ஶ்ரிய:பதிப்படி
ஶ்ரிய:பதிப்படி திருமந்த்ர ப்ரகணம் உபோத்காதம் :– ஶ்ரிய: பதியாய் ஸர்வஸ்வாமியாய் யிருந்துள ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூபத்தையும் அவனுக்கு அநந்யஶேஷமான தந்தாமுடைய ஸ்வரூபத்தையும் யதாவஸ்திதமாக ப்ரதிபத்திபண்ணி நித்யமுக்தரைப்போலே ஸ்வரூபாநுரூபமான பரிமாற்றத்திலே அந்வயித்து வாழப்பெறாதே இருவருடைய ஸ்வரூபத்தையும் விபரீதமாக ப்ரதிபத்திபண்ணி விபரீத வ்ருத்தப்ரவ்ருத்தராய் ஸ்வரூபவிரோதியான ப்ராக்ருத போகத்திலே மண்டி தாபத்ரய தப்தராய்ப் போருகிற பத்தாத்மாக்களிலே ஆரேனும் ஒருவனுக்கு நிர்ஹேதுக பகவத் கடாக்ஷமடியாக அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாந ஜநகமான ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலைசாய்ந்து யதாஜ்ஞாந ஜநகமான ஸத்வம் தலையெடுத்து ஸத்வ கார்யமான வெளிச் சிறப்புப் […]