ஒன்பதாம் திருவாய்மொழி
எம்மாவீடு – ப்ரவேசம்
******
ப – ஒன்பதாம் திருவாய்மொழியில் ஈஸ்வரனுடைய மோக்ஷப்ரதத்வத்தை அநுபவித்தவர், அந்த மோக்ஷப்ரகாரங்களெல்லாவற்றுக்கும் தாத்பர்யபூமியாவது – பகவத் பாரதந்த்ர்யமே என்று நிஷ்கர்ஷித்து; அவன் திருவடிகளோட்டை ஸம்பந்தமே உத்தேஸ்ய மென்னுமிடத்தையும், தத்விஷயஜ்ஞாநத்தில் அபேக்ஷையையும், ஜ்ஞாநாநுரூபமான ஸ்துத்யநுபவத்தில் ஸ்ரத்தையையும், அநுபாவ்யம் ததேகபாரதந்த்ர்யமென்னுமிடத்தையும், அதினுடைய அவிஸ்மரணம் ஆநந்தஜநகமென்னுமிடத்தையும், அந்த ஸ்ம்ருதிகாரிதமான பாஹ்யாநுபவாபேக்ஷையையும், நிரந்தரமான ஆந்தராநுபவம் அத்ருப்திகரம் என்னுமிடத்தையும், அல்பகாலாநுபவத்திலும் அதிசயிதாபிநிவேசத்தையும், அநுபாவ்ய விஷயத்தோடு உண்டான அப்ருதக்ஸித்தி ஸம்பந்தத்தையும், அந்த ஸம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும் அருளிச்செய்து, மோக்ஷப்ரதனான ஈஸ்வரன் ஸன்னிதியிலே மோக்ஷதாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்தருளுகிறார்.
ஈடு – கீழில் திருவாய்மொழியிலே “நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்” (2-8-4) என்று இவர்தாமும் அருளிச்செய்து, ஸர்வேஸ்வரனும், இவர்க்கும் இவர் பரிகரத்துக்கும் மோக்ஷம் கொடுப்பானாகப் பாரிக்க, அத்தைக் கண்டு “தேவரீர் எனக்கு மோக்ஷம் தந்தருளப் பார்த்ததாகில் இங்ஙனே தரப்பார்ப்பது; அதாகிறது – ‘உனக்கு மோக்ஷங்கொள்’ என்று எனக்காகத் தருகையன்றிக்கே, ‘நமக்காகக்கொள்’ என்று தேவர்க்கேயாம்படியாகத் தரவேணும்” என்று தாம் நினைத்திருந்தபடியை அவன் திரு•ன்பே ப்ரார்த்தி2க்கிறார்.
ஆனால் இதுதான் பின்னை இத்தனைநாள் நிஷ்கர்ஷியாதொழிவானென்? என்னில்; அவன் மேன்மேலென கு3ணாநுப4வத்தைப் பண்ணுவிக்கையாலே அதுக்குக் காலம் போந்ததித்தனையல்லது, இது நிஷ்கர்ஷிக்க அவஸரம் பெற்றிலர். ‘ஆனாலும் இப்போதும் கு3ணாநுப4வமேயன்றோ பண்ணுகிறது’ என்னில்; அது அப்படியே; அவன் தம் பக்கலிலே மேன்மேலெனப் பண்ணுகிற விருப்பத்தைத் கண்டு; “இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பதொன்றாயிருந்தது; நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம்” என்று பார்த்து, “நீ இங்ஙனே நில்” என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்யநிஷ்கர்ஷம் பண்ணுகிறார். எம்பார் இத்திருவாய்மொழி அருளிச் செய்யப்புக்கால், இருந்தவர்களை “யார்” என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, கு3ஹ்யமாகவாம் அருளிச்செய்வது. ‘ப்ராப்யமாகில் இப்படியன்றோ இருப்பது; இவர் நிஷ்கர்ஷிக்கவேண்டுகிறதென்?’ என்னில்; ஸர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய் இவனும் சேஷபூ4தனாய், அவனுடைய உபாயபா4வமும் நித்யமாயிருக்கச் செய்தேயன்றோ இவனுக்கு இன்று ஸ்வீகாரம் வேண்டுகிறது; அப்படியே அவன் ஸ்வதந்த்ரனாகையாலே நினைத்தபோது நினைத்தபடி கொள்வானொருவனாகையாலே, ப்ராப்தி ஸமயத்தில் அநுப4வமிருக்கும்படியையும் நிஷ்கர்ஷித்துப் பெறவேணுமிறே.
உத்தரார்த்த4த்திலும் இவ்வர்த்த2த்தைச் சொல்லாநின்றதிறே. ‘த்3வயந் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறதென்?’ என்னில்; பூர்வார்த்த4த்தால் சொன்ன ஸாத4நம் ஸர்வப2லப்ரத3மாகையாலே, ப்ரயோஜநாந்தரபரராய் ஶரணம் புகுவார்க்கும் அவற்றைக் கொடுத்துவிடுவானொருவனிறே ஸர்வேஸ்வரன். இது தன்னில் ஓடுகிறதென்? என்னில்; “முக்தனாய் நிரதிசய ஸுகா2நுப4வத்தைப் பண்ணவுமாம், ஆத்ம ப்ராப்தியைப் பெறவுமாம், ஆத்மவிநாசமேயாகவுமாம், நரகாநுப4வம் பண்ணவுமாம், இவற்றில் எனக்கொரு நிர்ப்ப3ந்த4மில்லை; உனக்காய் வருமன்று இவையித்தனையும் வரவுமாம்; எனக்காய் வருமன்று இவையித்தனையும் வேண்டா; ஆனபின்பு, தேவருக்கு உறுப்பாமிதுவே எனக்கு வடிவாம்படி பண்ணியருளவேணும்” என்று ஸ்வப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்.
இப்படிப்பட்ட பரிமாற்றந்தான் லோகத்தில் பரிமாறுவதொன்றல்ல; இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல்; ராமாயண புருஷர்களில் ஸ்ரீ4பரதாழ்வான், இளையபெருமாள் இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யுமித்தனை. கைகேயி “ராஜந்” என்ற சொல் பொறுக்கமாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டானிறே. (விலலாப ஸபா4மத்4யே) ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே! (த3ஸ்யுபி4ர்முஷிதேநேவ யுக்தமாக்ரந்தி3தும் ப்4ருஸம்) என்னும்படி இழந்த வஸ்துவுக்குத் தக்கபடியாயிருக்குமிறே கூப்பீடும். (ஜக3ர்ஹே ச) ஸந்த்4யாவந்த3நத்துக்குப் பிற்பாடரை ஸிஷ்டக3ர்ஹை பண்ணுவாரைப்போலே க3ர்ஹித்தான். (புரோஹிதம்) அழகியதாக இக்குடிக்கு முன்னோடி ஹிதம் பார்த்தாய்! (ஸபா4மத்4யே புரோஹிதம் ஜக3ர்ஹே) (நியமாதிக்ரமம் ரஹஸி போ3த4யேத்) என்கிற நிலையையும் பார்த்திலன். (ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய) ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால், ஒன்றை யொன்று நிர்வஹிக்குமோ? ஆனால், ராஜ்யந்தான் என்னையாண்டாலோ? (த4ர்மம் வக்துமிஹார்ஹஸி) “பெருமாள் காடேறப்போனார்; சக்ரவர்த்தி துஞ்சினான்; நாடு அராஜகமாய்க் கிடக்கவொண்ணாது; நின்றாரில் ப்ரதா4நர் தலையிலே முடியை வைக்கவேணும்” என்று பார்த்தாயித்தனைபோக்கி, இதுக்கு விஷய பூ4தனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்றில்லை. (கத2ம் த3சரதா2ஜ்ஜாதோ ப4வேத்3ராஜ்யாபஹாரக:) அவர் பொகட்டுப்போன ராஜ்யத்தை அபஹரித்து, அவரைப்பிரிந்த அநந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்? இளையபெருமாள், “நில்” என்ன “குருஷ்வ” என்றாரிறே. அந்வயத்தாலே த4ரிக்கக்கடவ வஸ்துவை வ்யதிரேகித்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கையிறே. “குரு” என்னாதே, “குருஷ்வ” என்றாரிறே; ஆருடைய ப்ரயோஜநத்துக்கு ஆர்தானிருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறதென்? “அநுசரம்” பண்ணும் ப்ரகாரத்தை விதி4க்கிறார். நீர்தாம் “நில்” என்று அருளிச்செய்தது, நான் நிற்கச்சொல்லுகைக்கு யோக்3யனாம்படி இருக்கையிறே; உம்முடைய சா3யையை “நில்” என்று சொல்லிற்றிலீரே; சா2யையோபாதி உம்மைப் பின்செல்வேனாகவேணும்.
“நீரும் நிழலும் வாய்த்திருப்பதொரு ப்ரதே3சத்தைப் பார்த்துப் பர்ணஸாலையைச் சமையும்” என்ன; “நம்தலையிலே ஸ்வாதந்த்ர்யத்தை வைத்தபோதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்” என்று வேறுபட்டார்; (ஏவ முக்தஸ்து ராமேண) இதுக்கு முன்பெல்லாம் “நம் குறையாலே இழந்தோம்” என்று இருந்தோம்; இவர்தாமே நம் ஸ்வரூபம் அழியக் கார்யம் பார்த்தார். இனி, ‘நம் ஸ்வரூபம்’ என்றொன்று உண்டோ? என்று வேறுபட்டார். (லக்ஷ்மண:) பாரதந்த்ர்யத்தை நிரூபகமாகவுடையவர். (ஸம்யதாஞ்ஜலி:) நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக்கொண்டவன்று நோக்குகையன்றிக்கே, சேஷிதானே அழித்தவன்றும் ஸ்வரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்ஜலி. ஸர்வாபி4மத ஸாத4ந மாயிற்று. (ஸீதாஸமக்ஷம்) பண்ணின அஞ்ஜலிக்கு அந்யபரதை பா4விக்க வொண்ணாதவள் ஸந்நிதி4யிலே, (காகுத்ஸ்த2ம்) பிராட்டி ஸன்னிதி4யும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. (இத3ம் வசநமப்3ரவீத்) “இவ்வார்த்தையைச் சொல்லுவானே!” என்று கொண்டாடுகிறான் ருஷி. “பரவாநஸ்மி” உம்முடைய அஸ்மிதை போலல்ல காணும் என்னுடைய அஸ்மிதை! இப்படிக்கொத்த பாரதந்த்ர்யத்தையாயிற்று இவர் ஆசைப்படுகிறது. “இதுதான் ஒருவர் அபேக்ஷிக்குமதுவுமல்ல; அபேக்ஷிப்பாரில்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவுமல்ல; அவ்வழி புல்லெழுந்து போயிற்று காணும்” என்று அவன் அநாத3ரித்திருக்க; புருஷன் அர்த்தி2க்க வருமதிறே புருஷார்த்த2மாவது. “இப்பேறித்தனையும் நான் பெற்றேனாக வேணும்” என்று இவர் அபேக்ஷிக்க, அவனும் தலைதுலுக்கப்பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.
முதல் பாட்டு
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்*நின்
செம்மா பாதபற்புத் தலைசேர்த்து ஒல்லை*
கைம்மா துன்பம் கடிந்த பிரானே!*
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே.
ப – முதற்பாட்டில் ‘ஸர்வப்ரகாரவிசிஷ்டமான மோக்ஷத்திலும், திருவடிகளோட்டை ஸம்பந்தமே உத்தேஸ்யம்’ என்று அபேக்ஷிக்கிறார்.
எ – எவ்வகைப்பட்ட, மா – உத்க்ருஷ்டமான, வீட்டுத்திறமும் – மோக்ஷப்ரகாரமும், செப்பம் – சொல்வோம்; நின் – உன்னுடைய, செம் – சிவந்த, மா – உத்தேஸ்யமான, பாதபற்பு – திருவடித்தாமரைகளை, தலை – தலையிலே, ஒல்லை – கடுக, சேர்த்து – சேர்க்கவேணும்; கைம்மா – துதிக்கை முழுத்தும்படி அழுந்தின ஆனையினுடைய, துன்பம் – து:க்கத்தை, கடிந்த – போக்கின, பிரானே – மஹோபகாரகனாய், அம்மா – (இவ்வபதாநத்தைக் காட்டி) என்னை அடிமை கொண்ட ஸ்வாமியே! அடியேன் – (உனக்கு) அடியேனான நான், வேண்டுவது – (என் ஸ்வரூபத்துக்குத் தகுதியான ப2லமாக) வேண்டியிருப்பது, ஈதே – இதுவே, புருஷன் அர்த்தித்தன்றோ புருஷார்த்தம் என்று கருத்து.
ஒல்லை – சடக்கென, கைம்மா – ஆனை, “ஒல்லை கைம்மா” என்று கூட்டவுமாம். செப்பம் – செப்போம். அன்றியே, ‘செப்பம்’ என்று செவ்விதாம் என்றாய், மோக்ஷப்ரகாரம் எல்லாம் செவ்விதாகையாவது – திருவடிகளிலே சேர்த்தி என்றாகவுமாம்.
ஈடு – முதற்பாட்டில் – “எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்திலும் எனக்கு அபேக்ஷையில்லை; உன் திருவடிகளை என்தலையிலே வைக்கவேணும்” என்கிறார்.
“ஆழ்வீர்! மோக்ஷத்தைக்கொள்ளும்” என்றான் ஈஸ்வரன்; “வேண்டா” என்றார்; “மாவீடு கிடீர் – விலக்ஷணமான மோக்ஷம் கிடீர்” என்றான்; “அதுவும் வேண்டா” என்றார்; “எம்மாவீடு கிடீர் – ‘ஐஸ்வர்யம், ஆத்மலாப4ம்’ என்றிருக்க வேண்டா; பரமபுருஷார்த்த2லக்ஷண மோக்ஷம்” என்றான்; அதுவும் எனக்கு வேண்டா என்கிறார். எவ்வகையாலும் நன்றான மோக்ஷத்து இடையாட்டமும். (செப்பம்) செப்போம் – சொல்லோம்; நீ ப்ரஸங்கி3க்கவும் கடவையல்லை; நான் ப்ரதிஷேதி4க்கவும் கடவனல்லேன்.
(எம்மாவீட்டுத் திறமும் செப்பம்) ஒரு தமிழன் “எம்மா வீட்டு விகல்பமும் செவ்வியவாம்” என்றான். அந்தப் பக்ஷத்திலே, வீட்டு விகல்பமாவது – ஸாலோக்ய ஸாரூப்ய ஸாமீப்ய ஸாயுஜ்யம் என்கிறவை. செவ்வியவாகையாவது – ஸாலோக்யாதி3களெல்லாம் இம்மோக்ஷத்திலேயுண்டாகை. ஆனால் உமக்கு வேண்டுவதென்? என்னில், (நின் செம்மா பாத பற்புத் தலைசேர்த்து) இது எனக்கு வேண்டுவது. செம் என்று – சிவப்பாய், மா என்று – கறுப்பாய்; உன்னுடைய, அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய், விகாஸம் செவ்வி குளிர்த்தி நாற்றங்களுக்குத் தாமரையை ஒரு போலி சொல்லலாம்படியிருக்கிற திருவடிகளைக் கொண்டுவந்து என்தலையிலே வைக்கவேணும். அன்றிக்கே, செம்மையால் நினைக்கிறது – செவ்வையாய், ஆஸ்ரிதர்க்கு வருந்தவேண்டாதபடியான ஆர்ஜவத்தையுடைத்தாய்; மா என்று – மஹத்தையாய், பரமபூஜ்யமான திருவடிகள் என்னவுமாம். சேர்த்து என்றது – சேர்க்கவேணும் என்றபடி. கொக்குவாயும் படுகண்ணியும்போலே, உன் திருவடிகளும் என் தலையும் சேரவேணும். சேர்த்து என்று – ல்யப்பாகையன்றிக்கே விதி4யாய், சேர்த்தருள வேணும் என்கை.
“யாவந்ந சரணௌ ப்4ராது: பார்த்தி2வவ்யஞ்ஜநாந்விதௌ | ஸி ரஸா தா4ரயிஷ்யாமி ந மே ஸாந்திர்ப4விஷ்யதி ||” ‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்றார்கள்; ‘பெருமாளும் தமக்கு வகுத்த முடிசூடி, நானும் எனக்கு வகுத்த முடிசூடினவன்று’ என்றானிறே. (நின் செம்மா பாதபற்புத் தலைசேர்த்து) மயிர் கழுவிப் பூச்சூடவிருப்பாரைப்போலே, இவரும், ஈறிலின்பத் திருவெள்ள(2-6-8)த்திலே மூழ்கிப் பூச்சூடவிருக்கிறார் காணும். “அப்படியே செய்கிறோம்” என்றான்; அக்க்ரமம் பற்றாது – (ஒல்லை) செய்துகொடுநின்று “செய்கிறோம்” என்னவேணும்.
இப்படி த்வரிக்கவேண்டுமிடமுண்டோ? என்ன (கைம்மா துன்பம் கடிந்த பிரானே) நீ த்வரித்து வந்து விழும்படியறியாயோ? “பரமாபத3மாபந்ந:” ஸர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழும்படியான ஆபத்தாயிற்று. “மநஸாசிந்தயத்” கூப்பீடு ஓவிற்று. (கைம்மா துன்பம்) ஆனையும் தன்னளவிலேயிறே நோவுபடுவது. துதிக்கை முழுத்தின ஆபத்திறே. அப்படி உமக்கு ஆபத்துண்டோ? என்ன; அங்கு முதலை ஒன்று; எனக்கு முதலை ஐந்து; அங்கு ஆயிரம் தே3வஸம்வத்ஸரம்; இங்கு அநாதி3காலம்; அங்கு ஒரு சிறுகுழி; இங்கு பிறவியென்னும் பெருங்கடல்(பெரியாழ்வார் திருமொழி 5-4–2); அதுக்கு ஶரீரநாசம்; எனக்கு ஆத்மநாசம்; ஆனையின் காலையாயிற்று முதலை பற்றிற்று; இங்கு என்னுடைய நெஞ்சையாயிற்று அருவித்தின்றிடு(பெரிய திருமொழி 7-7-1)கிறது; ஆனால், அதுக்கும் இதுக்குமுள்ள வாசி பாராய். (பிரானே) ஸ்ரீக3ஜேந்த்3ராழ்வானுடைய து3:க்க2த்தைப் போக்கின இதுவும், “தமக்கு உபகரித்தது” என்றிருக்கிறார். அதுக்கு உதவினமை உண்டு, உமக்கென்? என்ன (அம்மா) அதுக்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரோட்டை ஸம்ப3ந்த4ம்? நீ ஸ்வாமியன்றோ? நீர் ஆர்? என்ன (அடியேன்) நான் சேஷபூ4தன். இருவருடைய ஸ்வரூபத்தையும் பற்றி “தவிரவொண்ணாது” என்று அபேக்ஷிக்கிறீரோ? என்ன (வேண்டுவது) ராக3ப்ராப்தம். இதுவாகில் வேண்டுவது, இது செய்கிறோம்; இதுவும் இன்னும் எதுவும் வேணும்? என்றான். (ஈதே) “நின் செம்மா பாதபற்புத் தலைசேர்த்து” என்ற இதுவே என்கிறார்.
இரண்டாம் பாட்டு
ஈதேயா னுன்னைக் கொள்வதுஎஞ் ஞான்றும்*என்
மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்!*
எய்தா நின்கழல் யானெய்த* ஞானக்
கைதா காலக் கழிவுசெய் யேலே.
ப – அநந்தரம், இந்த ஸம்பந்த விஷயமான ஜ்ஞாநத்தைத் தந்தருளவேணும் என்கிறார்.
என் – எனக்கு இந்த ருசிஜநகமான, மை – கருமை, தோய் – செறிந்த, சோதி – ஒளியை உடைத்தான, மணி – மாணிக்கம் போன்ற, வண்ணம் – வடிவழகையுடைய, எந்தாய் – என் ஸ்வாமியே! உன்னை – உன்னை, யான் – நான், எஞ்ஞான்றும் – எக்காலத்திலும், கொள்வது – கொள்ளும் ப்ரயோஜநம், ஈதே – இதுவே; (ஏதென்னில்) எய்தா – பெறுதற்கரிய, நின் – உன், கழல் – திருவடிகளை, யான் – நான், எய்த – பெறுதற்கு ஈடான, ஞானக்கை – தெளிவாகிற ஜ்ஞாநக்கையை, தா – தரவேணும்; காலக்கழிவு – காலவிளம்பம், செய்யேல் – பண்ணாதேகொள். ஞானத்தைக் கையென்றது, தமக்கு ஆலம்பநமாகையாலே.
ஈடு – இரண்டாம் பாட்டு. முதற்பாட்டில் – காயிகமான பேற்றை அபேக்ஷித்தார்; இதிலே – மாநஸமான பேற்றை அபேக்ஷிக்கிறார்.
கீழிற்பாட்டிலே “ஈதே” என்னச் செய்தேயும், “ஓர் அர்த்த2த்தையே பலகால் கேட்டவாறே மற்றொன்றிலே தடுமாறிச் செல்லவுங்கூடுமே; இதிலே நிலைநின்றமை அறியவேணும்” என்று “இதுவும் இன்னும் எதுவும் வேணும்?” என்றான்; (ஈதே) என்கிறார். “நீர் இதிலே நிலைநின்றீர் என்னுமிடம் நாம் அறியும்படியென்?” என்ன (யானுன்னைக் கொள்வது) இருவருடையவும் த4ர்மியே இதில் ப்ரமாணம். ஸ்வாமியான உன்பக்கல் சேஷபூ4தனான நான் கொள்ளுமது இதுவே; “நம்முடைய ஸ்வாமித்வமும், உம்முடைய ஶேஷத்வமும் கிடக்கச் செய்தேயன்றோ நெடுநாள் இழந்து போந்தது; ஆனபின்பு நமக்கு அதிசங்கை வர்த்தியாநின்றதுகாணும்; இது எத்தனை குளிக்குநிற்கும்?” என்ன (எஞ்ஞான்றும்) யாவதா3த்மபா4வி இதுவே எனக்கு வார்த்தை. “இதிலே நிலைநிற்கும்படி உம்மை இத்து3ஸ்ஸிக்ஷை பண்ணுவித்தார் ஆர்?” என்றான் ஈஸ்வரன்; இப்படி யார் கற்பித்தார்? மற்றுமுண்டோ? தேவர் வடிவழகிறே, – (என் மை தோய் இத்யாதி3) மை தோய்ந்திருந்துள்ள தேஜஸ்ஸையுடைத்தான மணியினுடைய நிறம்போன்ற திருநிறத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹனாக்கி, உன் சேஷித்வத்தை அறிவித்தவனே! “அழகிது, உமக்குச் செய்யவேண்டுவதுதானென்?” என்ன (எய்தா நின்கழல் யான் எய்த) ஸ்வயத்நத்தால் ஒருவர்க்கும் ப்ராபிக்கவொண்ணாத திருவடிகளை “உன்னாலே பேறு” என்றிருக்கிற நான் ப்ராபிக்கும்படி பண்ணு. “அது நீர் மயர்வற மதிநலம்(1-1-1) பெற்றவன்றே பெற்றீலீரோ?” என்ன (ஞானக்கை தா) இது நீ நினைத்திருக்குமவளவு போராது; அது நான் “பெற்றேன்” என்று தெளியும்படி பண்ணவேணும். அமிழ்ந்தினார்க்குக் கைகொடுத்தாற்போலே யிருக்கையாலே ஜ்ஞாநலாப4ம், “ஜ்ஞாநமான கையைத் தா” என்கிறார். இங்கே, எம்பார்க்கு ஆண்டான் அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது, அதாவது “ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கைகொடுத்தால், எடுக்குமவர்களுக்கும் எளிதாய், ஏறுமவனுக்கும் எளிதாயிருக்குமிறே; அப்படியேயாகிறது” என்று.
(ஞானக்கை தா) அங்ஙனன்றிக்கே, “அதுபின்னை பரப4க்தி பரஜ்ஞாந பரம ப4க்திகளை உடையார் பெறும் பேறன்றோ?” என்ன (ஞானக்கை தா) அவற்றையும் தேவரே பிறப்பித்து, தேவர் திருவடிகளைப் பெறவேணும் என்னவுமாம். “அப்படி செய்கிறோம்” என்ன (காலக்கழிவு செய்யேலே) “ஒல்லை” என்றதுதானேயன்றோ எனக்கு எப்போதும் வார்த்தை.
மூன்றாம் பாட்டு
செய்யேல் தீவினை யென்றுஅருள் செய்யும்*என்
கையார் சக்கரக் கண்ண பிரானே!*
ஐயார் கண்டம் அடைக்கிலும்* நின்கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே.
ப – அநந்தரம், அவ்வறிவுக்கு ஈடாக ஆபத்3த3சையிலும் உன்னை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணியருளவேணும் என்கிறார்.
தீவினை – (அக்ருத்ய கரணாதிகளான) தீவினைகளை, செய்யேல் – செய்யாதே கொள், என்று – என்று, என் – என்பக்கலிலே, அருள் – க்ருபாகார்யமான நியமநத்தை, செய்யும் – பண்ணுகைக்குறுப்பாய், கை – திருக்கையோடு, ஆர் – பொருந்தின, சக்கரம் – திருவாழியையுடையனாய், கண்ணன் – க்ருஷ்ணனான ஸௌலப்யத்தாலே, பிரானே – உபகரித்தவனே! ஐ – ஐயாலே, ஆர் – நிறைந்த, கண்டம் – கண்டமானது, அடைக்கிலும் – உக்திஸாமர்த்யமில்லாதபடி நிர்விவரமாகிலும், நின் – (விரோதிநிவர்த்தகனாய், ஸுலப4னாய் ப்ராப்தனான) உன், கழல் – திருவடிகளை, எய்யாது – இளைப்பற்று, ஏத்த – ஏத்தும்படி, எனக்கே – எனக்கே அஸாதாரணமாக, அருள்செய் – க்ருபை பண்ணியருளவேணும். ஐ – ஸ்லேஷ்மா.
ஈடு – மூன்றாம் பாட்டு. இதில் – வாசிகமான பேற்றை அபேக்ஷிக்கிறார்.
(செய்யேல் இத்யாதி3) “கையும் திருவாழியும் பொருந்தியிருக்கிற இருப்புக் கண்டாயே; நம் ப4வ்யதை கண்டாயே; நம்மை அநுப4விக்கை அழகியதோ, க்ஷுத்3ரவிஷயங்களிலே ப்ரவணனாய் அநர்த்த2ப்படுகை அழகியதோ?” என்று கையில் திருவாழியையும் ப4வ்யதையையும் காட்டியாயிற்று இவருடைய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்தது; ஸாஸ்த்ரப்ரதா3நாதி3களாலன்று. (ஐயார் இத்யாதி3) “து3:க்க2 நிவ்ருத்தி வேணும்” என்கிறேனல்லேன்; “து3ர்க்க3தாவபி” என்கிறபடியே – ஏதேனும் உத்க்ரமண ஸமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும்படி பண்ணியருளவேணும்.
செறிந்த ஸ்லேஷ்மாவானது கண்ட2த்தை அடைக்கிலும், உன்னுடைய நிரதிஶயபோ4க்3யமான திருவடிகளை நான் மாறாதே ஏத்தவல்லேனாம்படி பண்ணியருளவேணும். உத்க்ரமணத3சை பார்த்திருப்பர் காணும் கோழைப் பையலார் வந்து மிடறுபிடிக்க! “நீர் சொல்லுகிற அது ஒரு ஸுக்ருதப2லமன்றோ?” என்ன (அருள்செய்) “இவன் பெற்றிடுவான்” என்று இரங்கியருளவேணும். “இது பின்னை ஸர்வர்க்கும் ப்ரயோஜநமாகாதோ?” என்ன (எனக்கே) எனக்கு ஒருவனுக்கும் செய்தருளவேணும்.
நான்காம் பாட்டு
எனக்கேயாட் செய்எக் காலத்தும் என்று*என்
மனக்கே வந்துஇடை வீடின்றி மன்னி*
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே*
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.
ப – அநந்தரம், காயிகமாயும், மாநஸமாயும், வாசிகமாயுமுள்ள பகவச்சேஷத்வத்தை – கீழ் மூன்று பாட்டிலும் அநுஸந்தித்து, இதில் ப்ரதாநமான ததேகபாரதந்த்ர்யத்தை ப்ரயோஜநதயா நிஷ்கர்ஷிக்கிறார்.
எக்காலத்தும் – எல்லாக் காலத்திலும், எனக்கே – எனக்கே, ஆள் – அடிமை, செய் – செய், என்று – என்று அருளிச்செய்து, (அவ்வளவில் நில்லாதே) என் – என், மனக்கே – மனஸ்ஸுக்கே, வந்து – வந்து, இடைவீடு – விச்சேதம், இன்றி – இல்லாதபடி, மன்னி – நிரந்தரவாஸம் பண்ணி, தனக்கே – (பிறர்க்குமன்றியே, எனக்குமன்றியே, எனக்கும் தனக்கும் கூடவுமன்றியே) தனக்கே, ஆக – பரதந்த்ரனாம்படி, எனை – என்னை, கொள்ளும் – அங்கீகரிக்கும், ஈதே – இதுவே, எனக்கே – எனக்கு அநுரூபமாக, கண்ணனை – க்ருஷ்ணனை, யான் – நான், கொள் – அபேக்ஷிக்கும், சிறப்பு – ப்ரயோஜநம்.
ஈடு – நாலாம் பாட்டு. இத்திருவாய்மொழியில் இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யமாவது – ‘ஸ்ரக்சந்த3நாதி3களோபாதி தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே’ என்றிறே; இவ்விடத்திலே எம்பார் அருளிச்செய்யும்படி – “ஸர்வேஶ்வரன் த்ரிவித4 சேதநரையும் ஸ்வரூபாநுரூபமாக அடிமைகொள்ளாநின்றான்; ‘நாமும் இப்படி பெறுவோமே’ ” என்று. முக்தரும் நித்யரும், தாங்களும் ஆனந்தி3த்து அவனையும் ஆநந்தி3ப்பிப்பர்கள்; ப3த்3த4ர், தாங்கள் ஆநந்தி3யாதே அவனை ஆனந்தி3ப்பிப்பர்கள்; இன்புறும் இவ்விளையாட்டுடையா(3-10-7)னிறே. “மயர்வற மதிநலம் (1-1-1) அருளப்பெற்றவர், ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே’ என்று ப்ரார்த்தி2ப்பானேன் ‘திருவுள்ளமானபடி செய்கிறான்’ என்றிராதே?” என்று பிள்ளை திருநறையூரறையர் எம்பாரைக்கேட்க; “அது கேளீர்; முன்பு பிரிந்தன்று, பின்பு பிரிவுக்கு ப்ரஸங்க3முண்டாயன்று, இரண்டுமின்றியிருக்கத் திருமார்விலே இருக்கச்செய்தே, ‘அகலகில்லேன், அகலகில்லேன்’ (6-10-10) என்னப்பண்ணுகிறது விஷயஸ்வபா4வமிறே; அப்படியே ப்ராப்யருசி ப்ரார்த்தி2க்கப் பண்ணுகிறது” என்று அருளிச்செய்தார். எம்மாவீட்டில் எம்மாவீடாய், வைஷ்ணவ ஸர்வஸ்வமுமாய், உபநிஷத்3கு3ஹ்யமுமாய், ஸர்வேஸ்வரன் பக்கலிலே அபேக்ஷித்துப் பெறுமதாய், இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பாரதந்த்ர்யத்தை அவன்பக்கலிலே அபேக்ஷிக்கிறார்.
முதலிலே “ஆட்செய்” என்னவேணும்; ‘ஆட்செய்’ என்று – ஸ்வாதந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது. அதில் “எனக்கு ஆட்செய்” என்னவேணும்; ‘எனக்கு ஆட்செய்’ என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது. “எனக்கே ஆட்செய்” என்று – தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து. “எனக்கே ஆட்செய்” என்னவேணும். இதுதான் “ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி(3–3-1)நிற்கவேணும்” “க்ரியதாமிதி மாம் வத3” என்கிறபடியே, “இன்னத்தைச் செய்” என்று ஏவிக்கொள்ளவேணும்; இப்படியொரு வார்த்தை அருளிச்செய்து நெடுங்கைநீட்டாக இருக்கவொண்ணாது. என்னுடைய ஹ்ருத3யத்திலே வந்து புகுர வேணும்; புகுந்தாலும் போக்குவரத்துண்டாக வொண்ணாது; ஸ்தா2வரப்ரதிஷ்டை2யாக எழுந்தருளியிருக்கவேணும். இருந்து கொள்ளும் காரியம் என்? என்றால் (தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே) ஸ்ரக்சந்த3நாதி3களோபாதியாகக் கொள்ளவேணும். அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய், மிகுதி கழித்துப்பொகடுமித்தனையிறே; ஒரு மிது2நமாய்ப் பரிமாறாநின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டுதலைக்கும் ஒத்திருக்குமிறே; அங்ஙன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அந்வயித்தவனாக வொண்ணாது “ ‘நின்’ (1) என்றும், ‘அம்மா’ (1) என்றும் – முன்னிலையாக ஸம்போ3தி4த்துக்கொண்டு போராநிற்கச் செய்தே, இங்குப் படர்க்கையாகச் சொல்லுவானென்?” என்னில், “ப்ராப்யநிஷ்கர்ஷம் பண்ணுகிற ஸமயத்திலே திருமுக2த்தைப் பார்க்கில் வ்யவஸாயம் குலையும்” என்று கவிழ்ந்திருந்து கையோலைசெய்துகொடுக்கிறார்.
(எனக்கே கண்ணனை) “தனக்கேயாக” என்றபின்புத்தை ‘எனக்கே’யிறே; புருஷார்த்த2மாகைக்காகச் சொல்லுகிறார். “ஒரு சேதநனிறே அபேக்ஷிப்பான்; நீர் அபேக்ஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்யவேணுங்காணும்” என்ன (யான்கொள்) ஸ்வரூபஜ்ஞாநத்தை நீ பிறப்பிக்க, அத்தாலே ஸ்வரூப ஜ்ஞாநமுடைய நானொருவனும் பெறும்படி பண்ணவேணும். ‘உமக்கும் எப்போதும் நம்மாற்செய்யப்போகாது’ என்ன – (சிறப்பே) பலகால் வேண்டா; ஒருகால் அமையும்; அதுதன்னிலும், திருவாசலைத் திருக்காப்புக்கொண்டு ஒருவரறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாகிறது – ஏற்றம். அதாவது – புருஷார்த்த2ம். ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்த2த்தைக் கொண்டருள வேணும் என்றபடி. சிறப்பாவது – முக்தியும், ஸம்பத்தும், நன்றியும். இவற்றில், நான் உன்பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே. உன்பக்கல் நான் கொள்ளும் ஸம்பத்து என்னவுமாம். நன்றி என்னவுமாம்.
ஐந்தாம் பாட்டு
சிறப்பில் வீடு சுவர்க்க நரகம்*
இறப்பி லெய்துக எய்தற்க* யானும்
பிறப்பில் பல்பிற விப்பெரு மானை*
மறப்பொன் றின்றிஎன் றும்மகிழ் வேனே.
ப – அநந்தரம், இப்பாரதந்த்ர்ய ப்ரகாஶகனான ஈஶ்வரனை மறவாதொழிகையாகிற உகப்பைப் பெறவேணும் என்கிறார்.
இறப்பில் – இச்சரீரத்தை விட்டவளவிலே, சிறப்பில் – (ஆநந்தமாகிற) நன்மையிலேயான, வீடு – மோக்ஷம், சுவர்க்கம் – (ஸுகா2பா4ஸமான) ஸ்வர்க்கம், நரகம் – (து3:க்கை2கதாநமான) நரகமாகிற இவற்றை, எய்துக – தே3ஹாத் பரனாய்க் கொண்டு போய்கிட்டவுமாம், எய்தற்க – (தேஹம் தான் என்றாய் இவற்றைக்) கிட்டாதே முடிந்து விடவுமாம்; பிறப்பு – (தனக்குப்) பிறவிக்கு ஹேது, இல் – இன்றியேயிருக்கச்செய்தே, பல் – ப3ஹுதா4வாக, பிறவி – பிறக்கக்கடவனான, பெருமானை – ஸர்வேஶ்வரனை, ஒன்று – (இவ்வவதாரத்தாலே ஆஸ்ரிதரை நித்யபரதந்த்ரராக்கின கு3ணசேஷ்டிதங்கள்) ஒன்றையும், மறப்பின்றி – மறவாதே, என்றும் – என்றும், மகிழ்வேன் – (அவிஸ்மரணத்தால் வந்த) ஆநந்தத்தை உடையேனாக வேணும்.
கீழ்ப்பாட்டும் இப்பாட்டும் – •ன்னிலையன்றியே ஸ்வக3தா4நுஸந்தா4னமாய் இருக்கிறது.
ஈடு – அஞ்சாம் பாட்டு. கீழ் – மநோவாக்காயங்கள் மூன்றாலுமுண்டான பேற்றை ஆசைப்பட்டு, ‘இவை மூன்றாலுமுண்டான அநுப4வத்தில் உன்னுடைய ப்ரீதியிலே அந்தர்பூ4தனாமிதுக்கு மேற்பட எனக்காயிருக்கும் ஆகாரத்தைத் தவிர்க்கவேணும் என்றார்; “இதுதான் ஸம்ஸாரிகள்பக்கல் பரிமாறுவதொன்றல்ல; இவர்தாம் தம்மை யாராக நினைத்து இந்தப் பேற்றை அபேக்ஷிக்கிறார் என்று ஆராய்ந்து பார்ப்போம்” என்று, ‘நீர் ஆராய்த்தான் நம்மை இப்படி அபேக்ஷிக்கிறது?’ என்ன, – “தே3ஹமே ஆத்மா” என்பார்; “கேவல தே3ஹத்துக்கு இந்த்3ரியமொழிய அநுப4வமில்லாமையாலே இந்த்3ரியங்களேகாண் ஆத்மா” என்பார்; “அந்த இந்த்3ரியங்களும் மநஸ்ஸஹகாரமில்லாதபோது பதா3ர்த்த2 க்3ரஹணம் பண்ணமாட்டாமையாலே மநஸ்ஸேகாண் ஆத்மா” என்பார்; “அம்மநஸ்ஸுதனக்கும் ப்ராணங்கள் ஸஹகரிக்கவேண்டுகையாலே ப்ராணங்காண் ஆத்மா” என்பார்; “இவையெல்லாமுண்டானாலும் அத்4யவஸாயம் வேணுமே; அதுக்குக் கருவியான பு3த்3தி4தத்த்வமேகாண் ஆத்மா” என்பார்; “இவை யித்தனைக்கும் அவ்வருகாய், ஜ்ஞாநகு3ணகமாய், ஜ்ஞாநஸ்வரூபமாயிருப்பதொன்று ஆத்மா” என்பாராகாநிற்பர்கள்; அதில் எனக்கு ஒரு நிர்ப்ப3ந்த4மில்லை; ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கு உறுப்பாமிதுவே வேண்டுவது என்கிறார். “வபுராதி3ஷு யோபி கோபி வா” என்றாற்போலே.
(சிறப்பில் வீடு) நித்யஸம்ஸாரியாய்ப் போந்தவன் நித்யஸூரிகளுடைய அநுப4வத்தைப் பெற்று அநுப4விக்கக்கடவதாகச் சொல்லுகிற மோக்ஷம், பரிமித ஸுக2த்தையுடைத்தான ஸ்வர்க்க3ம், நிஷ்க்ருஷ்ட து3:க்க2மேயான நரகம், இவற்றை சரீரவியோக3ஸமயத்தில் ப்ராபிக்க, ப்ராபியாதொழிக; இதுக்குக் கருத்தென்? என்னில்; தே3ஹாதிரிக்தனாயிருப்பானொரு ஆத்மாவுண்டாகவுமாம்; தே3ஹமே ஆத்மாவாகவுமாம், இதில் நிர்ப்ப3ந்த4மில்லை என்கை. தே3ஹாதிரிக்தமா யிருப்பதொரு வஸ்துவுண்டாகிலிறே ஸ்வர்க்கா3த்3யநுப4வங்களுள்ளது; கேவலதே3ஹம் இங்கே த3க்3த4மாகக் காணாநின்றோமிறே. (யானும்) சஸப்3த3த்தாலே – நான் இப்பேறித்தனையும் பெறுவதுகாண்! என்கிறார். ஸ்வரூப நிர்ணயத்தில் நிர்ப்ப3ந்த4மின்றிக்கே, “நான் ஆரேனுமாக அமையும்” என்றிருக்கிற நானும். (பிறப்பில் பல்பிறவிப் பெருமானை) பிறக்கைக்கு ஹேதுவான கர்ம மின்றிக்கேயிருக்கச்செய்தே, கர்மவஸ்யரும் பிறவாத ஜந்மங்களிலே பிறக்கவல்ல ஸர்வாதி4கனை. “அஜாயமாநோ ப3ஹுதா4 விஜாயதே”.
(மறப்பொன்றின்றி) அவதாரங்களிலும் சேஷ்டிதங்களிலும் ஒரு மறப்பின்றிக்கே. (மறப்பொன்றின்றி) இத்தலையிலுள்ளதெல்லாம் மறக்கலாம்; அத்தலையிலுள்ளதொன்றும் நழுவவொண்ணாது. (என்றும் மகிழ்வேனே) மகிழ்ச்சியென்றும். அநுப4வமென்றும் பர்யாயம். அநுப4விப்பேன் என்கிறார். ஆக இத்தாலே – ஸ்வரூபமும் வெளியிடுகிறார். ‘பெருமான்’ என்கையாலே – தம்முடைய சேஷத்வமும், ‘மறப்பொன்றின்றி’ என்கையாலே – ஜ்ஞாத்ருத்வமும், ‘என்றும்’ என்கையாலே – நித்யத்வமும், ‘மகிழ்வு’ என்கையாலே – போ4க்த்ருத்வமும்.
ஆறாம் பாட்டு
மகிழ்கொள் தெய்வம் உலோகம் அலோகம்*
மகிழ்கொள் சோதி மலர்ந்தஅம் மானே!*
மகிழ்கொள் சிந்தைசொல் செய்கைகொண்டு* என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்கவா ராயே.
ப – அநந்தரம், இந்த ஆந்தராநுப4வமடியாக பா3ஹ்யாநுப4வத்தை அபேக்ஷிக்கிறார்.
மகிழ்கொள் – ஸுக2ப்ரசுரமான, தெய்வம் – தே3வதாவர்க்க3ம், உலோகம் – ஜ்ஞாநப்ரகாஶயுக்தமான மநுஷ்யவர்க்கம், அலோகம் – ப்ரகாசரஹிதமான திர்யக் ஸ்தா2வரங்கள், மகிழ் – (தேஜஸ்விதையால் வந்த) உகப்பை, கொள் – உடைத்தான, சோதி – ஜ்யோதி:பதார்த்தங்களாய்க்கொண்டு, மலர்ந்த – ‘ப3ஹுஸ்யாம்’ என்கிற கணக்கிலே விஸ்த்ருதனான, அம்மானே – ஸ்வாமியானவனே! மகிழ்கொள் – (உன் பக்கல் ஆபி4முக்2யத்தாலே) ப்ரீதியுக்தமான, சிந்தை – நினைவையும், சொல் – உக்தியையும், செய்கை – க்ரியையையும், கொண்டு – கொண்டு, என்றும் – ஸர்வகாலமும், மகிழ்வுற்று – ஆநந்தநிர்ப்பரனாய்க்கொண்டு, (நான்) உன்னை – (இக்கரணத்ரய வ்யாபாரத்தையுண்டாக்கித் தந்த) உன்னை, வணங்க – அநுபவிக்கும்படி, வாராய் – எழுந்தருளிவரவேணும்.
உலோகம் அலோகம் என்று – சேதநாசேதநங்களாகவுமாம்.
ஈடு:- ஆறாம் பாட்டு. தே3வாதி3பதா3ர்த்த2ங்களை உண்டாக்கினாற்போலே, என்னையும் உன்னை அநுப4விப்பேனாம்படியாகப் பண்ணவேணும் என்கிறாராதல். அன்றியே, தே3வாதி3பதா3ர்த்த2ங்களுக்கு ஓரோ ஸ்வபா4வம் நியதமாம்படி பண்ணினாற்போலே, எனக்கு உன்னை அநுப4விக்குமது நியதஸ்வபா4வமாம்படி பண்ணியருள வேணும் என்கிறாராதல்.
(மகிழ்கொள் தெய்வம்) போ4க்3ய போ4கோ3பகரண போ4க3ஸ்தா2நங்களாலே மநுஷ்யரிற்காட்டில் ஆனந்த3 ப்ரசுரராயிருந்துள்ள தே3வர்கள். (உலோகம்) “லோக்யத இதிலோக:” என்கிறபடியே, சக்ஷுராதிகரணங்களுக்கு விஷயமான அசித்து. (அலோகம்) இவற்றை க்3ரஹிக்கும் ஸாத4நங்களால் க்3ரஹிக்கப்படாதே ஸாஸ்த்ரைக ஸமதி4க3ம்யமான சித்3வஸ்து. (மகிழ்கொள் சோதி) தா3ஹகமான தேஜ:பதா3ர்த்த2ம். சந்த்3ரஸூர்யர்கள் என்னவுமாம். இவற்றை உண்டாக்கின ஸர்வேஶ்வரனே!
“பஹு ஸ்யாம்” என்கிறபடியே தன் விகாஸமாகையாலே (மலர்ந்த) என்கிறார். சித3சித்3விஶிஷ்ட ப்3ரஹ்மமே காரணமுமாய், கார்யமுமாகக் கடவதிறே. ‘நீர் சொன்னவையெல்லாம் செய்தமையுண்டு; உமக்கு இப்போது செய்ய வேண்டுவதுதானென்?’ என்ன – (மகிழ்கொள் இத்யாதி3) என்னுடைய ஹ்ருத3யம் உன்னை அநுப4வித்து மகிழ்ச்சியையுடைத்தாம்படி பண்ணவேணும்; என்னுடைய வாக்3வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ணவேணும்; என்னுடைய வ்யாபாரமும் ப்ரீதிபுரஸ்ஸரமாகப் பண்ணும் கைங்கர்யமாகவேணும்; நானும் தனியே அநுப4வித்து ப்ரீதியையுடையேனாம்படி பண்ணவேணும்; என்றும் இப்படி நான் உன்னை அநுப4விக்கும்படி வரவேணும்.
ஏழாம் பாட்டு
வாராய் உன்திருப் பாத மலர்க்கீழ்*
பேரா தேயான் வந்துஅடை யும்படி
தாராதாய்!* உன்னை யென்னுள் வைப்பில்என்றும்
ஆரா தாய்* எனக்குஎன்றும்எக் காலே.
ப – அநந்தரம், ஆந்தராநுபவம் ஆராமையாலே ஸவிஷாதமாக பா3ஹ்யாநுப4வாபேக்ஷை பண்ணுகிறார்.
உன்னை – (நித்யாநுபா4வ்யனான) உன்னை, என்னுள் – என் நெஞ்சுக்குள்ளே, என்றும் – நிரந்தரமாக, வைப்பில் – வைக்குமிடத்தில், எனக்கு ஆராதாய் – (“அமையும்” என்னாதபடி) எனக்கு அத்ருப்திகரனாய், என்றும் – எல்லா நாளிலும், எக்கால் – எல்லாப்போதிலும், உன் – (ப்ராப்தனான) உன்னுடைய, திரு – ஸ்லாக்4யமாய், மலர் – போ4க்3யமான, பாதம் – திருவடிகளிலே, கீழ் – பரதந்த்ரனாய்க்கொண்டு, பேராதே – விஸ்லேஷ ரஹிதனாம்படி, யான் – நான், வந்து – வந்து, அடையும்படி – கிட்டுகைக்கு, தாராதாய் – அவகாசந்தாராதவனே! உன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே யான் வந்தடையும்படி – நான் அப்படி கிட்டும்படி, வாராய் – வந்தருளவேணும்.
ஈடு – ஏழாம் பாட்டு. தம்முடைய அபி4நிவேசத்தாலே, ‘எல்லாக்காலமும் என்னை அடிமைகொள்ள வரவேணும்’ என்கிறார்.
உன்னுடைய நிரதிசயபோ4க்3யமான திருவடிகளின் கீழே புநராவ்ருத்தி யில்லாத பேற்றை நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராதேயிருக்கிறவனே! வாராத இன்னாப்பாலே, ‘தாராதாய்’ என்று – இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார். அந்யபரோக்தியிலே ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார். தரநினையா விட்டால் நெஞ்சிலே ப்ரகாசிக்கிற அத்தைத் தவிர்க்கவுமாமிறே; அகவாய் பெரிய திருநாளாய்ச் செல்லாநின்றது.
நிரதிசயபோ4க்3யனான உன்னை பா3ஹ்ய ஸம்ஸ்லேஷம் பண்ணாதபோது த4ரிக்கமாட்டாத என்னுடைய ஹ்ருத3யத்திலே உன்னைக்கொண்டு புகுந்து வைக்குமிடத்தில், ஒருநாளும் அமையாதபடி இருக்கிறவனே! (எனக்கு என்றும் எக்காலே) எனக்கு எல்லாக் காலத்திலும் எல்லா அவஸ்தை2யிலும், வாராய் – வரவேணும். “உன் திருப்பாத மலர்க்கீழ், பேராதே யான் வந்தடையும்படி தாராதாய்” என்னுதல், “வாராய்” என்னுதல்.
எட்டாம் பாட்டு
எக்காலத் தெந்தையாய்என்னுள் மன்னில்*மற்று
எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்*
மிக்கார் வேத விமலர் விழுங்கும்*என்
அக்காரக் கனியே! உன்னை யானே.
ப – அநந்தரம், ‘அத்யல்பகாலாநுபவம் பெறிலும் அதொழியவேறொன்றும் வேண்டா’ என்கிற அத்யபி4நிவேசத்தை அருளிச்செய்கிறார்.
மிக்கார் – அதிசயிதஸ்வபாவராய், வேதவிமலர் – வைதிகாக்ரேஸரரான நிர்மலரானவர்கள், விழுங்கும் – (தங்கள் ஆதராதிசயத்தாலே) கபளீகரித்து அநுபவிக்கும் கணக்கிலே, என் – எனக்கு, அக்காரம் – அக்காரந்தோய்ந்த, கனியே – கனிபோலே போ4க்3யபூ4தனானவனே! எக்காலத்து – ஏதேனும் அல்ப காலத்திலேயாகிலும், எந்தையாய் – எனக்கு ஸ்வாமியான ஆகாரம் தோன்றும்படி, என்னுள் – என் நெஞ்சிலே, மன்னில் – ப்ரகாசிப்பித்து நிற்கப்பெறில், மற்று – இதொழிய, எக்காலத்திலும் – எல்லாக்காலத்திலும், யாது – ஏதேனும், ஒன்றும் – ஒன்றையும், உன்னை – உன்னை, யான் – நான், வேண்டேன் – அபேக்ஷியேன்.
ஈடு – எட்டாம் பாட்டு. ‘அத்யல்பகாலமாகிலும் சேஷியாய் என்னோடே ஸம்ஸ்லேஷிக்கப்பெறில், பின்னை ஒருகாலமும் இதுவும் வேண்டா’ என்று, தமக்கு அடிமை செய்கையிலுண்டான விடாயின் மிகுதியை அருளிச்செய்கிறார்.
(எக்காலம் இத்யாதி3) இதுக்கு ஆளவந்தார் அருளிச்செய்யும்படி – “இனிக் கூறிடவொண்ணாதபடி சிறு கூறான அத்யல்பகாலத்திலும், நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் ஹ்ருத3யத்திலே வந்து புகுரப்பெறில், மற்று எக்காலத்திலும் – இதொழிந்த எல்லாக்காலத்திலும், யாதொன்றும் வேண்டேன்; பின்னை இது தானும் வேண்டேன். ஜ்வரஸந்நிபதிதர் ‘ஒருகால் நாக்கு நனைக்க’ என்னுமாபோலே.
“ ‘க்ஷணகாலம் அநுப4விக்க அமையும்’ என்னும்படியான விஷயமுண்டோ?” என்ன – (மிக்கார் இத்யாதி3) ப4க3வத3நுப4வத்தில் மிக்காராய், “யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:” என்கிறபடியே வேத3த்திலே விமலராக ப்ரதிபாதி3க்கப்பட்டுள்ள நித்யஸூரிகள் அநுப4வியாநின்றுள்ள, அக்காரம்போலவும், கனி போலவுமுண்டான உன்னுடைய போ4க்3யதாதிசயத்தை எனக்கு ப்ரகாசிப்பித்தவனே! அக்காரம் வ்ருக்ஷமாய், அது கோட்புக்குப் பழுத்த பழம்போலே நிரதிசய போ4க்3யனானவனே! ‘அக்காரக்கனி’ என்கிற இது – அவர்களுக்கு ஸர்வவித4போ4க்3யங்களும் தானே என்னுமிடத்துக்கு உபலக்ஷணம். (உன்னை யானே) இப்படி நிரதிசய போ4க்3யனான உன்னை, உன் சுவடறிந்த நான், எக்காலத்தெந்தையாய் என்னுள் மன்னில் மற்றெக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்”. இத்தை எம்பெருமானார் கேட்டருளி, “இது பொருளழகியது; இவ்வாழ்வாருடைய ப்ரக்ருதிக்குச் சேராது; பெறிலும் பெறாதொழியிலும் சிறுகக்கோலமாட்டார்; இங்ஙனேயாகவேணும்” என்று அருளிச்செய்வர் – “(எக்காலத்து இத்யாதி3) எல்லாக்காலத்திலும் எனக்கு சேஷியான நீ, நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹ்ருத3யத்திலே புகுரப்பெறில், எக்காலத்திலும் – இக்காலமெல்லாவற்றிலும், (மற்று யாதொன்றும் வேண்டேன்) பின்னை இதொழிந்த மற்றொன்றையும் நான் வேண்டேன்”.
ஒன்பதாம் பாட்டு
யானே என்னை அறியகி லாதே*
யானே என்தனதே என்றிருந்தேன்*
யானே நீஎன் னுடைமையும் நீயே*
வானே யேத்தும்எம் வானவ ரேறே.
ப – அநந்தரம், ஸம்பந்தம் அப்ருதக்ஸித்தமாயிருக்க, அநாத்யஜ்ஞாநத்தாலே அஹங்கார மமகார தூ3ஷிதனாய் இழந்தேன் என்கிறார்.
யானே – நான்தானே, என்னை – என் விஷயத்திலே, அறியகிலாதே – யாதாத்ம்யஜ்ஞாநம் இல்லாமையாலே, யானே – நான் ஸ்வதந்த்ரனேயாகவும், என்தனதே – என்னையொழிந்தவை – என் உடைமையாகவும், என்று – அஹங்கார மமகாரங்களைப்பண்ணி, இருந்தேன் – (முடிந்துபோகாதே ஆத்மநித்யத்வமும் அநர்த்தாவஹமாம்படி) இருந்தேன்; வானே – (இவ்வறிவுகேடின்றியிலே யாதாத்ம்ய ஜ்ஞாநம் நடையாடும்) பரமபதமாக, ஏத்தும் – (உன்னுடைய ஸம்பந்தத்தை) ஏத்தும்படி, அவ்வானவர் – அங்குள்ளார்க்கு, ஏறே – ஶேஷியான செருக்குத் தோன்ற இருக்குமவனே! (அர்த்தஸ்திதியுணர்ந்தால்) யான் – நான், நீயே – நீயேயென்னலாம்படி அப்ருத2க்ஸித்3த4 ப்ரகாரபூ4தனாயிருப்பன், என் உடைமையும் – என்னுடைமையானவையும், நீயே – (உனக்கு அப்படி ப்ரகாரமாய்க்கொண்டு) நீயே என்னலாம்படியாயிருக்கும்.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. “மிக்கார் வேதவிமலர் விழுங்கும்” என்று நித்யஸூரிகள் நித்யாநுப4வம் பண்ணுகிறபடியை அநுஸந்தி4த்தார்; அவர்களோடு ஒத்த ப்ராப்தி தமக்கு உண்டாயிருக்க இழந்திருக்கிறபடியையும் அநுஸந்தி4த்து அநர்த்த2ப் பட்டேன் என்கிறார்.
(யானே) என் இழவு ப4க3வத்க்ருதமல்ல; அவன் எதிர்சூழல் புக்குத்திரியா நிற்க, நானேகிடீர் விநாசத்தைச் சூழ்த்துக்கொண்டேன் என்கிறார். (என்னை அறிய கிலாதே) ராஜபுத்ரன் வேடன் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாக ப்ரதிபத்தி பண்ணுமாபோலே, ஸர்வேஸ்வரனுக்கு ப்ரகாரபூ4தனான என்னை அறியாதே. (யானே என்றனதே என்றிருந்தேன்) “அவனும் அவனுடைமையும்” என்றிருக்கை தவிர்ந்து, “நானும் என்னுடைமையும்” என்று வகுத்துக்கொண்டு போந்தேன்.
(இருந்தேன்) இப்படி நெடுநாள் போருகிறவிடத்தில் ஒருநாள் அநுதாபம் பிறக்கவுமாமிறே; அதின்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்ப4ரனாய் இருந்தேன். “தீவினையேன் வாளாவிருந்தொழிந்தேன்” என்னுமாபோலே. “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்கைக்கு ப்ராப்தியுண்டாயிருக்க, ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே கையொழிந்து இருந்தேன்; “முடிந்தேன்” என்றாற்போலே யிருக்கிறதிறே; ஒருநாளை இழவே போந்திருக்க, அநாதி3காலம் இழந்து போந்தேன். அங்ஙனன்றோ அர்த்த2தத்த்வம்? என்ன (யானே நீ) “அஹம் மநுரப4வம் ஸூர்யஸ்ச” என்னாநிற்பர்களாயிற்று முக்தர்; “மத்தஸ் ஸர்வமஹம் ஸர்வம்” என்னாநிற்பர் ஸம்ஸாரத்தில் தெளிவுடையார்; “அஹம் ப்3ரஹ்மாஸ்மி” “நான் ராஜபுத்ரன்” என்னுமாபோலே “நான் ப்3ரஹ்மம்” என்னலாம்படியிறே ஸம்ப3ந்த4மிருக்கும்படி. “ஸ வாஸுதேவ:” என்றது வாஸுதே3வ ஶரீரம் என்றபடியிறே. (என்னுடைமையும் நீயே) “யஸ்யைதே தஸ்ய தத்3த4நம்” என்னுமாபோலே. இது எங்கே பரிமாறக்கண்டு சொல்லும் வார்த்தை? என்ன நித்யஸூரிகளடைய இப்படியன்றோ உன்னை அநுப4விப்பது. “மஞ்சா: க்ரோஸந்தி” என்கிறபடியே (வானே ஏத்தும்) என்கிறது. (எம் வானவர் ஏறே) அவர்கள் தங்கள் சேஷத்வாநுரூபமாக அடிமை செய்யாநிற்க, இவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு. எம் என்று – எனக்கு அவர்களோடு ஒத்த ப்ராப்தி உண்டாயிருக்க, இழந்து அநர்த்த2ப்பட்டேன் என்கிறார்.
பத்தாம் பாட்டு
ஏறேல் ஏழும்வென்று ஏர்கொ ளிலங்கையை*
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி!*
தேறே லெ(னெ)ன்னை உன்பொன்னடிச் சேர்த்து ஒல்லை*
வேறே போகஎஞ் ஞான்றும் விடலே.
ப – அநந்தரம், அந்த ஸம்பந்தம் குலையாதபடி என்னைக் கைவிடாதொழியவேணும் என்கிறார்.
ஏல் – ஏன்றுகொண்ட, ஏறு – ஏறு, ஏழும் – ஏழையும், வென்று – வென்று, ஏர் – அழகை, கொள் – உடைத்தான, இலங்கையை – லங்கையை, நீறே செய்த – ப4ஸ்மஸாத்கரித்தத்தாலே, நெடும் – மிக்க, சுடர் – தேஜஸ்ஸையுடையனான, சோதி – உஜ்ஜ்வலவிக்3ரஹனே! என்னை – என்னை, தேறேல் – (எனக்கு நன்மையறிவன் என்று) விஸ்வஸியாதே, உன் – உன்னுடைய, பொன் – உஜ்ஜ்வலமான, அடி – திருவடிகளிலே, ஒல்லை – சடக்கென, சேர்த்து – சேர்த்து, வேறே போக – (விஷயாந்தரங்களை நினைத்து) வேறுபோகும்படி, எஞ்ஞான்றும் – எல்லாக்காலத்திலும், விடல் – விடாதொழியவேணும்.
விதிநிர்மிதமான இந்த அந்வயத்தைப் பாலநம்பண்ணி, விடாதொழியவேணும் என்று கருத்து.
ஈடு – பத்தாம் பாட்டு. “யானே என்றனதேயென்றிருந்தேன்” என்று நீர் அநுதபிக்கும்படி பண்ணினோமாகில் உமக்குச் செய்யவேண்டுவதொன்றுண்டோ? நீர் இங்ஙனே கிடந்துபடுகிறது எதுக்காக? என்ன; ‘இதுக்காக’ என்கிறார்.
(ஏறேலேழும் வென்று) ஏறாகிலேழையும் வென்று; நப்பின்னைப் பிராட்டியோட்டை ஸம்ஸ்லேஷத்துக்கு ப்ரதிப3ந்த4கமான ருஷப4ங்களேழையும் வென்று. (ஏர்கொள் இலங்கையை) த3ர்சநீயமாய்க் கட்டுடைத்தான லங்கையை. “அஹோ வீர்யமஹோ தை4ர்யம்” என்று திருவடி மதிக்கும்படியான லங்கையை. (ப3பூ4வ பு3த்3தி4ஸ்து ஹரீஸ்வரஸ்ய) ராவணனும் ஸ்த்ரீகளுமாயிருக்கிற இருப்பைக் கண்டவாறே, தானும் ஒரு ஸமுதா3யத்துக்குக் கடவனாகையாலே இங்ஙனேயிருப்பதொரு பு3த்3தி4 பிறந்தது. (யதீ3த்3ருசீ இத்யாதி3) பையல், தானும் ஸ்த்ரீகளுமாயிருக்கிற இருப்பைப் பெருமாளும் பிராட்டியுமாயிருக்க ஸம்மதித்தானாகில், இந்த ஐஸ்வர்யம் குலையாதிருக்கலாயிற்றுக் கிடீர்! (இமா யதா2 ராக்ஷஸராஜபா4ர்யாஸ்ஸு ஜாதமஸ்யேதி ஹி ஸாது4பு3த்3தே4🙂 ‘ஸத்ருக்களுக்கும் நன்மைவேணும்’ என்றிருக்கும் பு3த்3தி4யை யுடையவனுக்கு. (நீறே செய்த) பிராட்டி அருளிச்செய்தபடியே ப4ஸ்ம சேஷமாம்படி பண்ணின. (நெடும் சுடர்ச்சோதி) ராவணனைப் பரிகரத்தோடே கொன்று, கையும் வில்லுமான வீரஸ்ரீயோடே நின்ற நிலை. அவ்விரோதி4களைப் போக்கினாற்போலே என்னுடைய விரோதி4களையும் போக்கவேணும் என்கிறார். (தேறேல் என்னை) நப்பின்னைப் பிராட்டியோட்டை ஸம்ஸ்லேஷத்தில் ப்ரதிப3ந்த4கம்போக்க அமையும்; ஸ்ரீஜநகராஜன் திருமகளளவில், அவளைப் பிரித்த ராவணனை முடிக்க அமையும்; அவர்களை உனக்காக்கவேண்டா; பண்டே உனக்கா யிருக்கையாலே; அப்படியே “இவன்விரோதி4களைப்போக்கி நமக்காக்கினோமாகில் இனியென்?” என்றிருக்கவொண்ணாதே என்னளவில். ‘தேறேன்’ என்று பாட2மானபோது – தெளியேன் என்னுதல், த4ரியேன் என்னுதல்.
ஆனால் செய்யவேண்டுவதென்? என்ன (உன்பொன்னடிச் சேர்த்தொல்லை) “நின்செம்மாபாதபற்புத் தலைசேர்த்து” என்று தொடங்கின அர்த்த2த்தைத் தலைக்கட்டுகிறார். (உன் பொன்னடி) கல்லுக்கும் சைதந்யம் கொடுக்கவல்ல அடியன்றோ. சேர்த்து – சேர்த்தருளவேணும். ஒல்லை – நான் இசைந்தபோதே சடக்கெனத் திருவடிகளில் தி3வ்யரேகை2யோபாதி சேர்த்தருள வேணும். அவ்வளவும் போராது; “இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோமாகில் இனியென்?” என்னவொண்ணாது; நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித்தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்; என்னை என் கையில் காட்டித்தாராதொழியவேணும்.
பதினொன்றாம் பாட்டு
விடலில் சக்கரத் தண்ணலை* மேவல்
விடலில் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்*
கெடலி லாயிரத் துள்இவை பத்தும்*
கெடலில் வீடுசெய் யும்கிளர் வார்க்கே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழி மோக்ஷாநந்த3ப்ரத3ம் என்று ப2லத்தை அருளிச்செய்கிறார்.
விடல் – விடுதல், இல் – இல்லாத, சக்கரத்து – திருவாழியையுடைய, அண்ணலை – ஸ்வாமியை, (அப்படியே) மேவல் – மேவி, விடலில் – விட க்ஷமரல்லாத, வண் – மஹோதா3ரரான, குருகூர்ச்சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்ததாய், (இதில் அந்வயித்தார்க்கு) கெடல் – அநர்த்தம், இல் – வாராதபடியான, ஆயிரத்துள் – ஆயிரத்துள், இவை பத்தும் – இவை பத்தும், கிளர்வார்க்கு – ஸாத3ரமாகச் சொல்லவல்லவர்களுக்கு, (இதுதானே) கெடலில் – அவித்3யாத்3யநர்த்த2க3ந்த4ரஹிதமான, வீடு – மோக்ஷாநந்தத்தை, செய்யும் – பண்ணிக்கொடுக்கும்.
கிளர்தல் – சொல்லுதல்; கிளர்த்தியாய், உத்யோக3மாகவுமாம். இது கலிவிருத்தம்.
ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லார் இதில் சொன்ன ப்ராப்யத்தைப் பெறுவர் என்கிறார்.
“நாம் விடுகிறோம் என்று அதிசங்கை பண்ணுகிறதென்? நாம் ஒருவரையும் விடோங்காணும்” என்று கையில் திருவாழியைக் காட்டினான், – (விடலில் சக்கரத்தண்ணலை) ஒரு காலும் விடாத திருவாழியைக் கையிலேயுடைய ஸர்வேஸ்வரனைக் கவிபாடிற்று. (மேவல் விடலில் இத்யாதி3) அவன் ஸ்வபா4வத்தாலே கிட்டி, அவனைப் பிரியில் த4ரியாதபடி பரமோதா3ரரான ஆழ்வார் அருளிச்செய்தார். வண்மையாவது – இவ்வநுப4வத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்த உபகாரம். (கெடலில் ஆயிரம்) இவ்வாத்மாவுக்கு அநர்த்த2க3ந்த4ம் வாராதபடி ஹிதத்தை ஆராய்ந்து அருளிச்செய்த இதுதான். அவற்றில் இப்பத்தும் – கிளர்வார்க்கு – கெடலில் வீடு
செய்யும் – “வரில் பொகடேன், கெடில் தேடேன்” என்றிருக்கையன்றிக்கே ஸ்ரத்3த4தா4நராயிருப்பார்க்கு, அநர்த்த2க3ந்த4ரஹிதமாய், அஹங்காரமமகாரங்களை யுடைத்தன்றிக்கே “தனக்கேயாகவேணும்” என்று இவர் ப்ரார்த்தி2த்தபடியே இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபாநுரூபமான பேற்றைப் பண்ணித்தரும்.
முதற்பாட்டில், காயிகமான பேற்றை அபேக்ஷித்தார்; இரண்டாம் பாட்டில், மாநஸமான பேற்றை அபேக்ஷித்தார்; மூன்றாம் பாட்டில், வாசிகமான பேற்றை அபேக்ஷித்தார்; நாலாம் பாட்டில், ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்; அஞ்சாம் பாட்டில், ‘நீர் ஆராய் இப்பேற்றை அபேக்ஷித்தீர்?’ என்ன, ‘நான் ஆராயிடுக; உன்னை அநுப4வித்து மகிழும்படி பண்ணியளருவேணும்’ என்றார்; ஆறாம் பாட்டில், த்ரிவித4கரணங்களாலும் உன்னை ப்ரீதிபுரஸ்ஸரமாக அநுப4விக்கும்படி பண்ணியருளவேணும் என்றார்; ஏழாம் பாட்டில், அப்படி சடக்கெனச் செய்யாமையாலே இன்னாதானார்; எட்டாம் பாட்டில், ஸ்வரூபாநுரூபமாக நீ க்ஷணகாலம் என்னோடே அநுப4விக்கப்பெறில், பின்புள்ள காலமெல்லாம் வேண்டேன் என்றார்; ஒன்பதாம் பாட்டில், உன்னை அநுப4விக்க இட்டுப் பிறந்துவைத்து அது கிடையாதபடி நானே அநர்த்த2த்தைச் சூழ்த்துக்கொண்டேன் என்றார்; பத்தாம் பாட்டில், “எனக்கு ஒருநாளும் ‘ஜ்ஞாந விஶேஷத்தைப் பண்ணித் தந்தோமிறே’ என்று என்னை என்கையில் காட்டித் தாராதொழியவேணும்” என்றார்; இதுகற்றார்க்குப் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத்திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– எம்மாவீடு
மோக்ஷாத3ரம் ஸ்பு2டமவேக்ஷ்ய முநேர்முகுந்தே3
மோக்ஷம் ப்ரதா3துமஸத்3ருக்ஷப2லம் ப்ரவ்ருத்தே |
ஆத்மேஷ்டமஸ்ய பத3கிங்கரதைகரூபம்
மோக்ஷாக்2யவஸ்து நவமே நிரணாயி தேந || 19
த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி —எம்மாவீடு
ஶ்ரத்3தே4யஸ்வாங்க்4ரியோக3ம் ஶுப4மதிகரத3ம் ஸ்தோத்ரஸாமர்த்2யஹேதும்
ஸ்வார்த்தீ2காரோபகாரம் ஸ்ம்ருதிரஸஶமிதாந்யத3ரம் ப்ரீதிவஶ்யம்|
ப்ராப்தௌ காலாக்ஷமத்வப்ரத3மம்ருதரஸத்4யாநமாத்மார்பணார்ஹம்
வைமுக்2யாத்3வாரயந்தம் வ்ருதபரிசரணம் சக்ரபாணிம் ஜகா3த3 ||21
திருவாய்மொழி நூற்றந்தாதி
எம்மாவீ டும்வேண்டா வென்றனக்குன் தாளிணையே
அம்மா வமையுமென வாய்ந்துரைத்த நம்முடைய
வாழ்•தலா மாறன் மலர்த்தா ளிணைசூடிக்
கீழ்மையற்று நெஞ்சே! கிளர். 19
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
******