நவரத்நமாலை
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த நவரத்நமாலை ஶரணாகதனானவன் -1. தன்னையும், 2. தனக்கு விரோதியான தேஹத்தையும், 3. தேஹத்தைப் பற்றிவரும் பந்துக்களையும், 4. ஸம் ஸாரிகளையும், 5. தேவதாந்தரங்களையும், 6. ஸ்ரீவைஷ்ணவர்களையும், 7, ஆசார்யனையும், 8. பிராட்டியையும், 8. ஈஶ்வரனையும் நினைத் திருக்கும்படி எங்ஙனேயென்னில் உடம்பில் வேறுபட்டு நித்யனாய், ஒருபடிப்பட்டு அணுவாய், ஜ்ஞாநத்தையும் ஆநந்தத்தையும் வடிவாகவுடையனாய், ஜ்ஞாநத்துக்கும் ஆநந்தத்துக்கும் இருப்பிடமாய், எம்பெருமானை யொழிய வேறொன்று நினைத்தல் சொல்லுதல் செய்யமாட்டாதே எம்பெருமானுக்கேயுரியனாய், தன் காரியத்துக்குத் தான் கடவனன் றிக்கே அவனையே பலமாகவுடையனாயிருக்குமென்று தன்னை […]