யாத்ருச்சிகப்படி
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த யாத்ருச்சிகப்படி திருமந்த்ரப்ரகரணம் யாத்ருச்சிக பகவத் கடாக்ஷத்தாலே பகவதாபிமுக்யம் பிறந்து ஸதாசார்ய ஸமாஶ்ரயணம் பண்ணின முமுக்ஷுவுக்கு ரஹஸ்ய த்ரயமும் அநுஸந்தேயம். அதில், ஸ்வரூபஶோதநார்த்தமாக ப்ரவ்ருத்தமாகையாலே ப்ரதமத்திலே அநுஸந்தேயமான திருமந்த்ரம் – ஸ்வரூபத்தையும், ஸ்வரூபாநுரூபமான பரமபுருஷார்த்தத்தையும் ப்ரதிபாதிக்கிறது. அப்பரமபுருஷார்த்தத்துக்கு அநுரூபமான சரமஸாதந ஸ்வீகாரத்தை விதிக்கிறது – சரமஶ்லோகம். விஹிதோபாய பரிக்ரஹத்தையும், ஸப்ரகார புருஷார்த்த ப்ரகாரத் தையும் ப்ரதிபாதிக்கிறது – த்வயம். அதில் திருமந்த்ரம் – எட்டுத் திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக் கும். அதில் முதல் பதமான ப்ரணவம் – […]