மாணிக்கமாலை
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த மாணிக்கமாலை ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலப ஸ்ரீதரஸ் ஸதா || “தை வாதீநம் ஜகத் ஸர்வம் மந்த்ராதீநந்து தைவதம் தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம்” என்கிறபடியே உபயவிபூதியும் ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கும். ஈஶ்வரன் திரு மந்த்ரம் இட்ட வழக்காயிருக்கும். திருமந்த்ரம் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கும். ஆகையாலே, உபயவிபூதிக்கும் நிர்வாஹகனான ஈஶ்வரனும், அவனை ப்ரதிபாதிக்கிற திருமந்த்ரமும் ஆசார்யனிட்ட வழக்காகையாலே திருமந்திரத்தால் ப்ரதிபாதிக்கிற ப்ராப்ய ப்ராபங்க ளிரண்டும் ஆசார்யனாலே என்னத்தட்டில்லை. ஆசார்யனாவான்: […]