ஸப்தகாதை Part 2
ஸ்ரீமதேராமாநுஜாயநம: விளாஞ்சோலைப்பிள்ளைஅருளிச்செய்த ஸப்தகாதை (Continued) பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த வ்யாக்யாநம். மூ.- பார்த்தகுருவினளவில் பரிவின்றி சீர்த்தமிகு ஞானமெல்லாம் சேர்ந்தாலும் – கார்த்தகடல் மண்ணின் மேல் துன்புற்று மங்குமே தேங்காமல் நண்னுமேகீழாநரகு. (௩) அவ:- மூன்றாம்பாட்டு. ஸ்வாசார்யன்பக்கல்ப்ரேம மற்றிருந்தானேயாகிலும் அவனுபதேசத்தாலே அர்த்தபஞ்சகம் முத லாகத் தாத்பர்யங்களோடினது, ஞானக்கலைகளான அவ்வவஶாஸ்த்ரங்களைப் பரக்கக்கற்று, அத்தால்பிறந்த ஜ்ஞாநவிஶேஷத்தாலே இவனுக்கீடேறக் குறையென்னென்ன;அந்தப்ரேமமின்றிக்கே யுண்டாயிருக்கிற ஜ்ஞாநவிஶேஷமானது – ஶ்ருதம் தஸ்யஸர்வம் குஞ்ஜரஶௌசவத்” என்கிறபடியே கஜஸ்நாநத்தோபாதி நிரர்த்தகமாயிருப்பதொன்றாகையாலே; ஆதலால், (உபதேசரத்தினமாலை) “நண்ணாரவர்கள் திருநாடு” என்னும்படி அத:பதநமொன்றுமேகாணும் இவர்களுக்குப் […]
ஸப்தகாதை Part 1
ஸ்ரீமதேராமாநுஜாயநம: விளாஞ்சோலைப்பிள்ளைஅருளிச்செய்த ஸப்தகாதை தனியன். வாழி நலந்திகழு நாரணதாதனருள் வாழி யவனமுதவாய்மொழிகள் – வாழியே ஏறு திருவுடையா னெந்தையுலகாரியன்சொல் தேறு திருவுடையான் சீர். பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த வ்யாக்யாநம். அவதாரிகை. *உலகங்கட்கெல்லாமோருயிரான திருவரங்கச்செல்வனாருக்குங்கூட(கீதை-எ-கஅ) ‘ “ஜ்ஞாநீத்வாத்மைவமேமதம்” என்கிற திருமுகப்படியே மிகவும் தாரகராய்க்கொண்டு, அனைவருமுஜ்ஜீவிக்கும்படி அத்திகிரியருளாளரனுமதி முன்னாக ப்ரபந்தீகரித்தருளின ஶ்ரீவசநபூஷண ப்ரமுகநிகிலரஹஸ்யக்ரந்தமுகேந சரமப்ரமாணப்ரமேய ப்ரமாத்ருவைபவங்களை ஸப்ரகாரமாகவும் ப்ரகாஶிப்பித்தருளின பிள்ளைலோகாசார்யருடைய திருவடிகளிலே ஆஸ்ரயித்து, அவதாரவிசேஷமான அவருடைய விசேஷ கடாக்ஷத்தாலே *தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலையான திருவாய் மொழியையும், அதுக்கு அங்கோபாங்கங்களான * இருந்தமிழ்நூற்புலவர்பனுவல்களையும், மற்றஎண்மர் […]