திருவாய்மொழி நூற்றந்தாதி
ஸ்ரீ : மணவாளமாமுனிகள் அருளிச்செய்த திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள் அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்* சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான்* நல்ல மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்* தணவா நூற்றந்தாதிதான். .மன்னுபுகழ்சேர் மணவாளமாமுனிவன்* தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே சொன்ன* திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை* ஒருவாதருந்து நெஞ்சே! உற்று. ** உயாவே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு* உயர்வேதம் நேர்கொண்டுரைத்து * – மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்* வேராகவே விளையும் வீடு. 1. ** வீடு […]