இரண்டாம் திருவாய்மொழி
வீடுமின்: ப்ரவேஶம்
****
ப – இரண்டாம் திருவாய்மொழியில், இப்படி ஸர்வஸ்மாத்பரனானவனே ஆஶ்ரயணீயனாகையாலே, ஆஶ்ரயணரூபமான பகவத்பஜநத்துக்கு உபயுக்தமான ததிதர ஸகலத்யாகத்தையும், பஜநப்ரகாரத்தையும், அஸ்தைர்யத்தையும், த்யாகப்ரகாரத்தையும், த்யாகபூர்வகமாக ஆஶ்ரயணீயனுடைய ஸ்வரூபவைலக்ஷண்யத்தையும், அதிஶயித புருஷார்த்தத்வத்தையும், ஸர்வஸமத்வத்தையும், விலக்ஷணஸ்வரூபமான ஆஶ்ரயணப்ரகாரத்தையும், தத்பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும், ஆஶ்ரயணீயனுடைய அபிமதபலரூபத்வ பூர்த்தியையும் சொல்லிக்கொண்டு ஆஶ்ரயணரூப பஜநத்தைப் பரோபதேஶ•கத்தாலே அருளிச்செய்கிறார்.
ஈடு – (வீடுமின் முற்றவும்) தத்த்வபரமாயும் உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரந்தானிருப்பது; அதில் தத்த்வபரமாகச் சொல்லவேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே; உபாஸநபரமாகச் சொல்லவேண்டுமவற்றுக்கெல்லாம் ஸங்க்3ரஹமாயிருக்கிறது இத்திருவாய்மொழி.
இத்திருவாய்மொழிதன்னை, ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலை யாண்டான் ப்ரபத்திவிஷயமாக்கி நிர்வஹித்துக்கொண்டு போந்து, எம்பெருமானாரும் அப்படியே அருளிச்செய்துகொண்டு போந்து, பா4ஷ்யம் தலைக்கட்டினபின்பு ப4க்திவிஷயமாக அருளிச்செய்துகொண்டு போருவர்; பின்பு எம்பாரும் அப்படியே அருளிச்செய்தார். இவருடைய ப4க்திப்ரபத்திகள்தான் விகல்பிக்கலாயிறேயிருப்பது.
“மயர்வறமதிநலமருளினன்” (1-1-1) என்று இவர்தாம் பெற்றது ப4க்தி ரூபாபந்நஜ்ஞாநமாயிருந்தது; தாம்பெற்றது ஒன்றும், பிறர்க்கு உபதே3ஶிப்பது ஒன்றுமாக வொண்ணாதே; அப்போது விப்ரலம்ப4க கோடியிலேயாவரே. “உப4யபரிகர்மிதஸ்வாந்தஸ்ய” என்கிறபடியே கர்மஜ்ஞாந ஸம்ஸ்க்ருதாந்த: கரணனுக்குப் பிறக்குமதிறே பரப4க்தி; அந்த ஜ்ஞாந கர்மங்களினுடைய ஸ்தா2நே ப4க3வத்ப்ரஸாத3மாய், அதடியாக அநந்தரம் விளைந்ததிறே இவருடைய ப4க்திதான். இதுதான் வேதா3ந்த விஹிதையான ப4க்திதானேயானாலோவென்னில்; ஸர்வேஶ்வரனருள இவர்பெற்றாராகிற ஏற்றம் போம்; அபஶூத்3ராதி4கரண ந்யாயமும் ப்ரஸங்கி3க்கும். ஆனபின்பு தாம்பெற்றத்தையே பிறர்க்கு உபதே3ஶிக்கிறாராக அமையும்.
கீழில் திருவாய்மொழியிலே அவனுடைய பரத்வத்தை அநுப4வித்து ஒரு பெரிய திருநாள்போலேயிறே போந்தது; இவர் இப்போது நெஞ்சொழிந்திருந்து பிறர்க்கு உபதே3ஶிக்கிறபடி எங்ஙனேதான்? தாம் அநுப4வித்த விஷயத்தை எல்லை கண்டோ, அன்றிக்கே தாம் அவ்விஷயத்தில் விரக்தராயோ? என்னில்; விஷயமோவென்றால், “தனக்கும் தன் தன்மை அறிவறியான்” (8-4-6) என்கிறபடியே அபரிச்சி2ந்ந விஷயம்; ‘கொள்ளமாளா இன்பவெள்ள’(4-7-2)மிறே. இனி, தம் அபி4நிவேஶமோவென்றால், “காதல் கடலின் மிகப்பெரிதால்” (7-3-6) என்றும், “மண்திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப்பெரிதால்” (7-3-8) என்றும், “சூழ்ந்ததனிற்பெரிய என்னவா” (10-10-10) என்னும்படி பெருகியிருந்தது. ஆகிலும் ஒருகால் ஒன்றிலே அபி4நிவேஶம் பிறந்தால் அப்படிப்பட்ட விஷயந்தானே காலாந்தரத்திலே விரக்தி பிறக்கக்காணாநின்றோம்; அப்படியே, சிலகாலம் அநுப4வித்துப் பின்பு விரக்தி பிறந்ததோவென்னில்; அங்ஙனும் சொல்லவொண்ணாது; “எப்பொழுதும் நாள்திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப்பொழுதென் ஆராவமுதம்” (2-5-4) என்னும்படி நித்யாபூர்வமாயிருக்கும். இனி ஆசார்யபத3ம் நிர்வஹிக்கைக்காக அன்று; க்2யாதிலாப4 பூஜைகளுக்காக அன்று; “ப்ரப்3ரூயாத்” என்றொரு விதி4பரதந்த்ரராயன்று. ஆனால் இதுபின்னை எத்தாலேயாவது? என்னில்; ஸ்வாநுப4வ ப்ரகர்ஷமிருக்கிறபடி.
தாம் அநுப4வித்த விஷயம் தனியே அநுப4விக்குமதன்றிக்கே இருந்தது; இனி, நமக்கு போ3த4யந்த: பரஸ்பரத்துக்கு ஆளாவார் ஆர்? என்று ஸம்ஸாரிகள்பக்கலிலே கண்வைத்தார்; தான் ப4க3வத்3 விஷயத்திலே ப்ரவணராயிருக்கிறாப் போலே அவர்கள் ஶப்3தா3தி3 விஷயங்களிலே ப்ரவணராயிருந்தார்கள்; இவர்களநர்த்த2ம் பரிஹரித்தல்லது நிற்கவொண்ணாதாயிருந்தது; “ஒருவனுக்கு வைஷ்ணவத்வம் உண்டு, இல்லை என்னுமிடம் தனக்கே தெரியுங்காண்” என்று ஜீயர் பலகாலும் அருளிச்செய்வர்:- பிறரநர்த்த2ம் கண்டால், “ஐயோ!” என்றிருந்தானாகில் “நமக்கு ப4க3வத்ஸம்ப3ந்த4ம் உண்டு” என்றிருக்க அடுக்கும்; “இத்தனையும் பட்டிடுவானுக்கு” என்றிருந்தானாகில் நமக்கு ப4க3வத் ஸம்ப3ந்த4மில்லை என்றிருக்க அடுக்கும் – என்று.
இவர்களை இவர் மீட்கப்பார்க்கிற வழிதான் என்னென்னில்; இவர்கள் சேதநராயிருந்தார்கள்; ஶப்3தா3தி3விஷயங்களில் வாசியறிந்து, தீயவை கழித்து, நல்லவை பற்றிப்போருகிறதொன்று உண்டாயிருந்தது. அவற்றினுடைய ஹேயதையையும், ஸர்வேஶ்வரனுடைய உபாதே3யதையையும் இவர்களுக்கு அறிவித்தால் அவற்றைவிட்டு இவனைப்பற்ற அடுக்குமென்று பார்த்து, ஸர்வேஶ்வரனுடைய நன்மையையும், இவர்கள் பற்றின விஷயங்கள் அல்பாஸ்தி2ரத்வாதி3தோ3ஷது3ஷ்டங்கள் என்னுமிடத்தையும், பற்றுமிடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும், பற்றுமிடத்தில் இன்று புதிதாகச் செய்ய வேண்டுவதொன்றில்லை – பழைய ஸம்ப3ந்த4த்தை உணர அமையும் என்னுமிடத்தையும், பற்றுவார்க்கு அநுஸந்தி4க்கப்படும் மந்த்ரம் இன்ன தென்னுமிடத்தையும், அவனுடைய ப4ஜநீயதையையும் அருளிச்செய்யா நின்றுகொண்டு, இதரவிஷய வைராக்3யபூர்வகமாக ப4க3வத்3ப4க்தியைப்பண்ணி ஆஶ்ரயியுங்கோள் என்று பரோபதே3ஶ ப்ரவ்ருத்தராகிறார்.
முதல் பாட்டு
*வீடுமின் முற்றவும்*
வீடுசெய்து* உம்முயிர்
வீடுடை யானிடை*
வீடு செய்ம்மினே.
ப – இதில், முதற்பாட்டில் ஸகலேதரபரித்யாக பூர்வகமாக பகவத்விஷயமான ஆத்மஸமர்ப்பணத்தை விதிக்கிறார்.
முற்றவும் – பஜநவிரோதியான ஸாத்யஸாதநங்களெல்லாவற்றையும், வீடுமின் – ஸவாஸநமாக விடுங்கோள்; (அவ்வளவில் நில்லாதே), வீடுசெய்து – அவற்றைவிட்டு, உம் உயிர் – உங்களுடைய ஆத்மாவை, வீடுடையானிடை – மோக்ஷநிர்வாஹகனான ஸ்வாமிபக்கலிலே, வீடு செய்ம்மின் – விடுதலைப் பண்ணுங்கோள். ‘வீடு இசைமினே’ என்றும் சொல்லுவர்.
ஈடு – முதற்பாட்டு. இதர விஷயங்களை விட்டு, உங்களுக்கு வகுத்த விஷயத்தைப் பற்றப் பாருங்கோள் என்கிறார்.
(வீடுமின்) “வீடுமின்” என்று ஒரு சொல்லாய்க் கிடக்கவுமாம்; விடுமின் என்றத்தை நீட்டி “வீடுமின்” என்று கிடக்கிறதாகவுமாம். முதலிலே “வீடுமின்” என்பானென்? என்னில், சிறு ப்ரஜை, கையிலே ஸர்ப்பத்தைப் பிடித்துக்கொண்டு கிடந்தால், பொகட்டுக்கொடு நிற்கச்சொல்லி, பின்னை “ஸர்ப்பம்” என்பாரைப்போலேயும், ஒருவன் க்3ருஹத்துக்குள்ளே கிடந்து உறங்காநிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரியாநின்றால் “புறப்பட்டுக்கொள்கிடாய்” என்று, பின்பு “நெருப்பு” என்பாரைப்போலேவும், முந்துற “விடுங்கோள்” என்கிறார். ஜந்மமரணங்களுக்கு நடுவேயிறே இவைதான் நோவுபடுகிறது. “த்யக்த்வா புத்ராம்ஶ்ச தா3ராம்ஶ்ச” என்றும், “பரித்யக்தா மயா லங்கா” என்றும், விடுகை முன்னாகவிறே முன்பு பற்றினவர்களும் பற்றிற்று.
“வீடுமின்” என்கிற பன்மையால் சொல்லுகிறது என்னென்னில்; ஒருவன் தா3ந்தனாய் வந்து நிற்க, அவனுக்கு உபதே3ஶிக்கிறாரன்றே; ஸம்ஸார வெக்காயம் எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே ஒருவரல்லா ஒருவருக்காகிலும் ருசி பிறக்குமோ என்று எல்லார்க்கும் உபதே3ஶிக்கிறார். எத்தை விடுவதென்னில் (முற்றவும்) சண்டா3ளர் இருப்பிடத்தை ப்3ராஹ்மணர்க்கு ஆக்கும்போது சில கூட்டிச் சில கழித்தன்றே கெள்ளுவது; அப்படியே, அஹங்கார மமகாரங்களாலே தூ3ஷிதமானவற்றிலே, சில கூட்டிக்கொள்ளவொண்ணாதே; ஆகையாலே கட்டடங்க விடுங்கோள் என்கிறார்.
(வீடுசெய்து) “வீடுமின் முற்றவும்” என்றாராகில், திரிய “வீடுசெய்து” என்கிற இதுக்குக் கருத்தென்னென்னில்; மேலொரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாகப் போருகையாலே, விடுகையாகிற பேற்றைப் பெற்று என்கிறபடி; ராஜபுத்ரன் அழுகுசிறையிலே கிடந்தால், முடிசூடி ராஜ்யம் பண்ணுவதிலும் சிறைவிடுகைதானே ப்ரயோஜநமாயிருக்குமிறே.
(உம்முயிர் வீடுடையானிடை) இதுக்குப் பலபடியாக அருளிச்செய்வர். “யஸ்யாத்மா ஶரீரம், யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம்” என்கிறபடியே, உம் உயிரையும், அதினுடைய வீட்டையும் உடையவன் என்னுதல்; உம் உயிரை வீடாக உடையவன் என்னுதல்; உம் உயிரை விடுமிடத்தில் – ஸமர்ப்பிக்குமிடத்தில், உடையான் பக்கலிலே என்னுதல்; வீடுடையான் – பரமபத3நிலயன் பக்கலிலே என்னுதல்.
(உம்முயிர்) அநித்யமான ஶரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகிறேனோ? நித்யமான ஆத்மவஸ்துவுக்கன்றோ நான் நன்மை பார்க்கச்சொல்லுகிறது; அது தானும் என்னுயிர்க்கோ? உம்முயிர்க்கன்றோ. (உடையானிடை) பொதுவிலே உடையவன் என்கிறார் – ருசிபிறந்து “அவன் ஆர்” என்றால் “வண்புகழ் நாரணன்” (1.2.10) என்பாராக. அவன் உடையவனாய் உங்கள் ஸத்தையை நோக்கிக்கொண்டு போராநிற்க, நீங்களும் “நான், என்னது” என்று அகலப்பாராதே, உங்களை அவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கப் பாருங்கோள். அவன் உடையவனானபின்பு அவனோடு அவிவாத3மே உங்களுக்கு வேண்டுவது.
(யம:) – ப்ராதே3ஶிகமான நியமநத்தை உடையவனை அன்று சொல்லுகிறது. (ப்ரப4வதி ஸம்யமநே மமாபி விஷ்ணு:) என்று அவன்தன்னையும் நியமிக்குமவனாயிற்று இவன். ‑(வைவஸ்வத:) – விவஸ்வானுடைய குலத்திலே பிறந்தவனென்னுதல்; ஆதி3த்யாந்தரவஸ்தி2தனென்னுதல். (ராஜா) – அவனைப்போலே “த3ஹ பச” என்கையன்றிக்கே எல்லார்க்கும் இனியனாயிருக்குமவனாயிற்று இவன். (ய:) – அந்தர்யாமி ப்3ராஹ்மணாதி3களில் ப்ரஸித்3தி4. (தவைஷ ஹ்ருதி3 ஸ்தி2த:) – அவன் எங்குற்றான்? என்ன; கண்டிலையோ? உன்னுடைய ஹ்ருத3யத்திலே புகுந்து ஆட்சியில் தொடர்ச்சி நன்றென்றிருக்கிறான். ஆனால் செய்யவேண்டுவதென்? என்னில் (தேந சேத3விவாத3ஸ் தே) – உடையவனாயிருக்கிறவனோடே உனக்கு அவிவாத3 முண்டாகில். இத்தால் பேறு என்? என்பாயோ, – (மா க3ங்கா3ம் மா குரூந் க3ம:) ஒரு தீர்த்த2ம் தேடிப்போதல், புண்யக்ஷேத்ரம் தேடிப்போதல் செய்ய வேண்டா; அஹங்காரமமகாரங்கள் கிடக்க ப்ராயஶ்சித்தம் பண்ணுகையாவது – நிஷித்3த4த்3ரவ்யத்தை உள்ளேவைத்து மெழுக்கூட்டினவோபாதியிறே. உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடியிறே ப்ராயஶ்சித்தமும்; உடையவன் ஸர்வேஶ்வரன்; த்3ரவ்யங்களில் ப்ரதா4நமான ஆத்மத்3ரவ்யத்தையிறே அபஹரித்தது; அபஹரித்த த்3ரவ்யத்தைப்பொகட்டு ப்ராயஶ்சித்தம் பண்ண வேணுமே. பொகடுகிற த்3ரவ்யம் தானாகையாலே, ப்ராயஶ்சித்தம் பண்ணுகைக்கு வேறு அதி4காரியுமில்லையே. ஆகையாலே நீங்களும் உடையவன் பக்கலிலே வீடுசெய்மினே. வீடு – ஸமர்ப்பிக்கை; அதாகிறது – இசைகை.
இரண்டாம் பாட்டு
மின்னின் நிலையில*
மன்னுயி ராக்கைகள்*
என்னு மிடத்து* இறை
உன்னுமின் நீரே.
ப – அநந்தரம், த்யாகபுத்தி ஸௌகர்யத்துக்காக த்யாஜ்யங்களுடைய நிலையாமையை அருளிச்செய்கிறார்.
உயிர் – ஆத்மா, மன் – (தனக்கு அபிமதமாகச்) செறிந்த, ஆக்கைகள் – பந்தகஶரீரங்கள், மின்னின் – மின்னிலுங்காட்டில், நிலை இல – தோன்றியே மாயக்கடவதான நிலையையும் உடையவல்லவா யிருக்கும்; என்னுமிடத்து – என்று சொல்லும்படியாதலில், நீரே – நீங்கள், இறை – ஸ்வாமியை, உன்னுமின் – மநநம்பண்ணுங்கோள். “மன்னுயிராக்கைகள்” என்று – ஆத்மாவுக்கு மாறிமாறிவரும் ஆக்கைகளென்றுமாம். “இறையுன்னுமின் நீரே” என்று – “நீரே நிலையாமையைச் சிறிது நிரூபியுங்கோள்” என்றுஞ் சொல்லுவர்; இது பூர்வோத்தரமான இரண்டுபாட்டிலுஞ் சொல்லுகிற பகவதாஶ்ரயண பர்யந்ததைக்குச் சேராது.
ஈடு – இரண்டாம் பாட்டு. ப4க3வத்3வ்யதிரிக்த விஷயங்களை விட்டு ஸர்வேஶ்வரனான எம்பெருமான் பக்கலிலே ஆத்மஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கோள் என்றார் முதற்பாட்டில்; ‘ப4க3வத்3வ்யதிரிக்த விஷயங்களை விடச்சொல்லாநின்றீர். அநாதி3காலம் வாஸனை பண்ணிப் போந்தவற்றை இப்போதாக விடப்போமோ?’ என்ன; ‘அவற்றினுடைய தோ3ஷத3ர்ஶநம் பண்ணவே விடலாம்’ என்கிறார் இதில்.
(மின்னின் நிலையில) மின்னோபாதியும் நிலையுடைத்தல்ல. அல்பமாய் அஸ்தி2ரமாயிருக்குமிறே அது. இதுவும் அஸ்தி2ரமாயிருக்கச்செய்தேயும் ஸ்தி2ர பு3த்3தி4யைப் பிறப்பித்து, அநர்த்த2த்தோடே தலைக்கட்டுவித்துவிடும். சந்த3நப்4ராந்தியாலே நாற்றம் குளிர்த்தி மென்மைகளைக்கொண்டு ஸர்ப்பத்தின் மேலே கையை வைத்துக்கொண்டு கிடந்து உறங்காநின்றால், ஒரு தா4ர்மிகன் “இது ஸர்ப்பங்கிடாய்” என்று அறிவித்தால், பின்னை அதில்நின்றும் கைவாங்கியல்லது நிற்கவொண்ணாதிறே. அப்படியே இதர விஷயங்களிலே போ4க்3யதாபு3த்3தி4 பண்ணிப்போருகிற இவனுக்கு, “இது அல்பம் அஸ்தி2ரம்” என்று இதினுடைய தோ3ஷத3ர்ஶநத்தைப் பண்ணுவிக்கவே விடலாயிருக்குமிறே.
(மன்னுயிராக்கைகள்) உயிர் மன்னுகிற ஆக்கைகள் என்னுதல், நித்யமான ஆத்மவஸ்து பரிக்3ரஹிக்கிற தே3ஹங்களென்னுதல். திறந்து கிடந்த வாசல்கள் தோறும் நுழைந்து திரியும் பதா3ர்த்த2ம்போலேயிறே இவன் திரிவது. ‘மகிழல கொன்றேபோல் மாறும் பல் யாக்கை’(முதல் திருவந்தாதி –49)யிறே; ஓரலகுதானே காணிஸ்தா2நத்திலே நிற்பது, கோடி ஸ்தா2நத்திலே நிற்பதாமிறே. அப்படியே ஓராத்மாதானே கர்மபே4த3த்தாலே தே3வாதி3தே3ஹபே4த3ங்களைப் பரிக்3ரஹிக்குமிறே. அன்றியே “உயிர்” என்கிற ஏகவசநம் ஜீவாநந்த்யத்துக்கு உபலக்ஷணமாய், ஆத்மாக்கள் பரிக்3ரஹிக்கிற ஶரீரங்கள் என்னவுமாம்.
(என்னுமிடத்து) ப4க3வத்3கு3ணங்களைப் பரிச்சே2தி3க்கிலும் பரிச்சே2தி3க்கப் போகாதாயிற்று தோ3ஷப்பரப்பு. இவ்விடையாட்டத்து என்றபடி. (இறை யுன்னுமின்) இதிலே அல்பத்தை ஆராயுங்கோள். (நீரே) இதுதனக்கு ஒரு ப்ரமாணாபேக்ஷையும் இல்லை. ஸத3ாசார்யோப3தேஶமும் வேண்டா.
மூன்றாம் பாட்டு
நீர்நும தென்றிவை*
வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின் உயிர்க்கு* அதன்
நேர்நிறை யில்லே.
ப – அநந்தரம், த்யாகப்ரகாரத்தை ஸங்க்ரஹேண அருளிச்செய்கிறார்.
நீர்நுமதென்றிவை – (ஆத்மாத்மீயங்களிலுண்டான) அஹங்கார•ம் மமகார•மாகிற இவற்றை, வேர்முதல்மாய்த்து – ருசிவாஸநைகளாகிற பக்கவேரோடே முதலறுத்து, இறை – ஸ்வாமியை, சேர்மின் – சேருங்கோள்; உயிர்க்கு – ஆத்மாவுக்கு, அதன்நேர் – அத்தோடொத்த, நிறை இல்லை – நிரப்பமில்லை.
ஈடு – மூன்றாம் பாட்டு. “தோ3ஷத3ர்ஶநம் பண்ணவே விடலாமென்றீர்; காலம் அநாதி3; மேல் அநந்தமாயிராநின்றது; பற்றின காலமெல்லாம் வேணுமிறே விடுகைக்கும்” என்ன; த்யாஜ்யாம்ஶத்தைச் சுருங்க அருளிச்செய்கிறார்; ஸம்ஸார பீ3ஜம் இன்னதென்றும் அதுக்கு பே4ஷஜம் இன்னதென்றும் அருளிச்செய்கிறார்.
(நீர்நுமது) அநர்த்த2கரமான அஹங்காரமமகாரங்கள். “நான், என்னது” என்னுமத்தைப் பிறர்க்கு உபதே3ஶிக்கும்போது “நீர் நுமது” என்றிறே சொல்லுவது; “நான், என்னது” என்று தம் வாக்காலே சொல்லமாட்டாரே நாக்கு வேமென்று.
“என் உடைமை” என்னுமது வேணுமாகில் தவிருகிறான்; “நான்”
என்னுமது தவிரும்படி என்னென்னில்; இவன் அஹம் என்றால் ராவணாதி3கள் நான் என்றாப்போலே பிறருடைய நானைத் தவிர்த்துக்கொண்டிறே இருப்பது. தே3ஹத்தில் அஹம்பு3த்3தி4 பண்ணிப்போருமது தவிரவேணுமே!
(இவை வேர்முதல் மாய்த்து) இவை வேர்முதல் மாய்க்கையாவது என்னென்னில்; இது அபுருஷார்த்த2மென்னும் ப்ரதிபத்தியைச் சொன்னபடி. இரண்டு வ்ருக்ஷம் தன்னிலே சேரநின்றால், ஒன்றிலே துளைத்துப் பெருங்காயத்தை வைக்க, சிலநாள் ஒன்றுபோலே நின்று, பின்னைப் பட்டுப் போகாநின்றதிறே. அப்படியே அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யமென்னும் ப்ரதிபத்தி உண்டாக தன்னடையே ஸம்ஸாரம் அடியற்று நிற்கும். “அநாத்மந்யாத்மபு3த்3தி4ர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி:| அவித்3யாதருஸம்பூ4தி பீ3ஜமேதத்3 த்3வித4ா ஸ்தி2தம்||” என்று ஸம்ஸார பீ3ஜமும் சொல்லி, “அச்யுதாஹம் தவாஸ்மீதி ஸைவ ஸம்ஸாரபே4ஷஜம்” என்று பரிஹாரமும் சொல்லிற்றிறே; ரக்ஷகனானவன் அவஸரப்ரதீக்ஷகனாயிருக்க, இவன்பக்கலிலே விலக்காமை உண்டானால் விரோதி4 போகைக்குத் தட்டில்லை என்கை.
(இறை சேர்மின்) அப்ராப்த விஷயங்களை விட்டு வகுத்த ஶேஷியானவனைப் பற்றப்பாருங்கோள். “சேர்மின்” என்கிறார் காணும், கெடுமரக்கலம் கரைசேர்ந்தாப்போலே இருக்கையாலே ஸம்ஸாரிக்கு ப4க3வத் ஸமாஶ்ரயணம்.
(உயிர்க்கு அதன்நேர்நிறை இல்லே) இத்தோடொத்த சீரியதில்லை என்னுதல்; நேரென்று – ஒப்பாய், நிறையென்று – மிகுதியாய், உயிர்க்கு இத்தோடொத்ததும் மிக்கதும் இல்லை என்றுமாம். ப்ரத2மத்தில் – (ஔஷத4ம்போலே ஸம்ஸாரிகளுக்கு ப4க3வத் ஸம்ப3ந்த4ம்) ஹிதமுமாய், உத3ர்க்கத்தில் ப்ரியமுமாயிருக்கும். நித்யமாய் ஜ்ஞாநாநந்த3 லக்ஷணமான வஸ்துவுக்கு இத்தோடொக்கும் சீரியதில்லை. “ஸம்ஸாரார்ணவமக்3நாநாம்” இத்யாதி3. “விஷ்ணுபோதம்” – இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு கடத்தும் ஓடம்.
நான்காம் பாட்டு
இல்லதும் உள்ளதும்*
அல்லது அவனுரு*
எல்லையில் அந்நலம்*
புல்குபற் றற்றே.
ப – அநந்தரம், இப்படி த்யாகபூர்வகமாக பஜநீயமான வஸ்துவினுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தை அருளிச்செய்கிறார்.
இல்லதும் உள்ளதும் – (ஸ்வரூப பரிணாமத்தாலே ஒருபடிப்பட்ட அஸ்தித்வம் இல்லாமையாலே அஸத்ய ஶப்தவாச்யமாயும் ஏகரூபத்வத்தாலே ஒருபடிப்பட்ட அஸ்தித்வத்தை யுடைத்தாகையாலே ஸத்யஶப்த வாச்யமாயுமுள்ள) அசித்தினுடையவும் சித்தினுடையவும்படி, அல்லது – அன்றியே, அவன்உரு – அவனுடைய ஸ்வரூபமானது, எல்லைஇல் – அபரிச்சிந்நமான, அந்நலம் – கீழ்ச்சொன்ன ஆநந்தத்தை வடிவாக உடைத்தாயிருக்கும்; பற்றற்றுப் புல்லு – (அத்தை, இதர விஷயங்களில்) பற்றற்று ஸ்நேஹயுக்தமாகச் செறி.
புல்லுதலாவது – ஸஸ்நேஹமான செறிவாகையாலே பஜநத்தினுடைய அத்யர்த்த ப்ரியத்வஞ் சொல்லுகிறது. ‘புல்கு’ என்றுஞ் சொல்லுவர். கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேஶித்து, இப்பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேஶிக்கிறது. த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க்கொண்டு பலவாதலாலும், ஸத்த்வாதி குண பேதத்தாலே ருச்யாதி விஶிஷ்டரான அதிகாரிகள் ஒன்றொடொன்று ஒவ்வாத புத்திபேதத்தையுடையராகையாலும், இதர த்யாகத்தில் பன்மையாலே உபதேஶிக்கவேணும்; பகவத்பஜநத்தில் புத்த்யைக்யத்தாலும், புருஷார்த்தைக்யத்தாலும், அதிகார்யைக்ய முண்டாகையாலே ஒருமையாலே உபதேஶிக்கலாம்.
ஈடு – நாலாம் பாட்டு. விடுகிறவைபோலே அபோ4க்3யமுமாய், ஸதோ3ஷமுமா யிராதென்று பற்றப்படுகிற விஷயத்தினுடைய போ4க்3யதையை அருளிச் செய்கிறார்.
(இல்லதும்) ப்ரமாணயோக்3யமல்லாமையால் வரும் துச்ச2த்வத்தைப் பற்றவாதல், ப்ரதீதிமாத்ரமாய் பா3த4யோக்3யமான மித்2யாத்வத்தைப்பற்றவாதல் “இல்லது” என்கிறதன்று; விநாஶித்வத்தைப்பற்றச் சொல்லுகிறது. (உள்ளதும்) இல்லாதான வஸ்துவில் வ்யாவ்ருத்தியைப்பற்ற “உள்ளது” என்கிறது; “யத3ஸ்தி யந்நாஸ்தி” என்றும், “ஸத்யஞ்சாந்ருதஞ்ச” என்றும் சொல்லக்கடவதிறே சித3சித்துக்களை. அன்றியே, ஆத்மாவுக்கு இருப்பிடமான ஶரீரத்தின்படியும், அத்தை இருப்பிடமாகவுடைய ஆத்மாவின்படியுமல்ல என்றுமாம். (அல்லதவனுரு) நஶ்வரமாயிருக்கிற அசித்தின் படியுமன்று; அசித்ஸம்ஸர்க்க3த்தாலே “அஹம் ஸுகி2, அஹம் து3:க்கீ2” என்கிற சேதநன்படியுமன்று அவன் ஸ்வரூபம்.
ஆனால் எங்ஙனேயிருக்கும்? என்னில் (எல்லையில் அந்நலம்) “ஆநந்தமய:” என்றும், “உணர் •ழுநலம்” (1-1-2) என்றும், “ஒடியாவின்பப் பெருமையோன்” (8-8-2) என்றும், “சுடர்ஞானவின்பம்” (10-10-10) என்றும், “ஸமஸ்த கல்யாணகு3ணாத்மகோஸௌ” என்றும் சொல்லலாம்படி இருக்கும். (புல்கு) அங்க3நாபரிஷ்வங்க3ம்போலே போ4க3ரூபமாயிருக்குமிறே கு3ணஜ்ஞாந முடையவனுக்கு கு3ணாதி4க விஷயாநுப4வம். (பற்றற்றே) அது செய்யுமிடத்தில் இருகரையனாகையன்றிக்கே புறம்புள்ள பற்று அற்றே புல்கு. ‘பற்றிலார் பற்ற நின்றா’னிறே (7-2-7) அவன் ; ஆகையாலே பற்றற்றே புல்கவேணும்.
ஐந்தாம் பாட்டு
அற்றது பற்றெனில்*
உற்றது வீடுயிர்*
செற்றது மன்னுறில்*
அற்றிறை பற்றே.
ப – அநந்தரம், பஜநீயனுடைய அதிஶயிதபுருஷார்த்தத்வத்தை அருளிச்செய்கிறார்.
பற்று – (புறம்புள்ள) பற்று, அற்றதெனில் – அற்றதென்றபோதே, உயிர் – உயிரானது, வீடு – மோக்ஷத்தை, உற்றது – உற்றதாம்; அது – அந்த ஆத்மப்ராப்திமோக்ஷத்தை, செற்று – செறுத்து, மன்னுறில் – நிலைநிற்கும்படி (பகவத்விஷயத்தைக் கிட்டப்) பார்க்கில், அற்று – இதர ஸங்கத்தையறுத்து, இறை – ஈஶ்வரனை, பற்று – ஆஶ்ரயி.
பற்றற்றதென்னில் உயிர் வீட்டையுற்ற தென்று ஸாமாந்யத்தாலே சொல்லி, அந்தப்பற்றைச் செற்று நித்யபுருஷார்த்தத்தைக் கிட்டில் அறுதியுடையையாய் இறையை ஆஶ்ரயி என்றுமாம்.
ஈடு – அஞ்சாம் பாட்டு. பற்றுமிடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும் அருளிச்செய்கிறார்; இந்த்3ரபத3த்தைக் கோலுமவன் இவ்வருகுண்டான ஐஶ்வர்யத்தைக் கோலான்; ப்3ரஹ்மபத3த்தை ஆசைப்படுமவன் இவ்வருகுண்டான இந்த்ரபதத்திற் கண்வையான்; ஆத்மாநுபவத்தை ஆசைப்படுமவன் ஐஶ்வர்யாதி3களிற் கண்வையான்; ஸமஸ்த கல்யாணகு3ணாத்மகனாய், நித்யமங்க3ளவிக்ரஹயுக்தனா யிருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண்வையான். ஆக, இங்ஙன் வரும் அந்தராய பரிஹாரத்தை அருளிச்செய்கிறார்.
(அற்றது பற்றெனில்) ப்ரக்ருதிப்ராக்ருதங்களிலுண்டான பற்று அற்றது என்னுமளவிலே. (உற்றது வீடுயிர்) ஆத்மா மோக்ஷத்தை ப்ராபித்தது. விலக்ஷண ஜ்ஞாநத்தையும் ஸ்வரூபத்தையுமுடைய வஸ்துவுக்குத் திரோதா4நத்தைப் பண்ணுகிறது அசித்ஸம்ஸர்க்க3மிறே; யோகா3ப்4யாஸத்தாலே கழிந்தவாறே ஸ்வரூபம் ப்ரகாஶிக்கும்; அது நித்யமாய், ஜ்ஞாநாநந்த3 லக்ஷணமாயிருக்கையாலே “இதுதன்னையே அநுப4விக்க அமையாதோ?” என்று தன்பக்கலிலே கால்தாழப் பண்ணும். (செற்றது) அத்தைச்செற்று – அத்தை முக2ம் சிதறப் புடைத்து. (மன்னுறில்) மன்னவுறில், தன்னைப்பற்றினால் “இன்னமும் அதுக்கு அவ்வருகே ஒரு அநுபவமுண்டு” என்றிருக்க வேண்டாதபடியான நிலைநின்ற புருஷார்த்த2த்தைப் பற்றப்பார்க்கில்.
(அற்றிறை பற்றே) ஆஶ்ரயண காலத்திலே அவனுக்கு என்று அத்4யவஸித்து, ஶேஷியான அவனைப் பற்றப் பாருங்கோள். அன்றியே, விப4க்தியை மாறாடி, இறையைப்பற்றி இத்தை அறப் பார் என்னுதல். “மாற்பால் மனஞ்சூழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு” (மூன்றாம் திருவந்தாதி – 14) என்னுமாபோலே.
ஆறாம் பாட்டு
பற்றிலன் ஈசனும்*
முற்றவும் நின்றனன்*
பற்றிலை யாய்* அவன்
முற்றி லடங்கே.
ப – அநந்தரம், பஜநீயனுடைய ஸர்வஸமத்வத்தை அருளிச்செய்கிறார்.
ஈசனும் – ஸர்வேஶ்வரனா யிருக்கச்செய்தேயும், பற்றிலன் – (பூர்வாஶ்ரிதரான மஹிஷீ பரிஜநாதிகளில்) ஸங்கமற்று, முற்றவும் – (அபூர்வாஶ்ரிதரான நம்பக்கலிலே) தாரகத்வ போஷகத்வ போக்யத்வாதிக ளெல்லாமாக, நின்றனன் – நி?ைல நின்றான்; பற்றிலையாய் – (நீயும்) ஸாம்ஸாரிகஸங்கத்தைவிட்டு, அவன் முற்றில் – அவனுடைய (தாரகத்வாதி) ஸமஸ்தஸ்வபாவங்களிலும், அடங்கு – அந்தர்ப்பவிக்கப்பார். அன்றியே, ஸர்வேஶ்வரனாயிருக்கச் செய்தேயும் நம்பக்கல் ஸங்கத்திலே உளனாய் “ஸமோஹம் ஸர்வபூ4தேஷு” என்று ஆஶ்ரயணீயத்வத்தில் தாரதம்யமற்று நின்றான்; நீயும் அவன்பக்கலில் ஸங்கத்திலே நிலையுடையையாய் அவனுடைய ஸ்வரூப ரூபகுண விபூத்யாதி ஸமஸ்த ப்ரகாராநுபவத்திலே அந்தர்ப்பவி என்னவுமாம்.
ஈடு – ஆறாம் பாட்டு. பற்றுமிடத்தில் வரும் அந்தராயபரிஹாரம் சொன்னார் கீழ்; நீர் பரிஹாரம் சொல்லுகைக்கு அவாப்தஸமஸ்தகாமனாய், ஶேஷியாய் இருக்கிற அவன்தான் நமக்குக் கைப்புகுந்தானோ? என்ன; அவன்பக்கல் திருத்த வேண்டுவதொன்றில்லை, அவன் ஸங்க3ஸ்வபா4வன் என்கிறார்.
(பற்றிலன்) பற்றுண்டு – ஸங்க3ம். அத்தை வாஸஸ்தா2நமாக உடையவன். பற்றிலான் என்னுமத்தை “பற்றிலன்” என்று குறைத்துக்கிடக்கிறது. “இன்னான் இங்குண்டோ?” என்றால், “இங்கில்லையவன், அகத்திலான்” என்னக்கடவதிறே. (ஈசனும்) ஈஶ்வரத்வம் கழற்றவொண்ணாமையாலே கிடக்குமித்தனை. இஸ்ஸங்க3ம் கு3ணமாகைக்காகக் கிடக்கிறது. ப4யப்படுகைக்கு உடலன்று. பெரியவன் எளிமையிறே கு3ணமாவது.
“ப்ரஸாத3பரமௌ நாதெ2ள” – தண்ணளியே இவர்களுக்கு விஞ்சி யிருப்பது; மேன்மை கழற்றவொண்ணாமையாலே கிடந்த இத்தனை. இரண்டும் அவ்வாஶ்ரயக3தமாயிருக்க, தண்ணளியே உள்ளதென்றறிந்தபடி என்னென்னில், “மம கே3ஹமுபாக3தௌ” – ஶேஷிகளாயிருப்பார்க்கு ஶேஷபூ4தரை அழைத்துக் கார்யங்கொள்ளலாயிருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள் நானிருந்த முடுக்குத் தெருத்தேடி வந்தபோதே ப்ரஸாத3மே விஞ்சியிருக்கும் என்னுமிடம் தெரிந்ததில்லையோ? “த4ந்யோஹம்” – என்றுமொக்க ஸஞ்சரிக்கிற வழியிலே நிதி4யெடுப்பாரைப்போலே. “அர்ச்சயிஷ்யாமி” – என்னுடைய ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயித்து அழித்துக்கெடுத்து ஜீவிக்கப்பாராநின்றேன். “இத்யாஹ” – ‘சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி’ (திருவிருத்தம்-21) நிற்பார் சொல்லக்கடவ பாசுரத்தை இவன் சொல்லுவதே! என்று ருஷி கொண்டாடுகிறான். “மால்யோபஜீவந:” – பூவில் கண்வைத்துத் தொடுக்கில் சாபலம் பிறக்குமென்று கண்ணை மாறவைத்துத் தொடுத்து, பூ விற்று ஜீவிக்கும் அத்தனை புல்லியன் சொல்லும் வார்த்தையே ஈது! என்கிறார்.
(முற்றவும் நின்றனன்) “ஸமோஹம் ஸர்வபூ4தேஷு” என்கிறபடியே ஆஶ்ரயணீயத்வே ஸமனாய் நின்றான். இத்தலை இருந்தபடி இருக்க, தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை. (பற்றிலையாய்) நீயும் பற்றிலையாய் – நீயும் பற்றையுடையையாய் – ஸங்க3த்தையுடையையாய். (அவன் முற்றிலடங்கே) “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்கிறபடியே அவனுடைய எல்லாக் கைங்கர்யத்திலும் அந்வயி.
அத2வா, ப4ட்டர் அருளிச்செய்யும்படி :- (பற்றிலன் ஈசனும்) “வாஸுதே3வோஸி பூர்ண:” என்கிறபடியே ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனாய், ஜ்ஞாநாநந்தா3மல ஸ்வரூபனாய், திரைமாறின கடல்போலே, ஈஶிதவ்யரான நித்யஸூரிகளை உடையனாய், பரமபத3த்திலே எழுந்தருளியிருக்கிறவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவனல்லன். அவர்கள்பக்கல் பற்றுடையவனன்றிக்கே யிருந்தால் குறைபட்டிரானோ? என்னில் (முற்றவும் நின்றனன்) அவர்களெல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று ஆஶ்ரயிக்கிற இவனாலேயாம்படி நின்றான்; “த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம” என்னுமாபோலே, இன்று ஆஶ்ரயித்ததொரு திர்யக்குக்கு ஒருவாட்டம் வரில் நித்யாஶ்ரிதையான பிராட்டியாலும் கார்யமில்லை. அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்ஸல்யத்தாலே முன்னணைக் கன்றையும் கொம்பிலே கொள்ளுமாபோலே.
(பற்றிலையாய்) விடவொண்ணாதாரை, நீ ஒருதலையாக விட்டான் அவன். அவன் ஒருதலையானால் விடலாமவற்றை விடத் தட்டென் உனக்கு? (அவன் முற்றிலடங்கே) அவனையே எல்லாமாகப் பற்றப் பார்; “வாஸுதே3வஸ் ஸர்வம்” என்கிறபடியே. “மாதா பிதா ப்4ராதா நிவாஸ: ஶரணம் ஸுஹ்ருத்3 க3திர் நாராயண:”, “ஏகைகப2லலாபா4ய ஸர்வலாபா4ய கேஶவ:”.
ஏழாம் பாட்டு
அடங்கெழில் சம்பத்து*
அடங்கக்கண்டு* ஈசன்
அடங்கெழில் அஃதென்று*
அடங்குக உள்ளே.
ப – அநந்தரம், அவன் விபூதிமஹத்தையைக் கண்டு இறாயாதே,
அவனுக்கு அத்தோடு உண்டான ஸம்பந்தத்தை அநுஸந்தித்து அதினுள்ளே சொருகப்பா ரென்கிறார்.
அடங்கெழில் – கட்டடங்க அழகிதான, சம்பத்து – ஸம்பத்தை, அடங்க – ஒன்றொழியாமல், கண்டு – அநுஸந்தித்து, ‘ஈசன் – ஈஶ்வரனுக்கு, அஃது – அது, அடங்கெழில் – அடங்கெழிலாய் அதிஶயகரமான ஶேஷமாயிருக்கும்,’ என்று – என்று ஸம்பந்தத்தையறிந்து, உள்ளே – அதினுள்ளே, அடங்குக – (விபூத்யேகதேஶமாகச்) சொருகு. ஸம்பந்தஜ்ஞாநமுண்டானால் உள்ளே அடங்கலாமிறே.
ஈடு – ஏழாம் பாட்டு. ஸங்க3ஸ்வபா4வன் என்றார் கீழ்; அவன் ஸங்க3ஸ்வபா4வனானாலும் அபரிச்சி2ந்நோப4யவித4மஹாவிபூ4தியை உடையனாயிருந்தான் அவன்; இவன் அதிக்ஷுத்3ரனாய் க்ஷுத்3ரோபகரணனாயிருந்தான்; ஆனபின்பு அவனை இவனாலே கிட்டலாயிருந்ததோ? கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவின்றிக்கேயிருக்கத் திரைமேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறதில்லையோ? அப்படியே அவனுடைய ஐஶ்வர்யதரங்க3மானது இவனைத் தள்ளாதோ? என்னில்; இந்த ஐஶ்வர்யமெல்லாம் நமக்கு வகுத்த ஶேஷியானவனுடைய ஐஶ்வர்யம் என்று அநுஸந்தி4க்கவே, தானும் அதுவாய் அந்வயிக்கலாமிறே; ஆனபின்பு, ஸம்ப3ந்த4ஜ்ஞாநமே வேண்டுவது என்கிறார்.
ஒரு வ்யாபாரி, ஸ்த்ரீ க3ர்ப்பி4ணியான ஸமயத்திலே, அர்த்தா2ர்ஜநம் பண்ணவேணுமென்று போவது; அவளும் பிள்ளைபெற்று, அவனும் பக்வனாய்த் தனக்கும் தமப்பனாருடைய வ்யாபாரமே யாத்ரையாய், அவனும் போய், இருவரும் சரக்குப் பிடித்துக்கொண்டு வந்து ஒரு பந்தலிலே தங்குவது; அது இருவருக்கும் இடம் போராமையாலே அம்பறுத்து எய்யவேண்டும்படி விவாத3ம் ப்ரஸ்துதமான ஸமயத்திலே, இருவரையும் அறிவானொருவன் வந்து “இவன் உன் பிதா; நீ அவன் புத்ரன்” என்று அறிவித்தால், கீழ் இழந்த நாளைக்கு ஶோகித்து, இருவர் சரக்குமொன்றாய், அவன் ரக்ஷகனாய், இவன் ரக்ஷ்யமாய் அந்வயித்துவிடுமிறே.
“ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே” – ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தே3ஹமாகிற வ்ருக்ஷத்தைப்பற்றி இருந்தால், ஒருவன் கர்மப2லங்களை பு4ஜியா நிற்கும்; ஒருவன் பு4ஜிப்பித்து விளங்காநிற்கும். அவன் நியாமகன்; நாம் நியாம்யனென்னும் முறையறியவே பொருந்தலாமிறே.
ராஜபுத்ரன் ஒரு உத்3யாநத்தைக் கண்டு புக அஞ்சினால், “உன் தமப்பனது காண்” என்னவே, நினைத்தபடி புக்குப் பரிமாறலாமிறே; ஆனபின்பு, ததீ3ய மென்னும் ப்ரதிபத்தியே வேண்டுவது; தானும் அதுக்குள்ளே ஒருவனாய் அந்வயிக்கலாம் என்கிறார்.
(அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு) போ4க3பூமியாய் இருக்கும் நித்யவிபூ4தி; கர்மநிப3ந்த4நமாக அவனாலே நியாம்யமாய் இருக்கும் இவ்விபூ4தி; அதில் ததீ3யமென்று அநுஸந்தி4க்கப் புக்கவாறே, கர்மநிப3ந்த4நமான ஆகாரம் தோற்றாதே ததீ3யத்வாகாரமேயிறே தோற்றுவது. (அடங்கெழில் இத்யாதி3) கட்டடங்க நன்றான ஸம்பத்தை எல்லாங் கண்டு, நமக்கு வகுத்த ஸ்வாமியானவனுடைய ஸம்பத்து இதெல்லாம் என்று அநுஸந்தி4த்து, அவ்விபூ4திக்குள்ளே தானும் ஒருவனாய் அந்வயிக்கப்பார்ப்பது; அப்போது ஶேஷிக்கு அதிஶயத்தை விளைத்தானாகலாமிறே. ஶேஷபூ4தனுடைய ஸ்வரூப ஸித்3தி4, ஶேஷிபக்கல் கிஞ்சித்காரத்தாலேயாயிருக்குமே.
(அடங்குக உள்ளே) ஸ்வஸ்வாமிபா4வ ஸம்ப3ந்த4 ஜ்ஞாநமடியாகத் தானும் அவன் விபூ4தியிலே ஒருவனாய் அந்வயிக்கலாமிறே; ஸமுத்3ரம் அபரிச்சி2ந்நமானாலும் அதினுள்ளில் ஸத்வங்களுக்கு வேண்டினபடி புகலாமிறே; அதுபோலே ஸம்ப3ந்த4 ஜ்ஞாநமடியாகக் கிட்டலாம்; ஸம்ப3ந்த4ஜ்ஞாநமில்லாத த்ருணத்தையிறே கடல் கரையிலே ஏறத் தள்ளுவது. ஸம்ப3ந்த4ஜ்ஞாநம் பிறப்பிக்கையிறே க4டகக்ருத்யம்.
எட்டாம் பாட்டு
உள்ள முரைசெயல்*
உள்ளஇம் மூன்றையும்*
உள்ளிக் கெடுத்து* இறை
யுள்ளி லொடுங்கே.
ப – அநந்தரம், பஜநப்ரகாரத்தை அருளிச்செய்கிறார்.
உள்ளம் – (மநநாதி3கரணமான) மநஸ்ஸும், உரை – (ஸ்துத்யாதி3கரணமான) வாக்கும், செயல் – (ப்ரணாமாதி3கரணமான) காயமும், உள்ள – (நமக்கென்ன) அடியிலேயுண்டாய், இம்மூன்றையும் – ஸந்நிஹிதமான இம்மூன்றையும், உள்ளி – (இவற்றினுடைய ஸ்ருஷ்டி ப்ரயோஜநத்தை) நிரூபித்து, கெடுத்து – (இதரவிஷயாந்வயத்தைத்) தவிர்த்து, இறையுள்ளில் – ஸ்வாமியான ப்ராப்த விஷயத்திலே, ஒடுங்கு – பரதந்த்ரனாய் ஒதுங்கு. ‘உரை, செயல்’ என்று – வ்ருத்திகளையிட்டு தத்தத்கரணங்களை லக்ஷிக்கிறது. ‘உள்ளிக்கெடுத்து’ என்று – இவற்றினுடைய பூர்வவ்ருத்தத்தை ஆராய்ந்து, அந்யபரதையைத் தவிர்த்து என்றுமாம்.
ஈடு – எட்டாம் பாட்டு. அவனுக்கு விபூ4தியாய் அந்வயித்தால், பின்னை தானும், தனக்கென்னச் சில கரணங்களும் என்று உண்டாய், ப4ஜித்தானாகை அரிதாயிருந்ததே! என்ன; ப4ஜநப்ரகாரத்தை அருளிச்செய்கிறார்.
(உள்ளமுரை செயல்) பா3ஹ்யவிஷயங்களிலே ப்ரவணமாகிற மநஸ்ஸை ப்ரத்யக்காக்கினவாறே ப4க3வத3நுஸந்தா4நத்துக்கு உடலாமே. அவ்வநுஸந்தா4நம் வழிந்து “பொங்கேழ் புகழ்கள் வாயவாய்” (8-10-4) என்கிறபடியே சொல்லாய்ப் புறப்படுகைக்கு உடலாமிறே வாக்கு; “கு3ணைர்தா3ஸ்ய முபாக3த:” என்கிறபடியே திருவடிகளிலே விழுந்து ஸகல கைங்கர்யங்களும் பண்ணுகைக்கு உடலாயிருக்குமிறே உடம்பு. (உள்ள இம்மூன்றையும்) இவை தான் இன்றாக ஸம்பாதி3க்க வேண்டாதே, ஶேஷியான தான் இவற்றை உண்டாக்கி வைத்தானே; இவையும் வேறே சிலவும் தேடவேண்டாவே; இங்கே “தா•ளரே” (இரண்டாம் திருவந்தாதி – 21) “நாவாயிலுண்டே” (முதல் திருவந்தாதி – 95) இத்யாதி3களை யோஜித்துக்கொள்வது; உள்ள இம்மூன்றையும் உள்ளுவது. “இவைதான் எதுக்காகக் கண்டது? இவை தான் இப்போது இருக்கிறபடியென்?” என்று ஆராய்ந்து பார்த்தால், அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாயிருக்கும். (கெடுத்து) கெடுப்பது – அவற்றினின்றும் மீட்பது. (இறையுள்ளில் ஒடுங்கே) பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போலே ப்ராப்த விஷயத்திலே ஆக்கப் பார்ப்பது. ஒடுங்கென்னுதல்; ஒடுக்கென்னுதல்; மெல்லினமான ஙகரத்தை வல்லொற்றாக்கி ஒடுக்கென்று கிடக்கிறதாதல்.
(கீழ் எடுத்த பாட்டுக்களுக்கு வ்யாக்யாநம் பண்ணுகிறார்.) (தாமுளரே) தந்தாமைத் தேடவேண்டாவே. (தம்முள்ளம் உள்ளுளதே) “எனக்குச் சற்றுப்போது ப4க3வத்3விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சு தரவேணும்” என்று தனிசு வாங்கவேண்டாவே; தாமுளரானால் உண்டான நெஞ்சுமுண்டே, (தாமரையின் பூவுளதே) கைக்கெட்டும் பூவுண்டாக்கி வைத்தானே. “கள்ளார் துழாய்” (பெரியதிருமொழி 11-7-6) என்று அங்குத்தைக்கு அஸாதா4ரணமான திருத்துழாயைச் சொல்லி, அத்தோடக்க “கணவலர்” என்று – காக்கணத்தையும், ஆம்பலையும் சொல்லுகையாலே அங்குத்தைக்கு ஆகாததில்லை என்றபடி; ஆகையாலே தாமரையின் பூவுளதே என்றது – எல்லாப் புஷ்பங்களுக்கும் உபலக்ஷணமான இத்தனை. (ஏத்தும் பொழுதுண்டே) காலத்தை உண்டாக்கி வைத்தானே; அது தனிசு வாங்கவேண்டாவே. (வாமன்) இதெல்லம் வேண்டுவது அவன் அவனல்லவாகிலன்றோ! தன் உடைமை பெறுகைக்குத் தான் இரப்பாளனாவான் ஒருவனாயிருந்தானே. (திருமருவுதாள்) அவனுடைய ஐஶ்வர்ய ப்ரகாஶகமான திருவடிகளென்னுதல்; ‘வடிவிணையில்லா மலர்கள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி’ (9-2-10) என்னுதல்.
(மருவுசென்னியரே) மருவுகை – சேருகை. இப்படிப்பட்ட திருவடிகளிலே சேருகைக்குத் தலை ஆக்கிவைத்தானே. (வாமன்) ‘அமரர் சென்னிப்பூ’ (திருக்குறுந்தாண்டகம்-6)வான திருவடிகளை நித்யஸம்ஸாரிகள் தலையிலும் வைப்பான் ஒருவனாய் இருந்தானே. இப்படி இருக்கச்செய்தே (செவ்வே அருநரகம் சேர்வதரிது) இவர்கள் ஸம்ஸாரத்துக்கு விலக்கடி தேடிக்கொண்டு போகிறபடி எங்ஙனேயோ?
(நாவாயிலுண்டே) இது முன்னம் புறம்பு தேடிப் போகவேண்டாவே. (நமோ நாரணா என்று ஓவாதுரைக்கும் உரையுண்டே) ஸஹஸ்ராக்ஷரீ மாலாமந்த்ரம் போலே யிருக்கையன்றிக்கே, எட்டெழுத்தாய், நடுவே விச்சே3தி3யாதே சொல்லலாம் திருநாமம் உண்டாக்கி வைத்தானே. (மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே) புநராவ்ருத்தியில்லாத ப்ராப்யத்தை உண்டாக்கி வைத்தானே. (என்னொருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்) இங்ஙனே இருந்தபின்பு இவர் தண்ணிய வழிதேடிப் போகிறபடி எங்ஙனேயோ?
ஒன்பதாம் பாட்டு
ஒடுங்க அவன்கண்*
ஒடுங்கலும் எல்லாம்*
விடும்பின்னும் ஆக்கை*
விடும்பொழு தெண்ணே.
ப – அநந்தரம், பஜநபலமான விரோதிநிவ்ருத்தியை அருளிச்செய்கிறார்.
அவன்கண் – ஸ்வாமியானவனிடத்திலே, ஒடுங்க – (அப்ருதக்ஸித்த ப்ரகாரதயா) அந்தர்பவிக்கவே, ஒடுங்கலும் – (ஆத்மாவினுடைய ஜ்ஞாநாதிஸ்வபாவ) ஸங்கோசமும், எல்லாம் – (தத்தேதுவான) அவித்யாதிகளும் எல்லாம், விடும் – விட்டுக்கழியும்; பின்னும் – (“க்ருதக்ருத்யா: ப்ரதீக்ஷந்தே” என்கிறபடியே) பின்?ைனயும், ஆக்கை – ஆரப்த ஶரீரஶேஷத்தினுடைய, விடும்பொழுது – •டிவை, எண் – பார்த்திரு. ஆக்கைவிடும்பொழுது எண்ணவேணுமோ? என்றுமாம். அன்றியே, ‘பஜநத்துக்கு அங்கமென்று நினைத்து, பின்னையும் அந்திமதஶையிலே நினை’ என்று அந்திமஸ்ம்ருதியை விதிக்கிற தென்பாருமுளர்.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. ஸம்ப3ந்த4ஜ்ஞாநம் உண்டாகவே தன் சிறுமை பார்த்து அகல வேண்டாவென்றும், ப4ஜநமாவதுதான், அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பாக்குகை என்றும் சொல்லி நின்றார் கீழ் இரண்டு பாட்டாலே; இது தன்னரசுநாடாய் ப்ராப்தவிஷயம் அவனல்லாமை ப4ஜியாதிருக்கிறோமோ? ப4ஜநவிரோதி4கள் கனக்கவுண்டாகையன்றோ நாங்கள் ப4ஜியா தொழிகிறது என்ன; நீங்கள் அவனைக் கிட்டவே அவையடைய விட்டுபோ மென்கிறார் இதில்.
(ஒடுங்க அவன்கண்) ப்ரகாரபூ4தரான நீங்கள் ப்ரகாரியான அவன் பக்கலிலே சென்றுசேர. (ஒடுங்கலுமெல்லாம் விடும்) ப்ராப்தத்தைச் செய்ய, அப்ராப்தமானவை எல்லாம் தன்னடையே விட்டுப்போம். ஸ்வரூபாநுரூபமானத்தைச் செய்யவே, ஸ்வரூப விரோதி4களடங்க விட்டுப்போம். “ஒடுங்கல்” என்கையாலே – இது ஸ்வரூபத்தில் கிடப்பதொன்றல்ல, ஸ்வரூப விரோதி4யாய்க் கொண்டு வந்தேறி என்னுமிடம் தோற்றுகிறது; அன்றிக்கே, “ஒடுங்கல்” என்கிற மெல்லொற்றை ஒடுக்கலென்று வல்லொற்றாக்கி இவனுக்கு ஸங்கோசத்தைப் பிறப்பிக்குமவை என்னுதல். (எல்லாம் விடும்) அவித்3யாகர்மவாஸநாருசிகள் ஸவாஸநமாக விட்டுக் கழியும். “வானோ மறிகடலோ” (பெரிய திருவந்தாதி – 54) இத்யாதி3.
“மாடே வரப்பெறுவராமென்றே வல்வினையார்” (பெரிய திருவந்தாதி – 59) இத்யாதி3களை யோஜித்துக் கொள்வது.
இவை போமாகில் பின் இவனுக்குக் கர்த்தவ்யம் ஏதென்னில் (பின்னு மாக்கை விடும்பொழுதெண்ணே) “உபாஸநத்தால் வந்த ராஜகுலங்கொண்டு ப2லம் தப்பாது; தன்னடையே வருகிறது” என்று ஆறியிருக்கையன்றிக்கே, “ஹேதுவான அவித்3யாதி3கள் கழிந்ததாகில் அவற்றின் கார்யமான இஶ்ஶரீரமும் ஒருபடி போய், தண்ணீர்த்துரும்பற்று ப்ராப்தி கைப்புகுந்ததாவது எப்போதோ?” என்று அதுக்கு விரல்முடக்கியிருக்குமித்தனை; காமிநியானவள் தன்னுடம்பில் அழுக்குக்கழற்றி, போ4க3த்திலே அந்வயிக்க அவஸரப்ரதீக்ஷையாய் இருக்குமா போலே, ஶரீராவஸாநத்தைப் பார்த்துக்கொண்டிருக்கை; “கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்” (நாச்சியார் திருமொழி 8-7) என்று அழுக்குக்கழற்றி ஒப்பித்துப் பார்த்திருந்தாளிறே; அப்படி “அழுக்குடம்பு” (திருவிருத்தம் – 1) என்கிற இவ்வழுக்குக் கழன்று, ப்ராப்யம் கைபுகுந்ததாவது எப்போதோ! என்று பார்த்திருக்குமித்தனை; “ம்ருத்யும் ப்ரியமிவாதிதி2ம்” என்றிருக்குமித்தனை; “க்ருதக்ருத்யா:” க்ருதக்ருத்யராகிறார் – ஸித்3த4ஸாத4நபரிக்3ரஹம் பண்ணினவர்களிறே. “விது3: க்ருஷ்ணம் ப்3ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜந் ஸர்வயஜ்ஞாஸ் ஸமாப்தா:”- அவனை உள்ளபடி அறிந்தவர்களிறே எல்லாவற்றையும் அநுஷ்டி2த்துத் தலைக்கட்டினார்களாகிறார். ஓர் அயநத்தினன்று குன்றத்துச் சீயர் எம்பெருமானார் ஸ்ரீபாத3த்திலே புக, அவருடைய சிறுபேரைச்சொல்லி “சிங்கப்பிரான்! இன்று அயநங்கிடாய்” என்ன, திருவுள்ளத்திலே ஓடுகிறது இன்னதென்று அறியாமையாலே அவர் பேசாதிருக்க, “இத்தே3ஹ ஸமநந்தரத்திலே ப்ராப்தி கண்ணழிவற்ற பின்பு, நடுவு விரோதி4யாய்ச் செல்லுகிற நாளிலே ஓராண்டு கழியப்பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்ததில்லையோ?” என்று அருளிச்செய்தார். அன்றியே, எம்பார் ஓர் உருவிலே (பின்னுமாக்கை விடும்பொழுதெண்ணே) என்று – இங்ஙனே காரணமானது கழிந்தபோதே கார்யமும் தன்னடையே கழிந்ததேயன்றோ; ப்ராப்தியும் இனிக் கைபுகுந்ததேயன்றோ; இனி, சிந்தாவிஷயமுண்டோ? – என்று அருளிச்செய்தார்.
பத்தாம் பாட்டு
*எண்பெருக்கு அந்நலத்து*
ஒண்பொருள் ஈறில*
வண்புகழ் நாரணன்*
திண்கழல் சேரே.
ப – அநந்தரம், பஜநீயனுடைய ப்ராப்யத்வபூர்த்தியை அருளிச்செய்கிறார்.
(ஆநந்தவல்லியிற் சொல்லுகிற கணக்கிலே), எண் – எண்ணுக்கு, பெருக்கு – அவ்வருகே பெருகியிருப்பதாய், அந்நலத்து – (அந்தப்ரஹ்மாநந்தத்தோடு ஸமாநமான) ஆநந்தாதி குணத்தையுடைய, ஒண்பொருள் – (அகாமஹதஶ்ரோத்ரியஶப்தவாச்யமாய் ஆவிர்ப்பூதஸ்வரூபமான) விலக்ஷணாத்மவர்க்கமென்ன, ஈறில – (அஸங்க்யேயமாய்) அபரிச்சிந்நமான, வண்புகழ் – கல்யாணகுணங்களென்ன, (இவற்றை யுடையனாகையாலே), நாரணன் – நாராயணஶப்தவாச்யனான ஸ்வாமியினுடைய, திண் – (ஆஶ்ரிதரைக்கைவிடாதபடி) ஸ்திரமான, கழல் – திருவடிகளை, சேர் – ஆஶ்ரயி. விலக்ஷணகுணவிபூதி விஶிஷ்டனான நாராயணன் திருவடிகள் ஆஶ்ரயணீயமாகச் சொல்லுகையாலே இங்குச்சொல்லுகிற ஆஶ்ரயணம் பஜநப்ரபதநஸாதாரண மென்னவுமாம். இப்படி கீழிற்பாட்டுக்களிலும் உபயாகார ஸாதாரண்யம் நிரூபித்துக்கொள்க.
ஈடு – பத்தாம் பாட்டு. அழகிது; அப்படியே ஆகிறது; ப4ஜநத்துக்கு ஆலம்ப3நமான மந்த்ரமேதென்ன; அது இன்னதென்றும், அதினுடைய அர்த்த2ம் அநுஸந்தே4யம் என்றும் சொல்லுகிறார். இதுதன்னைப் புறம்புள்ளார் ஜபஹோமாதி3களாலே கார்யம் கொள்ளாநிற்பர்கள். நம்மாசார்யர்கள் “ஸ்வரூபாநுஸந்த4ாநத்துக்கு ஈடாயிருக்கிற இதினுடைய அர்த்தா2நுஸந்தா4நம் மோக்ஷஸாத4நம்” என்று தாங்களும் அநுஸந்தி3த்து, தங்களைக் கிட்டினார்க்கு உபதே3ஶித்துக்கொண்டு போருவர்கள்.
வேத3ங்களுக்கும் இவ்வாழ்வார்(களு)க்கும், இம்மந்த்ரம் ப்ரஸ்துத மானவாறே, முன்பே ஶப்3த3த்தைச் சொல்லி, அநந்தரம் அர்த்த2த்தைச் சொல்லுதல்; அன்றியே, முன்பே அர்த்த2த்தைச் சொல்லிப் பின்பே ஶப்3த3ப்ரயோகம் பண்ணுதல் செய்யக்கடவதொரு நிர்ப3ந்த4முண்டாயிருக்கும்; அதுக்கு அடி – அர்த்தா2நுஸந்தா4நம் உத்3தே3ஶ்யமாகையாலே; “யாவையும் யாவருந்தானாமமைவுடை நாரணன்” (1-3–3) என்னுதல், “நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன்” (2-7-2) என்னுதல் செய்வதொரு நிர்ப்3பந்த4முண்டு; “அந்தர் ப3ஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தி2த:” என்னுதல், “நாராயணபரோ ஜ்யோதி:” என்னுதல் செய்யும் வேத3ம்.
(எண்பெருக்கந்நலம் இத்யாதி3) இப்பாட்டாலே திருமந்த்ரத்தை ஸார்த்த2மாக அருளிச்செய்கிறார். ஆழ்வான் இப்பாட்டளவும்வரப் பணித்து, இப்பாட்டளவிலே வந்தவாறே “இத்தை உந்தம் ஆசார்யர்கள்பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்” என்ன, ப4ட்டரும் சீராமப்பிள்ளையும் எழுந்திருந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து, “இன்னபோது இன்னார் இருப்பார், இன்னார் போவார் என்று தெரியாது, இருந்து கேளுங்கோள்” என்று திருமந்த்ரத்தை உபதே3ஶித்து, இப்பாட்டை நிர்வஹித்து, “இப்பாட்டை இதுக்கு அர்த்த2மாக நினைத்திருங்கோள்” என்று பணித்தான்.
எண்பெருக்கென்கிற இத்தாலே – ஜீவாநந்த்யத்தைச் சொல்லுகிறது. (நலத்து) இவ்வஸ்துக்கள்தான் ஜ்ஞாநகு3ணாஶ்ரய••ாயிருக்கக் கடவதிறே. ப்ரணவத்தில் த்ருதீயபத3மான மகாரத்தாலே ஜ்ஞாநகு3ணாஶ்ரய•மாய் ஜ்ஞாதாவுமாயிருக்குமென்று சொல்லிற்றிறே.
(ஒண்பொருள்) அசைதந்யம் அசித்துக்கு ஸ்வபா4வமாகாநிற்கச் செய்தே வஸ்துதான் ஜட3முமாயிருக்குமிறே – அஸம்ஜ்ஞாவத்தாயிருக்குமிறே; அங்ஙனன்றிக்கே, வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம்ப்ரகாஶமுமாய், த4ர்மபூ4தஜ்ஞாநமானதுவும் விஷயங்களை க்3ரஹித்துத் தன்னையும் அறிவிக்கக்கடவதாய் இருக்கும்; அத்தைப் பற்றச் சொல்லுகிறது. (ஈறில) என்கிற இது, கீழும் மேலும் அந்வயித்துக் கிடக்கிறது. ஈறிலவான ஒண்பொருளையும், ஈறிலவான வண்புகழையும் உடையனாகையாயிற்று – நாராயணனாகையாகிறது.
“பா4வத்கமங்க3ளகு3ணா ஹி நித3ர்ஶநம் ந:” ‘தன்னுடைய கல்யாண கு3ணங்களோபாதி நித்யமுமாய் ப்ரகாரமுமாய் இருக்கும் இவ்வஸ்து’ என்கைக்காக கு3ணங்களை நித3ர்ஶநமாகச் சொல்லுகிறது; நித்யரான த்ரிவித4சேதநரையும், நித்யமான கல்யாணகு3ணங்களையுமுடையனாய் இருக்கையாயிற்று – நாராயணனாகையாவது.
அவனுடைய (திண் கழல் சேரே) – இப்படி ஸம்ப3ந்த4ம் காத3ாசித்கமாகை தவிர்ந்து நித்யமாயிற்றபின்பு, ஸ்வரூபஜ்ஞாநமுடையாரை அவன் ஒருநாளும் விடானிறே. ஆஶ்ரிதரை ஒருகாலும் விட்டுக்கொடாத திண்மையைப் பற்ற “திண்கழல்” என்கிறது. (சேர்) ஆஶ்ரயி. உன்னுடையதாய் உனக்கு வகுத்ததா யிருந்தபின்பு, நீ கடுக ஸ்வீகரி; “நம:” என்றபடி.
பதினொன்றாம் பாட்டு
*சேர்த்தடத்* தென்குரு
கூர்ச்சட கோபன்சொல்*
சீர்த்தொடை யாயிரத்து*
ஓர்த்தஇப் பத்தே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழியினுடைய உபாதேயதமத்வத்தைப் பலமாக அருளிச்செய்கிறார்.
சேர் – செறிதலையுடைத்தான, தடம் – தடாகங்களையுடைய, தென்குருகூர் – அழகிய திருநகரியில், சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்த, சீர்த்தொடை – ஶப்தலக்ஷணகதமான சீர்களினுடைய தொடையையுடைய, ஆயிரத்து – ஆயிரத்திலும், இப்பத்து – (ஆஶ்ரயணோபதேஶபரமான) இப்பத்து, ஒர்த்த – நிரூபிக்கப்பட்டன. ஒர்த்தவிப்பத்தைச் சேர் என்று வினையாகவுமாம். இத்திருவாய்மொழி இருசீராய் குறளடி நான்கும் ஒத்திருக்கையால் வஞ்சித்துறை.
ஈடு – நிக3மத்தில், முதற்பாட்டில் – வ்யதிரிக்தவிஷயங்களை விட்டு ஸர்வேஶ்வரன் பக்கலிலே ஆத்மாவை ஸமர்ப்பிக்க இசையுங்கோள் என்றார்; இரண்டாம்பாட்டில் – வ்யதிரிக்தவிஷயங்களினுடைய தோ3ஷத3ர்ஶநம் பண்ணவே விடலாம் என்றார்; மூன்றாம் பாட்டில் – த்யாஜ்யாம்ஶத்தைச் சுருங்க அருளிச்செய்தார்; நாலாம்பாட்டில் – பற்றப்படுகிற விஷயத்தினுடைய நன்மையை அருளிச்செய்தார்; அஞ்சாம்பாட்டில் – பற்றுமிடத்தில் வரும் அந்தராயபரிஹாரத்தை அருளிச்செய்தார். ஆறாம்பாட்டில் – அவன் ஸங்க3 ஸ்வபா4வன் என்றார். ஏழாம்பாட்டில் – ஸம்ப3ந்த4ஜ்ஞாநமுண்டாகவே பொருந்தலாம் என்றார். எட்டாம்பாட்டில் – வேறு உபகரணம் தேடவேண்டா, அவன் தந்த கரணங்களை அவனுக்காக்க அமையும் என்றார். ஒன்பதாம்பாட்டில் – அப்படி செய்யவே ப4ஜநவிரோதி4கள் தன்னடையே விட்டுப்போம் என்றார். பத்தாம்பாட்டில் – ப4ஜநத்துக்கு ஆலம்ப3நமான மந்த்ரமின்னதென்றார். இதுதான் வாய்வந்தபடி சொல்லிற்றொன்றல்ல; சேதநருடைய ஹிதத்துக்கு ஈடாக ஆராய்ந்து சொல்லப்பட்டதென்னுதல்: அன்றிக்கே இதுதான் ஹிதமாயிருப்பதொன்றாகையாலே எப்போதுமொக்க ஓரப்படுவதொன்று என்னுதல்.
(சேர்த்தடம் இத்யாதி3) “சேர்த்தடம்” என்கிற இத்தைச் சேர் தடமாக்கி, பொய்கைகளோடு பொய்கைகள் சேர்ந்திருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம். அன்றியே, “தென்குருகூர்” என்று – ஊர் ப்ரஸ்துதமாகையாலே, தடாகங்கள் சேர்ந்திருந்துள்ள தென்குருகூர் என்று – ஊருக்கு விஶேஷணமாதல். அன்றிக்கே, “சேர்” என்கிற இது – க்ரியாபத3மாய்க்கிடத்தல். (தென்குருகூர்ச் சடகோபன் சொல்) ஹிதஞ்சொல்ல என்றிழிந்து, அஹிதத்தைச் சொல்லுவானொருவன் வார்த்தையன்று. ஆப்ததமரானவர் சொன்ன வார்த்தை என்கை. (சீர்த்தொடை யாயிரம்) “எழுத்தசை சீர் பந்தம் அடிதொடை பாவினம்” என்று கவிக்கு அவயவமாய் இருப்பன சில உண்டு; அவற்றைச் சொல்லுதல். அன்றிக்கே, உபாஸகாநுக்3ரஹத்தாலே உபாஸ்யனுடைய கல்யாண கு3ணங்களைத் தொடுத்த ஆயிரமென்னுதல். (ஆயிரத்தோர்த்த இப்பத்தே) ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு, சேதநர்க்கு ஹிதமாவது ஏதென்று
நிரூபித்துச் சொல்லப்பட்டது என்னுதல். அன்றிக்கே, சேதநர்க்கு ஹிததமமாயிருப்பதொன்றாகையாலே, எப்போதும் ஓரப்படுவதொன்று என்னுதல். ஓர்த்த இப்பத்தை நெஞ்சிலே சேர் – அநுஸந்தி4. பரோபதே3ஶம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே, மேல் ஏகவசநமான இடம் ஜாத்யபி4ப்ராயம்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி — வீடுமின்
ஸம்ஸாரிணோப்யநுஜிக்3ருக்ஷுரஸௌ த3யாளு:
அல்பாஸ்தி2ரேதரபுமர்த்த2ருசிம் நிரஸ்யந் |
தத்த்யாக3 பூர்வஹரிப4க்திஸுதா4ம் பு3தா4நாம்
உத்3தீ3பிநீமுபதி3தே3ஶ ம்நிர்த்3விதீயே || 2
த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி
ஸ்வாமித்வாத் ஸுஸ்தி2ரத்வாந்நிகி2லநிருபதி4 ஸ்வாத்மவித்3 க்3ராஹ்யபா4வாத்
தாத்3ருக்ஸர்வாநுகூல்யாத் ச்யவநவதி3தரப்ராப்யவைஷம்யவத்த்வாத்|
ஸர்வத்ராபக்ஷபாதாத் ஶுப4விப4வதயா மாநஸாத்3யர்ச்யபா4வாத்
ஸங்கோசோந்மோசகத்வாஜ் ஜக3த3யநதயோபாதி3ஶத் ஸர்வயோக்3யம் || 2
திருவாய்மொழி நூற்றந்தாதி
வீடுசெய்து மற்றெவையு மிக்கபுகழ் நாரணன்தாள்
நாடுநலத் தாலடைய நன்குரைக்கும் – நீடுபுகழ்
வண்குருகூர் மாறனிந்த மாநிலத்தோர் தாம்வாழப்
பண்புடனே பாடியருள் பத்து. 2
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்