ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பகவத் விஷயம்
தனியன்கள்
அழகியமணவாளனருளிச்செய்தது
श्रीशैलेशदयापात्रं धीभक्त्यादिगुणार्णवम् |
यतीन्द्रप्रवणं वन्दे रम्यजामातरं मुनिम् ||
ஸ்ரீஶைலேச த2யாபாத்ரம் தீ4 ப4க்த்யாதி3 கு3ணார்ணவம் |
யதீந்த்3ர ப்ரவணம் வந்தே3 ரம்யஜாமாதரம் முநிம் ||
பரமகாருணிகரான பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த
தனியன் வ்யாக்2யாநம்
(ஸ்ரீஶைலேசேத்யாதி3) 2. “நமச்ஸ்ரீசைலநாதா2ய குந்தீநகர ஜந்மநே | ப்ரஸாத3லப்3த்4 பரமப்ராப்ய கைங்கர்ய் சாலிநே ||” என்றும், 3. “பரமப்ராப்ய பராங்குச சரணபங்கஜ விவித4 கைங்கர்யகரண சாதுர்ய து4ர்ய ஸ்ரீசைல வரதே3சிகா தீ4ச!” என்றும், a “அநந்தன் திருமலையாழ்வானென வந்தவதரித்து” என்றும் அவதார விசேஷமாகச் சொல்லப்படுமவராய், சரமபர்வமான ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யத்தை அவரருளாலே லபி4த்து வாழுமவராய், அதிலும் அவர் திருவடிகளான எதிராசர் செம்பொற்பாதம் இரவுபகல் மறவாமலிறைஞ்சியேத்தும் எழிலையுடைய திருவாய்மொழிப் பிள்ளை சீரருளுக்கு (ஆர்த்தி 21) , ஏற்றகலமாயுள்ளவரை (திருப்பாவை 21). 4. ‘’ப4வ்ய ஸ்ரீசைல நா தா2ர்ய பரிபூர்ணக்ருபாஜுஷே’’ என்னக்கடவதிறே. ஸ்ரீசைல பூர்ணர் க்ருபையாலும், ஸ்ரீசைலதே3சிகர் த3யையாலும், இராமாயணமென்னும் பத்தி வெள்ளமும் (இரா-நூ 37), தீர்த்தங்களாயிரமான * (7-10-11) திருவாய்மொழியும் யதீந்த்ர தத்ப்ரவணரிடங்களிலே குடிகொண்டு தேங்கிற்று. இவரும், தன்பத்தியென்னும் வீட்டின் கண் வைத்த (இரா-நூ 29) பின்பிறே பெருகி வெள்ளமிட்டு விளைந்தது; 1. ‘’ஸ்ரீராமாயண து3க்3த4ஸிந்து4:’’; ‘’பாலோடமுதன்னவாயிரம் ’’ (8-6-11) இராமாநுசனிறே யிவரும். (தீ4ப4க்த்யாதி3கு3ணார்ணவம்) மதிநலங்கள் இவருக்குப் பிள்ளையருளால் உண்டாயிற்று. 2. “ப்ரக்ருஷ்டவிஜ்ஞாந ப3லை கதா4மநி’’ என்றும், 3. “லக்ஷ்மணஸ்ய ச தீ4மத: ’’ 4. “நதே3வ லோகாக்ரமணம்’’ என்று தொடங்கி, 5. “த்வயா விநா ந காமயே’’ *ஆகர எண் மாத்திரம் உள்ளவை திருவாய்மொழிலுள்ளவை எனக் கொள்க என்றுமிறே ஏதத்பூர்வாவதாரங்களிலும் ஜ்ஞாநப4க்த்யாதி3கள் பூர்ணமாயிருப்பது. ஆராவன்பிளையவனிறே (பெரு-திரு 8-5). அச்யுதபதா2ம் பு3ஜயுக்2ம ருக்ம வ்யாமோஹாதி3களுண்டிறேயிங்கே; அவ்வவதாரத்திற்குறைகளும் தீர்க்க அவதரித்தவிடத்திலும், பெரிய பெருமாள் விஷயத்துக்கநுரூபமாகப் பெரிஜீயருடைய அந்த ப்ரேமாதி3கள் இரட்டித்திறே யிருப்பது. 6. நிர்மலகு3ணமணி க3ண வருணாலய, 7. “யதா2 ரத்நாநிஜலதே: ’’ 8. “கு3ணா நாமாகர: ’’ என்னக்கடவதிறே, 9. ஸௌமித்ரிர்மே ஸ க2லுப4க3வாந் ஸௌம்ய ஜாமாத்ருயோகீ3’’ என்றும், 10. “யதிவர புநரவதார: ’’ என்றுஞ் சொல்லக்கடவதிறே.
இனி, நம்பெருமாளிடத்தில் ப்ராவண்யம், எல்லையான எம்பெருமானாரளவும் வர்த்தி4த்தபடி சொல்லுகிறது; ஸாத்4ய விவ்ருத்3தி4யாய்க்கொண்டு சரமபர்வம் வரக்கடவதாயிருக்கும். (யதீந்த்3ரப்ரவணம்) அந்த ப்ராவண்யந்தான், 11. “யதீந்த்3ர ப்ரவணாயாஸ்மத்3கு3ரவே கு3ணசாலிநே’’ என்று விசேஷ ஜ்ஞரான வேதா3ந்தாசார்யரும் விக்ருதராய்ப்பேசி அநுப4விக்கும் படியாயிருக்கும். இவர்தாம் 12. நிஜதேசிக ஸப்த3சித ஸம்யமி து4ரந்த4ர நிஹித ஸகல நிஹப4ர வரவரமுநிவரரிறே. அவர் பராங்குச பாத3ப4க்தர்; இவர் யதீந்த்3ரப்ரவணர்; அந்த ப்ராவண்ய மிறே இவரை அனைவரும் கால் கட்டுகிறது. (வந்தே3 ரம்ய ஜாமாதரம் முநிம்) 13. “வந்தே3 முகுந்தப்ரியாம்’’ என்கிற்தெல்லா மிவர்க்கு இவ்விஷயத்திலேயாயிற்று. 14. “ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநயே வித3தே4 நம: ’’ என்னுமாபோலே திருநாமத்தை அநுஸந்தி4த்துத் திருவடிகளிலே விழுகிறார். இவருடைய அநுஸந்தா4ந விஷயமான மந்த்ரமும் ஸ்துதி ப்ரணாமமு மிருக்கும்படி இதுவாயிற்று. 15. “வவந்தே3 நியதோ முநிம்’’ என்கிறபடியே சேஷசேஷிகளுடைய ஸத்தாஸம்ருத்3தி4கள் இவர் ஸங்கல்பாதீ4நைகளாயிருக்கும்படியைப்பற்ற (முநி) யென்கிறது.
இப்படிகளால் ஏற்றங்களையுடைய இவர் ஸ்துதிரூபமான இவர் தனியன் தான், 16. “யத்3வேதா3தௌ3 ஸ்வர: ப்ரோக்த: வேதா3ந்தே ச ப்ரதிஷ்டி2த: ’’ என்று வேதத்துக்கோமென்னு மாபோலே (உ ப – 19), த்3ராவிட3 வேத3தத3ங்கோ3பாங்க3ங்களென்ன, ஏதத்3வ்யாக்2யாந விசேஷங்களென்ன, ஏதத்ஸாரபூ4தமான ரஹஸ்யங்களென்ன, இவற்றினுடைய ஆத்3யந்தங்களிலே அகி2ல தி3வ்யதே3ச விலக்ஷணராலும் அநுஸந்தி4க்கப்படுமதாயிருக்கும். இவருடைய ஸகல தி3வ்யப்ரப்3ந்த4ப்ரவர்த்தகத்வம் பண்டு பலவிடங்களிலே கண்டு கொள்வது. அதுக்குமேலே உப4யப்ரதா4ந ப்ரணவமான உறைகோயிலிலேயிறே இவருதி3த்தருளிற்று (ஆசா – 3); இவருக்கிவ்வைப4வம் ஜந்மஸித்3த4ம். இது ப்ரணவார்த்த2மாகிறது, பிதாபுத்ர ரக்ஷ்யரக்ஷக சேஷசேஷி ஸம்ப3ந்த4த்ரயமும் இவரிடத்திலே த3ர்ஸிக்கையாயிருக்கையாலே. 1. “அகாரஸ்சித்ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே | உகாரஸ்சித்ஸ்வரூபாயா: ச்ரியோ வாசீ ததா2 விது3: || மகாரஸ்து தயோர்தா2ஸ இதி ப்ரணவ லக்ஷணம் ||’’ என்கையாலே அகாரம் ப4க3வத்3வாசகமாயும், மகாரம் சேதநவாசகமாயும், உகாரம் உப4யஸம்ப்3ந்த4 ப்ரகாசிகையை யுஞ்சொல்லும்; “அவ்வாணவர்க்கு மவ்வானவரெல்லாமுவ்வான வரடிமையென்றுரைத்தார்’’ (ப்ரமே-1), என்னக் கடவதிறே. விளக்குப்பொன் போலே-நடுநிலைத்தீபமிறே. 2. ‘’மங்க3ள தீ3பரேகா2ம்“ 3. “ச்ரியோ க4டக்பா4வத:’’ 4. “ச்ரியா க4டிகயா’’ என்று ஏதத் ஸாபேக்ஷமாயிறேயிருப்பது. 5. ஜக3தோ ஹித சிந்தாயை ஜாக்3ரத ச்சேஷசாயிந: | அவதாரேஷ்வந்யதமம் வித்3தி4 ஸௌம்யவரம் முநிம் ||’’ 6. ‘’ஆத்மா சேஷீ ப4வஸி ப4க3வந் நாந்தரச் ஸாஸிதா த்வம்|’’ 7. ‘’தேவீ லக்ஷ்மீர் ப4வஸி த3யயா வத்ஸலத்வேந ச த்வம்’’ 8. ‘’ஸௌமித்ரிர் மே ஸ க2லு ப4க3வாந் சௌம்ய ஜாமாத்ருயோகீ3’’ என்னக்கடவதிறே. இப்படி முப்புரி யூட்டியிறே இவரவதாரவைப4வமிருப்பது.
இன்னமுமிஶ்லோகத்திலே பத3ங்கள் தோறும் இவ்வர்த்த2ம் காணலாயிறேயிருப்பது. எங்ஙனேயென்னில்; ஸ்ரீஶைலேஶ வென்கையாலே – அகாரவாச்யனான ஸர்வேஶ்வரனைச்சொல்லி, த3யாபாத்ரமென்கையாலே – ப4க3வத3நந்யார்ஹ சேஷபூ4தனான சேதநன் – அவன் க்ருபைக்குப் பாத்ரமென்னுமத்தைச் சொல்லுகிறது. அடியில் பத3த்தில் – ஆசார்யனை அவன்றானாகச் சொல்லுகிறது விசேஷாதி4ஷ்டா2நத்தாலே; 9. தத்3கு3ணஸாரத் வாத்தத்3வ்யப தே3சம் போலே ; 10. “அஜ்ஞாநத்4வாந்தரோதா4த்’’ இத்யாதி3. 11. “ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத்’’. தீ4ப4க்த்யாதி3 கு3ணார்ணவ மென்கிறவிப்பத3த்தாலும் – “தாமரையாள் கேள்வ னொருவனையே நோக்குமுணர்வு’’ (முத-67), என்றும், “ஆதியாஞ்சோதிக் கேயாராத காதல்,’’ (2-1-11) என்றும், “உன்னித்து மற்றொரு தெய்வந் தொழாள்’’ (4-6-10) என்றுஞ் சொல்லுகிறபடியே ஜ்ஞாநப4க்தி வைராக்3 யங்களை ப்ரதிபாதி3க்கையாலே அகாரோதி3த ப4க3வச்சே2ஷத் வத்தை ப4க்தியாலே சொல்லுகிறது. ஸ்வரூபமும் e உன்னிணைத் தாமரைகட்கன்புருகி நிற்குமதிறே (7-1-10); 12. அகிஞ்சித்கரஸ்ய சேஷத் வாநுபபத்தே: . ஜ்ஞாநமாவது- 13. தத்ஜ்ஞாநமிறே; ப4க3வதே3 காவலம்பி3யாயிறே ஜ்ஞாநமிருப்பது; வைராக்3யமாவது – தே3வதாந்தரத்யாக3 ப்ரதா4நமாயிறே யிருப்பது.
(யதீந்த்3ரப்ரவணம்) யதீந்த்3ரராகையாவது – ஸ்வஸ்வரூபத்தை அநுஸந்தி4த்துத் துரும்புநறுக்காதிருக்குமவர்களைத் f திருத்திருமகள் கேள்வனுக்காக்கி அடிமைசெய்விக்கை. தம்மளவிலும் (இரா – 78)-யதிசப்3த3ம் அவிஶிஷ்டமாகையாலே, ததி3ந்த்3ரராகையைப்பற்ற ப்ரவணராகிறார்; ப4க3வத3நந்யார்ஹசேஷத்வம் ததீ3யபர்யந்தமிறே. அன்றிக்கே, (யதீந்த்3ர ப்ரவணம்) அஸாதா4ரணமான ராமாநுஜ சப்3த3பர்யாய வாசகமாயிறே இத்திருநாமமிருப்பது; அதுவும் ப்ரணவார்த்த2ம்; ராமசப்3த3த்தாலே – அகாரார்த்த2மும், அநுஜசப்3த3த்தாலே-தச்ச2ந்தா3நுவர்த்தியாயிருக்கிற ஆத்ம ஸ்வரூபமுமிறே சொல்லுகிறது. 1. “ ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்4நா’’ என்றிறே ப்ராவண்யமிருப்பது. (வந்தே3 ரம்ய ஜாமாதரம் முநிம்) இத்தாலும் – உக்த்தார்த்த3மே சொல்லுகிறது. ரம்யஜாமாத்ரு சப்3த3த்தாலே – அகாரவாச்யனைச்சொல்லி முநிசப்3த3த்தாலே தத3நந்யார்ஹசேஷத்வ ஜ்ஞாநத்தையுடைய பரமசேதநனைச் சொல்லுகிறது. 2. ரம்யஜாமாதுர் மநநம் கரோதீதி-ரம்யஜாமாத்ருமுநி: ஆக இவையெல்லாவற்றாலும்-ப்ரணவார்த்த2மாக அநுஸந்தி4க்கத்தட்டில்லை.
3.“அயோத்4யா மது4ரா மாயா’’ என்றும், a “வடதிசைமதுரை… அயோத்தி’’ (பெரியா 4-7-9) என்றும் அவதாரஸ்த2லத்தைச் சொல்லுகிறபடியே, கோயிலுக்கு வடக்காயிருக்கிற வடதிருவேங்கடநாட்டில் b ஏரார் பெரும்பூதூரிலே (உப33) எம்பெருமானார் வடமொழியையும் தென்மொழி யையும் வெளிட அவதரித்தருளினார்; c “நாரணனைக் காட்டிய வேதங்களிப்புற்றது தென்குருகைவள்ளல் வாட்டமிலா வண்டமிழ் மறை வாழ்ந்தது’’ (இரா 54) என்னக்கடவதிறே, “அரங்கநகரும் மேவு திருநகரியும் வாழவந்தமணவாளமாமுனி’’ என்கிறபடியே தென்னாட்டுத்திலதமான (10-6-7) தென்குருகூரிலே பெரிய ஜீயர் தென் மொழியை வெளியிடவே அவதரித்தருளினார்; “விரவுதமிழ்மறை மொழியும் வடமொழியும் வெளியாய்ச்செய்யும் விசித்ர வ்யாக்யாந சேஷன்’’ என்னக்கடவதிறே; 4. “ஆர்யாச்ச்2ரீஶைலநாதா2த்’’ இத்யாதி3 இவருக்கும் இரண்டினுடைய ப்ரவர்த்தகத்வமுண்டே யாகிலும், ஊற்றத்தைப்பற்ற ஒன்றிலேயோதுகிறது. உடையவருடைய அவதாரவிசேஷமகையாலும், மற்றும் ஸர்வதா2ஸாம்யத்தாலும் 5. யதிவரபுநரவதாரமாகையாலே, தீ3ர்க்க4 சரணாக3தியை * ஈன்றமுதற்றாயினுடைய * மாதாபிதா போலே * யோநித்யமும் * ஸ்ரீசைலேசமும்(* தனியன்கள்.) நடந்துசெல்லுகிறது.
இவரும் ஜந்மபூ4மியைவிட்டு வந்து காவிரிநடுவுபாட்டிலே (திருமாலை 23) கருமணியைக்கண்டு (பெரு 1-1) தந்மத்4யஸ்த்2ராய், வைஷ்ணவஸ்ரீயோடே வாழ்ந்துகொண்டிருந்து, ஸ்ரீரங்க3ஸ்ரீயையும் ஶ்ருதிஸாக3ரத்தையும் த்3ராவிட3வேத3ஸாக3ரத்தையும் பெருகப்பண்ணிப் பெருமாளை நோக்கிப்போந்தார்; அவர் எல்லாவுயிர்கட்கும் நாதனரங்க னென்னும் (இரா 91) பொருள்சுரந்தார்; இவர் – பல்லுயிர்க்கும் (இரா 95) விண்ணின் தலை நின்று வீடளிப்பான் c அனைத்துலகும் வாழப்பிறந்த எதிராசமாமுனிவ (ஆர்த்தி 41) னென்னுமர்த்ததை யருள் சுரந்தார்; ஜீயரவதரித்து வெளியிடாத போது கண்ணொந்தாரகமாயிறே உடையவர் வைப4வமிருப்பது; d இராமாநுசமுனிசெய்யகுன்றி லேற்றிய தீபமிறேயிவர். நர நாராயணாவதாரம்போலேயிறே இவர்களுடைய அவதாரமும். 1. “நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம்’’ 2. “ஸாக்ஷாந் நாராயணோதேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும்’’ 3. “யோத்3யாபி சாஸ்தே’’ 4. “தஸ்யாம் ஹி ஜாக3ர்த்தி’’. இரண்டுக்குமுண்டான த4ர்ம்யைக்ய முமப்படியே; ஸம்ப3ந்த4முமப்படியே; அவர் நாராயண வைப4வ ப்ரகாசகர், இவர் ராமாநுஜ வைப4வப்ரகாசகர்.
அவ்வவதாரத்திலுமிவ்வவதாரத்துக்கேற்றேமுண்டு, e “பிறப்பா யொளிவரு’’ (1-3-2). “நாராயண, ராமாநுஜ’’ என்றிறே சதுரக்ஷரிகளின் வாசியிருப்பது. இவர் சதுரரில் தலையாகையாலே சரமசதுரக்ஷரி யிலே நிலைநின்றார்; f “ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம்’’ (நான் 18) 5. “தஸ்மாந்மத்3ப4க்தப4க்தாஸ்ச பூஜ நீயா விசேஷத:’’ `அடியேன் சதிர்த்தேனின்றே,’ (கண் 5) “நம்புவார்பதி வைகுந்த்ங்காண்மினே’’ (கண் 11) ஆழ்வார்க்கு மதுரகவிகளும் சரமமான திருவடிகள் ராமாநுஜனானாப்போலே, அந்த ராமாநுஜனான இவர்க்கும் ஸ்ரீவத்ஸாங்காசார்யரிலும் சரமமான சரணங்கள் யதீந்த்3ர ப்ரவணரிறே; ஆகையால் சரமபர்வமான ஜீயர் விஷயமான இத்தனியனும் ஸகலவேத3ஸாரமான ப்ரபத்திபோலே நிரந்தராநு ஸந்தே4யமாகக்கடவது.
கூரத்தாழ்வான் அருளிச்செய்தது
लक्ष्मीनाथ समारम्भां नाथ यामुन मध्यमाम् |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरुगुरुपरम्पराम् ||
லக்ஷ்மீநாத2ஸமாரம்பா4ம் நாத2யாமுநமத்4யமாம் | அஸ்மதா3சார்யபர்யந்தாம் வந்தே3 கு3ருபரம்பராம் ||
(லக்ஷ்மீநாத2ஸமரம்பா4மித்யாதி3) இத்தனியன்தான், ஸர்வாத்மஹிதைஷியாய் ஆப்ததமராய் கு3ரூத்தமரான கூரத்தாழ்வான் அனைவர்க்கும் கு3ருபரம்ராநுஸந்தா4நத்தாலே உஜ்ஜீவநமுண்டாம்படி அருளிச்செய்ததாயிருக்கும்; ஆகையாலிறே ஸர்வசிஷ்டர்களும் இத்தை அங்கீ3கரித்து அநுஸந்தி4த்துக் கொண்டு போருகிறது.
(லக்ஷ்மீநாத2ஸமாராம்பா4ம்) அதில் முற்பட 7. “ச்ரீத4ராயாதி3 கு3ரவே’’ என்று, ரஹஸ்யத்ரயப்ரதிபாத3கத்வத்தாலே ப்ரத2மகு3ரு, ச்ரிய:பதி யான எம்பெருமானாகையாலே முற்பட அருளிச் செய்கிறார். “நர நாரணனாயுலகத்தறநூல் சிங்காமை விரித்தவன்’’ (பெரிய10-6-1) என்றும், “தன்னடி யார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடி யாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தாரென்பர்’’ (பெரியா4-9-2) என்றும் “பார்த்தனுக்கன்றருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று’’ (பெரிய9-9-8) “குருமுக மாய்’’ (பெரியா4-8-3) “பண்டே பரமன் பணித்த பணிவகை’’ (10-4-9) என்றுஞ்சொல்லக் கடவதிறே. 1. “கு3ருஸ்த்வமேஷ’’ 2. “கு3ரூரபி’’ 3. “ப4க்த முக்தக முக்தாஹாரம் மம கு3ரும்’’ “பீதகவாடைப்பிராணார் பிரமகுருவாகி வந்து’’ (பெரியா5-2-8) “அறியாதனவறித்த அத்தா’’ (2-3-2) “என்னைத்தீமனங் கெடுத்தாய்’’ (2-7-8) “மருவித்தொழும் மனமே தந்தாய்’’ (2-7-7) என்றாயிற்று அநுஸந்தி4த்துப் போருவது. பெரியபிராட்டியாருக்கு முற்படவாயிற்று ஸர்வேஸ்வர்ன் ஸ்ரீவிஷ்ணுலோகத்திலே த்3வயத்தை அருளிச்செய்தது. 4. “த்வத்த ஏவ மயா ஸ்ருத: ’’ என்றாளே; அவந்தானும் 5. “புரா மந்த்ரத்2வயம் ப்3ரஹ்மந் விஷ்ணுலோகே மஹாபுரே / தஸ்மிந்நந்த:புரே லக்ஷ்ம்யை மயா த3த்தம் ஸநாதநம் //’’ என்றருளிச்செய்தானிறே; அத்தாலும், க4டகத்வத்திலே முற்பாடுடைய-ளாகையாலும், மற்றையார்க்கு க4டகத்வம் அவளடியாகையாலும், “லக்ஷ்மீநாத2 ஸமாரம்பா4ம்’’ என்றுமிது2நச் சேர்த்தியாக அருளிச் செய்தது; “இறையுமகல கில்லேன்’’ (6-10-10) என்றிருக்கையாலே பிரிந்து நிலையில்லை; லக்ஷ்மிக்கு லக்ஷ்மீ தந்த்ரத்திலே ப்ரபத்தி ப்ரவர்த்தகத்வமுண்டிறே.
ஸமாரம்பா4மென்று-இவர்கள் தொடக்கமாக கு3ருபரம்பரையைச் சொல்லுகையாலே, ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதையிலே ப4க3வானாலே ப்ரபத்த்யுபதே3சம் பண்ணப்பட்டதாகச் சொல்லப்படுமவருமாய், 6. “தத்தத3வஸ்தோசித பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா’’ என்று பூவளரும்திருமகளாலேயருள்பெற்று (பெரிய 11-6-10) , அத்தாலே 7. “ஸ்ரீமதி விஷ்வக் ஸேநே’’ என்னும்படி-கைங்கர்யஸ்ரீ யையுடைய ஸேனைமுதலியாரும் “திருமாலாலருளப்பட்ட சடகோபன்’’ (8-8-11) “திருமாமகளாலருள்மாரி’’ (பெரிய 8-6-10) என்னும்படியான ப்ரபந்நஜகூடஸ்த2ரும் ஸுசிதர். ஸேனைமுதலி யாரும், விஷ்வக்ஸேந ஸம்ஹிதாதி3களிலே க3ஜாநநாதி3களுக்கு ப்ரபத்தியை வெளியிட்டருளினாரிறே; இப்படி வெளியிட்ட ப்ரகாரத்தை 8. “இத்யுக்தவாந் ஜக3ந்நாதோ2 த்3விரதா3நந மாம் ப்ரதி’’ என்று தாமே அருளிச்செய்தார்; அத்தைப்பற்றவாயிற்று 9. “நமஸ்ஸேநாதி4பதயே ஜ்ஞாநயாதா2த்ம்ய தா3யிநே’’ என்று அத்4யாத்மசிந்தையிலே அருளிச்செய்தது. அவ்வளவன்றிக்கே, ஆழ்வாரவதாரவைப4வத்தை ஸநத்குமாரர் மார்க்கண்டே3ய புராணத்திலே ஒரு அத்4யாயமெல்லாஞ்சேர அருளிச் செய்தாராகை யாலே இவர்களளவும் விவக்ஷிதம்.
இந்த கு3ருபரம்பரையில் ஆதி3மத்4யாவஸாநங்களை அருளிச் செய்கிறவராகையாலே நாத2யாமுநர்களை மத்4யமபத3ஸ்த2ராக அருளிச்செய்கிறார்-, (நாத2யாமுநமத்4யமாம்) என்று. நாத2 யாமுநர்கள் – நாத2முனிகளும் யாமுந முனிகளும்; அவர்கள்தான் பரமஹம்ஸரிறே; “நாத2யாமுநர்போல்வாரை அன்னமென்றும்’’ (ஆசா 115) என்றிறே ஆசார்ய ஹ்ருத3யத்திலே அருளிச்செய்தது; அவனும், அன்னமா(கி)யிறே அருமறைகளை அருளிச்செய்தது. ஏவம் வித4ரான (பெரிய 5-3-8; 5-7-3) இவர்தான் மது4ரகவிகளினுடைய தி3வ்ய ப்ரப3ந்தா4நு ஸந்தா4நத்தாலே ஆழ்வாருடைய, அருள்பெற்ற நாதமுனியானார் (உப 36); அந்த நாத2முநி யருளாலேயிறே யமுனைத்துறைவர் அவதரித்து த3ர்ஶநத்தை யாளவந்தாரானது; 1. “நாதோ2பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் ப3ஹுபி4ருபசிதம் யாமுநேய ப்ரப3ந்தை4:’’ என்னக்கடவதிறே. அவ்வளவன்றிக்கே 2. “விஷ்ணுப4க்திப்ரதிஷ்டா2ர்த்தம் ஸேநே ஶோSவதரிஷ்யதி’’ என்று ஸ்ரீஸேநாபதியாழ்வாரவதாரமாக நம்மாழ்வாரைச் சொல்லிற்றிறே. ஆளவந்தாருக்கு ப்ரபத்த்யர்த் தோ2தே3ஶம் பண்ணுகைக்கடியான உய்யக்கொண்டாரும் மணக்கால்நம்பியும் இவர்களிடையிலே அடைபடக் கடவரா யிருப்பர்கள். ‘’நாத2யாமுந மத்4யமாம்’’ என்று ஆழ்வானநுஸந்தா4ந க்ரமமாயிற்று இது; இவரையொழிந்த மற்றையார் 3. ‘’அஸ்மத்3கு3ரு ஸமாரம்பா4ம் யதிஶேக2ரமத்4யமாம் / லக்ஷ்மீ வல்லப4 பர்யந்தாம் வந்தே3 கு3ருபரம்பராம் //’’ என்றுமிறே அநுஸந்தி4த்துப்போருவது.
உடையவர் தாம் கு4ருபரம்பரைக்கு நடுநாயகமிறே. அவர்தாம் ஆழ்வானுக்கு ஸாக்ஷாதா3சார்யராகையாலே அஸ்மதா3சார்ய பர்யந்தாமெங்கிறது. 4. “அஸ்மத்3கு3ரோர்ப4க3வதோSஸ்ய த3யைக ஶிந்தோ4 ராமாநுஜஸ்ய’’ என்னக்கடவதிறே; 5“ராமாநுஜங்க்4ரிஶரணோSஸ்மி’’ என்றுமநுஸந்தி4த்தார். இதிலே யமுனைத்துறைவனிணையடியாம் கதி பெற்றுடைய (இரா21), இராமாநுசனா கையாலே ஆளவந்தார்க்கு சரணத்3வய மென்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூசிதர். “ இளையாழ்வாரை விஷயீகரித்த அநந்தரத்திலே, ` இளையாழ்வீர், பெருமாள் ஸ்ரீத3ண்ட3 காரண்யத்துக்கெழுந்தருளும் போது மறவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப்போய் வானோர்வாழ (பெரியா 4-9-1) எழுந்தருளினாப்போலே, மேலைவானோர் வாழ இவரும் தமக்கடியானான அடியேனை, அப்படியுமக்கு வைத்துத் திருநாட்டுக்கெழுந்தருளினார்’ என்று அவரருளிச்செய்தார்; அத்தைப் பற்ற ‘யமுனைத்துறைவனிணையடி யாம் கதி பெற்றுடைய இராமாநுசன்’ (இரா21), என்று அமுதனாரருளிச் செய்தார்’’ என்று திருநாராயண புரத்திலே திருவாய்மொழி யாசார்யரருளிச் செய்தார். உடையவரை கு3ருபங்க்திஹாரநாயகமாக நடுவே அநுஸந்தி4க்கவேண்டியிருக்க, யதா2பாட2மெல்லாரும் அநுஸந்திக்கிறது. “ஆழ்வான் தி3வ்யஸூக்தி“ என்னுமது எல்லாருமறிகைக்காக.
இதிலே, ஆசார்யாபி4மாநயுக்தராய் இவ்வருகிலுமுண்டான அனைவரும் ஸ்வாசார்யபர்யந்தமாக அநுஸந்தி4க்கும்போது நாத2 யாமுநர்களை நடுவாகச்சொன்னது யதிவரர்க்குமுபலக்ஷண மாகிறதென்று கண்டுகொள்வது. “அஸ்மதா3தார்யபர்யந்தாம் வந்தே3 கு3ருபரம்பராம்“ எங்கிறவித்தால். 1. “ராமாநுஜார்ய தி3வ்யாஜ்ஞா வர்த்த4தாம் அபி4வர்த்த4தாம்’’ என்று எம்பெருமானார் தி3வ்ய ஸங்கல் பத்தாலே வர்த்தி4த்துக்கொண்டுபோருகிற ஆசார்யபரம்பரையானது ஸ்வாசார்யபர்யந்தம் ஸேவிக்கப்படுமதெங்கிறது, “எம்பெருமானிற் காட்டில் கு3ருபரம்பரை அதி4கம், கு3ருபரம்பரையைக்காட்டில் ஸ்வாசார்யன் அதி4கன்’’ என்னக்கடவதிறே. “அஸ்மதா3சார்ய பர்யந்தாம்’’ என்கையாலே – இவ்வருகுள்ளர்க்கு உத்3தே3ஶ்யராய் ப்ரபத்திமார்க்க3 ப்ரவர்த்தகரான கூரத்தாழ்வான், அவர் செல்வத் திருமகனாரான (ஆர்த்தி 35) பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, வடக்குத்திருவீதிப் பிள்ளை, பிள்ளைலோகாசார்யர், கூரகுலோத்தமதா3ஸநாயன், திருவாய்மொழிப்பிள்ளை, பெரியஜீயர் முதலாக 2. “ஸர்வகு3ருப்4ய:’’ என்னுமவர்களெல்லாருமநுஸந்தே4யராம்படி ஸூசிதர்.
வேதாந்தாசார்யரான அண்ணவும் 3. “பத்யு:ஶ்ரிய: பதா3ப்4ஜாப்4யாம் ப்ரயுஞ்ஜாநாய மங்களம் | ஶ்ரிய: க்ருபாமய ஸுதா4வஶிந்து4, ஸ்ரோதோவகா3ஹிநே || அஸ்து மங்க3ளமார்யாய ரம்யஜாமாத்ருயோகிநே | ’’என்று தொடங்கி, 4. “யதீந்த்3ரப்ரவணாயா ஸ்மத்3கு3ரவே கு3ணஶாலிநே |ப்ரயுஞ்ஜே மங்களம் ரம்யஜாமாத்ரு வரயோகி3நே |’’ என்று நடுவாகவும், 5. “பூர்வாசார்யேஷு ஸர்வேஷு பூர்ணப்ரேமாநு ப3த்4நதே | மங்களம் ரம்யஜாமாத்ரு முநீந்த்3ராய த3யாளவே || ப4வ்ய ஸ்ரீஶைலநாதா2ர்ய பரிபூர்ணக்ருபாஜுஷே | ரம்யஜாமாத்ருமுநயே மஹாபா4கா3ய மங்களம் ||’’ என்று ஶ்ரிய:பதி யைத்தொடங்கி, ஸ்ரீமத்3ராமாநுஜார்யர் நடுவாகவும், ஸ்ரீஶைலேஶ த3யாபாத்ரரான பெரியஜீயரளவாகவும் ஶேக2ரிக்கையாலே இதுவே ஶுத்3த4ஸம்ப்ர்தா3யம். மநுவிபரீதம்போலே, இதுக்குப்புறம்பானது அஸம்ப்ரதா3யம். உபாயாநதரோபதே3ஷ்டாக்கள் ஸ்வரூப நாஶகரான கு3ருக்கள்; ஆகையாலிறே 6. “கு3ரூந் – ஸர்வத4ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய’’ என்றது. ஸாக்ஷாத்ப2லைக லக்ஷ்யத்வ ப்ரபத்தியாலே மந்த்ர ரத்நத்தை உபதே ஶிக்குமவர் களிறே-ஸத்3கு3ருக்களாகிறார். “த்வயத்தினுடைய அர்த்த2த்தை யும் திருவாய்மொழியுனுடைய அர்த்த2த்தையுமுபதே3சிக்கிறான் யாவனொருவன், அவனுக்கேயிறே ஆசார்யத்வ பூர்த்தியுள்ளது’’ என்று ப்ரமேயரத்நத்திலே அருளிச் செய்தார். ஏவம்வித4மான கு3ருபரம்பரையிறே ஸேவ்யமென்கிறது.
மேலும், கு3ருகுலது4ர்யரான வரவரமுநிவர்யருடைய பரம்பரயா “அஸ்மதா4சார்ய பர்யந்தாம்’’ என்று நடந்து செல்லுவது. 7. “அஸ்மத்3கு3ரும் பரமகாருணிகம் நமாமி’’ என்று தொடங்கி 8. “ஸௌம்யோபயந்த்ருமுநிம்’’ என்றிறே தலைக்கட்டியருளினார். 9. “நமஸ்த்வஸ்மத்3கு3ருப்4யஶ்ச’’ என்று தொடங்கி, 1. ‘’நமோ ராமாநுஜாயேத3ம் பூர்ணாய மஹதே நம:’’ என்று நடுவாகவும், 2. “ஸ்ரீத4ராயாதி3கு3ரவே நமோ பூ4யோ நமோ நம:’’ என்று எம்பெருமானளவாகவும் வாக்ய கு3ருபரம்பராக்ரமத்தாலே வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயரருளிச்செய்தது; இந்த க்ரமத்தை b “முந்தை வினையகல முன்னருளுமாரியனால் எந்தையெதிராச னின்னருள் சேர்ந்து அந்தமில்சீர்ப் பொற்பாவை தன்னருளால் பொன்னரங்கர் தாள்பணிந்து, நற்பாலடைந் துய்ந்தேன் நான்’’ (விவரணமாலை) என்றும், 3. “அஸ்மத்3கு3ருத3யாயாஸ்து யதீந்த்3ராங்கீ3க்ரியா ந்வய: | லபே4ய லப்3த4 விஜ்ஞாநோ லக்ஷ்மீபதி பத3த்3வயம்’’ என்று விவரணமாலை யினடியிலும் தத்வதீ3பாதி3 யிலும் அருளிச்செய்தார்.
இந்த க்ரமம், 4. “ஆசார்யாணாம் அஸாவஸாவித்யா ப4க3வந்த: – ஸ சாசார்யவம்ஶோ ஜ்ஞேய:’’ என்கிற ஶ்ருதியையும் 5. “கு3ருபரம்பரயா பரமகு3ரும் ப4க3வந்தம் ப்ரணம்ய’’ என்கிற பா4ஷ்யகாரவசநத்தையும் பற்றியிருக்கிறது. 6. “ஆசார்யா நஸ்மதீ3யாநபி பரமகு3ருந் ஸர்வமாசார்யவர்க்க3ம் ஸ்ரீமத்3ராமாநுஜார்யம் முநி மகி2ல ஜநோத்3தா4ரணாயாவதீர்ணம் / பூர்ணாயம் யாமுநேயம் முநிவரமத2 தௌ ராம ராஜீவநேத்ரௌ வந்தே3 நாத2ம் முநீந்த்3ரம் வகுளத4ர சமூநாத2 லக்ஷ்மீமுகுந்தா3ந்//’’ என்னக்கடவதிறே. “லக்ஷ்மீ நாத2 ஸமாரம்பா4ம்’’ என்கிற இத்தனியனில் கு3ருபரம்பரா க்ரமத்தையும், “தென்னரங்கனாருந் திருமகளுமாதியா, அன்னவயல் பூதூர் மன் ஆங்கிடையா – என்னை அருள், ஆரியனே தானளவா அன்னகுரு முறையின், சீரியதாள் சேர்ந்துய்ந்தேனே’’ (விவரணமாலை )என்றும் அவர்தாமே அருளிச் செய்தார். இந்த க்ரமம், “திருவருள் மாலை சேனைமுதலி சடகோபன்’’ (தனியன்) 7. “நாத2ம் பங்கஜநேத்ர’’ என்கிற தனியங்களிலும், “ஆதி முதல்மாயன் மலர்மங்கைசேனைத் தலைவன்’’ என்றும், “சேனை நாதன் அருள் மாறன் நாதமுனி தாமரைக்கண்ணி ராமர் வாழ், சீர் சிறந்த யமுனைத்துறைக்கிறைவர் செந்தொடைக்கதிப ரருளினால், தானமர்ந்த வெதிராசர் கூரம்வரு தலைவர் நீதிபுனைபட்டர்பின், தலைமையான மாதவச்சீயர் நம்பிள்ளை தழைத்தகண்ணரிரு வகை யனார், ஈனமின்றி யருளுலகவாசிரிய ரினியகூரகுதாதருக்கு, இன்பமேவு திருவாய்மொழி ப்பிள்ளை யிவர்க்குத்தானடிமையாகவே, ஆன வாழ்வு பெற வருள்வர் கோலமணவாளமாமுனிவன்’’ என்றும் சொல்லிற்றிறே.
இப்படி ஆரோஹாவரோஹ க்ரமங்களிரண்டாலும் கு3ருபரம்பரையை அநுஸந்தி4க்கக் குறையில்லை. 8. “ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்த3ம்’’ இதியாதி3யாலே எம்பெருமான் செய்த ஆசார்ய ஸம்ப3ந்த4 பர்யநதமான உபகாரபரம்பரையை அநுஸந்தி4த்தால், கு3ருபரம்பரைக்குத் தலையான எம்பெருமானை முந்துறப் பற்ற அடுக்கும், 1. “ஆத்மநோ ஹ்யதிநீசஸ்ய’’ இத்யாதி3யாலும், e “நாராயணன் திருமால்’’ (ஆர்த்தி 45), இத்யாதி3லும் ஆசார்யன் பண்ணின ப4க3வத்ஸம்ப3ந்த4 கௌ3ரவத்தை அநுஸந்தி4த்தால் 2. “அஸ்மத்3 கு3ருப்4யோ நம:’’ என்று ஆசார்யனை முந்துற அநுஸந்தி4க்கவடுக்கும். f “கு3ருபரம்பரையை முன்னிடவே ஶரணாக3தன் குறை தீரும்; பிராட்டியை முன்னிடவே ஶர்ண்யன் குறை தீரும்’’ (மாணிக்கமாலை), என்றிறே ஆச்சான்பிள்ளை மாணிக்கமாலையிலே அருளிச்செய்தது. g“ஜப்தவ்யம் கு3ருபரம்பரையும் த்3வயமும்’’ (ஸ்ரீவசந-274), என்றிறே அருளிச்செய்தது. கு3ருபரம்பரா பூர்வகமல்லாத த்3வயாநு ஸந்தா4நமும் h நாவகாரிய மிறே (பெரியாழ் 4-4-1), இப்படி ஆதி3மத்4யாவ ஸாந ஸஹிதையான ஸத்3கு3ருஸந்ததி, ஸர்வ ஸத்துக் களாலும் ஸதா3நுஸந்தேய மென்றாயிற்று.
இதுவும் ஆழ்வானருளிச்செய்தது
यो नित्यमच्युतपदाम्बुजयुग्मरुक्मव्यामोहतस्तदितराणि त्रुणाय मेने | अस्मद्गुरोर्भगवतोSस्य दयैकसिन्धो रामानुजस्य चरणौ शरणं प्रपद्ये ||
யோ நித்யமச்யுத பதா3ம்பு3ஜயுக்3மருக்ம வ்யாமோஹதஸ்ததி3தராணி த்ருணாய மேநே|
அஸ்மத்3 கு3ரோர் ப4க3வதோSஸ்ய த4யைகஶிந்தோ4
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்3யே||
(யோ நித்யமித்யாதி3) ஸ்ரீராமாவரஜமுநீந்த்3ரலப்3த4போ3த4ராய் (ஸுந்த3ரபா3ஹு 1), “ஸ்ரீவத்ஸசிஹ்ந்ர்’’ என்று நிரூபகத்தையுடையரான கூரத்தாழ்வான், ஸ்ரீராமாநுஜ த3ர்ஶநத்தை ரக்ஷிக்கவேண்டி ராஜகோ3ஷ்டி2யிலே சென்று. 4. “நாராயணபரம்ப்3ரஹ்ம’’ என்றும், 5. “நாராயணபரா வேதா3:’’ என்றும், `நாரணனைக்காட்டிய வேதம்’’ (இரா 54) என்றும், 6. “நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதி3க: க:’’ என்றும், “நாரணனே யாவதீதன்றென்பாரார்’’ (நான் 72)என்றும், “அந்யாயமந்யாயம்’’ என்று அறை கூறிவென்று, “கலையறக்கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தான்’’ (திருமாலை 7), என்னும்படி அவர்கள் த3ர்ஶநம் அஸஹ்யமாய், அத்த3ர்ஶநத்தை வேண்டாதே மீண்டெழுந்தருளி, த3ர்ஶந ப்ரவர்த்தகரான எம்பெருமானார் த்3ர்ஶநத்தை அபேக்ஷித்துக் கொண்டு எழுந்தருளி யிருக்க, அவரும் ‘’இனியறிந்தேனீசற்கும் நான்முகற்கும் தெய்வம்-நற்கிரிசைநாரணன் நீ’’ (நான் 96), என்று திருவில்லாத் தேவரெல்லார்க்கும் (நான் 53), மேலாக மேல்நாட்டிலே திருநாராயணனை ஸ்தா2பித்து மீண்டெழுந் தருளி, “அரங்கனல் லால் தெய்வமில்லை’’ என்றறுதியிட்டு அரங்கனார்க் காட்செய்து கொண்டிருக்கிறவர் (திருமாலை 27), ஆழ்வான் கண்ணழிவுகண்டு கண்கலங்கி யருளி, “பேரருளாளர், நேத்ரபுத்ராதி3 களான ஐஹிக புருஷார்த்த2த் தையும், பெரிய விசும்பாகிற ஆமுஷ்மிக புருஷார்த்த்2தையும் கொடுக்குமவராகை யாலே நேத்ரவிஷயமாக ஒரு ஸ்தோத்ரத்தைச் செய்யும்’’ என்று நியமிக்க;
அப்படியே “அஸ்து’’ என்று ஸம்மதிபூர்வகமாக ஸ்தவம் பண்ணுகிறவர், 1. “நேத்ரஸாத்குரு கரீஶ ஸதா3மே’’ என்றும், 2. ‘’கரீஶ பஶ்யேம பரஶ்ஶதம் ஸமா:’’ என்றும், அங்குத்தையில் அநுப4வ பரிகரமான அப்ராக்ருதசக்ஷுஸ்ஸை அபேக்ஷிக்க, அப்படியே பேரருளாளரான பெரியபெருமாளும், 3. “பஶ்யந்தி ச ஸதா3 தே3வம் நேத்ரைர் ஜ்ஞாநேந வாமரா:’’ 4. “ஸர்வம் ஹ பஶ்ய: பஶ்யதி’’ என்னும்படியான இமையாத கண்ணை இவர் பெறும்படி பெரியவீட்டுக்கு விடைகொடுத்தருள, அவரும் அதிப்ரீதராய் ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் திருமாளிகையிலே புறவீடுவிட்டிருக்க, இத்தை எம்பெருமானார் கேட்டருளி, “அறப் பதறினார்’’ என்று பதறிக்கொண்டு இவரிருந்தவிடத்தேற வெழுந்தருள, அவரும், பரப்ந்தாமமென்னும் திவந்தருகைக்காக (இரா 94), அவர்க்கு மறுக்க வொண்ணாதபடி அவர் விஷயத்திலே ப்ரபத்தியான இஶ்லோகத்தை “ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்3யே’’ என்று விண்ணப் பஞ்செய்து திருவடிகளிலே விழ, அவரும் இவரபி4ப்ராயமறிந்து தம்முடைய ஸ்வம்மான ப்ரபத்தியை “திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ’’ (4-1-1), என்னும்படி 5. “ஸ்ரீமந்நாராயண தவ சரணார விந்த3 யுக3ளம் ஶரணமஹம் ப்ரபக்3யே’’ என்று குறைவற அவர்வலத் திருச்செவியிலே ப்ரஸாதி3த்தருளினாரிறே; அதடியாக, ஸ்ரீ வைகுண்ட2 க3த்3யத்திலே அவர் ப்ரார்த்தி2த்தருளின பேற்றை இவரும் ஸ்ரீ வைகுண்ட2 ஸ்தவத்திலே ப்ரார்த்தி2த்துப்பேர்றோடே தலைக் கட்டினார்; அப்பேறுதான் ஆசார்யாதீ4நமாகையாலே அவரை அடியிலே ஶரணம் புகுகிறார்.
(யோ நித்யம்) இதில்-ப4க்திவிரக்திஜ்ஞப்தி கு3ருத்வாநுகம்பாதி4க்ய கு3ணத்தாலே முக்திப்ரத3த்வஶக்தியையுடைய உடையவர் திருவடி களை உபாயமாகப்பற்றுகிறார். (யோ நித்யம்) “ய:’’ என்று – “வைதி3 கோத்தமர்’’ என்னும் ப்ரஸித்3தி4யைப்பற்றச்சொல்லுகிறது. (நித்யம ச்யுத பதா3ம்பு3ஜயுக்3ம ருக்ம வ்யாமோஹத) என்று-6. “ஸர்வேஷு தே3ஶகாலேஷு ஸர்வாவஸ்தா2ஸு சாஸ்யுத | கிங்கரோஸ்மி’’ என்றும், 7. “அச்யுத ப4க்திதத்வ ஜ்ஞாநாம்ருதாப்3தி4’’ என்றும் சொல்லுகிறபடியே ப்ரணதார்த்திஹராச்யுதரான (தே3வராஜாஷ்டகம்), பேரருளாளர் ஸ்ப்ருஹணீய மான திருவடித்தாமரைகளிலே நிரவதி4க ப்ரேமத்தாலே, 1. “த்வத்பாத3 கமலாத3ந்யந்ந மே’’ என்கிறபடியே திருவடிகளுக்கு அசலான அனைத்தையும் த்ருணஸமமாக எண்ணியிருப்பரென்கிறது. 2. “நிரஸ்தேதர போ4கா3ஶோ வரத3ம் ஶரணங்கத3:’’ “தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்ப் பூண்டவன்பாளனிராமானுசன்’’ (இரா 31), என்று வரத3நாராயணனை யாயிற்று, 3. “யோ நித்யம் ஸததம் த்4யாயேத் நாராயணமநந்யதீ4:’’ என்று நிரவதி4க ப்ரேமத்துடனே நித்ய திருவாராத4நமாக நடத்திப் போருவது; அந்த ப4க்த்யைஶ்வர்ய மத3த்தாலே, 4. “த்ருணீக்ருதாநுத் தமபு4க்திமுக்திபி4:’’ ‘’கொள்வதெண்ணுமோதெள்ளியோர் குறிப்பு’’ (திருவாசிரியம் 2), என்னும்படி (c இரா 46.)பண்ணியிருப்பாராயிற்று; 5. “கதா3ஹம் ப4க3வதபாதா3ம்பு3ஜத்3வய பரிசர்யாஶயா நிரஸ்த ஸமஸ்தேதரபோ4கா3ஶ: அபக3த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா4வ:’’ என்றாயிற்று இவர் ஸ்ரீஸூக்தியுமிருப்பது. (ய:) ‘’திக்குற்றகீர்த்தி யிராமானுசன்’’ (இரா 26), என்று ப்ரஸித்3த4ரானவர். (நித்யம்) நாடோறும்.
(அச்யுத பதா3ம்பு3ஜயுக்3மருக்ம வ்யாமோஹத;) அச்யுதனாகை யாவது – கு3ண விக்3ரஹ விபூ4திகளை நழுவுதலின்றிக்கேயிருக்கு மவதென்-னுதல், ஆஶ்ரிதரக்ஷணத்தில் நின்றும் நழுவாதவ னென்னுதல் “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்த நம்மச்சுதன் வீவில்சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர்பெருமான்’’ (4-5-3), என்றும், “ஆதுமில் காலத்தெந்தை யச்சுதனமலன்’’ (3-4-4), என்றும், “அயரவாங்கு நமன்றமர்க் கரு நஞ்சினை அச்சுதன்ற்ன்னை’’ (3-6-8), என்றும், 6 “ந த்ய ஜேயம்’’ என்றும் சொல்லப்படுகிற கு3ண்ங்களிலேயாயிற்று இவர் ப்ரவணராயிருப்பது. அந்த அச்யுதபதா3ம்பு3ஜ யுக்3மருக்ம வ்யாமோஹம், அர்ச்சாவதாரந் தொடங்கி பரபர்யந்தமாக எங்கும் நிதமாகவுண்டாயிறே இவர்க் கிருப்பது. அதெங்ஙனேயென்னில்; e அத்திகிரிப்பச்சை நிறத்தச்சுத னுடைய பத3ப்3ஜங்களிலும், f வேங்கடத்தச்சுதனுடைய, தாங்கு தாமரையன்ன பொன் னாரடியிலும் (பெரிய 7-3-5), அரங்கமா நகரச்சுதன் (பெரிய 5-7-1), உலக மளந்த பொன்னடியிலும் (பெரிய 5-8-9), நண்ணிதொழுமவர் (பெரியாழ் 2-3-2), நச்சுவார் முன்னிற்கும் நாராயணனச்சுதனுடைய (பெரியாழ் 1-9-11), l துளங்குசோதித் திருப் பாதத்திலும் (8-5-5), தயரதற்கு மகனானவச்சுதன் (3-6-8), காடுறைந்த பொன்னடியிலும் (பெரிய 11-5-1), n கோவிந்தனச்சுதன் பொற்றாமரையடியென்று பேசும்படியாய் காலனில்கன்றின் பின்போன பொன்னடியிலும் (பெரியாழ் 3-3-4), அச்சுதனனந்த சயனன் செம்பொற்றிருவடியிணையிலும் (திருச்சந்த 65), “வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம்மச்சுதனான (4-5-3), விண்ணோர் பிரானார் மாசின்மலரடியிலுமாயிற்று (திருவி 54), இவர் மயல்கொண்டிருப்பது. இதுதான் “ஆர்வமோடு நிச்சந்னைவார்’’ (பெரிய 2-4-8), என்னும்படியிறே நித்யேச்சை2 நடந்துசெல்லுவது. “தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்ப் பூண்ட வன்பாளன்’’ (இரா 31), “அரங்கன்கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும்’’ (இரா 49), “பஞ்சித்திருவடிப்பின்னைதன் காதலன் பாதம்நண்ணா’’ (இரா 28), v “நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும் நிறைவேங்கடப் பொற் குன்றமும் வைகுந்தநாடுங்குலவிய பாற்கடலும் உன்றனக் கெத்தனை யின்பந்தரும்’’ (இரா 76), என்னக்கடவதிறே. அவர்தாமும் 1. “ப்ரணதார்த்திஹர’’ 2“ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே’’ 3 “ஸ்ரீரங்க3ஶாயிநம்’’ என்றும், 4. “ஆத்மாநஞ்சஸாரதி2ம்’’ என்றும், 5. “காகுத்ஸ்த2’’ 6. “ஶேஷிணே ஶேஷ ஶாயிநே’’ 7. “ஸ்ரீவைகுண்ட2நாத2’’ என்றுமிறே அருளிச் செய்தது. ஆகையாலே பூவார்கழல்களிலும் (6-10-14), கண்ணங்கய லிணையிலும் (10-5-1), காகுத்தன்றன்னடியிலும் (பெரு 8-11), பாற்கடலுட் பையத்துயின்ற பரமனடி யிலும் (திருப்பாவை 2), வைகுத்தச்சேவடியிலும் (நான் 75), ஸர்வாந்தர்யாமியான நாராயண சரணங்களிலுமாயிற்று (த்வயம்), வ்யாமுக்3த4ராயிருப்பது. இப்படி பஞ்சா வஸ்தா2வஸ்தி2தனான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த3யுக3ள மகரந்த3 ரஸாஸ்வாத3 மகு4வ்ரதமாய் அநுப4வித்து அதிலே மக்3நராய், அத்தாலே, ததி3தரங்களாய் ஆவிரிஞ்சாத3மங்க3ளமான (பா4க3வதம் 11-19-18), பாஞ்ச பௌ4திக விஷய பஞ்சகத்தையும், அதுக்கு மேலான ஆத்மாநு ப4வத்தையும் த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணியிருப்பாராயிற்று. இப்படி ப்4க்தி விரக்தியுடைய இவர் திருவடிகளைத் தாமும் அப்படி பரத்வாதி3 களெல்லமாக அறுதியிட்டு அடையப் பார்க்கிறார்.
(அஸ்மத்3கு3ரோ:) கீழ்ச்சொன்ன அச்யுதப4க்தியாலே ததி3தரங்களை த்ருணவத்கரிக்கையாலுமாயிற்று இவரை ஆசார்ய வரணம் பண்ணுகிறது. 8. “சித3சித் பரதத்வாநாம் தத்வ யாதா2த் ம்யதா3யிநே’’ என்னும்படி தத்வத்ரயத்தையும் உபதே3ஶிக்கை யாலே அலகலகாக ஆராய்ந்து 9. “போ4கா3 இமே விதி4 ஶிவாதி3 பத3ஞ்ச கிஞ்ச ஸ்வாத் மாநுபூ4திரிதி யா கி முக்திருக்தா/ ஸர்வம் ததூ3ஷஜலஜோஷ மஹம் ஜுஷேய்’’ என்று தத்வத்3வய விஷய வைராக்3யத்தையும், 10. “தவ தா3ஸ்ய மஹாதஸஜ்ஞ:’’ என்று தத்வைகவிஷய ப4க்தியையுமுடை யராகையாலே, தமக்கநு கு3ணமாக (அஸ்மக்3கு3ரோ:) என்கிறார். 11“ஜ்ஞாநதீ3பப்ரதே3 கு3ரௌ’’ 12. “அந்த4கார நிரோதி4த்வாத்3 கு3ரு ரித்யபி4தீ4யதே’’. இவர்க்கும் இரண்டுக்கும் அடி எம்பெரருமானாரிறே; 13. “ஸ்ரீமத்3 ராமாநுஜார்யாத் ஸமதி4க3த ஸமஸ்தாத்மவித்3ய:’’ என்றாயிற்றி ருப்பது. இவரையயிற்று ப்ரதாந்ஶிஷ்யராக ப்ரத2மம் பெரிய திருமந்த்ரம் முதலான ரஹஸ்யங்களை ப்ரஸாதி3த்து அபி4மாநித் தருளிற்று. நரநாராயண அவதாரம் என்னலாம்படியிறே ராமாநுஜ கூராதி4பர்கள் கூட்டர விருப்பது. எல்லாருமொருத்தட்டும் இவரொரு தட்டுமாகவிறே எம்பெருமானார் எண்ணியிருப்பது. அத்தைப்பற்ற, “ஒருமகள் தன்னையுடையேன்’’ (பெரியாழ் 3-8-4), என்றாரிறே. இப்படி அத்3விதீய மாயாயிற்று இரண்டு விஷயமுமிருப்பது.
“கலையறக்கற்ற மாந்தர்’’ (திருமாலை 7), என்னலாம் படியான இவர்க்கு ஸகலார்த்த2மும் ப்ரஸாதி3க்கும் படியான ஜ்ஞாந வைப4வத்தைச் சொல்லுகிறது, – (ப4க3வத:) என்று. “சொல்லார்தமிழொரு மூன்றும் சுருதிகன் நான்கும் எல்லையில்லாவறநெறி யாவும் தெரிந்தவன்’’ (இரா 44), “உண்மைநன்ஞானமுரைத்த’’ (இரா 73), “இராமாநுசன மெய்ம்மதிக்கடல்’’ (இரா 58), என்னும்படியிறே ஜ்ஞாநவைப4வமிருப்பது. 1. “ஸர்வகல்யாண ஸம்பூர்ணம் ஸர்வ ஜ்ஞாநோபப்3ரும்ஹிதம் / ஆசார்யமாஶ்ரயேத்3 தீ4மாந் ஶ்ரேயோர்த்தி2 ஸுஸமாஹித: //’’ என்னக்கடவதிறே; ப4க3வச்ச2ப்3த3ம் – ஸர்வகல்யாணகு4ணங்களையும் பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் சொல்லுகையாலே, அவற்றால் குறைவற்ற விஷயமா யிருக்கை. இத்தால் – தமக்கு அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ணுகைக் குடலான ஜ்ஞாநவைப4வத்தைப்பேசினார். இனித்தம்முடைய து3ர்க்க3திகண்டு இரங்கும்படி த3யாபூர்த்தையை அருளிச்செய்கிறார், – (அஸ்ய த3யைகஸிந்தோ4🙂 என்று ஈடுபடுகிறார். (அஸ்ய ராமாநுஜஸ்ய) என்று மேலில் பதத்தோடே சேர்த்தி. (த3யைகஸிந்து:4) என்று கேவலக்ருபாமாத்ர ப்ரஸந்நா சார்யரென்றபடி. “பயனன்றா கிலும் பாங்கலாரகிலும் செயல்நன்றாகத் திருத்திப் பணிகொள்வான் குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர் நம்பி’’ (கண்ணி 10), என்றிறேயிருப்பது. “பாடினானருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே’’ (கண்ணி 8), “எண்டிசையுமறிய வியம்புதே னொண்டமிழ்ச் சடகோபனருளை’’ (கண்ணி 7), என்னுமாபோலே. “நிகரின்றி நின்ற என்னீசதைக்குன்னருளின்கணிண்றிப் புகலொன்று மில்லை யருட்குமஃதே புகல்’’ (இரா 70), என்றும், “உன்பெருங்கருணை தன்னை’’ (இரா70), என்றும், “வண்மையினாலும் தன்மாதகவாலும்’’ (இரா 73), என்றுமிறே இவர்க்ருபையின் பெருமையிருப்பது; அருளாழியம்மானாய் (1-4-6), 2. “த3யாஶிந்தோ4 ப3ந்தே4||’’ என்னும்படியான ஸர்வேஶ்வரங் க்ருபை மறுத்த காலத்திலும் ஒதுங்கலாம்படியான க்ருபை; அவன்கைவிட்ட ஸம்ஸாரிகளையும் 3. “வ்ருதை2வ ப4வதோ யாதா பூ4யஶீ ஜந்ம ஸந்ததி: | தஸ்யாமந்ய தமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ || ‘’ என்று உபதே3சித்துத் திருத்துமவரிறே.
கீழ்ச்சொன்ன ஜ்ஞாநப4க்திவைராக்3யம், நிரவதி4கத3யையாகிற இந்த கு3ணங்களெல்லாம் கேட்டே போகாமே கண்ணாலே கண்டநு ப4விக்கலாம்படி ப்ரத்யக்ஷமாய் முன்வந்து நிற்குமவரை (அஸ்ய ராமாநுஜஸ்ய) என்றநுப4விக்கிறார். `இந்த ராமாநுஜனுடைய’ என்ற – இவர்க்கு ஈடுபாட்டுக்கு விஷயமிருக்கிறபடி. (ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்3யே) என்று நாராயண சரணஶரண வரணத்திற் காட்டிலும் ராமாநுஜ சரணஶரணவரணம் ஸ்வரூபாநுகு3ணமுமாய் அமோக4முமாயிருக்குமாகையாலே, அவர் திருவடிகளை ஶரணமாகப் பற்றுகிறார். “பழுதாகாதொன்றறிந்தேன்’’ (நான் 89), இத்யாதி3; “மாறாய தானவனை-வேறகவேத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம்’’ (நான் 18), “பாற்கடலுமுன்றனக் கெத்தனையின் பந்தரும்’’ (இரா 76), என்று செழுந்திரைப்பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ் விழுந்திருப்பாரிறே (இரா 105), வளர்ந்தவெங்கோபமடங்க லொன்றாயன்று வாளவுணன் கிளர்ந்த பொன்னாகங்கிழித்தவன் (இரா103), கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும் சிந்தையிராமாநுசனைக் கண்டி றைஞ்சி மற்றவரைச்சாத்தியிருக்கப்பார்க்கிறார்; எம்பெருமானார் தவம்-தபஶ்ஶப்3த3வாஸ்யையான ப்ரபத்தி. இவர் தவம்-“எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’’ என்னுமாசார்யாபி4 மாநம்; 1.ராமானுஜார்ய விஷயீக்ருதம்’’ என்றாரே. அவர் தவத்தைக் காட்டிலும் இவர் தவம் வென்றதாயிற்று; அவர்க்கு முன்னேயிறே இவர்க்குப் பேறு ஸித்3தி4த்தது; 2. ஶித்3தி4ர் ப4வதி வா நேதி ஸம்ஶயோSச்யுத ஸேவிநாம் | *நிஸ்ஸம்ஶயஸ்து தத்3ப4க்த பரிசர்யாரதாத்மநாம்|’’ ((பா) ந ஸம்ஶயோSஸ்தி), “நம்புவார்பதி வைகுந்த்ங் காண்மினே’’ (கண்ணி 11), என்னும்படி; வைகுண்ட2 ப்ரியத3ர்ஶநம் (பா4க3வதம் 11-2-29), பண்ணினார்.
இந்த ராமாநுஜ ப்ரபத்தியிலே நாராயண ப்ரபத்த்ய்ர்த்த2மெல்லாம் அநுஸந்தே4யம். கீழ் ப4க்தி விரக்தி ஜ்ஞப்தி க்4ருணிதையாகிற இவை – முக்திப்ரத3ஶக்தி ஸாத4நங்களாயிருக்கும் ; இதிறே புருஷகார பா4வத்துக்கு அநுகு4ணமான ஸ்ரீமத்பதா3ர்த்த2மும்; இவையும் ஈஶ்வர வஶீகரண ஹேதுவான கு3ணமிறே; புருஷகாராந்தர நிரபேக்ஷ மாயிறே இவ்விஷயமிருப்பது. இனி, வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌஶீல்ய ஸௌலப்4யாதி3கள், ஸௌகர்யாபாத3கங்களாயிருக்கும் நாராயண பத3த்திற்போலே; 3. “மாதா பிதா ப்4ராதா நிவாஸஶ் ஶரணம் ஸுஹ்ருத்3க3திர் நாராயண;’’ என்று, இஸ்ஸம்ப3ந்த4த்தாலே வாத்ஸல்யாதி3களநு ஸந்தே4யமங்கு; “இதத்தாயிராமாநுசன்’’ (தனியன்), “எந்தையிராமாநுசன்’’ (இரா 69), “எம்மையிராமாநுசன்’’ (இரா 102), “ஏலப்புனைந் தென்னைமார்’’ (திருவிரு 40), என்னை மார்-ஆணுடன்பிறந்தவர்களென்னுமாபோலே இங்கு, எல்லாரோடு முண்டான ஸௌப்4ராத்ரம்; “கோயிலண்ணனி ராமாநுசன்’’ “அடியேனுக்கிருப்பிடம்’’ (இரா 105), “இராமாநுசன் சரண்’’ “ இராமாநுசன் சரணேகதி’’ (இரா 13), என்கையாலே தோ3ஷ போ4க்3யத்வமாகிற-வாத்ஸல்ய மும், ஸ்வத்தினுடைய லாபா4லாப4ம் ஸ்வாமியதாம் படியாய் ஸ்வத்தை நோக்குகிற-ஸ்வாமித்வமுமாகிற இவை ராமாநுஜ ஶப்3த3த்தாலும் அநுஸந்தே4யம்; தாழ்ந்தவர்களோடே தன்பேறாகக் கலக்கையாகிற ஸௌஶீல்யமும், ஆஶ்ரயிப்பார்க்கு த்3ருஷ்டி கோ3சரமாய் புரோவர்த்தியாய் நிற்கிற ஸௌலப்4யமும்.
ஜ்ஞாநமாவது-ஆஶ்ரிதர்க்கு த்யாக3ஸ்வீகரங்களுக்குறுப்பான இஷ்டாநிஷ்டங்களை அறிகைக்குடலான அறிவு; ஶக்தியாவது-அநிஷ்டங்களைப்போக்குகைக்கும் இஷ்டங்களைக் கொடுக்கைக்கும் உடலாய், அஶக்தரானவர்களை அக்கரையேற்றவல்ல ஶக்தி; பூர்த்தியாவது-இவனிட்டதுகொண்டு த்ருப்தனாக வேண்டாதபூர்த்தி; ப்ராப்தியாவது-தன்பேறாக்ச்செய்து தலைக்கட்டுகைக்கு உடலான ஸம்ப3ந்த4ம், காருணிகத்வமாவது-ஸம்ப3ந்த4மில்லாவிடிலும், குருடன் குழியிலே விழுந்தால் எடுகைக்கு ஸம்ப3ந்த4ம் வேண்டாதாப்போலே, பிறர்நோவுகண்டால் “ஐயோ!’’ என்னவேண்டும்படியான த3யை. 4. “அந்த4: பதந்நபி ஶ்வப்4ரே கேவலந்த்வநுகம்பயா’’ என்னக்கடவதிறே. ஔதா4ர்யமாவது-கொள்வாரைத் தேடிக்கொடாவிடில் த4ரியாமல், கொடுக்கும் கொடையுடைமை; இந்த ஸௌகர்யாபாத3ககு3ண சதுஷ்டயமும், கார்யாபாத3ககு3ணஷட்கமும் இங்கும் அநுஸந்தே4யம்.
அதெங்ஙனேயென்னில்; “இப்படியைத்தொடருமிராமாநுசன்’’ (இரா 63), என்னும்படி; அவர்பின்படரும் குணனாய் (இரா 36), “தீம்பனிவ னென்று நினைத்தென்னை யிகழாரெதிராசர் அன்றறிந்து அங்கீகரிக்கையால்’’ (ஆர்த்தி 39), என்கிற-வாத்ஸல்யமும், “அண்ணலிராமாநுசன்’’ (இரா 41), என்னும்படி உடையவராகை யாலே பல்லுயிர்க்கும் வீடளிப்பானாய் (இரா 95), விண்ணின் தலைநின்றும் மண்ணிந்தலத்துதித்தபடியாலே ஸ்வத்து இருந்தவிடத்தே வந்து நோக்கும்படியான ஸ்வாமிக்கும், “என்னருவினையின் திறஞ்செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே நிறைந்தொப்பறவிருந்தான்’’ (இரா 47), என்னும்படி ஒரு நீராகக்கலந்த ஸௌஶீல்யமும், “என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற’’ (இரா 92), என்று சொல்லும்படி ஸௌலப்4யமும், “மெய்ஞ்ஞானத்திராமாநுசன்’’ (இரா 24), “கதிராமாநுசன்’’ (இரா 13), “உண்மைநன்ஞானமுரைத்த விராமாநுசன்’’ (இரா 73), என்று – அறியாதன அறிவிக்கைக்கும் (2-3-2), அவர்களுக்குச் செய்யவேண்டுமதுவும் தவிர்க்கவேண்டுமதுவும் அறிகைக்கும் ஈடான் ஜ்ஞானமும், நிலத்தைச்செறுத்துண்ணும் நீசக்கலியை நினைப்பரிய பலத்தைச்செறுத்தும் என் பெய்வினை தென்புலத்தில் பொறித்தவப் புத்தகச்சும்மை பொறுக்கையும் (இரா 34), போருகிற பாபவிமோசகத்வ ஶக்தியும், “சலியாப் பிறவிப்பவந்தருந்தீவினை பாற்றித்தரும் பரந்தாமமென்னும் திவந்தரும்’’ (இரா 94), என்னும்படி – விரோதி4 நிவ்ருத்தி பூர்வக ப4க3வத் ப்ராப்தியை உண்டாக்கிக்கொடுக்குமதான ஶக்தியும் ப4க3வத்விஷயத்தை அண்டைகொண்ட பூர்த்தியும், “எந்தை யிராமாநுசன் வந்தெடுத்தனனின்றென்னை’’ (இரா 69), என்கிற ப்ராப்தியும், “காரேய்கருணை’’ (இரா 25), என்கிற காருணிகத்வமும், “கொண்டலனைய வண்மை’’ (இரா 74), “உன்னுடைய கார்கொண்ட வண்மை’’ (இரா 83), “உன் வண்மை யென்பாலென் வள்ர்ந்ததுவே’’ (இரா 102), என்று – அபேக்ஷாநிரபேக்ஷமாக உபகரிக்கும் ஔதா3ர்ய ஸ்வபா4வமு மாகிற ப்ரபத்த்யபேக்ஷித கு3ணங்களெல்லாம் குண்ந்திகழ் கொண்டல் (இரா 60), இராமாநுசனிடத்திலே கண்டு அநுப4விக்கலாம்படியாயிருக்குமிறே.
இப்படி கோடித்3வயகு3ணயுக்தரான ராமாநுஜனுடைய சரணங்களை உபாயமாக ஸ்வீகரிக்கும்படி சொல்லுகிறது-(ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்3யே) என்று. குலந்தரும் நலந்தரும் சொல்லான நாராயணாவென்னும் (பெரிய 1-1-9), நாலெழுத்துப்போலே ஸகலபுருஷார்த்த2 ஸாத்4நமன்றிக்கே, கேவலம் மோக்ஷைகஹேது வாயாயிற்று இந்த சதுரக்ஷரியிருப்பது; 1. “சதுரா சதுரக்ஷரீ’’ என்றாரே இவர் தாமே. 2. “யதா3 நாராயணயேதி ஜகா3த3 சதுரக்ஷரம்’’ “நாராயண, ராமாநுஜ’’ என்றிறே விகல்பிக்கலா யிருப்பது. இத்திருநாமந்தான் யுக3ந்தோறுமுண்டாயிருக்கு மாயிற்று; இளையபெருமாளிகத்திலும், நம்பி மூத்தபிரானுக்குத் தம்பியான க்ருஷ்ணனிடத்திலும், இப்போது இளையாழ்வாரான் இவரிடத்திலும் பேர்பெற்றிறே இருப்பது. ஏதத்பூர்வாவதார த்3வயமும், ஸது4பரித்ராணத்துக்கும் து3ஷ்க்ருத்3விநாஶத்துக்கு முகலாயிருக்கும்; இவ்வவதாரமும், வைதி3கமார்க்க3த்தை ஸ்தா2பிக்கைக்கும், அவைதி3கமார்க்கத்தை நிரோதி4க்கைக்கும், ப்ரபத்திமார்க்க3த்தைப் பெருக்கி வளர்க்கைக்குமுடலாயிருக்கும்; அவ்வவதாரங்களிலுமப்படியே. 1. “ஸ ப்4ராத்ஶ்சரணௌ கா3ட4ம்’’ 2. “மாமேகம் ஶரணம் வ்ரஜ’’ 3. “நிரஸ்தேதரபோ4கா3ஶோ வர்த3ம் ஶரணங்கத:’’ என்றிறே இவர்கள் ப்ரபத்தியைவர்த்தி4ப்பித்தது. அவர், ஸ்ரீமந்நாராயண விஷயத்தில் ப்ரபத்தியை வர்த்தி4ப்பித்தது. அவர், ராமாநுஜ விஷயத்தில் ப்ரபத்தியை இப்பத்3யமுகே2ந வெளியிடுகிறார். அங்கு ப்ரமேயபூ4தர் வெளியிட்டார்கள்; இங்கு, ப்ரமாதாவானவர் வெளியிட்டார், – (ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்3யே) என்று. “அஸ்ய ராமாநுஜஸ்ய சரணௌ’’ என்று- “இராமாநுசன் பரன் பாதமுமென் சென்னித் தரிக்கைவைத்தான்’’ (இரா 4), என்னும்படி திருவடி களிலே தலையை மடுத்து ஶிரஸா யாசிக்கிறார். ராமஶரணாக3தி, 4. “ ஶிரஸா யாசதஸ்தஸ்ய வசநம் ந க்ருதம் மயா’’ என்று ப2லித்த தில்லை; ராமாநுஜ ஶரணாக3தி அவ்யபி4சரிதமாகப் ப2லிக்குமிறே.
1.“ஸ ப்4ராதுஶ்சரணௌ’’ என்னும்படி, (ராமாநுஜஸ்ய சரணௌ) என்று வேறு த்3வயம் வேண்டாதே, அடியே த்3வயமாயிருக்கை. லோக விக்ராந்த சரணம்போலே (க3த்3ய), மாறிநடப்பனவாயிறே (இரா 50), இராமாநுசன்றன்னிணையடி இருப்பது. நாராயண சரணங்களளவும் செல்ல வேண்டாத பூர்த்தி. விக்3ரஹைகதே3ஶத்தைச்சொன்னது-விக்3ரஹத்துக்கும் உபலக்ஷணமாக. “கையில் கனியென்னக் கண்ணனைக்காட்டித் தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்’’ (இரா 104), என்னும்படியாயிருக்கும். (சரணௌ ஶரணம்) “இராமாநுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணமென்றால்’’ (இரா 98), என்கிற – உபாயஸ்வீகாரஞ் சொல்லுகிறது. “நையும் மனமுன் குணங்களை யுன்னி என்னா விருந்து எம்மையனிராமாநுசனென்றழைக்கும் அருவினையேன் கையுந்தொழும்’’ (இரா 102), 5. “வாசா யதீந்த்3ர மநஸா வபுஷா ச யுஷ்மத்பாதா3ர விந்த3யுக3ளம் ப4ஜதாம் கு3ரூணாம் | கூராதி4நாத2’’ என்னும்படி த்ரிவித4கரணத்தாலும் பற்றுகிறார். “இராமாநுசனை உன்னுந் திண்மை’’ (இரா 73), என்று – எல்லார்க்கும் மாநஸாத்4யவஸாயமாகலாம்; இவர் பூர்ணாதி4காரிகையாலே த்ரிவித்4கரணத்தாலும் பூர்ணப்ரபத்தி பண்ணுகிறார். இந்த ஸ்வீகாரம் ப்ராப்யமாகையாலே, “ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமாநுசமுனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வண்ங்குகின்றேன்’’ (தனியன்) என்று வர்த்தமாநமாய் நடக்கிறது.
இவர் தீ3ர்க்க4ப3ந்து4வாகையாலே, எல்லார்க்கும் தாம் பண்ணின ப்ரபத்தியே தஞ்சமாம்படி கொழுந்துவிட்டுப் படரும்படி பண்ணுகிறார். அத்தைப்பற்றவிறே 1. “ப்ரயாணகாலே ராமாநுஜார்யம் நமத’’ என்றது. இத்தால்-இவர் சரமகாலத்திலே பண்ணின சரமப்ராப்தியே a இவர் சரண் கூடின சரமபர்வ நிஷ்ட்ட2ர்க்கெல்லாம் அவயாபி4சரிதமான உபாயமாய்ப் பேறோடே தலைக்கட்டுமென்றதாயிற்று. “ப்ரபந்ந ஜநகூடஸ்த்த2ரான எம்பெருமானார், தம்முடைய பெருகிப்போருகிற பெருங் கருணையாலே பெரியபெருமாள் திருமுன்பே சென்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டு, `ப்ரபந்ந ஜநங்களான பெரியோர் களிடத்திலே பேதைகளானவர்கள் செய்யும் பெரும்பிழைக்கும் ப்ரபத்தியே இவர் சரண்கூடின சரமபர்வ நிஷ்ட்டர்க்கெல்லாம் ப்ராயஶ்சித்தமாகக்டவது’ (இரா 7), என்று ப்ரார்த்தி2க்ககடவது` என்று ப்ரார்த்தி2க்க, புருஷகார ப3லத்தாலே `பொறுத்தோம்’ என்ன, இந்த ப்ரார்த்த2நாப்ரகாரத்தை இராமானுசனைத்தொழும் பெரியோரான (இரா 105), கூரத்தாழ்வான் ஏகாந்தத்திலே ஸேவித்து, அனைவர்க்கும் தஞ்சமாக 2. `நசேத்’ இத்யாதி3 ஶ்லோகத்தை அருளிச்செய்தார்’’ என்று பெரியோர்கள் அருளிச்செய்வர்கள். வாதி3கேஸரிஅழகியமணவாளச் சீயரும் 3. ப4க3வந்தம் யதிவரம் ப்ரணிபத்ய யதீந்த்3ராங்கீ3 க்ரியாந்வயரானார்; அத்தைப்பற்றப் பின்புள்ளாரும் 4. “ப்ரஸாதா3 ச்ச்2ரீஶஸ்ய’’ என்றார்கள்; ஈட்டுக்கு ப்ரவர்த்தகரான ஈயுண்ணி மாதவப்பெருமாள் ப்ரஶிஷ்யரான நாலூர்ப்பிள்ளையும் ராமாநுஜ தா3ஸரிறே; யதிவரபுநரவதாரமாய், யதீந்த்3ர ப்ரவணரான ஜீயரும் தம் ஶிஷ்யபுத்ரர்களுக்கு ராமாநுஜ நாமத்தை உண்டாக்கி நடத்தியும், நூற்றந்தாதியை அநுகரித்தருளிச்செய்த யதிராஜவிம்ஶதியிலே ஸ்ரீவத்ஸசிஹ்நரடியாக, 5. “வாராமகோ3சர மஹாகு3ண தே3ஶிகாக்3ர்ய கூராதி4நாத2’’ என்றும், 6. “கு3ரூத்தமகூரநாத2 ப4ட்டாக்2யதே3ஶிகவர’’ என்றும், ஸ்ரீஶைலநாத2ரிடத்திலே ஶேகரித்து. ஏவம்வித4 ஸம்ப3ந்த4 யுக்தராய் கு3ருகுலது4ர்யாரான் பெரியஜீயர் ஸம்ப3ந்த4மேயிறே ப்ரப3லம்; இத்தால்-விஶிஷ்டபக்ஷத்திலே ஊன்றின ஶிஷ்டராய், அத்தாலே ஶ்ரேஷ்ட2ருமாய், ஸர்வ ப்ரகாரத்தாலும் அஹங்காரரஹிதரான ஆசார்யர்கள் ஸம்ப3ந்த4மே ஆத3ரணீய மென்றதாயிற்று. 3.
ஆளவந்தாரருளிச்செய்தது
माता पिता युवतयस्तनया विभूतिस्सर्वं यदेव नियमेन मदन्वयानाम् | आध्यस्य न: कुलपतेर्वकुलाभिरामं श्रीमत्तदन्घ्रियुगलं प्रणमामि मूर्ध्ना ||
மாதா பிதா யுவதயஸ் த்நயா விபூ4திஸ்
ஸர்வம் யதே3வ நியமேந மத3ந்வயாநாம் |
ஆத்3யஸ்ய ந: குலபதேர்வகுளாபி4ராமம்
ஸ்ரீமத் தத3ங்க்4ரியுக3ளம் ப்ரணமாமி மூர்த்3நா ||
(மாதேத்யாதி3) இந்தஜ்ஞாநம் அதி4க்ருதாதி4காரமாய் போகாமே ஸர்வாதி4காரமாம்படி, த்3ராமிடி3யான ப்3ரஹ்மஸம்ஹிதையை (பராங்குஶாஷ்டகம்), “மயர்வறமதிநலம்’’ (1-1-1), என்கிற ப4க்தியாலே வாசிகமாக்கி, “மரங்களுமிரங்கும் வகை’’ (6-5-9), என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச்சொல்லாலே அருளிச்செய்கையாலும், பெரியமுதலியார்க்கு இந்த ஜ்ஞாநத்துக்கு உபாதா3நம் ஆழ்வாராகையாலும் அவர் திருவடிகளிலே விழுகிறார். “உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவு எத்திறம்’’ (1-3-1), என்றும், “நெய்யுண்வார்த்தையுளன்னை கோல்கொள்ள’’ (5-10-3), என்றும், “எல்லாங்கண்ணன்’’ (6-7-1), என்றும், பெரியமுதலியாரையும் ஸ்ரீபரஶர ப4க3வானையும்போலே க்ருஷ்ண வித்3த்4ராயிருக்கிறபடியையும் நினைத்து ஆழ்வார் திருவடிகளிலே ஶரணம் புகுகிறார்.
(மாதா) உத்பத்திக்கு முன்னே வரங்கிடந்து, பெறுமைக்கு வருந்தி, பத்து மாஸம் க3ர்ப்ப4தா4ரணம் பண்ணி, ப்ரஸவவேத3நை அநுப4வித்து, அஶுத்3தி4களையும் மதியாதே பா3ல்யத3ஶையிலாத3ரித்து வளர்த்து, பக்வனானால் பின்பு பருஷபா4ஷணம் பண்ணினாலும் அவற்றைப் பொறுத்து, அகல இசையாதே இவன் ப்ரியத்தையே வேண்டியிருக்கும் மாதாவைப்போலே உபகாரகராயிருக்கை.
(பிதா) அவள் பாத்ரமாத்ரமென்னும்படி உத்பாத3கனாய், என்றுமொக்க ஹிதைஷியான பிதா பண்ணுமுபகாரத்தைப் பண்ணுமவரென்கை, 1. ‘’க3ரீயாந்ப்3ரஹ்மத3: பிதா’’ (யுவதய:) இவ்விருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப்போலே நெஞ்சுக்கினியராயிருக்கை. (தநயா:) அவர்களுடைய யௌவநத்தை அழியமாறிப்பெற்றவராய், பா3ல்யத்தில் ஸுக2கரராய், பக்வத3ஶையில் ரக்ஷகராய்-நிரய நிஸ்தாரகரான புத்ரர் பண்ணும் உபகாரத்தைப் பண்ணுமவரென்கை. (விபூ4தி:) விப4வமில்லாதபோது இவையெல்லாம் அஸத்ஸம மாகையாலே, இவையெல்லாவற்றையும் நன்றாக்கும் ஐஶ்வர்யம் போலே உத்3தே3ஶ்யராயிருக்குமவரென்கை. (ஸர்வம்) அநுக்தமான ஸர்வைஹிகங்களுமாயிருக்கை. அதாவது-மோக்ஷோபாயமும் முக்தப்ராப்யமும். (யதே3வ) அவதா4ரணத்தால் – ‘’சேலேய் கண்ணியரும். பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத்தாய் தந்தையுமவரே’’ (5-1-8), என்றிருக்கும் ஆழ்வார் நினைவுக்கே. (நியமேந) என்றுமொக்க. அவர்க்கு ப்ரியமென்று போமதொழிய, ப்ராமாதி3க மாகவும். புறம்பு போகக்கடவதன்றிக்கேயிருக்கை. (மத3ந்வயாநாம்) 2. ‘’வித்3யயா ஜந்மநா வா’’ என்கிற உப4யஸந்தாந ஜாதர்க்கு.
(ஆத்3யஸ்ய ந:). வைஷ்ணவஸந்தாநத்துக்கு ப்ரத2மாசார்யரென்கை. (குலபதே:) ஸ்த்ரீக்கு ப4ர்த்ருகுலம்போலே கோ3த்ர்ரிஷியுமவரே. (வகுளாபி4ராமம்) திருமகிழ்மாலையாலே அலங்க்ருதமாயுள்ளத்தை. இத்தால்-திருவடிகளில் பரிமளத்தால் வந்த போ4க்3யதையைச் சொல்லுகிறது. திருத்துழாயாலே அலங்க்ருதமான ப4க3வச் சரணார விந்த3ங்களை வ்யாவர்த்திக்கிறது. ‘’நல்லடிமேலணிநாறு துழாய்’’ (4-2-2 ), (ஸ்ரீமத்) ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடே நித்யஸம்யுக்தமாயிருக்கை; 1. அந்தரிக்ஷ க3த: ஸ்ரீமாந்’’ 2. ‘’ஸ து நாக3வரஶ்ஸ்ரீமாந்’’ என்று-ப4க3வத் ப்ரத்யாஸத்தியை ஐஶ்வர்யமாகச்சொல்லக்கடவதிறே. என்னுடைய ஸம்பத்துக்கு ஊற்றான ஐஶ்வர்யத்தை உடையவரென்னவுமாம். (தத3ங்க்4ரியுக3ளம்) அதுவென்னுமத்தனையொழியப் பேசி முடியாவொண்ணாதென்கை. (யுக3ளம்) சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாயிருக்கை. (ப்ரணமாமி மூர்த்4நா) ஆழ்வாருடைய படிகளை நினைத்தவாறே, 3. ‘’நம:’’ என்று நிற்கமாட்டாதே அவர் திருவடிகளிலே தலையைச்சேர்க்கிறார்.
கீழ் உப்காரகரை ஆஶ்ரயித்தவித்தால் செய்ததாயற்றது-முமுக்ஷுவுக்கு உபகாரகர் ஶேஷித்வப்ரதிபத்தி விஷயபூ4தரும் ஸ்துத்யருமென்னுமிடஞ்சொல்லுகிறது. ஒருவனுக்கு ஶேஷிகள் இருவருமாம்படி எங்ஙனேயென்னில்: *க்ருதிஶேஷித்வம் யாகா3தி3 களுக்கும்((பா) க்ரது…..சா2கா3தி3 ); புரோடா3ஶாதிகளுக்குமுண்டானாப்போலே, ஈஶ்வரன் ப்ரதா4நஶேஷியாய், பா4க3வதர்த்3வாரஶேஷிகளாமிடத்தில் விரோத4மில்லை; அத2வா, ஈஶ்வரன் நிருபாதி4கஶேஷியாய, தத் ஸம்ப3ந்த4மடியாக வந்ததாகையாலே பா4க3வதஶேஷத்வம் போ4கெ3ளபாதி3கம் ((பா) ஸோபாதி4கம்), என்றுமாம். ‘’தமக்கு ஸ்தோத்ராரம்ப4 ஹேதுவான ப4க்த்யாதி3கள் பிதாமஹோபாத்தத4நம்’’ என்கைக்காக-முதலிலே பெரியமுதலியாருடைய ஜ்ஞாநப4க்திகளுடைய ஆதி4க்யஞ் சொன்னார். நாலாம் ஶ்லோகத்தாலே-இவ்வர்த்த2ம் த்ரைவித்3ய வ்ருத்3தா4நுமதமென்கிறது. அஞ்சாம் ஶ்லோகத்தாலே – இந்த ஜ்ஞாநம் இவர்க்கு ஆழ்வாராலே வந்ததென்கை.
4.’’அக்3ர்யம் யதீந்த்3ர ஶிஷ்யாணாம் ஆத்3யம் வேதா3ந்த வேதி3நாம்’’ என்று ஆழ்வான் அக்3ரக3ண்யராகையாலே – ‘’அஸ்மத்3கு3ரோ:’’ என்றார். அப்படிப்பட்ட பாரதந்த்ர்யத்தை ‘’இவ்வாத்மவஸ்து அவர்க்கு ஶேஷமாகில் அவருடைய விநியோக3ப்ரகாரங்கொண்டு கார்யமென்’’ என்றார்; ஏவம்வித4ஸ்வரூபராகையாலே, உடையவரும் b ‘’ஒருமகள் தன்னையுடையேன்’’ (பெரியாழ் 3-8-4), என்றார். இப்படி ஸ்வாசார்ய விஷயத்தில் பாரதந்த்ரயத்தாலும், ‘’நான் பெற்ற லோகம் நாலூரானும் பெறவேணும்‘’ என்று ப்ரார்த்தி2க்கையாலும், ‘’ஶிஷ்யாசார்ய க்ரமத்துக்கு ஸீமாபூ4மி கூரத்தாழ்வான்’’ என்றார்கள்; 5. ‘’ஆசார்யவர்யவிர4வஸ்ய ச ஶிஷ்யவ்ருத்தேஸ்ஶீமேதி தேஶிகவரை: பரிதுஷ்யமாணம்’’ என்னக்கடவதிறே; அத்தைப்பற்ற உடையவரும் 6. ‘’யத்ஸம்ப3ந்தா4த்’’ என்று ப்ரார்த்தி2த்தருளினார்; நூற்றந்தாதியிலும் a மொழியைக் கடக்கும் பெரும்புகழானடியாக விரும்பியருளினார். மற்றை யாரான இவ்வருகிலுள்ளாரும், அல்லாவழியைக் கடப்பது (இரா 7), அவர்களாலேயிறே. அவர்கள்தான், யோ நித்யம் (தனியன்), 7. த்ரைவித்3யாதி3களடியாக அடியுடையராயிருப்பார்கள்; ‘’மாறனடிபணிந்துயுந்தவன்’’ (இரா 1), 8. ‘’ராமாநுஜாங்க்ரி ஶரணோஸ்மி’’ இத்யாதி3. மது4ரகவிகளடிப்பாட்டிலே நடக்கிற க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்கள் ஆழ்வானடியா யிருப்பார்கள், 1. ‘’ஸ்ரீவத்ஸசிஹ்ந ப4வத:’’ இத்யாதி3. ‘’ஆரியர்காள் கூறும்’’ (உபதேச 37), என்கிற எழுபத்துநாலூ முதலிகளுக்கும் உடையவரடியான ஆசார்யத்வம்; அதில் முக்2யம் ஆழ்வான் ஸம்ப3ந்த4ம். பட்டரடி யாகவிறே அஷ்ட ஶ்லோகீ முகே2ந ரஹஸ்யத்ரயார்த்த ஸம்ப3ந்த4ம். திருவாய்மொழியும் அடியாயிருக்கும்; ஒன்பதினாயிரம் பன்னீராயிரத்திலே பர்யவஸித்தது; பெரியப4ட்டருடைய ப்ரிய ஶிஷ்யரான நம்பிள்ளை திருவடிகளிலேயிறே நடுவில் திருவீதிப் பிள்ளைப4ட்டர ஆஶ்ரயித்தது; அவரும் ராமாநுஜ நாமாவிறே; அஷ்டாக்ஷரதீ4பிகை அவரடியயிருக்கும்; நம்பிள்ளை குமாரரும் ராமாநுஜனிறே; அவரும் ஸாரஸங்ங்க்3ரஹஞ்செய்தருளினார்; தத்3வம்ஶ்யரும் கோயிலுடையவர்க்குச்சிறிது கைங்கர்யங்களுஞ் செய்தார்கள். வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யரும் வகுள பூ4ஷண ஶாஸ்த்ரஸாரமான வசநபூ4ஷணாதி3 ரஹஸ்ய ப்ரப3ந்த4கர்த்தாவாய், தம்முடைய ப்ரதா4ந ஶிஷ்யரான எம்பெருமானார்க்கு ‘’கூரகுலோத்தமதா3ஸர்’’ என்று திருநாமஞ் சாத்தினார்; ‘’என்னாரியர்க்காக எம்பெருமானார்க்காக’’ (உபதேச 37),என்றிறே அக்கோஷ்ட்டி2யில் பரிமாற்றமிருப்பது. 4.
பட்டரருளிச்செய்தது
भूतं सरस्य-महदाह्वय-भट्टनाथ-श्रीभक्तिसार-कुलशेखर-योगिवाहान् |
भक्तान्घ्रिरेणु-परकाल-यतीन्द्रमिश्रान् श्रीमत्परान्कुशमुनिं प्रणतोस्मि नित्यम् ||
பூ4தம் ஸரஸ்ய மஹதா3ஹ்வய ப4ட்டநாத2
ஸ்ரீப4க்திஸார குலஶேக2ர யோகி3 வாஹாந் |
ப4க்தாங்க்4ரிரேணு பரகால யதீந்த்3ரமிஶ்ராந்
ஸ்ரீமத்பராங்குஶமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||
[பூ4தம் ஸரஸ்ய] பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ந்ஞ்சீயர் புருஷகாரம்பிறக்க அவர்க்காக ஆழ்வார்களை அநுஸந்தி4த்ததாயிருக்கும் இஶ்லோகம். ஆண்டாளை ‘’நீளா’’ (ஆண்டாள் தனியன்), என்று-தனித்து ஶரணம்புகுகிறதா யிருக்கும் அஶ்லோகம். ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சியிறே (உபதேச 24), அவள் வைப4வமிருப்பது.
(பூ4தம் ஸரஸ்யேத்யாதி3) நிரவதி4க ப4க3வத்பரேமயுக்தரான ஆழ்வார்கள் பதின்மரையும், அவர்களுக்கு ஶேஷபூ4தரான மது4ரகவியதிவரர்களிருவரையும் தாம் நித்யஸேவை பண்ணும்படியை அருளிச்செய்றார். ‘’மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே’’ (கண்ணி 2), என்னுமவராகையாலே ஆழ்வாரைச் சொன்ன போதே அதிலே அவருமந்தர்ப்பூ4தர்.
(பூ4தம்) பூதத்தாராகிறார் – ‘’மாதவன் பூதம்’’ (5-2-2), என்று நிரூவிக்கும்படியான மஹத்தையையுடையராய், மாமல்லையில் மாத4வீகுஸுமத்திலே அவதரிக்கையாலே ‘’கடல்மல்லை பூதத்தார்’’ (இர.திருவ தனியன்), என்று நிரூபகமானவரெங்கை. (ஸரஸ்ய) என்று- ‘’மல்லையாய் மதிட்கச்சியூராய்’’ (திருநெடு), என்கிறபடியே மல்லைக்கு அநந்தரபா4வியாக எடுப்பதான கச்சிவெஃகாவில் (மூன். திருவ 64), பொய்கையிலே, ‘’பூவில்நான்முகனைப்படைத்த’’ (2-2-1), என்கிறபடியே பொற்றாமரைப்பூவிலே அவதரித்த பொய்கையாரென்றபடி. மஹதா3ஹ்வயராகிறார் – ‘’மாடங்கள்சூழ்ந்தழகாயகச்சி’’ (பெரிய திரு 2-9-3), என்னும்படியான அத்தே3ஶத்துக்கு ஸமமாயிருப்பதான; மாடமாமயிலையில் (பெரிய திரு 2-3-9), மாவல்லிக்கேணியில் (நான் திரு 35), செவ்வல்லிப்பூவிலே அவதரித்து, ‘’யானுமோர்பேயன்’’ (பெரு 3-8), ‘’பித்தரென்றேபிறர்கூற’’ (3-5-8), என்று பேசும்படியான பேயார். இவர்கள் மூவரும் பரவிஷயத்தில் பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளை யுடையராயிறேயிருப்பது; அதில் சரமத3ஶையான பரமப4க்தியை யிறே இவர் ப்ராப்தரானது. ப4ட்டநாத2ராகிறார் – ‘’வேதாந்தவிழுப் பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனன்’’ (பெரியாழ் 4-3-11), என்கிறபடியே-வித்3வத்3கோ3ஷ்டி2யிலே சென்று, அவர்களை வென்று, பரதத்வநிர்ணயமுகே2ந; ‘’பட்டர்பிரான்’’ (பெரியாழ் 4-4-11), என்று பேர்பெற்றவரென்கை. இவரும்; ‘’சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் தொல்லைமாலையொன்றும் பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும்’’ (இரா 15), என்னும்படி நிரவதி4கப4க3வத்ப்ரேமயுக்தராயிறே யிருப்பது. ‘’ப4ட்டநாத2. ஸ்ரீ’’ பி4ந்நபத3மாய், லக்ஷ்மீதுல்யையான ஆண்டாளென்னுதல்; அன்றிக்கே, ப4ட்டநாத2ஸ்ரீயென்று-பெரியாழ்வாருக்கு ஸ்ரீயான ஆண்டாளென்றநுஸந்தி4க்கவுமாம். ’’திருமகள்போல வளர்த்தேன்’’ (பெரியாழ் 3-8-4), என்றாரிறே. மேல் (ப4க்திஸார) என்கிறது. அன்றிக்கே, ப4ட்டநாத2ர்க்கநந்தரம் ‘’ஸ்ரீப4க்திஸார’’ என்று சொல்லுகிறது. ‘’பெறற்கரிய நின்னபாத பத்தியான பாசனம் பிறர்க்கரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே’’ (திருச்சந்த 100), என்று ப்ரார்த்தி2த்து ப4க்தியைப்பெற்று, ‘’ப4க்திஸாரர்’’ என்று நிரூபகமானவரெங்கையைப்பற்றவாயிற்று; ‘’பொன்னி சூழரங்கமேய பூவைவண்ண’’ (திருச்சந்த 119), என்றிறே இவருடைய முடிந்த அவாவுக்கு (10-10-10), விஷயமிருப்பது. குலசேக2ரராகிறார் –‘’அங்கையாழி அரங்கனடியிணைத்தங்கு சிந்தைத் தனிப்பெரும்பித்தன்’’ (பெரு 3-9), என்னும் படி பெரியபெருமாள் விஷயத்திலே நிரவதி4கப்ரேமத்தை யுடையரான ஸ்ரீகுலஶேக2ரப்பெருமாளென்கை. மாலடிமுடிமேல் கோலமாங்குலசேகரனிறே (பெரு 7-11). ‘’எம்பெருமான்றன்சரிதை செவியாற் கண்ணார்பருகுவோமின்னமுதமதியோமன்றே’’ (பெரு 10-8), என்றிறே பெருமாள் விஷயத்திலும் இவர் ப்ரேமமிருப்பது. யோகி3வாஹ ராகிறார்-முனிவாஹநரான பாண்பெருமாளென்கை (இரா 11). இவரும் ‘’இலங்கைக்கிறைவநன்தலை பத்துதிரவோட்டி ஓர் வெங்கணையுய்த்தவனோதவண்ணன், அரங்கத்தம்மான்’’ (அமல 4), என்றும், ‘’அணியரங்கனென்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’’ (அமல 10), என்றும், அவ்விஷயத்தில் அஸ்தமி தாந்யபா4வராயிருக்கும்படியாயிற்று இவர் ப4க்தியும். ப4க்தாங்க்ரி ரேணுவாகிறார்- ‘’எல்லையிலடிமைத்திறத்தினிலென் றும்மேவு மனத்தனாம்’’ (பெரு 2-10), என்றும், ‘’அடியார்க்கு (என்னை) ஆட்படுத்தாய்’’ (திருப்பள்ளி 10), என்றுஞ் சொல்லுகிறபடியே எல்லையான ததீ3ய ஶேஷத்வ்மே நிலைநின்ற ஸ்வரூபமென்று அறுதியிட்டு, அதுவே நிரூபகமான தொண்டரடிப்பொடியாழ்வாரெங்கை; ‘’துளவத்தொண்டாயதொல் சீர்த்தொண்டரடிப்பொடி’’ (திருமாலை 45), என்றும், ‘’தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி’’ (திருப்பள்ளி 10), என்றும் தாமே அருளிச்செய்தாரிறே. இவர்தாம் ‘’தன்பாலாதரம் பெருகவைத்த அழகன்’’ (திருமாலை 16), என்று பேசுகையாலே ப4க3வத் ப்ரஸாதா3யத்த ப4க்தியை யுடையவரென்னுமது தோற்றுகிறது.
பரகாலராகிறார்- ‘’மருவலர் தம்முடல்துணிய வாள்வீசும் பரகாலன்’’ (பெரியதிரு 3-9-10), என்கிறபடியே-ப4க3வத்த்3விட்டுக்களான பா3ஹ்யர்கள் கேளாராகையாலே அவர்களைத்தோள்வலியாலும் நிரஸித்து அதுக்கு மேலே ஶாஸ்த்ரீயமார்க்க3 ப்ரவர்த்தகராய் வந்த ஶத்ருக்களை ஸ்வோக்திஶஸ்த்ரங்களாலும் நிரஸித்து 1. ‘’ரங்க3புரே மணிமண்டபவப்ரக3ணாந் வித3தே4 பரகாலகவி:’’ என்னும்படி காயிக கைங்கர்யங்களையும், ‘’அரங்கமாலைச் சொல்லினேன் தொல்லைநாமம்’’ (திருக்குறு 12), ‘’என்னுடைச்சொற்களென்னும் தூயமாமாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேன்’’ (திருக்குறு 16), என்று-வாசிக கைங்கர்யங்களையும் செய்து போந்தவரென்கை. ‘’காம்பினார் திருவேங்கடப்பொருப்ப நின் காதலையருளெனக்கு’’ (பெரியதிரு 5-3-4), என்று ப்ரார்த்தி2த்து, l ‘’பத்திமைக்கன்புடையே னாவதே பணியா யெந்தாய்’’ (திருக்குறு 10), என்னும்படி ஆசைதான் பெரியதாயிற்று; ‘’அரங்கமென்பதிவள் தனக்காசை’’ (பெரியதிரு 8-2-7), என்னக்கடவதிறே; ததீ3ய ஶேஷத்வத்திலும் ‘’நிந்திருவெட்டெழுத்தும் கற்றுநானுற்றது முன்னடியார்க்கடிமை’’ (பெரியதிரு 8-10-3), என்றிறேயிருப்பது.
யதீந்த்3ரமிஶ்ரராகிறார்-2. ‘’ஸம்ஸேவித்ஸ் ஸம்யமிஸப்தஶத்யா’’ என்னும்படி யதிகளாலே ஸேவிக்கப்படும்; எதித்தலைநாதனான (இரா 50), எம்பெருமானாரென்கை. மிஶ்ர ஶப்3த3ம்-பூஜ்யவாசி; ‘’ராமாநுஜா சார்யர்’’ என்னுமாபோலே; ‘’மிஶ்ராந்’’ என்கிற ப3ஹுவசநம்-எல்லாரையுஞ்சொல்லுகிறதாய், இதிலே அநுக்தரான மது4ரகவி களையுங்கூட்டி அநுஸந்தி4க்கிறதாகவுமாம். ‘’மதுரகவியாழ்வா ரெதிராசராமிவர்கள்’’ (உபதேச 21), என்றிறே சேர்த்தியிருப்பது. அன்றிக்கே, மிஶ்ர ஶப்3த3ம்-பெரியோரைச் சொல்லுகிறதாய், அத்தாலே – சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் (இரா 18), பெரியவரான மதுரகவிகளைச் சொல்லுகிறதென்னுதல்; அன்றிக்கே இவரும்; பொன்னரங்க மென்னில் மயலே பெருகுமிராமாநுசனாய் (இரா 35), ரங்கே3ஶ கைங்கர்ய து4ர்ந்த4ரராயிறேயிருப்பது; அசுயுதபதா3ம்பு3ஜயுக்3ம ருக்மவ்யாமோஹம் (தனியன்), இவர்க்கு முண்டிறே.
(ஸ்ரீமத்பராங்குஶமுநிம்) ‘’யதீந்த்3ரமிஶ்ராந்’’ என்று-கீழுக்தரானவர் களெல்லாரும் ஒருதட்டும், ஸ்ரீமத்பரங்குஶமுநி-எங்கையாலே-ஆழ்வாரொருவருமொரு தட்டுமென்னுமது தோற்றுகிறது. எல்லாரையும் அவயவபூ4தராயுடையராயிறே ஆழ்வார்தாமிருப்பது. ‘’ஸ்ரீமத்’’ என்கையாலே – ஒழிவில் காலத்தில் (3-3-1), ப்ரார்த்தி3த்த கைங்கர்யரூபஸம்பத்தை யுடையவரென்கை. பராங்குஶரென்கையாலே – ‘’மதா3வலிப்தக்கங்குசமிட்டு’’ (ஆசார்யஹ்ரு 93), என்னும்படியிருக்கை; 1. ‘’வித்3யாமதோ3 த4நமத3ஸ்த்ருதீயோ ச்Sபி4ஜநாந்மத3:’’ என்று சொல்லப்படுகிற முக்குரும்பையறுக்கும் அங்குஶமாயிறே இவரிருப்பது. ‘’ஓதியுணர்ந்தவர் முன்னா என்சவிப்பார் மனிசர்’’ (3-5-5), என்றும், தத்3ராஹிதயமுடையவர்களை ‘’முழுதுணர்நீர்மையினார்’’ (3-5-6), என்றும் ‘’கொள்ளென்று கிள்ர்ந் தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாகக் கொள்ளென்று தமம்மூடும்’’ (4-9-4), என்றும், ‘’பெருஞ்செல்வமுமவரே’’ (5-1-8), என்றும், ‘’பரமனைப்பயிலுந் திருவுடையார் யவரேலும்’’ (3-7-1), என்றும், ‘’சண்டாள சண்டாளர்களா கிலும் வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்றுள் கலந்தாரடியார்தம் அடியாரெம்மடிகள்’’ (3-7-9), என்ருமிப்படி ஸ்வஸூக்த் யங்குஶத்தாலே அஜ்ஞருடைய மும்மத3ங்களை அருளென்னுந் தண்டால் த3டித்து (பெரிய திருவ 26) ஓட்டினபடி. அன்றிக்கே பராங்குஶரென்று-நிரங்குஶ ஸ்வதந்த்ரனான ஈஶ்வரனை ஸ்வஸூக்த்யங்குஶத்தாலே வசீகரிக்கவல்ல ரென்னவுமாம்; ‘’வலக்கையாழி யிடக்கைச்சங்க மிவையுடை மால்வண்ணனை மலக்கு நாவுடையேற்கு’’ (6-4-9), என்று தாமு மருளிச்செய்தார்; 2. ‘’சக்ரஹஸ்தேப4சக்ரம்’’ என்று பின்புள்ளாரும் பேசினார்கள்.
முநிஶப்3த3த்தாலே-மநநசீலரென்கிறது. எண்ணாதனகளெண்ணும் நன்முனிவறே (10-7-5). பரரக்ஷணமேயாயிற்று இவர் சிந்தா மூலத்திலே சிந்தித்திருப்பது. ஸர்வேஶ்வரனுடையவும்
ஸ்ம்ஸாரிகளுடையவும் ஸம்ரக்ஷணத்திலேயயிற்றிவர் திருவுள்ள மூற்றிருப்பது. ‘’ஆளுமாளார்’’ (8-3-3), ‘’தனிமையும் பெரிதுனக்கு’’ (10-3-10), ‘’அவத்தங்கள் விளையுமென் சொற்கொள்’’ (10-3-6), ‘’உலகினதியல்வே’’ (திருவாசி 6), ‘’இவையென்னவுலகியற்கை’’ (4-9-1), என்றும், இவர்கள் து3ர்க்க3தியை க்கண்டு ‘’மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்’’ (9-1-7), என்றும் உபதே3சித்துத் திருத்திப்போருமவரிறே; இவரும், மதிநலமருளப்பெற்று (1-1-1), ஆராதகாதலையடையராயிறே (2-1-11), யிருப்பது. ‘’பரகால யதீந்த்3ரமிஶ்ராந் ஸ்ரீமத்பராங்குஶமுநிம்’’ என்கையாலே ‘’கலியுங்கெடும் கண்டுகொண்மின்’’ (5-2-1), என்று ஆழ்வாராலே இருவரும் ஸூசிதரென்னுமதுவும், ‘’பராங்குச பரகால யதிவராதி3கள்’’ என்கிற ப்ரபந்நஜநகூடஸ்த3த்வமும் தோற்றுகிறது. ‘’திருவிக்கிரமனடியிணைமிசை’’ (5-7-11), என்றும், ‘’எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரை’’ (6-10-6), என்றும் நிர்தே3ஶித்து, ‘’உன்னடி க்கீழமர்ந்துபுகுந்தேனே’’ (6-10-10), என்றும், ‘’உலகமளந்த பொன்னடியே யடைந்துய்ந்தேன்’’ (பெரிய திரு 5-8-9), என்றும், 1. ‘’லோகவிக்ராந்த சரணௌ ஶரணம் தேSவ்ரஜம் விபோ4’’ என்றுமிறே இவர்கள் ப்ரபத்திபண்ணும் க்ரம மிருப்பது. இந்த க்ரமம் ஆழ்வாரகளெல்லார்க்கும் ஒக்குமிறே. 2. ‘’த்ரிவிக்ரம க்ரமக்ராந்த’’. இவர்கள் தாம் ஸர்வேஶ்வரன்பக்கல் தாங்கள் கற்றதையிறே பேசி ஓதச்சொல்லுகிறது, – ‘’பேசுமின் திருநாமமெட்டெழுத்தும்’’ (பெரிய திரு 1-8-9), ‘’மனமுடையீர் மாதவனென்றோதுமின்’’ என்று 3. ‘’த்3வயமர்த்தா2நு ஸந்தா4நேந ஸஹ ஸதை3வம் வக்தா’’ என்று உடையவரும் பெரிய பெருமாளிடத்திலே கேட்டு உபதே3ஶித்தும், ‘’பாருலகில் ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும்’’ (உபதே3ஶ 37), என்று பேசியும் வரம்பறுத்துச்செய்தருளி னாரிறே. உடையவர்தாம் த்3வயத்தை ஜ்ஞாநாதி4கர்க்கு ப்ரீத்யதி ஶயத்தாலே புந: புந: ப்ரஸாதி3க்கையுமாகிற ஆகாரத்3வயமுண்டிறே; “எட்டுமிரண்டுமறிவித்த எம்பெருமானாரிறே”.
(யதீந்த்3ரமிஶ்ராந் ஸ்ரீமத்பராங்குஶமுநிம்) என்கையாலே – திருவாய்மொழி முதலான தி3வ்யப்ரப3ந்த4ங்களாலும், ஸ்ரீபா4ஷ்யாதி3 ஸ்ரீ ஸூக்தியாலும் த3ர்ஶநத்தை நடத்திப்போரு மவர்களாய் ஆழ்வாருக்கு சரணவத் பரதந்த்ரராய், ‘’மாறனடி பணிந்துய்ந்தவன்’’ (இரா 1) என்றும் ‘’சடகோபத்தேமலர்த் தாட்கேய்ந் தினிய பாதுகமாமெந்தை யிராமாநுசனை’’ (ஆர்த்தி 10), என்றும் ஆழ்வார் திருவடிகளுக்கு அத்யந்தம் அந்தரங்க3ரான ஆகாரத்தைப்பற்ற அண்மையாக அருளிச்செய்தது. ஆழ்வானும் 4. ‘’ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்4யே’’ என்று, அநந்தர ஶ்லோகத்திலே 5. ‘’தத்ஸம்ஶரயேம வகுளாப4ரணாங்க்4ரி யுக்3மம்’’ என்று ஆழ்வாரை அநுஸந்தி4த்தருளினார். 6. ‘’யதீந்த்3ராய ஶட2த்3விஷே’’ என்றிறே சேர்த்தியிருப்பது.
‘’பூ4தம் ஸரஸ்ய’’ என்று தொடங்கி – ஆழ்வார்களோடு அவர்களையும் ‘’யதீந்த்3ரமிஶ்ராந் ஸ்ரீமத்பராங்குஶமுநிம்’’ என்று ஸஹபடி3த்தது – இவர்க்ள் ப்ராதா4ந்யந்தோற்ற. ‘’யோ நித்யம்’’ ‘’மாதா’’ என்கிற இரண்டு தனியனாலும் விஶேஷித்து ஆசார்யர்கள் அநுஸந்த்4த்தார்கள் – கு3ருபரம்பரையிலும் த்3வயத்திலும் எம்பெருமானை அநுஸந்தி4க்குமாபோலே. அதிலும் உடையவர் ப்ராதா4ந்யத்தாலே – ‘’யோ நித்யம்’’ முற்பட்டிருக்கும்; ஆகையால், யதிவரசரமாய், அவரோடும் த3ஶமரான தே3ஶிகர்களையும், தே3ஶிககுலகூடஸ்த2ரான் ஶட2ரிபுசரணங்களையொ ப்ரணதோஸ்மி நித்யமென்று-நித்யஸேவை பண்ணும்படி சொல்லுகிறது. உபகாரத்துக்காகில் 7. ‘’தஸ்மை நம:’’ என்று ஒரு காலநுஸந்தி4க்குமதேயுள்ளது. ப்ராப்யபு3த்3த்4யா ஸதா3விறே. 8. ‘’பராங்குஶாத்3யைர் ப4க்தைர்ப்வாசார்யைஸ்ஸமுபஸ்தி2தம்’’ 1. ‘’அத்ர பரத்ர சாபி’’ என்று அங்கும் அநுவர்த்தநமுண்டாகவிறே அருளிச்செய்தது. ‘’ப்ரணதோஸ்மி’’ என்று – ததீ3யவிஷயத்தில் 2. ‘’நிப்4ருத: ப்ரணத: ப்ரஹவ:’’ என்கிறபடியே த்ரிவித4கரண ப்ரவணதையாலே ப்ரணாமம் பண்ணுகிறேனென்கிறார். இத்தால்-ப4க்திபாரவஶய ப்ரபந்நரான ஆழ்வார்களும், அவர்களோடு விகல்பிக்கும்படியான ஸ்ரீபா4ஷ்யகாரரும், ஸர்வதா2 ப4ஜநீயரென்ற தாயிற்று. 3. ‘’ஶட2ரிபு கலிஜித் ஸரோ பூ4த வேதாள கோ3தா3கு3ரூந் முநிவஹ குலஶேக2ரௌ ப4க்தபத்3ரேணு ப4க்த்யர்ணவௌ | மது4ரகவிமதோ2 யதீந்த்3ரம் ததா2Sந்யாநஶேஷாந் கு3ரூந் ஶ்ரியமபி வஸுதா4ஞ்ச நீளாஞ்ச வைகுண்ட2நாத2ம் ஶ்ரயே’’ என்றிறே ஆழ்வார்களைத் தொடங்கி ஸேவிக்கும் க்ரமமிருப்பது. 5.
பிள்ளைலோகம் ஜீயர் திருவடிகளே ஶரணம்
ஸ்ரீமதே ஶட2கோபாய நம:
திருவாய்மொழி வ்யாக்2யாநமான
ஈடு முப்பத்தாறாயிரப்படியின் ஸம்ப்ரதா3யத் தனியன்கள்
திருமலையாழ்வாரருளிச்செய்தது
नाथं पन्कजनेत्र-राम-यमुनावास्तव्य-मालाधरान्
योगीन्द्रंकुरुकेश चन्द्रजलधिं गोविन्द-कूराधिपौ |
भट्टार्यं निगमान्तयोगि-जगदाचार्यौ सक्रुष्णद्वयौ
वन्दे माधव-पद्मनाभ-सुमन: कोलेश-देवाधिपान् ||
- நாத2ம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ்தவ்ய மாலாத4ராந் யோகீ3ந்த்3ரம் குருகேஶசந்த்3ர ஜலதி4ம் கோ3விந்த3 கூராதி4பௌ | ப4ட்டார்யம் நிக3மாந்தயோகி3 ஜக3தா3சார்யௌஸக்ருஷ்ணவயௌ வந்தே3 மாத4வ பத்3மநாப4 ஸுமந:கோலேஶ தே3வாதி4பாந் ||
- மணவாளமாமுனிகளருளிச்செய்தது
திருவண்மால் சேனைமுதலி சடகோபன் நாதமுனி சீருய்யக் கொண்டார் மணக்கால்நம்பி சென்றாமாளவந்தார் குருமாலாதாரர் குருகைப்பிராற்கன்பாடுமெதிராசர் கோவிந்தர் கூரேசர்பட்டர் வேதாந்திமுனி இருகண்ணர்க்கன்புடையநம்பிள்ளை யிவரீடளித்தற்கேய்ந்த மாதவர் பற்பனாபரிவரருளாளர் திருவடியூன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டருளும் திருமலையாழ்வார்பதங்கள் முன்பென்னுட்சேர்ந்தனவே.
பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த ஈடு தனியன் வ்யாக்யாநம்
‘’நாத2ம் பங்கஜநேத்ர’’ என்கிற தனியனிலும், ‘’ திருவருள்மால்’’ என்கிற திருநாமத்திலும் – திருவாய்மொழியினீட்டின் ஸம்ப்ரதா3யத்தை அடியேதொடங்கித் திருவாய்மொழிப்பிள்ளை யளவும் த3ர்ஶிப்பித்தபடி சொல்லுகிறது. 1. ‘’நமோSஸ்மதா3சார்ய பரம்பராப்4ய:’’ ‘’வந்தே3 கு3ருபரம்பராம்’’ என்கிறபடியே, நாதா2தி3 யாக நமஸ்காரததைச்சொல்லுகிறது (நாத2மித்யாதி3யால்).
நாத2ராகிறார் – ‘’ஸ்ரீரங்க3நாத2ர்’’ என்னும் நாமதே4யத்தை யுடையராய், 2. ‘’ஆத்3யாய குலநாதா2ய’’ என்னும்படியான ஆழ்வாரை நாத2ராகவுடையராய், 3. ‘’வ்யோம்ந: பரஸ்மாத் ஸவித4ம் ஸமேத்ய லக்ஷ்ம்யா நியோகா3த் குருகாதி4ராஜ: | ஸமந்த்ரராஜத்3வயமாஹ யஸ்மை நாதா2ய தஸ்மை முநயே நமோஸ்து ||’’ என்று, திருமாலாலருளப்பட்டசடககோபன் (8-8-11), ‘’அருள் கொண்டாயிரமின்தமிழ் பாடினான்’’ (கண்ணி 8), என்கிறபடியே அந்த ஆழ்வாருடைய, அருள்பெற்ற நாதமுனி (உபதேஶ 36), யென்கை. ஆழ்வாரைத் திருப்புளியடியிலே மயர்வறமதிநலமருளி (1-1-1), விஶேஷகடாக்ஷம் பண்ணினாப் போலே, அவ்விடந்தன்னிலே ஆழ்வாரும் விஶேஷ கடாக்ஷம் செய்தருளினார்; ‘’தாம் மயர்வறமதிநலமருளி ப4ஜநத்திலே சேர்க்கிறார்’’ (ஆசார்ய 219), என்னக்கடவதிறே. ஆழ்வாருடைய ப4க்தியோடு விகல்பிக்கலாம்படியான, அகா3த4ப4க3வத்3 ப4க்தி (ஸ்தோ 1), யிறே இவரது. இத்தால் ‘’முனிவரையிடுக்கியும்’’ (ஆசார்ய 17), என்னும்படி ஸத்3வாரக ப4க3வத் ப்ரஸாத3மடியாக நடந்துவந்த ஶாஸ்த்ரங்க ளிற்காட்டில், அத்3வாரக ப4க3வத் ப்ரஸாத3மடியாக ஆழ்வாராலே அவதரித்த ஏற்றத்தையுடைய திருவாய்மொழியை அவர் ப்ரஸாத3த்தாலே பெற்ற ஏற்றத்தைக்சொல்லுகிறது. ஶாஸ்த்ர ப்ரவர்த்தநத்துக்கடி-வ்யாஸ ப்ரஸாத3மாகையாலே – ஆர்ஷமூலமா யிருக்கும் அது; 4. ‘’நாதே2ந யாமுநம் வ்யாஸம்’’ என்றதிறே; 5. ‘’ப்3ரஹ்ம ருத்3ரார்ஜுந வ்யாஸ’’ என்று அநுபாஸ்யராக எடுக்கப் பட்டதிறே அவர்களை. அதின் தாத்பர்யமான இதுக்கு ‘’திருவருள் மால் ஜ்ஞாநரான ஆழ்வாரடியாயிருக்கும்; ஆகையாலிறே ‘’லக்ஷ்மீநாத2 ஸமாரம்பா4ம்’’ ‘’திருவருள்மால்’’ என்று அடியிலே எடுத்தருளிற்று. நாத2முனிகள்தாம் தண்டமிழ்க் கண்ணிநுண்சிறுத்தாம்பைப் பண்டையுருவால் பன்னீராயிரமுருவுரைசெய்ய, ஒண்ட்மிழ்மாறன் திருவுள்ளமுகந்து தி3வ்ய ஞானம் நாதமுனிக்கு நயந்தருள் புரிந்தாரிறே.
பங்கஜநேத்ரராகிறார்-‘’சீருய்யக்கொண்டார்’’ என்னும்படியான சீர்மையையுடையவர். அவர்தாம் புண்ட3ரீகாக்ஷரிறே. 6. ‘’புண்ட3ரீகத்3ருஶே நம:’’ என்றாயிற்றருளிச்செய்தது. அவர்க்கு சீராவது- ஶரணாக3திக்கும் தீ3ர்க்க4 ஶரணாக3திக்கும் ப்ரவர்த்தக ராம்படியான பெருமை; 1. ‘’ஸா ஹி ஸ்ரீரம்ருதா ஸதாம்’’ என்னக் கடவதிறே; பரமயோகி4களான ஸ்ரீமந்நாத2முனிகள், குருகைக் காவலப்பனை யோக3ரஹஸ்யத்திலே ஊன்றுவித்து, இவரை ப்ரபத்தி ப்ரவர்த்தநத்திலே நியோகி3த்தருளினாரிறே.
ராமராகிறார்-ஸ்ரீராமமிஶ்ரர். அவர்தாம் 2. ‘’ஸமா த்3வாத3ஶ தத்ராஹம் ராக4வஸ்ய நிவேஶநே’’ ((பா) உஷித்வா த்3வாத3ஶ ஸமா இக்ஷ்வாகூணாம் நிவேஶநே) என்னும்படி, பன்னிரண்டாண்டு ஆசார்யர் திருமாளிகையிலே ஸேவைபண்ணி; படியாய்க்கிடந்து (பெரு 4-9 ), ‘’மணக்கால்நம்பி’’ என்னும் திருநாமத்தை உடையரானவரென்கை.
யமுநாவாஸ்தவயராகிறார் – தூயபெருநீர் யமுனைத்துறைவர் (திருப்பாவை 5), திருநாமத்தை இங்கே நம்முடையபேரனை ‘யமுனைத்துறைவர்’ என்று உம்முடையருளால் உகந்து சாத்தும்’’ என்று நாத2முனி களாலே நாமநிர்த்தே3ஶம் பண்ணப்பெற்று, அவரை 3. ‘’ ஜந்மநா வித்3யயா ச’’ பிதாமஹராக உடையவரென்கை; அவரும் 4. ‘’பிதாமஹம் நாத2முநிம் விலோக்ய’’ என்றார். இப்படி அவராலே சாத்தாப்பட்ட திருநாமம், ‘’எதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’’ (இரா 21), என்று பின்பும் பேர்பெற்றது. அடியார்க்கின்பமாரியும் (4-5-10), நாத2முநிநாம ஜீமூதமும் (ர-ஸ்த 1-5), வர்ஷித்தால், ‘’தூயபெருநீர் யமுனைத் துறைவன்’’ (திருப்பாவை 5), என்னும்படியான யாமுநதீர்த்த2ம் (யதிராஜஸப்ததி 8), எல்லார்க்கும் அவகா3ஹிக்கலாமிறே; 5. ‘’யாமுநார்யஸுதா4ம் போ4தி4 மவகா3ஹ்ய’’ ‘’ஞானத்துறைபடிந்தாடி’’ (திருவிரு 93), என்னக்கடவதிறே; இவரும் 6. ‘’நாதா2ய நாத2முநயேSத்ர பரத்ர சாபி நித்யம் யதீ3யசரணௌ ஶரணம் மதீ3யம்’’ என்றும் 7. ‘’ஆத்3யஸ்ய ந: குலபதேர் வகுளாபி4ராமம் ஸ்ரீமத்தத3ங்க்3ரி யுக3ளம் ப்ரணமாமி மூர்த்4நா’’ என்றும் – உபகாரஸ்ம்ருதியதிஶயத்தாலே திருவடித் தொழுகையால் அடியுடையராயிறே இருப்பது. யமுநா வாஸ்தவ்ய ரென்றத்தை-‘’மணக்கால்நம்பி சென்றாமாளவந்தார்’’ என்கிறது. மணக்கால்நம்பி சென்றாமாளவந்தாரவது – வாத3த்திலே (ஆக்கி)யாழ்வான் வாயை அடக்குகையாலே ‘’ஆளவந்தார்’’ என்று திருநாமத்தையுடையராய்-த3ர்ஶநத்தையாளவந்தாராயிருக் கையாலே. இத்தை மண்க்கால்நம்பி கேட்டு இவர்பாடு பலகால் நடந்து பச்சை யிட்டிறே இவரை பச்சைமாமலைபோல் மேனியிலே (திருமாலை 2), மூட்டிற்று; ஆகையாலே அவர் யத்நவிஶேஷத்தாலே ஆனவரென்றபடி; ‘பூர்வத4நமிது’ புகுந்தநுப4வியும்’’ என்று ஆறுபுடை சூழரங்கரைக் காட்டினாரிறே. அவரும் ‘’மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும்’’ (தனியன்) என்னும்படி திருவாய்மொழி முதலானவற்றையும் திருமாலையாண்டான் முதலானார்க்கு ப்ரஸாதி3த்தருளினார்; ‘’நடமினோ நமர்களுள்ளீர்’’ (10-2-8), என்று அபி4நயிக்கும்படியிறே அக்காலத்திலே நடந்து போந்தது:
மாலாத4ரராகிறார் – ‘’குருமாலாதரர்’’ என்னும்படியான திருமாலை யாண்டான். ‘’குருமாலாதரர்’’ என்கிற விஶேஷணம்-திருவாய்மொழி ப்ரவர்த்தநத்தாலுண்டான கு3ருத்வத்தைச் சொல்லுகிறது; உடையவர்க்குத் திருவாய்மொழியின் அர்த்த2த்தை உபதே3ஶித்தாரிறே இவர்தாம்; இது அறியாக்காலத்திலே (2-3-3), அறியலாம். மாலாத4ரரென்று – நாட்கமழ் மகிழ்மாலைமார்வ(4-10-11)ரான ஆழ்வார் திருநாமமாயிற்று; ‘’செந்தொடைக்கதிபர்’’ என்றிறே பர்யாயநாமமிருப்பது; சொல்மாலைகள் சொல்லும்படிக்கு மாலையிட்டபடி.
(யோகீ3ந்த்3ரம் குருகேஶசந்த்3ரஜலதி4ம்) அதாவது – குருகைப்பிராற்கன் பாமெதிராசரென்றபடி: திருக்குருகைப்பிரான் பிள்ளானை, ஆழ்வார் திருநாமஞ்சாத்துகையாலேயும், 1. ‘’புத்ரீக்ருதோ பா4ஷ்யக்ருதா ஸ்வயம் ய:’’ என்கிறபடியே குமாரராக அபி4மாநித்தருளுகையாலேயும், 2. ‘’யதிராஜாப்3தி4 சந்த்3ரமா:’’ என்று-அவரைக்கண்டபோதெல்லாம் சந்த்3ரோத3யத்தில் மஹோத3தி4போலே ப்ரீதிப்ரகர்ஷத்தை உடையராயிறே உடையவர் தாம் இருப்பது. மாறனடிபணிந்துய்ந்தவன் (இரா 1), உறுபெருஞ்செல்வமுமித்யாதி3 (இரா 19), – அறிதரநின்ற இராமாநுசனிறே; வளர்த்த இதத்தாய் இராமாநுசனாகையாலே (தனியன்), ஆழ்வார் திருவடிகளில் தமக்குண்டான ஸம்ப3ந்த4ம் பிள்ளானளவும் வெள்ளமிட்டது. இப்படித் திருவாய்மொழியின் அர்த்த2த்தை இவரிடத்திலே தேக்கினபடியையும், அது அப்பால் புறவெள்ளமிட்டபடியையும் -‘’தெள்ளாருஞானத்திருக்குருகைப் பிரான் பிள்ளனெதிராசர் பேரருளால்’’ (உபதே3ஶ 41), என்று தொடங்கி ‘’அன்றுரைத்த தின்பமிகுமாறாயிரம்’’ (உபதே3ஶ 41), என்றருளிச்செய்தாரிறே. ஸம்ஸ்க்ருத த்3ராவிட3வேத3ங்களான உப4யவேதா3ந்தத்துக்கும் ப்ரவர்த்தக ராயிற்று இவர்தாம்; ஆகையாலிறே 3. ‘’குருகேஶ்வர பா4ஷ்ய க்ருதௌ’’ என்றது.
கோ3விந்த3கூராதி4பராகிறார் – ‘’கோவிந்தர், கூரேசர்’’ என்னும்படி த3ர்ஶநத்துக்கு த்ருஷ்டி பூ4தரானவர்களாய், உடையவர்க்கும் அத்தாலே அத்யந்தம் அபி4மதவிஷயமானவர்கள். இவர்களை யாயிற்று ப்ரபத்திஶாஸ்த்ர ப்ரவர்த்தகராகக் கறிப்த்தருளிற்று: ஸ்ரீபா4ஷ்ய ஸிம்ஹாஸநத்துக்கு நடாதூராழ்வானையிறே அதி4ஷ்டா2தாவாக்கியருளிற்று; ஆழ்வான் தி3வ்யஸூக்திக ளெல்லாம் ப்ரபத்த்யர்த்த2 ப்ரகாஶகமான ஆழ்வார்கள் தி3வ்ய ப்ரப3ந்த4ங்களை அடியொற்றியாயிற்றிருப்பது. இங்கிவ்விரு வரையும் இடுக்கிச் சொன்னது – இருவரும் ப4ட்டருக்காசார்யர் களாகையாலே. ப4ட்டர்க்குத் திருவாய்மொழியில் ஆழ்வானோடுண்டான ஸம்ப3ந்த4ம்; எண்பெருக்கந்நலத்தி னீட்டிலே (1-2-10), கண்டுகொள்வது. எம்பார் ப4ட்டர்க்கு ப4க3வச்சரண வரணாநுஷ்டா2ந ப்ரகாஶகமான த்2வயோபதே3ஶ முகே2ந ஆசார்யரென்னுமது 4. ‘’மத்3விஶ்ரமஸ்த்2லீ’’ என்கிற அவர்ஸூக்தி யிலே காணலாம். c ‘’ப4ட்டர் ஆழ்வான்திருவடிகளிலே ஆஶ்ரயித்து எம்பார் பக்கலிலே ஜ்ஞாநோபஜீவநம் பண்ணினார்’’ (ப்ரமேயரத்நம்), என்றும் ப்ரமேயரத்நத்திலே பேசிற்று, ‘’பட்டர்தாம் எம்பார்பாடு ரஹஸ்யங்கேட்டாராயிறே யிருப்பது’’ (தனித்3வயம்), என்று தனித்3வயத்திலே அருளிச்செய்தார். இவர்க்கு அவர் பக்கல் திருவாய்மொழியில் அந்வயமுண்டென்னுமதுக்கு, ‘’பூவியல் பொழிலும் தடமுமவன் கோயிலுங்கண்டாவியுட்குளிர’’ (6-7-5), என்கிறவிடத்துக்கு வ்யாக்2யாந்ஞ்செய்தருளுகையில் சீராமப்பிள்ளை அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது. அது தோன்ற 1. ‘’ஸ்ரீவத்ஸசிஹ்ந மிஶ்ரேப்ய:’’ 2. ‘’ராமாநுஜ பத3ச்சா2யா’’ என்றிரண்டு ஶ்லோகத்தையும் ஸஹபடி2த்தருளிற்று, 3. ‘’ப4ட்டார்யாய ப்ரபத்திம் ஹ்யதி3ஶத3த2வரம் த்3ராவிடா2ம்நாயமௌளேரர்த்த2ம் ஸ்ரீபா4ஷ்யமந்யாநபி ச யதிவராதே3ஶதோர்த்தா2ந் ரஹஸ்யாந் | யஶ்சோக்தோ தே3ஶிகேந்த்3ரோ யதிவரசரணச்சா2யநாமார்ய வர்யஸ்தம் கோ3விந்தா3ர்ய மஸ்மத்குலகு3ருமமிதஜ்ஞாந வைராக்3யமீடே3 ||’’ என்னக்கடவதிறே.
(ப4ட்டார்யம்) அவராகிறார் – ‘’பட்டர்’’ என்னும்படியான ‘’ஸ்ரீபராஶர ப4ட்டர்’’ என்னும் அபி4தா4ந்த்தை உடையராய், 4. ‘’ஸ்ரீரங்க3ராஜ கமலாபத3 லாலிதத்வம்’’ என்னும்படி- பெரியபெருமாளுக்கும் ஸ்ரீரங்க3நாயகியார்க்கும் குமாரராய், அதுக்கு மேலே, உடையவரும் ‘’இவனை நம்முடையாரெல்லாரும் நம்மைக்கண்டாப்போலே கண்டுவாருங்கோள்’’ என்று பெருமாள் ஸந்நிதி4யிலே விஶேஷாபி4மாநம் பண்ணும்படியான பெருமையையுடையவ ரென்கை. இவர்தாம்; அஜஸ்ரம் ஸஹஸ்ரகீ3த்யநுஸந்தா4ந (ஸ்ரீரங்க3ராஜ 1-49), தத்பரராய் ப4க3வத்3கு3ணங்களை அநுப4வித்துக்கொண்டு திருநெடுந்தாண்டகத்திலும் மண்டியிறேயிருப்பது; இவருடைய தி3வ்யஸூக்திகளும் அருளிச்செயலை அடியொற்றியிறேயிருப்பது. அருளிச்செயல் நாலாயிரத்துக்கும் ப4ட்டர் நிர்வாஹமேயிறே அதிஶயித்திருப்பது.
நிக3மாந்தயோகி3யாகிறார் – வேதா3ந்திமுனியான வேதா3ந்தி நஞ்ஜீயரென்கை. 5 ‘’நமோ வேதா3ந்தவேத்3யாய’’ என்னக் கடவதிறே. பட்டர் நெடுந்தூரஞ்சென்று தேடித் திருத்தி எடுத்த விஷயமாயிற்று இவர்தாம். ‘’ஏவம்வித4ரான இவர்‘’ பட்டர் நல்லருளாலேயாயிற்று ஒன்பதினாயிரமாகத் (உபதே3ஶ 42), திருவாய்மொழிக்கு ஒரு வ்யாக்2யாநமும் செய்தருளி, நூறுரு திருவாய்மொழியை நிர்வஹித்து, அத்தாலே ஶதாபி4ஷேகமுஞ்செய்தருளினார்’’ என்னுமது ஜக3த்ப்ரஸித்3த்4மிறே.
ஜக3தா3சார்யராகிறார் – c ‘’துன்னுபுகழ்க் கந்தாடைத்தோழப்பர்’’ (உபதே3ஶ 51), இத்யாதி3யிற்படியே உண்டான திருநாமத்தினேற்ற த்தை யுடையரான, இரு கண்ணர்க்கன்புடைய நம்பிள்ளை யென்கை. ‘’நம்முடையபிள்ளை திருக்கலிகன்றிதாஸர்’’ என்றிறே நஞ்சீயராலே இவர் நாமநிர்த்தே3ஶம் பண்ணப்பட்டது. 6. ‘’காருணயபூர்ணம் கலிவைரிதா3ஸம்’’ என்னக்கடவதிறே. இவர் தோற்றியிறே திருவாய்மொழி முதலான தி3வ்யப்ரப3ந்த4ங்களுக் கெல்லாம் வ்யாக2யாநமுண்டாயிற்று. ‘’ ‘இவர் தாமாழ்வாரவதாரம்’ என்னுமது தோற்ற, கார்த்திகையில் கார்த்திகைத்திருநக்ஷத்ரத்தின் நாள் கலியன் திருமங்கையாழ்வார், திருவீதி எழுந்தருளும்போது, திருக்கலிகன்றிதா3ஸரான இவர் திருமாளிகை வாசலிலே திருக்காவணமிட்டலங்கரிக்க, அங்கே எழுந்தருளித் திருப்பணியார வகைகளும் அமுதுசெய்தருளி, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரஸாதி3த்து அவடை அத்3யாபி உபலாலித்து, அவ்வருகே யெழுந்தருளுவர்’’ என்று பெரியோர்களருளிச்செய்வர்கள்; ஆகையாலிறே ‘’நம்மாழ்வார்’’ என்னுமோபாதி, ‘’நம்பிள்ளை’’ என்று போருகிறது; அவரை ‘’ப்ரத2மாசார்யர்’’ என்னுமோபாதி, இவரை ‘’லோகாசார்யர்’’ என்றும், அவரை ‘’திருநாவீறுடையபிரான்’’ என்னுமோபாதி, இவரை ‘’வீறுடையார்’’ என்றும் போருகிறது; ‘’ஆழ்வார்தம்முடைய அவதாரம் போலே ஓரவதாரவிஶேஷமாய்ப் பெருமாளுக்கு ப்ராணபூ4தரான நம்பிள்ளையை’’ என்றிறே ஜ்ஞாநாதி4கையான தோழப்பர் தே3விகளுகருளிச்செய்தது. 1. ‘’வார்த்தோஞ்ச2வ்ருத்யாபி’’ என்று தொடங்கி, 1. தஸ்மை நமஸ் ஸூக்திமஹார்ணவாய’’ என்றிறே நம்பிள்ளை வைப4வமிருப்பது.
(ஸக்ருஷ்ணத்3வ்யௌ) அவர்களாகிறார்-‘’இருகண்ணர்’’ என்னும் படி ஸௌப்4ரத்ரத்தையுடையராய், ‘’நம்பிள்ளைக்கு நயநத்3வயம்’’ என்னலாம்படி. ஸூக்ஷ்ம த3ர்ஶிகளாயிருக்கிற பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளையென்கை. இரு கண்ணர்க் கன்புடைய நம்பிள்ளையென்கையாலே, 2. ‘’ஸ்நேஹேந க்ருபயா வாபி’’ என்கிறபடியே-ஸ்நேஹபூர்வகமான க்ருபையாலேயாயிற்று ஸகலார்த்த2ங்களையும் ப்ரஸாதி3த்தருளிற்று. இவர்களுமப் படியே, ‘’மாறன்மறைப்பொருளைச்சொன்னது இருபத்து நாலாயிரம்’’ (உபதே3ஶ 43), ‘’நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம்’’ (உபதே3ஶ 44), என்னும் படியிறே திருவாய்மொழிக்கு வ்யாக்2யாநமும் ஈடுமருளிச்செய்தது; அத்தைப்பற்ற, 3. ‘’ஸ்ரீக்ருஷ்ணத்3வயபாதா3ப்3ஜே ப4ஜேயத3நு கம்பயா | விபா4தி விஶத3ம் லோகே த்3ராவிட3ப்3ரஹ்ம ஸம்ஹிதா ||’’ என்றநுஸந்தி4த்தார்கள். ‘’பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ள வைக்கும்’’ (உபதே3ஶ 46), என்னும்படி மற்ற மூவாயிரத்துக்கும் வ்யாக்2யாநஞ் செய்தருளினாரிறே; திருவாய்மொழிக்கு வடக்குத்திருவீதிப் பிள்ளையிலும் ப்ரத2மப்ரவர்த்தகர். ஆச்சான்பிள்ளையாகையாலே 4. ‘’ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய’’ என்றும் 5. ‘’ஸ்ரீக்ருஷ்ண பாத3 பாதா3ப்3ஜே’’ என்றும் இரண்டுதனியனும் அடைவேயிருவருக்கு முண்டாயிற்று; அது தோன்ற ‘’முந்தினதனியன் ஆச்சான் பிள்ளையது’’ என்றருளிச்செய்வர்கள்; ‘’பெரியவாச்சான்பிள்ளை தெள்ளார் வடக்குத்திருவீதிப்பிள்ளை’’ (உபதே3ஶ 37), என்றிறே எடுத்தருளிற்று; ஆச்சான்பிள்ளை ஸந்நிதி3யிலே தாம் சில அர்த்த2விஶேஷங்கள் கேட்டதாகவும் அருளிச்செதாரிறே வடக்குத்திருவீதிப்பிள்ளை ‘’ஆசார்யஸம்மதி’’ என்கிற ரஹஸ்யத்திலே.
அங்ஙனன்றிக்கே, முந்தின தனியன் வடக்குத்திருவீதிப் பிள்ளையதாகவும், மற்றைத்தனியன் ஆச்சான்பிள்ளையதாகவு மருளிச்செய்வர்கள்; திருவாய்மொழியீட்டின் ப்ராதா4ந்யத்தாலும், வடக்குத்திருவீதிப்பிள்ளை செய்தருளின ஆசார்ய ஸம்மதியினடி யிலும் 1. ‘’ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய’’ என்றெழுதியிருக்கை யாலும், இத்தை வடக்குத்திருவீதிப்பிள்ளை தனியனாகவும், 2. ’’ஸ்ரீக்ருஷ்ணபாத3பாதா3ப்3ஜே’’ என்கிறது ஆச்சான்பிள்ளையதாக வுமே ஸித்3தா4ந்தம்; அப்போது 2. ‘’ஸர்வஶித்3தி4ரபூ4ந்மம’’ என்கிறது ஸரஸமாயிருக்கும். அவர் ரஹஸ்ய ப்ரப3ந்த4ங்களினடியிலே எழுதியிருக்கிறதுமப்படியே. (இந்தப் பாரா முன்சொன்னதற்கு முரணாயிருக்கையாலும், அநுஷ்டா2ந விருத்3த4மாயிருக்கையாலும், பெரியதிருமுடியடைவு முதலானவற்றில் பெரியவாச்சான்பிள்ளையையே யாமுந புத்ரராகக்குறித்திருக்கையாலும் இது ப்ரக்ஷிப்தமாயிருக்கலாம்.)
மாத4வ பத்3மநாப4ர்களாகிறார் – இவரீடளித்தற்கேய்ந்த மாதவர் பற்நாபரெங்கை; இவர்களில் ஸ்ரீமாத4வராகிறார் –‘’சீமாதவனடிக் கன்புசெய்யும் தஞ்சத்தொருவன்’’ (இயல்சாத்து), என்றும், 3 ‘’மாத4வஶிஷ்ய பாதௌ3’’ என்றும் சொல்லும்படியான நம்பிள்ளை, தம்முடைய ஆசார்யரான நஞ்சீயருடைய திருநாமம் சாத்தும்படியான பெருமையையுடையராய், அவர்க்கு அத்யந்தம் ப்ரீதிவிஷயமா யிருக்கிற ‘’ஈயுண்ணிச்சிறியாழ்வானப்பிள்ளை’’ என்று நிரூபகத்தை யுடையரான ஸ்ரீமாத4வரென்கை; 4. ‘’யத்3வசஸ் ஸகலம் ஶாஸ்த்ரம் யத்க்ரியா வைதி3கோ விதி4: | யத்கடாக்ஷோ ஜக3த்3ரக்ஷா தம் வந்தே3 மாத4வம் முநிம் ||’’ 5. ‘’ஸ்ரீபராஶர ப4ட்டார்ய ஸம்ஶ்ரயத4நாய ஸ்ரீமாத4வமிஶ்ராய நம:’’ என்னக் கடவதிறே. ஏவம்வித4ரான இவர்க்கு ஈடுவந்த வரலாற்றை ‘’சீரார் வடக்குத்திருவீதிப்பிள்ளை’’ (உபதே3ஶ 48), என்று தொடங்கி அருளிச்செய்தாரிறே; அத்தைப்பற்ற 6. ‘’வரதா3ர்யத3யாபாத்ரம் ஸ்ரீமாத4வகு3ரும் ஶ்ரயே|குருகாதி4ஶ வேதா3ந்த ஸேவோந்மீலித வேத3நம் ||’’ என்கிற தனியனுண்டாயிற்று.
பத்3மநாப4ராகிறார் – ‘’ஆங்கவர் பால்பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை தாங்கொகுத்தார் தம்மகனார் தங்கையில்’’ (உபதே3ஶ 49), என்றும், 7. ‘’மாத4வாத்மஜஸ்ய’’ என்றும் பேசும்படி ஸ்ரீமாத4வப்பெருமாள் குமாரரான பத்3மநாப4ர்க்கு ஈட்டை ப்ரஸாதி3த்து, நம்பிள்ளை நியமநத்திம்படியே ஓராண்வழியாயுபதேஶித்துப்போரும்படி (உபதே3ஶ 37), உபதே3ஶிக்க, அவருமப்படியே அநுஸந்தி4த்து ஸ்ரீகோஶத்தைக் கோயிலாழ்வாரிலே திருவாராத4நமாக ஏறியருளப்பண்ணி நிதி4யை நோக்குமாபோலே நோக்கிக்கொண்டு போந்தாரிறே; பெருமாள்கோயிலில் ப4ட்டர்கள் திருவீதியிலே திருமாளிகையிலே 1. ‘’யேநாவகா3ஹ்ய விமலோஸ்மி ஶகா2ரிஸூரேர் வாணீ க3ணார்த்த2 பரிபோ3த4 ஸுதா4பகா3யாம் | ஸ்ரீமந்முகுந்த3 சரணாப்3ஜமது4வ்ரதாய ஸ்ரீபத்3மநாப4கு3ரவே நம ஆசராம: ||’’ என்றிறே கோலாலாபமிருப்பது.
(ஸுமந:கோலேஶதே3வாதி4பாந்) கோலேஶராகிறார் – ‘’கோல வராஹப் பெருமாள்’’ என்று திருநாமத்தையுடையரான நாலூர்ப் பிள்ளையென்கை. இவரருளாளர் திருவடியூன்றிய வரென்றிறே இவர்க்கு நிரூபகம். அதாவது – பத்3மநாப4ப்பெருமாள் திருவடிகளை ஆஶ்ரயித்து, அவரை ப்ரணிபாத நமஸ்கார ப்ரிய வாக்குகளாலே; குருக்களுக்கநுகூலராய் (பெரியாழ் 4-4-2), மிகவுமுகக்கப் பண்ண, இப்படி ப2லஸாத4ந ஶுஶ்ரூஷையை யடையராயிருக்கிற நாலூர்ப் பிள்ளைக்கு, ப்ரணிபாத ப்ரஸந்நராயிருக்கிற அவர், ஈட்டை இவரொருவர்க்குமே ஓராண்வழியாக முன்பு நடந்து போந்தபடியே ப்ரஸாதி3ப்பதாக இவரைப் பேரருளாளப் பெருமாள் திருமுன்பே கொண்டுபுக்கு ‘’ப்ரமாணபுரஸ்ஸரமாகச் சூழறவுகொண்டு சொல்ல வேணும்’’ என்று ஸ்ரீஶட2கோபனை அர்ச்சகமுகே2ந இவர் திருமுடி யிலே ஊன்றுவிக்க, அவர் இத்தை வெளியிடாமைக்கு ஊன்று விக்கிற ஆகாரத்தை பா4வஜ்ஞரான இவரறிந்து பெருமாள் திருமுக மண்டலத்தைப் பார்த்து, தம் திருமுடியிலே வைத்த ஸ்ரீஶட2கோபனை ‘’அருளாளர் திருவடியூன்றினவர்’’ என்னும்படி தம் திருக்கையாலே ஊன்றி ஸம்ஜ்ஞைபண்ண, அது ஸர்வஜ்ஞரான பெருமாள் திருவுள்ளத்திலேயுற்று ‘’இத்தை நீரெல்லார்க்கும் ப்ரகாசிப்பியும்’’ என்று அர்ச்சகமுகே2ந தி3வ்யாஜ்ஞையிட்டருள, அத்தைக்கேட்ட பத்3மநாப4ரும் எண்ணினவாறாகாமையாலே ‘’திருவுள்ளமானபடி’’ என்று பின்பு உகப்புடனே ப்ரஸாதி3த்தருளி னாரென்கை; ‘’பாங்குடனே நாலூர்ப்பிள்ளைக்கவர்தாம்’’ (உபதே3ஶ 49), என்னக்கடவதிறே.
இவர் ‘’இத்தையெல்லார்க்கும் வெளியிட வேணும்’’ என்கிற தம்முடைய பரஸம்ருத்3த்4யேக ப்ரயோஜநதா ரூபமான திருவுள்ளக் கருத்தாலே பேரருளாளப் பெருமாளைக் குறித்து ப்ரதிக்ஷண நமஸ்காராதி3களைப் பண்ணியும், அநதிக்ரமணஹேதுவான சரணக்3ரஹணத்தைப்பண்ணியு மாயிற்று இவர் அர்த்தி2த்தது; அவரும்; அர்த்தி2தார்த்த2 பரிதா3ந தீக்ஷிதராம்படி (வரத3ராஜஸ்தவம் 2), செய்தருளினார். இப்படி வகுளபூ4ஷணவாக3ம்ருத மாத்ர மன்றிக்கே, வசநபூ4ஷணத்துக்கும் ப்ரவர்த்தகர் பேரருளாளப் பெருமாளிறே. நாலூர்ப்பிள்ளைதான் இப்படி ஈட்டை அர்த்தி2த்துப் பெற்ற படியாலே – ‘’ஸுமந:கோலேஶ’’ என்று ஸவிஶேஷணமாக அருளிச்செய்தது. 2. ‘’சதுர்க்3ராகோத்3ப4வம் ஸ்ரீகத்3ராமாவரஜ கிங்கரம் | ஸர்வதா3 த்3வயஸந்நிஷ்ட2ம் கோலாஹ்வயமஹம் ப4ஜே ||’’ 3. ‘’ஸ்ரீமத்3ராமாநுஜதா3ஸ பாத3யுக்3மமுபாஸ்மஹே | ஶட2கோபார்ய வாணீநாமர்த்த2 தாத்பர்யஶித்3த்4யே ||’’ என்றிறே இவர் விஷயத்தில் தனியன்களிருப்பது. இப்படித் திருவாய்மொழி க்கு ப்ரவர்த்தகரான மாத்ரமன்றிக்கே, பெரியாழ்வார் திருமொழி, பெரிய திருமொழி முதலானவற்றுக்கும் ஶப்3தா3ர்த்த2 வ்யாக்2யாந முஞ்செய்தருளினார்; அதிலே ஸ்ரீவசநபூ4ஷண வாக்யததையும் ஸம்மதியாக எடுத்தருளினார். 1. ய: பத்3மநாப4 கு3ருதஶ் ஶட2ஜிந் முநீந்த்3ர ஸ்ரீஸூக்தி பா4ஷ்யமதி4க3ம்ய ஸம்ருத்3த4போ3த4: | தத்3தே3வராஜகு3ரவேஹ்யதி3 ஶச்சதுஷ்பூர்வாஸேத்3த4 கோலவர தே3ஶிகமாஶ்ரயே தம் ||’’ என்றுமிறே இவர் ஸம்ப்ரதா3ய க்ரமமிருப்பது.
தே3வாதி4பராகிறார் – தேவப்பெருமாள்; அவர்தாம் – ராமாநுஜார்ய தா3ஸ ஸுதரான தே3வராஜர்; நாலூர்ப்பிள்ளைதாம் தம்முடைய திருவுள்ளக்கருத்தின்படியே பெருமாள் தலைக்கட்டியருளுகை யாலே, பெற்றுப்பேரிடும்படியான அந்த உவகாரத்துக்கு, தமக்குக் குமாரர் திருவவதரித்தவுடனே ‘’தேவப்பெருமாள்’’ என்று திருநாமஞ் சாத்த, இப்படிப் பேர்பெற்று ஸகலகலாபூர்ணராய் வளர்ந்து போருகிற கு3ணஶாலியாய், நல்லமகனாரான நாலூராச்சான் பிள்ளைக்கு, (உபதே3ஶ 49) ‘’இத்தை வர்த்தி4ப்பித்துக்கொண்டு போரும்’’ என்று ஈட்டை ப்ரஸாதி3த்தருளினார்; 2. ‘’ஸுதம் கோலவராஹஸ்ய குருகாதீ4ஶ பூர்வஜம் | ஶாந்தம் ஸத்3வ்ருத்தநிரதம் தே3வராஜ மஹம் ப4ஜே ||’’ ‘’நமோஸ்து தே3வராஜாய’’ (தனியன்), என்னும்படியிறே நாலூராச்சான்பிள்ளை வைப4வமிருப்பது. அன்றிக்கே, ‘’இவரருளாளர் திருவடியூன்றிமவர்’’ என்கிறதுக்கு, ‘’இவரென்று-கீழ்ப்ரஸ்துதரான பத்3மநாப4ரைச் சொல்லி, அருளாளரென்று – அவருடைய அருளையுடையவரென்று நாலூர்ப்பிள்ளையைச் சொல்லி, திருவடியூன்றின தேவப்பெருமா ளென்று – ஈட்டை ப்ரகாசிக்கும்படி பேரருளாளப் பெருமாளாலே திருவடியூன்றப்பட்ட நாலூராச்சான்பிள்ளையைச்சொல்லி, அப்படி திருவடியூன்றின தேவப்பெருமாள் கைக்கொண்டருளும் திருமலையாழ்வாரென்று-திருவாய்மொழிப்பிள்ளையைக் சொல்லுகிறது’’ என்றுமருளிச் செய்து போருவர்கள்; இந்த யோஜநையே –‘’மேலோர்க்கீந்தாரவரே மிக்கு’’ (தனியன்), என்கிறத்துக்கு மிகவும் சேர்த்தியாயிருக்கும். ‘’தே3வாதி4பாந்’’ என்கிற ப3ஹுவசநத்தாலே-கீழுக்தரானவர்களை யெல்லாஞ் சொல்லுகிறது; (திருமலையாழ்வார் பதங்கள் முன்பென்னுட் சேர்ந்தனவே) என்னக்கடவதிறே.
‘’நாத2ம் பங்கஜநேத்ர’’ என்கிற தனியனும் ‘’திருவருள்மால்’’ என்கிற தமிழ்த் திருநாமத்தனியனும், ஈட்டுக்கும் மற்ற அருளிச்செயல் வ்யாக்2யாநங்களுக்கும் தனியனாக, முப்பத்தாறாயிப் பெருக்க ரான பெரியஜீயரநுஸந்தி4த்துப் போருமதாயிருக்கும். ‘’நாத2ம்’’ என்று தொடங்கி, திருவருள்மால் – திருமலையாழ்வாரிலே சாற்றும் படியாயிருக்கும். ரஹஸ்யங்களினுடைய வரலாற்றையும், 3. ‘’லோக கு3ரும் கு3ருபி4:’’ என்று தொடங்கி, 3. ‘’தீ3ப்ரஶயாந கு3ரும் ச ப4ஜே ஹம்’’ என்று தலைக்கட்டின தனியனாலே அநுஸந்தி4த்தருளினார்; ‘’தே3வாதி4பாந்’’ என்று சொல்லுகிறவிடத்திலே-ஈட்டிலர்த்த2த்துக்கு உபயுக்தமாக – வகுளபூ4ஷண ஶாஸ்த்ரஸாரமான ஸ்ரீவசந பூ4ஷணம், ‘’த்3வயார்த்த2ம் தீர்க்க4 ஶரணாகதி என்றது ஸார ஸங்க்3ரஹத்திலே’’ என்னும்படியான ஸாரஸங்க்3ரஹம் முதலான வற்றை அருளிச்செய்த லோகாசார்ய கு3ருவும், திருவாய்மொழி வ்யாக்2யாநமிருபத்துநாலாயிரத்துக்கு ப்ரவர்த்தகரான அப4ய ப்ரத3ராஜ புத்ரரும், அவர் ஶிஷ்யராய், திருவாய்மொழிக் குரை பன்னீராயிரமாக அருளிச்செய்த ஸுந்த3ரஜாமாத்ரு முனியும், த்3ராவிடா3ம்நாயஹ்ருத3யத3ர்ஶியான ஸுந்த3ரஜாமாத்ரு தே3வரும் ஸூசிதர். ஆகையாலிறே மேல் இவர்கள் தனியங்களை அநுஸந்தி4க்கிறது, இவைகளுக்கு மேலாக வாயிற்று ‘’நமோஸ்து தே3வராஜாய’’ (தனியன்), ‘’நமஶ் ஸ்ரீஶைலநாதாய’’ (தனியன்), என்று நடத்திப் போருவது. தே3வாதி4பரான நாலூராச்சான்பிள்ளை மேலோர்க்கீகையாவது (உபதே3ஶ 49), – கீழிலவர்களைப்போலே ஓராண்வழியாய் (உபதே3ஶ 37), ஆழ்வாரைத் திருப்புட்குழியிலே கைக்கொண்டருளி, அங்கு நின்றும் திருநாராயணபுரத்திலே எழுந்தருளி அவர் தொடக்கமாக ஆயி, பிள்ளை உள்ளிட்டார்க்கும் ப்ரஸாதி3த்தருளினபடி யென்கை; அத்தைப்பற்ற 1. ‘’கோலாதி4பாத் பிதுரவாப்ய ஸஹஸ்ரகீ3தேர் பா4ஷ்யம் ஹி பூர்வதர தே3ஶிக வர்ய கு3ப்தம் | த்ரேதா4 ப்ரவர்த்ய பு4வி ய: ப்ரத2யாஞ்சகார தம் தே3வராஜ கு3ருவர்ய மஹம் ப்ரபத்3யே ||’’ 2. ’’ஸ்ரீஶைலநாத2கு3ரு மாத்ருகு3ரூத்தமாப்4யாம் ஸ்ரீஸூக்தி தே3ஶிகவரேண ச யஸ் த்ரிதை4வம் | வ்யக்தஶ் ஶடா2ரிக்ருதி பா4ஷ்ய ஸுஸம்ப்ரதா3யோ விஸ்தாரமேதி ஸஹி வைஷ்ணவ புங்க3வேஷு ||’’ 3. ‘’தேவாதி4பாத் ஸமதி4க3ம்ய ஸஹஸ்ர கீ3தே: பா4ஷ்யம் நிகூ3ட4மத2 ய: ப்ரத2யாஞ்சகார | குந்தீபுரோத்3ப4வமமும் ஶரணம் ப4ஜே தம் ஸ்ரீஶைலநாத2முருப4க்திப்4ருதம் ஶடா2ரௌ ||’’ 4. தே3வாதி4 பாத3தி4க3தம் பா4ஷ்யம் பாராங்குஶஶ்ருதே: | ப்ராவர்த்தயத்3யஸ் ஸேவே தம் ஶட2ஜித் ஸூக்திதே3ஶிகம் || 5. ‘’ஸ்ரீதே3வராஜகு3ருதோ த்3ரவிடா3க3மாந்தபா4ஷ்யம் ஹ்யவாப்ய பு4வி ய: ப்ரத2யாஞ்சகார | தம் யாத3வாத்3ரிபதிமால்ய ஸமர்ப்பணைகநிஷ்ட2ம் ப4ஜேய ஜநநீகு3ருமஸ்மதா3ர்யம் ||’’ என்னக்கடவதிறே.
இப்படி நடந்து போருகிற ஈட்டின் வரலாற்றை ‘’சீரார்’’ (உபதே3ஶ 48), ‘’ஆங்கவர் பால்’’ (உபதே3ஶ 49), என்கிற இரண்டுபாட்டிலும் விஶத3மாக அருளிச்செய்தருளி னாரிறே பெரியஜீயர்; அவ்வளவுமன்றிக்கே, திருவாய்மொழிக்கும் மூவாயிரத்துக்கும் திருவாய்மொழிப்பிள்ளைக்கு நாலூராச்சான் பிள்ளை அர்த்த2ம் ப்ரஸாதி3த்தருளினத்துக்கு த்3யோதகமாக, ‘’மாற்றுத்தாய்’’ (பெரியாழ் 3-9-4), என்கிற பாட்டின் வ்யாக்2யாநத்திலே பெரியஜீயர் தாமே ஸூசிப்பித்தருளினார். பிள்ளை செய்தருளின பெரியாழ்வார் திருமொழி வ்யாக்2யாநம் பல விடங்களிலும் ‘’நாலூர்ப்பிள்ளை ப்ரஸாதி3த்ததாக ஆச்சான்பிள்ளை அருளிச் செய்வர்’’ என்றிறே அருளிச்செய்தது; பிதாபுத்ரர்களுக்குத் திருவாய்மொழி முகே2ந உண்டான ஶிஷ்யாசார்ய ஸம்ப3ந்த4ம், கூராதி4ப ப4ட்டார்யர்களிடங்களிலும், அப4யப்ரத3ராஜ தத்புத்ரர்களிடங்களிலும், க்ருஷ்ணபாத3லோகாசார்யரிடங்க ளிலும், மாத4வ பத்3மநாப4ர்களிடங்களிலும், கோலேஶதே3வாதி4ப ரிடங்களிலும், த3ர்ஶிக்கலாயிருக்கும்.
இப்படி தே3வாதி4பராலே அதி4க3தபரமார்த்த2ரான ஸ்ரீஶைலாதீ4ஶதேஶிகரும் 1. ‘’ஸ்ரீஶைலநாத2முருப4க்திப்4ருதம் ஶடா2ரௌ’’ என்னும்படி ஆழ்வார் திருவடிகளிலே அதிப்ரவணராய், 2. ‘’ப்ரஸாத3லப்3த4 பரமப்ராப்ய கைங்கர்ய ஶாலிநே’’ என்று, சொல்லுகிறபடியே ஆழ்வார் திருவடிகளிலே அஶேஷஶேஷ வ்ருத்தியிலும் அந்வயித்து, அவருடைய அமுதமென்மொழியான திருவாய்மொழியே தமக்கு தா4ரகாதி3களெல்லாமாக அநுப4வித்துக்கொண்டு வாழ்ந்து போரநிற்க, அப்படி அநுபோ4க் தாவான அந்தத்; திருவாய்மொழிப்பிள்ளை மாதகவால் வாழு மணவாளமாமுனிவனென்றும் (வாழிதிருநாமம்), ‘’ஸ்ரீஶைலேஶத3யாபாத்ரம்’’ (தனியன்), என்றும் பேசும்படி பெரியஜீயரும் அவர் திருவடிகளை ஆஶ்ரயித்து, 3. ‘’அஶிஶ்ரயத3யம் பூ4ய: ஸ்ரீஶைலாதீ4ஶதே3ஶிகம் | அஶேஷா நஶ்ருணோத்3தி3வ்யாந் ப்ரப3ந்தா4ந் ப3ந்த4நச்சி2த3:’’ என்கிற படியே திருவாய்மொழி முதலான அஶேஷதி3வ்ய ப்ரப3ந்த4 தாத்பர்யத்தையும் அவருபதேஶ முக2த்தாலே லபி4த்தருளினாரிறே.
பின்பு, ஸர்வலோக ப்ரசாரமுண்டாம்படியிறே இவர் ஈட்டை நடத்தி யருளிற்று. அதுக்கு மேலே இவர்க்குப் பெருமாள் அருள்பாடிட் டருளித் தம் திருவடியூன்றுவித்திறே திருவாய்மொழியினீட்டை ப்ரவர்த்திப்பித்ததும். 4. ‘’சரணாப்3ஜஸமர்ப்பணாத், த3ர்ஶயந் து3ர்க்3ரஹாநர்த்தா2ந் த்3ரமிடோ3பநிஷத்3கி3ராம்’’ என்னக் கடவதிறே. அத்தாலே முப்பத்தாறாயிரப் பெருக்கரென்றாயிற்று இவர் பேர் பெற்றது. 5. ‘’ஆர்யாச்ச்2ரீஶைலநாதா2த3தி4க3த ஶட2ஹித்ஸூக்தி பா4ஷ்யோ மஹிம்நா யோகீ3ந்த்3ரஸ்யாவ தாரோSயமிதி சகதி2தோ யோ ரஹஸ்யப்ரப3ந்தா4ந் | வ்யாக்2யாத் வாநாத்3ரியோகி3 ப்ரவரவரத3நாராயணாத்3யைஸ்ஸ்வ ஶிஷ்யைஶ்சாதாநீத் ஸம்ப்ரதா3யம் வரவரமுநிபம் நௌமி தம் துங்க3போ3த4ம்’’ என்னும்படியிறே பெரியஜீயர் ப்ரபா4வமிருப்பது. பின்பும், 6. ‘’யேSவாப்ய ஸௌம்யவரயோகி3 வராச்ச2டா2ரி ஸ்ரீஸூக்தி பா4ஷ்யமத2 தத்ப்ரதி2தம் விதேநு: | தாந் ப4ட்டநாத2முநி வாநமஹாத்3ரியோகி3 வாதூ4லவம்ஶ்யவரதா3ர்ய முகா2ந் ப4ஜாம: ||’’ என்னும்படி ஸௌம்யஜாமாத்ருமுனிவர்யர் ஸம்ப்ரதா3யம் நடந்துபோரும்படி இதுவாயிற்று.
- [தாந் ப4ட்டநாத2முனி]யென்று இவர்களில் ப்ரத2மோபாத்தரான பெரிய ப4ட்டர்பிரான் ஜீயரும் ஸகலதி3வ்யப்ரப3ந்த4 வ்யாக்2யாநங்களையும் ஸ்வாசார்ய முகே2நலபி4த்து, அதுக்கு த்3யோதகமாக-அத்தை ஸ்வப்ரப3ந்த4மான அந்திமோபாயநிஷ்கை2யிலே, ‘’பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாயன்’’ (4-8-2), என்கிறவிடத்திலே கிடாம்பியாச்சான் கதையையும், ‘’பொன்னுலகாளீரோ’’ (6-8-1), என்கிற பாட்டினீட்டிலே அருளாளப்பெருமாளெம்பெருமானார் கதையயும், ‘’நாவகாரியம்’’ (பெரியாழ் 4-4-1), என்கிற பாட்டின் வ்யாக்2யாநத்திலே திருக்குருகை ப்பிரான்பிள்ளான், வடுகநம்பி, இவர்களருளிச்செய்த வார்த்தை களையும், அழகியமணவாளப்ப்ருமாள் நாயனாரருளிச்செய்த திருப்பாவை வ்யாக்2யாந்த்திலே, நஞ்ஜீயர் ஸ்ரீபாத3த்தை அகன்று போவானொரு வைஷ்ணவன் விஷயமாக தத்ஸம்ப3ந்த4முடை யராயிருப்பாரொரு ஜ்ஞாநாதி4கரைக்குறித்து, ஜ்ஞாநாதி4கையான அம்மையாரருளிச்செய்த வார்த்தையையும், ‘’நம்மாழ்வாரை ப4க3வத3வதாரமாக ஆளவந்தாரருளிச்செய்துபோருவர் – என்னுமது திருவிருத்த வ்யாக்2யாநத்தில் ஸுஸ்பஷ்டம்’’ என்றும், ‘’நம்புவார் பதி வைகுந்தம்’’ (கண்ணி 11), என்கிறவிடத்தில் ‘’கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்தபின்பு ஸம்ஸாரத்துக்கும் பரமபத3த்துக்கும் இடைச் சுவர்தள்ளி ஒருவிபூ4தியாயிற்று’’ என்றும் – கண்ணிநுண்சிறுத் தாம்பு வ்யாக்2யாநத்திலே திருவழுதிவளநாடு தா3ஸரருளிச்செய்த வார்த்தையையும், ‘’அவர் பாசுரங்கொண்டறுதியிடக்கடவோம்’’ என்று ‘’பிள்ளிலோகாசார்யர் தாமவதாரவிஶேஷம்’’ என்னுமத்தை ஸ்வாசார்யர் ஸ்ரீவசநபூ4ஷணவ்யாக்2யாந ப்ரவேஶத்தில் ப்ரதிபாதி3த்தபடியையும்; c ‘’வர்ண்த4ர்மிகள் தா3ஸவ்ருத்திகள்; (ஆசார்ய 32), என்கிறவிடத்துக்குத் திருநாராயணபுரத்திலாயி அருளிச்செய்த ஸ்ரீவில்லிபுத்தூர்ப்பகவர் துறைவேறிட்ட கதையையும், மற்றும் தம் ஐதிஹ்யமாக அருளிச்செய்யும் அஶேஷரஹஸ்ய வக்யங்களையும் ‘’அஸ்மதா3சார்யோக்தம்’’ என்று ப்ரகாசிப்பித்தருளினாரிறே.
ஏவம்வித4மான அர்த்த2விஶேஷங்கள் எல்லாவற்றையும் தம் திருவடிகளை ஆஶ்ரயித்துத் திருவடிகளல்லதொரு தெய்வமறியாத மது4ரகவிதா3ஸரண்ணன் முதலானார்க்கு ப்ரஸாதி3த்தருளினார்; அவரும் 1. ‘’பூ4யோவதீர்ணமிவஸௌம்யவரம் முநீந்த்3ரம்’’ என்னும்படி வரவரமுனிவர்யாபராவதாரமாய் தந்நாமபா4ஜநராய், தமக்கு ஸப்3ரஹ்மசாரிகளான அழகியமணவாளச்சீயருக்குத் திருவாய்மொழியொழிந்த அனைத்தாழ்வார்களருளிச்செயல் மூவாயிரத்துக்கு வ்யாக்2யாநமும் ஆசார்யர்கள் தி3வ்யஸூக்திகளான அஶேஷரஹஸ்ய வ்யாக்2யாநமும் தாமே ப்ரஸாதி3த்தருளினார். ‘’பெரியதிருமொழிக்கு அண்ணன் மேல் நாட்டிலே எழுந்தளியிருக்கிற காலத்திலே அவர் ஸந்நிதி4யிலே அர்த்த2ம் அநுஸந்தி4த்தருளினார்’’ என்று அஸ்மதா3சார்யோக்தம். அநந்தரம். [வாநமஹாத்3ரயோகி3யென்று] ப்ரஸ்துதரான .வானமாமலைஜீயரும் தம்முடைய ஸ்ரீபாத3த்தை ஆஶ்ரயித்த ராமாநுஜன்பிள்ளைக்கும், கோயில் பெரியகந்தாடையண்ணன் ஸ்ரீபாத3த்திலாஶ்ரயித்த ஶுத்3த4ஸத்வமண்ணனுக்கும் ஈடு முதலான தி3வ்யப்ரப்3ந்த4வ்யாக்2யாநங்களை ப்ரஸாதி3த்தருள, அவர்களுமப்படியே தந்தாம் ஶிஷ்யபுத்ரர்குளுக்கு ப்ரவர்த்தகராம் படி ப்ரஸாதி3க்க, அத்தாலே அத்3யாபி நடந்துசெல்லுகிறது. இனி, ருசிரஜாமாத்ருயோகீ3ந்த்3ர பாதா3ஶ்ரயராய், (கோயிலண்ணன் தனியன்), வாதூ4லவம்ஶ்ய வரதா3ர்யரான பெரியவண்ணனும், ஆசார்ய நியமநத்தின்படியே ஆசார்யபௌத்ரரான நாயனாரை அநுவர்த்தித்துத் திருவாய்மொழியினீடு ப்ரஸாதி3த்தருளினார்.
வேதா3ந்தாசார்யராய், பின்பு ‘’ஸ்ரீவைஷ்ணவதா3ஸர்’’ என்று பெரியஜீயராலே நிரூபடத்தைய்டையரான ப்ரதிவாதி3 ப4யங்கர வண்ணாவும், ப4ட்டர்பிரான் ஜீயர் ஸ்ரீபாத3த்திலவராய், ‘’அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்’’ என்று திருநாமத்தையுடையரான திருப்பதியிலழகியமணவாளச்சீயர் முதலானார்க்கு ஈட்டையும் ஸ்ரீபா4ஷ்யத்தையும் ப்ரஸாதி3த்தருளி, ‘’திருவாய்மொழிநாயனார்’’ என்னுமதுவே நிரூபகமாம்படி ஜீயரை விஶேஷாபி4மானம் பண்ணி யருளினார். முன்பு திருவாய்மொழியினீடு ஏகமுக2மாய், அநந்தரம் த்ரேதா4வாய், பெரிய ஜீயராலே ப்ராக்சதுர்த்தா4வாய், அநந்தரம் ஸஹஸ்ரமுக2மாய் ப்ரவஹிக்கும்படியாயிற்று. மற்றுமுண்டான ஆசார்யர்கள் ஸம்ப்ர்தா3யங்களையும் அவ்வவஸம்ப்ரதா3யஸ்த2 ருபதே3ஶ மூலமாகக் கண்டுகொள்வது. இப்படி உபதே3ஶமாலை யாய் துறையுண்டுவருகிற இத்தனியன்களிரண்டையும், திருவாய்மொழி முதலான தி3வ்யப்ரப3ந்த4 வ்யாக்2யாநாரம்ப4 வேளையிலும் அவைசாற்றும் ஸமயத்திலும் அநுஸந்தி4த்துக் கொண்டுபோரும்படி அருளிச்செயதாரயிற்று.
இந்தத் தனியனில், ‘’நிக3மாந்தயோகி3 ஜக3தா3சார்யௌ ஸக்ருஷ்ண த்3வயௌ’’ என்று – ந்ஞ்ஜீயரையும், நம்பிள்ளையையும், பெரியவாச்சான்பிள்ளையையும், வடக்குத்திருவீதிப்பிள்ளையை யும், எடுத்திருக்கச்செய்தேயும், இனிமேல் ப்ரத்யேமகவுமிவர்கள் தனியன்களை அநுஸந்தி4க்கிறதுக்குக் கருத்து-நஞ்ஜீயர் ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநமருளிச் செய்கையாலும், நம்பிள்ளை ஈடு முப்பத்தாறாயித்துக்கு ப்ரவர்த்தகராகையாலும், பெரியவாச்சான்பிள்ளை இருபத்துநாலாயிரப்படி வ்யாக்2யாந மருளிச்செகையாலும், வடக்குத்திருவீதிப்பிள்ளை (உபதே3ஶ 44), இந்த நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்ததீடுமுப்பத் தாறாயிரப் படியாகையாலும்.
- திருக்குருகைப்பிரான் பிள்ளான் தனியன்
1.द्राविडागमसार रामानुजपदाश्रितम् |
रुचिरं (सर्व ) कुरुकेशार्यं शिरसाSन्वहम् ||
- த்3ராவிடா3க3மஸாரஜ்ஞம் ராமாநுஜபதா3ஶ்ரிதம் |
ருசிரம் (ஸர்வஜ்ஞம்) குருகேஶார்யம் நமாமி
ஶிரஸாSந்வஹம் ||
திருக்குருகைப்பிரான் பிள்ளானுடையதான இத்தனியனுக்கு அர்த்த2ம்-தமிழ் வேத3மான திருவாய்மொழியின் ஸாரார்த்த2த்தை அறிந்தவராய், எம்பிருமானாருடைய திருவடிகளை ஆஶ்ரயித்தவராய், அழகியவரான (அல்லது எல்லாமறிந்தவரான_ திருக்குருகைப்பிரான் பிள்ளானை தினந்தோறும் தலையால் வணங்குகிறேன். (‘’குருகேஶச்ந்த்3ரஜலதி4ம்’’ ‘’குருகைப்பிராற்கன்பாம் எதிராசர்’’ என்று ஈட்டுத்தனியன்களில் அனுஸந்தி4க்கப்பெற்றவரும், ஆறாயிரப்படியை எம்பெருமானாரது நியமனத்தாலே அருளியவருமான திருக்குருகைப்பிரான் பிள்ளானது தனியனும் அவஶ்யம் அனுஸந்தி4க்கத் தக்கதாகையால், பழைய பதிப்புகளில் இல்லாவிடிலும் , இத்தனியன் முதலில் அச்சிட்ப்படுகிறது).
- நஞ்சீயர் தனியன்
2.नमो वेदान्तवेध्याय जगन्मन्गलहेतवे |
यस्य वागम्रुतासारपूरितं भुवनत्रयम् ||
2.நமோ வேதா3ந்த வேத்3யாய ஜக3ந்மங்க3ளஹேதவே | யஸ்ய வாக3ம்துதாஸாரபூரிதம் பு4வநத்ரயம் ||
நஞ்ஜீயரதான இந்தத்தனியனுக்கர்த்த2ம்-யாவரொருவருடைய ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநமாகிற அம்ருதப்ரவாஹத் தினாலே லோகமெல்லாம் பரிபூர்ணமாயிற்று, ஜக3த்துக்கு மங்க3ளாவஹராய்க் கொண்டிருக்கிற அந்த வேதா3ந்தி நஞ்ஜீயரின் பொருட்டு நமஸ்காரமாகக்கடவது.
- நம்பிள்ளை தனியன்
3.वेदान्तवेध्याम्रुतवारिराशेर्वेदार्थ साराम्रुतपूरमग्य्रम् |
आदाय वर्षन्तमहं प्रपध्ये कारुण्यपूर्णं कलिवैरिदासम् ||
- வேதா3ந்தவேத்3யாம்ருதவாரிராஶேர் வேதார்த்த2
ஸாராம்ருதபூரமக்3ர்யம் |
ஆதா3ய வர்ஷந்தமஹம் ப்ரபத்3யே காருண்யபூர்ணம் கலிவைரிதா3ஸம் ||
நம்பிள்ளையதான இந்தத் தனியனுக்கர்த்த2ம்-வேதாந்தி ந்ஞ்ஜீயராகிற திருவாய்மொழியாகிற ஸமுத்3ர்த்தில் நின்றும் வேத3த்தினுடைய ஸாரார்த்த2மான திருவாய்மொழியாகிற அம்ருதத்தை வாங்கிக்கொண்டு, லோகத்திலவர்களெல்லாரும் உஜ்ஜீவிக்கும்படியாக வர்ஷியாநிற்கிற, க்ருபாபூர்ணரான, திருக்கலிகன்றிதா3ஸராகிற தா3ஸ்யநாமத்தை யுடையரான நம்பிள்ளையை, ப்ரபத்3யே-பற்றுகிறேன். 3.
- பெரியவாச்சான்பிள்ளை தனியன்
4.श्रीमत्क्रुष्ण समाह्वाय नमो यामुनसूनवे |
यत्कटाक्षलक्ष्याणां सुलभश्श्रीधरस्सदा ||
- ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே | யத்கடாக்ஷணலக்ஷ்யாணாம் ஸுலப4ஶ்ஸ்ரீத4ரஸ்ஸதா3 ||
பெரியவாச்சான்பிளளையதான இந்தத் தனியனுக்கர்த்த2ம் – யாவரொருவருடைய கடாக்ஷத்துக்கு விஷயபூ4தரானவர்களுக்கு ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரன் ஸர்வகாலமும் ஸுலப4னா யிருக்கிறான், யாமுநருடைய குமாரராய், க்ருஷ்ணனென்கிற திருநாமத்தையுடையரான பெரியவாச்சான்பிள்ளையின் பொருட்டு நமஸ்காரமானது ஆகக்கடவது. 4.
- 5. வடக்குத்திருவீதிப்பிள்ளை தனியன்
- श्रीक्रुष्णपादपादाब्जे नमामि शिरसा सदा |
यत्प्रसादभावेन सर्वसिद्धिरभून्मम ||
5.ஸ்ரீக்ருஷ்ணபாத3பாதா3ப்3ஜே நமாமி ஶிரஸா ஸதா3 | யத்ப்ரஸாத3ப்ரபா4வேந ஸர்வஶித்3தி4ரபூ4ந்மம் ||
வடக்குத்திருவீதிப்பிள்ளையதான இந்தத் தனியனுக்கர்த்த2ம் – யாவரொருவருடைய ப்ரஸாதா3திஶயத்தினாலே எனக்கு ஸமஸ்த புருஷார்த்த2ஸித்3தி4 உண்டாயிற்றது, அப்படிப்பட்டிருக்கிற வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளை ஸர்வகாலமும் தலையாலே ஸேவியாநிற்கிறேன். 5.
- பிள்ளைலோகாசார்யர் தனியன்
6.लोकाचार्याय गुरवे क्रुष्णपादस्य सूनवे |
संसारभोगिसन्दष्ट जीवजीवातवे नम: ||
6.லோகாசார்யாய கு3ரவே க்ருஷ்ணபாத3ஸ்ய ஸூநவே | ஸம்ஸாரபோ4கி3ஸந்த3ஷ்க ஜீவஜீவாதவே நம: ||
பிள்ளைலோகாசார்யரதான இந்தத் தனியனுக்கர்த்த2ம் – ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தினாலே கடிக்கப்பட்டிருக்கிற சேதநரை உஜ்ஜீவிப்பிக்கிறவராய், வடக்குத் திருவீதிப்பிள்ளையுடைய குமாரரான பிள்ளை லோகாசார்யரின் பொருட்டு நமஸ்காரமானது ஆகக்கடவது. 6.
- (அழகிய மணவாளப்பெருமாள்) நாயனாராச்சான்பிள்ளை தனியன்
- श्रुत्यर्थसारजनकं स्म्रुतिबालमित्रं पद्मोल्लसद्भगवदन्घ्रि पुराणबन्धुम् |
जाअनाधिराजमभयप्रदराजपुत्रमस्मद्गुरुं परमकारुणिकं नमामि ||
7.ஶ்ருத்யர்த்த2ஸாரஜநகம் ஸ்ம்ருதிபா3லமித்ரம் பத்3மோல்லஸ்த்3ப4க3வத3ங்க்3ரி புராணப3ந்து4ம் |
ஜ்ஞாநாதி4ராஜ மப4யப்ரத3ராஜபுத்ரம் அஸ்மத்3கு3ரும் பரமகாருணிகம் நமாமி||
நாயனாராச்சான்பிள்ளையதான இந்தத் தனியனுக்கர்த்த2ம் – ஶ்ருதிஸ்ம்ருதீதிஹாஸங்களுக்கு ஸாரார்த்த2ப்ரதிபாத3கராய், ஸ்ம்ருதிக்கு பா3லமித்ரராய், விகஸத்பத்3மஸத்3ருஶ ப4க3வச் சரணங்களுக்குப் புராதந ப3ந்து4வாய், ஜ்ஞாநஸாம்ராஜ்ய ஸம்ருத்3த4ராய், பெரியவாச்சான்பிள்ளை குமாரராய், பரம காருணிகராய், அஸ்மத்3 கு3ருவுமான நாயனாராச்சான்பிள்ளையை ஸேவிக்கிறேன்.
- அழகியமணவாளப்பெருமாள் நாயனார் தனியன்
- द्राविडाम्नाय ह्रुदयं गुरुपर्वक्रमागतम् |
रम्यजामात्रुदेवेन दर्शितं क्रुष्णसूनुना ||
8.த்3ராவிடா3ம்நாயஹ்ருத3யம் கு3ருபர்வக்ரமாக3தம் |
ரம்யஜாமத்ருதே3வேந த3ர்ஶிதம் க்ருஷ்ணஸூநுநா ||
பிள்ளைலோகாசார்யர் திருத்தம்பியாரான அழகியமணவாளப் பெருமாள் நாயனாருடைய இந்தத் தனியனுக்கர்த்த2ம் – வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான அழகியமணவாளப் பெருமாள் நாயனாரலே ஆசார்யபரம்பராப்ராப்தமான ஆசார்ய ஹ்ருத3யமானது ஸாக்ஷாத்கரிப்பிக்கப்பட்டது. 8.
- (வாதி3கேஸரி) அழகியமணவாளச்சீயர் தனியன்
- सुन्दर जामात्रुमुने: प्रपध्ये चरणाम्बुजम् |
संसारार्णवसम्मग्नजन्तुसन्तारपोतकम् ||
9.ஸுந்த3ரஜாமாத்ருமுநே: ப்ரபத்3யே சரணாம்பு3ஜம்| ஸம்ஸாரார்ணவஸம்மக்3நஜந்துஸந்தாரபோதகம் ||
வாதி3கேஸரி அழரியமணவாளச்சீயரதான இந்தத் தனியனுக் கர்த்த2ம் – ஸம்ஸாரமாகிற ஸமுத்3ரத்திலே அழுந்தாநிற்கிற சேதநரை அக்கரைப்படுத்துகிற ஓடமாய்க்கொண்டிருக்கிற, வாதி3 கேஸரிஅழகியமணவானச்சீயருடைய திருவடிகளைப்பற்றுகிறேன்.
‘’பிள்ளைலோகாசார்யர், நாயனாராச்சான்பிள்ளை, அழகியமண வாளப்பெருமாள் நாயனார், வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயர், இவர்கள் நால்வரும் ஈட்டு ஸம்ப்ரதா3யத் துக்கு ப்ரவர்த்தகராகாமலி ருக்கச்செய்தேயும், பிள்ளைலோகா சார்யர் ஈட்டிலர்த்த2த்துக்கு உபயுக்தமாக வகுளபூ4ஷணஶாஸ்த்ர ஸாரமான ஸ்ரீவசநபூ4ஷண தி3வ்யஶாஸ்த்ரத்தை அருளிச்செய்கை யாலும், நாயனாராச்சான் பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த இருபத்துநால யிரப்படி வ்யாக்2யாநத்துக்கு ப்ரவர்த்தகராகையாலும், அழகியமணவாளப்பெருமாள் நாயனார், திருவாய்மொழியுனுடைய சந்தத்திரட்டான ஆசார்யஹ்ருத3ய மருளிச்செய்கையாலும், வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயர் பன்னீராயிரப்படி யுரையும், திருவிருத்தத்துக்கு ஸ்வாபதேஶமுமருளிசெய்கையாலுமிவர்களு டைய தனியன்களும் அநுஸந்தி4க் கிறார்கள் நம்மாசார்யர்கள்’’ என்று சிரோபாஸித ஸத்3வ்ருத்3த4 ஸம்ப்ரதா3யஸ்த2ர்களருளிச் செய்வர்கள்.
- நாலூராச்சான்பிள்ளை தனியன்
- नमोस्तु देवराजाय चतुर्ग्रामनिवासिने |
रामानुजार्यदासस्य सुताय गुणशालिने ||
- நமோSஸ்து தே3வராஜாய சதுர்க்3ராமநிவாஶிநே | ராமாநுஜார்யதா3ஸஸ்ய ஸுதாய கு3ணஶாலிநே ||
நாலூராச்சான்பிள்ளையதான இந்தத் தனியனுக்கர்த்த2ம் – ‘’ஸ்ரீ ராமாநுஜதா3ஸர்’’ என்கிற நாலூர்ப்பிள்ளையுடைய குமாரராய், ஶமத3மாதி3 கு3ணங்களாலே விளங்காநிற்கிறவராய்க் கொண்டிருக்கிற நாலூர் தே3வராஜரென்கிற ஆச்சான்பிள்ளை யின்பொருட்டு நமஸ்காரமானது ஆகக்கடவது.
- திருவாய்மொழியப்பிள்ளை தனியன்
- नमश्श्रीशैलनाथाय कुन्ती नगरजन्मने |
प्रसादलब्ध परमप्राप्य कैन्कर्यशालिने ||
- நமஶ்ஸ்ரீஶைலநாதா2ய குந்தீநக3ரஜந்மநே | ப்ரஸாத3லப்3த4 பரமப்ராப்ய கைங்கர்யஶாலிநே ||
‘’தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்’’ (9-4-9), என்கிறபடியே :: பூ4ஸுரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போ4க்3யமாக அவதரித்த திருவாய்மொழியிலே அவகா3ஹித்து, அதில் ஶப்3த3ரஸம், அர்த்த2ரஸம், பா4வரஸம், இவற்றையநுப4வித்து ததே3கநிஷ்ட2ராய், தத்3வ்யதிரிக்த ஶாஸ்த்ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணியிருக்கையாலே திருவாய்மொழியோட்டை ஸம்ப3ந்த4த்தையே தமக்கு நிரூபகமாகவுடைய திருவாய்மொழிப்பிள்ளையதான இந்தத்தனியனுக்கர்த்த2ம் – ஆழ்வார், மலையாளத்திலே அறுபது ஸம்வத்ஸரம் நம்பெருமாள் முதலான ஸ்வாமிகளோடே சேரத் துலுக்கவலசையாக எழுந்தருளியிருந்து, துலுக்கன் முடிந்துபோன வாறே திருநகரியை நோக்கி மீண்டெழுந்தருளுகிறவர், ‘’திருக்கணாம்பி’’ என்கிற க்3ராமத்திலே எழுந்தளினவாறே, திருநகரியூரின்னவிடமென்றும், கோயிலின்னவிடமென்றுந் தெரியாதபடி காடாய்ப்போனபடியைக் கேட்டருளி, ‘’நமக்கும் நம்மடியார்க்கும் படைவீடும் திருவிருப்பும் சமைத்துத்தருவது’’ என்று பிள்ளைக்குத் திருமுக மனுப்பியருள, பிள்ளையும், சிஷ்யர்களும் தாமுமாக எழுந்தருளி, காடுவெட்டி நாடாக்கி, ஊரிலே குடியேற்றி, ஆழ்வாரையும் ஊரிலெழுந்தருளப்பண்ணி ஸகலவித4கைங்கர்யங்களும் பண்ணுகையினாலே மிகவும் விளங்காநிற்பாராய், குந்தீநக3ரத்திலே திருவவதரித்தருளின வராய், ‘’திருமலையாழ்வார்’’ என்கிற திருநாமத்தையுடைய வருமான திருவாய்மொழிப்பிள்ளையின் பொருட்டு நமஸ்காரமானது ஆகக்கடவது. 11.
- மணவாளமாமுனிகள் தனியன்
- श्रीशैलेशदयापात्रम् धीभक्त्यादिगुणार्णवम् |
यतीन्द्र प्रवणम् वन्दे रम्य जामातरम् मुनिम् ||
12.ஸ்ரீஶைலேஶத3யாபாத்ரம்தீ4ப4க்த்யாதி3கு3ணார்ணம்| யதீந்த்3ரப்ரவணம் வந்தே3 ரம்யஜாமாதரம் முநிம் ||
‘’வாழி திருவாய்மொழிப்பிள்ளை மாதகவால் வாழுமணவாள மாமுனிவன்’’ (வாழிதிருநாமம்), என்று பேசும்படி பெரிய ஜீயரும் 1. ‘’அஶிஶ்ரயத் ஸ யஶ்ஶேஷ: ஸ்ரீஶைலாதீ4ஶதே3ஶிகம் | அஶேஷாநஶ்ருணோத்3 தி3வ்யாந் ப்ரப3ந்தா4ந் ப3ந்த4நச்சி2த3: ||’’ என்கிறபடியே – திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளை ஆஶ்ரயித்து, திருவாய்மொழி முதலான தி3வ்யப்ரப3ந்த3தாத்பர்யத்தையும் அவருபதே3ஶமுகத்தாலே லபி4த்தருளி, ‘’தாமதி4கரித்த அர்த்த2த்தை எல்லாருங்கேட்டு உஜ்ஜீவிக்கும்படியாக நடத்தவேணும்’’ என்று உத்3யோகி3த்துக்கொண்டிருக்கிற இவரை, நம்பெருமாள் அர்ச்சகமுகே2ந அழைத்தருளி, ‘’திருவாய்மொழியின் அர்த்த2த்தை நாமும் நம்மடியருங்கேட்டு வாழும்படி பெரியதிருமண்டபத்திலே தொடங்கி நடத்தும்’’ என்று தம்திருவடிகளை ஊன்றுவித்து அருளபாடிட்டு நியமித்தருள இவருமப்படியே நடத்துகிறவளவிலே பெரியபெருமாளும், ஈடு தொடங்கினன்றும் சாற்றுகிறவன்றும் தாமெழுந்தருளி, – உயர்வறவுயர்நலந்தொடங்கி, (1-1-1), ‘’அவாவறச்சூழ்’’ (10-10-11), என்கிற சாற்றுப்பாட்டளவாக இவருபந்யஸிக்கிற உபந்யாஸத்தைக் கேட்டருளி மிகவுமுகந்து ‘’முப்பத்தாறாயிரப்பெருக்கர்’’ என்று இவருக்குத் திருநாமஞ்சாத்தியருளித் தனியனுமநுஸந்தி4த் தெழுந்தருளினார். இப்படி பெரிய பெருமாள் நிர்ஹேதுமமாகத் தம்மை விஷயீகரித்து நியமத்தருளினதுக்கு ஜீயரருளிச்செய்த திருநாமம், ‘’நாமார் பெரியதிருமண்டபமார் நம்பெருமாள் தாமாக நம்மைத் தனித்தழைத்து – நீ மாறன், செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே, வந்துரையென்றேவுவதே வாய்ந்து’’ (முக்தகம்) இப்படி நம்பெருமாளருளிச்செய்த பெரியஜீயரதான இந்தத் தனியனுக்கௌ அர்த்த2ம் – திருவாய்மொழிப்பிள்ளையினுடைய க்ருபைக்கு விஷயபூ4தராய், ஜ்ஞாந ப4க்தி வைராக்3ய மஹோத3தி4யாய், ஸ்ரீபா4ஷ்யகாரர் விஷயத்தில் ப்ராவண்யத்தை யுடையராய்க்கொண்டிருக்கிற கோயில் அழகியமணவாளச்சீயரை ஸேவிக்கிறேனென்றபடி.
பிள்ளைலோகம் ஜீயர் திருவடிகளே ஶரணம்.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருவாய்மொழி தனியன்கள்
- நாத2முனிகளருளிச்செய்தது
- भक्ताम्रुतं विश्वजनानुमोदनं सर्वार्थदं श्रीशठकोपवान्गमयम् |
सहस्र शाखोपनिषत्समागमं नमाम्यहं द्राविदवेदसागरम् ||
- ப4க்தாம்ருதம் விஶ்வஜநாநுமோத3நம் ஸர்வார்த்த2த3ம் ஸ்ரீஶட2கோபவாங்மயம் |
ஸஹஸ்ரஶாகோ2பநிஷத்ஸமாக3மம் நமாம்யஹம் த்3ராவிட3 வேத3ஸாக3ரம் ||
பரமகாருணிகரான பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த
திருவாய்மொழித் தனியன் வ்யாக்2யானம்
(ப4க்தாம்ருதம்) ‘’பத்தராகக்கூடும்’’ (3-6-11), ‘’தொண்டர்க்கமுது’’ (9-4-9), என்றபடி. (விஶ்வஜநாநுமோத3நம்) ‘’பார்பரவிங்கவி’’ (7-9-4), ‘’அடியார்க் கின்பமாரி’’ (4-5-10), என்கிறத்தைச் சொன்னபடி. (ஸர்வார்த்த2த3ம்) ‘’எல்லாப்பொருளும் விரித்தானை’’ (4-5-5), என்னும்படி ஸகலார்த்த2 ப்ரத3மாயிருக்கை. மிக்கவிறைநிலை (தனியன்), தொடங்கி, ‘’மிக்க வேதியர் வேதத்தினுட்பொருள், நிற்கப்பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்’’ (கண்ணி 9), என்கிறபடியே, அறிய வேண்டுமர்த்த2மெல்லாவற்றையும் அறிவிப்பிக்குமென்றபடி. (ஸ்ரீஶட2கோப வாங்மயம்) ‘’குருகூர்ச் சடகோபன் சொல்’’ (1-1-11), என்றபடி. (ஸஹஸ்ர ஶாகோ2பநிஷத் ஸமாக3மம்) ஸஹஸ்ரஶாகை2-ஸாமவேத3மாய், தத்ஸாரம்-சா2ந்தோ3க்3யோபநிஷத்தாய், அதின் ஸாரம் – உத்3கீ3த2 மென்றதாய், அத்தையாயிற்று இப்படிப் பாடியருளிற்றென்றபடி. வேதவரும்பொருள் நூல்களை (9-3-3), வண்டமிழ் நூலாக்கினபடி (4-5-10). எய்தற்கரிய மறைகளை ஆயிரமின்றமிழாற செய்தற் குலகில் வரும் சடகோபனிறே (இரா 18). (நமாம்யஹம் த்3ராவிட3வேத3 ஸாக3ரம்) அளவியன்ற வந்தாதியாயிரத்தை (1-4-11), l பத்தர் பரவும்படி (1-5-11), சொல்லிற்று.
கடலையும் சட2கோபன் சொல்லையும் ஸமாநமாகச் சொல்லுகிறது. (ப4க்தாம்ருதம்) ‘’விண்ணவரமுதுண’’ (பெரிய 6-1-2), என்னும்படி, விண்ணின்மீதமரர்கட்காய (பெரியாழ் திரு 3-4-10), தே3வபோ4க்3யமான அம்ருதத்தை யுடைத்தாயிருக்கும் அது; இது ‘’பாலோடமுதன்னவாயிரம்’’ (8-6-11), என்னும்படி அவனித்தேவரான (8-4-10), பூ4ஸுரர்க்கு போ4க்3யமான அம்ருதமாய், ஆராவமுத்தையுடைத்தாயிருக்கும் (2-5-5). (விஶ்வஜநாநு மோத3நம்) ஸர்வஜநாபி4மதப்ரத3மாகையாலும், த3ர்ஶநீயமாகை யாலும், ஸமுத்3ரம் ஸர்வஜநஸந்தோஷ வேஷத்தையுடைத்தா யிருக்கும்; இதுவும் ‘’முதல்பத்தர்வானவரென்னம்மான் பார்பரவ என்னும்படி ஸேஶ்வரவிபூ4தி போ4க்3ய’’மாயிருக்கும். (ஸ்ரீ ஶட2கோபவாங்மயம்) அதில் அம்ப2ஸ்ஸு அக3ஸ்த்ய வாங்மய மாயிருக்கும்; இதில் ச2ந்தஸ்ஸு ஶட2கோபவாங்மயமாயிருக்கும்; திருவாய்மொழியிறே. (ஸஹஸ்ரஶாகோ2பநிஷத் ஸமாக3மம்) அது ஸர்வஶாகா2ஸாரமான சந்த3நஶாகா2ஸமாக3மத்தை ஸமீபத்திலே யுடைத்தாயிருக்கும்; இது, ஸர்வவேத3ஶாகா2 ஸாரமான உபநிஷத்தினுடைய திரட்சியாயிருக்கும். (நமாம்யஹம் த்3ராவிட3வேத3 ஸாக3ரம்) அந்த ஸாக3ரம் 1. ‘’அஞ்ஜலிம் ப்ராங்முக2: க்ருத்வா’’ என்னும்படி அஶரண்யனுக்கு ஶரண்யமாயிருக்கும்; வண்டமிழ் நூல்களான (4-5-10), இது, சடகோபன் பாட்டென்றவாறே நாடடையக் கையெடுக்கும்படியாயிருக்கும்; ‘’நமாம்யஹம்’’ என்று – நாடெல்லாம் அநுஸந்தி4க்கக்கடவர்களிறே 2. ‘’வந்தே3 ராமாயணார்ணவம்’’ என்னுமாபோலே.
2.ஶ்லோக ஜால ஜலாகீர்ணம் ஸர்க்க3கல்லோல ஸங்குலம் | காண்3ட3க்3ராஹ மஹாமீநம் வந்தே3 ராமாயணார்னவம் ||’’. இங்கு சீர்த்தொடையாயிரம் (1-2-11), தீர்த்தங்களாயிருக்கும் (7-10-11). அங்கு ஐந்நூறு ஸர்க்க3ம்; இங்கு ‘’பத்துநூறு’’ (6-7-11), என்னும்படியாயிருக்கும். அங்கு ஷக்காண்ட3மாயிருக்கும்; இங்கு ஷட்பதா3ர்த்த2 ப்ரதிபாத3கமாய், பத்துப்பத்தாயிருக்கும். அது ராமாயணார்ணவம், இது த்3ராவிட3வேத3ஸாக3ரம். அது ரகு4வம்ஶ சரிதமாயிருக்கும்; இது ‘’முகில் வண்ணனடி மேற்சொன்ன சொன்மாலையாயிரம்’’ (7-2-11), என்னலாயிருக்கும். அது 3. ‘’வால்மீகிர் ப4க3வாந் ருஷி:’’ என்னும்படியான வாஸ்மீகிப்ரோக்தம்; இது குருகூர்ச்சடகோபன் சொல்லாயிருக்கும் (9-6-11). அது *மஹாபாதக நாஶநமாயிருக்கும். இதுவும் அருவினை நீறுசெய்யுமதாயிருக்கும் (3-5-11). அது 4. ‘’ஸம்ஸார்ம் ஸ விஹாய க3ச்ச2திபுமாந் விஷ்ணோ: பத3ம் ஶாஶ்வதம்’’ என்று ப2லமாயிருக்கும். இதுவும் ‘’வானின் மீதேற்றியருள்செய்து முடிக்கும் பிறவிமாமாயக்கூத்தினையே’’ (8-4-11), என்று திருவடியே யடைவிக்கும் (4-9-11).
- (திருவழுதி நாடென்றும் தெங்குருகூரென்றும்) ‘’ஆழ்வார் திருவடிகளை-அவர் ஸம்ப3ந்த4முடைய நாட்டோடும் ஊரோடும் ஆற்றோடும் வாசியற எல்லாவற்றையும் சேர்த்து, ப்ரஸந்நமான மநஸ்ஸே ! அநுஸந்தி4த்துப்போரு’’ என்கிறது. வைகுந்தச்செல்வனார் (நான் திரு 75), சேவடியோபாதி வைகுந்த வானாடும் (பெரிய திருவ 68), இறந்தால் தங்குமூரான (பெரிய திரு 10-2-10), கண்ணன் விண்ணூரும் (திருவிரு 47), அமுதவிரசையாறும் (ஆர்த்தி 20), உத்3தே3ஶ்யமாமாபோலே, இங்கும் இவை உத்3தே3ஶ்யமாகிறபடி. 1.
- ஈஶ்வரமுனிகளருளிச்செய்தது
- திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்மருவினிய வண்பொருநலென்றும்அருமறைகளந்தாதி செய்தானடியிணையே யெப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சேதெளிந்து.
(திருவழுதி நாடென்றும்) இத்யாதி3யாலே – ஆழ்வார் திருவடிகளைச் சிந்திக்கும்படி சொல்லுகிறது; ‘’கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும்’’ (பெரிய 4-8-1), என்று கொடங்கி, ‘’பார்த்தன் பள்ளிபாடுவாள்’’ (பெரிய 4-8-1), என்னுமாப்போலே. (திருவழுதி நாடென்றும்) ‘’வாய்ந்த வழுதி வளநாடன்’’ (5-6-11), என்று நிரூபகமாகவிறே அதுதானிருப்பது. அவர் ஸம்ப3ந்த4த்தால் அவரோபாதி அதுவும் அநுஸந்தே4யமாயிருக்கு மாகையால், திருவடிகள் நாட்டோடே நடக்கிறது. (தென்குருகூரென்றும் ‘’குருகூர்நகரான்’’ (திருவிரு 100), என்று – அவரிருக்குமூராகையாலே அதுவுமப்படியேயாயிருக்கை. (மருவினிய வண்பொருநலென்றும்) மருவ இனிதான வண்பொருனலென்றபடி. பொருநல் சங்கணி துறைவனிறே (10-3-11). இதுவுமிவர் இறங்கும் துறை; அவர் திருவடிகளும் இறங்குந்துறை. நன் ஞானத்துறேயிறே (திருவிரு 93). வண்சடகோபனைப் (2-4-11), போலே இதுவும் வண்மையுடைத்தா யிருக்கை. 1. ‘’ஸவித்ரீ முக்தாநாம்’’. இப்படி விலக்ஷணமான நாடும் நகரும் துறையுமென் றநுஸந்தி4த்து. (அருமறைகளந்தாதி செய்தானடியிணையே யெப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து) அதாவது – எய்தற் கறியமறைகளை ஆயிரமின்றமிழாற்செய்தற்குலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே சிந்தித்துப் போருவென்கை (இரா 18). 2. ‘’கு3ருபாதா3ம்பு3ஜம் த்4யாயேத்’’ என்கிறபடியே திருவடிகளையே சிந்தித்துப்போரு; மற்றொன்றிலே மருளாதே தெளிந்து அவ்வடியையே அநுஸந்தி4க்கப்பார்.
அன்றிக்கே, வேத3த்திலே 3. ‘’வைகுண்ட2 பு4வநலோகம்’’ என்று நாட்டையும், 4. ‘’யோவைதாம் ப்3ரஹ்மணோ வேத3 அம்ருதேநாவ்ருதாம் புரீம்’’ என்று அம்ருதவாஹிநியான விரஜையாற்றாலே ஆவ்ருதமான வைகுண்ட2நக3ரத்தையும், 5. ‘’விஷ்ணோ: பதே3 பரமே மத்4வ உத்ஸ:’’ என்றும், 6. ‘’தத்3விஷ்ணோ: பரமம் பத3ம்’’ என்றும் – அவன் திருவடிகளையும் உபநிஷத்து ஓதினாப்போலே, அந்த அருமறையின் தாத்பர்யமான, அர்ச்சாவதாரமான ஆதிப்பிரானதான திருவழுதித்திருநாட்டையும், ‘’திருக்குருகூரதனுள் நின்றவாதிப்பிரான்’’ (4-10-1), என்னும்படி அவன் வர்த்திக்கிற ஊரையும், ஊருக்கு வடக்கான வண்பொருநலாற் றையும், அங்கே நின்றவாதிப்பிரானுடைய (4-10-1), நீள்கழலையுமிறே திருவாய்மொழியிற் (1-9-11), சொல்லிற்று; இது-மற்றை உகந்தருளின நிலங்களிலற்றுத்துறைக்கும், ஊருக்கும் நாட்டுக்கும் உபலக்ஷணம். ‘’குட்டநாடு’’ (8-9-1), என்றிறே நாட்டையும் அருளிச்செய்துபோருவது; ‘’தேறுநீர்ப்பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்’’ (6-1-10), என்றும், ‘’தண்புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்’’ (7-2-6), என்றும் – ஊரையும் ஆற்றையும் அருளிச்செய்தது. இப்படியாயிற்று தி3வ்யதே3ஶ தி3வ்யநக3ர தி3வ்யநதி3களின் வைப4வத்தையும் திருவாய்மொழி முகே2ந த3ர்ஶிப்பித்து. ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானபடி. திருநாமப் பாட்டுக்கள்தோறும் – தமக்கு நிரூபகமாகவும் ஊரையும் நாட்டையும் ஆற்றையும் பாடுகையாலே (ஆசார்யஹ்ரு) – அதுதான், மிக்க வேதியர் வேதத்தினுட்பொருளாக (கண்ணி 9) அருளிச்செய்கையாலே, அத்தைப்பற்ற ‘’திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும் மருவினிய வண்பொருநலென்றும் அருமறைகளந்தாதி செய்தான்’’ என்றிங்ஙனே சொல்லுகிறதாகவுமாம். திருவழுதிநாடென்றும் – சிந்தியாயென்னுதல்; திருவழுதிநாடென்றும் – அருமறைகளந்தாதி செய்தானென்னுதல்; ததீ3யவைப4வமிறே வேத3தாத்பர்யமாயறு வது. இப்படி வேத3த்தை த்3ராவிட3மாகச் செய்த த்3ரவிடோ3பநிஷ தா3சார்யருடைய, அங்க்3ரியுக3ங்களை (தனியன்), ‘’தெளிவுற்ற சிந்தையர்’’ (7-5-11), ‘’தெளிந்தவென் சிந்தை’’ (9-2-4), என்னுமாபோலே, ‘’உபாயோபேயம்’’ என்று தெளிந்து மநஸ்ஸே ஸந்ததம் ஸ்மரித்துப்போரு’’ என்று ஆழ்வாரி திருவடிகளே அநுஸந்தே4யமாகச் சொல்லிற்று. 2.
3.(மனத்தாலும் வாயாலும்) இதில் – ஆழ்வார் திருவடிகளே ப்ராபகமும் ப்ராபயம்மாகிறபடியை அந்வய வ்யதிரேகங்களிரண் டாலும் த3ர்ஶிப்பிக்கிறது.
- சொட்டைநம்பிகளருளிச்செய்தது
3.மனத்தாலும் வாயாலும் வண்குருகூர்பேணு மினத்தாரை யல்லாதிறைஞ்சேன் தனதாலுமேதுங்குறைவிலே னெந்தைசடகோபன் பாதங்கள் யாமுடையபற்று.
(மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணுமினத்தாரை யல்லா திறைஞ்சேன்) மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணுகை யாவது –‘’திருக்குருகூரதனை யுளங்கொள் ஞானத்துவைம்மின் (4-10-9); ‘’திருக்குருகூரதனைப் பாடியாடிப் பரவிச்சென்மிங்கள்’’ (4-10-2), என்று ஆழ்வாருபதே3ஶங்கேட்டபடியே, மநஸ்ஸாலே நினைத்தும், வாயாலே சொல்லியும் போருகை; பேணுகை-விரும்புகை; 1. ‘’யத்3தி4 மநஸாத்4யாயதி தத்3வாசா வத3தி’’ என்னக்கடவதிறே. இப்படி ஆழ்வார் ஸம்ப3ந்த4முடைய தே3ஶத்திலே விருப்பமுடைய வர்களையடைய ப4ஜித்தேன். ஆழ்வார் ஸம்ப3ந்தி4 ஸம்ப3ந்தி4 களை யொழிய அந்யரை ஆத3ரித்து ப4ஜியேன். (வண்குருகூர் பேணுமினத்தார்) c நல்லர் நவில் குருகூரிறே (திருவிரு 100). (இனத்தார்) ஸமூஹமாயுள்ளவர்கள். அன்றிக்கே, ஸஜாதீயரென்றாகவுமாம். இத்தால் – குருகூர்ச்சடகோபன் பாட்டான (10-6-11), திருவாய்மொழியிலே அந்வயமுடைய ஸ்ரீவைஷ்ணவ ஸமூஹத்தை என்றபடி; குழாங்கொள் தெங்கொருகூரிறே (2-3-11). இத்தால் திருவாய்மொழியிலே அதி ப்ரவணரானவர்களை யொழிய அந்யரை ஆத3ரியேனென்ற தாயிற்று. இப்படி அந்யரை அநாத3ரிக்கைக்கு அடியுடைமை சொல்லுகிறது, – (தனத்தாலுமேதுங்குறைவிலேன்) என்று. 2. ‘’த4நம் மதீ3யம் தவ பாத3பங்கஜம்’’ என்கிறபடியே ஆழ்வார் திருவடி களைப் பற்றின நமக்கு f ‘’விபூ4திஸ்ஸர்வம்’’ என்னும்படி, தனத்தாலும் ஏதுங்குறேவிலேன் – ஒன்றுங் குறையுடையேனல்லேன். (எந்தை சடகோபன்) ‘’அன்னையாயத்தனாய்’’ (கண்ணி 4); ‘’மாதா பிதா’’ (தனியன்) என்னும்படி எனக்கு ஜனகரான ஆழ்வார். (பாதங்கள்) ப்ராப்தஶேஷி யானவர் திருவடிகள்; (யாமுடையபற்று) தச்சே2ஷபூ4தரான நம்முடைய பற்று; h ‘’தகையான் சரணம் தமர்கட்கோர் பற்று’’ (10-4-10) யாமுடைய பற்று இதுவாயிற்று.
4.இனி, ‘’சடகோபன் பாதங்கள்’’ என்றத்தை விவரியாநின்று கொண்டு, திருவாய்மொழி ஹ்ருத்3க3தமாம்படி, ஆழ்வார்க்குப் பரதந்த்ரரான உடையவர் திருவடிகளைத் தொழாநின்றேன் என்கிறது, – (ஏய்ந்த பெருங்கீர்த்தியிராமாநுசமுனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்) என்று.
4.அநந்தாழ்வானருளிச்செய்தது
- ஏய்ந்த பெருங்கீர்த்தியிராமாநுசமுனிதன் வாய்ந்தமலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்பெருஞ்சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராதவுள்ளம்பெற.
(ஏய்ந்த பெருங்கீர்த்தியிராமாநுசமுனிதன்) ‘’ஏற்கும் பெரும்புகழ் வானவரீசன்’’ (3-9-11), என்னுமாபோலே அங்குத்தைக்கு அநுரூபமாய்ப் பொருந்தியிருக்கிற பெரிய புகழையுடைய எம்பெருமானார் தம்முடைய (வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்) ஒன்றுக் கொன்று பொருந்திய்ருப்பதாய் மலர்போன்ற திருவடிகளை ப்ரணதிபண்ணாநின்றேன். ‘’ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்3யே’’ (தனியன்), என்கிறபடியே, ப்ராப்யபு3த்3த்4யா – வர்த்தமாநமாய்ச் செல்லுகிறது. இப்படி வணங்குகிறது எதுக்காகவென்னில், – (ஆய்ந்த பெருஞ்சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராதவுள்ளம் பெற) (ஆய்ந்தபெருஞ்சீரார் சடகோபன்) ‘’ஆய்கொண்டசீர்’’ (3-9-9), என்றும், ‘’ஆயபெரும்புகழ்’’ (3-9-8), என்றும், சொல்லுகிறபடியே, ஆயப் படும் – விலக்ஷணமாய், நிரவதி4கமான கல்யாணகு3ணங்களால் பூர்ணரான ஆழ்வாருடையதாய் அதிஸுலப4மான த்3ராவிட3 வேத3த்தை த4ரிக்கும்படி நிஶ்சலமான மநஸ்ஸைப்பெற.
அன்றிக்கே, ஆய்ந்தபெருஞ்சீராரென்று – * செந்தமிய் வேதத்துக்கு விஶேஷணமாகவுமாம். சீர்த்தொடையாயிரமிறே (1-2-11). இந்த ப்ரப3ந்த4 தா4ரணார்த்த2மாக வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன். தீமனங்கெகுத்து (2-7-8), மருவித்தொழும் மனத்தை ஆசார்யன் தரவேணு மிறே (2-7-7). ஆகையால் ‘’தங்குமனம் நீ யெனக்குத்தா’’ (பெரிய திருமொழி தனியன்) என்னும்படி, பேராதவுள்ளம்பெறவென்று – எம்பெருமனாரை ப்ரார்த்தி2க்கிறது. அதாவது – இவர்தான, மாறனடி பணிந்துய்ந்தவராய் (இரா 1), ‘’மாறன் பணித்த மறையுணர்ந்தோனை’’ (இரா 46), என்றும், ‘’தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னைத் தன்பத்தியென்னும் வீட்டின் கண்வைத்த இராமாநுசன்’’ (இரா 29), என்றும், பண்டரு மாறன் பசுந்தமிழானந்தம் பாய் மதமாகவுடையராய் (இரா 64), திருவாய்மொழி யின் மண்ந்தருமின்னிசை மன்னுமிடந்தொறு மிருக்குமவராய் (இரா 60). உறுபெருஞ்செல்வமும் மாறன் விளங்கியசீர் நெறிதரும் செந்தமிழென்றறிதர நிற்குமவராகையாலும் (இரா 19), அவர் திருவடிகள் ராமாநுசனாகை யாலும் இவரை அர்த்தி2க்கிறது; ‘’மற்றையாழ்வார்கள் தி3வ்யப்ரப3ந்த4ங்களை அங்கோ3பாங்க3மாகவுடைய இவருடைய த்3ராவிட3வேத3மான தி3வ்யப்ரப3ந்த4மொழிய ததி3தர க்3ரந்த்2ங்களில் சபலமான மநஸ்ஸு சலியாமல் இதொன்றிலுமேயுற்று நிலைநிற்கவேணும்’’ என்று அவரை அர்த்தி2க்கிறதென்கை. 4.
5.இனி, இதில் – திருவாய்மொழியினுடைய உத்பாத3கரையும் வர்த்த4கரையுஞ்சொல்லுகிறது – (வான்றிகழுஞ்சோலை) என்று.
- பட்டரருளிச்செய்தது
5.வான்றிகழுஞ்சோலை மதிளரங்கர்வண்புகழ்மேல், ஆன்றதமிழ்மறைகளாயிரமும் – ஈன்ற முத்ற்றாய்சடகோபன் மொய்ம்பால் வளர்த்த, இதத்தாயிராமாநுசன்.
(வான்றிகழுஞ்சோலை)யாவது – வானிலே – ஆகாஶத்திலே. திகழுகிற-ப்ரகாஶிக்கிற சோலையென்றபடி. 1. ‘’வ்ருக்ஷஷண்ட3மிதோபா4தி’’ ‘’வானேந்து சோலை’’ சோலையணிதிருவரங்கமிறே (திருமாலை 14). (மதிளரங்கர்) ‘’திட்கொடி மதிள்சூழ்’’ (7-2-3), ‘’மதிள் திருவரங்கம்’’ (திருமாலை 42). அதுவும் வானையுந்துமதிளாயிருக்கை (9-10-4). (வான்றிகழுஞ்சோலை) உயர்ந்த சோலையையும், மதிளையுமுடைய கோயிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய ஶ்லாக்4யமான கல்யாண கு3ணவிஷயமாய் விஸ்த்ருதமாயிற்று ஆயிரம் திருவாய்மொழியும். ‘’முகில்வண்ணனடிமேற் சொன்ன சொன்னமாலையாயிரம்’’ (7-2-11) என்னக்கடவதிறே. அதுதான் சீர்த்தொடையாயிரமென்று (1-2-11), – சீர்கலந்தசொல்லாயிறே இருப்பது. ‘’நலமுடையவன்’’ (1-1-1), ‘’ஈறில வண்புகழ் நாரணன்’’ (1-2-10), என்று உபக்ரமித்து, வாழ்புகழ் நாரணன்’’ (10-9-1), என்றிறே தலைகட்டியருளினார். பெரிய பெருமாள்தான் – l நலந்திகழ் நாரணனிறே (பெரு 10-11); 1. ‘’நாராயணபரம் ப்3ரஹ்ம’’ 2. ‘’நாராயணபரா வேதா3:’’ என்னக்கடவதிறே; அத்தாலே (மதிளரங்கர் வண்புகழ் மேலான்றதமிழ் மறைகளாயிரமும்) என்கிறது.
இனித்தான் திருவாய்மொழி பத்துப்பத்தாலும் ப்ரதிபாதி3க்கிற- ‘’பரபரன்’’ (1-1-8), என்கிற பரத்வமும், ‘’சோராதவெப்பொருட்குமாதி’’ (2-1-11), என்கிற – காரணத்வமும், ‘’முழுதுமாய் முழுதியன்றாய்’’ (3-1-8), என்கிற –வ்யாபகத்வமும், ‘’மறுகலிலீசன்’’ (4-1-10), என்கிற நியந்த்ருத்வமும், ‘’ஆவா வென்றருள்செய்து’’ (5-1-6), என்ரிற – கருணிகத்வமும், ‘’ஏறு சேவகனார்க் கென்னையுமுளள்’’ (6-1-10), ‘’வரங்கொள் பாதமல்லாலில்லை யாவர்க்கும் வன்சரண்’’ (6-3-7), என்கிற ஶரண்யத்வமும், ‘’எண்ணிலாப் பெரு மாயனே’’ (7-1-1), – என்கிற ஶக்திமத்தவமும், ‘’தேவிமாராவார் திருமகள் பூமியேவ மற்றமரராட்செய்வார்’’ (8-1-1), என்கிற ஸதயகாமத்வமும், ‘’எண்டிசையும் கீழும் மேலும் முற்றவுமுண்டபிரான்’’ (9-1-1), என்கிற – ஆபத்ஸக2த்வமும், ‘’சுரிகுழற்கமலக்கட்கனிவாய்க் காளமேகம்’’ (10-1-1), என்ற ஆர்த்தி ஹரத்வமுமாகிற அதில் பத்தர்த்த2மும் – பெரிய பெருமாளை ப்ரதிபாதி3க்கிற, கங்குலும் பகலிலும் (7-2-1), காணலா யிருக்கும். ‘’வடிவுடைவானோர் தலைவனே’’ (7-2-10), என்று – பரத்வமும், ‘’முன்செய்திவ்வுலகம்’’ (7-2-2), ‘’விண்ணோர் முதல்’’ (7-2-6), என்று காரணத்வமும், ‘’கட்கலீ’’ (7-2-3), ‘’என்னுடையாவி’’ (7-2-9), என்று – வ்யாபகத்வமும், ‘’பால துன்பங்களின்பங்கள் படைத்தாய்’’ (7-2-7), ‘’காலசக்கரத்தாய்’’ (7-2-7), ‘’மூவுல-காளி’’ (7-2-10), என்கையாலே –நியந்த்ருத்வமும், ‘’இவள் திருத்தருளாய்’’ (7-2-6), என்ற காருணிகத்வமும், ‘’பற்றிலார் பற்றநின்றானே’’ (7-2-7), என்று – ஶரண்யத்வமும், ‘’அலைகடல் கடைந்த வாரமுதே’’ (7-2-5), என்று-ஶக்தி மத்த்வமும், ‘’என் திருமகள் சேர்மார்பனே’’ (7-2-9), ’’நிலமகள் கேள்வனே’’ (7-2-9), ‘’ஆய்மகளன்பனே’’ (7-2-9), என்று- ஶக்தியாலே நித்யமாகக் கற்பித்த பத்நீபரிஜநாதி3களையுடைய ஸத்யகாமத்வமும், ‘’இவ்வுலக முண்டுமிழ்ந்தளந்தாய்’’ (7-2-2), என்று – ஆபத்ஸக2த்வமும், ‘’முகில் வண்னடியையடைந்தருள் சூடியுய்ந்தவன்’’ (7-2-11), என்று-ஆர்த்திஹர த்வமும் அருளிச்செய்தாரிறே; ஆக, எல்லாவற்றாலும் ‘’மதிளரங்கர் வண்புகழ் மேலான்ற தமிழ் மறைகளாயிரம்’’ என்னத்தட்டில்லையிறே. ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதி4கரானாப்போலே, எம்பெருமான்களில் நம்பெருமாள் அதி4கராயிறேயிருப்பது; அத்தைப்பற்றவுஞ் சொல்லிற்று.
இப்படி பெரியபெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதி3த்த திருவாய்மொழியை (ஈன்ற முதற்றாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்தவிரத்தாயிராமாநுசன்) நெடுங்காலமும் நோற்றுப்பெற்ற முந்தின மாதா ஆழ்வார்; ‘’வண்டமிழ் நூற்கநோற்றேன்’’ (4-5-10), என்றாரிறே; வருந்திப்பெற்ற பிள்ளையை வளர்த்தெடுக்கும் மாதாவைப் போலே திருவாய்மொழியை வளர்த்த இதத்தாய்-வர்த்தி4ப்பித்த மாதா எம்பெருமானாரயிற்று. ஞானக்கலையான (1-9-8), திருவாய்மொழிக்கு ஜந்மபூ4மி ஆழ்வார், தத்3வர்த்த4கர் எம்பெருமானார்; இப்படியாயிற்று ஜ்ஞாநஸந்தாநம் வளர்த்தியோடே நடந்து செல்வது. ‘’பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்றடியேனுக்குற்றானாய் வளர்த்து’’ (பெரியதிரு 8-9-7), என்னுமாபோலே. மொய்ம்பால் வளர்க்குந்தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமாபோலேயாயிற்று இவரும் அத்தைக் காத்து வளர்த்தபடியும். தேவகிபெற்ற வுருவுகரியவொளிமணி வண்ணனை (பெரியாழ் 1-3-17), வளர்க்குந்தாயான யசோதை தன்மிடுக்காலே யெடுத்து, ‘’ஏதேனுஞ்சொல்லி யசலகத் தாரேதேனும் பேச நான் கேட்கமாட்டேன்’’ (பெரியாழ் 2-9-6), என்றும், ‘’தூசனஞ்சொலும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்றவிடத்தினின்று’’ (பெரியாழ் 2-9-8 ), ‘’போதர் கண்டாய்’’ (பெரியாழ் 2-9-6), ‘’தாய்சொல்லுக்கொள்வது தன்மங்கண்டாய்’’ (பெரியாழ் 2-9-8), என்று குற்றஞ் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப்புடை புடைத்துத் தன்வசமாக்கி, ‘’தீயபுந்திக்கஞ்சன்’’ (பெரியாழ் 2-2-5), என்று கருத்தைக் குலைத்து ‘’காப்பாருமில்லை’’ (பெரியாழ் 2-3-1), என்று இரந்து ‘’அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீலநிறத்துச்சிறுப்பிள்ளை’’ (பெரியாழ்1-3-12), என்னும்படி நிறம்பெற வளர்த்து ப்ரமேய ஸாரத்தை வர்த்தி4ப்பித்தாப்போலே, ப்ரமாணஸாரத்தை வர்த்தி4ப்பித்த ப்ரகாரமும். அதெங்ஙனேயென்னில்; இங்கும் ஆழ்வார் அவதரித்து அவாவற்றுவீடுபெற்றெழுந்தருளினபின்பு (10-10-11), பா3ஹ்ய குத்3ருஷ்டிகளாலே, * பா4ஷாகா3நமான திருவாய்மொழி அபி4பூ4தமாய் வருகிற படியைக் கண்டு, பா4ஷ்யஸூக்திகளாலே அத்தை நிரோதி4த்து அத்தையிதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத் திருவாய்மொழியைத் தன்கைவசமாக்கி, திருக்குருகைப்பிரான் பிள்ளானைக்கொண்டு இதினர்த்த2த்தை வெளியிடுவித்து வர்த்தி4ப்பித்துக்கொண்டு போந்தாரிறே, ‘’மாறனடிபணிந்துய்ந்தவன்’’ (இரா 1), என்னும்படியான அடியாராகை யாலே. ஆண்டவனிட்ட பயிரை வர்த்தி4ப்பிக்கவேணுமிறே அடியானுக்கு.
6.(மிக்கவிறைநிலையித்யாதி3) 1. ஸ்ரீபதிஶ்சேதநஸ்யாஸ்ய ஹேதுத் வேந ஸமாஶ்ரித: | அநிஷ்டஹாநி மிஷ்டஸ்ய ப்ராப்திஞ்ச குருதே ஸ்வயம் ||’’ என்று ஸகலவேத3 ஸ்ங்க்3ர்ஹமான திருமந்த்ரத்தில் பத3த்ரயத்தாலும் ப்ரதிபாதி3க்கப்படுகிற அர்த்த2பஞ்சகத்தை, ‘’திருமாலாலருளப்பட்ட சடகோபன்’’ (8-8-11), என்னும்படி ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரனாலே, மயர்வற மதிநலமருளப்பெற்ற (1-1-1), ஆழ்வாரரு ளிச்செய்த திருமாலவன் கவியான (திருவிரு 48), திருவாய்மொழி ப்ரப3ந்த4ம் ப்ரதிபாதித்த ப்ரகாரத்தை இத்தனியனிலே சொல்லித் தலைக்கட்டுகிறது – (மிக்கவிறைநிலை யும் மெய்யாமுயிர் நிலையும் தக்க நெறியும் தடையாகித் தொக்கியலு மூழ்வினையும் வாழ்வினையும் குருகையர்கோன் யாழினிசை வேதத்தியலோதும்) என்று.
6.இதுவும் பட்டரருளிச்செய்தது
- மிக்கவிறைநிலையும் மெய்யாமுயிர்நிலையும் தக்கநெறியுந் தடையாகித்-தொக்கியலும் ஊழ்வினையும்வாழ்வினையு மோதும்குருகையர்கோன் யாழினிசை வேதத்தியல்.
மிக்கவிறைநிலையாவது- ’’இறைநிலை யுணர்வரிது’’ (1-3-6), என்னும் படியான ஸர்வஸ்மாத் பரத்வம். 1. ‘’தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம் தம் தே3வதாநாம் பரமஞ்சதை3வதம்’’ 2. ‘’நாராயண பரோஜ்யோதி:’’ என்றும், 3. ‘’தத்வம் நாராயன: பர:’’ என்றும், ‘’மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவாவோ’’ (8-1-5), என்றும், ‘’தேவ தேவனை’’ (3-6-2), என்றும், ‘’பரஞ்சோதி நீ பரமாய்’’ (3-1-3), என்றும், ‘’மிகுஞ்சோதி’’ (2-2-5), என்றும், ‘’முழுதுண்டபரபரன்’’ (1-1-8), என்றும், ‘’வானோ ரிறை’’ (1-5-1), என்றும், ‘’கழிபெருந்தெய்வம்’’ (திருவிருத்தம் 20), என்றும். ‘’பெருந்தெய்வம்’’ (4-6-2), என்றும், ‘’பெரியவப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை’’ (8-1-11), என்றும். ‘’திருவுடையடிகள்’’ (1-3-8), என்றும், ‘‘திருமகளார் தனிக் கேள்வன் பெருமையுடக்யபிரானார்’’ (1-6-9), என்றும், ‘’திருமாமகள் கேள்வா தேவா’’ (6-10-4), என்றும் சொல்லப்படுகிற ஸர்வஸ்மாத்பரனை யாயிற்று (மிக்கவிறை) என்கிறது. ‘’திருமங்கைநின்றருளுந் தெய்வம்’’ (இர. திருவ 57), ‘’திருமாலையல்லது தெயவமென்றேத்தேன்’’ (முதல் திருவ 64), ‘’திருவில்லாத்தேவரைத் தேறென்மின் தேவு’’ (நான் திரு 53), என்னக்கடவதிறே. இதுவாயிற்று பரஸ்வரூபம். இறை நிலையவது – ஸௌலப்4யத்துக் கவ்வருகில்லாதபடி ம்குடிந்த நிலமான ஆஶ்ரிதபாரதந்த்ர்யத் தோடே நிற்கிற அர்ச்சாவதாரமென்கை; அத்தையாயிற்று ‘’எளிவரும்’’ (1-3-2), இத்யாதி3யிற் சொன்னது. இதிறே ஈஶ்வர ஸ்வரூபயாதா2த்ம்யம்.
மெய்யாம் உயிர்நிலையாவது –‘’உருவியந்த விந்நிலைமை’’ (1-3-6), என்று, ‘’எண் பெருக்கந்நலத்தொண்பொருள்’’ (1-2-10), என்றும், உணர்வைப்பறவூர்ந்து’’ (8-8-3), என்றும், ‘’நின்றவொன்றை’’ (8-8-4), என்றும், ‘’உயிர் வீடுடையான்’’ (1-2-1), என்றும்-ப்ரக்ருதே:பரனாய், ஜ்ஞாநாந்த3ஸ்வரூபனாய், ஜ்ஞாநகு3ணகனாய், நித்யனாய், ஈஶ்வரனுக்கு ஶரீரவத் என்றும், ‘’உள்ளதும்’’ (1-2-4), என்றும், ‘’மெய்ம்மையை’’ (திருமாலை 38), என்றுஞ் சொல்லுகையாலே ப்ரக்ருதி ஸ்வபா4வத்திற்காட்டில் ஆத்மஸ்வரூப நித்யத்வஞ்சொல்லிற்று, அன்றிக்கே , மெய்யாமுயிரென்கயாலே – 5. ‘’யஸ்யாத்மா ஶரீரம்’’ என்கிறபடியே, ‘’உள்ளத்வனுரு’’ என்று ஶரீர ஶரீரி பா4வஞ்சொல்லிற்றாகவுமாம். உயிர்நிலையாவது – ‘’மெய்ம்மையை மிகவுணர்ந்து’’ (திருமாலை 38), என்கிறபடியே, ’’தம்மடியாரடி யோங்கள்’’ (3-7-10), என்றும், ‘’தொண்டன் சடகோபன்’’ (7-1-11), என்றும், ll ‘’சிறுமாமனிசரா யென்னையாண்டார்’’ (8-10-3), என்றும், ததீ3யபர்யந்த மான நிலை. இதிறே ஸ்வஸ்வரூபயாதா2த்ம்யம்.
தக்கநெறியாவது – அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு, அநுரூபமான உபாயம். அல்லாதது தகாத நெறியாயிறே யிருப்பது; ‘’நெறிகாட்டி நீக்குதியோ’’ (பெரியதிருவ 6), என்னக்கடவதிறே. ‘’நீயம்மா காட்டும் நெறி’’ (பெரியதிருவ 5), ‘’கண்ணனல்லாலில்லை கண்டீர் சரண்’’ (9-1-10). ஶரீர ரக்ஷணம் ஶரீரிக்கே ப4ரமிறே. 1. [மாஶுச:] – என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்கொள்ளேனோ என்றிறே அவன் வார்த்தை. ‘’எம்மையாளும் பரமர்’’ (3-7-1), என்று ததீ3யஶேஷத்வம் ஸ்வாரூபமானால், ‘’நன்மை பெறுத்தெம்மை நாளுய்யக்கொள்கின்ற நம்பர்’’ (3-7-7), என்றவர்களே உபாயமாகவும் வேணுமிறே; (தக்கநெறி) ததீ3யோபாயமாகவுமாம். உபாய யாதா2தத்ம்யமிதுவிறே.
(தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையாவது) – விரோதி4யாய்த் திரண்டு வர்த்திக்கிற ப்ராக்தநகர்மமென்கை. ‘’முன்செய்த முழுவினை’’ (1-4-2), ‘’பாரமாய பழவினை’’ (அமல 5), என்னக்கடவதிறே; ஊழ்மை-பழமை. வினை-கர்மம். ‘’பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்’’ (திருவிரு 1). ‘’அவித்3யாகர்மவாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்ப3ந்த4ம்’’ (முமுக்ஷுப்படி 250), ப4க3வத்ஸ்வரூபதிரோதா4நகரியிறே தே3ஹம். விரோதி4 ஸ்வரூபயாதா2த்ம்யம் – அஹங்கார மமகாரங்கள் (ஶரணாக3திக3த்3யம் 12); ‘’யானே என்னையறியகிலாதே யானே யென்றனதே யென்றிருந்தேன்’’(2-9-9), ‘’நீர் நுமதென்றிவை வேர்முதல் மாய்த்து’’ (1-2-3), 2. ‘’பீ3ஜமேதத்3 த்3விதா4 ஸ்தி2தம்’’. ‘’முன்னமே’’ (திருவிரு 95), என்னும்படி அநாதி3யாயிறே போருவது; இதுதான் அநுகூலர்பக்கல் அநாத3ரத்தைப் பிறப்பிக்குமதா யிருக்கும், அதுதான் தே3ஹாத்ம ப்4ரம மூலமாகையாலே ஸ்ரீவைஷ்ணவர்கள் திறத்தில் ஜந்ம நிரூபணத்திலே மூட்டி அநர்த்த2த்திலே பர்யவஸிக்கும் (ஸ்ரீவசந 243); ‘’அதிலே ஒன்று அவர்கள்பக்கல் ஜந்மநிரூபணம்’’ (ஸ்ரீவசந195), என்றாரிறே. ‘’மன்பக்கல் சேவிப்பார்க்கன்புசெய்வார் சன்மனிரூபணமு மாவிக்கு நேரேயழுக்கு’’ (ஸப்தகாதை 5), என்றாயிற்று அதின் க்ரௌர்யமிருப்பது; ‘’அமரவோரங்கம்’’ (திருமாலை 33), இத்யாதி3.
வாழ்வினையாவது – வாழ்வையென்றபடி. வாழ்வினையென்று – முழுச்சொல். வாழ்வாவது – நின்தாளிணைக்கீழ் வாழ்ச்சியைப் (3-2-4), பெற்று; ‘’வாழ்வெய்தி ஞாலம் புகழ வாழ்வர்’’ (3-3-11), என்றபடி ‘’தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே’’ (2-9-4), ‘’உன்றன் திருவுள்ளமிடர் கெடுந் தோறும் நாங்கள் வியக்க வின்புறுதும்’’ (10-3-8), என்று அவனுகந்த படியைச் செய்து ஆநந்தி3க்கை. அன்றிக்கே, ’’அவனடியார் நனிமாக்கலவி யின்பமே நாளும்வாய்க்க நங்கட்கே’’ (8-10-7), என்கிறபடியே, ‘’அந்தமில் பேரின்பத்தடிய ரோடிருந்தமை’’ (10-9-11), என்றுஞ்சொல்லுகிற சரமப்ராப்ய மாகவுமாம். இதிறே ப்ராப்யத்தின் எல்லைநிலம்.
(குருகையர்கோன் யாழினிசை வேதத்தியலோதும்) இந்த அர்த்த2 பஞ்சகத்தையும் ஓதுகையாவது – 3. ‘’ப்ராப்யஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம்’’ இத்யாதி3யில் 3. ‘’முநயஶ்ச மஹாத்மாநோ வேத3 வேதா3ர்த்த2வேதி3ந: வத3ந்தி’’ என்கிறபடியே, ஶட2கோபமுனி யான இவர் தி3வ்யஸூக்தியும். ‘’இமையோரதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழு என்று பஞ்சகத்தையும் அடியிலே யாயிற்றுச்சொல்லிற்று’’ (ஆசார்ஹ்ருத3யம் 212), ‘’ உயர் திண்ணணையொன்று பயிலேறு கண் கரு வீடு சொன்னாசொருக் கொண்ட நோற்றநாலும் எம்மாவொழிவில் நெடுவேயென்கிற இருபதிலே விஶத3மாக்கி எண்பதிலே பரப்புகையாலே அஞ்சையும்’’ (ஆசார்ஹ்ருத3யம் 211), என்றிறே ஆசார்யஹ்ருத3யத்திலே அருளிச்செய்தது. குருகையர்கோன் யாழினிசை வேதமாவது – ஸம்ஸ்க்ருத வேத3ம் போலே தான்றோன்றியன்றிக்கே, ‘’எய்தற்கரிய மறைகளை யாயிரமின் றமிழாற்செய்தற் குலகில் வரும் சடகோபன்’’ (இரா18), என்னும் படி ஆழ்வாராலே அருளிச்செய்யப்பட்ட அதிஶயத்தை யுடைத்தாய், ‘’யாழினிசையே’’ (5-3-6), என்று கா3நஸ்வரூபியான ஸர்வேஶ்வரனை ப்ரதிபாதி3க்கையாலே ‘’பண்ணார் பாடல்’’ (10-7-5), ‘’பண்புரை யிசை கொள் வேதம்’’ (ஆசார்ஹ்ருத3யம் 50), என்னலாம்படி ‘’பண்கொளாயிரம்’’ (3-6-11), என்று ஸாமவேத3ம் போலே ஸரஸமாயிருக்கை. இதினுடைய வேத3 ஸாம்ய மெல்லாம் ஆசார்யஹ்ருத3யத்திலே விஶத3மாக அருளிச்செய்தார்; அதிலே கண்டுகொள்வது.
‘’விண்மீதிருப்பாய்’’ (6-9-5), என்கிற பாட்டிலே பரஸ்வரூபம் காணலாம்; ஆத்ம ஸ்வரூபம், அடியார்ந்தவையத்திலே (3-7-10), காணலாம். உபாய ஸ்வரூபம், உழலையிலே (5-8-11), காணலாம். விரோதி4ஸ்வரூபம், ‘’அகற்ற நீவைத்த’’ (5-7-8), என்கிறத்திலே காணலாம். ப2லம், உற்றேனிலே (10-8-10), யுணரலாம். அர்த்த2பஞ்சக ஜ்ஞாநத்தாலேயிறே, ‘’அந்தமில் பேரின்பத்தின்புறுகையும்’’ (10-10-10), என்று அறுதியிட்டருளிற்று. எண்பெருக்கந்நலத்திலும் (1-2-10), ‘’எனக்கேயாட்செய்’’ (2-9-4), ‘’ஒழிவில் காலம்’’ (3-3-1), ‘’வேங்கடங்கள்’’ (3-3-6), ‘’சீலமில்லா’’ (4-7-1), ‘’களைவாய்’’ (5-9-8), ‘’ஞாலத்தூடே’’ (6-9-3), என்கிற பாட்டுக்களிலும் – திருமந்த்ரார்த்த2ம் காணலாயிருக்கும். ‘’அகாரத்தாலும், மகாரத்தாலும் – ரக்ஷகனையும், ரக்ஷ்யத்தையும் சொல்லி, சதுர்த்தி2யாலுமுகாரத்தாலும் – ரக்ஷண ஹேதுவான ப்ராப்தியையும் ப2லத்தையுஞ்சொல்லுகிறது; ஸவிப4க்திகமான நாராயணபத3த்திலே-ஸர்வஸ்மாத்பரன் திருவடிகளில் கைங்கர்யத்தைச்சொல்லுகையாலே, திருமந்த்ரம்-அர்த்த2 பஞ்சக ப்ரதிபாத3கமென்னுமிடம் ஸ்பஷ்டமிறே. ஆகையாலே திருவாய்மொழியில் ப்ரதிபதி3க்குமர்த்த2மெல்லாம் அர்த்த2பஞ்சக ப்ரதிபாத3கமான திருமந்த்ரார்த்த2 மென்னத்தட்டில்லை; 1. ‘’ஸ்ரீபதிஶ்சேதநஸ்யாஸ்ய’’ (பன்னீராயிரப்படி ப்ரவேஶம்) என்கிற ஶ்லோகத்திலே அருளிச்செய்த அர்த்த2பஞ்சகமும், இதிலிரண்டிரண்டு பத்தாலே ஒரோவர்த்த2ம் ப்ரதிபாதி3க்கப்படுகிறது’’ என்று திருவாய்மொழியிம் உரை ப்ரவேஶத்திலே வாதி3கேஸரி அழகிய மணவாளச்சீயரருளிச் செய்தாரிறே.
திலதமுலகுக்கான திருவேங்கடத்தானை, அலகில்புகழந் தாதியாயிரமும் – உலகில் உரைத்தான் சடகோபனுத்தமர்கள் நெஞ்சில், விரித்தான் பெரும்பூதூர்வேந்து.
பிள்ளைலோகஞ்ஜீயர் திருவடிகளே ஶரணம்.
தனியன்கள் வ்யாக்2யானம் முற்றிற்று.