தனி த்வயம்
ஶ்ரீமதே ராமானுஜாய நம: தனி த்வயம் –அவதாரிகை லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே । ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ।। ஸகலவேத ஶாஸ்த்ரங்களும் தாமஸ ராஜஸ ஸாத்விக புருஷர்களுக்கு அவ்வோ குணாநுகுணமாக புருஷார்த்தங்களை விதித்தது. எல்லார்க்குமொக்க அபிமதமான மோக்ஷம் தான் து:க நிவ்ருத்தியும் ஸுகப்ராப்தியுமிறே, இதுவிறே ப்ரியமாகிறது. இத்தை லபிக்குமுபாயத்தை ஹிதமென்கிறது. இதில்தாமஸ புருஷர்கள் பரஹிம்ஸையை ஸாதநமாகக்கொண்டு அத்தாலே வரும் தனாதிகளை ப்ரியமான புருஷார்த்தமாக நினைத்திருப்பர்கள் -இதுக்கு வழியிட்டுக்கொடுக்கும் வேதமும் ஶ்யேந விதியென்கிற முகத்தாலே. ராஜஸ […]