Thirunedundandakam Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்ப் * பின்னுருவாய் முன்னுருவிற் பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது * எண்ணும் பொன்னுருவாய் மணியுருவிற் பூதமைந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி தன்னுருவாய் * என்னுருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என்தலை மேலவே. 1 பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற * ஏருருவில் மூவருமே யென நின்ற இமையவர் தம் திருவுரு […]