ரஹஸ்யத்ரய விவரணம்
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த ரஹஸ்யத்ரய விவரணம் (இந்த க்ரந்தம் ‘ரஹஸ்யத்ரய தீ3பிகை’யில் சிறிது மாறுதல்களுடன் காணப்படுகிறது.) ஓரொன்றில் அநுக்தங்களாய், அவஶ்யம் ஜ்ஞாதவ்யங்களான அர்த்த2விஶேஷங்களுக்கு விவரணமாகையாலே, அதிலே ரஹஸ்யத்ரயமும் ஒருவனுக்கு ஜ்ஞாதவ்யமாகக்கடவது. எத்தை எது விவரிக்கிறதென்னில்:- ஸவிப4க்திகமான அகாரத்தை அநந்தராக்ஷரத்3வயம் விவரிக்கிறது. அவ்வக்ஷரத்3வயத்தையும் மந்த்ரஶேஷபத3த்3வயம் விவரிக்கிறது. அப்பத3த்3வயத்தையும் த்3வயத்தில் வாக்யத்3வயம் விவரிக்கிறது. அவ்வாக்யத்3வத்தையும் சரமஶ்லோகத்தில் அர்த்த4த்3வயம் விவரிக்கிறது. அதில் அகாரத்தை அக்ஷரத்3வயத்தில் ப்ரத2மாக்ஷரம் விவரிக்கிறது. விப4க்தியை அநந்தராக்ஷரம் விவரிக்கிறது. இதில் ப்ரத2மாக்ஷரத்தை ப்ரத2மபத3ம் விவரிக்கிறது. அநந்தராக்ஷரத்தை அநத்ரபத3ம் […]