அர்த்த பஞ்சகம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த அர்த்த பஞ்சகம் ஸம்ஸாரியான சேதகனுக்குத் தத்வஜ்ஞாநம் பிறந்து உஜ்ஜீவிக்கும் போது, அர்த்தபஞ்சக ஜ்ஞாநம் உண்டாக வேணும். அர்த்தபஞ்சக ஜ்ஞாநமாவது – (1) ஸ்வஸ்வரூப, (2) பரஸ்வரூப, (3) புருஷார்த்த ஸ்வரூப, (4) உபாயஸ்வரூப, (5) விரோதிஸ்வரூபங்களை உள்ளபடி அறிகை. இவற்றில் ஓரொருவிஷயந்தான் – அஞ்சுபடிப்பட்டிருக்கும். ஸ்வஸ்வரூபம் என்கிறது – ஆத்மஸ்வரூபத்தை; ஆத்மஸ்வரூபந் தான் – நித்யர், முக்தர், பத்தர், கேவலர், முமுக்ஷக்களென்று ஐந்து. பரஸ்வரூபம் என்கிறது – ஈஶ்வரஸ்வரூபத்தை; ஈஶ்வரஸ்வரூபந் தான் – பரத்வம், வ்யூஹம், […]