ஸாமரூபமான மூன்று வேத3ங்களும் ஶீக்ஷா வ்யாகரண-நிருக்த-ச2ந்தோ3விசிதி-கல்பஸூத்ர-ஜ்யோதிஶ்ஶாஸ்த்ரமென்று சொல்லப்படுகிற அங்க3ங்களாறும், அநுஷ்டுப்-த்ரிஷ்டுப்-ஜக3தீ-கா3யத்ரீ என்று சொல்லப்படுகிற ச2ந்த3ஸ்ஸுக்களும், உதா3த்த-அநுதா3த்த-ஸ்வரித-ப்ரசயங்கள் என்று சொல்லப்படுகிற நாநாவித4ங்களான ஸ்வரங்களும், மற்றும் ந்யாயமீமாம்ஸா த4ர்ம ஶாஸ்த்ர-இதிஹாஸபுராணங்களென்று சொல்லப்படுகிற ஶப்33 விகாரங்களுமெல்லாம் அஷ்டாக்ஷரஸ்த2ம் என்றும்; “ஐஹலௌகிகமைய்வர்யம் ஸ்வர்கா3த்3யம் பாரலௌகிகம் । கைவல்யம் ப43வந்தஞ்ச மந்த்ரோயம் ஸாத4யிஷ்யதி” என்று – புத்ரபஶ்வந்நாதி3 ரூபமான இஹலோகைஶ்வர்யத்தையும், ஸ்வர்க்கா3நுப4வம் முதலாக ப்3ரஹ்மபத3மீறான பரலோகைஶ்வர்யத்தையும், ஆத்மாநுப4வமாத்ரமான கைவல்யத்தையும், நிரதிஶயாநந்த3ரூபமான ப43வத3நுப4வத்தையும் இம்மந்த்ரம் ஸாதி4த்துக் கொடுக்கும் என்றும்; “கிந்தத்ர ப3ஹுபி4ர்மந்த்ரை: கிந் தத்ர ப3ஹுபி4ர் வ்ரதை:। நமோ நாராயணாயேதி மந்தரஸ்ஸர்வார்த்த2ஸாத4க:”  என்று – திருமந்த்ரமானது ஸர்வார்த்த2த்தையும் ஸாதி4த்துக் கொடாநிற்கும், அது உண்டாயிராநிற்க அநேகமந்த்ரங்களாலே என்ன ப்ரயோஜநமுண்டென்றும்; “நமோ நாராயணாயேதி யோ வித்3யாத்3 ப்3ரஹ்ம ஶாஶ்வதம் । அந்தகாலே ஜபந்நேதி தத்3விஷ்ணோ:பரமம் பத3ம்” என்று – ஶாஶ்வத ப்3ரஹ்மரூபியான ஸர்வேஶ்வரனை அறிந்த புருஷன் அந்திம-காலத்திலே திருமந்த்ரத்தை ஜபித்தவளவிலே பரமபத3த்தை ப்ராபிக்கும் என்றும்; “யத்ராஷ்டாக்ஷரஸம்ஸித்3தோ4 மஹாபா4கோ3 மஹீயதே । ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி4 து3ர்பி4க்ஷதஸ்கரா:” என்று – யாதொரு தே3ஶத்தில் திருமந்த்ரத்திலே அர்த்த2ஜ்ஞாநரூபமான ஸம்யக்ஸித்3தி4யையுடைய பெரிய பா4க்யாதி4கன் தன்னுடைய ஜ்ஞாநமாஹாத்ம்யம் தோன்றும்படி ஸத்க்ருதனாயிருக்கிறான், அத்தே3ஶத்தில் த்ருதீயபத3 ஸித்34மான ப43வதே3க போ4க்3யத்வ விரோதி4யான விஷயாந்தரருசியாகிற வ்யாதி4யும், மத்4யமபதா3ர்த்த2மான ப43வதேக ரக்ஷ்யத்வ விரோதி4யான அர்த்த2 த்ருஷ்ணாரூப து3ர்பி4க்ஷமும், ப்ரத2மபதா3ர்த்த2மான ப43வதே3க ஶேஷத்வவிரோதி4யான ஆத்மாபஹாரமாகிற தஸ்கரமும் நடையாடக்கடவதல்ல என்றும்; “ஆஸீநா வா ஸ்யாநா வா திஷ்ட2ந்தோ யத்ர குத்ர வா । நமோ நாராயணாயேதி மந்த்ரைக ஶரணா வயம்” என்று – இருக்கிலுமாம், கிடக்கிலுமாம், ஏதேனுமோரிடத்திலே நிற்கிலுமாம், ப்ராங்முக2த்வாதி3 நியம ரஹிதமாகத் திருமந்த்ரமே நமக்குத் தஞ்சம் என்றும்; “சதுரந்தாம் பு4வம் போ4க்தும் ப்ராப்தும் வா அமரராஜதாம் । அஷ்டாக்ஷரோ ஹ்யுபாய: ஸ்யாத் த்ரிவர்க்க3ஸ்ய து கிம்புந:” என்று – சதுஸ்ஸாக3ரபர்யந்தையான பூமியை பு4ஜிக்கைக்கும், தே3வர்களுக்கு நிர்வாஹகனான இந்த்3ராதி3 பத3த்தைப் பெறுகைக்கும் இம்மந்த்ரம் உபாயமாம், த4ர்மார்த்த2 காமரூபமான த்ரிவர்க்க3த்துக்கு ஸாத4நமாகை ஒரு பொருளோ என்றும்; “ப3ஹவோ ஹி மஹாத்மாநோ முநயஸ்ஸநகாத3ய:। அஷ்டாக்ஷரம் ஸமாஶ்ரித்ய தஜ்ஜக்3முர்வைஷ்ணவம் பத3ம்” என்று – மஹாத்மாக்களான ஸநகாதி3கள் பலரும் திருவஷ்டாக்ஷரத்தைப்பற்றிப் பரமபத3த்தை அடைந்தார்கள் என்றும்; “ஆயுஷ்யம் த4ந புத்ராம்ஞ்ச ப3ஹு வித்3யாம் மஹத்3யஶ:। த4ர்மார்த்த2 காமமோக்ஷாம்ஶ்ச லப4தே ஜபக்ருந்நர:”  என்று – இம்மந்த்ரத்தை ஜபிக்கும் புருஷன் ஆயுஸ்ஸையும், த4நத்தையும், புத்ரர்களையும், ப3ஹுளமாகப் பெற்றும் வித்3யையையும், பெரிய யஶஸ்ஸையும் பெற்றும், த4ர்மார்த்த2 காமமோக்ஷங்களையும் பெறும் என்றும்; “மந்த்ராணாம் பரமோ மந்த்ர: தை3வதாநாஞ்ச தை3வதம் । கு3ஹ்யாநாம் பரமம் கு3ஹ்யம் ஓங்காராத்3யக்ஷராத்மகம்” என்று – மந்த்ரங்களுக்கெல்லாம் பரமமான மந்த்ரமாய், தை3வங்களுக்கெல்லாம் பரமமான தை3வதமாய், மறைக்க வேண்டும் ரஹஸ்யங்களுக்கெல்லாம் உத்தமமான கு3ஹ்யமாய், பாவநங்களுக்கெல்லாம் பரமபாவநமாயிருப்பது ஸநாதநமான மூலமந்த்ரம் என்றும்; “ருசோ யஜூம்ஷி ஸாமாநி யோதீ4தேऽஸக்ருத3ஞ்ஜஸா । ஸக்ருத3ஷ்டாக்ஷரம் ஜப்த்வா ப2லம் தஸ்ய ஸமஶ்நுதே”  என்று – ருக்3 யஜுஸ்ஸாமங்களை நேரே பலகாலும் பாராயணம் பண்ணுகிறான் யாவனொருவன், அவனுடைய ப2லத்தை ஒருகால் திருமந்த்ரத்தை உச்சரித்துப்பெறலாம் என்றும்; “கு3ருரப்யகி2ல: பாப்மா ஜந்மாந்தரக்ருதோऽபி வா। அஷ்டாக்ஷரஜபேநைவ க்ஷயதே நாத்ர ஸம்ஶய:” என்று – எல்லாப் பாபமும் க4நத்திருக்குமேயாகிலும், ஜந்மாந்தரே பண்ணப்பட்டதேயாகிலும், திருவஷ்டாக்ஷரத்தினுடைய உச்சாரணமாத்ரத்திலே நஶியாநிற்கும், இதிலொரு ஸந்தே3ஹமில்லை என்றும்; “ப்ராணேஷு க்ஷீயமாணேஷு பு3த்3த்4யா நிர்க3தமோஹயா । ஜபந்நஷ்டாக்ஷரம் யாதி தத் விஷ்ணோ: பரமம் பத3ம்” என்று – ப்ராணன்கள் க்ஷயிக்கிறவளவிலே தெளிந்த நெஞ்சோடே திருவஷ்டாக்ஷரத்தை ஜபிக்கிறவன், அந்த உச்சாரணகாலந்தன்னிலே பரமபத3த்தைப் பெறாநிற்கும் என்றும்; “அபுரஶ்சரணஸ்யாபி நித்யம் ஜப்துர் மஹாத்மந:। ஸமஸ்தகாமஸம்ஸித்3தி4ர் ப4க்தஸ்ய ப4வதி த்4ருவம்” என்று தீ3க்ஷாதி3புரஶ்சரணங்கள் பண்ணிற்றிலனேயாகிலும், ப4க்தனாய், நித்யம் இதை ஜபம் பண்ணும் மஹாத்மாவுக்கு அறுதியாக எல்லா அபீ4ஷ்டங்களும் ஸித்3தி4க்கும் என்றும்; “ப43வத் ப்ராப்தி நிஷ்டா2நாம் ந புரஶ்சரணம் ப4வேத்”  என்று – ப43வத்– ப்ராப்தியிலே நிற்கிறவர்களுக்கு புரஶ்சரணமும் வேண்டுவதில்லை என்றும், “நாநுகூல்யம் ந நக்ஷத்ரபரீக்ஷா ச விஶேஷத:” என்று – மந்த்ரத்துக்கு (ஆநுகூல்யமும், நாள் – என்று இங்கிருக்கவேணும்) பொருத்தம் பார்க்கவும் விஶேஷித்து வேண்டுவதில்லை என்றும்; “நாஸ்தி நக்ஷத்ரஸம்ப3ந்தோ4 ந நிமித்தபரீக்ஷணம் । ஶ்ரத்3தை4வ காரணம் பும்ஸாமஷ்டாக்ஷரபரிக்3ரஹே” என்று – திருவஷ்டாக்ஷரத்தை பரிக்3ரஹிக்குமிடத்தில் நாள் பொருத்தமும், நிமித்தம்பார்க்கையும் ஹேதுவல்ல, ஶ்ரத்3தை4 ஒன்றுமே காரணமாக வேண்டுவது என்றும்; இப்படி இதுமுதலான ப்ரமாண ஶதங்களாலே இம்மந்த்ரத்துக்கு ஸர்வப்ரகாரத்தாலுமுண்டான உத்கர்ஷம் ப்ரதிபாதி3க்கப்படாநின்றது. இப்படி ஶ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராணங்கள் தொடக்கமான ப்ரமாண பரிக்3ரஹமடியாயுள்ள இதினுடைய மாஹாத்ம்யமானது பரக்கச் சொல்லப்பட்டது.  (9)

अस्य मन्त्रस्यावतारप्रकारादप्यधिकतमत्वमभिव्यक्तम् । तथाहि श्रीबदरिकाश्रमे परमर्षिसङ्घमध्ये धर्मदेवतासूनुत्वमापन्नः सर्वान्तर्यामी प्रतिपाद्यदेवतात्वेनावस्थितः परमात्मा नारायणः स्वयमेव ऋषिर्भूत्वा लोके शिष्याचार्यक्रमं व्युत्पादयितुकामः स्वांशभूताय नराय शिष्याय श्रीमदष्टाक्षरं मन्त्रमुपदिष्टवानिति । (10)

மேலும் இம்மந்த்ரத்தினுடைய அவதாரப்ரகாரத்தாலும் அதி4கதமத்வமானது மிகவும் வ்யக்தமாயிருக்கும். அதாவது ஸ்ரீப33ரிகாஶ்ரமத்திலே பரமர்ஷி ஸங்க4 மத்4யத்திலே த4ர்மதே3வதைக்கு மகனாய் வந்தவதரித்த நாராயணனானவன் ஸர்வாந்தர்யாமியாய், பரமாத்மாவான தானே இதுக்கு ருஷியும், தே3வதையுமாய்க் கொண்டு, லோகத்திலே ஶிஷ்யாசார்யக்ரமத்தை வ்யுத்பத்தி பண்ணுவிக்கைக்காகத் தனக்கு அம்ஶபூ4தனான நரனை ஶிஷ்யனாக அவதரிப்பித்துத்தானே ஆசார்யனுமாய் இம்மந்த்ரத்தை  உபதேஶித்தருளினான்—–10

अतः सर्वमन्त्रान्तरोत्कृष्टतमोऽयमेव मन्त्रः सर्वाधिकारिणामात्मोज्जीवनार्थमनुसन्धेय इति विज्ञायते । 11

இப்படி ப3ஹுமுக2மான வைலக்ஷண்யத்தையுடைத்தான திருமந்த்ரமே ஸர்வாதி4காரிகளுக்கும் ஆத்மோஜ்ஜீவநார்த்த2மாக அநுஸந்தே4யமென்று அறியப்படாநின்றது. 11


अस्याष्टाक्षरत्वं पदत्रयात्मकत्वं पदक्रमनीतिश्च श्रुतिस्मृतिभ्यामभिधीयते । तत्र तावत् श्रुतिः – “ओमित्येकाक्षरम्। नम इति द्वे अक्षरे । नारायणायेति पञ्चाक्षराणि । इत्यष्टाक्षरं छन्दसा गायत्री चेति ।”, “ ओमित्यग्रे व्याहरेत्। नम इति पश्चात्। नारायणायेत्युपरिष्टात् ।” (चतुर्वेदसारनारायणोप.) इति च ।                     12

இம்மந்த்ரத்தினுடைய அஷ்டாக்ஷரத்வமும், பத3த்ரயாத்மகத்வமும், பத3க்ரமநியதியும் ஶ்ருதிஸ்ம்ருதிகளாலே சொல்லப்படாநின்றது. அவ்விடத்தில் ஶ்ருதி “ஓமித்யேகாக்ஷரம் நம இதி த்3வே அக்ஷரே நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி இத்யஷ்டாக்ஷரம் ச2ந்த3ஸா கா3யத்ரீசேதி” என்று ‘ஓம்’ என்று ஓரக்ஷரமாய், ‘நம:’ என்று இரண்டக்ஷரமாய், ‘நாராயணாய’ என்று அஞ்சக்ஷரமாய், இப்படி எட்டக்ஷரமாய்க்கொண்டு ச2ந்த3ஸ்ஸால் கா3யத்ரியாயிருக்குமென்றும், “ஓமித்யக்3ரே வ்யாஹரேத் । நம இதி பஶ்சாத் । நாராயணாயேத்யுபரிஷ்டாத்” என்று – ‘ஓம்’ என்று முற்படச்சொல்லுவான், ‘நம:’, என்று அநந்தரம் சொல்லுவான், ‘நாராயணாய’ என்று மேலே சொல்லுவான் என்று சொல்லிற்று. 12


स्मृतिरपि “ प्रणवाद्यं नमोमध्यं नारायणपदान्तिमम् । मन्त्रमष्टाक्षरं विद्यात् सर्वसिद्धिकरं नृणाम्” इति । अतो नारायणपदस्य नारपदभेदेन षडक्षरत्वमापाद्य अस्य मन्त्रस्य प्रणवव्यतिरेकेणाष्टाक्षरत्वं वदतामनादरणीयत्वं सुव्यक्तम् । प्रणवस्यैकाक्षरत्वेन मन्त्रशरीरानुप्रवेशात् “ नारायणायेति पञ्चाक्षराणि” इति श्रवणाच्च । “ एवं विदित्वा तं देवमोङ्कारं व्याहरन् मुहुः । नमो नारायणायेति ध्यायस्वानन्यमानसः॥”  इति ब्रह्मणा नारदायोपदिष्टत्वाच्च । अथवा अस्य प्रणववर्जनं स्त्रीशूद्राधिकारार्थमित्यवगन्तव्यम् । ( “ पूर्वोत्तरपर्यालोचनायामिदं जपादिविषयमिति ज्ञायते”) “ न स्वरः प्रणवोऽङ्गानि नाप्यन्यविधयस्तथा । स्त्रीणां च शूद्रजातीनां मन्त्रमात्रोक्तिरिष्यते ।।”  इति वचनात् । तथा भगवच्छास्त्रे च “ वैदिकं तान्त्रिकं चैव तथा वैदिकतान्त्रिकम् । त्रिविधं कर्म सम्प्रोक्तं पञ्चरात्रार्णवामृते | वैदिकं ब्राह्मणानां तु राज्ञां वैदिकतान्त्रिकम् । तान्त्रिकं वैश्यशूद्राणां सर्वेषां तान्त्रिकं तु वा ॥ अष्टाक्षरश्च यो मन्त्रो द्वादशाक्षर एव च । षडक्षरश्च यो मन्त्रो विष्णोरमिततेजसः । एते मन्त्राः प्रधानास्तु वैदिकाः प्रणवैर्युताः । प्रणवेन विहीनास्तु तान्त्रिका एव कीर्तिताः ॥” . “ इत्यत्र तान्त्रिकत्वेन स्त्रीशूद्राधिकारत्वमुच्यते । नमो नारायणेत्युक्त्वा श्वपाक: पुनरागमत्” (वराहपुराणे कैशिक.) इति कैशिकद्वादशीमाहात्म्यवचनाच्च अस्य प्रणववर्जितस्य मन्त्रस्य  सर्वाधिकारत्वमवगम्यते । प्रणववर्जितस्यापि प्रणवादिसहिततुल्यफलत्वमुक्तम्- “ नमो नारायणायेति  मन्त्रस्सर्वार्थसाधक:” इति ।                         13

ஸ்ம்ருதியும் – “ப்ரணவாத்3யம் நமோமத்4யம் நாராயணபதா3ந்திமம் । மந்த்ரமஷ்டாக்ஷரம் வித்3யாத் ஸர்வஸித்3தி4கரம் ந்ருணாம்” என்று ப்ரணவத்தை முதற்பத3மாகவும், நமஸ்ஸை மத்4யமபத3மாகவும், நாராயணபத3த்தை சரமபத3மாகவும், இப்படி அஷ்டாக்ஷரமான இம்மந்த்ரத்தை சேதநர்க்கு ஸர்வஸித்3தி4கரமாக அறிவானென்று சொல்லிற்று. ஆகையாலே, இம்மந்த்ரத்தில் நாராயணபத3த்தில் நாரபத3த்தைப் பிரித்து ஆறக்ஷரமாக்கி – அத்தோடே நமஸ்ஸைக் கூட்டி, இது ப்ரணவத்தையொழிய எட்டக்ஷரமென்று சொல்லுகிறவர்கள் ஆத3ரணீயரல்லர். ப்ரணவத்தை ஓரக்ஷரமாக மந்த்ரஶரீரத்திலே கூட்டுகையாலும், “நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி” என்று  நாராயணபத3த்தை அஞ்சக்ஷரமாகச் சொல்லுகையாலும், அதுக்கு மேலே “ஏவம் விதி3த்வா தம் தே3வமோங்காரம் வ்யாஹரந் முஹு: । நமோ நாராயணாயேதி த்4யாயஸ்வாநந்யமாநஸ:” என்று – இப்படி அந்த ஸர்வேஶ்வரனை அறிந்து பலகாலும் ஓங்காரத்தை உச்சரியாநின்றுகொண்டு, நமோ நாராயணாய என்று வேறொன்றில் நெஞ்சு போகாதபடி த்4யாநம் பண்ணென்று ப்3ரஹ்மா நாரத3னுக்கு உபதே3ஶிப்பதும் செய்தானிறே.

இப்படியிருக்க, நாரதீ3யகல்பத்திலே ப்ரணவத்தையொழிய மந்த்ரத்தைச் சொல்லிற்று என்றவிது ஸ்த்ரீஶூத்3ராதி3களுடைய அதி4காரத்துக்காக வருமித்தனை, எங்ஙனே என்னில், “ந ஸ்வர: ப்ரணவோऽங்கா3நி நாப்யந்யவித4யஸ்ததா2 । ஸ்த்ரீணாஞ்ச ஶூத்3ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே” என்று – ஸ்வரமும், ப்ரணவமும் அங்க3ங்களும், மற்றுமுண்டான புரஶ்சரணாதி3களும் வேண்டா, ஸ்த்ரீகளுக்கும், ஶூத்3ரஜாதிகளுக்கும் மந்த்ர மாத்ரமே சொல்லப்படுவதென்று சொல்லிற்றிறே. அப்படியே பஞ்சராத்ரத்திலே “வைதி3கம் தாந்த்ரிகஞ்சைவ ததா2 வைதி3கதாந்த்ரிகம் । த்ரிவித4ம் கர்ம ஸம்ப்ரோக்தம் பஞ்சராத்ரார்ணவாம்ருதே” என்று – மந்த்ரபரிக்3ரஹாதி க்ரமத்தை வைதி3கமென்றும், தாந்த்ரிகமென்றும், வைதி3கதாந்த்ரிகமென்றும் மூன்று வகையாகச் சொல்லி, “வைதி3கம் ப்3ராஹ்மணாநாந்து ராஜ்ஞாம் வைதி3கதாந்த்ரிகம் । தாந்த்ரிகம் வைஶ்ய ஶூத்3ராணாம் ஸர்வேஷாம் தாந்த்ரிகந்து வா” என்று – வைதி3கம் ப்3ராஹ்மணர்களுக்கு யோக்3யம், ராஜாக்களுக்கு வைதி3கதாந்த்ரிகம், வைஶ்ய ஶூத்3ரர்களுக்கு கேவலதாந்த்ரிகம், அங்ஙனன்றியே தாந்த்ரிகம் எல்லார்க்குமாமென்று அவற்றில் அதி4காரிபே43த்தைச் சொல்லி, “அஷ்டாக்ஷரஶ்ச யோ மந்த்ரோ த்3வாத3ஶாக்ஷர ஏவ ச । ஷடக்ஷஶரஶ்ச யோ மந்த்ரோ விஷ்ணோரமிததேஜஸ: । ஏதே மந்த்ரா: ப்ரதா4நாஸ்து வைதி3கா: ப்ரணவைர்யுதா: । ப்ரணவேந விஹீநாஸ்து தாந்த்ரிகா ஏவ கீர்த்திதா:” என்று – திருவஷ்டாக்ஷரம் திருத்3வாத3ஶாக்ஷரம் ஸ்ரீஷட3க்ஷரமென்கிற வ்யாபகமந்த்ரங்கள் ப்ரணவத்தோடே கூடினபோது வைதி3கங்கள், அதொழிந்த போது தாந்த்ரிகங்களென்றும் சொல்லிற்று; இவ்விடத்தில் தாந்த்ரிகமென்றதற்குத் தாத்பர்யம் – ஸ்த்ரீஶூத்3ரர்களுக்கு யோக்3யமென்றபடி. இன்னமும், கைஶிகத்3வாதஶீ மாஹாத்ம்யத்தில், “நமோ நாராயணேத்யுக்த்வா ஶ்வபாக: புநராக3மத்” என்று – ப்ரணவாதி3யொழிய மந்த்ர மாத்ரத்தை உச்சரித்து (ஆத்மஸமர்ப்பணத்தைப் பண்ணி) ஶ்வபாகன் மீண்டானென்கையாலே, ப்ரணவாதி3களையொழிந்த மந்த்ரமாத்ரம் ஸர்வாதி4காரமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம். ப்ரணவாதி3கள் தவிர்ந்தாலும் ப்ரணவாதி3களோடு கூடின வேஷத்தில் ப2லத்தைத் தருமென்னுமது, “நமோ  நாராயணாயேதி மந்த்ர: ஸர்வார்த்த2ஸாத4க:” என்று சொல்லப்பட்டது. ஆகையாலே மந்த்ரத்துக்கு ஸ்வாபா4கவேஷம் ப்ரணவாதி3களோடு கூடியிருக்கையாய்த்து, தவிருகிற இடம் ஸர்வாதி4காரமென்றதாய்த்து.   13

तथाऽस्य ऋष्यादिकमपि “ अष्टाक्षरस्य मन्त्रस्य ऋषिर्नारायणः स्वयम् । छन्दस्तु देवी गायत्री परमात्मा च देवता ॥” इत्यादिभिरुक्तम् । 14

இம்மந்த்ரத்துக்கு, “அஷ்டாக்ஷரஸ்ய மந்த்ரஸ்ய ருஷிர் நாராயண: ஸ்வயம் । ச2ந்தஸ்து தே3வீ கா3யத்ரீ பரமாத்மா ச தே3வதா ॥” என்று நாராயணன்தானே ருஷியாகவும் தே3வீ கா3யத்ரீ ச2ந்த3ஸ்ஸாகவும் பரமாத்மா தே3வதையாகவும் சொல்லப்பட்டது. 14

अनेन मन्त्रेणाऽऽत्मनः सर्वात्मना भगवदेकशेषत्वरूपस्वरूपं प्राधान्येन प्रतिपाद्यते । “ प्राप्यस्य ब्रह्मणो रूपं प्राप्तुश्च प्रत्यगात्मनः ॥ प्राप्त्युपायं फलं प्राप्तेः तथा प्राप्तिविरोधि च । वदन्ति सकला वेदाः सेतिहासपुराणकाः ॥ मुनयश्च महात्मानः वेदवेदान्तपारगाः ।” (वृ. हा.स्मृ.) इति सकलशास्त्रतात्पर्यभूतमर्थपञ्चकमस्मिन्सर्ववेदशास्त्रसङ्ग्रहभूते मन्त्रेऽपि प्रतिपाद्यत इति वचनं सर्वशास्त्राधिकृतस्य प्राप्तुरात्मनः स्वरूपानुबन्धित्वनिबन्धनम् । 15

இப்படிப்பட்ட மந்த்ரத்தாலே ஆத்மாவினுடைய ஸர்வப்ரகார ப43வதே3க ஶேஷத்வமாகிற ஸ்வரூபம் ப்ரதா4நமாக ப்ரதிபாதி3க்கப்படுகிறது. “ ப்ராப்யஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகா3த்மந: ॥ ப்ராப்த்யுபாயம் ப2லம் ப்ராப்தேஸ்ததா2 ப்ராப்திவிரோதி4 ச ॥ வத3ந்தி ஸகலா வேதா3: ஸேதிஹாஸபுராணகா: ॥ முநயஶ்ச மஹாத்மாநோ வேத3வேதா3ந்தபாரகா3”॥ என்று – ப்ராப்யமான ப்3ரஹ்மஸ்வரூபத்தையும், ப்ராப்தாவான ப்ரத்யகா3த்மஸ்வரூபத்தையும், ப்ராப்த்யுபாயத்தையும், ப்ராப்திப2லத்தையும், ப்ராப்திவிரோதி4யையும், இதிஹாஸபுராணங்களோடே கூடின ஸகலவேத3ங்களும், வேத3வேதா3ந்தபாரக3ராய், மஹாத்மாக்களான முநிகளும் சொல்லாநின்றார்கள் என்று ஸகலஶாஸ்த்ரங்களுக்கும் தாத்பர்யமாக அர்த்த2 பஞ்சகங்களைச் சொல்லுகையாலே ஸர்வஶாஸ்த்ரஸங்க்3ரஹரூபமான இம்மந்த்ரத்திலும் அதுவே ப்ரதிபாத்3யமானாலும், ஸர்வஶாஸ்த்ரத்திலும் அதி4க்ருதனான சேதநனுடைய ஸ்வரூபத்தோடு அநுப3ந்தி4களாகையாலே ஆத்மஸ்வரூபமே ப்ரதா4நதயா ப்ரதிபாத்3யம் என்றதாய்த்து. 15

तत्र – प्रथमपदस्य मन्त्रबीजभूतस्य एकाक्षरस्य प्रणवस्य अक्षरत्रयात्मकत्वं श्रुतिस्मृतिभ्यां व्यज्यते । तत्र श्रुतिः – “ भूरिति ऋग्वेदादजायत । भुवरिति यजुर्वेदात् । सुवरिति सामवेदात् । तानि शुक्राण्यभ्यतपत् । तेभ्योऽभितप्तेभ्यस्त्रयो वर्णा अजायन्त । अकार उकार मकार इति । तानेकधा समभरत् तदेतदोमिति।”  16

இம்மந்த்ரத்தில் ப்ரத2மபத3மாய் மந்த்ரத்துக்கு பீ3ஜமாய் ஏகாக்ஷரமான ப்ரணவத்தினுடைய அக்ஷரத்ரயாத்மகத்வமானது ஶ்ருதிஸ்ம்ருதிகளாலே வ்யக்தமாகாநின்றது. அதில் ஶ்ருதி – “பூ4ரிதி ருக்3வேதா33ஜாயத । பு4வரிதி யஜுர்வேதா3த் । ஸுவரிதி ஸாமவேதா3த் । தாநி ஶுக்ராண்யப்4யதபத் । தேப்4யோऽபி4 தப்தேப்4யஸ்த்ரயோ வர்ணா அஜாயந்த । அகார உகார மகார இதி । தாநேகதா4 ஸமப4ரத் ததே3ததோ3மிதி” என்று – “பூ4:” என்று ருக்3வேத3த்தில் நின்றும், “பு4வ:” என்று யஜுர்வேத3த்தில்நின்றும், “ஸுவ:” என்று ஸாமவேத3த்தில்நின்றும் தோன்றும்படி பண்ணி, பரிஶுத்34மான அந்த வ்யாஹ்ருதித்ரயத்தையும் பொன்னோடவைக்குமாபோலே தன் ஸங்கல்பத்தாலே அபி4தபித்து, அவற்றில்நின்றும் அகார, உகார, மகாரங்களாகிற மூன்றக்ஷரங்களும் தோன்றும்படி பண்ணி, அவை மூன்றையும் ஓரக்ஷரமாகக்கூட்டினான் ப்ரஜாபதியான ஸர்வேஶ்வரன், அது “ஓம்” என்கிற இது என்று சொல்லிற்று.  16

स्मृतिरपि – “ अकारञ्चाप्युकारञ्च मकारञ्च प्रजापतिः । वेदत्रयान्निरबृहद्भूर्भुवस्स्वरितीति च ॥” (*) (मनु. .2-76)।एवमसंहिताकारेणाक्षरत्रयात्मकत्वं संहिताकारेण एकाक्षरत्वमोङ्कारस्योपपन्नम् ।  “ओमित्येकाक्षरम्” (नारायणोपनिषत् ) इति वचनात् । 17

இந்த ஶ்ருதியை உபப்3ரும்ஹணம் பண்ணுகிற ஸ்ம்ருதியும் “அகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி: । வேத3த்ரயாந் நிரப்3ருஹத் பூ4ர்பு4வஸ்ஸ்வரிதீதி ச” என்று – அகாரத்தையும், உகாரத்தையும், மகாரத்தையும் ப்ரஜாபதியானவன் “பூ4ர்பு4வஸ்ஸ்வ:” என்கிற வ்யாஹ்ருதிகளைத் தனித்தனி இடையீடாகக்கொண்டு வேத3த்ரயத்தில் நின்றும் ஸங்க்3ரஹித்தான் என்று சொல்லிற்று. இப்படியாகையாலே, ஸந்தி4கார்யம் பண்ணாத வேஷத்தாலே மூன்றக்ஷரமாய், பண்ணின வேஷத்தாலே ஓரக்ஷரமாகை ப்ரணவத்துக்கு யுக்தமென்றதாய்த்து. “ஓமித்யேகாக்ஷரம்” என்று ஸம்ஹிதாகாரவேஷம் ஏகாக்ஷரமென்று சொல்லுகையாலே. 17

तत्र प्रथमाक्षरभूतोऽयमकार:- सर्वशेषिणं सर्वेश्वरमभिवदति । अत्र निरूपणीयस्याऽऽत्मनः शेषत्वरूपस्वरूपस्य निरूपकभूतशेष्यधीनत्वात् प्रथमं शेषिस्वरूपमुच्यते । “ अ इति ब्रह्म ”  इत्यकारस्य ब्रह्मवाचित्वं श्रुतिसिद्धम् । अकारवाच्यस्य ब्रह्मणः लक्षणतया जन्मादिसूत्रप्रतिपादितजन्मादि- कारणत्वमत्रोच्यते । तथाहि “ सर्वेषाञ्च स नामानि कर्माणि च पृथक् पृथक् । वेदशब्देभ्य एवाऽऽदौ पृथक् संस्थाश्च निर्ममे ॥” (मनु. 1-21) “ नाम रूपञ्च भूतानां कृत्यानाञ्च प्रपञ्चनम् । वेदशब्देभ्य एवाऽऽदौ देवादीनां चकार स:॥” (वि.पु. 1-5-62) इति वैदिकानां लौकिकानां च सर्वेषां शब्दानां वेदमूलत्वमवगम्यते । “ आद्यं तु त्र्यक्षरं ब्रह्म त्रयी यस्मिन् प्रतिष्ठिता । स गुहयोऽन्यस्त्रिवृद्वेदो यस्तं वेद स वेदवित् ॥”, : “ प्रणवाद्यास्तथा वेदाः ओङ्कारप्रभवा: स्वरा:। ओङ्कारप्रभवं सर्वं जगत् स्थावरजङ्गमम्॥” इति वेदानां प्रणवनिष्ठत्वमुच्यते। “ब्रह्मण: प्रणवं कुर्यादादावन्ते च सर्वदा।स्रवत्यनोङ्कृतं पूर्वं परस्ताच्च विशीर्यते॥” इति वेदाद्यन्तप्रयुक्तस्य प्रणवस्य… “ यद्वेदादी स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः । तस्य प्रकृतिलीनस्य यः परस्स महेश्वर:॥” (तै.ना. 10-24) इति प्रकृतिलय: श्रूयते। अनेन अकारस्य  प्रणवकारणत्वं प्रतीयते।  18


அக்ஷரத்ரயாத்மகமான அந்த ப்ரணவத்தில் ப்ரத2மாக்ஷரமான அகாரமானது. ஸர்வஶேஷியான ஸர்வேஶ்வரனைச் சொல்லுகிறது. இவ்விடத்தில் நிரூபிக்க வேண்டிய ஆத்மாவுக்கு நிரூபகமான ஶேஷத்வமாகிற ஸ்வரூபத்துக்கு நிரூபகமான ஶேஷிஸ்வரூபம் முன்னாக நிரூபிக்கவேண்டுகையாலே ப்ரத2மம் ஶேஷியினுடைய ஸ்வரூபம் சொல்லப்படுகிறது. அதாவது “ அ இதி ப்3ரஹ்ம”  என்று ப்3ரஹ்மவாசகத்வம் அகாரத்துக்கு ஶ்ருதிஸித்34ம். அகாரவாச்யமான ப்3ரஹ்மத்துக்கு, ப்3ரஹ்மலக்ஷணமாக ஜந்மாதி3 ஸூத்ரத்திலே ப்ரதிபாதி3க்கப்பட்ட ஜக3ஜ்ஜந்மாதி3காரணத்வம் இவ்விடத்திலே சொல்லப்படுகிறது. எங்ஙனே என்னில், “ஸர்வேஷாந்து ஸ  நாமாநி கர்மாணி ச ப்ருத2க் ப்ருத2க் । வேத3ஶப்3தே3ப்ய ஏவாதெள3 ப்ருத2க் ஸம்ஸ்தா2ஶ்ச நிர்மமே”, “நாம ரூபஞ்ச பூ4தாநம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம் । வேத3ஶப்3தே3ப்ய ஏவாऽதெள3 தே3வாதீ3நாம் சகார ஸ:” என்று ஸ்ம்ருதிபுராணங்களிலே தே3வாதி3களான ஸர்வபூ4தங்களினுடைய நாமங்களையும் ரூபங்களையும் வ்யாபார விஶேஷங்களையும் வேத3ஶப்33ங்களாலே கண்டு முன்பு போலே ஸ்ரஷ்டாவானவன் ஸ்ருஷ்டிகாலத்திலே ஸ்ருஷ்டித்தான் என்கையாலே, லௌகிகமான ஸர்வ ஶப்33ங்களும் வேத3த்தை மூலமாக உடையன என்றும் சொல்லப்பட்டது. “ஆத்3யந்து த்ர்யக்ஷரம் ப்3ரஹ்ம த்ரயீ யஸ்மிந் ப்ரதிஷ்டி2தா । ஸ கு3ஹ்யோந்யஸ்த்ரிவ்ருத்3வேதோ3 யஸ்தம் வேத3 ஸ வேத3வித்” என்று – வேத3த்ரயங்களுக்கும் ப்ரதிஷ்டா2ஸ்த2லமாய் ஆத்3யமாய் அக்ஷரத்ரயாத்மகமான ப்ரணவமானது, த்ரிவ்ருத்தாய், கு3ஹ்யமாயிருப்பதான வேறொரு வேத3மாயிருக்கும், அத்தை அறிந்தவன் வேத3 வித்தாகிறான் என்றும், “ப்ரணவாத்3யாஸ்ததா2 வேதா3 ப்ரணவே பர்யவஸ்தி2தா: । வாங்மயம் ப்ரணவம் ஸர்வம் தஸ்மாத் ப்ரணவமப்4யஸேத்” என்று – வேத3ங்கள் ப்ரணவத்தை ஆதி3யாக உடைத்தாயிருக்கும், ப்ரணவத்திலே பர்யவஸித்திருக்கும், ஶப்33விகாரமெல்லாம் ப்ரணவாத்மகமாயிருக்கும், ஆகையாலே ப்ரணவத்தை அப்4யஸிப்பான் என்றும், “ஓங்காரப்ரப4வா வேதா3: ஓங்காரப்ரப4வா: ஸ்வரா:। ஓங்காரப்ரப4வம் ஸர்வம் ஜக3த் ஸ்தா2வரஜங்க3மம்” என்று – வேத3ங்கள் ஓங்காரத்தைப்பிறப்பாக உடைத்தாயிருக்கும், ஸ்வரங்களும் ஓங்காரத்தைப் பிறப்பாக உடைத்தாயிருக்கும், ஸ்தா2வரஜங்க3மாத்மகமாயிருக்கிற ஜக3த்தும் ஓங்காரத்தைப் பிறப்பாக உடைத்தாயிருக்கும் என்றும் சொல்லுகையாலே வேத3ங்கள் ப்ரணவத்துக்குள்ளே என்று சொல்லப்பட்டது. “ப்3ரஹ்மண: ப்ரணவம் குர்யாத் ஆதா3வந்தே ச ஸர்வதா3 । ஸ்ரவத்யநோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விஶீர்யதே” என்று – வேதா3த்4யயநத்துக்கு முன்னும் பின்னும் ப்ரணவத்தைப் பண்ணுவான், முன்பு பண்ணாதபோது ஒழுகிப்போம், பின்பு பண்ணாதபோது சிதறிப்போம் என்கையாலே வேதா3த்4யந்தங்களிலே ப்ரயோகி3க்கப்படுவதான ப்ரணவத்துக்கு, “யத்3வேதா3தௌ3 ஸ்வர: ப்ரோக்தோ வேதா3ந்தே ச ப்ரதிஷ்டி2த: । தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய ய: பர:ஸ மஹேஶ்வர:” என்று – ‘அச்’சாகையாலே ஸ்வர ஶப்33 வாச்யமாய், செப்புப்போலே வேத3த்தை ஆத்3யந்தங்களிலே மூடியிருப்பதான இந்த ஸ்வபா4வத்துக்கு மேலே ப்ரக்ருதிலயத்தைச்சொல்லி அதுக்கு வாச்யனாவான் ஸர்வேஶ்வரன் என்கையாலே இப்ப்ரணவத்துக்குச் சொன்ன ப்ரக்ருதிலயமாவது – ஸ்வகாரணபூ4தமான அகாரத்திலே லயிக்கை என்றபடி. இத்தாலே அகாரம் ப்ரணவத்துக்குக் காரணமென்றதாய்த்து. 18

तदुक्तं भगवता भाष्यकारेण वेदार्थसङ्ग्रहे “ सर्वस्य वेदजातस्य प्रकृतिः प्रणवः प्रणवस्य च प्रकृतिः अकारः प्रणवविकारो वेदः स्वप्रकृतिभूतप्रणवे लीनः प्रणवोऽपि अकारविकारभूतः स्वप्रकृतावकारे लीनः तस्य प्रणवप्रकृतिभूतस्य अकारस्य यः परः वाच्यः स महेश्वरः” इति । तस्मादकारस्य सर्ववाचकजातप्रकृतिभूतस्य “प्रकृतिश्च प्रतिज्ञादृष्टान्तानुपरोधात्” (शा.मी. 1-4-23) इति सूत्रप्रतिपादितोपादानकारणत्वेन सर्ववाच्यजातप्रकृतिभूतपरब्रह्मवाचकत्वात् अनेन कारणत्वमभिधीयते। 19

இந்த ஶ்ருத்யர்த்த2ந்தான் வேதா3ர்த்த2 ஸங்க்3ரஹத்திலே பா4ஷ்யகாரராலே அருளிச் செய்யப்பட்டது. “ஸர்வஸ்ய வேத3ஜாதஸ்ய ப்ரக்ருதி: ப்ரணவ:, ப்ரணவஸ்ய ச ப்ரக்ருதி: அகார: ப்ரணவவிகாரோ வேத3: ஸ்வப்ரக்ருதிபூ4த ப்ரணவே லீந:, ப்ரணவோபி அகார விகாரபூ4த: ஸ்வப்ரக்ருதெள அகாரே லீந:, தஸ்ய ப்ரணவப்ரக்ருதிபூ4தஸ்ய அகாரஸ்ய ய: பர:- வாச்ய:, ஸ மஹேஸ்வர:” என்று – எல்லாவேத3 ஸமூஹத்துக்கும் காரணம் ப்ரணவம், ப்ரணவத்துக்கும் காரணம் அகாரம், ப்ரணவத்துக்குக்கார்யமான வேத3ம் தனக்குக் காரணமான ப்ரணவத்திலே லயிக்கும், அகாரத்துக்குக் கார்யமான ப்ரணவமும் தனக்குக்காரணமான அகாரத்திலே லயிக்கும், இப்படி ப்ரணவத்துக்கு ப்ரக்ருதியான அகாரத்துக்கு யாவனொருவன் வாச்யன், அவன் ஸர்வாதி4கனான ஸர்வேஶ்வரன் என்றதாய்த்து, ஆகையாலே எல்லா வாசகஜாதத்துக்கும் ப்ரக்ருதியான அகாரத்துக்கு “ப்ரக்ருதிஶ்ச ப்ரதிஜ்ஞாத்3ருஷ்டாந்தாநுபரோதா4த்” என்கிற ஸூத்ரத்தாலே உபாதா3நமாகச்சொல்லப்பட்ட எல்லா வாச்யஜாதத்துக்கும் ப்ரக்ருதிபூ4தமான பரப்3ரஹ்மவாசகத்வம் ஸித்3தி4க்கையாலே, இவ்வகாரத்தாலே ஸர்வகாரணத்வம் சொல்லப்படுகிறது. 19

तदुक्तं – “ समस्तशब्दमूलत्वादकारस्य स्वभावतः । समस्तवाच्यमूलत्वात् ब्रह्मणोऽपि स्वभावतः । वाच्यवाचकसम्बन्धस्तयोरर्थात्प्रतीयते॥”  (पा.रा.) इति । अत एव हि “ अकारो वै सर्वा वाक्” इति सामानाधिकरण्यश्रुतिः कारणत्वनिबन्धना । यथा “ सर्वं खल्विदं ब्रह्म । तज्जलानिति शान्त उपासीत ।” (छा.उ. 3-14) इति तज्जत्व- तल्लत्व- तदन्त्वनिबन्धनं जगद्ब्रह्मणोः सामानाधिकरण्यं तद्वदत्रापि । अनेन उपादानत्वप्रतिपादनेन लयस्थानत्वं च प्रतीयते । लयस्थानमेव ह्युपादानम् । “सदेव सोम्येदमग्र आसीत्। एकमेवाद्वितीयम्” (छा.उ. 6-2) इत्यादीश्रुते:।         20

“ஸமஸ்த ஶப்33மூலத்வாத் அகாரஸ்ய ஸ்வபா4வத: । ஸமஸ்த வாச்யமூலத்வாத் ப்3ரஹ்மணோபி ஸ்வபா4வத: ॥ வாச்யவாசகஸம்ப3ந்த3 ஸ்தயோரர்த்தா2த் ப்ரதீயதே” என்று அகாரத்துக்கு ஸமஸ்த ஶப்33மூலத்வம் ஸ்வபா4வமானபடியாலும், ப்3ரஹ்மத்துக்கு ஸமஸ்த வாச்யமூலத்வம் ஸ்வபா4வமானபடியாலும், இரண்டுக்கும் வாச்யவாசகஸம்ப3ந்த4ம் அர்த்த2 ஸித்34மாய்த் தோற்றுமென்று சொல்லப்பட்டதிறே. ஆகையாலேயிறே “அகாரோ வை ஸர்வா வாக்” என்கிற ஸாமாநாதி4கரண்ய ஶ்ருதியானது காரணத்வ நிப3ந்த4னையாயிற்று. அகாரம் எல்லாவாக்கும் என்றால் எல்லா ஶப்33த்துக்கும் காரணம் அகாரம் என்றபடி. என்போல என்னில் “ஸர்வம் கல்விதாம் ப்3ரஹ்ம தஜ்ஜலாநிதி ஶாந்த உபாஸீத” என்று – இஜ்ஜக3த்தெல்லாம் ப்3ரஹ்மம் என்றால், தஜ்ஜமாய் – அந்த ப்3ரஹ்மத்திலே பிறக்கையாலும், தல்லமாய் – அதிலே லயிக்கையாலும், தத3நமாய் -அத்தாலே உயிர்பெற்று ரக்ஷிதமாகையாலும் அதுவாயிற்று என்னுமாபோலே இங்கு ஸர்வஶப்33 காரணம் அகாரமாயிற்று. இப்படி காரணபூ4த ப்3ரஹ்மவாசியான அகாரத்தாலே ப்3ரஹ்மத்தினுடைய ஜக3து3பாத3நத்வம் சொல்லப்படுகையால், ப்3ரஹ்மமே லயத்துக்கும் காரணமென்றதாயிற்று, லயஸ்தா2நமாவதிறே உபாதா3நமாவது. “ஸதே3வ”, “ஏகமேவ” என்று காரணவாக்யத்திலே ஜக3த்காரணமான ஸச்ச2ப்33 வாச்யவஸ்துவை லயஸ்தா2நமாகச் சொல்லுகையாலே. 20

अस्य स्वभावत एवोपादानकारणवाचिनः पदस्य व्युत्पत्त्यनुसारात् “अव रक्षणे” (भ्वा.प.आक.से.) इत्यस्माद्धातो: “अन्येभ्योऽपि दृश्यते” (पा.सू. 3-2-178) इति कृतस्य कर्तरि “क्विप्” प्रत्ययस्य अनुबन्धलोपं कृत्वा “लोपो व्योर्वलि” (पा.सू. 6-1-66) इति धातो‘र्व’कारस्य “वेरपृक्तस्य” (पा.सू. 6-1-67) इति प्रत्यय ‘व’ कारास्य च लोपे कृते अ इति रूपं भवति। अनेन सर्वरक्षकः सर्वेश्वरोऽभिधीयते । एतेन “ यतो वा इमानि भूतानि जायन्ते । येन जातानि जीवन्ति । यत्प्रयन्त्यभिसंविशन्ति । तद्विजिज्ञासस्व । तद्ब्रह्मेति ।”  (तै भृ. 1) इति ब्रह्मणो लक्षणत्वेन वेदान्तप्रतिपादितजगदुदयविभवलयलीलत्वमुक्तं भवति । अत्र तु लयस्य व्युत्क्रमेणोक्तिः – उपादानत्वप्रयुक्ततन्त्रीकरण सौकर्याय “तज्जलान्” (छा.उ. 3-14) इति श्रुतिविवक्षया च। तथोक्तं भगवता पराशरेणापि- “ विष्णोस्सकाशादुद्भूतं जगत्तत्रैव च स्थितम् । स्थितिसंयमकर्ताऽसौ जगतोऽस्य जगच्च सः॥” (वि.पु.1-31) इति। 21

இப்படி அக்ஷரஸ்வபா4வத்தாலே உபாதா3நகாரணத்தைச்சொல்லுகிற பத3த்தினுடைய தா4துப்ரத்யயமுக2த்தாலுண்டான வ்யுத்பத்தியை ஆராய்ந்தவாறே, “அவ ரக்ஷணே” என்கிற தா4துவின்மேலே, “அந்யேப்4யோபி த்3ருஶ்யதே” என்று ‘க்விப்’ ப்ரத்யயத்தைப் பண்ணி, அதினுடைய அநுப3ந்த4ங்களை லோபிப்பித்து, “லோபோ வ்யோர்வலி” என்று தா4துவினுடைய வகாரத்தையும், “வேரப்ருக்தஸ்ய” என்று ப்ரத்யயவகாரத்தையும் லோபிப்பித்தால் ‘அ’ என்று ரூபமாய், அது ஸர்வரக்ஷகனான ஸர்வேஶ்வரனைச் சொல்லிற்றாகிறது. இத்தாலே “யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத்ப்ரயந்த்யபி4 ஸம்விஶந்தி, தத்3விஜிஜ்ஞாஸஸ்வ, தத்3ப்3ரஹ்மேதி” என்று – ப்3ரஹ்மலக்ஷணமாக வேதா3ந்தத்திலே யாதொன்றில் நின்றும் இந்த பூ4தங்கள் பிறந்தன, யாதொன்றாலே ஜீவிக்கின்றன, நஶித்துப்போகிறவை யாதொன்றை ப்ரவேஶித்து லயிக்கின்றன, அது ப்3ரஹ்மம், அத்தையறி என்று கொண்டு ஜக3த்ஸ்ருஷ்டி ஸ்தி2தி ஸம்ஹாரஹேதுத்வம் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்ருஷ்டி ஸ்தி2தி ஸம்ஹாரங்களென்கிற அடைவிலே சொல்லாதே உபாதா3நத்துக்கு அநந்தரம் லயஸ்தா2நத்தை மாறாடிச் சொல்லி, பின்பு ரக்ஷகத்வத்தைச்சொல்லுவானென் என்னில், உபாதா3நம் சொல்லுமிடத்தில் லயஸ்தா2நத்தைச் சொல்லுகிற ஸௌகர்யத்தாலும், “தஜ்ஜலாநிதி” என்கிற ஶ்ருதியின் க்ரமத்தைப்பற்றவும் சொல்லிற்று, இப்படி “விஷ்ணோஸ்ஸகாஶாது3த்3பூ4தம் ஜக3த்தத்ரைவ ச ஸ்தி2தம் । ஸ்தி2திஸம்யமகர்த்தாஸௌ ஜக3தோஸ்ய ஜக3ச்ச ஸ:” என்று விஷ்ணுவினுடைய ஸகாஶத்தில்நின்றும் ஜக3த்து உத்பந்நமாயிற்று, அவன்பக்கலிலே லயித்துநின்றது, இதுக்கு பா3ஹ்யஸ்தி2தி ஸம்ஹாரங்களையும் பண்ணுவான் அவன், அந்தராத்மதயா ஆந்தரஸ்தி2தி பண்ணுவான் அவனென்று இவ்வடைவிலே ஸ்ரீபராஶரப43வான் சொன்னான். 21

एवं कारणभूतब्रह्मवाचिनोऽकारस्य “अकारो वै विष्णु:”, “अकारो विष्णुवाचक:”, “अक्षराणामकारोस्मि” (गी.10-33) “ अ इति भगवतो नारायाणस्य प्रथमाभिधानम्” (महाभाष्योद्योते कैय्यट:) इय्यादिना भगवद्वाचित्वमवगम्यते। “य: पर: स महेश्वर:” (तै.ना. 10-24) इत्यत्र अकारवाच्यस्य महेश्वरस्यानन्तरमेव नारायणानुवाके नारायणत्वप्रतिपादनाच्च जगज्जन्मादिहेतुतया अकारवाच्यं परं ब्रह्म नारायण इति निश्चीयते । 22

இப்படி காரணபூ4தமான ப்3ரஹ்மத்துக்கு வாசகமான அகாரத்துக்கு, “அகாரோ வை விஷ்ணு:” என்று – அகாரமாகிறான் விஷ்ணு என்றும், “அகாரோ விஷ்ணுவாசக:”, என்று – அகாரமாகிறது விஷ்ணுவுக்கு வாசகம் என்றும் ஶ்ருதியிலும், ப43வச்சா2ஸ்த்ரத்திலும் சொல்லப்படுகையாலும், “அக்ஷராணாமகாரோऽஸ்மி”  என்று அக்ஷரங்களில் வைத்துக்கொண்டு அகாரமாகிறேன் நானே என்கிற ப43வத்3 வசநத்தாலும், “அ இதி ப43வதோ நாராயணஸ்ய ப்ரத2மாபி4தா4நம்” என்று – அகாரம் ப43வானானவனுக்கு முதல் திருநாமம் என்கிற மஹாபா4ஷ்யவசநத்தாலும், ப43வத்3வாசகத்வம் அறியப்படாநின்றது. “ய: பர: ஸ மஹேஶ்வர:”  என்கிற ஶ்ருதியிலே அகாரவாச்யனாகச் சொல்லப்பட்ட மஹேஶ்வரனுக்கு, அநந்தரம் நாராயணாநுவாகத்திலே நாராயணத்வத்தைச் சொல்லுகையாலே ஜக3ஜ்ஜந்மாதி3ஹேதுவாக அகாரவாச்யமான பரப்3ரஹ்மமானது நாராயணனென்று நிஶ்சயிக்கப்படாநின்றது. 22

“यस्मिन्निदं सञ्च विचैति सर्वं” (तै.ना. 1-2) “यत: प्रसूता जगत: प्रसूति:” (तै.ना. 1-4) “सर्वे निमेषा जज्ञिरे विद्युतः पुरुषादधि”(तै.ना.1-8) इत्यादिभिः सर्वकारणतया प्रतिपन्नस्य परमपुरुषस्य “यमन्तस्समुद्रे कवयो वयन्ति”  ( तै. ना. 1 ) इति समुद्रशायित्वेन नारायणत्वं सूचयित्वा तस्य “न तस्येशे कश्चन” (तै. ना. 1 ) इति सर्वाधिकत्वं प्रतिपादयित्वा “अम्भस्यपारे” (तै. ना. 1) इत्यनुवाकेन एकवाक्यतया “अद्भ्यस्सम्भूतो हिरण्यगर्भ इत्यष्टौ” (तै.ना.1-11) इति श्रूयमाणो “अद्भ्यस्सम्भूत” (पु.सू.) इत्यनुवाके “हीश्च ते लक्ष्मीश्च पत्न्यौ”  इति श्रियःपतित्वं श्रूयते । एतेन सर्वाधिकः श्रियः पतिरेवेत्यवगम्यते। “क: श्री: श्रिय:” (स्तो.12) इति च सर्वस्मात्परत्वे प्रथमनिरूपकं श्रिय:पतित्वमित्युक्तम्।अत:  शेषित्वरूपवाचिन्यकारे शेषिणः सर्वाधिकत्वनिरूपकभूतलक्ष्मीविशिष्टत्वमप्यर्थादुक्तम् । 23


இன்னமும்  “யஸ்மிந்நித3ம் ஸஞ்ச விசைதி ஸர்வம்” என்று – யாவனொருவன் பக்கலிலே இந்த ஜக3த்தெல்லாம் ஸங்குசிதமாயும் விஸ்த்ருதமாயுமிருக்கிறதோ என்றும், “யத: ப்ரஸூதா ஜக3த: ப்ரஸூதி:”  என்று – யாவனொருவன்பக்கல்நின்றும் இஜ்ஜக3த்தினுடைய உத்பத்தி உண்டாயிற்றோ என்றும், “ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்3யுத: புருஷாத3தி4” என்று – நிமேஷாதி3 காலோபலக்ஷிதஸகலபதா3ர்த்த2ங்களும் வித்3யுத்3வர்ணனான புருஷன்பக்கல் உண்டாயிற்று என்றும், இது முதல் நாலு வாக்யங்களாலே ஸர்வகாரணமாகச் சொல்லப்பட்ட பரமபுருஷனுக்கு “யமந்தஸ்ஸமுத்3ரே கவயோ வயந்தி” என்று யாவனொருவனை ஸமுத்3ரத்துக்குள்ளேயாக ஜ்ஞாநவான்கள் அறியாநின்றார்களோ என்கையாலே ஸமுத்3ரஶாயித்வத்தையிட்டு நாராயணத்வத்தை ஸூசிப்பித்து, அந்த நாராயணனுக்கு “ந தஸ்யேஶே கஶ்சந” என்று அவனுக்கு ஒரு நியந்தா இல்லை என்கையாலே, ஸர்வாதி4கத்வத்தை ப்ரதிபாதி3யாநிற்கிற “அம்ப4ஸ்யபாரே” என்கிற அநுவாகத்தோடே “அத்3ப்4யஸ்ஸம்பூ4தோ ஹிரண்யக3ர்ப்ப4 இத்யஷ்டௌ”  என்று ஏகவாக்யமாக ஓதப்படுகிற “அத்3ப்4யஸ்ஸம்பூ4த:” என்கிற அநுவாகத்திலே “ஹ்ரீர்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ” என்று – ஶ்ரிய: பதித்வம் ஓதப்படாநின்றது; இத்தாலே ஸர்வாதி4கனான நாராயணன் ஶ்ரிய:பதி என்றறியப்பட்டது. “க: ஸ்ரீ: ஶ்ரிய:” என்று ஸர்வஸ்மாத் பரத்வத்துக்கு ப்ரதா4ந நிரூபகம் ஶ்ரிய:பதித்வமாக ஆளவந்தார் அருளிச்செய்தார்; ஆகையாலே ஶேஷிஸ்வரூபவாசியான அகாரத்திலே ஶேஷியினுடைய ஸர்வாதி4கத்வத்துக்கு நிரூபகமாக ஶ்ரிய:பதித்வமும் அர்த்த23லத்தாலே சொல்லப்பட்டதாயிற்று.   23

एवं निरूपकत्वनिबन्धनस्वरूपानुबन्धित्वेन स्वरूपवाचिपदान्तर्भाव उक्तः । यथा द्रमिडभाष्ये “ यद्यपि सच्चित्तो न निर्भुग्नदैवतं गुणगणं मनसानुधावेत् । तथाप्यन्तर्गुणामेव देवतां भजते । तत्रापि सगुणैव देवता प्राप्या ।” (द्र.भा.) इति सद्विद्यानिष्ठस्य दहरविद्यानिष्ठस्येव देवतास्वरूपाद्विभक्तत्वेन अपहतपाप्मत्वादिगुणगणस्य पृथगुपासनाभावेपि स्वरूपानुबन्धित्वात्सकलकल्याणगुणगणस्य सर्वगुणविशिष्टं ब्रह्मोपास्यं प्राप्यञ्चेत्युक्तम् । तद्वदिहाप्यकारवाच्यस्य स्वरूपानुबन्धित्वात् श्रियःपतित्वमनुसन्धेयम् । 24

இப்படி நிரூபகத்வமடியான ஸ்வரூபாநுப3ந்தி4த்வத்தாலே ஸ்வரூபவாசிபத3த்திலே அந்தர்பா4வம் சொல்லப்பட்டது. என்போல என்னில், த்3ரமிட3 பா4ஷ்யத்தில், “யத்3யபி ஸச்சித்தோ ந நிர்பு4க்3நதை3வதம் கு3ணக3ணம் மநஸாநுதா4வேத் । ததா2ப்யந்தர்கு3ணாமேவ தே3வதாம் ப4ஜதே தத்ராபி ஸகு3ணைவ தே3வதா ப்ராப்யா” என்று ஸத்3வித்3யாநிஷ்ட2னானவன் த3ஹரவித்3யாநிஷ்ட2ன் போல தே3வதா ஸ்வரூபத்திற்காட்டில் பிரிய அபஹதபாப்மத்வாதி3 கு3ணக3ணத்தைத் தனித்து உபாஸித்திலனேயாகிலும், ஸமஸ்தகல்யாணகு3ணங்களும் ஸ்வரூபாநுப3ந்தி4களாகையாலே அந்த ஸத்3வித்3யையிலும் ஸகு3ணப்3ரஹ்மமே உபாஸ்யமுமாய், ப்ராப்யமுமாகச் சொன்னாற் போலே, இங்கும் அகாரவாச்யனான நாராயணனுக்கு ஸ்வரூபாநுப3ந்தி4யாகையாலே ஶ்ரிய:பதித்வம் அநுஸந்தே4யம். 24

एवं श्रियः पतिरेव नारायणो जगज्जन्मादिहेतुतया वाच्य इति अस्य पदस्य नार्थान्तरपरत्वं शङ्कनीयम् । एतेन ब्रह्मशिवयोः कारणत्वशङ्कानास्पदतया कारणभूतस्य श्रियःपतेरेव सर्वस्मात्परत्वेन सर्वेश्वरत्वं प्रतिपादितम्।अत एव ह्यत्रापि “य: पर: स महेश्वर:” (तै.ना. 10-24) इत्यकारवाच्यस्य सर्वाधिकत्वेन महेश्वरत्वमुक्तम्।   25


இப்படி ஶ்ரிய:பதியான நாராயணனே ஜக3ஜ்ஜந்மாதி3 ஹேதுதயா வாச்யனென்றிட்டு, இப்பத3த்துக்கு அர்த்தா2ந்தரம் ஶங்கநீயமன்று. ஆகையாலே, ப்3ரஹ்ம ஶிவர்களுக்கு காரணத்வஶங்காவிஷயத்வமில்லாமையாலே, காரணபூ4தனாய் ஶ்ரிய:பதியான நாரா–யணனே ஸர்வஸ்மாத் பரனாகையாலே ஸர்வேஶ்வரன் என்றதாயிற்று. ஆகையிறே ஶ்ருதியிலும் அகாரவாச்யனை “ய: பர:ஸ மஹேஶ்வர:” என்று – ஸர்வாதி4கனாகையாலே மஹேஶ்வரனாகச் சொல்லிற்று, 25

तथा च भगवच्छास्त्रेषु लक्ष्मीस्वरूपस्य भगवत्स्वरूपनिरूपकतया तदपृथक्सिद्धेः तत्स्वरूपान्तर्भावः प्रतिपाद्यते । “या सा भगवतश्शक्तिः अहन्ता सर्वभावगा । अपृथक्चारिणी सत्ता महानन्दमयी परा ॥”, “भावाभावानुगा शक्तिः सर्वकार्यकरी विभोः । स्वातन्त्र्यरूपा सा विष्णोः प्रस्फुरत्ता जगन्मयी ॥” (अहिर्बु.) “अहन्ता ब्रह्मणस्तस्य साऽहमस्मि सनातनी । आत्मा स सर्वभूतानामहम्भूतो हरिः स्मृतः । अहन्तया विनाऽहं हि निरुपाख्यो न सिद्ध्यति । अहमर्थं विनाऽहन्ता निराधारा न सिद्ध्यति ॥” (ल.तं.) इत्यादिभिः – ब्रह्मणः सकलकारणभूतस्य निरतिशयानन्दयुक्तस्य सर्वव्यापकस्य सर्वान्तरात्मभूतस्य सकलनियन्तृतया सर्वस्मात्परत्वेन निरवधिकस्वातन्त्र्यस्वरूपस्य सर्वप्रकारासाधारणनिरूपकत्वेन वस्तुसंस्थानरूपजात्यादिवत् देव्याः श्रियः तदहन्तारूपत्वप्रतिपादनात्। 26

அப்படியே ப43வச்சா2ஸ்த்ரத்திலும், லக்ஷ்மீஸ்வரூபம் ப43வத்ஸ்வரூபத்துக்கு நிரூபகமாகையாலே அவனோடே அப்ருத2க்ஸித்34மாகையால் அவனுடைய ஸ்வரூபத்திலே அந்தர்பூ4தமென்று சொல்லப்படாநின்றது. எங்ஙனேயென்னில் “யா ஸா ப43வத: ஶக்தி: அஹந்தா ஸர்வபா4வகா3। அப்ருத2க் சாரிணீ ஸத்தா மஹாநந்த3மயீ பரா” என்று – ப43வானுடைய ஶக்தி யாதொன்று, அது அவனுடைய அஹமர்த்த2த்துக்கு நிரூபகமாகையாலே அஹந்தையாய், அவனுடைய விபூ4தியான ஸமஸ்தபதா3ர்த்த2ங்களுக்கும் அபி4மாநிநியாகையால ஸர்வ பா4வகை3யாய் ப்ருத2க்ஸஞ்சாரமில்லாதபடி அவனுடைய ஸ்வரூபத்திலே அந்தர்பூ4தையாகையாலே ஸத்தையாய் அவனுடைய நிரதிஶயாநந்த3த்தைத் தனக்கு வேஷமாகவுடையளாய்க் கொண்டு பரரூபையாயிருக்குமென்றும், “பா4வாபா4வாநுகா3 ஶக்தி: ஸர்வகார்யகரீ விபோ:। ஸ்வாதந்த்ர்ய ரூபா ஸா விஷ்ணோ: ப்ரஸ்பு2ரத்தா ஜக3ந்மயீ” என்று – விபு4வாய்க்கொண்டு வ்யாபநஶீலனான ஸர்வேஶ்வரனுடைய அந்த ஶக்தியானது, காரணத3ஶையில் பா4வாபா4வ ஶப்33வாச்யமான ஸூக்ஷ்மசித3சித்துக்களை அபி4மாநித்து அதி4ஷ்டி2த்தும், அவனுடைய ஸ்ருஷ்டிஸ்தி2திஸம்ஹாரநிக்3ரஹாநுக்3ரஹரூபமான ஸர்வகார்யங்களுக்கும் ப்ரவ்ருத்தியைப் பண்ணியும், ஸ்ருஷ்டமான ஜக3த்தினுடைய நியந்த்ருத்வரூபமான ஸ்வாதந்த்ர்யத்துக்கு நிரூபகபூ4தையாயும், ஜக3தா3காரமான அவனுடைய ப்ரஸ்பு2ரத்தையாயும் இருக்குமென்றும் அஹிர்பு3த்4ந்யஸம்ஹிதையிலே சொல்லிற்று, “அஹந்தா ப்3ரஹ்மணஸ்தஸ்ய ஸாஹமஸ்மி ஸநாதநீ । ஆத்மா ஸ ஸர்வபூ4தாநாம் அஹம்பூ4தோ ஹரி: ஸ்ம்ருத:”, என்று அபரிச்சி2ந்நஸ்வரூபரூபகு3ணவிபூ4திகளை உடைத்தாகையாலும், ஸ்வஸம்ப3ந்தி4  வஸ்துவுக்கு ஸாம்யாபாத3கமாகையாலும், ப்3ருஹத்வப்3ரும்ஹணத்வகு3ணயோக3த்தாலே ப்3ரஹ்மஶப்33 வாச்யனாய்க் கொண்டு ஸர்வாதி4கனான அந்த ஸர்வேஶ்வரனுடைய நிரவதி4க ஸ்வதந்த்ரரூபமான அஹமர்த்த2த்துக்கு நிரூபகத4ர்மமாகிற அஹந்தையாகிறேன் நித்யஸ்வரூபையான நானாயிருக்கும், என்னாலே நிரூபிதமான ஸ்வரூபத்தையுடைய அஹமர்த்த2ந்தான் ஸர்வபூ4தங்களுக்கும் அந்தராத்மாவான ஹரியாயிருக்கும் என்றும், “அஹந்தயா விநாஹம் ஹி நிருபாக்2யோ ந ஸித்4யதி । அஹமர்த்த2ம் விநாஹந்தா நிராதா4ரா ந ஸித்4யதி” என்று – நிரூபகமான அஹந்தையை ஒழிந்தபோது நிரூப்யமான அஹமர்த்த2மானதுக்கு உபாக்2யாரூபமான நிரூபகத4ர்மம் அல்லாமையாலே நிரூப்யஸித்3தி4 உண்டாகாது; ஆஶ்ரயமான அஹமர்த்த2மில்லாத போது ஆஶ்ரயமான த4ர்மியையொழிய த4ர்மத்துக்கு ஸ்தி2தியில்லாமையாலே அஹந்தைக்கு ஸ்வரூபஸித்3தி4 இல்லை. ஆகையாலே த4ர்மத்தை ஒழிந்தபோது த4ர்மியை ப்ரதிபத்தி பண்ணவொண்ணாதத்தனை. த4ர்மியை ஒழிந்தபோது த4ர்மத்துக்கு ஸ்வரூபமே பிடித்து இல்லை என்று லக்ஷ்மீதந்த்ரத்திலே சொல்லப்பட்டது. இத்தாலே நிரூப்யனான ஈஶ்வரனுடைய ஸர்வாதிஶயத்வரூபமான உத்கர்ஷம் அதிஶயரூபையான இவளாலே நிரூபிதமாகக்கடவது, அவனை ஆஶ்ரயமாகவுடைய இவளுடைய ஸ்வரூபந்தான் அவனிட்ட வழக்காகக் கடவது என்றதாய்த்து. இப்படி இது முதலான ப்ரமாணங்களாலே ஸர்வகாரணபூ4தனாய், நிரதிஶயாநந்த3யுக்தனாய், ஸர்வவ்யாபகனாய், ஸர்வாந்தராத்மாவாய், ஸர்வநியந்தாவாய், ஸர்வஸ்மாத் பரனாய் நிரவதி4கமான ஸ்வாதந்த்ர்யத்தை ஸ்வரூபமாகவுடையனாய், பரப்3ரஹ்ம ஶப்33வாச்யனான நாராயணனுக்கு ஸர்வப்ரகாரத்தாலும் அஸாதா4ரணநிரூபகபூ4தையாகையாலே வஸ்துஸம்ஸ்தா2நரூபமான ஜாத்யாதி3களைப்போலே லக்ஷ்மீஸ்வரூபமும் அவனுடைய அஹந்தாரூபமாகச் சொல்லப்பட்டது. 26


नन्वेवं जगदुपादानादिसमस्तावस्थावस्थितः पुरुषोत्तमः तद्विशिष्ट एव स्यात्; तथाहि – “नित्यैवैषा जगन्माता विष्णोः श्रीरनपायिनी । यथा सर्वगतो विष्णुस्तथैवेयं द्विजोत्तम ॥” (वि.पु.1-8-17) “त्वं माता सर्वलोकानां देवदेवो हरिः पिता । त्वयैतद्विष्णुना चाम्ब जगद्व्याप्तं चराचरम् ॥” (वि.पु. 1. 9-126) “लक्ष्म्यास्समस्तं चिदचित्स्वरूपं तदीशस्य तु साऽपि सर्वम्। तथापि साधारणमीशितृत्वं श्रीश्रीशयोर्द्वौ च सदैकशेषी ॥”  इत्यादिभिः भगवत्स्वरूपस्येव तन्निरूपकभूतस्य लक्ष्मीस्वरूपस्यापि कारणत्वव्यापकत्वनियन्तृत्ववचनात् “सर्वस्य वशी। सर्वस्येशान:” (बृहदा. 6-4-22) “पतिं विश्वस्याऽऽत्मेश्वरम्” (तै. ना. 11 ) इत्यादिना भगवत्स्वरूपस्येव “अस्येशाना जगतो विष्णुपत्नी” , “ईश्वरीं सर्वभूतानाम्” (श्रीसू.) इत्यादिना तदसाधारणश्रीस्वरूपस्यापि सर्वशेषित्वश्रवणाच्च लक्ष्मीविशिष्ट एव निखिलकारणभूतः सर्वरक्षकः सर्वाधिकशेषीत्यवगम्यते । 27

இப்படி ஸ்வரூபாந்தர்பா4வம் உண்டாமளவில், ஜக3து3பாதா3நாதி3 ஸமஸ்தாவஸ்தை2யையுமுடைய ஸர்வேஶ்வரன் அவளோடே கூடியிருக்குமென்றதாமிறே. ஆகையாலே, “நித்யைவைஷா ஜக3ந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ । யதா2 ஸர்வக3தோ விஷ்ணுஸ்ததை2வேயம் த்3விஜோத்தம” என்று – வ்யாபகனான ஸர்வேஶ்வரனுக்கு அநபாயிநியாய், நித்யையாயிருக்கிற இந்த ஸ்ரீயானவள் ஜக3ந்மாதாவாயிருக்கும், யாதொருபடி ஸர்வேஶ்வரன் ஸர்வக3தனாயிருக்கும், இவளும் அப்படி ஸர்வக3தையாயிருக்குமென்று ஸ்வரூபத்தைச்சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுகிற இடத்திலும், “த்வம் மாதா ஸர்வலோகாநாம் தே3வதே3வோ ஹரி: பிதா । த்வயைதத்3விஷ்ணுநா சாம்ப3  ஜக3த் வ்யாப்தம் சராசரம்”  என்று – ஸர்வலோகங்களுக்கும் நீ மாதா, பிதாவானவன் தே3வதே3வனான ஹரி, உன்னாலும் அந்த விஷ்ணுவாலும் சராசராத்மகமான இந்த ஜக3த்தானது வ்யாபிக்கப்பட்டிருக்குமென்று ஈஶ்வரனோபாதி இவளுக்கு காரணத்வத்தையும், வ்யாபகத்வத்தையும் சொல்லி, “லக்ஷ்ம்யாஸ்ஸமஸ்தம் சித3சித்ஸ்வரூபம் வ்யாப்யம் ததீ3ஶஸ்ய து ஸாபி ஸர்வம் । ததா2பி ஸாதா4ரணமீஶித்ருத்வம் ஸ்ரீஶ்ரீஶயோர்த்3வௌ ச ஸதை3கஶேஷீ” என்று லக்ஷ்மிக்கு ஸமஸ்தசேதநாசேதநங்களும் வ்யாப்யம், அந்த சேதநாசேதநங்களும் லக்ஷ்மியும் எல்லாம் ஈஶ்வரனுக்கு வ்யாப்யம், ஆயிருக்கச்செய்தே ஜக3த்தைப்பற்றியுண்டான நியந்த்ருத்வம் ஸ்ரீஸ்ரீஶர்களிருவர்க்கும் ஸாதா4ரணமாயிருக்கும், இருவரும் ஜக3த்துக்கு ஏகஶேஷிகளாயிருப்பார்களென்றும் சொல்லுகையாலே ஈஶ்வரனோபாதி அவனோடு அப்ருத2க்ஸித்3தை4யாயிருக்கிற இவளுக்கு காரணத்வவ்யாபகத்வநியந்த்ருத்வாதி3கள் சொல்லுகையாலும், “ஸர்வஸ்ய வஶீ, ஸர்வஸ்யேஶாந:”, “பதிம் விஶ்வஸ்யாத்மேஶ்வரம்” என்று – ஸர்வத்தையும் வஶீகரித்து, ஸர்வத்துக்கும் ஈஶ்வரனாய், விஶ்வத்துக்கு பதியாய், தனக்குத் தானே ஈஶ்வரனாக நாராயணனைச் சொன்னவோபாதி, விஷ்ணுபத்நியான இவளையும் “அஸ்யேஶாநா ஜக3தோ விஷ்ணுபத்நீ” என்று – ஜக3த்துக்கு ஈஶானையாகவும், “ஈஶ்வரீம் ஸர்வபூ4தாநாம்”  என்று – ஸர்வபூ4தங்களுக்கும் ஈஶ்வரியாகவும் சொல்லுகையாலே இருவர்க்கும் ஶேஷித்வம் ப்ரமாணஸித்34மாகையால், ஸர்வகாரணபூ4தனாய், ஸர்வரக்ஷகனாய், ஸர்வவ்யாபகனாய், ஸர்வநியந்தாவாய், ஸர்வாதி4கனான ஶேஷியானவன் அவ்வோ அவஸ்தை2கள் தோறும் லக்ஷ்மீவிஶிஷ்டனாயே இருக்குமென்றதாய்த்து. 27

नैतद्युक्तम् – निरूपकत्वनिबन्धनस्वरूपानुबन्धित्वेन ऐक्यासम्भवात् पत्नीत्वप्रयुक्तपारतन्त्र्यस्वाभाव्येन आधिक्यसाम्यासम्भवात् पत्न्यन्तरादिवत् चेतनसमानाकारत्वात् कारणत्वादेः ईश्वरैकासाधारण्याच्च; तदनुमोदेन तत्प्रीतिकरत्वमस्याः स्वरूपमिति (अत्र व्याख्यानुसारिणी पङ्किरेका मूले न दृश्यते) न तत्र साक्षादन्वयः; तथाभूतस्येश्वरस्य निरूपकत्वानुबन्धेन श्रियः पतिरेव सर्वाधिकशेषीत्यवगन्तव्यः । 28

(இப்படிச்சொல்வது யுக்தமன்று) இப்படி அப்ருத2க்ஸித்3தி4 நிப3ந்த4நமான ஸ்வரூபாந்தர்பா4வம் உண்டேயாகிலும், நிரூப்ய நிரூபக பே43மடியான ஸ்வரூபபே43 முண்டாகையாலே ஐக்யம் கூடாமையாலும், பத்நீத்வப்ரயுக்தமான பாரதந்த்ர்யத்தாலே ஆதி3க்யமும், ஸாம்யமும் கூடாமையாலும், பத்ந்யந்தராதி3களோபாதி பார தந்த்ர்யப்ரயுக்தமான சேதநஸமாநாகாரத்வம் உண்டாகையாலும், காரணத்வவ்யாபகத்வநியந்த்ருத்வாதி3கள் ஈஶ்வரனுக்கே அஸாதா4ரணங்களாகையாலும், இவள் அவனை அநுவிதா4நம் பண்ணி அநுமோதி3த்து அவனை உகப்பிக்கையே தனக்கு ஸ்வரூபமாகவுடையளாயிருக்கையாலும், இவளுக்குச் சொல்லுகிற வ்யாப்தியானது, “அர்த்தோ2 விஷ்ணுரியம் வாணீ” என்று – ஸ்வவிபூ4தி மாத்ர விஷயமாக ருஷிதானே சொல்லுகையாலும், காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வாதி3களில் இவளுக்கு ஸாக்ஷாத் அந்வயமில்லை. அப்படிப்பட்ட ஈஶ்வரனுடைய ஸ்வரூபத்திலே நிரூபகத்வ ரூபஸம்ப3ந்த4 முண்டாகையாலே ஶேஷியினுடைய ஸர்வாதி4கத்வத்தை ப்ரகாஶிப்பிக்கையால், ஶ்ரிய:பதியே ஸர்வாதி4க ஶேஷியென்றதாய்த்து. 28

तथा च श्रूयते – “यः पूर्व्याय वेधसे नवीयसे सुमज्जानये विष्णवे ददाशति” इति । जानि: –  जाया, सुमतिः जाया यस्य सः सुमज्जानिः, अथवा सुमदा शोभनानन्दा; यद्वा सुमती शोभनवती जाया यस्य सः । 29

அப்படியே ஶ்ருதியிலும் சொல்லப்பட்டது – “ய: பூர்வ்யாய வேத4ஸே நவீயஸே ஸுமஜ்ஜாநயே விஷ்ணவே த3தா3ஶதி”  என்று – பூர்வமான வேதா3வாய், இப்படி முன்பே ஸ்ரஷ்டாவாயிருக்கச்செய்தே மிகவும் புதியனென்னும்படி நவீநனாய், ஸுமஜ்ஜாநியாய் – ஶோப4நமான மதியுண்டு – ஜ்ஞாநம், அத்தையுடையளாய் என்றும், ஶோப4நமான மத3முண்டு – ஆநந்த3ம், அத்தையுடையளான ஜாநியுண்டு -ஜாயை, அவளையுடையனாய் என்னுதல், ஸுமதியாய் ஶோப4நவதியான ஜாயையை உடையவனென்னுதல்; இத்தாலே ஜ்ஞாநாநந்த3மயியாய், மங்க3ளாவஹையான லக்ஷ்மியை பத்நியாகவுடையவனென்று சொல்லப்படுவானான ஸர்வேஶ்வரனுக்கு யாவனொருவன் ஆத்மஸமர்ப்பணத்தைப் பண்ணுகிறானென்று சொல்லுகையாலே, காரணபூ4தனாய், வ்யாபகனாய், ஶேஷியானவன் ஶ்ரிய:பதி என்றதாய்த்து. 29

अस्य पदस्य तादर्थ्ये चतुर्थ्येकवचनान्तस्य “सुपां सुलुक्” (पा.सू. 3-1-39) इत्यादिसूत्रेण लुप्तविभक्तिकस्य प्रत्ययांशेन तादर्थ्यरूपशेषत्वाऽभिधानात् तत्प्रतिसम्बन्धिरूपं भगवतः शेषित्वमेव प्रकृत्यंशस्य मुख्यार्थ: ।   30

இந்த பத3ம், தாத3ர்த்2யே சதுர்த்2யேகவசநமாய், “ஸுபாம்ஸுலுக்” இத்யாதி3 ஸூத்ரத்தாலே லுப்தவிப4க்திகமாயிருக்கிறது. இது ப்ரத்யயாம்ஶத்தாலே தாத3ர்த்2யரூபமான ஶேஷத்வத்தைச் சொல்லுகையாலே, அதுக்கு ப்ரதிஸம்ப3ந்தி4யான ப43வானுடைய ஶேஷித்வமே ப்ரக்ருத்யம்ஶமான அகாரத்துக்கு முக்2யார்த்த2மாகிறது. 30

अस्य शेषित्वस्य अनवधिकातिशयत्वसूचकं कारणत्वादिकम् । एतदुक्तं भवति – तादर्थ्यप्रतिसम्बन्धिरूपशेषित्वमात्रवचने “हिरण्यं कुण्डलाय”  “यज्ञाय पशुः” इत्यादिवत् शेषित्वस्याचेतनविषयत्वमपि सम्भाव्यते; तद्बयावृत्त्यर्थं शेषिणो रक्षकत्ववचनेन चेतनविषयत्वेऽपि राजराष्ट्रादिवत् बाहयरक्षकत्वमात्रं सम्भाव्यते ; तन्निवृत्त्यर्थं रक्षणस्य बाह्याभ्यन्तररूपत्ववचने कार्तवीर्यादावपि तादृशोभयविधरक्षणसद्भावेन; रक्ष्यत्वशेषत्वयुक्तस्य राज्यस्य स्वरूपोत्पत्त्यादे: अन्याधीनत्वसम्भवात्, तद्व्यावर्तनाय शेषिणः कारणत्वाभिधानेऽपि उत्पादकं रक्षकं शेषिणं पितरं प्रति पुत्रगतशेषत्वस्य तच्छेषिभूतपितामहादि परम्पराविषयत्वदर्शनात्, तद्व्यावर्तनाय शेषिणः सर्वाधिकत्वसूचनार्थं कारणत्वशङ्कास्पदभूतब्रह्मशिवादिदेवतान्तरव्यावर्तनार्थं च श्रियःपतित्वं अकारवाच्यस्य सर्वस्मात्परत्वसूचनेन शेषिणो निरवधिकातिशयमहत्त्वमवगमयति । एवमक्षरस्वभावेन कारणत्वं, धात्वर्थतया रक्षकत्वं, अर्थसामर्थ्यात् श्रियःपतित्वं, तादर्थ्यप्रतिसम्बन्धितया शेषित्वञ्चाभिहितमिति।   31

இந்த ஶேஷித்வத்தினுடைய அநவதி4காதிஶயத்வத்தை ஸூசிப்பிக்கிறது காரணத்வாதி3கள். எங்ஙனே என்னில், தாத3ர்த2ய ப்ரதிஸம்ப3ந்தி4யான ஶேஷித்வமாத்ரத்தைச் சொல்லுமளவில் “குண்ட3லார்த்த2ம் ஹிரண்யம்”, “யஜ்ஞார்த்த2ம் பஶு:” என்கிறபடியே சேதநாசேதநங்களினுடைய ஶேஷித்வமானது அசேதநவிஷயமாகவும் ஸம்பா4விதம்; அது செய்யாமைக்காக ஶேஷியினுடைய ரக்ஷகத்வத்தைச் சொல்லுகையாலே ரக்ஷகனான சேதநனை விஷயமாக உடைத்தாய்த்தேயாகிலும், ராஜாவுக்கும் ராஜ்யத்துக்குமுண்டான ஸம்ப3ந்த4ம்போலே பா3ஹ்யரக்ஷணமேயாய், ஆந்தரரக்ஷணம் இல்லையாம்; அது செய்யாமைக்காக பா3ஹ்யாப்4யந்தரரூபமான உப4யவித4ரக்ஷணத்தைச் சொல்லுமளவில் கார்த்தவீர்யனான ஸஹஸ்ரபா3ஹ்வர்ஜுநனுக்கு பா3ஹ்யாப்4யந்தரரூபமான உப4யவித4ரக்ஷணமுண்டாகையால்; ரக்ஷ்யத்வ- ஶேஷத்வயுக்தமான ராஜ்யத்தினுடைய ஸ்வரூபோத்பத்த்யாதி3கள் அவ்விடத்தில் அந்யாதீ4நமாகக் காண்கையால் அத்தைக்கழிக்கைக்காக ஶேஷியினுடைய காரணத்வம் சொன்னாலும், உத்பாத3கனாய் ரக்ஷகனாய் ஶேஷியான பிதாவைப் பற்றி உண்டான புத்ரஶேஷத்வம் தச்சே2ஷிகளான பிதாமஹாதி3 விஷயத்திலும் பரம்பரையாக நடக்குமாபோலேயன்றியிலே இந்த ஶேஷத்வம் ஓரிடத்திலும் ஸம்ப4வியாமைக்காக ஶேஷியினுடைய ஸர்வாதி4கத்வத்தை ப்ரகாஶிப்பிக்கைக்காகவும், காரணத்வாதி3 ஶங்கைக்கு ஆஸ்பத3பூ4தரான ப்3ரஹ்மருத்3ராதி3 தே3வதாந்தரங்களை வ்யாவர்த்திக்கைக்காகவும், ஶ்ரிய:பதித்வமானது அகாரவாச்யனுடைய ஸர்வஸ்மாத்பரத்வத்தை ப்ரகாஶிப்பிக்கையாலே ஶேஷித்வம் அநவதி4காதிஶயமென்று காட்டிற்றாய்த்து, இப்படி அக்ஷரஸ்வபா4வத்தாலே காரணத்வத்தையும், தா4த்வர்த்த2த்தாலே ரக்ஷகத்வத்தையும், அர்த்த2ஸாமர்த்2யத்தாலே ஶ்ரிய:பதித்வத்தையும் தாத3ர்த்2ய ப்ரதிஸம்ப3ந்தி4தையாலே ஶேஷித்வத்தையும் சொல்லிற்றாய்த்து.   31

एतेन शेषिणः उपायोपेयत्वं चावगम्यते । तत्र रक्षकत्वमेवोपायत्वम्; तस्य रक्षणविशेषभूतार्थितार्थकरणत्वरूपत्वात् ; कारणत्वं च – आश्रयणार्थकरणकलेबरप्रदानादि रुच्युत्पादानज्ञानवैराग्यभक्तिपरभक्तिपरज्ञानपरमभक्तिजननस्वरूपाविर्भावपूर्वकनिरतिशयानन्दोद्भावयितृत्वपर्यन्त- स्वभावसूचनेन उपायत्वोपयुक्तम्। “कारणं तु ध्येय:” (अथर्वशिखा) “यो ब्रह्माणं विदधाति” (श्वेता.6) इत्यादिषु कारणभूत एवाश्रयणीय इत्युच्यते । शेषित्वं च किञ्चित्कारप्रतिसम्बन्धिरूपत्वात् उपेयत्वमेव । “परगतातिशयाधानेच्छया उपादेयत्वमेव यस्य स्वरूपं स शेषः, परश्शेषी” (वे.सं.) इति हि शेषशेषिलक्षणम् । श्रियःपतित्वं च शेषिणः सर्वप्रकारातिशयद्योतनेन उपेयत्वं पूरयति । एवं सति उपायोपेयत्वं हेयप्रत्यनीककल्याणैकतानत्वयुक्तस्य शेषिणः श्रियः पतेः स्वरूपतया प्रतिपादितं भवति। अत एवोक्तं -“उपायोपेयत्वे तदिह तव तत्तवं न तु गुणै” (र.स्त. 2-87) इति। भगवता  भाष्यकारेणापि “श्रियः पतिः निखिलहेयप्रत्यनीककल्याणैकतानः स्वेतरसमस्तवस्तुविलक्षणानन्तज्ञानानन्दैकस्वरूपः” (गी.भा. उपोद्घाते) इत्यभिहितम् । तत्राप्यपरिच्छिन्नज्ञानानन्दैकस्वरूपस्य स्वेतरसमस्तवस्तुवैलक्षण्यापादकनिखिलहेयप्रत्यनीककल्याणैकतानत्वं श्रियःपतित्वायत्तमिति तदेव प्रधाननिरूपकतया प्रतिपादितम् । अन्यथेदं वैलक्षण्यं व्यक्तयन्तरेष्वपि सम्भाव्यते । 32

இத்தாலே – ஶேஷியினுடைய உபாயோபேயத்வம் சொல்லிற்றாகிறது. அதில் ரக்ஷகத்வமே உபாயத்வமாகிறது. அதாவது அர்த்தி2யினுடைய அர்த்த2நாநுரூபமான ரக்ஷணவிஶேஷமாகையால், காரணத்வம் – ஆஶ்ரயணார்த்த2மான கரணகளேப3ரப்ரதா3நம் தொடக்கமாக – ருசியை உண்டாக்குகை, ஜ்ஞாநவைராக்3ய ப4க்திகள், பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளை ஜநிப்பிக்கை, ஸ்வரூபாவிர்பா4வபூர்வகமான ப43வத3நுப4வ ஜநித நிரதிஶயாநந்த3த்தை உத்34விப்பிக்கை முடிவான ஸ்வபா4வத்தைக் காட்டுகையால் உபாயத்துக் குறுப்பு. “காரணந்து த்4யேய:” என்று – உபாஸ்யனாகவும், “யோ ப்3ரஹ்மாணம்” இத்யாதி3யாலே ஶரண்யனாகவும் ஆஶ்ரயிக்கப்படுவான் காரணபூ4தனென்று சொல்லிற்றிறே. ஶேஷித்வமாவது – கிஞ்சித்கார ப்ரதிஸம்ப3ந்தி4த்வமாகையாலே உபேயத்வமாயிருக்கிறது. “பரக3தாதிஶயாதா4நேச்ச2யா உபாதே3யத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ: ஶேஷ: பர: ஶேஷீ” என்று ஶேஷஶேஷித்வ லக்ஷணத்தை வேதா3ர்த்த ஸங்க்3ரஹத்திலே ஸ்ரீபா4ஷ்யகாரர் அருளிச்செய்தாரிறே. அதாவது-ப்ரதிஸம்ப3ந்தி4யான பரனுக்கு அதிஶயத்தை உண்டாக்குகைக்காக ஸ்வீகரிக்கப்படுகை யாதொன்றுக்கு ஸ்வரூபம் அது ஶேஷம், அத்தாலுண்டான அதிஶயரூபமான கிஞ்சித்காரத்துக்கு விஷயமாய்க்கொண்டு ப்ரதிஸம்ப3ந்தி4யானது ஶேஷி என்றபடி. இனி ஶ்ரிய:பதித்வம் ஶேஷியினுடைய ஸர்வப்ரகாராதிஶயத்தைக்காட்டுகையாலே உபேயத்வத்தைப் பூரித்ததாய்த்து. இப்படி காரணத்வாதி3கு3ணசதுஷ்டயங்களும் உபாயபா4வத்திலும், உபேயபா4வத்திலும் அந்தர்பூ4தமாயுள்ளவிடத்தில், இந்த உபாயோபேயத்வங்கள் ஹேயப்ரத்யநீகமாய், கல்யாணைகதாநமான உப4யலிங்கா3காரத்தாலே ஶேஷியான ஶ்ரிய:பதிக்கு ஸ்வரூபமென்றதாய்த்து. அதில் ஹேயப்ரத்யநீகத்வம் உபாயத்வஸூசகம், கல்யாணைகதாநத்வம் உபேயத்வஸூசகம். ஆகையாலேயிறே “உபாயோபேயத்வே ததி3ஹ தவ தத்த்வம் நது கு3ணௌ” என்று ப4ட்டர் அருளிச்செய்தது. உபாயோபேயத்வம் உனக்கு ஸ்வரூபப்ரயுக்தம், கு3ணப்ரயுக்தமாய் வந்தேறியன்று என்றபடி. பா4ஷ்யகாரரும் “ஶ்ரிய:பதி: நிகி2லஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந: ஸ்வேதரஸமஸ்தவஸ்துவிலக்ஷணாநந்தஜ்ஞாநாநந்தை3கஸ்வரூப:” என்று – ஸ்ரீகீ3தாபா4ஷ்யத்தில், முகப்பிலே, அபரிச்சி2ந்நஜ்ஞாநாநந்தை3க ஸ்வரூபமான ப43வத் ஸ்வரூபத்தினுடைய ஸ்வேதரஸமஸ்த வைலக்ஷண்யத்துக்கு ஹேதுவான நிகி2லஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணைகதாநத்வமானது ஶ்ரிய:பதித்வாயத்தமாகையால், அதுவே ப்ரதா4நநிரூபகமாக அருளிச்செய்தார். அப்படியில்லையாகில் இந்த வைலக்ஷண்யம் வ்யக்த்யந்தரத்திலேயும் ஸம்பா4விதமாமிறே. 32

अयमेव हि वेदान्तेषु सर्वकारणत्व सर्वनियन्तृत्व-सर्वरक्षकत्व-सर्वस्मात्परत्वादिस्वभावै: समाभ्यधिकरहितः सर्वशेषीति प्रतिपाद्यते; “स कारणं करणाधिपाधिपो न चास्य कश्चिज्जनिता न चाधिप:” (सु.उ.), “तमीश्वराणां परमं महेश्वरं तं देवतानां परमं च दैवतम् । पतिं पतीनां परमं परस्ताद्विदाम देवं भुवनेशमीड्यम्॥(श्वेता. 6) “पतिं विश्वस्यात्मेश्वरम्” (तै.ना. 11) “न तस्येशे कश्चन” (तै.ना. 1),   “ न तत्समश्चाभ्यधिकश्च दृश्यते” (श्वेता. 6) इत्यादिभि: । अत्र देवशब्द: श्रिय:पतित्वसूचक: “श्रद्धया देवो देवत्वमश्नुते” (यजु.काठ. 3-11) इति श्रुते:। तस्मात् श्रिय:पतिरेव सर्वस्माद्विलक्षण: सर्वाधिकशेषीति अकारेण प्रतिपाद्यत इति सिद्धम् । 33

இந்த ஶ்ரிய : பதியிறே வேதா3ந்தங்களிலே, ஸர்வகாரணத்வம், ஸர்வநியந்த்ருத்வம், ஸர்வரக்ஷகத்வம், ஸர்வஸ்மாத்பரத்வம் தொடக்கமான ஸ்வபா4வங்கள ஸமாப்4யதி4க ரஹிதனான ஸர்வஶேஷியென்று ப்ரதிபாதி3க்கப்படுகிறான். “ஸ காரணம் கரணாதி4பாதி4போ ந சாஸ்ய கஶ்சிஜ்ஜநிதா ந சாதி4ப:” என்று – அவனே உத்பாத3கமான காரணமும், சக்ஷுராதி3 கரணங்களுக்கு ஶேஷியான ஜீவனுக்கு ஶேஷியுமல்லது இவனுக்கு உத்பாத3கனாயிருப்பார் ஒருவருமில்லை (“ந சாதி4ப:”  இத்யஸ்ய வ்யாக்2யாநம் ம்ருக்3யம்) என்றும், “தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம் தம் தே3வதாநாம் பரமஞ்ச தை3வதம் । பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத்3விதா3ம தே3வம் பு4வநேஶமீட்3யம்” என்று – அவனை நியந்தாக்களான ஈஶ்வரர்களுக்கெல்லாம் பரமான மஹேஶ்வரனாக வும், அவனை உபாஸ்யமான தே3வதாவர்க்க3த்துக்கெல்லாம் பரமான தை3வதமாகவும், ஶேஷிகளான ப்3ரஹ்மருத்3ரேந்த்3ராதி3களுக்கெல்லாம் அப்படி பரனான பதியாகவும், பு4வநத்துக்கு ஈஶ்வரனாகவும், ஸ்துத்யனாகவும் தே3வனாகவும் அறியா நின்றோம் என்றும், “பதிம் விஶ்வஸ்ய” என்று – விஶ்வத்துக்கு பதியென்றும், “ஆத்மேஶ்வரம்” என்று – தனக்குத்தானே ஈஶ்வரனென்றும், “ந தஸ்யேஶே கஶ்சந” என்று – அவனுக்கு ஈஶ்வரனாவான் ஒருவனுமில்லையென்றும், “ந தத்ஸமஶ்சாப்4யதி4கஶ்ச த்3ருஶ்யதே” என்று – அவனுக்கு ஒத்தாரும் மிக்காருமில்லையென்றும் இப்படி ப்ரமாணஶதங்கள் சொல்லிற்றிறே. இவ்விடத்தில் “விதா3ம தே3வம்” என்கிறவிடத்தில் தே3வஶப்33ம் ஶ்ரிய:பதித்வத்தைக்காட்டுகிறது; “ஶ்ரத்34யா தே3வோ தே3வத்வமஶ்நுதே” என்று ஶ்ருதி சொல்லுகையாலே, ஶ்ரத்3தை4 என்று லக்ஷ்மிக்குத் திருநாமமாய், அவளாலே ஸர்வாதி4கனான தே3வன், அப்படிப்பட்ட தே3வத்வத்தை அடைந்தான் என்றபடி. ஆகையாலே ஶ்ரிய:பதியே ஸர்வஸ்மாத்3விலக்ஷணனாய் ஸர்வாதி4கனான ஶேஷியென்று அகாரத்திலே சொல்லப்பட்டதென்று ஸித்34ம்.      33

“ ननु अस्य पदस्य चतुर्थ्यन्तत्वे हि तादर्थ्यप्रतिसम्बन्धिशेषित्ववाचित्वम् ; लुप्तविभक्तिकस्यास्य “प्रत्ययलोपे प्रत्ययलक्षणम्” (पा.सू. 1-1-62) इति न्यायेन विभक्यन्तत्वे सिद्धेऽपि चतुर्थ्यकवचनान्तत्वं कुत इति चेदुच्यते :- “ब्रह्मणे त्वा महस ओमित्यात्मानं युञ्जीत” (तै. ना. 51 ) इति तादर्थ्यानुसन्धानरूपसमर्पणविधायकवाक्ये समर्पणमन्त्रभूतप्रणवार्थप्रकाशके “ब्रह्मणे” इति चतुर्थ्यन्तब्रह्मशब्देन श्रुतिसिद्धब्रह्मवाचकस्य अकारस्य चतुर्थ्यन्तत्वं सूच्यते । तदुक्तमाचार्यै:- “मां ब्रह्मणेस्मै महसे तदर्थं प्रत्यञ्चमेनं युनजै परस्मै” (र.स्त. 2-82) इति । अकारविवरणस्य नारायणपदस्य चतुर्थ्यन्त- त्वं चैतत्सूचकमेव ; अतः तादर्थ्यवाचिना प्रत्ययेन शेषत्वाभिधानात् तत्प्रतिसम्बन्धिभगवतः शेषित्वं प्रकृत्यंशेन प्रतिपाद्यत इत्युक्तम् । 34

இப்பத3த்துக்கு சதுர்த்2யந்தத்வம் உண்டானபோதிறே தாத3ர்த்2யப்ரதிஸம்ப3ந்தி4யான ஶேஷியைச் சொல்லுவது; லுப்தமான விப4க்தியையுடைத்தான இதுக்கு “ப்ரத்யயலோபே ப்ரத்யயலக்ஷணம்” என்கிற ந்யாயத்தாலே விப4க்த்யந்தத்வம் ஸித்3தி4த்தாலும், சதுர்த்2யேகவசநாந்தத்வம் எத்தாலே என்னில் – “ப்3ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்று தாத3ர்த்2யாநுஸந்தா4நரூபமான ஸமர்ப்பணத்தை விதி4க்கிற வாக்யத்திலே ஸமர்ப்பண மந்த்ரமான ப்ரணவார்த்த2த்தை ப்ரகாஶிப்பிக்கிற இடத்திலே, “ப்3ரஹ்மணே” என்று சதுர்த்2யந்தமாக ப்3ரஹ்மஶப்33த்தைச் சொல்லுகையாலே ஶ்ருதிஸித்34மான ப்3ரஹ்மவாசகத்வத்தை உடைத்தான அகாரத்தினுடைய சதுர்த்2யந்தத்வம் ஸூசிப்பிக்கப்படுகிறது. “மாம் ப்3ரஹ்மணேஸ்மை மஹஸே தத3ர்த்த2ம் ப்ரத்யஞ்சமேநம் யுநஜை பரஸ்மை” என்று – இந்த ப்ரணவார்த்த2 ப்ரகாஶகமான வாக்யத்தின் அர்த்த2த்தை ஸ்வாநுஷ்டா2ந பர்யந்தமாக அநுஸந்தி4க்கிற த3ஶையிலே, தேஜோரூபமான இந்த பரப்3ரஹ்மத்தின் பொருட்டு அவனுக்கு ஶேஷபூ4தமாய், ஸ்வயம்ப்ரகாஶமான என்னை ஸமர்ப்பிப்பனென்று ஸமர்ப்பண விஷயத்தை சதுர்த்2யந்த ப்3ரஹ்மஶப்33த்தாலே ப4ட்டரும் அருளிச்செய்தார். இன்னமும் அகாரவிவரணமான நாராயணபத3த்தினுடைய சதுர்த்2யந்த த்வமும் இதுக்கு ஸூசகமாகக்கடவது. ஆகையால், தாத3ர்த்2யவாசியான ப்ரத்யயத்தாலே ஶேஷத்வத்தைச் சொல்லி, அதுக்கு ப்ரதிஸம்ப3ந்தி4யான ப43வானுடைய ஶேஷித்வமானது ப்ரக்ருத்யம்ஶமான அகாரத்தாலே ப்ரதிபாதி3க்கப்பட்டது என்றதாய்த்து. 34

अनन्तरं अवधारणार्थ उकारः शेषत्वस्यानन्यार्हताप्रतिपादनाय तत्प्रतिसम्बन्धिभगवतः शेषित्वमनन्यसाधारणमवगमयति । 35


அநந்தரம் – அவதா4ரணார்த்த2மான உகாரம் ஶேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையை ப்ரதிபாதி3க்கைக்காக தத்ப்ரதிஸம்ப3ந்தி4யான ப43வானுடைய ஶேஷித்வத்தை அநந்யஸாதா4ரணமென்று காட்டுகிறது. 35

उकारस्यावधारणार्थत्वं कथमिति चेत् : “तदेव भूतं तदु भव्यमा इदम्” (तै.ना. 1-1) “तदेवाग्निस्तद्वायुस्तत्सूर्यस्तदु चन्द्रमा:” इति स्थानप्रमाणेन श्रुतिरेव दर्शयति।  36

உகாரம் அவதா4ரணார்த்த2மானபடி என்னென்னில், “ததே3வ பூ4தம் தது34வ்யமா இத3ம்” என்று – அதுவே பூ4தமும், அதுவே ப4வ்யமும் என்கிற வாக்யத்திலும், “ததே3வாக்3நிஸ்தத்3வாயுஸ்தத்ஸூர்யஸ்தது3சந்த்3ரமா:” என்று – அதுவே அக்3நி, அதுவே வாயு, அதுவே ஸூர்யன், அதுவே சந்த்3ரமா என்கிற வாக்யத்திலும் ஏவகாரமிட்ட ஸ்தா2நத்திலே உகாரத்தையிடுகையாலே இந்த ஸ்தா2நப்ரமாணம் உகாரம் அவதா4ரணார்த்த2மென்று காட்டுகிறது. 36

सर्वाधिकशेषिप्रतिसम्बन्धिकतादर्थ्यरूपशेषत्वस्य अन्यार्हतायाः को वाऽवकाश इति चेन्न :शेषिणः सर्वाधिकत्वप्रतिपादनेन शेषत्वस्य अन्यार्हताव्यावृत्त्यसिद्धेः । “हिरण्यगर्भस्समवर्तताग्रे । भूतस्य जातः पतिरेक आसीत् ।” (तै. ना.) इति चतुर्मुखशेषस्य भूतजातस्य “मातृदेवो भव । पितृदेवो भव ।” ( तै. शी. 10) इति मातापितृप्रभृत्यवान्तरशेषत्वं दृश्यते; एवं सर्वाधिक शेषस्य शास्त्रसिद्धं मातापितृप्रभृतिब्रह्मादिदेवतान्तरपर्यन्तविषयं कर्मोपाधिकमन्यशेषत्वं न स्वरूपानुबन्धीति तद्व्यावर्तकप्रमाणसूचनेन तादर्थ्यं दृढीक्रियते । 37

ஸர்வாதி4கனான ஶேஷியை விஷயமாகவுடைத்தான தாத3ர்த்2யரூபமான ஶேஷத்வத்துக்கு அந்யார்ஹதைக்கு அவகாஶமுண்டோ என்னில், ஶேஷியை ஸர்வாதி4கன் என்று சொல்லுங்காட்டில் ஶேஷத்வத்தினுடைய அந்யார்ஹதை கழியாது. “ஹிரண்யக3ர்ப்ப4ஸ்ஸமவர்த்ததாக்3ரே பூ4தஸ்ய ஜாத: பதிரேக ஆஸீத்” என்று ஹிரண்யக3ர்ப்ப4னான ப்3ரஹ்மா ஜக3த்ஸ்ருஷ்டிக்கு முன்பே உண்டானானென்றும், முற்படப்பிறந்தவன் ஸ்ருஷ்டமான பூ4தங்களுக்கு பதியானானென்றும் சொல்லுகையாலே, சதுர்முக2னுக்கு ஶேஷமான பூ4தஜாதத்தைப்பற்ற “மாத்ருதே3வோ ப4வ பித்ருதே3வோ ப4வ” என்று – மாதாவை தே3வதையாக அநுவர்த்தி, பிதாவை தே3வதையாக அநுவர்த்தி என்றதாய், அத்தாலே மாதாபிதாக்கள் தொடக்கமானார் விஷயமாக அவாந்தரஶேஷத்வம் காணப்படாநின்றது. இப்படியே ஸர்வாதி4கனுக்கு ஶேஷமானவனுக்கு ஶாஸ்த்ரஸித்34மாய் வரும் மாதாபித்ருப்ரப்4ருதிப்3ரஹ்மாதி3 தே3வதாந்தரபர்யந்தமான அந்யஶேஷத்வம் கர்மோபாதி4கமாக உண்டாகையாலே, இது ஸ்வரூபாநுப3ந்தி4 யன்று என்று அதைக் கழிக்கிற ப்ரமாணத்தை ஸூசிப்பிக்கையாலே, இவ்விடத்திலே இந்த தாத3ர்த்2யம் த்3ருடீ4கரிக்கப்படுகிறது. 37



“देवर्षिभूतात्मनृणां पितॄणां न किङ्करो नायमृणी च राजन् । सर्वात्मना यश्शरणं शरण्यं नारायणं लोकगुरुं प्रपन्न:॥” (भाग.पु.11-5-41), “ब्रह्माणं शितिकण्ठं च याश्चान्या देवता: स्मृताः । प्रतिबुद्धा न सेवन्ते यस्मात्परिमितं फलम् ॥” (भार.मो.) “नान्यं देवं नमस्कुर्यात् नान्यं देवं निरीक्षयेत् । नान्यं प्रासादमारोहेन्नान्यदायतनं विशेत् ॥” (पा.रा.), “यस्त्वैवं ब्राह्मणो विद्यात् तस्य देवा असन्वशे” (पु.सू. 2) “स वेद ब्रह्म।सर्वेस्मै देवा बलिमावहन्ति” (तै.शी. 5) “प्रणमन्ति देवता:” (वि.ध. माङ्गल्यस्त.), “प्रभुरहमन्यनृणां न वैष्णवानाम्” (वि.पु. 3-7-14) इति भगवतानां ब्रह्मादि- सकलदेवतान्तराननुवर्तनं देवतान्तराणां तदनुवर्तित्वं च प्रतिपादितम् ।38

“தே3வர்ஷிபூ4தாத்மந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந் । ஸர்வாத்மநா யஶ்ஶரணம் ஶரண்யம் நாராயணம் லோககு3ரும் ப்ரபந்ந:” என்று – ஸ்ரீ பா43வதத்திலே, தே3வர்கள், ருஷிகள், பூ4தங்களாகிற ஸ்வரூபத்தையுடைய புருஷர்களுக்கும், பித்ருக்களுக்கும் கிங்கரனுமல்லன், அவர்களுக்கு ருணியாய்க்கடனையிறுக்குமவனுமல்லன், ஆரென்னில், யாவனொருவன் லோககு3ருவாய் நாராயணனான ஶரண்யனை ஸர்வப்ரகாரத்தாலும் ஶரணமாக அடைந்தவன் என்றும் சொல்லிற்று, “ப்3ரஹ்மாணம் ஶிதிகண்ட2ஞ்ச யாஶ்சாந்யா தே3வதா: ஸ்ம்ருதா:। ப்ரதிபு3த்3தா4 ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் ப2லம்” என்று – மஹாபா4ரதத்திலே, ப்3ரஹ்மாவையும் ஶிதிகண்ட2னான ருத்3ரனையும் மற்றுமுண்டான தே3வதைகளையும் ஸ்வஸ்வரூபத்தையுணர்ந்திருக்குமவர்கள் ஸேவியார், அதுக்கு ஹேது – அவர்கள் பரிமிதப2லப்ரத3ராகையாலே என்று சொல்லிற்று. “நாந்யம் தே3வம் நமஸ்குர்யாத் நாந்யம் தே3வம் நிரீக்ஷயேத் । நாந்யம் ப்ராஸாத3 மாரோஹேத் நாந்யதா3யதநம் விஶேத்” என்று வேறொரு தே3வதையை நமஸ்கரிப்பானல்லன், வேறொரு தே3வதையைப்பார்ப்பானல்லன், வேறொரு கோ3புராதி3ப்ராஸாத3ங்களிலே ஏறுவானல்லன், வேறொரு ஆலயத்தில் ப்ரவேஶிப்பானல்லன் என்று ப43வச்சா2ஸ்த்ரத்திலே சொல்லிற்று. “யஸ்த்வைவம் ப்3ராஹ்மணோ வித்3யாத் தஸ்ய தே3வா அஸந் வஶே” என்று – யாவனொரு ப்3ராஹ்மணன் இந்த பரமாத்மாவை இப்படி அறிகிறான், அவனுடைய வஶத்திலே தே3வர்கள் தாங்களானார்கள் என்றும், “ஸ வேத3 ப்3ரஹ்ம ஸர்வேஸ்மை தே3வா ப3லிமாவஹந்தி” என்று – ப்ரணவார்த்த2மான ஆத்மஜ்ஞாநத்தையுடையவனுக்கு ஸர்வதே3வதைகளும் கிங்கரர்களாய் ஆராத4நரூபமான ப3லியைக் கொடாநின்றார்கள் என்றும் ஶ்ருதிகளிலே சொல்லிற்று, “ப்ரணமந்தி தே3வதா:” என்று – திருநாமஸங்கீர்த்தநம் பண்ணினவனை தே3வர்கள் ப்ரணாமம் பண்ணாநின்றார்களென்று ஸ்ரீவிஷ்ணுத4ர்மத்திலும், “ப்ரபு4ரஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்” என்று – ஸ்ரீவைஷ்ணவர்களல்லாதார்க்கு நான் ப்ரபு4, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரபு4வல்லேன் என்கிற யமவசநத்தாலே ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும் சொல்லிற்று. இப்படி பா43வதர்கள் தே3வதாந்தரங்களை அநுவர்த்தியார்களென்றும் தே3வதாந்தரங்கள் அவர்களை அநுவர்த்திப்பர்களென்றும் சொல்லப்பட்டது. 38


किञ्च स्वानुरूपदेवतामतिक्रम्यान्यदेवताराधनमनर्थावहमिति श्रुत्यैव दर्शितम् :- “यो वै स्वां देवतामतियजते प्रस्वायै देवतायै च्यवते । न परां प्राप्नोति । पापीयान् भवति।”  इति । 39

அதுக்குமேலே ஸ்வரூபாநுரூபமான தே3வதையை அதி4க்ரமித்து அந்யதே3வதையை ஆராதி4க்கை அநர்த்தா2வஹமென்னுமிடத்தை ப்ரத்யக்ஷமாக ஶ்ருதிதானே சொல்லாநின்றது :- “யோ வை ஸ்வாம் தே3வதாமதியஜதே । ப்ரஸ்வாயை தே3வதாயை ச்யவதே । ந பராம் ப்ராப்நோதி । பாபீயாந் ப4வதி” என்று – யாவனொருவன் தனக்கு அநுரூபையான தே3வதையை அதிக்ரமித்து அந்யதே3வதையை ஆராதி4க்கிறான், அவன் தன்னுடைய தே3வதையின் பொருட்டாகாதே ப்ரச்யுதனாகாநிற்கும், அந்யதே3வதையைக் கிட்டமாட்டான், பாபிஷ்ட2னாம் என்றதாய்த்து. 39

स्मृतयश्च  “वासुदेवं परित्यज्य योऽन्यं देवमुपासते । तृषितो जाह्नवीतीरे कूपं खनति दुर्मतिः ॥”  “यो वासुदेवादन्यत्र मोक्षं प्रार्थयतेऽल्पधीः । अग्निभ्रान्त्या स खद्योतं शीतत्राणाय सेवते ॥”, “यस्तु नारायणं देवं सामान्येनाभिमन्यते । स याति नरकं घोरं यावच्चन्द्रदिवाकरम् ॥” इति । अतः शेषित्वस्य भगवदनन्यसाधारणतां शेषत्वस्यानन्यार्हतां च प्रतिपादयता अवधारणार्थेन निपातेन शेषशेषिणोः पृथक्सिद्ध्यनर्हतालक्षणशरीरात्मभावोपि सूचितः । “अवधारणमात्मशरीरभावपरम्”  इत्यभियुक्तोक्तेः । 40

இப்படி ஸ்மர்த்தாக்களான ருஷிகளும், “வாஸுதே3வம் பரித்யஜ்ய யோந்யம் தே3வமுபாஸதே । த்ருஷிதோ ஜாஹ்நவீதீரே கூபம் க2நதி து3ர்மதி:” என்று யாவனொருவன், ஸர்வஸ்மாத்பரனான வாஸுதே3வனை விட்டு வேறொரு தே3வனை உபாஸிக்கிறான், அந்த து3ர்மதியானவன், தண்ணீர் தா3ஹப்பட்டு க3ங்கை3 பெருகிப் போகாநிற்கச்செய்தேயும், அதின் கரையிலே கிணறு கல்லுகிறான் என்றும், “யோ வாஸுதே3வாத3ந்யத்ர மோக்ஷம் ப்ரார்த்த2யதேல்பதீ4: । அக்3நிப்4ராந்த்யா ஸ க2த்3யோதம் ஶீதத்ராணாய ஸேவதே” என்று – யாவனொருவன் வாஸுதே3வனை ஒழிய வேறோரிடத்திலே மோக்ஷத்தை ப்ரார்த்தி2க்கிறான், அல்ப பு3த்3தி4யான அவன், குளிர்போகைக்காக அக்3நி என்கிற ப்4ராந்தியாலே மின்மினியை ஸேவிக்கிறான் என்றும், “யஸ்து நாராயணம் தே3வம் ஸாமாந்யேநாபி4 மந்யதே । ஸ யாதி நரகம் கோ4ரம் யாவச்சந்த்3ரதி3வாகரம்” என்று – யாவனொருவன் ஶ்ரிய:பதியான நாராயணனை தே3வதாந்தரங்களோடொக்க ப்ரதிபத்திபண்ணுகிறான், அவன் சந்த்3ராதி3த்யர்களுள்ளவளவும் கோ4ரமான நரகத்தை அடையாநின்றான் என்றும் சொன்னார்கள். ஆகையாலே ஶேஷித்வம் ப43வானுக்கே அஸாதா4ரணமென்றும், ஶேஷத்வம் அநந்யார்ஹமென்றும் ப்ரதிபாதி3க்கிற அவதா4ரணார்த்த2மாகிற நிபாத மானது ஶேஷஶேஷிகளுடைய ப்ருத2க்ஸித்34யநர்ஹமான ஶரீராத்மபா4வத்தையும் காட்டிற்றாய்த்து. “அவதா4ரணம் ஆத்மஶரீரபா4வபரம்” என்று ஸோமாசியாண்டானும் பணித்தான். 40

अथ अनन्यार्हशेषत्वधर्मस्यऽऽश्रयविशेषो व्यञ्जनरूपेण मकारेण प्रतिपाद्यते । तथाहि “भूतानि च कवर्गेण चवर्गेणेन्द्रियाणि च । टवर्गेण तवर्गेण ज्ञानगन्धादयस्तथा ॥ मनःपकारेणैवोक्तं फकारेण त्वहङ्कृतिः । बकारेण भकारेण महान् प्रकृतिरुच्यते ॥ आत्मा तु स मकारेण पञ्चविंश: प्रकीर्तित: ।” (पाद्मोत्तरे 226-25), “पञ्चार्णानां तु पञ्चानां वर्गाणां परमेश्वर: ।” संस्थितः कादिमान्तानां तत्त्वात्मत्वेन सर्वदा॥” (भा.शा.) इति ककारादिभकारान्तचतुर्विंशत्यक्षरवाच्यतया पृथिव्यादिप्रकृत्यन्तं चतुर्विंशतितत्त्वजातमुक्त्वा पञ्चविंशाक्षरेण मकारेण “पञ्चविंशोयं पुरुषः” (याजुषि), “पञ्चविंश आत्मा भवति” इति पञ्चविंशकतत्त्वतया श्रुतिसिद्ध आत्माभिधीयत इति । अनेन – आत्मनः प्रकृतेः परत्वं प्रतिपादितम् । 41
 

அநந்தரம் அநந்யார்ஹமான ஶேஷத்வத4ர்மத்துக்கு ப்ரதிஸம்ப3ந்தி4யோபாதி ஆஶ்ரயம் அபேக்ஷிதமாகையாலே அநுக்தமான ஆஶ்ரயத்தை வ்யஞ்ஜநரூபமான மகாரம் சொல்லுகிறது. எங்ஙனே என்னில் – “பூ4தாநி ச கவர்கே3ண சவர்கே3ணேந்த்3ரியாணி ச । டவர்கே3ண தவர்கே3ண ஜ்ஞாநக3ந்தா43யஸ்ததா2 । மந: பகாரேணைவோக்தம் ப2காரேண த்வஹங்க்ருதி: । ப3காரேண ப4காரேண மஹாந் ப்ரக்ருதிருச்யதே । ஆத்மா து ஸ மகாரேண பஞ்சவிம்ஶ: ப்ரகீர்த்தித:” என்று – கவர்க்க3த்தாலே ப்ருதி2வ்யாதி3பூ4தங்களும், சவர்க்க3த்தாலே வாகா3தி3 கர்மேந்த்3ரியங்களும், டவர்க்க3த்தாலே ஶ்ரோத்ராதி3 ஜ்ஞாநேந்த்3ரியங்களும், தவர்க்க3த்தாலே க3ந்தா4தி3 விஷயங்களும், பகாரத்தாலே மநஸ்ஸும், ப2காரத்தாலே அஹங்காரமும், ப3காரத்தாலும் ப4காரத்தாலும் மஹானும், ப்ரக்ருதியும் சொல்லப்பட்டது, மகாரத்தாலே பஞ்சவிம்ஶகனான ஆத்மா சொல்லப்பட்டானென்றும், “பஞ்சார்ணாநாம் து பஞ்சாநாம் வர்க்கா3ணாம் பரமேஶ்வர: । ஸம்ஸ்தி2த: காதி3 மாந்தாநாம் தத்த்வாத் மத்வேந ஸர்வதா3” என்று – கவ்வை ஆதி3யாகவும், மவ்வை அந்தமாகவும் உடைத்தான ஐயைந்தெழுத்தான ஐந்து வர்க்க3ங்களினுடைய தத்வங்களிருபத்தைந்துக்கும் அந்தராத்மாவாய்க்கொண்டு ஸர்வேஶ்வரன் எப்போதும் நின்றானென்றும் ப43வச்சா2ஸ்த்ரத்திலே சொல்லுகையாலே, ககாராதி34காராந்தமான இருபத்துநாலக்ஷரமும் ப்ருதி2வ்யாதி3 ப்ரக்ருத்யந்தமான இருபத்துநாலு தத்வத்துக்கும் வாசகமாய், இருபத்தைந்தாம் அக்ஷரமான மகாரம் இருபத்தைந்தாம் தத்வமான ஆத்மாவைச்சொல்லுகிறது என்றதாய்த்து. “பஞ்சவிம்ஶேயாயம் புருஷ:” என்று – இப்புருஷன் பஞ்சவிம்ஶயனாயிருக்குமென்றும், “பஞ்சவிம்ஶ ஆத்மா ப4வதி” என்று – ஆத்மா பஞ்சவிம்ஶனாகாநின்றானென்றும், ஶ்ருதி இந்த ஆத்மாவை இருபத்தைந்தாமவனாகச்சொல்லாநின்றதிறே. இந்த அக்ஷரஸ்வபா4வத்தாலே ஆத்மாவினுடைய ப்ரக்ருதே: பரத்வம் சொல்லப்பட்டது. 41

“मन ज्ञाने”(दिवा.) इति ज्ञानवाचिधातोः कर्तरि ड्विच् प्रत्ययान्तस्य टिलोपं कृत्वा प्रत्ययांशस्य सर्वलोपे कृते व्यञ्जनरूपस्य मकारस्य ज्ञातृस्वरूपवाचित्वं सम्पद्यते । (*) 42

“மந – ஜ்ஞாநே” என்கிற ஜ்ஞாநவாசி தா4துவின் மேலே கர்த்தரி “ட்3விச்” ப்ரத்யயத்தைப் பண்ணி, ‘டே:” என்று – மன்னில் அன்னுக்கு லோபமாய் பரத்யயாம்ஶத்துக்கு ஸர்வலோபம் பண்ணி உள்ளவிடத்தில் வ்யஞ்ஜநரூபமான மகாரத்துக்கு ஜ்ஞாத்ரு ஸ்வரூபவாசித்வம் உண்டாம்.


एतेन “स्वयं ज्योतिर्भवति” (बृ.उ.6-3-9), “ज्योतिरहमस्मि” (तै.ना.1-14), “विज्ञानघन एव प्रज्ञानघन एव” (बृ.उ.4-4-12), “विज्ञानं यज्ञं तनुते” (तै.आ. 5), “विज्ञातारमरे केन विजानीयात्” (बृ.उ.4-4-14), “जानात्येवायं पुरुष:”, “न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यते” (बृ.उ.6-3-30), “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” , “निर्वाणमय एवायमात्मा ज्ञानमयोऽमल:” (वि.पु.6-7-22), “एतद्यो वेत्ति तं प्राहु: क्षेत्रज्ञ इति तद्विद:” (गी.13-2), “तद्गुणसारत्वात्तु तद्व्यपदेश: प्राज्ञवत्” (शा.मी.2-329), “ज्ञोऽत एव” (शा.मी.2-3-19) इत्यादिश्रुतिस्मृतिसू्रसिद्धमात्मन: शेषत्वाश्रयस्य प्रकृते: परस्य स्वयंप्रकाशज्ञानस्वरूपत्वं नित्यज्ञानादिगुणकत्वं च प्रतिपादितं भवति । 43

இத்தால் – “ஸ்வயம் ஜ்யோதிர்ப4வதி” என்று – ஸ்வயம்ப்ரகாஶனாகாநின்றானென்றும், “ஜ்யோதிரஹமஸ்மி” என்று – நான் ஜ்யோதிஸ்ஸ்வரூபனாகாநின்றேனென்றும், “விஜ்ஞாநக4ந ஏவ ப்ரஜ்ஞாநக4ந ஏவ” என்று – விலக்ஷணமான ஜ்ஞாநத்தை ஸ்வரூபமாகவுடையன், ப்ரக்ருஷ்டமான ஆநந்த3ரூபஜ்ஞாநத்தை ஸ்வரூபமாக உடையனென்றும், “விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே” என்று – விஜ்ஞாநஶப்33வாச்யன் யஜ்ஞத்தைப் பண்ணாநின்றானென்றும், “விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்” என்று ஜ்ஞாநகு3ணகனானவனை எத்தாலே அறிவானென்றும், “ஜாநாத்யேவாயம் புருஷ:” என்று – இந்த புருஷன் அறிவையுடையனாயே ஆகாநின்றானென்றும், “ந ஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர்விபரிலோபோ வித்3யதே” என்று – விஜ்ஞாதாவினுடைய விஜ்ஞாநத்துக்கு விநாஶமில்லையென்றும், “ந ஹி த்3ரஷ்டுர்த்3ருஷ்டேர் விபரிலோபோவித்3யதே” என்று – த்3ரஷ்டாவினுடைய த்3ருஷ்டிக்கு விநாஶமில்லை என்றும் ஶ்ருதிகளும், “நிர்வாணமய ஏவாயமாத்மா ஜ்ஞாநமயோமல:” என்று – இந்த ஆத்மாவானவன் நிர்மலனாய், ஜ்ஞாநவானாய், ஆநந்த3மயனாயே இருக்குமென்றும், “ஏதத்3யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்3வித3:” என்று – இந்த ஶரீரமாகிற க்ஷேத்ரத்தை த4ர்மபூ4தஜ்ஞாநத்தாலே யாவனொருவன் அபரோக்ஷித்திருக்கிறான், அவனை ஆத்மவித்துக்கள் க்ஷேத்ரஜ்ஞனென்று சொல்லாநின்றார்களென்றும் வேதா3ர்த்த2 விஶதீ3கரணப்ரவ்ருத்தமான ஸ்ம்ருதிபுராணங்களும், “தத்3கு3ணஸாரத்வாத்து தத்3வ்யபதே3ஶ: ப்ராஜ்ஞவத்” என்று – ஈஶ்வரனுக்கு ஆநந்த3 கு3ணஸாரனாகையாலே ஆநந்த3வ்யபதேஶம் போலே ஆத்மாவுக்கும் ஜ்ஞாநகு3ணஸாரனாகையாலே ஜ்ஞாநவ்யபதே3ஶமென்றும், “ஜ்ஞோத ஏவ” என்று ஶ்ருதி ஜ்ஞாதாவாகச் சொல்லுகையாலே ஆத்மா ஜ்ஞாதாவாயிருக்குமென்றும் வேதா3ந்தஸூத்ரங்களிலும் சொல்லப்படுகையாலே, ஶேஷத்வாஶ்ரயபூ4தனாய், ப்ரக்ருதே: பரனான ஆத்மாவினுடைய ஸ்வயம்ப்ரகாஶஜ்ஞாநஸ்வரூபத்வமும் நித்யஜ்ஞாநாதி3கு3ணகத்வமும் சொல்லப்பட்டதாய்த்து. 43

अत एवास्याहमर्थत्वञ्चोक्तम् । तथाहि- “अहमर्थो न चेदात्मा प्रत्यक्त्वं नात्मनो भवेत् । अहम्बुद्धया परागर्थात् प्रत्यगर्थो हि भिद्यते ।।” (श्रीभाष्ये जिज्ञा. ) इत्यात्मनः परागर्थव्यावर्तकमहम्बुद्धिबोध्यत्वम्, अन्यथा अस्य स्वसंवेद्यत्वमपि न सिध्येदित्युपपादनात्, ज्ञातुरात्मनः स्वयंप्रकाशस्य सर्वावस्थायामप्यहमर्थत्वमवश्याभ्युपगमनीयमेव । “अहमन्नम्” (तै. भृ. 10-6) इत्यादिषु मोक्षदशायामप्यहंव्यवहारविषयत्वदर्शनात् । अत एव हि “अकारार्थायैव स्वमहम्” (अष्टश्लो.3) इत्याचार्योक्तिः। 44

இந்த ஜ்ஞாத்ருத்வஸாமர்த்2யத்தாலே இவனுடைய அஹமர்த்த2த்வமும் சொல்லப்பட்டது. எங்ஙனே என்னில், “அஹமர்த்தோ2 ந சேதா3த்மா ப்ரத்யக்த்வம் நாத்மநோ ப4வேத் । அஹம்பு3த்3த்4யா பராக3ர்த்தா2த் ப்ரத்யக3ர்த்தோ2 ஹி பி4த்3யதே” என்று – ஆத்மா அஹமர்த்த2மன்றாகில், ஆத்மாவுக்கு ஸ்வயம்ப்ரகாஶத்வரூபமான ப்ரத்யக்த்வமின்றியிலே ஒழியும்: அஹம்பு3த்3தி4யாலேயன்றோ பா3ஹ்யமான பராக3ர்த்த2ங்களிற்காட்டில் ஆந்தரமான ப்ரத்யக3ர்த்த2ம் வேறாக அறியப்படுகிறது என்கிற பூர்வாசார்யவசநத்தாலே ஆத்மாவுக்கு பராக3ர்த்த2வ்யாவர்த்தகமான ஸ்வரூபம் அஹம்பு3த்3தி4 போ3த்4யத்வம், அல்லாதபோது இவனுடைய ஸ்வஸம்வேத்3யத்வமும் ஸித்3தி4யாது. ஆகையாலே ஸ்வயம்ப்ரகாஶனாய் ஜ்ஞாதாவான ஆத்மாவுக்கு ஸர்வாவஸ்தை2யிலும் அஹமர்த்த2த்வம் அவஶ்யம் கொள்ளவேணும். “அஹமந்நம்” என்று இது முதலான வாக்யங்களிலே மோக்ஷத3ஶையிலும் அஹம்ஶப்33விஷயத்வம் கண்டோமிறே. ஆகையன்றோ, “அகாரார்த்தா2யைவ ஸ்வமஹம்” என்று – அகாரார்த்த2 பூ4தனான ஈஶ்வரனுக்கே ஶேஷபூ4தன் நானென்று மகாரார்த்த2த்தை அஹம்ஶப்33த்தாலே ப4ட்டரருளிச்செய்தது. 44

अहमर्थस्यात्मनः सर्वदा सर्वेषामनुकूलत्वात् “अनुकूलं सुखम्”, “प्रतिकूलं दुःखम्” (वे.सं.) इति सुखदुःखलक्षणत्वाच्च आत्मनः आनन्दरूपत्वमप्यत्र प्रदर्शितम् । 45

இன்னமும் அஹமர்த்த2பூ4தனான இவ்வாத்மா எப்போதும் எல்லார்க்கும் அநுகூலனாய்த் தோன்றுகையாலும், அநுகூலமானது ஸுக2ம், ப்ரதிகூலமானது து3:க2மென்று ஸுக2து3:க2ங்களுக்கு லக்ஷணமாகையாலும், அநுகூலதயா ப்ரகாஶிக்கிற இந்த ஆத்மா ஆநந்த3ரூபனென்னுமிடமும் சொல்லிற்றாய்த்து. 45

अस्य मकारस्य “हल् ङ्याब्भ्यो दीर्घात्” (पा.सू.6-1-68) इति सूत्रलुप्तप्रथमैकवचनस्य जात्यभिप्रायतया चेतनानां बहुत्वमप्यत्र विवक्षितम् । “ नित्यो नित्यानां चेतनश्चेतनानां एको बहूनां यो विदधाति कामान्” (कठ.2-5-13) इत्यात्मानं बहुत्वश्रुते:।एवं “देहेन्द्रियमन: प्राणधीभ्योऽन्योऽनन्यसाधन:।नित्यो व्यापी प्रतिक्षेत्रमात्मा भिन्नः स्वतस्सुखी ॥” (आत्मसिद्धौ) इत्युक्तप्रकारमात्मस्वरूपं प्रतिपादितं भवति।  46

இப்பத3த்தில் “ஹல்ங்யாப்3ப்4யோ தீ4ர்கா3த்” என்று முதலான ஸூத்ரத்தாலே லோபித்துக்கிடக்கிற ப்ரத2மைகவசநம் ஜாத்யேகவசநமாகையாலே ஆத்மாக்களினுடைய ப3ஹுத்வமும் இவ்விடத்திலே சொல்லப்பட்டது. “நித்யோ நித்யாநாம் சேதநஶ்சேதநாநா மேகோ ப3ஹூநாம் யோ வித3தா4தி காமாந்” என்று – நித்யராய் சைதந்யகு3ணகராய் ப3ஹுக்களான ஆத்மாக்களுக்கு, நித்யனாய் சைதந்யகு3ணகனாய் அத்3விதீயனான ஸர்வேஶ்வரன் அபி4மதங்களைக்கொடுப்பானென்கையாலே, ஈஶிதவ்யர்களான சேதநர்களுடைய ப3ஹுத்வத்தை ஶ்ருதி சொல்லிற்றிறே. இப்படி “தே3ஹேந்த்3ரியமந:ப்ராணதீ4ப்4யோऽந்யோऽநந்யஸாத4ந: । நித்யோ வ்யாபீ ப்ரதி– க்ஷேத்ரமாத்மா பி4ந்ந: ஸ்வதஸ்ஸுகீ2” என்று – தே3ஹம், இந்த்3ரியம், மநஸ்ஸு, ப்ராணன், பு3த்3தி4 என்கிற இவற்றுக்கு அவ்வருகுபட்டு ஸ்வயம்ப்ரகாஶனாய் நித்யனாய், ஸ்வவ்யாப்யமான அசித்துக்களிலே வ்யாபிக்கைக்கு யோக்3யனாய், ப்ரதிஶரீரம் பி4ந்நனான ஆத்மா ஸ்வாபா4விகஸுகை2கநிரூபணீயனாயிருக்குமென்று ஆளவந்தார் அருளிச்செய்தபடியே, ஆத்மாவினுடைய ஸ்வரூபமானது இவ்விடத்திலே ப்ரதிபாதி3க்கப்பட்டது. 46

किञ्च – अस्य मकारस्य “माङ् माने”(जुहो.) इति धातोर्व्युत्पत्त्या परिमाणाश्रयत्वसिद्धेः, “ एषोऽणुरात्मा चेतसा वेदितव्यः” (मु.उ.3-1-9) “ वालाग्रशतभागस्य शतधा कल्पितस्य च । भागो जीवस्स विज्ञेयः स चानन्त्याय कल्पते॥” (श्वेता) “आराग्रमात्रोप्यवरो हि दृष्ट:” (श्वेता) इत्यादिश्रुतिसिद्धमात्मानो अणुपरिमाणमप्युक्तम् भवति। उक्तं भगवच्छास्त्रे च “ स्वरूपमणुमात्रं स्यात् ज्ञानानन्दैक लक्षणम् ” (विश्वक्सेनसं) “त्रसरेणुप्रमाणास्ते रश्मिकोटिविभूषिता:” (भ.शा.) इति।एवं शेषत्वाश्रयस्याणुपरिमाणस्याऽऽत्मनः सर्वप्रकारवैलक्षण्यं प्रतिपादितम् । 47

அதுக்குமேலே, இந்த மகாரம், “மாங் – மாநே”  என்கிற தா4துவிலே வ்யுத்பந்நமாயிருக்கையாலே, பரிமாணாஶ்ரயத்வம் ஸித்3தி4க்கையாலே, “ஏஷோணுராத்மா சேதஸா வேதி3தவ்ய:” என்று – இந்த ஆத்மாவானவன் அணுவாக நெஞ்சாலே அறியப்படுமென்றும், “வாலாக்3ர ஶதபா43ஸ்ய ஶததா4 கல்பிதஸ்ய ச । பா4கோ3 ஜீவஸ்ஸ விஜ்ஞேயஸ்ஸ சாநந்த்யாய கல்பதே” என்று – நெல்வாலினுடைய நுனியை நூறு கூறிட்டு ஒருகூற்றை நூறுபடியாகப் பிரித்து அதிலே ஒருகூறாக ஜீவன் அறியப்படும், அவன் முக்தத3ஶையில் கு3ணாவிர்பா4வத்தாலே அபரிச்சி2ந்நஸ்வபா4வனாகாநிற்கும் என்றும், “ஆராக்3ரமாத்ரோப்யவரோ ஹி த்3ருஷ்ட:” என்று – வாலின் முனையின் நுனிபோலே அணுமாத்ரனாகையாலே ஸூக்ஷ்மபூ4தனான ஆத்மாவும் ப்ரத்யக்ஷிக்கப்பட்டானென்றும் ஶ்ருதிகளிலே சொல்லப்பட்ட அணுபரிமாணமும், ஆத்மாவுக்கிங்கே சொல்லிற்றாய்த்து. ப43வச்சா2ஸ்த்ரத்திலும் “ஸ்வரூபமணுமாத்ரம் ஸ்யாத் ஜ்ஞாநாநந்தை3கலக்ஷணம்” என்று – ஜ்ஞாநாநந்தை3கலக்ஷணமான ஆத்மஸ்வரூபம் அணுமாத்ரமாயிருக்குமென்றும், “த்ரஸரேணுப்ரமாணாஸ்தே ரஶ்மிகோடிவிபூ4ஷிதா:” என்று – ஜாலகரந்த்4ரத்தில் பறக்கிற பொடிகள்போலே அணுப்ரமாணரான முக்தாத்மாக்கள் அபரிச்சி2ந்நஜ்ஞாநாதி3 கு3ணப்ரபை4யாலே அலங்க்ருதராயிருப்பர் என்று சொல்லிற்றாய்த்து. இப்படி ஶேஷத்வாஶ்ரயமாய் அணுபரிமாணமான ஆத்மாவினுடைய ஸர்வப்ரகாரவைலக்ஷண்யம் ப்ரதிபாதி3க்கப்பட்டதாய்த்து. 47

“क्षरं प्रधानममृताक्षरं हर:।क्षरात्मानाविशते देव एक:।” (श्वेता), “प्रधानक्षेत्रज्ञपतिर्गुणेश:” (श्वेता.6) इति चेतनवदचेतनस्यापीश्वरशेषत्वश्रवणात् भोगमोक्षभाक्त्वप्राधान्ययुक्तचेतनवाचिनानेन मकारेणास्य भोग्यभोगोपकरणभोगस्थानरूपेण नित्यपरार्थोऽचित्पदार्थोऽपि सङ्गृह्यते । 48

“க்ஷரம் ப்ரதா4 நமம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மாநாவீஶதே தே3வ ஏக:” என்று பரிணாமியாகையாலே க்ஷரஶப்33வாச்யமாய் ப்ரதா4நகாரணமான மூலப்ரக்ருதியும், நித்யனாய், அபரிணாமியாகையாலே அம்ருதனென்றும், அக்ஷரமென்றும் சொல்லப்பட்டவனாய், விஷயங்களை போ4க்3யத்வேந ஹரிக்கையாலே ஹரனென்று சொல்லப்பட்ட ஆத்மாவுமாகிற சேதநாசேதநங்களிரண்டையும் உஜ்ஜ்வலஸ்வபா4வனாய் இருப்பானொருவன் நியமியாநின்றானென்றும், “ப்ரதா4நக்ஷேத்ரஜ்ஞபதிர்கு3ணேஶ:” என்று – ப்ரதா4நஶப்33வாச்யமான அசேதநத்துக்கும், க்ஷேத்ரஜ்ஞனென்கிற ஆத்மாவுக்கும் ஶேஷியாயிருக்கும் கு3ணங்களுக்கும் நியாமகனான ஸர்வேஶ்வரனென்றும், சேதநனோபாதி அசேதநமும் ஈஶ்வரஶேஷமாகச்சொல்லுகையாலே, போ43மோக்ஷங்களிலே அதி4க்ருதனான ப்ராதா4ந்யத்தையுடைய சேதநனைச்சொல்லுகிற இம்மகாரத்தாலே அவனுக்கு போ4க்3ய போ4கோ3பகரண போ43ஸ்தா2நரூபமாய்க்கொண்டு நித்யபரார்த்த2மான அசித்பதா3ர்த்த2மும் லக்ஷிக்கப்படுகிறது. 48

ननु अयमेवोपदेशक्रमः, यत् प्रथममात्मनः प्रकृतिवैलक्षण्यं प्रतिपाद्यानन्तरमेव शेषत्वप्रतिपादनमिति चेदुच्यते- आत्मनः प्रकृतेः परत्वादेरपि प्रधानाकारतया ज्ञातव्यं भगवच्छेषत्वमेव; तस्यैवात्मोज्जीवनहेतुतया ज्ञातव्यत्वविधानात् । “ स्वोज्जीवनेच्छा यदि ते स्वसत्तायां स्पृहा यदि । आत्मदास्यं हरेः स्वाम्यं स्वभावं च सदा स्मर।” इति । 49

இவ்விடத்திலே, தே3ஹாத்மாபி4மாநியான சேதநனுக்கு ஆத்மஸ்வரூபத்தினுடைய ப்ரக்ருதே: பரத்வத்தை முதல் உபதே3ஶித்து, அநந்தரம் ப43வச்சே2ஷத்வத்தை உபதே3ஶிக்கையன்றோ க்ரமம், அங்ஙனன்றிக்கே ப்ரத2மத்திலே ப43வச்சே2ஷத்வத்தை உபதே3ஶிப்பானென் என்னில் – ஆத்மாவினுடைய ப்ரக்ருதே: பரத்வாதி3யிற்காட்டிலும் ஆத்மோஜ்ஜீவநஹேதுவாகையாலே ப்ரதா4நாகாரதயா ஜ்ஞாதவ்யம் ப43வச்சே2ஷத்வமே, எங்ஙனே என்னில் – “ஸ்வோஜ்ஜீவநேச்சா2 யதி3 தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி3 । ஆத்மதா3ஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபா4வஞ்ச ஸதா3 ஸ்மர” என்று – உன்னுடைய உஜ்ஜீவநத்தில் உனக்கு ஆஶையுண்டாகிலும் உன் ஸத்தைதான் அழியாமல் கிடக்கவேணுமென்று ஆசை உண்டாகிலும் ஆத்மாவினுடைய  தா3ஸ்யத்தையும், ஹரியினுடைய ஸ்வாம்யத்தையும் எப்போதும் ஸ்வபா4வமாக நினை என்கையாலே, ஆத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வாபா4விகாகாரமென்று விதி4த்ததிறே. 49

अयमेव जीवपरयोस्सम्बन्धः । “ स्वत्वमात्मनि सञ्जातं स्वामित्वं ब्रह्मणि स्थितम् । उभयोरेष सम्बन्धो न परोऽभिमतो मम ॥” इति वचनात् । तदिदमुच्यते – “ दासभूतास्स्वतस्सर्वे ह्यात्मानः परमात्मन: । नान्यथा लक्षणं तेषां बन्धे मोक्षे तथैव च ॥” (पाञ्च) इति । 50

இதுவேயிறே ஜீவபரர்களுக்கு ஸம்ப3ந்த4ம். “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்3ரஹ்மணி ஸ்தி2தம் । உப4யோரேஷ ஸம்ப3ந்தோ4 ந பரோபி4 மதோ மம” என்று -ஸ்வத்வமாவது ஆத்மாவின்பக்கலிலே உண்டாமது, ஸ்வாமித்வமாவது ப்3ரஹ்மத்தின் பக்கலிலே நிற்குமது, இருவர்க்கும் இந்த ஶேஷஶேஷிபா4வமே ஸம்ப3ந்த4ம் வேறொன்றுமில்லை எனக்கு அபி4மதமென்கையாலே. இதுதன்னை ப43வச்சா2ஸ்த்ரத்திலே “தா3ஸபூ4தா: ஸ்வதஸ்ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: । நாந்யதா2 லக்ஷணம் தேஷாம் ப3ந்தே4 மோக்ஷே ததை2வ ச”  என்று – எல்லா ஆத்மாக்களும் பரமாத்மாவுக்கு ஸ்வதோதா3ஸபூ4தராயிருப்பார்கள், ப3த்3தா4வஸ்தை2யிலும், முக்தாவஸ்தை2யிலும் அவர்களுக்கு இதொழிய வேறடையாளமில்லை என்றும் சொல்லிற்று. 50

अत एव श्रूयते- “योऽहमस्मि स सन्यजे” (या.आ. 3-7) इति।शरीरेन्द्रियादिषु यदाकारोऽहमस्मि तदाकार एव सन् दास्यानुसन्धानरूपात्मसमर्पणाकारहविःप्रदानेन यजनं करोमीत्यर्थः । तथा च यामुनाचार्यैः “ वपुरादिषु योऽपि कोऽपि वा गुणतोऽसानि यथातथाविधः । तदयं तव पादपद्मयोरहमद्यैव मया समर्पितः॥” (स्तो.र.52), “ नियतस्वमिति प्रबुद्धधीः” (स्तो.र.53) इति शेषत्वस्य नित्यस्वभावत्वमुक्त्वा, “ तव शेषत्वविभवाद्बहिर्भूतं – आत्मानञ्च – न सहे”  ( स्तो. र. 67 ) इति तद्व्यतिरेके देहादिवदात्मनोऽप्यसह्यत्वञ्चाप्युक्तम् । तस्मादात्मनोऽसाधारणाकारं भगवच्छेषत्वमेव प्रधानतया प्रथममेव निरूपणीयम्, अनन्तरं तदाश्रयशोधनमुक्तम् । यत इदमेव स्वरूपयाथात्म्यं स्वोज्जीवनाय ज्ञातव्यम्, तत एव यथावस्थितात्मस्वरूपान्यथाप्रतिपत्तिरूपस्याऽऽत्मापहारस्य सर्वपाप- मूलत्वमुक्तम्, “ योऽन्यथा सन्तमात्मानमन्यथा प्रतिपद्यते । किं तेन न कृतं पापं चोरेणात्मापहारिणा ॥” (भा.आदि. 7-4-28,शकुन्तलावचनम्) इति ।       51

ஆகையாலே ஶ்ருதியிலும் “ யோஹமஸ்மி ஸ ஸந்யஜே” என்று – ஶரீரேந்த்3ரியாதி3களில் யாதொரு ஆகாரத்தையுடையனாயிருக்கிறேன், அந்த நான் அந்த நிலையை உடையேனாகாநின்றுகொண்டு தா3ஸ்யாநுஸந்தா4நரூபமான ஆத்மஸமர்ப்பணாகாரமாயுள்ள ஹவிஸ்ஸைக் கொடுக்கையாலே யஜநத்தைப்பண்ணுகிறேனென்று சொல்லிற்று. இப்படி ஆளவந்தாரும் “வபுராதி3ஷு யோபி கோபி வா கு3ணதோஸாநி யதா2ததா2வித:4 । தத3யம் தவ பாத3பத்3மயோரஹமத்3யைவ மயா ஸமர்ப்பித:” என்று – ஶரீரம் இந்த்3ரியம் மநஸ்ஸு இது தொடக்கமானவற்றிலே ஏதேனுமொருவனாகவுமாம், கு3ணங்களால் ஏதேனுமொருபடிப்பட்டிருப்பேனாகவுமாம், ஸ்வரூபநிஷ்கர்ஷத்திலும் ஒரு தாத்பர்யமில்லை, இந்த நான் உன் திருவடித்தாமரைகளிலே இப்போதே என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டேனென்றும், “நியதஸ்வமிதி ப்ரபு3த்34தீ4:” என்று – ஶேஷத்வம் நித்யஸ்வபா4வமென்றும் சொல்லி, “தவ ஶேஷத்வவிப4வாத் ப3ஹிர்பூ4தம் – ஆத்மாநஞ்ச – ந ஸஹே” என்று – உன்னுடைய ஶேஷத்வத்துக்குப் புறம்பானால் தே3ஹாதி3களோபாதி3 ஆத்மாதன்னையும் ஸஹிக்கிறிலேனென்றும் அருளிச்செய்தார். ஆகையாலே, ஆத்மாவினுடைய அஸாதா4ரணாகாரமான ப43வச்சே2ஷத்வம் ப்ரத2மத்திலே நிரூபணீயம்; அநந்தரம் அந்த ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயஶோத4நம் பண்ணுகை ப்ராப்தம். இந்த ஸ்வரூபயாதா2த்ம்யமே தன்னுடைய உஜ்ஜீவநார்த்த2மாக ஜ்ஞாதவ்யம்; ஆகையாலே யதா2வஸ்தி2தமான ஆத்மஸ்வரூபத்தினுடைய அந்யதா2 ப்ரதிபத்திரூபமான ஆத்மாபஹாரம் ஸர்வபாபமூலமாகச் சொல்லப்பட்டதிறே. “யோந்யதா2 ஸந்தமாத்மாநமந்யதா2 ப்ரதிபத்3யதே । கிந்தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா” என்று – யாவனொருவன் தன் ப்ரதிபத்திப்ரகாரமின்றியிலே ப்ரகாராந்தரமாய் யதா2வஸ்தி2தமாகா நிற்கிற ஆத்மாவை அதின்படியின்றியிலே மற்றைப்படியாக ப்ரதிபத்தி பண்ணுகிறான், ஆத்மாபஹாரியாய்க்- என்கையாலே எல்லா பாபமும் பண்ணப்பட்டதாகச் சொல்லிற்றாய்த்து. 51

एवंरूपात्मापहारप्रायश्चित्तञ्च “ यमो वैवस्वतो राजा यस्तवैष हृदि स्थितः । तेन चेदविवादस्ते मा गङ्गां मा कुरून् गम:”  (मनु.6-92) इत्युक्तम् । अयमर्थ: यम: प्रशासिता, “आत्मानमन्तरो यमयति” (बृ.उ.) इति श्रवणात् ; वैवस्वतः – सवितृमण्डलमध्यवर्ती, राजा – पुण्डरीकाक्षत्वपीताम्बरत्वादिभिरीश्वरत्वचिह्वैर्विराजमानः, यः – “ य एषोऽन्तरादित्ये हिरण्मयः पुरुषो दृश्यते” (छा.उ.1-6-6) इति श्रुतिप्रसिद्धः । तवैष हृदि स्थितः – एवंभूतस्तवान्तरात्मतया स्थितः ; “ स यश्चायं पुरुषे। यश्चासावादित्ये।स एक: ।” (तै.भृ.10-4) इति श्रुते:। तेन उक्तस्वभावयुक्तेन सर्वेश्वरेण, अविवाद: – तत्स्वरूपविरुद्धस्वातन्त्र्याभिमानविरहः, चेत् इदमविवादरूपं शेषत्वज्ञानं दुर्लभमिति भावः । मा गङ्गां मा कुरून् गमः – एतज्ज्ञाने सति पापक्षयार्थं पुण्यतीर्थक्षेत्रादिगमनमनपेक्षितमित्यर्थ:।  52

இந்த பாபத்துக்கு ப்ராயஶ்சித்தம் – “ யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி3 ஸ்தி2த: । தேந சேத3விவாத3 ஸ்தே மா க3ங்காம் மா கு3ரூந் க3ம:॥”  என்று சொல்லப்பட்டது. அதாவது – “யம:” என்றது – “ ஆத்மாநமந்தரோ யமயதி” என்று – ஆத்மாவை உள்ளேநின்று நியமியாநின்றானென்று ஶ்ருதி சொல்லுகிறபடியே ப்ரஶாஸிதா என்றபடி. “வைவஸ்வத:” என்றது விவஸ்வத்ஸம்ப3ந்தி4, என்று ஸவித்ருமண்ட3லவர்த்தி என்றபடி. “ராஜா” என்றது – புண்ட3ரீகாக்ஷத்வாதி3களாகிற ஈஶ்வரத்வ சிஹ்நங்களாலே விளங்காநின்றுள்ள ஶேஷி என்றபடி. “ய:” என்றது – “ ய ஏஷோऽந்தராதி3த்யே ஹிரண்மய: புருஷோ த்3ருஶ்யதே” என்று – ஆதி3த்யமண்ட3லத்தின் நடுவே ஹிரண்யவர்ணனான இந்த புருஷன் யாவனொருவன் காணப்படுகிறான் என்கிற ஶ்ருதிஸித்34ன் என்றபடி. “ஏஷ தவ ஹ்ருதி3 ஸ்தி2த:” என்றது – இவனுடைய ஹ்ருத3யத்திலே நின்றானென்றபடி. அதாவது – “ஸ யஶ்சாயம் புருஷே। யஶ்சாஸாவாதி3த்யே । ஸ ஏக:” என்று – புருஷன்பக்கலிலே நிற்கிற அந்த இவன், யாவனொருவன் ஆதி3த்யன் பக்கலிலே நிற்கிறவனென்கிற ஶ்ருதிக்ரமத்திலே, கீழ் ஆதி3த்யமண்ட3லாந்தர்வர்த்தியாகச் சொல்லப்பட்டவன் உனக்கு அந்தராத்மதயா நின்றான் என்றதாய்த்து. “தேந” என்றது – கீழ்ச்சொன்ன ஸ்வபா4வங்களையுடைய அவனோடே என்றபடி. “அவிவாத3:” என்றது – விவாத3ம் தவிருகை; அதாவது அவனுடைய ஸ்வரூபத்துக்கு விருத்34மான ஸ்வாதந்த்ர்யாபி4மாநம் தவிருகை என்றபடி. எங்ஙனே என்னில் – அவனுடைய நியந்த்ருத்வத்தையும், உபாயத்வத்தையும், ஶேஷித்வத்தையும், அந்தராத்மத்வத்தையும் கண்டால் அதுக்கெதிராம்படி ஸ்வாதந்த்ர்யம் கொண்டாடாதே தன்னுடைய நியாம்யத்வத்தையும் உபாஸகத்வத்தையும், ஶேஷத்வத்தையும், ஶரீரத்வத்தையும் அநுஸந்தி4த்து அவனுடைய ஸ்வரூபோத்கர்ஷத்துக்கு “ஓம்” என்று இசைகை என்றதாய்த்து. “சேத்” என்றது – அந்த அவிவாத3ரூபமான ஶேஷத்வஜ்ஞாநம் து3ர்லப4மாயிருக்கும், அதுண்டாகில் அழகிது என்றபடி. “ மா க3ங்கா3ம் மா கு3ரூந் க3ம:” என்றது – இந்த ஶேஷத்வஜ்ஞாநம் உண்டாகில் பாபக்ஷயார்த்த2மாக புண்யதீர்த்த2மான க3ங்கை3யைப்பற்றப் போக வேண்டா; புண்யக்ஷேத்ரமான குருக்ஷேத்ரத்தைப்பற்றப்போக வேண்டா என்றபடி.  52


इदं प्रणवोदितज्ञानमेव यागादिसर्वपुण्यकर्मरूपम् ; “स सन्यजे” (यजु. आर. 3-7 ) इति यजनरूपत्वश्रवणात् । “ स्वभावदास्येन च योऽहमस्मि स सन् यजे ज्ञानमयैर्मखैस्तम्” इत्याचार्योक्तेश्च । देवतामुद्दिश्य द्रव्यत्यागो यागः ; तत्र निरुपाधिकदेवता – परमात्मा; निरुपाधिकं हविः – आत्मा ; निरुपाधिको यागः – आत्मसमर्पणम् ; निरुपाधिको मन्त्रः प्रणवः; निरुपाधिकफलम् -मोक्ष इति। “ओमिति ब्रह्म । ओमितीदं सर्वम्” (तै.शी. 8) इय्यारभ्य प्रणवस्य सर्वकर्मात्मकत्वञ्च श्रूयते। 53

இந்த ப்ரணவோதி3த ஶேஷத்வஜ்ஞாநமே யாகா3தி3யான ஸர்வபுண்யகர்மமும். “ஸ ஸந் யஜே” என்று யஜநரூபமாக ஶ்ருதி சொல்லுகையாலும், “ஸ்வபா4வதா3ஸ்யேந ச யோஹமஸ்மி ஸ ஸந் யஜே ஜ்ஞாநமயைர்மகை2ஸ்தம்” என்று – ஸ்வாபா4விகதா3ஸ்யத்தாலே நிரூபிதமான ஸ்வரூபத்தையுடையனாகாநின்ற நான், அந்த ஶேஷத்வஜ்ஞாநரூபமான யஜ்ஞங்களாலே ஶேஷியான அவனை யஜிக்கிறேனென்று ப4ட்டரும் இந்த ஶ்ருத்யர்த்த2த்தை அருளிச்செய்கையாலும், இது புண்யகர்மமாகக்குறையில்லை. ஒரு தே3வதையைக்குறித்து ஒரு த்3ரவ்யத்தைக்கொடுக்கையிறே யாக3மாவது. அதில் இங்குப்பார்த்தால், நிருபாதி4கமான தே3வதை பரமாத்மா, நிருபாதி4கமான ஹவிஸ்ஸு ஆத்மா, நிருபாதி4கமான த்யாக3ம் ஆத்மஸமர்ப்பணம், நிருபாதி4கமான மந்த்ரம் ப்ரணவம், நிருபாதி4கமான ப2லம் மோக்ஷமாயிருக்கும். அதுக்கு மேலே “ஓமிதி ப்3ரஹ்ம | ஓமிதீத3ம் ஸர்வம்” என்று – ப்ரணவத்தை ஸர்வகர்மாத்மகமாக ஶ்ருதி சொல்லிற்று. 53

इदं समर्पणानुसन्धानरूपं शेषत्वज्ञानमेव ज्ञातव्यतयोपदिश्यते । “ सर्वोपाधिविनिर्मुक्तं क्षेत्रज्ञं ब्रह्मणि न्यसेत् । एतद् ज्ञानं च ज्ञेयं च शेषोऽन्यो ग्रन्थविस्तरः ॥” इति । 54

இப்படி கர்மயோக3மாமளவுமன்றியிலே இச்சேதநனுக்கு ஜ்ஞாதவ்யமான ஜ்ஞாநயோக3மும் ஆத்மஸமர்ப்பணமே :- “ஸர்வோபாதி4விநிர்முக்தம் க்ஷேத்ரஜ்ஞம் ப்3ரஹ்மணி ந்யஸேத் । ஏதத்3ஜ்ஞாநஞ்ச ஜ்ஞேயஞ்ச ஶேஷோऽந்யோ க்3ரந்த2விஸ்தர:॥” என்று – தே3ஹாதி3ஸர்வோபாதி4களும் கழிந்த க்ஷேத்ரஜ்ஞனாகிற ஆத்மாவை, ஶேஷியான ப்3ரஹ்மத்தினிடத்திலே ஶேஷமாக அநுஸந்தி4த்து ஸமர்ப்பிப்பான், ஜ்ஞாநமாவதும் ஒருவனுக்கறிய வேண்டுவதும் இதுவே, அல்லாத மற்றுள்ளவை க்3ரந்த2ப்பரப்பாமத்தனை என்று ப்ரமாணமுண்டாகையாலே. 54

एतदेवोपासनात्मकज्ञानं च ; “ओमित्येतदक्षरमुद्रीथमुपासीत” (छा.उ. 1-1), “ओमित्यात्मानं ध्यायाथ” इत्यादिविधानात् । 55

இப்படி ஜ்ஞாநயோக3மாமளவன்றியே, உபாஸநாத்மகமான த்4யாநயோக3மும் இதுவே :- “ஓமித்யேதத3க்ஷரமுத்3கீ32முபாஸீத” என்று – “ஓம்” என்கிற மந்த்ரார்த்த2 ரூபமாக அக்ஷரமான இந்த உத்3கீ32த்தை உபாஸிப்பானென்றும்; “ ஓமித்யாத்மாநம் த்4யாயத2” என்று – ப்ரணவார்த்த2பூ4தனான பரமாத்மாவை த்4யாநம் பண்ணுங்கோள் என்றும் த்4யாநோபாஸநஶப்33முக2த்தாலே ப்ரணவார்த்த2ஜ்ஞாநத்தை ப4ஜநரூபமான ப4க்தியோக3மாகவும் சொல்லிற்றிறே. 55

निक्षेपापरपर्यायप्रपदनमप्येतदेव “ब्रह्मणे त्वा महस ओमित्यात्मानं युञ्जीत” (तै. ना. 51 ) इति नियोगात्। 56

அதுக்குமேலே, நிக்ஷேபமென்றும், ந்யாஸமென்றும் சொல்லப்படுகிற ப்ரபத3நமும் இந்த ப்ரணவஜ்ஞாநமே :- “ ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்று ப்ரணவமுக2த்தாலே ஸமர்ப்பணரூபமான ந்யாஸத்தைப்பண்ணுவானென்று விதி4யுண்டாகையாலே.   56

एवंरूपसाधनविशेषसाध्यं फलमपीदं स्वरूपयाथात्म्यमेव; “ परं ज्योतिरूपसंपद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते” (छा. उ. 8-12-2) इति परप्राप्तिपर्यन्तस्वरूपयाथात्म्याविर्भावो मोक्ष इति प्रतिपादनात् । “सम्पद्याविर्भाव: स्वेन शब्दात्” (शा. मी. 4-4-1) इति सूत्रितञ्च। 57

இப்படிப்பட்ட ஸாத4நவிஶேஷங்களாலே ஸாத்4யமான ப2லமும் ப்ரணவோக்தமான இந்த ஸ்வரூபயாதா2த்ம்யமே; “பரஞ்ஜ்யோதிரூபஸம்பத்3ய ஸ்வேநரூபேண அபி4நிஷ்பத்3யதே” என்று – பரஞ்ஜ்யோதிஶ் ஶப்33வாச்யமான ப்ராப்யஸ்வரூபத்தைக்கிட்டி ஸ்வரூபஸித்3தி4யையுடையனாமென்கையாலே, பரப்ராப்திபர்யந்தமான ஸ்வரூபாவிர்பா4வமே மோக்ஷமென்று சொல்லிற்றிறே. “ஸம்பத்3யாவிர்ப்பா4வ: ஸ்வேநஶப்3தா3த்” என்று – ப்3ரஹ்ம ப்ராப்திபர்யந்தமான ஸ்வரூபாவிர்ப்பா4வமே புருஷார்த்த2ம்; “ஸ்வேந ரூபேண” என்கிற ஶ்ருதி உண்டாகையாலேயென்று ஸூத்ரகாரரும் சொன்னார். 57

“अविभागेन दृष्टत्वात्” (शा.मी. 4-4-4) इति मोक्षदशायामविभागरूपमैक्यमप्येवंरूपापृथक्सिद्धसम्बन्धनिबन्धनम् ; तत्क्रतुन्यायात् फलस्य यथोपासनत्वात् । 58

“அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாத்” என்று மோக்ஷத3ஶையயிலும் ஜீவபரர்களுடைய அவிபா4கா3நுப4வம் உண்டாகக்கடவது, உபாஸநத3ஶையில் அப்படி த3ர்ஶிக்கையாலே என்று ஸூத்ரத்தில் சொல்லப்பட்ட அவிபா43ரூபமான ஐக்யமும் இந்த ப்ரணவோக்தமான அப்ருத2க்ஸித்34 ஸம்ப3ந்த4 மடியாயிருக்கும்; தத்க்ரதுந்யாயத்தாலே உபாஸநாநுரூபம் ப2லமாகையாலே. 58

उपासनमप्यपृथक्सिद्धसम्बन्धनिबन्धनात्म शरीरत्वसिद्धैक्यादहङ्ग्रहणरूपेणैव विधीयते; “ऐतदात्म्यमिदं सर्वं । तत्सत्यं । स आत्मा। तत्त्वमसि श्वेतकेतो ।” (छा.उ. 6-8-7), “ त्वं वा अहमस्मि भगवो देवते । अहं वै त्वमसि देवते।” “आत्मेत्येवोपासीत” (बृ.उ.3-4-7), “आत्मेत्येव तु गृह्णीयात् सर्वस्य तन्निष्पत्ते:” (वाक्यकार इति श्रीभाष्ये जि.) “आत्मेति तूपगच्छन्ति ग्राहयन्ति च” (शा.मी.4-1-3) इत्यादिभि:।   59

அவிபா4கா3நுப4வத்துக்கடியான உபாஸநமும் அப்ருத2க்ஸித்34 ஸம்ப3ந்த3மடியான ஆத்மஶரீபா4வத்தாலேயுண்டான ஐக்யத்தாலே அஹங்க்3ரஹணரூபத்தாலே விதி4க்கப்படாநின்றது:- “ஐததா3தா3த்ம்யமித3ம் ஸர்வம் தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ” என்று இந்த ஜக3த்தெல்லாம், இந்த ஸச்ச2ப்33 வாச்யவஸ்துவை ஆத்மாவாக; உடைத்தாயிருக்கும், ஆகையால் இந்த ஜக3த்துக்கு அவன் ஆத்மா, இந்த ஜக3த்து அவனுக்கு ஶரீரம், அது ஸத்யம், ஆதலால், ஶ்வேதகேதுவே! அந்த ஸச்ச2ப்33வாச்யமான காரணவஸ்துவே ‘த்வம்’ ஶப்33 வாச்யனான உனக்கு அந்தர்யாமியாகையால் அது நீ காணென்றும்; “த்வம் வா அஹமஸ்மி ப43வோ தே3வதே” என்று – ப43வச்ச2ப்33 வாச்யமான பரதே3வதையைப் பார்த்து, உனக்கு ப்ரகாரபூ4தனாகையாலே நான் நீயாகாநின்றேனென்று ப்3ரஹ்மப்ரகாரமான ஜீவோபாஸநத்தையும், “அஹம் வை த்வமஸி ப43வோ தே3வதே” என்று – எனக்கு அந்தராத்மாவாகையாலே நீ நானாகாநின்றாயென்று ஜீவப்ரகாரமான ப்3ரஹ்மோபாஸநத்தையும் சொல்லி, “ஆத்மேத்யேவோபாஸீத” என்று – ஆத்மாவாகவே உபாஸிப்பானென்று உபநிஷத்3 வாக்யங்களிலும், “ஆத்மேத்யேவ து க்3ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தந்நிஷ்பத்தே:” என்று – ஆத்மாவென்று ப்ரதிபத்தி பண்ணுவான், ஸர்வமும் தத3ர்த்த2மாகையாலேயென்றும், “ஆத்மேதி தூபக3ச்ச2ந்தி க்3ராஹயந்தி ச” என்று – ஆத்மாவென்றே உபாஸியாநிற்பார்கள், ஶ்ருதிகளும் அப்படியே காட்டாநின்றனவென்றும், சா2ந்தோ3க்2யவாக்யத்திலும் வேதா3ந்தஸூத்ரத்திலும் சொல்லப்படுகையாலே உபாஸநம் அஹங்க்3ரஹணரூபமாயிருக்குமென்றதாய்த்து.  59

“प्रणवो धनुश्शरो ह्यात्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते । अप्रमत्तेन वेद्धव्यं शरवत्तन्मयो भवेत् ॥”  इति वेधवेगलक्ष्यान्तर्भूतशरवदात्मनः ब्रह्मस्वरूपान्तर्भावेन तन्मयत्वरूपैक्यानुसन्धानं प्रणवप्रतिपादितमित्युच्यते । 60

“ப்ரணவோ த4நுஶ்ஶரோஹ்யாத்மா ப்3ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே । அப்ரமத்தேந வேதி3தவ்யம் ஶரவத்தந்மயோ ப4வேத் ॥” என்று – எய்கிறவன் எய்த வேக3த்தாலே இலக்கிலே குளிக்க எய்த அம்புபோலே, ப்ரணவம் த4நுஸ்ஸாக ஆத்மாவாகிற ஶரமானது ப்3ரஹ்மமாகிற இலக்கைக்குறித்து அவஹிதனான புருஷனாலே எய்யப்படுவதாய், அங்கே அந்தர்ப்ப4விக்கையாலே ப்3ரஹ்மமயமாய்விடும் என்று ஸ்வரூபாந்தர்ப்பா4வமான ஐக்யம் ப்ரணவப்ரதிபாத்3யமாகச்சொல்லப்பட்டது.

ப்ரணவம் த4நுஸ்ஸாகையாவது கோடித்3வயத்திலும் ஸம்ப3ந்தி4த்த நாணியாலே வலிபெற்ற வில் போலே, ப்ரத2ம சரமாக்ஷரங்களினுடைய அர்த்த2த்3வயத்திலும் அந்வயத்தையுடைய ஸம்ப3ந்த4த்துக்கு மத்4யஸ்த2மான அவதா4ரணத்தாலே யாதா2த்ம்யம் பெறுகையாலே. ஆத்மா ஶரமாகையாவது – எய்கிறவன் கைக்கொள்ளும்படி செவ்வையை உடைத்தாய், இலக்கை நோக்கின முக2த்தில் கூர்மையையுடைத்தாய், எய்கிறவன் ஏவின கார்யத்திலே நடக்குமிடத்திலே பக்ஷபாதியான அம்பு போலே, ஆத்மாவும் ஸ்வீகரிக்கிற ஆசார்யவிஷயத்தில் ஆர்ஜவத்தை உடையனாய், உபதி3ஷ்டமான ப43வத் விஷயத்தில் ஸூக்ஷ்மமாகப்பார்க்கும் முக2த்தை உடையனாய், ஆசார்யநியோக3த்திலே நித்யபக்ஷபாதி3யாயிருக்கும் என்றபடி. ப்3ரஹ்மம் இலக்காகையாவது தான் அபரிச்சி2ந்நமாகையாலே எங்கேனும் போகிலும் ஏற்றுக்கொள்ளும் என்றபடி. எய்கிறவன் அப்ரமத்தனாகையாவது – கலங்காமல் செவ்வையறிந்து எய்வாரைப்போலே, ப்3ரஹ்மத்திலே இவ்வாத்மாவை ஸமர்ப்பிக்கிற ஆசார்யன், இவனுடைய உஜ்ஜீவநமொன்றிலுமே அவதா4நத்தை உடையனாய், ப்ரயோஜநாந்தரங்களில் பார்வையற்றிருக்கை. “வேத்34வ்யம்” என்கையாலே வில்லுக்கு எய்கையே ஸ்வபா4வமாயிருக்குமோபாதி ஆசார்யன் தன்கைபுகுந்தவனை ப43வத்3விஷயத்திலே ஸமர்ப்பிக்கையே விதி4யாயிருக்கை. “ஶரவத் தந்மயோ ப4வேத்” என்றது – அவ்வம்பு இலக்கில் குளித்தாப் போலே இவனும் ப43வத்ஸ்வரூபாந்தர்க3தனாய், அப்ருத2க்ஸித்34னாமென்றபடி. 60

एवं परस्परविलक्षणस्वरूपस्वभावयोर्जीवपरयोः स्वभावासङ्करेऽपि पृथक्सिद्ध्यनर्हप्रकारत्वनिबन्धनप्रकारिस्वरूपान्तर्भावादैक्यानुसन्धानमुपपन्नमित्युच्यते । “ अन्यश्च राजन् स परस्तथान्यः पञ्चविंशकः । तत्सत्त्वादनुपश्यन्ति ह्येक एवेति साधवः ॥” इति । 61

இப்படியே “அந்யஸ்ச ராஜந் ஸ பரஸ்ததா2ऽந்ய: பஞ்சவிம்ஶக:। தத்ஸத்வாத3நுபஶ்யந்தி ஹ்யேக ஏவேதி ஸாத4வ:॥” என்று – பரமாத்மாவும் ஸ்வரூபஸ்வபா4வங்களாலே அத்யந்தவிலக்ஷணனாயிருக்கும், பஞ்சவிம்ஶகனான ஆத்மாவும் அப்படியே ஸ்வரூபஸ்வபா4வங்களாலே அவனிற்காட்டில் வேறுபட்டிருக்கும்; இப்படி ஒருவர்க்கொருவர் ஸ்வரூபஸ்வபா4வங்கள் கலசாதபடி வேறுபட்டிருக்கச்செய்தேயும் பரமாத்மஸ்வரூபத்திலே இவ்வாத்மா ப்ரகாரதயா அந்தர்ப4வித்து நிற்கையாலே, ஏகனென்றே ஜ்ஞாதாக்கள் அறியாநிற்பார்களென்று சொல்லப்படுகிறது. 61

एवं जीवपरयोर्लक्षणं स्वरूपं सम्बन्धश्च प्रणवेन प्रत्यपादि। प्रथमाक्षरेण ब्रह्मणो जगज्जन्मादिहेतुत्वे सति शेषित्ववचनात् व्यञ्जनेनाऽऽत्मनश्शेषत्वे सति ज्ञातृत्वाभिधानात् निपातेनापृथक्सिद्धरूपानन्यार्हताप्रतिपादनाच्च । तदिदमुच्यते “ अकारो विष्णुरित्युक्तो मकारो जीववाचकः । तयोस्तु नित्यसम्बन्ध उकारेण प्रकीर्तितः ॥”  इति । 62

இப்படி ப்ரணவத்தாலே ஆத்மபரமாத்மாக்களினுடைய லக்ஷணமும், ஸ்வரூபமும், ஸம்ப3ந்த4மும் ப்ரதிபாதி3க்கப்பட்டதாய்த்து. எங்ஙனே என்னில்:- ப்ரத2மாக்ஷரத்தாலே ப்3ரஹ்மத்தினுடைய ஜக3ஜ்ஜந்மாதி3 ஹேதுத்வமாகிற லக்ஷணத்தைச்சொல்லி, ஶேஷித்வமாகிற ஸ்வரூபத்தைச் சொல்லுகையாலும், வ்யஞ்ஜநரூபமான மகாரத்தாலே ஆத்மாவினுடைய ஶேஷத்வவிஶிஷ்டமான ஜ்ஞாத்ருத்வத்தை ஸ்வரூபமாகச் சொல்லுகையாலும், நிபாதரூபமான அவதா4ரணத்தாலே அப்ருத2க்ஸித்34மான அநந்யார்ஹஸம்ப3ந்த4த்தைச் சொல்லுகையாலும். இப்படி “அகாரோ விஷ்ணுரித்யுக்தோ மகாரோ ஜீவவாசக: । தயோஸ்து நித்யஸம்ப3ந்த4 உகாரேண ப்ரகீர்த்தித:॥” என்று – அகாரம் விஷ்ணுவென்று சொல்லப்படுகிறது, மகாரம் ஜீவனுக்கு வாசகமென்று சொல்லப்படுகிறது, அவர்களுடைய நித்யஸம்ப3ந்த4ம் உகாரத்தாலே சொல்லப்படுகிறதென்கிற வசநத்தாலும் இவ்வர்த்தம் ஸித்34ம். 62

अथवा – “ अकारेणोच्यते विष्णुः सर्वलोकेश्वरो हरिः । उद्धृता विष्णुना लक्ष्मीरुकारेणोच्यते सदा । मकारस्तु तयोर्दास इति प्रणवलक्षणम्।”, “ अकारश्चित्स्वरूपस्य विष्णोर्वाचक इष्यते । उकारश्चित्स्वरूपायाः श्रियो वाची तथा विदुः । मकारस्तु तयोर्विप्र श्रीनारायणयोस्सदा । आत्मनश्शेषभूतस्य वाचकः श्रुतिचोदितः ॥”  इत्यादिभिरुकारस्य लक्ष्मीवाचकत्वमवगम्यते । “अग्रतः प्रययौ रामः सीता मध्ये सुमध्यमा । पृष्ठतस्तु धनुष्पाणिः लक्ष्मणोऽनुजगाम हा ॥” (रा.आर.11-1) इत्यस्य श्लोकस्य एवं प्रणवार्थत्वं पूर्वाचार्यैरनुसंहितञ्च। तदानीमार्थमवधारणम्। यथा “ अब्भक्षः” इत्यत्र अप एव भक्षयतीति तद्वदिति केषाञ्चिदाचार्याणां सम्प्रदाय । उभयथापि प्रणवस्य भगवदनन्यार्हशेषत्वरूपात्मस्वरूपयाथात्म्यप्रतिपादनमविशिष्टम् । 63

இப்படி உகாரம் அவதா4ரணார்த்த2 மாகிறதன்றியே, “அகாரேணோச்யதே விஷ்ணு: ஸர்வலோகேஶ்வரோ ஹரி: । உத்3த்4ருதா விஷ்ணுநா லக்ஷ்மீ: உகாரேணோச்யதே ஸதா3। மகாரஸ்து தயோர்தா3ஸ இதி ப்ரணவலக்ஷணம்॥” என்று – ஸர்வலோகத்துக்கும் ஈஶ்வரனாய், வ்யாபகனான ஹரியானவன் அகாரத்தாலே சொல்லப்படுகிறான், அந்த விஷ்ணுவாலே எப்போதும் திருமார்பிலே த4ரித்துக்கொண்டிருக்கிற லக்ஷ்மியானவள் உகாரத்தாலே சொல்லப்படாநின்றாள், மகாரம் அவர்களுக்கு தா3ஸ்யபூ4தனான ஆத்மாவாகச்சொல்லப்படாநின்றது என்று ப்ரணவத்துக்கு லக்ஷணமென்றும், “ அகாரம் சித்ஸ்வரூபஸ்ய விஷ்ணோர்வாசக இஷ்யதே । உகாரஶ்சித்ஸ்வரூபாயா: ஶ்ரியோ வாசீ ததா2 விது3 :। மகாரஸ்து தயோர்விப்ர ஸ்ரீநாராயணயோஸ்ஸதா3 । ஆத்மநஶ்ஶேஷபூ4தஸ்ய வாசக: ஶ்ருதிசோதி3த:॥” என்று – அகாரமானது சித்ஸ்வரூபனான விஷ்ணுவுக்கு வாசகமாக இச்சி2க்கப்படாநின்றது, உகாரத்தை சித்ஸ்வரூபையான ஸ்ரீக்கு வாசகமாக அறியாநின்றார்கள், மகாரமானது ஸ்ரீநாராயணரான இருவர்க்கும் எப்போதும் ஶேஷபூ4தனான ஆத்மாவுக்கு வாசகமாக ஶ்ருதியிலே சொல்லப்பட்டதென்றும் ப்ரமாணமுண்டாகையாலே உகாரம் லக்ஷ்மீவாசகமாயிருக்கிறது; “அக்3ரத: ப்ரயயௌ ராம: ஸீதாமத்4யே ஸுமத்4யமா । ப்ருஷ்ட2தஸ்து த4நுஷ்பாணி: லக்ஷ்மணோऽநுஜகா3ம ஹா॥” என்று – முன்னே பெருமாள் எழுந்தருளினார், ஸுமத்4யமையான பிராட்டி பின்னே எழுந்தருளினாள், பின்பு கையும் வில்லுமாகக் கொண்டு இளையபெருமாள் எழுந்தருளினார் என்கையாலே இந்த ஶ்லோகத்தில் அர்த்த2ம் ப்ரணவம் கால்கொண்டு நடந்தாப்போலே இருந்ததென்று பூர்வாசார்யர்கள் அநுஸந்தி4த்தார்கள்; அப்போது அவதா4ரணம் ஆர்த்த2மாகக்கடவது; என்போல என்னில், அப்34க்ஷனென்றால் அப்பையே ப4க்ஷித்தானென்று அவதா4ரணார்த்த2ம் அர்த்த23லத்தாலே வருகிறாப்போலே என்றிப்படி சில ஆசார்யர்களுடைய ஸம்ப்ரதா3யம். இரண்டுபடியாலும் ப்ரணவத்துக்கு ஶ்ரிய:பதியான ஶேஷிக்கே இவ்வாத்மா ஶேஷமென்கிற ஸ்வரூபயாதா2த்ம்யப்ரதிபாத3நம் ஸமாநம். 63

ननु “ सर्वे वेदा यत्पदमामनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति । यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत्॥” (कठो.2-15), “ओमित्येतदक्षरमुद्गीथमुपासीत” (छा.उ.1-1-1), “उद्गीथमेतत्परमं तु ब्रह्म”, “ओङ्कारो भगवान् विष्णु:”, “ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन्” (गी.8-13) इत्यादिभिः प्रणवस्य भगवद्वाचकत्वमवगम्यते, इदानीमनेन स्वरूपयाथात्म्यप्रतिपादनं कथमिदमुपपद्यत इति चेत् – उच्यते – अस्य प्रणवस्य स्वतन्त्रमन्त्रत्वे भगवत्परत्वम् ; मन्त्रशेषत्वे तदर्थानुविधायित्वमिति विभागः । 64

“ஸர்வே வேதா3 யத்பத3மாமநந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி । யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீம்யோமித்யேதத்” என்று – ஸர்வவேத3ங்களும் யாதொன்றை ப்ராப்யமாகச்சொல்லுகின்றன, ஸர்வதபஸ்ஸுக்களாகவும் யாதொன்றைச்சொல்லுகிறார்கள், யாதொன்றை புருஷார்த்த2மாக இச்சி2க்கிறவர்கள் ப்3ரஹ்மசர்யத்தை அநுசரிக்கிறார்கள், அந்த ஸ்வரூபத்தை உனக்குச் சுருங்கக் சொல்லுகிறேன், அது “ஓம்” என்கிற இது என்றும், “ஓமித்யேதத3க்ஷரம் உத்3கீ32முபாஸீத”, “உத்3கீ32 மேதத்பரமம் து ப்3ரஹ்ம” என்று – உத்3கீ32மாவது பரப்3ரஹ்மமாயிருக்கும், இந்த அக்ஷரமான உத்3கீ32த்தை “ஓம்” என்று உபாஸிப்பானென்றும், “ஓங்காரோ ப43வாந் விஷ்ணு:” என்று – ஓங்காரமாவது ஜ்ஞாநஶக்த்யாதி3 ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகனாய், ஸர்வவ்யாபகனான ஸர்வேஶ்வரனென்றும், “ ஓமித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரந் மாமநுஸ்மரந்” என்று -“ஓம்” என்று ஏகாக்ஷரமான மந்த்ரத்தைச் சொல்லாநின்று கொண்டு அதுக்கு வாச்யனான என்னை நினைக்கிறவனென்றும் இதுமுதலான ப்ரமாணங்களாலே ப்ரணவம் ப43வத்3வாசமாகச்சொல்லப்பட்டது; இப்போது ஆத்மஸ்வரூபபரமாக யோஜிக்கப்பட்டது; இவையிரண்டும் சேருகிறபடி என் என்னில் :- ப்ரணவம் ஸ்வதந்த்ரமானபோது ப43வத்பரமாகக்கடவது, மந்த்ரஶேஷமானபோது அதினுடைய அர்த்த2த்தைப் பின்செல்லக் கடவது என்று பிரிவு சொன்னார்கள். 64

अथवा – तदानीमपि शब्दवृत्तिस्वारस्यानुरोधात् आत्मयाथात्म्यपरत्वेऽप्यर्थप्राधान्यात् अस्य भगवत्परत्वं युक्तम् – यथा राजपुरुष- शब्दस्य पुरुषपरत्वेऽपि अर्थतः प्रधानतया राज्ञः प्रतिपादकत्वम्, तद्वदत्रापि शेषि प्रधानतया प्रतिपाद्यते। “ओमित्यात्मानं युञ्जीत” (तै.ना.51) इति समर्पणकरणमन्त्रस्यानुष्ठेयार्थप्रकाशकत्वबलात् समर्पणीयात्मपरत्वं च श्रौतमेव । तस्मादनेन प्रणवेन भगवदनन्यार्हशेषत्वरूपात्मस्वरूपयाथात्म्यप्रतिपादनं युक्तमेव । 65

அங்ஙனன்றியே ஸ்வதந்த்ரமானபோதும் இதினுடைய ஶப்3தா3ர்த்த2த்தை அநுஸந்தி4த்துப்பார்த்தால் ஆத்மயாதா2த்ம்யத்தைக் காட்டுமேயாகிலும் ஆர்த்த2 ப்ராதா4ந்யத்தில் இதினுடைய ப43வத்பரத்வம் யுக்தம். என்போல என்னில், ராஜபுருஷஶப்33மானது ஶப்33 முக2த்தாலே புருஷனைக் காட்டாநிற்கச்செய்தேயும், அர்த்த23லத்தாலே ராஜாவினுடைய ப்ராதா4ந்யத்தைக் காட்டுகிறாப்போலே இவ்விடத்திலும் ஶேஷியே ப்ரதா4நனாக ப்ரதிபாதி3க்கப்படுகிறானென்றதாய்த்து. “ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்று – ஸமர்ப்பணத்துக்கு காரணமான மந்த்ரமாயுள்ள ப்ரணவமானது அநுஷ்டே2யமான அர்த்த2த்தை ப்ரகாஶிப்பிக்கிற ப3லத்தாலே ஸமர்ப்பணீயனான ஆத்மாவைச் சொல்லுகிற இது ஶப்33 ஸித்34ம். ஆதலால் இந்த ப்ரணவத்தாலே ப43வத3நந்யார்ஹாேஷத்வரூபமான ஆத்மஸ்வரூபத்தினுடைய யாதா2த்ம்யம் சொல்லப்படுகைக்குக்குறையில்லை. 65


अत एवास्य नित्यानुसन्धेयत्वेन वैभवं भगवतैवोक्तम् – “ प्रणवाख्यं महामन्त्रं विद्धीमं जगतीपते । इमं जपन्महाबाहो मां नमस्कुरु सत्तम ॥ ततो मां वेत्स्यसे सम्यक् सत्यमेव शपामि ते । अन्यत्सर्वं महाबाहो विहायैतत्परो भव।इदमेव परं श्रेयो नात्र कार्या विचारणा॥” (भग.शा.) इति।   66

इति प्रणवार्थविचारस्समाप्त:

ஆகையால் இப்படி ஆத்மயாதா2த்ம்யபரமாயும் ப43வத் ஸ்வரூபபரமாயுமுள்ள இப் ப்ரணவமானது நித்யாநுஸந்தே4யமென்று ப43வான் தானே “ப்ரணவாக்2யம் மஹாமந்த்ரம் வித்3தீ4மம் ஜக3தீபதே । இமம் ஜபந் மஹாபா3ஹோ மாம் நமஸ்குரு ஸத்தம ॥ததோ மாம் வேத்ஸ்யஸே ஸம்யக் ஸத்யமேவ ஶபாமி தே । அந்யத் ஸர்வம் மஹாபா3ஹோ விஹாயைதத்பரோ ப4வ ॥ இத3மேவ பரம் ஶ்ரேயோ நாத்ர கார்யா விசாரணா॥” என்று – ப்ரணவமென்று பேராயிருக்கிற இத்தை மஹாமந்த்ரமாக பு3த்3தி4 பண்ணு; இத்தை ஜபியாநின்றுகொண்டு என்னை நமஸ்கரி; அத்தாலே என்னை உள்ளபடி அறியாநிற்புதி; மெய்யே உனக்குச்சூழலறுக்கிறேன், மற்றுமுள்ளவற்றையெல்லாம் விட்டு இதிலே தத்பரனாயிரு, இதுவே பரமமான ஶ்ரேயஸ்ஸு, இதில் ஒருவிசாரம் பண்ணவேண்டா என்றுகொண்டு இதினுடைய வைப4வத்தை அருளிச்செய்தானிறே. 66

ப்ரணவார்த்த2 நிரூபணம் முடிந்தது

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.