Nacchiar Thirumozhi Moolam
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி தனியன் (திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது) கோலச்சுரிசங்கைமாயன் செவ்வாயின் குணம் வினவம் சிலத்தனள்* தென்திருமல்லிநாடி* செழுங்குழல்மேல் மாலைத்தொடை தென்னரங்கருக்கியும்மதிப்புடைய சோலைக்கிளி* அவள்தூயநற்பாதம்துணைநமக்கே. அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி* மல்லிநாடாண்டமடமயில் – மெல்லியலாள் ஆயர்குலவேந்தனாகத்தாள்* தென்புதுவை வேயர்பயந்த விளக்கு முதல் திருமொழி தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள் * ஐய நுண் மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித்து அனங்கதேவா ! * உய்யவுமாங் கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் […]