[highlight_content]

01-10 12000/36000 Padi

பத்தாம் திருவாய்மொழி
பொருமாநீள்: ப்ரவேஶம்

*****

      – பத்தாந்திருவாய்மொழியில், ‘இப்படி ஸர்வப்ரகார ஸம்ஶ்லேஷம் பண்ணுகைக்கு அடி – அவனுடைய நிர்ஹேதுக மஹோபகாரகத்வமிறே’ என்று அநுஸந்தித்து, அதுக்கு உபபாதகமாக, அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கிலக்காக்கினபடியையும், கணநாமாத்ரத்திலும் ஸுலபனென்னு மிடத்தையும், அவனுடைய அநுபாவ்ய ஸ்வபாவத்வத்தையும், நிரந்தராநுபாவ்யதையையும், அர்த்தித்வமும் வேண்டாத அதிஶயிதோபகாரகத்வத்தையும், அதுக்கடியான பந்த விஶேஷத்தையும், இதுக்குப் படிமாவான ஸூரிபோக்யதையையும், உபகாரகத்வோபயுக்தமான பூர்ணதையையும், இவ்வுபகார க்ரமம் மறக்க அரிதென்னுமிடத்தையும், மறவாமைக்கு அவன் பண்ணின யத்நவிஶேஷத்தையும் அருளிச்செய்து, அவனுடைய மஹோபகாரகத்வத்தை அநுபவித்துக் களிக்கிறார்.

     ஈடு – “கீழில் திருவாய்மொழியில் பிறந்த ஸர்வாங்க3 ஸம்ஶ்லேஷத்தை அநுஸந்தி4த்து நிர்வ்ருதராகிறார்” என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி. (அதாவது) நிர்வ்ருதி என்று ஸுக2மாய், ஸுகி2க்கிறார் என்றபடி.  கீழ்ப்பிறந்த ஸர்வாங்க3ஸம்ஶ்லேஷத்தை அநுஸந்தி4த்து  ப4ட்டர் அருளிச்செய்வதோர் ஏற்றமுண்டு.   அதாவது – “உச்சியுள்ளே நிற்கும்” (1.9.11) என்றிறே கீழ் நின்றது; பேற்றில் இனி இதுக்கு அவ்வருகு ஏற்றமாகச் செய்துகொடுக்கலாவதொன்றுமில்லை; இனி இதினுடைய அவிச்சே23த்தைப் பண்ணிக்கொடுக்கையே உள்ளது; ‘பேறு கனத்திருந்தது; இது வந்த வழி என்ன’ என்று ஆராய்ந்தார், இப்பேற்றின் கனத்துக் கீடாயிருப்பதொரு நன்மை தம் தலையில் இன்றிக்கேயிருந்தது; இத்தலையிலும் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும், அத்3வேஷமாதல், ஆபி4முக்2யமாதலிறே உள்ளது; அத்தை ஸாத4நமாகச் சொல்லப் போராதே; இத்தலையிலே பரமப4க்தி பர்யந்தமாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இத்தை ஒரு ஸாத4நமாகச் சொல்லப் போராதே; ஒருவன் ஓர் எலுமிச்சம்பழம்கொடுத்து ராஜ்யத்தைப் பெற்றால் அது விலையாயிராதே; ஸர்வேஶ்வரன் அடியாக வரும்பேற்றுக்கு இத்தலையால் ஓரடி நிரூபிக்கலாயிராதே;  “வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால்” (பெரிய திருவந்தாதி – 56) என்னும்படியிறேயிருப்பது.

     இவனை முதலிலே ஸ்ருஷ்டிக்கிறபோது “இவன் தீயவழியைத் தப்பி நல்ல வழிபோகவேணும்” என்று உபகரணங்களைக் கொடுத்துவிடுகையாலே, இவன்தலையால் பிறந்த நன்மைக்கும் அடி அவனாயிருக்குமே; இனி பு3த்3த்4யாதி3 ஸகலபதா3ர்த்த2ங்களுக்கும் நிர்வாஹகனாகையாலே, அத்3வேஷம் தொடக்கமாக, பரிக3ணநை நடுவாக, பரமப4க்தி பர்யந்தமாகத் தானே பிறப்பிப்பானொருவன்; “நித்யஸூரிகள் பேற்றை அநாதி3காலம் ஸம்ஸரித்துப்போந்த நமக்குத் தந்தான்; ஒரு விஷயீகாரமிருக்கும்படியென்!” என்று, கீழில் திருவாய்மொழியில் உந்மஸ்தகமாகப் பிறந்த ஸம்ஶ்லேஷ ரஸத்தை அநுஸந்தி4த்து நிர்வ்ருதராகிறார் என்று.

முதல் பாட்டு

*பொருமாநீள்படை ஆழிசங்கத்தொடு*
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ*
ஒருமாணிக் குறளாகிநிமிர்ந்தஅக்
கருமாணிக்கம் என்கண்ணுளதாகுமே.

      – முதற்பாட்டில், த்ரைவிக்ரமாபதாநத்தாலே ஸர்வலோகத்துக்கும் உபகரித்தாற்போலே, அவ்வடிவை என்கண்ணுக்கு இலக்காக்கினா னென்கிறார்.

     பொரு – விரோதிநிரஸநசீலமாய், மா – (அத்தாலே) அதிஶயிதோத்க்ருஷ்டமாய், நீள் – (வடிவோடொக்க) வளரக்கடவதாயுள்ள, படை – ஆயுதமான, ஆழிசங்கத்தொடு – ஶங்கசக்ரங்களோடேகூட, திரு – ஶ்ரிய:பதித்வசிஹ்நங்களையுடைத்தான, மா – உத்கர்ஷயுக்தமாய், நீள் – (ஆஶ்ரிதரளவுஞ்) செல்வதான, கழல் – திருவடிகளை, ஏழுலகும் – (ஜ்ஞாநாஜ்ஞாநவிபாகமற) ஸகலலோகமும், தொழ – ஶேஷத்வாநுரூபவ்ருத்தியைப் பண்ணி அநுபவிக்கும்படியாக, ஒரு – அத்விதீயமான, மாணிக்குறளாய் – (அர்த்தித்வாநுரூப ப்ரஹ்மசாரி) வாமநத்வத்தையுடையனாய்க் கொண்டு, நிமிர்ந்த – (கார்யஸித்திஸமநந்தரம்) வளர்ந்தருளின, அ – அந்தவைபவத்தையுடைய, கருமாணிக்கம் – நீலரத்நம்போலே தர்ஶநீயவிக்ரஹனானவன், என்கண்ணுளது ஆகும் – என் கண்ணுக்கு விஷயம் ஆகாநிற்கும்.  என்கண் என்று – என்னிடத்து என்றுமாம்.  உளதாகு மென்ற அஃறிணை – மாணிக்க மென்கையாலே.

     ஈடு – முதற்பாட்டு.  இத்திருவாய்மொழியில் சொல்லுகிற அர்த்த2த்தைத் திரள அருளிச்செய்கிறார் – முதற்பாட்டில்.  “மஹாப3லி, தன் வரவை நினையாதே யிருக்க அவன்பக்கலிலே தானே இரப்பாளனாய்ச் சென்று தன்னுடைமையைத் தன்னதாக்கினாற்போலே, எனக்கு நினைவின்றிக்கேயிருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்காக்கினான்” என்று அவன்படியை அநுஸந்தி4த்து இனியராகிறார்.

     (பொரு) திருவுலகளந்தருளுகிறபோது, தி3வ்யாயுத4ங்கள் நமுசிப்ரப்4ருதிகள் மேலே பொருதபடியைச் சொல்லுதல்; தி3வ்யாயுத4ங்கள்தான் ஒருவரையொருவர் அதிஶங்கைபண்ணிப் பொருகிறபடியைச் சொல்லுதல்.  நமுசிப்ரப்4ருதிகளோடே பொரும் என்றது சேருமிறே; (இடங்கை வலம்புரி நின்றார்ப்ப) (இரண்டாம் திருவந்தாதி -71) இடத்திருக்கையிலே ஸ்ரீபாஞ்சஜந்யமானது அப்போதப்போது பிறந்த விஜயத்தை அநுஸந்தி4த்து ஆர்த்துக்கொண்டது; அங்ஙன் ஆர்த்துக்கொள்ள அவஸரமின்றிக்கே, திருவாழி நெருப்பை உமிழ்ந்து விரோதி4களை “வாய் வாய்” என்று ஒடுங்கப் பண்ணிற்று; (விடங்காலும் தீவாயரவணை) (இர.திரு.71)திருவநந்தாழ்வான் உகவாதார் மேலே கிடந்தவிடத்தே கிடந்து நெருப்பை உமிழ்ந்தான்; விரோதி4பூ4யிஷ்ட2மான இத்3தே3ஶத்தில் அவன் இப்படி செய்யச் சொல்லவேணுமோ, அங்கே உட்பட இப்படி செய்யக்கடவ அவன்? ‘ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவணை’(நான்முகன் திருவந்தாதி – 10)யிறே; ஆங்கு-தே3ஶம் அது, ஆரவாரம் அது – “அஹமந்நமஹமந்நமஹமந்நம், அஹமந்நாதோ3ஹமந்நாதோ3ஹமந்நாத3:” என்கிற ஆரவாரம்.  அங்கே இதுகேட்டு அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படி படச் சொல்லவேணுமோ? இவர்கள் இப்படி அலமருகைக்கு அடியென்? என்னில் (அரவணைமேல் தோன்றல், திசையளப்பான், பூவாரடி நிமிர்த்தபோது) (இர.திரு.71)- திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய ஸர்வேஶ்வரன் காடுமோடையும் அளக்கைக்காகப் புஷ்பஹாஸ ஸுகுமாரமான திருவடிகளை நிமிர்த்தபோது, எல்லாம் படவேண்டாவோ? – அவன் இப்படி வ்யாபரியாநின்றால்.  தன்னில்தான் பொருது என்றபோது – அஸ்தா3நே ப4யஶங்கையாலே ஒருவரையொருவர் அதிஶங்கை பண்ணிப் போருகை.  “ராக4வம் ஶரணம் க3த:” என்றவனையிறே “வத்4யதாம்” என்றது; “ப4ரதஸ்ய வதே4 தோ3ஷம் நாஹம் பஶ்யாமி” என்றாரிறே இளையபெருமாள்.

     (மா) அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லவுமாம்.  அன்றியே, ஆஶ்ரித விஷயத்தில் அவனிற்காட்டில் இவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லவுமாம்.  “அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீ4ந்யாயுதா4நி தம் | ரக்ஷந்தி ஸகலாபத்3ப்4யோ யேந விஷ்ணுருபாஸித: ||” என்கிறபடியே ஸர்வேஶ்வரன் எதிரியானாலும் அவன்கையில் காட்டிக்கொடாதே நோக்கும் மஹத்தையைச் சொல்லுகிறது.  (நீள்படை)  “ஆயிரக்காதம் பறப்பதின் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்” என்னுமாபோலே, ஸர்வேஶ்வரன் அதி4கரித்த கார்யத்திலே அவன்தன்னிலும் முற்பட்டிருக்கை.   நீள்படையான ஆழி சங்கத்தோடே கூட.  (திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ) “கதா3 புந:” என்று நான் ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடிகளைக் கொண்டுகிடீர் ஆசையில்லாதார் தலையிலே வைத்தது.  (திரு) ஐஶ்வர்யஸூசகமான த்4வஜாரவிந்தா3தி3களை யுடைத்தாயிருக்கை.  (மா) பரமபூஜ்யமாயிருக்கை.  (நீள்கழல்) ஆஶாலேஶ முடையார் இருந்தவிடம் எல்லையாக வளரும் திருவடிகள்.  (ஏழுலகும் தொழ) ஒரு ஸாத4நாநுஷ்டா2நம் பண்ணாதாரும் தொழ.  (ஒரு) இவன்தானே “இவ்வடிவை இன்னமொருகால் கொள்ளவேணும்” என்னிலும் வாயாதபடி அத்3விதீயமாயிருக்கை.  (மாணி) ஶ்ரிய:பதி என்று தோற்றாதபடி இரப்பிலே தழும்பேறுகை.  (குறளாகி) கோடியைக் காணியாக்கினாற்போலே, பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம்படி சுருக்கினபடி.  (நிமிர்ந்த) அடியிலே நீர்வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்தபடி;  வாஸுதே3வதருவிறே.  நெய்தற்காடு அலர்ந்தாற்போலே, ஆகாஶாவகாஶமடையத் தன் வடிவழகாலே பாரித்தபடி.  (அக் கருமாணிக்கம்) ‘மயர்வற மதிநலம் அருளப்’பெற்ற தம்மாலும் பரிச்சே2தி3க்கப் போகிறதில்லை காணும்! (என் கண்ணுளதாகுமே) ஏழுலகத்துள்ளார் வாசியறிந்திலர்களிறே;  அவ்வாசி யறியுமவராகையாலே “என் கண்ணுளதாகுமே” என்கிறார்.  கண்ணென்று – இடமாய், என்னிடத்து ஆகும் என்னவுமாம்.  “கருமாணிக்கம்” என்கையாலே கண்ணுளதாகும் என்கிறது.

இரண்டாம் பாட்டு

கண்ணுள் ளேநிற்கும் காதன்மை யால்தொழில்*
எண்ணி லும்வரும் என்இனி வேண்டுவம்*
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்*
விண்ணு மாய்விரி யும்எம் பிரானையே.

      – அநந்தரம், ஸர்வகாரணபூதனான ஸர்வேஶ்வரன், ஸர்வாத்மகபஜநத்தோடு ஸத்பாவாபிஸந்தியோடு வாசியற ஸந்நிஹிதனா மென்கிறார்.

     மண்ணுநீருமெரியும் நல்வாயுவும் விண்ணுமாய் – ப்ருதிவ்யாதி பூதங்களையும் ப்ரகாரமாகவுடையனாய்க்கொண்டு, விரியும் – ஜகதாகாரேண விஸ்த்ருதனாகிற, எம்பிரானை – என்னுடைய ஸ்வாமியை, காதன்மையால் – அபிநிவேஶாத்மக பக்தியாலே, தொழில் – ப்ரணாமார்ச்சநாதிகளைப் பண்ணில், கண்ணுள்ளே – “தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்” என்று அவர்கள் கண்வட்டத்தைவிடாமல், நிற்கும் – நித்யஸந்நிதிபண்ணும்; எண்ணிலும் –  (“அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத” என்று) ஸத்பாவசிந்தாமாத்ரத்திலும், வரும் – (அவன்வசத்திலே) வரும்படியாயிருக்கும்; இனி – இப்படி துஷ்கரஸுகரங்களான உபாயத்வயத்திலும் ஸுலபனானபின்பு, என்வேண்டுவம் – (அநந்யகதிகளான நமக்குச்) செய்யவேண்டுவதுண்டோ?

     காரணத்வம் – உபயோபாய ஸாதாரணம்.  எண் – சிந்திப்பு. “சிந்திப்பேயமையும்” என்கிற ப்ரபதநஸௌகர்யம். எண்ணிலும் வருமென்று – நினைவிற்காட்டில் மிகவுங் கைவரும் என்றுமாம். நல்வாயு – தாரகத்வ வைலக்ஷண்யம்.

     ஈடு – இரண்டாம் பாட்டு.  பரமப4க்திக்கும் பரிக3ணநைக்கும் ஒக்க முகங்காட்டும் என்கிறார்.

     (கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்) பரமப4க்தி யுக்தராய்க் கொண்டு தொழில், அவர்கள் கண்வட்டத்துக்கு அவ்வருகு போகமாட்டாதே நிற்கும்.  தன்னையொழியச் செல்லாமையை உடையராய்க்கொண்டு தொழில், தானும் அவர்களையொழியச் செல்லாமையை உடையனாய், அவர்கள் கண்வட்டத்தில் நின்றும் கால்வாங்கமாட்டாதே நிற்கும்.  (எண்ணிலும் வரும்) “க4டம், படம், ஈஶ்வரன்” என்றால், “நம்மை, ‘இல்லை’ என்னாதே, இவற்றோ டொக்கப் பரிக3ணித்தானிறே” என்று வரும்.  “சதுர்விம்ஶதி தத்வமாயிருக்கும் அசித்து, பஞ்சவிம்ஶகன் ஆத்மா, ஷட்3விம்ஶகன் ஈஶ்வரன்” என்றால், “நம்முடைய உண்மையையும் இவற்றோபாதி இசைந்தானிறே” என்று வந்து முகங்காட்டும்.  (வரும்) நிற்குமதில்லை.  இவன் “போ” என்ற போதும் அதுக்கும் உடலாக வருமித்தனை.  அன்றியே (எண்ணிலும் வரும்) நம்முடைய எண்ணை மிஞ்சி (பா.பே. (மிஞ்ச)) வரும் என்றுமாம்.  (எண்ணிலும் வரும்) “இருபத்தொன்று, இருபத்திரண்டு, இருபத்துமூன்று, இருபத்து நான்கு, இருபத்தஞ்சு, இருபத்தாறு” என்று எண்ணினால், “இருபத்தாறு நானே” என்று வரும் என்றுமாம்.

     (என் இனி வேண்டுவம்) பரமப4க்திக்கும் பரிக3ணநைக்கும் ஒக்க முகங் காட்டுவானானபின்பு எனக்கு ஒரு குறையுண்டோ? அவன் இவன்பக்கல் அப்ரதி ஷேத4த்துக்கு அவஸரம் பார்த்திருந்து முகங்காட்டுவானானபின்பு,  இவனுக்கு ஹிதாம்ஶத்தில் செய்யவேண்டுவதுண்டோ? இப்படியிருக்கிற ப43வத் ஸ்வரூபத்தை பு3த்3தி4பண்ணுகையிறே – இவன் ப்ரபந்நனாகையாவது.  அவன் தன் ஸ்வரூபோபதே3ஶத்தைப்பண்ணி, “உன்னால் வரும் இழவுக்கு அஞ்சவேண்டா” – “மா ஶுச:” என்றாற்போலே, இவரும் அவன் ஸ்வரூபத்தை அநுஸந்தி4த்து, “என் இனி வேண்டுவம்” என்கிறார்.  அப்ரதிஷேத4மே பேற்றுக்கு வேண்டுவது.  அதுக்குப் புறம்பான யோக்யதா‍யோக்3யதைகள்  அகிஞ்சித்கரம்.  வேல்வெட்டி நம்பியார் நம்பிள்ளையை, “பெருமாள் கடலை ஶரணம் புகுகிற விடத்தில் ப்ராங்முக2த்வாதி3நியமங்களோடே ஶரணம் புக்காராயிருந்தது;  இவ்வுபாயம் இதர ஸாத4நங்கள் போலே சில நியமங்கள் வேண்டியிருக்கிறதோ?” என்று கேட்க “பெருமாள்தமக்கு, “ஸமுத்3ரம் ராக4வோ ராஜா ஶரணம் க3ந்துமர்ஹதி” என்று உபதே3ஶித்தான் ஸ்ரீவிபீ4ஷணாழ்வான்; அவன்தான் பெருமாளை ஶரணம்புகுகிறவிடத்தில் கடலிலே ஒரு முழுக்கிட்டுவந்தான் என்றில்லை; ஆக, இத்தால் சொல்லிற்றாயிற்று என்னென்னில்; பெருமாள் இக்ஷ்வாகு வம்ஶ்யராய், ஆசார ப்ரதா4நராகையாலே சில நியமங்களோடே ஶரணம் புக்கார்;  ராக்ஷஸஜாதீயனாகையாலே, அவன் நின்றநிலையிலே ஶரணம்புக்கான்; ஆகையாலே யோக்3யனுக்கு அயோக்3யதை ஸம்பாதி3க்கவேண்டா;  அயோக்3 யனுக்கு யோக்3யதை ஸம்பாதி3க்க வேண்டா; ஆகையாலே ஸர்வாதி4காரம் இவ்வுபாயம்” என்று அருளிச்செய்தார்.  ப43வத்ப்ரபா4வ ஜ்ஞாநமுடையார்க்கு “இதுவே அர்த்த2ம்” என்று தோற்றியிருக்கும்; “கேவல க்ரியாமாத்ரத்துக்கே ப2லப்ரதா3ந ஶக்தியுள்ளது” என்றிருப்பார்க்கு இவ்வர்த்த2ம் அநுபபந்நம்” என்று தோற்றியிருக்கும்.

     (மண்ணும் இத்யாதி3) காரணமான பூ4தபஞ்சகத்துக்கும் உள்ளீடாய், “ப3ஹு ஸ்யாம்” என்கிறபடியே தன் விகாஸமேயாம்படியிருக்கிற உபகாரகன் – கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில், எண்ணிலும் வரும், என் இனி வேண்டுவம்? தன்னையொழிந்த ஸகல பதா3ர்த்த2ங்களும் தன் ஸங்கல்பத்தைப் பற்றி உளவாம்படியிருக்கிற ஸர்வேஶ்வரன், தன் பக்கல் ஆஶாலேஶமுடையார் ஸங்கல்பத்தைப்பற்றித் தான் உளனாம்படி இருப்பானானபின்பு, இவ்வாத்மாவுக்கு ஒரு குறையுண்டோ? என்கிறார்.  “நல்வாயுவும்” என்றது – தா4ரகத்வத்தைப்பற்ற. விண்ணுமாய் – இவற்றுக்கு அந்தராத்மாவாய் என்றபடி.  விரியும் – “ப3ஹுஸ்யாம்” என்கிறபடியே விஸ்த்ருதனாகாநிற்கும்.  எம்பிரான் – எனக்கு உபகாரகன்.  ப்ரத2மையை த்3விதீயையாக்கி, “எம்பிரானை” என்று கிடக்கிறது.

மூன்றாம் பாட்டு

எம்பி ரானைஎந் தைதந்தை தந்தைக்கும்
தம்பி ரானைதண் தாமரைக் கண்ணனை*
கொம்ப ராவுநுண் ணேரிடை மார்வனை*
எம்பி ரானைத் தொழாய்மட நெஞ்சமே.

      – அநந்தரம் ‘ஶ்ரிய:பதித்வாதிகளான அநுபாவ்ய ஸ்வபாவங்களை யுடையவனை அநுபவி’ என்று நெஞ்சை நியோகிக்கிறார்.

     மடம் – (சொல்வழிவரும்) பவ்யதையையுடைய, நெஞ்சமே – நெஞ்சே! எம்பிரானை – (தன்பக்கலிலே அத்வேஷாபிமுக்யாதிகளைத் தரும்) உபகாரகனாய், எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை – (நம்மளவில் நில்லாதே) நங்குலத்துக்கெல்லாம் நாதனாய், தண் – (இஸ்ஸம்பந்த மடியாகக்) குளிரநோக்கும், தாமரைக்கண்ணனை – புண்டரீகாக்ஷத்வத்தை யுடையனாய், கொம்பு – வஞ்சிக்கொம்பிலும், அராவு – அரவிலும், நுண் – நுண்ணிதான, நேர் – நேர்மையையுடைய, இடை – இடையையுடையளான லக்ஷ்மியை, மார்பனை – மார்பிலே யுடையனான, எம்பிரானை – ஸ்வாமியை, தொழாய் – தொழும்படி பார். ஶ்ரிய:பதித்வம் – இதிற்சொன்ன ஸ்வபாவங்களுக் கெல்லாம் மூலமென்று கருத்து.  அராவு – அரவு.  அராவுதல் – குறைத்தலாய், கொம்பை இழைத்ததாகவுமாம்.

     ஈடு – மூன்றாம் பாட்டு.  “கண்டாயே அவன் ஸ்வரூபமிருந்தபடி; நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப்பாராய் நெஞ்சே!” என்கிறார்.

     (எம்பிரானை) கீழிற்பாட்டில் அவன் நீர்மையை அநுஸந்தி4த்து, என்னாயனானவனை என்கிறார்.  (எந்தை இத்யாதி3) தம்மளவிலேயாய் அடியற்றிருக்கை யன்றிக்கே, என் குடிக்கு நாயகனானவனை என்கிறார்.  இவர் இப்படி ஏத்தினவாறே, ப்ரயோஜநாந்தரபரருடைய பாசுரத்துக்கும், அநந்ய ப்ரயோஜநர் பாசுரத்துக்கும் வாசியறியுமவனாகையாலே “இப்படி ஏத்துகிறவன் ஆர்?” என்று குளிரக் கடாக்ஷித்தான்;  (தண் தாமரைக் கண்ணனை) “தாநஹம் த்3விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராத4மாந் | க்ஷிபாமி” என்னுமவன் இப்படி கடாக்ஷிக்கைக்கு ஹேதுவென்? என்று பார்த்தார்; அருகே கடாக்ஷிப்பிக்கிறார் உண்டாயிருந்தது; (கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை) கொம்புபோலவும், அரவுபோலவும் இருப்பதாய், அதுதானும் நுண்ணிதாயிருந்துள்ள இடையையுடைய பெரியபிராட்டியாரைத் திருமார்பிலே உடையவனை.  “அரவு” என்கிற இத்தை – “அராவு” என்று நீட்டிக்கிடக்கிறது; “நச்சராவணை” (திருச்சந்தவிருத்தம் – 85) என்னக்கடவதிறே.  அன்றியே, கொம்பை லகூ4கரிக்கிற இடை என்றுமாம்.  (எம்பிரானை) அச்சேர்த்திக்கு ஒருகால் “எம்பிரானை” என்கிறார்.  (தொழாய்) தொழப்படும் விஷயம் ஒரு மிது2நமாயாயிற்று இருப்பது.  (மடநெஞ்சமே) “தொழுதெழு” (1-1-1) என்னலாம்படி பாங்கான நெஞ்சன்றோ நீ.

நான்காம் பாட்டு

நெஞ்ச மேநல்லை நல்லைஉன் னைப்பெற்றால்
என்செய் யோம்இனி என்ன குறைவினம்*
மைந்த னைமல ராள்மண வாளனை*
துஞ்சும் போதும் விடாது தொடர்கண்டாய்.

      – அநந்தரம், தம்முடைய நியோகத்துக்கு ஈடாக நெஞ்சு இசைந்தவாறே உகந்து, இனி ஒருகாலும் விடாதே அநுபவிக்கப் பாரென்கிறார்.

     நெஞ்சமே – (அறிவுக்கு ஆஶ்ரயமான) நெஞ்சே! நல்லை நல்லை – (நீ செய்தபடி) நன்று நன்று! உன்னைப்பெற்றால் – உன்னைப்பெற்றால், என் செய்யோம் – எக்காரியம் செய்து தலைக்கட்டோம்? இனி – (உன் இசைவு) பெற்றபின்பு, என்னகுறைவினம் – அஸாத்யமாய்க் குறைகிடப்பதொன்றை யுடையோமோ? (ஆனபின்பு), மைந்தனை – நித்யயௌவந ஸ்வபாவனாய், மலராள் – நிரதிஶயபோக்யபூதையான லக்ஷ்மிக்கு, மணவாளனை – போக்தாவானவனை, துஞ்சும்போதும் – நாம் முடியுமளவிலும், விடாது – விடாதே, தொடர்கண்டாய் – நிரந்தராநுவ்ருத்திபண்ணப்பார்.  துஞ்சுதலாவது – நிகர்ஷாநுஸந்தாநத்தாலே வந்த விஶ்லேஷ மென்று கருத்து.

     ஈடு – நாலாம் பாட்டு. தாம் சொன்னபோதே மேல்விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, ‘நிகர்ஷாநுஸந்தா4நம்பண்ணி நான் விஶ்லேஷித்த ஸமயத்திலும் நீ விடாதேகொள்’ என்கிறார்.

     (நெஞ்சமே நல்லை நல்லை) சொன்ன  காரியத்தைச் சடக்கெனச்செய்த ஸத்புத்ரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் மாதாபிதாக்களைப்போலே, இவரும் மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார் நெஞ்சை.  (நெஞ்சமே நல்லை நல்லை)  நல்லை என்ன அமையாதோ? “நல்லை நல்லை” என்கிற வீப்ஸைக்குக் கருத்தென்? என்னில்; இவர்தாம் அவன்பக்கல் தூதுவிடுமாபோலே, தனக்கு இவர் தூதுவிடவேண்டும்படி இவர்தம்மை விட்டு அவன்பக்கலிலே நிற்கவல்ல நெஞ்சாகையாலே; “என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர் இன்னஞ்செல்லீரோ” (திருவிருத்தம் – 30) என்னும்படி ‘முந்துற்ற நெஞ்சு’(பெரியதிருவந்தாதி – 1) ஆகையாலே “நல்லை நல்லை” என்கிற மீமிசை.

     என்னை இப்படி ஶ்லாகி4க்கிறதென்? என்ன (உன்னைப் பெற்றால் என்செய்யோம்) நீ என்னோடு ஒருமிடறானபின்பு, எனக்குச் செய்ய முடியாததுண்டோ? நெஞ்சு ஒத்தபின்பு முடியாததுண்டோ? ப2லம் தருகைக்கு ஈஶ்வரனுண்டு; விலக்காமைக்கு நீயுண்டு; இனிச் செய்யமுடியாததுண்டோ? (இனி என்ன குறைவினம்) “உன்னைப்பெற்றால் என்செய்யோம்” என்று ஸாத்4யாம்ஶமுண்டாகச் சொன்னவிடம் தப்பச்சொன்னோம்; உன்பக்கல் விலக்காமையே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாயிருந்தால், ஸாத்4யாம்ஶந்தான் உண்டோ, அவன் உபாயபா4வம் நித்யநிரபேக்ஷமானால் ஸாத்4யாம்ஶம் உண்டோ? ஆனால் பின்னை, க்ருத்யாம்ஶமென் என்ன; ஸாத்4யாம்ஶமுண்டுகிடாய்! என்கிறார் – (மைந்தனை இத்யாதி3). நான் அவனைக் கிட்டக்கொள்ள, ‘வளவேழுலகு’ (1-5) தலையெடுத்து அகலப்பார்ப்பதொன்றுண்டு; நீ அப்போது அவனை விடாதேகிடாய்.  (மைந்தனை) இவ்விஷயத்தை – கெடுவாய்! சிலராலே விடப்போமோ? (மைந்து – இனிமை, அழகு, மிடுக்கு).  (மலராள் மணவாளனை) பெரியபிராட்டியார் “அகலகில்லேன் இறையும்” (6-10-10) என்னும் விஷயத்தையன்றோ நான் உன்னை “விடாதேகிடாய்” என்கிறது.  (துஞ்சும்போதும்) “அயோக்3யன்” என்று அகலும்போதும்.  விஶ்லேஷம் விநாஶபர்யாயம் என்கை.  “முஹூர்த்தமபி ஜீவாவ:” என்னுமதிறே – இவர்க்குத் துஞ்சுகையாகிறது.  நான் அவனை அகன்று முடியுமன்றும், நீ அவனை விடாதே தொடரப்பார்கிடாய்! இவ்வேப்பங்குடிநீரையன்றோ நான் உன்னைக் குடிக்கச்சொல்லுகிறது! பிராட்டி “அகலகில்லேன் இறையும்” (6-10-10) என்கிற விஷயத்தையன்றோ நான் உன்னை அநுப4விக்கச் சொல்லுகிறது.

ஐந்தாம் பாட்டு

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றுஓர்
எண்தானும் இன்றியே வந்தியலு மாறு*
உண்டா னைஉல கேழும்ஓர் மூவடி
கொண்டானை* கண்டு கொண்டனை நீயுமே.

      – அநந்தரம், ‘நம்நினைவற நமக்குக்கார்யம் பலிக்கிறபடி, நீயும் அவனைக்கிட்டும் படியாயிற்றிறே’ என்கிறார்.

     நெஞ்சே – மநஸ்ஸே! கருமங்கள் – (அத்வேஷம், ஆபி•க்யம், ஆஶ்ரயணம், அறிவு, நலம் தொடக்கமான) காரியங்கள், வாய்க்கின்று – பலிக்கிறவை; ஓர் – ஒரு, எண்தானுமின்றியே – நினைவுதானுமின்றியிலே, வந்தியலும் – நமக்குக்கைவந்து நடக்கிற, ஆறு – ப்ரகாரம், கண்டாயே – கண்டாயே; (எங்ஙனேயென்னில்; அபேக்ஷாநிரபேக்ஷமாக), உலகேழும் – லோகமெல்லாவற்றையும், உண்டானை – (ப்ரளயாபத்திலே) வயிற்றிலே வைத்து, ஓர் – அத்விதீயமான, மூவடிகொண்டானை – த்ரிவிக்ரமாபதாநத்தாலே அநந்யார்ஹமாக்கிக் கொண்டவனை, நீயும் – (ஆபி•க்ய ப்ரஸங்கமில்லாத) நீயும், கண்டுகொண்டனை – லபிக்கப்பெற்றாயிறே.

     ஈடு – அஞ்சாம் பாட்டு. கீழ் “எண்ணிலும் வரும்” (1.10.2) என்ற எண்தானும் மிகையானபடி கண்டாயே! என்று அவன்படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்.

     (கண்டாயே நெஞ்சே) நான் சொன்னபடியே ப2லத்தோடே வ்யாப்தமானபடி கண்டாயே! (நெஞ்சே) ஜ்ஞாநப்ரஸரத்3வாரமான உனக்குச் சொல்ல வேண்டாவிறே.  (கருமங்கள் வாய்க்கின்று) கார்யங்கள் ப2லிக்குமிடத்தில்.  (ஓர் எண்தானுமின்றியே வந்தியலுமாறு கண்டாயே) “எண்ணிலும் வரும்” என்றதுதான் மிகையாம்படி வந்து ப2லித்துக்கொண்டு நிற்கிறபடி கண்டாயே! (இயலுகை – ப2லிக்கை) ப43வத்ப்ரபா4வம் சொல்லுவார் சொல்லுமளவல்லகாண்!

     இத்தலையில் எண்ணின்றிக்கேயிருக்கப் ப2லிக்கும் என்னுமிடத்துக்கு உதா3ஹரணங்காட்டுகிறார் மேல் – (உண்டானை இத்யாதி3) ப்ரளயங்கொண்ட ஜக3த்துக்கு  “அவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்கும்” என்னும் நினைவுண்டோ? “உலகேழும்” என்கிறவிடம் – இரண்டிடத்திலும் கூட்டிக் கொள்ளக்கடவது.  அவன் ஜக3த்தையடைய அளக்கிறபோது “நம் தலையிலே திருவடிகளை வைக்கப்புகாநின்றான்” என்னும் நினைவுண்டோ? இதுக்கு உதா3ஹரணம் தேடிப்போகவேணுமோ ஒன்று? – (கண்டுகொண்டனை நீயுமே) விலக்குகைக்குப் பரிகரமுடைய நீயுமன்றோ கண்டுகொண்டாய்.  ப்ரளயாபத்தில் அவற்றுக்கு ப்ரதிகூலிக்கப் பரிகரமில்லையே! இங்கு அவஸரமில்லை; அறியில் விலக்குவர்களிறே; அஶங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்களித்தனை.

ஆறாம் பாட்டு

நீயும் நானும் இந் நேர்நிற்கில்மேல்மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே! சொன்னேன்*
தாயும் தந்தையு மாய்இவ் வுலகினில்*
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

      – அநந்தரம், இப்படி ஏககண்டராய் நிற்கில், அஸாதாரணபந்த விஶிஷ்டனானவன் ஒருக்லேஶப்படக் கொடானென்கிறார்.

     தாயாயும் – மாத்ருவத்ப்ரியபரனாயும், தந்தையாயும் – பித்ருவத்ஹிதபரனாயும், இவ்வுலகினில் – (தன்வரிசையறியாத) இந்தலோகத்திலே, வாயும் – அவதரித்து வந்து, ஈசன் – தன் நிருபாதிகஸ்வாமித்வமே அடியாக, மணிவண்ணன் – நீலரத்நம்போலே யிருக்கிற வடிவை எனக்கு உபகரித்து, எந்தை – (அவ்வழியாலே) என்னை அடிமைகொண்ட ஸ்வாமியானவன், நெஞ்சமே – நெஞ்சமே, நீயும் – (“தொழு” என்று நியமிக்கலாம்படி பவ்யமான) நீயும், நானும் – (உன்னைக் கரணமாகவுடைய) நானும், இ – கீழ்ச்சொன்ன ப்ரக்ரியையாலே, நேர் – விமுகவ்யாவ்ருத்தியையுடையோமாய், நிற்கில் – நிற்கில், மேல் – மேலுள்ள காலமெல்லாம், மற்று – (ஸ்வாநுபவத்தையொழிய) மற்றும், ஓர் நோயும் – நோயாயிருப்பதொன்றையும், சார்கொடான் – அணுகக்கொடான்; சொன்னேன் – (இப்பரமார்த்தத்தை உனக்குச்) சொன்னேன்.  நோயென்று – அஹங்காரார்த்தகாமங்கள், அதுக்கு அடியான ஶரீரஸம்பந்தம், கர்மஸம்பந்தம் தொடக்கமானவை. ஸ்வநிகர்ஷாநுஸந்தாநமடியான விஶ்லேஷமுமாம்.

     ஈடு – ஆறாம் பாட்டு.  ‘இப்படி ஸுலப4னானவன் நம்மை விடானிறே!’ என்ன, ‘நம் அயோக்3யதையை அநுஸந்தி4த்து அகலாதொழியில் நம்மை ஒருநாளும் விடான்’ என்று திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார்.

     (நீயும் நானும் இந்நேர்நிற்கில்) ‘அப்புள்ளின் பின்போன’ (திருவிருத்தம் – 3) நீயும், உன்னைப் பரிகரமாகவுடைய நானும்.  ப2லாநுப4வம் பண்ணவிருக்கிற நாம் இப்படி விலக்காதேயிருக்கில்; “ந நமேயம்” என்னும் ப்ராதிகூல்ய மநோரத2 மின்றிக்கேயொழியில்.  (மேல் மற்றோர் நோயும் சார்கொடான்) நிஷித்3தா4நுஷ்டா2நம் பண்ணி அகலவிடுதல், தன்னையொழிய ப்ரயோஜநத்தைக் கொண்டு அகலவிடுதல், அயோக்3யதாநுஸந்தா4நம் பண்ணி அகலவிடுதல், வேறொரு ஸாத4நபரிக்3ரஹம் பண்ணி அகலவிடுதல், முன்பு பண்ணின பாபப2லாநுப4வம் பண்ணி அகலவிடுதல் செய்ய விட்டுக்கொடான்.  (நெஞ்சே சொன்னேன்) திருக்கோட்டியூர் நம்பியைப்போலே, “பிறரறியலாகாது ப43வத்3விஷயம்” என்றுபோலேகாணும் இவரிருப்பது! உபதே3ஶித்துவைத்து, “இத3ம் தே நாதபஸ்காய” என்றவனைப்போலே படுகிறார் (சொன்னேன்) என்று.  த்3ரௌபதி3, குழல்விரித்துக் கிடக்கிறபடியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொடுநின்றான்; அர்த்த2த்தின் கனத்தைப் பார்த்து, “கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே பொகட்டோம்” என்று “பதண் பதண்” என்றானிறே.  இனி ப்ரதிபத்தி பண்ணாதார் இழக்குமித்தனை.

     (தாயும் தந்தையுமாய்) மாதாபிதாக்களைப்போலே பரிவனாய்.  அவர்களளவன்றிக்கே – (இவ்வுலகினில் வாயும் ஈசன்)  ப்ரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் மாதாவைப்போலே, ஸம்ஸாரத்திலே ஒக்க விழுந்து எடுக்குமவன்.  இங்கு வந்து அவதரிக்கைக்கு ஹேதுவென்? என்னில் (ஈசன்) ப்ராப்தனாகையாலே.  அன்றிக்கே, இங்கே வந்து அவதரித்து ஈரரசு தவிர்க்கையாலே ஈசனானான் என்னவுமாம்.  (மணிவண்ணன் எந்தையே) தன் வடிவழகைக்காட்டி (என்னை முறையிலே நிறுத்தினான்.) என்னை விஷயாந்தர ப்ரவணனாகாதபடி மீட்டு, தன் ஶேஷித்வத்தைக் காட்டி, என்னுடைய ஶேஷத்வத்தை நிலைநிறுத்தினவன்.  தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணிவண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந்நேர்நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார்கொடான்; நெஞ்சமே சொன்னேன் – “ஸத்யம் ஸத்யம்” என்கிறபடியே இது மெய்.

ஏழாம் பாட்டு

எந்தை யேஎன்றும் எம்பெரு மான்என்றும்*
சிந்தை யுள்வைப்பன் சொல்லுவன் பாவியேன்*
எந்தை எம்பெருமான் என்று வானவர்*
சிந்தை யுள்வைத்துச் சொல்லும்செல் வனையே.

      – அநந்தரம், ஏவம்விதனுடைய ஸூரிபோக்யத்வ வைலக்ஷண்யத்தை அநுஸந்தித்து, ஸ்வநிகர்ஷமடியாக அகலத்தேடுகிறார்.

     வானவர் – பரமபதவாஸிகளானவர்கள், எந்தை – எங்கள் ஸத்தாதிஹேதுபூதனான, எம்பெருமானென்று – எங்களுக்குப் பரமஶேஷியென்று, சிந்தையுள் வைத்து – அநுஸந்தாநம் பண்ணி, சொல்லும் – சொல்லும்படியான, செல்வனை – ஐஶ்வர்யத்தையுடையவனை, பாவியேன் – பாபிஷ்ட்டனான நான், எந்தையேயென்றும் – எனக்கு ஹிதபரனே யென்றும், எம்பெருமானென்றும் – என்னுடைய ஶேஷியானவனேயென்றும், சிந்தையுள் – நெஞ்சுக்குள்ளேயும், வைப்பன் – வைத்து, சொல்லுவன் – சொல்லுவதுஞ் செய்யாநின்றேன்.

     ஈடு – ஏழாம் பாட்டு.  கீழ் இவர் அஞ்சினாற்போலே விடிந்தது.  “அயோக்3யன்” என்று அகலுகிறார்.

     (எந்தையேயென்றும்) எனக்குப் பரிவனானவனே! என்றும், (எம்பெருமான் என்றும்) எனக்கு வகுத்த ஸ்வாமி என்றும்.  (சிந்தையுள் வைப்பன்) எத்தனை விஷயங்களை நினைத்துப்போந்த நெஞ்சிலே வைத்தது! நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்து தூ3ஷித்தவளவேயோ? – (சொல்லுவன்) பிறர் அறியும்படி தூ3ஷித்தேன்.  (பாவியேன்) விலக்ஷணபோ4க்3யமான இவ்வஸ்துவை அழிக்கைக்கு நான் ஒரு பாபகர்மா உண்டாவதே! (பாவியேன்) ஸாத்விகனா யிருப்பானொருவன் தமோகு3ணாபி4பூ4தனாய் ஒரு க்3ருஹத்திலே நெருப்பை வைத்து, ஸத்வம் தலையெடுத்தவாறே அநுதபிக்குமாபோலே “பாவியேன்” என்கிறார்.  நீர் இங்ஙனே சொல்லுவானென்? ப43வத்4விஷயத்தை நினைக்கையும் சொல்லுகையும் பாபப2லமோ? என்னில்; புரோடா3ஶத்தை நாய் தீண்டினாற் போலே, விலக்ஷணருடைய போ4க்3யவஸ்துவை அழிக்கை பாபப2லமன்றோ – (எந்தை இத்யாதி3)  நினையாவிடில் அரைக்ஷணம் த4ரிக்கமாட்டாத நித்யஸூரிகள் நினைத்து அநுப4வித்த அவ்வநுப4வம் வழிந்து “எங்களுக்குப் பரிவனானவனே! ஸ்வாமியானவனே!” என்று தங்கள் நெஞ்சிலேவைத்துச்சொல்லும்படியான ஐஶ்வர்யத்தையுடையவனை நான் என் சொன்னேன்! இவ்வஸ்துவை ஒருவர் நம்பாதபடி அழித்தேன் – என்கிறார்.

எட்டாம் பாட்டு

செல்வ(ன்) நாரண னென்றசொல் கேட்டலும்*
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே*
அல்லும் நன்பக லும்இடை வீடின்றி
நல்கி* என்னை விடான்நம்பி நம்பியே.

      அநந்தரம், இப்படி அகல நினைத்திருக்கச்செய்தேயும், திருநாமஶ்ரவணத்தாலே மேல்விழும்படி என்னைப் பரிபூர்ணனான அவன் விடுகிறிலன் என்கிறார்.

     செல்வநாரணனென்ற – ஸ்ரீமந்நாராயணனென்கிற, சொல் – திருநாமத்தை, கேட்டலும் – கேட்டவளவிலே, கண் – கண்ணானது, பனிமல்கும் – நீர் மல்காநின்றது; நாடுவன் – (“எங்ஙனே” என்று) தேடாநின்றேன், மாயமே – இது ஒரு ஆஶ்சர்யமாயிருக்கிறதே; நம்பி – பரிபூர்ணனான நம்பியானவன், நல் – (தன்னைக்கிட்டுகைக்கு அடியான) நன்மையையுடைய, அல்லும் – இரவும், பகலும் – பகலும், இடைவீடின்றி – விச்சேதரஹிதமாக, நல்கி – ஸ்நேஹித்து, என்னை – என்னை, நம்பி – ஸ்வகீயத்வப்ரதிபத்திபண்ணி, விடான் – விடுகிறிலன்.  நம்புதல் – தன்னுடையவனாக விஶ்வஸித்தல்.

     ஈடு – எட்டாம் பாட்டு. “நாம் இதுக்குமுன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம்; இனித் தவிருமித்தனை” என்று “அவன்கு3ணங்கள் நடையாடாததோர் இடத்திலே கிடக்கவேணும்” என்று போய், ஒரு குட்டிச்சுவரிலே முட்டாக்கிட்டுக் கொண்டு கிடந்தார்; அங்கே வழிபோகிறான் ஒருவன், சுமை கனத்து “ஸ்ரீமந் நாராயணன்” என்றான்; அச்சொல்லைக்கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே ப்ரவணமாகிறபடியைக் கண்டு விஸ்மிதராகிறார்.

     (செல்வ(ன்) நாரணன் என்ற சொல்கேட்டலும்) ஆழ்வார் பரிஸரத்தில் ப்3ரஹ்மசாரி எம்பெருமான் பேர் சொல்லுவாரில்லை; அதில் அர்த்தா2நுஸந்தா4நம் பண்ணவேண்டாவாயிற்று இவர் நோவுபடுகைக்கு; என்போல? என்னில்; விஷஹரணமந்த்ரம்போலே.  அச்சொல் செவிப்பட்டவளவிலே, கண்ணானது என்னை யொழியவே நீர்மல்கப்புக்கது.  நெஞ்சும் அவ்வளவிலே “எங்குற்றாய்” (திருநெடுந்தாண்டகம் – 9)என்று தேடப்புக்கது.  (மாயமே) “அல்லேன்” என்று அகலுகைக்கு நான் வேண்டிற்று; “ஆவேன்” என்று கூடுகைக்கு நான் வேண்டிற்றில்லையீ!; ஈதோர் ஆஶ்சர்யமிருந்தபடியென்! அவன் பின்னைச் செய்கிறதென்? என்னில் (அல்லும் இத்யாதி3) தம் அபி4ஸந்தி4யொழியவே, தம்முடைய கரணங்களுக்கு ப43வத3நுப4வமே யாத்ரையாம்படி அவன் மேல்விழுகிற காலமாகையாலே, “நல்ல அல்லும், நல்ல பகலும்” என்கிறார்.

     தி3வாராத்ர விபா43மற எனக்கு ஸ்நேஹித்து, பரிபூர்ணனானவன் என்னை ஸ்வீகரித்து, என்னை விட க்ஷமனாகிறிலன்; அவன்பேர்மாத்ரத்தைக் கேட்டவளவிலே, என் கண்ணானது பனிமல்காநின்றது; நெஞ்சானது தேடாநின்றது;  இது ஓர் ஆஶ்சர்யமிருந்தபடியென்! என்கிறார்.

     (இடைவீடின்றி) நான் ஒருகால் தேடி விடாநின்றேன்; அவன் இடைவிடாதே ஸ்நேஹியாநின்றான்.  (என்னை விடான் நம்பி நம்பியே) அபூர்ணனான என்னைப் பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்.  (நம்பி) என்னை ஒரு மதிப்பனாக நினைத்து.  நம்பி, அல்லும் நன்பகலும் இடைவிடின்றி நல்கி, நம்பி என்னை விடான்;  மாயமே! (நம்பியே) இவனையே பரிபூர்ணனென்கிறது? ஸம்ஸாரிசேதநனைப் பெற்று, பெறாப்பேறு பெற்றானாயிருக்கிற இவனையே பரிபூர்ணன் என்கிறது லோகத்தார்?

ஒன்பதாம் பாட்டு

நம்பி யைத்தென் குறுங்குடி நின்றஅச்
செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை*
உம்பர் வானவர் ஆதியஞ் சோதியை*
எம்பி ரானைஎன் சொல்லி மறப்பனோ?

      அநந்தரம் அவனுடைய உபகாரகத்வம் மறக்கப்போமோ? என்கிறார்.

     தென்குறுங்குடி – திருக்குறுங்குடியிலே, நின்ற – நிற்கையாலே, நம்பியை –  ஸமஸ்த கல்யாணகுண பூர்ணனாய், (பரமபதத்தில் வடிவிலுங்காட்டில்), அ – ஒப்பமிட்ட, செம்பொன் – செம்பொன்போலே, திகழும் – உஜ்ஜ்வலமான, திருமூர்த்தியை – திருமேனியை யுடையனாய், உம்பர் – மேலான, வானவர் – நித்யஸூரிகளுக்கு, ஆதி – ஸத்தாதிஹேதுபூதனாய், அம் – ஸதாதர்ஶநீயமான, சோதியை – பரஞ்ஜ்யோதிஶ்ஶப்தவாச்யனாய், எம்பிரானை – (தாத்ருஶமான வடிவை) என்னை அநுபவிப்பித்து அடிமைகொண்டவனை, என்சொல்லி – எத்தைச்சொல்லி, மறப்பன் – மறப்பது? அபூர்ணன் என்று மறக்கவோ? அஸுலபனென்று மறக்கவோ? அநுஜ்ஜ்வலவிக்ரஹனென்று மறக்கவோ? அவிலக்ஷணபோக்யனென்று மறக்கவோ? ஸுஶீலனல்லனென்று மறக்கவோ? என்று கருத்து.

     ஈடு – ஒன்பதாம் பாட்டு. நீர்தாம் இங்ஙனே கிடந்து படாநில்லாதே, அவ் விஷயத்தை மறந்து ஸம்ஸாரிகளோபாதி உண்டுடுத்துத் திரியமாட்டீரோ? என்ன;  நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது? என்கிறார்.

     (நம்பியை) கல்யாணகு3ண பரிபூர்ணனை.  பரமபத3த்தில், கு3ணங்களுக்கு ஸத்3பா4வமேயிறே உள்ளது;  இங்கேயிறே கு3ணங்களுக்குப் பூர்த்தி.  (தென் குறுங்குடி நின்ற) ‘கலங்காப்பெருநகரத்தைக்’ (மூன்.திரு.51) கலவிருக்கையாக உடையவன், அத்தை விட்டு என்னைப்பற்றத் திருக்குறுங்குடியிலே அவ‑ஸரப்ரதீக்ஷனாய்க்கொண்டு ஸ்தா2வரப்ரதிஷ்டை2யாக நின்றவன்.  (நம்பியைத் தென்குறுங்குடி நின்ற) கு3ணத்திலே குறையுண்டாதல், தூ3ரஸ்த2ன் என்னுதல் செய்து நான் மறக்கவேணுமே.  (அச்செம்பொனே திகழும் திருமூர்த்தியை) வடிவழகிலே குறையுண்டாய்த்தான் மறக்கவோ? (அச்செம்பொன்) உபமாநரஹிதமாய், ஒட்டற்ற செம்பொன்போலே நிரவதி4க தேஜோரூபமாய், வாங்மநஸ்ஸுக்களாலும் பரிச்சே2தி3க்கவொண்ணாத தி3வ்ய மங்க3ள விக்3ரஹத்தையுடையவனை.

     (உம்பர் இத்யாதி3) அவ்வடிவழகை அநுப4விக்க இட்டுப்பிறந்த நித்யஸூரிகளைச் சொல்லுகிறது.  ஆக்கரான இவ்வருகில் வானவரைப்போலே யன்றியே, மேலான நித்யஸூரிகளுடைய ஸத்தாதி3களுக்கும் தானே கடவனாய், அவர்களுக்கு அநுபா4வ்யமான தி3வ்யமங்க3ள விக்3ரஹத்தையுடையவனை.  (எம்பிரானை) அவர்கள் அநுப4விக்கும் படியை எனக்கு உபகரித்தவனை.  (என்சொல்லி மறப்பனோ) அபூர்ணனென்று மறக்கவோ, அஸந்நிஹிதனென்று மறக்கவோ, வடிவழகில்லை யென்று மறக்கவோ, மேன்மையில்லையென்று மறக்கவோ, எனக்கு உபகாரகனன்று என்று மறக்கவோ? எத்தைச் சொல்லி மறப்பன் என்கிறார்.

பத்தாம் பாட்டு

மறப்பும் ஞானமும் நானொன் றுணர்ந்திலன்*
மறக்கு மென்றுசெந் தாமரைக் கண்ணொடு*
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை*
மறப்ப னோஇனி யான்என் மணியையே.

      – அநந்தரம், மறவாதபடி அவனே யத்நம்பண்ணாநிற்க, மறக்க விரகுண்டோ? என்கிறார்.

     மறப்பும் – மறப்பென்றும், ஞானமும் – அறிவென்றும், ஒன்று – ஒன்றை உணர்ந்திலன் – அறிந்திலேனாயிருக்க, (தன்விஷயத்திலறிவை யுண்டாக்கி), மறக்கும் – இத்தை இவன் மறக்கும், என்று – என்று நினைத்து, (கடாக்ஷிக்கைக்கடியான), செம்தாமரை – சிவந்த தாமரை போன்ற, கண்ணொடு – கண்ணோடே, மறப்பற – மறப்புப்புகுராதபடி, என்னுள்ளே – என்னெஞ்சுக்குள்ளே, மன்னினான்தன்னை – நிரந்தரவாஸம்பண்ணி, என்மணியை – நீலரத்நம்போலே முடிந்தாளலாம்படி எனக்கு ஸுலபனானவனை, இனி – இனி, யான் – நான், மறப்பனோ – மறக்கும்படியென்?

     ஈடு – பத்தாம் பாட்டு.  ஆனாலும் வருந்தியாகிலும் மறந்தாலோ? என்ன; நெஞ்சில் இருளை அறுத்துக்கொண்டு நிரந்தரவாஸம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ? என்கிறார்.

     (மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன்) நான் சேதநனாய் நினைத்தேனாகிலன்றோ மறப்பது? நினைத்தேன் நானானவன்றிறே மறக்க இடமுள்ளது.  ஜ்ஞாநத்துக்கு ஆஶ்ரயமாமதிறே அஜ்ஞாநத்துக்கும் ஆஶ்ரயமாவது; அசித்கல்பனாய்க் கிடீர் நானிருந்தது! (மறக்கும் இத்யாதி3) இப்படியிருக்கிற நான் நினைத்தேனாகவும் நினைவையும் என்தலையிலே ஏறிட்டு, “பிறந்த ஜ்ஞானத்துக்கு விச்சே23ம் வரவொண்ணாது” என்று பார்த்து, அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கிக்கொண்டு, தன்னைப்பற்றி எனக்கு வரும் விஸ்ம்ருதி போம்படி என் ஹ்ருத3யத்திலே நித்யவாஸம் பண்ணுகிறவனை.  (மன்னினான்) “புறம்பே அந்யபரதையுண்டு” என்று தோற்ற இருக்கிறிலன்.  (மறப்பனோ இனி யான் என் மணியையே) பெருவிலையனான ரத்நம் கைப்புகுந்தால் அத்தை முடிந்து அநுப4வியாதே உதறுவர்களோ? (மறப்பனோ இனி) மறவாமைக்குப் பரிகரம் அவன் கையிலே உண்டாயிருக்க, இனி மறக்க உபாயமுண்டோ? கீழ் அநாதி3காலம் நினைக்க விரகில்லாதாப்போலேயிறே மேலுள்ள காலமும் மறக்க விரகில்லாதபடியும்.  (யான்) அநாதி3காலம் “மறந்தேன் உன்னை முன்னம்” (திருமொழி 6-22) என்கிறபடியே விஸ்மரித்துப் போந்த நான்.  (என் மணியையே) பெருவிலையனாய் முடிந்தாளாலாம்படி கைப்புகுந்து புகரையுடைத்தான நீலமணிபோலேயிருக்கிற தன்னை எனக்கு அநுப4வயோக்3யமாம்படி பண்ணிவைத்த பின்பு, நான் அவனை அநாத3ரிப்பனோ?

பதினொன்றாம் பாட்டு

*மணியை வானவர் கண்ணனைத் தன்னதோ
ரணியை* தென்குரு கூர்ச்சட கோபன்* சொல்
பணிசெ யாயிரத்துள் இவை பத்துடன்*
தணிவி லர்கற்ப ரேல்கல்வி வாயுமே.

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்

      – இத்திருவாய்மொழிக்கு ப2லம் – இதினுடைய கல்வியே கைங்கர்யமென்று அருளிச்செய்கிறார்.

     மணியை – (உஜ்ஜ்வலமான) மாணிக்கம்போன்ற வடிவையுடையனாய், (அந்தவடிவாலே), வானவர் – பரமபதவாஸிகளுக்கு, கண்ணனை – நிர்வாஹகனாய், (அவ்வழகுக்கு ஒப்பில்லாமையாலே), தன்னதோரணியை – தனக்குத்தான் அலங்காரமாம்படி அத்விதீயனானவனை, தென் – கட்டளைப்பட்ட, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், சொல் – சொல்லாலே, பணிசெய் – பணிசெய்த, ஆயிரத்துள் – ஆயிரத்துள், இவைபத்து – இவை பத்தையும், உடன் – அபிப்ராயத்தோடே உடன்பட்டு, தணிவிலர் – ஆறுதலற்று, கற்பரேல் – (அபிநிவேஶத்தோடே ஓராசார்யமுகத்தாலே) அப்யஸிப்பார்களாகில், கல்வி – அந்தக்கல்வி, வாயும் – கைங்கர்யரூப பலத்தோடே சேரும்.  ‘சொற்பணிசெய்’ என்றது – சொல்லெடுத்துக் கைநீட்டின என்றுமாம்.  அன்றியே, ‘சடகோபன் – சொல்’ என்று கூட்டி, ‘பணிசெயாயிரம்’ என்றது, கைங்கர்யரூபமான ஆயிரமென்றுமாம்.  இது கலிவிருத்தம்.

வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் திருவடிகளே ஶரணம்

     ஈடு – நிக3மத்தில் – இப்பத்தைக் கற்றவர்கள் நிரதிஶய புருஷார்த்த2மான ப43வத் கைங்கர்யத்தைப் பெறுவர் என்கிறார்.

     (மணியை) ‘முந்தானையிலே முடிந்தாளலாம்படி கைப்புகுந்திருக்கும்’ என்று ஸௌலப்4யம் சொல்லுகிறது.  “தென்குறுங்குடி நின்ற” (1.10.9) என்கிற விடத்தில் ஸௌலப்4யம். (வானவர் கண்ணனை) “உம்பர் வானவராதியஞ்சோதி” (1.10.9) என்ற மேன்மையைச் சொல்லுகிறது.  (தன்னதோரணியை) “அச்செம்பொனே திகழும் திருமூர்த்தி” (1.10.9) என்கிற வடிவழகை நினைக்கிறது.  இம்மூன்றும் கூடின பசுங்கூட்டாயிற்று பரதத்வமாகிறது.  (தென்குருகூர்ச் சடகோபன்) ஆழ்வார் அருளிச்செய்ததாய், “நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோமாகவேணும்” என்று, சொற்கள் தான் “என்னைக்கொள், என்னைக்கொள்” என்று “மிடைந்த சொல்” (1-7-11) என்கிறபடியே சொற்கள் பணிசெய்த ஆயிரம் என்னுதல்; சொல்லாலே பணிசெய்த ஆயிரமென்று வாசிகமான அடிமையைச் சொல்லுதல்.  (உடன் தணிவிலர் கற்பரேல்) ஸாபி4ப்ராயமாகக் கற்பராகில்.  தணிவாகிறது மெத்தென்கை.  “வரில் பொகடேன், கெடில் தேடேன்” என்று இருக்கையன்றியே ஶ்ரத்3தை4 மாறாதே கற்பராகில்.  (கல்வி வாயுமே) “ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு” (முதல் திருவந்தாதி – 67) என்கிறபடியே – ஜ்ஞாநமாகில் ப43வத்3விஷயத்தைப்பற்றியல்லதிராமையாலே, இத்தை அப்4யஸிக்க, இதுக்குப் ப2லமாகக் கைங்கர்யத்தை இதுதானே தரும்.  (கல்வி வாயும்) கல்விதானே ப்ரயோஜநம் என்றுமாம்.

     இத்திருவாய்மொழியில், மேல் பரக்க அருளிச்செய்யப் புகுகிற அர்த்த2த்தை ஸங்க்3ரஹேண முதற்பாட்டிலே அருளிச்செய்தார்; இரண்டாம் பாட்டில், பரம ப4க்திக்கும் பரிக3ணநைக்கும் ஒக்க முகங்காட்டும் என்றார்; மூன்றாம் பாட்டில், கண்டாயே அவன் ஸ்வரூபமிருந்தபடி, நீயும் உன் ஸ்வரூபத்துக்குச்சேர நிற்கப்பாராய்! என்றார்;  நாலாம் பாட்டில், ஸ்வரூபாநுரூபமாக நெஞ்சு தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடினார்; அஞ்சாம் பாட்டில், கீழ் “எண்ணிலும்” என்றது ப2லத்தோடே வ்யாப்தமானபடியை நெஞ்சுக்கு அருளிச்செய்தார்; ஆறாம் பாட்டில், நாம் இருவரும் இப்படியே நிற்கப்பெறில் நமக்கு ஒரு அநர்த்த2மும் வாராது என்றார்; ஏழாம் பாட்டில், கீழ் இவர் அஞ்சினபடியே விடிந்தபடி சொன்னார்; எட்டாம் பாட்டில், திருநாம ஶ்ரவணத்தாலே தம்முடைய கரணங்களுக்குப் பிறந்த விக்ருதியைச் சொன்னார்; ஒன்பதாம் பாட்டில், விக்ருதராகாதே மறந்தாலோ? என்ன,  மறக்கவொண்ணாது என்றார்; பத்தாம் பாட்டில், வருந்தியாகிலும் மறந்தாலோ? என்ன, என் ஹ்ருத3யத்திலே இருக்கிறவனை மறக்கப்போமோ? என்றார்; நிக3மத்தில், கற்றார்க்குப் ப2லஞ்சொன்னார்.

     ஸர்வஸ்மாத்பரனென்றார்;  ப4ஜநீயனென்றார்; அவன்தான் ஸுலப4 னென்றார்; ஸுலப4னானவன் அபராத4ஸஹனென்றார்; அவன் ஶீலவானென்றார்; ஸ்வாராத4னென்றார்; நிரதிஶயபோ4க்3யனென்றார்; அவனுடைய ஆர்ஜவகு3ணம் சொன்னார்; ஸாத்ம்யபோ43ப்ரத3னென்றார்; இப்படி – ஏவம்பூ4தனானவன் நிர்ஹேதுகமாக விஷயீகரிப்பானொருவன் என்றார்; “ஆகையாலே, ‘அவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே’(1-1-1) ” என்று தம் திருவுள்ளத்தைக்குறித்து அருளிச்செய்து தலைக்கட்டினார்.

     முதற்பத்தால் – ப43வத் கைங்கர்யம் புருஷார்த்த2மென்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால் – அந்தக் கைங்கர்யத்தில் களையறுத்தார்; மூன்றாம் பத்தால் – விரோதி4கழிந்த கைங்கர்யவேஷம் – ப4ாக3வதஶேஷத்வபர்யந்தமான ப43வத் கைங்கர்யம் என்றார்; நாலாம் பத்தால் – இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி4 – ஐஶ்வர்ய கைவல்யம் என்றார்; அஞ்சாம் பத்தால் – அந்த விரோதி4யைப் போக்குவானும் அவனே என்றார்; ஆறாம் பத்தால் – விரோதி4நிரஸநஶீலனானவன் திருவடிகளிலே ஶரணம் புக்கார்; ஏழாம் பத்தால் – இப்படிப் பெரியபிராட்டியார் முன்னிலையாக ஶரணம் புக்கவிடத்திலும், த3க்34பட ந்யாயம்போலே ஸம்ஸாரம் அநுவர்த்திக்கிறபடியைக்கண்டு விஷண்ணராகிறார்; எட்டாம் பத்தால் – “இப்படி ப்ரபந்நராயிருக்கச்செய்தேயும் த3க்3தபட ந்யாயம்போலே நம்மை விடாதே அநுவர்த்திக்கிறது நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசையறாதபடியாலே” என்று பார்த்து, அவற்றில் ஒரு நசையில்லை என்கிறார்; ஒன்பதாம் பத்தால் – “இப்படி நசையற்ற பின்பும் ரக்ஷியாதொழிவானென்?” என்று அதிஶங்கைபண்ண, “நான் நாராயணன், ஸர்வஶக்தியுக்தன்; உம்முடைய ஸர்வாபேக்ஷிதங்களும் செய்து முடிக்கிறோம்” என்று அருளிச்செய்ய, அவனுடைய ஶீலகு3ணத்திலே ஆழங்காற்படுகிறார்; பத்தாம் பத்தால் – ஆழ்வாருடைய பதற்றத்தைக்கண்டு, திருமோகூரிலே தங்குவேட்டையாக வந்து தங்கி, இவர்க்கு அர்ச்சிராதி33தியையும் காட்டி, இவருடைய அபேக்ஷித ஸம்விதா4நம் பண்ணினபடியை அருளிச்செய்தார்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– பொருமாநீள்

இத்த3ம் ஶ்ரிய:பதிக்ருதஸ்வஸமஸ்ததே3
ஸம்ஶ்லேஷலக்ஷணப2லஸ்ய ஸுது3ர்லப4ஸ்ய |
4க்த்யாதி3வத் ஸ்வக3ணநே‍பி ச தத்ப்ரஸாதா3த்
நிர்ஹேதுகத்வமவத3த்33ஶமே ஶடா2ரி: || 10

வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் திருவடிகளே ஶரணம்

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிபொருமாநீள்

விஷ்வக்3விக்ராந்தி த்3ருஶ்யம் விக3ணநஸுலப4ம் வ்யக்தபூர்வோபகாரம்
ஸ்வாந்தஸ்யைகாக்3ர்யஹேதும் ஸ்வயமுத3யஜுஷம் ப3ந்த4மாத்ரோபயாதம் |
சிந்தாஸ்துத்யாதி3லக்ஷ்யம் நதஜநஸததஶ்லேஷிணம் த3ர்ஶிதார்ச்சம்
ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம் ஸ்வவிதரணமஹௌதா3ர்யதுஷ்டோ‍ப்4யசஷ்ட || 10

ஆதா3வித்த2ம் பரத்வாத3கி2லஸமதயா ப4க்தஸௌலப்4யபூ4ம்நா
நிஶ்ஶேஷாக3ஸ்ஸஹத்வாத்க்ருபணஸுக4டநாச்ச2க்யஸம்ராத4நத்வாத் |
ஸ்வாது3ஸ்வோபாஸநத்வாத் ப்ரக்ருதிருஜுதயா ஸாத்ம்யபோ43ப்ரத3த்வாத்
அவ்யாஜோதா3ரபா4வாத3மநுத ஶதகே மாத4வம் ஸேவநீயம் ||   11

வேதாந்தாசார்யர் திருவடிகளே ஶரணம்

திருவாய்மொழி நூற்றந்தாதி

பொருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து*
தருமாறோ ரேதுவறத் தன்னைத்*-திரமாகப்
பார்த்து உரைசெய் மாறன் பதம்பணிக என்சென்னி*
வாழ்த்திடுக என்னுடைய வாய்.                                10

பெரியஜீயர் திருவடிகளே ஶரணம்

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்

எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்

ஜீயர் திருவடிகளே ஶரணம்

முதல் பத்து முற்றிற்று.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.