பூகோளககோள விஷயம்
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: அஸ்மத்குருப்யோ நம: (மதுரமங்கலம் எம்பார் திருவேங்கட ராமாநுஜ ஜீயர் அருளிச்செய்தது) பூகோளககோள விஷயம் ஶ்ரிய:பதியாய் லீலாபோக ஸாதநங்களான விபூதித்வயநாயகனாய், அத்வாரக ஸத்வாரகங்களாலே ஸகல ஜகத்ஸர்கஸ்திதிஸம்ஹாரகர்தாவாய் , ஸர்வாந்தர்யாமியாய், ஸர்வவ்யாபகனாய் ஸர்வஜ்ஞத்வ ஸர்வஶக்தித்வாத்யநந்த கல்யாணகுணங்களுடையனாய் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீமன்நாராயணன், தந்நோடவிபக்தமாய்க்கிடந்த சித்விஶிஷ்டாசித்தை விபக்தமாக்கி, அண்டகாரணங்களான மஹதாதிகளாக பரிணமிப்பித்து, அண்டத்தைநிர்மித்து, அதில் பத்தாத்மஸமஷ்டி பூதநான ப்ரஹ்மாவைப்படைத்து, அவனுக்கு பூதங்களுடைய நாமரூபக்ருத்யங்களையறிவிக்கிற அநாதியான வேதங்களையுபதேஶித்து, ஸூர்யசந்த்ராதிகளையும், அவர்களுக்கு வாஸஸ்தாநங்களான சதுர்தஶ புவநங்களையும், பூர்வகல்பத்திலிருந்தபடி ஸ்ருஷ்டிக்கும்படி நியமிக்க, அந்நியமநப்படி […]