த்வய ப்ரகரணம்
ஸ்ரீ : அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த அருளிச்செயல் ரஹஸ்யம் த்வய ப்ரகரணம் அவதாரிகை ப்ரியமும் ப்ரியதரமுமான ஐஸ்வர்ய கைவல்யங்களிற் காட்டில் ப்ரியதமமாகத் திருமந்த்ரத்தில் அறுதியிட்ட கைங்கர்யமாகிற உத்தம புருஷார்த்தத்திலும், ஹிதமும் ஹிததரமுமான பக்திப்ரபத்திகளிற்காட்டில் ஹிததமமாகச் சரம ஶ்லோகத்தில் அறுதியிட்ட ஸித்தஸ்வரூபமான சரமோ பாயத்திலும், ஆசையும் துணிவும் பிறக்கையாலே ப்ரயோஜநாந்தரபரரிலும் ஸாதநாந்தரநிஷ்டரிலும் வ்யாவ்ருத்தனான அதிகாரி உபாயத்தைப் பற்றும் படியையும் கைங்கர்யத்தை இரக்கும் படியையும் அறிவிக்கிறது த்வயம். ‘த்வய‘ நிர்த்தேஶஹேது இரண்டர்த்தத்தையும் இரண்டிடத்திலே ஒதுகிற […]
சரமஶ்லோக ப்ரகரணம்
ஸ்ரீ: அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த அருளிச்செயல் ரஹஸ்யம் சரமஶ்லோக ப்ரகரணம் அவதாரிகை மூலமந்த்ர சரமஶ்லோக பௌர்வாபர்யம் திருமந்த்ரத்தை நரனுக்கு உபதேஶித்து ( நாச் திரு 2-1 ) நாமமாயிரமேத்த நின்ற நாராயணன் ( சிறிய திருமடல் 74 ) பாரோர் புகழும் வதரியில் நின்றும் ( சிறிய திருமடல் 74 ) வடமதுரையேற வந்து க்ருஷ்ணனான நிலையிலே நரனுடைய அம்ஶமாய். ( பெரியாழ் திரு 1-9-4 ) நம்பிசரணென்று ஶிஷ்யனான […]
திருமந்த்ர ப்ரகரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம் எம்பெருமானார் திருவடிகளே சரணம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் ஜீயர் திருவடிகளே சரணம் அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்த அருளிச்செயல் ரஹஸ்யம் தனியன்கள் த்ராவிடாம்நாயஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் | ரம்யஜாமாத்ருதேவேந தர்ஶிதம் க்ருஷ்ணஸூநுநா || தலையானவெட்டெழுத்திற் பிறந்து சரணாகதித்தாய் முலையாரமுதில் வளர்ந்தபிரான் முடும்பைக்கதிபன் மலையார் திருப்புயத்தான் மணவாளன் மலரடிக்கே நிலையான நெஞ்சம் பெற்றேயும்பர் வாழ்வு நிலைபெற்றதே. திருமந்த்ர ப்ரகரணம் அவதாரிகை ஆத்மத்ரைவித்யம் ஒரு கடல்துறையிலே படுகிற முத்துமாணிக்கங்களிலே சில ஒளியை யுடையவாய். சில […]