சரமோபாய தாத்பர்யம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: நாலூராச்சான் பிள்ளை அருளிச்செய்த சரமோபாய தாத்பர்யம் சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் | யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் || பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத்சரணாரவிந்தப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி , தத்சித்யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானாரபிமானத் திலே ஒதுங்கி , தத்விஷய ப்ரபத்தி நிஷ்டையையுடையவனாயிருக்க வேணும் . பகவத் ப்ராப்திரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத்யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க , அத்தை விட்டு […]