[highlight_content]

02-02 12000/36000 Padi

இரண்டாம் திருவாய்மொழி
திண்ணன்வீடு – ப்ரவேசம்

*****

– இரண்டாம் திருவாய்மொழியில் கீழ் உக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்வாபாதகமாய், “மாவாய் பிளந்து” என்று தொடங்கிக் கீழ் ப்ரக்ருதமான ஸௌலப்யத்துக்கும், ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாஶகமான மநுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான, அவதார தசையிலும் அவனுடைய ஸர்வநிர்வாஹகத்வத்தையும், அநிஷ்டநிவ்ருத்தீஷ்டப்ராப்திஹேதுத்வத்தையும், ஸர்வாதிகத்வத்தையும், ஸர்வப்ரகாரஸமாராத்யதையையும், ஆதிக்யஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும், ஆஸ்ரிதரக்ஷணார்த்தமான அர்ணவஸாயித்வத்தையும், அகடிதகடநாஸாமர்த்யத்தையும், ஸர்வப்ரகார ரக்ஷகத்வத்தையும், ஜகஜ்ஜந்மாதிஹேதுத்வத்தையும், ஸர்வதேவதா ஸமாஸ்ரயணீயத்வத்தையும் அருளிச்செய்து, ஸர்வஸ்மாத்பரனாய் ஸர்வஸுலபனான ஈஸ்வரனுடைய போக்யத்வவர்த்தகமான உத்துங்கலலிதத்வத்தை உபபாதிக்கிறார்.

ஈடு – கீழில் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலமன்றிறே; “கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை” என்னுமாபோலே.  “ஆற்றாமையோடே முடிந்துபோமித்தனை” என்றிருந்தார்; அநந்தரம் அவன் வந்து முக2ங்காட்டினவாறே ஆற்றாமை புக்கவிடம் கண்டிலர்; “இதுக்கு அடியென்?” என்று பார்த்து ஆராய்ந்தவாறே, இதர விஷயங்களினுடைய லாபா4லாப4த்தளவல்லாத விஷயவைலக்ஷண்யமாயிருந்தது;  பிரிந்தபோது தன்னையொழிய வேறொன்று தோற்றாதபடியாய், கலந்தபோதும், தன்னையொழிய மற்றொன்று தோற்றாதபடியான விஷய வைலக்ஷண்யமாயிருந்தது.

“இதுக்கு அடியென்?” என்று பார்த்தார்; ஸமஸ்த கல்யாண கு3ணாத்மக னாகையாலேயாயிருந்தது;  “இதுதனக்கு அடியென்?” என்று பார்த்தவாறே, ஸர்வேஶ்வரனாகையாலேயாயிருந்தது;  “உயர்வற உயர்நல•டையவன்” (1-1-1) என்றால், “அயர்வறும் அமர்களதிபதி” (1-1-1) என்றிறே தோற்றுவது; ஆக, இங்ஙனே ப்ராஸங்கி3கமாக ப்ரஸ்துதமான ஈஸ்வரத்வத்தை அநுஸந்தி4த்து, அத்தை அருளிச்செய்கிறார்.

“கீழே ‘மூவாமுதல்வா’ (2-1-10) என்று காரணத்வம் ப்ரஸ்துதமாகையாலே, அந்தக் காரணத்வத்தை உபபாதி3க்கிறார்” என்று பணிக்கும்  பிள்ளான்.  முதல் திருவாய்மொழியிலும் சொல்லிற்றில்லையோ ஈஸ்வரத்வம்?’ என்னில்; “ஒருகால் சொன்னோம்”என்று கைவாங்கியிருக்க வல்லரல்லர் இவர்.  ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கலாம் விஷயமன்று அது.  இனித்தான் ப43வத்3விஷயத்தில் புநருக்தி தோ3ஷாய ஆகாது; ஒரு கு3ணத்தையே எல்லாக்காலமும் அநுப4விக்க வல்லாரொருவர் இவர்; ஒரு கு3ணந்தன்னையே “இதுக்கு முன் அநுப4விப்பித்தது இக்கு3ணம்” என்று தோற்றாதபடி க்ஷணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுப4விப்பிக்க வல்லானொருவன் அவன்; பயிலாநிற்கச் செய்தேயிறே “பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்” (பெரிய திருமொழி 8-1-9) என்பது; ஆகையிறே ஏகவிஷயமே நித்யப்ராப்யமாகிறது; இவர் தாமும், “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழி ஊழிதொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதம்” (2-5-4) என்னாநின்றார்.

ஆனாலும் இதுக்கு வாசியுண்டு; முதல்திருவாய்மொழியிலே – பரத்வம் சொல்லாநிற்கச்செய்தே, அது ஸ்வாநுப4வமாயிருக்கும்; அந்தப் பரத்வந்தன்னை எல்லார்க்கும் அநுப4விக்கலாம்படி பிறர்நெஞ்சிலே படுத்துகிறாராகையால் பரோபதே3சத்தாலே பரத்வாநுப4வம் பண்ணுகிறார்;  அங்கு – அந்வயமுக2த்தாலே பரத்வம் சொன்னார்;  அந்வயவ்யதிரேகங்களிரண்டாலும் பரத்வம் சொல்லுகிறார் இங்கு.  அங்கு – ஸ்ருதிச்சா2யையாலே சொன்னார்;  இங்கு இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே சொல்லுகிறார்.  அங்கு – பரத்வத்திலே பரத்வம்; இங்கு – அவதாரத்திலே பரத்வம்.

முதல் பாட்டு

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்*
எண்ணின் மீதியன் எம்பெரு மான்*
மண்ணும் விண்ணுமெல்லாம் உட னுண்ட*நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே.

– முதற்பாட்டில், க்ருஷ்ணனே ஸர்வநிர்வாஹகன் என்கிறார்.

திண் – திண்மையையுடைத்தாய், நல் – விலக்ஷணமான, வீடு – மோக்ஷம், முதல் – முதல், முழுதுமாய் – ஸகலப்ரயோஜந நிர்வாஹகனாய், எண்ணின்மீதியன் – நினைவுக்கு அவ்வருகான அபரிச்சிந்ந ஸ்வபாவனாய், எம்பெருமான் – (இம்மேன்மையைக் காட்டி) என்னை அடிமைகொண்ட ஸ்வாமியாய், மண்ணும் – பூமியும், விண்ணும் – ஊர்த்வலோகமும், எல்லாம் – ஒன்றொழியாமல், உடன் – (தாரதம்யமில்லாதபடி) ஏகோத்யோகத்திலே, உண்ட – வயிற்றிலே வைத்து நோக்கி, நம் கண்ணன் – க்ருஷ்ணனாய் அவதரித்து நமக்கே தன்னைத்தந்த ஸுலபனே, கண் – ஜகத்துக்கு நிர்வாஹகன்; அல்லது – அல்லது, ஓர் – ஒரு, கண் – நிர்வாஹகவஸ்து, இல்லை – இல்லை.

கண் – களைகண்.  திண்ணன் என்றது – நிஸ்சிதம் என்றுமாம்.

ஈடு – முதற்பாட்டு.  இத்திருவாய்மொழியில் சொல்லுகிற பரத்வத்தை ஸங்க்3ரஹேண அருளிச்செய்கிறார்.

(திண்ணன்வீடு முதல் முழுதுமாய்) திண்ணன் என்றது – திண்ணம் என்றபடி.  அதாவது – த்3ருட4ம் என்றபடி.  த்3ருட4மான வீடு என்று – நித்யவிபூ4திக்கு விசேஷணமாய், தா3ர்ட்4யமாவது – ஆவிர்பா4வ திரோபா4வ ஜந்ம நாச விகல்பங்கள் என்னுமவையில்லாமையாலே கர்மநிப3ந்த4நமாக வரும் அழிவில்லை என்கை.  ஐச்ச2மாக வரும் விகாரங்களுண்டு; ஆனால் தோ3ஷாயவுமன்று; அது அழிவாயும் தோற்றாதிறே; ஏதேனுமாக ஸம்ஸார விபூ4தியிற்போலே கர்மநிப3ந்த4நமாக வருமவை இல்லை என்கை.  திண்ணிதான நித்யவிபூ4தி தொடக்கமான எல்லா விபூ4தியையுமுடையனாய்;  அன்றியே, “திண்ணம்” என்கிற இத்தை விட்டுவைத்து, வீடுமுதல் முழுதுமாய் – மோக்ஷப்ரப்4ருத்ய சேஷபுருஷார்த்த2ப்ரத3னாய் என்னவுமாம்.

(எண்ணின் மீதியன்) அஸங்க்2யேயமான கல்யாணகு3ணத்தையுடையவன்.  கீழ் விபூ4திபரமானபோது, “எண்ணின் மீதியன்” என்றது – கு3ணபரமாகிறது; கீழ் கு3ணபரமானபோது, “எண்ணின் மீதியன்” என்றவிடம் – விபூ4திபரமாகிறது.  “வீடுமுதல் முழுதுமாய்” என்றபோது – மோக்ஷப்ரத3த்வத்தையே நினைத்ததாகில், “எண்ணின் மீதியன்” என்றவிடம் – அநுக்தமான கு3ணங்களைச் சொல்லுகிறது.  “எண்ணின் மீதியன்” என்றவிடம் – எண்ணுக்கு மேலாயுள்ளான் என்றபடி.  கு3ணங்களாலேயாதல், விபூ4தியாலேயாதல் வந்த அபரிச்சே2த்3ய ஸ்வபா4வதையைச் சொல்லுகிறது.  (எம்பெருமான்) கு3ணவிபூ4திகளை யுடையனாயிருக்கிற இருப்பைக்காட்டி என்னை எழுதிக்கொண்டவன்.

(மண்ணும் இத்யாதி3) இப்படி இவற்றையுடையனாய், உடைமை நோவுபட விட்டிருக்கையன்றிக்கே ப்ரளயாபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கும் என்கிறார்.  பூ4ம்யந்தரிக்ஷாதி3களை வெள்ளங்கொள்ளப்புக, எடுத்து வயிற்றிலே வைக்கிற விடத்தில் ஒன்றும் பிரிகதிர்ப்படாமே, ஏககாலத்திலே வைத்து ரக்ஷித்த நம் கண்ணன்.  (உடனுண்ட) ரக்ஷணம் அவனுக்கு தா4ரகமாகையாலே – “உண்ட” என்கிறது.  இல்லையாகில், “காக்கும்” என்ன அமையும்.

க்ருஷ்ணனோ பின்னை ஜக3த்தை விழுங்கினான்? என்னில்; ஆம், க்ருஷ்ணனே;  அங்காந்திட வையமேழும் காண்டா(பெரியாழ்வார் திருமொழி 1-1-6) ளிறே யசோதை; ஆகையாலே ஸர்வரக்ஷகனான க்ருஷ்ணனே ஜக3த்துக்கு த்3ருஷ்டி; “க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய:ஐ க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே” என்கிற ப்ரமாண ப்ரஸித்3தி4யிருக்கிறபடி.

(அல்லது இல்லை ஓர் கண்ணே) இவ்வர்த்த2த்தையொழிய சப்33த்தைக் கொண்டுபோய், “பீலிக்கண்” என்று வ்யவஹரியாநின்றதிறே;  அதுக்கும் கூச வேண்டும்படியிருக்கும்.  மாலைக் கண்ணென்றிருப்பார்க்கு அல்லாதது எல்லாம் மாலைக்கண்ணாய்த் தோற்றுமிறே.  இது திண்ணம் – த்3ருட4ம்; “ஸத்யம் ஸத்யம்” என்னுமாபோலே.  “நம் கண்ணன் கண்” என்கையாலே – அந்வயத்தாலே பரத்வம் சொன்னார்.  “அல்லது இல்லை” என்கையாலே – வ்யதிரேகத்தாலே பரத்வம் சொன்னார்.

இரண்டாம் பாட்டு

ஏ!பா வம்பரமே ஏழுலகும்*
ஈபா வஞ்செய்து அருளால் அளிப்பாரார்*
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்*
கோபாலகோளரி ஏறன்றியே.

– அநந்தரம், அநிஷ்டநிவ்ருத்திக்கும் இஷ்டப்ராப்திக்கும் ஹேது க்ருஷ்ணன் என்கிறார்.

மா – அறப்பெரியதான, பாவம் – குருபாதகம், விட – விட்டுப்போம்படி, அரற்கு – ருத்ரனுக்கு, பிச்சை பெய் – பிக்ஷாப்ரதாநம் பண்ணினவனாய், கோபாலகோள் அரியேறு – கோபகுலத்தில் பிறந்தார்க்குள் ஸிம்ஹஸ்ரேஷ்ட்டமான க்ருஷ்ணன், அன்றியே – அன்றி, ஏழுலகும் – ஸர்வலோகத்தையும், ஈபாவஞ்செய்து – நசித்தபாபத்தையுடைத்தாம்படி பண்ணி, அருளால் – தன் க்ருபையாலே, அளிப்பார் – (அபிமதங்களைக்கொடுத்து) ரக்ஷிப்பார், ஆர் – ஆர்? ஏபாவம் – என்ன பாவமிருந்தபடி! பரமே – (இவனுடைய ஸர்வாதிகத்வம் சொல்லுதல் நமக்கு) பரமாவதே! ‘ஏ’ என்று – வெறுப்பைக் காட்டுகிறது.

ஈடு – இரண்டாம் பாட்டு.  “அல்லதில்லை” என்று நீர் சொல்லுவானென்? ப்3ரஹ்மருத்3ரர்களும் ஈஸ்வரர்களாக, அவர்களுக்கும் சில ப்ரமாணங்களுண்டாயன்றோ போருகிறது? என்னில்; அவர்கள் நிலைகளை ஆராய்ந்து பார்த்தால், தலையறுப்பார் சிலரும், அறுப்புண்டு நிற்பார் சிலருமாகாநின்றார்கள்; அவர்கள் ஆபத்தைப் போக்கி ரக்ஷியாநின்றான் இவன்; அவர்களோ இவனோ ஈஶ்வரன்? என்கிறார்.

(ஏபாவம்) “ஏ” என்றது – “ஓ!” என்றபடி.  விஷாதா3திஸய ஸூசகமிருக்கிறபடி. (ஏ பாவம்) ரத்நகரீஷங்களுக்கு வைஷம்யம் சொல்ல வேண்டுவதே! “சேதநர் மந்த3மதிகளாய் ப43வத்பரத்வம் உபபாதி3க்க வேண்டுவதே!” என்னும் இன்னாப்பாலே, ‘என்னே! பாவம்’ என்கிறார்.  (பரமே) ப43வத்3கு3ணாநுப4வம் பண்ணுகையொழிய இது நமக்கு ப4ரமாவதே! இது நமக்கு ஸாத்4யமாய் வந்துவிழுவதே! (ஏழுலகும்) ஏழுலகங்களிலும் உண்டான சேதநர், இருந்ததே குடியாகப் பாபங்களைக் கூடுபூரிக்க, ஈபாவம் செய்து – பாபமானது ஈயும்படியாகச் செய்து – அழியும்படியாகப்பண்ணி.  இதுதான் சேதநர் அர்த்தி2க்கச் செய்கையன்றிக்கே – (அருளால்) நிர்ஹேதுகக்ருபையாலே.

(அளிப்பாரார்) இவர்களை ஈரக்கையாலே தடவி ரக்ஷிப்பார் ஆர்? இவர்கள் பண்ணின பாபம் அவனருளாலே போக்கில் போமத்தனையல்லது, தாங்கள் ப்ராயஸ்சித்தம் பண்ணிப் போக்குகையாவது – அவற்றை வர்த்தி4ப்பிக்கையிறே. “அளிப்பான் இவன்” என்னாதே, “ஆர்?” என்கிறது – அவர்களுக்கும் ஸத்த்வம் தலையெடுத்தபோது, “நீர்சொல்லுகிறவனே” என்று இசையவேண்டும் ப்ரஸித்3தி4யாலே; “பாவநஸ்ஸர்வலோகாநாம் த்வமேவ” “நஹி பாலநஸாமர்த்2யம் ருதே”.  அவன் ஸர்வவிஷயமாகப் பண்ணின ரக்ஷணம் கிடக்கிடீர்; தந்தாம் கால் தாந்தாம் நீட்டிமுடக்க வல்லராயிருக்கிறவர்களும், ஓரோரளவுகளிலே ஆபந்நரானால், அவற்றைப்போக்கி ரக்ஷிக்கும்படியைப் பார்க்கலாகாதோ? என்கிறார்.  (மாபாவம்விட) ஆனைக்கும் தனக்குத் தக்க வாதமிறே.  அல்லாதாரில் ஜ்ஞாநசக்த்யாதி3களாலே ஓராதி4க்யமுண்டிறே அவனுக்கு; அவற்றைக்கொண்டு லோககு3ருவுமாய்த் தனக்குப் பிதாவுமாயிருக்கிறவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான்.  (வாமாங்கு3ஷ்ட2 நகா2க்3ரேண சி2ந்நம் தஸ்ய ஸிரோ மயா) என்கிறபடியே.  மஹாபாபமானது விடும்படியாக.

(அரற்குப் பிச்சைபெய் கோபாலகோளரியேறு) அவன்தான் ஸம்ஹர்த்தாவான வேஷத்தோடே அதி4காரங்குலையாதே நின்று பாபத்தை விளைத்துக் கொள்ள, இவன் அவனுக்கு து3:க்க2நிவர்த்தகனாயிற்று, அங்கே இங்கே ஆவிர்ப4வித்துத் திரிகிற விடத்திலேயாயிற்று.  ‘இவர்கள் எத்தனையேனும் உயர நின்றாலும் அநர்த்த2த்தையே சூழ்த்துக்கொள்ளுமித்தனை; அவன் எத்தனையேனும் தன்னைத் தாழவிட்டாலும் ரக்ஷகனாம்’ என்கையும் சொல்லுகிறது.  கோ3பாலருடைய மிடுக்கையுடைத்தான ஸிம்ஹபுங்க3வம் என்றபடி.  (கோபாலகோளரியேறு) கோளென்று மிடுக்காதல், ப்ரதிபக்ஷத்தைக் கொள்ளும் என்னுதல்.  நித்யஸூரிகளுக்கு நியந்தாவானவன் இடையருக்கு நியாம்யனாகப்பெற்ற மேனாணிப்பு.  கர்மவஸ்யராய், ஆபந்நரான இவர்களை “ஈஸ்வரர்கள்” என்போமோ? ஆபத்துக்களைப் போக்கி ரக்ஷிக்கிற இவனை “ஈஸ்வரன்” என்போமோ? “ஏறன்றி – அருளால் அளிப்பாரார்” என்று அந்வயம்.

மூன்றாம் பாட்டு

ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை*
வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து*
மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட*
மால்தனில் மிக்கும்ஓர் தேவும் உளதே?

– அநந்தரம், இவனே ஸர்வஸ்மாத்பரன் என்கிறார்.

ஏறனை – ருஷபவாஹநனான ருத்ரனையும், பூவனை – கமலாஸநனான ப்ரஹ்மாவையும், பூமகள்தன்னை – பத்மவாஸிநியாய்த் தனக்கு அஸாதாரணையான பிராட்டியையும், வேறின்றி – (தன் திருமார்பில் வைத்ததிற்காட்டில்) வேறு தோன்றாதபடி, தன்னுள் – தன் திருமேனிக்குள்ளே, விண் – (இந்த சீலமறிந்த) பரமபதவாஸிகள், தொழ – தன்னைத் தொழும்படி, வைத்து – வைத்து, மேல் தன்னை – ஊர்த்வலோகத்தை, மீதிட – கீழ்த்தும்படி, நிமிர்ந்து – வளர்ந்து, மண் – பூமியை, கொண்ட – அளந்துகொண்ட, மால்தனில் – பெரியவனை, மிக்கும் – மிகுத்திருப்பது, ஓர் – ஒரு, தேவும் – தேவதாதத்த்வமும், உளதே – உண்டோ?

ஏகாரம் வினா.

ஈடு – மூன்றாம் பாட்டு.  ஸௌசீல்யத்தாலும், த்ரைவிக்ரமக்ரமணமாகிற அதிமாநுஷசேஷ்டிதத்தாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.

(ஏறனை) ஸர்வேஸ்வரன் “க3ருட3வாஹனன்” என்று இறுமாந்திருக்குமா போலே, ஒரு எருத்தைத்தேடிக் கைக்கொ(ள்)ளாண்டிகளைப்போலே இறுமாந்திருக்கும்.  (பூவனை) “திருநாபி4கமலத்திலே அவ்யவதா4நேந பிறந்தவனன்றோ” என்று இறுமாந்திருக்கும் சதுர்முக2னை.  அதாவது – பத்3மயோநித்வத்தாலே “அஜன்” என்று அபி4மாநித்திருக்கை. (பூமகள் தன்னை) தாமரைப்பூவில் பரிமளம் உபாதா4நமாகப் பிறந்தவளாய், போ4க்3யதைக வேஷையாய், “உனக்கு ஏற்கும்” (10-10-6) என்னும்படியான ப்ராதா4ந்யந்தோற்ற இருக்கிறவளை.  ‘தன்னை’ என்று – அவர்களில் இவளுக்குண்டான ப்ராதா4ந்யமிருக்கிறபடி.  “ஏறனை, பூவனை” என்கிற அநாத3ரோக்தியாலும், இவள் ப்ராதாந்யம் தோற்றுகிறது.  (விண் தொழ வேறின்றித் தன்னுள் வைத்து) அந்யபரரான ப்3ரஹ்மருத்ராதி3களுக்கும், அநந்யையான பெரியபிராட்டியார்க்கும் ஒக்க முகங்கொடுத்துவைக்கிற சீலத்தை அநுஸந்தி4த்து விண்ணினுள்ளார் தொழா நிற்பர்கள்.  “ப்3ரஹ்மாதி3கள் எப்போதும் திருமேனியைப் பற்றியிருப்பர்களோ?” என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க;  “ஓரோ ஆபத்துக்களிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்.  அந்நீர்மையை விடமாட்டாமையாலே, ஆழ்வார்கள் அத்தையே வாய்புலற்றுகிறார்களத்தனையிறே” என்று அருளிச்செய்தார்.  (வேறின்றி) “கூறாளும் தனியுடம்பன்” (4-8-1) என்கிறபடியே, வ்யவஸ்தி2தமாக உடம்பைக் கொடுக்கை.  (விண் தொழ) “மஞ்சா: க்ரோஸந்தி” இதிவத்.  இங்குள்ளார் “ஐஸ்வர்யம்” என்றிருப்பார்கள்; அங்குள்ளார் “சீலம்” என்று தோற்றிருப்பர்கள்.

(மேறன்னைமீது இத்யாதி3) மேல்தன்னை – உபரிதநலோகங்களை.  “அப்பால் மிக்கு” (திருநெடுந்தாண்டகம் – 5) என்கிறபடியே விஞ்ச வளர்ந்த பூ4மிப் பரப்பெல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்ட.  (மாறனில்) இவ்வதிமாநுஷ சேஷ்டிதத்தையுடைய ஸர்வேஶ்வரனிற்காட்டில்.  (மிக்குமோர் தேவுமுளதே) ஒக்கப் பரிமாறாநிற்க, “கட்டக்குடி” என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ? எல்லார் தலையிலும் காலைவைத்தவனை ஈஸ்வரன் என்னவோ, இவன் காலிலே துகையுண்டவர்களை ஈஸ்வரர்கள் என்னவோ?

நான்காம் பாட்டு

தேவும் எப்பொருளும்படைக்கப்*
பூவில் நான்முக னைப்ப டைத்த*
தேவன் எம்பெரு மானுக் கல்லால்*
பூவும் பூச னையும் தகுமே.

– அநந்தரம், ஆராத்யதைக்கு ஈடான ஆதிக்யம் அவனுக்கொழிய இல்லை என்கிறார்.

தேவும் – தேவஜாதியையும், எப்பொருளும் – (மநுஷ்யாதி) ஸகல பதார்த்தங்களையும், படைக்க – ஸ்ருஷ்டிக்கைக்காக, பூவில் – திருநாபி கமலத்திலே, நான்முகனை – சதுர்முகனான ப்ரஹ்மாவை, படைத்த – படைத்த, தேவன் – பரதேவதையான, எம்பெருமானுக்கு – என் நாயனுக்கு, அல்லால் – அல்லது, பூவும் – புஷ்பாத்யுபஹாரமும், பூசனையும் – ஆராதநோபசாரமும், தகுமே – (வேறு சிலர்க்குத்) தகுமோ? தகாது என்று கருத்து.

ஈடு – நாலாம் பாட்டு.  ஸௌகுமார்யத்தாலும் முதன்மையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.

(தேவும் இத்யாதி3) தே3வஜாதியையும் ஸகலபதா3ர்த்த2ங்களையும் உண்டாக்குகைக்காக ஒரு பூவிலே நாலு பூப்பூத்தாற்போலே சதுர்முக2னை உண்டாக்கினவன்.  (தேவன்) சதுர்முக2ஸ்ரஷ்டாவாகையால் வந்த த்3யுதியைச் சொல்லுதல், இதுதன்னை லீலையாகவுடையவன் என்னுதல், ஸௌந்த3ர்யாதி3 களால் வந்த விளக்கம் என்னுதல்.  (எம்பெருமானுக்கல்லால்) ஸ்ருஷ்ட்யாத்3 யுபகாரத்தாலும், ஸ்ருஷ்டிக்கு உறுப்பான கு3ணங்களாலும் என்னை எழுதிக் கொண்டவனுக்கல்லது.

(பூவும் பூசனையும் தகுமே) சிக்குத்தலையனுக்குப் பூத்தகாது; பிச்சையுண்ணிக்குப் பூசனை தகாது; பூத்தகுவது ஸுகுமாரனுக்கு; பூசனை தகுவது முதன்மையுடையவனுக்கு; இவனையொழிந்தார்க்குத் தகாது என்கிறார்.  “ஸ ஏஷ ப்ருது2தீ3ர்க்கா4க்ஷஸ்ஸம்ப3ந்தீ4 தே ஜநார்த்த3ந:” என்று ஸ்ரீபீ4ஷ்மர் நெடும்போது அவனுடைய பரத்வத்தை உபபாதி3த்துக்கொண்டு போந்து, ஸ்ருதி ஸித்34மான கண்ணழகையுடையவன்காண் உங்களுக்கு மைத்துனனாய்ப் புகுந்திருக்கிறான் என்று பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார்; “அர்ச்யமர்ச்சிதுமிச்சா2மஸ் ஸர்வே ஸம்மந்துமர்ஹத2” என்ற ஸஹதே3வன் தலையிலே புஷ்பவ்ருஷ்டியைப் பண்ணினார்களிறே.  இத்தால், ஜ்ஞாநத்திற் காட்டில் வைராக்3யத்துக்கு உண்டான ப்ராதா4ந்யம் சொல்லுகிறது.

ஐந்தாம் பாட்டு

தகும்சீர்த் தன்தனி முதலி னுள்ளே*
மிகுந்தே வும் எப்பொருளும் படைக்க*
தகும்கோலத் தாமரைக் கண்ண னெம்மான்*
மிகுஞ்சோ திமே லறிவார் யவரே.

– அநந்தரம், இப்பரத்வ ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தை அருளிச்செய்கிறார்.

தகும் – (ஸ்ருஷ்ட்யாதிகளுக்குத்) தகுதியான, சீர் – ஜ்ஞாநசக்த்யாதிகளையுடையனான, தன் – தன்னுடைய, தனி – அத்விதீயமான, முதலினுள்ளே – (ஜகத்துக்கு) மூலமான ஸங்கல்பத்துக்குள்ளே, மிகும் – (“ஈஸ்வரன்” என்று ஸங்கிக்கலாம்படி) மிக்க, தேவும் – (ப்ரஹ்மருத்ராதி) தேவஜாதியையும், எப்பொருளும் – (மநுஷ்யாதி) ஸகல பதார்த்தங்களையும், படைக்க – ஸ்ருஷ்டிக்க, தகும் – “இவன் தனக்குத் தகும்” என்ன ஸூசகமான, கோலம் – அழகிய, தாமரை – தாமரைபோன்ற, கண்ணன் – கண்களையுடைய, எம்மான் – என் ஸ்வாமியானவனைக் காட்டிலும், மிகுஞ்சோதி – பரஞ்ஜ்யோதிஸ்ஸு, மேல் – இதுக்குமேல் (ஒரு தத்த்வமுண்டென்று வைதிகரில்) அறிவார் – அறிவார், யவர் – ஆர்?

உண்டு என்று அறிவார் அவைதிகர் என்று கருத்து.

ஈடு – அஞ்சாம் பாட்டு.  புண்ட3ரீகாக்ஷனாகையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.

(தகும் இத்யாதி3) ஸ்ரஷ்ட்ருத்வத்துக்கு உபயோகி3யான ஜ்ஞாந சக்த்யாதி3களையுடையனான.  (தன் தனி முதலினுள்ளே) கார்யவர்க்க3த்துக்கடைய காரணமான மூலப்ரக்ருதியைச் சொல்லுதல்; “ப3ஹு ஸ்யாம்” என்கிற அதுக்கும் அடியான ஸங்கல்ப ஜ்ஞாநத்தைச் சொல்லுதல்.  (தனிமுதல்) ஏககாரணம் என்று, பரமாணுகாரணவாதி3களை வ்யாவர்த்திக்கிறது.  (மிகும் இத்யாதி3) தன்னோடு மசக்குப் பரலிடலாம்படியான தே3வஜாதியையும்; வில்லை வளைத்த போதாக “அதி4கம் மேநிரே விஷ்ணும்” என்னும்படியிறே இவர்கள் மிகை.  (எப்பொருளும்) “மற்றுமுண்டான ஸகல பதா3ர்த்த2ங்களையும் உண்டாக்குகைக்குத் தகுவானொருவன்” என்னுமிடத்தைத் தெரிவிப்பதாய், ரக்ஷகத்வமில்லையானாலும் த3ர்சநீயமாய், குளிர்ந்திருக்கிற திருக்கண்களை யுடையனாய், அக்கண்ணழகாலே என்னை அடிமைகொண்டவனே மிக்க தேஜஸ்ஸையுடையான்.  திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றது;  (ராம:) ஸர்வாங்க3 ஸுந்த3ரராயிருக்கை.  (கமலபத்ராக்ஷ:) அதிலே ஒரு சுழியாயிற்று அமிழ்ந்துவார்க்கு வேண்டுவது.  அக்கண்ணழகுக்கு எல்லையென்? என்னில் (ஸர்வஸத்த்வமநோஹர:) திர்யக்3ஜாதீயனாய், பணையோடு பணை தத்தித்திரிகிற என் நெஞ்சையும் அபஹரித்ததன்றோ.  (ரூபதா3க்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூத:) தே3ஹகு3ணங்களாலும், ஆத்மகு3ணங்களாலும்  குறையற்றதுதான் ஔத்பத்திகமாயிருக்கும்.  (ஜநகாத்மஜே) ‘அற விஞ்சச் சொன்னாய்; இனி இங்ஙன் சொல்லலாவாருண்டோ இல்லையோ?’ என்று பிராட்டிக்குக் கருத்தாக, (ஜநகாத்மஜே) பின்னை உம்மைச் சொல்லலாம்; நீருமுண்டு.

(மிகும் சோதி) “பரஞ்ஜ்யோதிருபஸம்பத்3ய” “நாராயணபரோ ஜ்யோதி:”
என்று நாராயணாநுவாகாதி3களிலே இவனே பரஞ்ஜ்யோதிஸ்ஸு என்று
ஓதப்படுகிறான்.  (மேலறிவார்யவரே) “இவனையொழிய நாராயணாநுவாக ஸித்34மாயிருப்பதொரு வஸ்து உண்டு” என்றறிவார் ஆரேனுமுண்டோ? (யவரே) “வைதி3க: க:” என்னுமாபோலே.  அநந்யபரமான நாராயணாநுவாகாதி3 களிலே ப்ரதிபாதி3க்கப்பட்ட வைப4வத்தையுடைய உன்பக்கலிலே பொறாமை கொண்டாடியிருப்பானொரு வைதி3கனுண்டோ? உண்டாகில் அவன் அவைதி3கனாமித்தனை;  “தஸ்யோத்பத்திர்நிரூப்யதாம்”.

ஆறாம் பாட்டு

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்*
கவர்வின்றித் தன்னு ளொடுங்க நின்ற*
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி*
அவர்எம் மாழியம் பள்ளி யாரே.

– அநந்தரம், ஆஸ்ரிதரக்ஷணார்த்தமாக க்ஷீரார்ணவத்திலே கண்வளர்ந்தருளினார் என்கிறார்.

யவரும் – எல்லாச் சேதநரும், யாவையும் – எல்லா அசேதநங்களுமாகிற, எல்லாப்பொருளும் – ஸமஸ்த பதார்த்தங்களும், கவர்வின்றி – சோர்வின்றி, தன்னுள் – தன் ஸ்வரூபைகதேசத்திலே, ஒடுங்க – அடங்கும்படியாக, நின்ற – நின்ற, பவர்கொள் – பரப்பையுடைத்தான, ஞானவெள்ளம் – ஜ்ஞாநவெள்ளத்தை, சுடர் – (தனக்கு) ப்ரபையாகவுடைய, மூர்த்தி – ஸ்வாமிகளான, அவர் – ஸர்வாதிகரானவர், எம் – நமக்கு போக்யமாய், அம் – தர்சநீயமான, ஆழி – க்ஷீரார்ணவத்திலே, பள்ளியார் – கண்வளர்ந்தருளுகிறார்.

கவர்வு – சோர்வு. பவர்வு – பரப்பு. சுடர்மூர்த்தி – விக்ரஹமாகவுமாம்.

ஈடு – ஆறாம் பாட்டு.  ஆபத்ஸக2னாகையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.

(யவரும் இத்யாதி3) சேதநவர்க்க3த்தையும், அசேதநவர்க்க3த்தையும்  இப்படி இரண்டு வகையாகச் சொன்னவற்றைக் கூட்டி, இப்படியிருக்கிற ஸகல பதா3ர்த்த2ங்களும் ப்ரளயாபத்திலே தன் வயிற்றிலே சேரும்படியானபோது.  (கவர்வின்றி) கவர்கையாவது – க்3ரஹிக்கை;  அதாவது – ஹிம்ஸையாய், ஒருவரையொருவர் நெருக்காதபடி.  (தன்னுள் ஒடுங்க நின்ற) “தத3பஸ்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷௌ மஹாத்மந:” என்னக்கடவதிறே.  தன்னுள் – தன் ஸங்கல்பைக தே3சத்திலே என்னவுமாம்.

(பவர்கொள் இத்யாதி3) இவர்களை ரக்ஷிக்கைக்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தையுடையனாய், “இப்படி ரக்ஷிக்கப்பெற்றவிடம் தன் பேறு” என்று தோற்றும்படியிருக்கிற தி3வ்ய விக்3ரஹத்தையுடையரான அவர்.  (எம்மாழியம் பள்ளியாரே) தாம் ஸம்ஸார மத்4யஸ்த2ராயிருக்கையாலே எல்லாரையும் கூட்டிக்கொண்டு, எங்களுடைய ரக்ஷணார்த்த2மாக வந்து ஏகார்ணவத்தை அழகிய படுக்கையாகவுடையரானார்.  “பாயலும் பள்ளியும் பாழியும் படுக்கை” (தமிழ்நிகண்டு).  இப்படி ஆபத்ஸக2னாய், அணியனாகையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.

ஏழாம் பாட்டு

பள்ளி ஆலிலை ஏழுல கும்கொள்ளும்*
வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான் *
உள்ளு ளார்அறி வார்அ வன்தன்*
கள்ள மாய மனக்க ருத்தே.

– அநந்தரம், வடதள ஸாயித்வரூபமான அகடிதகடநா ஸாமர்த்யத்தாலே அவன் பரத்வம் துரவபோதம் என்கிறார்.

பள்ளி – படுக்கை, ஆலிலை – ஆலிலையாக, ஏழுலகும் – எல்லா லோகத்தையும், கொள்ளும் – கொள்ளுகைக்கு இடங்கொடுக்கும், வள்ளல் – ஔதார்யத்தையும், வல் – சக்தியையுமுடைத்தான, வயிறு – வயிற்றையுமுடைய, பெருமான் – ஸர்வாதிகனானவனுடைய, கள்ளம் – ஒருவர்க்கும் தோன்றாதே, மாயம் – ஆஸ்சர்யமான, மனக்கருத்து – மாநஸவ்யாபாரம் (ஜகதர்த்தமான ரக்ஷண சிந்தாவ்யாபாரம்), உள்ளுள் – மாநஸ வ்யாபாரத்தாலே, அறிவார் – அறியுமவர்கள், ஆர் – ஆர்? எவர்க்கும் அறிய அரிது என்று கருத்து.

ஈடு – ஏழாம் பாட்டு. அக4டிதக4டநா ஸாமர்த்2யத்தாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.

(பள்ளி ஆலிலை) படுக்கை – பவனாயிருப்பதொரு ஆலந்தளிர். (ஏழுலகும் கொள்ளும்) இப்படுக்கையிலே ஸப்தலோகங்களையும் வயிற்றிலே வைத்துக் கண்வளரும்.  (வள்ளல்) புக்க லோகங்களுக்கு அவ்வருகே “இன்னங் கொண்டுவா” என்னும்படி இடமுடைத்தாயிருக்கை.  (வல் வயிற்றுப் பெருமான்) உட்புக்க பதா3ர்த்த2ங்களுக்கு ப4யப்ரஸங்க3மின்றியேயொழியும்படி மிடுக்கை யுடைத்தாயிருக்கை.   (பெருமான்) இப்படி ரக்ஷிக்கவேண்டிற்று உடையவனாகை.  அவனுடைய உள்ளுளாய கள்ளமாய மனக்கருத்தை யாரறிவார் –  கண்டதொன்றைச் சொன்ன இத்தனைபோக்கி, உள்ளுள் – இன்னம் உள்ளேயுள்ள உண்டாய், கள்ளமாய் – ஒருவர்க்கும் தெரியாதபடியாய், மாயமாய் – ஜ்ஞாதாம்சம் ஆஸ்சர்யமாயிருக்கிற அவனுடைய, மனக்கருத்து – மநோவ்யாபாரத்தை, ஒருவரால் அறியலாயிருக்கிறதோ?

எட்டாம் பாட்டு

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்*
வருத்தித்த மாயப் பிரானையன்றி* ஆரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும்* தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வி னரே.

– அநந்தரம், ஸர்வப்ரகாரரக்ஷகன் அவனே என்கிறார்.

கருத்தில் – தன் நினைவாலே, தேவும் – தேவ வர்க்கமும், எல்லாப் பொருளும் – (மநுஷ்யாதி) ஸகல பதார்த்தங்களும், வருத்தித்த – (ஸத்தைபெற்று அபிவ்ருத்தமாம்படி) உண்டாக்கின, மாயம் – ஆஸ்சர்ய சக்த்யாதிகளையுடைய, பிரானை – ஈஸ்வரனை, அன்றி – ஒழிய, ஆரே – ஆர்தான், மூவுலகும் – ஸமஸ்தலோகத்தையும், திண் – திண்ணிதான, நிலை – நிலையையுடைத்தாம்படி, திருத்தி – (அநிஷ்டநிவ்ருத்த்யாதிகளாலே) திருந்தச்செய்து, தம்முள் – தம் நினைவுக்குள்ளே, இருத்தி – (அவற்றை) ப்ரதிஷ்டிதமாக்கி, காக்கும் – ரக்ஷிக்கும், இயல்வினர் – ஸ்வபாவத்தையுடையார்?

ரக்ஷணைக ஸ்வபாவன் அவன் என்று கருத்து.

ஈடு – எட்டாம் பாட்டு.  ஸ்ருஷ்டியும் பாலநமும் ஸ்வாதீ4நமாகவுடையவனாகை யாலே இவனே ஈஸ்வரன் என்கிறார்.

(கருத்தில் இத்யாதி3) தன்னுடைய ஸங்கல்பத்திலே தே3வஜாதியையும் மற்றுமுண்டான ஸகல பதா3ர்த்த2ங்களையும், வர்த்திப்பித்த – உண்டாக்கின – ஸ்ருஷ்டித்த ஆஸ்சர்யபூ4தனான ஸர்வேஸ்வரனையன்றி, மூன்று லோகங்களையும் திண்ணிதான ஸ்தி2தியையுடைத்தாம்படியாகத் திருத்தி, தம்முள் இருத்தி, அவ்வோ பதா3ர்த்த2ங்களுக்கு அநுரூபமான ரக்ஷணங்களையும் திருவுள்ளத்தே வைத்துக் காக்கும் “ந ஹி பாலநஸாமர்த்2யம்” என்கிறபடியே ரக்ஷணத்தைப் பண்ணும்.  (இயல்வினரே) இத்தை இயல்வாகவுடையவர் – ஸ்வபா4வமாகவுடையவர் ஆர்? “மாயப்பிரானையன்றி – காக்கும் இயல்வினர் ஆர்?” என்று அந்வயம்.

ஒன்பதாம் பாட்டு

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்*
சேர்க்கை செய்துதன் னுந்தி யுள்ளே*
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்*
ஆக்கி னான்தெய்வ வுலகு களே.

– அநந்தரம், இந்த ரக்ஷணத்தோபாதி ஜகதுத்பத்தி ஸம்ஹாரங்களும் தததீநம் என்கிறார்.

காக்குமியல்வினன் – ரக்ஷணத்தை ஸ்வபாவமாகவுடைய, கண்ணன் – க்ருஷ்ணனான, பெருமான் – ஸர்வேஸ்வரன், சேர்க்கை செய்து – [ஸம்ஹ்ருதிஸமயத்திலே நாமரூபவிபாகரஹிதமாய், (தம ஏகீபவதி) என்கிறபடியே] சேரும்படிபண்ணி, தன் உந்தியுள்ளே – தன் திருநாபிக்குள்ளே, வாய்த்த – (ஸ்ருஷ்டிக்கு) வாய்த்த, திசைமுகன் – சதுர்முகன், இந்திரன் – இந்த்ரன், வானவர் – தேவர்கள், தெய்வ உலகுகள் – (அவர்களுக்கு வாஸஸ்தாநமான) திவ்யலோகங்கள், ஆக்கினான் – இவற்றை உண்டாக்கினான்.

உந்தியுள்ளே பிறந்த திசைமுகன் என்றுமாம்.

ஈடு – ஒன்பதாம் பாட்டு.  ஸ்ருஷ்டி ஸ்தி2தி ஸம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வாதீ4நமாம்படியிருக்கையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.

(காக்கும் இயல்வினன்) “ந ஸம்பதா3ம் ஸமாஹாரே” என்கிறபடியே பாலநகர்மத்தை ஸ்வபா4வமாகவுடையவன்.  (கண்ணபெருமான்) ரக்ஷணார்த்த2மாக க்ருஷ்ணனாய் வந்து அவதரித்த ஸர்வேஸ்வரன்.  (சேர்க்கை செய்து) ஸம்ஹார காலம் வந்தவாறே, கார்யரூப ப்ரபஞ்சமடையத் தன் பக்கலிலே சேர்க்கையாகிற செயலைச் செய்து.  (தன் இத்யாதி3) தன்னுடைய திருநாபீ4கமலத்திலே, தான் ஒருகால் “ஸ்ருஷ்டி” என்று விட்டால், பின்பு தன்னையும் கேட்க வேண்டாதபடி ஸ்ருஷ்டிக்ஷமனான சதுர்முக2ன், இந்த்3ரன், மற்றுமுண்டான தே3வர்களோடேகூட, இவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான்.  தன் உந்தியுள்ளே ஆக்கினான்.

பத்தாம் பாட்டு

கள்வா! எம்மையும் ஏழுலகும்*நின்
னுள்ளே தோற்றிய இறைவ! என்று*
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்*
புள்ளூர் திகழல் பணிந்தேத் துவரே.

– அநந்தரம், ஸர்வஸ்மாத்பரனாகையாலே ஸர்வதேவதா ஸமாஸ்ரயணீயன் அவனே என்கிறார்.

கள்வா – (அவதாரமுகத்தாலே ஆதிக்யத்தை மறைக்கும்) க்ருத்ரிமனே! எம்மையும் – எம்மையும், ஏழுலகும் – ஸமஸ்தலோகங்களையும், நின்னுள்ளே – உன்னுடைய ஸங்கல்பத்துக்குள், தோற்றிய – தோற்றுவித்த, இறைவ – ஸ்வாமியே! என்று – என்றுகொண்டு, வெள் – வெளுத்த, ஏறன் – ஏற்றையுடைய ருத்ரனும், நான்முகன் – சதுர்முகனும், இந்திரன் – இந்த்ரனும், வானவர் – ஸ்வர்க்கவாஸிகளும், புள்ளூர்தி – கருடவாஹநனுடைய, கழல் – திருவடிகளை, பணிந்து – ப்ரணாமம் பண்ணி, ஏத்துவர் – ஸ்துதியாநிற்பார்கள்.

இத்தால் – தர்மபர்யாயவ்ருஷபவாஹநத்வத்தாலே ருத்ரனுடைய கர்மவஶ்யதையும், வேதமயனான கருடன் வாஹநமாகையாலே ஈஸ்வரனுடைய வேதாந்த வேத்யத்வமும் தோற்றுகிறது.

 

ஈடு – பத்தாம் பாட்டு.  இவ்வளவும்வர, நான் ப்ரதிபாதி3த்த பரத்வத்தை நீங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்திருக்கிறவர்கள் மேலெழுத்தைக்கொண்டு விஸ்வஸியுங்கோள் என்கிறார்.

(கள்வா) ஸர்வேஸ்வரன் பக்கலிலே வந்து வரங்கொள்ளுகிறவிடத்திலே, “தே3வர் இன்னம் எனக்கொரு வரம் தரவேணும், நீர் தந்த வரம் நிலைநிற்கும்படி என்பக்கலிலே வந்து ஒரு வரம்பெற்றுப்போக வேணும்” என்று அர்த்தி2க்க, “அப்படியே செய்கிறோம்” என்றுவிட்டு, “ருக்மணிப்பிராட்டிக்கு ஒருபிள்ளை வேணும்” என்று சென்று நின்று, “நமோ க4ண்டாய கர்ணாய” என்றாற்போலே ஏத்த, அவனும், “உமயா ஸார்த்த4மீஶாந:” என்கிறபடியே புறப்பட்டு, “நீ கறுப்புடுத்துத் தாழநின்ற நிலையிலே இச்செயலைச் செய்தால், இத்தை நாட்டார் ‘மெய்’ என்றிருப்பர்களோ கள்வா?” என்பர்கள்.  தன் ஸ்வாதந்த்ர்யத்தை மறைத்துப் பரதந்த்ரனாய் நிற்கையிறே களவாகிறது.  கைலாஸ யாத்ரையிலே “நமோ க4ண்டாய கர்ணாய நம: கடகடாய ச” என்று ஸ்தோத்ரம் பண்ணினபடியைக் கேட்ட ப்3ராஹ்மணன், “இதுக்கு முன்பு ஒருவரை ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயானவாறே மீன் துடிக்கிறபடி பாராய்” என்றான்.  “நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையாலேத்த” (பெரியதிருமொழி 1-7-8) என்கிறபடியே, ஸ்தோத்ரம்பண்ணி நாத்தழும்புபட்டுக் கிடக்கிறதன்றே.

“இவன் தாழநின்ற நிலையும் ஸ்தோத்ரம் பண்ணின நிலையும் களவு” என்னுமிடத்தை உபபாதி3க்கிறது மேல். (எம்மையும் இத்யாதி3) நீ இவற்றை மனைகிறபோது, எங்களையும் மனைந்து பின்னையன்றோ திர்யக்3ஜாதிகளை உண்டாக்கிற்று.  (இறைவ) இறைவ என்னாநிற்பர்கள்.  இங்ஙனே சொல்லுகிறவர்கள்தான் ஆரென்னில் – (வெள்ளேறன் இத்யாதி3) ராஜஸேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய் ஸேவிக்குமாபோலே, இவர்களும் தந்தாம் அடையாளங்களோடேயாயிற்று வந்து ஸேவிப்பது.  “இரவியர் மணிநெடும் தேரொடும்” (திருப்பள்ளியெழுச்சி – 6) இத்யாதி3.  (புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே) ஸர்வேஸ்வரன், பெரியபிராட்டியாரும் தானுமாயிருக்கிற இருப்பில் புகப்பெறாமையாலே, திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால், இவர்களுக்குக் காட்சிகொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளிலே ஏறிப்புறப்படும் ஆட்டத்து வெளியிலே ஆனைக்காலிலே துகையுண்ணாநிற்பர்கள்.

பதினொன்றாம் பாட்டு

*ஏத்த ஏழுல குங்கொண்ட கோலக்
கூத்தனை* குரு கூர்ச்சட கோபன்சொல்*
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்*
ஏத்த வல்லவர்க்கு இல்லையோர் ஊனமே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு ப2லமாக ஸர்வ ப்ரகார வைகல்யராஹித்யத்தை அருளிச்செய்கிறார்.

ஏத்த – லௌகிகர் ஏத்துகிற இதுவே விளைநீராக, ஏழுலகும் – ஸமஸ்த லோகத்தையும், கொண்ட – அளந்துகொண்ட, கோலம் – வடிவழகையும், கூத்தனை – வல்லாராடினாற்போலே அளந்து, அநாயாஸத்தையும் உடையவனை, குருகூர்ச் சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்த, வாய்த்த – (லோகத்துக்கு) அலப்ய லாபமான, ஆயிரத்துள் – ஆயிரத்துள், இவை பத்து – இவை பத்தையும், உடன் – (அர்த்தத்தோடே) உடன்பட்டு, ஏத்த – ஸ்துதிரூபமாகச் சொல்ல, வல்லவர்க்கு – வல்லவர்க்கு, ஓர் ஊனம் – (தேவதாந்தரங்களினுடைய உத்கர்ஷ புத்தியும், அவர்களோடு உண்டான ஸாம்யபுத்தியும், அவர்களில் நிகர்ஷபுத்தியுமாகிற) குறைவுகள் ஒன்றும், இல்லை – இல்லை.

ஊனம் – குறைவு; சொல் வாய்த்த என்று – அர்த்த ப்ரதிபாதநஸாமர்த்யமாகவுமாம்.  “ஏழுலகு” என்று கீழும் மேலும் கூட்டுகிறது.  இது கலி விருத்தம்.

ஈடு – நிக3மத்தில், இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லவர்களுக்கு, தே3வதாந்தரங்கள் பக்கல் ஈஸ்வரத்வ பு3த்3தி4பண்ணுகையாகிற ஊனமில்லை என்கிறார்.

(ஏத்தவேழுலகும்கொண்ட) “ஸங்கைஸ்ஸுராணாம்” என்கிறபடியே ஏத்த, அந்த ஹர்ஷத்தாலே ஸகலலோகங்களையும் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்ட.  (கோலக் கூத்தனை) திருவுலகளந்தருளினபோது வல்லாராடினாற்போலேயாயிற்று இருப்பது. அப்போதை வடிவழகை அநுப4விக்குமதொழிய, இந்த்3ரனைப்போலே ராஜ்யஸ்ரத்3தை4 இல்லையே இவர்க்கு.  (குருகூர்ச்சடகோபன் சொல்) ஆப்திக்கு “இன்னார் சொல்லிற்று” என்னக்கடவதிறே.  (சடகோபன்) வேதா3ந்தத்திற்காட்டில் ஆழ்வார் பக்கலிலே பிறந்த ஆபி4ஜாத்யம்.  (வாய்த்தவாயிரம்) இத்தனைபோது இவர் ப்ரதிபாதி3த்த பரவஸ்து நேர்பட்டாற்போலேயாயிற்று இப்ரப3ந்த4மும் நேர்பட்டபடி.  வாச்யத்திற் காட்டில் வாசகம் நேர்பட்டபடி என்றுமாம்.  அதாவது – விஷயத்தை உள்ளபடி பேசவற்றாயிருக்கை.  (இவை பத்துடன் ஏத்தவல்லவர்க்கு) இத்திருவாய்மொழியை ஸஹ்ருத3யமாக ஏத்தவல்லவர்களுக்கு.  (இல்லை ஓரூனமே) இவ்வாத்மாவுக்கு ஊனமாவது – அபரதே3வதைகள் பக்கலிலே பரத்வப்ரதிபத்தி பண்ணுகையும், பரதே3வதை பக்கல் பரத்வப்ரதிபத்திபண்ணாமையும்.  இப்படி வரக்கடவதான ஊனம் இதுகற்றார்க்கு இல்லை.

முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச்செய்கிற இத்திருவாய்மொழியில் அர்த்த2த்தை ஸங்க்3ரஹேண அருளிச்செய்தார்.  இரண்டாம்பாட்டு முதல், து3:க்க2 நிவர்த்தகன் ஆகையாலும், சீலவானாகையாலும், ஸுகுமாரனாகையாலும், புண்ட3ரீகாக்ஷனாகையாலும், ஆபத்ஸக2னாகையாலும், அக4டிதக4டநாஸமர்த்த2னாகையாலும், ஸ்ருஷ்டி ஸ்தி2திகளைப் பண்ணுகையாலும், ஸம்ஹாரமாகிற செயலைச் செய்கையாலும், ஈஸ்வராபி4மாநிகளாயிருக்கிறவர்களுடைய ஸ்தோத்ராதி3களாலும், இப்படி ப3ஹுப்ரகாரங்களாலே அவனுடைய பரத்வத்தை அருளிச்செய்து, இதுகற்றார்க்குப் ப2லம் சொல்லித் தலைக்கட்டினார்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– திண்ணன் வீடு

ஸம்ஶ்லிஷ்ய து3:க்க2ஶமநாந் முதி3த: ப்ரஸங்கா3த்
தந்மூலமப்3ஜநயநஸ்ய மஹேஶ்வரத்வம் |
ஆஹாந்வயாதி3தரதோ‍பி மநுஷ்யபா4வே
பௌராணிகோக்தநயதஶ் ஶட2ஜித்3 த்3விதீயே ||       12

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி —  திண்ணன் வீடு

பூர்ணைஶ்வர்யாவதாரம் ப4வது3ரிதஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ4பத்3மோத்த2விஶ்வம் தத3நுகு3ணத்3ருஶம் கல்பதல்பீக்ருதாப்3தி4ம் |
ஸுப்தம் ந்யக்3ரோத4பத்ரே ஜக33வநதி4யம் ரக்ஷணாயாவதீர்ணம்
ருத்3ராதி3ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலிதோத்துங்க3பா4வேந நாத2ம் ||    14

திருவாய்மொழி நூற்றந்தாதி

திண்ணிதா மாறன் திருமால்ப ரத்துவத்தை
நண்ணியவ தாரத்தே நன்குரைத்த-வண்ணமறிந்
தற்றார்கள் யாவ ரவரடிக்கே யாங்கவர்பால்
உற்றாரை மேலிடா தூன்.   12

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

*****

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.