ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பிள்ளை லோகம் ஜீயர் அருளிச்செய்த
பெருமாள் திருமொழி
தனியன்கள் வ்யாக்யாநம்
எம்பெருமானார் அருளிச்செய்தது.
- இன்னமுதூட்டுகேனிங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீரப்பெருமாள் – பொன்னின்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசேகரனென்றே கூறு.
பதவுரை: – பைங்கிளியே – பசுநிறத்தையுடைய மடக்கிளியே!- இன் அமுதம் ஊட்டுகேன் – இனிமையான அம்ருதத்தை உண்ணக் கொடுக்கிறேன்; இங்கே வா – என் சமீபம் வா; தென் அரங்கம் – தெற்குதிக்கிலுள்ள திருவரங்கத்தைக் குறித்து, பாடவல்ல – ( இனிய கவிகளை ) இயற்றவல்லராய், சீர் – பக்த்யாதி குணங்களால் நிரம்பியவராய், பெருமாள் – “பெருமாள்” என்ற திருநாமத்தை உடையவராய், பொன்னின் சிலை சேர் – விரும்பத்தக்கதாய் வில்லுக்கு நிகரான புருவத்தையுடைய, நுதலியர் வேள் – ஸ்திரீகளுக்கு மன்மதன் போல் மநோஹரராய், சேரலர்கோன் – சேரவம்சத்தவர்களுக்கெல்லாம் அதிபதியாய், எங்கள் குல- ப்ரபந்நரான எங்கள் குலத்துக்கு, சேகரன்- சிரோபூஷணமான
‘குலசேகரப்பெருமாள்’, என்றே கூறு – என்கிற திருநாமத்தையே வாயால் பிதற்று.
அவதாரிகை:- ( இன்னமுதமூட்டுகேன்) இதில், திவ்ய தேஶத்திலே வர்த்திக்கும் திர்யக்குகள் தான் திருநாமங்களைச் சொல்லவற்றாயிறே இருப்பது. ஆகையால் * ( ஶகுநாநூதித ப்ரஹ்மகோஷம்– ஸ்ரீ பராசர பாட்டர் அருளிய – ஸ்ரீ ரங்கநாத ஸ்தோத்ரம் – 5, ‘शकुनानूदित ब्रह्मघोषाम्’ ) என்றும், “பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே!” – பெரிய திருமொழி ( 4-9-5) என்றும்,“அறுகால் வரிவண்டுக
ளாயிர நாமம் சொல்லிச் சிறுகாலைப் பாடும்” – பெரியாழ்வார் திருமொழி (4–2-8) என்றும், “எல்லியம் போதிருஞ்சிறைவண்டெம்பெருமான் குணம்பாடி”- பெரியாழ்வார் திருமொழி ( 4-8-8) என்றும், “அள்ளியம் பொழில்வாயிருந்து வாழ்குயில்கள் அரியரியென்றவையழைப்ப” – பெரிய திருமொழி ( 4-10-7) என்றும், a )“செவ்வாய்க்கிளி நான்மறை பாடும்” – பெரிய திருமொழி ( 3-2-6) என்றும் சொல்லுகையாலே ராம பக்தரான குலஶேகரர், ராமன் திருநாமத்தை அவற்றுக்கு கற்பித்துக் கேட்குமா போலே. குலஶேகர பக்தரானவர்களும் அவர் திருநாமங்களை அவற்றின் வாயாலே கேட்க இச்சிக்கிறபடியைச் சொல்லுகிறதாகவுமாம்.
அன்றிக்கே, b )“ராமாயணமென்னும் பத்திவெள்ளம், குடிகொண்ட கோயில் இராமாநுசன்” – இரா-நூ (37) என்றும்,
c )“பொன்னரங்கமென்னில் மயலேபெருகுமிராமாநுசன்”- இரா-நூ(35) என்றுமிறே ஸ்ரீராமாயணத்திலும் ஸ்ரீரங்கதாமத்திலும், எம்பெருமானார் மண்டியிருப்பது; ஸ்ரீ குலஶேகரப் பெருமாளும்,d )“எல்லையில் சீர்த்தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்றதுமுதலாத் தன்னுலகம் புகாதீறா”- பெரு-திரு (10-11) என்றும், e) “எம்பெருமான்றன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோமின்றே” – பெரு-திரு (10-8) என்றும், f )“ ரங்கயாத்ரா திநே திநே – रङ्गयात्रा दिने दिने “- முகுந்த மாலை தனியன் என்றும், g )“அணியரங்கன் திருமுற்றம்” – பெரி-திரு (1-10) என்றும், h)“அரங்கனடியினைத் தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாம்”-பெரு-திரு(10-8) என்றும், இரண்டையும் ஆதரித்துக் கொண்டிறேப் போருவது, ஆகையால், i)“கொல்லிகாவலன் சொல் பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமநிராமாநுசன்”- இரா-நூ(14) என்னும்படி ராஜாவான ஸ்ரீ குலஶேகரப் பெருமாளிடத்திலே யதிராஜரான எம்பெருமானார் மடுவிட்டிருப்பது; அற்றபத்தர் அபிமாநத்திலே ஒதுங்கிப்போருகிற ஆழ்வான்போல்வாரையாய்த்து “இன்னமுதமூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே” என்கிறாராகவுமாம். கிளியும் கற்பித்ததே சொல்லும்; இவரும் கற்பியாவைத்தமாற்றமிறே சொல்லுவது; மேல்சொல்லுமவரன்றே. சொன்னதைச் சொல்லுமவரிறே; ஆகையால், கூரத்தாழ்வான் போல் வாரைக் கொண்டு குலஶேகராழ்வார்
வைபவத்தைக் கூறுவிக்கிறார், “இன்னமுதூட்டுகேன் – கூறு“ என்று.
வ்யாக்யாநம்:- (இன்னமுதூட்டுகேன்) * “இன்னடிசிலொடு பாலமுதூட்டியெடுத்தவென்கோலக்கிளியை“– நாச்சியார் திருமொழி (5-5) என்னக்கடவதிறே. இங்கு “தேனும்பாலுமமுதுமாய திருமால் திருநாமத்தையிறே ஊட்டி வளர்த்தது; பெரிய திருமொழி (6-10-6), அதுதோன்ற ஆழ்வான் வலத்திருச்செவியிலே முன்பு ப்ரஸாதித்த த்வயத்தை மீளவும் ப்ரஸாதித்தருளிற்று.( இங்கேவா) என்று, “திருநாமம் சொல்” என்றத்தால் வடிவில் பிறந்த ஹர்ஷத்தைக் கண்டு வரவழைக்கிறது. (பைங்கிளியே) பசுத்து மரதகம் போலே இருக்கிற மடக்கிளியே! இத்தால் “என்னாருயிர்க்காகுத்தன் நின்செய்யவாயொக்கும் வாயன்கண்ணன் கைகாலினன் நின்பசும்சாம நிறத்தன்” – திருவாய்மொழி ( 9-5-6) என்னும்படியான ரூபஸாம்யத்தைச் சொல்லுகிறது. “பரமம் ஸாம்யமுபைதி – परमं सांयमुपैति “- முண்டகம் (3-1-3) இறே.
எதுக்காக என்னை அழைக்கிறதென்னில்;( “தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னின் சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோனெங்கள் குலசேகரனென்றே கூறு) என்கிறது. தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாளாவது:- a) “இருளிரிய”- பெரிய திரு (1-1) b)”தேட்டருந்திறல்தேன்”- பெரிய திரு (2-1) c)”மெய்யில்வாழ்க்கை” பெரிய திரு (3-1) என்கிற மூன்று திருமொழியிலும் பாடி, முடிவிலும் d) “யாவரும் வந்தடி வணங்க அரங்கநகர்த்துயின்றவனே“-பெரிய திரு (8-10) என்றும், மற்றும் திருமலை முதலாயிருக்கிற ஆராமங்களான திருப்பதிகளையும் e)”காகுத்தா கண்ணனே”-திருவாய் (7-2-3) என்றும், அர்ச்சாவதாரத்துக்கடியான அவதாரங்களையும் அருளிச்செயது தலைக்கட்டுகையாலும் அவர்தாம், f )“செருவிலே அரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனாராகையாலும்,- திருமாலை -11) g) “வெண்ணையுண்ட வாயனாகையாலும்’– அமலனாதி -10 , எல்லாம் திருவரங்கத்திருப்பதி விஷயமாகலாமிறே, பொன்னின் சிலைசேர் நுதலியர்வேளாகையாவது: ஸ்ப்ருஹணீயமான வில்லுக்கு ஸத்ருஶமான புருவத்தை முகத்திலே சேர்ந்துடைய ஸ்த்ரீகளுக்கு ரஞ்சநீயராயிருக்கிறவர். வேள் – காமன், h)(“கந்தர்ப்ப இவ மூர்த்திமாந்- कन्दर्प इव मूर्तिमान्।।” ராம.ஸு 5.34.30)
“காமர்மானேய்நோக்கியர்க்கு” – திருவாய்( 5-8-11) என்னைக்கடவதிறே. இத்தால், ஜ்ஞானத்துக்கு மேலான ஸ்வரூபதாந்தியை உடையவர்களுக்கு தர்ஶநீயராயிருக்குமவரென்றபடி.
(சேரலர்கோன்) சேரவம்ஶத்திலவர்கட்கெல்லாம் ராஜாவென்கை. (“ராஜாதிராஜஸ்ஸர்வேஷம்”, “ राजादिराजस्सर्वेषां ” – மஹாபாரதம் ), கோன் – ராஜா; குடிக்கு நிர்வாஹகரென்றபடி. ( எங்கள் குலசேகரன் ) ப்ரபந்நகுலஶேகரனென்கை. “இராமாநுசனெங்குலக்கொழுந்து”-இரா-நூ (60) என்னுமாபோலே (குலசேகரனென்றே கூறு) நான் வளர்த்த சிறுகிளிப்பைதலே! இன்குரல் நீ மிழற்றாதே, குலஶேகரனென்றே கூறு;கூறினவாய்க்கு அமுதமாய திருமால் திருநாமமான இன்னமுதம் ஊட்டுகேன்;ஆகையாலே குலஶேகரனென்றே கூறு.
*(“வக்தவ்யம் ஆசார்ய வைபவம்”) என்னக்கடவதிறே.
- ஆரங்கெடப்பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங்கொடு குடப்பாம்பிற்கையிட்டவன் மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோற் கொல்லிகாவலன் வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே.
பதவுரை:- ஆரம் கெட — ( மந்திரிகளின் சூழ்ச்சியால்) முக்தாஹாரம் காணாமல் போக, பரன் அன்பர் கொள்ளார் என்று – ஸ்ரீவைஷ்ணவர்கள் பிறருடைய பொருளைத் தொடமாட்டார்கள் என்று சொல்லி, அவர்களுக்கே – ( களவு செய்தார்களென்று சொல்லப்பட்ட) ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலேயே, வாரம் கொடு – பக்ஷபாதம் கொண்டு, குடப் பாம்பில் கை இட்டவன் – பாம்புக்குடத்தில் கையிட்டவர், மாற்றலரை – விரோதிகளின், வீரம் கெடுத்த — வீர்யத்தை நிர்வீர்யமாகச் செய்த, செங்கோல் – செங்கோலையுடையவராய், கொல்லி காவலன் – கொல்லி என்னும் நகருக்கு நிர்வாஹகராய், வில்லவர் கோன் — மற்றுமுள்ள அரசர்களுக்கு அதிபதியாய் , சேரன் குலசேகரன் – சேரகுலத்திற்கே ரத்னம்போன்றவராய், முடிவேந்தர் — முடிசூண்ட அரசர்களுக்கு, சிகாமணியே — சிரோபூஷணமாயுள்ள குலசேகரப்பெருமாள் ஆவர்.
அவ:-( ஆரங்கெட) இதில், அவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில் பக்ஷபதித்திருக்கிறபடியைச் சொல்லுகிறது.
வ்யா:- (ஆரங்கெடவென்று தொடங்கி) ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில் அவர்க்குண்டான ப்ராவண்யத்தைக் குலைக்கவேணுமென்று மந்திரிகள் அவர் திருவாரத்தை எடுத்து மறையவைத்து அவர்கள் பேரிலே ஆரோபிக்க; அத்தைக்கேட்டு (பரனன்பர் கொள்ளாரென்று) பரவஸ்துவிலே பக்திபண்ணுமவர்கள் பரவஸ்துவைக் கொள்ளாரென்று ப்ரதிஜ்ஞை பண்ணி,
பரனன்பர் அல்லாதவர்களிறே h) பிறர் நன்பொருள் தன்னை நம்புவது “கண்ணிநுண் சிறுத்தாம்பு – 5”, இப்படியாகையால் ( அவர்களுக்கே வாரங்கொடு ) அவ்வளவன்றிக்கே அவர்கள் விஷயத்திலே பக்ஷபதித்து.|| “பாம்பார்வாய் கை நீட்டல் பார்த்தி”- பெரிய திருவ.(14) என்கிறபடியே பாம்புக்குடத்திலே அதின் படத்திலே படக் கையிட்டவர்; “அவர்கள் ஆபரணமெடார்கள்” என்று பணத்திலே கையிட்டவர்.
அப்படி செய்தவர் தான் அல்பரோவென்னில்; ஶத்ருக்களை நிரஶிக்கும் ஸார்வபௌமரென்கிறது (மாற்றலரை வீரங்கெடுத்த) என்று, ஶத்ருக்கள் வீர்யத்தை நிர்வீர்யமாகப் பண்ணினவிது எத்தாலே? என்னில்; செங்கோல் – ஆஜ்ஞையாலே. *”இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்.”- திருவிரு.(33)(கொல்லிகாவலன்) “குருகைக்காவலன்” என்னுமாப்போலே, “கொல்லி” என்கிற நகரத்துக்கு நிர்வாஹகரென்கை. (வில்லவர்கோன்) அவாந்தரராஜாக்களுக்கும் அதிராஜரென்கை. அன்றிக்கே,
“வில்லவர்கோன்” என்று வில்லவரென்று பேர். “ கொல்லிகாவலன் கூடநாயகன் கோழிக்கோன் குலசேகரன்”- பெரு.திரு (2-10) என்றாறிரே. கோழி- உறையூர். உறையூருக்கும் இறையவரென்கிறது. அது சோழன் ராஜதாநி.
(சேரன்குலசேகரன்) சேரனுடைய குலத்துக்கு ஶேகரன், குலஶேகரர்- திருநாமம். இப்படி ராஜாதிராஜராகையாலே( முடிவேந்தர் சிகாமணி ) என்கிறது. முடிவேந்தர் ஶிகாமணியாவது:- மணிமகுடந்தாழத் “துளங்கு நீண்முடியரசர்”- பெரிய திரு (5-8-9) அடியிலே வணங்குகையாலே. “மாலடிமுடிமேல் கோலமாம் குலசேகரன்”- பெரு-திரு (7-11)
என்று தமக்கிருக்குமாப் போலே தாமும் அவர்களுக்கு ஶிகாமணி போலே ஶேகரிக்குமவராய் அலங்காராவஹராயிருக்கை.”பெருமணி வானவருச்சிவைத்த”- பெரிய திரு.(9-5-4) (ஈஶ்வராணாம் ஸ்ரீமத்கிரீடதடபீடிதபாதபீடம்) என்னக்கடவதிறே இவர் பெருமாளை. குலஶேகரப்பெருமாளான இவர் பெருமையும் அப்படியே. இப்படி முடிவேந்தர் சிகாமணியான ஐவரும் ஒருவரே என்னுதல்; “இப்படி பெரிய வேண்டப்பாட்டை உடையவர் குடப்பாம்பில் கையிடுவதே!” என்று ஈடுபாடாதல். இத்தால். “அரங்கன் மெய்யடியார்கள் தம் எல்லையிலடிமைத்திறத்தினிலென்று மேவுமனத்தனாம்”- பெரு திரு (2-10) என்றத்தை அநுஷ்டான பர்யவஸாயியாம்படி அநுஷ்டித்த ப்ரகாரத்தைச் சொல்லியிற்றாய்த்து.
பெருமாள் திருமொழித் தனியன் வ்யாக்யாநம் முற்றிற்று.
பிள்ளைலோகம்ஜீயர் திருவடிகளே சரணம்.
*****************
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த
பெருமாள் திருமொழி
வ்யாக்யானம்.
श्रीमत्कृष्णसमाह्वाय नमो यामुनसूनवे |
यत्कटाक्षैकलक्ष्याणां सुलभ: श्रीधरस्सदा ||
ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலஶ் ஸ்ரீதரஸ்ஸதா ||
அவதாரிகை.
ஸ்ரீய:பதியாய் ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாய் ஸமஸ்தகல்யாணகுணாத்மகனாய் உபயவிபூதியுக்தனாய் ஸர்வஸ்மாத்பரனான ஸர்வேஶ்வரனடியாகப் பெருமாள் பெற்றது பக்திரூபாபந்ந ஜ்ஞாநமாகையாலே, கர்மத்தாலே காண்கிறோமென்று ஆறியிருக்கலாவது தந்தலையாலே வந்ததாகிலிறே; அவன்றானே காட்டக் காண்கிறவராகையாலே அப்போதே காணவேண்டும்படி விடாய் பிறந்தது. பரமபதத்திலும் அநுபவிப்பது குணாநுபவமாகையாலே அந்த ஶீலாதி குணங்கள் பூர்ணமான கோயிலிலே அநுபவிக்க ப்ரார்த்தனையென்? என்னில்; ஸ்வாதந்த்ர்யம் பிறப்பேயுடையவராகையாலே, மநுஷ்யர் நிரோதிப்பார் பலருமுண்டாகையாலே, இங்கு வந்தநுபவிக்க மாட்டாதே “அடியார்கள் குழாங்களை- உடன் கூடுவதென்றுகொலோ” – திருவாய் (2-3-10) என்றும், “அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை” – திருவாய் (10-9-11) என்றும் நம்மாழ்வார் ப்ரார்த்தித்துப் பெற்ற பேற்றை இங்கே அநுபவிக்க ஆசைப்படுகிறார்.
அவதாரிகை முற்றிற்று.
- இருளிரியச்சுடர் மணிகளிமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபண மாயிரங்களார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அநந்தனென்னும்
அணிவிளங்குமுயர் வெள்ளையணையைமேவித்
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக்கோமளத்தைக் கண்டுகொண்டென்
கண்ணிணைகளென்று கொலோ களிக்குநாளே.
பதவுரை:- திருவரங்கப்பெருநகருள்- ஸ்ரீ ரங்கமென்னும் பெரிய நகரத்திலே, இருள் இரிய – இருளானது சிதறிப்போம்படி, சுடர் மணிகள்- ஜ்யோதிஸ்ஸையுடைய மாணிக்கங்கள், இமைக்கும்-விளங்கா நின்றுள்ள, நெற்றி- நெற்றியையும், இனத்துத்தி அணி-இரண்டாய்ச்சேர்ந்த திருவடி நிலை என்று சொல்லுகிறவற்றை உடைத்தான, பணங்கள் ஆயிரம் ஆர்ந்த-ஆயிரம் படங்களையும் பூர்ணமாகவுடையனாய் அரவு அரசன்-நாகங்களுக்கு அரசனாய்,பெருஞ்சோதி- மஹா தேஜஸ்வியான,அனந்தன் என்னும்-திருவனந்தாழ்வானாகிய அணி விளங்கும்-அழகு மிகுந்து, உயர் வெள்ளை அணையை- உயர்ந்த வெண்ணிறமான திருப்படுக்கையிலே, மேவி- பொருந்தி, தெள் நீர் பொன்னி – தெளிந்த நீரையுடைத்தான காவேரியானது, திரை கையால் அடிவருட – அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப்பிடிக்க, பள்ளிகொள்ளும் – கண்வளர்ந்தருளுகிறவராய், கருமணியை- நீலாத்நம் போன்றவராய், கோமளத்தை-ஒப்புயர்வற்ற ஸௌகுமார் யத்தையுடையவரான பெரியபெருமாளை, என் கண் இணைகள்- என்னுடைய கண்களானவை, கண்டு கொண்டு – இடைவிடாமல் ஸேவித்துக்கொண்டு, களிக்கும் நாள்- உகக்கும் நாள், என்று கொலோ – எந்நாளோ?
அவதாரிகை:- முதற்பாட்டு,(இருளிரியவித்யாதி) பர்யங்கவித்யையிற் சொல்லுகிறபடியேயிறே முமுக்ஷு மநோரதிப்பது; அத்தை இங்கே திருவநந்தாழ்வான் மேலே சாய்ந்து கிடக்கிறவிடத்திலே அநுபவிக்க
——————————————————————————————————–
அரு:-(ஸ்வாதந்த்ர்யம் பிறப்பேயுடையராகையாவது)ராஜாவாகையாலே ஸ்வாதந்த்ர்யம் பிறப்பேயுடையராய் மநுஷ்யரால் நிரோதிக்கப்பட்டிருப்பர்.
மநோரதிக்கிறார். ஸம்ஸாரி முக்தனாய்ச் சென்றால் (1) “ पादेनाध्यारोहति ” (பாதேநாத்யாரோஹதி) இத்யாதிப்படியே, எழுந்தருளியிருக்கிற பர்யங்கத்திலே மிதித்தேறினால் “ நீ யார்” என்றால், “நான் ராஜபுத்ரன்” என்பாரைப் போலே, (2) “ अहं ब्रह्मास्मि ” (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்றிறே இவன் சொல்லுவது.
வ்யாக்யாநம்:-(இருளிரியச் சுடர்மணிகளிமைக்கும் நெற்றி) இருள் சிதறிப்போம்படி ஜ்யோதிஸ்ஸையுடைய மணிகள் விழிக்கிற நெற்றியையும்.
(இனத்துத்தியணி பணமாயிரங்களார்ந்த) இனமானதுத்தி; அதாவது- இரண்டாய்ச் சேர்ந்த திருவடி நிலையென்று சொல்லுகிறவற்றையுடைத்தானா பணங்களாயிரத்தையும் பூர்ணமாகவுடையனாய். (அரவரசப்பெருஞ்சோதி) நாகராஜாவென்னும் மஹா தேஜஸ்ஸை யுடையவனாய். (அநந்தனென்னும்) எல்லாவற்றையும் வ்யாபித்து நிற்கிற ஸர்வேஶ்வரனை விளாக்குலை கொள்ளுகிற ஸ்வரூபகுணங்களை உடையனாகையாலே அநந்தனென்று சொல்லப்படுகிற.(என்னும்) ஸுமுகன், வாஸுகி, தக்ஷகன் என்றும் உண்டிறே; அவர்களிற்காட்டில் பகவத்ப்ரத்யாஸத்தியை உடையனென்னும் ப்ரஸித்தியை உடையவன். (அணி விளங்குமுயர் வெள்ளையணையை மேவி) அழகுமிக்க ஒக்கத்தையுடைத்தாய் மறுவற்ற வெள்ளைப்படுக்கையாகிற திருவனந்தாழ்வானை மேவி.
(திருவரங்கப்பெருநகருள்)(3) ” वैकुण्टे तु परे लोके “(வைகுண்டே து பரே லோகே) என்று சொல்லுமதுவும் இங்கே காணும் இவர்க்கு; இத்திருவரங்கமாகிற மஹாநகரத்திலே,(தெண்ணீர்ப்பொன்னி திரக்கையாலடிவருட) தெளிந்த நீரையுடைய காவேரி, திரைகளாகிற கைகளாலே திருவடிகளை வருட,(பள்ளிகொள்ளும் கருமணியை) திருவநந்தாழ்வான் மேலே ஒரு நீலாத்நம் சாய்ந்தாப்போலே கண்வளர்ந்தருளுகிறவனை(கோமளத்தை) கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்யமுடியவனை.(கண்டுகொண்டு) கலியர்(பசியுள்ளவர்), “ சோற்றைக் கண்டு கொண்டு” என்னுமாப் போலே, (என்கண்ணிணைகள்) பட்டினிவிட்ட
என் கண்கள்,(என்று கொலோ களிக்கும் நாளே) அங்கே கண்டு (4)”अहम्न्नमहमन्नं ” (அஹமந்நமஹமந்நம்) என்று கழிக்கும் களிப்பை இங்கே கண்டு களிப்பதென்றோ?
அரு :- முதற்பாட்டு.(இருளியிரியவித்யாதி) பர்யங்கவித்யையின் கர்மமேது? என்ன அருளிச்செய்கிறார்(ஸம்ஸாரி முக்தனாயித்யாதி)(அஹம்
ப்ரஹ்மாஸ்மி) என்றது, ப்ரகாரப்ரகாரி பாவஸம்பந்தத்தால் வந்த ஸாமாநாதிகரண்யம்.(துத்தி) திருமண்; அத்தை- திருவடி நிலை என்கிறது.
திருவனந்தாழ்வான் ஸர்வேஶ்வரனை மடியிலே வைத்துக் கொண்டிருக்கையாலே, (ஸ்வரூபம்) என்று திருமேனியைச் சொல்லுகிறது.
- வ்யோரீறைஞூறு துதங்களார்ந்த
வளையுடம்பிலழல்நாகம் உமிழ்ந்தசெந்தீ
வீயாதமலர்ச்சென்னி விதானமேபோல்
மேன்மேலும்மிக எங்கும்பரந்ததன்கீழ்
காயாம்பூமலர்ப்பிறங்க லன்னமாலைக்
கடியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
மாயோனை, மணத்தூணே பற்றிநின்று என்
வாயார என்றுகொலோ வாழ்த்துநாளே.
பதவுரை:- துதங்கள் ஆர்ந்த – ஸ்தோத்ரங்கள் நிறைந்த, வாய் ஓர் ஈர் ஐ
நூறு- ஒப்பற்ற ஆயிரம் வாயையும், வளை உடம்பில் — வெளுத்த திருமேனியையுமுடையவனாய், அழல்- ( எதிரிகள் அணுகவொண்ணாதபடி) தபிக்குமவனான, நாகம் – திருவநந்தாழ்வான், உமிழ்ந்த- இடைவிடாமல் கக்குகின்ற, செம் தீ- சிவந்த அக்நியானது, வீயாத மலர் சென்னி- எம்பெருமானுடைய பூ மாறாத திருமுடிக்கு, விதானமே போல் – மேற்கட்டியை போல்,எங்கும்- எல்லாவிடத்திலும் மேன்மேலும் – மேலும் மேலும், பரந்து மிக – மிகவும் பரவி நிற்க, அதன் கீழ்- அந்த அக்னியின் கீழ், காயா பூ மலர் பிறங்கலன்ன- காயாவின் அழகியபூக்களால் தொடுக்கப்பட்ட மாலையைப் போலிருப்பவனாய், மாலை – ஸர்வேஶ்வரனாய், கடி அரங்கத்து -மதிளை அரணாவுடைய கோயிலிலே, அரவணையில்- திருவநந்தாழ்வாழ்வானாகிப் படுக்கையில், பள்ளிகொள்ளூம் – கண்வளர்ந்தருளுகிற, மாயோனை- அதிசய
சேஷ்டிதனை, மணத்தூணே பற்றி நின்று- திருமணத் தூண்கள் இரண்டையும் பற்றி நின்று, என் வாயார வாழ்த்தும் நாள்- என் வாயாரத் துதிக்கும் காலம் என்றூகலோ – என்று ஏற்படுமோ?
வ்யா:- இரண்டாம் பாட்டு,(வாயோரீறைஞ்ஞூறு துதங்களார்ந்த) யஶோதைப்பிராட்டி க்ருஷ்ண ஸ்பர்ஶத்தால் வந்த ஸுகத்துக்குப் போக்குவிட்டேத்துமாப்போலே, பகவதநுபவஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே வந்த ப்ரீதிக்குப் போக்குவிட்டேத்துகைக்காக ஆயிரம் வாயையும்; துதங்களாவது:- ஸ்தோத்ராதிகளைப் புறப்படவிடுகை ஸ்துதமிறே.(வளையுடம்பிலழல்நாகம்) வெளுத்த நிறத்தையுடையனுமாய், ப்ரதிபக்ஷத்துக்கு வந்தணுக வொண்ணாதபடி அநபிபவநீயனாயிருக்கிற திருவநந்தாழ்வான்.(உமிழ்ந்த செந்தீ வீயாதமலர்ச் சென்னி விதாநமே போல் மேன்மேலும் மிகவெங்கும்
பரந்ததன்கீழ்) அவன் வாயாலே இடைவிடாதே உமிழ்கிற அக்நி ஜ்வாலைகளின் ஜ்யோதிஸ்ஸாகிற மேற்கட்டியின் கீழே. ( வீயாதாமலர்ச் சென்னி) பூ மாறாத திருமுடியை உடையனுமாய்.
(காயாம்பூமலர்ப் பிறங்கலன்னமாலை) காயாவின் அழகிய பூவாலே செய்யப்பட்ட மாலைபோலேயிருக்கிற ஸர்வேஶ்வரனை, (கடியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்) அரணாகப்போரும் மதிளையுடைய கோயிலிலே அப்படி பரிவனான திருவநந்தாழ்வான் மேலேகண்வளர்ந்தருளுகிற.(மாயோனை) (5) “स मया बोधित: श्रीमान् “(ஸ மயா போதித:ஸ்ரீமாந்)என்னும்படி கண்வளர்ந்தருளுகிற ஆஶ்சர்ய பூவனை.(மணத்தூணேபற்றி நின்று) *ஆமோத ஸ்தம்பத்வயங்களைப்பற்றி நின்று. அழகிலே அகப்பட்ட ஹர்ஷத்தாலே தள்ளுண்ணாமே இரண்டு ஸ்தம்பங்களைப்பற்றி நின்று.(வாயாறவென்று கொலோ வாழ்த்துநாளே)கண்டால் கொள்வது வேறொரு ப்ரயோஜநமிழலையிறே; “பல்லாண்டு பல்லாண்டு” என்னுமித்தனையிறே.
அரு:- இரண்டாம் பாட்டு.(வாயோரித்யாதி)துதமென்றால், ஸ்தோத்ரத்தைக் காட்டுமோ? என்ன அருளிச்செய்கிறார்.
*திருவரங்கன் கர்ப்பக்ருஹத்துக்கு அருகிலிருக்கும் இரண்டு “திருமணத் தூண்கள்.
(ஸ்துதமிறே) என்று, வடதிரிச்சொல்- ஆரியச்சிதைவு என்றபடி, “விதாநமேபோல் மிகவெங்கும் பரந்திருக்கிற அழல்நாகம்- மேன்மேலும் உமிழ்ந்த செந்தீயாகிற அதன்கீழே” என்று அந்வயித்து அருளிச்செய்கிறார் (அவன் வாயாலேயித்யாதி). வீயாதாமலர்ச் சென்னி- பெருமாள் திருமுடி; அன்றியே, “அழல்நாகம் மேன்மேலும் உமிழ்ந்த செந்தீயினுடைய விதாநம்போலே மிக எங்கும் பரந்த தேஜஸ்ஸின் கீழே” என்று இங்ஙனேயும் யோஜிப்பது, பிறங்கல்- மாலை, கடியென்று- கட்டாய், அத்தாலே அரணான மதிளைச் சொல்லுகிறது; ஆமோதம்- பரிமளம்.
- எம்மாண்பிலயன் நான்குநாவினாலும்
எடுத்தேத்தி ஈரிரண்டுமுகமுங்கொண்டு
எம்மாடும்எழிற்கண்க ளெட்டினோடும்
தொழுதேத்தி இனிதிறைஞ்சநின்ற செம்பொன்
அம்மாந்தன்மலர்க் கமலக்கொப்பூழ்தோன்ற
அணியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
அம்மான்றனடியிணைக்கீழ் அலர்களிட்டு அங்கு
அடியவரோடுஎன்றுகொலோ அணுகுநாளே,
பதவுரை:- எம் மாண்பில் அயன்- எல்லாவிதத்தாலுமுண்டான பெருமையை உடைய ப்ரஹ்மா, நான்கு நாவினாலும் – (ஸ்தோத்ரம் செய்வதற்கென ஏற்பட்ட) தன்னுடைய நான்கு நாக்காலும், எடுத்து ஏத்தி- தன ஆர்வத்துக்குத் தக்கபடி தொழுது, ஈர் இரண்டு முகமும் கொண்டு –(நான்கு வேதங்களை ஓதுவதற்கென ஏற்பட்ட)நான்கு முகங்களாலும், எம்மாடும் – எல்லாப் பக்கங்களிலும்,எழில் கண்கள் ஏட்டினோடும்- அழகிய – எட்டு கண்களுடன், தொழுது – கைகூப்பி ஏத்தி – ஸ்தோத்ரம் பண்ணி, இனிது இறைஞ்ச நின்ற- ஸாஷ்டாங்கமாக ஸேவிக்கும்படி நின்ற, செம் பொன் அம்மான் தன் – சிவந்த பொன் போல் ஸ்ப்ருஹணீயனாய் ஸ்வாமியான தன்னுடைய, கமலா மலர்- தாமரைப்பூவையுடைய, கொப்பூழ் தோன்ற – திருநாபி தோன்ற, அணி அரங்கத்து- ஸம்ஸாரத்துக்கு ஆபரணமான கோயிலிலே, அரவு அணையில் பள்ளிகொள்ளும் – திருவநந்தாழ்வான் மேல் கண்வளர்ந்தருளுகிற, அம்மான் தன் – ஸர்வேஶ்வரனுடைய, அடி இணைக்கீழ் – திருவடிகளின் கீழே, யாளர்கள் இட்டு- புஷ்பங்களை ஸமர்ப்பித்து, அங்கு அடியவரோடு- அங்கே அடியார்களோடு, அணுகும் நாள் – கிட்டும் நாள்,
என்று கொலோ – என்றைக்கோ?
வ்யா:- மூன்றாம் பாட்டு.(எம்மாண்பில் அயன்) எப்படிப்பட்ட மாட்சிமையுடைய ப்ரஹ்மா. அதாவது; ஸ்தோத்ராதிகளைப் பண்ணும் தன்மை குறைவற்றிருக்கை,(நான்கு நாவினாலும்)ஸ்தோத்ராதிகளுக்குப் பரிகரமான நாலுநாக்காலும்.(எடுத்தேத்தி) தன் ஶ்ரத்தைக்குத் தக்கபடி எடுத்தேத்தி.(ஈரிரண்டு முகமுங்கொண்டு) நாலு வேதத்துக்குச் சமைந்த நாலு முகமும் கொண்டு, (எம்மாடும்)பின்னும் முன்னும் மட்டங்களுமாகிற பர்யந்தங்களெங்கும்.(எழில் கண்களெட்டினோடும்) அழகை அனுபவிக்கைக்குப் பல கண்படைத்த ப்ரயோஜநம் பெற்றான்.(தொழுதேத்தியினிதிறைஞ்சநின்ற) ப்ரீதி ப்ரேரிதானாய்க்கொண்டு தொழுது ஸ்தோத்ராதிகளைப் பண்ணுவது தண்டனிடுவதாம்படி நின்ற.
(சென்பொனம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற) ஸ்ப்ரஹணீயமாய் இவ்வருகுண்டான கார்யவர்கத்துக்கெல்லாம் காரணமென்றும் மஹத்வம் தோற்றும்படியாயிருக்கிற தாமரைப் பூவையுடைய தன் திருநாபிதோன்ற.(அணியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளுமம்மான்றன்) ஸம்ஸாரத்திற்கு ஆபரணமான கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற ஸர்வேஶ்வரனுடைய,(அடியிணைக்கீழலர்களிட்டு) அவன் திருவடிகளின் கீழே புஷ்பரத்யுபகரணங்களைப் பணிமாறி, (அங்கடியவரோடென்றுகொலோவணுகுநாளே) அங்கு அந்தரங்க வ்ருத்தி செய்யுமவர்களோடே ஸஜாதீயனாய் நாளும் கிட்டுவது என்றோ? “அடியார்கள் குழாங்கள்” – திருவாய் (2-3-10)
——————————————————————————————
- மாவினைவாய் பிளந்துகந்தமாலை வேலை
வண்ணனை என்கண்ணனை வாங்குன்றமேந்தி
ஆவினை அன்றுயக் கொண்ட ஆயரேற்றை
அமரர்கள் தன்தலைவனை அந்தமிழினின்பப்
பாவினை அவ்வடமொழியைப் பற்றற்றார்கள்
பயிலரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
கோவினை, நாவுறவழுத்தி என்றன்கைகள்
கொய்ம்மலர்தூய் என்று கொலோ கூப்புநாளே.
பதவுரை:- மாலினை வாய் பிளந்து – கேசி என்னும் அஸுரனின் வாயைக் கிழித்து, உகந்த- (ஆஶ்ரிதவிரோதி ஒழிந்தானென்று) மகிழ்ந்த, மாலை- அடியவர்களிடம் அன்பு பூண்டவனாய், என் கண்ணனை – எனக்கு ஸுலபனான க்ருஷ்ணனாய், அன்று – இந்த்ரன் கல்மழை பெய்வித்த அன்று, வால் குன்றம் ஏந்தி – வலிமை பொருந்திய கோவர்த்தன மலையைத் தூக்கி, ஆவினை உய்யக்கொண்ட – பசுக்களை ரக்ஷித்த, ஆயர் ஏற்றை – இடையர்களுக்குத் தலைவனாய், அமரர்கள் தம் தலைவனை- நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய், அம் தமிழின் – அழகிய தமிழாலாகிய, இன்பப்பாவினை – பரம போக்யமான அருளிச்செயலைப்போல் இனியவராய், அவ்வடமொழியை – அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ஸ்ரீ ராமாயணம் போலெ இனியவராய், பற்று
அற்றார்கள் பயில் – இவ்வுலக பந்தங்களை விட்ட அநந்யப்ரயோஜனர்கள் நித்யவாஸம் செய்யும், அரங்கத்து அரவு அணையில் பள்ளிகொள்ளும்- கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே கண் வளர்ந்தருளுகிற, கோவினை – ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை, நாவுற வழுத்தி – நாக்கு தழும்பேறும்படி துதித்து, என் தன கைகள் கொய் மலர் தூய் – என்னுடைய கைகளால் பறிக்கப்பட்ட புஷ்பங்களைப் பணிமாறி, கூப்பும் நாள்- அஞ்சலி பண்ணும் காலம், என்று கொலோ – என்றோ.
வ்யா:- நாலாம் பாட்டு, ( மாவினை வாய் பிளந்து கந்தமாலை) கேஶியை அநாயாஸேந பிளந்து, “ஆஶ்ரிதவிரோதி போகப் பெற்றோம்” என்று உகந்த ஆஶ்ரித வ்யாமுக்தனை.(வேலைவண்ணனை)ஆஶ்ரித விரோதிகளை வளர்த்தாலும் விடவொண்ணாத வடிவழகையுடையவனை.(என் கண்ணனை) வெறும் வடிவழகேயன்றியே எனக்கு பவ்யனானவனை.(வன்குன்றமேந்தி யாவினையன்றுய்யக் கொண்டவாயரேற்றை)இந்த்ரன் வர்ஷிக்கிற கல்வர்ஷத்துக்குச் சலியாத மலையை என்னுதல்; ஶ்ரமஹரமான குன்றமென்னுதல்,(ஆவினையன்றுய்யக்கொண்ட) உபகாரஸ்ம்ருதியுமில்லாத பசுக்களை ரக்ஷித்த, (ஆயரேற்றை)தன பருவத்தில் பிள்ளைகளைக் காட்டில் தான் மேனாணிப்புடையவனை, (அமரர்கள் தந்தலைவனை) தன்னோடு ஸாம்யாபத்தி பெற்றிருக்கிற நித்யஸூரிகளைக் காட்டில் தலைவனானவனை.
(அந்தமிழினின்பப்பாவினை) இருளிறியச்சுடர்மணிகளிமக்கும் நெற்றிபோலே இனியவனை.(பற்றற்றார்கள் பயிலரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளுங் கோவினை) தன்னையே பற்றிப் புறம்புள்ளவற்றைவிட்ட அநந்யப்ரயோஜநர் நித்யவாஸம் பண்ணுகிற கோயிலிலே திருவனநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற நாதனை, (நாவுறவழுத்தி)நாத்தழும்பேறும்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி, (என்றான் கைகள் கொய்ம்மலர் தூயென்று கொலோ கூப்புனாளே )காய் தழும்பேறும்படி புஷ்பாத்யுபகரணங்களைப் பணிமாறி அஞ்சலி பண்ணப் பெறுவதென்றோ? 4.
————————————————————————————————–அரு:- நாலாம் பாட்டு. (மாவினையித்யாதி) வண்ணம்- அழகு; இருட்சியால் வந்த அழகாதல்; குளிர்த்தியால் வந்த அழகாதல். அந்தமிழின்பப்பாவுக்கு அர்த்தம் தெரியாது. வடமொழிக்கு ப்ரதி கோடியாக அர்த்தமாகவுமாம். 4.
————————————————————————————————-
- இணையில்லா இன்னிசையாழ்கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சியேத்தத்
துணையில்லாதத்தொன்மறை நூல்தோத்திரத்தால்
தொன்மலர்க்கணயன் வணங்கியோவாதேத்த
மணிமாடமாளிகைகள் மல்கு செல்வ
மதிளரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
மணிவண்னணம்மானைக் கண்டுகொண்டு என்
மலர்ச்சென்னி என்றுகொலோ வணங்கு நாளே.
பதவுரை:- இன்பத் தும்புருவும் –(தங்களுடைய கானத்தினாலே) ஆநந்தத்தை அளிக்கும் தும்புரு நாரதரென்னும் மஹர்ஷிகள், இணை இல்லா இன் இசை;- ஒப்பற்றதும் இனிமையானதுமான இசையையுடைய, யாழ் கெழுமி – வீணையை மீட்டி, இறைஞ்சி ஏத்த –(திருவடிகளிலே விழுந்து) துதிக்க, துணை இல்லா- ஒப்பற்றதாய், தொல் மறைநூல் தோத்திரத்தால்- அநாதியான வேதசாஸ்த்ரமாகிற ஸ்தோத்ரத்தாலே, தொல் மலர்க் கண் அயன்- நித்யமான திருநாபீகமலத்தில் இருக்கும் ப்ரஹ்மா, வணங்கி ஓவாது ஏத்த –(திருவடிகளிலே) இடைவிடாமல் ஸ்தோத்ரம் பண்ண,
மணி மாடமாளிகைகள் – ரத்ந மயமான மாடமாளிகைகளையும், மல்கு செல்வம் – மிகுந்த ஐச்வர்யத்தையுமுடைய, மதில் அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்—, மணி வண்ணன் அம்மானை – அழகிய வடிவையுடைய ஸர்வேச்வரனை, கண்டு கொண்டு – இடை விடாமல் ஸே வித்து, என் மலர் சென்னி —பூமுடி சூடின என்தலை, வணங்கும் நாள் என்று கொலோ–அவன் திருவடிகளில் வணங்கும் காலம் என்றோ?
வ்யா:- அஞ்சாம்பாட்டு.(இணையில்லா வின்னிசையாழ்கெழுமி)உபமாந ரஹிதமான இனிய இசையையுடைய யாழை நெருங்கி, (இன்பத்தும்புருவும் நாரதனுமிறைஞ்சியேத்த) பாட்டால் வந்த ஆநந்தத்தையுடைய தும்புருவும் நாரதனும் திருவடிகளிலே விழுந்து ஸ்தோத்ரங்களைப்பண்ண.(துணையில்லாத் தொன்மறைநூல் தோத்திரத்தால்) ஒப்பில்லாத பழைய வேதஶாஸ்த்ரமாகிற ஸ்தோத்ரத்தாலே, (தொன்மலர்கணயன் வணங்கியோவாதேத்த) திருநாபீகமலத்தினிடத்திலே இருக்கிற ப்ரஹ்மா, திருவடிகளிலே ப்ரணாமம் பண்ணி விடாதே ஸ்தோத்ரம் பண்ண.
(மணி மாடமாளிகைகள் மல்கு செல்வம்) மணி மயமான மாடங்களையும் மிக்க ஐஶ்வர்யத்தையுமுடைய, (மதிளரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்) மிக்க அரணான பெரிய மதிலையுடைய பெரிய கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே பள்ளிகொண்டருளும், ( மணிவண்ணனம்மானைக் கண்டு கொண்டு) அழகிய வடிவையுடைய ஸர்வேஶ்வரனைக் கண்டு கொண்டு, (என் மலர்ச் சென்னியென்று கொலோ வணங்கு நாளே) நான் பூ முடிசூடின தலை என்றோ அவன் திருவடிகளிலே வாங்குவது. 5.
———————————————————————————–
6.அளிமலர்மேலயனரனிந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளிமதிசேர்முனிவர்கள் தம்குழுவுமுந்தித்
திசைதிசையில் மலர்தூவிச்சென்றுசேரும்
களிமலர்சேர் பொழிலரங்கத்து உரகமேறிக்
கண்வளரும் கடல்வண்ணர் கமலக்கண்ணும்
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டுகொண்டு என்
உள்ளமிக என்றுகொலோ உருகுநாளே
வ்யாக்யாநம்
பதவுரை:- அளி மலர் மேல் அயன் – வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும் தாமரைப்பூ மேலுள்ள ப்ரஹ்மாவும், அரன் – சிவனும், இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும் – இந்திரனோடு கூடிய மற்ற தேவர்குழாமும், அரம்பையரும் – ரம்பை முதலான தேவ ஸ்திரீகளும், மற்றும்- மற்றுமுள்ள, தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும்- (நாராயணனே ஸர்வஸ்மாத்பரனென்று ) தெளிந்த ஞானத்தையுடைய ஸநகாதிகள் திரளும், உந்தி- ஒருவருக்கொருவர் நெருக்கித் தள்ளி, திசை திசையில் – பார்த்த பார்த்தவிடமெங்கும், மலர் தூவி சென்று சேரும் – புஷ்பங்களைப் பொழிந்து கொன்று கிட்டும், களி மலர் சேர் பொழில் அரங்கத்து – தென் மிகுந்த புஷ்பங்கள் நிறைந்த சோலைகளையுடைய அரங்கத்திலே, உரகம் ஏறி – திருவநந்தாழ்வான் மீது ஏறி, கண் வளரும்- கண் துயிலும், கடல் வண்ணர் – கடல்போன்ற வடிவையுடையவரின், கமலக் கண்ணும் – செந்தாமரைக் கண்களையும், ஒளி மதி சேர் திருமுகமும் – குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரன் போன்ற திருமுகமண்டலத்தையும், கண்டு கொண்டு – ஸேவிக்கப் பெற்று, என் உள்ளம்- என் மனது, மிக உருகும் நாள் என்று கொலோ – மிகவும் உருகும் காலம் என்றோ?
வ்யா:- ஆறாம் பாட்டு( அளி மலர் மேலயனரனிந்திரனோடு) வண்டுகள் படிந்த அரவிந்தத்தின் மேலே இருக்கிற ப்ரஹ்மாவும், அவன் மகனான ருத்ரனும், அவர்களோடே ஸஹபடிக்கப்பட்ட இந்த்ரனும்; இவர்களுடனே ,(ஏனையமரர்கள் தங்குழுவும்) அவர்கள் மூவரையும் ஒழிந்த தேவர்கள் திரளும். ( மற்றும் தெளி மதி சேர் முனிவர்கள் தங்குழுவும்) ப்ரஹ்ம பாவநையாய்ச் செல்லும் ஸநகாதிகள் திரளும்(உந்தி) ஒருவருக்கொருவர் நெருக்கித்தள்ளி,(திசை திசையில் மலர்தூவிச் சென்றுசேரும்) பார்த்தபார்த்தவிடமெல்லாம் புஷ்பவ்ருஷ்டியைப் பண்ணிக்கொண்டு சென்று கிட்டும்.
(களிமலர்சேர் பொழிலரங்கத்துரகமேறி) மதுமலரையுடைத்தானபொழிலையுடைய அரங்கத்திலே திருவநந்தாழ்வான் மேலே ஏறி, (கண்வளருங்கடல்வண்ணர் கமலக் கண்ணும்) பள்ளி கொள்ளுகிற நீர்வண்ணர் கமலக்கண்ணும், ( ஒளி மதி சேர் திருமுகமும் கண்டு
கொண்டு) குளிர்த்திமிக்குப் புகரையுடைய சந்த்ரனை ஒப்புச் சொல்லான அழகிய திருமுகத்தையும் கண்டு கொண்டு, ( என்னுள்ளமிகவென்று கொலோவுருகுநாளே) என் நெஞ்சு குளிர்ந்து உருகுவதென்றோ? 6
7. மறம்திகழும் மனமொழித்து வஞ்சமாற்றி
ஐம்புலன்களடக்கி இடர்ப்பாரத்துன்பம்
துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லையில்லாத்
தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம் திகழும்மனத்தவர் தம்கதியைப் பொன்னி
யணியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
நிறம் திகழும்மாயோனைக் கண்டு என்கண்கள்
நீர்மல்க என்றுகொலோ நிற்கு நாளே.
பதவுரை:- மறம் திகழும் – கொலை, சினம், கொடுமை முதலியவை நிறைந்த, மனம் ஒழித்து- மனதை வாஸனையுடன் போக்கி, வஞ்சம் மாற்றி- பொய்யைப் போக்கி, ஐம்புலன்கள் அடக்கி, இடர் பாரம் துன்பம் துறந்து – மிகவும் துக்கத்தை விளைவிப்பதான பழவினைகளாகிய பெரும் சுமையைக் களைந்து, இரு முப்பொழுது ஏத்தி – பஞ்ச காலங்களில் தொழுது, எல்லை இல்லா தோல் நெற்றிக்கண் நிலை நின்ற – அளவிறந்த பழைய வரம்பிலிருந்து வழுவாத, தொண்டரான – அடியார்களான, அறம்திகழும் மனத்தவர் தம் – இரக்கம் நிறைந்த மனஸ்ஸையுடைய ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, கதியை- மேலான ப்ராப்யனாய், பொன்னி அணி அரங்கத்து- காவேரியால் சூழப்பட்டு அழகு பெற்றிருக்கும் அரங்கத்திலே, அரவு அணையில் பள்ளி கொள்ளும்-, நிறம் திகழும் – அழகுடன் கூடிய, மாயோனை கண்டு – ஆச்சர்யபூதனானவனை ஸேவிக்கப் பெற்று, என் கண்கள் நீர் மல்க- என்னுடைய கண்கள் ஆநந்தக் கண்ணீர் சொரியும்படியாக, நிற்க்கும் நாள் என்று கொலோ – நிற்கும் நாள் என்றோ?
வ்யா:- ஏழாம் பாட்டு, (மறந்திகழுமனமொழித்து) மறம் – கொலையும், சினமும், கொடுமையும், இவற்றால் விளங்காநின்ற மநஸ்ஸை வாஸநையோடே போக்கி, (வஞ்சமாற்றி) பொய்யைப் போக்கி, ( ஐம்புலங்களடக்கி) வன்புலச் சேக்களைப் பட்டிபுகாமே
கட்டி,(இடர்ப்பாரத்துன்பந்துறந்து)மிக்க துக்கத்தை விளைப்பதான ‘பாரமாய பழவினையைப் பற்றறுத்து’ – அமலனாதிபிரான்- 5,(இருமுப்பொழுதேத்தி) பஞ்சகாலமென்னுதல்; பெரிய முப்பொழுதென்னுதல், இக்காலங்களிலே ஏத்தி,(எல்லையில்லாத தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான) அளவிறந்த பழைய மர்யாதையிலே, சிலவரால் கலக்கவொண்ணாதபடி நிலைநின்ற வைஷ்ணவர்களான.
(அறந்திகழுமனத்தவர்தங்கதியை) ஆந்ருஶம்ஸ்ய ப்ரதாநராயிருக்குமவர்களுக்கு பரமப்ராப்யனானவனை, (பொன்னியணியரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்- திருச்சந்த-55) பொன்னி சூழ் அரங்கத்திலே திருவநந்தாழ்வானாகிற படுக்கையிலே கண்வளர்ந்தருளும், ( அணிஅரங்கம்)லீலாவிபூத்திக்கு ஆபரணமான கோயில்,(நிறந்திகழும் மாயோனைக் கண்டு) அழகு விளங்காநின்ற ஆஶ்சர்யபூதனைக் கண்டு, ( என் கண்கள் நீர்மல்கவென்றுகொலோ நிற்கும் நாள் என்றோ?
————————————————————————————————-
8. கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற்சங்கம்
தொலையாழிகொடுந்தண்டு கொற்றவொள்வாள்
காலார்ந்தகதிக்கருடனென்னும் வென்றிக்
கடும்பறவை இவையனைத்தும் புறஞ்சூழ் காப்பச்
சேலார்ந்த நெடுங்கழனி சோலைசூழ்ந்த
திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக்கலவியெய்தி
வல்வினையேன் என்று கொலோ வாழுநாளே.
பதவுரை:- கூல் ஆர்ந்த – அன்புகளுடன் கூடியும், கெடும் சார்ங்கம் – பெரிதாகவும் இருக்கும் ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லும், கூன் நல் சங்கம் – பாகவதநுபவத்தால் கர்வமுற்று ஆத்தால் வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமும் கொலை ஆழி- விரோதிகளை நிரஶிக்கும் திருவாழியாழ்வானும், கொடும் தண்டு- விரோதிகளுக்கு பயத்தை விலைக்கும் ஸ்ரீகௌமோதகீ என்னும் கதையும், கொற்றம் ஒள் வாள்- ஜயஸ்ரீயுடன் ப்ரகாசிக்கும் நந்தகமென்னும் வாழும், கால் ஆர்ந்த கடும் கதி- காற்றினுடைய வேகத்தைப் போன்ற வேகத்தையுடைய, கருடன் என்னும் – கருடன் என்னும், வென்றி பறவை –
ஜயசீலனான பக்ஷிராஜனும், இவையனைத்தும் – ஆகிய இவைகளெல்லாம், புறம் சூழ் காப்ப- சுற்றிலும் சூழ்ந்து பாதுகாக்க, செல் ஆர்ந்த நெடும் கழனி- மீன்கள் நிரம்பிய வயல்களாலும், சோலை சூழ்ந்த – சோலைகளாலும் சூழப்பட்ட, திருவரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும்-, மாலோனை – சர்வாதிகனான எம்பெருமானை, வில்வினையேன்- மஹா பாபியான நான், கண்டு இன்பம் கலவி எய்தி- ஸேவித்து ஒப்புயர்வற்ற ஆநந்தத்தை அனுபவித்து, வாழும் நாள் என்று கொலோ – உஜ்ஜீவிக்கும் தினம் என்றோ?
வ்யா:- எட்டாம் பாட்டு, ( கோளார்ந்த நெடுஞ்சார்ங்கம்) திருச்சரங்களோடே கூடின ஸ்ரீஶார்ங்கம். “எப்போதுங்கை கழலா நேமியான்”- பெரிய திருவ (87), என்னுமாப்போலே, எப்போது வினை உண்டாம் என்று அறியாமையாலே திருச்சரங்களைத் தொடுத்தபடியேயாய்த்து ஸ்ரீஶார்ங்கமிருப்பது. (கூன்நல்சங்கம்) பாகவதநுபாவத்தால் வந்த செருக்காலே கூனியாய்த்து ஸ்ரீபாஞ்சஜந்யமிருப்பது,(கொலையாளி இவர்களுனுபவத்தில் இழியப்போதின்றியே ப்ரதிபக்ஷத்தை இருதுண்டமாக விடுகை பனிப்போருமாய்த்து திருவாழியாழ்வானுக்கு( கொடுந்தண்டு) பிடித்த பிடியிலே உகவாதார் மண்ணுன்ணும்படியாய் இருக்கிற கதை. ( கொற்றவொள்வாள்) ஐஶ்வர்ய ப்ரகாஶகமான திருக்கொற்றவாள். கொற்றம் – வெற்றி. (காலார்ந்த கதிக்கருடனென்னும் வென்றிக்கடும் பறவை) காற்றினுடைய மிக்கவேகம் போலெ இருக்கிற கதியையுடையனாய், பெரிய திருவடியென்கிற பேரையுமுடையனாயிருக்கிற கடும்பறவை. ( இவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப) (6) “ ” रामलक्ष्मणगुप्ता सा ” (ராம லக்ஷ்மணகுப்தா ஸா) என்னுமாப்போலே கடற்கரைவெளியில் ஸ்ரீஸேநையெல்லாம் குழைச்சரக்காய், தாமும் தம்பியாரும் காக்குமாப்போலே, பெரிய பெருமாள் கண்வளர்ந்தருளுகையாலே
பெரிய திருவடி முதலாக ஸ்ரீபஞ்சாயுதாழ்வார்கள் சுற்றும் காத்துக்கொண்டாய்த்து நிற்பது.
(சேலார்ந்த நெடுங்கழனி சோலைசூழ்ந்த திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும் மாலோனை) சேலாலே நிரம்பின கழனிகளும் சோலைகளும் சூழ்ந்த கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற
வ்யாக்யாநம்
ஸர்வாதிகளை,(கண்டின்பக் கலவியெய்தி) கண்டு நிரதிஶயாநந்தயுக்தனாம்படி
ஸம்ஶ்லேஷித்து, (வல்வினையேனென்று கொலோவாழுநாளே) லோகாந்தரத்திலே போய்க் காணவேண்டும் வஸ்து இங்கே ஸந்நிஹிதமாயிருக்கச் செய்தே அநுபவிக்கவொண்ணாத மஹாபாபத்தைப் பண்ணின நான் அனுபவித்து வாழப்பெறுவது என்றோ? பகவதநுபவத்துக்கு விரோதியாயுள்ளவை எல்லாம் பாபமாயிருக்கிறே. 8
ஆறு:- எட்டாம் பாட்டு. ( கோளார்ந்தவித்யாதி). (இவர்களித்யாதி)- திருவாலி முதலான திவ்யாயுதங்களுக்கு விரோதி நிரஸநத்துக்கொழிய ஸ்ரீபாஞ்சஜந்யம் போலே அநுபவத்திவிழியப்போதில்லை என்றபடி.
ராஜத்வத்தாலேயன்றோ வரக்கூதீற்றில்லை; அது பாபபலமோ என்ன, அருளிச்செய்கிறார் ( பகவதநுபவத்துக்கித்யாதி). 8
9. தூராதமனக்காதல் தொண்டர்தங்கள்
குழாமிகுழுமித் திருப்புகழ்கள் பலவும்பாடி
ஆராதமனக்களிப்போடு அழுதகண்ணீர்
மழைசோர நினைந்துருகியேத்தி நாளும்
சீரார்ந்தமுழவோசை பறவைக்காட்டும்
திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
போராழியம்மானைக்கண்டு துள்ளிப்
பூதலத்தில் என்று கொலோபுரளுநாளே.
பதவுரை:- தூராத காதல் மனம்:- (பகவத்நுபவத்தில்) குறைவற்ற ஆசையையுடைய மனத்தையுடையரான, தொண்டர் தங்கள் குழாம்- ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே, குழுமி -கலந்து, திருபுகழ்கள் பலவும் பாடி- (எம்பெருமானுடைய) கல்யாண குணங்களுக்கு வாசகமான திருநாமங்களைப் பாடி, ஆராதமனக்களிப்போடு- (அத்தாலே) தணியாத மனஸ்ஸிலுள்ள ஸந்தோஷத்தோடு, அழுத்த கண் நீர்- அழுத கண்களிலுண்டான ஆநந்தக்கண்ணீர், மழைசோர-மழைபோலே பெருகிவா, நினைந்து உருகி ஏத்தி -(எம்பெருமானை) எண்ணி (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்ரம் செய்து, நாளும் -தினந்தோறும், சீர் ஆர்ந்த முழவு ஓசை – ஐச்வர்ய ஸூசகமான வாத்யங்களின் கோஷமானது, பரவை காட்டும் – சமுத்திர கோஷத்தைக்
காட்டி நிற்கும், திரு அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் – பேர் ஆழி அம்மானை- யுத்தோந்முகனான திருவாழியைக் கையில் ஏந்திய ஸர்வேச்வரனை,
கண்டு- ஸேவிக்கப்பெற்று,துள்ளி – (ஆநந்தத்தாலே) தலை கால் தெரியாமல் கூத்தாடி, பூதலத்தில் புரளும் நாள்- பூமியிலே புரளுவது, என்று கொலோ – என்றோ?
வ்யா:- ஒன்பதாம் பாட்டு, (தூராதமனக்காதல் தொண்டர் தங்கள் குழாங்குழுமி) “தூராக்குழி தூற்றெனை நாளகன்றிருப்பன்”- திருவாய் (5-8-6), என்று ஸம்ஸாரிகள் ஶப்தாதி விஷயங்களைப் பலநாள் அநுபாவித்தாலும், இந்த்ரியங்களை த்ருப்தியாக்கப் போகாதாப்போலே, பகவதநுபவம் ஒருநாலும் ஆராதிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் குழாத்திலே என்னையும் கூடக் கலசி,(திருபுகழ்கள் பலவும் பாடி) அவனுடைய கல்யாண குணங்களுக்கு வாசகமான திருநாமங்கள் பலவற்றையும் பாடி, (ஆராதமனக்களிப்போடழுதகண்ணீர் மழைசோர) திருநாமங்களைச் சொன்னபடியாலே மநஸுக்கு ஆராமையாலே ஹ்ருஷ்டடனாய் பாத்தாலே ஆநந்தாஶ்ரு ப்ரவஹிக்க.
(நினைந்துருகியேத்தி ) இவர்கள் திரளிலே கூடித்திருநாமத்தைச் சொன்னபடியாலே திருநாமத்வாரா விஷயத்தை நினைத்து அத்தாலே உருகி, “உருகிவழிந்து புறப்பட சொல்” என்னும்படி ஸ்தோத்ராதிகளைப் பண்ணி,(நாளும் சீரார்ந்தவித்யாதி)ஐஶ்வர்ய ப்ரகாஶகமான வாத்யகோஷங்கள் ஸமுத்ரகோஷத்தைக் காட்டாநிற்கிற கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே நித்யவாஸம் பண்ணுகிற யுத்த்தோந்முகமான திருவாழியைக் கையிலேயுடைய ஸர்வேச்வரனை, (துள்ளி)ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணி, (பூதலத்திலென்றுகொலோ புரளு நாளே) ஸிம்ஹாஸநத்திலே இறுமாந்திருக்கும், இருப்பு ஒழிந்து ஹ்ருஷ்டனாய் பூமியிலே புரளுவது என்று கொலோ. 9.
10. வன்பெருவானகமுய்ய அமரருய்ய
மண்ணுய்யமண்ணுலகில் மனிசருய்யத்
துன்பமிகுதுயரகல அயர்வொன்றில்லாச்
சுகம்வளர அகமகிழும் தொண்டர்வாழ
வ்யாக்யாநம்
அன்பொடுத்தென் திசைநோக்கிப் பள்ளிகொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
இசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே.
பதவுரை:- வல் – (நைமித்திக ப்ரளயத்திலும்) அழியாத பெரு வானகம் உய்ய – பெருமை வாய்ந்த ஸத்யலோகம் முதலிய லோகங்கள் உஜ்ஜீவிக்கும்படியும், அமரர் உய்ய – ப்ரஹ்மா முதலிய தேவர்கள் உஜ்ஜீவிக்கும்படியும், மண் உய்ய – பூமி உஜ்ஜீவிக்கவும், மண்ணுலகில் மனிசர் உய்ய-பூமியில் பிறந்த சேதநர்கள் உஜ்ஜீவிக்கவும், மிகு துன்பம் துயர் அகல- மிக்க துக்கத்தை உண்டாக்கும் பாபங்கள் நீங்கவும், அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர – துக்கம் கலக்காத ஸுகம் வளரவும், அகம் மகிழும்- மனதிலே ( பகவதநுபவத்தால் வந்த) ஆநந்தத்தையுடைய, தொண்டர் வாழ – ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழவும், அன்பொடு – ( ஸ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் உண்டான) அன்புடன், தென் திசை நோக்கி- தெற்கு திக்கைப் பார்த்து, பள்ளி கொள்ளும்- கண் வளரும், அணி அரங்கன் திருமுற்றத்து – பெரிய பெருமாளின் உள்ளில் திருமுற்றத்திலே, மிகு இன்பம் – ஆநந்தம் நிரம்பிய, அடியார் தங்கள் – ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய, குழுவு கண்டு- பெரிய கோஷ்டியை கண்டு, யானும் இசைந்து – நானும் அவர்களிலே ஒருவனாகக் கூடி, உடனே இருக்கும் நாள் – அவர்களுடன் ஸேவித்திருப்பது, என்று கொலோ – என்றோ ?
வ்யா:- பத்தாம் பாட்டு. ( வன்பெருவானகமுய்யவமரருய்யா நைமித்திக ப்ரளயாபத்துக்கு இளையாத ப்ரஹ்மலோகம் முதலாக மேலுண்டான லோகங்கள் உய்ய. அங்குண்டான ப்ரஹ்மாதிகள் உஜ்ஜீவிக்க வாய்த்து ப்ரஹ்மலோகத்தில் கோயிலாழ்வார் எழுந்தருளியிருந்தபடி.(மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய) ஸ்ரீவிபீஷணாழ்வானுக்காக அங்கு நின்றும் இங்கேற எழுந்தருளுகையாலே பூமியும் பூமியிலுண்டான சேதநரும் உஜ்ஜீவிக்க.(துன்பமிகு துயரகல) நித்ய து:க்கத்தை விளைவிப்பதான பாபங்கள் அகல,(அயர்வொன்றில்லாச் சுகம் வளர) து:க்கம் மிஶரியாத நித்தியமான ஸுகம் வளர, ( அகமகிழுந் தொண்டர்வாழ) பகவதநுபவத்தாலே நிரதிஶயாநந்தயுக்தரான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ,
(அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும் அணியரங்கன் திருமுத்தத்து) ஸ்ரீ விபீஷ்ணாழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து அத்திக்கைப்பார்த்துக் கண்வளர்ந்தருளுகிற பெரிய பெருமாளுடைய உள்ளில் திருமுற்றத்திலே,(அணியரங்கன்) அழகிய அரங்கத்தைத் தனக்கு வாஸஸ்தானமாகவுடையவன், ( அடியார் தங்கள் இன்பம் பெருக குழுவு கண்டு) நிரதிஶயாநந்தயுக்தராயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்கள் திரளைக் கண்டு, ( யானுமிசைந்து)” அபிக்ஷித்த க்ஷத்ரியன்” என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து( உடனேயென்று கொலோ இருக்கு நாளே) என்னைச் சிலர் ஸேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீவைஷ்ணவர்கள் திரளிலே ஸேவித்திருப்பது என்றோ?
————————————————————————————————- அரு:- பத்தாம் பாட்டு, ( வன்பெருவித்யாதி ) அயர்வு – அஜ்ஞாநமாய், அவித்யாஸ்மிதை முதலான பஞ்சகலேஶமின்றிக்கே இருக்கை.
————————————————————————————————-
11. திடர்விளங்குகரைப் பொன்னிகடுவு பாட்டுத்
திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
கடல்விளங்கு கருமேனி யம்மான் தன்னைக்
கண்ணாரக்கண் கேக்கும் காதல் தன்னால்
குடைவிளங்கு விறல்தானைக் கொற்றவொள்வாள்
கூடலர்கோன் கொடை குலசேகரன் சொற்செய்த
நடைவிளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ் நாரணனடிக் கீழ்நண்ணுவாரே.
பதவுரை:- திடர் விளங்கு கரை – திட்டுகள் விளங்கும்படியான கரையையுடைய,
பொன்னி நடுவு பாட்டு- காவேரியின் நடுவே, திரு அரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும் – , கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னை – கடல்போலே, ஶ்ரமஹரமான வடிவையுடைய ஸர்வேஶ்வரனை, கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால் – ‘கண்களாலே கண்டு அனுபவிக்கவேண்டும்’ என்னும் ஆசையினால், குடை விளங்கு – வெண் கொற்றக்குடையுடன் விளங்குமவராய், விறல் தானை – வெற்றியையுடைய ஸேநையையும், கொற்றம் ஒள்வாள் – வெற்றியுடன் ஒளிபொருந்திய வாளையுமுடையராய், கூடலர் கோன் – மதுரைக்கு அதிபதியாய், கொடை குலசேகரன் – குறையாத ஒளதார்யத்தையுடையவரான குலசேகரப்பெருமாள், சொற் செய்த- அருளிச்செய்த, நடை விளங்கு – நடையால் விளங்குகிற; தமிழ் மாலை பத்தும் வல்லார் – தமிழாலான இப்பத்துப் பாசுரங்களையும் சொல்ல வல்லவர்கள், நலம் திகழ் நாரணன்- ஸமஸ்த கல்யாண குணங்களும் நிரம்பிய பெரியபெருமாளின், அடி கீழ் நண்ணுவாரே- திருவடிகளின் கீழே கிட்டுவார்கள்.
அவ: – பதினோராம் பாட்டு, (7) “
“भुवो भूत्यै भूभुजां भूसुराणां दिवो गुप्त्यै श्रेयसे देवतानाम् | श्रियै राज्ञां चोलवंशोद्भवानां स्रॆमद्रङ्गं सह्यजामाजगाम||” (புவோ பூத்யை பூபுஜாம் பூஸுராணாம் திவோகுப்த்யை ஶ்ரேயஸே தேவதாநாம்| ஸ்ரீயை ராஜ்ஞாம் சோளவம்ஶோத்பவாநாம் ஸ்ரீமத்ரங்கம் ஸஹ்யஜாமாஜகாம||”
வ்யா:- ( திடர்விளங்குகரைப் பென்னிநடுவுப்பாட்டு) விளங்கா நின்ற திருக்குறையை உடைத்தாய்க் கரையையுமுடைத்தான காவேரி சூழ்ந்த ( திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும் கடல்விளங்கு கருமேனியம்மான்றன்னை) கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற கடல் பாலேஶ்ரமஹரமான திருமேனி நிறத்தையுடைய ஸர்வேஶ்வரனை, ( கண்ணாரக் கண்டு உகக்கும் காதல் தன்னால்) கண்ணாலே கண்டனுபவிக்க வேணுமென்னும் ஆசைப்பாட்டோடே.
(குடைவிளங்கு விறல்தானைக் கொற்றவொள்வாள் கூடைலர்கோன்) விளங்குகிற வெண்கொற்றக் குடையையும் வெற்றியையுடைய சேநையையும், * (\ பா அழகிய) ஐஶ்வர்ய ப்ரகாஶகமான வாளையுமுடையவராய் மதுரைக்கு நிர்வாஹகருமான, ( கொடைக்குலசேகரன் சொற்செய்த) கொடைமாறாதே கொடுக்கும் பெருமாள் அருளிச்செய்த (நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்) உள்ளில் அர்த்தத்தில் இழியவேண்டாதே, பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்கவும் வேண்டாதே, இதுதானே ஆகர்ஷமாயிருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார். ( நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே) ஶீலாதிகுணபூர்ணராய், ஸர்வஸ்வாமியாய், வத்ஸலராயிருக்கும் பெரியபெருமாள் திருவடிகளின் கீழே அநுபவிக்க ஆசைப்பட்டாப்போலே கிட்டப்பெறுவர்கள். 11
அரு:- பதினோராம் பாட்டு (திடரித்யாதி) (குறை) ‘திருமுடிக்குறை தானை- ஶேநை, கொற்றம்- வெற்றி. 11
இரண்டாம் திருமொழி தேட்டரும் ப்ரவேஶம்
அவ:- பகவத் விஷயத்திலே கை வைத்தார்க்கு ஸம்பவிப்பன சில ஸ்வபாவங்களுண்டு; ஆநுகூல்ய ஸங்கல்பாதிகள்.(8) “ आनुकूल्यस्य संङ्कल्प: परातिकूल्यस्य वर्जनम् ” (ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம்). அநுகூலமாவது: பாகவத விஷயத்திலும், பகவத் விஷயத்திலும் பண்ணும் ஆநுகூல்யம். பகவத் விஷயம் பூர்ணமாகையாலே இவனுக்கு ஆநுகூல்யம் பண்ணுகைக்குத் துறையில்லையிறே. இப்படித் துறையில்லையென்று இவன் கைவாங்காமைக்கே இவன் உகந்த த்ரவ்யமே தனக்குத் திருமேனியாகவும், இவன் திருமஞ்ஜனம் பண்ணினபோது திருமஞ்சனம் பண்ணியும், அமுது செய்யப் பண்ணினபோது அமுதுசெய்தும்,
அல்லாதபோது பட்டினியுமாம்ப்படியிறே யுமாம்படியிறே அவர்களுக்குத் தன்னை அமைத்து வைப்பது; இப்படியாய்த்ததில்லையாகில் பரிபூர்ணவிஷயத்தில் இவனுக்கு கிஞ்சித்கரிக்கைக்குத் துறையில்லயிறே,(9) “ ” ज्ञ्यानीत्वात्मैव मे मतं ” (ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம் ) என்றும், (10) “ मम प्राणा हि पाण्डवा: “( மம ப்ராணா ஹி பாண்டவா:”) என்றும், “ பத்தராவி “ – பெரியதிரு (10-1-8) என்றும், இருக்குமவனாகையாலே, ததீய விஷயத்திலே பண்ணும் ஆநுகூல்யமும் பகவத் விஷயத்திலே பண்ணி ற்றாமிறே. ஆகையால், இவரும் தமக்கு இவை இரண்டும் பிறந்ததென்கிறார். பகவத் விஷயத்தில் ஆநுகூல்யம் பிறந்தபடி சொல்லுகிறார், இத்திருமொழியில்.
அரு: – தேட்டரும் ப்ரவேஶம். (துறையில்லை) இறங்க வழியில்லை.
- தேடருந்திறல்தேனினைத் தென்னரங்கனைத் திருமாதுவாழ் வாட்டமில்வனமாலைமார்வனைவாழ்த்தி மால்கொள் சிந்தையராய். ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம்கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண்பயனாவதே.
பதவுரை:- தேட்டரும்- ( தன்னுடைய முயற்சியால் ) தேடி அடைவதற்கு அருமையானவனும், திறல் – தன்னை அநுபவிக்கைக்குத் தகுந்த
பலத்தைக் கொடுப்பவனும், தேனினை – தேன் போல் பரம போக்யனும்,
தென் அரங்கனை – ஸ்ப்ருஹணீயமான திருவரங்கத்திலே நீதவாஸம் செய்பவனும், திரு மாது வாழ் – பெரிய பிராட்டியார் நித்யவாஸம் செய்வதற்கு உகந்ததாய், வாட்டம் இல் வனமாலைமார்பனை- எப்பொழுதும் செவ்வி மாறாது அழகு பெற்றிருக்கிற திருமாலையை அணிந்துள்ள திருமார்பையுடையவனுமான பெருமானை, வாழ்த்தி – ( அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்குக் குறைவு வாராதபடி) மங்களாஶாஸநம் பண்ணி, மால் கொள் சிந்தையராய்- அவன் மேல் அன்பு கொண்ட மனதையுடையராய், (அத்தாலே) ஆட்டம் மேவி- ஆடுவதில் ஈடுபட்டு, அலந்து- ( ஆடலின் மிகுதியால்) வருந்தி, அழைத்து- ( வாய்ப்படைத்த ப்ரயோஜனம் பெற பகவந் நாமங்களைச்) சொல்லி, அயர்வு எய்தும் – மெய்மறந்திருக்கும், மெய் அடியார்கள் தம்- அநந்யப்ரயோஜநரான அடியார்களின் ஈட்டம் கண்டிட கூடுமேல் – குழாங்களை காணப் பெறுவோமாகில், அது காணும் கண் பயன் ஆவதே – கண் படைத்ததன் ப்ரயோஜநம் அதுவேயன்றோ?
அவ:- (தேட்டருமித்யாதி) கூறிய பாகவத விஷயம் உத்தேஶ்யமாகிறது, பகவத் குணங்களிலே அவகாஹித்தாறென்னுமதிறே “இன்னான் அர்த்தமுடையன், க்ஷேத்ரமுடையன்” என்று ஆஸ்ஶ்ரயிப்பாரைப்போலே, பகவத் ப்ரத்தயாஸத்தியுடையாரென்றிறே இவர்களைப் பற்றுகிறது. பகவத்விஷயத்திலே ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவர் ஆசார்யவிஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணப்புக்கு அவர்க்கு நிறமாகச் சொல்லிற்று பகவத் விஷயத்தில்
ஜ்ஞானபக்திகளையிறே; (11) “ “ज्ञानवैराग्यराशये” (ஜ்ஞாநவைராக்யராஶயே)
வ்யா:- (தேட்டரும்) தமேவந்து ஸுலபராமித்தனையல்லது ஸ்வயத்நத்தால் *காணவொண்ணாதென்கை. ( திறல் தேனினை) (12)” “य आत्मदा बलदा:”(ய ஆத்மதா பலதா:) என்னுமாப்போலே தன்னையுங் கொடுத்துத் தன்னை அனுபவிக்கைக்கீடான பலத்தையும் கொடுக்கும் தேன்.( தேனினைத் தென்னரங்கனை இத்யாதி) ஸ்ப்ருஹாணீயமான திருவரங்கத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய். திருமேனியின் ஸ்பர்ஶத்தாலே
ஒருகாலைக்கொருகால் செவ்விபெறுமாய்—- இட்ட திருமாலை,(வாழ்த்தி) “வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” – திருப்பல்லாண்டு (2) என்கிறபடிய அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களாஶாஸநம் பண்ணி, ( மால்கொல் சிந்தையராய்) பித்தேறின மநஸ்ஸையுடையராய்.
( ஆட்டமேவி) ஆட்டவேணுமென்னும் கார்யபுத்யாவன்றியிலே ப்ரேமம் ஒட்டாமையாலே ஆட்டமேவி ( அலந்தழைத்து) அலமாந்து கார்யப்படறக் கூப்பிட்டு, (அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் கர்மப்ராப்தி பெறாமையாலே அறிவு குடிபோய் பரவஶ்யரான அநந்யப்ரயோஜநருடைய, (ஈட்டம்) இப்படி இருப்பார் உமக்குளத்தனை பேர் வேணுமென்ன; அடியார்கள் குழாங்களை காணப்பெறில்,( கூடுமேல் அது காணுங் கண்பயனாவதே) இது கூடிற்றாகில்
ப்ரயோஜநம் கண்ணுக்கு இதல்லத்தில்லை, த்ருஷ்ட ப்ரயோஜநமிது. 1.
அரு:- முதற்பாட்டு. ( தேட்டருமித்யாதி) பாகவத விஷயத்தில் தமக்குப் பிறந்த ஆநுகூல்யம் சொல்லுகிறாராகில் பகவத் ப்ரத்யா ஸத்தியை இட்டு கொல்லுவானென்? என்ன அருளிச்செய்கிறார் ( முடிய பாகவத விஷயமித்யாதி). பாகவத விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணப்புக்கு பகவத்ப்ரத்யாசத்தியை அவர்களுக்கு ஏற்றமாகச் சொன்ன பேறுண்டோ? என்ன அருளிச்செய்கிறார் ( பாவத் விஷயத்திலித்யாதி) 1.
- தோடுலாமலர்மங்கை தோளிணைதோய்ந்ததும் சுடர்வாளியால்
நீடுமாமரம் செற்றதும் நிரைமேத்ததும் இவையே நினைந்து
ஆடிப்பாடி அரங்கவோ! என்றழைக்கும் தொண்டரடிப்பொடி
ஆடநாம்பெறில் கங்கைநீர்குடைந்தாடும் வேட்கை என்னவதே?
பதவுரை:- தோடு உலாம் மலர் மங்கை – இதழ்கள் அதிகமாகவுள்ள தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பெரியபிராட்டியாருடைய, தோள் இணை தோய்ந்ததும்- திருத்தோள்கள் இரண்டையும் அணைந்தருளியதும், சுடர் வாளியால் – புகாரையுடைய அம்பினால், நீடு மா மரம் செற்றதும் – உயர்ந்த மாராமரங்கள் ஏழையின் துளைத்ததும், நீரை மேய்த்ததும் – பசுக் கூட்டங்களை மேய்த்ததும், இவையே
வ்யாக்யாநம்
நினைந்து – இந்தச் சேஷ்டிதங்களையே எண்ணி, ஆடி பாடி – ப்ரீதியில் மிகுதியால் ஆடிப்பாடி, ஓ அரங்க என்று அழைக்கும் – அரங்கனே! என்று கூப்பிடுகிற, தொண்டர் – தொண்டர்களான ஸ்ரீவைஷ்ணவர்களின், அடி பொடி- பாத தூளிகளிலே, நாம் ஆட பெறில் – நாம் அந்வயிக்கப் பெற்றால், கங்கை நீர் – கங்கையின் நீரில், குடைந்து ஆடும் ( வட்கை – அவகாஹித்து நீராடுதலில் உண்டாகும் ஆசையானது, என் ஆவது – எததற்கு?
வ்யா:- இறங்கலாம் பாட்டு, ( தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும்) இதழ் மிக்கிருந்த தாமரைப்பூவை வாஸஸ்தாநாமாகவுரையா பெரியபிராட்டியார் திருத்தோள்கள் இரண்டையும் தோய்ந்ததும்; தனியன் பெருவெள்ளத்திலே இழிந்து அனுபவிக்கத் தேடினாப்போலே தோய்ந்ததும்.( சுடர்வாளியால்) புகரையுடைய அம்பாலேயாயத்து, அநந்தமாய் பலவத்தரமான ஸப்தனாலத்தை நிரஶித்ததும்; ஆஸ்ரிதரை விஸ்வஶிப்பிக்கும் செய்லிறே.(நிரைமேய்த்ததும்)உபயவிபூதி நாயகனாயிருந்துவைத்து கையிலே ஒருகோலைக்கொண்டு பசு மேய்த்ததும். ( இவையே நினைந்து இந்த ஶீலாதி குணங்களையே நினைந்து, இவற்றை நினைக்குமதொழியவேறொரு ப்ரயோஜநத்தையும் கணிசியாதே.
(ஆடிப்பாடி) ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே இருக்குமாட்டாதே ஆடிப்பாடி,( அரங்கவோ என்றழைக்கும்) பெருமாள் திருநாமத்தைச் சொல்லி ஆற்றமாட்டாதே கூப்பிடும்.(தொண்டரடிப்பொடியாட நாம் பெறில்) *பகவத்குணவித்தரான( பகவத் குணங்களாலே வசீகரிக்கப் பட்டிருப்பவர்கள்) ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாதரேணுகளிலே அவகாஹிக்கப்பெறில், எப்போதுமொக்க பகவத் ஸம்பந்தமுடையராகையாலே தீர்த்தபூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாதரேணுக்களிலே, அவகாஹிக்கப்பெறில்.(கங்கை நீர் குடைந்தாடும் வேடகையென்னாவதே) காதாசித்த ஸம்பந்தமேயாய்ப் பலசிக்குத்தலைகளிலே புக்கு உபஹதிப்பட்ட கங்கையாடினால் என்ன
ப்ரயோஜநமுண்டு? (“நலந்திகழ் சடையான்” – பெரிய திருமொழி 4-7-2)
இத்யாதி ——– வானதிறே அது.
அரு: இரண்டாம் பாட்டு ( தோடுலாமித்யாதி) (பலசி—–)பல ஜடையையுடைய ருத்ரன் தலை.
- ஏறடர்த்ததும் ஏனமாய் நிலங்கீண்டதும் முன் இராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி * வண்பொன்னிப்பேர்
ஆறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறு செய் தொண்டர்ச் சேவடி*செழுந்தச்சேறென் சென்னிக்கணிவனே
பதவுரை:- ஏறு அடர்த்ததும்- ( நப்பின்னைப் பிராட்டிக்காக) ஏழு எருதுகளை கொன்றதும், ஏனமாய் நிலம் கீண்டதும் – ( ஸ்ரீ பூமி பிராட்டிக்காக) மஹாவராஹமாய் பூமியை தந்தத்தினால் குத்தி ஒட்டு விடுவித்ததும், முன் இராமனாய்- இராவணன் பிராட்டியைப் பிரித்தவன்று சக்கரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து, மாறு அடர்த்ததும்- விரோதியான இராவணனைக் கொன்றதும், மண் அளந்ததும் -(இந்த்ரன் பொருட்டு) மஹாபலி கைக்கொண்ட பூமியை த்ரிவிக்ரமனாய் உலகளந்ததும் ஆகிய செயல்களை, சொல்லிப்பாடி – வாயாரச் சொல்லி, ப்ரீதியின் மிகுதியாலே பாடி, வண்பேர் பொன்னி ஆறு போல் வரும் -பொருவெள்ளமிட்டுவரும் காவேரிபோல் வருகிற கண்ணநீர் கொண்டு – கண்ணீரினால், அரங்கன் கோயில் திருமுற்றம்- ரங்கநாதனின் கோயிலின் உள் திருமுற்றத்தை, சேறு செய் தொண்டர் – சேறாக்குகிற வைஷ்ணவர்களின், சேவடி செழு சேறு திருவடிகளால் மிதிக்கப்பட்ட அழகிய சேற்றை, என் சென்னிக்கு அணிவன் – என் தலையிலே தரித்துக் கொள்வேன்.
வ்யா:- மூன்றாம் பாட்டு, ( ஏறடர்த்ததும்) நப்பின்னைப்பிராட்டியோட்டை ஸம்ஶ்லேஷத்துக்கு இடைச்சுவரான ரிஷபங்கள் ஏழையும் அடர்த்ததும், (ஏனமாய் நிலங்கீண்டதும்) ஸ்ரீபூமிப் பிராட்டியோட்டை ஸம்ஶ்லேஷத்துக்கு விரோதியாம்படி அவளுக்கு ப்ரகாரமான பூமியை ப்ரளயங்கொள்ள உதவிற்றிலனென்னும் அவத்யம் வாராதபடி மஹாவராஹமாய் அண்டபித்தியிலே புக்கு ஒட்டின பூமியை ஒட்டு
விடுவித்தும், (முன்னிராமனாய் மாறடர்த்ததும்) பிராட்டியைப் பிரித்த பையலை எதிரியாக்கிக் கொன்றதும்(மண்ணளந்ததும்) பிராட்டிமாரோட்டை ஸம்ஶ்லேஷ விரோதிகளைப் போக்கினாப்போலே இந்த்ரனோடு விரோதித்த மஹாபலி கைக்கொண்ட பூமியை மீட்டு எல்லை நடந்து கொடுத்ததும்.(சொல்லிப்பாடி) இவ்வபதாநங்களைச் சொல்லி ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பாடி.
(வண்பொன்னிப் பேராறுபோல் வருங்கண்ணநீர்கொண்டு)காவேரி, பெருவெள்ளமாய்* மலைப்பண்டங்கொண்டு வருமாப்போலே (பா)- அகிலும் சந்தணமும் முத்தும். அமைக்க நில்லாதே வெள்ளமிடுகிற கண்ணீரைக்கொண்டு.(அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய்த்தொண்டர்)- அங்குப் பங்காகத் திருவலகு திருப்பணி செய்து வைத்தால், இவர்கள் அத்தைக்கு கண்ணநீராலே சேறாக்குவார்களாய்த்து.( சேவடிச் கெழுஞ்சேறென் சென்னிக்கணிவனே) அமங்கலமான புழுகுநெய்யாலே அலங்கரித்துள்ள தோஷம் தீர மங்களார்த்தமான ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளில் அழகிய சேற்றை அணிவன்.
- தோய்த்த தண்தயிர் வெண்ணெய் பாலுடனுண்டலும் உடன்றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடை எம்பிரான் என்னரங்கனுக்கு அடியார்களாய்
நாத்தழும்பெழநாராணாவென்றழைத்து மெய்தழும்பத்தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்துமென் நெஞ்சமே.
பதவுரை:- தோய்த்த தண் தயிர் – தோய்க்கப்பட்டுக் குளிர்ந்துள்ள தயிரையும், வெண்ணை – வெண்ணெயையும், பால் – பாலையும், உடன் உண்டாலும் – ஒரே ஸமயத்தில் அமுது செய்தவுடன் ஆய்ச்சி கண்டு – யசோதைப்பிராட்டி கையும் களவுமாகப் பார்த்து உடன்று- கோபித்து, ஆர்த்த தோள் உடை – (பின்னர்) அவளால் கட்டப்பட்ட கைகளையுடையவனாய், எம் பிரான்- என்னுடைய ஸ்வாமியாய், என் அரங்கனுக்கு- எனக்கு சேஷியான அழகிய மணவாளனுக்கு, அடியார்களாய் – சேஷபூதராய், நா தழும்பு எழ – நாவானது தழும்பேறும்படி, நாரணா என்று அழைத்து- நாராயணா! என்று கூப்பிட்டு, மெய் தழும்ப தொழுது- உடம்பில் தழும்பு ஏறும்படி
நமஸ்காரம் செய்து, ஏத்தி – துதித்து, இன்புறும் – ஆநந்தமடையும், தொண்டர் சேவடி – ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளை, என் நெஞ்சம்- என் மனம், ஏத்தி வாழ்த்தும்- ஸ்தோத்ரம் பண்ணி மங்களாசாஸநம் பண்ணும்.
வ்யா:- நாலாம் பாட்டு, (தோய்ந்த தண்டயிர் வெண்ணெய் பால்) கடைந்து பிரித்த வெண்ணெய், அதுக்கு உறுப்பாகத் தோய்ந்த தயிர், அதுக்கடியான பால்,(உடலுண்டலும்) இவையடங்கலும் நிஶ்ஶேஷமாக ஒருக்காலே அமுது செய்தவாறே, (உடன்று) அடையக் காணாவிட்டவாறே கோபித்தாள், *தீராவெகுளியளாய்” – சிறிய திரும (36) ஸ்நேஹத்துக்கு அவதியுண்டாகிலிறே கோபத்துக்கு அவதியுண்டாவது.(ஆய்ச்சி கண்டு ) வாயது கையதுவாகக் கொண்டடியோடே கண்டு பிடித்தாளாய்த்து. (ஆர்த்ததோளுடையெம்பிரான்) கண்டவாறே கையைப் பிடித்துக் கட்டினாள்.(எம்பிரான்) ஆஶ்ரித ஸ்பர்ஶமுள்ள த்ரவ்யத்தாலல்லது சொல்லாமையைக் காட்டி என்னை அநந்யார்ஹனாக்கினாவான்.(என்னரங்கனுக்கடியார்களாய்) அவதார காலத்தில் இழந்தார் இழவு தீரவந்து ஸுலபரான பெரிய பெருமாளுடைய செயலாலே எழுதிக்கொடுத்தவர்களாய்த்து.
(நாத்தழும்பெழ) நாவானது தழும்பேறும்படி,(நாரணாவென்றழைத்து) ”அம்மே”
என்பாரைப் போலே திருநாமத்தை அடைவுகெடச்சொல்லி.(மெய்தழும்பத் தொழுது) ப்ரணாமம் பண்ணினபடி தோற்ற உடம்பெல்லாம் தழும்பாக; சிறியாத்தானைப் போலே.(ஏத்தி) இப்படிப்பட்ட செயல்களைச் சொல்லி ஏத்தி.(இன்புறுந் தொண்டர் சேவடி) மநஸ்ஸிலே வைத்து எத்துகையாலே விஷயத்தைக் கிட்டினால் பிறக்கும் நிரதிஶயாநந்த யுக்தராயிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீபாதங்களை.(தொண்டர் சேவடியேத்தி வாழ்த்துமென்னெஞ்சமே) அவர்கள் தாங்கள் அகப்பட்ட நவநீத சௌர்யத்தில் போகாது என்னெஞ்சு; அதிலே அகப்பட்டவர்கள் தங்களை ஏத்து வாழ்த்துமித்தனை.(ஏத்திவாழ்த்தும்)இச்செயலுக்கு இவர்கள் நிலவராவதே! என்று ஸ்தோத்ரத்தைப் பண்ணி, இது நித்யமாக வேணுமென்று மங்களாஶாஸநம் பண்ணா நிற்கும் என்னெஞ்சு.
வ்யாக்யாநம்
அரு :- நாலாம் பாட்டு (தோய்த்த வித்யாதி) ஸ்நேஹம் – சாடு (கொண்டி)களவு.
5.பொய்சிலைக்குரலேற்றெருத்தமிறுத்துப் போரரவீரத்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித் திண்ணமாமதிள் தென்னரங்கனாம்
மெய்சிலைக்கருமேகமொன்று தம்நெஞ்சில் நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என்மனம் மெய்சிலிர்க்குமே.
பதவுரை:- பொய் சிலை குரல்- க்ரித்ரிமமாய் கோபத்துடன் கூடியதான முழக்கத்தையுடைய, ஏறு எருத்தம் இறுத்து- (ஏழு) காளைகளின் கழுத்துக்களை முறித்தவனாய், போர் அரவு – யுத்தம் செய்யவந்த காளியனென்னும் பாம்பை, ஈர்த்த கோன் – நிரஸித்து (ஆய்ப்பாடிக்கு) ஸ்வாமியானவனாய், சிலை செய் – கல்லினால் செய்யப்பட்டு, சுடர் ஒளி – மிகவும் ஒளிபொருந்தியதாய், திண் – வலிமை பொருந்தியதாய், மா- உயர்ந்ததான, மதிள் சூழ் – மதிள்களாலே சூழப்பட்ட, தென் அரங்கன் ஆம் – திருவரங்கத்திலே நித்யவாஸம் செய்யும் பெரிய பெருமாளாகிற, மெய் சிலை கரு மேகம் ஒன்று – சரீரத்தில் வில்லுடன் கூடிய ஒரு நீலமேகமானது, தம் நெஞ்சில் நின்று திகழப் போய் – தங்களுடைய மனதில் நிலத்து விளங்கும்படியாக, மெய் சிலிர்ப்பவர் தம்மையே- மயிர்க் கூச்செறியும் தேஹத்தையுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே, என் மனம் நினைந்து – என் மனமானது நினைத்து, மெய் சிலிர்க்கும்- மயிர்க் கூச்செறியும்.
வ்யா:- அஞ்சாம்பாட்டு.(பொய்சிலைக் குரலேற்றெருத்தமிறுத்து) பொய் – க்ருத்ரிமம். சிலை- கோபம். அஸூராவேஶத்தாலே க்ருத்ரிமமாய் கோபத்தையுமுடைத்தாயிருந்துள்ள ஏறும் இறாயாப்பொருது, நப்பின்னைப் பிராட்டியோட்டை ஸம்ஸ்லேஷத்துக்கு விரோதியானவயுமாய், பொருகிறவையுமாய்ச் சிலைபோலே கோரமான த்வநியையுடைத்தாயிருந்துள்ள ரிஷபங்களின் ககுத்தை முறித்து. (போரரவு ஈர்த்தகோன்) திருவாய்ப்பாடியில் பசுக்களும் இடையரும் தண்ணீர் குடிக்கவொண்ணாதபடி ஜலத்தை தூஷித்துக்கிடந்த காளியன், யூத்தோந்முகனாய்ப் புறப்படும்படி கலக்கிப் பொய்கையில் நின்றும் போகவிட்டு, அத்தாலே திருவாய்ப்பாடியிலுள்ளார்க்கு நாதனானவனை,(செய்சிலைச் சுடர்சூழொளித் திண்ணமாமதிள் தென்னரங்கனாம்)கல்லாலே, செய்யப்பட்டுப் பிறரால் அபிபவிக்கவொண்ணாதபடியான மதிப்பையுடைத்தாய் திண்மையையும் ஓக்கத்தையுமுடைத்தான திருமதிள்கள் பலவும் சூழ்ந்திருக்கிற கோயிலிலே கண்வளர்ந்தருளுகிறான்.
(மெய்சிலைக் கருமேகம்) உடம்பிலே வில்லையுடைய மேகமென்று—தல்;
மெய்யே வில்லோடே கூடின மேகந்தானென்னுதல்(ஒன்று )தம்நெஞ்சில் நின்று திகழப்போய்) (13) “ “शो भयन् दण्डकारण्यं “(ஶோபயந் தண்டகாரண்யம்) என்னுமாப்போலே மாணிக்கக்குப்பியில் உள்ளூநின்றநிலை புறம்பே தெரியுமாப்போலே பெரியபெருமாளைத் தங்கள் நெஞ்சிலே எழுந்தருளிவித்து வைக்கையாலே நிழலிடா நிற்குமிறே.(மெய்சிலிர்ப்பவர்) உள்ளே எழுந்தருளி இருக்கிறபடியை அநுஸந்தித்து புளகிதகாத்ரராயிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.(தம்மையே நினைந்து என்மனம் மெய்சிலிர்க்குமே) பெரிய பெருமாளை அநுபவித்து அவர்கள் உடம்பு படும் பாட்டை, அவர்களை அநுபவித்து என்நெஞ்சுபடா நின்றது. ஸ்பர்ஶத்ரவ்யம் பட்டதெல்லாம் படாநின்றது அமூர்த்த த்ரவ்யம்.
அரு:- அஞ்சாம் பாட்டு.(பொய்சிலையித்யாதி) பொய் – அஸுராவேஶமாகையாலே பொய்யான ரிஷபமென்கிறது. சிலக்குரல் – இடிபோலே இருக்கை. ஸ்பர்ஶத்ரவ்யம் – ஶரீரம். 5
6. ஆதியந்தமனந்தமற்புதமான வானவர் தம்பிரான்
பாதமாமலர் சூடும்பத்தியிலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில்நன்னெறிகாட்டி எங்கும் திரிந்து அரங்கனெம்மானுக்கே
காதல்செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே
பதவுரை:- ஆதி- ஜகத்காரணபூதனாய், அந்தம் – ப்ரளயகாலத்திலும் ஒரேநிலையில் வாழ்பவனாய், அநந்தம் – எல்லா வஸ்துக்களிலும் வ்யாபித்து நிற்குமவனாய், அற்புதம்- ஆச்சர்யபூதனாய், ஆன வானவர் தம் பிரான் – அழிவற்ற நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமியான அரங்கனுடைய, மாமலர் பாதம்- ஒப்பற்ற தாமரைப்பூப் போன்ற திருவடிகளை, சூடும்பத்தி இலாத – தலையில் தாங்கும்படியான பக்தி இல்லாத பாவிகள் உய்ந்திட – பாபிகளும் உய்யும்படி, எங்கும் திரிந்து- எல்லாவிடங்களிலும் ஸஞ்சரித்து, தீது இல் நல் நெறி காட்டி – குற்றமற்ற நல்ல வழிகளை (தாம் செய்து) காட்டுமவர்களாய், எம்மான்
அரங்கனுக்கே – என்னுடைய ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனுக்கே, காதல் செய் தொண்டர்க்கு- அன்பு பூண்டவர்களான அடியார்களிடத்தில்,என் நெஞ்சம் – என்னுடைய மனம், எப்பிறப்பிலும்- எல்லா ஜந்மங்களிலும், காதல் செய்யும்- (அடிமை செய்யவேண்டுமென) ஆசைப்படும்.
வ்யா:- ஆறாம் பாட்டு,(ஆதி) ஜகத்காரணபூதன்.(அந்தம்) ப்ரளயகாலத்திலும் ஸதவஸ்த்தனாய் நிற்குமவன்.(அநந்தம்) காரணாவஸ்த்தையிலும் கார்யாவஸ்த்தையிலும் ஓக்க வ்யாபித்து நிற்குமவன். (அற்புதம்) கார்யாவஸ்த்தையோடு ஸதவஸ்த்தனாய் நிற்குமத்தோடு வாசியற நிற்கும் நிலைகள் வேறோரிடத்தில் காணவொண்ணாதென்னும்படி இருக்கும் ஆச்சர்யபூதன்.(ஆனவானவர்தம்பிரான்) ஆனபோதும் அமிழ்ந்தபோதும் எப்போதுமொக்க உளராயிருக்கும் நித்ய ஸூரிகளுக்கு நாதன் ; உபயவிபூதிநாதன் என்றபடி, (பாதமாமலர் சூடும் பத்தியிலாத) அவன் திருவடிகளாகிற செவ்விதாமரையைச் சூடும் பக்தியை உடையராயிருக்கையாய்த்து கர்த்தவ்யம்; அதில்லாத,(பாவிகளுய்ந்திட)பக்தியில்லாதபடி மஹாபாபத்தைப்பண்ணி, (14)”असन्नेव” (ஆஸந்நேவ) என்னும்படி இருக்கிற தேசமெங்கும் புக்கு ஸஞ்சரித்து அவர்களை பக்தியுண்டாக்கி உஜ்ஜீவிப்பிக்கைக்காக.
(தீதில் நன்னெறி காட்டி) தீமையோடே கூடின நெறியன்றிக்கே, சேதநர் நல்வழி போம்படி தாங்கள் ஆசரித்துக் காட்டி.(எங்குந்திருந்து)புகக்கடவ தேசமெங்கும் புக்கு ஸஞ்சரித்து.(அரங்கனெம்மானுக்கே காதல் செய்தொண்டர்க்கு) என்னை அநந்யாரகமாக்கின பெரியபெருமாள் திருவடிகளிலே பக்தியுண்டாயிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு.(எப்பிறப்பிலுங் காதல் செய்யுமென்னெஞ்சமே) அநேக ஜந்மங்கள் பிறந்து அவர்களுக்கு அடிமை செய்யவேணுமென்று ஆசைப்படா நின்றது என் நெஞ்சு. 6.
அரு:- ஆறாம் பாட்டு(ஆதியித்யாதி) காரணாவஸ்த்தை ஸ்ருஷ்ட்யுந்முகனாயிருக்கிற அவஸ்த்தை. 6.
7. காரினம்புரைமேனிநற்கதிர் மூத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வனரங்கனென்னும் அரும்பெருஞ்சுடரொன்றினைச்
சேரும் நெஞ்சினராகிச் சேர்ந்துகசிந்திழிந்த கண்ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கு ஒருவாரமாகும் என்நெஞ்சமே.
பதவுரை:- கார் இனம் புரை மேனி – மேகங்களின் கூட்டத்தை ஒத்த திருமேனியையும், நல் கதிர்- அழகிய ஒளியையும், முத்தம் வெண் நகை- முத்துக்கள் போல் வெளுத்த பற்களையுடைய, செய்யவாய்- சிவந்த வாயையும், ஆரம் மார்பன்- முத்துமாலை அணிந்த மார்வையுமுடையவனான, அரங்கன் என்னும்- ரங்கநாதனாகிற, அரும்பெரும்- கிடைத்தற்கரியதும் பெருமைபொருந்தியதுமான, சுடர் ஒன்றினை- ஒப்பற்ற தேஜோராசியை, சேரும் நெஞ்சினர் ஆகி- அடைந்து அநுபவிக்கவேண்டுமென்ற மனமுடையவராய், சேர்ந்து- அவனைக் கிட்டி, கசிந்து இழிந்த- (பக்திப் பெருக்கலே)கரைந்து பெருகும், கண் நீர்கள் – கண்ணீரானது, வார நிற்பவர்- பெருகி ஓடும்படி நிற்பவர்களுடைய, தாள் இணைக்கு- இரு திருவடிகள் விஷயத்திலும், என் நெஞ்சம் – என் நெஞ்சு, ஒரு வாரம் ஆகும்- (ப்ரதிபலனைக் கருதாத) ஒப்பற்ற அன்பு செய்யும்.
வ்யா:- ஏழாம் பாட்டு.(காரினப்பபுரைமேனி) “தொக்கமேகட் பல்குழங்கள்” திருவாய்(8-5-8), “கார்த்திரளனையமேனி “-திருமாலை (22) என்கிறபடியே அழகிய திருமேனியையும் உடையராய்.(நல்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய்) கண்டாரைப் போகாமல் துவக்கவல்ல வெண்மையையுடைய முத்துநிரை போலே இருக்கும். “தந்த பங்க்தியையும்- (பா) முறுவலையும், இதுக்குப் பரபாகமான திருவதரத்தில் பழுப்பையுமுடையவராய்’ (ஆரமார்பன்) “பெரியவரைமார்வில் பேராரம்பூண்டு”- மூ திருவ (55) என்று ஐஸ்வார்ய ப்ரகாஶகமாம்படி இட்டுப் பூணவேண்டும்படியுள்ள ஹாரத்தையும் திருமாப்பிலே உடையராயிருக்கிற(அரங்கனென்னும் அரும் பெருஞ்சுடரொன்றினை)பெரியபெருமாளென்று உபயவிபூதியிலும் ப்ரஶித்தராய் நிரவதிகதேஜோரூபராய் அத்விதீயரானவரை.
(சேரும் நெஞ்சினராகி) அவர் வந்து கிட்டும்போது விலக்காமை அடியாகப் பிறந்த பக்தியையுடையராய். (சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால் வாரநிற்பவர் தாளிணைக்கு) அவனைக் கிட்டி நிரதிஶய பக்தியுக்தராய்க் கண்ணும் கண்ணீருமாய் நிற்க்குமவர்களுக்கு பக்தி பாராவஶ்யத்தாலேயிறே என்று அங்குத்தைக்கும் இவர்களுக்குமாய்
நில்லாதே இவர்களுடைய திருவடிகளுக்கு.(ஒரு வாரமாகுமென்னெஞ்சமே)அநந்யபிரயோஜநமாய் நில்லாநின்றது என்னெஞ்சு. 7.
அரு :- ஏழாம் பாட்டு (காரினமித்யாதி) வெண்மையுமென்கிற சகாரத்தாலே ஒளியையும் சொல்லுகிறது. ஆரம் – முத்துமாலை.
(பக்தி பாரவஶ்யத்தாலே) பகவத்பக்தி பரவசராயிருக்கையாலன்றோ இவர்களுக்கு இந்த அதிசயமுண்டாய்த்து என்று தாமும் இவர்களை ஆதரிக்கிறதென்று அவனையும் இவர்களையும் கலசி ஆதரியாதே இவர்களை ஆதரியா நின்றது. 7.
8. மாலையுற்ற கடல்கிடந்தவன் வண்டுகிண்டுநறுந்துழாய்
மாலையுற்றவரைப் பெருந்திருமார்வனை மலர்க்கண்ணனை
மாலையுற்ற்றெழுந்தாடிப்பாடித் திரிந்து அரங்கனெம்மானுக்கே
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றது என்நெஞ்சமே.
பதவுரை:- மாலை உற்ற-(தன் திருமேனியைத் தீண்டுவதால் களிப்படைந்து அத்தாலே) அலையெறிகிற, கடல் கிடந்தவன் -திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனும், வண்டு கிண்டு – வண்டுகள் குடையாநின்றுள்ள,நறு துழாய் மாலை உற்ற- திருத்துழாய் மாலையை அணிந்த, வரை பெரு திரு மார்வனை -மலைபோல் விசாலமான திருமார்பையுடையவனும், மலர் கண்ணனை – செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவுமான பெருமான் விஷயத்திலே, மாலை உற்று- அன்பு பூண்டு, எழுந்து ஆடி பாடி திரிந்து – நின்ற விடத்திலிராமல் கூத்தாடிப் பாடித் திரிந்து, அரங்கன் எம்மானுக்கே- ரங்கநாதனாகிய என் ஸ்வாமிக்கே, மாலை உற்றிடும்- பித்தேறித் திரியும்,, தொண்டர் வாழ்வுக்கு- ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மிக்கு, என் நெஞ்சம் மாலை உற்றது – என் மனம் அன்பு பூண்டிருக்கின்றது.
வ்யா:- எட்டாம் பாட்டு.(மாலையுற்ற கடல்கிடந்தவன்) ஸ்வ ஸ்பர்ஶதாலே அலையெறிகிற திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளுகிறவன். (வண்டுகிண்டு நறுந்துழாய் மாலையுற்றவரைப் பெருந்திருமார்பனை) வண்டுகள் நெருங்கி இருக்கிற பெருந்திருமார்வை, உடையவரை. ”மைபோல் நெடுவரை வாய்த்தாழுமருவிபோல் தார்கிடைப்ப”- மூன் – திருவ (56) என்னக் கடவதிறே.(மலர்க்கண்ணனை) செவ்விதாமரைப் பூப்போல் மலர்ந்த திருக்கண்களையுடையவரை.
(மாலையுற்றெழுந்தாடிப் பாடித்திருந்து) பக்தியையுடையவராய் இருந்தவிடத்திலிருக்க வொட்டாமையாலே எழுந்தாடுவது பாடுவதாய் ப்ரீதிப் ரேரிக்க இருக்கமாட்டாதே ஸஞ்சரித்து,(அரங்கனெம்மானுக்கே மாலையுற்றிடுந் தொண்டர் வாழ்வுக்கு) கோயிலிலே ஸுலபரான படியைக்காட்டி என்னை எழுதிக்கொண்ட பெரிய பெருமாளுக்கே பக்திகார்யமான பித்தேறித்திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வைஷ்ணவ லக்ஷ்மிக்கு,(மாலையுற்றதென்னெஞ்சமே)
பித்தேறா நின்றது என் நெஞ்சு. 8.
9. மொய்த்துக் கண்பனிசோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கியிளைத்து நின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்து அடிப்பாடியிறைஞ்சி என்
அத்தனச்சனரங்கனுக்கு அடியார்களாகி அவருக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றயார் முற்றும் பித்தரே.
பதவுரை:- கண் பனி மொய்த்து சோர – கண்கள் மழைதாரை போல் ஆநந்தக் கண்ணீர் பொழியவும், மெய்கள் சிலிர்ப்ப- சரீரம் மயிர்க்கூச்செறியவும், ஏங்கி இளைத்து நின்று – (பகவானை நினைத்து) ஏங்கித் தளர்ந்து நின்று, எய்த்து- நிலை கலங்கி, கும்பிடு நாட்டம் இட்டு – ஸஸம்ப்ரம நர்த்தனம் பண்ணி, எழுந்து ஆடி பாடி இறைஞ்சி- எழுந்து ஆட்டங்களாடிப் பாட்டுக்கள் பாடி வணங்கி, என் அத்தன் – என் தந்தையும், அச்சன்- ஸ்வாமியுமான, அரங்கனுக்கு – ஸ்ரீரங்கநாதனுக்கு, அடியார்கள் ஆகி – அடிமைகளாக ஆகி, அவருக்கே- அந்தப் பெரிய பெருமாளுக்கே, பித்தர் ஆமவர் – (பக்தி பூண்டு) பித்தேறித் திரிகிறவர்கள், பீட்டர் அல்லர்கள் – பித்தர்கள் அல்லர்; மற்றையார் முற்றும்- இம்மாதிரியான பக்தி இல்லாத மற்றபேர்களெல்லாம், பித்தரே- பைத்தியம் பிடித்தவர்களே.
அவ:- ஒன்பதாம் பாட்டு, பித்தேறித் திரிவார்க்கோ நீர் பித்தேறுவது ?என்ன; ப்ராப்த விஷயத்தில் பித்தேறுமவர்கள் பித்தர் ஆண்டு என்கிறார்.
வ்யா:- (மொய்த்துக் கண்பனிசோர) இரண்டு (பா – திரண்டு ) கண்ணாலே வர்ஷதாரைபோலே சொரிய.(மெய்கள் சிலிர்ப்ப) புளகிதகாத்ரராய்.(ஏங்கியிளைத்து நின்று எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்தாடிப்பாடி இறைஞ்சி) விஷயத்தை நினைத்தேங்கி இளைத்து ஶிதிலராய், அவ்வளவன்றியிலே ஸ்தப்தராய் நின்று, அந்நிலையும் நில்லாதே. (கும்பிடு நட்டமிட்டு) ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணி,(இறைஞ்சி) தீர்க்கப்ரனாமத்தைப் பண்ணி.
( என்னத்தனச்சன்) எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன். (அறங்கனுக்கடியார்களாகி) பெரிய பெருமாளுக்கு அநந்யப்ரயோஜநராய் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடியாராகி,(அவருக்கே பித்தராமவர் பித்தரல்லர்கள்)அவர்க்கு பக்திமான்களாய் பக்தி கர்மமான பித்தேறித் திரிகிறவர்கள் பித்தரல்லர்கள். (மற்றையார் முற்றும் பித்தரே) இந்த பக்தி கார்யமான பித்தில்லாதவர்களடைய பித்தரே. இக்கலக்கமிலாதே தெளிந்திருக்குமவர் ஸநகாதிகளேயாகிலும் அவர்கள் பித்தர். 9.
10. அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையிலடிமைத்திறத்தினில் என்றுமேவுமனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்
சொல்லினின் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்களாவரே.
பதவுரை:- அல்லி மாமலர் மங்கை நாதன்- உள்ளிதழ்களையுடைய சிறந்த தாமரைப்பூவில் பிறந்த பிராட்டியின் நாயகனான, அரங்கன்- ரங்கநாதனுடைய, மெய் அடியார்கள் தம்- உண்மையான அடியார்களுடைய, எல்லையில் அடிமை திறத்தில் – எல்லை இல்லாத கைங்கர்யச் செயலிலே, என்றும் மேவு மனத்தன் ஆம் – எக்காலத்திலும் பொருந்திய திருவுள்ளத்தை உடையவரும், கொல்லி காவலன்- கொல்லி நகருக்கு அரசரும், கூடல் நாயகன்- மதுரைக்கு ராஜாவும், கோழி கோன்- உறையூருக்கு அரசருமான, குலசேகரன்- குலசேகரப்பெருமாளுடைய, சொல்லின் – சொற்களாலான, இன் தமிழ் மாலை வல்லவர்- இனிய சப்தங்களுடன் கூடிய தமிழ்ப்பாட்டுக்களைப் படிக்க வல்லவர்கள், தொண்டர் தொண்டர்கள் ஆவரே – அடியார்களுக்கு அடியார்களாவர்.
வ்யா:- பத்தாம்பாட்டு,(அல்லிமாமலர் மங்கை நாதன் அரங்கன்) ஸ்ரீய:பதியான பெரியபெருமாளுடைய (மெய்யடியார்கள் தம்) அந்நய ப்ரயோஜநராயிருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய,(எல்லையிலடிமைத் திறத்தினிலென்றும் மேவு மனத்தனாம்) (15)” आत्मदास्य (ஆத்மதாஸ்ய)த்திலே என்றும் ஒக்கப் பொருந்தின திருவுள்ளத்தை உடையராம்.
(கொல்லிக்காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன்) கொல்லிக்கும் மதுரைக்கும் உறையூர்க்கும் நாயகரான பெருமாள், பெரியவுடையாருடைய இழவால் வந்த வெறுப்பாலே, (16) “ वनवासो महोदय:”(வநவாஸோ மஹோதய:) என்று வநத்துக்குப் போந்தது ப்ரியமாயிருந்தவர்க்கு (17) “ राज्याद् भ्रंशो वने वास: “ (ராஜ்யாத் ப்ரம்ஶோவநேவாஸ:) என்று இவ்விழவாலே அடியில் போந்தவையும் எல்லாம் தமக்கு வெறுப்புக்குடலானாப் போலே. “ஊனேறு செல்வத்துடற்பிறவியான் வேண்டேன்” – பெரிய திருமொ (4-1) என்றும், “இவ்வரசும் யான் வேண்டேன்” என்றும் சொல்லுகிற இவர்க்குத் ததீயஶேஷத்வத்தைத் தந்த ஜந்மம் என்று ராஜஜந்மம் தன்னையும் கொண்டாடுகிறாரிறே. (சொல்லினின் தமிழ்மாலை வல்லவர்) இனிதான் ஶப்தங்களையுடைய தமிழ்த் தொடை வல்லவர்கள். (தொண்டர் தொண்டர்களாவரே) இவர் ஆசைப்பட்டுப்போந்த பாகவத ஶேஷ்தவ பர்யந்தமாகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள். 10.
குலஶேகார்ப்பெருமாள் திருவடிகளே ஶரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்.
இரண்டாம் திருமொழி முற்றிற்று
அரு:- பத்தாம்பாட்டு. (அல்லியித்யாதி) கொல்லிகாவலன் இத்யாதியாலே த்யாஜ்யமான ஜந்மத்தையிட்டுத் தம்மைக் கொண்டாடலாமோ? என்ன; (பெரியாவுடையாரித்யாதி) “வநவாஸோமஹாதய:” என்று ரஸாவஹமான காடு பெரியவுடையாருடைய விஸ்லேஷத்தாலே “வநே வாஸ:” என்று துக்கஹேதுவானாப்போலே த்யாஜ்யமான ஜந்மமும் ததீய விஷயத்தைப் பற்றுகைக்கு ஹேதுவாகையாலே கொண்டாடலாம் என்றபடி. 10.
இரண்டாம் திருமொழி அரும்பதம் முற்றிற்று.
மூன்றாம் திருமொழி மெய்யில் பிரவேஶம்.
அவ:- “ பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் ”- பெரிய திரு(7-4-4) என்று, பகவத் ப்ராவண்யம் ததீய(ஶேஷ்தவ பர்யந்தமாய், அவர்களல்லது செல்லாமை பிறர்க்குமளவும் உண்டானது சொல்லிற்று, கீழில் திருமொழியில், “எண்ணாதமானிடத்தையெண்ணாத போதெல்லாமினியவாறே”- பெரிய திரு (11-6-7), “மானிடவரல்லறென்றென் மனத்தே வைத்தேனே”- பெரிய திரு (11-7-6),
“பித்தரென்றே பிறர் கூற”- திருவாய் (3-8-5), என்றும் பிறக்கும் அவஸ்தயுண்டு பகவத் ப்ராவண்யத்தாலே; முன்பிலதுக்கு ஸங்கல்பமாத்ரமேயாய்த்து வேண்டுவது; அடிமை அவர்கள் கொள்ளக்கொள்ளவிறே செய்வது. ப்ராதிகூல்யத்தில் வர்ஜித்தே நிற்க வேணும். பகவத் குணங்களோபாதி விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அநுபாவ்யமென்று சொன்ன ஶாஸ்த்ரந்தானேயிறே. இத்தை த்யாஜ்யமென்றதும்.ஜ்ஞாநகார்யமாயிறே ததீயர் உத்தேஶ்யமாகிறதும்; தமோகுண ப்ரசுரரோடு ஸஹவாஸம் பொருந்திற்றாகில் அஜ்ஞாநகார்யமிறே.
(16) “ ” मत्तस्सर्वमहम् ” (மத்தஸ் ஸர்வமஹம்) என்று ஸாமாந்ய புத்தி பண்ணின ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான் பூர்வாவஸ்தையில்,(17) ” मत्पितु:” (மத்பிது:) என்று அவனை ரக்ஷிக்கப் பார்த்தவன் ப்ராதிகூல்யத்திலே விஞ்சினவாறே அவனை வீட்டுக் காட்டிக்கொடுத்தானிறே. ஸ்ரீவிபீஷணாழ்வான் ஆந்தனையும் ஹிதம் சொல்லிப் பார்த்துத் தன் ஹிதத்துக்கு மீளாத அவஸ்தையானவாறே நெருப்புப் பட்டவிடத்தில் விலக்கவொண்ணாதபோது தன்னைக் கொண்டு தான் தப்புவாரைப்போலே, ப்ராதிகூல்யம் அசலிட்டுத் தன்னளவும் வருமென்று தன்னைக் கொண்டு தான் தப்பினானிறே. ப்ராதிகூல்யமாகிறது:- தேஹாத்மாபிமாநிகளாகையும், விஷய ப்ராவணராயிருக்கையும், தேஹோத்வயதிரிக்தம் வேறொரு வஸ்து உண்டென்றறியாதிருக்கையுமிறே. இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாதென்கிறார் இத்திருமொழியில்.
அரு: மெய்யில் வாழ்க்கை ப்ரவேஶம். “ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிறபடியே ஆநுகூல்ய ஸங்கல்பம் சொல்லிற்று கீழ்; ப்ராதிகூல்ய வர்ஜநம் சொல்லுகிறது இத்திருமொழியில்; இவற்றை அருளிச்செயகிறார் (பேராளனித்யாதி வாக்யத்வயத்தாலே), கீழ் ஆநுகூல்ய ஸங்கல்பத்தைப் பாரித்து இங்கு வர்ஜநமென்று நன்றாக விட்டபடி சொல்லுகிறதுக்குக் கருத்தென்? என்னில் ( பகவத் ப்ராவண்யேத்யாதி) குணங்களோபாதி விபூதியும் ததீயத்வாகாரத்தாலே உத்தேஶ்யமன்றோ? என்ன(பகவத்குணங்களித்யாதி), த்யாஜ்யமானால் சிறிதுபேர் உத்தேஶ்யராய் சிறிது பேர் த்யாஜ்யராகிறது என்? என்ன ( ஜ்ஞாநகார்யமித்யாதி).
அஜ்ஞாநஹேது என்று விட்டபேருண்டோ? என்ன (மத்தஸ் ஸர்வமித்யாதி). ஸமுத்ரத்தில் தன்னைப் போகட்டபோது ஸர்வேஶ்வரனைக்கண்டு தன் பிதா பண்ணின பாபத்தைப் பொறுக்கவேணுமென்று வேண்டிக்கொண்டானென்றதப் பற்ற (மத்பிது:-ரக்ஷிக்கப்பார்த்தவன் என்கிறது).
- மெய்யில்வாழ்க்கையை மெய்யெனக்கொள்ளும் இவ்
வையந்தன்னொடும் கூடுவதில்லையான்
ஐயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந்தேன் என்றான் மாலுக்கே.
பதவுரை:- மெய்யில் வாழ்க்கையை – நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை, மெய் என் கொள்ளும் – நிலையானது என்று கருதுகிற, இவ்வையம் தன்னொடும்- இவ்வுலகத்தாரோடு, யான் கூடுவது இல்லை- நான் சேருவதில்லை; ஐயனே- ( நிஷ்காரண) பந்துவே!, அரங்கா – ஸ்ரீ ரங்கநாதனே! என்று அழைக்கின்றேன் – என்று கூப்பிடா நின்றேன்; என் தன் மாலுக்கே – என் பக்கல் அன்பு பூண்டுள்ள எம்பெருமானிடத்தில், மையல் கொண்டொழிந்தேன் – அன்பு பூண்டவனாக இருக்கின்றேன்.
வ்யா:- முதற்பாட்டு. (மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்) மெய்யென்றும் பொய்யென்றும் நிலையில்லாமையையும், நிலைநிற்குமத்தையும் சொல்லுகிறது. நிலைநில்லாததிலே, நித்யமான ஆத்மவஸ்துவில் பண்ணும் ப்ரதிபத்தியைப் பண்ணுமென்னுதல்.
மெய்யிலே உண்டான வாழ்க்கை என்னுதல், அதாகிறது:- ப்ரக்ருதியைப் பற்றிவரும் ப்ராக்ருத போகங்களிறே. (இவ்வையந் தன்னொடுங்க் கூடுவதில்லையான்) தேஹாத்மாபிமாநிகளாயிருப்பாரோடு எனக்கொரு சேர்த்தியில்லை.
(ஐயனித்யாதி) தேஹாத்வ்யதிரிக்தம் வேறொருவருண்டென்று அறிந்தவன் என்கிறார்.(ஐயனே) நிருபாதிக பந்துவே. (அரங்கா) அநுஷ்டாந பர்யந்தமாக்கின; மூதலித்தாப்போலே கோயிலிலே வந்து ஸுலபனானவனே. (என்றழைக்கின்றேன்) காரியப்பாடறக் கூப்பிடா நின்றேன். (மையல் கொண்டொழிந்தேன் என்றான் மாலுக்கே) அவன் எனக்குப் பித்தேறினபடியைக்கண்டு நானும் அவனுக்குப் பித்தனானேன்.
- நூலினேரிடையர் திறத்தே நிற்கும்
ஞாலந்தன்னொடும் கூடுவதில்லையான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மாலெழுந்தொழிந்தேன் என்றன்மாலுக்கே
பதவுரை:- நூலின் நேர் இடையர் திறத்தே நிற்கும் – நூல் போன்று மெல்லியதான இடையையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலேயே ஈடுபட்டிருக்கும், ஞாலம் தன்னொடும் – இவ்வுலகத்தவர்களோடே, யான் கூடுவது இல்லை-; ஆலியா – (அன்பின் மிகுதியினால்) ஆடி, அரங்கா என்று – பெரியபெருமாள் திருநாமத்தைச் சொல்லி, அழையா – கூப்பிட்டு, என் தன் மாலுக்கே –, மால் எழுந்தொழிந்தேன்- மயல்கொண்டு நின்றேன்.
வ்யா:- இரண்டாம் பாட்டு, (நூலினேரிடையர் திறத்தே நிற்கும்) நூல்போல் நுண்ணிய இடையையுடையராயிருக்கும் ஸ்த்ரீகள் திறத்திலே நிற்க்கும். ஊர் அவயவத்தை அநுபவிக்கப்புக்கால் மற்றைய அவயவத்தில் போகமாட்டாதே நிற்கும்.(ஞாலந்தன்னொடுங் கூடுவதில்லையான்) ப்ராப்த விஷயத்தில் இருக்கக்கடவ இருப்பை அப்ராப்த விஷயத்தே இருக்குமவர்களோடு எனக்கு ஒரு ஸம்பந்தமில்லை.
(ஆலியாவித்யாதி) இவர்கள் அப்ராப்த விஷயத்திலே படும் பாடெல்லாம் ப்ராப்த விஷயத்தே படுமவன் நான் என்கிறார்.(ஆலியா வழையா வரங்காவென்று) ப்ரீதிப்ரகரஷத்தாலே இருக்கமாட்டாதே ஆலியா, பெரியபெருமாள் திருநாமத்தைச் சொல்லி, அடைவுகெடக் கூப்பிட்டு.(மாலெழுந்தொழிந்தேனென்றான் மாலுக்கே)(18) “ तेन ते तमनुव्रता:” (தேந தே தமநுவ்ரதா:) என்னுமாப்போலே அவன் என் பாக்கள் வ்யாமுக்தனானபடி கண்டு நானும் ‘பித்தேறினேன். 2.
- மாறனார் வரிவெஞ்சிலைக்கு ஆட்செய்யும்
பாரினாரொடும் கூடுவதில்லையான்
ஆரமார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நரகாந்தகன் பித்தனே.
பதவுரை:- மாரனார் – மன்மதனுடைய, வரி வெம் சிலைக்கு – அழகிய கொடிய வில்லுக்கு, ஆள் செய்யும் – கட்டுப்பட்டுத் திரியும், பாரினாரொடும்- இவ்வுலக மக்களோடு, யான் கூடுவது இல்லை-; ஆரம் மார்வன் -(முத்தாலான) ஆரத்தை மார்விலேயுடையவனாய், அரங்கன்- ஸ்ரீரங்கநாதனென்னும் திருநாமத்தையுடையவனாய், அநந்தன் – அளவிட்டு அறியமுடியாதவனாய், நாள் நாரணன்- ஜீவாத்மாக்களுக்குச் சிறந்த செருமிடமாய், நரகாந்தகன்- அடியவர்களை நரகத்திலே விழாதபடி காக்குமவனான சர்வேஸ்வரன் விஷயத்தில், பித்தனே- நான் அன்பு பூண்டுள்ளேன்.
வ்யா:- மூன்றாம் பாட்டு, (மாரனார்வரி வெஞ்சிலைக்காட் செய்யும்) காமனுடைய தரஶநீயமாய்த் தப்பவொண்ணாதபடி கொடிதாயிருக்கிற வில்லுக்குக் குடிமகனாய்த் திரியும் பாரினாரொடுங் கூடுவதில்லையான் என்னுதல்; சார்ங்கமென்னும் வில்லாண்டான் தனக்கு ஆட்செய்யுமவன் நான்.
(ஆரமார்வனரங்கன்) ஆகர்ஷகமான ஒப்பனையையுடைய பெரிய பெருமாள். (அநந்தன்) மநுஷ்யத்வே பரத்வம் போலே இங்கேவந்து ஸுலபராய்க் கிடக்கச்செய்தே, பரிச்சேதிக்க வொண்ணாதபடி இருக்கிறவர்.(நன்னாரணன்) தன்னுடைமையை விடமாட்டாமையாலே அழுக்கை விரும்புமவன்.(நரகாந்தகன் பித்தனே) அவன் தன் வாத்ஸல்யத்தாலே மேல் விழா நிற்க நடுவே விரோதியும் போய்க் கொடுநிற்குமிறே, இப்படி இருக்கிறவனுக்குப் பித்தனே. 3.
வ்யாக்யாநம்
அரு:- மூன்றாம் பாட்டு (மாரனாரித்யாதி) பாரிலாரென்று பாடாந்தரம், பாரில்லாதவரென்றாய், ஒரு நத்தமில்லாத க்ஷுத்ரரென்றபடி, அன்றிக்கே, அர்த்தமின்றியே ஶப்தபேதமாத்ரமாய், பாரிலாரென்று பூமியிலுள்ளாரென்று ஏகார்த்தமாகவுமாம்.(நரகாந்தகன்)நரகாஸுரனுக்கு நாஶகன். 3.
- உண்டியே உடையே உகந்தோடும் இம்
மண்டலத்தோடும் கூடுவதில்லையான்
அண்டவாணன் அரங்கன் வந்தபேய்முலை
உண்டவாயன்தன் உன்மத்தன் காண்மினே.
பதவுரை:- உண்டியே – ஆஹாரத்தையும், உடையே – வஸ்த்ரத்தையும், உகந்து ஓடும்- விரும்பித்திரிகிற, இம் மண்டலத்தொடும்- இந்த உலகத்தாரோடே, யான் கூடுவது இல்லை -; அண்டம் வாணன்- இவ் வண்டத்திலுள்ள தேவர்களுக்கு அதிபதியும், வல் பேய்முலை உண்டவாயன் – வலிய நெஞ்சையுடைய பூதனையின் முலையை (உயிருடன்) உண்ட வாயையுடையவனுமான, அரங்கன் தன் – ரங்கநாதன் விஷயத்தில், உன்மத்தன் காண்மினே- பைத்தியம் பிடித்தவனாயிரா நின்றேன்.
வ்யா:- நாலாம் பாட்டு.(உண்டியேயுடையேயுகந்தோடும்) உபாஸநத்துக்கு ஶரீரம் வேண்டுகையாலே அது தரிக்கவேண்டுமளவன்றியிலே எல்லாவற்றையும் அழியமாறி உண்டியும் உடையுமாக்கும்.(இம்மண்டலத்தொடுங் கூடுவதில்லையான்)
*” உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” – திருவாய் (6-7-1) என்றிருக்க ஒரு விபூதி உண்டானாப்போலே ப்ராக்ருத போகங்களை விரும்புகைக்கொரு விபூதியிறே இதுவும்.
(அண்டவாணன்) அண்டாந்தர்வர்த்திகளுக்கு நிர்வாஹகன். (அரங்கன்) இதுக்கு நிர்வாஹகானாயிருக்கும் இருப்பொழிய இதினுள்ளே புகுந்து ஸுலபனாய்க் கோயிலிலே ஸந்நிஹிதனானவன்.(வன்பேய்முலையுண்டவாயன் உன்மத்தன் காண்மினே) இங்கே வந்து அவதரித்து ப்ரதிபந்தங்களைத் தானே போக்குமவனுக்குப் பித்தன் நான். (தன் உன்மத்தன் காண்மினே) ஔஷத ஸேவை பண்ணினாரை மீட்கவொண்ணாதாப்போலே அவனுடைய குணசேஷ்டித்தங்களிலே அகப்பட்டுப் பித்தனான என்னைக் கேவல ஶரீரபரரோடே சேராவிட வொண்ணுமோ?
அரு:- நாலாம் பாட்டு. (உண்டியே இத்யாதி). எல்லாவற்றையும் அழியமாறுகை) வர்ணாஶ்ரமதர்மங்களை அழியமாறுகை.(ஔஷத ஸேவை)ஸ்திரீ விஷயங்களிலே பற்றுகைக்கு மருந்திடுகை.
- தீதில்நன்னெறி நிற்க அல்லாதுசெய்
நீதியாரொடும் கூடுவதில்லையான்
ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரைப்
பேதைமாமணவாளன் தன் பித்தனே.
பதவுரை:- தீதில் நல்நெறி நிற்க – குற்றமற்ற நல்லவழி இருக்கச் செய்தே, அல்லாது செய் நீதியாரொடும் – க்ஷுத்ர புருஷார்த்தங்களை விரும்புவதையே வ்ரதமாக உடையவர்களோடு, யான் கூடுவதில்லை-; அவதரித்து எல்லார்க்கும் ஸுலபனாய், அம் தாமரை பேதை மாமணவாளன்- அழகிய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பெரிய பிராட்டியாரின் திரு மணவாளனான, அரங்கன் தன் -ரங்கநாதன் விஷயத்தில், பித்தனே- பித்தேறா நின்றேன்.
வ்யா:- அஞ்சாம் பாட்டு.(தீதில் நன்னெறி நிற்க)தீமையோடு விரவாத நல்வழி நிற்க, இவனை ஒழிந்த பலங்களுக்கு ஸாதநாநுஷ்டாநம் பண்ணிப்பெறும் பேற்றில் இழவே நன்றென்னும்படியிறே இருப்பது.(அல்லாது செய் நீதியாரோடுங் கூடுவதிலையான்) இதர புருஷார்த்தங்களை ஆசைப்படுகையே யாத்ரையாயிருப்பரோடு கூடுவதில்லை யான்.
(ஆதி) ப்ரமாணங்களால் உபாஸ்ய வஸ்துவென்று சொல்லப்படுகிறவன்.(ஆயன்) உபாஸ்ய வஸ்துதான் அரிதென்னவொண்ணாதபடி அவதரித்து ஸுலபனானவன்.(அரங்கன்) அவதாரம் போலே தீர்த்தம் ப்ரஸாதித்துப் பிற்பாடர் இழவாமே கோயிலிலே வந்து ஸந்நிஹிதரானவர்.(அந்தாமரைப் பேதை மாமணவாளன் தன் பித்தனே) அழகிய தாமரைப் பூவைத் தனக்கிருப்பிடமாகவுடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபரானவர்க்குப் பித்தனானேன் நான். ஓரடி இவன்
புகுற நின்றால் அத்தைக்குவலாக்கி, அவன் நெஞ்சிலே புண்படும்படி இவன் பண்ணின அபராதத்தை அவன் காணாதபடியிருக்கிற புருஷகார பூதை.(மாமணவாளன்) (19) “अप्रमेयं हि तत्तेज:” (அப்ரமேயம் ஹி தத்தேஜ:) இவளுக்கு வல்லவனாகையாலே வந்தன பெருமையையுடையவன் விஷயத்தில் பித்தன் நான். 5.
அரு:- அஞ்சாம் பாட்டு. (தீதிலித்யாதி). மற்றைவழி பொல்லாததோ என்ன( இவனையொழிந்த வித்யாதி) 5.
- எம்பரத்தரல்லரொடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதிலன்
தம்பிரான் அமரர்க்கு அரங்கநகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே.
பதவுரை:- எம் பரத்தர் அல்லாரொடும் – என்னைப்போலே அடிமை செய்ய இராதாரோடு, கூடலன் – (நான்) கூடமாட்டேன்; உம்பர் வாழ்வை – தேவர்களின் ஐச்வர்யங்களை, ஒன்று ஆக- ஒரு பொருளாக, கருதிலன் – நினைக்கமாட்டேன்; அமரர்க்கு தம்பிரான் – நிதயஸூரிகளுக்கு நிர்வாஹகராய், அரங்கநகர் – கோயிலிலே எழுந்தருளுயிருக்கிற, எம் பிரானுக்கு – என்னுடைய ஸ்வாமியான பெரிய பெருமாள் விஷயத்தில், எழுமையும் – எக்காலத்திலும், பித்தனே – பித்தன்.
வ்யா:- ஆறாம் பாட்டு.(எம்பரத்தரல்லாரொடுங் கூடலன்) என் யாத்ரையே யாத்ரையாயிராதாரை நமக்கு வளைத்திருப்பன். “ இந்நின்ற நீர்மை இனியாமுறைமை” – திருவிரு (1) என்றும், “வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம் “- திருவாய் (3-3-1) என்றும் இராதாரோடு ஸம்பந்தமில்லை. (உம்பர் வாழ்வையொன்றாகக் கருதிலன் ) ஸம்ஸாரத்தில் அருசியும் கைங்கர்யத்தில் ருசியுமில்லையாகில், ப்ரஹ்மாதிகள் ஸம்பத்தேயாகிலும் த்ருணவத்கரிப்பன்.
(தம்பிரானமரர்க்கு) “அயர்வறும் அமரர்களதிபதி” – திருவாய் (1-1-1) (அரங்கநகரெம்பிரானுக்கு) நித்யஸூரிகளெல்லாம் அநுபவிக்குமாப்போலே ஸம்ஸாரிகளெல்லாம் இழவாதபடி கோயிலிலே வந்து ஸுலபரானவர் (எழுமையும் பித்தனே) இச்செயலுக்கென்றும் பித்தனாயத் திரியுமவன்.
- எத்திறத்திலும் யாரொடும்கூடும் அச்
சித்தான்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்தனே! அரங்கா! என்று அழைக்க்கின்றேன்
பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.
பதவுரை:- எத்திறத்திலும் – எந்த விஷயத்தை அடைவதற்காகவும், யாரொடும் -எவ்விதமான மனிதர்களோடும், கூடும் அச்சித்தம் தன்னை – சேர்ந்து நாசமடையும் என் மநஸ்ஸை, செம் கண் மால் – புண்டரீகாக்ஷன், தவிர்த்தனன்- நீக்கி அருளினான்; அத்தானே- என்னை நியமிக்கும் ஸ்வாமியே! அரங்கா – ஸ்ரீ ரங்கநாதனே! என்று அழைக்கின்றேன்- என்று கூப்பிடா நின்றேன்; எம்பிரானுக்கே – (இதர விஷயங்களிலுள்ள ஈடுபாட்டைத்தவிர்த்த) என் ஸ்வாமிக்கு, பித்தனாய் ஒழிந்தேன்- பித்தனானேன்.
அவ:- ஏழாம் பாட்டு. இதரரோடு கூடாத நன்மை உமக்கு வந்தபடியென்? என்ன; நானடியாக வந்ததல்ல, ஸர்வேஶ்வரனடியாக வந்தது என்கிறார்.
வ்யா:- ( ஏத்திறத்திலும்) அபாகவதனோடு ஸம்பாஷிக்க அபிமத புருஷார்த்தங்களை எல்லாம் லபிக்கலாமென்னிலும் அத்தையும் நாக்குவளைப்பன்.(யாரொடுங் கூடும்) புருஷார்த்தங்களை லபியா தொழிந்தாலும் அவனோட்டைச் சேர்த்தியாலே எல்லா மேன்மையுண்டாமென்னிலும் அத்தையும் காற்கடைக் கொள்ளும்படியானேன்.(அச்சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்) கண்ணாலே குளிர நோக்கி தன் வ்யாமோஹத்தைக் காட்டிப் பிறரோடு மநஸ்ஸு பொருந்தாதபடி பண்ணினான்.
(அத்தனே) எனக்கு ஸ்வாமியானவனே.(அரங்காவென்றழைக்கின்றேன்) அந்த ஸ்வாமித்வத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக கோயிலிலே வந்து ஸுலபனானவனே என்று கூப்பிடா நின்றேன். (பித்தனாயொழிந்தே னெம்பிரானுக்ககே) இதர விஷய ப்ராவண்யத்தோடு பொருந்தாதபடி பண்ணின உபகாரகனுக்குப் பித்தனானேன். 7.
வ்யாக்யாநம்
- பேயரே எனக்கியாவரும்யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இதுபேசியென் ?
ஆயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்
பேயனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.
பதவுரை:- யாவரும் – (நிலை நில்லாத போகங்களை விரும்பும்) இவ்வுலகத் தாரடங்கலும், எனக்கு – (மேலான புருஷார்த்தத்தை விரும்பும் ) எனக்கு, பேயரே – பைத்தியக்காரர்களே; யானும் – நானும், எவர்க்கும் – எல்லாருக்கும், ஓர் பேயனே – ஒரு பைத்தியக்காரன் தான்; இதுபேசிஎன்- இவ்விஷயத்தை விரிவாகப் பேசி என்ன ப்ரயோஜநம்? ஆயனே – இடையனாய் பூமியில் அவதரித்த கிருஷ்ணனே! அரங்கா – ஸ்ரீ ரங்கநாதனே!, என்று அழைக்கின்றேன் – என்று கூப்பிடுகிறேன்; எம்பிரானுக்கே – ஸர்வேஶ்வரன் விஷயத்திலேயே, பேயனாய் ஒழிந்தேன்- பைத்தியம் பிடித்தவனாக ஆனேன்.
அவ:- எட்டாம்பாட்டு. எல்லாரும் விட்டாலும், ஒருவரல்லா ஒருவர் பற்றுவர்களிறே; அவர்கள் எல்லாரும் விடும்படியானேன் என்கிறார்.
வ்யா:- (பேயரே யெனக்கு யாவரும்) நிலைநின்ற புருஷார்த்தத்தைவிட்டு அஸ்திரமான ப்ராக்ருத போகங்களை விரும்புவதே! பேயராயிருந்தார்களென்று விட்டேன் நான். (யானுமோர் பேயனேயெவர்க்கும்) கண்ணால் காண்கிறதொழிய வேறே ஒன்றுண்டென்று ப்ரமியா நின்றான், பித்தனாயிருந்தானென்று விட்டார்கள் இவர்களும் என்னை.(இதுபேசியென்)இத்தைப்பரக்கச் சொல்லுகிறதென்.
(ஆயனே) கண்ணார் காண்கிறது பொய்யென்றிராதபடி வந்து அவதரித்ததுத் தன்படிகளை எனக்குக் காட்டினாவன். (அரங்காவென்றழைக்கின்றேன்) அவதாரத்துக்குப் பிற்பாடர் இழவோடே தலைக்காட்டாதபடி கோயிலிலே கண்வளர்ந்தருளின பெரியபெருமாள் திருநாமத்தைச் சொல்லி அடைவுகெடக் கூப்பிடா நின்றேன்.(பேயனாயொழிந்தேனெம்பிரானுக்கே) “ஒருவிஷயத்திலே பித்தேறினவன் நமக்கு இனி ஆகான்காண், விடாய்” என்று இதரர் என்னை உபேக்ஷிக்கும்படி ஆனேன். 8.
பெருமாள் திருமொழி
அரு :- எட்டாம் பாட்டு.(பேயரித்யாதி).(கண்ணால்காண்கிறது)கண்ணென்று -ஜ்ஞாநமாய், ஜ்ஞாநதாலே காண்கிற வஸ்து என்று பொய்யொன்றிராதபடி அவதரித்தென்றபடி. 8.
- அங்கையாழி அரங்கனடியிணைத்
தங்குசிந்த்தைத் தனிப்பெரும்பித்தனாய்
கொங்கார்கோன் குலசேகரன் சொன்னசொல்
இங்குவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே.
பதவுரை:- அம் கை ஆழி – அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானையுடைய, அரங்கன்- அழகிய மணவாளனின், ஆதி இணை – திருவடிகளில், தங்கு சிந்தை – ஈடுபடும்படியான மனமுடையராய், தனி பெரும் பித்தன் ஆய் – மிகவும் அன்பையுடையராய், கொங்கர்கோன் – மேற்கு கதிக்குக்கு அதிபதியான, குலசேகரன் – குலசேகரயாழ்வார், சொன்ன – அருளிச்செய்த, சொல் – இப்பாட்டுக்களை, வல்லவர்க்கு- கற்றவர்களுக்கு,இங்கு – இவ்வுலகத்தில், ஏதம் ஒன்று இல்லை – (பகவதநுபவத்திற்கு) ஒருவித இடையூறும் ஏற்படாது.
வ்யா:- ஒன்பதாம் பாட்டு.(அங்கையாழியரங்கனடியிணை)அழகிய மணவாளப்பெருமாள் திருவடிகளிலே .(தங்குசிந்தை) பெருமாள் திருவடிகளுக்கு அவ்வருகு கந்தவ்ய பூமியில்லாமையாலே அங்கே தங்கும் சிந்தையையுடைய, (தனிப்பெரும் பித்தனாய்) பகவத் விஷயத்தில் இவரோபாதி பித்தேறினார். வேறொருவரில்லாமையும், சிலவரால் மீட்க்கவொண்ணாமையுமான பித்தனாய்.
(கொங்கர்கோன் குலசேகரன் சொன்னசொல்) மேலைத்திக்குக்கு நிர்வாஹகரான ஸ்ரீகுலசேகரப்பெருமாள் அருளிச்செய்த (இந்து வல்லவர்க்கேதமொன்றில்லையே)இவற்றை நல்லவர்களுக்கு இங்கு ஏதமொன்று இல்லையே. ஏதமாவது – அபாகவத ஸ்பர்ஶமாதல்,பகவத் ப்ராவண்யத்தில் குறையாதல்; இவற்றால் வரும் து:க்கமொன்றும் இஸ்ஸம்ஸாரத்திலிருக்கும் நாளில்லை. இத்து:க்கப்ரஸங்கமுள்ளது இவ்விடத்தேயிறே. இவை கற்றவர்களுக்கு இப்ரஸங்கமுள்ள தேஶத்திலே இல்லை. 9.
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
வ்யாக்யாநம்
நாலாம் திருமொழி – ஊனேறு செல்வ ப்ரவேசம்.
********************
அவ :- பகவத்ஜ்ஞாநமும் பிறந்து இதர விஷயத்யாகமும் பிறந்து, குணாதிக விஷயத்தை அனுபவிக்க வேணுமென்னும் ருசியும் பிறந்து, அந்த குணம் பூர்ணமாக அநுபவிக்கலாமிடத்தே அநுபவிக்க வேணுமென்னும் ஆசையும் பிறந்து, “அடியார்கள் குழாங்களையுடன் கூடுவதென்று கொலோ” -திருவாய் (2-3-10) என்னுமாப்போலே, என்னுமதுவும் பிறந்து, இப்படி பகவத் விஷயத்திலும், பாகவத விஷயத்திலும் ஆநுகூல்யமும், இதரவிஷயத்யாக பூர்வகமாகக் கண்ணழிவறப் பிறக்கச்செய்தே விரோதியும்போய் அநந்தரம் பகவல்லாபமாகவும் காணாமையாலே, (20) “”यदि वा रावण: स्वयं” (யதி வா ராவணஸ் ஸ்வயம்) என்றும், “ஆள்பார்த்துழிதருவாய்”-நான்-திருவ (60) என்றும், மேல்விழக்கடவ அவன் பக்கல் குறையில்லை; இதுக்கு வேறேயொரு ஹ்ருதயமுண்டாகவேணுமென்று பார்த்து, ஶரீர சமநந்தரம் பகவல்லாபமாகில் பரிக்ரஹித்தஶரீரம் க்ஷத்ரிய ஶரீரமாய் போகங்களில் குறைவற்றிருந்த பின்பு ஶரீராவஸாநத்தளவும் போகங்களை பூஜித்து, பின்னை கிராமத்திலே பகவத்ப்ராப்தி பண்ணுகிறோமென்று நினைத்திருக்கிறேனென்று நினைத்து ஆறியிருந்தானாக வேணுமென்னுமத்தைத் திருவுள்ளத்திலே கொண்டு, தமக்கு க்ரமப்ராப்தி பொறாமை தோன்ற a .”ஒன்றியாக்கைபுகாமலுய்யக் கொள்வான் நின்ற வேங்கடம்”- திருவாய் (6-3-8) என்றும், b.”மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்திசெய்ய நின்றான்” – அமலனாதிபிரான்(3). என்றும், கீழ் அநுபாவித்த பெரியபெருமாள் தாமே ஸம்ஸாரஸம்பந்தம் அறுத்துக் கொடுக்கைக்கும் கைங்கர்யம் கொள்ளுகைக்கும் திருமலையிலே நிக்கிறாராகையாலே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து விரோதியில் அருசியும், கைங்கர்யத்தில் ருசியும், பிறந்த த்வரையும் ஆவிஷ்கரிக்கிறார்.
- ஊனேறு செல்வத்து உடற்பிறவியான் வேண்டேன்
ஆனேறேழ்வென்றான் அடிமைத்திறமல்லால்
கூனேறு சங்கமிடத்தான்தன் வேங்கடத்துக்
கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே.
பதவுரை:- ஆன் ஏறு ஏழ் வென்றான்- (நப்பின்னைப்பிராட்டியை மணம் புரிவதற்காக) பலம்பொருந்திய ஏழு எருதுகளையும் ஜயித்த எம்பெருமானுக்கு, அடிமை திறம் அல்லால் – அடிமை செய்வதையே விரும்புவதல்லால், ஊன் ஏறு செல்வத்து உடல்பிறவி – (நாளுக்கு நாள்) மாம்ஸம் அதிகரிப்பதாகிற செல்வத்தையுடைய இம்மானிடப் பிறவியை, யான் வேண்டேன் – நான் விரும்பமாட்டேன்; கூன் ஏறு சங்கம்- வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை, இடத்தான் தன் – இடது திருக்கையிலே உடையவனான எம்பெருமானுடைய, வேங்கடத்து- திருவேங்கடமலையில், கோனேரிவாழும் – புஷ்கரிணியில் வாழும், குருகு ஆய் பிறப்பேனே – நாரையாகவாவது பிறக்கக்கடவேன்.
அவ:- முதற்பாட்டு.( ஊனேறித்யாதி) ப்ரக்ருதி புருஷவிவேகம் பண்ணுகைக்கு யோக்யதையுள்ள மநுஷ்யஜந்மமாய், அதிலே பரரக்ஷணத்துக்குறுப்பான க்ஷத்ரியஜந்மமாய், கைங்கர்யத்தில் எல்லை நிலத்துக்குறுப்பான திர்யக்காய்ப் பிறக்க அமையும் நான் என்கிறார்.
வ்யா:- (ஊனேறுசெல்வத்துடல் பிறவி யான்வேண்டேன்) இந்த ஶரீரத்துக்குச் சொல்லுகிற குற்றமென்? என்ன; நாள்செல்ல நாள்செல்ல மாம்ஸப்ரசுரமாய் வருகையாலே ஶரீரந்தடித்து ஆத்மா இளைக்குமித்தனை; பாத்தாலே வேண்டேனென்கிறார். தர்மமுடைய ஸ்வரூபமும் நித்யமாயிருக்கச்செய்தே (14) “ असन्नेव ” (அஸந்நேவ) என்கிறது ஜ்ஞாநஸங்கோசத்தைப் பற்றவிறே; அப்படியே ஜ்ஞாநஸங்கோசத்தைப் பிறப்பிக்குமதுவாகையாலே வேண்டேனென்கிறார். (யான்வேண்டேன்) தலையறுத்துக் கொள்ளுமவர்கள் சந்தநம் பூசித் திரியுமாப்போலே விழுக்காடறியாதான் வேணுமே என்றிருந்தானாமத்தனை; விவேகஜ்ஞாநமுடைய நான் வேண்டேன். ஶரீரத்தினுடைய ஹேயதையும், ஆத்மாவினுடைய வைலக்ஷண்யத்தையும், இதுதான் தனக்கே ஶேஷமென்னுமிடத்தையும் அவன் தானே அறிவிக்க அறிந்த நான் வேண்டேன்.
(ஆனேறேழ்வென்றானடிமைத்திறமல்லால்) அவன்தானே விரோதியைப் போக்கிக் கைங்கர்யத்திலே அந்வயிப்பிக்குமவனானான். (ஆனேறேழ்வென்றான்) நப்பின்னைப் பிராட்டியோட்டை ஸம்ஶ்லேஷத்துக்கு இடைச்சுவரான ரிஷபங்கள் ஏழையும் வென்றவன். மாதாவின் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணின பிதாவை அநுவார்த்தைக்கும் புத்ரனைப் போலே.(அடிமைத்திறமல்லால்) அடிமையிடையாட்டமென்னுதல்;(21) ”अहं सर्वे “ (அஹம் ஸர்வம் ) என்றும், “வழுவிலாவடிமை”- திருவாய்(3-3-1) என்றும் சொல்லுகிறபடியே அடிமைத்திறமென்னுதல்.
( கூனேறுசங்கமிடத்தான்) கைங்கர்ய ருசியுடையாரை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன்.(கூனேறுசங்கமிடத்தான்) (22)” प्राञ्जलिं प्रह्मासीनं “(ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீநம்) என்னுமாப் போலே பகவதநுபவச் செருக்காலே இளையபெருமாளைப்போலே காட்சிக்கு நோக்காயிருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வான், (சங்கமிடத்தான்) இடக்கையிலே காணில் “சங்கமிடத்தான்” என்கிறார்; வலக்கையிலே திருவாழியாழ்வானைக் கண்டவராகையாலே “வலக்கையாழி”-திருவாய் (6-4-9) என்கிறார்; திருமார்விலே பிராட்டியைக் கண்டவாறே “நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கை”-திருப்பல் (2) என்கிறார். இவர்படி இதிறே.(தன்வேங்கடத்து) அங்கே அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான தேஶமாகையாலே என்னதென்று அவன் விரும்பின திருமலையில்.
(கோனேரிவாழுங் குருகாய்ப்பிறப்பேனே) விரஜையைப் பற்றி அமாநவ வஶத்திலே வர்த்திக்குமாப்போலே, திருக்கோனேரியைப் பற்றி வார்த்தைக்கும் குருகாய்பிறப்பேனென்கிறார்.(வாழும்) கோயில் வாஸம்போலேகாணும் திருக்கோனேரியில். வர்த்திக்குமென்கிற விடத்துக்குவேறே, வாசக ஶப்தங்களுண்டாயிருக்கச்செய்தே “வாழும்” என்கிற ஶப்தத்தை இட்டபடியாலே அங்குத்தை வாஸந்தானே போக ரூபமாயிருக்குமென்கை. (குருகாய்ப்பிறப்பேனே) ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணுகைக்குறுப்பான மநுஷ்ய ஜந்மமுமாய், அதிலே பரராக்ஷணத்துக்குறுப்புமாகையாலே புண்யஶரீரமான க்ஷத்ரிய ஜந்மம் வேண்டாவென்கிறார், அது துர்மாநஹேதுவாகையாலே; ப்ரக்ருதி
புருஷவிவேகம் பண்ணவும் மாட்டாதே பரரக்ஷணத்துக்குறுப்புமின்றிக்கே பாபயோநியுமாயிருக்கிற திர்யக்காய்ப் பிறக்கவமையும் திருமலை எல்லைக்குள்ளே பிறக்கப்பெறில் என்கிறார். “உடல் பிறவி யான் வேண்டேன்” என்கிறார்; “குறுகாய்ப்பிறப்பேனே” என்கிறார். பிறவி அன்றுபோலேகாணும் அங்கே பிறக்கை.
அரு:- முதற்பாட்டு.(ஊனேறு செல்வமித்யாதி) அங்கே வர்த்திகைதானே கைங்கர்யத்திலெல்லை. அணுவாய் நித்யமாயிருக்கிற ஆத்மாவுக்கு இளைப்புண்டோ என்ன, (தர்மமித்யாதி). கீழ்பதத்துக்குத் தாத்பர்யம் அருளிச்செய்கிறார்.(மாதவினித்யாதி).
இடக்கையிலே இருக்காய் ஸ்வபாவமன்றோ? இடத்தானென்று விஶேஷிப்பானேன்? என்ன, (இடக்கையிலே காணிலித்யாதி) 1.
- ஆனாதசெல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும்யான் வேண்டேன்
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே.
பதவுரை :- ஆனாத செல்வத்து – அழியாத (யௌவநமாகிற) ஸம்பத்தையுடைய, அரம்பையர்கள்- ரம்பை முதலிய தேவஸ்த்ரீகள், தன் சூழ – தன்னைச்சூழ்ந்து நிற்க, வான் ஆளும் செல்வமும் – ஸ்வர்க்கத்தை ஆளுகையாகிற செல்வத்தையும், மண் அரசும்- இப்பூமியை அரசாளுவதையும், யான் வேண்டேன் – நான் விரும்பமாட்டேன்; தென் ஆர் பூ சோலை- தென் மிகவுள்ள பூக்களுடன் கூடிய சோலைகளையுடைய, திரு வேங்கடம் சுனையில் – திருவேங்கடமலையிலுள்ள சுனையில், மீன் ஆய் பிறக்கும் – மீனாகவாவது பிறக்கும், விதி உடையேன் ஆவேனே- பாக்கியத்தை உடையவனாகக் கடவேன்.
அவ:- இரண்டாம் பாட்டு, இங்குத்தை போகங்களிற் காட்டில் நிலைநின்ற போகங்களுமாய் இதுபோலே ஸாவதியன்றியே நிரவதியுமாயிருக்குமிறே ஸ்வர்க்கத்தில் போகம்; அவை பெற்றால் செய்வதென் நீர்? என்ன; அவையும் கீழில் கழித்த பூமியில் போகமும் இரண்டும் கூடக்கிடைக்கிலும் வேண்டாவென்கிறார்.
வ்யாக்யாநம்
வ்யா:- (ஆநாதசெல்வத்தரம்பையர்கள்) கெடாத ஸம்பத்து, அதாவது, அழியாத யௌவந ஸ்ரீயையுடைய அப்ஸரஸ்ஸுகள்.(தற்சூழ) இவன்தான் தப்பிநினைத்தாலும் தப்பவொண்ணாதபடி அவர்கள் மேல்விழ.(வானாளுஞ் செல்வமும் மண்ணரசும் வாய் வேண்டேன்)ஸ்வர்க்காதிகள் அநுபவிக்கும் ஸம்பத்தோடே கூட கீழில்கழிந்த ராஜ்யஸ்ரீயையும் கூட்டினாலும் வேண்டேன். வேண்டேனென்கிறது- இவற்றுக்குக்
குறையுண்டாயன்று; தாம் நினைத்த புருஷார்த்தமல்லாமையாலே வேண்டேனென்கிறார்.
நீர் வேண்டியிருப்பதென்? என்ன, (தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்) தேன்மிக்கிருந்துள்ள பொழிலென்னுதல்; வண்டுகள் மிக்க பொழிலென்னுதல். பொழில் சூழப்பட்டிருக்கிற திருமலையில் சுனைகளிலே, (மீனாய்ப்பிறக்கும் விதியுடையேனாவேனே) கீழ்ச் சொன்ன குருகாய்ப்பிறக்கில் அதுக்குச் சிறகுண்டாகையாலே திருமலையிலெல்லையைக் கழியப்பறக்கைக்கு யோக்யதை உண்டிறே;அப்படியும் ஒன்றன்றியே, உத்பத்திஸ்திதிலயங்களும் திருமலையிலேயாம் மீனாய்ப்பிறப்பேன் என்கிறார்.(பிறக்கும் விதியுடையேன் ஆவேனே)இப்போது மீனாய்ப்பிறக்கவும் வேண்டா; ஒரு ஸுக்ருதத்தாலே அந்த ஜந்மம் மேல் வருமென்னும் திண்மை பெற அமையும் என்கிறார். 2.
- பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டாச்சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில்பிடித்து உடனே புகப்பெறுவேனாவேனே.
பதவுரை:- பின்னிட்ட சடையானும் – பின்னப்பட்ஜடையையுடையவனான சிவனும், பிரமனும் – ப்ரஹ்மாவும், இந்திரனும் – தேவேந்திரனும், துன்னிட்டு- ஒருவருக் கொருவர் நெருக்கியும், புகழ் அரிய – உள்ளே பிரவேசிக்க முடியாமலிருக்கின்ற, வைகுந்தம் நீள்வாசல் – (பூலோக) வைகுண்டமாகிற திருமலையின் நீண்ட திருவாசலிலே, மின் வட்டம் சுடர் ஆழி – மின்னலை வளைத்தாற்போல்
சுடர்விடும்படியாயுள்ள திருவாழியாழ்வானையுடைய, வேங்கடம் கோன் தான் – திருவேங்கடமுடையான், உமிழும்- வாய்நீர் உமிழ்கின்ற, பொன்வட்டில் பிடித்து – தங்கவட்டிலைக் கையில் ஏந்திக் கொண்டு, உடனே புக பெறுவேன் ஆவேனே – அந்தரங்க வ்ருத்தி செய்பவர்களுடன் நானும் உள்ளேபுகும் பாக்யத்தைப் பெறக்கடவேன்.
அவ:- மூன்றாம்பாட்டு, பாரதந்தர்யத்துக்குறுப்பாகப் பெறில் கீழில் கழிந்த மநுஷ்யஜந்மமேயாகிலும் அமையுமென்கிறார்.
வ்யா:- (பின்னிட்ட சடையானும்)பின்னப்பட்ட சடையானென்னுதல்; பின்னே நாலப்பட்ட நாலப்பட்ட சடையானென்னுதல். பின்னே வர்த்திக்கக் கடவனிறே புத்ரன்; அப்படியே ப்ரஹ்மாவின் பின்னே நிற்கும் சடையானென்னுதல். (பிரமனும்)இவனுக்கு ஜநகனான ப்ரஹ்மாவும், (இந்திரனும்) (23) ”सेन्द्र:” (ஸேந்த்ர:) என்னும்படியான இந்த்ரனும், (துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல்) ஒருவர்க்கொருவர் முன்பு போகவேண்டி நெருக்குகையாலே புக அரிதரயிருக்கிற வைகுந்தநீள்வாசலிலே.
(மின்வட்டாச்சுடராழி) மின்னை வளைத்தாப்போலே ஜ்யோதிஸ்ஸையுமுடைத்தாய்ச் சுற்றும் வாயையுமுடைத்தாயிருக்கிற திருவாழியாழ்வானையுடைய, (வேங்கடக்கோன்றாலுமிழும் பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேனாவேனே) ப்ரஹ்மருத்ராதிகள் நெருக்கிப்புகப்பெறாதே நிற்க, “பணிக்குக்கடவன் இவனைப் புகுரவிடு” என்று உள்ளே அந்தரங்கவ்ருத்திக்குக்கடவ அவர்களோடே நானும் ஸஜாதீயனாய்ப் புகவேணும்.
4.ஒண்பவள வேலை உலவுதண் பாற்கடலுள்
கண்டுயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச்
செண்பகமாய் நிற்கும் திருவுடையேனாவேனே
பதவுரை:- ஒண் பவளம் வேலை உலவு – ஒளியுள்ள பவளங்களை காரியலே கொண்டு வந்து சேர்த்து (அலைகளாகிற கால்களால்) உலாவுகிற, தண் பாற்கடலுள் – குளிர்ந்த திருப்பாற்கடலிலே,
கண்துயிலும் – கண்வளருகின்ற,மாயோன்- ஆச்சர்ய குணசேஷ்டிதனான எம்பெருமானுடைய, கழல் இணைகள் காண்பதற்கு – இரண்டு திருவடிகளையும் சேவிக்கும்பொருட்டு, பண் பகரும் வண்டு இனங்கள்- இன்னிசைகளைப்பாடும் வண்டுகளின் கூட்டங்கள், பண்பாடும் வேங்கடத்து- இசை பாடும்படியான திருமலையிலே , செண்பகம் ஆய் நிற்கும் – செண்பகமரமாய் இருக்கும், திரு உடையேன் ஆவேனே – பாக்கியமுடையவன் ஆவேனாக,
அவ:- நாலாம்பாட்டு, மநுஷ்ய ஶரீரம் ராஜாவாகைக்கும் பொதுவாகையாலே அது வேண்டா, திருவேங்கடமுடையானுக்குறுப்பாம்படி திருமலையிலே நிற்பதொரு ஸ்தாவரமாக அமையும் நான் என்கிறார்.
வ்யா:- (ஒண்பவளம் வேலையுலவுதண் பாற்கடலுள்) ஒள்ளிய பவளத்தைக் கரையிலே கொடுவந்து (கொண்டுவந்து) கொழிக்கிற பாற்கடலென்னுதல்; ஒள்ளிய பவளங்களைக்கொண்டு உலாவுகிற திரைகளையுடைய ஶ்ரமஹரமான திருப்பாற் க்கடலிலே என்னுதல்.(கண்துயிலுமாயோன்)திருப்பாற்கடலிலே எண்ணுதல். (கண்துயிலுமாயோன்) திருப்பாற்கடலிலே, “கிடந்ததோர், கிடக்கை”- திருமாலை (23)என்று சொல்லும்படி கண்வளர்ந்தருளுகிற ஆஶ்சர்ய பூதனானவன் (கழலிணைகள் காண்பதற்கு)அங்குச்சென்று கிட்டிக் காணவொண்ணாத அருமை தீரக்காணலாம் தேஶதட்டிலே கங்கைக்காக.
(பண்பகரும்) இயலைக்கற்று ஶிக்ஷாபலத்தாலே இசைவருமதின்றியே வார்த்தை சொல்லும்போதும் பண்ணாயிருக்கை.(வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து) தாங்கள் பாடுகிற பாட்டுக்கு இசைந்து வண்டினங்களானவை பண்பாடுகிற திருமலையில்.(செண்பகமாய் நிற்கும் ஸம்பத்துண்டாகவேணும்; அதாவது:- பகவத் ப்ரத்யாஸத்தியிறே ப்ராப்யம்; அது கிட்டுமதான பின்பு ஸ்தாவரமாய் நிற்கவும் அமையும்; மேலே ஏறின சைதந்யத்தாலே கார்யமில்லை என்கிறார்.
அரு :- நாலாம்பாட்டு, (ஒண்பவளமிதியாதி).(தாங்கள் பாடுகிற) என்றது வ்யாக்யாதாவின் வார்த்தையாய், தாங்கள் என்று ஆழ்வார்களைச் சொல்லுகிறது. ஆழ்வார்கள் பாசுரத்துக்குச் சேர வண்டுகள் கானம் பண்ணுகிறதென்றபடி. அன்றியே வண்டுகளான தாங்களென்றாய், தங்கள் பாட்டுக்குச் சேராத் தாங்களே காநம் பண்ணுகிறதென்னவுமாம். 4.
5. கம்பமதயானைக் கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கடமலைமேல்
தம்பகமாய்நிற்கும் தவமுடையேனாவேனே.
பதவுரை:- கம்பம் – (கண்டவர்களெல்லாரும்) நடுங்கும்படியான, மதம் யானை – மதங்கொண்ட யானையினுடைய, கழுத்து அகத்தின் மேல் இருந்து – கழுத்தின் மேலே(பெருமை தோன்ற) வீற்றிருந்து, இன்பு அமரும் செல்வமும் – எல்லா போகங்களையும் அனுபவிக்கும்படியான ஐஸ்வரியத்தையும், இவ்வரசும் – (அதற்கு ஸாதனமான)இந்த அரசாட்சியையும், யான் வேண்டேன் – நான் விரும்பமாட்டேன்; எம் பெருமான் – எனக்கு ஸ்வாமியும், ஈசன் – எல்லா உலகுக்கும் தலைவனுமான ஸர்வேஶ்வரனுடைய, எழில் வேங்கடம் மலை மேல் – அழகிய திருமலையிலே, தம்பனம் ஆய் நிற்கும் – (ஒரு காரியத்துக்கும் உதவாத) தம்பகமரமாய் இருக்கும்படியான, தவம் உடையேன் ஆவேனே- பாக்கியத்தை உடையவனாகக் கடவேன்.
அவ:- அஞ்சாம்பாட்டு, செண்பகமானால் பரிமளத்துக்காக உள்ளே கொண்டு புகுவார்களென்று ஒரு ப்ரயோஜநத்தைக் கணிசித்ததாமிறே; அப்படியும் ஒன்றுமில்லாத தம்பகமாகவும் அமையும் என்கிறார்.
வ்யா:- (கம்பமதயானைக் கழுத்தகத்தின் மேலிருந்து) கண்டாரெல்லாம் நடுங்கும்படி மதிப்பையுடைய ஆனை என்னுதல்; மதத்தாலே கம்பத்தினின்றும் விடவொண்ணாதபடி நிற்கும் யானை என்னுதல். ஒருவராலும் மேற்கொள்ள வொன்னாதாகிலும் ராஜாக்களை மேற்கொள்ள வொட்டுமிறே யானைகள்; எல்லார்க்கும் பயாவஹமான யானையை மேற்கொண்டு தன கருத்திலே நடத்தி,
(இன்பமருஞ் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்) அங்கேயிருந்து எல்லா போகங்களும் புஜிக்கும் ஸம்பத்தும் அதுக்கடியான ராஜதர்மமும் யான்வேண்டேன்.
நீர் வேண்டுவதென்? என்னில், (எம்பெருமானீசன்)(24) “ ” अखिलजगत्स्वामी अस्मत्स्वामी “(அகிலஜகத்ஸ்வாமி அஸ்மத் ஸ்வாமி).(எழில் வேங்கடமலைமேல்)எல்லார்க்கும் ஸ்வாமியாயிருந்து வைத்து என் பக்கலிலே விஶேஷகடாக்ஷத்தைப் பண்ணின என்நாயனதான எழிலுடைய திருமலையிலே.(தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே) ஒரு ப்ரயோஜநத்துக்காகாதே அங்கே முளைத்துத் தீய்ந்துபோவதொரு ஸ்தாவரமாவேன். (தவமுடையேனாவேனே) அநேக ஜந்மஸாத்ய தப:பலமென்றிருக்கிறார் காணுமிதுதன்னை. 5.
6. மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியுமிமேனகையும்
அன்னவர்தம்பாடலொடும் ஆடலவை ஆதரியேன்
தென்னவெனவண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தனாவேனே.
பதவுரை:- மின் அனைய நுண் இடையர் – மின்னல் போல் நுண்ணிய இடையே உடையவர்களாகிய, உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம் – ஊர்வசியும் மேனகையும் போன்ற அழகிய ஸ்த்ரீகளின், பாடலொடும் ஆடல் அவை- ஆடல் பாடல் முதலியவற்றை, ஆதரியேன் – நான் விரும்பவில்லை; வந்து இனங்கள் – வண்டுகளின் கூட்டங்கள், தென்னை என் பண்பாடும் – “தென தென” என்று ஆளத்தி வைத்து இசையுடன் பாடப்பெறும், வேங்கடத்துள் – திருவேங்கடமலையில், அன்னனைய பொன் குவடு ஆம் – ஒப்புயர்வற்ற சிகரமாவதற்குரிய, அரு தவத்தன் ஆவேனே – மேலான தலத்தை உடையவனாகக் கடவேன்.
அவ:- ஆறாம் பாட்டு. ஸ்தாவரமானால் ஒரு நாள் உண்டாய் ஒருநாள் இன்றியே போமிறே; அங்ஙனன்றியே என்றுமொக்கவுண்டாயிருந்த திருமலையில் ஏகதேஶமாகவேணும் நான் என்கிறார்.
வ்யா:- (மின்னனைய நுண்ணிடையாரித்யாதி) மின்போலே, நுண்ணிய இடையையுடையரான தேவஸ்த்ரீகளைப்போலே அழகியராயிருக்கிற ஸ்த்ரீகளுடைய ஆடல் பாடல்களில் எனக்கு ஆதரமில்லை. (தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்) ”தென தென” எண்ட்ட்று ஆளத்திவைத்து வண்டிங்கள் பண்பாடுகிற திருமலையிலே. (அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தனாவேனே)அப்படிப்பட்ட பொற்ர்குவடென்னுமத்தனை; வேறு உபமாநமில்லை (அருந்தவத்தனாவேனே)திருவேங்கடமுடையான் தனக்கு அவ்வருகாகிறதிறே; ஆடையால், “அருந்தவத்தன்” என்னக்குறையில்லையிறே. 6.
7. வானாளும்மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகிவீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையனாவேனே.
பதவுரை:- வான் ஆளும் மாமதிபோல் – ஆகாசத்தை ஒளியால் பரவியிருக்கிற பூர்ணசந்திரனைப் போன்ற, வெண் குடை கீழ்- வெண் கொற்றக்குடையின் நிழலிலே, மன்னவர் தம் கோனாகி வீற்றிருந்து- ராஜாதிராஜனாய்க் கொலுவிருந்து, கொண்டாடும் செல்வு – ( எல்லோராலும்) கொண்டாடத்தக்க செல்வத்தை, அறியேன் – நான் ஒரு பொருளாக நினைக்கமாட்டேன்; தேன் ஆர் பூ சோலை – திருமலையின் மேலே கான் ஆறு ஆய் பாயும் – ஒரு காட்டாறாய்ப் பாயும்படியான, கருத்து உடையேன் ஆவேன்- கருத்தை உடையவனாக ஆவேன்.
அவ:- ஏழாம் பாட்டு. திருமலையில் ஶிகரமானால் ஏறவல்லார் அநுபாவித்து, மாட்டாதார் இழக்குமதாயிருக்குமிறே; அப்படியின்றியே எல்லார்க்கும் அனுபவயோக்யமாயிருக்கும் கானாறாகவேணும் நான் என்கிறார்.
வ்யா:- (வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்) ஆகாசப் பரப்புக்கெல்லாம் சந்த்ரன் ஒருவனுமே ஆனாப்போலே, லோகமெல்லாம் தன் வெண்கொற்றக் குடைக்கீழே ஒதுக்கும்படியாக(மன்னவர் தம் கோனாகி) நக்ஷ்த்ரதாராகணங்கள் சந்த்ரனை சேவித்திருக்கமாப்போலே ,
ராஜாக்களெல்லாம் வந்து சேவித்திருக்கும்படி ராஜராஜனாய் (வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்) வேறுபட விருந்துகொண்டாடும் ஸம்பத்து எனக்கு பிரதிபத்தி விஷயமாகிறதில்லை.
(தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல்) தேன்மிக்கிருந்துள்ள சோலையையுடைய திருமலைமேல்.(கானாறாய்ப் பாயுங்கருத்துடையனாவேனே) ஸஹ்யம் பற்றினதாகில் கீழேபோமிறே; அங்கே சுவறிப்போம் காட்டாறுகளாம் அபிஸந்தியை உடையேனாகவேணும். 7.
8. பிறையேரறுசடையானும் பிரமனும் இந்திரனும்
முடியாயபெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல்
நெறியாய்க்கிடக்கும் நிலையுடையேனாவேனே.
பதவுரை:- பிறை ஏறு சடையானும் – இளஞ் சந்திரனை ஜாடையில் தரித்துள்ள சிவனும், பிரமனும்- ப்ரஹ்மாவும், இந்திரனும்- தேவேந்திரனும், முறை ஆய – தங்களுடைய யோக்யதைக்குத் தகுந்தபடி பண்ணும், பெரு வேள்வி- பெரிய யாகங்களுக்குப் பலனாக, குறை முடிப்பான்- (அவரவர்களுடைய)விருப்பங்களை பூர்த்தி செய்பவனும்; மறை ஆனான் – வேதப்ரதிபாத்ய வஸ்துவாயிருப்பவனுமான எம்பெருமானுடைய, வெறி ஆர் தண் சோலை – பரிமளம் மிகுந்த குளிர்ந்த சோலைகளையுடைய, திருவேங்கடம் மலைமேல் – , நெறி ஆய் கிடைக்கும் – ( ஸ்ரீ வைஷ்ணவர்களின் பாததூளிபடிப்படி) வழியாய்க் கிடக்கின்ற, நிலை உடையேன் ஆவேனே – துணிவுடையவனாகக் கடவேன்.
வ்யா:- எட்டாம் பாட்டு.(பிறையேறு சடையானும்) ஸாதக வேஷம் தொற்றும்படி ஜடையோடே இருக்கச்செய்தே ஸுகப்ரதாநனென்று தோற்றும்படி பிறையை தரித்துக்கொண்டிருக்கிற ஹரனும்,(பிரமனும்) அவனுக்கு ஜநகானான் ப்ரஹ்மாவும் (இந்திரனும்) (23) “सेन्द्र:”(ஸேந்த்ர:) என்னும்படியான இந்த்ரனும்.(முறையாய பெருவேள்வி குறைமுடிப்பான்) தந்தாமுடைய அதிகாராநுகுணமாகப் பண்ணும் யஜ்ஞபலமான அதிகாரங்களைக் கொடுக்குமவன்.
(மறையானான்)ப்ரஹ்மாதிகளுக்கு ஆஶ்ரணீயமென்னும் வேதைக ஸமதிகம்யமனானவன்.(வெறியார் தண்சோலைத் திருவேங்கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடை யேனாவேனே) பரிமளம் மிக்குக் குளிர்த்தியையுடைய திருமலைமேலே; ஆறானால் ஒருகால் பெருகினால் விநியோகப்பட்டு, வற்றினால் விநியோகப்படாதிறே; அங்கனன்றியே, எப்போதுமொக்க ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸஞ்சரிக்கையாலே, அவர்கள் பாதரேணு படும்படி வழியாய்க் கிடக்கும் துணிவுடையனாவேனே. “தொண்டரடிப்பொடியாட நாம்பெறில்”- பெருமா-திரு (2-2) என்றிருக்குமவரிறே. 8
9. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன் பவளவாய் காண்பேனே.
பதவுரை: செடி ஆய – பாபபலமான, வால் வினைகள்- கொடிய ஸம்ஸார ஸம்பந்தத்தை, தீர்க்கும் – போக்கியருள்கின்ற, திருமாலே – ஸ்ரீய:பதியான எம்பெருமானே!நெடியானே- (ஆஸ்ரித பக்ஷபாதத்தில்) எல்லை காணவொண்ணாதவனே!வேங்கடவா – திருவேங்கடமுடையானே! நின் கோயிலின் வாசலிலே, அடியாரும் – (அநந்யப்ரயோஜநரான) ஸ்ரீவைஷ்ணவர்களும், வானவரும் – (ப்ரயோஜநாந்தரபரரான)சேவர்களும், அரம்பையரும் – (பிறருக்கு அடிமைபூண்டுள்ள) ரம்பை முதலிய தேவ ஸ்த்ரீகளும், கிடந்து இயங்கும்- கூடி ஸஞ்சரிக்கப்பெறும், படியாய் கிடந்து- படியாகக்கிடந்து, உன் பவளம் வாய் காண்பேனே – உனது பவளம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாக.
வ்யா:- ஒன்பதாம்பாட்டு. (செடியாய வல்வினைகள் தீர்க்கும்) தன் திருவடிகளிலே தலைசாய்த்தாருடைய பாபபலமான ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்துக்கொடுக்குமவனாய்த்து, செடி – பாபம் (திருமாலே) அதுக்கு நிபந்தநம் கூடவிருந்து செய்விப்பாருண்டாகை.(நெடியானே) அவள்தானும் என்னாலும் பொறுக்கப்போகாது, “என்னடியாரது செய்யார்” பெரியாழ் -திரு (4-8-2). என்று ஆஶ்ரித விஷயத்திலோரம் எல்லைகாண வொண்ணாதவன்.(வேங்கடவா நின்கோயிலின் வாசல்) தேவரீருடைய திருவாசலிலே.
(அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்படியாய்க் கிடந்து) அநந்யப்ரயோஜநரும் ப்ரயோஜநாந்தரபரரும் அந்யபரரும் கிடந்தது ஸஞ்சரியா நின்றால் ஒருநினைவற்று அசேதநத் கிடைக்கவேணும். (உன் பவளவாய் காண்பேனே) பாரதந்த்ர்யத்துக்கு அசேதநஸமாதியாகவும் வேணும், அது புருஷார்த்தமாகைக்குக் காணவும் வேணும். 9.
10. உம்பருலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற்கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவளவாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாயவேனே.
பதவுரை:- உம்பர் உலகு – மேலுலகங்களையெல்லாம், ஒரு குடை கீழ்- ஒப்பற்ற தன்னுடைய வெண்கொற்றக குடையின் நிழலிலே, ஆண்டு – அரசு புரிந்து, உருப்பசி தன் – ஊர்வசியினுடைய, அம்பொன்கலை அல்குல் – அழகிய பொன்னாடை அணிந்த அல்குலை, பெற்றாலும்- அடையப் பெறினும், ஆதரியேன்(அதை) விரும்பமாட்டேன்; செம்பவளம் வாயான் – சிவந்த பவழம் போன்று வாயையுடையவனான, எம்பெருமான் – என் ஸ்வாமியுடைய, திரு வேங்கடம் என்னும் பொன் மலை மேல் – திருவேங்கடம் என்னும் பெயரை உடைய அழகிய மலைமேலே, ஏதேனும் ஆவேனே- ஏதேனுமொரு பதார்த்தமாகக்கடவேன்.
அவ:- பத்தாம் பாட்டு. கிட்டுமளவும் வேண்டாமென்கிறீர், கிட்டினவாறே அநுபாவிக்கிறீறென்ன; அவை கிட்டினாலும் வேண்டா என்கிறார்.
வ்யா:- (உம்பருலகாண்டொருகுடைக்கீழ்) உபரிதநலோகங்களெல்லாம் தன்னொரு முத்தின் குடைக்கீழே செலுத்தி.(உருப்பசிதன் அம்பொற்கலையல்குல் பெற்றாலுமாதரியேன்) அவற்றைக் கிட்டுவித்தாலும் எனக்கு ஆதரம் பிறவாது.
(செம்பவளவாயான்) ஊர்வசியைக் கண்டால் அநாதரிக்கும் படியாய்த்து உள்ளு நிற்கிற விஷயத்தின்படி. (திருவேங்கட மென்னும் எம்பெருமான் பொன்மலைமேல்)என் நாயனுடைய ஶ்லாக்கியமான திருமலையிலே, (ஏதேனுமாவேனே) அநந்தாழ்வான் இவ்விடத்துக்கு “திருவேங்கடமுடையான் தானாகவுமமையும்” என்னும் ; அதுக்கு ஹ்ருதயமென்? என்னில், ஶேஷ பூதர்திரளுக்குப் புறம்பான ஶேஷியாகிலும் அமையு
மென்கை. அங்ஙனன்றிக்கே பட்டர் அருளிச்செய்யும்படி :- “நானும் அறியவேண்டா, திருவேங்கடமுடையானும் அறியவேண்டா, கண்டாரும் அறிந்து ஶ்லாகிக்கவும் வேண்டா, திருமலைமேலே உள்ளதொரு பதார்த்தமாக அமையும்” என்பர். 10
11. மன்னியதண்சாரல் வடவேங்கடத்தான் தன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சிக்
கொன்னவிலும் கூறவேல் குலசேகரன்சொன்ன
பன்னியநூல் தமிழ் வல்லார் பங்காய பத்தர்களே.
பதவுரை:- கோல் நவிலும் – (விரோதிகளைக்) கொல்லுவதில் தேர்ச்சி பெட்ரா, கூர்வேல் – கூர்மையான வேலையுடைய, குலசேகரன் – குலசேகராழ்வார், மன்னிய தண் சாரல் – மாறாத குளிர்ச்சியுள்ள தாழ்வரைகளையுடைய, வாட வேங்கடத்தான் தன் – வாட வேங்கடமலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுடைய, பொன் இயலும் சேவடிகள் – பொன் போற் சிறந்த சிவந்த திருவடிகளை, காண்பான் – ஸேவிப்பதற்கு, புரிந்து – ஆசைப்பட்டு, இறைஞ்சி – வணங்கி சொன்ன – அருளிச்செய்த, பன்னிய நூல் தமிழ் – பரம்பியதும் இலக்கணத்துக்கு இசைந்ததுமான தமிழ்த் தொடையை, வல்லார்- கற்றுணர்ந்தவர்கள், பங்கு ஆய பத்தர்களே – (அவன் திருவுள்ளத்திற்கு உகந்த) இனிய பக்தர்களாவார்கள்.
வ்யா:- பதினோராம் பாட்டு. (மன்னியதண்சாரல் வடவேங்கடத்தான்றன் பொன்னியலுஞ்சேவடிகள் காண்பான்) கண்டால் கால் வாங்க மாட்டாதே ( பிணிப்படும்படி ஶ்ரமஹரமான பர்யந்தத்தையுடைய தமிழுக்கெல்லையான திருமலையை உடையவருடைய ஶ்லாக்யமான திருவடிகளைக் காண்கைக்காக (புரிந்திறைஞ்சி)காணவேண்டும்படி பக்தியையுடையராய்த் தலையாலே வணங்கிக் கவிபாடினாராய்த்து,
(கொன்னவிலுங்கூர்வேல் குலசேகரன் சொன்ன) ப்ரதிபக்ஷத்தை
வெல்லவல்லாரானாப் போலேயாய்த்து கவிபாடியிருக்கும்படியும்.(பன்னியநூல் தமிழ் வல்லார்)பாம்பின் லக்ஷணோயேதமான தமிழ்த் தொடையை வல்லவர்கள்.(பங்காய பத்தர்களே) இங்கே இருந்து “அதுவாகவேணும், இதுவாகவேணும் “ என்னாதே அவனுக்கு இஷ்டவிநியோகார்ஹமாவார்கள். 11.
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
நாலாம் திருமொழி முற்றிற்று.
அரு :- பதினோராம் பாட்டு.(மன்னியவித்யாதி).(அதுவாக இதுவாக) அதுவாய்ப் பிறக்க, இதுவாய்ப் பிறக்க. 11.
அஞ்சாம் திருமொழி – தருதுயரம் ப்ரவேசம்
அவ:- (தருதுயரம்) திருமந்த்ரத்தால் சொல்லிற்றாய்த்து அநந்யார்ஹ ஶேஷத்மிறே; இந்த அநந்யார்ஹ ஶேஷத்வப்ரதி பந்திக்கு விரோதிதான் “நான் என்னது” என்றிருக்கும் அஹங்கார மமகாரமிறே.அநாத்மந் யாத்தமபுத்தியும், அஸ்வேஸ்வத்வ புத்தியுமிறே ஸம்ஸாரமாகிற வ்ருக்ஷத்துக்கு பீஜமென்று ப்ரமாணங்கள் சொல்லுகின்றன; அது சேதநர்க்கும் பொதுவானதிறே, அப்படியின்றியே, ராஜாக்களாகையாலே அஹங்காரமமகாரவஷ்யராயிறே இருப்பது: “நிலா, தென்றல், சந்தநம்” என்று சொல்லுகிற இவை பரார்த்தமாகாதா போது ஸ்வரூபசஸித்தியில்லையாமிறே. அப்படியேயிறே பரார்த்தமான வஸ்துவுக்கும் அஹங்கார மமகாரத்தாலே ஸ்வரூபஸித்தி அழியுமிறே.
இப்படி பரார்த்தமென்னும்படிக்கு ப்ரமாணமுண்டோ? என்னில்; இவனை (25) “ यस्यास्मि “ (யஸ்யாஸ்மி) என்றும் ஓதி, அவனை(26) ” पतिं विश्वस्य “( பதிம் விஶ்வஸ்ய) என்றும் ஓதுகையாலே இவன் ஒன்றுக்கும் கடவனல்லன்; உடையவனான அவன்
எல்லாவற்றுக்கும் கடவனென்றதிறே; அப்படி ப்ரமாணங்களால் சொன்ன ஶேஷத்வமிறே. அப்படித் தமக்குப் பிறந்திருக்கச் செய்தே அது பலப்ரதமாகக் கண்டிலர்; தான் தன்கர்மம் செய்கிறானென்றாதல்; நாம் க்ரமத்தால் செயகிறோமென்று ஆறியிருந்தானாதல்; நம்முடைய த்வரைக்கடியான ருசியும் அறியுமவனாகையாலே ருசிபாகமானால் செயகிறோமென்று ஆறியிருந்தானாமித்தனை.
நம்மைப் போலன்றியே, செய்தது அறிந்திருக்கும் ஸர்வஜ்ஞனாயும், நினைத்தது தலைக்கட்டவல்ல ஸர்வஶக்தியாயுமிருந்து வைத்து ஆறியிருக்கும்போது சிலஹேதுக்களுண்டாக வேணுமிறே என்று பார்த்து “எனக்கு நானுமில்லை, பிறருமில்லை, பேற்றில் த்வரையாலே துடிக்கிறேனித்தனையல்லது ஸாதநாநுஷ்டாந க்ஷமனுமல்லேன்” என்னுமிடத்தை அநந்யகதிகளாயிருக்கும் பதார்த்தங்களை நீதர்ஶநமாக இட்டுத் தம்முடைய அநந்யகதித்வத்தைத் திருவித்துவக்கோட்டு நாயனார் திருவடிகளிலே விண்ணப்பம் செய்கிறார்.
அரு:- தருதுயரம் ப்ரவேஶம். ஶேஷத்வஜ்ஞாநம் பிறந்திருக்கச் செய்தேயும் தமக்கு உதவாமையாலே அநந்யகதித்தவாதிகள் தமக்கில்லையாக நினைத்திருந்தானாக வேணுமென்று, தம்முடைய அநந்யகதித்வாதிகளை ஆவிஷ்கரிக்கிறார் இத்திருமொழியில், ப்ரதமத்தில் ஶேஷத்வத்தின் க்ரமத்தை ஶிக்ஷிக்கிறார் (திருமந்த்ரத்தாலித்யாதி).அஹங்காரதிகள் விரோதிகளாகிறது எந்த ஆகாரத்தில் என்ன அருளிச்செய்கிறார் (நிலாதென்றவித்யாதி)
தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை
விரைக்குழுவும் மலர்ப்பொழில் சூழ்வித்துவக்கோட்டம்மானே!
அரசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தேயழும் குழவியதுவே போன்றிருந்தேனே.
பதவுரை:- விரை குழுவும்- பரிமளம் மிக்குள்ள, மலர் – புஷ்பங்களையுடைய, பொழில் சூழ்- சோலைகளாலே சூழப்பட்ட, வித்துவக்கோடு அம்மானே- திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற ஸர்வேச்வரனே!
தரு துயரம் – நீயே தரும் ஸம்ஸாரமாகிய இந்த துக்கத்தை, தடாய் ஏல்(நீயே) போகாவிட்டாலும், உன் சரண் அல்லால் சரண் இல்லை – உன்னுடைய திருவடிகளல்லது வேறு உபாயமில்லை; ஈன்ற தாய் – பெட்ரா தாயானவள், அரிசினத்தால் – மிகுந்த கோபங்கொண்டு, அகற்றிடினும் – (குழந்தையைத் ) தள்ளினாலும், மற்று – மறுபடியும், அவள் தன் அருள் நினைந்து – அவளுடைய அன்பையே எண்ணி, அழும் குழவி அதுவே- அழுகின்ற குழந்தையையே, போன்று இருந்தேன் – ஓத்திருந்தேன்.
வ்யா:- முதற்பாட்டு.( தருதுயரந்தடாயேல்) நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றயாகில்; தன்னாலே தனக்கு விரோதிவந்ததென்றும் தானே ஸாதநாநுஷ்டாநத்தாலே அது போக்கிக் கொள்வானென்றும் ஶாஸ்த்ரங்கள் சொல்லிக் கிடக்கச்செய்தே, இவர் அவனே துயர்தந்தான் என்பானென்? எண்ணில்; ப்ராப்தா ப்ராப்தவிவேகம் பண்ணியிருப்பாரொருவராகையாலே சொல்லுகிறார். ‘தானே கர்மம் பண்ணினவன், தானே ஸாதநாநுஷ்டாநம் பண்ணித்தவிர்த்துக் கொள்ளுகிறான்’ என்று நம்மைப் பழியிட்டுத் தள்ள நினைத்தானாகிலும், நானும் தன்னைக் குறித்துப் பரதந்த்ரன், நான் செய்த கர்மமும் பரதந்த்ரம், நான் பண்ணும் ஸாதநாநுஷ்டாநத்துக்கு பலப்ரதன் தானாகையாலே அதுவும் தன்னைக்குறித்துப் பரதந்த்ர மாகையாலே “தருதுயரம்” என்கிறார்.
முதலிகளெல்லாரும் கூடப் பெரிய திருமண்டபத்துக்கு கீழாகவிருந்து ரஹஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்திருப்பார்களாய்த்து; ஒருநாள் நித்யஸம்ஸாரியாய்ப் போந்தவனுக்கு பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடியென்? என்று விசாரிக்காச்செய்தே, ‘ யாத்ருச்சிக ஸுக்ருதம், அஜ்ஞாத ஸுக்ருதம்’ என்னைப் பிறந்தது ; அவ்வளவில் கிடாம்பிப்பெருமாலிருந்தவன்.”நமக்கு பகவத் ஸமாஶ்ராயணம்போலே ஸுக்ருததேவறென்ரொருவருண்டோ ஆஶ்ராயணீயன்?” என்றான்; பிள்ளை திருநறையூரரையர், “ ஸுக்ருதமென்று சொல்லுகிற நீர் தாம் நிலைத்திருக்கிறது எத்தைக் காண்?” என்றார் அதாவது :- ஒன்றை ஆராயப்புக்கால் அதுக்கவ்வருகு வேறொன்று இன்றி இருப்பதிறே அடியாவது; யாதொன்று பல
ப்ரதமானதிறே உபாயமாவது; அல்லது நடுவே அநேகாவஸ்தை பிறந்தால் அவற்றினளவில் பர்யவஶியாதிறே. இளைப்பாறுவது இதிலே சென்றிறே; நடுவு இளைப்பாறாதிறே; அத்தாலே தருதுயரம் என்னலாமிறே.
(தடாயேல்) நீ விளைத்த து:க்கம் நீயே போக்காயாகில்; (27) ” मम माया दुरत्यया ” (மம மாயா துரத்யயா) என்றும், (27) “मामेव ये प्रपधयन्ते मायामेतां तरन्ति ते” (மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே) என்றும், ‘நம்முடைய மாயை ஒருவரால் கடக்கவொண்ணாது காண்!’ என்றும், ‘இது கடக்கவேண்டியிருந்தவன் நம்மைப் பற்றிக் கழித்துக் கொள்வான்’ என்றும் நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர்தந்தாயென்னும்படி தோற்றுகிறதிறே. து:க்கத்தை விளைப்பானொருவனும் போக்குவானொருவனுமாயன்றிறே இருப்பது. பண்ணினவன் தானே போக்குமித்தனையிறே; பிள்ளை திருநாறையூரரையர், “ஒரு குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்கவொண்கிறதில்லை; ஒரு ஸர்வஶக்தி பிணைத்த பிணையை எலியெலும்பனான இவன் அவிழ்க்கவென்று ஓருகார்யமில்லையிறே; அவன் தன்னையே கால்கட்டிப் போக்குமித்தனையிறே” என்றார். (உன்சரணல்லால் சரணில்லை) இவ்வளவாக விளைத்துக்கொண்ட நான் எனக்கில்லை; பிறர் ரக்ஷகர் உண்டாகிலும் நான் அவர்களை ரக்ஷகராகக் கொள்ளமாட்டாமையாலே அவர்களுமில்லை; நான் பண்ணும் ஸாதநாநுஷ்டாநமும் எனக்குக் கழுத்துக் கட்டியாகையாலே தேவரீர் திருவடிகளல்லது வேறு உபாயமில்லை.
(விரைக்குழுவு மலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட்டாம்மானே) பரிமளப்ரசுரமான சோலையையுடைத்தான திருவித்துவக்கோட்டிலே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஶ்வரனே! ( விரைகுழுவுமலர்ப்பொழில் சூழ்) (28) “ सर्वगन्ध: ” (ஸர்வகந்த:) என்கிற ப்ராப்யவஸ்து வந்துகிட்டின இடமென்று தோன்றியிருக்குமாய்த்து.( வித்துவக் கோட்டம்மானே) உபாயமாம்போது சுலபமாகவேணுமிறே. (அம்மானே) ப்ரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப்போல இங்கே வந்து கிட்டினவனே! தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரக்ஷணத்துக்குத் தமக்கு அநந்வயம் சொன்னார்;
ஶேஷியாகையாலே தம்முடைய ரக்ஷணத்துக்கு ப்ராப்தன் அவன் என்கிறார் இப்போது. ஒருவன் போற்றுக்கு ஒருவன் ஸாதநமாம்போது இத்தனை ப்ராப்தி உண்டானாலல்லது ஆகாதிறே.
ப்ரஜையுடைய நோய்க்கு தாயாறே குடிநீர் குடிப்பாள். மேல் தாயை நிதர்ஶநமாகச் சொல்லப்புகுகிறவராகையாலே இப்போது “அம்மானே” என்று ப்ராப்தி தோன்றச் சொல்லுகிறார்.
(அரிசினாத்தாலித்யாதி) அவனே ரக்ஷகனென்னும் ஆத்யவஸாயமுண்டா னாலும் பேறு தாழ்த்தால் அவனை வெறுக்கவேண்டும். ப்ராப்தி உண்டிறே சேதனனாகையாலே. *”தனக்கேயாகவெனைக் கொள்ளுமீதே “ – திருவாய் (2-9-4) என்று அசித்ஸமாநமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து, “ எனக்கே கண்ணனை யான்கொள்சிறப்பு” என்கிறது புருஷார்த்தஶித்தி சேதநனுக்கு ஆகவேண்டியிறே. அவனைக் குறித்துச் சேதநாசேதநங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிஶிஷ்டமாயிருக்கச்செய்தே புருஷார்த்தஶித்தி இவனுக்குண்டாகிறது சேதநனாகையாலேயிறே.
(அரிசினத்தால்) அரிந்துபொகட வேண்டும் சினத்தையுடையளாய்க் கொண்டு. (ஈன்றதாய்) “வளர்த்த தாய்” என்னாதே “ஈன்றதாய்” என்றத்தாலே ப்ராப்தி சொல்லிற்று. (அகற்றிடினும்) “ அகற்றிடினும்” என்கையாலே அகற்றுகை அஸம்பாவிதம் என்கிறது. “ஈன்றதாய் “ என்கையாலே, பெறுகைக்கு நோன்பு நோற்கையும் பத்துமாஸம் சுமக்கையும் ப்ரஸவவேதநை படுகையும் என்கிற இவையெல்லாம் உடையவளெங்கை.(அகற்றிடினும்) இப்படி பெறுவத்துக்கு முன்புள்ள எல்லா து:க்கமும் பட்டவளாகையாலே வருகிறத்தை நினைக்கும் தொழிய அகற்ற நினையாளிறே; அவள்தானே அகலவிடிலும். இத்தால் சொல்லிற்றாய்த்து; நிருபாதிக்க பந்துவான தேவரீர் கைவிடிலும் வேறு எனக்குப் புகலில்லை என்கிறார். (மற்றவள்தன் அருள் நினைந்தேயழுங்குழவி) இவள் கோபித்துவிட்டாலும் வேறொருவருடைய அருளை அபேக்ஷயாதிறே ப்ரஜை. அதுக்கடியான
ப்ரேமத்துக்கு அவதி உண்டாகிலிறே கோபத்துக்கு அவதி உள்ளது; ஸ்நேஹமில்லாமையாலே கோபமில்லேயிறே பிறர்க்கு.
நம்பி திருவழுதி வளநாடுதாஸரை முதலியாண்டான் கோபித்து, கையாலும் காலாலும் துகைத்து இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒருநாள் போகாதே கிடந்தார்; ஆண்டான் மற்றைநாள் அமுது செய்யப்புகுகிறார்; “அவன் செய்ததென்?” என்று கேட்டவாறே. “பட்டினியே வாசலிலே கிடந்தான்” என்று கேட்டு அழைத்து, “நீ போகாதே கிடந்ததென் ?” என்ன; “ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் எல்லாப்படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறதில்லை நாய்; நான் எங்கே போவது?” என்றார்:
(அழுங்குழவியதுவே போன்றிருந்தேனே) வேறுசிலரால் ஆற்ற வொண்ணாதிறே; முன்னாள் முலைகொடுத்த உபகாரத்தை நினைத்திருக்குமதாகையாலே அவள் தானே ஆற்றவேணுமே, (29) “शिशु: स्तनन्धय:”
(ஶிஶு: ஸ்தநந்தய:)” அளவில் பிள்ளைமை” என்று சொல்லுகிறபடியே. அதாவது: ரக்தஸ்பர்ஶமுடையாரெல்லாரையும் அறியாதே மாதா ஒருத்தியையும் அறியுமளவேயாய்த்து அதிபால்யம்; அப்படியே எம்பெருமானைக் குறித்து இவாத்மவஸ்து நித்யஸ்தநந்தயமாயாய்த்து இருப்பது, ஆகையாலிறே இவன் பேற்றுக்கு அவன் உபாயமாகிறது. 1.
அரு:- முதல் பாட்டு.(தருதுயரமித்யாதி) ( ஶராஸ்த்ரம்) “ஸாதுகாரீ ஸாது பவதி, பாபகாரீ பாபீ பவதி”, “தர்மணே பாபமபநுததி” – தை. நாரா (50) என்றும், சொல்லுகிறவை.
கர்மம் அவன்ட்ட வழக்கென்னுமதுக்கு ஸம்வாதமாக ஓர் ஐதிஹ்யம் அருளிச்செய்கிறார் (முதலிகளித்யாதி), யாத்ருச்சிகம் அஜ்ஞாத ஸுக்ருத்தமென்று விவக்ஷை. (ஒன்றை ஆராய்கை) ஒரு ஹேதுவை ஆராய்கை. கர்மத்தை உண்டாக்குமத்தாலன்றியே பலப்ரதத்வத்தாலும் அவனே உபாயம் என்கிறார் (யாதொன்றித்யாதி).(அநேகாவஸ்தை) அத்வேஷாதிகள்.
தம்முடைய விவேகாதிஶயதாலே கர்மம் அவநதீநமென்றது, கீழ்; அவன் உக்தியாலும் அவநதீநமென்கிறார் ( மம மாயா இத்யாதி).
தருதுயரமென்று, அவன் தந்தானாகச் சொல்லியிருக்க, இங்கே விளைத்திக்கொண்டவென்றது – ப்ரதமப்ரயத்நம் தம்மதாகையாலே “சரணலால் சரணில்லை” என்று ஆகிஞ்சந்யம் தோற்றச் சொல்லி வைத்து “அம்மானே” என்று ப்ராப்தியைக் கைம்முதலாகச் சொல்லலாமோ? என்ன அருளிச்செய்கிறார் ( தம்முடையவித்யாதி).
அன்றிக்கே, த்ருஷ்டாந்தத்துக்கு அநுகுணமாகச் சொல்லுகிறார் என்கிறார் (மேல்தாயையித்யாதி). அரிசினத்தாலென்று த்ருஷ்டாந்தத்தில் சொன்ன சினம் தார்ஷ்டாந்திகத்திலுமேறும் ந்யாயத்தாலே இப்படி அரிசினமென்று வெறுக்கலாமோ? என்ன ( அவனே ரக்ஷகனித்யாதி), அவனும் ஶேஷியாய் தானும் பரதந்த்ரனானால் அவன் செய்தபடி கண்டிருக்கையொழிய ப்ரார்த்திக்கலாமோ? என்ன, (சேதநனாகையாலே இத்யாதி), புருஷார்த்தம் சேதநனுக்கொழிய மற்றவைக்கில்லை என்கைக்கு ஜ்ஞாபகமேது? என்ன (அவனைக்குறித்தித்யாதி).
தன்னையொழிய அறியாத பிள்ளையை அருளுடைய தான் கோபிக்கலாமோ? என்ன (அதுக்கடியித்தாதி ),(அதுக்கடி) கோபத்துக்கு ஹேது. தள்ளினாலும் புறம்பு போகாமைக்கு சம்வாதமாக ஓர் ஐதிஹ்யம் அருளிச்செய்கிறார் (நம்பி திருவழுதி வளநாடுதாஸரித்யாதி).
2. கண்டாரிகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
தொண்டானையல்லால் அறியாக்குலமகள்போல்
விண்டோய்மதிள்புடைசூழ் வித்துவக்கோட்டம்மா!நீ
கொண்டாளாயாகிலும் உன்குரைகழலே கூறுவனே.
பதவுரை:- விண் தோய் மதிள் – ஆகாயத்தை எட்டும்படியான மதில்களால், புடைசூழ்- சுற்றிலும் சூழப்பட்ட, வித்துவக்கோட்டம்மா-, கண்டார் இகழ்வனவே- பார்ப்பவர்கள் எல்லாரும் இகழத்தக்க காரியங்களையே, காதலன் தான் செய்தினும்-
கணவனானவன் செய்தாலும், கொண்டானை அல்லால் அறியா – (தன்னை) மணம்புரிந்த கணவனை அன்றி வேறொருவரையும் மனத்தினாலும் நினையாதவளான, குலம் மகள் போல் – மேலான குலத்துதித்த கற்பாசியைப்போல, நீ கொண்டு ஆளாய் ஆகிலும் – நீ என்னை அடிமை கொண்டு ரக்ஷிக்காமல் உபேக்ஷித்தாயாகிலும், உன் குரை கழலே- உன்னுடைய ஒலிக்கும்படியான வீரக்கழல்களையுடைய திருவடிகளையே, கூறுவன் – சரணமடைவேன்.
வ்யா:- இரண்டாம் பாட்டு.(கண்டாரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும்) தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் ப்ரணய கலஹங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் ஓர் அவதியில்லையிறே. அப்படியன்றியே, இவர்கள் கார்யங்கொண்டு கார்யமில்லாத உதாஶீநரும் இகழும்படிக்கீடான அஸஹ்யங்களை அவன் பண்ணினாலும். (காதலன்) ப்ரேமத்தையிட்டு கிரூபிக்க வேண்டியிருக்குமவன்.
(கொண்டானையல்லாதறியாக் குலமகள்போல்) இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களைக் காற்கடைக்கொண்டு ஸம்பந்தத்தில் முதலடியிலே நினைத்திருக்குமவளைப்போலே,(கொண்டானையல்லாலறியாக் குலமகள்போல்) அக்நிக்கு அந்தர்யாமியான ஸர்வேஶ்வரனை ஸாக்ஷியாகக் கொண்டவனையல்லது அறியாதவளைப் போலே. “கொண்டானையல்லாலறியா” என்கையாலே, பாதிவ்ரத்யம் சொல்லிற்று; “குலமகள்” என்கையாலே, ஆபிஜாத்யம் சொல்லிற்று.
(விண்டோய் மதிள் புடைசூழ வித்துவக்கோட்டம்மா) பிராட்டி ஸ்வயம்வரத்துக்கு ஸ்ரீ மிதிலையில் புறச்சோலையிலே விட்டிருந்தாப்போல, இவரை ஸ்வயம்வரிக்கைக்காகவிறே திருவித்துவக்கோட்டிலே வந்து நிற்கிறது. ( நீ கொண்டளாயாகிலும்)இவ்வளவாக உபகாரகனான நீ குறையும் தலைக்காட்டாதே உபேக்ஷித்தாலும்.(உன் குரைகழலே கூறுவானே) உன் திருவடிகளல்லது எனக்கு வேறுபுகலில்லை. உபகாரகனான நீ உபேக்ஷித்தாயென்று கைவாங்குமவனன்று நான்; “எனதாவியார் யானார்”- திருவாய் (2-24) என்று, நீ பண்ணின உபகாரத்துக்குத் தலை சீய்க்குமவன் நான் என்கிறார். 2.
வ்யாக்யாநம்
அரு:- இரண்டாம் பாட்டு. ( கண்டாரித்யாதி) கொண்டானையல்லாதறியாவென்று பாடமாதல்; கொண்டானையல்லாலறி யாவென்று பாடமாதல். அவனையொழிய, அவன் பண்ணும் உபகாரம் அறியாதவள் எண்ணுதல்; அவனையொழிய அந்யபுருஷனை அறியாதவளென்னுதல். 2.
3. மீன் நோக்கும்- (கடலிலுள்ள) மீன்கள்(கடல் வற்றினாலும் நமக்குத் புகலிடம் இதுவே என்று) நோக்கும்படியான, நீள் வயல் சூழ்- பரந்த வயல்களாலே சூழப்பட்ட, வித்துவக்கோட்டம்மா- , என்பால்- அடியேன் மீது, நோக்காய் ஆகிலும்- நீ கடாக்ஷியாதிருந்தாயேயாகிலும், உன் பற்று அல்லால் பற்று இலேன்- உன்னைத் சரணமாகப் பற்றுவதை விட்டு வேறொருவரையும் சரணமடையமாட்டேன்; தார் வேந்தன்- (மக்களின் ரக்ஷணத்திற்கொன்று ) மாலையணிந்துள்ள அரசன், தான் நோக்காது- (அப்படிப்பட்ட) தானேகுடிகளைக் காப்பாற்றாமல், எத்துயரம் செய்திடினும்- எப்படிப்பட்ட துன்பங்களை செய்தாலும், கோல் நோக்கி வாழும்- அவனுடைய செங்கோலையே பார்த்து வாழும், குடி போன்று இருந்தேன் – மக்களை ஓத்திருக்கின்றேன்.
வ்யா:- மூன்றாம் பாட்டு. ( மீன்நோக்கும் நீள்வயல்சூழ் ) மத்ஸயமென்று பேர் பெற்றவையடையக் கடாக்ஷிக்கும் தேஶமாய்த்து; கடலில் மத்ஸ்யம், “கடல் வற்றினால் நமக்குப் புகலிடம்” என்று நினைத்திருக்கும் தேஶமாய்த்து. (வித்துவக்கோட்டம்மா) பரமபதத்திலுள்ளாரும் ஶீலாதிகள் தர்மிப்ரயுக்தமென்றிருக்குமித்தனையிறே பரமபதத்தில்; கண்டு அநுபவிக்கலாவது இங்கேயிறே.
(வித்துவக்கோட்டம்மா என்பால் நோக்காயாகிலும்) பரமபதமாகிற ஒரு நாடாக நீ நோக்குகிற நோக்கை என்னை ஒருவனையுமே
நோக்கி வந்திருந்து இப்போது என்னைக் கடாக்ஷியாதிருந்தாயாகிலும். (உன் பற்றல்லால் பற்றிலேன்) என்னுடைய ரக்ஷையில் உத்யுக்தனான உன்னைவிட்டு பாதகராக (बाधक) ஸம்ப்ரதிபந்நறானாரைப் பற்றுவேனோ? நித்ய ஸம்சாரியாய் இவ்வளவாகச் சூழ்த்துக் கொண்ட என்னைப் பற்றவோ? என்னுடைய ரக்ஷணத்தில் என்னோபாதியும் ப்ராப்தியில்லாத பிறரைப் பற்றவோ?
(தான் நோக்காதெத்துயரம் செய்திடிலும் தார்வேந்தன்) ப்ரஜைகளுடைய ரக்ஷணத்திலே தீக்ஷித்துத் தனிமாலையிட்டிருக்கிற ராஜாவானவன், ரக்ஷணத்திலே நெகிழ நிற்குமளவென்றிக்கே, எல்லா து:க்கங்களையும் விளைக்கிலும்.( தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே) ரக்ஷகனாயிருந்துவைத்து பாதகனானாலும் அவனுடைய ஆஜ்ஞாநுவர்த்தநம் பண்ணும் குடிபோலே இருந்தேன். சிறியத்தைப் பெரியது தின்னாமல் காக்கத் தான் மாட்டான்; செங்கற் சீரை கட்டி ரக்ஷிப்பித்துக்கொள்ளும் ப்ராப்தி அவனுக்குண்டு; என் ரக்ஷணத்தில் எனக்கு அந்வயமில்லாதாப்போலே, ஸம்பந்தமுடைய நீயே ரக்ஷிக்குமித்தனை. நான் செய்யலாவதுமில்லை. நீ மாடட்டாததுமில்லை. 3.
அரு:- மூன்றாம் பாட்டு. (மீனித்யாதி) (தான் மாட்டான்) குடியான தான் மாட்டான். ராஜாவைக்கொண்டு ரக்ஷிப்பித்துக் கொள்ளும் முறை குடியானவனுக்கு உண்டென்றபடி. 3.
4. வாளால் அறுத்துச்சுடினும் மருத்துவன்பால்
மாளாதகாதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர்தரிலும் வித்துவக்கோட்டம்மா! நீ
ஆளா உந்தருளே பார்ப்பன் அடியேனே.
பதவுரை:- வித்துவக்கோட்டம்மா -, வாளால் அறுத்து சுடினும் – கத்தியாலே அறுப்பதும், சூடு போடுவதும் செய்தாலும், மத்துவன் பால் மாளாத காதல்- வைத்தியனிடத்தில் நீங்காத அன்பையுடைய, நோயாளன் போல் – நோயாளியைப்போல், நீ-, மாயத்தால் – (உன்) மாயையினால், மீளா துயர் தரிலும் – (எனக்கு)நீங்காத துன்பத்தைத் தந்தாலும், அடியேன் – உன் அடிமையான
நான், ஆளா- உனக்கு அடிமை செய்கைக்காக, உனது அருளே பார்ப்பன்- உன் கிருபையையே நோக்கியிருப்பேன்.
அவ:- நாலாம் பட்டு. “ஒருவனாலே ஹிதம்” என்றும், “பலத்திலே அந்வயம் ஒருத்தலைக்கே” என்றும் அத்யவஶித்தால், அஹிதங்களையே ப்ரவர்த்தியா நின்றானென்று தோற்றினாலும் அவனே ரக்ஷகனென்று கிடக்கவிறே கடவது. பிள்ளை திருநறையூரரையரை, பிள்ளைகள் “புகை சூழ்ந்தபடி ஸஹிக்கப்போகிறதில்லை” என்ன “சற்றுப்போதன்றோ வ்யஸநப்படுவது, ஸ்ரீவைகுண்ட நாதன் திருவடிகளில் ஸுகமே இருக்கவன்றோ புகுகிறது” என்றாரிறே. தான் தஞ்சமாகப் பற்றின விஷயத்துக்கு அந்யதாஸித்தி பிறந்ததோவென்று மீளும்படியிருக்கிற தஶையிலே, ஹேத்வந்தரம் அது; அவ்வருகில் பேற்றில் குறையில்லையென்னும் அத்யவஸாயமிருந்தபடியிறே; இதிறே மஹாவிஶ்வாஸமாகிறது; தோற்றுகிற ஆபாதப்ரதீதியைக் கண்டு மீளாதே இருக்குமதிறே.
வ்யா:- ( வாளாலறுத்துச்சுடிலும்) ஹிமஸாஸாதநத்தைக் கொண்டு அறுப்பது சுடுவதானாலும்,(மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல்) அஹிதங்களை மேல்மேலான ப்ரவர்த்திப்பிக்கச் செய்தேயும் பிஷக்கு, “அவன் நமக்கு ஹிதகாமன்” என்று அவனுக்குத் தன் ஸர்வஸ்வத்தையும் கொடுத்து அவன் பக்கத்திலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப்போலே.
(மாயத்தால் மீளாத்துயர்தரிலும்) (27) “ “मम माया” (மம மாயா) என்னும்படியே உன்னுடையதான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே அபுநராவ்ருத்தி லக்ஷணமே து:க்கத்தை விளைக்கிலும் (வித்துவக் கோட்டம்மா நீ – மீளாத்துயர்தரிலும்) எனக்கு தயாஜ்யமான ஸம்ஸாரத்திலே என்னுடைய ரக்ஷணத்துக்காகக் குடியேறியிருக்கிற நீ நித்ய து:க்கத்தை விளைக்கிலும், பெற்றதாய் ப்ரஜைக்கு அஹிதம் செய்யிலிறே நீ செய்வது; அப்படியிருக்கிற நீ செய்யிலும்.
(ஆளா) ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியைப் பெறுகைக்காக. (உனதருளே பார்ப்பன்) இப்போது தோற்றுகிற வ்யஸநங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணியிருப்பான். இப்படி இருக்கைக்கு நிபந்தநமென்? என்னில்; (அடியேனே) அடியேனாகையாலே, என் ஸ்வரூபத்தையும் உன் ஸ்வரூபத்தையும் நேராக அறிந்தவனாகையாலே.
(30) “असौ ”(அஸௌ) அன்று கண்டாப்போலே கையும் வில்லுமாய் நிற்பர்; அவனுக்கு அச்சத்தாலே; தனக்கு உருவு வெளிப்பாட்டாலே முன்னே நிற்பர்; தீரக்கழிய அபராதம் செய்த எனக்கு அவர் க்ருபை பண்ணுவரோ என்று அவனுக்கு நினைவாகக்கொண்டு (30) “पुरुषर्षभ:” (புருஷர்ஷப:) நீ அநுகூழானாய் ஓரடிவர நின்றால் அத்தையே நினைத்து நீ பண்ணின அபகாரமெல்லாம் புத்தி பண்ணுவரோ? அவர் புருசோத்தமன் காண். “முன்பூழி காணான்”- முதல் திருவ(72)குற்றத்தை மறக்குமதன்றியே,”குற்றம் செய்த நாளை நினைக்கில் குற்றம் தோற்றுமென்று அந்நாளையும் மறக்குமவர் காண் “ என்று பிராட்டி ராவணனுக்கு அருளிச்செய்தபடியே இனி நீரல்லது புகலில்லை என்கிறார். 4.
அரு:- நாலாம் பாட்டு.(வாளாலித்யாதி). ஹிதபரனானவன் அஹிதங்களைப்பண்ணா நின்றபோதும் அவனே ரக்ஷகனென்று அத்யவஶித்திருக்கவேணுமென்னுமதுக்கு ஸம்வாதமாக ஓர் ஐதிஹ்யம் அருளுகிறார்( பிள்ளை திருநறையூரரையரித்யாதி).அந்யதாஶித்தியாவது:- ஸர்வஜ்ஞத்வாதிகள் உண்டென்றிருந்தோம். அஜ்ஞத்வாதிகள் உண்டாய்த்தென்று நினைக்கை,(ஹேத்வந்தரம்) மத்பாபம்.
எந்த அவஸ்தையிலும் நீயல்லது இல்லை என்கிறது எப்படி இருக்கிறது என்ன. “அஸௌ” என்றத்தப்பற்ற அருளுகிறார் (அன்று கண்டாப்போலே இத்யாதி). 4.
5. வெங்கட்டிண்களிறடர்த்தாய்! வித்துவக்கோட்டம்மானே!
எங்குப்போய் உய்கேன்? உன்னிணையடியே அடையலல்லால்
எங்கும்போய்க்கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின்கூம்பேறும் மாப்பறவை போறேனே.
பதவுரை:- வெம் கண் – பயங்கரமான கண்ணையும், திண் களிறு – வலியநெஞ் சையுமுடைய (குவலயாபீடமென்னும்) யானையை, அடர்த்தாய் – கொன்றவனே!
வித்துவக்கோட்டம்மானே-, உன் இணை அடியே அடையல் அல்லால் – உன் இரு திருவடிகளையே சரணமடைவதல்லால், எங்கு போய் உய்கேன் – வேறு யாரிடத்தில் போய் உஜ்ஜீவிப்பேன்? எறி கடல் வாய் – அலைகள் வீசும்படியான கடல் நடுவில், எங்கும் போய் – நான்கு திக்குகளிலும் சென்று, கரை காணாது- கரையைக் காணாமல், மீண்டு – திரும்பிவந்து, ஏயும் வங்கத்தின்- அங்குள்ள கப்பலினுடைய, கூம்பு ஏறும் – கொடி மரத்தின் மீது இருக்கும், மா பறவை போன்றேன் – பெரிய பறவையை ஒத்திருந்தேன்.
வ்யா:- அஞ்சாம் பாட்டு.(வெங்கண் திண்களிறடத்தாய்) வெவ்விய கண்ணையும் திண்ணிய நெஞ்சையுமுடைத்தான குவலயாபீடத்தைக் கொன்றவனே! ப்ரபல ப்ரதிபந்தகங்கள் உண்டென்றிக்க வேணுமோ தேவரீர் உள்ளீராயிருக்க? (வித்துவக்கோட்டம்மானே) ப்ரதிபந்தகம் போக்கிற்று அவதாரகாலத்திலேயிறே; அது தீர்த்தம் ப்ரஸாதித்ததிறே என்று பிற்பாடர்க்கு இழக்க வேண்டாதபடி திருவித்துவக்கோட்டிலே வந்து ஸந்நிஹிதனானவனே! பரமபதம் கலவிருக்கையாக ஸ்வாம்யத்தை நிர்வஹிக்கைக்காகவன்றோ இங்கு வந்து எழுந்தருளியிருக்கிறது.
(வித்துவக்கோட்டம்மானே எங்குப்போயுய்கேன்) ப்ராப்தனுமாய்ப் பசியனுமானவன், வாசலிலே வந்து “சோறு சோறு” என்னாநிற்க, அந்யராய் நிரபேக்ஷரானவர்களை உண்ண அழைப்பாரைப்போலே, உன்னை விட்டுப் பரமபதத்திலே இருக்கிற அவாப்த ஸமஸ்தகாமனைப்பற்றவோ? (எங்குப்போயுய்கேன்) உஜ்ஜீவநஹேதுவாகப் போமிடம் இல்லை. விநாஶஹேதுவாகப்போகில் போமித்தையிறே. உகந்தருளின தேஶங்களைவிட்டு தேவதாந்தரங்களைப் பற்றுகையாவது, விநாஶபர்யாயமிறே. (உன்னிணையடியே அடையலல்லால்) அத்யவஸாயமாவது; “புத்யர்த்தமிறே”- (கத்யர்த்தா புத்யர்த்தா:” என்ற நியாயத்தை நினைக்கிறார்.) அவன் தானே வந்து கிட்டச்செய்தே, இழக்கிறார்; இழக்கிறதும், பெறுகிறதும் அப்ரதி பத்தியாலும் ப்ரதிபத்தியாலுமிறே.
(எறிகடலித்யாதி) பெரிய க்ஷோபத்தையுடைய கடலிலே ஒரு மரக்கலமாவது; அதின் கொம்பிலே இருந்ததொரு பக்ஷி நாலு தேடிப் பறந்தாலும் கரைகாணவொண்ணாதிறே; ஈண்டு வந்து கால்பாவலாவது இம்மரக்கலத்திலேயிறே.
அப்படியே ஸம்ஸாரஸாகரத்தைக் கடக்கும்போது உகந்தருளின தேஶமான திருவித்துவக்கோட்டைப்பற்றிக் கடக்கலாமத்தனையல்லது வேறு உபாயமில்லையிறே கடக்கைக்கு; உகந்தருளின தேஶத்தை ஒழிந்துதெல்லாம் அக்கடல் போலேயிறே.(மாப்பறவை போறேனே) தான் ஏறிட்டுக்கொண்ட அகலமெல்லாம் நீரிலே ஆழுகைக்கு உடலாமித்தனையிறே; அவன் கை நெகிழ்ந்தானென்று தோற்ற அடிமட்டையை உறக்கப்பற்றுமித்தனையிறே. 5.
அரு:- அஞ்சாம் பாட்டு.(வெங்கணித்யாதி) (எங்குப்போய்) பரமபத வ்யாவ்ருத்தியாதல். தேவதாந்தர வ்யாவ்ருத்தியாதல்.
(அகலமெல்லாம்) மாப்பறவையாகையாலே தன் சிறகின் பரப்பெல்லாம்.(அவன்) ஓடக்காரன். (அடிமட்டை) சம்பான்மரத்தின் அடிப்பக்கம். இதுக்கு ஸ்வாபதேசம்:- தானேறிட்டுக்கொண்ட ஸ்வயத்நமெல்லாம் பக்ஷி நீரிலே அழுந்திப்போமாப்போலே நாஶஹேதுவாம். ஆகையால் ஸ்வயத்னத்தைவிட்டு அவன் திருவடிகளைச் சிக்கெனப்பற்றுகை என்றபடி. 5.
6. செந்தழலேவந்து அழலைச்செய்திடினும் செங்கமலம்
அதரம்சேர் வெங்கதிரோற்கல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டம்மா!உன்
அந்தமில் சீர்க்கல்லால் அகம்குழையமாட்டேனே.
பதவுரை:- செம் தழலே வந்து – சிவந்த நெருப்பானது அருகில் வந்து, அழலை செய்திடினும்- உஷ்ணத்தை உண்டாக்களினாலும், செம் கமலம் – செந் தாமரையானது, அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால்- ஆகாயத்தில் பிரகாசிக்கும் கடுமையான கிரணங்களையுடைய சூரியனுக்கு மலருமே யல்லாது, அலரா – (அந்த நெருப்புக்கு) மலராது; வித்துவக் கோட்டம்மா -, வெம் துயர்- (அனுபவித்தே கழியவேண்டிய) எனது கொடிய பாபங்களை, வீட்டா விடினும் – நீ போக்கா விட்டாலும், உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால்- உன்னுடைய எல்லை காணவொண்ணாத கல்யாண குணங்களுக்கல்லது,
அகம் குழைய மாட்டேன் – (மற்றோன்றுக்கும் நான்) நென்சுருக மாட்டேன்.
வ்யா:- ஆறாம் பாட்டு.(செந்தழலே வந்தழலைச் செய்திடிலும்) தாஹகமான அக்நி கிட்டி உஷ்ணத்தைப் பண்ணினாலும்,(செங்கமலமித்யாதி)தாமரையானது ஆதித்யன் தூரஸ்தனானானேயாகிலும் அவனுடைய கிரணத்துக்கு அலருமத்தனையல்லாது அக்நி கிட்டிற்றென்று அதினுடைய உஷ்ணத்துக்கு அலராது.
(வெந்துயர்வீட்டாவிடிலும் வித்துவக்கோட்டம்மா) அநுபாவ விநாஶ்யமான பாபங்களைப்போக்கி இதுக்கு விகாஸத்தை விளைப்பிக்க வந்திருக்கிற நீ உபேக்ஷித்தாயாகிலும், (உன்னந்தமில் சீர்க்கல்லால்) கல்யாணகுணயுக்தனான உன் குணங்களுக்கல்லது, (அகம் குழைய மாட்டேனே) என்னெஞ்சு நெகிழாது. 6.
அரு:- ஆறாம் பாட்டு.(செந்தழலித்யாதி) தாமரையானது அக்நிக்கு அலராதாப்போலே நீ துக்கத்தை விலத்தாலும் நெஞ்சு கலங்காமல் உன் குணங்களுக்கே ஈடுபடும் என்றபடி. 6.
7. எத்தனை வான்மறைந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைபோல்
மெய்த்துயர் வீட்டாவிடிலும் வித்துவக்கோட்டம்மா! என்
சித்தமிக உன்பாலேவைப்பன் அடியேனே.
பதவுரை:- வித்துவக்கோட்டம்மா- , வான்- மேகங்களானவை, எத்தனையும் மறந்த காலத்தும்- எவ்வளவு காலம் மழை பெய்யாதிருந்தாலும், பைம் கூழ்கள்- பசுமை தங்கிய பயிர்கள், மத்து எழுந்தமாமுகிலே பார்த்து இருக்கும் – கரு நிறத்துடன் எழும் பெரிய மேகங்களையே பார்த்தவண்ணமாயிருக்கும்; அவை போல்- அப்பயிர்களைப்போல், மெய் துயர் வீட்டாவிடிலும் – கட்டாயமாக அநுபவித்துத் தீரவேண்டிய துன்பங்களை நீ போக்காவிட்டாலும், அடியேன் – அடியவனாகிய நான், என் சித்தம் உன்பாலே மிக வைப்பன்- என் மநஸ்ஸை உன் விஷயத்திலேயே மிகவும் செலுத்துகேன்.
வ்யா:- ஏழாம் பாட்டு,(எத்தனையும் வான்மறந்த காலத்தும் கார்காலத்தில் வர்ஷியாதே
மேகங்கள் மறுத்த காலத்திலும்; பைங்கூழ்களுண்டு- பயிர்கள். (பைய்ந்தொழுந்தவித்யாதி )ஆகாஶத்திலே உறுத்த மேகங்களைப் பார்த்திருக்கு மத்தனையல்லாது நீர்நிலம் தேடிப்போகவறியாதாப்போலே.
(மேய்த்துயர் வீட்டாவிடிலும் வித்துவக்கோட்டம்மா)(81) “”अवश्यमनुभोक्त्तव्यम्” (அவஶ்யமநுபோக்தவ்யம்) என்கிற பாபத்தைப்போக்கி ஸம்ஸாரஸம்பந்தம் அறுத்துக்கொடுக்க வந்திருக்கிற நீ அது செய்திலையாகிலும்.(என் சித்தமிகவுன் பாலே வைப்பனடியேனே) என் ரக்ஷணத்திலே நெகிழ்ந்தாயென்று தோற்ற ஒருகாலுக்கொருகால் உன் பக்கலிலே நெஞ்சு ப்ரவணமாகா நின்றது. 7.
8. தொக்கிலிங்கியாறெல்லாம் பரந்தோடித்தொடுக்கடலே
புக்கன்றிப்புறம் நிற்கமாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்குமுகில் நிறத்தாய்! வித்துவக்கோட்டம்மா! உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண்புண்ணியனே!
பதவுரை:- தொக்கு இலங்கு ஆறுஎல்லாம் – மிகுந்த ஜல ப்ரவாகத்துடன் பிரகாசிக்கும் நதிகளெல்லாம், பரந்து ஓடி- (கண்டா விடங்களிளெல்லாம்) பரவி ஓடி, தோடு கடலே புக்கு அன்றி- ஆழ்ந்த சமுத்திரத்திலே சென்று அடைந்தல்லது, புறம் நிற்க மாட்டாத- வேறோரிடத்தில் போய் சேரமாட்டா; மிக்கு இலங்கு – மிகவும் பிரகாசிக்கிற, முகில் நிறத்தாய் – காளமேகம் போன்ற நிறத்தையுடையவனே!, வித்துவக்கோட்டம்மா – புண்ணியனே – உதலில் செய்த புண்ணியத்துக்கும் நிர்வாஹகனே!அவை போல் – அவ்வாறுகளைப்போலே, புக்கு இளங்கு – (என் மனஸ்ஸில்)புகுந்து பிரகாசிக்கின்ற, உன் சீர் அல்லால் – உனது கல்யாணகுணங்களை அன்றி, புக்கிலன்- (வேறு எதிலும்) அவகாஹித்திலேன்.
வ்யா:- எட்டாம் பாட்டு. (தொக்கிலங்கியாறெல்லாம் பறந்தோடி) ஜலராஶியெல்லாம் திரண்டு ஒளியையுடைத்தாய் பார்த்தவிடமெங்கும் பரந்தோடி,(தொடுகடலித்யாதி) ஆழ்ந்த கடலிலே சென்று பூக்கல்லது புறம்புநிற்கமாட்டாத ஆறுகள் போலே. (32) “समुद्र इव सिन्धुभि:” (ஸமுத்ர இவ ஸிந்துபி:) என்னுமாப்போலே, இவை புக்கால் கடல் நிறையுமதும், இல்லையாகில் குறைப்படுகிறதுமன்றிறே; இவற்றுக்குப் புறம்பு தரிப்பது அரிதாயிறே புகுகின்றன.
(மிக்கிலிங்கு முகில் நிறத்தாய்) மிக்கு உஜ்வலமான காளமேகம் போலே இருக்கிற நிறத்தையுடையவனே. (வித்துவக்கோட்டம்மா அம்மேகம் படிந்தமலை.(உன்புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண்) உள்புக உள்புக உஜ்வலமான கல்யாண குணங்களிலேயல்லது, உள்புக உள்புக மஸ்ருணமாயிருக்கும் குணங்களிலே அவகாஹித்திலேன் காண். இதுக்கு நிபந்தநமென்?என்னில், (புண்ணியனே) ப்ரதமஸுக்ருதம் நீயாகையாலே. 8.
9. நின்னையேதான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையேதான் வேண்டும் செல்வம்போல், மாயத்தால்
மின்னையேசேர்திகிரி வித்துவக்கோட்டம்மா!
நின்னையேதான் வேண்டி நிற்பன் அடியேனே.
பதவுரை:- மின்னையே சேர்- மின்னலைப்போல் ஒளிபொருந்திய, திகிரி – சக்ராயுதத்தையுடைய, வித்துவக்கோட்டம்மா -, நின்னையே தான் வேண்டி – உன்னையே விரும்பி, நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே – அழிவற்ற ஐஸ்வர் யத்தை விரும்பாதவனையே, தான் வேண்டும் – தானாகவே வந்து அடைய விரும்புகிற, செல்வம் போல்- ஐஸ்வர்யத்தைப் போல, மாயத்தால்- உன் மாயையாலே (என்னை உபேக்ஷித்தாயாகிலும்), அடியேன் – நான், நின்னையே தான் வேண்டி நிற்பன்- உன்னையே அடைய வேண்டி நிற்பேன்.
வ்யா:- ஒன்பதாம் பாட்டு, (நின்னையேதான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல்) உன்னையே வேண்டி நிரவதிகஸம்பத்தைக் காற்கடைக் காடவன் தன்னையே அவஸரப்ரதீக்ஷமாய்ப் பார்த்து நிற்கும் ஐஶ்வார்யம் போலே என்னுதல்; மோக்ஷலக்ஷ்மியைப்போலே என்னுதல்.
(மாயத்தால் மின்னையே சேர்திகிரி வித்துவக்கோட்டம்மா) மின்போலே பளபளத்திருந்துள்ள திருவாழியை எப்போதும் கைகழலா நேமியானாய் ஆசிலேவைத்த கையும் நீயுமாய் என்னுடைய ரக்ஷணத்துக்காக இங்கே வந்திருந்து வைத்துக் காற்கடைக் கொண்டாயாகிலும், (நின்னையே யான்வேண்டி நிற்பனடியேனே)
தன்னைக் காற்கடைக்கொண்டவனை ஐஶ்வர்யம் விடாதாப்போலே நீ என்னை உபேக்ஷிக்க உபேக்ஷிக்க உன்னையே பற்றா நின்றேன். 9.
அரு:- ஒன்பதாம் பாட்டு, (நின்னையேயித்யாதி) நீள் செல்வமாகையாலே மோக்ஷ்த்தைக் காட்டுகிறது. அதுவும், (33) “ ” भावो नान्यत्र गच्छति ” (பாவோநாந்யத்ர கச்சதி) என்ற திருவடியையும் பின் சென்றது. 9.
10. வித்துவக்கோட்டம்மா! நீ வேண்டாயேயாயிடினும்
மாற்றாரும் பற்றிலேனென்று அவனைத்தாள் நயந்த
கொற்றவேல்தானைக் குலசேகரன்சொன்ன
நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே.
பதவுரை:- வித்துவக்கோடு அம்மா- வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேஶ்வரனே!, நீ வேண்டாயே ஆயிடினும்- நீ ( என்னை) விரும்பாத போதிலும், மாற்று ஆரும் பற்றிலேன் என்று- வேறு எவரையும் சரணமடையமாட்டேன் என்று, அவனை தாள் நயந்த – அந்த ஸர்வேஶ்வரனின் திருவடிகளில் ஆசைகொண்டு, கொற்றம் வேல் தானை- ஐயத்தை அளிக்கும் வேலையும் சேனையையும் உடையவரான, குலசேகரன் சொன்ன – குலசேகரயாழ்வார் அருளிச்செய்த, நல் தமிழ் பத்தும் – பொருட்பெருமையுடன் கூடிய தமிழ்ப் பாடல்கள் பத்தையும், வல்லார் – கற்றவர்கள், நரகம் நண்ணார் – ( கொடிய பாபங்கள் செய்திருந்தாலும்) இந்த ஸம்ஸாரத்தில் வந்து பிறவார்.
வ்யா:- பத்தாம் பாட்டு. (வித்துவக்கோட்டாம்மா நீ வேண்டாயேயாயிடினும்) இதுக்கென்று வந்திருக்கிற நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும். ( மாற்றாரும் பற்றிலேனென்றவனைத் தாள்நயந்த) “ வேறொரு புகலில்லை, நான் அநந்யகதி” என்று அவன் திருவடிகளை ஆசைப்பட்டு.
(கொற்றவேல்தானைக் குலசேகரன் சொன்ன) ப்ரதிபக்ஷத்தைப் பக்கவேரோடே வாங்கவற்றான வெற்றியையுடைய வேலையும் ஸேநையையுமுடைய பெருமாள் சொன்னவை; ப்ரதிபக்ஷத்தை வெல்லுகைக்கீடான பரிகரமுடையரானப் போலேயாயத்து பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக இவருடைய அநந்யகதித்வமும். (நல்தமிழ் பத்தும் வல்லார்) கடல் பேராழமாயிருக்கச் செய்தே உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாயிருக்குமாப் போலே அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத்திருமொழி; இவை வல்லவர்கள். (நண்ணார் நரகமே) ஸம்ஸார ஸம்பந்தத்துக்கு அடியான பாபத்தைப் பண்ணினார்களாகிலும் இஸ்ஸம்ஸாரத்திலே வந்து ப்ரவேஶியார்கள். 10
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஐந்தாம் திருமொழி முற்றிற்று.
******
ஆறாந்திருமொழி – ஏர்மலர் ப்ரவேசம்.
அவ:- (உகந்தருளின தேஶத்தை அநுபவித்தார், கீழ்; அவ்வநுபவம் அவதாரங்களில் அநுபவாபேக்ஷையைப் பிறப்பித்தது; அதில் தோள்தீண்டியான க்ருஷ்ணாவதாரத்தை அநுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அநுபவிக்கிறார்.- குண்டலிதம் அதிகப்பாடம் ) இத்தலையால் வேறு செய்யலாவதில்லாமையாலே கிலாய்க்கத் தொடங்கினார். பகவத் விஷயத்தில் பாவபந்தத்தில் ஊற்றமிருந்தபடி பிராட்டிமார் தஶையை ப்ராப்தராய், கூடுவது பிரிவது ஊடுவதாம்படி ஆனார்.
நம்மாழ்வாருக்கு * மின்னிடை மடவாரும்- திருவாய் (6-2), திருமங்கையாழ்வார்க்கு, காதில்கடிப்பும்போலே – பெரிய திருமொழி (10-8), இருக்கிறதாய்த்துப் பெருமாளுக்கு இத்திருமொழி; நம்மாழ்வார் பகவத் விஷயத்தில் நின்ற ஊற்றமெல்லாம் தோற்ற வன்மையுடைத்தாயிருக்கும் மின்னிடை மடவார்; திருமங்கையாழ்வார் தம் மார்த்தவமெல்லாம் தோற்ற மென்மையையுடைத் தாயிருக்கும் காதில்கடிப்பு. இவர் தம்முடைய ராஜகுலமெல்லாம் தோற்றவிருக்கும் இத்திருமொழி.
க்ருஷ்ணாவதாரம் தோள்தீண்டியாகையாலே “ ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப்பெற்றிலோம், பல்லிலேபட்டுத் தெறித்தது” என்று பஞ்சலக்ஷம் குடியிற் பெண்களுக்கு க்ருஷ்ணன் பக்கலுள்ள விடாயெல்லாம் தமக்கொருவர்க்குமுண்டாகையாலே திருவாய்ப்பாடியில் பெண்கள் பேச்சாலே பேசுகிறார்.
அரு: – ஏர்மலர் ப்ரவேஶம். அவர்கள் ஊடலுக்கும் இவர் ஊடலுக்கும் வாசியேதென்ன அருளிச்செய்கிறார் ( நம்மாழ்வாரித்யாதி). (வன்மை) நெஞ்சில் காடிந்யம். “போகுநம்பி” “ கழகமேறேல்நம்பி” என்று காடிந்யம் தோற்றச் சொல்லுகை. (மார்த்தவம்) வெட்டிமையாயிராதே, “ இதுவென்னிதுவென்னோ” என்று ம்ருதுவாகச் சொல்லுகை. ( ராஜகுலம்) “ உன்வரவு பார்த்தே” என்று தன் மதிப்புத் தோற்றச் சொல்லுகை. அவதாரங்களிருக்க, க்ருஷ்ணாவதாரத்திலே ஊடுவானென்? என்ன அருளிச்செய்கிறார் ( கிருஷ்ணாவதாரமித்யாதி).
1.ஏர்மலர்ப்பூங்குழலாயர் மாதர் எனைப்பலருள்ள இவ்வூரில் உன்றன்
மார்வுதழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்றன் பொய்யைக்கேட்டுக்
கூர்மழைபோல் பனிக்கூதலெய்திக் கூசிநடுங்கி யமுனையாற்றில்
வார்மணற் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா! உன் வரவு பார்த்தே.
பதவுரை:- வாசுதேவா – வாசுதேவர் புத்திரனே!, ஏர் மலர் பூ குழல் ஆயர் மாதர் – அழகிய புஷ்பங்களை அணிந்ததாய் வாஸனையுடன் கூடியதான கூந்தலையுடைய இடைப்பெண்கள், எனை பலர் உள்ள- எத்தனையோ பேர்கள் உள்ள, இ ஊரில் – இந்தத்திருவாய்ப்படியிலே, உன் தன் மார்வுதழுவதற்கு – உன்னுடைய திருமார்பை அணிவதற்கு, ஆசை இன்மை அறிந்து அறிந்தே – ஆசை இல்லாமையை நன்றாக அறிந்து கொண்டும், உன் தன் பொய்யை கேட்டு – உன்னுடைய பொய்யான வார்த்தையைக் கேட்டு, கூர் மழை போல் பனி கூதல் எய்தி- பெரிய மழையைப்போல் பெய்கிற பனியாலுண்டான குளிரிலே அகப்பட்டு, கூசி – (யார் பார்த்துவிடுகிறார்களோவென்று) கூசி, நடுங்கி- ( பபத்தினாலும் குளிரினாலும்) நடுங்கி, யமுனை ஆற்றில்- யமுனை நதியில், வார் மணல் குன்றில் – பெரிய மணல் மேட்டில், உன் வரவு பார்த்து – உன் வருகையை எதிர் பார்த்து, புலர நின்றேன்- போது விடியுமளவும் நின்றிருந்தேன்.
அவ: – முதற் பாட்டு, ஒரு பிராட்டி, யமுநையில் மணலிலேபோய் நில்லு, நான் அங்கே வருகிறேன் என்று சொல்லிவிட; அவள் அங்கேபோய் விடியுமளவும் நின்று அவன் வரக்காணாமையாலே அவனைக் கண்டபோது ஊடிச்சொல்லுகிற வார்த்தையாயிருக்கிறது.
வ்யா:- ( ஏர்மலர்ப் பூங்குழலாயர் மாதர்) அழகிய மலரையுடைத்தாய் மலருக்கும் கூட நாற்றத்தைக் கொடுக்கும் மயிர் முடியையுடைய இடைப்பெண்கள். (எனைப்பலருள்ளவிவ்வூரில்) அநேகம்பேர் திரளான இவ்வூரில்- திருவாய்ப்பாடியில்.(உன்றன் மார்வுதழுவுதற் காசையின்மை யறிந்தறிந்தே) “அநேகம் பெண்களுள்ள ஊருமாய் நீயும் ஸர்வஸாதாரணனுமானால் உன் மார்வை ஆசைப்படக்கடவத்தன்று” என்று அறிந்துவைத்து.
(உன்றன் பொய்யைக்கேட்டு) உன் ஸ்வரூபத்தை உணரவொட்டாதிறே உன் வார்த்தை. “நீயல்லது புகலுண்டோ? உன்னையல்லது நான் அறிவேனோ?” என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு.
(கூர்மழை போல் பனிக்கூதலெய்தி) மிக்க மழைபோலே பெய்கிற பணியால் வந்த குளிரிலே அகப்பட்டு. ( கூசி) ஆர் காண்கிறார்களோவென்று கூசி. (நடுங்கி) அச்சத்தாலும் குளிராலும் நடுங்கி, (யமுனையாற்றில்) அதுதான் ஏகாந்த ஸ்தலத்திலேயோ? ஸர்வ ஸாதாரணாமான தேஶத்திலேயன்றோ?
(வார்மணல் குன்றில் புலர நின்றேன்) நின்றதுதான் தனியே நிற்கலாம் தேஶத்திலே நின்றேனோ? போகத்துக்கு ஏகாந்த ஸ்தலத்திலேயன்றோ? எல்லாரும் வந்து ஸஞ்சரித்துக் காணும் போது ஸர்வஸாதாரணமான தேஶத்திலே வந்தாளென்றிராமே போகத்துக்கு ஏகாந்தமான மணல்குன்றிலே விடியுமளவும் நின்றாளென்னும்படி தோற்ற நின்றேன். (வாசுதேவா) நீ இங்கு நிற்கிறதென்? என்னில்; உன்னை விஶ்வஸித்து; ஒரு வார்த்தையல்லது அறியாத ஸ்ரீ வஸுதேவர் பிள்ளை என்னுமத்தை விஶ்வஸித்து நின்றேன். (உன் வரவு பார்த்தே) உன்னுடைய அழகு காணவேணுமென்னும் நசையாலே. 1.
அரு:- முதற்பாட்டு. ( ஏற்மலரித்யாதி) (பூங்குழல்) அழகிய குழல்; குழலுக்கு அழகு பரிமளம். (ஆசையின்மை) ஆசைப்பட யோக்யத்தை இல்லாமை. அறிந்தால் ஆசைப்படுவானென் என்ன. ( உன் ஸ்வரூபத்தையித்யாதி).
(பனிக்கூதல்) பனியால் வந்த ஊதல், வார்தல் நெடுமாகையாலே பெரிய மணற்குன்றென்றபடி. புலர- விடியுமளவும். 1.
2. கெண்டையொண்கண்மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லைநானும் கடைவனென்று கள்ளவிழியை விழித்துப்புக்கு
வண்டமர்பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ்வாய் துடிப்பத்
தண்டயிர் நீகடைந்திட்ட வண்ணம் தாமோதரா!மெய்யறிவன் நானே.
பதவுரை:- தாமோதரா- தாமோதரனே! கீழை அகத்து – (என் வீட்டுக்குக்)கீழண்டை வீட்டில், கெண்டை ஒண் கண்களையுடையவளான, மடவாள் ஒருத்தி- ஒரு அழகிய பெண், தயிர் கடைய கண்டு – ( தனியே) தயிர் கடைவதைப் பார்த்து, நானும் – நானும் ( உன்னுடன் கூட), ஒல்லை கடைவன் என்று – சீக்கிரம் கடைந்து தருவேன் என்று சொல்லி, கள்ளம் விழியை விழித்து – திருட்டுப் பார்வை பார்த்து, புக்கு- அவளருகே சென்று புகுந்து, வந்து அமர் பூ குழல்- வண்டுகள் உட்கார்ந்திருக்கும்படியான மலர்கலணிந்த மயிர் முடியானது, தாழ்ந்து உலாவ – மிகவும் கீழாகத்தாழ்ந்து அசையும்படியாகவும், வாள் முகம் வேர்ப்ப- ஒளிமிக்க முகமானது வேர்க்கும்படியாகவும், தண் தயிர் – குளிர்ந்த தயிரை, நீ கடைந்திட்ட வண்ணம்- நீ கடைந்த படியை, நான் மெய் அறிவன் – நான் உண்மையாகவே அறிவேன்.
அவ:- இரண்டாம் பாட்டு, வேறொரு பிராட்டி வார்த்தை.
வ்யா:- (கெண்டையொண்கண் மடவாளொருத்தி) முக்தமான( அழகான) நோக்கையுடையளாய், சொல்லிற்றெல்லாம் மெய்யென்றிருக்கும் பருவத்தை யுடையாள் ஒருத்தி (கீழையகத்து) பாவநா ப்ரகர்ஷத்தாலே திருவாய்ப்பாடியில்
ஒரு அகமுமுண்டாய் அதுக்குக் கீழையகமுமாய்ச் செல்லுகிறது காணும் இவர்க்கு. நீதான் முலையடியே நடந்தது வேறோரிடத்தேயோ? என்னகத்துக்குக் கீழை அகத்தேயன்றோ?(தயிர்கடையக்கண்டு) ஊரெங்கும் அடியொற்றித் திரியுமிறே, தனியே நின்று தயிர்கடைவாருண்டோ என்று; ஒருத்தி தனியே நின்று தயிர்கடையக்கண்டவாறே அலப்யலாபம் பெற்றறானாய் ஓடிச்சென்று புக்கான்.
(ஒல்லைநானுங் கடவனென்று) ‘ நீ தனியே நின்று தயிர் கடையில் ஒருக்காலும் வெண்ணெய் பட்டதாக மாட்டாது, சடக்கென வெண்ணெய் படுவது நானும் ஒருதலைப்பற்றிக் கடையிலாய்த்து’ என்று. “அன்று தேவரசுரர் வாங்க”- திருவாய் (7-1-7) என்று பிறர் கைவிட்டால் கடைவது பிறர் கார்யமாகிலிறே; இங்கு இவளும் ஒருதலைப்பற்றிலிறே தன் ப்ரயோஜநமாவது. (கள்ளவிழியை விழித்துப்புக்கு) இவன் கள்ளவிழி; அவள் கெண்டையொண்கண்மடவாள்.நோக்கும் நினைவும் செயலும் சொல்லும் ஒருபடிப்பட்டிருக்கும் அவளுக்கு; இவனுக்கு நோக்கொருபடியும் நினைவொருபடியும் சொல்லொருபடியும் செயல் வேறொருபடியுமாயிருக்கும். இவன் நாக்காலே எல்லாம் மெய்யென்று அவள் விஶ்வஸித்தாளாய்த்து.
(வண்டமரித்யாதி) மேல்பண்ணின வியாபாரங்கள் ஒரு மஹாபாரதமிறே. (வண்டமர்பூங்குழல் தாழ்ந்துலாவ)உன் குழலை விஶ்வஸித்த வண்டுகள் என்பட்டனவோ? (வாண்முகம் வேர்ப்ப)தாமரையிலே முத்து படிந்தாப்போலே ஒளியையுடைய முகம் வேர்ப்ப. (செவ்வாய் துடிப்ப) அதரஸ்புரணம் பிறக்க, இவை எல்லாம் புணர்ச்சிக் குறியிறே. தமிழர் “சுனையாடல்”என்று ஒரு கலவியைச் சொல்லுமாப்போலே.
(தண்டயிர் நீ கடைந்திட்ட வண்ணம்) உன் நெஞ்சுக்குப் பொருந்தின தயிர் கடைந்தபடி, இவள் சொன்னவாறே”இங்கனே இருப்பனே சில எனக்குண்டோ” என்ன; (தாமோதரா மெய்யறிவன் நானே) உன்னுடம்பில் தழும்பை மறைக்கலாமாகிலன்றோ உன் செயல்களை மறைக்கலாவது! 2.
அரு:- இரண்டாம் பாட்டு.(கெண்டையித்யாதி) அவளோடே கூடவேணுமோ? தானே தனியே கடைகிறதுக்கென்னென்ன(அன்று தேவரித்யாதி). 2.
3. கருமலர்க்கூந்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால்
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்குரைத்து ஒருபேதைக்குப் பொய்குறித்து
புரிகுழல் மங்கையொருத்தி தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யானல்லை
மருதிறுத்தாய்! உன்வளர்த்தியோடே வளர்கின்றதால் உன்றன் மாயைதானே
பதவுரை:- மலர்- புஷ்பங்களுடன் கூடிய, கரு கூந்தல் – கறுத்த மயிர்முடியையுடையவளான, ஒருத்தி தன்னை – ஒரு பெண்ணை, கடைக்கணித்து- கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, ஆங்கே – இப்படி இருக்கச்செய்தே, ஒருத்திதன் பால் – வேறொரு ஸ்திரீயின் பக்கலிலே, மனம் மருவி வைத்து – மனதைப் பொருந்தவிட்டு, மற்று ஒருத்தக்கு- வேறொரு பெண்ணுக்கு, உரைத்து- ‘ உன் அடிமை நான்’ என்று சொல்லி, ஒரு பேதைக்கு – ஒன்றுமறியாத ஒரு பெண்ணுக்கு, பொய் குறித்து- (இன்னவிடத்திலே எனக்காகக் காத்திரு) என்று பொய்யாக இடத்தைக் குறித்து, புரிகுழல் மங்கை ஒறுத்து தன்னை – அழகிய கூந்தலையுடைய ஒரு இளம்பெண்ணோடு, புணர்தி – கூடி, நின்றாய்; அவளுக்கும்- அந்தப் பெண்ணுக்கும், மெய்யன் அல்ல – பொய்யே சொல்லி நின்றாய்; மருது இறுத்தாய் – (சிறு பிராயத்திலேயே) இரு மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே!, உன் வளர்த்தியூடே- உன் வயது வளருவதுடன் கூடவே, உன்தன் மாயை – உன்னுடைய கள்ளத்தனமும், வளர்கின்றது ஆல் – அந்தோ வளர்ந்து வருகின்றதே!
அவ:- மூன்றாம் பாட்டு, வேறொருத்தி வார்த்தை.
வ்யா:- (கருமலர்க் கூந்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து ) நெய்த்து இருண்டு பூவையுடைத்தாயிருக்கிற மயிர்முடியையுடையாளொருத்தியை, தான் அவள் மயிர்முடியிலே தோற்றமை தோற்றச்சிறாங்கணித்துப் பார்த்து; நேரே
பார்த்தானாகிலிறே பொதுநோக்கு என்று இருக்கலாவது.( ஆங்கே யொருத்திதன்பால் மருவி மனம் வைத்து) இவள் பக்கலிலே கண் சொல்லாநிற்க வேறொருத்தி பக்கலிலே “அவளையல்லது அறியேன்” என்னும்படி மநஸ்ஸை அங்கே வைத்து.( மற்றொருத்திக்கு உரைத்து) மநஸ்ஸு அவள் பக்கலிலே இருக்கச்செய்தே, வேறே ஒருத்திக்கு “அடியேன்” என்று சொல்லி. ( ஒரு பேதைக்குப் பொய்குறித்து) சொன்ன வார்த்தையை விஶ்வஸித்து அகவாயறியாதாள் ஒரு முக்தைக்கு ‘ இன்னவிடத்திலே போய் நில்லு, நான் அங்கே வருகிறேன்’ என்று இடம் குறித்து.
(புரிகுழல் மங்கையொருத்தி தன்னைப்புணர்தி) மயிர்முடி அலைதிகுலை தியாய்ப் பேணாதே போகயோக்யையாய் இருப்பாளொருத்தியோடே ஸம்ஶ்லேஷித்து. (அவளுக்கும் மெய்யனல்லை) அதுவும் மித்யாபரிரம்பணம். அதாவது:- பொய்யே தழுவுகை. (மருதிறுத்தாய்) பருவம் நிரம்புவதற்கு முன்னே தீண்டினாரைக் கொல்லப்புக்காய். ( உன்வளர்த்தியித்யாதி) உன்னுடைய வஞ்சநமும் நீ பிராயம்புக ஒக்கப் பிராயம்புகா நின்றதிறே. 3.
- தாய்முலைப்பாலில் அமுதிருக்கத் தவழ்ந்து தளர் நடையிட்டுச்சென்று
பேய்முலைவாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென்றே பிறரேச நின்றாய்
ஆய்மிகுகாதலோடுயானிருப்ப யான்விடவந்த என்தூதியோடே
நீமிகுபோகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக்கேற்குமன்றே.
பதவுரை:- தாய் – தாயாகிய யசோதைப் பிராட்டியுடைய, முலையில்- முலையிலே, பால் அமுது இருக்க- பரமபோக்யமான பாலிருக்கச் செய்தேயும் (அதனை உண்ணாமல்), தவழ்ந்து – தவழ்ந்து, தளர் நடை இட்டு சென்று – தட்டுத் தடுமாறிச் சென்று, பேய் முலைவாய் வைத்து – பேயாகிய பூதனையின் முலையிலே வாயை வைத்து, நஞ்சை உண்டு- விஷங்கலந்த பாலை உண்டு, பித்த என்றே- பித்தன் என்று, பிறர் ஏச நின்றாய் – ஊரார் ஏசும்படி நின்றவனே! யான்- நான், ஆய் மிகு காதலோடு இருப்ப- மிகவும் அதிகமான அன்புடன் இருக்க, நீ – நீ யான் விட வந்த – என்னால் (தூது) அனுப்பப்பட்டு வந்த, என் தூதியோடே- என் வேலைக்காரியுடன்,
மிகுந்த போகத்தை- மிகுந்த இன்பரஸத்தை, நன்கு உகந்தாய்- நன்றாக அநுபவித்தாய்; அதுவும் – அச்செய்கையும், உன் கோரம்புக்கு – உனது துஷ்டத்தனத்திற்கு, ஏற்கும் அன்றே- தகுதியாயிருக்கின்றதல்லவா?
அவ:- நாலாம் பாட்டு. குண்டலிதம் அதிகம். (உகந்தருளின தேஶங்களை அநுபவித்தார்கீழ்; அவ்வநுபவம் அவதாரங்களை அநுபவிக்கவேணுமென்னும் அபேக்ஷை பிறந்து அதில் தோள்தீண்டியான க்ருஷ்ணாவதாரத்தை அநுபவித்தவர்கள் பாசுரத்தாலே அநுபவிக்கிறார்.)
வ்யா:- (தாய்முலைப்பாலிலமுதிருக்க)உன்னைப்பெறுகைக்கு நோன்பு நோற்றுப் பத்துமாஸம் சுமந்து நீ முலையுண்ணில் தரித்தும் முலை உண்ணாவிடில் நெறித்தும் ஆற்றாளாயிருக்கிறவளுடைய, உனக்கு தாரகமாயிருந்த முலைப்பாலிருக்க.(தவழ்ந்துதளர்நடையிட்டுச் சென்று) தவழ்ந்து நடக்கப்புக்கு மாட்டாதே தள்ளம்பாறிச் சென்று.(பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு)உன் பக்கல் பாவபந்தமில்லாத பூதனையுடைய முலையிலே வாய்வைத்து, விநாஶத்தை விளைப்பதான நஞ்சையுண்டு. (பித்தனென்றே பிறரேச நின்றாய்) ராக த்வேஷன்களுக்கு விஷயவிபாகம் பண்ணமாட்டாத அடைவு கேடனென்று நாட்டார் ஏசும்படி நின்றாய்.
நான் இப்போது விழுக்காடறியாதே செய்ததென்? என்ன, (ஆய்மிகுகாதலோடுயானிருப்ப யான்விடவந்தவென்தூதியோடே) என் தூதவாக்யம் கொண்டு வந்தவளோடே. ( நீ மிகுபோகத்தை நன்குகந்தாய்) ஆய்-ஆயம்பொன்.உன்னை ஆசைப்பட்டு வைவர்ண்யத்தையுடைய நானிருக்க. “ஆய்” என்று கடைக்குறைத்தலாய்க் கிடக்கிறது. என்னோடு பரிமாறும் பரிமாற்றத்துக்கு அவ்வருகே என் நினைவும் உன் நினைவும் கொண்டு பரிமாற நினைத்தாலும், அவளுக்கு அந்நினைவு இல்லாமையாலே மாந்துமவளிறே அவள். (அதுவுமுன் கோரம்புக்கேற்குமன்றே) கோரம்பாவது தீம்பு. அதாவது; உன் தீம்புக்கு ஏற்குமித்தனையிறே என்கை. 4.
- மின்னொத்த நுண்ணிடையாளைக்கொண்டு வீங்கிருள்வாய் என்றன் வீதியூடே
பொன்னொத்தவாடைக்குக்கூடலிட்டுப்போகின்றபோதுநான்கண்டு நின்றேன்
கண்ணுற்றாய்வாளநீகண்ணாலத்தை கைவிளிக்கின்றதும்கண்டே நின்றேன்
எண்னுக்குஅவளைவிட்டிங்குவந்தாய்? இன்னமங்கேநடநம்பி!நீயே.
பதவுரை:- மின் ஒத்த- மின்னல் போல், நுண் இடையாளை – ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை, கொண்டு – அணைத்துக்கொண்டு, வீங்கு இருள் வாய் – மிக்க இருளிலே, பொன் ஒத்த ஆடை – பொன்னிறமான ஆடையாலே, குக்கூடல் இட்டு – முட்டாக்கிட்டுக் கொண்டு, என் தன் வீதி ஊடே – என் வீதி வழியே, போகின்ற போது – ( அவளும் நீயுமாகப்) போகும்போது, நான் கண்டு நின்றேன்- நான் பார்த்துக்கொண்டிருந்தேன்; கண்ணுற்றவளை – ( மேலும்) கண்ணில் தென்பட்ட வேறொரு பெண்ணை, கண்ணால் இட்டு – (உனக்கே ஆம்படி) கண்சாடை காட்டி, கவிளிக்கின்றதும்- (இன்னவிடத்தே வா என்று) கையாலே காண்பித்ததையும், கண்டே நின்றேன்- பார்த்துக்கொண்டுதானிருந்தேன்; அவளை விட்டு – (ஒன்றுமறியாத) அந்தப் பெண்ணை விட்டு, இங்கு – என்னிடத்திற்கு, என்னுக்கு வந்தாய்- எதற்காக வந்தாய்? நம்பி – ஸகலகுணபரிபூர்ணனே!, இன்னம் – இனிமேலும், நீ அங்கே நட- நீ அவளிடத்திற்கே போவாயாக.
வ்யா:- அஞ்சாம் பாட்டு, ( மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு) மின்போலே நுண்ணிய இடையையுடையாலொருத்தியை அவ்விடை நுடங்காதபடி அணைத்துக்கொண்டு. ( வீங்கிருள்வாய்) உன்னுடைய முன்னடி
தோற்றாதே போகைக்கீடான மிக்க இருளுமுண்டாய்த்திறே.(என்றன் வீதியூ டே) கொண்டுபோகிறது தான் வேறொரு தெருவேயன்றே கொண்டுபோவது. இது ஆர் தெரு என்றிருந்தாய்? இதென்ன அஞ்சாமைதான்!
(பொன்னொத்தவாடை குக்கூடலிட்டு) மறைத்துக்கொண்டு போகிறது தான் இருளுக்கு ப்ரகாஶத்தை இட்டன்றோ; போகிறது போகிறாய், தான் இன்னானைக் கொண்டு போகாநின்றறோம். இன்னாள் தெருவே போகாநின்றோம், இன்ன காலத்திலே போகாநின்றோம் என்னும் துணுக்குமின்றியிலேயன்றோ போயிற்று. (போகின்ற போது நான் கண்டு நின்றேன்) உன்னைப்போலே அந்யபரையன்றோ நான்; நீ போனவிடமெங்கும்அடியொற்றுமவளாகையாலே கண்டு நின்றேன்.
(கண்ணுற்றவாளை) இவளை அணைத்துக்கொண்டு போகா நிற்கச்செய்தே வேறொத்தி கண்ணுக்கு இலக்கானாள்.( நீ கண்ணாவிட்டு) கண்ணாலே அநந்யார்ஹையாம்படி நோக்கினாய். (கைவிளிக்கின்றதும் கண்டே நின்றேன்) இவளை ஒரு கையாலே அணைத்து மற்றைக் கையாலே எதிர்ப்பட்டவளை ‘ இன்னவிடத்தே வா’ என்று அழைத்துக்கொண்டு போகிறபடியையும் பார்த்துக்கொண்டு நின்றேன்.
(எண்ணுக்காவளை விட்டிங்குவந்தாய்) அப்பாவி உன்னை அறியாதவளாகையாலே மெய் என்றிருக்கிறவள் வெறுக்கும்படி அவளை விட்டு இங்கு என்செய்ய வந்தாய்? ‘ அங்ஙனே சிலவுண்டோ எனக்கு, அநந்யகதியன்றோ?’ என்று அவன் சொல்ல; (இன்னமங்கே நட நம்பி நீயே) குறைவாளரைப்போலே சிலவார்த்தை சொல்லக்கடவீரோ? நீர் பூர்ணர் அல்லீரோ? அங்கே நடவீர். 5.
- மற்பொருதோளுடைவாசுதேவா! வல்வினையேன் துயில்கொண்டவாறே
இற்றையிரைவிடையேமத்து என்னை இன்னணைமேலிட்டகன்று நீ போய்
அற்றையிரவுமோர் பிற்றைநாளும் அரிவையரோடுமணைந்துவந்தாய்
எற்றுக்குநீ என் மருங்கில் வந்தாய்? எம்பெருமான்! நீயெழுந்தருளே.
பதவுரை:- மல் பொரு – மல்லர்களுடன் சண்டைசெய்த, தோள் உடை வாசுதேவா – தோள்களையுடைய வஸுதேவபுத்ரனே!, வால் வினையேன்- மஹா பாபத்தைசெய்த நான், துயில் கொண்டவாறே- தூங்கத் தொடங்கினவுடனே, இற்றை இரவு இடை
ஏமத்து – அன்றிரவு நடுச்சாமத்திலே, இன் அணைமேல் – கலவிக்குப் பாங்காயிருப்பதொரு படுக்கையிலே, என்னை இட்டு – என்னைப்படுக்கவிட்டு, நீ அகன்று போய்- நீ விலகிப்போய், அற்றை இரவும் – அன்றிரவும், ஓர் பிற்றை நாளும்- அதற்கு மறுநாளும், அரிவையரோடும்- (பஞ்சலக்ஷம்குடியில் எல்லாப்) பெண்களோடும், அணைந்து வந்தாய் – ஸம்ஸ்லேஷித்து வந்தாய்; நீ – இப்படிப்பட்ட நீ, என் மருங்கில்- என் அருகே, எற்றுக்கு வந்தாய் – எதற்காக வந்தாய்? எம் பெருமான்- என் ஸ்வாமியே!; நீ எழுந்தருள் – அப்பால் எழுந்தருளவேணும்.
வ்யா:- ஆறாம்பாட்டு, (மற்பொரு தோளுடை வாசுதேவா) உன் செயல்கள்; நீ மூலையடி நடந்தாய் என்னவொண்ணாதபடி நிவாரகர் இல்லாத பிறப்பு. ( வல்வினையேன் துயில் கொண்டவாறே) அப்போது உறங்காதிருக்கப் பெற்றிலேன் உன் மிகைச்செயல்கள் எல்லாம் காணும்படி; நித்ரையும் என்னைப் பகை மீளும்படி பாபத்தைப் பண்ணினேன். (இற்றை இரவிடையேமத்தென்னை) அற்றை இரவில் நடுச்சாமத்திலே போக யோக்யமான காலத்திலேயன்றோ என்னை விட்டுப் போய்த்து. (இன்னணைமேலிட்டகன்று நீ போய்) ‘ போக யோக்யமான காலத்திலே, படுக்கை வாய்ப்பாலே இவள் உறங்கும்; உறங்கினவாறே போவோம்’ என்று, அகன்று நீ போய்.
(அறையிரவுமோர் பிற்றைநாளும்) இங்கு நின்று நினைத்துப் போனாப்போலே செய்யவொண்ணாதிறே அங்கு; அகன்ற அன்றிரவும் பிற்றை நாளும். (அரிவையரோடு ஸம்ஶ்லேஷித்து வந்தாய். “அரிவையரோடுமணைந்து வந்தாய்” என்றவாறே “இவளை ஆற்றும் போது அணைத்து ஆற்றவேணும்” என்று அவன் கிட்டப்புக,(எற்றுக்கு நீ என்மருங்கில் வந்தாய்) ஆரைத்தீண்டி வந்தாய் என்று தெரியாது; என்னைத் தீண்டாதே கடக்க நில்லு. (எம்பெருமான் நீயெழுந்தருளே) பூர்வ வாஸனையாலே “வந்தாய்” என்றவிடம் தப்பாச் சொன்னேன்; அத்தைப் பொருத்து, நீர் முதலிகளன்றோ? நீர் எழுந்தருளும். 6.
அரு:- ஆறாம் பாட்டு. (மற்பொருவித்யாதி )” இற்றையிரவு என்று பாடமானாலும் அர்த்தௌசித்யத்துக்காக (அற்றையிரவு) என்கிறது. 6.
7. பையரவின்னணைப்பள்ளியினாய்! பண்டையோமல்லோம்நாம் நீயுகக்கும்
மையரியொண்கண்ணினாருமல்லோம் வைகிஎம்சேரிவரவொழிநீ
செய்யவுடையும் திருமுகமும் செங்கனிவாயும் குழலும் கண்டு
பொய்யொருநாள் பட்டதேயமையும் புள்ளுவம் பேசாதே போகுநம்பீ.
பதவுரை:- பை அரவின் அணை பள்ளியினாய்- படங்களையுடைய
திருவநந்தாழ்வானாகிய படுக்கையில் பள்ளிகொள்ளுபவனே!, நம்பீ- பூரணனானவனே!, நாம்- நங்கள், பண்டையோம் அல்லோம் – (உன் வஞ்சகப் பேச்சில் அகப்படுகைக்கு) பழையவர்கள் அன்று; நீ உகக்கும்- நீ விரும்பத்தக்கவர்களாய், மை – மை அணிந்து, அரி ஒண் – கருவண்டு போல் ஒளிபொருந்திய, கண்ணினாரும் அல்லோம் – கண்களையுடைய பெண்களுமல்லோம்; வைகி – அகாலத்தில், எம் சேரி – எங்கள் இருப்பிடத்திற்கு, வரவு ஒழி நீ – வருவதை ஒழிப்பாயாக; செய்ய உடையும் – அழகிய திருப்பரியட்டத்தையும், திரு முகமும் – திருமுகமண்டலத்தையும், செம் கனி வாயும்- சிவந்த கோவைக்கனியை ஒத்த உதடுகளையும், குழலும்- அழகியமயிர் முடியையும், கண்டு- பார்த்து, பொய் – உன் பொய்யான வார்த்தைகளை மெய்யென நம்பி, ஒருநாள் பட்டதே அமையும் – ஒருநாள் பட்டபாடு ஒன்றே போதுமே; புள்ளூவம் – வஞ்சகமான வார்த்தைகளை, பேசாதே போகு – (மறுபடியும்) சொல்லாமல் இவ்விடத்தை விட்டுப் போ.
வ்யா:- ஏழாம் பாட்டு, ( பையரவினணைப் பள்ளியினாய்) நீ எனக்கு நல்லையல்லையாகிலும் நான் உனக்கு நல்லேன். “ஆசைப் பட்டார்க்கு உடம்பு கொடுக்குமவன், எதிர்த்தலையினுடைய ரக்ஷணசிந்தை பண்ணுமவன் நான்” என்று அவன் சொல்ல ( பையரவினணைப் பள்ளியினாய்) என்கிறாள். (பண்டையோமல்லோம் நாம்) அகப்படுத்துகைக்காக நீ முன்பு செய்யும் செயல்கள் அறிந்தவர்களாகையாலே பழையவர்கள் அல்லோம்காண் நாங்கள், “நாகணைமிசை
நம்பிரான் சரணே சரண் நமக்கு”- திருவாய் (5-10-11) என்றிருக்கும் நிலை தவிர்ந்தோம் காண் நாங்கள்; தஞ்சமாக நினைத்திருக்கும் அதிலேயும் அதிஶங்கை பண்ணும்படி அவகாஹித்தார் காணும் இவர்.
‘நீங்கள் பண்டையவர்களன்றாகிலும் நான் தான் பழையவனாகையாலே உகப்பேன் உங்களை’ என்று அவன் சொல்ல; (நீ யுகக்கும் மையரியொண் கண்ணினாருமல்லோம்) நீ இப்போது உகக்கிறவர்களுமல்லோம் காண் நாங்கள். முன்னாடி தோற்றாதே உன்னை முலையடியே நடக்கப்பண்ணுகிற அவயவ ஶோபையுடையவர்களல்லோம் காண் நாங்கள்.’ ஆனால் என்னைச் செய்யச் சொல்லுகிறதென்? என்ன; (என்சேரிவரவொழி நீ) எங்களுடைய இருப்பிடங்கள் எங்களுக்கே ஆஜ்ஞை சொல்லுவது; எங்களிருப்பிடத்தில் வாராதே கொள். ‘ எல்லாரும் பரிமாறுகிற உங்களிடத்தில் நான் வாராதொழிகிறதென்? என்ன; ( என்சேரிவரவொழி நீ) ‘ எல்லாரும் வரும்போதில் வரவேண்டாவென்கிறோமன்று; ஆளற்ற போதாகப்போகா நின்றான், இவனுக்கு ஒரு நினைவுண்டென்று ஶங்கிக்கும் பொது வரவேண்டா என்கிறோமத்தனையல்லது ஸர்வஸாதாரணமானபோது வரவேண்டா என்றிலோமே ‘ என்ன; இவர்கள் வரவேண்டாவொன்னாதபடி ஆசையே கை வைத்தான்; இவர்கள் வார்த்தையிலே தான் செயலற்றபடியாலே இவர்கள் வாய்மாளும்படி ப்ரஹ்மாஸ்த்ர ப்ரயோகம் பண்ணப் பார்த்தான். (செய்யவுடையும் திருமுகமும் செய்யவாயுங் குழலுங் கண்டு) திருப்பரியட்டத்தைப் பேணுவது, இவர்கள் முகங்களிலே முகத்தைக்காட்டுவது, ஸ்மிதம் பண்ணுவது, திருக்குழலைப் பேணுவதானான்; இப்படிச் செய்தவாறே இறாய்த்தாள். அதாவது:- கண்ணைச் செம்பளித்தாள்.
கண்படைத்த லாபம் காணாதே கண்ணச் செம்பளிக்கிறதென் என்று சொல்லக்கண்டு (பொய்யொருநாள் பட்டதேயமையும்) உன்னுடைய செயல்களெல்லாம் மெய்யென்றும் ஒரு நாள் பட்டதே அமையும் காண்? என்கிறாள்- ‘அடியேன் குடியேன்’ என்று சில வார்த்தைகளைச் சொல்ல; (புள்ளுவம் பேசாதேபோகு) காட்சிக்கு (பா – தாழ்ச்சிக்கு) முன்னே காண் ஶ்ரவணமும், அதுவுமெல்லாம் பாண்டே செய்து அற்றது காண் ; இனி நீ சொல்லுகிறவற்றுக்கு ஒரு ப்ரயோஜநமில்லை. புள்ளுவமாவது; வஞ்சநம், வஞ்சநங்களெல்லாம் அறிந்த
எங்கள் பக்கல் ப்ரயோகியாதே போ. “என்னை ‘போ’ என்கிறதென்? உங்களை ஒழியப் புகலிடமுண்டோ? “என்ன; (நம்பீ )பூர்ணராயிருக்கிற நீர் குறைவாளரைப்போலே சில சொல்லக்கடவீரோ, சொலவுக்கும் செயலுக்கும் அடியில்லை என்னும்படி நிரபேக்ஷர் என்று அறிந்த பின்பு சில ஸாபேக்ஷரைப்போலே சொல்லக்கடவீரோ? நடவீர். 7.
அரு:- ஏழாம் பாட்டு. ( பையரவித்யாதி) அவன் நினைவிலே அவதாரிகை அருளிச்செயகிறார் ( நீ எனக்கித்யாதி). நீ அகப்படுத்துகைக்குப் பண்ணின வஞ்சநமன்றோ என்று வ்யங்க்யமாக அவன் நினைவை அநுவதிக்கிறார்( பையரவித்யாதி). (பண்டையோம்) உன் காபட்யம் அறியாதே அகப்படும் விஶ்வஸித்திருப்பார்களோ என்ன அருளுகிறார்( நாகணைமிசையித்யாதி).
(மையரியித்யாதி)மையை அபஹரிக்கிற அழகிய கண் என்னுதல். மைபோலவும் வண்டுபோலவும் இருக்கிற அழகிய கண் என்னுதல்.
(ஶ்ராவணமும்) கேட்டுக் காண்கிறதொழிய, கண்டு கேட்கை உண்டோ? பேசாதே போம். காட்சிக்குப் பூர்வபாபியானது ஶ்ரவணம். காட்சியில்லாதபோது முதலிலே ஶ்ரவணமும் இல்லை என்று கருத்து. 7.
8. என்னைவருகவெனக் குறித்திட்டு இனமலர்முல்லையின் பந்தர்நீழல்
மன்னி அவளைப்புணரப்புக்கு மற்றென்னைக்கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிறவாடையைக்கையில் தாங்கிப் பொய்யச்சம்காட்டி நீ போதியேலும்
இன்னம் என்கையகத்து ஈங்கொருநாள் வருதியேல் என்சினம் தீர்வன் நானே.
பதவுரை:- என்னை வருக என – என்னை (இன்னவிடத்திற்கு) வா என்று, குறித்திட்டு- இடத்தை குறித்து விட்டு, இனம் மலர் முல்லையின் பந்தர் நீழல் – மிகுந்த மலர்களையுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே,
மன்னியவளை – குடில் கட்டிக் காத்துக் கிடந்தவளை புணர புக்கு- ஸம் ஶ்லேஷிக்கப் புகுந்தவாறே, மாற்று என்னை கண்டு- பின்னர் என்னைப் பார்த்து, உழறா நெகிழ்ந்தாய்- கலங்கி அப்பாலே நடந்தாய்; பொன் நிறம் ஆடையை- திருப்பீதாம்பரத்தை, கையில் தாங்கி- கையிலே தாங்கிக் கொண்டு, பொய் – பொய்யாக, அச்சம் காட்டி- எனக்கு பயந்ததாக நடித்து, நீ பொது ஏலும் – நீ (என்கைக்கு)தப்பிப்போனபோதிலும், இன்னம் – இனிமேல், ஈங்கு – இங்கு, என் காய் அகத்து – என்னிடத்திற்கு, ஒரு நாள் வருதி ஏல் – ஒரு நாளாகிலும் வருவாயாகில், நான் என் சினம் தீர்வன் – நான் என்னுடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ளுவேன்.
வ்யா:- எட்டாம் பாட்டு. (என்னை வருகவெனக் குறித்திட்டு) ப்ரணயித்வத்தாலே ஒருத்தியை அநந்யார்ஹை ஆக்கினாய்; அவளை இன்னவிடத்திலே வா என்று இடம் குறித்துவிட்டாய். (இனமலர் முல்லையின் பந்தர்நீழல்) பரப்புமாறப்பூத்த முல்லைப் பந்தலின் கீழே, (மன்னியவளைப் புணரப்புக்கு) எக்காலத்தலே இதன்குறித்துவிட்டானென்று தெரியாது; அவள் அங்கே குடில் கட்டிக் காத்துக்கிடக்கிறது; அவளோடே ஸம்ஶ்லேஷிக்கப் புக்கு, ( மற்றென்னைக் கண்டுழறா நெகிழ்ந்தாய்) ஒரு மஹாபாரதத்தைப் பாரித்துக்கொண்டு புக்கு இவளைக் கண்டவாறே கலங்கி எழுந்திருந்தான்.
(பொன்னிற வாடையைக்கையில் தாங்கி) திருப்பறியட்டத்தைக் கையிலே தாங்கி,(பொய்யச்சங்காட்டி நீ போதியேலும்) இவளைக் கைகழியப் போய், மெய் அச்சம் செய்தத்தைப் பொய்யாக்கிச் சிரித்தான் போய் நின்று; மெய்யே அஞ்சினானாகில் களவும் மெய்யாமிறே ; களவு பொய்யாகைக்காகப் பொய்யே அஞ்சினானாக பாவித்தான்(போதியேலும்)அப்போதைக்கு இவளைத் தப்பப் போமதிறே உத்தேஶ்யம். அப்படியே கைகழலப்போனான்.
(இன்னமென்கையகத்தீங்கொருநாள்வருதியேல்) நீ நியதஸ்வபாவன் அல்லாமையாலே என் கையிலேயும் ஒருநாள் வந்து அகப்படக்கூடுமிறே; அகப்பட்டாயாகில் (என்சினம் தீர்வன் நானே) உய்ந்தபிள்ளை படாநிற்க எம்பார் பார்த்தெழுந்தருளியிருக்க இவ்விடத்துக்கு அபிநயிக்கிறார்:-
காலாலே பாய்ந்து தள்ளுவதாக் காட்ட; அத்தைக்கண்டருளி, “கெடுவாய்! அங்ஙனே செய்தாளாகில் அவனுக்குப் பொல்லாதோ? அவனுக்கு அஃதன்றோ தேட்டம்? அங்ஙனன்று காணும்” என்று கையையிட்டு முகத்தை மறைத்துத்திரிய
வைத்தருளிக் காட்டினார். 8.
அரு:- எட்டாம் பாட்டு.(என்னையித்யாதி)என்னை வருகவென – என்ன வரச்சொல்லி இடம் குறித்திட்டு அன்று, இவன் தன்னை – ஒருத்தியை என்று வ்யாக்யாதாவின் வார்த்தை. 8.
9. மங்கலநல்வனமாலைமார்விலிலங்க மயில்தழைப்பீலிசூடி
பொங்கிளவாடை அறையில் சாத்திப் பூங்கொத்துக்காத்தில் புணரப்பெய்து
கொங்குநறுங்குழலார்களோடு குழைந்து குழலினிதூதிவந்தாய்
எங்களுக்கே, ஒருநாள் வந்தூத உண்குழலின்னிசை போதராதே.
பதவுரை:- மங்கலம் – மங்களகரமாய், நல் – அழகியதான, வனமாலை- வனமாலையானது,மார்பில் – திருமார்விலே, இலங்க- பிரகாசிக்கவும், மயில் தழை பீலி- தழைத்துள்ள மயிலிறகுகளை சூடி – ( திருமுடியிலே) சூடிக்கொண்டும், பொங்கு இள ஆடை- மிகவும் மெல்லிய ஆடையை, அறையில் சாத்தி- திருவரையில் உடுத்திக்கொண்டும், பூ கொத்து – பூங்கொத்துக்களை, காதில் – காதிலே, புணரப் பெய்தும்- மிகவும் பொருந்த அணிந்துகொண்டும், கொங்கு நறும் குழலார்களோடு- தேனும் நல்ல மணமும் கூடிய கூந்தலையுடைய பெண்களோடே , குழைந்து- கலந்து (அத்தால் உண்டான ஸந்தோஷத்திற்குப் போக்குவீடாக), குழல்- புல்லாங்குழலை, இனிது ஊதி வந்தாய் – வெகு அழகாக ஊதிக்கொண்டு வந்தாய்; ஒருநாள்- ஒரு நாளாகிலும், எங்களுக்கே – எங்களுக்காக, வந்து ஊத- வந்து ஊதும்படியாக, உன் குழலின் இசை – உன்னுடைய குழலின் இசையானது, போதராது – வாராது.
அவ:- ஒன்பதாம் பாட்டு. தோல்வி தோற்றச் சொல்லுகிறார்கள்.
வ்யா:- (மங்கல நல்வனமாலை மார்விலிலங்க)மங்களமென்று சொல்லப்பட்டவை எல்லாமுடைத்தாய் தர்ஶநீயமாய் இருக்கிறவனமாலை. “மைபோல் நெடுவரைவாய் தாழுமருவிபோல் தார்கிடப்ப” – மூன்- திருவ (59) என்னுமாப்போலே, திருமார்விலே விளங்க.(மயில்தழைப்பீலிசூடி) தழைத்த பீலியைத் திருமுடியிலே சுற்றி.(பொங்கிளவாடை அரையில் சாத்தி) இகவும் மெல்லிய ஆடையைத் திருவரையிலே சாத்தி, (பூங்கொத்துக்காதில் புணரப்பெய்து கொங்கு நறுங்குழலார்களோடு குழைந்து) பூங்கொத்தைக் காதிலே மிகவும் பொருந்திவிட்டுத் தேனையும் நறுநாற்றத்தையுமுடைய குழலையுடைவர்களோடே குழைந்து- கலந்து.
(குழலினிதூதிவந்தாய்) நெகிழ்ந்தவர்களோடு ஒரு நீராகக் கலந்து அக்கலவியால் பிறந்த ஹர்ஷமெல்லாம் தோற்றும்படியாக நைனிதாகக் குழலூதி வந்தாய். ( எங்களுக்கே ஒருநாள் வந்தூத உன்குழலின்னிசை போதராதே)நீ ஸர்வஸாதாரணனான பின்பு உன் குழலும் ஸர்வஸாதாரணமாயிருக்க, ‘ஓரோவிடங்களிலேயாய் நாங்கள் கேட்க ஊதவேணும்’ என்றால் நீ ஊத்திலும் இசை புறப்படாதபடியாயத்திறே உன் குழலின் ஸ்வபாவம். குழலோசையென்றும் ஸம்ஶ்லக்ஷமென்றும் பர்யாயமிறே. எங்களோடு ஸம்ஶ்லேஷம் உனக்குப் பொருந்தாது என்கிறார்கள். 9.
10. அல்லிமலர்த்திருமங்கைக்கேள்வன் தன்னை நயந்து இளவாய்ச்சிமார்கள்
எலிப்பொழுதினில் ஏமத்தூடி எள்கியுரைத்த உரையதனைக்
கொல்லிநகர்க்கிறை கூடற் கோமான் குலசேகரன் இன்னிசையின் மேவிச்
சொல்லிய இந்தமிழ் மாலை பத்தும் சொல்லவல்லார்க்கு இல்லை
துபைந்தானே.
பதவுரை:- இள ஆய்ச்சிமார்கள் – இளமையுடன் கூடிய இடைப்பெண்கள், அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து – தாமரைப்பூவில் பிறந்த பெரிய பிராட்டியாரின் மணவாளனான கண்ணபிரானை ஆசைப்பட்டு, எல்லி ஏமப்ப்பொழுதினில்- இரவின் நடுச்சாமத்திலே, ஊடி- பிணங்கி, எள்கி – (அத்தாலே) ஈடுபட்டு, உரைத்த- சொன்ன, உரை அதனை- பாட்டுக்களை, கொல்லி நகர்க்கு
இறை – கொல்லி நகரத்திற்கு அரசரும், கூடல் கோமான்- மதுரைக்கு அதிபதியுமான,குலசேகரன்- குலசேகரயாழ்வார், இன் இசையில் மேவி- இனிய பண்ணிலே பொருந்தும்படியாக, சொல்லிய- அருளிச்செய்த, இந்த தமிழ்- இனிய தமிழாலாகிய,மாலை – மலைபோன்ற, பத்தும் – இப்பத்துப்பாட்டையும், சொல்ல வல்லார்க்கு – சொல்ல வல்லவர்களுக்கு, துன்பம் இல்லை- (பகவதநுபவத்திற்கு தடையான) துன்பம் ஒன்றும் அணுகாது.
வ்யா:- நிகமத்தில்; (அல்லிமலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து) பரம ப்ரணயியான ஸ்ரீ கிருஷ்ணனை ஆசைப்பட்டு.(இளவாச்சிமார்கள்)அவனைப்போலே எறிமறிந்த பருவமன்றியே பாடாற்றமாட்டாத இளவாய்ச்சிமார்கள். (எல்லிப் பொழுதினிலே மத்து) விலக்குவாரில்லாத மத்யராத்ரத்திலே.(ஊடியெள்கியுரைத்த உரையதனை) ஊடி அத்தாலே ஈடுபட்டு அவ்வீடுபாடுதான் சொல்லாய் வழிந்து புறப்பட்டதென்னலாம்படியான பாசுரத்தை.
(கொல்லிநகர்க்கிறை கூடல்க்கோமான்) கொல்லியென்று சேரன் படைவீடு; கூடலென்று பாண்டியன் படைவீடு; “கோழிக்கோன்” என்று முன்பே சொல்லி வைத்தார். மூன்று ராஜ்யத்துக்கும் கடவரான ஸ்ரீ குலசேகரப்பெருமாள். ஸ்ரீ கோபிமார் தங்கள் ஸ்த்ரீத்வாபிமாநமெல்லாம் அற்றுச்சொன்னாப்போலே இவரும் பெரிய அபிமாநமெல்லாம் அற்றுச்சொன்னாப்போலே இவரும் பெரிய அபிமாந மெல்லாம் அறுத்தபடி.
(இன்னிசையில் மேவிச்சொல்லிய இன்தமிழ்மாலை பத்தும்) (34) “ “पाठ्ये गेये च मधुरं” (பாட்யே கேயே ச மதுரம்) என்னும்படியான தமிழ்த்தொடை பத்தும், (சொல்லவல்லார்க்கில்லை துன்பம்தானே) இவருடைய பாவபந்தமில்லையாகிலும் இவை கற்றவர்களுக்கு பகவதநுபவத்துக்கு விச்சேதஶங்கை பிறவாதே நிரந்தராநுபவமாய்ச் செல்லப்பெறுவார்கள். ஸம்போகமத்யே பிறக்குமதிறே ஊடலாவது. “ உன்தலைபத்து என்தலைபத்து” என்று முடிய ஊடலாய்ச் செல்லும் அநுபவத்தைப் பெறுவர்கள். 10.
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஆறாம் திருமொழி முற்றிற்று.
ஏழாந்திருமொழி – அலைநீள் கரும்பு ப்ரவேசம்.
அவ:- பிராட்டி, திருவடியைக் கண்டவாறே “ப்ரணய ரோஷம் தலையெடுத்து, ‘பிதுர்வசந பரிபாலனம் பண்ணப் போந்தார்; என்றிறே பெருமாள் உங்கள் கோஷ்டியிலே ப்ரஸித்தராயிருப்பது; இப்போது அங்ஙனன்று காண்; தம்மை விஶ்வஸித்துக் கைகொடுத்த என்னை விடுகைக்காகக்காண்.(35) ” रक्षिता जीवलोकस्य “(ரக்ஷிதா ஜீவலோகஸ்ய) என்கிறத்தையும் வீட்டாரிறே “ என்று கிலாய்த்தாப்போலே கிலாய்த்தார் ஐவரும் கீழில் திருமொழியிலே; ஸர்வாத்மாக்களுக்கும் பிராட்டிமாரோபாதி பிராப்தியுண்டென்னும்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்தவராகையாலே இவர் கிலாய்த்தார்.
இப்படிக்கு கிலாய்க்கைக்கு ப்ராப்தி உண்டாயிருக்கிற விஷயத்தை அநாதிகாலம் இழந்தோமென்கிற இழவு வந்து தலையெடுத்து, முன்பு க்ருஷ்ணனைப் பெற்றுவைத்து பால்யாவஸ்த்தையில் அவன் செயல்களை அநுபவிக்கப்பெறாதே இழந்திருந்தது கம்ஸவத பர்யந்தமாக முன்புள்ள விரோதிகளை எல்லாம்போக்கி, தங்கள் முகத்திலே விழித்த கிருஷ்ணனைக் கண்டபோது கீழ் அநுபவிக்கப் பெறாத இழவுகளைச் சொல்லிக் கூப்பிட்ட தேவகியார் பாசுரத்தாலே அநாதிகாலம் தாம் இழந்த இழவைச் சொல்லுகிறார் இத்திருமொழியில்.
அரு:- ஆலநீள் ப்ரவேஶம்.
(36) ” धर्मपादेशात् तयजतश्च राज्यं मां चाप्यरण्यं नयत: पदातिम् | नासीद्व्यथा तस्य न भीर्न शोक: कश्चित्स धैर्ये हृदये करोति || ” ( தர்மாபதேசாத் த்யஜதஶ்ச ராஜ்யம் மாம் சாப்யரண்யம் நயத: பதாதிம் | நாஸீத் வ்யதா தஸ்ய நபீர் நஶோக: கச்சித்ஸ தைர்யம் ஹ்ருதயே கரோதி ||) என்கிற ஶ்லோகத்தை உட்கொண்டருளிச் செய்கிறார் (பிராட்டியித்யாதி).
- அலைநீள் கரும்பன்னவன்தாலோ அம்புயத்தடங்கண்ணினன் தாலோ
வேலைநீர் நிறத்தன்னவன்தாலோ வேழப்போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழலென்மகன் தாலோ என்றென்று உன்னை என்வாயிடை நிறையத்
தாலொலித்திடும் திருவினையில்லாத் தாயாரில் கடையாயின தாயே.
பதவுரை:- ஆளை நீள் கரும்பு அன்னவன்- ஆலையிட்டுப் பிழிவதற்கு ஏற்ற நீண்ட கரும்பு போன்றவனே!, தாலோ – (உனக்குத்)தாலாட்டு; அம்புயம்- தாமரைப்பூவைப் போல, தடம் கண்ணினன் – விசாலமான திருக்கண்களையுடையவனே!, தாலோ – தாலேலோ; வேலை நீர் நிறத்து அன்னவன்- கடல் நீரைப்போன்ற நிறத்தையுடையவனே! தாலோ- தாலேலோ; வேழம் போதகம் அன்னவன்- யானைக்குட்டி போன்ற செயல்களையுடையவனே!, தாலோ – தாலேலோ; ஏலம் வார் குழல் – பரிமளம் மிகுந்து நீண்டுள்ள திருகுழலையுடைய, என் மகன்- என் மகனே!, தாலோ – தாலேலோ; என்று என்று – இப்படி பலதடவைகள் சொல்லி, என் வாயிடை நிறைய- என் வாய் மகிழும்படி, உன்னை – உன்னை, தால் ஒலித்திடும் திருவினை இல்லா – தாலாட்டும்படியான ஸம்பத்தில்லாத, தாயாரில் – தாய்மார்களில், கடை ஆயின தாய் – கடையான தாயாயிரா நின்றேன் நான்.
வ்யா:- முதற்பாட்டு.(அலைநீள் கரும்பன்னவன் தாலோ)சமைய வளர்ந்த ஆலைக்கரும்புபோலே ரஸநேந்திரியத்துக்கு இனியனானவனே! (அம்புயத்தடங் கண்ணினன்தாலோ) ‘ விகாஸம், செவ்வி, குளிர்த்தி, மென்மையையுடைய தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்களைக்கொண்டு என்னைக் குளிர நோக்குகிறவனே’ என்று சக்ஷூரிந்த்ரியத்துக்கு இனிதாயிருக்கிறபடி சொல்லுகிறார்.(வேலைநீர் நிறத்தன்னவந்தாலோ) அவயவங்களைப் பிரித்துச் சொல்லவேணுமோ? அவயவியான திருமேனியாலும் ஶ்ரமஹராமான கடல்போல் இருக்கிறவனே! (வேழப்போதகமன்னவன்தாலோ) ஆனைக்கன்று போலே வைத்தகண்வாங்காதே பார்த்தபடியே இருக்கும்படியான சரிதங்களையுடையவனே.
(ஏலவார்குழலென் மகன்தாலோ) இப்படி உபமாநங்களால் சொல்ல வொண்ணாமையாலே என்மகனென்னுமித்தனை. (என்றென்றுன்னை யென்வாயிடை நிறையத்தாலொலித்திடும் திருவினையில்லா) இப்படிப் பலகாலும் சொல்லி வாயாரத் தாலாட்டும் ஸம்பத்தில்லாத, (தாயரில் கடையாயின தாயே) பெறுகைக்கு நோன்பு நோற்றுப் பெற்றுவைத்து அநுபவத்தில் குறையநிற்கையாலே, பிள்ளை களைப் பெற்று அநுபவிக்கும் தாய்மாரெல்லாரிலும் கடையானேனிறே நான். 1
2.வடிக்கொளஞ்சனமெழுது செம்மலர்க்கண் மருவிமேலினிநோக்கி
முடக்கிச் சேவடிமலர்ச்சிறுகருந்தாள் பொலியும்நீர்முகிரற்குழவியேபோல
அடக்கியாரைச்செஞ்சிறுவிரலனைத்தும் அங்கையோடு அணைந்து
ஆனையிற்கிடந்த
கிடக்கைகண்டிடப்பெற்றிலேன் அந்தோ!கேசவா!கெடுவேன் கெடுவேனே
பதவுரை:- வடிகொள்- கூர்மையையுடைத்தாய், அஞ்சனம் எழுது- மைதீட்டப்பெற்றதாய், செம் மலர் கண்- செந்தாமரையை ஒத்ததான திருக்கண்களாலே, மேல் ஒன்றினை- மேற்கட்டியிலே தொங்கும்படியான ஒரு விளையாட்டுப்பொருளை, இனிது- இனியதாக, மருவி நோக்கி- பொருந்திப் பார்த்துக்கொண்டும், கரு தாள்- கறுத்த புறந்தாளையும், மலர் சிறு சே அடி- செந்தாமரையை ஒத்த சிறிய சிவந்த உள்ளங்காலையுமுடைய திருவடிகளை, முடக்கி- முடக்கிக் கொண்டும், நீர் பொலியும் – கழுத்தளவும் நீரைப் பருகி விளங்குகிற, முகில் குழவி போல- மேகக்குட்டியைப் போலே, செம் சிறு விரல் அனைத்தும்- அழகிய சிறுவிரல்கள் எல்லாவற்றையும், அம் கையோடு- உள்ளங்கையிலே, அடக்கி ஆர- அடங்கும்படியாக, அணைந்து- மடித்துப்பிடித்துக் கொண்டு ஆனையில் கிடந்த கிடக்கை- ஆனை கிடக்குமாப்போலே பள்ளிகொண்டருளிய அழகை, கண்டிடப் பெற்றிலேன் – பார்த்து அநுபவிக்கப் பெற்றிலேன்; அந்தோ- ஐயோ!, கேசவா- குழலழகனே!, கெடுவேன் கெடுவேன் – ஒன்றையும் அநுபவிக்கப்பெறாத மஹாபாபி ஆனேன்.
வ்யா:- இரண்டாம் பாட்டு, (வடிகொளஞ்சநமெழுது செம்மலர்க்கண்) கூர்மையையுடைய செம்மலர்க்கண் என்னுதல்;திருக்கண்ணுக்கு ஈடாக வடிக்கப்பட்ட அஞ்ஜநத்தையுடைய கண் என்னுதல், செம்மலர்- சிவந்த தாமரை போலே இருந்துள்ள,(மருவிமேலினி தொன்றினை நோக்கி) பிள்ளையைத் தொட்டிலிலே வளர்த்தி அநந்யபரனாய்ப் பார்த்துக் கிடக்கைக்காக மேலே ஒன்றைத் தூக்கி வைப்பார்களிறே. அத்தை இனியனாய்க்கொண்டு ஸ்தாதர்ஶநம் பண்ணிக்கிடக்குமிறே. (முடக்கிக்ச்சேவடி மலர்சிறுகருந்தாள்) அங்குகிடக்கும்படி சொல்லுகிறது மேல், புறவாய் கறுத்து, அகவாய் சிவந்த திருவடிகளை முடக்கி, (பொலியுநீர் முகில் குழவியேபோலே)கழுத்தே கட்டளையாக நீரைப்பருகிற்றொரு மேகக்கன்றுபோலே.
(அடக்கியாரச் செஞ்சிறுவிரலனைத்தும் அங்கையோடணைந்து)செறிந்து அழகியதான திருவிரல்களை உள்ளங்கையிலே அடங்கும்படி மடித்துப் பிடித்து.(ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேனந்தோ) ஆனை தன் அவயவங்களைப் போகட்டு ஸ்வைரமாகக் கிடந்தாப்போலே தொட்டிலிலே கிடக்கும்போது அநுபவிக்கப் பெற்றிலேனென்று ஐயோ என்கிறாள். (கேசவா கெடுவேன் – கெடுவேனே) அப்போதைத் திருக்குழலழகை அநுபவிக்கவும் பெற்றிலேன்; முன்பு மலடு நின்று இழந்தேன். பின்பு பெற்றுவைத்தே அநுபவிக்கப் பெறாதே இழந்தேன். இரண்டாலும் மஹாபாபியிறே நான். 2.
அரு:- இரண்டாம் பாட்டு. (வடிக்கொளித்யாதி)(ஆனையில்)உபமார்த்தே பஞ்சமீ. ஆனைபோலே என்றபடி. 2.
3. முந்தைநன் முறையன் புடைமகளிர் முறைமுறைத்தந்தம் குரங்கிடையிருத்தி
எந்தையே! என்தன் குலப்பெருஞ்சுடரே!எழுமுகில்கணத்தெழில் கவரேறே!
உந்தையாவனென்றுரைப்ப நின்செங்கேழ் விரலினும் கடைக் கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே.
பதவுரை:- அன்பு உடை – அன்பையுடையவர்களான, முந்தை நல் முறை மகளிர் – பரம்பரையாகவுள்ள நல்ல உறவு முறையையுடைய பெண்கள், தம் தம் குறங்கிடை – தங்களுடைய துடைகளிலே, முறை முறை – முறைப்படி, இருத்தி- வைத்துக் கொண்டு, “எந்தையே – என் அப்பனே!, என் தன் குளம் பெரும் சுடரே- எங்கள் குலத்துக்கு பெரியதொரு விளக்குப்போன்றவனே! எழு முகில் கணத்து- ஏழு வகைப்பட்ட மேகக்கூடங்களினுடைய, எழில் கவர்- அழகைக் கவர்ந்துகொண்ட, ஏறே – ஸிம்ஹம்போன்றவனே!” (என்று பலவாறு துதித்து) உந்தை யாவன் என்று உரைப்ப – உன் தகப்பனார் யார் எனக்காட்டு என்றவுடன், நின்- உன்னுடைய, செம் கேழ் விரலினும் – சிவந்த நிறமுள்ள விரலாலும், கடை கண்ணினும் – கடைக்கண்ணாலும், காட்ட- காண்பிக்க, (அப்பாக்கியத்தை) நந்தன் பெற்றனன்-நந்தகோபர் பெற்றார்; நல்வினை இல்லா நங்கள் கோன் – பாக்யஹீனையான என்னுடைய பர்த்தாவான வஸுதேவன் – வஸுதேவர், பெற்றிலன் – பெறவில்லை.
வ்யா:- மூன்றாம் பாட்டு. (முந்தைநன் முறை அன்புடை மகளிர்) தாய்மார், அவர்களுடைய தாய்மார், பாட்டிமாரெல்லாரும், (முறைமுறை தம்தம் குரங்கிடையிருத்தி) தந்தம் அவ்வோ அடைவுகளிலே குரங்குகளிலே வைத்துக்கொண்டு. (எந்தையேயென்றன் குலப்பெருஞ்சுடரே எழுமுகில் கணத்தெழில் கவரேறே)என்றன் தமப்பனே! எங்கள் குலத்துக்கு விளக்கானவனே! ஏழு வகைப்பட்ட மேகஸமூஹங்களினுடைய அழகைக் கவர்ந்த ஸிம்ஹம் போலே இருக்கிறவனே!
(உந்தையாவனென்றுரைப்ப)இப்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி உங்கள் தமப்பனார் யாரென்று கேட்க,( நின்செங்ககேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன்) சிவந்த விரலாலும் கண்ணாலும் காட்ட ஸ்ரீ நந்தகோபர் பெற்றார். (நல்வினையில்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே) பாக்யஹீநையான என்னைக் கைப்பிடிக்கையாலே ஸ்ரீ வஸுதேவரும் இழந்தாரே. 3.
அரு:- மூன்றாம் பாட்டு.(முந்தையித்யாதி) “முந்தை மகளிர்” என்று பாட்டிமாராய், தாயாருடைய பாட்டியாரைச் சொல்லுகிறது. 3.
4. களிநிலாவெழில் மதிபுரை முகமும் கண்ணனே! திண்கைமார்வும் திண்தோளும்
தளிர்மலர்க்கருங்குழல் பிறையதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும்பொலிந்த
இளமையின்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள்
தாயெனநினைந்த
அளவில்பிள்ளைமையின்பத்தையிழந்த பாவியேயேனெனதாவி நில்லாதே.
பதவுரை:- கண்ணனே – கண்ணபிரானே!, களிநிலா – ஆநந்தத்தை உண்டாக்கும் நிலாவையுடைய, எழில் மதி புரை- பூர்ண சந்த்ரனை ஒத்த, முகமும்- திருமுகமும், திண் கை – வலிமை பொருந்திய திருக்கைகளும், மார்பும்- திருமார்பும், திண் தோளும் – பலம்பொருந்திய திருத்தோள்களும், தளிர் மலர் கரு குழல் – இளந்தளிரையும் மலர்களையுமுடைய கறுத்த திருகுழலின் கீழே விளங்குகிற, பிறை அதுவும்- மூன்றாம் பிறையையொத்த திருநெற்றியும், தடங்கொள்- விசாலமான, தாமரை கண்களும் – தாமரைப்பூ போன்ற திருக்கண்ங்களும் (ஆகிய இவை), பொலிந்த இளமை இன்பத்தை- அழகுடன் விளங்குபடியான யௌவநாவஸ்தையின் அழகை, இன்று- இப்போது, என்தன் கண்ணால் – என்னுடைய கண்களாலே, பருகுவேற்கு- பருகிக்கொண்டிருக்கும் எனக்கு, இவள் தாய் என நினைந்த- ‘இவள் என்னுடைய தாய்’ என்பதை மட்டும் அறியும்படியான,அளவு இல் பிள்ளைமை – அதி
சைசவப் பருவத்திலுண்டான, இன்பத்தை – ஆநந்தத்தை, இழந்த(அநுபாவிக்கப் பெறாதே)இழந்த, பாவியேன் எனது- பாவியான என்னுடைய, ஆவி – உயிரானது , நில்லாது – தரித்து நிற்காது.
வ்யா:- நாலாம் பாட்டு.(கலிநிலாவெழில் மதிபுரை முகமும்) செறிந்த நிலாவையுடைய பூர்ணசந்த்ரனைப் போலெ இருக்கிற திருமுகமும். (கண்ணனே திண்கை மார்வும் திண்டோளும்) கிருஷ்ணனே! சொல்லுகிற விலக்ஷணமாய்த் திண்ணியதாயிருக்கிற திருக்கையும் திருமார்பும் திருத்தோளும் . (தளிர் மலக்கருங்குழல் பிறையதுவும்)தளிரையும் மலரையுமுடைத்தாய் இருண்டிருக்கிற திருகுழலின் கீழே உந்நேயமான பிறைபோலே விளங்குகிற திருநெற்றியும். (தடங்கொள் தாமரைக்கண்களும்) ஒரு தாமரைப்பூவே தடாகமெல்லாம் விழுங்கும்படி அலர்ந்தாப்போலே திருமேனியெல்லாம் பரப்புமாறும்படி அலர்ந்த திருக்கண்ங்களும்.
அரு:- நாலாம் பாட்டு. (களிநிலாவித்யாதி). சொல்லுகிற- (37) “आयाताश्च “(ஆயதாஶ்ச)இத்யாதியாலே சொல்லுகிற என்றபடி.கண்ணனே – ஸம்புத்தி. 4.
5. மருவிநின் திருநெற்றியில் சுட்டியசைதர மணிவாயிடைமுத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும் வடிவுகண்டுகொண்டு உள்ளம் உள்குளிர
விரலைச்செஞ்சிறுவாயிடைச்சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும்பெற்றிலேன் எல்லாம் தெய்வநங்கை யசோதை பெற்றாளே.
பதவுரை:- நின் திருநெற்றியில் – உன்னுடைய திருநெற்றியிலே, மருவும் – பொருந்தி விளங்குகிற, சுட்டி- திருச்சுட்டியானது, அசை தர- அசையும்படி, மணி வாயிடை – அழகிய வாயினால், முத்தம் தருதலும் – முத்தத்தைக் கொடுப்பதென்ன, உன்தன் தாதையை போலும்- உன் தந்தையைப் போன்ற, வடிவு- (உன்) வடிவழகை, கண்டு கொண்டு – (நான்) அநுபவித்து, உள்ளம் உள் குளிர – உள்ளமானது உள்ளே குளிரும்படியாக, செம் சிறு வாயிடை – சிவந்த சிறிய திருவாயிலே,
விரலை சேர்த்து – திருவிரல்களை நுழைத்துக்கொண்டு, வெகுளியாய் நின்று – (நீ) சீற்றத்தோடே நிண்டு உரைக்கும் அவ்வுரையும் – சொல்லுகிற மழலைச் சொற்களென்ன ஆகிய இவைகளில், ஒன்றும் – ஒன்றையும், திரு இலேன் – பாக்ய மற்றவளான நான், பெற்றிலேன்- அநுபாவிக்கப் பெறவில்லை; தெய்வ நங்கை அசோதை- தேவமாது என்னலாம்படியான யசோதைப் பிராட்டி, எல்லாம் பெற்றாளே – (அந்த பால்ய சேஷ்டிதங்கள்) முழுவதும் அநுபாவிக்கப் பெற்றாள்.
வ்யா:- அஞ்சாம் பாட்டு. (மருவி நின் திருநெற்றியில் சுட்டியசைதர ) திருநெற்றியில் கூடப்பிறந்தாப்போலே இருக்கும் திருச்சுட்டியானது அசையும்படி. (மணிவாயிடை முத்தம்தருதலும்)அழகியவாயில் முத்தம்; அதரமுத்தம் கொடுத்தலும்.(உன்றன் தாதையைப்போலும் ) உன் தமப்பனைப்போலே. (வடிவுகண்டு கொண்டுள்ளமுள்குளிர)வடிவழகைக் கண்டுகொண்டு நெஞ்சமானது உள்குளிர.
(விரலைச்செஞ்சிருவாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்குமவ்வுரையும்) சிவந்து குவிந்திருந்துள்ள திருப்பவளத்திலே திருவிரலைச் சேர்த்துச் சீற்றத்தோடே நின்று சொல்லுகிற மழலைச் சொற்களும். (திருவிலேனித்யாதி) பால்யாவஸ்தையில் அநுபவங்களை அநுபவிக்க பாக்யஹீநையான நான் இழந்தேன். இழக்கைக்கு நானொருத்தி உண்டானாப்போலே அநுபவிக்கைக்கு இட்டுப்பிறந்த யசோதைப்பிராட்டி எல்லா பெற்றாளிறே. 5.
6. தண்ணந்தாமரைக்கண்ணனே! கண்ணா! தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடியாடிவந்து என்தன் மார்வில் மண்ணிடப்பெற்றிலேன்
அந்தோ!
வண்ணச்செஞ்சிறுகைவிரலனைத்தும் வாரிவாய்க்கொண்ட அடிசிலின்மிச்சில்
உண்ணப்பெற்றிலேன் ஓ! கொடுவினையேன் என்னைஎன்செய்யப் பெற்றது
எம்மோயே!
பதவுரை:- தண் அம் தாமரை கண்ணனே – குளிர்ந்த அழகிய தாமரைப்பூவைப்போன்ற திருக்கண்களையுடையவனே!, கண்ணா- கண்ணபிரானே!தவழ்ந்து – நீ தவழ்ந்து கொண்டு, எழுந்து- எழுந்திருந்து, தளர்ந்தது ஓர் நடையால்- தடுமாற்றத்துடன் கூடிய தளர்நடையினால், செம் மண் பொடியில்- சிவந்த புழுதிமண்ணிலே, ஆடி- விளையாடி, வந்து- (அக்கோலத்தோடே) வந்து, என்தன் மார்வில் – என் மார்பிலே, மன்னிட பெற்றிலேன்- நீ அணையும்படியான பாக்கியத்தை அடைந்திலேன், அந்தோ- என்னே என் தெளர்ப்பாக்கியம்! வண்ணம் செம் சிறு- அழகுடன் சிவந்து சிறிதான, கைவிரல் அனைத்தும் – திருவிரல்கள் எல்லாவற்றாலும், வாய்க்கொண்ட- வாரி அமுதுசெய்த, அடிசிலின்- ப்ரஸாதத்தினுடைய, மிச்சில் – சேஷத்தை, உண்ண பெற்றிலேன் – நான் சாப்பிடக் கொடுத்துவைக்கவில்லை; ஓ- ஐயோ!, எம்மோய் – என் தாயானவள், என்னை- என்னை, என் செய்ய- எதுக்காக, பெற்றது- பெற்றாளோ?
வ்யா:- ஆறாம் பாட்டு, (தண்ணம் தாமரைக்கண்ணனே)குளிர்ந்து அழகியதான தாரைப்பூப்போலே அலர்ந்த திருக்கண்களையுடைய க்ருஷணனே!(தவழ்த்தெழுந்து தளர்ந்ததோர்நடையால்)தவழ்ந்தெழுந்திருந்து நடக்கப்புகுவது தள்ளம்பாறுவதான தளர் நடையாலே. (மண்ணில் செம்பொடிஇத்யாதி) நிலப்பண்பாலே சிவந்த புழுதியை ஆடிவந்து அக்கோலத்தோடே என் மார்பிலே கட்டிக்கொண்டு கிடக்கப் பெற்றிலேன்.
(வண்ணச் செஞ்சிறுவித்யாதி)அழகியதாய்ச் சிவந்த திருவிரல்கள் அனைத்தாலும் வாரி அமுதுசெய்த சேஷத்தை உண்ணப் பெறாத மஹாபாபத்தைப் பண்ணினேன். (என்னையென் செய்யப் பெற்றதெம்மோயே) ராஜமஹிஷியாய் பிள்ளைகள் அளைந்த எச்சிலுண்ணாமைக்கோ எங்கள் தாயார் என்னைப்பெற்றது? “அமுதினுமாற்ற வினிதே தம் மக்கள் சிறுகையளாவிய கூழ்” “மக்கள் மெய்தீண்டலுடற்கின்பம் மற்றவர்தம் சொற்கேட்டலின்பம் செவிக்கு” – குறள் 6.
அரு :- ஆறாம் பாட்டு. (தண்ணமித்யாதி) ராஜமஹிஷிகள் பெற்றவுடனே புறம்பே வளர்க்க விடுகையாலே எச்சில் உண்ணார்கள். 6.
7. குழகனே! எந்தன்கோமளப்பிள்ளாய்!
கோவிந்தா! என் குடங்கையில்மன்னி
ஒழுகுபேரெழிலீலான்சிறுதளிர்போல்
ஒருகையால் ஒருமுலைமுகம்நெருடா
மழலைமென்னகையிடையிடையருளா
வாயிலேமுலையிருக்க என்முகத்தே
எழில்கொள் நின் திருக்கண்ணிணை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே.
பதவுரை:- குழகனே- எல்லோரோடும் கலக்கும் ஸ்வபாவத்தையுடையவனே! எந்தன் கோமளம் பிள்ளாய்- என்னுடைய அழகிற்சிறந்த குழந்தாய்!, கோவிந்தா – கோவிந்தனே!, என்- என்னுடைய, குடங்கையில் மன்னி- கையிலே பொருந்தி இருந்து, ஒழுகு பேர் எழில்- வெள்ளமிடும்படியான அழகையுடையதும், இள சிறு தளிர் போல்- மிகவும் ம்ருதுவான சிறிய தளிரைப் போன்றதுமான, ஒரு கையால்- ஒரு திருக்கையாலே, ஒரு முலை முகம்- ஒரு முலைக்காம்பை, நெருடா- நெருடிக்கொண்டும், முலை- மற்றொரு முலையானது, வாயிலே இருக்க- (உன்) திருவாயில் இருக்க, இடை இடை- நடு நடுவே, என் முகத்து- என் முகத்தைப் பார்த்து, மழலை மெல் நகை அருளா – புண் சிரிப்பாகச் சிரித்துக்கொண்டும், நின் திரு கண் இணை எழில்கொள் நோக்கம் தன்னை- உன் இரண்டு திருக்கண்களாலும் நீ கடாக்ஷிக்கிற அழகிய பார்வையையும், இழந்தேன் இழந்தேன் – ஐயோ! இழந்துவிட்டேனே.
வ்யா:- ஏழாம் பாட்டு. (குழகனேயென்றன் கோமளப்பிள்ளாய்) லோகயாத்ரையிலே அந்யபரையாய்த் தனக்கு முகம் கொடாதிருந்தால் லோகயாத்ரையைக் கைவிட்டு உன்னையே பார்க்க வல்லேனாம்படி கலக்கவல்லையாய், அதுதான் பொறாத ஶௌகுமார்யத்தை உடையவனே! (கோவிந்தா வென்குடங்கையில் மன்னி) கோஸம்ருத்தியையுடையவனே! என் கையிலேயிருந்து. (ஒழுகு பேரெழிலிளம் சிறுதளிர்போலொரு கையாளொரு முலைமுகம் நெருடா) அழகுவெள்ளம் படிந்தோடும்படியான தளிர்போலே இருக்கிற ஒரு திருக்கையாலே இவள் இரங்கி முலைகொடுக்கும்படி ஒரு முலைக்கண்ணை நெருடிக்கொண்டு.
(மழலைமென்னகையிடையிடையருளாவாயிலே முலையிருக்கவென்
முகத்தே) வாயிலே முலை இருக்கச்செய்தே முலை சுரக்கும்படியாக என் முகத்திலே இடையிடையே மழலைச் சிரிப்பாகச் சிரியா. ( எழில்கொள்நின் திருக்கண்ணிணை நோக்கம் தன்னையுமிழந்தேனிழந்தேனே) அதுக்கும் இரங்காரும் இரங்கும்படி அழகிய திருக்கண்களாலே பார்க்கிற பார்வையையும் பெற்றவன்றே போக விட்டதுக்கு மேலே இவ்வவஸ்த்தையில் சேஷ்டிதங்களையும் அநுபவிக்கப் பெற்றிலேன். 7.
8. முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ்சிறுத்தாமரைக்கையும்
எழில்கொள்தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண்தயிர்தோய்ந்தசெவ்வாயும்
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய்நெளிப்பதுவும்
தொழுகையும் இவைகண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே.
பதவுரை:- வெண்ணெய் – வெண்ணெயை, முழுதும்- குடத்திலுள்ளவளவும், அளைந்து – (கையினால்) அளைந்து, தொட்டு உண்ணும் – தொட்டுத் தொட்டு சாப்பிடுகிற, இள முகிழ் தாமரை சிறுகையும்- இளந்தளிர் போன்றதும் தாமரைப் பூவைப் போன்றதுமான சிறிய திருக்கைகளும், எழில் கொள் தாம்பு கொண்டு – அழகிய தாம்பாலே, அடிப்பதற்கு- அடிக்க(அதற்கு), எள்கு நிலையும்- பயந்து நிற்கும் நிலையும், வெண் தயிர் தோய்ந்த – வெளுத்த தயிருடன் கூடிய, செம் வாயும் – சிவந்த வாயும் , அழுகையும்- அழுவதும், அஞ்சி நோக்கும் அந் நோக்கும் – பயந்து பார்க்கிற அப்பார்வையும், அணி கொள் செம் சிறு வாய் நெளிப்பதுவும்- அழகிய சிவந்த திருப்பவளத்தை நெளிப்பதும், தொழுகையும் – அஞ்சலி செய்வதும் (ஆகிய), இவை – இவைகளை, கண்டா அசோதை – கண்டு அநுபவிக்கப்பெற்ற
யசோதைப்பிராட்டி, தொல்லை இன்பத்து – எல்லைகாணாத இன்பத்தின், இறுதி கண்டாள் – எல்லையைக் காணப் பெற்றாள்.
அவ:- எட்டாம் பாட்டு.(முழுதுமித்யாதி)நான் இழந்த இழவெல்லாம் யசோதைப்பிராட்டி பெற்றாள் என்கிறாள்.
வ்யா:- (முழுதும் வெண்ணெயளைந்து) வெண்ணெயிலுண்டான ஆதராதிசயத்தாலே திருக்கைகளை வெண்ணெய்க்குடத்திலே இட்டு அளையுமாய்த்து.(தொட்டுண்ணும்) அதிசாபலத்தாலே மாளுமென்று “விரலோடு வாய் தோய்ந்த”- முதல் திருவ (24) என்னுமாபோலே தொட்டுண்ணு மாய்த்து. (முகிழிளம் சிறுத்தாமரைக்கையும்) இளந்தளிர்போலேயும் இருக்கிற திருக்கைகளும்.(எழில்கொள்தாம்பு) “ஸ்பர்ஶிகைக்கு ஆசைப்பட்டிருக்கும் திருமேனியை ஸ்பர்ஶித்ததிறே’ என்று “எழில்கொள் தாம்பு” என்கிறார். “ராஜஜந்மம் வேண்டா; அசேதநமாக அமையும் அங்குத்தை ஸ்பர்ஶம் பெறில்” என்றிருக்குமவரிறே. (கொண்டடிப்பதற்கு எள்குநிலையும்) இவர் அங்குத்தை ஸ்பர்ஶத்தை நினைத்து எழில்கொள்தாம்பு என்கிறார். ஆகிலும் கைக்கெட்டிற்றொன்றையிட்டு அவள் அடிக்க, அதுக்கு ஈடுபட்டுப் பையாந்து நிற்கும் நிலையும். (வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்) ‘தயிர் களவு கண்டாய்’ என்று அடிக்கப்புக்கவாறே இல்லை செய்கைக்காக முகத்திலே பூசிக்கொள்ளுமே. வெளுத்த தயிரும் சிவந்த திருப்பவளமுமான பரபாகமிருக்கிறபடி.
(அழுகையும்) ‘இல்லை என்றிருக்கச்செய்தே களவை நாடுவதே நம்மை’ என்று அழுகையும்; அழப்புக்கவாறே, வாய்வான்னுமே.அத்தாலே பயப்பட்டு அச்சமெல்லாம் தன் நோக்கிலே தோற்றும்படி பார்த்துக்கொண்டு நிற்கும் நிலையும். (அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்)பின்னையும் அழாதிருக்கவும் மாட்டான். அழவும் மாட்டான். அழகிய திருப்பவளத்தை நெளிக்குமத்தனையிறே.(தொழுகையும்) போக்கற்றார் செய்யும் செயலிறே. ஸாபராதரானார்க்கு அபராதம் போக்குமது அஞ்ஜலி என்னுமிடம் தான் அறிந்திருக்குமதாகையாலே அஞ்ஜலியைப் பண்ணுமாய்த்து.
(இவைகண்டவசோதை) இவற்றை இங்கே ஸாக்ஷாத்கரித்துக்கண்ட யசோதைப்பிராட்டி, (தொல்லையின்பத்திறுதி கண்டாளே) பரமபதத்தில் நிரவதியான அநுபவத்தை ஸாவாதியாக்கினவளிறே. அங்கே சென்று எல்லாரும் தொழ இருக்குமவன் தான் தொழுகையாலே அபரிச்சிந்நமான அநுபவம் பரிச்சிந்நமாய்த்திறே. 8.
அரு:- (முழுதுமித்யாதி) வெண்ணெயைக் க முழுதாலும் அளைந்து. (தொல்லையின்பம்) தொல்லையானதாய், நிரவதிகமான இன்பம். ஸாவதி ஆவதெப்படி என்ன அருளுகிறார் (அங்கே சென்றித்யாதி). 8.
9. குன்றினால் குடைகவித்ததும் கோலக்குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விளவெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றிசேர்ப்பிள்ளை நல்விளையாட்டம் அனைத்திலும் அங்கு என்னுள்ளம்
உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேனடியேன் காணுமாறினி உண்டெனிலருளே.
பதவுரை:- குன்றினால் – கோவர்த்தன மலையை, குடை கவித்ததும்- குடையாகத் தரித்து நின்றதும், கோலம் – அழகாக, குரவை கோத்ததும் – ராஸக்ரீடை செய்ததும், குடமாட்டும் – குடக்கூத்தாடியதும், கன்றினால் விளவு எறிந்ததும் – கன்றாயிருந்த அஸுரனைக் கொண்டு விளாங்காயான அசுரனைக்கொன்றதும், காலால்- திருவடிகளாலே, காளியன் தலை – காளியன் என்னும் நாகத்தின் தலையை, மிதித்ததும் முதலா – துகைத்ததும் ஆகிய இவை முதலான, வென்றி சேர் -வெற்றியுடன் கூடிய, நல் பிள்ளை விளையாட்டுகள் எல்லாவற்றிலும், ஒன்றும் – ஒன்றையும், என் உள்ளம் உள் குளிர – என் உள்ளம் மகிழ்ந்து குளிரும்படியாக, அடியேன்- நான், அங்கு கண்டிட பெற்றிலேன்- திருவாய்ப்பாடியிலிருந்து காணப்பெறவில்லை; இனி- இப்போது, காணும் ஆறு – (நான்) காணும்படியான வழி, உண்டு எனில் – உண்டானால், அருள் – க்ருபை செய்து அருளவேண்டும்.
வ்யா:- ஒன்பதாம் பாட்டு.(குன்றினால் குடைகவித்ததும்)இடையரும் பசுக்களும் தொலையும்படியாக இந்த்ரன் கல்வர்ஷமாக வர்ஷித்தபடியாலே மலையை எடுத்துக் குடையாகத் திரித்ததும்.(கோலக்குரவை கோத்ததும்) தர்ஶநீயமான குரவைக்கூத்திலே ஸ்ரீகோபிமாரோடு ஓக்கத் தன்னையும் கோத்ததும்.(குடமாட்டும் கன்றினால் விளவெறிந்ததும்) ஒருவன் கன்றாய் ஒருவன் விளாவாய் வந்த இருவரையும் சேர முடித்ததுவும். (காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா) நான் ஆசைப்பட்டுப் பெறாத திருவடிகளைக் கொண்டு ஆஸூர ப்ரக்ருதியான காளியன் தலையிலே மிதித்ததும் முதலாக.
(வென்றிசேர்பிள்ளை நல்விளையாட்டம்) வீரப்பாட்டுக்கும் மௌக்த்த்யத்துக்கும் சேர்ந்திருக்கிற அதிமநோஹரமான. (அனைத்திலுமங்கென் னுள்ளமுள்குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேனடியேன்)இவை காண்கையே ப்ரயோஜநமாக இருக்கிற நான் ஒன்றும் காணப்பெற்றிலேன். (காணுமாறினியுண்டெனிலருளே) நீ நினைத்தால் செய்யவொண்ணாததில்லை. நான் இவை காணும்படி அருளவேணும். 9.
அரு:- ஒன்பதாம் பாட்டு. (குன்றினாலித்யாதி). (மநோஹரமான) வ்யாபாரமென்று பூரிப்பது. 9 10. வஞ்சமேவிய நெஞ்சுடைப்பேய்ச்சி வரண்டுநார்நரம்பெழக்கரிந்துக்க
நஞ்சமார்தருசுழிமுலை அந்தோ!சுவைத்து நீ அருள்செய்துவளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர்க்கருமுகிலெந்தாய்! கடைப்பட்டேன் வெறிதே முலைசுமந்து
தஞ்சமேலொன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்லதாயைப் பெற்றாயே.
பதவுரை:- வஞ்சம் மேவிய- வஞ்சனையுடன் கூடிய, நெஞ்சு உடை- மனஸ்ஸையுடையனான, பேய்ச்சி – பூதனையானவள், வரண்டு எழ – (உடம்பிலுள்ள மாம்ஸமும் ரத்தமும்) கொழித்துக் கொண்டு வெளியே புறப்படும்படியாகவும், நார் நரம்பு கரிந்து உக்க- நாரும் நரம்பும் கருகி உதிரும்படியாகவும், நஞ்சும் ஆர் தரு – மிகுந்த விஷத்தையுடையதும், சுழி முலை – தன்னிலே அகப்படுத்துவதுமான முலையை, நீ சுவைத்து அருள் செய்து- நீ உண்டருளி, வளர்ந்தாய்- வளரப்பெற்றாய்; அந்தோ- என்னே!, கஞ்சன் நாள் கவர்- கம்ஸனுடைய ஆயுளை அபஹரித்த, கரு முகில் எந்தாய்- நீலமேக ஶ்யாமளானே!, வெறிதே முலை சுமந்து- (நான்) வீணாக முலையைச்சுமந்து, கடைப்பட்டேன்-கீழாரிலும் கீழ்ப்பட்டவளானேன்; தஞ்சம் ஒன்று இலேன்- (உன்னை ஒழிய வேறு) புகலிடம் அற்றவளாக இருக்கின்றேன்; உய்ந்திருந்தேன்- (உன்னைக்காண)பிராணனைப் பிடித்துக்கொண்டு ஜீவித்திருக்கிறேன்; தக்கது – உனக்குத் தகுதியான, நல்ல தாயை- நல்ல தாயாரை, பெற்றாய்- அடைந்துவிட்டாய்.
வ்யா:- பத்தாம் பாட்டு. (வஞ்சமேவிய நெஞ்சுடைபேய்ச்சி)இவனைக்கண்டால் செவ்வியராக இருக்கவிறே கடவது; கண்டு வைத்து வஞ்சநத்திலே பொருந்தின பூதனை. (வரண்டு நார்நரம்பெழக்கரிந்துக்க) மாம்ஸமும் உள்ளுண்டான, உதிரமும் முலைப்பாலோடே கொழித்துக்கொண்டு புறப்பட, ஶேஷித்த உடம்பு நார்நரம்பும் தோலுமாம்படி கரிந்துக்க.(நஞ்சமார்தரு சுழிமுலையந்தோ சுவைத்து நீயருள் செய்துவளர்ந்தாய்) கிடந்த ஆஶ்ரயத்தையும் இழக்கவற்றாய் மிக்க நஞ்சை யுடைத்தாய் கோபத்தையுமுடைத்தாயிருக்கிற முலையை தாரகமாக உண்டருளி வளர்ந்தாய்.
(கஞ்சன்நாள் கவர்க்கருமுகிலென்த்தாய்) கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்து அத்தாலே ஏறின புகாரையுடைய வடிவையுடையையாய், அச்செயலாலும் வடிவழகாலும் என்னை எழுதிக்கொண்டவனே! (கடைப்பட்டேன் வெறிதேமுலைசுமந்து) முலைநெறித்தபோது உண்பானொரு பிள்ளையைப் பெற்றுவைத்துப் பெறாதே வ்யர்த்தமாயிருக்கையாலே எத்தைனையேனும் தண்ணியாரிலும் தாழ்ந்தேன். (தஞ்சமேலொன்றிலேன் உயர்ந்திருந்தேன்) வேறு தாரகரில்லாமையாலே ப்ராணன்களை வருந்தி தரித்திருந்தேன். (தக்கதே நல்லதாயைப்பெற்றாயே) முலைப்பால் அபேக்ஷிதமானபோது உனக்குத் தருகைக்கு நல்லதாயைப் பெற்றாயே. 10.
அரு:- பத்தாம் பாட்டு. (வஞ்சமித்யாதி). (கரிந்துக்க)கருகிப்போக. (சுளிமுலை) கோபத்தையுடைய முலை; அவளுக்கு உண்டாகையாலே முலைக்கும் உண்டென்றபடி. (தஞ்சமேல்) தஞ்சமாக; உன்னை ஒழிய வேறு தஞ்சமில்லாமை யாலே உன்னைக் காண வேணுமென்று தரித்திருந்தேன் என்றபடி. 10.
11. மல்லைமாநகர்க்கிறையவன்தன்னை வான்செலுத்தி வந்தீங்ஙன மாய்த்து
எல்லையில் பிள்ளைசெய்வனகாணாத் தெய்வத்தேவகி புலம்பியபுலம்பல்
கொல்லிகாவலன் மாலடிமுடிமேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல்லிசைத்தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே
பதவுரை:- மல்லை – மிகுந்த ஐஶ்வர்யத்தையுடைய, மாநகர்க்கு- பெரிய நகரமாகிய ஸ்ரீ மதுரைக்கு, இறையவன் தன்னை- அதிபனான கம்ஸனை, வான் செலுத்தி- வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி. வந்து- திருவாய்ப்பாடிக்கு வந்து, ஈங்ஙனம் – இம்மாதிரியாக, எல்லையில் மாயத்து பிள்ளை -எல்லையில்லாத ஆச்சர்ய சேஷ்டிதங்களைக் காணப்பெறாத, தெய்வத் தேவகி – தெய்வத்தன்மை பொருந்திய தேவகியானவள், புலம்பிய புலம்பல் – புலம்பிக்கொண்டு சொன்ன பாசுரத்தை, கொல்லி காவலன் – கொல்லி நகர்க்கு நிர்வாஹகராய், மால் அடி முடிமேல் கோலம் ஆம் – ஸர்வேஶ்வரனுடைய திருவடிகளைத் தம்முடைய தலையில் அலங்காரமாகச் சூடியுள்ளவரான, குல சேகரன்- குலசேகராழ்வார், சொன்ன – அருளிச்செய்த, நல் இசை – இனிமையான இசையையுடைய, தமிழ் மாலை – தமிழ்ப் பாட்டுகளை, வல்லார்கள்- ஓத வல்லவர்கள், ஒல்லை- சீக்கிரமாக, நாரணன் உலகு- பரமபதத்தை, நண்ணுவார்- அடைவார்கள்.
வ்யா:- நிகமத்தில், (மல்லைமாநகர்க்கிறையவன் தன்னை) மிக்க ஸம்பத்தையுடைய ஸ்ரீமதுரைக்கு நிர்வாஹகனான கம்ஸனைத் தான் கைதொட்டு முடிக்கையாலே வீரேஸ்வர்க்கத்திலே போகட்டு. ( வந்தீங்ஙனமாயத்தித்யாதி) கம்ஸவதம் பண்ணி இங்கே வந்து கிட்டின ஆஶ்சர்ய ஸேஷ்டிதங்களுக்கு அவதியின்றியிலே இருக்கிற கிருஷ்ணனுடைய பாலசேஷ்டிதங்கள் காணாமையாலே. (தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல்) இவன் ஸேஷ்டிதங்களை அநுபாவிக்கப்பெறாத இழவையுமுடையளாய் இவனைப் பிள்ளையாகப் பெறுகைக்கீடான பாக்யத்தைப் பண்ணின தேவகியார் புலம்பிய பாசுரத்தை.
“கொல்லி” என்கிற படைவீட்டுக்கு நிர்வாஹகரானவர்.(மாலடிமுடிமேல் கோலமாம் குலசேகரன்) ஸர்வேஶ்வரன் திருவடிகளைத் தமக்கு முடிமேல் மாலயாகவுடைய பெருமாள். (சொன்ன நல்லிசைத் தமிழ்மாலை வல்லார்கள்) அழகிய இசையோடு கூடின தமிழ்த்தொடை வல்லவர்கள். (நண்ணுவாரொல்லை நாரணனுலகே) இங்கே இருந்து அவதாரத்தில் ஏகதேஶத்தை அநுபாவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே உபயவிபூதி நாயகனைப் பரமபதத்திலே நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்கள். 11.
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஏழாம் திருமொழி முற்றிற்று.
*****
எட்டாம் திருமொழி: : மன்னுபுகழ் ப்ரவேசம்
அவதாரிகை:- “ தேவகியார் இழந்த இழவு மாத்ரமேயோ?ஸ்ரீகௌஸளையாராய்த்தான் காணப்பெற்றேனோ?” என்று, அஸ்ஸம காலத்தில் தாம் இழக்கையாலே அவள் அநுபவத்தைத் திருக்கண்ணபுரத்திலே அநுபவிக்கிறார்.
அரு:- மன்னுபுகழ் ப்ரவேசம். தேவகியார் இழந்த மாதர்மேயோ? ஸ்ரீகௌசலையார் அநுபவித்தாப்போலே அநுபவிக்கப்பெற்றேனோ என்றபடி.
1. மன்னுபுகழக் கௌசலைத்தன் மணிவயிறுவாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே!இராகவனே! தாலேலோ.
தன் – கௌஸலையாருடைய, மணி வயிறு- அழகிய வயிற்றிலே, வாய்த்தவனே – பிள்ளையாகத் திருவவதரித்தவனே! தென் இலங்கை கோன்- தெற்கு திக்கிலுள்ள இலங்கைக்கு இறைவனான இராவணனுடைய, முடிகள் – பத்துத் தலைகளையும், சிந்துவித்தாய்- (பாணங்களாலே) சிதறப் பண்ணினவனே! செம் பொன் சேர்- சிவந்த பொன்னால் செய்யப்பட்டதாய், கன்னி – அழிவற்றதாய், நல் – அழகியதாய், மா- பெரியதான, மதிள் – மதிள்களாலே, புடை சூழ்- சுற்றிலும் சூழப்பட்ட, கணபுரத்து- திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிறவனாய், என் கரு மணியே – எனக்கு கண்மணி போன்றுள்ளவனே! என்னுடைய இன் அமுதே- எனக்கு இனிமையான அம்ருதமானவனே!இராகவனே – ஸ்ரீராமனே!, தாலேலோ- (உனக்குத்)தாலாட்டு.
வ்யா:- முதற்பாட்டு.(மன்னுபுகழக் கௌஸலைதன் மணிவயிறு வாய்த்தவனே) “ஸர்வேஶ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் “ என்ற நிலைநின்ற புகழையுடைய ஸ்ரீகௌஸலையாருடைய அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளை ஆகப்பெற்றவனே!, (தென்னிலங்கைக்கோன் முடிகள் சிந்துவித்தாய்)லங்கைக்கு நிர்வாஹகனான ராவணனுடைய முடிகள் பத்தையும் திருச்சரங்களாலே சிதறப் பண்ணினவனே! இத்திருமொழியிறே ராமாவதாரத்தில் மிகை; ஆகையால் இச்சந்தை.
(செம்பொன்சேர்கன்னிநன் மாமதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே) அழிவில்லாத மதிளாலே சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே எனக்கு த்ருஷ்டிக்கு நிர்வாஹகனாய் நிற்கிறவனே!(என்னுடைய இன்னமுதே) தேவர்கள் அம்ருதம் போலன்றியே எனக்கு அம்ருதமானவனே.(இராகவனே தாலேலோ) தேவர்களுடைய அம்ருதம் உப்புச்சாறிறே; அதன்றிறே; இவருடைய அம்ருதம் இருக்கிறபடி. 1.
அரு:- முதற்பாட்டு. (மன்னித்யாதி) இத்திருமொழியில் ராமகுணம் மிக்கிருக்கையாலே ப்ரதாந ப்ரயோஜனம் ராவணவதமாகையாலே, “தென்னிலங்கைக்கோன்” என்கிற சந்தையை முந்துறச் சொல்லிற்று.
இதுக்கு “திருவவதரித்தவுடனே ராவண வதத்தைச் சொல்லுவானென்” என்று ஶங்கை கண்டு கொள்வது; அதின்மேலே இத்திருமொழியிறே என்கிற வாக்யம். கன்னியாகையாலே அழிவில்லாத மதிள் என்கிறது. 1.
2. புண்டரிகமலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச்சிலைவளைத்தாய்!
கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண்டிசையும் ஆளுடையாய்!இராகவனே! தாலேலோ.
பதவுரை:- புண்டரிகம் மலர் அதன்மேல் – (திருநாபியில் தோன்றின) தாமாரிப் பூவின் மேலே (ப்ரஹ்மாவைப் படைத்து அவன் மூலமாக), புவனி எல்லாம் படைத்தவனே- உலகங்களை எல்லாம் ஸ்ருஷ்டித்தவனே!, திண் திரலாள் தாடகைதன்- த்ருடமான பலத்தையுடைய தாடகையினுடைய, உரம் உருவ- பார்மை ஊடுருவிச்செல்லும்படி, சிலை வளைத்தாய் – வில்லை வளைத்து அம்பு எய்தவனே!, கண்டவர்- ஸேவித்தவர்கள், தம் மனம் வழங்கும் – தங்களுடைய மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுதியான, கணபுரத்து என் கருமணியே- திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருக்கிற நீல மாணிக்கமே!, எண் திசையும்- எட்டு திக்குகளில் உள்ளவர்களையும், ஆள் உடையாய் – அடிமையாகக் கொண்டவனே!,இராகவனே! தாலேலோ.
வ்யா:- இரண்டாம் பாட்டு.(புண்டரிகமித்யாதி) திருநாபீ கமலத்திலே லோகமெல்லாம் ஸ்ருஷ்டித்தவனே! (திண்டிறலித்யாதி) ஸ்ருஷ்டிக்குமதன்றியே, பயிரைச்செய்து களைபிடுங்குமாப்போலே ஆஸூரவர்க்கத்தைப் போக்கினபடி. திண்ணிய திரலையுடையளான தாடகை உரத்தை மறுபாடுருவ வில்லை வளைத்தவனே!
(கண்டவர் தம்மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே) கண்டவர்கள், நெஞ்சுகளைத் தாங்களும் இசைந்து கொடுக்கும்படி திருக்கண்ணபுரத்திலே நிற்கிறவனே! (எண்டிசையுமாளுடையாய் இராகவனே தாலேலோ) அவதாரத்தில் பிற்பாடரான எட்டு திக்கிலுள்ளாரும் வந்து வாழும்படி (பா – வழிபடும்படி) நின்றவனே! 2.
அரு:- இரண்டாம் பாட்டு. (புண்டரிகமித்யாதி)உரம்- உரஸ்ஸு. 2.
3. கொங்குமலிகருங்குழலாள் கௌசலை தன் குலமதலாய்!
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ.
பதவுரை:- கொங்கு மலி – பரிமளம் மிகுந்துள்ள, கரு குழலாள் – கறுத்த கூந்தலையுடையளான, கௌசலை தன் – கௌஸல்யா தேவியினுடைய, குலம் மதலாய் – குலத்துக்கு உத்தாரகனே!,தங்கு பெரு புகழ் – பெரும் கீர்த்தி பொருந்திய, சனகன் – ஜநக மகாராஜனுக்கு, திரு மருகா – மருமகனானவனே!, தாசரதீ – சக்ரவர்த்தி திருமகனே!, கங்கையிலும் – கங்கா நதியிலும், மலி தீர்த்தம்- பரிசுத்தம் மிக்குள்ள தீர்த்தங்களையுடைய, கண புரத்து- திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற, என் கருமணியே!–, எங்கள் குலம் – எங்கள் ராஜவம்சத்திற்கெல்லாம், இன் அமுதே –பரம் போக்யமான அம்ருதம் போன்றவனே!, இராகவனே! தாலேலோ–.
வ்யா:- மூன்றாம் பாட்டு. (கொங்குமலி கருங்குழலாள் கௌசலைதன் குலமதலாய்) மிக்க பரிமளத்தைப் புறப்படவிடுகிற இருண்டகுழலையுடைய ஸ்ரீகௌஸலையாருடைய குலத்துக்கு உத்தாரகனானவனே! (தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா) புகழென்று பிறந்தவையெல்லாம் தங்கும்படி பெரிய புகழையுடைய ஸ்ரீஜநகராஜனுக்கு மருமகனானவனே.,(தாசரதீ) அவனோடே ஸத்ருஶஸம்பந்தம் பண்ணலாம்படியான பிறப்பையுடையவனே!
(கங்கையிலுந்தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே) காதாசித்த ஸம்பந்தத்தால் வரும் ஶுத்தியோகமிறே கங்கைக்குள்ளது; ஸம்பந்தம் நித்யமாகையாலே அதிலும் ஶுத்திமிக்கிருக்கிற திருப்பொய்கையையுடைய திருக்கண்ணபுரத்திலே ஸுலபனானவனே!(எங்கள் குலத்தின்னமுதே இராகவேனே தாலேலோ)ராஜவம்ஶத்துக்காக போக்யபூதனானவனே! 3.
அரு:- மூன்றாம் பாட்டு. (கொங்குமலியித்யாதி) (மதலை) பிள்ளை. 3.
4. தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே! தயரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்களிசைபாடும் கணபுரத்து என் கருமணியே!
ஏமருவெஞ்சிலைவலவா! இராகவனே!தாலேலோ.
பதவுரை:- தாமரை மேல் – திருநாபிக் கமலத்திலே, அயன் அவனை – பிரமனை, படைத்தவனே- உண்டாக்கினவனே!, தயரதன் தன- தசரதனுடைய, மா மதலாய் – மூத்த குமாரனே!, மைதிலி தன் மணவாளா – பிராட்டியின் மணவாளனே!, வண்டு இனங்கள்- வண்டுகளின் கூட்டங்கள், காமரங்கள் இசை பாடும் – காமரம் என்னும் இசையைப் பாடும்படியான, கணபுரத்து என் கருமணியே- , ஏ மருவு -(பிடிப்பவர் எவரையும்) எய்கையிலே தூண்டும்படியான, வெம் சிலை வலவா – பயங்கரமான ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லை ஆளவல்லவனே!இராகவனே! தாலேலோ-.
வ்யா:- நாலாம் பாட்டு. (தாமரைமேலயனவனைப் படைத்தவனே) கீழ்ச்சொன்ன ஸ்ருஷ்டி பின்னாட்டினபடி .(தயரதன் தன் மாமதலாய்)அறுபதினாயிரமாண்டு மலடு நின்ற சக்ரவர்த்தியினுடைய மலடு தீர பிறந்தவனே!(மைதிலித்தன் மணவாளா) பிள்ளைபெற்ற ஏற்றத்தின் மேலும், பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே, (19) “ यस्य सा जनकात्मजा “ (யஸ்ய ஸா ஜநகாத்மஜா) என்று பிராட்டியை உனக்கென்று இட்டுப்பிறந்த மேன்மையை உடையவனே!
(வண்டினங்கள் காமரங்களிசைபாடும் கணபுரத்தென் கருமணியே) வண்டினங்கள் “காமரம்” என்கிற பண்ணிலே இசை பாடுகிற திருக்கண்ணபுரத்திலே ஸந்நிஹிதனானவனே. (எமருவெஞ்சிலைவலவா இராகவனே தாலேலோ) ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மூட்டும் ஸ்ரீ சாரங்கத்தை உன்நினைவிலே வரும்படி செலுத்த வல்லவனே. 4.
அரு:- நாலாம் பாட்டு. (தாமரையித்யாதி). (பிள்ளைபெற்ற) ப்ரஹ்மாவைப் பெற்ற . (ஏவிலே) எய்கையிலே. 4.
5. பாராளும் படர்செல்வம் பரதநம்பிக்கேயருளி
ஆராவன்பிளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரைமார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என்தாசரதீ! தாலேலோ.
பதவுரை:- பார் ஆளும் படர் செல்வம் – பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய லக்ஷ்மியை, பரதன் நம்பிக்கே- குணம் நிறைந்த பரதாழ்வானுக்கே, அருளி- கொடுத்தருளி, ஆரா அன்பு இளையவனோடு- குறைவற்ற அன்பையுடைய இளையபெருமாளோடு கூட, அரு கானம் அடைந்தவனே – ஒருவராலும் ப்ரவேசிக்கவொண்ணாத காட்டுக்கு எழுந்தருளியவனே!, சீர் ஆளும் வரை மார்பா- வீரலக்ஷ்மிக்கு இருப்பிடமான மலை போன்ற திருமார்பை உடையவனே!, திரு கண்ணபுரத்து அரசே- , தார் ஆளும் நீள் முடி- மாலையோடு கூடிய நீண்ட திருமுடியையுடைய, என் தாசரதீ – என் இராமனே!, தாலேலோ- .
வ்யா:- அஞ்சாம் பாட்டு. (பாராளும் படர்செல்வம் பரத நம்பிக்கேயருளி) பூமிப்பரப்படைய ஆளக்கடவதான பெரிய ஸம்பத்தை பாரதந்த்ர்ய குணங்களால் பூர்ணனாயிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கே அருளி.(ஆராவன் பிளையவனோடருங்கானமடைந்தவனே) அவனைப் போலே நியமித்தவிடத்தில் பிரிந்திருக்க மாட்டாதே, (38) “कुरुष्व मां” (குருஷ்வ மாம்) என்னும் இளையபெருமாளோடே கூடி ஒருவராலும் இயங்கவொண்ணாத துஷ்டஸத்வப்ரசுரமான காட்டிலே ப்ரவேஶித்தவனே!
(சீராளும் வரைமார்பா) வீர ஸ்ரீக்கு நிர்வாஹகனானதுவும், (தாராளும் நீண்முடியென்தாசரதீ தாலேலோ) ஆதிராஜ்யஸூசகமான மாலையோடு கூடின முடியையுடைய சக்ரவர்த்தித் திருமகனே! 5.
6. சுற்றமெல்லாம்பின்தொடரத் தொல்காணமடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்திநகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்து என் கருமணியே!
சிற்றவைதன் சொற்கொண்ட சீராமா! தாலேலோ.
பதவுரை:- சுற்றம் எல்லாம் பின் தொடர- எல்லா பந்துக்களும் பின் தொடர்ந்து வர. தொல் கானம் அடைந்தவனே – பழமையான காட்டிற்கு எழுந்தருளியவனே! அற்றவர்கட்கு- உனக்கு என்று அற்றுத் தீர்ந்த பக்தர்களுக்கு, அரு மருந்தே – சிறந்த மருந்து போன்றவனே!, அயோத்தி நகர்க்கு அதிபதியே – திருவயோத்திக்கு அதிபதியே!, கற்றவர்கள் தாம் வாழும்- கற்றுணர்ந்த ஞானிகள் வாழும்படியான, கணபுரத்து என் கருமணியே- திருக்கண்ணபுரத்திலுள்ள நீளமாணிக்கமே!, சிற்றவை தன் – சிறிய தாயாகிய கைகேயினுடைய, சொல் கொண்ட சீராமா- சொல்லுக்குக் கீழ்படிந்த ஸ்ரீராமபிரானே!, தாலேலோ–.
வ்யா:- ஆறாம் பாட்டு. (சுற்றமெல்லாம் பின் தொடரத்தொல்கான மடைந்தவனே) “எல்லாரும் போனார்களோ, சிறிதிடம்போய் மீண்டாரென்றன்றோ சொல்லிற்று?” என்ன; (21) “ अहं सर्वं करिष्यामि” (அஹம் ஸர்வம் கரிஷ்யாமி) என்று சொன்ன எல்லா அடிமையும் செய்யும் இளையபெருமாள் கூடிப்போகையாலே எல்லா பந்துக்களும் கூடப்போனார் களாய்த்திறே என்று எம்பெருமானார் அருளிச்செய்தார். (அற்றவர் கட்கருமருந்தே) (39) “ गर्भभूतास्तपोधना:” (கர்ப்பபூதாஸ்தபோதநா:) என்றிருக்குமவர்களுக்கு. (அருமருந்தே) (40) “अप्यहं जीवितं जह्यां “ (அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்) என்றிருக்கும் அருமருந்தானவனே. (அயோத்தி நகர்க்கதிபதியே) பரமபதம்போலே அயோத்யையிறே இதுக்குப்பேர்; அப்படிப்பட்ட படைவீட்டுக்கு அதிபதியானவனே.
(கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே) கற்பது ஒரு தேஶத்திலே இருந்து ஒருகாலத்திலேயாய் ப்ராப்யவஸ்துவைக்கிட்டி அநுபவிப்பது ஒரு தேஶவிஶேஷத்திலே ஆகாமே, ப்ராப்யவஸ்து தெற்குத் திக்கிலே காணலாம்படி திருக்கண்ணபுரத்தில் நின்றவனே. (சிற்றவைதன் சொல்கொண்ட சீராமாதாலேலோ) பெட்ரா தாயான நான் உம்மைப் பிரியில் தரியேனென்று ஸ்ரகௌஸலையார் பின்தொடரச் செய்தேயும் மாற்றுதாயான
கைகேஶி சொல்லு மாறாதே வனத்தே போந்தவனே. 6.
அரு:- ஆறாம் பாட்டு.(சுற்றமித்யாதி) திருக்கண்ணபுரம் அயோத்தி நகர்க்குத் தெற்காகையாலும் மண்டலந்தான் தென்மண்டலமாகையாலும் தெற்குத் திக்கென்று வ்யாக்யாதாவின் வார்த்தை. (அவை) தாயார். 6.
7. ஆலினிலைப்பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக்கொன்று அரசு இளையவானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணிகரையலைக்கும் கணபுரத்து என்கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.
பதவுரை:- அன்று – ப்ரளயம் வந்த அன்று, ஆலின் இலை- ஓர் ஆலந்தளிரிலே, பாலகன் ஆய் – குழந்தை வடிவாய், உலகம் – எல்லா லோகங்களையும், உண்டவனே-திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தவனே!,வாலியை கொன்று- வாலியை வாதம் செய்து, இளைய வானரத்துக்கு – அவன் தம்பியான ஸுக்ரீவனுக்கு,அரசு அளித்தவனே – ராஜ்யத்தைக் கொடுத்தவனே!, காலின் – காற்றானது, மணி கரை அலைக்கும் – (ஸமுத்திரத்திலுள்ள) மணிகளைக் கரையிலே கொண்டுவந்து எறியும்படியான, கணபுரத்து என் கருமணியே -, ஆலி நகர்க்கு – திருவாலி நகருக்கு, அதிபதியே- நிர்வாஹகனே!, அயோத்தி மனே- அயோத்தியின் மன்னனே! தாலேலோ- ,
வ்யா:- ஏழாம் பாட்டு. (ஆலினிலைப்பாலகனாயன்றுலகமுண்டவனே) லோகத்தையெல்லாம் திருவயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலிலையிலே அதுதான் விஞ்சுமென்னும்படி கண்வளர்ந்தருளின அகடிதகடநா ஸாமர்த்யத் தையுடையவனே! (வாலியைக் கொன்றரசிளைய வானரத்துக் களித்தவனே) வாலி, ஆரைத்துணையாக நீ விஜயம் பண்ணின ராவணனை வாழியே கட்டி வைத்தான்?அவ்வாலியைக் கொன்று அவனுக்கு இடைந்து பர்வதகுஹை களிலேகிடக்கிற மஹாராஜர்க்கு வாநர ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
(காலின்மணியித்யாதி)காற்றாலே உள்ளுக்கிடக்கிற ரத்நங்களைக் கரையிலே ஏறிடுமென்னுதல்; கால்வாய்களில் மணிகளைக் கொடு வந்து கரையிலே ஏறிடுமென்னுதல்.(ஆலிநகர்க்கதிபதியே)திருவாலிக்கு நிர்வாஹகனானவனே! வாலியைக்கொன்று ஆலிதன்னைத் துணையாகக் கொள்ளப்பெற்றதே! 7.
அரு:- ஏழாம் பாட்டு. (ஆலினிலையித்யாதி ) (ஆரைத்துணையாக) என்றதுக்குத் தாத்பர்யம், “ஒரு துணையின்றிக்கே ராவணனை வாலிலே கட்டின வாலியைக் கொன்ற தேவரீர் ராவணவதார்த்தமாக வாலிக்கு இடைந்த மஹாராஜரைத் துணையாக வரித்ததென்?” என்று ஈடுபாடு. (உள்ளுக்கிடக்கிற) ஸமுத்ரத்துக்குள்ளே கிடக்கிற. (கால்வாய்) ஸமுத்ரக்கழி.(ஆலிதன்னை) திருவாலிதன்னைத் துணையாக என்று ரஸோக்தி. 7.
8. மலையதனால் அணைகட்டி மதிளிலங்கையழித்தவனே!
அலைகடலைக்கடைந்து அமரர்க்கு அமுதருளிச்செய்தவனே!
கலைவலவர்தாம் வாழும் கணபுரத்து என்கருமணியே!
சிலைவலவா! சேவகனே! சீராமா! தாலேலோ.
பதவுரை:- மலை அதனால் ஆணை கட்டி- மலைகளைக்கொண்டு ஸேதுபந்தனம் பண்ணி, மதில் இலங்கை அழித்தவனே- அரணையுடைய இலங்காபுரியை அழித்தவனே!, அலை கடலை கடைந்து – அலையெறியும்படியான கடலைக் கடைந்து, அமரர்க்கு- தேவர்களுக்கு, அமுது அருளிச்செய்தவனே-அம்ருதத்தைக் கொடுத்தருளியவனே! கலை வலவர் தாம் வாழும் – எல்லா சாஸ்த்ரங்களையும் கற்றுணர்ந்த பெரியார்கள் வாழ்கிற, கணபுரத்து என் கருமணியே!-; சிலை வலவா-ஸ்ரீசார்ங்கத்தை வளைப்பதில் தேர்ந்தவனே!, சேவகனே- வீரனே!, சீராமா! தாலேலோ- .
வ்யா:- எட்டாம் பாட்டு. (மலையதனாலணைகட்டி மதிளிலங்கையழித்தனே) நிலத்திலே (பா- ஜலத்திலே ஆழக்கடவ) வர மலையைக்கொண்டு அரணான கடலில் அணையாகக்கட்டி; நீர்தானும் மிகை என்னும்படியான அரணையுடைத்தான லங்கையை முலையடியே வழி போக்கினவனே! (அலைக்கடலைக்கடைந்தமரர்க்கமுதருளிச் செய்தவனே)அகாதமான ஸமுத்ரத்தைக் கடைந்து அம்ருதத்தை வாங்கி, அஸுரர்கள் கையிலே தேவர்கள் சாவாதபடி, அவர்களுக்குக் கொடுத்தவனே!
(கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே) ஸகல வித்யாஸ்தலங்களும் கைவந்திருக்குமவர்கள் உன்னை அநுபாவிக்கும் திருக்கண்ணபுரத்திலே ஸந்நிஹிதனானவனே! (சிலைவலவா)ஸ்ரீஶார்ங்கம் கைவந்திருக்குமவனே. (சேவகனித்யாதி) அதுதான் மிகை என்னும்படியான வீரப்பாட்டை உடையவனே! 8
அரு:- எட்டாம் பாட்டு. (மலையித்யாதி) (நிலத்திலே வர)நிலத்தொடுக்க. 8.
9. தளையவிழும்நறுங்குஞ்சித் தயரதன்தன் குலமதலாய்!
வளைய ஒருசிலையதனால் மதிளிலங்கையழித்தவனே!
களைகழுநீர்மருங்கலரும் கணபுரத்து என்கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே தாலேலோ.
பதவுரை:- தலை அவிழும் நறுங்குஞ்சி – கட்டு அவிழும்படியானதாய் நறுநாற்றம் கமழுமதான மயிர்முடியையுடையவனாய், தயரதன் தன்- தசரதசக்ரவர்த்தியுடைய, குலம் மதலாய்- குலத்துக்கு உத்தாரகனானவனே!, ஒரு சிலை வளைய- ஒப்பற்ற வில்லானது வளைய, அதனால்- அந்த வில்லினால், மதிள் இலங்கை அழித்தவனே-; களை கழுநீர் – களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர் புஷ்பங்கள், மருங்கு அலரும்- சுற்றலும் மலரும்படியான, கணபுரத்து என் கருமணியே!- இளையவர்கட்கு – தம்பிகள் விஷயத்தில், அருள் உடையாய்- மிகுந்த அன்பு பொருந்தியவனே!, இராகவனே! தாலேலோ-.
வ்யா:- ஒன்பதாம் பாட்டு. (தலையவிழுமித்யாதி) கட்டு அவிழும்படியான நறு நாற்றத்தையுடைய மயிர்முடியையுடைய சக்ரவர்த்தி குலத்துக்கு உத்தாரகனானவனே. (வளையவொருசிலையித்யாதி) ப்ரஹ்மாஸ்த்ராதிகளும்
வாய்மடியும் ஊரை மநுஷ்யத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே அழியச் செய்தவனே!
(களைகழுநீரித்யாதி) களையாகப்பறித்துக் கரையிலே போகட்ட செங்கழுநீர்கள், போகட்ட இடங்களிலே கிடந்து தன்னிலத்தில் அலருமாப்போலே
செவ்வி பெற்று அலறும் திருக்கண்ணபுரம்.(இளையவர்களித்யாதி)தம்பிமார்க்கு உறுப்பாகாதபோது என் ப்ராணன்களும் எனக்கு வேண்டாவென்னுமவரிறே. 9.
10. தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடிவணங்க அரங்கநகர்த்துயின்றவனே!
காவிரி நல்நதிபாயும் கணபுரத்து என்கருமணியே!
ஏவரிவெஞ்சிலைவலவா! இராகவனே!தாலேலோ.
பதவுரை:- தேவரையும் – தேவர்களையும், அசுரரையும் – (அவர்களுக்கு பிறவு சத்ருக்களான) அஸுரர்களையும், திசைகளையும் படைத்தவனே – பல திக்குகளிலுள்ள உலகங்களையும் ஸ்ருஷ்டித்தவனே!, யாவரும் வந்து அடி வணங்க- எல்லா ஜீவராசிகளும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக, அரங்கம் நகர்- ஸ்ரீரங்கத்திலே, துயின்றவனே- கண்வளர்ந்தருளுமவனே!, காவிரி நல் நதி பாயும்- நன்மையைப் பயக்கும் காவேரி நதியானது பாயும்படியான, கணபுரத்து என் கருமணியே- , எவரிவெம் சிலை வலவா – எய்கையிலே மூட்டுவதாய், அழகியதாய், (சத்ருக்களுக்கு) பயத்தை விளைவிப்பதாயுள்ள வில்லை ஆளவல்லவனே!, இராகவனே! தாலேலோ- .
வ்யா:- பத்தாம் பாட்டு. (தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே) ஸஹஜஶத்ருக்களான தேவாஸுரர் முதலான பதார்த்தங்களையும் இவர்களுக்கு அவகாஶப்ரதானம் பண்ணும் தேஶங்களையும் ஸ்ருஷ்டித்தவனே! (யாவரும் வந்தடிவணங்க அரங்க நகர்த்துயின்றவனே) ஸ்ருஷ்டி ப்ரயோஜநமெல்லாம் தன்னை ஆஶ்ரயிக்கைக்கிறே; இதுக்காகக் கோயிலிலே வந்து கண்வளர்ந்தருளினவனே!
(காவிரி நன்னதிபாயுங் கணபுரத்தென் கருமணியே) ஒருவர் ஏற்றி பாய்ச்ச வேண்டாதபடி தானே வந்து எங்கும் பறக்கும் காவேரியையுடைய திருக்கண்ணபுர த்திலே ஸுலபனானவனே! (ஏவரிவெஞ்சிலைவலவா இராகவனே) ஏவிலே மூட்டக்கடவதாய் தர்ஶநீயமாய்ப் பிடித்த பிடியிலே ஶத்ருக்கள் மண்ணுண்ணும்படியான ஸ்ரீஶார்ங்கத்தை உன் கருத்திலே நடத்த வல்லவனே 10.
11. கன்னிநன் மாமதிப்புடைசூழ் கணபுரத்து என்காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோவென்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக் குலசேகரன்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே.
பதவுரை:- என் காகுத்தன் தன் அடிமேல் – என்னுடைய சக்ரவர்த்தித் திருமகன் விஷயமாக, தாலேலோ என்று உரைத்த- (ஸ்ரீ கௌஸல்யை) தாலாட்டாகச்சொன்ன பாசுரங்களை, கோல் நவிலும் வேல் வலவன்- கொலைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வேலையுடையரான, குடை குலசேகரன்- வெண்கொற்றக்குடையையுடைய குலசேகராழ்வார், கன்னி நல் மாமதிள் புடைசூழ் கணபுரத்து – அழியாததும் சிறந்ததும் அழகியதும் பெரியவையுமான மதில்களால் நாற்புறமும் சூழப்பெற்ற திருக்கண்ணபுரத்திலே, சொன்ன – அருளிச்செய்த, பன்னிய – பரம்பியதாய், நூல் – விலக்ஷணமாய், வல்லார் – அப்யஸிக்கவல்லவர்கள், பாங்கு ஆய பத்தர்கள்- அவனை அநுபாவிக்கத் தகுந்த பக்தர்கள் ஆவர்.
வ்யா:- நிகமத்தில். (கன்னி நன்மாமதிள் புடைசூழித்யாதி) அழியாத பெரிய திருமதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே நின்றருளின க்ருஷ்ணனையன்றியிலே சக்ரவர்த்தித் திருமகனையாய்த்துக் கவி பாடிற்று. (தன்னடிமேலித்யாதி) சக்ரவர்த்தித் திருமகனுடைய பால்யாவஸ்தையில் ஸ்ரீகௌஸலையார் சொன்ன பாசுரத்தைத் திருக்கண்ணபுரத்திலே சொன்ன தமிழ்த்தொடை.
(கொன்னவிலும் வேல்வலவன் குடைக்குலசேகரன்சொன்ன)வேலைப்பிடித்த பிடியிலே எல்லாரும் “வேலின் கொடுமையே!” என்று சொல்லாநின்ற வேலையும் ஐஶ்வர்ய ப்ரகாஶகமான வெண் கொற்றக் குடையையுமுடைய ஸ்ரீகுலஶேகரபெருமாள் அருளிச்செய்த.(பன்னியநூல் பத்தும்வல்லார்) பரம்பின, லக்ஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள், திருத்தாயாராயும் அடியாராயும் அநுபவிக்கப் பெறுவர்கள். 11.
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
எட்டாம் திருமொழி முற்றிற்று.
ஒன்பதாம் திருமொழி: : வன்றாளினிணை ப்ரவேசம்:-
அவ:- ஸ்ரீகௌஸலையார் பெற்ற பேற்றை அநுபவித்தார் கீழில் திருமொழியில்; பால்யாவஸ்தையெல்லாம் அநுபவித்து ப்ராப்தயௌவநரானவாறே அநுபவிக்கப்பெறாதே இழந்த சக்ரவர்த்தியோபாதியும் தமக்கு ப்ராப்தி ஓத்திருக்கையாலே அநுபவிக்கப் பெறாதே இழந்தேனென்று அவன் சொல்லுகிற பாசுரத்தாலே தம்மிழவைப் பேசுகிறார் இதில்.
- வன்தாளினிணைவணங்கிவளநகரம் தொழுதேத்த மன்னனாவான்
நின்றாயை அரியணைமேலிருந்தாயை நெடுங்கானம்படரப்போகு
என்றாள் எம்இராமாவோ!உனைப்பயந்த கைகேசி தன்சொற்கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன்மகனே!உன்னைநானே.
பதவுரை:- எம் இராமாவோ – எங்கள் இராமனே! வல் தாளின் இணை வணங்கி – (தஞ்சமடைந்தவர்களைக் கைவிடாமல் காக்கும்) வலிமை பொருந்திய நாராயணனுடைய இரு திருவடிகளிலும் (நீ) விழுந்து வழிபட்டு, வளம் நகரம்- வளம்பொருந்திய அயோத்திமக்கள், தொழுது ஏத்த – கைகூப்பித்துதித்து நிற்கும்படியும், மன்னன் ஆவான் நின்றாயை- அரசனாக திருவபிஷேகம் செய்து கொள்ளும்படியும் நின்றவனும், அரி அணை மேல் இருந்தாயை- சிம்ஹாசனத்தின் மீது ஏற ஸித்தனாயிருந்தவனுமான உன்னை, நெடும் கானம் படர போகு என்றாள்- ‘ புகவரிய காட்டிற்கு போ’ என்று (கைகேயி) கூறினாள்; நாள் மகனே- என் சொல் தவறாது நடக்கும் புத்திரனே!, நான் – ( தசரத சக்ரவர்த்தியாகிய) நான், உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு – உன்னைப்பெற்ற கைகேயியின் வார்த்தையைக் கேட்டு, நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்- வெகு அழகாக உன்னை இப்பூமியை ஆளும்படி செய்தேன்.
வ்யா:- முதற்பாட்டு.(வன்றளினிணைவணங்கி) தானும் ராஜ்யப்பரப்பையெல்லாம் ஆண்டானாயிருக்கச்செய்திதே, அவ்வளவன்றியே,
”வன்புகழ்நாரணன் திண்கழல்” – திருவாய் (1-2-10) என்னுமாப்போலே ஆஶ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன்’ என்னும் திருவடிகளை வழிப்பட்டு. (வளநகரம் தொழுதேத்த)திருவபிஷேகத்துக்கு அலங்கரித்திருக்கிற திருநகரியிலே, அப்படி இருக்கிற திருநகரி தொழுதேத்த. (மன்னனாவான் நின்றாயை) திருவபிஷேகத்துக்கு முப்புள்ள கர்த்தவ்யங்களெல்லாம் தலைக்கட்டித் திருவபிஷேகம் பண்ணுகைக்குத் திருக்காப்பு நாண்சாத்தி நிற்கிற உன்னை.
(அறியணைமேலிருந்தாயை) ஸிம்ஹாஸநத்திலே பதஸ்தனாயிருந்தான் என்னும்படி தோற்றச் சமைந்திருக்கிற உன்னை (நெடுங்கானம் படரப்போகுவென்றாள்) இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புகமாட்டாத காட்டை.(41) “ ते वनेन वनं गत्वा “( தி வநேந வநம் கத்வா) என்னுமாப்போலே இவ்வூரில் நின்றும் புறப்பட்டு வழியேபோய்க் காட்டிலே புகும்தன்றியே காட்டில் நின்றும் காட்டிலேயே போம்படியாய், நெடிய காட்டிலேயிறே போகச்சொல்லிற்று.
(எம்மிராமாவோ) நினைக்கவும் சொல்லவும் காணவும் தாபம் போம்படியான உம்மையிறே போகச்சொல்லிற்று. (உனைப்பயந்த கைகேசிதன் சொல்கேட்டு)திருவபிஷேக கல்யாணவார்த்தை ஸ்ரீகௌஸலையாரிலும் காட்டில் தனக்கு நான் சென்று சொல்லி ப்ரீதி காணவேணுமென்னும்படி பெட்ரா தாயாய்ப்போந்த கைகேயி வார்த்தை கேட்டு.
(நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்) வஞ்சநபரை என்று அறியாதே தாயென்று இவளுக்கு வார்த்தை சொல்லப்புகுந்து அவள் வார்த்தையிலே அகப்பட்டு பூமிப்பரப்பை எல்லாம் அழகியதாக உன்னை ஆள்வித்தேன்.(நன்மகனே உன்னைநானே) நான் இப்படி செய்தவிடத்திலும் நீர் குணாதிகராம்படி நின்றீர்,நான் நானாம்படி செய்தேனிறே. 1.
அரு:- முதற்பாட்டு(வன்றாளித்யாதி) வந்தாளிணை – வலியதான திருவடிகள். 1.
1.வெவ்வாயேன் வெவ்வுரைக்கேட்டு இருநிலத்தை வேண்டாதே விரைந்துவென்றி
மைவாயகளிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமேமேவி
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்புபோக
எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என்செய்கேனே!
பதவுரை:- எம் இராமாவோ!-, வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு – கொடிய வாயையுடைய என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு, இரு நிலத்தை வேண்டாதே- பெரிய பூமியை ஆள்வதை விரும்பாமல் விட்டு, விரைந்து- வெகு விரைவில், வென்றி மை வாய களிறு ஒழிந்து- வெற்றி தருவதும் அஞ்சநகிரி போல் பெரிய வடிவையுடையதான யானையை விட்டும், தேர் ஒழிந்து – திருத்தேரை விட்டும், மா ஒழிந்து – குதிரையை விட்டும், வனமே மேவி- காட்டை அடைந்து, நெய் வாய வேல் நெடும் கண் நேரிழையும் – நெய்பூசப்பட்ட முனையையுடைய வேலாயுதம் போன்ற நீண்ட கண்களையும், தகுந்த ஆபரணங்களையுமுடையளான பிராட்டியும், இளங் கோவும் – இளைய பெருமாளும், பின்பு போக- பின் தொடர்ந்துவர, எவ்வாறு நடந்தனை – (கால்நடை நடந்தறியாத) நீ எப்படி நடந்து சென்றாயோ? எம் பெருமான் – என் ஸ்வாமியே!, என் செய்கேன்- நான் என்ன செய்வேன்?
வ்யா:- இரண்டாம் பாட்டு . (வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு) அநலாஸ்யனான என்னுடைய “காட்டேறப்போம், ராஜ்யத்தைத் தவிரும்” என்ற என் வார்த்தையைக் கேட்டு. (இரு நிலத்தை வேண்டாதே) “உம்மைப் பிரியில் முடிவோம்” என்று வளைப்புக்கிடக்கிற நகரஜநங்களை எல்லாம் ஒழித்து அவர்களைக் கைவிட்டு,(விரைந்து) “போகிறோம்” என்று விளம்பிப்போமாகில் “ராஜ்யத்தில் நசையாலே நின்றோமென்று கைகேயி நினைக்கும்” என்று விரைந்து.
(வென்றி மைவாயகளிரொழிந்து)வென்றியை விளைப்பதாய் அஞ்ஜநகிரிபோலே பெரியவடிவையுடைத்தாயிருக்கிற ஆனையென்ன, தேரென்ன, குதிரையென்ன, இவற்றை ஒழிந்து. (வநமே மேவி) இவற்றை ஒழிந்தால் இந்த தேஶத்திலேபோய்ப்புகாதே, வநமே மேவி. (நெய்வாயவேல் நெடுங்கண்
நேரிழையுமிளங்கோவும் பின்புபோக) நீரை போய்ப் புக்காலும் புகுகைக்குத் தகாதவர்களைக் கூடக்கொண்டு. (எவ்வாறு நடந்தனை எம்மிராமா! ஓ! எம்பெருமான்! என்செய்கேனே) கால்நடை நடந்தறியாத நீர் இவர்களையும் கூட்டிக்கொண்டு பொல்லாத காட்டிலே போனீர்; என் நாயனே! நான் என் செய்கேன்? 2.
3. கொல்லணை வேல்வரிநெடுங்கண் கௌசலைதன் குலமதலாய்!
குனிவில்லேந்தும்
மல்லணைந்தவரைத்தோளா! வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்று இனிப்போய்வியன் கானமரத்தின்நீழல்
கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ?காகுத்தா! கரியகோவே!
பதவுரை:- கொல் அணை – கொலைத்தொழிலில் ஈடுபட்டுள்ள, வேல் – வேலாயுதம் போன்றதாய், வரி நெடும் கண்- செவ்வரிகருவரிகளையும் பரப்பையுமுடையதான கண்களையுடைய, கௌசலைதன் – ஸ்ரீ கௌசலையாருடைய, குல முதலாய்- குலத்துக்கு உத்தாரகனானவனே! குனி வில் ஏந்தும் – வளைந்த வில்லை தரித்துள்ள, மல் அணைந்த வரை தோளா- பலம் பொருந்திய மலைகள் போன்ற திருத்தோளையுடையவனே!, வல் வினையேன்- மஹாபாபியான என்னுடைய, மனம் உருக்கும் வகையே கற்றாய்- மனத்தை (உன் ஆயுதவழகாலும் தோளழகாலும்) உருகச் செய்தவனே! காகுத்தா- ககுத்ஸ்தவம்சத்தில் பிறந்தவனே!, கரிய கோவே – நீளமேக வண்ணனான ஸ்வாமியே!, மெல் அணை மேல் முன்துயின்றாய் – ம்ருதுவான படுக்கையிலே முப்பெல்லாம் படுத்து உறங்கின நீ, இன்று இனி போய்- இன்று முதல் மேலுள்ள காலமெல்லாம் காட்டிற்குச்சென்று, வியன் கானம் மரத்தின் நீழல்- கொடிய காட்டிலுள்ள (இலையற்ற) மரத்தின் நிழலிலே, கல்அணைமேல் – கற்களைப் படுக்கையாகக் கொண்டு, கண் துயில கற்றனையோ- கண் வளரக் கற்றாயோ?
வ்யா:- மூன்றாம் பாட்டு.(கொல்லணைவேல் வருநெடுங்கண் கௌசலைதன் குலமதலாய்) கொலையிலே அணைந்த வேல்போலே புகரையுடைத்தாய், செவ்வரி
கருவரியையுமுடைத்தாய் பரப்பையுமுடைத்தான கண்ணையுடைய ஸ்ரீகௌஸலையாருடைய குலத்துக்கு உத்தாரகனானவனே! (குனிவில்லேந்தும் மல்லணைந்தவரைத்தோளா)வீரர்கள் வில் ஒருகாலும் நாணி இறங்கிடாமையாலே வளைந்தபடியே இருக்குமிறே; அந்த வில் தானும் மிகைஎன்னும்படி மலைபோலே பெரிய மிடுக்கையுடைய தோளையுமுடையவனே! (வல்வினையேன் மனமுருக்கும் வகையேகற்றாய்) ஆயுதவழகாலும் தோளழகாலும் என் நெஞ்சை அழிக்கவே கற்றவனே!
(மெல்லணைமேல் முன்துயின்றாய்) அழகிய படுக்கையிலே முற்காலமெல்லாம் கண்வளர்ந்த நீர். (இன்றினிப்போய்) பல மாளிகைகளிலே பலபடுக்கைகளிலே கண்வளர்ந்த நீர் இன்றாக இனிப்போய், (வியன்கானமரத்தினீழல்) காட்டில் வர்த்திப்பாட் தாங்களும் வெருவும்படி காட்டிலே இலையில்லாத மரத்தின் நிழலின் கீழே. (கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ) பாறைகளை அணையாகக் காவலரும்படி கற்றீரோ. ( காகுத்தாகரியகோவே) இச்செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது; உம்முடைய வடிவழகுக்கும் சேராது. 3.
4. வாபோகுவா இன்னம் வந்து ஒரு கால் கண்டுபோ, மலராள்கூந்தல்
வெய்போலும் எழில் தோளிதன்பொருட்டா விடையோன் தன் வில்லைச்செற்றாய்!
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும்மகனே! இன்று
நீபோக என்நெஞ்சம் இருபிளவாய்ப் போகாதே நிற்குமாறே!
பதவுரை:- வா – இங்கே சிறிது வா, போகு – இனி நீ போவாயாக; வா – மறுபடியும் இங்கு வா; இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ- (வந்துபோம்போது) மறுபடியும் ஒருதடவை என்னைப் பார்த்து விட்டுப்போ; மலர் ஆள் கூந்தல் – புஷ்பங்களை எப்பொழுதும் அணிந்துள்ள கூந்தலையுடையவளும், வேய் போலும் – மூங்கில் போன்ற, எழில் தோளி தன் பொருட்டு ஆ – அழகிய தோளையுடையவளுமான பிராட்டியின் நிமித்தமாக, விடையோன் தன் வில்லை – சிவனுடைய தனுஸ்ஸை, செற்றாய் – ஓடித்தவனே!, வல் வினையேன் மனம் உருக்கும் மகனே- மஹாபாபியான என்னுடைய மனத்தை உருகச்செய்யும் குழந்தாய்!, இன்று- இப்பொழுது, நீ – நீ, மா போகும் நெடும் கானம் போக –
யானைகள் அலையும்படியான பெரிய காட்டிற்குப் போக, என் நெஞ்சம் – என் மனமானது, இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே – இரண்டாகப் பிளந்து போகாமல் இருக்கின்றதே!
வ்யா:- நாலாம் பாட்டு. (வாபோகுவித்தியாதி) சற்றுப்போது காணாவிட்டவாறே வரும்படி காண்கைக்காக ஸுமந்த்ரனை விட்டு அழைப்பிக்கும்; பிறகு பின்பும் பிறகு வாளியும் காண்கைக்காகப் போ என்னும் ; பின்னையும் கண்மறையப்போனவாறே இன்னம் போம்போது ஒருகால் கண்டு போ என்னும்; இப்படியாயிறே இவன் யாத்ரைதான் இருப்பது. (மலராளித்யாதி) பூமாறாதே ஆளும் மயிர்முடியையும். (வெய்போலுமெழில்தோளிதன்பொருட்டா ) பசுமைக்கும் சுற்றுடைமைக்கும், ஒழுகு நீட்சிக்கும் வேய்போலேயிருக்கிற அழகிய தோளையுடையளாயிருக்கிற பிராட்டி நிமித்தமாக.9 விடையோன்றன் வில்லைச்செற்றாய்) பெருமிடுக்கனான ருத்ரனுடைய வில்லை முறித்தவனே!
(மாபோகு நெடுங்கானம்) ஆனைகள் சஞ்சரிக்கிற காடு. (வல்வினையேன் மனமுருக்கும்மகனே)பால்யாவஸ்த்தை தொடங்கிப் பதினாலாண்டு உன் ஸௌந்தர்யாதி சேஷ்டிதங்களாலே மஹா போகங்களை என்னை அநுபவிப்பித்த உன்னை முடிய அநுபவிக்கப் பெறாதே மஹாபாபத்தைப் பண்ணின என்னுடைய ஹ்ருதயத்தை ஶிதிலமாக்குமவனே!(இன்று நீபோக வென்னெஞ்சம் இருபிளவாய்ப் போகாதே நிற்குமாறே)உன் ஸந்நிதியில் உருகுகிற என் நெஞ்சானது நீ போனவாறே ஶிதிலமாகாதே வலித்திரா நின்றதீ! இதுக்கு ஹிந்து அறிகிலேன். 4.
5. பொருந்தார்க்கைவேல்நுதிபோல் பரல்பாய மெல்லடிக்கள்குருதிசோர
விரும்பாதகான் விரும்பி வெயிலூறைப்ப வேம்பதிநோய் கூற இன்று
பெரும்பாவியேன் மகனே! போகின்றாய் கேகயர்கோன் மகளாய்ப்பெற்ற
அரும்பாவிசொற்கேட்ட அருவினையேன் என்செய்கேன்?அந்தோயானே.
பதவுரை:- பொருந்தார் கை வேல் நுதி போல் – சத்ருக்கள் கையில் பாயும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற, பரல்பாய- பரல் கற்களானவை (காலில் ) பாயவும், மெல் அடிக்கள்- ம்ருதுவான பாதங்களிலிருந்து, குருதி சோர- ரத்தமானது பெருகவும், வெயில் உறைப்ப- வெயிலானது மேலே உறைக்கவும், வெம்பசி நோய் கூர – கொடுமையான பசிப்பிணி அதிகரிக்கவும், பெரும் பாவியேன் மகனே – மஹாபாபியான என்னுடைய குழந்தாய்!, இன்று – இன்று, விரும்பாத கான் விரும்பி போகின்றாய்- விரும்பத்தகாத காட்டை( நான் போகச்சொன்னேன் என்பதனாலே)விரும்பிச் செல்லுகின்றாய்; கேகயர் கோன் மகள் ஆய் பெற்ற – கேகயராஜனின் மகளாய்ப் பிறந்த, அரும் பாவி- மஹா பாபியாகிய கைகேயியினுடைய, சொல் கேட்ட அரு வினையேன் யான் – அந்தோ என் செய்கேன் – ஐயோ! என்ன பரிஹாரம் செய்வேன்?
வ்யா:- அஞ்சாம் பாட்டு. (பொருந்தார்க்கை வேநுதி போல் பரல்பாய) ஶத்ருக்கள் கையில் வேல் முனையையிட்டு ஈர்ந்தாப்போலே பரல்களானவை பாய. (மெல்லடிக்கள் குருதிசோர)இந்து தரையில் மிதிக்க ஸஹியாத ஸுகுமாரமான திருவடிகள் பரல்கள் மேலே மிதிக்கையாலே ரக்தத்தைப் புறப்படவிட.(விரும்பாதகான் விரும்பி) ஸுகுமாரரல்லாதாரும் விரும்பாத காட்டை நான் போகச்சொன்னேன் என்னுமத்தாலே விரும்பி. (வெயிலூறைப்ப வெம்பசிநோய் கூர) மேலே வெயிலானது உறைப்ப, நினைத்தபோது அமுதுசெய்யக் கிடையாமையாலே வெவ்விய பசியான நோய் மிக.
(இன்று பெரும்பாவியேன் மகனே போகின்றாய்) மஹாபாபியான என் வயிற்றிலே பிறக்கையாலேயிறே ஸுகுமாரரான நீர் காட்டேறப்போகிறது.(கேகயர்கோன் மகளாய்ப்பெற்ற அரும்பாவி சொல்கேட்ட) கேகயராஜன் மகளாய்ப் பெற்றது ஒரு மஹாப் பாபத்தையாய்த்து; அவள் வார்த்தையிலே அகப்பட்ட, (அருவினையேன் என்செய்கேனந்தோ யானே) ப்ரதிக்ரியை இல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரமில்லை. 5.
6. அம்மாவென்றுகந்தழைக்கும் ஆர்வச்சொல் கேளாதே அணிசேர்மார்வம்
எல்மார்வத்திடையழுந்தத் தழுவாதே முழுசாதேமோவாதுச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என்மகனையிழந்திட்ட இழிதகையேன் இருக்கிறேனே.
பதவுரை:- அம்மா என்று உகந்து அழைக்கும் – “ஐயா”என்று மகிழ்ச்சியுடன் அழைக்கும்படியான, ஆர்வம் சொல் – அன்புமிகுந்த வார்த்தையை, கேளாதே – கேட்கப்பெறாமலும், அணி சேர் மார்வம்- ஆபரணங்கள் அணிந்த மார்பை, என் மார்வத்திடை அழுந்த – என் மார்விலே அழுந்தும்படியாக, தழுவாதே- இறுக அணையாமலும், முழுசாதே- (அவ்வானந்தக்கடலில்) முழுகாமலும், உச்சி மோவாதே- உச்சி மோவாமலும், கைம்மாவின் நடை அன்னமெல் நடையும் – யானையுடைய நடையைப்போன்ற ம்ருதுவான நடை அழகையும், கமலம் போல் முகமும் – தாமரையை ஒத்த திருமுகப்பொலிவையும், காணாது – காணாமலும், எம்மானை என் மகனை இழந்திட்ட- என்னைத் தன்நடை அழகால் எழுதிக்கொண்ட என் மகனை இழந்துவிட்ட, இழி தகையேன் – கீழான செயலைச் செய்தவனான நான், இருக்கிறேனே- உயிருடன் இருக்கிறேனே.
வ்யா:- ஆறாம் பாட்டு. ( அம்மாவென்றுகந்தழைக்குமார்வச் சொல்கேளாதே) வேறொன்றைக் கணிசியாதே காரியப்பாடற “ஐயா” என்று அழைக்கும் ப்ரேமம் வழிந்து புறப்பட்ட சொல்லைக் கேளாதே.(அணிசேர்மார்வம் என்மார்வத்திடை யழுந்தத்தழுவாதே) ஆபரணங்களாலே அலங்க்ருதமான திருமார்வைக் கொண்டு, (42) “ सुगाढं परिषस्वजे (ஸுகாடம் பரிஷஸ்வஜே)என்னும்படி, ஏகதத்வமென்னும்படி தழுவி முழுசாதே. (மோவாதுச்சி )முழுசி அநந்தரம் உச்சியை மோந்துகொள்ளாதே.
(கைமாவின் நடையன்னமென்னடையும்) (43) “मत्तमातङ्गगामिनं “(மத்தமாதங்ககாமிநம்) என்னும்படி அமைந்திருக்கிற நடையழகும். (கமலம்போல் முகமும் காணாது) விகாஸம் செவ்விக்குத் தாமரை ஒரு போலியான திருமுகத்தைக் காணாது. (எம்மானை என்மகனை) நடையழகாலே என்னை எழுதிக்கொண்ட என் மகனை(இழந்திட்ட இழிதகையேனிருக்கின்றேனே) இப்படி தண்ணிய செயலைச் செய்தக்கால் முடியவுமாகாதே இருக்கவும் வேணுமோ நான்? 6.
7. பூமருவு நறுங்குஞ்சிபுன் சடையாப்புனைந்து பூந்துகில்சேரல்குல்
காமரெழில்விழலூடுத்துக் கலனணியாது அங்கங்கள் அழகுமாறி
ஏமருதோளென் புதல்வன்யான் இன்று செலத்தக்கவனம் தான்சேர்த்தல்
தூமறையீர்!இதுதகவோ? சுமந்திரனே!வசிட்டனே! சொல்லீர்நீரே.
பதவுரை:- தூமறையீர் – பரிசுத்தமான வேதத்தை ஓதும் ப்ராம்ஹ்ணர்களே!, சுமத்திரனே- மந்திரி ஸுமத்திரரே!, வசிட்டனே – குருவான வஸிஷ்டரே!, பூ மருவும் நறு குஞ்சி – பூ மாறாதே இருப்பதாய், பரிமளம் நிரம்பிய திருக்குழலை, புன் சடை ஆ புனைந்து- விகாரமான ஜடையாக்கி, பூ துகில் சேர் அல்குல்- அழகிய பட்டாடைகள் சாத்தப்படும்படியான திருவரையிலே, காமர் எழில் விழல் உடுத்து – காண்பவர் ஆசைப்படத் தக்கதான அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி, கலன் அணியாது- திருவாபரணங்கள் சாத்தாமல், அங்கங்கள் அழகு மாறி- ஆத்தாள் திருமேனிக்கு வரும் செயற்கை அழகு இல்லாமல், ஏமருதோள் என் புதல்வன்- சத்துருக்கள் பயப்படத்தக்க தோளையுடைய என் மகன், யான் இன்று செல தக்க- (வயோதிகனான) நான் இன்று போகவேண்டிய, வனம்- காட்டிற்கு, தான் சேர்தல் இது- போகங்களை அநுபவிக்க வேண்டிய தாம் போவது, தகவோ – தர்மமாகுமா?நீரே சொல்லீர்- (தர்மமறிந்த பெரியவர்களான) நீங்களே சொல்லுங்கள்.
வ்யா:- ஏழாம் பாட்டு.(பூமருவு நறுங்குஞ்சி புன் சடையாப்புனைந்து) பூமாறாதே இருப்பதாய் பரிமளத்தைப்புறப்படவிடா நிற்கும் திருக்குழலை, மநுஷ்யர்க்குப் பார்க்கவொண்ணாதபடி ஜடையாக்கி.( பூந்துகில் சேரல்குல் காமரெழில்விழலுடுத்து) அறுபதினாயிரமாண்டு தேடின திருப்பரியட்டங்களில் நல்லவையெல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே, கண்டார் விரும்பும்படி விஶ்சமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி. ( கலனணியாதங்களழகு மாறி) ஸ்வாபாவிகமான அழகொழியத் திருவாபரணங்கள் சாத்தாமையாலே ஆத்தாள் வரும் அழகின்றியே.
(ஏமருதோளென்புதல்வன்) விக்நம் பண்ணினாரை அழியச் செய்து அபிஷேகம் பண்ணவல்ல என் மகன். (யானின்று செல்லத்தக்க வானம் தான் சேர்த்தால்) அறுபதினாயிரமாண்டு போகங்களை பூஜித்து வீதராகனான நான் போகக்கடவ காட்டிலே, ஸுகுமாரராய், போகயோக்யரான தாம் போகை. (தூமறையீரிதுதகவோ) (26) ” पतिं विश्वस्य ” (பதிம் விஶ்வஸ்ய) என்று ஓதியிருக்கிற ப்ராஹ்மாணரே! நீங்கள் இது சொல்லிகோள்; இது தர்மமோ? (சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே) ராஜதர்மத்தைப் பழக அறிந்து நடத்திப்போந்த ஸுமந்த்ரனே! சொல்லாய்; இவ்வம்ஶத்துக்கு குருவாய் ராஜதர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீவஸிஷ்ட பகவானே!சொல்லாய். 7.
அரு:- ஏழாம் பாட்டு. (பூமருவித்யாதி) ஏமருதோள் – எய்கையிலே பொருந்தினதோள். 7.
8. பொன்பெற்றாரெழில் வேதப்புதல்வனையும் தம்பியையும் பூவைபோலும்
மின்பற்றாநுண்மருங்குல் மெல்லியலென் மருகியையும் வனத்திற்போக்கி
மின்பற்றா நின் மகன் மேல் பழிவிளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என்பெற்றாய்? கைகேசீ! இருநிலத்தில் இனிதாக இருக்கின்றாயே.
பதவுரை:- கைகேசீ! – கேகயராஜன் புதல்வியே!, பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும் – வித்யாதநத்தையுடைய உபாத்யாயர்களிடமிருந்து அழகிய எல்லா வேதசாஸ்த்ரங்களையும் கற்ற இராமனையும், தம்பியையும் – (அவனுடைய) தம்பியான லக்ஷ்மணனையும், பூவை போலும் – பூவை என்னும் பக்ஷியைப் போன்றவளாய், மின் பற்றா நுண் மருங்குல்- மின்னலும் ஈடாகமாட்டாத சிறிய இடையையும், மெல் இயல் என் மருகியையும் – ம்ருதுவான தன்மையையுமுடையளான என் மருமகளான பிராட்டியையும், வனத்தில் போக்கி – காடேற விட்டு, நின் பற்று ஆம் – உன்னிடம் அன்புள்ள, நின் மகன் மேல்- உன்னுடைய மகன் பரதன் மேல், பழி விளைத்திட்டு – பழியை உண்டாக்கிவிட்டு, என்னையும் நீள்வானில் போக்க – (புத்ரசோகத்தால்) என்னையும் வெகுதூரத்திலுள்ள
மேலுலகத்திற்குப் போகும்படி செய்ததனால் என் பெற்றாய்- என்ன பிரயோஜனம் அடைந்தாய்? இரு நிலத்தில் – இப்பெரிய பூமியிலே, இனிது ஆக – ஸுகமாக, இருக்கின்றாயே – உயிருடன் இருக்கிறாயே.
வ்யா:- எட்டாம் பாட்டு. ( பொன்பெற்றாரெழில்லேதப் புதல்வனையும் தம்பியையும்) தந்யரென்று எல்லாரும் சொல்லும்படி இருக்கிற உபாத்யாயர்கள் கீழேயிருந்து அழகிய ஸகலவேத ஶாஸ்த்ரங்களையும் ஓதியிருக்கிற பெருமாளையும், அவரையல்லது அறியாத தம்பியாரையும். (பூவைபோலும் மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்மருகியையும்) பூவைபோலே இருப்பாளுமாய், மின்னுக்கு ஒப்பான இடையையுடையளுமாய் ம்ருதுஸ்வபாவையுமான என் மருமகளான பிராட்டியையும் (வனத்தில் போக்கி) காட்டிலே போகவிட்டு.
(நின்பற்றாநின் மகன் மேல் பழிவிளைத்திட்டு ) உன்னையல்லது வேறொருவரைத் தாயென்றிராத ( பெருமாளையும் இளையபெருமாளையும் வனத்திலே போகவிட்டு- குண்டலிதம் அதிகபாடம் ) ஸ்ரீபரதாழ்வான்மேலே ‘ ப்ராத்ருத்ரோஹி’ என்கிற பழியை ஏறிட்டு. (என்னையும் நீள்வனில் போக்க என்பெற்றாய் கைகேசீ) இச்செயல்களெல்லாம் செய்து நீ பெற்ற ப்ரயோஜனமென்? (இருநிலத்திலினிதாக இருக்கின்றாயே) ஸம்ஸாரஸுகமாகிறது:- புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கையாய்த்து; உனக்குப் புத்ரரான பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே போக்குகையாலே ஸம்ஸார ஸுகம் அழகியதாக அநுபவிக்கக்கடவையிறே. 8.
அரு:- எட்டாம் பாட்டு. (பொன்னித்யாதி) (பூவை போலும்) “பூவை பைங்கிளி” என்கிறபடியே பூவையென்று பக்ஷிவிஶேஷம். பெண்களை அழகுக்குக் கிளிபோலே
என்னுமாபோலே பூவைபோலேயும் என்னக்கடவது. 8.
9. முன்னொரு நாள் மழுவாளி சிலைவாங்கி அவன் தவத்தைமுற்றும் செற்றாய்
உன்னையும் உன்னருமையையும் உன்மோயின் வருத்தமும் ஒன்றாகக்கொள்ளாது
என்னையும் என்மெய்யுரையும் மெய்யாகக்கொண்டு வனம்புக்க வெந்தாய்!
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள்வேந்தே!
பதவுரை:- முன் ஒரு நாள் – முன் ஒரு காலத்திலே, மழு ஆளி சிலை வாங்கி – மழுவை ஆயுதமாகவுடைய பரசுராமனுடைய வில்லை வாங்கி, அவன் தவத்தை முற்றும் செற்றாய்- அவனுடைய தபோபலம் முழுவதையும் ( உன் அம்புக்கு இலக்காக) அழித்தவனே!, உன்னையும் – உன் மேன்மையையும், உன் அருமையையும் – உன்னை மகனாக அடைய நான் அடைந்த கஷ்டத்தையும், உன் மோயின் வருத்தமும் – உன் தாயான கௌஸலைக்கு (உன் பிரிவினால்)ஏற்பட்ட வருத்தத்தையும், ஒன்று ஆகா கொள்ளாது- ஒரு பொருட்டாக மதியாது, என்னையும் – என்னையும் , என் மெய் உரையும் – என் ஸத்யவசநத்தையும், மெய்- உண்மை என்று கருதி, வானம் புக்க எந்தாய் – காடேறப்போன என் அப்பனே! நெடும் தோள் வேந்தே- (ரக்ஷணத்திற்கு என்று ஏற்பட்ட) பெரிய தோள்களையுடைய அரசனே! ஏழ் பிறப்பும்- இனிப்பிறக்கும் பிறவிகள் தோறும், நின்னையே மகன் ஆக பெற பெறுவேன்- உன்னையே பிள்ளையாகப் பெறப்பெறுவேனாக.
வ்யா:- ஒன்பதாம் பாட்டு. (முன்னொருநாள் முழுவாளி சிலைவாங்கி) முன்னொருகாலத்திலே மழுவை ஆயுதமாகவுடைய ஸ்ரீபரஶுராமன் கையில் ஸ்ரீஶார்ங்கத் திருவில்லை வாங்கி. (அவன் தவத்தை முற்றும் செற்றாய்) அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக்கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப்போகட்டாய். (உன்னையுமுன்னருமையையும்) உன் ஶ்லாக்யத்தையும், (44) “ महता तपसा राम ” ( மஹதா தபஸா ராம) என்று நான் உன்னைப் பெறப்பட்ட அருமையையும். ( உன்மோயின் வருத்தமுமொன்றாகக்கொள்ளாது) “உன்னைப் பிரியில் தரியேன்” என்று பின் தொடர்ந்த ஸ்ரீகௌஸலையார் வ்யஸநத்தையும் ஒன்றாகக் கொள்ளாது.
(என்னையுமென் மெய்யுரையும் மெய்யாகக்கொண்டு வனம்புக்கவெந்தாய்)உன் பாக்கள் எனக்குண்டான பாவபந்தத்தை மெய்யாக அறியாதே, என்னைப் பிதா என்றே நினைத்து, “நெடு நாள் ஸத்யம்சொல்லிப் போந்தவனை நான் தோன்றி அஸத்யத்தை ஸத்யமாக்க வேணுமென்று நெஞ்சிலேகொண்டு காட்டேறப்போன என் நாயனே! (நின்னையே மகனாகப்பெறப் பெறுவேனேழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே) அநேக ஐந்மங்கள் பிறந்து, பிறந்த ஜந்மம் தோறும் நீ எனக்குப்பிள்ளையாய்ப் பிறக்கும்படி பெற்றுடையேனாவேன். (நெடுந்தோள் வேந்தே) ரக்ஷ்யவர்க்கத்தின் அளவல்லாத காவல் துடிப்புடைய
தோளையுடையவனே! 9.
10. தேனகுமாமலர்க்கூந்தல் கௌசாலையும் சுமித்திரையும் சிந்தை நோவக்
கூனுருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு
இன்று
கானகமேமிகவிரும்பி நீதுறந்த வளநகரைத்துறந்து நானும்
வஙகெமிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே!
பதவுரை: – மநு குலத்தார் தங்கள் கோவே- மநுகுலத்திற் பிறந்த அரசர்களுள் சிறந்தவனே!, தேன் நகு – தேனைப் புறப்படவிடுகின்ற, மா மலர் – சிறந்த புஷ்பங்களோடு கூடிய, கூந்தல் – கூந்தலையுடைய, கௌசலையும் சுமித்திரையும் –
கௌசலை ஸுமுத்திரை ஆகிய இருவரும், சிந்தை நோவ- மனம் வியாகுலப்பட, கூன் உருவின் கொடும் தொழுத்தை – கோணலான உடம்பைப் போலவே மனமும் கோணலாகவுடைய வேலைக்காரியாக கூனியின், சொல் கேட்ட கொடியவள் தன்- வார்த்தையைக் கேட்ட கொடியவளான கைகேயியின், சொல் கொண்டு – வார்த்தையிலே அகப்பட்டு, கானகம் மிக விரும்பி இன்று நீ துறந்த- காட்டையே மிகவும் ஆசைப்பட்டு இன்று நீ கைவிட்ட, வளம் நகரை – (உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப்பட்டுள்ள இவ்வயோத்யா பட்டணத்தை, நானும் துறந்து – நானும் விட்டு, வானகமே மிக விரும்பி போகிறேன் – மேலுலகத்தை மிகவும் ஆசைப்பட்டுச் செல்கின்றேன்.
வ்யா:- பத்தாம் பாட்டு. ( தேனகுமாமலர்க்கூந்தலித்யாதி) தேனைப் புறப்படுவிக்கிற மலரோடு கூடின மயிர்முடியையுடைய ஸ்ரீகௌஸலையாரும் ஸுமித்ரையாரும் நெஞ்சு நோவ , (கூனுருவித்யாதி)வடிவில் வக்ரம்போலே நெஞ்சும் வக்ரமாய்த் திண்ணிதான கூனியுடைய வார்த்தையைக்கேட்ட கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு.
(கானகமேமிகவிரும்பி நீதுறந்த வளநகரைத்துறந்து) “நான் போகச்சொன்னேன்” என்னுமத்தையே கொண்டு ஒருவருக்கும் ஸஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி, திருவபிஷேகத்துக்கு அலங்கரித்திருக்கிற ஊரை நீகைவிட்டாயென்று நானும் திருவயோத்யையைத் துறந்து. (வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்) நீ இல்லாத நகரியிறே; பாத்தாலே ஸ்வர்க்கமேயாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப்போகின்றேன். (மநுகுலத்தார் தங்கள் கோவே) மநுகுலோத்பவனானவனே! 10.
11. ஏரார்ந்த கருநெடுமாலி ராமனாய் வனம்புக்க அத்தானுக்கு ஆற்றா
தாரார்ந்த தடவரைத்தோள் தயரதன் தான் புலம்பிய அப்புலம்பல் தன்னைக்
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குலசேகரன் சொற்செய்த
சீரார்ந்தமிழ்மாலை இவைவல்லார் தீநெறிக் கண் செல்லார்தாமே.
பதவுரை:- ஏர் ஆர்ந்த- ஸகல கல்யாணகுணங்களால் பூர்ணனாய், கரு நெடு மால் – நீல நிறத்தனான ஸர்வேஶ்வரன், இராமன் ஆய் – ஸ்ரீராமபிராமனாய் அவதரித்து, வனம் புக்க- காட்டிற்குச் சென்ற, அத்தானுக்கு ஆற்றா- அச்செயலைப் பொறுக்கமாட்டாமல், தார் ஆர்ந்த தடா வரை தோள் – வேற்றமாலை புனைந்த திண்ணிய மலைபோன்ற தோளையுடைய, தயரதன் தான் புலம்பிய – தசரதச் சக்ரவர்த்தி பிரலாபித்த, அப் புலம்பல் தன்னை – அவ்வழுகையை கூர் ஆர்ந்த – கூர்மை மிக்க, வேல் வலவன் – வேலைக்கையாளுவதில் ஸமர்த்தரும், கோழியர் கோன் – உறையூருக்கு அதிபதியும், குடைக்குல சேகரன்- வெண் கொற்றக்குடையையுடையவருமான குலசேகரயாழ்வார், சொல் செய்த- அருளிச்செய்த, சீர் ஆர்ந்த – பெருமை வாய்ந்த தமிழ் மாலை இவை – தமிழ்ப் பாமாலியாகிய இப்பத்துப் பாட்டுக்களையும், வல்லார் தாம் – வல்லவர்கள், தீ நெறிக்கண் செல்லார் – கேட்ட வழிகளில் போகார்.
வ்யா:- நிகமத்தில். (ஏரார்ந்தகருநெடுமாலித்யாதி) எல்லா ப்ரகாரத்தாலும் பூர்ணனாய் ஸர்வாதிகனான ஸர்வேஶ்வரன் கர்மா வஶ்யாரோடே இதர ஸஜாதீயனாய் வந்தவதரித்து, “கர்மவஶ்யாரும் போகத்தகாத காட்டில் புக்கான்” என்றதும் ஆற்றமாட்டாது. (தாரார்ந்தவித்யாதி )அறுபதினாயிரமாண்டு ராஜ்யம் பண்ணுகையாலே மாலைமாறாத, திண்ணிதான, மலைபோலே தோளையுடைய சக்ரவர்த்தி ப்ரலாபித்த பாசுரத்தை.
(கூரார்ந்தவித்யாதி) கூர்மைமிக்க வேலையுடையருமாய் உறையூர்க்கு நியாமகருமாய் ஐஶ்வர்யப்ரகாஶகமான வெண் கொற்றக்குடையையுடையருமான குலஶேகரப் பெருமாள் அருளிச்செய்த, (சீரார்ந்த தமிழ்மாலை இவைவல்லார்) (84) “पाठये गेये च मधुरं “( பாட்யே கேயே ச மதுரம்) என்று இவை பூர்ணமான தமிழ்த்தொடை வல்லவர்கள். (தீநெறிக்கண் செல்லார் தாமே) பகவத் விஷயத்தைக் காற்கடைக்கொண்டு விஷயப்ரவணராகார்கள்.
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஒன்பதாம் திருமொழி முற்றிற்று.
பத்தாந் திருமொழி – அங்கணெடுமதிள் ப்ரவேசம்.
அவதாரிகை:- அநாதிகாலம் தாம் இழந்த இழவை, தேவகி தேவியார் பெற்றுவைத்து க்ருஷ்ணனுடைய பாலசேஷ்டிதங்களை அநுபவிக்கப்பெறாதே இழந்தவள் பாசுரத்தாலே பேசினார் ஆலைநீள் கரும்பில்; மன்னுபுகழில் ஸ்ரீகௌஸலையார் பெற்றபேற்றை அநுபாவித்தார்; பால்யாவஸ்த்தையிலே எல்லா மநுபவித்து ப்ராப்த
யௌவநரானவாறே அநுபாவிக்கப் பெறாதே இழந்த சக்ரவர்த்தியோபாதி தமக்கு ப்ராப்தியுண்டாகையாலே அவன் பாசுரத்தாலே தம் இழவைப்பேசினார் வந்தாளில்;
இத்திருமொழியில் கீழ்ப்பிறந்த இழவுகள் எல்லாம் தீர, சக்ரவர்த்திதிருமகன் நித்யவாஸம் பண்ணுகிற திருச்சித்திரகூடமாகிற திருப்பதியில் திருவவதாரம்
தொடங்கி அந்த அவதார வ்ருத்தாந்தத்தை ஸ்ரீவால்மீகி பகவான் பேசி அநுபவித்தாப்போலே தம்முடைய ஜ்ஞாநவைஶத்யத்தாலே ஸமகாலத்தில் போலே அநுபவிக்கிறார்.
1. அங்கணெடுமதிள்புடைசூழ் அயோத்தியென்னும்
அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும்சோதி
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர்விளக்காய்த்தோன்றி
விண்முழுதும் உயக்கொண்ட வீரந்தன்னைச்
செங்கணெடுங்கருமுகிலை இராமன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
எங்கள்தனிமுதல்வனை எம்பெருமான் தன்னை
என்றுகொலோ! கண்குளிரக்காணுநாளே.
பதவுரை:- அம் கண் – அழகிய இடங்களையுடையதும், நெடு மதிள் – உயரமான மதிள்களால், புடை சூழ் – சுற்றிலும் சூழப்பட்டதும், அயோத்தி என்னும் – அயோத்தி என்று ப்ரஸித்தி பெற்றதுமான, அணி நகரத்து- அழகிய நகரத்திலே, உலகு அனைத்தும் – எல்லா லோகங்களையும், விளக்கும் சோதி- விளங்கச் செய்கிற பாஞ்ஜ்யோதியான (நாராயணன்), வெம் கதிரோன் குலத்துக்கு – சூரிய வம்சத்துக்கு, ஓர் விளக்காய் தோன்றி – ஒப்பற்றதான ஓர் விளக்காக வந்தவதரித்து, விண் முழுதும் – வானவர் எல்லாரையும், உய்யக்கொண்ட – (துன்பம் களைந்து) உஜ்ஜீவிப்பித்தருளின, வீரன் தன்னை – பெரிய வீரனும் , செம் கண் – சிவந்த கண்களையுடைய நெடு கரு முகிலை – பெரிய காளமேகத்தை ஒத்த வடிவுடையவனும், இராமன் தன்னை – யாவரையும் வடிவழகாலும் கண்ணழகாலும் களிப்பிக்குமவனும், தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் – தில்லை நகரத்திலுள்ள திருச்சித்ரகூடத்தில்( எழுந்தருளியிருக்கிற) எங்கள் தனி முதல்வனை – எங்களுடைய ஒப்பிலாத காரணபூதனும், எம்பெருமான் தன்னை – எங்களுடைய தலைவனுமான சர்வேஷ்வரனை, கண் குளிர காணும் நாள் – கண்கள் திருப்தியுடன் காணப்பெறும் நாள், என்று கொலோ – என்றோ?
அவ:- முதற்பாட்டு. தேவர்களெல்லாரும் க்ருதார்த்தராம்படி வந்து திருவவதாரம் பண்ணினபடி சொல்லுகிறது.
வ்யா:- (அங்கணித்யாதி) போக்யபோகோபகரண போக ஸ்தாநங்களை உடைத்தாய் ஆகாஶாவகாஶமெல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப்பட்ட அயோத்யை. (45) “अयोध्या” (அயோத்யா) என்றும் (46) “अपराजिता” (அப்ரஜிதாம்) என்றும் சொல்லப்படுகிற பரமபதம்போலே ஶத்ருக்களுக்கு கணிசிக்கவொண்ணாத ஊர். (என்னும்) பரமபதம்போலே சிலர் அறிந்து சிலர் அறியாதிருக்கையன்றிக்கே, ஸர்வலோக ப்ரஸித்தமாயிருக்கை. (அணி நகரம்) அலங்காரங்களால் குறைவற்ற ஊரென்னுதல்.(உலகனைத்தும் விளக்கும்சோதி ) ஸர்வலோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே (47) “नारायणापरो ज्योति:” (நாராயணபரோ ஜ்யோதி:)- சில பதங்களில்லை – என்கிறபடியே, பரஞ்ஜ்யோதிஸ்ஸாயுள்ளது.
(வெங்கதிரோனித்யாதி) சத்தில் அந்தகாரமெல்லாம் நீக்கக்கடவ ஆதித்யன் வம்ஶத்திலே, அவனைப்போலே இரவு கலசாதே அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்துதித்து. (விண்முழுதுமுய்யக் கொண்ட வீரன்றன்னை)தன் வீர்யகுணத்தாலே தேவஜாதியையடைய உஜ்ஜீவிப்பித்தவனை. (செங்கணெடுங்கருமுகிலை) தேவஜாதியேயன்றிக்கே ஜகத்தையடைய ரக்ஷிப்பதாகக் கடலில் மணலே ஶேஷமாகப் பெருகின காளமேகத்தினுடைய வடிவையும் ஸர்வேஶ்வரத்வ லக்ஷணமான புண்டரீகாக்ஷத்வத்தையும் உடையவனை. (இராமன்றன்னை) வடிவழகாலும் கண்ணழகாலும் அபிராமதையாலும் அநுகூலப்ரதிகூல விபாகமின்றியே தோற்பிக்குமவனை. கிழில், “வீரன்” என்கிறதை இங்கும் அந்வயிக்கக்கடவது. (48) “ सत्येन”(ஸத்யேந) இத்யாதிவத். (தில்லைநகர்த்திருச்சித்ர கூடந்தன்னுள்) அவ்வவதாரத்தில் ஸமாகாணத்தில் அநுபவிக்கப்பெறாத இழவு தீர, பிற்பட்டகாலத்திலுள்ளார்க்கும் உதவலாம்படி ஸந்நிஹிதனானவனை.
(எங்கள் தனிமுதல்வனை) அக்காலத்தில் அநுபவிக்கப் பெறாத எங்களை உஜ்ஜீவிப்பிக்கைக்கு ஒப்பில்லாத காரணபூதனானவனை.(எம்பெருமான் தன்னை)
வகுத்த ஶேஷியானவனை.(என்று கொலோ கண்குளிரக்காணுநாளே) ‘இந்த ராஜ்யத்துரந்ததையலே அகப்பட்டிருக்கிற நான்(என்றோ), அன்று அவனைக் காணப்பேறாதே விடாய்த்த கண்களானவை கண்டு விடாய் தீர்ந்துக் கண்படைத்த ப்ரயோஜநம் பெறலாவது என்றோ? என்கிறார், “என்று கொலோ” என்று, காலத்திற்கு ஒரு அவதி பெற்றாராகில் இன்று கண்டதோடு ஒக்கும் கிடீர். 1.
அரு :- (முதற்பாட்டு).(அங்கணித்யாதி). தோற்பிக்கு மென்கைக்கு ஶப்தமேது? என்ன (கீழிலித்யாதி). ராமனான வீரன் தன்னை என்றாய், வடிவழகாலே ஜயித்தார் என்கிறது. ரூபகுணத்தாலே ஜயிக்கப்போமோ என்ன (ஸத்யேந இத்யாதிவத்) என்று அவதி – (எல்லை)பெற்றாராகில் என்றது, பெறக்கடவ நாள் இன்ன நாளென்று அவதியிடப்பெற்றாராகில் என்றபடி. 1.
- வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி
வருகுருதி பொழிதரவன் கணையொன்றேவி
மந்திரம் கொள்மறை முனிவன்வேள்விகாத்து
வல்லரக்கருயிருண்டமைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
அந்தணர்க ளொருமூவாயிரவர் ஏத்த
அணிமணியாசனத்திருந்த அம்மான்தானே.
பதவுரை:- வந்து எதிர்ந்த – கோபித்து வந்து எதிரிட்ட, தாடகை தன் -தாடகையினுடைய, உரத்தை கீறி மார்பைப் பிளந்து, வரு குருதி பொழிதர -ரத்தம் (அருவிபோல்) கொழித்து வெளிப்புறப்படும்படியாக, வல் கணை ஒன்று ஏவி- வலிமையில் ஒப்பற்றதோர் அம்பை விட்டு, மந்திரம் கொள் மறை முனிவன்- எல்லா மந்திரங்களையும் தம்மிடமுடையவரும் வேதங்களை உணர்ந்த வருமான விஸ்வாமித்ர முனிவரின், வேள்வி காத்து – யாகத்தைக் காப்பாற்றி, வால் அரக்கர் – ( யாகத்திற்கு இடையூறுசெய்த )வழிய மாரீசன் ஸுபாஹு என்னும் ராக்க்ஷஸ ர்களுடைய, உயிர் உண்ட – உயிரைக்கவர்ந்த, மைந்தன் – சிறுவனானவன், செம் தளிர் வாய் – சிவந்த தளிர்களின் நடுவே, நகை மலர் சேர் – மலர்ந்த புஷ்பங்களையுடையதும், செழு தண் சோலை – அழகியதும் குளிர்ந்ததுமான சோலைகளையுடைய, தில்லை நகர் திருச்சித்ரகூடம் தன்னுள் -அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த – அநந்ய ப்ரயோஜநரான மூவாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் துதிக்க, அணி மணி ஆசனத்து இருந்த – ஒப்பற்ற ரத்னங்கள் பதிக்கப்பெற்ற ஸிம்ஹாஸந த்திலே வீற்றிருந்த, அம்மான் தானே – ஸர்வேஶ்வரனன்றோ, காண்மின் – அறியுங்கள்.
அவ:- இரண்டாம் பாட்டு, (வந்தெதிர்ந்த)ராக்ஷஸ வதத்துக்கெல்லாம் அடியாகவும், ரிஷியுடைய அபிமதம் தலைக்கட்டுடைக்கும் தாடகாதாடகேயரை நிரஸித்தபடி சொல்லுகிறது.
வ்யா:- (வந்தெதிர்ந்த) தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை; நிக்ருதிக்கு ஒப்பிலாதவள். ‘தன்னிகரொன்றில்லாத தாடகையிறே’ – பெரியாதிருமடல் (தன்னுரத்தைக்கீறி)பெருமாள் பாக்கள் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை மலைபிளந்தாப்போல பிளந்து. (வருகுருதி பொழிதர) செம்பாட்டுத் தரையிலே மலையருவி விழுந்தாப்போலே ருத்திரன் வந்து கொழிக்க. (வெங்கணை யொன்றேவி) வலிக்கு ஒப்பில்லாத திருச்சரத்தை நடத்தி. (மந்திரங்கொள் மறை முனிவன்) ரிஷி துணுக்குத் துணுக்கென்னாதபடி நிர்ப்பயனாய்த் தன்னுடைய அநுஷ்டாநங்களெல்லாம் அடைவே அநுஷ்டித்து யாகத்தைத் தலைக்கட்டும்படி பண்ணி. (வல்லரக்கருயிருண்ட)யஜ்ஞவிக்நகரரான மாரீசஸுபாஹுக்களை முடித்த பிள்ளைத் தனத்தையுடையவனை. ‘மாரீசன் பட்டானோ?’ என்னில்; பின்னை இருந்த இருப்பு மருதப்ராயமென்று கருத்து.
(செந்தளிர் வாய் மலர்நகைசேர்) சிவந்த தளிர்கள் நடுவே விகஸியா நின்றுள்ள புஷ்பங்களையடைத்தாய் தர்ஶநீயமாய் ஶ்ரமஹரமான சோலையாலே அங்க்ருதமான ஊரிலே. (அந்தணர்களொருமூவாயிரவர்) அநந்யப்ரயோஜநரான ப்ராஹ்மணர் மூவாயிரம் பேர். (ஏத்த) திரண்டு மங்களாஶாஸநம் பண்ண. (அணிமணியாசனத்திருந்த) “கோப்புடைய சீரியசிங்காசனம்” – திருப்பாவை (23)
என்னும்படியே மஹார்க்கங்களான ரத்னங்களையுடைத்தான ஸிம்ஹாஸனத்திலே தன் மேன்மை தோற்ற இருந்த ஸர்வேஸ்வரன் திடீர் என்கிறார். 2.
அரு:- இரண்டாம் பாட்டு. (வந்தெதிர்த்தவித்யாதி )நிக்ருதி – வஞ்சனம்,ஶாட்யம். செம்பாட்டுத்தரை – செம்மண் தரை . 2.
3. செவ்வரிநற்கருநெடுங்கண் சீதைக்காக்கிச்
சினவிடையோன் சிலையிறுத்துமழுவாளேந்தி
வெவ்வரி நற்சிலைவங்கி வென்றிகொண்டு
வேல்வேந்தர் பகைத்தடிந்த வீரந்தன்னைத்
தெவ்வரஞ்சு நெடும்புரிகை உயர்ந்த பங்கர்த்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
எவ்வாரிவெஞ்சிலைத்தடக்கை இராமன்தன்னை
இறைஞ்சுவாரிணையடிய இறைஞ்சினேனே.
பதவுரை:- செவ்வரி- செவ்வரிகள் படர்ந்த, நாள்- அழகிய கரு- கறுத்த, நெடு-நீண்ட, கண்-கண்களையுடைய, சீதைக்கு ஆகி- சீதாப்பிராட்டியைத் திருமணம் புரிவதற்காக, சினம் விடையோன்- கோபத்தையுடைய வ்ருஷபவாஹனான சிவனுடைய சிலை இறுத்து – வில்லை ஓடித்து, (மிதிலையிலிருந்து வரும் வழியில் மழு வாழ் ஏந்தி- கோடாலியாகிய ஆயுதத்தை உடையவராக பரசுராமனுடைய, வெவ்வரி நாள் சிலை – பயங்கரமானதும் அழகியதுமான சிறந்த வில்லை, வாங்கி – வளைத்து, வெற்றி கொண்டு- (அவனை) ஜயித்து, வேல் வேந்தர் பகை தடித்த – வேலைத் தாங்கும்படியான ராஜாக்களுடைய விரோதியை போக்கடித்த, வீரன் தன்னை – வீரத்தையுடையவனாய், தெவ்வர் அஞ்சு- சத்ருக்கள் பயப்படும்படியான, நெடு புரிசை – உயர்ந்த மதளையும், உயர்ந்த பாங்கர் -ஓங்கிய அட்டாலை களையுமுடைய, தில்லை நகர திருச்சித்ரகூடம் தன்னுள்-, திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளியிருக்கிற, எவ்வரி வெம் சிலை தடகை இராமன் தன்னை – (பிறரால்) எய்ய அரிய பயங்கரமான வில்லை ஏந்திய பெரிய கைகளையுடையவனான ஸ்ரீராமனை, இறைஞ்சுவார் – துதிக்கும் அடியார்களுடைய, இணை அடியே – இரு திருவடிகளையும், இறைஞ்சினேனே – வணங்கினேன்.
அவ:- மூன்றாம் பாட்டு.(செவ்வரிநல் )பிராட்டியாரோட்டைக் கலவிக்கு விரோதியைப் போக்கினபடி சொல்லுகிறது.
வ்யா:- (செவ்வரியித்யாதி)(49)”असितेक्षणा” (அஸிதேக்ஷணா) என்கிறபடியே கண்ணழகிலே தோற்று, சினத்தையுடைய ரிஷபத்தைத் தனக்கு வாஹநமாகவுடைய ருத்ரனுடைய வில்லாய், ஒருவரால் கிட்டவொண்ணாதே இருக்கிற வில்லை அநாயாஸேந முறித்து, அச்செயலிலே தோற்ற பிராட்டியைத் திருமணம் புணர்ந்து எழுந்தருளாநிற்க, வழியிலே வந்து தோற்றின, தன் க்ரௌர்யத்துக்குத் தக்க மழுவாகிய ஆயுதத்தையுடைய ஸ்ரீபரஶுராமாழ்வானுடைய, வெம்மையையுடைத்தாய் தர்ஶநீயமான வில்லை வாங்கி, அவனைவென்று தான் திருவவதாரம் பண்ணின க்ஷத்ரிய குலத்துக்குப் பகைதீர்த்த வீரத்தையுடையவனை.
(தெவ்வரஞ்சு நெடும்புரிசையித்யாதி) ஶத்ருக்கள் அஞ்சும்படியான உயர்ந்த மதிளையும் அட்டலைகளையுமுடைத்தான ஊரிலே வர்த்திக்கிற. (எவ்வரியித்யாதி) (50) “अवष्टभ्य महद्धनु:”(அவஷ்டப்ய மஹத்தநு:) என்று, வேறொருத்தரால் அடக்கியாள வொண்ணாதே காணவே ப்ரதிபக்ஷம் முடியும்படியான ஸ்ரீஶார்ங்கத்தையுடைய சக்ரவர்த்தி திருமகனை. (இறைஞ்சுவாரிணையடியே) சக்ரவர்த்தி திருமகனுடைய வீரத்துக்கும் அழகுக்கும் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தோற்று அவர்கள் திருவடிகளிலே.(இறைஞ்சினேனே) ஸ்ரீபரதாழ்வான் குணங்களுக்குத்தோற்ற ஸ்ரீஶத்ருக்நாழ்வானைப்போலே. 3.
அரு:- மூன்றாம் பாட்டு. செவ்வரி கருவரியையுடைய கண்கள். (புரிசை) மதிள். (அட்டாலை) துர்க்க சவரனை.(எவ்வரி) எய்யவரிய சிலை. 3.
4. தொத்தலர் பூஞ்சூரிகுழல் கைகேசிசொல்லால்
தொன்னகரம் துறந்து, துறைக்கங்கைதன்னைப்
பத்தியுடைக்குகன்கடத்த வனம்போய்ப்புக்குப்
பரதனுக்குப்பாதுகமும் அரசுமீந்து
சித்திரகூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
எத்தனையும் கண்குளிரக்கணப்பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர் நேரொவ்வார் தாமே
பதவுரை:- தொத்து அலர் – கொத்துக் கொத்தாக புஷ்பித்துள்ள, பூ – பூக்களையுடைய, சூரி குழல் – சுருண்டு அழகியதான கூந்தலையுடைய, கைகேசி சொல்லால்- கேகேயியினுடைய வார்த்தையின்படி, தோல் நகரம் துறந்து- பழமையான ராஜ்யத்தை விட்டு, துறை கங்கை தன்னை – கங்கையின் துறையை, பத்தி உடை குகன் கடத்த – மிகுந்த அன்பையுடைய குகன் தாண்டுவிக்க, வனம் போய் புக்கு – காட்டை அடைந்து , பரதனுக்கு – (சித்ரகூடத்திலே) பரதனுக்கு, பாதுகமும் அரசும் ஈந்து- பாதுகைகளை ராஜ்யத்தையும் கொடுத்தது, சித்திர கூடத்து இருந்தான் தன்னை -சித்ரகூடபர்வதத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீராமபிரானை, இன்று – இக்காலத்தில், தில்லை நகர் திருச்சித்திரகூடம் தன்னுள் -, கண் குளிர கான் பெட்ரா – கண் குளிரும்படி கண்டு அநுபவித்த, இரு நிலத்தார்க்கு- சிறந்த (இப்) பூமியிலுள்ளார்க்கு, இமையவர்- நித்யஸூரிகள், இத்தனையும் நேர் ஒவ்வார் – சிறிதும் ஒப்பாக மாட்டார்கள்.
வ்யா:- நாலாம் பாட்டு( தொத்தலர்) கொத்துக்கொத்தாக அலறுகிற பூக்களையுடைய சுருண்ட அழகிதான குழலையுடைய கைகேயி, இத்தால் தன் ஒப்பனையாலும் (ஒப்பனை – அலங்காரம்) அழகாலும் சக்ரவர்த்தியைத் தானிட்ட வழக்காம்படி பண்ணி ப்ரமிப்பிக்க வல்லளான. (கைகேயி சொல்லால்) சக்ரவர்த்தி வாய்திறக்கமாட்டாதிருக்க, “பிள்ளாய் ! உங்கள் ஐயர், உன்னைக் காட்டேறப்போகச் சொல்லா நின்றார்” என்று கைகேயி சொன்ன வார்த்தையாலே. (தொன்னகரம் துறந்து) குலக்ரமாகதமாய் வருகிற படைவீட்டை ஸந்நயஸித்து, இவள் சொன்னாளென்று புகைக்கு ப்ராப்தி இல்லாமையைக் காட்டுகிறது. (துறைக்கங்கைதன்னை) கங்கையின் துறைதன்னை. (பக்தியுடைக்குகன்கடத்த) தம்பிமாரைக்காட்டிலும் ஸ்நேஹத் தையுடையனாய், பிரியில் தரியாதபடியாய், பெருமாள் நியமிகை யாலே நின்றவனுமாய், ஸ்ரீபரதாழ்வானையும்கூட ஆசரியுக்கும்படியான ஸ்ரீகுகப்பெருமாள் கங்கையைக் கடந்த.( வானம் போய்ப் புக்கு) மநுஷிய ஸஞ்சாரமின்றிக்கே துஷ்ட ம்ருகங்களேயான காட்டிலே போய்ப்புக்கு.
(பரதனுக்குப் பாதுகமுமரசுமீந்து சித்திரகூடத்திருந்தான் தன்னை)
சித்திரகூடத்திலே எழுந்தருளி இருக்கிற இருப்புத்தான் காணப்பெறாதே பிற்பட்டார்க்கும் இழவுதீர ஸர்வகாலத்திலும் அநுபவிக்கைக்காகத் திருச் சித்திரகூடத்திலே வர்த்திக்கிறவனை. (இத்தனையும் கண்குளிர) இவனைக் காணப்பெறாதே விடாய்த்த கண் குளிரும்படி. (காணப்பெற்ற) கேட்டே போகையன்றிக்கே கண்டு அநுபாவிக்கப்பெற்ற. (இருநிலத்தார்க்கு) உகந்தருளின தேஶங்களையுடைய ஶ்லாக்யமான பூமியிலுள்ளார்க்கு. (இமையவர் நேரொவ்வார்) (51) “ सदा पश्यन्ति ” (ஸதா பஶ்யந்தி) பண்ணி இருக்கையை ஸ்வபாவமான நித்யஸூரிகளும் ஒவ்வார். இங்கு, கண்ணுக்கு விஷயம் புறம்பே உண்டாயிருக்கச்செய்தே அத்தை த்யஜித்துக் காண்கிறவர்கள்; அவர்கள், அதுவே யாத்திரையாக இருக்கிறவர்களிறே.
அரு:- நாலாம் பாட்டு.(தொத்து) கொத்து. தொன்மையைப்பற்ற அரளிச்செயகிறார் (இவள் சொன்னாளென்றித்யாதி)ஒவ்வாமைக்கு இவர்களுக்கு வாசி ஏதென்ன (இங்கு கண்ணுக்கித்யாதி) “காண்கிறவர்க ளென்றிறே இவர்கள்” என்றும், “இருக்கிறவர்களிறே அவர்கள்” என்றும் பூரிப்பது. 4.
5. வலிவணக்குவரைநெடுந்தோள் விராதைக்கொன்று
வண்தமிழ்மாமுனி கொடுத்தவரிவில்வாங்கிக்
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கைநீக்கிக்
கரனோடு தூடணன் தன்னுயிரைவாங்கிச்
சிலைவனக்கிமான்மறிய எய்தான் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
தலைவணக்கிக்கைகூப்பி எத்தவல்லார்
திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே.
பதவுரை:- வலி வணக்கு – (எதிரிகளுடைய) பலத்தை தோற்பிக்கும்படியான, வரை நெடு தோள் – மலைபோன்ற பெரிய தோள்களையுடைய, விராதை கொன்று- விராதன் என்னும் ராக்ஷஸனைக் கொன்று, வண் தமிழ் மா முனி கொடுத்த – எளிதான தமிழ் பாஷையை உண்டாக்கிய பெரு முனிவரான அகஸ்த்யர் கொடுத்த, வர வில் வாங்கி – சிறந்த வில்லை அடைந்து, கலை வணக்கு நோக்கு அரக்கி- மானின் பார்வையைத்தோற்கடிக்கும்படியான பார்வையையுடைய சூர்ப்பணகையின், மூக்கை நீக்கி – மூக்கை அறுத்து, கரனோடு தூடணன் தன உயிரை வாங்கி – கரதூஷணர்களின் உயிரைப் போக்கி, மான் மரிய- மாயமானகவந்த மாரீசன் இறந்து போம்படி, சிலை வணக்கி எய்தான் தன்னை- வில்லை வளைத்து அம்பை எய்த இராமபிரானை, தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னும் -, தலை வணக்கி கைகூப்பி
ஏத்த வல்லார் – தலையால் வணங்கி கைகூப்பி (வாயால்) துதிக்கவல்லவர்கள், திரிதலால்- ஸஞ்சரிப்பதால்,தரணி – இப்பூமியானது, தவம் உடைத்து – பாக்யம் செய்ததாக ஆகிறது.
வ்யா:-அஞ்சாம் பாட்டு.( வலிவணக்கு) எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் காட்டுவதாய் மலைபோல் திண்ணியதான தோள்களையுமுடைய விராதனைக்கொண்டு. (வண்டமிழ் மாமுனிகொடுத்த) அகஸ்த்யன் கொடுத்த தர்ஶநீயமான வில்லை வாங்கி. ( கலைவணக்கு நோக்கரக்கி) கல் நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கையுடைய ஶூர்ப்பணகியுடைய மூக்கை வாங்கி.(கரனோடு தூடணன்றன் உயிரைவாங்கி)இவளுடைய ரூபாவைரூப்யம் கண்டு பொறுக்கமாட்டாதே வந்த கரதூஷணர்கள் ப்ராணன்களை ஹரித்து.
(சிலை வணக்கிமான்மறிய வெய்தான்றன்னை)அது கேட்டுப் பெறாத ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயாம்ருகத்தை எய்து கொன்றவனை. (தில்லைநகரித்யாதி) அக்காலத்தில் காணப்பெறாத இழவெல்லாம் தீரத் தலையுண்டான ப்ரயோஜனம் பெற வணங்கி கையுண்டான ப்ரயோஜனம் பெறத்தொழுது, வாயுண்டான ப்ரயோஜனம் பெற ஏத்த வல்லார் திரிதலால். (தவமுடைத்துத் தரணிதானே)இவர்களுடைய ஸஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தையுடையது. 5.
6. தனமருவு வைதேகி பிரியலுற்றுத்
தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத்தேற்றி
வனமருவு கவியரசன் காதல்கொண்டு
வாலியைக்கொன்று இலங்கைநகர ரக்கர்கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித்தானைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
இனிதமர்ந்த அம்மனை இராமன்தன்னை
ஏத்துவா றிணையடியே ஏத்தினேனே.
பதவுரை:- தனம் மருவு- (பெருமாளுக்குச்) செல்வமாக விளங்கும்படியான, வைதேகி பிரியல் உற்று – பிராட்டியைப் பிரிந்து, தளர்வுஎய்தி – (அத்தால்) மனம் சோர்ந்து, சடாயுவை – (பிராட்டிக்காக) ராவணனுடன் பொருத)ஜடாயுவை, வைகுந்தத்து ஏற்றி – பரமபதத்திற்கு அனுப்பி, வனம் மருவு – (வாலிக்கு அஞ்சி) காட்டிலே மறைந்து வாழும், கவி அரசன் – குரங்குகளுக்கு அரசனான ஸுக்ரீவனுடன், காதல் கொண்டு – அன்பு பூண்டு, வாலியை கொன்று – வாலியை நிரசித்து , இலங்கை நகர்- ராக்ஷஸர்கள் அதிபதியான ராவணனுடைய சீற்றம் தணியும்படியாக, மாருதியால் சுடுவித்தானை- ஹனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும், தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள் -, இனிது அமர்ந்த- இனிமையாக எழுந்தருளியிருக்கிற
அம்மனை -ஸர்வேஶ்வரணுமான, இராமன் தன்னை – ஸ்ரீராமபிரானை, ஏத்துவார்- துதிப்பவர்களின், இணை அடியே – திருவடிகளையே, ஏத்தினேன்- ஸ்தோத்ரம் பண்ணப்பெற்றேன்.
வ்யா:- ஆறாம்பாடு.(தனமருவு) திருமுலைத்தடத்தின் அழகாலும் ஆபிஜாத்யத்தாலும் பிரியத்தகாத பிராட்டி பிரிவாலே பெருமாள் தம்மளவிலே நோவுபட்டு, பிராட்டிக்காக ராவணனோடே யுத்தம் பண்ணி ப்ராணனைவிட்ட பெரியவுடையாரைப் பரமபதத்தேறப்போகவிட்டு.”தன மருவு வைதேகி” என்று (52) “विष्णोश्श्री:” (விஷ்ணோ:ஸ்ரீ:) என்கிறபடியே, பெருமாளுக்கு தனமான பிரட்டி என்றுமாம். (வனமருவுகவியரசன்) வாலிக்கு அஞ்சிக் காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸுக்ரீவனை ஸ்நேஹபூர்வமாகக்காட்சி கொண்டு, அவர்க்காக அதிபலபராக்ரமனான வாலியை நிரஸித்து.
(இலங்கைநகர்)லங்கைக்கு நிர்வாஹகனென்றும் ராக்ஷஸேஶ்வரனென்றும் மோஹித்திருக்கிறவனுடைய அபிமாநமம், சீற்றமும் அடங்கும்படி, திருவடி வாழியே நெருப்பை இட்டுச் சுடுவித்தவனை. (தில்லைநகரித்யாதி) அக்காலத்தில் அநுபாவிக்கப்பெற்றிலோம் என்னும் இழவு தீர இங்கே நித்யஸந்நிஹிதனாய் வர்த்திக்கிற ஸர்வேஶ்வரனான சக்ரவர்த்தி திருமகனை. (ஏத்துவார்) அவனுடைய வடிவழகிலும் ஸௌலப்யத்திலும் ஈடுபட்டு ஏத்துமவர்கள் திருவடிகளை ஏத்தினேனேனே. 6.
7. குறைகடலை அடலம்பால் மருகவெய்து
குலைகட்டி மறுகரையை அதனாலேறி
எரிநெடுவே லரக்கரொடும் இலங்கைவேந்தன்
இன்னுயிர்கொண்டு அவன் தம்பிக்கு அரசுமீந்து
திருமாளோடினிதமர்ந்த செல்வன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
அரசமர்ந்தானாடிசூடும் அரசையல்லால்
அரசு ஆகா எண்ணேன் மற்றரசுதானே.
பதவுரை:- குரை கடலை – சப்தியாநின்றுள்ள கடலை, அடல் அம்பால்- குரூரமான அம்பினால், மறுக எய்து- கலங்கும்படி எய்து, குலை கட்டி – (அதில்) அணைகட்டி, அதனால்- அவ்வணை வழியே, மறு கரையை ஏறி – கடலின் மறுகரையை அடைந்து, எரி நெடுவேல் அரக்கரொடும்- (சத்ருக்களை) எரிக்கும்படியான நீண்ட வேலாயுதத்தையுடைய ராக்ஷஸர்களும், இலந்தை வேந்தன்- லங்காதிபதியான இராவணனும் ஆகிய இவர்களுடைய, இன் உயிர் கொண்டு – இனிய உயிர்களை போக்கடித்து, அவன் தம்பிக்கு – ராவணனுடைய தம்பியான விபீடணனுக்கு, அரசும் ஈந்து – ராஜ்யத்தை அளித்து, திருமகளோடு- ஸ்ரீதேவியின் அவதாரமான பிராட்டியுடன், இனிது அமர்ந்த – இனிமையாக அமர்ந்தருளிய, செல்வன் தன்னை – எல்லா ஐஸ்வர்யங்களையுமுடையவனும், தில்லை நகர் திருச்சித்திரகூடம் தன்னுள்-, அரசு அமர்ந்தான் – ராஜ்ய பண்ணுமவனுடைய, அடிசூரும் – திருவடிகளைத் தலைமேல் தரிக்கையாகிற, அரசை அல்லால் – அரசாட்சியை ஒழிய, மாற்று அரசு – அதற்கு மாறுபட்ட அரசாட்சியை, அரசு ஆகா எண்ணேன் ஒரு பொருளாக நினைக்கமாட்டேன்.
வ்யா:- ஏழாம் பாட்டு. ( குரைகடலை) கோஷத்தையுடைத்தான கடலை,ஶத்ருக்களென்றால் எப்பொதோவென்று மேல்விழக்கடவதான அம்பைவிட்டு மறுகும்படியாக எய்து, (குலைக்கட்டி0 அஞ்சின கடலானது என்மேலே தூர்த்துக்கொள்ளீர் என்ன; அதின் மேலே மலைகளை இட்டுத் தூர்த்து வழிசெய்து அந்தக் கரையிலே போய்.
(எரிநெடுவேல்) ஶத்ருக்களை எரிக்கக்கடவதாய் நெடிதான வேலையுடைய ராக்ஷஸரோடே லங்காதிபதியான ராவணனை அவன் உகந்த ப்ராணனை ஹரித்து, அவன் தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்து, பிராட்டியோடே கூட, பிரிந்த பிரிவெல்லாம் மறக்கும்படி இனிது அமர்ந்தருளிய ஐஶ்வர்யமுடையவன்றன்னை. (தில்லைநகரித்யாதி) ராஜ்யம்பண்ணி இருக்கிறவன் திருவடிகளை சூடுக்கையாகிற ராஜ்யமொழிய அதுக்கெதிர்த்தட்டாக ஸ்வாதந்தர்யத்தைப் பார்க்கும் ராஜ்யத்தை ராஜ்யமாக எண்ணேன். 7.
8. அம்பொனொடு மணிமாட வயோத்தியெய்தி
அறச்செய்தி அகத்தியன் வாய்த்தான் முன்கொன்றான்
தன் பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச்செல்வி
உலகுய்யத் திருவயிறு வாய்த்தமாக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதைகேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோமொன்றே.
பதவுரை:- அம் பொன் நெடு மணிமாடம் – ( பட்டாபிஷேகத்தின்பொருட்டு அலங்கரிக்கப்பட்டு) அழகியதாய், உயர்ந்ததாய் ரத்னங்கள் பொருந்தாய் அமைக்கப் பெற்ற மாடமாளிகைகளையுடைய, அயோத்தி எய்தி – அயோத்தி நகருக்கு மீண்டுவந்து, அரசு எய்தி – ராஜ்யபாரத்தை அடைந்து, தரன் முன் கொன்றான் தன் – தன்னால் முன்பு கொல்லப்பட்ட ராவணனுடைய, பெரு தொல் கதை – பெரிய பூர்வா வ்ருத்தாந்தங்களை எல்லாம், அகத்தியன் வாய் கேட்டு – அகஸ்த்யமுனிவர் சொல்லக்கேட்டு, மிதிலை செல்வி – ஸ்ரீஜநகராஜன் திருமகளான பிராட்டி, உலகு உய்ய – உலகமெல்லாம் உய்யும்படி, திருவயிறு வாய்த்த- பெட்ரா, மக்கள்- பிள்ளைகளான குசலவர்களுடைய, செம் பவளம் திரள்வாய் – திரண்ட சிவந்த பவளம் போன்ற வாயினால், தன சரிதை – தன்னுடைய கதையான ஸ்ரீராமாயணத்தை, கேட்டான் – கேட்டருளின, தில்லை நகர் திருச்சித்திரகூடம் தன்னுள் – , எம்பெருமான் தன் – (எழுந்தருளியிருக்கின்ற) என் ஸ்வாமியுடைய, சரிதை- கதையை, செவியால் கண்ணால் பருகுவோம் – செவிகளால் கேட்டும், கண்ணால் கண்டும் அநுபாவிக்கப் பெற்ற நாம், இந்த அமுதம் – இனிய தேவாம்ருதத்தையும், ஒன்று மதியோம் – ஒரு பொருளாக மதிக்கமாட்டோம்.
வ்யா:- எட்டாம் பாட்டு. (அம்பொன்) திருவபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து தர்ஶநீயமாய் ஒக்கத்தையுடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப்பட்ட மாடங்களையுடைய திருவாயோத்யையிலே ஜகாத்தெல்லாம் உகக்கும்படி மீண்டு எழுந்தருளிப்புகுந்து (அரசெய்தி) (58) “ राज्यं पुनरवाप्तवान् “ (ராஜ்யம் புந ரவாப்தவாந்)என்னும்படியே ஜகத்தெல்லாம் வாழும்படி ஸாம்ராஜ்யத்திலே அதிகரித்து. (அகத்தியன்) வேறு க்ருதியாம்ஶமில்லாமையாலே போதுப்போக்காகத் தான் முன் கொன்ற ராவணனுடைய பூரா வ்ருத்தாந்தங்களையடைய அகஸ்த்யபகவான் விண்ணப்பம் செய்யக் கேட்டு.
(மிதிலைச்செல்வியித்யாதி) ஸ்ரீஜநகராஜன் திருமகள், ஜகத்தையடைய உஜ்ஜீவிக்கும்படி பெட்ரா குஶலவர்கள் பேச, தம்முடைய வருத்தமான ஸ்ரீராமாயண கதையைக் கேட்டருளினவர். இன்று திருச்சித்திரகூடத்திலே நித்தியவாஸம் பண்ணுகிற, என்னுடைய நாதனுடைய வ்ருத்தாந்தத்தைத் திருவடியைப்போலே ஸர்வேந்த்ரியங்களாலும் அநுபாவிக்கப்பெற்ற நாம் தேவஜாதி அநுபாவிக்கிற அம்ருதத்தை ஒன்றாக மதியோமே. 8.
அரு :- எட்டாம் பாட்டு.(அம்பொனிதயாதி) அகஸ்த்ய பகவான் உத்தர ஸ்ரீராமாயணத்தின் உபோத்காதத்திலே ராவண வ்ருத்தாந்தம் சொன்னான். (செம்பவளத்திரள்வாய்) திரண்ட செம்பவளம் போயிருக்கிற வாயாலே தன் சரிதை கேட்டான் என்றபடி. 8.
9. செறித்தவச் சம்புகன்தனனைச் செத்துக்கொன்று
செழுமறையோனுயிரமீட்டுத் தவத்தோனீந்த
நிறைமணிப்பூணணியும் கொண்டு இலவணன் தன்னைத்
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்டத்
திறல்விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
உறைவானை மறவாத உள்ளந்தன்னை
யுடையோம் மாற்றுறுதுயர மடையோமன்றே.
பதவுரை:- செறி தவம் – மிகுந்த தபஸ்ஸையுடையவனான, சம்புகன் தன்னை- ஜம்புகனென்னும் சூத்திரனை, சென்று கொன்று- (அவனிருக்குமிடம் தேடிச்) சென்று தலையறுத்து, செழு மறையோன் உயிர் மீட்டு- சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீது, தவத்தோன் ஈந்த – அகஸ்த்யபகவான் கொடுத்தருளிய, நிறை மணி பூண் அணியும் கொண்டு – பெருவிலையுள்ள ரத்னங்கள் பதிக்கப்பெற்ற காரத்தை சாத்தியருளி, இலவணன் தன்னை – லவணாஸுரனை, தம்பியால் – தம்பியான சத்ருக்னனைக்கொண்டு, வான் ஏற்றி – வீரஸ்வர்க்கத்திற்கு அனுப்பி, முனிவன் வேண்ட – துர்வாஸ முனிவரின் சாபத்தினால், திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான் தன்னை – பராக்ரமத்தினால், பிரகாசிக்கும்படியான லக்ஷ்மணனைப் பிரிந்தவனும், தில்லை நகர் திருச்சித்ரகூடம் தன்னுள்-, உறைவானை- நித்யவாஸம் செய்பவனுமான ஸ்ரீராமனை, மறவாத உள்ளம் தன்னை உடையம்- என்றும் மறவாத மனத்தை உடைய நாங்கள், மாற்று உறு துயரம் அடையோம் – எம்பெருமானை அநுபவிக்கப் பெறவில்லையே?’ என்னும் வருத்தத்தை அடையமாட்டோம்.
வ்யா:- ஒன்பதாம் பாட்டு. ( செறிதவச்சம்புகனித்யாதி மிக்க தபஸ்ஸை யுடையவனாய் ஶூத்ரனான ஜாம்புகனைத் தலையறுத்து, (செழுமறையோனுயிர்மீட்டு) விலக்ஷணனான ப்ராஹ்மணனுடைய புத்ரன் ப்ராணனை மீட்டு, அகஸ்த்யபகவான் கொடுத்த பெருவிலையனான காரத்தையும் சாத்தியருளித் திருவாயோத்யையிலே புகுந்து, லவணாஸுரனை ஸ்ரீஶத்ருக்நாழ்வானை விடுவித்து வீரஸ்வர்க்கத்திலே குடியேற்றுவித்து.
(முனிவனித்யாதி) தூர்வாஸாவினுடைய ஶாபாத்தாலே, (54)” द्वितीयं मेन्तरात्मानं “ (த்விதீயம் மேந்தராத்மாநம்) என்கிறபடியே, தம்முடைய ப்ராணபூதரான இளையபெருமாளுக்கு விடைகொடுத்து, அப்படிப்பட்ட தன்னைப் பின்புள்ளார் காணப்பெறாத இழவுதீரத்திருச்சித்திரகூடத்திலே நித்யவாஸம் பண்ணுகிறவனை. (மறவாதவுள்ளந்தன்னையுடையோம்) இப்படிப்பட்ட சௌலப்யத்தை அநவரதபாவனை பண்ணியிருக்கிற நமக்கு “எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோம்? என்கிற இழவு இனியில்லை. 9.
அரு:- ஒன்பதாம் பாட்டு. (செறிதவமித்யாதி) (ஶாபத்தாலே) ஶபிக்கப்போகிறான் என்கிற பயத்தாலே. (எம்பெருமான்) சக்ரவர்த்தித்திருமகன். 9.
10. அன்றுசராசாரங்களை வைகுந்தத்தேற்றி
அடலரவப்பகையேறி அசுரர்தம்மை
வென்று இலக்குமணிநெடுந்தோள் நான்கும்தோன்ற
விண்முழுதும் எதிர்வரத்தன் தாமம்மேவிச்
சென்று இந்துவீற்றிருந்த அம்மான் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
என்றும் நின்றான் அவனிவனென்றேத்தி நாளும்
இறைஞ்சுமினோ எம்பொழுதும் தொண்டீர் நீரே.
பதவுரை:- அன்று – (தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளுகிற) அன்று, சர அசரங்களை- (அயோத்தியிலுள்ள) எல்லா ஜங்கம ஸ்தாவரவுயிர்களையும் வைகுந்தத்து ஏற்றி – பரமபதமேறச்செய்து, அடல் அரவம் பகை ஏறி – வலிமைபொருந்திய பாம்புகளுக்கு விரோதியான கருடன் மீது ஏறிக்கொண்டு, அசுரர் தம்மை வென்று- ராக்ஷஸ ஜாதியையே ஜெயித்து, இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற – அந்த வீரலக்ஷ்மி பிரகாசிக்கும்படியான அழகிய நீண்ட தோள்கள் நான்கும் விளங்கும்படி, விண் முழுதும் – பரமபதத்திலுள்ளார் அனைவரும், எதிர் வர- எதிர்கொண்டுவர, தன் தாமம் மேவி சென்று – தன் இருப்பிடமாகிய வைகுந்தத்திற்கு எழுந்தருளி, இனிது வீற்றிருந்த- தன் மேன்மையெல்லாம் தோன்றும் படி வீற்றிருந்த, அம்மான் தன்னை – ஸர்வேஶ வரனை, தில்லைநகர் திருச்சித்திர கூடம் தன்னுள் – , என்றும் நின்றான்- நித்யவாஸம் செய்யுமவன், அவன் இவன் என்று ஏத்தி – அப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் என்று துதித்து, தொண்டீர் நீர் – அநந்யப்ரயோஜ்நனரான நீங்கள், நாளும் எப்போதும் – தினந்தோறும் இடைவிடாதே, இறைஞ்சுமின்- துதித்து உஜ்ஜீவியுங்கள்.
வ்யா:- பத்தாம் பாட்டு. (அன்று சராசரங்களை) (55) “ अपि वृक्षा: परिम्लाना: “ ( அபி வ்ருக்ஷா: பரிம்லாநா:) என்று வ்யதிரேகத்திலே ஏவப்பட்டது அறிந்தருளுகையாலே, (56) ” नोच्छवसत् तदयोध्यायां सुसूक्ष्ममपि दृश्यते | तिर्यग्योनिगताश्चान्ये सर्वे रममनुव्रता:|| ” (நோச்ச்வஸத் ததயோத்யாயாம் ஸுஸூக்ஷ்மமபி த்ருஶ்யதே| திர்யக்யோநிகதாஶ்சாந்யே ஸர்வே ராமமநுவ்ரதா:||” என்கிறபடியே, இளையபெருமாளோபாதி பரமபதத்துக்குப் போகவிட்டு.
(அடலரவப் பகையேறி) ஸர்ப்பஜாதிக்கு ஜந்மஶதருவானா பெரியதிருவடியை மேற்கொண்டு அஸுரவர்க்கத்தை வென்று அந்த வீரஸ்ரீவிளங்குகிற திருத்தோள்கள் நாலோடும்கூட அங்குள்ளலாருகக்கும்படி ( (பா) அங்குள்ளார்க்குமப்படியே) எழுந்தருளி, பரமபதத்திலே போய்ப்புக்கு தன் மேன்மையெல்லாம் தோற்றும்படியான ஈஶ்வரனை. (தில்லைநகரித்யாதி) அவ்விருப்பிலொன்றும் குறையாமே காலதத்வமுள்ளதனையும் இங்கே நமக்காக நித்யவாஸம் பண்ணுமவனை. அந்நய ப்ரயோஜநரான நீங்கள் அவனை ஆஶ்ரயித்து க்ருதார்த்தராகுங்கோள். 10.
11. தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
திறல்விளங்குமாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில்சீர்த்தயரதன் தன்மகனாய்த் தோன்றிற்று
அதுமுதலாத் தன்னுலகம்ப்யூக்கத்தீறாக்
கொல்லியலும் படைத்தானைக் கொற்றவொள்வாள்
கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற்செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும்வல்லார்
நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே.
பதவுரை:- தில்லை நகர் திருச்சித்ரகூடம் தன்னுள்- , திறல் விளங்கும் – பராக்கிரமத்துடன் விளங்கா நின்றுள்ள, மாருதியோடு – அனுமானுடனே, அமர்ந்தான் தன்னை – நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீராமனைக் குறித்து, எல்லை இல் சீர் தயரதன் தன – அளவில்லாத கல்யாணகுணங்களையுடைய தசரத சக்கரவர்த்திக்கு, மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ – பிள்ளையாகப் பிறந்தது முதலாக, தன் உலகம் புக்கது ஈறு ஆ – தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளியது முடிவாக (உண்டான ஸ்ரீராமாயண கதையை ) கொல் இயலும் படை தானை – (சத்ருக்களை) கொலைசெய்வதில் ஈடுபாடுள்ள ஆயுதங்களையுடைய சேனையையும், கொற்றம் ஓள் வாள் கோழியர் கோன் -வெற்றியையும் அழகையுமுடைய வாளையுமுடையவரும், உறையூர்க்கு அதிபதியும், குடை குலசேகரன் – வெண்கொற்றக்குடையை
யுடையவருமான ஸ்ரீகுலசேகராழ்வார், சொல் செய்த – அருளிச்செய்த, நாள் இயல் – சிறந்த இயல் என்னும் தமிழ் இலக்கணத்துக்குப் பொருந்திய, இன் தமிழ் மாலை பத்தும் – இனிய தமிழ்ப் பாமாலையிலுள்ள பத்தப்பாட்டுக்களையும், வல்லார் – சொல்ல வல்லவர்கள், நலம் திகழ்- பரமபதத்திலே விளங்குகிற, நாரணன் – ஸர்வேஶ்வரனுடைய, அடி கீழ் நண்ணுவார்- திருவடிகளை அடையப் பெறுவர்கள்.
வ்யா:- நிகமத்தில். (தில்லைநகரித்யாதி)(33) “ भावो नान्यत्र गच्छति” (பாவோ நாந்யத்ர கச்சதி) என்று ‘அங்குப் போகேன்’ என்ற திருவடியை விடமாட்டாமே இங்கே வந்து நித்யவாஸம் பண்ணுகிறவனை.(எல்லையில்சீரித்யாதி) பஹுகுணனான சக்கரவர்த்திக்கு, (57) “ ” पितरं रोचयामास ” (பிதரம் ரோசயாமாஸ) என்று பிள்ளையாய்ப் பிறந்தது தொடக்கமாகப் பரமபதம் புக்கது முடிவாகவுண்டான ஸ்ரீராமாயண கதையை.
(கொல்லியலும் படைத்தவனை) கொலையை முயலாநின்றுள்ள வேலையுடைய படையையுடையராய். (கொற்றவொள்வாள்) வெற்றியையும் அழகையுமுடைய வாளையுடைய. (கோழியர்கோன்) கோழியார்க்கு கோன். கோழி-உறையூர்.சோழர்க்கு ராஜாவானவர். (குடைக்குலசேகரன் சொற்செய்த) வெண்கொற்றக் குடையையுடையரான ஸ்ரீகுலசேகரப்பெருமாள் அருளிச்செய்த, (நல்லியலின் தமிழ்மாலை பத்தும்வல்லார்) அழகிய இயலையுடைய தமிழ்மாலை பத்தும் வல்லார். (நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே) பரமபதத்திலே விளங்காநின்றுள்ள ஸர்வேஶ்வரன் திருவடிகளைக் கிட்டப்பெறுவர்கள். 11.
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
பெருமாள் திருமொழி வ்யாக்யானம் முற்றிற்று.
அரு: நிகமத்தில். (படை) ஆயுதம். (தானை) ஸேநை. (கொற்ற ஒள்வாள்) வெற்றியையும் அழகையுமுடைய வாயையுடையரான பெருமாள் என்றபடி. 11.
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் க்ருஷ்ணஸூரயே நம:
பெருமாள் திருமொழி வியாக்கியான
ப்ரமாணத் திரட்டு
1. ஸ்ரீருபபர்ஹணம்| தஸ்மிந் ப்ரஹ்மாSSஸ்தே |
தமித்தம்வித் பாதைநைவாத்யா ரோஹதி ||
[ (ஆதிசேஷனாகிய அப்படுக்கையில்) பெரிய பிராட்டியாரி திருவடிகளுக்கு அணைபோல் எழுந்தருளியிருக்கிறார். அதில் பரப்ரஹ்மமான நாராயணன் பள்ளிகொண்டிருக்கிறார். இம்மாதிரி அறிபவன் அந்த ப்ரஹ்மத்தின்மேல் திருவடிகளிலிருந்து ஏறுகிறான்.] கௌஷீதிகீ (1-51)
2. அஹம் ப்ரஹ்மாSஸ்மி
[ நான் ப்ரஹ்மத்திற்கு தாஸனாயிருக்கிறேன் .]
3. வைகுண்ட து பாரோ லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: |
ஆஸ்தே விஷ்ணுராசிந்தியாத்மா பக்தைர் பாகதைஸ் ஸஹ ||
[ வைகுண்டமாகிற மேலான உலகத்தில், உலகுக்கெல்லாம் ஸ்வாமியும், நினைக்கவொண்ணாத ஸ்வரூபத்தையுடையவருமான விஷ்ணு, (குணநிஷ்டர்களான) பக்தர்களுடனும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களுடனும் கூடியவராய் , ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளியிருக்கிறார்.] சைவ புராணம்
4. அஹமந்நமஹமந்நமஹமந்நம்| அஹமந்நாதோSஹமந்நாதோSஹமந்நாத: |
[ நான் (பரமாத்மாவுக்கு) அன்னம்போல் போக்யமாயிருப்பவன்; நான் (பரமாத்மாவுக்கு) அன்னம்; நான் (பரமாத்மாவுக்கு) அன்னம். நான் (பரமாத்மாவின் உகப்பாகிற) அன்னத்தை பூஜிப்பவன்; நான் அன்னத்தை பூஜிப்பவன்; நான் அன்னத்தை பூஜிப்பவன். ] தை-ப்ருகு (10-6)
5. வாயஸேந ததஸ் தேந பலவத்க்லிச்யமாநயா |
ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப: ||
[ பிறகு, அந்தக் காகாஸுரனால் பலாத்காரமாகத் துன்புறுத்தப்பட்ட என்னால், ஸுகமாகக் கண்வளர்ந்தருளியவரும், (அத்தாலே) அழகாயிருப்பவரும், எதிரிகளைத் தபிப்பவருமான ஸ்ரீராமபிரான் எழுப்பப்பட்டார். ] ரா- ஸு (38-25)
6. ராமலக்ஷ்மணகுப்தா ஸா ஸுக்ரீவேண ச வாஹிநீ |
பபூவ துர்த்தர்ஷதரா ஸேந்த்ரைரபி ஸுராஸுரை: ||
[ ராமலக்ஷ்மணர்களாலும், ஸுக்ரீவனாலும் காப்பாற்றப்பட்ட அந்த வானரஸேனை, இந்திரனுடன் கூடிய தேவாஸுரர்களாலும் எதிர்க்கமுடியாததாயிருந்தது. ] ரா – யு (25-33)
7. *புவோ பூத்யை பூபுஜாம் பூஸுராணாம்
திவோ குப்த்யை ஶ்ரேயஸே தேவதாநாம் |
ஶ்ரியை ராஜ்ஞாம் சோளவம்சோத்பவாநாம்
ஸ்ரீமத்ரங்கம் ஸஹ்யஜாமாஜகாம ||
[ பூமியும், பூமியை ஆளும் அரசர்களும், ப்ராஹ்மணர்களும் உய்யும்பொருட்டும், தேவலோகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், தேவதைகளுடைய நன்மைக்காகவும், சோழவம்ஸத்துதித்த அரசர்களுக்கு நீங்காச்செல்வத்தை அளிப்பதற்காகவும் ஸ்ரீரங்கவிமானம் திருக்காவேரிக் கரையை அடைந்தது. ] ஸ்ரீரங்கமாஹாத்ம்யம்.
8. ஷோடா ஹி வேதவிதுஷோ வதந்த்யேநம் மஹாமுநே |
ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம் ||
ரக்ஷிஷ்யதீதி விஶ்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா |
ஆத்மநிக்ஷேப கார்ப்பண்யே ஷட்விதா ஶரணாகதி: ||
அஹிர்- ஸம்ஹி(37-27,28)
[ மஹர்ஷே ! வேதமறிந்தவர்கள் இந்த சரணாகதியை ஆறு வகைப்பட்டதாகச் சொல்லுகின்றனர். (அவையாவன:)
1. (பகவத் பாகவத விஷயத்தில்)அநுகூலனாயிருப்பது ஸங்கல்பித்துக்கொள்வது,
2.(அவர்களுக்கு) ப்ரதிகூலமாயிருப்பவற்றை விடுவது,
3.‘உடையவன் உடைமையைக் காப்பாற்றுவான்’ என்னும் நம்பிக்கை,
4.‘ நீ என்னை ரக்ஷிக்கவேண்டும் ‘ என்று எம்பெருமானை வேண்டுவது,
5. தன்னுடைய ஆத்மாவை அவனிடத்திலே வைப்பது,
6.தன்னிடம் ஒரு ப்ரவ்ருத்தியுமில்லாமலிருப்பது
என்று ஆறுவிதமான ( ஸம்பாவித) ஸ்வாபாவங்களுடன் கூடியது ஶரணாகதி.]
[ இந்த ஶ்லோகத்தை முந்தின (10- ஆவது) பாட்டு வியாக்கியானத்தின் முடிவில் அனுஸந்தித்துக்கொள்வது. 11- ஆவது பாட்டு அவதாரிகையிலிருப்பது தவறு.
9. உதாராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்
[ (ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்தி, ஞானி என்னும்) இந்த நாலு வகையான பக்தர்களும் உதாரமானவர்களே; ஞானியோவெனில் எனக்கே ஆத்மா (தாரகன்) என்று என் ஸித்தாந்தம்.] கீதை (7-18)
10. தவிஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத் |
பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா: ||
[ அரசனே ! த்வேஷிப்பவனின் அன்னம் பூஜிக்கத்தக்கதன்று; த்வேஷிப்பவனை புஜிப்பிக்கவும் கூடாது. நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய். பாண்டவர்கள் எனக்கு ப்ராணனன்றோ.] பார – உத்யோ(74-27)
11. நமோSசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞானவைராக்யராஶயே |
நாதாய முநயேSகாத பகவத் பக்தி ஸிந்தவே ||
[ (இப்படிப்பட்டதென்று) நினைக்கமுடியாததும், ஆச்சர்யமானதும், (பகவானுடைய அருளாலே) எளிதாகக் கிடைத்ததுமான ஞானத்தினுடையவும், வைராக்யத்தினுடையவும், குவியல் போன்றவராகவும், பகவானை மனனம் செய்பவராகவும், ஆழ்ந்த பகவத்பக்திக்குக் கடலாகவுமிருக்கிற நாதமுகளுக்கு நமஸ்காரம். ] ஸ்தோ -ரத்ந (1)
12. ய ஆத்மதா பலதா:
[ எந்தப் பரமபுரஷன், தன்னையும் தமர்க்குக் கொடுத்துத்
தன்னை அநுபவிக்கத்தகுந்த மநோபலத்தையும்
கொடுக்கிறானோ…] யஜு- காடகம் (7-5-36).
13. ஶோபயந் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா |
அத்ருச்யத ததோ ராமோ பாலசந்த்ர இவோதித: ||
[பிரகாசியாநிற்கும் தன் ஒளியினாலே தண்டகாரண்யத்தை அலங்கரித்துக்கொண்டு அப்போதுதித்த இளஞ்சந்திரனைப்போல் ஸ்ரீராமபிரான் காணப்பட்டான்.] ரா – ஆ (38-15)
14. அஸந்நேவ ஸ பவதி | அஸ்த் ப்ரஹமேதி வேத சேத் |
அஸத் ப்ரஹமேதி சேத் வேத ஸந்தமேநம் ததோ விது: ||
[ ப்ரஹ்மம் இல்லையென்று அறிந்தானாகில் அவன் இல்லாதவனாகவே ஆகிறான்; ப்ரஹ்மம் இருக்கிறதென்று அறிந்தானாகில் அக்காரணத்தினாலேயே இவனை உள்ளவனாக அறிகிறார்கள். ] தை -ஆந (6)
15. ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி தி ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி |
ஆத்மதாஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர ||
[உன்னுடைய உஜ்ஜீவனத்தில் உனக்கு விருப்பமிருக்குமாகில், உன் இருப்பில் ஆசையிருக்குமாகில், ஆத்மாவினுடைய தாஸத் தன்மையையும், ஹரியின் ஸ்வாமியாயிருக்கும் தன்மையையும், (இவைகளின்) ஸ்வபாவத்தையும் எப்போதும் நினைப்பாயாக.] – விஷ்ணுதத்வம்.
16. மா ச லக்ஷ்மண ! ஸந்தாபம் கார்ஷீர் லக்ஷ்ம்யா விபர்யயே |
ராஜ்யம் வா வநவாஸோ வா வநவாஸோ மஹோதய: ||
[ லக்ஷ்மணா ! ராஜ்யஸ்ரீயானது கைநழுவியதற்காக வருந்தாதே; ராஜ்யம், வனவாஸம் என்னுமிரண்டில் வனவாஸமே மேலானதாகத் தோன்றுகிறது.]
ரா-அ (22-29)
17. ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸ: ஸீதா நஷ்டா த்விஜோ ஹத: |
ஈத்ருஶீயம் மமாSலக்ஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் ||
[ ராஜ்யத்தை இழந்தது, வனத்தில் வஸிப்பது, ஸீதையை இழந்தது, ஜடாயு கொல்லப்பட்டது என்று இம்மாதிரியான எனக்கு நேர்ந்த துக்கங்கள் நெருப்பைக்கூட தஹிக்கச்செய்யும்.] ரா-ஆர (67-24)
16a. ஸர்வகத்வாதநந்தஸ்ய ஸ ஏவாSஹமவஸ்தித: |
மத்த: ஸர்வமஹம் ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே ||
[அநந்தன் எங்கும் வியாபித்திருப்பதால் நானும் அவனாகவே இருக்கிறேன். என்னிடமிருந்தே எல்லாமுண்டாகின்றன. நான் எல்லாமாகிறேன். ஸநாதனனான என்னிடத்திலேயே எல்லாமிருக்கின்றன.] வி-பு (1-19-85).
17a. மயி த்வேஷாநுபந்தோSபூத் ஸம்ஸ்தூதாவத்யதே தவ |
மதப்பிதுஸ் தத்க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஶ்யாது ||
[தேவனே ! உன்னைத் துதிப்பதில் விடாமுயற்சி கொண்டிருந்த என்னிடத்தில் (என் தந்தைக்கு) த்வேஷமுண்டாயிற்று. என்னுடைய தங்கைக்கு அதனாலேற்படும் பாபமானது நசிக்கட்டும். வி-பு (1-20-21)
18. ஸர்வேஷாம் ஹி ஸ தர்மாத்மா வர்ணாநாம் குருதே தாயாம் |
சதுர்ணாம் ஹி வய:ஸ்தாநாம் தேந தே தமநுவ்ரதா: ||
[தர்மஸ்வரூபியான அந்த ராமபிரான்,நான்கு வர்ணத்தவர்களுக்கும், (சைசவம், பால்யம், யௌவநம், வார்த்தகம் என்னும்) நான்கு பருவத்திலிருப்பவர்களுக்கும் மற்றெல்லாருக்கும் அருள் புரிகிறான். ஆகையால் அவர்களும் அவனிடத்திலே அன்பு பூண்டிருக்கிறார்கள். ]
ரா-அ (17- 16)
19. அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா |
ந த்வம் ஸமர்த்தஸ் தாம் ஹர்த்தும் ராமச பாஶ்ரயாம் வநே ||
[ யாதொரு தேஜஸ்ஸுக்கு ஜனகராஜன் திருமகளான பிராட்டி உரியவளோ, அந்த ராமதேஜஸ்ஸானது அளவிடவொண்ணாதது. ராமனுடைய வில்லிலே ஒதுங்கி யிருக்கும் அவனை எடுத்துவர நீ வல்லனல்லை.]
ரா – ஆ (37-18] மாரீசவாக்யம்
20. ஆநயைநம் ஹரிச்ரேஷ்ட ! தத்தமஸ்யாபயம் மயா |
விபீஷணோ வா ஸுக்ரீவ ! யதி வா ராவண: ஸ்வயம் ||
[வானரர்களுள் சிறந்த ஸுக்ரீவனே ! இவனை அழைத்து வா; விபீஷணனாயிருந்தாலும், ராவணன் தானேயாயிருந்தாலும் இவனுக்கு என்னால் அபயமளிக்கப்பட்டது.] ரா-யு (18-34)
21. பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஶ்ச தே ||
[தேவரீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வரைகளிலே விளையாடுவார்; அடியேன் நீர் விழித்துக்கொண்டிருக்கும்போதும், தூங்கும்போதும் உமக்கு எல்லா அடிமைகளும் செய்யக்கடவேன்.] ரா-அ (31-25)
22. இத்யேவமுக்தோ மாத்ரேதம் ராமோ ப்ராதரமப்ரவீத் |
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ ||
[தாயால் இம்மாதிரி சொல்லப்பட்ட ராமன், கைகூப்பி வணங்கியிருந்த தம்பியாகிய லக்ஷ்மணனைப் பார்த்து, புன்சிரிப்புடன் பின்வருமாறு சொன்னார்.] ரா-அ (4-42)
23. தஸ்யா: சிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: |
ஸ ப்ரஹ்மா ஸ சிவ: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட் ||
[வந்ஹிசிகையெனப்படும் அந்த திவ்யமங்கள விக்ரஹத்தின் நடுவில் பரமாத்மா விசேஷமாக விளங்குகிறான். அவனே பிரமனுக்கும் அந்தர்யாமி; அவனே சிவனுக்கும் அந்தர்யாமி; அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி; (பிரமன் முதலியவர்களையும் கைவல்ய நிஷ்டனையும் காட்டிலும்) மேலானவனும், கர்மத்திற்கு வசப்படாதவனும், அழிவற்றவனுமான முக்தாத்மாவுக்கும் அவனே அந்தர்யாமி.] தை – நாரா(11)
24. அகில ஜகத்ஸ்வாமிந் | அஸ்மத்ஸ்வாமிந் |
[எல்லா உலகுக்கும் ஸ்வாமியே ! என்னுடைய ஸ்வாமியே ! சரணாகதி கத்யம்
25. யஸ்யாSஸ்மி ந தமந்தரேமி
[எவனுக்கு நான் தாஸனாயிருக்கிறேனோ, அவனைவிட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்.] யஜுப்ரா (3-7)
26. பதிம் விஶ்வஸ்யாத்மேச்வரம் ஶாஶ்வதம் ஶிவமச்யுதம் நாராயணம்
[ உலகிற்கெல்லாம் பதியாயிருப்பவனும், தனக்குத்தானே ஈஶ்வரனும், நித்தியமானவனும், பரிசுத்தமானவனும், அடியவர்களை நழுவவிடாதவனும் நாராயணனே.] தை- நாரா -11
27. தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா |
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே ||
[ தேவனாகிற என்னால் நிர்மிக்கப்பட்டதும், முக்குணங்களை உடையதுமான இந்த என்னுடைய மாயை தாண்ட அரிதானது. என்னையே எவர்கள் சரணமடைகி றார்களோ, அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள். ] கீதை (7-14)
28. ஸர்வகந்த: ஸர்வரஸ:
[ எல்லா கந்தங்களையுமுடையவன்; எல்லா ரஸங்களையுமுடடையவன் (பரமாத்மா)] சாந் (3-14-2)
29. நிராஸகஸ்யாSபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ ! ஹாதும் தவ பாதபங்கஜம் |
ருஷா நிரஸ்தோSபி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||
[ஸர்வேஶ்வரனே ! (என்னை நீ) அகற்றித்தள்ளினாலும் உன்னுடைய திருவடித்தாமரையை விடுவதற்கு நான் துணியமாட்டேன் முலைப்பால் குடிக்கும் குழந்தை கோபத்தினால் தாயால் தள்ளப்பட்டாலும் தாயினுடைய கால்களை ஒருபோதும் விட விரும்பாதன்றோ] ஸ்தோ-ர (26)
30. மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம: ஸ்தாநம் பரீப்ஸதா |
வதம் சாSநிச்சதா கோரம் த்வயாSஸௌ புருஷர்ஷப: ||
[ (ராவண !) நீ உன்னுடைய குடியிருப்பை விரும்பினாயாகில், கோரமான வதத்தை விரும்பாமலிருந்தாயாகில், இந்தப் புருஷ ச்ரேஷ்டரான ஸ்ரீராமபிரானை நண்பனாகக் கொள்வது தகுந்தது.] ரா- ஸு (21-20)
31. அவச்யமநுபோக்தவ்யம் க்ருதம் கர்ம ஶுபாஶுபம் |
நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடிஶதைரபி ||
[மனிதனால் செய்யப்பட வேண்டியதே நூறுகோடி கல்பங்களானாலும் கர்மம் அனுபவியாமல் கழியாது. ] [ப்ரஹ்மவைவர்த்தம், ப்ரக்ருதிகண்டம் (26-70)]
32. ஸர்வதாSபிகத: ஸத்பி: ஸமுத்ர இவ ஸிந்துபி:
[ஸ்ரீராமபிரான் நதிகளால் அடையப்படும் களைப்போல், நல்லோர்களால் எப்போதும் அடையப்பட்டான். ] ரா – பா (1-16)
33. ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித: |
பக்திஶ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி ||
[ஸ்வாமியே ! தேவரீரிடத்தில் எனக்கு மேலான அன்பானது எப்போதும் நிலை நிற்கிறது. வீரரே ! (உம்மிடத்தில்) பக்தியும் நித்யமாயிராநின்றது. என் நினைவு ஸ்ரீவைங்குண்டநாதனிடத்திலும் செல்லுகின்றதில்லை] ரா – உத்( 40-15)
34. பாட்யே கேயே ச மதுரம் ப்ரமாணைஸ் த்ரபிரந்விதம் |
ஜாதிபிஸ் ஸப்தபிர் பந்தம் தந்த்ரீலயஸமந்விதம் ||
[ படிக்கும்போதும், பாடும்போதும் இனிதாயிருப்பதும், (க்ருதம், மத்யம், விளம்பிதம் என்னும்) மூன்று அளவுகளுடன் கூடியதும், (ஷட்ஜம், நிஷாதம், தைவதம், பஞ்சமம், மத்யமம், காந்தாரம், ரிஷபம் என்னும்) ஏழு ஜாதிகளுடன் கூடியதும், வீணைத் தந்திகளோடும், தாளங்களோடும் ஒன்று சேர்ந்திருப்பது மான ஸ்ரீராமாயண காவியத்தை (குசலவர்கள் பாடினார்கள்) ] ரா-பா (4 – 8)
35. ரக்ஷிதா ஜீவலோகஸ்ய ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா
[ ஸ்ரீராமபிரான் எல்லா உலகையும் காப்பாற்றுமவர்; தம்முடைய ஜனங்களையும் காக்குமவர். ] ரா- ஸு (35-10)
36. தர்மாபதேஶாத் த்யஜதஶ்ய ராஜ்யம்
மாம் சாப்யரண்யம் நயத: பதாதிம் |
நாஸீத் வ்யதா தஸ்ய ந பீர் ந ஶோக:
கச்சித் ஸ தைர்யம் ஹ்ருதயே கரோதி ||
[தரமம் என்னும் வியாஜத்தினால் ராஜ்யத்தை விட்டு, என்னைக் காட்டிற்குக் கால்நடையாக அழைத்துவந்த அவருக்குத் துன்பமோ, பயமோ, வருத்தமோ இல்லை; அப்படிப்பட்ட அந்த ஸ்ரீராமபிரான் (என்னை இழந்தபின்) தைரியத்துடன் இருக்கின்றாரா? ரா- ஸு (36-29)
37. ஆயதாஶ்ச ஸுவ்ருத்தாஶ்ச பாஹவ: பரிகோபமா: |
ஸர்வபூஷணபூஷார்ஹா: கிமர்த்தம் ந விபூஷிதா: ||
[ நீண்டவையும், உருண்டிருப்பவையும், இரும்புலக்கைபோல் விளங்குபவையும், எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத்தக்கவையுமான (ஸ்ரீராமனுடைய) திருக்கைகள் ஏன் அலங்கரித்து( மறைத்து வைக்கப்) படவில்லை?] ரா – கி (3-15)
38. குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே |
க்ருதார்த்தோSஹம் பவிஷ்யாமி தவ சார்த்த: ப்ரகல்பதே ||
[என்னை தாஸனாக வைத்துக்கொள்ளும். இதில் தவறொன்றுமில்லை. (இதனால்) நானும் தன்யனாவேன். உம்முடைய காரியமும் நடைபெறும்.] ரா-அ (31-24)
39. ந்யஸ்ததண்டா வயம் ராஜந் ! ஜிதக்ரோதா ஜிதேந்த்ரியா:||
ரக்ஷிதவ்யாஸ்த்வயா ஶஶ்வத் கர்ப்பபூதாஸ் தபோதநா: ||
[அரசரே ! (ராக்ஷஸர்கள் விஷயத்தில் சபித்தல் முதலிய தண்டனைகளை விட்டிருப்பவர்களாகவும், கோபத்தை வென்றிருப்பவர்களாகவும், இந்திரியங்களை ஜயித்திருப்பவர்களாகவும், தவத்தையே தனமாகக் கொண்டவர்களாகவும், ( உமக்கு) கர்ப்பம் போன்றவர்களாகவுமுள்ள நாங்கள் உம்மால் எப்போதும் காப்பாற்றத்தக்கவர்கள்.] ரா-ஆ (1-21)
40. அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே ஸலக்ஷ்மணாம் |
ந து ப்ரதிஜ்ஞாம் ஸம்ஶ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விஶேஷத: ||
[ஸீதே ! நான் உயிரையும், லக்ஷ்மணனோடு கூட உன்னையும் விடுவேனேயொழிய, செய்த ப்ரதிஜ்ஞையை – அதிலும் விசேஷமாக ப்ராஹ்மணர்களுக்குச் செய்த ப்ரதிஜ்ஞையை-விடமாட்டேன்.] ரா – ஆ (10-19)
41. தே வநேந வநம் கத்வா நதீஸ்தீர்த்வா பஹூதகா:
[அந்த சீதாராம லக்ஷ்மணர்கள் காட்டிலிருந்து காடாக நடந்துபோய், நீர் நிறைந்த நதிகளைக் கடந்துபோய் (சித்திர கூடத்தை அடைந்தனர்.] ரா-பா(1-30)
42. ஸோSப்யேநம் த்வஜவஜ்ராப்ஜக்ருதசிஹ்நேந பாணிநா ||
ஸம்ஸ்ப்ருஶ்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே ||
[அந்த க்ருஷ்ணபகவானும், இந்த அக்ரூரனை, கொடி, வஜ்ரம், தாமரை இவைகளால் அடையாளம் செய்யப்பட திருக்கையால் தொட்டு, இழுத்து, அன்புடன் நன்றாகத் தழுவிக் கொண்டான். ] வி-பு ( 5-18-2 )
43. மத்தமாதங்ககாமிநம்
[ மதங்கொண்ட யானைபோன்று நடப்பவனான ராமனை.] ரா-அ (3-28)
44. மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணா ||
ராஜ்ஞா தஶரதேநாஸி லப்தோSம்ருதமிவாமரை: ||
[ ராம ! பெருந்தவத்தினாலும், பெருங்காரியங்களைச் செய்ததினாலும், தேவர்களால் அடையப்பட்ட அம்ருதம் போல் ராஜாவான தசாதரால் அடையப்பட்டிருக்கிறாய் ] ரா-ஆ (66-3)
45. தேவாநாம் பூரயோத்யா
[ நித்யஸூரிகளின் நாடு அயோத்யையென்று பெயரைப்பெற்றது ]
தைத் -ஆரண்யகம்.
46. புரீம் ஹிரண்மயீம் ப்ரஹ்மா | விவேஶாபராஜிதாம் ||
[ ஹிரண்மயமானதும், அபராஜிதையென்ற பெயரையுடையதுமான நகரத்தை ப்ரஹ்மம் பிரவேசித்தது.] தைத் -ஆரண்யகம்.
47. நாராயணபரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: |
நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: ||
[ பரம் ப்ரஹ்மமெனப்படுபவனும் நாராயணனே; பரதத்துவமம் நாராயணனே; பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்மாவும் நாராயணனே.] தைத் – நாரா (11)
48. ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் தாநேந ராகவ: |
குரூந் ஶுஶ்ருஷயா வீரோ தநுஷா யுத்தி ஶாத்ரவாந் ||
[ வீரனாகிய ராகவன் உண்மை பேசுவதினால் உலகங்களை ஜயிக்கிறான்; ஏழைகளை தானத்தின் மூலம் ஜயிக்கிறான்; எதிரிகளை வில்லினாலே யுத்தத்தில் ஜயிக்கிறான்.] ரா- அ (12-29)
49. துல்யஶீலவயோவ்ருத்தாம் துல்யாபிஜநலக்ஷணம் |
ராகவோSர்ஹதி வைதேஹீம் தம் சேயமஸிதேக்ஷணா ||
[ ஒரே விதமான குணங்கள், வயது, நடத்தை இவைகளை உடையவளும், ஸமானமான குலத்தையும், லக்ஷணங்களையும் உடையவளுமான வைதேஹியை அடைய ராகவனே தகுந்தவர்; கறுத்து கண்களையுடைய இவளும் அவரை அடையத்தகுந்தவள்.]ரா-ஸு (16-5)
50. ஸ ததர்ஶ ததோ ராமம் திஷ்டந்தமபராஜிதம் |
ஆலிகந்தமி வாகாஶமவஷ்டப்ய மஹத்தநு: ||
[ஜயிக்கப்படாதவனும், ஆகாசத்தை அளாவிநிற்கும் பெருவில்லை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பவனுமான ராமனை அவன் பார்த்தான்.] ரா- யு (100-12)
51. தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஶ்யந்தி ஸூரய: |
யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம ||
[ விஷ்ணுவினுடைய அந்தப்பரமபதத்தை நித்யஸூரிகள் எப்போதும் பார்க்கிறார்கள்.] ருக்வேதம் -ஸாமவேதம் (3-18-2-4)
52. நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ |
யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம ||
[ உலகிற்கெல்லாம் தாயும், எம்பெருமானை விட்டுப்பிரியாதவளும், விஷ்ணுவுக்கு தனமாயிருப்பவளுமான இந்தப் பிராட்டி நித்யமானவளே. விப்ரச்ரேஷ்டரே! ஸர்வவியாபியான விஷ்ணு எப்படிப்பட்டவரோ அப்படிப்பட்டவளே இவளும்.] வி-பு (1-8-17)
53. நந்திக்ராமே ஜேடாம் ஹித்வா ப்ராத்ருபிஸ் ஸஹிதோSநக: |
ராம: ஸீதாமநுப்ராப்ய ராஜ்யம் புநரவாப்த்தவாந் ||
[நந்திக்ராமத்தில் ஜடையை விட்டுவிட்டு, ஸஹோதரர்களுடன் கூடியவராய், குற்றமற்றவரான ராமர் ஸீதையையும் அடைந்து ராஜ்யத்தையும் மறுபடியும் பெற்றார்.] ரா-பா (1-89)
54. லக்ஷ்மணே மாம் மயா ஸார்த்தம் ப்ரஶாதி த்வம் வஸுந்தராம் |
த்விதீயம் மேSந்தராத்மாநம் த்வாமியம் ஸ்ரீருபஸ்திதா ||
[ லக்ஷ்மணா ! இந்த பூமியை நீ என்னுடன் கூடவிருந்து ஆள்வாயாக. என்னுடைய இரண்டாவது அந்தராத்மாவான உன்னை இந்த ராஜ்யஸ்ரீயானது அடைந்துள்ளது.] ரா- அ (4-43)
55. விஷயே தே மஹாராஜ ராமவ்யஸநகர்ஶிதா: |
அபி வ்ருக்ஷா: பரிம்லாநா: ஸபுஷ்பாங்குரகோரகா: ||
[மஹாராஜரே ! உம்முடைய தேசத்தில், புஷ்பம், முளை, மொட்டு முதலியவ்ற்றுடன் கூடிய மரங்களுங்கூட ராமனைப் பிரிந்த துக்கத்தால் வாடிவிட்டன.] ரா – அ (59-4)
56. நோச்ச்வஸத் ததயோத்யாயாம் ஸுஸூக்ஷ்மமபி த்ருஶ்யதே |
திர்யக்யோ நிகதாஶ்சாந்யே ஸர்வே ராமமநுவ்ரதா: ||
[அயோத்தியில் உயிருள்ள ஒரு சிறு பொருளும் காணப்படவில்லை, விலங்குகளும் மற்ற எல்லா ஜீவர்களும் ராமனைப் பின் தொடர்ந்தனர்.
ரா-உத் (109-22)
57. தத: பத்மபலாஶாக்ஷ: க்ருத்வாத்மாநம் சதுர்விதம் |
பிதரம் ரோசயாமாஸ ததா தஶரதம் ந்ருபம் ||
[ அதன் பிறகு தாமரையைப்போன்றும், பலாஶத்தைப் போன்றும் (சிவந்த) கண்களையுடைய பகவான் தன்னை நான்கு விதமாகச் செய்துகொண்டு தசரதசக்ரவர்த்தியைத் தந்தையாக விரும்பினார்.]
ரா-பா (15-31)
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.