Ciriya Thirumadal Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்.. தனியன் (பிள்ளைதிருநறையூர் அரையர் அருளிச்செய்தது) முள்ளிச்செழு மலரோதாரான்முளைமதியம் * கொள்ளிக்கென்னுள்ளங்கொதியாமே* – வள்ளல் திருவாளன்சீர்க்கலியன்கார்க்கலியைவெட்டி* மருவாளன்தந்தான்மடல். காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை * சீரார் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேராற்று * பேரார மார்பின் பெரு மாமழைக் கூந்தல் * நீரார வேலி நிலமங்கை யென்னும் * இப் பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே. 1 அம்மூன்றும் ஆராயில் தானே அறம் பொருளின்ப மென்று * ஆரார் இவற்றினிடை யதனை எய்துவார் […]