Periya Thirumadal Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமடல் தனியன் (பிள்ளை திருநறையூர்அரையர் அருளிச்செய்தது) பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும்* நல்நுதலீர்! நம்பிநறையூரர்* – மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரேயாமாகில்* மன்னுமடலூர்வன்வந்து. மன்னிய பல்பொறி சேர் ஆயிரவாய் வாளரவின் * சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் * மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலை போல் * மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத் * துன்னிய தாரகையின் பேரொளி சேர் ஆகாசம் * என்னும் விதானத்தின் […]