Thirupalliezuchi Vyakyanam
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: மயற்வறமதிநலம் அருளப்பெற்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பள்ளியெழுச்சி தனியன் திருமாலையாண்டான்அருளிச்செய்தது தமேவமத்வா பரவாஸுதேவம் ரங்கேஶயம் ராஜவதர்ஹணீயம்- ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே பதவுரை – யம் – யாவரொரு ஆழ்வார் ராஜவத் – அரசனைப் போல் அர்ஹணீயம் – பூஜிக்கத்தக்கவராய் ரங்கேஶயம் – திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரிய பெருமாளை பரவாஸுதேவம் ஏவ – அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸு தேவனாகவே மத்வா – ப்ரதிபத்திப் பண்ணி (எண்ணி) ப்ராபோதிகீம் – திருப்பள்ளியுணர்த்துமதான […]
Thirupalliezuchi Moolam
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் (திருமாலையாண்டான் அருளிச் செய்தது) தமேவமத்வாபரவாஸுதேவம் ரங்கேசயம்ராஜவதர்ஹணீயம் ப்ராபோதகீம்யோக்ருதஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும்பகவந்தமீடே. (திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது) மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர் தொண்டரடிப்பொடிதொன்னகரம்* வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானை* பள்ளியுணர்த்தும்பிரானுதித்தஊர். கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய் * மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்து வந்தீண்டி * எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் * அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும் […]