தஶமத தர்ஶிநீ
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஶ்ரீமதே வரவரமுநயே நம: அஸ்மத்குருப்யோ நம: (மதுரமங்கலம் எம்பார் திருவேங்கட ராமாநுஜ ஜீயர் அருளிச்செய்தது) || தஶமத தர்ஶிநீ || பகவதவதாரமான ஶ்ரீவேதவ்யாஸ பகவான் வேதஸம்ப்ரதாயத்தை ப்ரவர்திப்பித்து வேதார்த நிர்ணயார்தமாஹ ஸ்வஶிஷ்ய ஜைமினிமுகத்தாலே கர்மகாண்ட, தேவதாகாண்டங்களையும், ஸ்வயமேவ ப்ரஹ்மகாண்டத்தையும் நிர்மித்தான். அதில் ஸகலதேவதாந்தர்யாமியாய் ப்ரஹ்மஶப்தவாச்யனான விஷ்ணுவே ஸாக்ஷாத்வா ப்ரம்பரயா வா ஸர்வகர்மஸமாராத்யனென்ரும் கர்மஸ்வரூபபேதததங்காதிகளின்னதென்றும் தேவதாஸ்வரூபபேத ததுபாஸநாதிகளின்னதென்றும் கர்மகாண்ட, தேவதாகாண்டங்களில் சொல்லித்து. கர்மான்வித தேவதைகளுக்கு சைதந்யவிக்ரஹாதிகளில்லையென்ரும், ஜீவாதிரிக்த பரமாத்மாவில்லையென்ரும் கர்மஜன்யாபூர்வமே பலஸாதனமென்ரும் ஜகத்து ப்ரவாஹரூபேண […]