Thiruvezhukootrirukkai Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை தனியன் (எம்பெருமானார் அருளிச்செய்தது) வாழிபரகாலன் வாழிகலிகன்றி* வாழிகுறையலூர் வாழ்வேந்தன் * – வாழியரோ மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள்மங்கையர்கோன்* தூயோன்சுடர்மானவேல். சீரார்திருவெழுகூற்றிருக்கையென்னும்செந்தமிழால்* ஆராவமுதன்குடந்தைப்பிரான்தனடியிணைக்கீழ்* ஏரார்மறைப்பொருள்எல்லாமெடுத்திவ்வுலகுய்யவே* சோராமற்சொன்னஅருண்மாரிபாதம்துணைநமக்கே. ஒருபேருந்தி இருமலர்த் தவிசில் * ஒருமுறை அயனை யீன்றனை –* ஒருமுறை இருசுடர் மீதினில் இயங்கா * மும்மதிள் இலங்கை இருகால் வளைய* ஒருசிலை – யொன்றிய ஈரெயிற்றழல் வாய் வாளியின் அட்டனை * மூவடி நானிலம் வேண்டி * முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் * […]