श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचितः तत्त्वदीपः
प्रथमप्रकरणम्
अथ नमश्शब्दार्थविचार:
अथ मन्त्रशेषः प्रणवोक्तमर्थं विवृणोति । अत्र विवरणं नाम- प्रकृतस्योपयुक्तार्थप्रतिपादनेन पूर्वोक्तार्थविशदीकरणम् । 67
நமஶ்ஶப்3தா3ர்த்த2நிரூபணம்
இப்படி ப்ரணவத்தினுடைய அர்த்த2யாதா2த்ம்யம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. அநந்தரம் மந்த்ரஶேஷமானது ப்ரணவோக்தமான அர்த்த2த்தை விவரிக்கிறது. இவ்விடத்திலே விவரணமாகிறது – ப்ரஸ்துதமான அர்த்த2த்துக்கு உபயுக்தமான அர்த்த2த்தைச் சொல்லிக்கொண்டு பூர்வோக்தமான அர்த்த2த்தை விஶதீ3கரிக்கை. 67
शेषत्वाश्रयभूतस्याऽऽत्मनो ज्ञातृत्वस्य हेयोपादेयप्रतिपत्तिहेतुत्वेन तत्तद्धानोपादानचिकीर्षा कर्तृत्वनिबन्धना।कर्तृत्वं च स्वातन्त्र्येणेति वक्तव्यम्, :स्वतन्त्र: कर्ता” (पा.सू. 1-4-54) इत्यनुशासनात्। “ कुर्यात्” “न कुर्यात्” इति विधिनिषेधशास्त्रेषु स्वयं प्रवृत्तिनिवृत्तिशक्त एव हि कर्तृतया नियुज्यते; अन्यथा सकलशास्त्रवैयर्थ्यप्रसङ्गात्; “कर्ता शास्त्रार्थवत्त्वात्त्” (शा.मी. 2-3-33) इति सूत्रितं च। अत: कर्तृत्वनिबन्धनस्वातन्त्र्यस्वरूपस्याऽऽत्मन: प्रकृतं शेषत्वं न युक्तमित्येतामाशङ्कां अस्य स्वार्थकर्तृत्वनिषेधमुखेनात्यन्तपारतन्त्र्यप्रकाशको नमश्शब्दो व्यावर्तयति । तथाहि – “मः” इति व्यञ्जनरूपस्य मकारस्य षष्ठ्येकवचनान्तत्वेन, मकारवाच्यस्याहमर्थस्याऽऽत्मनः स्वार्थत्वं ममत्वेन प्रतिपाद्य नकारेण तन्निषिध्यते न ममेत्यर्थः । 68
இவ்விடத்தில் ஶேஷத்வாஶ்ரயமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்துக்கு ஹேயோபாதே3ய ப்ரதிபத்தி ஹேதுத்வமுண்டாகையாலே, அவ்வோ ஹேயங்களை விடுகையிலும், உபாதே3யங்களைப் பற்றுகையிலுமுண்டான சிகீர்ஷை கர்த்ருத்வமடியாயிருக்கும்; அந்த கர்த்ருத்வமாவது ஸ்வாதந்த்ர்யயுக்தமாயிருக்குமென்று சொல்லவேணும்; “ஸ்வதந்த்ர: கர்த்தா” என்று ஶப்3த3 ஶாஸ்த்ரத்திலே சொல்லுகையாலே. அவ்வளவேயன்றியிலே ‘இத்தைச்செய்வான்’, ‘இத்தைத்தவிருவான்’ என்று விதி4 நிஷேத4 ரூபமான ஶாஸ்த்ரங்களில் தான் ப்ரவருத்தி நிவ்ருத்திகளுக்கு ஶக்தனானவனிறே கர்த்தாவாக நியோகி3க்கப்படுவான். அல்லாதபோது ஸகலஶாஸ்த்ரங்களும் நிஷ்ப்ரயோஜநமிறே; “கர்த்தா ஶாஸ்த்ரார்த்த2வத்த்வாத்” என்று -ஆத்மா கர்த்தாவாக வேணும், ஶாஸ்த்ரத்துக்கு ப்ரயோஜநம் வேண்டுகையாலே என்று வேதா3ந்தஸூத்ரத்திலும் சொல்லப்பட்டது; ஆகையாலே கர்த்ருத்வநிப3ந்த4நமான ஸ்வாதந்த்ர்யத்தை ஸ்வரூபமாக உடையனான ஆத்மாவுக்குக் கீழ்ச்சொன்ன ஶேஷத்வமானது யுக்தமன்றே என்று தோற்றுகிற ஶங்கையை, இவ்வாத்மாவினுடைய ஸ்வார்த்த2மான கர்த்ருத்வத்தை நிஷேதி4த்துக்கொண்டு அத்யந்தபாரதந்த்ர்யத்தை ப்ரகாஶிப்பிக்கையாலே நமஶ்ஶப்3த3ம் கழித்துக்கொடுக்கிறது. எங்ஙனே என்னில் – “ம:” என்று கீழ்ச்சொல்லப்பட்ட மகாரவ்யஞ்ஜநத்தின் ஷஷ்டி2யிலேகவசநமாய், மகாரவாச்யனாய், அஹமர்த்த2 பூ4தனான ஆத்மாவினுடைய மமத்வத்தைச் சொல்லி, நகாரத்தாலே அத்தை நிஷேதி4க்கிறது. அதாவது – ந மம என்றபடி. 68
ननु तादर्थ्यविरोधिस्वार्थत्ववाचिनाऽनेन चतुर्थ्यन्तेन भवितव्यम्, पूर्वोत्तरपदयोश्चतुर्थ्यन्तत्वात् ; अन्यथा वाक्यस्य वैरूप्यं स्यात्; अतः षष्ठ्यन्तत्वं न युज्यत इति; नैतदेवम् :- षष्ठ्यास्सम्बन्धवाचित्वेन तादर्थ्यस्यापि सिद्धेः । अत एव हि नमश्शब्दविवरणदशायां “ अथ मह्यं न ”(अष्टश्लोकी 3) इत्याचार्यवचनम्। 69
ஆனால் தாத3ர்த்2யவிரோதி4யான ஸ்வார்த்த2தையைச்சொல்லுகிற “நம:” என்கிற பத3ம், ஷஷ்ட்2யந்தமாகாதே சதுர்த்2யந்தமாகவேணும்; பூர்வோத்தரபத3ங்கள் சதுர்த்2யந்தமாகையாலே; அல்லாதபோது வாக்யத்துக்கு வைரூப்யமுண்டாம், ஆகையாலே ஷஷ்ட்2யந்தத்வம் சேராதே என்னில்; அப்படியன்று :- இந்த ஷஷ்டி2யானது ஸம்ப3ந்த4 ஸாமாந்யத்தைச் சொல்லுகையாலே, தாத3ர்த்2யத்தையும் காட்டும், ஆகையாலேயிறே நமஶ்ஶப்3த3த்தை விவரிக்கிறவளவிலே “அத2 மஹ்யம் ந” என்று – ஷஷ்டி2க்கு சதுர்த்தி2 பொருளாக ப4ட்டர் அருளிச்செய்தது. 69
अथवा अत्र निवर्तनीयस्य विरोधिनो ममतारूपत्वेन षष्ठ्यन्तत्वमपि युक्तमेव; “ द्वयक्षरस्तु भवेत् मृत्युस्त्र्यक्षरं ब्रह्मणः पदम् । ममेति द्वयक्षरो मृत्युर्नममेति च शाश्वतम् ॥” (पाञ्च.) इति ममत्वस्य मृत्युशब्दवाच्यसंसाररूपत्वश्रवणात् ।
இங்ஙனன்றியிலே, இவ்விடத்திலே நிவர்த்திப்பிக்கப்படுகிற விரோதி4யானது, மமதாரூபமாக ஶாஸ்த்ரஸித்3த4மாகையாலே ஷஷ்ட்2யந்தத்வமும் யுக்தம். எங்ஙனே என்னில் :- “த்3வ்யக்ஷரஸ்து ப4வேந்ம்ருத்யுஸ்த்ர்யக்ஷரம் ப்3ரஹ்மண: பத3ம் । மமேதி த்3வ்யக்ஷரோ ம்ருத்யு: ந மமேதி ச ஶாஶ்வதம்॥” என்று – இரண்டக்ஷரம் ம்ருத்யுஶப்3த3 வாச்யமான ஸம்ஸாரமாயிருக்கும், மூன்றக்ஷரம் ப்3ரஹ்மஶப்3த3 வாச்யமான ஆத்மாவினுடைய ஸ்வரூபயாதா2த்ம்யமாயிருக்கும்; அவையாவன – “மம” என்கிற இரண்டக்ஷரமும் ஸம்ஸாரம், “ந மம” என்கிற மூன்றக்ஷரமும் நிலைநின்ற ஸ்வரூபமென்று ப்ரமாணம் சொல்லுகையாலே மமத்வம் விரோதி4 யென்றதாய்த்து. 70
ननु यदि ममत्वमात्रमत्र निवर्त्यते, कथं तर्हि तद्धेतुभूतस्वातन्त्र्यरूपाहङ्कारनिवृत्तिः, “ अहङ्कृतिर्या भूतानां संसारजननी मता” इत्यहङ्कारस्यैव संसारहेतुभूतत्वमवगम्यत इति चेदुच्यते – “ अनात्मन्यात्मबुद्धिर्या अस्वे स्वमिति या मतिः । अविद्यातरुसम्भूतिबीजमेतद्विधा स्थितम् ॥” (वि.पु.6-7-11 ) इति संसारहेतुतया प्रतिपन्नमहङ्कारममकाररूपमुभयविधं स्वार्थत्वमत्र निवर्त्यते ।
तत्र “ अहं मम” इति स्वस्य स्वकीयत्वाभिमानोऽहङ्कारः । अहमेव मम निर्वाहक इत्यर्थः । स च द्विविधः – देहात्माभिमानरूपः, देहात्परस्य स्वातन्त्र्याभिमानरूपश्चेति । उभयविधोयमहङ्कारः अनात्मन्यात्मबुद्धिरूप एव । निष्कृष्टात्मस्वरूपस्याहमर्थस्य “ यस्यास्मि न तमन्तरेमि” (याजु. अष्ट. 3-7 ), “दासोहं वासुदेवस्य”, “परवानस्मि काकुत्स्थ” (रा.आर. 15-7), “अच्युताहं तवास्मीति सैव संसारभेषजम्” इत्यादिषु भगवत्पारतन्त्र्यवचनात् ।
“ इदं मम” इति स्वव्यतिरिक्तवस्तुनि स्वकीयताबुद्धिर्ममता । सा च द्विविधा – देहानुबन्धिभोग्यभोगोपकरणादिविषया, तदतिरिक्तपारलौकिकफलतत्साधनविषया चेति । एवमुभयत्र स्वस्मिन् स्वव्यतिरिक्ते च ममतान्वयो दोष इति, स एवात्र निवर्त्यते। तन्निवृत्त्या तदुभयमपि निवृत्तं भवति ; एतदभिप्रायेण “ ममेति द्वयक्षरो मृत्युः” (पाञ्च.) इत्युक्तम् । तत्र देहात्माभिमानरूपाहङ्कारः, तदनुबन्धिविषयं ममत्वं च आत्मनः प्रकृतेः परत्वप्रतिपादनेन निवृत्तम् । यथोक्तं भगवता पराशरेणापि “आकाशवाय्वग्निजलपृथिवीभ्यः पृथस्थिते । आत्मन्यात्ममयं भावं कः करोति कलेबरे ॥ कलेबरोपभोग्ये च गृहक्षेत्रादिके हि कः। अदेहे ह्यात्मनि प्राज्ञो ममेदमिति मंस्यते॥” (वि.पु.6-7-13) इति। प्रकृते: परस्य ज्ञातृत्वबलायातकर्तृत्वनिबन्धनस्वातन्त्र्यरूपाहङ्कार: तदनुबन्धिममत्वं चात्र निवर्त्यते । अत्रैव उत्तरपदवक्ष्यमाणभोगविषयभोक्तृत्वरूपाहङ्कारतदनुबन्धिममत्वनिवृत्तिश्च काकाक्षिन्यायेन सूच्यते । 71
ஆனால் இவ்விடத்தில் மமத்வமாத்ரமே நிவர்த்திப்பிக்கப்படுகிறதாகில், அப்போது அந்த மமத்வத்துக்கு ஹேதுபூ4தமாய் ஸ்வாதந்த்ர்யரூபமான அஹங்காரம் நிவர்த்திக்கும்படி எங்ஙனே? “அஹங்க்ருதிர்யா பூ4தாநாம் ஸம்ஸாரஜநநீ மதா” என்றுஅஹங்காரமானது ஸம்ஸாரஹேதுவாகவன்றோ சொல்லப்பட்டது என்னில்; “ அநாத்மந்யாத்மபு3த்3தி4ர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி: । அவித்3யாதருஸம்பூ4தி பீ3ஜமேதத்3த்3விதா4 ஸ்தி2தம்॥” என்று – அநாத்மாவில் ஆத்மபு3த்3தி4யும், அஸ்வத்தில் ஸ்வத்வபு3த்3தி4யுமாகிற அஹங்காரமமகாரங்களிரண்டும், கர்மப்ரவாஹமாகிற மரம் பிறக்கைக்கு இரண்டு விதைகளாயிருக்குமென்று சொல்லுகையாலே அஹங்காரமமகாரரூபமாயிருக்கிற உப4யவித4மான ஸ்வார்த்த2தையும் இவ்விடத்தில் நிவர்த்திப்பிக்கப்படுகிறது.
எங்ஙனேயென்னில், “அஹம் மம” என்று – நான் எனக்குரியேன் என்கிற அபி4மாநம் அஹங்காரம். அதுதான் இரண்டு வகையாயிருக்கும் :- தே3ஹாத்மாபி4மாநரூபமாயும்,தே3ஹாத்பரனுடைய ஸ்வாதந்த்ர்யாபி4மாநரூபமாயும். உப4யவித4மான இந்த அஹங்காரம் அநாத்மாவில் ஆத்மபு3த்3தி4யாயேயிருக்கும்; நிஷ்க்ருஷ்டமான ஆத்மஸ்வரூபம் “ யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” என்று – யாவனொருவனுக்கு ஶேஷமாகிறேன், அவனை விலக்குகிறிலேன் என்றும், “தா3ஸோऽஹம் வாஸுதே3வஸ்ய” என்று – நான் வாஸுதே3வனுக்கு தா3ஸன் என்றும், “பரவாநஸ்மி காகுத்ஸ்த2” என்று- காகுத்ஸ்த2னே! நான் பரதந்த்ரனாகாநின்றேனென்றும், “அச்யுதாஹம் தவாஸ்மீதி ஸைவ ஸம்ஸாரபே4ஷஜம்” என்று -அச்யுதனே! நான் உனக்கு ஶேஷமாகாநின்றேன் என்கிற நினைவு ஸம்ஸாரத்துக்கு பே4ஷஜமென்றும் என்று இத்யாதி3 ப்ரமாணங்களிலே ப4க3வதே3கபரதந்த்ரமாகச்சொல்லப்படுகையாலே.
இப்படி பாரதந்த்ர்யம் ஸ்வரூபமாமத்தால் ஸ்வாதந்த்ர்யாபி4மாநத்துக்கு தே3ஹாத்மாபி4மாநத்தோடு வாசியில்லையிறே. ஸ்வரூபத்துக்கு வஸ்துத்வப்ரதிபத்தி பாரதந்த்ர்யத்தாலேயானால், வஸ்துவை வஸ்த்வந்தரமாக ப்4ரமிக்கை இரண்டிடத்திலும் ஒக்குமிறே. “இத3ம் மம” என்று – தன்னையொழிந்த வஸ்துவைத்தன்னதாக ப்ரதிபத்தி பண்ணுகையிறே மமதையாவது. அதுவும் இரண்டுபடியாயிருக்கும்:- தே3ஹாநுப3ந்தி4யான போ4க்3யபோ4கோ3பகரணவிஷயையாயும், தே3ஹாத்பரனுடைய பாரலௌகிகப2லதத்ஸாத4நங்களை விஷயமாகவுடைத்தாயுமிருக்கும். இப்படி இரண்டிடத்திலும், தன்பக்கலிலும் தன்னையொழிந்தவதின்பக்கலிலும் மமதையினுடைய அந்வயமிறே தோ3ஷமாவது, அது இவ்விடத்திலே நிவர்த்திப்பிக்கப்படுகிறது. அது நிவ்ருத்தமானபோதே அதடியாக வந்த அஹங்காரமமகாரங்களிரண்டும் நிவ்ருத்தமாம்; இம்மமத்வாந்வயம் கழிந்தால் தன்னோடு தன்னையொழிந்தவற்றோடு வாசியற ப4க3வச்சே2ஷமாயேயிருக்குமிறே. இத்தை நினைத்திறே “மமேதி த்3வ்யக்ஷரோ ம்ருத்யு:” என்று சொல்லப்பட்டது.
அவ்விடத்தில் தே3ஹாத்மாபி4மாநரூபாஹங்காரமும் தே3ஹாநுப3ந்தி4களில் மமதையும், ஆத்மாவினுடைய ப்ரக்ருதே: பரத்வப்ரதிபாத3நத்தாலே பஞ்சவிம்ஶாக்ஷரமான மகாரத்திலே கழிக்கப்பட்டது. எங்ஙனேயென்னில் :- “ஆகாஶ வாய்வக்3நி ஜலப்ருதி2வீப்ய: ப்ருத2க்ஸ்தி2தே । ஆத்மந்யாத்மமயம் பா4வம் க: கரோதி களேப3ரே॥” என்று ஆகாஶம், வாயு, அக்3நி, ஜலம், ப்ருதி2விகளிற்காட்டில் ஆத்மா வேறுபட்டுள்ளவிடத்திலே களேப3ர ஶப்3த3வாச்யமான ஶரீரத்திலே எவன் ஆத்மப்ரதிபத்தியைப்பண்ணுவான் என்றும், “களேப3ரோப போ4க்3யே ச க்3ருஹக்ஷேத்ராதி3கே ஹி ௧: । அதே3ஹே ஹ்யாத்மநி ப்ராஜ்ஞோ மமேத3மிதி மம்ஸ்யதே॥” என்று – ஆத்மா தே3ஹமன்றியிலே உள்ளவிடத்தில் களேப3ரத்துக்கு உபபோ4க்3யமான க்3ருஹக்ஷேத்ராதி3களிலே, அறிவையுடையவன் அவன் இது என்னது என்று பு3த்3தி4 பண்ணுகிறான் என்றும் சொல்லுகையாலே. அந்த தே3ஹாதிரிக்தனான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வப3லத்தால் வந்த கர்த்ருத்வமடியான ஸ்வாதந்த்ர்யரூபமான அஹங்காரமும், அத்தை அநுஸந்தி4த்துவரும் மமத்வமும் இவ்விடத்திலே கழிக்கப்படுகிறது. இவ்விடத்திலே மேலிற்பதத்திலே சொல்லுகிற போ4க3த்தைப்பற்றி வருவதான போ4க்த்ருத்வரூபாஹங்காரபோ4க3 விஷயமமத்வங்களினுடைய நிவ்ருத்தியும் காகாக்ஷிந்யாயத்தாலே ஸூசிப்பிக்கப்படுகிறது. 71
नमश्शब्दनिर्वचनसमये निरुक्तमेवैतत्सुस्पष्टं वदति- “ अहमपि मम न । भगवत एवाहमस्मि ( याजु.) इत्यहमर्थस्य स्वार्थतापादकममत्वान्वयनिषेधपूर्वकं भगवदेकशेषत्वं प्रतिपाद्य, “ याः काश्चन कृतयो मम भवन्ति, मम ममता नास्ति तासु, भगवत एव ता:” (याजु.) इति स्वप्रवृत्त्यादेस्सर्वस्य स्वार्थत्वापादकममत्वनिषेधपूर्वकं भगवदायत्तत्वप्रतिपादनात् । 72
இவ்வர்த்த2த்தை நமஶ்ஶப்3த3த்தை நிர்வசிக்கிறவளவிலே நிருக்தமே மிகவும் ஸ்பஷ்டமாகச் சொல்லாநின்றது :- எங்ஙனே என்னில், “அஹமபி மம ந, ப4க3வத ஏவாஹமஸ்மி” என்று – நானும் எனக்குரியேனல்லேன் என்றுகொண்டு தனக்கு ஸ்வார்த்த2தையை உண்டாக்குகிற மமதாந்வயத்தைத் தவிர்த்து ப4க3வச்சே2ஷத்வத்தை ப்ரதிபாதி3த்து, “ யா: காஶ்சந க்ருதயோ மம ப4வந்தி, மம மமதா நாஸ்தி தாஸு, ப4க3வத ஏவ தா:” என்று – தன்னுடைய ப்ரவ்ருத்த்யாதி3களெல்லாவற்றுக்கும் ஸ்வார்த்த2தையை உண்டாக்குகிற மமதாந்வயத்தைக் கழித்து ப4க3வதீ3யத்வத்தை ப்ரதிபாதி3க்கையாலே. 72
उपबृंहितं च भगवच्छास्त्रेण – “ चेतनस्य यदा मम्यं स्वस्मिन् स्वीये च वस्तुनि । मम इत्यक्षरद्वन्द्वं तदा मम्यस्य वाचकम् । अनादिवासनाधीनमिथ्याज्ञाननिबन्धना । आत्मात्मीयपदार्थस्था या स्वातन्त्र्यस्वतामतिः ॥ मे नेत्येवं समीचीनबुद्धया सात्र निवार्यते। नाहं मम स्वतन्त्रोऽहं नास्मीत्यस्यार्थ उच्यते ॥ न मे देहादिकं वस्तु स शेषः परमात्मनः । इति बुद्धया निवर्तन्ते तास्ताः स्वीया मनीषिकाः ॥ अनादिवासनाजातैर्बोधैस्तैस्तैर्विकल्पितैः । रूषितं यदृढं चित्तं स्वातन्त्र्यस्वत्वधीमयम् ॥ तत्तद्वैष्णवसार्वार्थ्यप्रतिबोधसमुत्थया ॥ नम इत्यनया वाचा नन्त्रा स्वस्मादपोह्यते॥” (भग.शा.) इति। अत: सर्वत्र निवर्तनियस्य ममतारूपत्वेन सम्बन्धसामान्यवाचिषष्ठ्यन्तत्वं युज्यत एव । 73
இவ்வர்த்த2த்தை ப4க3வச்சா2ஸ்த்ரமும் உபப்3ரும்ஹித்தது :- “சேதநஸ்ய யதா3 மம்யம் ஸ்வஸ்மிந் ஸ்வீயே ச வஸ்துநி । மம இத்யக்ஷரத்3ந்த்3வம் ததா3 மம்யஸ்ய வாசகம்॥” என்று – சேதநனுக்கு யாதொருபோது தன்பக்கலிலும் தன்னுடையதான வஸ்துவின் பக்கலிலும் மமத்வம் நடையாடுகிறது, அப்போது “மம” என்கிற இரண்டெழுத்தும் இந்த மம்யத்துக்கு வாசகமாயிருக்குமென்றும், “அநாதி3வாஸநாதீ4நமித்2யாஜ்ஞாநநிப3ந்த4நா | ஆத்மாத்மீயபதா3ர்த்த2ஸ்தா2 யா ஸ்வாதந்த்ர்யஸ்வதா மதி: | மே நேத்யேவம் ஸமீசீநபு3த்3த்4யா ஸாऽத்ர நிவார்யதே॥” என்று – அநாதி3வாஸனை இட்ட வழக்கான மித்2யாஜ்ஞாநத்தாலே உண்டாவதாய், தன்பக்கலிலும் தன்னதான பதா3ர்த்த2த்தின் பக்கலிலும் வர்த்திப்பதான ஸ்வாதந்த்ர்யபு3த்3தி4யும் ஸ்வத்வபு3த்3தி4யும் எனக்கில்லை என்கிற யதா2ர்த்த2 ஜ்ஞாநத்தாலே அது இவ்விடத்திலே கழிக்கப்படுகிறதென்றும், “நாऽஹம் மம ஸ்வதந்த்ரோऽஹம் நாஸ்மீத்யஸ்யார்த்த2 உச்யதே | ந மே தே3ஹாதி3கம் வஸ்து ஶேஷோ ஹி பரமாத்மந:। இதி பு3த்3த்4யா நிவர்த்தந்தே தாஸ்தா: ஸ்வீயா மநீஷிகா:॥” என்று – நான் எனக்கல்லேனென்றதுக்குப் பொருள் – ஸ்வதந்த்ரனாகிறிலேன் என்று சொல்லப்படுகிறது; தே3ஹாதி3கமான வஸ்துவும் எனக்கு ஶேஷமன்று, என்னோடு அத்தோடு வாசியற எல்லாம் பரமாத்மாவுக்கே ஶேஷமென்கிற பு3த்3தி4யாலே தன்னுடையதான அவ்வோ வஸ்து வில் அந்யதா2 பு3த்3தி4கள் நிவர்த்தியாநின்றனவென்றும், “அநாதி3 வாஸநாஜாதை: போ3தை4ஸ்தைஸ்தைர்விகல்பிதை: । ரூஷிதம் யத்3த்3ருட4ம் சித்தம் ஸ்வாதந்த்ர்யஸ்வத்வதீ4மயம் ॥ தத்தத்3 வைஷ்ணவஸார்வார்த்2யப்ரதிபோ3த4 ஸமுத்த2யா ॥ நம இத்யநயா வாசா நந்த்ரா ஸ்வஸ்மாத3போஹ்யதே॥” என்று – அநாதி3 வாஸனையாலே பிறந்தனவாய் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கிற அஜ்ஞாநாந்யதா2ஜ்ஞாநவிபரீதஜ்ஞாநங்களாலே சிக்கென உகளப்பட்டிருக்கிற நெஞ்சு யாதொன்று, அவ்வோ மநோவ்ருத்திரூபமான அஜ்ஞாநங்கள் ப4க3வத்3விஷயமான ஸர்வப்ரகாரபாரார்த்2யஜ்ஞாநத்தை உண்டாக்குவதாகத்தோற்றின “நம:” என்கிற ஶப்3த3த்தைக்கொண்டு சேதநனாலே போக்கப்பட்டதென்றும் சொல்லிற்று; ஆகையாலே எல்லாவிடத்திலும் நிவர்த்யமான விரோதி4 மமதாரூபமென்றிட்டு ஸம்ப3ந்த3ஸாமாந்யத்தைச் சொல்லுவதான ஷஷ்ட்2யந்தத்வம் யுக்தமென்றதாய்த்து. 73
एवमात्मनः स्वार्थत्वं निवर्तयताऽनेन पदेन प्रकृतमेव भगवत्पारार्थ्यं स्थूणानिखन (?ण) न्यायेन स्थिरीकृतम्। 74
இப்படி ஆத்மாவினுடைய ஸ்வார்த்த2த்வத்தை நிவர்த்திப்பியாநின்றுள்ள இப்பத3த்திலே, கீழ் ப்ரஸ்துதமான ப4க3வச்சே2ஷத்வமானது, ஸ்தூ2ணாநிக2நந்யாயத்தாலே ஸ்தி2ரமாகப் பண்ணப்பட்டது. 74
एतेन ज्ञातुरात्मनः स्वरूपानुबन्धि कर्तृत्वं परमात्मायत्तमिति व्यवस्थितम् । “ परात्तु तच्छ्रुतेः” (शा.मी.23-40) इति कर्तृत्वस्य परायत्तत्वोपपादनात्।न चानेन विधिनिषेधवाक्यवैयर्थ्यं स्यात्, “कृतप्रयत्नापेक्षस्तु विहितप्रतिषिद्धावैयर्थ्यादिभ्यः”(शा.मी.2-3-41) इति परिहृतत्वात् । एतदुक्तं भवति – सर्वस्य चेतनजातस्य ज्ञातृत्वस्वाभाव्यात् सामान्यतः प्रवृत्तिनिवृत्तियोग्यत्वमस्त्येव । एवंरूपस्वरूपनिर्वहणार्थमीश्वरस्त्वन्तरात्मतयाऽवतिष्ठते; तदाहितशक्तित्वेन चेतनस्तत्तदर्थेषु उत्पन्नज्ञानचिकीर्षा प्रयत्नो वर्तते । तत्र – उदासीनवदासीनः परमात्मा तस्य विधिनिषेधविषयप्रवृत्तिष्वनुमतिमनादरं च भजन्, विहितेष्वनुग्रहं निषिद्धेषु निग्रहं च कुर्वाण, अनुग्रहात्मकपुण्यफलं सुखं निग्रहात्मकपापफलं दुःखं च ददाति । 75
இத்தாலே ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய ஸ்வரூபாநுப3ந்தி4யான கர்த்ருத்வம் பரமாத்மாயத்தமென்று அறுதியாய்த்து. “பராத்து தச்ச்2ருதே:” என்று – ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பரமாத்மாயத்தமென்று வேதா3ந்தஸூத்ரத்தாலே ஶ்ருதிஸித்3த4மாக அறுதியிடப்படுகையாலே. இப்படி கர்த்ருத்வம் பரமாத்மாயத்தமானாலும் விதி4நிஷேத4 வாக்யங்களுக்கும் வையர்த்2யம் வாராது; “க்ருதப்ரயத்நாபேக்ஷஸ்து விஹிதப்ரதிஷித்3தா4ऽவையர்த்2யாதி3ப்4ய:” என்று பரிஹரிக்கப்படுகையாலே. அதாவது – விஹிதப்ரதிஷித்3த4ங்களுக்கு வையர்த்2யாதி3கள் வாராமைக்காக இச்சேதநன் பண்ணின ப்ரயத்நத்தை அபேக்ஷித்துக்கொண்டு ஈஶ்வரன் ப்ரவர்த்திப்பிக்குமென்றபடி. எங்ஙனே என்னில் – எல்லா சேதநர்க்கும் ஜ்ஞாத்ருத்வம் ஸ்வாபா4விகமாகையாலே ஸாமாந்யேந ப்ரவ்ருத்திநிவ்ருத்தியோக்3யத்வம் உண்டாயேயிருக்கும்; இப்படியான ஸ்வரூபத்தை நிர்வஹிக்கைக்காக ஈஶ்வரன் அந்தராத்மாவாய் நில்லாநிற்கும், அவனாலே உண்டாக்கப்பட்ட ஸ்வரூபபாக்தியையுடையனான சேதநன் அவ்வோ பதா3ர்த்த2ங்களிலே உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நனாய்க்கொண்டு வர்த்தியாநிற்கும்; அவ்விடத்திலே மத்4யஸ்த2னாகையாலே உதா3ஸீநனானாப்போலே இருக்கிற பரமாத்மாவானவன் அந்த சேதநனுடைய பூர்வபூர்வவாஸநாநுரூபமான விதி4நிஷேத4 விஷயப்ரவ்ருத்தியிலே அநுமதியையும், அநாத3ரத்தையும் உடையனாய்க்கொண்டு விஹிதங்களிலே அநுக்3ரஹத்தையும், நிஷித்3த4ங்களிலே நிக்3ரஹத்தையும் பண்ணாநிற்பானாய், அநுக்3ரஹாத்மகமான புண்யத்துக்கு ப2லமான ஸுக2த்தையும், நிக்3ரஹாத்மகமான பாபத்துக்கு ப2லமான து3:க2த்தையும் அவ்வோ சேதநர்க்குக்கொடாநிற்கும். 75
तदुक्तमभियुक्तैः “ आदावीश्वरदत्तयैव पुरुषः स्वातन्त्र्यशक्त्या स्वयं तत्तज्ज्ञानचिकीर्षणप्रयतनान्युत्पादयन् वर्तते । तत्रोपेक्ष्य ततोऽनुमत्य विदधत् तन्निग्रहानुग्रहौ तत्तत्कर्मफलं प्रयच्छति ततस्सर्वस्य पुंसो हरिः ॥” (त. सा.) इति । एवं सर्वप्रवृत्तिषु चेतनस्य प्रथमप्रयत्नापेक्षी परमात्मा प्रवर्तयतीति । अतः स्वरक्षणकर्तृत्वनिवर्तनमुखेन अस्य भगवदेकरक्ष्यत्वप्रतिपादनात् इष्टानिष्टप्राप्तिपरिहाररूपं सर्वमपेक्षितमीश्वरायत्तमिति तस्योपायत्वं द्योत्यते । 76
இது தன்னை அபி4யுக்தரும் சொன்னார்கள்; “ஆதா3வீஶ்வரத3த்தயைவ புருஷ: ஸ்வாதந்த்ர்ய ஶக்த்யா ஸ்வயம் தத்தத்3ஜ்ஞாநசிகீர்ஷணப்ரயதநாந்யுத்பாத3யந் வர்த்ததே। தத்ரோபேக்ஷ்ய ததோऽநுமத்ய வித3த4த் தந்நிக்3ரஹாநுக்3ரஹௌ தத்தத்கர்மப2லம் ப்ரயச்ச2தி ததஸ்ஸர்வஸ்ய பும்ஸோ ஹரி:॥” என்று – அடியிலே ஸர்வ நியந்தாவாய், ஸர்வாந்தராத்மாவான ஸர்வேஶ்வரன், தனக்கு உண்டாக்கிக் கொடுத்த ஜ்ஞாத்ருத்வரூபமான ஸ்வாதந்த்ர்ய ஶக்தியாலே இப்புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞாந சிகீர்ஷாப்ரயத்நங்களை உண்டாக்கிக்கொண்டு வர்த்தியாநிற்கும், அவ்விடத்தில், அஶாஸ்த்ரீயங்களில் உபேக்ஷித்தும், ஶாஸ்த்ரீயங்களில் அநுமதியைப்பண்ணியும், அவ்வோ விஷயங்களில் நிக்3ரஹாநுக்3ரஹங்களைப் பண்ணாநின்றுகொண்டு அவ்வோ கர்மப2லத்தையும் கொடாநிற்குமென்று. இப்படி ஸர்வப்ரவ்ருத்திகளிலும் சேதநனுடைய ப்ரத2மப்ரயத்நத்தை அபேக்ஷித்துக்கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியாநிற்குமென்றதாய்த்து. ஆகையாலே ஸ்வரக்ஷணத்தில் இவனுடைய ஸ்வதந்த்ரகர்த்ருத்வத்தை நிவர்த்திப்பிக்கிற முக2த்தாலே ப4க3வதே3கரக்ஷ்யத்வத்தை ப்ரதிபாதி3க்கையாலே, இஷ்டாநிஷ்டப்ராப்திபரிஹாரரூபமான அபேக்ஷிதமெல்லாம் ஈஶ்வராயத்தமென்றுகொண்டு அவனுடைய உபாயத்வம் இவ்விடத்திலே தோற்றுவிக்கப்படுகிறது. 76
उपायत्वस्य च अर्थ्यपेक्षाऽपेक्षिता; “ सर्वज्ञोऽपि हि विश्वेशः सदा कारुणिकोऽपि सन् । संसारतन्त्र- वाहित्वाद्रक्ष्यापेक्षां प्रतीक्षते ॥” (ल.तं. 17-39) इति वचनात् । इयं च प्रार्थना तु आकिञ्चन्यानन्यगतित्वयुक्ता । “अहमस्म्यपराधानामालयोऽकिञ्चनोऽगतिः । त्वमेवोपायभूतो मे भवेति प्रार्थनामतिः । शरणागतिरित्युक्ता सा देवेस्मिन् प्रयुज्यताम् ॥” (विष्वक्सेनसं.) इति वचनात् । एवं प्रार्थना (युक्तं इति बहुषु पाठः ) रूपं प्रपदनमपि आत्मनः स्वरक्षणकर्तृत्वनिवर्तनमुखेन आकिञ्चन्यं सूचयता नमश्शब्देन प्रकाश्यते । 77
உபாயத்வத்துக்கு அர்த்தி2யினுடைய அபேக்ஷை வேணும்; “ஸர்வஜ்ஞோऽபி ஹி விஶ்வேஶ: ஸதா3 காருணிகோऽபி ஸந் । ஸம்ஸாரதந்த்ரவாஹித்வாத்3ரக்ஷ்யா பேக்ஷாம் ப்ரதீக்ஷதே॥” என்கிற வசநத்தாலே. அதாவது – எல்லாவற்றுக்கும் ஈஶ்வரனானவன் ஸர்வஜ்ஞனேயாகிலும், எப்பொழுதும் காருணிகனேயாகிலும், ஸம்ஸாரமாகிற விபூ4தியை நிர்வஹிக்கவேண்டுகையாலே ரக்ஷ்யபூ4தனான சேதநனுடைய அபேக்ஷையைப் பார்த்திராநிற்குமென்றபடி. இந்த அபேக்ஷாரூபையான ப்ரார்த்த2னை ஆகிஞ்சந்யாநந்யக3தித்வாதி3களோடு கூடியிருக்கும்; “அஹமஸ்ம்யபராதா4நாம் ஆலயோऽகிஞ்சநோऽக3தி: । த்வமேவோபாயபூ4தோ மே ப4வேதி ப்ரார்த்த2நாமதி:। ஶரணாக3திரித்யுக்தா ஸா தே3வேऽஸ்மிந் ப்ரயுஜ்யதாம்॥” என்று – ‘நான் அபராத4ங்களுக்கெல்லாம் ஆலயமாகாநின்றேன், அகிஞ்சநனாய், அக3தியாகாநின்றேன், நீயே எனக்கு உபாயமாக வேணும்’ என்கிற ப்ரார்த்த2நாரூப பு3த்3தி4 ஶரணாக3தியாகிறது, அது இந்த தே3வன் பக்கலிலே ப்ரயோகி3க்கப்படுவதாக என்று விதி4க்கையாலே. இப்படி ப்ரார்த்த2நா (‘யுக்தம்’ இதி ப3ஹுஷு பாட2🙂 ரூபமான ப்ரபத3நந்தான், ஆத்மாவினுடைய ஸ்வரக்ஷணத்தில் கர்த்ருத்வத்தை நிவர்த்திப்பிக்கிற முக2த்தாலே ஆகிஞ்சந்யத்தை ஸூசிப்பிக்கிற நமஶ்ஶப்3த3த்தாலே ப்ரகாஶிப்பிக்கப்படுகிறது. 77
“सर्वेषामेव लोकानां पिता माता च माधव:।गच्छध्वमेनं शरणं शरण्यं पुरुषर्षभा:॥” (भार.आर. 189) इत्युपदिष्टशरणागत्यनुष्ठानावसरे “ द्रौपद्या सहितास्सर्वे नमश्चक्रुर्जनार्दनम् “(भार.सभा.66-41) इति नमस्कारप्रयोगात्, स्थानप्रमाणतश्च प्रपदनवाची नमश्शब्द इत्यवगम्यते । 78
இன்னமும் “ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாத4வ:। க3ச்ச2த்4வமேநம் ஶரணம் ஶரண்யம் புருஷர்ஷபா4:॥” என்று – ஸர்வலோகத்துக்கும் பிதாவும், மாதாவும் மாத4வன், ஶரண்யனான இவனை புருஷஶ்ரேஷ்ட2ரான நீங்கள் ஶரணமாக அடையுங்கோள் என்று உபதே3ஶிக்கப்பட்ட ஶரணாக3தியினுடைய அநுஷ்டா2நகாலத்திலே “த்3ரௌபத்3யா ஸஹிதாஸ்ஸர்வே நமஶ்சக்ருர்ஜநார்த்த3நம்” என்று – த்3ரௌபதி யோடே கூட ஜநார்த்த3நனை நமஸ்கரித்தார்களென்கையாலே, ஶரணாக3திஸ்தா2நத்திலே இந்த நமஸ்காரத்தை ப்ரயோகி3க்கையாலே இந்த ஸ்தா2நப்ரமாணம் இந்த நமஸ்காரத்தினுடைய ஶரணாக3தித்வத்தைக் காட்டுகிறது. 78
किञ्च – “ भगवत्प्रवृत्तिविरोधिस्वप्रवृत्तिनिवृत्तिः प्रपत्तिः” (*) इत्यभियुक्तैः प्रपत्तिलक्षणस्योक्तत्वात्, स्वप्रवृत्तित्यागवचनेन प्रपत्तिरत्राभिधीयते । “ न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशु:” (तै.ना. 10-21) इति त्यागस्य अमृतत्वप्राप्तिहेतुत्वश्रवणात्। 79
அதுக்குமேலே “ப4க3வத்ப்ரவ்ருத்திக்கு விரோதி4யான ஸ்வப்ரவ்ருத்தியைத் தவிருகை ப்ரபத்தி” ஸோமாசியாண்டான் ப்ரபத்திலக்ஷணமாக அருளிச்செய்கையாலே, ஸ்வப்ரவ்ருத்தி த்யாக3த்தைச் சொல்லுகிற இப்பத3த்திலே ப்ரபத்தி சொல்லப்படுகிறதாகக் குறையில்லை. “ந கர்மணா ந ப்ரஜயா த4நேந த்யாகே3நைகே அம்ருதத்வமாநஶு:” என்று – கர்மத்தாலுமன்றியே, ப்ரஜையாலுமன்றியே, த4நத்தாலுமன்றியே த்யாக3த்தாலே சிலர் அம்ருதத்வத்தை அடைந்தார்கள் என்கையாலே, த்யாக3ம் மோக்ஷஹேது என்னுமிடம் ஸ்ம்ருதிஸித்3த4ம். 79
त्यागस्य प्रपत्तिपर्यायत्वं च शास्त्रसिद्धम् :- “ निक्षेपापरपर्यायो न्यासः पञ्चाङ्गसंयुतः । सन्न्यासस्त्याग इत्युक्तः शरणागतिरित्यपि॥” (पाञ्च ) इति । “भक्तौ रङ्गपते यथा खलु पशुच्छागादिवद्वेदनध्यानोपासनदर्शनादिवचसामिच्छन्त्यभिन्नार्थताम् । व्यक्त्यैक्याच्छरणागतिप्रपदनत्यागाऽऽत्मनिक्षेपणन्यासाद्येषु तथैव तन्त्रनिपुणै: पर्यायता स्मर्यते॥” (न्यासतिलके 16) इति शास्त्रविद्भिरुक्तम् च । 80
இந்த த்யாக3ந்தான் ப்ரபத்திபர்யாயமாகச்சொல்லப்பட்டது – “நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க3ஸம்யுத: । ஸ ந்யாஸஸ்த்யாக3 இத்யுக்தம் ஶரணாக3திரித்யபி” என்று -நிக்ஷேபம் என்கிற நாமாந்தரத்தை உடைத்தான ந்யாஸமானது ஆநுகூல்யேத்யாதி3 பஞ்சாங்க3த்தோடு கூடியிருக்கும், இந்த ந்யாஸம் ஸந்ந்யாஸம் என்றும், த்யாக3ம் என்றும், ஶரணாக3தி என்றும் சொல்லப்பட்டது என்கையாலே. இப்படி அபி4யுக்தரும் சொன்னார்கள் :- “ப4க்தௌ ரங்க3பதே யதா2 க2லு பஶுச்சா2கா3தி3வத்3 வேத3நத்4யாநோடாஸந த3ர்ஶநாதி3 வசஸாமிச்ச2ந்த்யபி4ந்நார்த்த2தாம் । வ்யக்த்யைக்யாச்ச2ரணாக3தி ப்ரபத3நத்யாகா3ऽऽத்மநிக்ஷேபண ந்யாஸாத்3யேஷு ததை2வ தந்த்ரநிபுணை: பர்யாயதா ஸ்மர்யதே” என்று – ரங்க3பதியே! யாக3த்திலே ‘பஶு’ ஶப்3த3ம் சா2க3த்திலே பர்யவஸிக்குமாபோலே, ப4க்தியிலும் வேத3நம், த்4யாநம், உபாஸநம், த3ர்ஶநம் தொடக்கமான ஶப்3த3ங்களுக்கு அர்த்த2 பே4த3மில்லாமையை யாதொருபடி வேதா3ந்தவித்துக்கள் நிஶ்சயிக்கிறார்கள், ப்ரபத3நரூபையான வ்யக்தி ஒன்றாகையாலே, ஶரணாக3தி ப்ரபத3நம், த்3யாகம், ஆத்மநிக்ஷேபணம், ந்யாஸம் தொடக்கமான ஶப்3த3ங்களிலும் தந்த்ர நிபுணரான ஶாஸ்த்ரவித்துக்களாலே அப்படியே பர்யாயதை ஸ்மரிக்கப்படாநின்றது என்கையாலே. 80
“ भूयिष्ठां ते नम उक्तिं विधेम” (याजु. 1-4) इति नमोवाक्यस्य भूयिष्ठत्वश्रुत्या च, “ तस्मान्न्यासमेषां तपसामतितिक्तमाहु:” (तै.ना. 50) इति सर्वोपायश्रेष्ठतया श्रुतन्यासवाच्यत्वमवगम्यते।तस्मात्प्रपदनविधाभूतकार्पण्यसिद्धमुपायान्तरशून्यत्वमभिदधदयं नमश्शब्दः आत्मनो भगवदेकरक्ष्यत्वसिद्ध मनन्यशरणत्वं प्रकाशयति । 81
“பூ4யிஷ்டா2ம் தே நம உக்திம் விதே4ம” என்று – உனக்கு பூ4யிஷ்டை2யான நம உக்தியைப் பண்ணுகிறோமென்று நமோ வாக்யத்தை பூ4யிஷ்டை2யாகச் சொல்லுகையாலே, “தஸ்மாந்ந்யாஸமேஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு:” என்று – தபஸ்ஸுக்களெல்லாவற்றுக்கும் அதிரிக்தமாக ந்யாஸத்தைச் சொல்லா நின்றார்களென்று ஶ்ருதியில் சொல்லப்பட்ட ஸர்வோபாய ஶ்ரேஷ்ட2மான நியாஸரூபப்ரபத3நத்தை பூ4யிஷ்ட2 ஶப்3த3த்தாலே ஶ்ரேஷ்ட2மாகச் சொல்லப்பட்ட நமஶ்ஶப்3த3மானது சொல்லுகிறதாகவுமாம். ஆகையாலே ப்ரபத3நவிதா4பூ4தமான கார்ப்பண்யத்தாலே ஸித்3த4மான உபாயாந்தர ஶூந்யத்வத்தைச் சொல்லுகிற இந்த நமஶ்ஶப்3த3மானது ஆத்மாவினுடைய ப4க3வதே3கரக்ஷ்யத்வஸித்3த4மான அநந்ய ஶரணத்வத்தை ப்ரகாஶிப்பிக்கிறது என்றதாய்த்து. 81
ननु स्वरूपयाथात्म्यपरस्यास्य मन्त्रस्य स्वरूपानुरूपोपायप्रदर्शकत्वेन, भक्तेरपि जीवपरमात्मयाथात्म्यज्ञानपूर्वकत्वेन स्वरूपानुरूपत्वात्, “नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते” (गी. 9-14), “मद्याजी मां नमस्कुरु” (गी.18-65) इति नमस्कारस्य भजनरूपत्वाच्च, अस्मिन्नेव नमश्शब्दे भक्तिरूपमपि प्रदर्शनीयम्। “अमृतस्यैष सेतु:” (मु) “फलमत उपपत्ते:” (शा.मी. 3-2-37) “त्वमेवोपायभूतो मे भव” ( भ. शा.) इत्युभयाधिकारिणामीश्वर एवोपायभूतः, तत्प्रसादनहेतुभूते भक्तिप्रपत्ती इति :
सत्यम् :- अथाप्यस्ति: ; “मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु” (गी. 18-65) इति भक्त्यवयवभूतनमस्कारमात्रं प्रदर्श्यते, प्रपत्तिस्वरूपतया प्रतिपादितं स्वप्रवृत्तिनिवृत्तिरूपमनन्योपायत्वमस्य शब्दार्थ इति । एवं भगवदेकरक्ष्यत्वसिद्धानन्यशरणत्वप्रयुक्तं नमनमेव तत्प्रसादनोपाय इति नमश्शब्दार्थो निरूप्यते । “नामयत्यपि वा देवं प्रह्वीभावयति ध्रुवम् । प्रह्वीभवति नीचे हि परो नैच्यं विलोकयन् । अतो वा नम उद्दिष्टं यत्तं नमयति स्वयम् ॥” (अहि.सं.) इति । 82
இவ்விடத்திலே ஸ்வரூபயாதா2த்ம்யபரமான இம்மந்த்ரமானது ஸ்வரூபாநுரூபமான உபாயத்தைக் காட்டுமளவில், ப4க்தியும் ஜீவபரயாதா2த்ம்யஜ்ஞாந பூர்வகமாகையாலே ஸ்வரூபாநுரூபமாகையாலும், “நமஸ்யந்தஸ்ச மாம் ப4க்த்யா நித்யயுக்தா உபாஸதே” என்று – என்னை நமஸ்கரியாநின்றுகொண்டு ப4க்தியாலே நித்யயுக்தரானவர்கள் உபாஸியாநின்றார்களென்றும், “மத்3யாஜீ மாம் நமஸ்குரு” என்று – என்னை ஆராதி4த்துக்கொண்டு என்னை நமஸ்கரி என்று நமஸ்காரத்தை ப4ஜநரூபமாகச் சொல்லுகையாலும், இந்த நமஶ்ஶப்3த3த்திலே ப்ரபத்தியேயன்றி ப4க்திரூபமும் காட்டப்படும்; “அம்ருதஸ்யைஷ ஸேது:” என்று – அம்ருதத்துக்கு இவன் ஸேது என்றும், “ப2லமத உபபத்தே:” என்று – ப2லம் இவனாலே, ஸர்வஶக்தியோக3மாகிற உபபத்தி உண்டாகையாலே என்றும் ஶ்ருதிஸூத்ரங்களிலே ப4ஜநத்திலேயும் ஈஶ்வரனே உபாயமென்று சொல்லி, “த்வமேவோபாயபூ4தோ மே ப4வ” என்று – நீயே எனக்கு உபாயமாகவேணும் என்கையாலே ப4க3வச்சா2ஸ்த்ரத்திலே ப்ரபத்தியிலும் ஈஶ்வரனே உபாயமென்று சொல்லுகையாலே இரண்டு அதி4காரிகளுக்கும் ஈஶ்வரனே உபாயமாய், அவனுக்கு ப்ரஸாத3நஹேதுபூ4தமாயன்றோ ப4க்திப்ரபத்திகளிருப்பது, ஆகையாலே இவ்விரண்டும் இப்பத3த்திலே தோற்றவேண்டாவோ என்னில் :
அப்படியேயாகிலும், ஒருவிஶேஷமுண்டு – “மாம் நமஸ்குரு” என்கிறவித்தால் ப4க்திக்கு அவயவபூ4தமான த்4யாநார்ச்சநப்ரணாமாதி3களில் நமஸ்காரமாத்ரமே இவ்விடத்தில் காட்டப்பட்டது; ப்ரபத்திஸ்வரூபமாகச் சொல்லப்பட்ட ஸ்வப்ரவ்ருத்திநிவ்ருத்திரூபமான அநந்யோபாயத்வம் இப்பத3த்துக்கு ஶப்3தா3ர்த்த2ம் என்று விஶேஷம். இப்படி ப4க3வதே3கரக்ஷ்யத்வஸித்3த4மான அநந்யஶரணத்வத்தாலே வந்த நமநமே தத்ப்ரஸாத3நோபாயம் என்று, ப4க3வச்சா2ஸ்த்ரத்திலே நமஶ்ஶப்3தா3ர்த்த2ம் நிர்வசிக்கப்படாநின்றது; “நாமயத்யபி வா தே3வம் ப்ரஹ்வீபா4வயதி த்4ருவம் । ப்ரஹ்வீப4வதி நீசே ஹி பரோ நைச்யம் விலோகயந் । அதோ வா நம உத்3தி3ஷ்டம் யத்தம் நமயதி ஸ்வயம்॥” என்று – ஸர்வேஶ்வரனை நமிப்பிக்கிறதாகவுமாம்; அதாவது அவனைத் தாழப்பண்ணுகை; ஶேஷபூ4தன்பக்கல் தாழ்ச்சியைக் கண்டால் ஶேஷியானவன் தானே தாழநிற்குமிறே, ஆகையாலே அவனை நமிப்பியாநிற்குமென்று “நம:” என்று சொல்லிற்றாகவுமாம் என்று நிர்வசிக்கப்பட்டது. 82
तत एवास्य निक्षेपाद्यङ्गषट्कसम्पत्तिर्भगवच्छास्त्रे प्रतिपाद्यते । “ वाचा नम इति प्रोच्य वपुषा मनसा च यत् । तन्नमः पूर्णमुद्दिष्टमतोऽन्यन्न्यूनमुच्यते ॥ इयं करणपूर्तिस्स्यावङ्गपूर्तिमिमां शृणु । शाश्वती मम संसिद्धिरियं प्रह्वीभवामि यत् ॥ पुरुषं परमुद्दिश्य न मे सिद्धिरथोऽन्यथा । इत्यङ्गमुदितं श्रेष्ठं फलेप्सा तद्विरोधिनी ॥ अनादिवासनारोहादनैश्वर्यात्स्वभावजात् । मलावकुण्ठितत्वाच्च दृक्क्रियाविहतिर्हि या ॥ तत्कार्पण्यं तदुद्बोधो द्वितीयं हयङ्गमीदृशम् । स्वस्वातन्त्र्यावबोधस्तु तद्विरोध उदीर्यते ॥ परत्वे सति देवोऽयं भूतानामनुकम्पनः । अनुग्रहैक धीर्नित्यमित्येतत्तु तृतीयकम् ॥ उपेक्षको यथा कर्मफलदायीति या मतिः । विश्वासात्मकमेतत्तु तृतीयं हन्ति वै सदा ॥ एवंभूतोप्यशक्तस्सन् न त्राणं भवितुं क्षमः । इति बुद्धयास्य देवस्य गोप्तृशक्तिनिरूपणम् ॥ चतुर्थमङ्गमुद्दिष्टममुष्य व्याहतिः पुनः । उदासीनो गुणाभावादित्युत्प्रेक्षा निमित्तजा ॥ स्वस्य स्वामिनि वृत्तिर्या प्रातिकूल्यविवर्जनम् । तदङ्गं पञ्चमं प्रोक्तमाज्ञाव्याघातवर्जनम् ॥ अशास्त्रीयोपसेवा तु तद्व्याघात उदीर्यते । चराचराणि भूतानि सर्वाणि भगवद्वपुः ॥ अतस्तदानुकूल्यं मे कार्यमित्येव निश्चयः । षष्ठमङ्गं समुद्दिष्टं तद्विघातो निराकृतिः ॥ एवमङ्गैरुपाङ्गैश्च नमनं ते प्रकीर्तितम्।” (अहि.सं.) 83
இப்படி இந்நமஸ்ஸானது ஶரணாக3தியாகையாலேயிறே இதுக்கு ஆத்மநிக்ஷேபப்ரதா4நமான அங்க3ங்கள் ஆறையும் ஶாஸ்த்ரத்திலே சொல்லிற்று; “வாசா நம இதி ப்ரோச்ய வபுஷா மநஸா ச யத் । தந்நம: பூர்ணமுத்3தி3ஷ்டமதோऽந்யந்ந்யூநமுச்யதே॥” என்று – வாக்காலே “நம:” என்று சொல்லி, நெஞ்சாலே நமஸ்ஸைப்பண்ணி, ஶரீரத்தாலே நமஸ்கரிக்கிறானென்கிறவிது யாதொன்று, அது பூர்ணமான நமஸ்ஸு, இதிலே ஒன்றொழியிலும் குறைவாயிருக்குமென்று சொல்லி, “இயம் கரணபூர்த்திஸ்ஸ்யாத3ங்க3பூர்த்திமிமாம் ஶ்ருணு” என்று – இது நமஸ்ஸுக்குக் கரணபூர்த்தியாயிருக்கும், இதினுடைய அங்க3பூர்த்தியைக் கேட்கலாகாதோ என்று ஶுஶ்ரூஷையைப் பிறப்பித்து “ஶாஶ்வதீ மம ஸம்ஸித்3தி4ரியம் ப்ரஹ்வீப4வாமி யத் । புருஷம் பரமுத்3தி3ஶ்ய ந மே ஸித்3தி4ரதோऽந்யதா2। இத்யங்க3முதி3தம் ஶ்ரேஷ்ட2ம் ப2லேப்ஸா தத்3விரோதி4நீ॥” என்று – பரனான புருஷனைப்பற்ற இந்நமஸ்ஸால் வருகிற தாழ்ச்சியை உடையனாகாநின்றேன் என்கிற இது யாதொன்று, அதுவே நிலைநின்ற புருஷார்த்த2ம், இதொழிய வேறொரு ப்ரகாரத்தாலும் இங்கு புருஷார்த்த2ம் இல்லை என்கிற பாரதந்த்ர்யமே ப2லமாக அநுஸந்தி4க்கையாகிற ஆத்மநிக்ஷேபம் ஶ்ரேஷ்ட2மான அங்க3மாகச் சொல்லப்பட்டது. இதுக்கு ப2லஶ்ரத்3தை4 விரோதி4யாய் இருக்குமென்றும்; “அநாதி3வாஸ்நாரோஹாத3நைஶ்வர்யாத்ஸ்வபா4வஜாத்। மலாவகுண்டி2தத்வாச்ச த்3ருக்க்ரியாவிஹதிர்ஹி யா । தத்கார்ப்பண்யம் தது3த்3போ3தோ4 த்3விதீயம் ஹ்யங்க3மீத்3ருஶம் । ஸ்வஸ்வாதந்த்ர்யாவபோ4த4ஸ்து தத்3விரோத4 உதீ3ர்யதே॥” என்று – அநாதி3வாஸனையினுடைய கிளப்பத்தாலும், ஸ்வாபா4விகமான அநைஶ்வர்யமுண்டு – அஸாமர்த்2யம், அத்தாலும், கர்மக்ருதமான அஜ்ஞாநாதி3மலத்தாலே மூடப்படுகையாலும், ஜ்ஞாநயோக3 கர்மயோகா3தி3களின்றியிலே இருக்கையாகிற அது கார்ப்பண்யம், இதினுடைய அறிவு இப்படி இரண்டாம் அங்க3மாயிருக்கும்; ஸ்வாதந்த்ர்யஜ்ஞாநமானது அந்த கார்ப்பண்யத்துக்கு விரோதி4யாகச்சொல்லப்படுகிறதென்றும்; “பரத்வே ஸதி தே3வோऽயம் பூ4தாநாமநுகம்பந: ।அநுக்3ரஹைகதீ4ர்நித்யமித்யேதத்து த்ருதீயகம் । உபேக்ஷகோ யதா2கர்மப2லதா3யீதி யா மதி:। விஶ்வாஸாத்மகமேதத்து த்ருதீயம் ஹந்தி வை ஸதா3॥” என்று ஸர்வஸ்மாத்பரனாயிருக்கச் செய்தேயும் சேதநனளவில் க்ருபாபரனாய்க்கொண்டு என்றும் அநுக்3ரஹிக்கையொன்றிலுமே நெஞ்சையுடையனாயிருக்குமென்கிற விஶ்வாஸம் மூன்றாமங்க3ம், இத்தை, கர்மத்துக்கீடான ப2லத்தைத் தருகையாலே உபேக்ஷகனாயிருக்குமென்கிற நினைவு எப்பொழுதும் அழியாநிற்குமென்றும்; “ஏவம்பூ4தோऽப்யஶக்தஸ்ஸந் ந த்ராணம் ப4விதும் க்ஷம: । இதி பு3த்3த்4யாऽஸ்ய தே3வஸ்ய கோ3ப்த்ருஶக்திநிரூபணம்। சதுர்த்த2மங்க3முத்3தி3ஷ்டமமுஷ்ய வ்யாஹதி: புந:। உதா3ஸீநோ கு3ணாபா4வாதி3த்யுத்ப்ரேக்ஷாநிமித்தஜா” என்று – இப்படி அநுக்3ரஹபு3த்3தி4யாயிருந்தானேயாகிலும், அஶக்தனாகில் ரக்ஷகனாகமாட்டானென்று நினைத்து, இந்த ஈஶ்வரனுடைய ரக்ஷகத்வநிரூபணமாகிற கோ3ப்த்ருத்வவரணம் நாலாமங்க3மாகச் சொல்லப்பட்டது. இதுக்கு விரோத4ம் இந்த ரக்ஷகத்வஶக்தியாகிற கு3ணமில்லாமையாலே உதா3ஸீநனாயிருக்குமென்கிற நினைவடியாக உண்டாம் என்றும்; “ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா ப்ராதிகூல்யவிவர்ஜநம்। தத3ங்க3ம் பஞ்சமம் ப்ரோக்தமாஜ்ஞாவ்யாகா4தவர்ஜநம்॥ அஶாஸ்த்ரீயோபஸேவா து தத்3வ்யாகா4த உதீ3ர்யதே॥” என்று – ஶேஷபூ4தனுக்கு ஸ்வாமிபக்கல் அவனாஜ்ஞை அழியாமல் நடக்கையாகிற ப்ராதிகூல்யவர்ஜநம் அஞ்சாமங்க3மாகச் சொல்லப்பட்டது, அஶாஸ்த்ரீயங்களை ஸேவிக்கை அதுக்கு விரோதி4 என்றும், “சராசராணி பூ4தாநி ஸர்வாணி ப4க3வத்3வபு:। அதஸ்ததா3நுகூல்யம் மே கார்யமித்யேவ நிஶ்சய: ॥ ஷஷ்ட2மங்க3ம் ஸமுத்3தி3ஷ்டம் தத்3விகா4தோ நிராக்ருதி:। ஏவமங்கை3ருபாங்கை3ஶ்ச நமநம் தே ப்ரகீர்த்திதம்॥” என்று – சராசரங்களான எல்லா பூ4தங்களும் ப4க3வானுக்கு ஶரீரமாயிருக்கும், ஆகையாலே அதினுடைய ஆநுகூல்யமே எனக்கு கர்த்தவ்யம் என்று நிஶ்சயிக்கையாகிற ஆநுகூல்யஸ்ய ஸங்கல்பம் ஆறாமங்க3மாகச் சொல்லப்பட்டது. அதுக்கு விரோதி4 பூ4தஹிம்ஸை என்றும் சொல்லி, இப்படி அங்க3ங்களோடும் உபாங்க3ங்களோடும் கூடின நமநம் உனக்குச் சொல்லப்பட்டதென்று சொல்லிற்றிறே. 83
अथवा न्यासवाचकोऽयं नमश्शब्दः, “ न्यास इति ब्रह्मा, ब्रह्मा हि परः” (तै. ना. 49 ) इत्यादिश्रुतिसिद्धं साक्षादुपायभूतं परमात्मानमभिधत्ते । तथा च शास्त्रोक्तं- “ पन्था नकार उद्दिष्टो मः प्रधान उदीर्यते । विसर्गः परमेशस्तु तस्यार्थोऽयं निरूप्यते ॥ अनादिः परमेशो यश्शक्तिमानच्युतः प्रभुः।स्वप्राप्तये प्रधानोऽयं पन्था नमननामवान्॥” (अहि.सं) इति।तस्मादात्मनो ज्ञातृत्वबलायात- कर्तृत्वनिबन्धनस्वातन्त्र्यनिवर्तनसिद्धात्यन्तपारतन्त्र्यप्रयुक्तमनन्यशरणत्वं शरणागतिस्वरूपं चानेन पदेन प्रतिपादितमिति । 84
॥इतिनमश्शब्दार्थनिरूपणम्॥
அங்ஙனன்றியே, ந்யாஸவாசகமான இந்த நமஶ்ஶப்3த3மானது, “ந்யாஸ இதி ப்3ரஹ்ம ப்3ரஹ்மா ஹி பர:” என்று ‘ந்யாஸ ஶப்3த3ம் பரப்3ரஹ்மவாசகமென்று ஶ்ருதி சொன்ன ப்ரகாரத்திலே ஸாக்ஷாது3பாயபூ4தனான பரமாத்மாவைச் சொல்லுகிறதாகவுமாம். எங்ஙனே என்னில் :- “பந்தா2 நகார உத்3தி3ஷ்டோ ம: ப்ரதா4ந உதீ3ர்யதே । விஸர்க்க3: பரமேஶஸ்து தஸ்யார்த்தோ2ऽயம் நிரூப்யதே ॥ அநாதி3: பரமேஶோ ய: ஶக்திமாநச்யுத: ப்ரபு4: । ஸ்வப்ராப்தயே ப்ரதா4நோऽயம் பந்தா2 நமநநாமவாந்॥” என்று – நமஶ்ஶப்3த3த்தில் நகாரம் பந்தா2வான உபாயமாகச் சொல்லப்படுகிறது, மகாரம் அதுவே ப்ரதா4நமென்று நிரூபிக்கப்படுகிறது, விஸர்ஜநீயம் அந்த ப்ரதா4ந பந்தா2 ஸர்வேஶ்வரனென்று சொல்லப்படுகிறது, ஆக நமஸ்ஸுக்குப் பொருளாகச் சொல்லப்படுகிறது – அநாதி3யாய், ஸர்வாதி4கனான ஈஶ்வரனாய், ஸர்வஶக்தியுக்தனாய், அச்யுதனாகையாலே தன்னைப்பற்றினாரை விடாதவனாய், ஸ்வதந்த்ரனாயிருக்கிற ஸர்வேஶ்வரன், தன்னைப்பெறுகைக்கு ப்ரதா4நமான வழி தானே என்கிற அர்த்த2த்தைக்காட்டுகையாலே, நமஸ்ஸைத் தனக்கு நாமமாக உடையவனென்று ப4க3வச்சா2ஸ்த்ரத்திலே இந்நமஸ்ஸுக்கு ஸ்தூ2லமென்றும் ஸூக்ஷ்மமென்றும், பரமென்றும் சொல்லப்படுகிற மூன்று அர்த்த2த்தில் சரமமான பரமென்கிற அர்த்த2மாகச்சொல்லப்பட்டது. ஆகையாலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வப3லத்தாலே வந்த கர்த்ருத்வமடியான ஸ்வாதந்த்ர்யத்தினுடைய நிவர்த்தநத்தாலே உண்டான அத்யந்தபாரதந்த்ர்யப்ரயுக்தமான அநந்யஶரணத்வமும், உபாயபூ4தனான ஈஶ்வரவிஷயத்திலே ஶரணாக3தியினுடைய ஸ்வரூபமும் இப்பத3த்தில் ப்ரதிபாதி3க்கப்பட்டது. 84
நமஶ்ஶப்3தா3ர்த்த2 நிரூபணம் முடிந்தது