ப்ரமேயஶேகரம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த ப்ரமேயஶேகரம் நிர்ஹேதுக பகவத்கடாக்ஷமடியாக அஜ்ஞாத ஸுக்ருதமுண்டாம் ; அதடியாக அத்வேஷமுண்டாம் ; அதடியாக பகவத்பாகவத விஷயங் களில் ஆபிமுக்யமுண்டாம்; ஆபிமுக்யமுண்டானவாறே த்யாஜ்யோ பாதேயவிபாக ஜ்ஞாநத்தில் கௌதுகமுண்டாம்; அத்தாலே ஸாத்விக ஸம்பாஷணமுண்டாம் ; அத்தாலே ஸதாசார்ய ஸமாஶ்ரயணமுண் டாம்; அதுண்டானவாறே த்யாஜ்யோபாதேய நிஶ்சயமுண்டாம்; அதுண்டானவாறே ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும், பரமப்ராப்யத் தில் அபிநிவேஶமுமுண்டாம்; அநந்தரம், ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும், பரமப்ராப்ய ஸித்திக்குமடியான ஸித்தோபாய ஸ்வீகாரமுண்டாம்; அநந்தரம், பகவத்ப்ராப்தியிலே த்வரையுண்டாம்; அநந்தரம், 1. “அஹம் ஸ்மராமி” என்கிறபடியே – ஈஶ்வரஸ்ம்ருதிக்கு விஷயபூதனாம்; […]