ஶ்ரீ தொட்டாசார்யர் 01
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஶ்ரீமத் வரவரமுநயே நம: ஶ்ரீ ஶுத்த ஸத்வம் தொட்டாசார்யர் அருளிச்செய்த யதிராஜ விம்ஶதி வ்யாக்யானம் தனியன் எறும்பியிலப்பா அருளிச்செய்தது ய: ஸ்துதிம் யதிபதிப்ரஸாதி3நீம் வ்யாஜஹார யதிராஜவிம்ஶதிம் தம் ப்ரபந்நஜநசாதகாம்பு3த3ம் நௌமி ஸௌம்யவரயோகி3புங்க3வம் வ்யாக்யானம் – (ய:) “யதிவரதத்வவிதே:” (வரவரமுநி ஶதகம் 2) என்றும் “கருணைக ஸிந்தோ:” (வரவரமுநி ஶதகம்- 100) என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமானாருடைய அவதாரவிஶேஷமாகவும், அவர் தம்முடைய யாதாத்ம்யதர்ஶியாகவும், தயாம்புராஶியாகவும் ப்ரஸித்தரான யாதொரு அழகிய மணவாள மாமுனிகள். யச்சப்தம் ப்ரஸித்த பராமர்ஶியிறே. (யதிபதிப்ரஸாதிநீம்) […]