Iramanuja Nootrandadi Moolam
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த ப்ரபந்நகாயத்ரி என்னும் இராமாநுச நூற்றந்தாதி தனியன்கள் (வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை) முன்னைவினை அகல மூங்கிற்குடி அமுதன்* பொன்னங்கழற்கமலப்போதிரண்டும்* – என்னுடைய சென்னிக்கணியாகச்சேர்த்தினேன்* தென்புலத்தார்க்கு என்னுக்கடவுடையேன்யான். நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதின்றிநண்ணினர்பால் * சயந்தருகீர்த்திஇராமானுசமுனிதாளிணைமேல்* உயர்ந்தகுணத்துத்திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால் இயம்பும்கலித்துறைஅந்தாதி ஓதஇசைநெஞ்சமே! இனியென்குறைநமக்கு? எம்பெருமானார் திருநாமத்தால்* முனிதந்தநூற்றெட்டுச் சாவித்திரிஎன்னும்நுண் பொருளை* கனிதந்தசெஞ்சொல்கலித்துறைஅந்தாதிபாடித்தந்தான்* புனிதன்திருவரங்கத்தமுதாகியபுண்ணியனே. சொல்லின்தொகைகொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்* நல்லன்பரேத்தும்உன்நாமமெல்லாம்என்தன்நாவினுள்ளே* அல்லும்பகலம்அமரும்படிநல்கு அறுசமயம் வெல்லும்பரம!* இராமானுச! இது என்விண்ணப்பமே. பூமன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த பாமன்னு […]