முதல் அத்தியாயம்
முதல் அத்தியாயம் அர்ச்சுனனுடைய சோக யோகம் அத்தியாயப் பொருள் சுருக்கம் வேண்டிடத்தில் அன்றி வெறுத்து நலம் இரக்கம் பூண்டவற்றைப் பொல்லாப்புலம் என்று- மீண்டு அகன்று சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விசயன் உற்ற மயல் சொல்லும் முதல் ஓத்து. (1) தன்மநிலும்ஆகும் குருநிலத்துத் தாம் சேர்ந்து வன்மைஅமர் இச்சித்து என் மைந்தரும்- தன்மையுறப் பஞ்சவரும் என்செய்தார் என்று அந்தன் பண்புரைப்பச் சஞ்சயனும் சொன்னான் சமைந்து. (2) பாண்டவர்கள் தங்கள் படை வகுத்த பாங்கதனைப் பூண்டுமிக நோக்கிப் பொறாமையினால் தூண்டு […]