[highlight_content]

02-08 12000/36000 Padi

எட்டாம் திருவாய்மொழி
அணைவதரவணை – ப்ரவேசம்

******

– எட்டாம் திருவாய்மொழியில் “மேவும் தன்மையமாக்கினான்” என்று ஸ்வஸம்பந்திஜநங்களுக்கும் ப்ராப்திபர்யந்தப2லரூபமோக்ஷப்ரதனாய்க்கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும், அதுக்கு அடியான பரத்வத்தையும் அநுஸந்தித்து, “இத்தை ஸம்ஸாரிகள் இழக்கவொண்ணாது” என்று உபதேஶிப்பாராகக்கோலி; அவனுடைய ஸர்வநிர்வாஹகத்வத்தையும், ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷப்ரதத்வத்தையும், அதுக்குறுப்பான சேஷ்டித வைலக்ஷண்யத்தையும், இந்த வ்யாபார ப்ரகாசிதமான ஸௌலப்யாதிகுணங்கள் நித்யாநுபாவ்யம் என்னுமிடத்தையும், அந்த குணப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும், அவதாரத3ஶையிலும் பரத்வம் அதிப்ரஸித்தம் என்னுமிடத்தையும், அவதீர்ணனானவன் ரக்ஷணவ்யாமோஹத்தால் பண்ணும் வ்யாபாரம் அநேகம் என்னுமிடத்தையும், அவதீர்ணனுடைய பரத்வோபயுக்தமான அதிசயிதாகாரங்கள் அறியவல்லாரில்லை என்னுமிடத்தையும், அவனுடைய ஆஶ்ரித ஸௌலப்யம் அபரிச்சிந்நம் என்னுமிடத்தையும், ஏவம்விதனைத் தாம் அநுபவிக்கப் பெற்றமையையும் அருளிச்செய்து, உபதேசாந்நிவ்ருத்தராய், ஸ்வலாபத்தோடே தலைக்கட்டுகிறார்.  இதில் சொல்லுகிற பரத்வம், முதல் திருவாய்மொழிபோலே ஸ்வரூபகதமாயுமன்றியே, திண்ணன் வீட்டிற்போலே, மநுஷ்யத்வே பரத்வமுமன்றியே, மோக்ஷப்ரதத்வோபயுக்தமாய் இருக்கிறது.

ஈடு – ஸர்வேஸ்வரன் தம்பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவரளவிலு மன்றிக்கே, தம்மோடு ஸம்ப3ந்த4முடையாரளவிலும் வெள்ளமிட்டபடியைச் சொன்னார் – கீழ்; இத்திருவாய்மொழியில் – “நம்மோட்டை ஸம்ப3ந்த4மே ஹேதுவாக அவன் இப்படி விஷயீகரிப்பானான பின்பு, ஸம்ஸாரிகளுக்கும் நம்மோட்டை ஒரு ஸம்ப3ந்த4த்தை உண்டாக்கி அவன் க்ருபைக்கு விஷயமாக்குவோம்” என்று, அவர்களுக்கு மோக்ஷ ப்ரத3த்வத்தை அருளிச் செய்கிறார்.

இத்திருவாய்மொழிதன்னை – “ஈஸ்வரத்வம் சொல்லுகிறது” என்று நிர்வஹிப்பாரும் உண்டு; “மோக்ஷப்ரத3த்வம் சொல்லுகிறது” என்று ப4ட்டர் அருளிச்செய்யும்படி.  இவைதான் ஒன்றை ஒன்று விட்டிராது; ஈஸ்வரனாயிற்று மோக்ஷப்ரத3னாமவன்; மோக்ஷப்ரத3னாம்போது ஈஸ்வரனாக வேணும்.  இது தன்னில் செய்ததாகிறதென்? என்னில்; ஆழ்வார்க்கு முதல் தன்னிலே ஸர்வேஸ்வரன் அத்3வேஷத்தைப் பிறப்பித்து, ஆபி4முக்2யத்தைப் பிறப்பித்து ருசியையுண்டாக்கி, இவர் விடிலும் தான் விடாதே விரும்பி, இதுதான் இவர் தம்மளவிலன்றிக்கே தம்மோடு ஸம்ப3ந்த4முடையாரளவும் இப்படியே பெருகிக் கரைபுரளுகிறபடியை அநுஸந்தி4த்து, “ஸர்வேஸ்வரன் ஸ்வபா4வம் இதுவான பின்பு நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம்” என்று ஸம்ஸாரிகளையடையப் பார்த்து, அவர்களுக்கு, “மோக்ஷப்ரத3ன்” என்னுமிடத்தை அருளிச்செய்கிறார்.

இவர், தாம் பெற்றதாய்ப் பிறர்க்கு உபதே3சிக்கிற பேறுதான் – பிராட்டி, திருவடி, திருவனந்தாழ்வானைப் பரிகரமாகவுடைத்தாய், எத்தனையேனும் அளவுடையார்க்கும் ஸ்வயத்நத்தாலே ப்ராபிக்க அரிதாய், அவனாலே பெறப்பார்ப்பார்க்கு வருத்தமறப் பெறலாய், ஸம்ஸாரத்தில் போ43ங்கள்போலே அஸ்தி2ரமாயிருக்கையன்றிக்கே நித்யமாய், அவிசத3மாயிருக்கையன்றிக்கே அத்யந்தம் ஸ்பு2டமாய் து3:க்க2மிஸ்ரமாயிருக்கையன்றிக்கே  ஸுகை2கதாநமாய், மங்க3ளமாய், உத்தமமாய், அபரிச்சி2ந்நமாய், இப்படியிருக்கிற முக்தப்ராப்ய போ43த்தைத் தமக்கும், தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாகப் பாரிக்கிற படியைக்கண்டு, “ஸம்ஸாரிகளையும் ஈத்3ருசபோ4கி3களாம்படி பண்ணவேணும்” என்று பார்த்து, அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச்செய்ய, அது கேட்டபின்பும் அவர்கள் பழையநிலையில்நின்றும் குலையாதே, மால்யவான் தொடக்கமானார் ராவணனுக்குச் சொன்ன ஹிதம்போலே அவர்கள் இத்தை அநாத3ரித்திருக்க, “நாம் நம்முடைய அநுப4வத்தை விட்டு இவர்களோடே துவக்குண்கிற இதுக்கு ப்ரயோஜநமென்?” என்று, வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமாபோலே, “நாம் முந்துறமுன்னம் இவர்களைப் போலே ஆகாதொழியப்பெற்றோமிறே” என்று ஸ்வலாப4த்தை அநுஸந்தி4த்து இனியராகிறார்.

முதல் பாட்டு

*அணைவது அரவணைமேல் பூம்பாவை யாகம்
புணர்வது* இருவ ரவர்முதலும் தானே*
இணைவனாம் எப்பொருட்கும் வீடுமுதலாம்*
புணைவன் பிறவிக் கடல்நீந்து வார்க்கே.

– முதற்பாட்டில் இத்திருவாய்மொழியில் அர்த்தத்துக்கு ஸங்க்ரஹரூபமான ஸர்வநிர்வாஹகத்வத்தை அருளிச்செய்கிறார்.

அரவு – திருவனந்தாழ்வானாகிற, அணைமேல் – அணைமேலே, அணைவது – அபிமதமாகச் சேர்வது; பூ – பூவிலே பரிமளம் வடிவுகொண்டாற்போலே போக்யபூதையான, பாவை – பிராட்டியின், ஆகம் – திருமேனியை, புணர்வது – போக்யமாக ஸம்ஸ்லேசிஷிப்பது; (இது நித்யவிபூதி நிர்வாஹகத்வம்).  (லீலா விபூதி நிர்வஹணத்தில்) – அவர் – (காரணேஸ்வரராக) ப்ரஸித்தரான, இருவர் – ப்ரஹ்மருத்ரர்கள் இருவருடைய உத்பத்திஸ்தித்யாதிகளுக்கும், தானே – தானே, முதலும் – ஹேதுவாயிருக்கும்; எப்பொருட்கும் – (ரக்ஷ்யமான ஜகத்தில்) ஸமஸ்தபதார்த்தங்களுக்கும், இணைவனாம் – (அவதாரமுகத்தாலே) ஸஜாதீயனாயிருக்கும்.  வீடு – (ரக்ஷணத்துக்கு மேல் எல்லையான) மோக்ஷத்துக்கு, முதலாம் – ஹேதுவாயிருக்கும்; (இத்தால் ஸர்வமுக்தி ப்ரஸங்கியாமைக்காக) பிறவி – ஸம்ஸாரமாகிற, கடல் – கடலை, நீந்துவார்க்கு – நீந்திக் கரையேற வேண்டுவார்க்கு, புணைவன் – தெப்பமாமவனாயிருக்கும்.  புணைவன் – தெப்பமாமவன்.

ஈடு – முதற்பாட்டு.  முக்தப்ராப்ய போ43த்தைச் சொல்லுகிறது.  முதற் பாட்டுத்தான் இத்திருவாய்மொழிக்கு ஸங்க்3ரஹமாய், மேலுள்ள பாட்டுக்களிலே ஒரு பத3த்தைப்பற்றிப் போருமவையும், அதுதன்னைப்பற்றியெழுமவையுமாயிருக்கிறது.

(அணைவதரவணைமேல்) முக்தப்ராப்யபோ43ந்தான் இருக்கிறபடி; பர்யங்கவித்3யையில் சொல்லுகிறபடியே, ஸர்வேஸ்வரனும் பிராட்டிமாருங்கூடத் திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலேயிருக்கிற இருப்பிலே, இச்சேதநன் முக்தனாய்ச் சென்று கிட்டினால் “அஹம் ப்3ரஹ்மாஸ்மி”  “நான் ராஜபுத்ரன், ப்3ரஹ்ம ப்ரகாரபூ4தன்” என்னக்கடவன்; “ஆகில் இங்ஙனே போராய்” என்றால், அவன் அங்கீ3காரம் பெற்று, மாதாபிதாக்கள் இருந்த படுக்கையிலே ப்ரஜை சென்று ஏறுமாபோலே “தமேவம்வித் பாதே3நாத்4யாரோஹதி” என்று ஏறக்கடவனாகச் சொல்லுகிற அப்பேற்றைச் சொல்லுகிறது.

(அணைவது) தாபத்ரயங்களாலே நொந்த ஸம்ஸாரி சேதநன், “ஏஷ ப்3ரஹ்ம ப்ரவிஷ்டோ‍ஸ்மி” என்கிறபடியே – அப்பெரிய மடுவிலே விழுந்து தன் தாபமெல்லாம் ஆறுமாபோலேயாயிற்று, முதலிலே இவையில்லாதவன் திருவனந்தாழ்வான்மேலே அணைந்து, இவை உண்டாய்க் கழிந்தாரைப்போலே யிருக்கும்படி.  விடாயர் மடுவிலே விழுமாபோலேயாயிற்று அணைவது.  (அரவணைமேல்) நாற்றம், குளிர்த்தி, மென்மைகளை ஸ்வபா4வமாகவுடைய திருவனந்தாழ்வானோடே அணைவது; “புல்கும் அணையாம்” (முதல் திருவந்தாதி – 53) என்னக்கடவதிறே அவனை.  சேஷபூ4தன் அடிமை செய்தல்லது த4ரியாதாப் போலே, சேஷியும் சேஷ பூ4தனோடே அணைந்தல்லது த4ரியாதானா  யிருக்கிறபடி.

(பூம் பாவையாகம் புணர்வது) போ4க்3யதைகவேஷையாய், நிருபாதி4க ஸ்த்ரீத்வத்தையுடைய பெரியபிராட்டியாரோடே கலந்து வர்த்திப்பது.  (ஆகம் புணர்வது) ஆத்மகு3ணங்கள் குமரிருந்து போமித்தனை.

“அணைவது, புணர்வது” என்கிறதிறே – மூவர்க்கும் போ43ம் ஒத்திருக்கையாலே.  (ரம்யமாவஸத2ம் க்ருத்வா) அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற சக்ரவர்த்தி தன் ஆத3ரத்துக்குப் போரும்படி சமைத்த மாளிகைகளிலும், திருவுள்ளத்துக்குப் பொருந்தி அழகியதாயிருந்தது காட்டிலே இளையபெருமாள் சமைத்த ஆஸ்ரமமாயிற்று.  (த்ரயோ ரமமாணா:) நாயகரான பெருமாள் ரஸமல்லவே பிராட்டியது; பிராட்டிக்குப் பிறக்கும் ரஸமன்றே பெருமாளது; அப்படியே, அச்சேர்த்தி கண்டு உகக்குமவரிறே இளையபெருமாள்.  (வநே) “படைவீடர் காட்டிலே ரமித்தார்கள்” என்று தோற்றாதே, காடர் காட்டிலே வர்த்தித்தாற்போலே பொருந்தியிருந்தபடி.  ஆகச் சொல்லிற்றாயிற்று – ஸர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாகத் திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலேயிருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்தப்ராப்யபோ43மாகிறது.

(இருவரவர் முதலுந்தானே) ப்3ரஹ்மருத்3ரர்களுக்குக் காரணபூ4தனா யிருக்கும்.  “ஸ ப்3ரஹ்மா ஸ சிவ:” என்கிற ப்ரஸித்3தி4யாலே  – (இருவரவர்) என்கிறார்.  அவ்விபூ4தியைச் சொல்லுகிறவிடத்திலே (அணைவது புணர்வது) என்கையாலே – அது போ43பூ4மியாய் நித்யமாயிருக்கும் என்னுமிடமும், இங்கு (முதல்) என்கையாலே – இவ்விபூ4தியில் கார்யகாரணபா4வத்தால் வந்த ஸம்ப3ந்த4மும், இதுதான் ஆவதழிவதாம் என்னுமிடமும் சொல்லுகிறது.  இத்தால் – ப்3ரஹ்மருத்3ரர்கள் ஸம்ஸார ப3த்34ர்கள் என்னுமிடமும், ஈஸ்வரனே மோக்ஷப்ரத3னாகவல்லான் என்னுமிடமும் சொல்லுகிறார்.  ஆக, ஆஸ்ரயணீயன் அவனே, ப்3ரஹ்மருத்3ரர்கள் ஆஸ்ரயணீரல்லர் என்கை; “ஆப்3ரஹ்மஸ்தம்ப3 பர்யந்தா ஜக33ந்தர்வ்யவஸ்தி2தா: | ப்ராணிந: கர்மஜநிதஸம்ஸாரவஸ வர்த்திந: ||” என்னாநின்றதிறே.

இப்படி ப்3ரஹ்மருத்3ரர்களுக்கும் காரணபூ4தனாகையாலே வந்த மேன்மையையுடையவன் – (எப்பொருட்கும் இணைவனாம்) தே3வாதி3 ஸகல பதா3ர்த்த2ங்கள்தோறும் ஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும்.  ப்3ரஹ்ம ருத்3ரர்கள் நடுவே வந்து அவதரிப்பது, உபேந்த்3ரனாவது, சக்ரவர்த்தி ஸ்ரீவஸுதே3வர்களளவிலே அமைத்து வந்து பிறப்பது, மஹாவராஹமாவது, குப்ஜாம்ரமாவதாகா நிற்கும். இப்படி தாழவிட்டுப் பிறக்கிறது எதுக்காக? என்னில் – (வீடுமுதலாம்) மோக்ஷப்ரத2னாகைக்காக; அவதரித்தவிடங்களிலே பக்ஷிக்கு மோக்ஷத்தைக் கொடுப்பது, பிஶாசத்துக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதாகாநிற்கும்.

அவன் வந்து அவதரிப்பது மோக்ஷப்ரத3னாகைக்காகவாகில், எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாவோ? என்னில் (பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன்) “ஸம்ஸாரம் என்றொரு பெருங்கடல், அது எங்களால் கடக்கப் போகாது, ப்ரப3லனான நீயே கழித்துத் தரவேணும்” என்றிருப்பார்க்கு ப்ரதிபூ4வாய் நின்று கடத்திக்கொடுக்கும்.  புணையாமவன் என்றபடி; ஸர்வப4ரநிர்வாஹகனாமவன் என்றபடி.  “ஸம்ஸாரஸாக3ரம் கோ4ரமநந்தக்லேஸபா4ஜநம் | த்வாமேவ சரணம் ப்ராப்ய ||” என்றிருப்பார்க்குக் கடத்திக்கொடுக்கும்.  (புணைவன் என்று – தெப்பமாமவன் என்னவுமாம்) “விஷ்ணுபோதம்” என்னக்கடவதிறே; ஏகதே3சத்தைப்பற்றி நிற்கையன்றிக்கே, அக்கரையும் இக்கரையுமாய் நிற்கும் ஓடமாயிற்று.

இரண்டாம் பாட்டு

நீந்தும் துயர்ப்பிறவி உட்படமற் றெவ்வெவையும்*
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்*
பூந்தண் புனல்பொய்கை யானை யிடர்கடிந்த*
பூந்தண் துழாய்என் தனிநா யகன்புணர்ப்பே.

– அநந்தரம், ஸம்ஸார நிஸ்தரணபூர்வகமான மோக்ஷத்துக்கு ஹேது அவனுடைய ஸம்பந்தம் என்கிறார்.

(இஸ்ஸம்ஸார நிவ்ருத்திக்கு நிதர்சனம் என்னலாம்படி) பூ – பூவையுடைத்தாய், தண் – குளிர்ந்த, புனல் – புனலையுடைய, பொய்கை – பொய்கையிலே, யானை – யானைக்கு, இடர் – (முதலையால் வந்த) இடரை, கடிந்த – போக்கின, பூம் – செவ்வியையுடைத்தாய், தண் – குளிர்ந்த, துழாய் – திருத்துழாயையுடையனாய், (அத்தாலே) என் – எனக்கு, தனி நாயகன் – அத்விதீயநாயகனானவனுடைய, புணர்ப்பு – ஸம்பந்தமானது, நீந்தும் – (இச்சேதநனுக்கு) நீந்தாநிற்கும்படி துஸ்தரமாய், துயர் – து3:க்கோ2த்தரமான, பிறவி – பிறவி, உட்பட – உட்பட, மற்று – மற்றும், நீந்தும் – நீந்தும்படியான, எவ்வெவை – (ஜராமரணாதிகளான) எவ்வகைப்பட்ட, துயரும் – து:க்கமும், இல்லா – ஸ்பர்சியாத, வீடு – மோக்ஷாநந்தத்துக்கு, முதலாம் – ஹேதுவாம்.

முதற்பாட்டில் “வீடு முதலாம்” என்றத்தை விவரித்தது.

ஈடு – இரண்டாம் பாட்டு.  “என் தனிநாயகன் புணர்ப்பு” என்கையாலே – ‘எம்பெருமான்தான் வேணுமோ? அவனோடுள்ள ஸம்ப3ந்த4மே மோக்ஷப்ரத3ம்’ என்கிறார்.

(நீந்தும் இத்யாதி3) “பிறவிக்கடல் நீந்துவார்க்கு” என்கிற அதினுடைய விவரணமாயிருக்கிறது.  ‘நீந்தும் துயர்ப் பிறவியுட்பட மற்று எவ்வெவையும் நீந்தும்; துயரில்லாவீடுமுதலாம்’ என்று பிரித்து யோஜிக்கவுமாம்; அன்றிக்கே, ஒன்றாக வீட்டு விஶேஷணமாகவுமாம்.  (நீந்தும் இத்யாதி3) “நீந்தும்” என்கிற வர்த்தமாந
நிர்தே3சத்தாலே – கடக்க அரிதான து3:க்க2த்தை விளைப்பதான ஜநநம் தொடக்கமான மற்றுமுண்டான அபக்ஷயவிநாசாதி3களையும் கடத்தும்; (துயரில்லா வீடுமுதலாம்) து2:க்க23ந்த4ரஹிதமான மோக்ஷத்துக்கும் ஹேதுவாம்.  கடக்க அரிதான து3:க்க2த்தை யுடைத்தான ஜந்மம் தொடக்கமாக நீந்தும் துயரான மற்று எவ்வெவையுமில்லாத மோக்ஷத்துக்கு ஹேதுவாம் என்னுதல்.

இவர் வீடு என்கிறது – ஸம்ஸாரநிவ்ருத்தி மாத்ரத்தையன்று, ஸுக2 பா4வைகலக்ஷணையான ப43வத்ப்ராப்தியை.  “முக்திர்மோக்ஷோ மஹாநந்த3:” என்னக்கடவதிறே.  இப்படி து3:க்க2த்தைப் போக்கி வீடு முதலாக எங்கே கண்டோம்? என்னில் (பூந்தண் இத்யாதி3) பரப்புமாறப் பூத்துக் குளிர்ந்த புனலையுடைத்தான பொய்கையிலே போய்ப்புக்கு முதலையாலே இடர்ப்பட்ட ஆனையினுடைய து3:க்க2த்தை வாஸனையோடே போக்கினவன்.

“பூவில் செவ்வி அழியாமே திருவடிகளிலே இடவேணும்” என்று நினைத்து, அது பெறாமையால் வந்த இடரைப்போக்கின.  (பூந்தண் துழாய் என்தனிநாயகன்) வைத்த வளையத்தோடே காணும் மடுவிலே போய்விழுந்தது! திருத்துழாயில் பரிமளம்போலே காணும் ஆனையிடரைக்கடிந்தது! ஆனையிடராவது – “ஸர்வேஸ்வரன் ஆபத்ஸக2ன் என்றிருந்தோம்; இவன் இப்படி ஆபந்நனாக உதவாதொழிவதே! நிர்க்4ருணனாயிருந்தானீ!” என்று நாட்டிலுள்ளார் நினைக்கில் செய்வதென்? என்று அத்தாலே வந்த இடராகிலுமாம்.  (என் தனிநாயகன்) ஆனையிடரைப் போக்குகையன்றிக்கே, தம் இடரைப் பரிஹரித்தாற் போலேயாயிற்று இவர்க்கு இருக்கிறது.  (புணர்ப்பு) அவனோட்டை ஸம்ப3ந்த4ம்.   அவன் திருவடிகளில் ஸம்ப3ந்த4ம், து3:க்க2நிவ்ருத்தியையும்பண்ணி, ஸுக2பா4வைகலக்ஷணம் என்கிற பேற்றையும் தரும்.  தனிநாயகன் புணர்ப்பு – வீடுமுதலாம் என்று அந்வயம்.

மூன்றாம் பாட்டு

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்*
புணர்த்ததன் னுந்தியோடு ஆகத்து மன்னி*
புணர்த்த திருவாகித் தன்மார்வில் தான்சேர்*
புணர்ப்பன் பெரும்புணர்ப்பு எங்கும் புலனே.

– அநந்தரம், அவனுடைய திவ்யமான சேஷ்டிதங்கள் ஸர்வத்ர ப்ரஸித்தம் என்கிறார்.

தன் – தன்னை, புணர்த்த – உத்பாதித்த, உந்தியோடு – திருநாபியோடே கூட, ஆகத்து – திருமேனியில் ஒரு பார்ஶ்வத்திலும், மன்னி – நித்யவாஸம் பண்ணி, புணர்க்கும் – லோகஸ்ருஷ்டி பண்ணுகிற, அயனாம் – அஜனுமாய், அழிக்கும் – ஸம்ஹரிக்கிற, அரனாம் – ஹரனுமாய் (இப்படி தத்ததந்தராத்மதையாலே ததாத்மகனாய்), தன் மார்வில் – தன் மார்விலே, புணர்த்த – (நிரூபகமாம்படி) சேர்த்துக்கொள்ளப்பட்ட, திருவாகி – திருவுடையனாய், தான் – தானே, சேர் – தனக்குத் தகுதியான, புணர்ப்பன் – ஸ்வாதீந சேஷ்டிதனானவனுடைய, பெரும் – அபரிச்சிந்நமான, புணர்ப்பு – திவ்யவ்யாபாரங்களானவை, எங்கும் – எங்கும், புலன் – கண்டு அநுபவிக்கலாம்படி ப்ரஸித்தம்.

“இருவரவர் முதலுந்தானே” என்றத்தை விவரித்தது.

ஈடு – மூன்றாம் பாட்டு. “இருவரவர் முதலுந்தானே” (1) என்கிற பத3த்தை விவரியாநின்று கொண்டு, ஸ்ரிய:பதியான அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை ப்ரத்யக்ஷிக்கலாம் என்கிறார்.

(புணர்க்கும் அயனாம்) இவற்றை ஸ்ருஷ்டிக்கையே தொழிலாயிருக்கிற ப்3ரஹ்மாவுமாம்.  (அழிக்கும் அரனாம்) சுடுதடிபோலே இவற்றையடைய அழித்துக் கொண்டு நிற்கிற ருத்3ரனுமாம்.  “ததா33ர்ஶிதபந்தா2நௌ ஸ்ருஷ்டிஸம்ஹார காரகௌ”.  “ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே” என்கிறபடியே அவன் அந்தராத்மாவாய் நின்று ப்ரவர்த்திப்பிக்க, இவற்றைச் செய்கிறார்கள்.

(புணர்த்த தன் உந்தியோடாகத்து மன்னி புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்) இவைதான் இவர்கள் செய்யவல்லராவது அவன் திருமேனியைப் பற்றியிருந்தபோதாயிற்று; ஸ்தநந்த4யப்ரஜை, வாயில் முலைவாங்கினால் த4ரியாதாப்போலே.  இத்தால், ஸாமாநாதி4கரண்யத்தாலே – அந்தர்யாமித்வம் சொல்லிற்று.  “புணர்த்த தன் உந்தி” என்கையாலே, காரணத்வம் சொல்லிற்று; “ஆகத்து மன்னி” என்கையாலே – திருமேனியைப்பற்றி லப்34ஸ்வரூபர் என்னுமிடம் சொல்லிற்று.  (புணர்த்த திருவாகித் தன் மார்வில்) தன் திருமார்வில் நித்யஸம்ஸ்லிஷ்டையாயிருக்கிற பெரியபிராட்டியாரையுடையனாய்.  இது இப்போது சொல்லுகிறதென்? என்னில்; ப்3ரஹ்மாதி3களுக்கு நிர்வாஹகன் என்றவோபாதி, லக்ஷ்மீ ஸம்ப3ந்த4மும் ஐஸ்வர்யத்துக்கு உடலாகையாலே.  பெரியபிராட்டியாரோட்டைச் சேர்த்தி, நீர்மைக்கும் மேன்மைக்கும் உடலா யிருக்குமிறே.  (தான் சேர் புணர்ப்பன்) ஸ்ருஷ்ட்யர்த்த2மாக ஏகார்ணவத்திலே சாய்ந்தருளினவன் என்னுதல்; தனக்குத் தகுதியான சேஷ்டிதங்களையுடையவன் என்னுதல்.

(பெரும் புணர்ப்பு எங்கும் புலனே) ப்3ரஹ்மாதி3கள் அதி4கரித்த கார்யங்களை அவர்கள் வழியாலே நடத்தியும், நான் அதி4கரித்த கார்யங்களைத் தானே நடத்தியும் போருகையாலே தன்னுடைய பெரும்புணர்ப்பு – ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாயிருக்கும்.

நான்காம் பாட்டு

புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி*
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்!*
அலமந்து வீய அசுரரைச் செற்றான்*
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே.

– அநந்தரம், ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமான பரமபதப்ராப்திக்கு ஏவம்விதனுடைய குணங்களிலே நித்யாவகாஹம் பண்ணுங்கோள் என்கிறார்.

புலன் – புலப்படும் விஷயங்கள், ஐந்தும் – ஐந்திலும், மேயும் – பொருந்தி, பொறி – பொறிபோலே இவனை அகப்படுத்திக்கொள்ளும், ஐந்தும் – ஐந்து இந்த்ரியங்களின் வசத்தினின்றும், நீங்கி – அகன்று, நலம் – ஆநந்தம், அந்தமில்லது – அளவிறந்திருப்பதாய், ஓர் – அத்விதீயமான, நாடு – தேசத்திலே, புகுவீர் – போய்ப்புகவேண்டியிருப்பீர்! அலமந்து – அலமந்து, வீய – நசிக்கும்படி, அசுரரை – அசுரரை, செற்றான் – கொன்றவனுடைய, முந்து – ஆரம்பமே தொடங்கி, பலம் – (இனிமையாலே) “பலம்” என்னலாம்படியான, சீரில் – குணங்களிலே, ஓவாதே – என்றும் ஒக்க, படிமின் – அவகாஹியுங்கோள்.

ரஸாயநமான பய:பாநநைரந்தர்யத்தாலே பித்தசாந்தியும் இனிமையும் பிறக்குமா போலே, போக்யகுணங்களிலே நிரந்தராநுபவம் பண்ணவே, அநிஷ்ட நிவ்ருத்தியும், இஷ்ட ப்ராப்தியும் தன்னடையே வரும் என்று கருத்து.  புலனும், பொறியும் என்கிற இவை இரண்டும் – விஷயங்களுக்கும், இந்த்ரியங்களுக்கும் கலந்து பேராய் வரும்.

ஈடு – நாலாம் பாட்டு.  அவனுடைய ஈஸ்வரத்வத்தில் கண்ணழிவற்றிருந்தது; இனி “இதுக்கு அவ்வருகில்லை என்று நன்மை பெறவேணும்” என்றிருப்பார் அவனைக் கடுக ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார்.

(புலன் இத்யாதி3) புலனைந்து என்கிறது – விஷயங்களையாய், அவற்றிலே ப்ரவணமாகக்கடவவான பொறியைந்துண்டு – ஸ்ரோத்ராதி3கள்; அவற்றுக்கு வஸ்யராகை தவிர்ந்து.  சில பதா3ர்த்த2ங்களை வறைநாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே,  சப்3தா3தி3களிலே மூட்டி நசிப்பிக்கையாலே, இந்த்3ரியங்களை – பொறி என்கிறது.   இத்தால் – பரிச்சி2ந்நவஸ்துக்3ராஹகமான இந்த்3ரியவஸ்யராகை தவிர்ந்து.  (நலம் இத்யாதி3) நன்மைக்கு முடிவின்றிக்கேயிருக்கிற நாட்டிலே புகவேண்டியிருப்பீர்! “ஸ்வவிநாசங்காண் மோக்ஷம்” என்கையன்றிக்கே, ஆப்ததமரான இவர் நன்மைக்கு முடிவில்லாத ஒரு தே3சவிசேஷமுண்டாக அருளிச்செய்துவைத்தாரிறே.  (புகுவீர்) இப்பேற்றுக்கு இசைவே அதி4காரம்  என்கிறார்.  அது ஒரு நாடுமுண்டாய், “அது பெறவேணும்” என்னும் நசையுமுண்டானாலும், ப்ரப3லவிரோதி4கள் கிடக்குமாகில் ப்ரயோஜநமில்லையே என்னில் (அலமந்து வீய அசுரரைச் செற்றான்) விரோதி4 போக்குகை நம் பணியோ? என்கிறார்.  தடுமாறி முடிந்துபோம்படி அஸுரவர்க்க3த்தை அழியச்செய்தான்.

அவனுடைய – (பலமுந்து சீரில் படிமின்) ப2லம் முற்பட்டிருக்கிற கல்யாண கு3ணங்களிலே ப்ரவணராகுங்கோள்.  “ஸுஸுக2ம் கர்த்து மவ்யயம்” என்னும்படி – ஸ்மர்த்தவ்ய விஷயஸாரஸ்யத்தாலே, ஸாத4நத3ஶையே தொடங்கி இனிதாயிருக்குமிறே.  (ஓவாதே) “அபர்வணி கடல் தீண்டலாகாது” என்னுமா போலே ஒரு நியதியில்லை இதுக்கு;  மாறாதே ஆஶ்ரயிக்கப்பாருங்கோள். தமக்கு ரஸித்தபடியாலே, இடைவிடாமல் அநுப4வியுங்கோள் என்கிறார் என்றுமாம்.  “நானும் சொன்னேன் நமருமுரைமின்” (பெரியதிருமொழி 6-10-6) என்னுமாபோலே.

ஐந்தாம் பாட்டு

ஓவாத் துயர்ப்பிறவி உட்படமற் றெவ்வெவையும்*
மூவாத் தனிமுதலாய் மூவுலகும் காவலோன்*
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம்*
தேவாதி தேவ பெருமான்என் தீர்த்தனே.

– அநந்தரம், ஸமஸ்தகாரணபூதனானவன் கார்யபூதஜகத்ரக்ஷணார்த்தமாகப் பண்ணின அவதாரங்களில் வைலக்ஷண்யத்தை அருளிச்செய்கிறார்.

ஓவா – அவிச்சிந்நமான, துயர் – து3:க்க2த்தைத் தருவதான, பிறவி – ஜந்ம ஸம்பந்தரூபமான ஸ்ருஷ்டி, உட்பட – அகப்பட்ட, மற்று – மற்ற ஸ்திதி ஸம்ஹாராதிகளான, எவ்வெவையும் – எல்லா வ்யாபாரங்களுக்கும், மூவா – மூத்துச் சோம்பிவிடாத, தனிமுதலாய் – ஸஹாயாந்தர நிரபேக்ஷ காரணபூதனாய்க்கொண்டு, மூவுலகும் – (ஸ்ருஜ்யமான) லோகத்தினுடைய, காவலோன் – ரக்ஷணத்தையுடையனாய், தேவ – ப்ரஹ்மாதிதேவர்களுக்கும், ஆதிதேவர் – (அவ்வருகாம்படி) ஆதிதேவர்களான அயர்வறும் அமரர்களுக்கு, பெருமான் – அதிபதியாய், என் – எனக்கு, தீர்த்தன் – அவகாஹிக்கும் துறையாம்படி ஸுலபனானவன், (அந்த ஜகத்ரக்ஷணார்த்தமாக), மாவாகி – (வேதப்ரவர்த்தகனான) ஹயக்ரீவனாய், ஆமையாய் மீனாகி – (புராணப்ரவர்த்தக) கூர்மமத்ஸ்யரூபியாய், மானிடமாம் – (கீதோபநிஷதாசார்யனுமான) மநுஷ்யனுமாம்.

“இணைவனாம் எப்பொருட்கும்” என்கிற பதத்தை விவரிக்கிறது.

ஈடு – அஞ்சாம் பாட்டு.  கீழே “இணைவனாம் எப்பொருட்கும்” என்றார்; அத்தை உபபாதி3க்கிறார்.

(ஓவாத் துயர்ப் பிறவியுட்பட) கீழே “நீந்தும் துயர்ப் பிறவி” என்றார்; இதிலே – ஒருகால் விட்டுப்பிடிக்குமதுவும் இல்லை என்கிறார்.  உச்சிவீடும் விடாத துயரை விளைக்கக்கடவதான, ஜந்மம் தொடக்கமாக மற்றுமுண்டான ஐந்துக்கும் அவற்றை உடைத்தான பதா3ர்த்த2ங்களுக்கும்.

‘மூவா’ என்கிற இத்தை – கீழே கூட்டுதல்; ‘மூவா – தனி•தல்’ என்று, மேலே கூட்டுதல்.  ப்ரவாஹரூபத்தாலே நித்யமாய்ப்போருகிற இதுக்குத் தனிமுதல் என்னுதல்; முசியாத அத்3விதீயகாரணமாய் என்னுதல்.  தான், “தன்பக்கலிலே வழிபடவேணும்” என்று நினைத்து உபகரணங்களைக் கொடுத்துவிட, கொடுத்த உபகரணங்களைக்கொண்டு வழிகெட நடவாநின்றால், “இப்போது இங்ஙனே போயிற்றதாகில், க்ரமத்திலே நம்பக்கலிலே ருசியைப் பிறப்பித்து மீட்டுக் கொள்ளுகிறோம்” என்று அநுமதிதா3நத்தைப் பண்ணி உதா3ஸீநனாயிருக்கும்; இப்படி தன்நினைவைத் தப்பிப்போரச்செய்தேயும், கர்ஷகனாயிருக்குமவன் “ஒருகால் பதர்த்ததிறே” என்று சோம்பிக் கைவாங்காதே மேலே மேலே கோலுமாபோலே, “ஒரு காலல்லா ஒருகால் ஆகிலுமாகிறது” என்று ஸ்ருஷ்டியாநிற்கும்.  “சோம்பாது இப்பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா” (பெரியதிருவந்தாதி – 18) என்னக்கடவதிறே.

இப்படி இவன் ஸ்ருஷ்டித்து ரக்ஷிப்பது எவ்வளவென்னில் (மூவுலகுங் காவலோன்) ஸ்ருஷ்டிக்குக் கர்மீப4விக்கும் எல்லையளவும்.  கீழும், மேலும், நடுவும் என்னுதல்; க்ருதகம், அக்ருதகம், க்ருதகாக்ருதகம் என்னுதல்.  (காவலோன்) சாஸ்த்ரப்ரதா3நாதி3களாலே ரக்ஷிக்கை; இப்படி ரக்ஷிப்பது தன் மேன்மை குலையாதே நின்றோ? என்னில் (மாவாகி இத்யாதி3) அகர்மவஸ்யனானவன் கர்மவஸ்யரோடு ஒக்கப்பிறந்தாயிற்று.  (மாவாகி) ஹயக்3ரீவ மூர்த்தியாய் அவதரித்தபடி.  (ஆமையாய் மீனாகி) வித்3யாப்ரகாசகமான அவதாரங்கள்.  (மானிடமாம்) ராமக்ருஷ்ணாத்3யவதாரங்கள்.  அநுஷ்டே2யார்த்த2 ப்ரகாசகமான அவதாரங்கள்.  “மர்யாதா3நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸ:” என்றும், “யத்3யதாசரதி ஸ்ரேஷ்ட2:” என்றும் சொல்லுகிறபடியே.  இப்படி தாழவிட்டு அவதரிக்கிறவன்தான் ஆர்? என்னில் (தேவாதிதேவ பெருமான்) மநுஷ்யக3ந்த4ம் பொறாத தே3வர்கள்க3ந்த4மும் பொறாத நித்யஸூரிகளுக்கு அவ்வருகானவன்.  (என் தீர்த்தனே) நல்ல போ4க்3யஜாதமிருக்க, நிஷித்34 த்3ரவ்யங்களை விரும்புவாரைப்போலே, தானும் தன்னுடைய கு3ணங்களுமிருக்க, சப்3தா3தி3 விஷயங்களை விரும்பிப்போந்த என்னை, அவற்றைவிட்டுத் தன்னையே விரும்பும்படியான ஸுத்3தி4யைப் பிறப்பித்த ஸுத்3தி4யையுடையவன்.  அன்றிக்கே, நான் இழிந்து ஆடும் துறை என்னுதல்.

ஆறாம் பாட்டு

தீர்த்த னுலகளந்த சேவடிமேல் பூந்தாமம்*
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான்கண்டு*
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை*
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே.

– அநந்தரம், இவ்வவதார த3சையிலுண்டான பரத்வம் அதிப்ரஸித்34ம் என்கிறார்.

தீர்த்தன் – பாவநபூ4தனான க்ருஷ்ணனுடைய பூர்வாவதாரத்திலே, உலகு – லோகத்ரயத்தையும், அளந்த – அளந்துகொண்ட, சே – செவ்வையையுடைய, அடிமேல் – திருவடிகளிலே, பூம் – அழகிய, தாமம் – மாலைகளை, சேர்த்தி – ஸமர்ப்பித்து, அவையே – அவற்றையே, சிவன் – சிவனுடைய, முடிமேல் – ஜடாமகுடத்திலே, தான் – தானே, கண்டு – கண்டு, பார்த்தன் – அர்ஜூநன், தெளிந்தொழிந்த – அறுதியிட்ட (அந்த), பைம் – பசுத்த, துழாயான் – திருத்துழாயையுடையவனுடைய, பெருமை – பரத்வமானது, பேர்த்தும் – இப்பார்த்தனையொழிய, ஒருவரால் – வேறொருவராலும், பேச – உபபாதித்துச் சொல்லவேண்டும்படி, கிடந்ததே – தெளியாது கிடந்த அம்சமுண்டோ? ஸுப்ரஸித்34மன்றோ என்று கருத்து.

ஈடு – ஆறாம் பாட்டு.  நீர்சொல்லுகிறவனுக்கு இந்த உத்கர்ஷமெல்லாம் உண்டோ? என்ன; முன்பே அர்ஜுநன் நிரூபித்து நிர்ணயித்த அர்த்த2ம் நாம் இன்று ஆராயும்படி குறைபட்டிருந்ததோ? என்கிறார்.

(தீர்த்தன்) “பாதோ33கேந ஸ சிவ: ஸ்வஸிரோத்4ருதேந” என்றும், “பாவநார்த்த2ம் ஜடாமத்4யே யோக்3யோண்ஸ்மீத்யவதா4ரணாத்” என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே அஸுத்34ரையும் ஸுத்34ராக்கவல்ல ஸுத்3தி4யையுடையவன்.  இது எப்போதுதான் செய்தது? என்னும் அபேக்ஷையிலே (உலகளந்த சேவடி) என்று, அத்தை ஸ்மரிப்பிக்கிறார்.  “குறைகொண்டு” (நான்முகன் திருவந்தாதி -9) – தன்னுடைய ஆகிஞ்சந்யத்தை முன்னிட்டுக்கொண்டு.  “நான்முகன் குண்டிகை நீர்பெய்து” – அருகே நின்ற த4ர்மதத்த்வம் இவன் நினைத்தவாறே ஜலமாய், இவன் குண்டிகையிலே ப்ரவேசித்தது.  “மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி” – ஸ்ரீபுருஷஸூக்தாதி3களைக்கொண்டு ஸ்துதித்து.  “கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேலேறக் கழுவினான்” – “யுக்தாயுக்த நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கைவளராநின்றான்; அது போகவேணும்” என்று இவன் ஜடையிலே ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்; ஸ்ரீபாத3தீர்த்த3ங்கொண்டு து3ஷ்புத்ரர்கள் தலையிலே தெளிக்குமாபோலே.  இவ்விடந்தன்னில் க்ருஷ்ணவ்ருத்தாந்தமாயிற்று சொல்லுகிறது; ஸ்ரீவாமநாவதாரமென்? என்னில்; க்ருஷ்ணாவதாரத்துக்கும் வாமநாவதாரத்துக்கும், வரையாதே எல்லாரோடும் பொருந்துமதுண்டாகையாலே சொல்லுகிறார்.  (பூந்தாமம் சேர்த்தி) அர்ஜுநனுக்கு ஒரு தே3வதைபக்கலிலே ஒரு (ஓர்) அஸ்த்ரம் பெறவேண்டுவதாய், அவன் அதுக்கு உத்3யுக்தனான ஸமயத்திலே, இவன் ஸ்ரமத்தை ஆற்றுகைக்காக “புஷ்பங்களை நம் காலிலே இட்டு ஜீவி”  என்று அருளிச்செய்ய, அவனும் திருவடிகளிலே இட,  அந்த தே3வதை ராத்ரியிலே ஸ்வப்நத்திலே அந்தப் புஷ்பங்களைத் தன் தலையிலே த4ரித்துக்கொண்டு வந்து அஸ்த்ர ப்ரதா3நம் பண்ணிற்றாகச் சொல்லக்கடவதிறே; அத்தை அருளிச்செய்கிறார்.

பூமாலை என்னுதல், அழகியமாலை என்னுதல்.  (அவையே) அவற்றோடு ஸஜாதீயங்கள் அன்றிக்கே. (சிவன் முடிமேல் தான் கண்டு) பாடே பார்ஸ்வத்திலே அன்றிக்கே அவன் தலைமேலே கண்டானாயிற்று.  (தான் கண்டு) ஆப்தர் சொல்லக் கேட்கையன்றிக்கே, ஸ்ருதிஸ்ம்ருதிகளாலாதல் அன்றிக்கே, தானே கண்டானாயிற்று.  ப்ரத்யபி4ஜ்ஞார்ஹமாம்படி ப்ரத்யக்ஷித்து.  (பார்த்தன் இத்யாதி3) அவன் ஸாரதி3யாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய ஈஸ்வரத்வத்தில் கலங்காதே, “ஸ து பார்த்தோ2 மஹாமநா:” என்கிறபடியே பேரளவுடைய அர்ஜுநன் நிரூபித்து, நிர்ணயித்து, “நம: புரஸ்தாத32 ப்ருஷ்ட2 தஸ்தே” என்று அநுவர்த்தித்த.  (பைந்துழாயான் பெருமை) ஸர்வாதி4கத்வ த்3யோதகமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேஸ்வரனுடைய பரத்வம், இன்று சில அறிவுகேடர், செல்லவிட்டு வரவிட்டு ஆராயுமளவாயிருந்ததோ?

ஏழாம் பாட்டு

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக்கு
இடந்திடும்* தன்னுள் கரக்கும் உமிழும்*
தடம்பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை* மால்செய்கின்ற மால்ஆர்காண் பாரே.

– அநந்தரம், ரக்ஷ்யமான ஜகத்தைப் பற்றத் தன் வாத்ஸல்யத்தாலே அநேகவ்யாபாரங்களைப் பண்ணும் என்கிறார்.

கிடந்து – (ரக்ஷணார்த்தமாக ‘ப்ரதிசிஸ்யே மஹோத3தி4ம்’ என்று கடற்கரையிலே வழிவேண்டிக்)கிடந்தும், இருந்து – ‘உடஜே ராமமாஸீநம்’ என்று திருச்சித்ரகூடத்திலே இருந்தும், நின்று ‘அவஷ்டப்4ய ச திஷ்ட2ந்தம்’ என்றும், ராவணவதா4நந்தரம் தேவதா ஸந்நிதியில் வில்லை நடுக்கொத்துப் பிடித்து) நின்றும், (அன்றியே “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிலிருந்து வைகுந்தத்துள் நின்று” என்கிறபடியே அர்ச்சாவதார ஸ்த2லத்திலே கிடந்தும் இருந்தும் நின்றும்) அளந்து – (த்ரிவிக்ரமனாய் அநந்யார்ஹமாம்படி) அளந்தும், கேழலாய் – வராஹரூபியாய், கீழ் – (ப்ரளய ஜலத்துக்குக்) கீழே, புக்கு – புக்கு, இடந்திடும் – (அண்டகடாஹத்தினின்றும்) ஒட்டு விடுவித்து எடுத்தும், (மஹாப்ரளயத்திலே வடதளசாயியாய்) தன்னுள் – வயிற்றுக்குள்ளே, கரக்கும் – (தெரியாதபடி) கரந்தும், உமிழும் – வெளிநாடுகாணும்படி உமிழ்ந்தும், தடம் – இடமுடைத்தான, பெரும் – பெரிய, தோள் – திருத்தோள்கள், ஆர – நிரம்பும்படி, தழுவும் – (அஸாதாரண விக்ரஹத்தோடே) தழுவியும், (இப்படி) பாரென்னும் – பூமியென்று சொல்லப்படுகிற, மடந்தையை – மடந்தையை, மால் – ஸர்வாதிகனான ஈஸ்வரன், செய்கின்ற – பண்ணுகிற, மால் – வ்யாமோஹத்தை, காண்பார் – அறியவல்லார், ஆர் – ஆர்? அதிசயிதஜ்ஞாநர்க்கும் அறியவொண்ணாது என்று கருத்து.

ஈடு – ஏழாம் பாட்டு.  ஒருவன் அநுவர்த்தநம் கொண்டு நிஸ்சயிக்க வேணுமோ? அவனுடைய இஷ்டஸர்வசேஷ்டாவிஷயமாயன்றோ இஜ்ஜக3த்து இருக்கிறது;  இதுவே போராதோ பரத்வஹேது? என்கிறார்.

(கிடந்து) திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல்; “ப்ரதிசிஸ்யே” என்னும் படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்; “பா3ஹும் பு4ஜக3போ4கா34ம்” திருவநந்தாழ்வான் மேலே சாய்ந்தாற்போலேயாயிற்று திருக்கையை மடித்துச் சாய்ந்தால் இருக்கும்படி.  “அரிஸூத3ந:” கிடந்த கிடையிலே லங்கை குடிவாங்க வேண்டும்படியிருக்கை.  “ப்ரதிசிஸ்யே மஹோத3தே4:” ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்த்தி4த்துச் சாய்ந்தாற்போலேயிருக்கை.  (இருந்து) பரமபத3த்திலே இருந்தபடியாதல்; “உடஜே ராமமாஸீநம்” என்று ருஷிகள் ஆஶ்ரமங்களிலே இருந்து.  (நின்று) திருமலையிலே நின்றபடியாதல்; ராவணவத4 ஸமநந்தரத்திலே கையும் வில்லுமாய் லங்காத்3வாரத்திலே நின்ற நிலையாதல்; வாலியைக்கொன்று நின்ற நிலையாதல்.  “அவஷ்டப்4ய ச திஷ்ட2ந்தம் த33ர்ச த4நுரூர்ஜிதம் | ராமம் ராமாநுஜம் சைவ ப4ர்த்துஶ்சைவாநுஜம் ஸுபா4 ||” என்கிறபடியே.  அவர்களுடைய ஸ்த்ரீகள்பக்கலிலே கேட்குமித்தனையிறே இவனுடைய பரத்வம்; “தமஸ: பரமோ தா4தா ஸங்க2சக்ரக3தாத4ர:” என்னுதல், “த்வமப்ரமேயஸ்ச” என்னுதல் சொல்லாநிற்பர்களிறே.  (அளந்து) தன்னதான பூ4மியை மஹாப3லிபோல்வார் இறாஞ்சிக்கொள்ள, அத்தை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு.  (கேழலாய்க் கீழ்புக்கு இடந்திடும்) நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹவேஷத்தைப் பரிக்3ரஹித்து, ப்ரளயஸலிலத்துக்குள்ளே முழுகி அண்ட3பி4த்தியிலே சேர்ந்த பூ4மியைப் பிரித்தெடுக்கும்.  (தன்னுள் கரக்கும்) “ரக்ஷிக்க” என்றொரு பேரையிட்டுக்கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாதே வயிற்றிலே வைத்து ரக்ஷித்தபடி.  “மேல் ஒரு காலம் ப்ரளயம் வரும்” என்று ஏலக்கோலி, ப்ரளயம் வந்தாலும் “இங்குண்டோ” என்று இளைத்துக் காட்டலாம்படி முன்புத்தையதொன்றும் தெரியாதபடி வைக்கும்.

(உமிழும்) “இவை என்பட்டன” என்று பார்க்கைக்காகப் பின்னை வெளிநாடுகாண உமிழும்.  (தடம்பெரும் தோளாரத் தழுவும்) மிகப்பணைத்த திருத்தோள்களாலே, ஆரும்படியாகத் தழுவும்.  (பாரென்னும் மடந்தையை) ஸ்ரீபூ4மிப்பிராட்டியை. பூ4மியை ப்ரகாரமாகவுடையளாகையாலே தத்3வாசக சப்33த்தாலே சொல்லுகிறது.  தன் விபூ4தியினுடைய ரக்ஷணம் ஒருதலையானால் அவன் படும் பாட்டை அநுஸந்தி4த்து ஹ்ருஷ்டையாய், அதுக்கு அபி4மாநினியான ஸ்ரீபூ4மிப்பிராட்டி அணைக்கும்; அத்தாலே தானும் ஹ்ருஷ்டனாய் அணையா நிற்கும்.  (மால்) ஸர்வாதி4கனான ஸர்வேஸ்வரன்.  (செய்கின்ற மால்) அவன் ஏறுகிற பிச்சை.  (ஆர் காண்பாரே) ஒருவராலே “இவ்வளவு” என்று பரிச்சே2தி3க்கலாயிருந்ததோ?

எட்டாம் பாட்டு

காண்பாரார்எம்மீசன் கண்ணனைஎன் காணுமாறு*
ஊண்பேசில்எல்லா வுலகும்ஓர் துற்றாற்றா*
சேண்பால வீடோ உயிரோமற் றெப்பொருட்கும்*
ஏண்பாலும் சோரான் பரந்துளனாம் எங்குமே.

– அநந்தரம், அவன் எனக்கு ப்ரகாஶிப்பித்த அதிசயிதாகாரங்கள் து3ரவபோ34ம் என்கிறார்.

எம் – எனக்கு, ஈசன் – ஸ்வாமியாய், கண்ணனை – ஸுலபனான க்ருஷ்ணனை, காண்பார் – அறியவல்லார், ஆர் – ஆர்? (அவன்படி இதுவானால்) காணுமாறு – அறியும்படி, என் – எங்ஙனே? (அவனுக்கு) ஊண் – ஊண், பேசில் – சொல்லப்பார்க்கில், (அத்தா சராசரக்ரஹணா என்கிறபடியே), எல்லாவுலகும் – (சராசராத்மகமான) ஸகலலோகமும், ஓர் துற்று – ஒரு பிடிக்கும், ஆற்றா – போராது; வீடோ – (அவனுக்கு இருப்பிடமான) வீடானது, சேண்பால் – விஶ்வத: ப்ருஷ்டேஷு ஸர்வத: ப்ருஷ்டேஷு என்கிறபடியே ஸர்வலோகத்துக்கும் அவ்வருகான பரமபத ப்ரதேஶத்திலது, அவனோ – அவனோ, மற்று – தன்னையொழிந்த, எப்பொருட்கும் – ஸகலபதா3ர்த்த2ங்களுக்கும், உயிர் – அந்தராத்மா, எண்பாலும் – ஒரு ரேகாமாத்ர•ம், சோரான் – சோரவிடாதவனாய்க்கொண்டு, எங்கும் – எல்லா ப்ரதேஶத்திலும், பரந்து – பரந்து, உளனாம் – நில்லாநிற்கும்.

ஸர்வஜக3த்3க்3ராஸஶீலனாய், பரமபதநிலயனாய், ஸர்வபதார்த்தங்களிலும் அந்தர்பஹிஶ்ச வ்யாப்தனானவனை எங்ஙனே பரிச்சேதித்து அறிவது? என்று கருத்து.  ஏண் என்று – வரையாய், ரேகையைக் காட்டுகிறது.  ஓ என்கிற அசைகள் – வினாவைக் காட்டுகிறது.

ஈடு – எட்டாம் பாட்டு.  அவனுடைய அத்3பு4த கர்மங்களைத் தனித்தனியும் திரளவும் பரிச்சே2தி3க்கப்போகாது எத்தனையேனும் அளவுடையார்க்கும் என்கிறார்.

(காண்பாரார் எம் ஈசன் கண்ணனை) ஸர்வேஶ்வரனாயிருந்துவைத்து க்ருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாளானவனை.  அவன் தானே காட்ட நான் கண்டாற்போலே காண்பார்க்குக் காணலாமித்தனைபோக்கி, ஸ்வயத்நத்தாலே சிலர்க்குக் காணப்புக்கால் காணப்போமோ? அதுகிடக்க, காண்பார் சிலருண்டாயிற்று; (என் காணுமாறு) எவ்வளவைத்தான் காண்பது? அளவுடையார் சிலர் காண இழிந்தார்களென்னா, விஷயத்தைப் பரிச்சே2தி3க்கப் போகாதே.  ஏன்தான் பரிச்சே2தி3க்கப் போகாதொழிகிறது? என்னில்; இதுவன்றோ அவனுடைய அபதா3நமிருக்கிறபடி.  அவனுடைய ஊணாகிற ஒரு செயலைச் சொல்லப்பார்க்கில், ஸர்வலோகங்களும் ஓர் அவதா3நத்துக்குப் போராது; இவ்வபதா3நத்தையுடையவனை ஒருவராலே பரிச்சே2தி3க்கலாயிருக்கிறதோ?

“அவனுடைய செயல் பரிச்சே2தி3க்கவொண்ணாது” என்கைக்கு, ஸ்வரூபமோதான் பரிச்சே2தி3க்கலாயிருக்கிறது? என்கிறார் – (சேண்பால வீடோ) உயர்த்தியே ஸ்வபா4வமாகவுடைத்தான பரமபத3மென்ன, முக்தாத்ம ஸ்வரூபமென்ன, மற்றுமுண்டான தே3வாதி3களென்ன, இவற்றையுடைத்தான – (ஏண்பாலும் சோரான்) எண்ணப்பட்ட ப்ரதே3ஶங்கள் என்னுதல், எட்டு தி3க்கும் வ்யாபித்து விடாதே நிற்கும் என்னுதல்.  (பரந்துளனாம் எங்குமே) இப்படி வ்யாபிக்குமிடத்தில் ஒரு குறையுண்டாம்படியிருக்கையன்றிக்கே, குறையற வ்யாபித்திருக்கும்.  ஆன பின்பு “வ்யாபகவஸ்துவை வ்யாப்யத்திலே ஒன்று பரிச்சே2தி3த்துக் காண்கை” என்று ஒரு பொருளுண்டோ?

ஒன்பதாம் பாட்டு

எங்கு முளன்கண்ண னென்ற மகனைக்காய்ந்து*
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப*
அங்குஅப் பொழுதே அவன்வீயத் தோன்றிய*என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே?

– அநந்தரம், அவனுடைய ஆஶ்ரித ஸௌஶீல்யாதிஶயம் அபரிச்சேத்யம் என்கிறார்.

கண்ணன் – ஸர்வம் வ்யாப்ய ஸ்தித: என்கிறபடியே ஸர்வநிர்வாஹகனான ஸர்வேஶ்வரன், எங்கும் – ஸர்வத்ர, உளன் – ஸந்நிஹிதன், என்ற – என்ற, மகனை – புத்ரனை, காய்ந்து – கோபித்து, இங்கு – இவ்விடத்தில், இல்லை – இல்லை, என்று – என்று, தூண் – (தான் அறுதியிட்ட) தூணை, இரணியன் – ஹிரண்யன், புடைப்ப – தட்ட, அங்கு – அத்தூணிலே, அப்பொழுதே – அக்காலந்தன்னிலே, அவன் – ஹிரண்யன், வீய – நசிக்கும்படி, தோன்றிய – தோற்றின, என் – என்னுடைய, சிங்கம் – நரஸிம்ஹரூபியான, பிரான் – மஹோபகாரகனுடைய, பெருமை – (ஆஸ்ரிதபக்ஷபாத) மாஹாத்ம்யம், ஆராயும் – (நெஞ்சால் பரிச்சேதித்து) ஆராயும், சீர்மைத்தே – தன்மைத்தோ?

ஈடு – ஒன்பதாம் பாட்டு.  “நீர் சொன்னது அநுபபந்நமாயிருந்ததீ! ‘ஒரு வஸ்துவே அநேக பதா3ர்த்த2ங்களிலே குறைவற வ்யாபித்திருக்கும்’ என்றால் இது கூடுமோ?” என்ன, “கெடுவிகாள்! அவன் ஸர்வக3தத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதேகிடிகோள்” என்கிறார்.

(எங்கும் உளன் கண்ணன்) இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு; ஸர்வேஸ்வரன் ஸர்வக3தன் என்றான்.  “மயா ததமித3ம் ஸர்வம்”, “ந தத3ஸ்தி விநா யத் ஸ்யாந்மயா” என்று அவன்தான் சொன்ன வார்த்தையாயிற்று இவன்தான் சொல்லிற்று.

(என்ற மகனைக் காய்ந்து) இவ்வர்த்த2த்தை ஸத்ருவே சொல்லிலும், கேட்ட போதே காலிலே விழவேண்டும் வார்த்தை சொல்லிற்று; ப்ரமாண விருத்34மான அர்த்த2த்தைச் சொல்லிலும், கொண்டாட வேண்டும்படியாயிற்று ஸம்ப3ந்த4ம்; பருவத்தாலும் கொண்டாடவேணும்; “பள்ளியில் ஓதி வந்த” (பெரிய திருமொழி 23-8) பள்ளி(யில்) ஓதும் பருவத்தில் உள்ளவையடையக் கொண்டாட்டமாயிருக்கும்; அதுக்குமேலே “தன் சிறுவன்” தன் வயிற்றில் பிறந்தவன் வார்த்தை மிகவும் ப்ரியமாயிருக்கும்.  “வாயில் ஓராயிரநாமம்”  அதுக்குமேலே திருநாமத்தைச் சொல்லிற்று.  “ஒள்ளியவாகிப் போத” இவையொன்றுமில்லை யாகிலும், சொன்னபோதை இனிமைதான் கொண்டாடவேணும்.  “ஆங்கதனுக் கொன்றும் ஓர் பொறுப்பிலனாகி” அஸஹ்யாபசாரமிறே.  “பிள்ளையைச் சீறி” திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக “புத்ரன் அன்று” என்று விட்டான் அவன்; திருநாமம்  சொன்னவர்களோடே தமக்கு எல்லாவுறவுமுண்டாக நினைத்திருக்கையாலே இவர் “பிள்ளை” என்கிறார்.  (மகனைக் காய்ந்து) வயிற்றிலே பிறந்தவனாயிருக்கச் செய்தேயும், திருநாமம் சொல்லப் பொறுக்க மாட்டாமே சீறினானாயிற்று.  (இங்கு இத்யாதி3) “எங்குமுளனாகில் நீ சொல்லுகிறவன் இங்கில்லையாயிரானே” என்று தூணை அடித்துக் காட்டினான்.  “அளந்திட்ட தூணை அவன் தட்ட” (பெரியாழ்வார் திருமொழி 1-7-9) “முன்பே நரஸிம்ஹத்தை வைத்து நட்ட தூண்” என்னவொண்ணாதே; தானே தனக்குப் பொருந்தப் பார்த்து நறுக்கி நட்ட தூணாகையாலே.  “அவன் தட்ட” வேறே சிலர் தட்டினார்களாகில், “கையிலே அடக்கிக்கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினார்கள்” என்னவுமாமிறே; தானேயாயிற்று தட்டினானும்.  (அங்கு அப்பொழுதே) அத்தூணிலே, அடித்தவிடத்திலே, அவனுடைய ப்ரதிஜ்ஞாஸமகாலத்திலே.

(அவன் வீயத் தோன்றிய) தன் தோற்றரவிலே அவன் பிணமாம்படி தோற்றின. அதிர்த்துக்கொண்டு புறப்பட்டபோதை அட்டஹாஸமும், நா மடிக்கொண்ட உதடும், நெற்றியது கண்ணும், உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றினபோது பொசுக்கின பன்றிபோலே உருகினானாயிற்று பொன்னனாகையாலே.  (என் சிங்கப்பிரான் பெருமை) ஆஸ்ரிதவர்க்க3த்துக்காக நரஸிம்ஹமாய் உபகரித்தவனுடைய பரத்வம், இன்று சிலரால் ஆராயும்படி இருந்ததோ?

பத்தாம் பாட்டு

சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா*
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்*
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற*
கார்முகில்போல் வண்ணன்என் கண்ணனைநான் கண்டேனே.

– அநந்தரம், இப்படி ஸர்வப்ரகாரோபகாரகனாய், மோக்ஷப்ரதனானவனை நான் அநுபவிக்கப்பெற்றேன் என்று ஹ்ருஷ்டராகிறார்.

சீர்மைகொள் – (புண்யபாபகாரிதமாகையன்றிக்கே பகவத்க்ருபைகஸாத்யமான) சீர்மையையுடைய, வீடு – மோக்ஷமும், சுவர்க்கநரகு – (புண்யபாப ப2லரூபமான) ஸ்வர்க்க நரகங்களும், ஈறா – மேலெல்லையாக, ஈர்மைகொள் – (ப2ல ப்ரதத்வநிபந்தநமான) ஈரப்பாட்டையுடைய, தேவர் – தேவர்கள், நடுவா – (ஸாத4நப2லங்களுக்கு) நடுவாகவும், மற்று – ப்ரத2மபா4வியான, எப்பொருட்கும் – ஸாதநாதி ஸமஸ்த பதார்த்தங்களுக்கும், வேர் – ஸஹகாரியுமாய், முதலாய் – நிமித்தமுமாய், வித்தாய் – உபாதாநமுமாய்க் கொண்டு, பரந்து – ஸர்வத்ர வ்யாப்தனாய் வைத்து, தனி – (வ்யாப்ய பதார்த்தங்களில்) வ்யாவ்ருத்தனாய், நின்ற – நிற்பானாய், கார் – கார்காலத்திலே, முகில்போல் – மேகம் போன்ற, வண்ணன் – வடிவையுடையனாய்க்கொண்டு, என் – எனக்கு ஸுலபனான, கண்ணனை – க்ருஷ்ணனை, நான் – நான், கண்டேனே – அநுபவிக்கப்பெற்றேன் என்று கொண்டு ஸ்வலாபத்துக்கு ஹ்ருஷ்டராகிறார்.

ஈர்மைகொள் தேவர் என்று – உப4யபா4வநாநிஷ்ட2ர் என்றுமாம்.

ஈடு – பத்தாம் பாட்டு.  “இவர்களை விடீர்; நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே அவனை அநுப4விக்கப்பெற்றோமிறே” என்று ஸ்வலாபா4நு ஸந்தாநத்தாலே ஹ்ருஷ்டராகிறார்.

(சீர்மைகொள் இத்யாதி3) ஸர்வப்ரகாரத்தாலும் நன்றாக பரமபத3ம், பரிமித ஸுக2மான ஸ்வர்க்க3ம், நிஷ்க்ருஷ்டது3:க்க2மேயான நரகம் இவை முடிவாக, ஈரப்பாடுடையரான தே3வர்கள் நடுவாக, மற்றுமுண்டான திர்யகா3தி3களுக்கும்.  (வேர் முதலாய் வித்தாய்) த்ரிவித4 காரணமும் தானேயாய்.  (பரந்து) “தத் ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஸத் தத3நுப்ரவிஸ்ய ஸச்ச த்யச்சாப4வத்” என்கிறபடியே – முந்துற இவற்றையடைய உண்டாக்கி, பின்னை இவற்றினுடைய வஸ்துத்வநாமபா4க்த்வங்களுக்காக அநுப்ரவேசித்து, இப்படி ஜக3தா3காரனாய் நின்று.  (தனிநின்ற இத்யாதி3) இப்படி ஜக3ச்ச2ரீரனாய் நின்றவளவேயன்றிக்கே, தன்னுடைய வ்யாவ்ருத்தி தோற்றும்படி ஸ்ரீவைகுண்ட2த்திலே வர்ஷுகவலாஹகம் போலேயிருக்கிற அழகிய திருமேனியையுடையனாயிருந்து வைத்து க்ருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாளானவனை நான் முந்துற முன்னம் கண்டு அநுப4விக்கப்பெற்றேன் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

கண்தலங்கள் செய்ய கருமேனி யம்மானை*
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்*
பண்தலையில் சொன்னதமிழ் ஆயிரத்துஇப் பத்தும்வல்லார்*
விண்தலையில் வீற்றிருந் தாள்வர்எம் மாவீடே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் ப2லமாக ஸ்வாராஜ்ய நிர்வாஹகத்வத்தை அருளிச்செய்கிறார்.

கண் -கண்ணில், தலங்கள் – பரப்பெங்கும், செய்ய – சிவந்து, கரு – (அதுக்குப் பரபாகமாய்), ஸ்யாமளமான, மேனி – திருமேனியையுடைய, அம்மானை – ஸர்வஸ்வாமியை, வண்டு – வண்டுகள், அலம்பும் – மது வெள்ளத்திலே அலைகிற, சோலை – சோலைகளையுடைய, வழுதிவளநாடன் – திருவழுதி வளநாட்டையுடைய ஆழ்வார், பண்தலையில் – பண்தான் தளமாம்படி அதின்மேலே, சொன்ன – அருளிச்செய்த, தமிழாயிரத்து – ஆயிரம் திருவாய்மொழியில், இப்பத்தும் – இப்பத்தும், வல்லார் – வல்லார், விண்தலையில் – பரமாகாசத்தின்மேல், வீற்றிருந்து – ஸ ஸ்வராட்பவதி என்கிறபடியே வ்யாவ்ருத்தமாக இருந்து, எ – ஸர்வப்ரகார விசிஷ்டமாய், மா – நிரதிசய போ4க்3யமான, வீடு – மோக்ஷாநந்தத்தை, ஆள்வார் – ஸ்வாதீநமாக அநுபவிப்பார்கள்.

என்னோடு என் அநுபந்திகளோடு வாசியற எங்களுக்குத் தருவதாக இருக்கிற பெரிய வீடு என்றுமாம்.  இது கலிவிருத்தம்.

ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லார்கள் இத் திருவாய்மொழியில் சொன்ன முக்தப்ராப்யபோ43த்தைப் பெறுவர் என்கிறார்.

(கண்தலங்கள்) “பூ4தலங்கள்” என்னுமாபோலே திருக்கண்களின் பரப்பைப் பற்றச்சொல்லுகிறது.  பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும், அவற்றுக்குப் பரபா43மாம்படி கறுத்த திருமேனியையுமுடைய ஸர்வேஸ்வரனைக் கவிபாடிற்று.  (வண்டு இத்யாதி3) வெள்ளத்திலே அலைவாரைப்போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையாநின்றுள்ள சோலையையுடைய திருவழுதி வளநாட்டையுடைய ஆழ்வார் அருளிச்செய்தது.  தலையான பண்ணிலே சொன்ன தமிழாயிற்று இப்ரப3ந்த4ந்தான்.  அன்றியே, பண்ணின்மேலே சொன்ன என்னுதல். ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் அப்4யவஸிக்கவல்லார்கள் – “நாகஸ்ய ப்ருஷ்டே2” என்கிறபடியே, பரமபத3த்திலே தங்கள் வ்யாவ்ருத்தி தோற்ற இருந்து எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷமானது தங்களுக்கு விதே4யமாம்படி பெறுவர்.  (விண்தலை) தலையான விண்ணிலே என்னுதல், விண்ணின்மேலே என்னுதல்.  அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞாநுவர்த்தநம் பண்ணும்படியாகப் பெறுவர்.  ஆத்மலாப4த்தளவுமன்றிக்கே, பரமபுருஷார்த்த2 லக்ஷணமோக்ஷத்தை ஆளப்பெறுவர்.  (வீற்றிருந்து) ஸாம்ஸாரிகமான ஸங்கோச மெல்லாம் தீரும்படி வீறுபட்டிருந்து.  (ஆள்வர் எம்மாவீடே)  “தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்” (1-5-10) என்று – எனக்கும் என் பரிகரத்துக்கும் தருவானாகச் சமைத்து நிற்கிற பரமபத3த்தை ஆளப்பெறுவர்.

முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்கச்சொல்லுகிற அர்த்த2த்தை ஸங்க்3ரஹேண அருளிச்செய்யாநின்றுகொண்டு, “ஸம்ஸாரமாகிற இக்கடலைக் கடக்க வேணும்” என்றிருப்பார்க்குக் கடத்திக்கொடுக்கும் என்றார்.  இரண்டாம் பாட்டில், ‘அவன் வேணுமோ, அவனோட்டை ஸம்ப3ந்த4மே கடத்தும்’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் ப்ரத்யக்ஷிக்கலாம்’ என்றார்; நாலாம் பாட்டில், “ ‘அந்தமில் பேரின்பத்தைப் பெறவேணும்’ என்றிருப்பார் அவனை ஆஸ்ரயியுங்கோள்” என்றார்; அஞ்சாம் பாட்டில், கீழ் “இணைவனாம் எப்பொருட்கும்” என்றத்தை விவரித்தார்;  ஆறாம் பாட்டில், ‘இவ்வுத்கர்ஷமெல்லாம் அவனுக்கு உண்டோ?’ என்ன, ‘நாம் ஆராயவேண்டாதபடி அர்ஜுநன் பண்டே தெரிந்து அறுதியிட்டான்’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘ஒருவன் அநுவர்த்தநங்கொண்டு அறியவேணுமோ? அவனுக்கு இஷ்ட ஸர்வசேஷ்டா விஷயமாயன்றோ ஜக3த்து இருக்கிறது’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘வ்யாப்தி தொடக்கமான அவனுடைய  அபதா3நங்கள் ஒருவரால் பரிச்சே2தி3க்க முடியாது’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘ஏவம்பூ4தனானவனை நான் கண்டு அநுப4விக்கப் பெற்றேன்’ என்றார்; நிக3மத்தில், இது கற்றார்க்குப் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– அணைவது

ஆத்மாந்வயிஷ்வபி ஹரே: ப்ரியதாமவேக்ஷ்ய
ஸர்வாத்மநஸ்ஸ்வஜநயந்முநிரஷ்டமேந |
மோக்ஷப்ரத3த்வமுபதி3ஶ்ய ததா3பி4முக்2யா-
லாபா4த் ஸ்வலாப4மதி4கம் ப3ஹுமந்யதே ஸ்ம || 18

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிஅணைவது

ப்ராப்யாகாரோபபத்த்யா ஜநிபரிஹரணாத் விஶ்வஸ்ருஷ்ட்யாதி3ஶக்தே:
நிஸ்ஸீமாநந்த3தே3ஶாந்வயத உபஜகெ3ள ரக்ஷணார்த்தா2வதாராத் |
ஸுப்ரக்2யாதாநுபா4வாத் விவித4விஹரணாத் வ்யாப்திவைசித்ர்யவத்த்வாத்
4க்தைர்த்3ராக்3த்3ருஶ்யபா4வாத3கி2லப2லக்ருதேர் முக்திஸௌக்2யம் முகுந்தே || 20

திருவாய்மொழி நூற்றந்தாதி

அணைந்தவர்கள் தம்முடனே யாயனருட் காளாம்
குணந்தனையே கொண்டுலகைக் கூட்ட இணங்கிமிக
மாசிலுப தேசம்செய் மாறன் மலரடியே
வீசுபுக ழெம்மா வீடு.  18

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

******

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.