Thirumozhi 2-7
பெரிய திருமொழி இரண்டாம் பத்து ஏழாம் திருமொழி திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கடலமுதினிற் பிறந்த அவளும் * நின்னாகத்திருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் * குவளையங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு, நின்தாள் நயந்திருந்த இவளை * உன்மனத்தால் என் நினைந்திருந்தாய் ? இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.1 திருவிடைவெந்தை துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணைமுலை சாந்துகொண்டு அணியாள் * குளம்படு குவளைக் கண்ணிணை எழுதாள் கோலநன்மலர் குழற்கு அணியாள் * […]
Thirumozhi 2-6
பெரிய திருமொழி இரண்டாம் பத்து ஆறாம் திருமொழி நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு * வானவரைப் பெண்ணாகி, அமுதூட்டும் பெருமானார் * மருவினிய தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை * எண்ணாதே இருப்பாரை, இறைப்பொழுதும் எண்ணோமே. 2.6.1 திருக்கடல்மல்லை பார்வண்ண மடமங்கை, பனிநன் மாமலர்க் கிழத்தி * நீர்வண்ணன் மார்வத்தில், இருக்கையை முன் நினைந்தவனூர் * கார்வண்ண முதுமுந்நீர்க், கடல்மல்லைத் தலசயனம் * ஆர் எண்ணும் நெஞ்சுடையார், அவரெம்மை ஆள்வாரே. 2.6.2 திருக்கடல்மல்லை ஏனத்தினுருவாகி, நிலமங்கை யெழில் […]
Thirumozhi 2-5
பெரிய திருமொழி இரண்டாம் பத்து ஐந்தாம் திருமொழி பாராயது உண்டுமிழ்ந்த பவளத் தூணைப் படுகடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட சீரானை * எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே, முளைத்தெழுந்த தீங்கரும்பினைப் * போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர் மருதமிற நடந்த பொற் குன்றினைக் * காரானை இடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.1 திருக்கடல்மல்லை பூண்டவத்தம் பிறர்க் கடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந் நூலென்றென்று […]
Thirumozhi 2-4
பெரிய திருமொழி இரண்டாம் பத்து நான்காம் திருமொழி அன்றாயர் குலக் கொடியோடு அணிமா மலர் மங்கையொடு அன்பளவி * அவுணர்க்கு என்றானும் இரக்க மிலாதவனுக்கு உறையுமிட மாவது * இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல் நகர் * நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர்மலையே. 2.4.1 திருக்குடந்தை (கும்பகோணம்), திருவாலி, திருநறையூர், திருக்கோவலூர், திருநீர்மலை காண்டாவன மென்பதோர் காடு அமரர்க் […]
Thirumozhi 2-3
பெரிய திருமொழி இரண்டாம் பத்து மூன்றாம் திருமொழி விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் தன்னைப் * புரமெரி செய்த சிவன், உறு துயர் களை தேவை * பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானைச் * சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. 2.3.1 திருவல்லிக்கேணி வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை * […]
Thirumozhi 2-2
பெரிய திருமொழி இரண்டாம் பத்து இரண்டாம் திருமொழி காசை யாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் * நாசமாக நம்ப வல்ல நம்பி, நம்பெருமான் * வேயினன்ன தோள்மடவார், வெண்ணெயுண்டான் இவனென்று * ஏசநின்ற எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. 2.2.1 திருவெவ்வுள் தையலாள் மேல் காதல் செய்த, தானவன் வாளரக்கன் * பொய்யிலாத பொன்முடிகள், ஒன்பதோடொன்றும் * அன்று செய்த வெம்போர் தன்னில், அங்கோர் செஞ்சரத்தாலுருள * எய்த எந்தை எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. […]
Thirumozhi 2-1
பெரிய திருமொழி இரண்டாம் பத்து முதல் திருமொழி வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே ! இனிது வந்து * மாதவ மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை * கானவரிடு காரகில் புகை, ஓங்கு வேங்கடம் மேவிய * மாண்குற ளான அந்தணற்கு, இன்று அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.1 திருவேங்கடம் திருப்பதி உறவு சுற்றம் என்று ஒன்றிலா ஒருவன் உகந்து, அவர் தம்மை, * மண்மிசைப் […]
Thirumozhi 1-10
பெரிய திருமொழி முதல் பத்து பத்தாம் திருமொழி கண்ணார் கடல்சூழ், இலங்கைக்கு இறைவன் தன் * திண்ணாகம் பிளக்கச், சரம் செல உய்த்தாய் ! * விண்ணோர் தொழும், வேங்கட மாமலை மேய * அண்ணா ! அடியேனிடரைக் களையாயே. 1.10.1 திருவேங்கடம் திருப்பதி இலங்கைப் பதிக்கு, அன்று இறையாய *, அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக், கொடிப்புள் திரித்தாய் ! * விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய * அலங்கல் துளப முடியாய் ! […]
Thirumozhi 1-9
பெரிய திருமொழி முதல் பத்து ஒன்பதாம் திருமொழி தாயே தந்தை யென்றும், தாரமே கிளை மக்களென்றும் * நோயே பட்டொழிந்தே னுன்னைக் காண்பதோ ராசையினால் * வேயேய் பூம்பொழில் சூழ், விரையார் திருவேங்கடவா ! * நாயேன் வந்தடைந்தேன், நல்கியாளென்னைக் கொண்டருளே. 1.9.1 திருவேங்கடம் திருப்பதி மானேய் கண்மடவார், மயக்கில் பட்டு * மாநிலத்து நானே நானாவித நரகம் புகும், பாவம் செய்தேன் * தேனேய் பூம்பொழில் சூழ், திருவேங்கடமாமலை * என் ஆனாய் ! […]
Thirumozhi 1-8
பெரிய திருமொழி முதல் பத்து எட்டாம் திருமொழி கொங்கலர்ந்த மலர்க்குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் * சங்கு தங்கு தடங்கடல், துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் * பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் * பொங்குநீர்ச் செங்கயல் திளைக்கும் சுனைத், திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.1 திருவேங்கடம் திருப்பதி பள்ளியாவது, பாற்கடல் அரங்கம் * இரங்க வன்பேய் முலை பிள்ளையா யுயிருண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம் * வெள்ளியான் கரியான், மணிநிறவண்ணன் […]