தத்த்வ ஶேகரம்
தத்த்வ ஶேகரம் ப்ரதமம் பரஸ்வரூபநிர்ணய ப்ரகரணம் உபோத்காதம் பும்ஸ்பர்ஶ க்லேஶ ஸம்பாவநாகந்த விதுரமாய் ப்ரத்யக்ஷாதி ப்ரமாண விலக்ஷணமாயிருந்துள்ள நிகில வேதஜாதத்துக்கும் ததுபப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளுக்கும் க்ருத்யம் ஸகல ஸம்ஸாரி சேதனர்க்கும் தத்வ ஜ்ஞாநத்தை ஜநிப்பிக்கை. தத்த்வஜ்ஞாநமாவது-ஸர்வஸ்மாத் பரனான நாராயணனுக்கு, ஸர்வப்ரகார பரதந்த்ரரான ஸர்வாத்மாக்களினுடையவும் ஸ்வரூபதுக்கநுரூப புருஷார்த்தமான கைங்கர்யத்தை, அநாதியாக ப்ரதிபந்தித்துக்கொண்டு போருகிற கர்ம ஸம்பந்தத்தை நிவர்திப்பிக்குமுபாயம் தச்சரணாரவிந்த ஶரணாகதியென்கிற நிரூபண ஜ்ஞாநவிஶேஷம். நாராயணன் ஸர்வஸ்மாத்பரனானபடி யெங்ஙனே என்னில்; பரத்வ சின்னங்களான ஜகத்காரணத்வ முமுக்ஷோ பாஸ்யத்வ […]