கலியனருளப்பாடு
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த கலியனருளப்பாடு ஶ்ரிய:பதியாய், அவாப்த ஸமஸ்தகாமனாய், ஸ்ரீ வைகுண்ட நிகேதநனாய், ஸமஸ்த கல்யாணகுண பரிபூர்ணனாயிருக்கிற ஸர்வேஶ்வரன் ஸகல ஆத்மாக்களோடு தனக்குண்டான ஸம்பந்த மொத்திருக்க, சிலர் தன்னை யநுபவித்து வாழ்ந்தும், சிலர் இழந்து கொண்டு அசித் கல்பராய்ப் போரவும் கண்டு திருவுள்ளம் கலங்கி இவர்கள் நம்மைக் கிட்டி யநுபவிக்கும் விரகேதோ ? என்று பார்த்து, ஸமகாலீநர்க்கு ஆஶ்ரயணோபயோகியான விபவங்கள் போலன்றிக்கே “பின்னானார் வணங்கும் சோதி” என்கிறபடியே எல்லாக் காலத்திலும் எல்லா தேஶங்களிலும் […]