தனி சரமம்
தனி சரமம் அவதாரிகை ஸர்வேஶ்வரன், ஜகத்ஸ்ருஷ்டிபண்ணி, வேதோபதேஶத்தைப்பண்ணியருளி, தத்வாரா சேதநருடைய ருச்யநுகூலமாக புருஷார்த்தங்களையும் தத்ஸாதநங்களையும் காட்டி, அவ்வழியாலேதானே ஸாத்யமும் ஸாதநமுமென்கிற ஶாஸ்த்ரத்தையும் உபதேஶித்து விடுகையன்றிக்கே, பரவ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களினாலும் அதிமானுஷ சேஷ்டிதங்களாலும் தானே ரக்ஷகனென்றுமிடத்தைக் காட்டி இத்தனையும் ” செய்த விடத்திலும், “ஆஸுரீம் யோநி மாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி மாமப்ராப்யைவ கௌந்தேய ததோயாந்த்யதமாம் கதிம்” என்று அஸுர ப்ரக்ருதிகளாய், இவ்வாத்மாக்கள் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களையே புருஷார்த்தங்களாகவும், அவை ஸம்பாதிக்குமிடத்திலும் தாங்களே ஸம்பாதித்து கொள்ளுவதாகவும் கோலி, அவை […]