செய்யதாமரைத் தாளிணை வ்யாக்2யானம்
Page-1 செய்யதாமரைத் தாளிணை வ்யாக்2யானம் श्रीमते रम्यजामातृमुनये विदधे नम:। यत्स्मृतिस्सर्वसिद्धीनामन्तराय निवारिणी।। ஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநயே வித3தே4 நம: । யத் ஸ்ம்ருதிஸ் ஸர்வஸித்3தீ4நாம் அந்தராய நிவாரிணீ ।। ஶ்ரீஶைலேஶத3யாபாத்ரமென்று தொடங்கி அருளிச் செய்த ஸேனை முதலியார் நாயனார், ஜீயருடைய கல்யாண கு3ணங்களிலே தோற்று அடிமைபுக்கபடியை ப்ரகாஶிப்பிக்கிறாராய் நின்றார். ________________________________________________________________ யாவரொருவரைப் பற்றிய நினைவு எல்லா வெற்றிகளுக்கும் இடையூறுகளை நீக்கிவிடுமோ அந்த ஶ்ரீமந் மணவாளமாமுனிகளை வணங்குகிறேன். “ஶ்ரீஶைலேஶ தயாபாத்ரம் […]