ஸகலப்ரமாணதாத்பர்யம்
பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸகலப்ரமாணதாத்பர்யம். ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவோ | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ் ஸதா || ஶ்ரிய:பதியாய், விஷ்ணுவாஸுதேவ நாராயணாதிஶப்தவாச்யமான ப்ரஹ்மமொன்றுமே முமுக்ஷுவுக்கு ஜ்ஞாதவ்யமென்று ஸகல ப்ரமாணதாத்பர்யம். அந்த ப்ரஹ்மந்தான் விஶேஷணமென்றும் விஶேஷ்யமென்றும் த்விவிதமாயிருக்கும். விஶேஷணமாகிறது :- விஶேஷ்யத்தோடே பிரிந்திராத தர்மம். விஶேஷ்யமாகிறது:- ஸ்வவிஶேஷணத்தோடே பிரிந்திராத தர்மி விஶேஷணமும், போகோபகரணமென்றும், லீலோபகரணமென்றும் த்விவிதமாயிருக் கும். போகமாகிறது. இஷ்டபலாநுபவம். லீலையாகிறது. காலாந்தரத் திலே ஒரு பலமன்றிக்கே தாத்காலிக ரஸஹேதுவான வ்யாபாரம். போகோபகரணமும், சேதநமென்றும், அசேதநமென்றும் த்விவிதம். சேதநமாகிறது, […]