மூன்றாந்திருவாய்மொழி – ஒழிவில் காலம் : ப்ரவேசம்
பன்னீராயிரப்படி – மூன்றாந்திருவாய்மொழியில், இவர் ‘சேஷத்வவிரோதியான தேஹஸம்பந்தாதிகளை நிவர்த்திப்பிக்கவேணும்’ என்று அபேக்ஷிக்க, ‘நித்ருத்தவிரோதிகரைக் கொள்ளும் சேஷவ்ருத்தியைக் கொள்ளுகைக்கன்றோ நாம் ஸந்நிஹிதராயிற்று’ என்று பெரியதிருமலையில் நிற்கிற நிலையை ப்ரகாசிப்பித்த ஈஸ்வரனுக்கு ‘ஸர்வப்ரகாரசேஷத்ருத்தியும் பண்ணுகையே சேஷபூதனுக்கு ஸ்வரூபம்’ என்று அறுதியிட்டு அதிலே உத்யோகத்தைப் பண்ணுவதாக; கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியினுடைய ஸர்வாதிகசேஷித்வத்தையும், சேஷியினுடைய குணவிக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும், ஸர்வப்ரகாரவிலக்ஷணனுடைய ஸூரிஸேத்யத்வத்தையும், இப்படி ஸர்வாதிகனுடைய —சீலாதிசயத்தையும், சீலவானுடைய போக்யதையையும், போகார்த்தமான ஆஸ்ரயண ஸௌகர்யத்தையும், அவன் நிற்கிற திருமலைதானே பரமஸாம்யப்ரத மென்னுமிடத்தையும், அதுதன்னை அனுபவிக்கவே ப்ரதிபந்தகம் ஸ்வயமேவ நித்ருத்தமாமென்னுமத்தையும், அந்த தேஶஸம்பந்தத்தாலே தே–கனான ஈஸ்வரனும் அநிஷ்டநிவர்த்தகனானான் என்னுமத்தையும், அவன் தேசமான திருமலை தானே பரமப்ராப்யமென்னுமிடத்தையும் அருளிச்செய்து, ஏவம்விததேசவர்த்தியான ஈஸ்வரன்பக்கல் கைங்கர்யமே ஸ்வரூபாநுரூப புருஷார்த்தமென்று உத்யுக்தராகிறார்.
ஈடு – _நிலைப்பெற்றென்னெஞ்சம் பெற்றதுநீடுயிர் (3-2-10)_ என்று-அவனைக்கிட்டித் தம்முடைய ஸ்வரூபம் பெற்றவாறே, ஸ்வரூபாநுரூபமான அடிமை பெறவேணுமென்று பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
ப்ரக்ருதிஸம்பந்தத்தாலே வந்த கரணஸங்கோசத்தை அநுஸந்தித்து, நினைத்த வகைகளெல்லாம் பரிமாறப்பெறாமையாலே நொந்து, ‘அவன் முதலிலே இத்தைத்தவிர்த்துத் தன்னை அநுபவிக்கைக்கு உறுப்பாக அநேகம் உபாயங்களைப் பார்த்துவைத்தான்; அவற்றைத் தப்பினேன்; அவதாரங்களைத் தப்பினேன்; அந்தாராத்மதையைத் தப்பினேன்; இப்படி அவன்பார்த்துவைத்த வழிகளடையத் தப்பின நான், இனிக் கிட்டியநுபவிக்கை என்று ஒருபொருளுண்டோ? இழந்தேனேயன்றோ?’ என்று நைராஸ்யத்தோடே முடியப்புக, ‘வாரீர் ஆழ்வீர்! நாம் உமக்காகவன்றோ திருமலையிலே வந்து நிற்கிறது; உம்மை இத்வுடம்போடே அநுபவிப்பிக்கைக்காக இங்கே வந்துநின்றோமே; நீர் போய்க் காணக்கடவ காட்சியை நாம் இங்கே வந்து காட்டினோமே; இனித்தான் உமக்கு இவ்வுடம்பு நம்மோட்டையநுபவத்துக்கு விரோதியுமன்றுகாணும்; நீர்தாம் கரணஸங்கோசாநுஸந்தாநத்தாலே நோவுபடுகிறீராகில், முதலிலே இதில்லாதாரும் நம்மை அநுபவிக்கும்போது படும்பாடு இது காணும்; அவர்களும் வந்தநுபவிக்கிற இடங்காணும் இவ்விடம்; ஆனபின்பு, நீரும் இவ்வுடம்போடே நினைத்த அடிமைகளெல்லாம் செய்யும்’ என்று தான் திருமலையிலே வந்து நிற்கிற நிலையைக் காட்டி ஸமாதாநம்பண்ண, ஸமாஹிதராய், ‘தர்மியொன்றேயாகையாலே விஷயம் எங்குமொக்கப் பூர்ணமானபின்பு, ஒருதேசவிசேஷத்திலே போனால் செய்யக்கடவ அடிமைகளெல்லாம் இந்நிலத்திலே செய்யலாம்படிக்கு ஈடாகக் குறையற்றிருந்ததாகில், நமக்குத்தான் இவ்வுடம்பு விரோதியாகையுமன்றிக்கே அடிமைசெய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில், இனித்தான் அங்குப் போனாலும் (ஸோஸ்நுதே ஸர்வாந்காமாந்) என்கிறபடியே குணாநுபவமிறே பண்ணுகிறது; அந்த சீலாதிகுணங்கள்தான் ஸ்பஷ்டமாயிருக்கிறதும் இங்கேயாகில், இனி அங்குள்ளாரும் வந்து அடிமை செய்கிறதும் இங்கேயாகில், நாமும் அங்கே போய்ப்புக்கு அடிமை செய்வோம்’ என்றுகொண்டு, பசியுமுண்டாய்க் கையிலே சோறுமுண்டாயிருக்குமவன் நீரும்நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாபோலே இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார். இவ்விஷயத்தில் அடிமைசெய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளதொன்றாயிற்று, முன்பே பாரித்துக்கொண்டு இழியுமது; (அஹம் ஸர்வம் கரிஷ்யாமி) என்றிறே இளையபெருமாள் படி. போஜநபரனா யிருக்குமவன் ஊணத்யாயம்படிக்குமாபோலே இருப்பதொன்றாயிற்று, இவருடைய கைங்கர்ய மநோரதம்.
முதல் பாட்டு
ஒழிவில்காலமெல்லாம் உடனாய்மன்னி*
வழுவிலா அடிமை செய்யவேண்டுநாம்*
தெழிகுரலருவித் திருவேங்கடத்து*
எழில்கொள்சோதி எந்தைதந்தைதந்தைக்கே.
ப – முதற்பாட்டில், ‘ஸர்வாதிகசேஷியான திருவேங்கடமுடையானுக்கு ஸர்வ ப்ரகாரவிசிஷ்டமான சேஷத்ருத்தியைப் பண்ணவேணும்’ என்று ஸ்வஸம்பந்திஜநங்களோடே ஒருப்பட்டுப் பாரிக்கிறார்.
தெழிகுரல் – மஹாத்வநியாம்படி சப்திக்கிற, அருவி – அருவியையுடைய, திருவேங்கடத்து – திருவேங்கடமாகிற திருமலையில் நிலையாலே, எழில் கொள் – அழகையுடைத்தான, சோதி – தேஜோமயவிக்ரஹத்தையுடையனான, எந்தை தந்தை தந்தைக்கு – நம்முடைய குலக்ரமாகதனான நாதனுக்கு, நாம் – (அஸாதாரணசேஷ பூதரான) நாம், ஒழிவில் காலமெல்லாம் – ஒழிவில்லாத காலமெல்லாம், உடனாய் – (ஸர்வதேசத்திலும்) உடனாய், மன்னி-(ஸர்வாவஸ்தையிலும்) பிரியாதுநின்று, வழுஇலா – ஒன்றும்நழுவாதபடி, அடிமை – ஸர்வசேஷத்ருத்திகளையும், செய்ய வேண்டும் – பண்ணவேணும். சேஷத்ருத்தியில் நித்யாபேக்ஷையே சேதநனுக்கு ஸ்வரூபமென்று கருத்து. ‘எழில்கொள்சோதி’யென்று – _அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா_என்கிறபடியே ஸௌந்தர்யரூபையான லக்ஷ்மியோட்டை ஸம்பந்தத்தைச் சொல்லுவாருமுளர். தெழித்தல் – முழங்குதல்.
ஈடு – முதற்பாட்டில் ‘திருவேங்கடமுடையான் திருவடிகளிலே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் எல்லாவடிமைகளும் செய்யவேணும்’ என்கிறார்.
(ஒழிவில் காலமெல்லாம்) முடிவில்லாத காலமெல்லாம்; அநந்தமான காலமெல்லாம் என்றபடி. ‘ஒழிவில் காலமெல்லாமென்று – கீழே கழிந்த காலத்தையுங் கூட்டி அடிமை செய்யப் பாரிக்கிறார்’ என்று இங்ஙனே அதிப்ரஸங்கம் சொல்லுவாரு முண்டு. அதாகிறது – ‘கீழ் கழிந்த காலத்தை மீட்கை’ என்று ஒரு பொருளில்லையிறே. _நோபஜநம் ஸ்மரந்_ என்கிறபடியே கீழ் கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயிறே உள்ளது; _ந மே து3:க2ம்_ இத்யாதி; ஆகையாலே இனிமேலுள்ள காலமெல்லாம் என்றபடி. (உடனாய்) – காலமெல்லாம் வேண்டினவோபாதி தேசாநுபந்தமும் அபேக்ஷிதமாயிருக்கிறது காணும், இவர்க்கு. இளையபெருமாள் படைவீட்டிலும் அடிமை செய்து, வநவாஸத்திலும் அடிமை செய்தாப்போலே. (மன்னி) – ஸர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும், படிக்கம் குத்துவிளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான த்ருத்திகளைப் பண்ணவேணும். இத்தால், ஸர்வாவஸ்தைகளையும் நினைக்கிறது. _ரமமாணா வநே த்ரய:_ என்னக்கடவதிறே. இருவருக்கு உண்டான அநுபவத்திலே மூவரைச் சொல்லுகிறதிறே, அவ்விருவர்க்கும் பரஸ்பரஸம்ஸ்லேஷத்தால் பிறக்கும் ரஸம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே. (ஒழிவில் காலம் இத்யாதி) ஸர்வகாலத்தையும்
ஸர்வதேசத்தையும் ஸர்வாவஸ்த்தையையும் நினைக்கிறது. ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப்புக்கால், _ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்_ என்று இங்ஙனே நெடும்போதெல்லாம் பாடி, மேல்போகமாட்டாதே அத்வளவிலே தலைக்கட்டிப்போவராம். (வழுவிலா அடிமை செய்யவேண்டும்) அடிமையிலொன்றும் ஒருவர்க்கும் கூறுகொடுக்க வொண்௰தாயிற்று. எல்லா அடிமையும் நான் செய்யவேணும். இளைய பெருமாள் பிரியாதே காட்டிலேயுங் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்யவேணும்; ஸ்ரீபரதாழ்வான், படைவீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும். ஸ்ரீபரதாழ்வானைக் கைகேயி *ராஜந்* என்ன, அப்போது அந்த ஸ்வாதந்த்ர்யம் பொறுக்க மாட்டாமே படுகுலைப்பட்டாற்போலே *விலலாப* என்று கூப்பிட்டானிறே; பாரதந்த்ர்யரஸம் அறிவார்க்கு ‘ஸ்வாதந்த்ர்யம் அநர்த்தம்’ என்று தோற்றுமிறே. _ஏபி4ஸ்ச ஸசிவைஸ் ஸார்த்த4ம்’. – தன்னிற்காட்டிலும் கண்குழிவுடையார் இத்தனைபேருண்டாயிற்று. தன்னோடொத்த ஆற்றாமையுடையார் அநேகரைக் கூட்டிக்கொண்டு போந்தான். எனக்கன்றோ, ‘இவன் தம்பி’ என்று ஸ்வாதந்த்ர்யம் பண்ணி அவர்க்குக் கண்ணழிக்கலாவது; இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்யவேணுமே; இவர்கள்தாங்களே கார்யத்தை விசாரித்து அறுதியிட்டு, ‘நீர் இப்படி செய்யும்’ என்று அவர்கள் ஏவினால் அப்படி செய்யவேண்டி வருமிறே அவர்க்கு. அவருடைய வ்யதிரேகத்தில் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில், தனியே போய் அறிவிக்கவுமாமிறே; இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு போனதுக்குக் கருத்தென்? என்னில், – ‘நம் ஒருவர் முகத்துக் கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாதே கண்ணும் கண்ணீருமாயிருப்பார் இத்தனை பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னும் கருத்தாலே. பூசலுக்குப் போவாரைப் போலே யானை குதிரையகப்படக் கொண்டுபோகிறானிறே – அவற்றுக்கும் அத்வாற்றாமை யுண்டாகையாலே. *–ரஸா யாசித:* – என்பேற்றுக்குத் தாம் அபேக்ஷித்துத் தருமவர், நான் என் தலையாலே இரந்தால் மறுப்பரோ? *மயா* – அத்தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ? *ப்4ராது:* – *ப4ஸ்மஸாத் குருதாம் –கீ2* என்னும்படி, தம் பின்பிறந்தவனல்லே? னோ நான்? என் தம்பிமார்க்கு உதவாத என்னுடைமையை அக்நிக்கு விருந்திட்டேனென்றாரிறே. *யத்3விநா* இத்யாதி. *–ஷ்யஸ்ய* – ப்ராதாவாகக் கூறுகொண்டு முடிசூடியிருக்குமவனோ நான்? அஶேஷரஹஸ்யமும் தம்மோடேயன்றோ அதிகரித்தது? *தா3ஸஸ்ய* – –ஷ்யனாய் க்ரயவிக்ரயார்ஹனன்றிக்கேயிருந்தேனோ? ஆனபின்பு நான் அபேக்ஷித்த காரியத்தை மறுப்பரோ? இதிறே கைங்கர்யத்தில் சாபலமுடையார் இருக்கும்படி. (வழுவிலா அடிமை) ஓரடிமை குறையிலும் உண்டது உருக்காட்டாதாயிற்று இவர்க்கு. (செய்ய) முன்பும் உண்டிறே இக்கைங்கர்யமநோரதம்; இப்போது இவ்வளவால் போராது: அநுஷ்ட்டாந பர்யந்தமாகவேணும். (அடிமை செய்ய வேண்டும்) – கைங்கர்யமநோரதமே பிடித்து உத்தேஸ்யமாயிருக்கிறதாயிற்று இவர்க்கு. ‘க்ஷுத்ரவிஷயாநுபவம் பண்ணவேணும்’ என்று புக்கால்,
இரண்டுதலைக்குமொக்க ரஸமான போகத்துக்கு ஒருதலையிலே த்ரவ்யத்தை நியமித்து, போககாலம் வருமளவும் லீலையாலே போதுபோக்கி போககாலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவர்கள்; இனி, ‘ஸ்வர்க்காநுபவம் பண்ணவேணும்’ என்று புக்கால், *ஸ்வர்க்கே3பி பாதபீ4தஸ்ய க்ஷயிஷ்ணோர்நாஸ்தி நிர்த்ருதி:* என்கிறபடியே அருகே சிலர் நரகாநுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அநுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்; இனித்தான் அத்விருப்புக்கு அடியான புண்யமானது சாலிலெடுத்த நீர்போலே க்ஷயித்தவாறே _த்4வம்ஸ_என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவர்கள்; இப்படி ஸ்வரூபத்துக்கு அநநுரூபமாய் அஹங்கார மமகாரங்களடியாகவரும் இத்வநுபவங்கள்போலன்றிக்கே ஸ்வரூபத்தோடே சேர்ந்ததுமாய், அடிமைகொள்ளுகிறவனும் நித்யனாய், அடிமை செய்கிறவனும் நித்யனாய், காலமும் நித்யமாய், தேசமும் நித்யமாய், ஒருகாலமும் மீளவேண்டாதபடி அபுநராத்ருத்திலக்ஷணமோக்ஷமாய், க்ஷுத்ரவிஷயாநுபவம் போலே து:க்கமிஸ்ரமாயிருக்கையன்றிக்கே நிரதிசயஸுகமாயிருப்பதொன்றிறே இது. (நாம்) – தம் திருவுள்ளத்தையுங்கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்; அன்றிக்கே, ‘கேசவன்தமர்’(2-7)க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே, திருவுள்ளம்போலேயிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு ‘நாம்’ என்கிறாராதல். (தெழி குரல் இத்யாதி) – அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றிக்கே, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்; இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறாரித்தனையிறே இவர்; அவன் தனக்குக் கலவிருக்கையான ‘கலங்காப் பெருநகரத்தை’ (மூன்.திரு. 51) விட்டு இத்வளவும்வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்ட்டாநத்தாலே தெரிவிக்கிறானிறே தன் பாரிப்பை. (தெழிகுரல் இத்யாதி) கம்பீரமான த்வநியையுடைத்தான அருவியையுடைய – திருவருவியின் த்வநியுங்கூட உபாதேயமா யிருக்கிறதாயிற்று இவர்க்கு, அந்நிலத்திலே யுள்ளதொன்றாகையாலே. ‘கைங்கர்யருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலேயிருக்கிறதாயிற்று, இவர்க்கு இத்த்வநி. இவர்க்கு இந்தத் திருவருவியின் த்வநியுங்கூட உத்தேச்யமாகச் சொல்ல வேணுமோ?’ _சிலைக்கைவேடர் தெழிப்பறாத_ (திருமொழி 1-7-2) என்று அங்குத்தைத் திருவேடர் பறிக்கிற போதை ஆரவாரமும் அகப்பட உத்தேச்யமாயிருக்கச் செய்தே. திருவேங்கடயாத்ரை போகிறவர்களைப் பறிக்கிற வேடருடைய ஆரவாரமும் உத்தேச்யமாயிருக்கிறதிறே, அந்நிலத்திலுள்ள தாகையாலே. (திருவேங்கடத்து எழில்கொள் சோதி) – ‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது’ என்று அவன் வந்து வர்த்திக்கிற தேசமாயிற்று. இச்சரீரஸம்பந்தமற்று அர்ச்சிராதிமார்க்கத்தாலே ஒரு தேசவிசேஷத்திலே போனால் இவன் செய்யக்கடவ அடிமையை இந்நிலத்தில் இவனுக்குச் செய்யலாம்படி அவன் வந்து வர்த்திக்கிற தேசமிறே. (எழில்கொள் சோதி) – அஸந்நிஹிதனேயாகிலும் மேல்
விழவேண்டும்படியாயிற்று, வடிவழகு இருப்பது. (வேங்கடத்தெழில்கொள்சோதி) ‘வானார்சோதி’ (1-5-5)யையும் ‘நீலாழிச்சோதி’ (பெரிய.திருவ.34)யையும் த்யாவர்த்திக்கிறது; ‘வானார்சோதி’ – பகல்விளக்குப் பட்டிருக்கும்; ‘நீலாழிச்சோதி’ – கடல்கொண்டு கிடக்கும்’; – ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ குன்றத்து இட்ட விளக்காயிருக்கும்; *வேங்கடம் மேய விளக்கிறே (திருமொழி 4-7-5). அந்நிலமிதியாலே அழகு நிறம்பெற்றபடி. (எந்தை) – விரூபனேயாகிலும் விடவொண்௰தபடியாயிற்று, ப்ராப்தியிருப்பது. ஸௌலப்யத்தாலும் அழகாலும் தம்மைத் தோற்பித்தபடியென்றுமாம். (தந்தை தந்தைக்கே) பரமசேஷியென்றபடி.
இப்பாட்டால் ப்ராப்யப்ரதாநமான திருமந்த்ரத்தி லர்த்தத்தை அருளிச் செய்கிறார். ‘ஒழிவில் காலமெல்லாமுடனாய்மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டு’மென்கிற இத்தால் – சதுர்த்தியில் ப்ரார்த்தநையைச் சொல்லுகிறது; ‘நாம்’ என்கிற இடம் – ப்ரணவப்ரதிபாத்யனான இவனுடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது; ‘இது சப்தஸ்வபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை; ‘தெழிகுரல்’ இத்யாதியால் – நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்கிறார்; ப்ராப்தவிஷயத்தில்பண்ணும் கைங்கர்யமிறே ப்ராப்யமாவது; இனி, ஸௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்வமும் எல்லாம் – நாராயண சப்தத்துக்கு அர்த்தமிறே.
இரண்டாம் பாட்டு
எந்தைதந்தைதந்தை தந்தைதந்தைக்கும்
முந்தை* வானவர் வானவர்கோனொடும்*
சிந்துபூமகிழும் திருவேங்கடத்து*
அந்தமில்புகழ்க் காரெழிலண்ணலே.
ப – அநந்தரம், இப்படி ஸர்வாதிகசேஷியினுடைய குணவிக்ரஹாதி வைலக்ஷண்யத்தை அருளிச்செய்கிறார்.
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை – நமக்கு உத்பாதகபாரம்பர்யத்தில் ப்ரதமோத்பாதகனான பந்தத்தையுடையவன், வானவர்-பரமபதவாஸிகள், வானவர்கோனொடும் – (தங்களுக்கு நிர்வாஹகரான) ஸேநைமுதலியாரோடே, சிந்து – தூவின, பூ – விடுபூக்கள், மகிழும் – (ஸ்வஸ்பர்சத்தாலே) விகஸிதமாம்படியான, திருவேங்கடத்து – திருமலையில் வாஸத்தாலே, அந்தம் இல் – முடிவு இல்லாத, புகழ் – குணப்ரதையையுடையனாய், கார் எழில் – ஸ்யாமமான வடிவழகையுடைய, அண்ணல் – ஸர்வாதிகன். குணத்தாலும் அழகாலும் ஸர்வாதிகனென்று கருத்து. கார் – மேகமுமாம்.
ஈடு – இரண்டாம் பாட்டு. ‘பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறவேணும் என்று மநோரதியாநின்றீர். அது பின்னை இஸ்ஶரீரஸம்பந்தமற்று அர்ச்சிராதிமார்க்கத்தாலே ஒரு தேஶவிஶேஷத்திலே போனால் பெறுமதொன்றிறே’ என்ன, ‘அங்குள்ளாரெல்லாரும் வந்து அடிமை செய்கிறது இந்நிலத்திலே யாகையாலே, இங்கே பெறக் குறையில்லை’ என்கிறார்.
(எந்தை இத்யாதி) ‘அடியா ரடியார்தம் மடியா ரடியார்தமக் கடியா ரடியார்தம் மடி யாரடியோங்கள்’ (3-7-10) என்கிறபடியே ஸ்வஸ்வரூபத்தை நிரூபிக்கப் புக்கால் அத்தலையே பிடித்து இத்வளவும் வர நிரூபிக்குமாபோலேயாயிற்று, பரஸ்வரூபத்தை நிரூபிக்கப்புக்காலும் இத்தலையே பிடித்து அத்வளவும் செல்ல நிரூபிக்கும்படி. *தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம்* என்னக்கடவதிறே. (வானவர் இத்யாதி) – வானவருண்டு – நித்யஸூரிகள்; வானவர்கோனுண்டு – ஸ்ரீஸேநாபதியாழ்வான், அவனோடேகூட அப்ராக்ருதமான புஷ்பங்களைக்கொண்டு, தங்களுக்கும் அவ்வருகானவன் ‘கானமும் வானரமு’மான (நான்.திரு.47) இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற ஸௌசீல்ய குணத்தை அநுஸந்தித்து சிதிலராய்ப் பின்னை க்ரமத்திலே பரிமாற மாட்டாதே அடைவுகெட்டுச் சிந்தாநிற்பர்களாயிற்று. இங்குள்ளார் அங்கே போய் மேன்மையைக்கண்டு அநந்யார்ஹராமா போலேயாயிற்று, அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மைகண்டு ஈடுபடும்படி; மேன்மை யநுபவிக்கையாவது, அந்நிலத்திலே; நீர்மையநுபவிக்கையாவது – இந்நிலத்திலேயிறே. (சிந்துபூமகிழும்) கொம்பில் நின்றபோதையிற் காட்டிலும், நிலத்திலே விழுந்தபோது செத்விபெற்று விகஸிதமாகா நிற்குமாயிற்று நிலஸ்வபாவத்தாலே. (அந்தமில் புகழ்) ஸ்ரீவைகுண்டத்தில் புகழுக்கு அந்தமுண்டு போலே. அப்ராக்ருதமான விக்ரஹத்தோடே அத்வடிவையநுபவிக்கப் பாங்கான கரணங்களையுடையராய்க்கொண்டு கிட்டினார்க்கு அநுபவயோக்யனா யிருக்கையாலே புகழ் ஸாவதியாயிருக்கும் அங்கு; இங்கு, ‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமுமான’வற்றுக்குத் (நான்.திரு.47) தன்னைக் கொடுத்துக்கொண்டு நிற்கையாலே, புகழ்க்கு அந்தமில்லையிறே. ஆக, *ஸமஸ்தகல்யாண கு3ணாத்மகோஸௌ* என்றபடி. (காரெழில்) – (ஸ்யாமளமான வடிவழகு) நிர்க்குணனானாலும் விடவொண்௰ததாயிற்று, வடிவழகு இருப்பது. (அண்ணல்) வடிவழகில்லையானாலும் விடவொண்ணாத படியாயிற்று, ப்ராப்தி இருப்பது. ‘வானவர் வானவர்கோனொடும் சிந்துபூமகிழுந் திருவேங்கடத்து – அந்தமில்புகழ்க் காரெழிலண்ணல் – எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை;’ ஆன பின்பு, அங்கே ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்கிறார்.
மூன்றாம் பாட்டு
அண்ணல்மாயன் அணிகொள்செந்தாமரைக்
கண்ணன்* செங்கனிவாய்க் கருமாணிக்கம்*
தெண்ணிறைசுனைநீர்த் திருவேங்கடத்து*
எண்ணில்தொல்புகழ் வானவரீசனே.
ப – அநந்தரம், இப்படி விக்ரஹாதி வைலக்ஷண்யத்தை உடையவன் நித்யஸூரிஸேத்யன் என்கிறார்.
அண்ணல் – வடிவுதன்னிலே ஸ்வாமியென்று தோற்றும்படியாய், மாயன் – (ததநுரூபமான) ஆஸ்சர்யகுணவிபூதியுக்தனாய், அணி – (அந்த ஐஸ்வர்ய ஸூசகமான) அழகை, கொள் – உடைய, செந்தாமரைக்கண்ணன் – புண்டரீகாக்ஷனாய், (அப்பார்வைக்குத் தோற்றாரை ஸாந்த்வநம்பண்ணுகைக்கு உறுப்பாய்), செம் – சிவந்த, கனி – கனிபோன்ற, வாய் – திருப்பவளத்தையுடையனாய், கருமாணிக்கம் – (இவ்வவயவசோபையிலே அகப்பட்டாரை அநுபவிப்பிக்கைக்கு) நீலரத்நம்போலே உஜ்ஜ்வலமான விக்ரஹத்தையுடையவன்; தெள் – (அவன்தன் நிறம்போலே) தெளிந்து ப்ரகாசமான, நிறம்-நிறத்தையுடைய, சுனைநீர் – சுனைநீரையுடைத்தான, திருவேங்கடத்து-திருமலையிலே நிற்கையாலே, எண்இல் – எண்ணிறந்து, தொல் – ஸ்வாபாவிகமான, புகழ் – குணப்ரதையையுடையவனாய், வானவர் – (அப்புகழையநுபவிக்க வந்த) பரமபதவாஸிகளுக்கு, ஈசன் – (போகப்ரதாநம்பண்ணி நிற்கிற ஏற்றத்தையுடைய) ஸ்வாமியானவன். அண்ணல் – குறிஞ்சி நிலத்துத் தலைவனாகவுமாம்.
ஈடு – மூன்றாம் பாட்டு. ‘நாம் இங்ஙனே அடிமை செய்ய வேணும் என்று மநோ ரதிக்கும் இதுவேயோ வேண்டுவது? அவன்தான் நமக்கு அநுபவஸம்ருத்தியைத் தருமோ?’ என்ன, ‘நிரபேக்ஷரானவர்களுக்குத் தன்னைக் கொடுத்துக்கொண் டிருக்கிறவன், ஸாபேக்ஷரான நமக்குத் தரச் சொல்லவேணுமோ?’ என்கிறார்.
(அண்ணல்) குறிஞ்சி நிலத்தில் தலைமகன் என்னுதல், ஸர்வஸ்வாமி என்னுதல். (மாயன்) ஸௌந்தர்ய சீலாதிகளால் ஆஸ்சர்யபூதன். அவற்றில் ஒரு அம்மான்பொடி சொல்லிக் காணும் என்ன, (அணிகொள் செந்தாமரைக் கண்ணன்) ‘இக்கண்ணழகுடையவனுக்கு வேறொரு ஒப்பனை வேண்டா’ என்னும்படியிருப்பதாய், தனக்குத்தானே ஆபரணமாய், விகாஸம், செவ்வி, குளிர்த்தி, நாற்றங்களினாலே தாமரையை ஒருவகைக்கு ஒப்பாம்படி சொல்லலாயிருக்கிற கண்ணழகையுடையவன். முதலுறவுபண்ணுங் கண்ணைச் சொல்லுகிறது. (செங்கனிவாய்) அந்நோக்குக்குத் தப்பினார்க்கும் தப்பவொண்ணாதபடியாயிற்று ஸ்மிதம் இருப்பது. முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது. (கருமாணிக்கம்) – அந்த ஸ்மிதத்திலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லுகிறது. (தெள்நிறை சுனைநீர்த் திருவேங்கடத்து) தெளிந்துநிறைந்திருந்துள்ள நீரையுடைய சுனையையுடைய திருமலையிலே. வடிவேயன்றிக்கே திருமலையும் ஸ்ரமஹரமாயிருக்கிறபடி. _அணிகொள் செந்தாமரைக்கண்ணன்_ என்றத்தோடு, _செங்கனிவாய்_ என்றத்தோடு, _கருமாணிக்கம்_ என்றத்தோடு, _தெண்ணிறை சுனைநீர்_ என்றத்தோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு, அதுவும் அந்நிலத்திலேயுள்ளதொன்றாகையாலே. (எண்ணில் தொல்புகழ்) *யதா ரத்நாநி ஜலதே4ரஸங்க்யேயாநி புத்ரக ததா2 கு3ணா ஹ்யநந்தஸ்ய* என்கிறபடியே, அஸங்க்யேயமாய் ஸ்வாபாவிகமான குணங்களையுடைய. (வானவரீசனே) – குணங்களை அநுபவிப்பித்து நித்யஸூரிகளுடைய ஸத்தையை நிர்வஹித்துக்கொண்டு போருகிறவன். கண்ணழிவற்ற ருசியுடையாரைத் தன்னை அநுபவிப்பிக்கு மென்கை.
நான்காம் பாட்டு
ஈசன்வானவர்க்கென்பன் என்றால்* அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறைவொன்றுமிலேன்* என்கண்
பாசம்வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே.
ப – அநந்தரம், நித்யஸூரிஸேத்யத்வமாகிற ஆதிக்யம் – என்னை அங்கீகரித்த அஸ்ஸீலத்தையுடையவனுக்குத் தேஜஸ்ஸோ? என்கிறார்.
வானவர்க்கு – நித்யஸூரிகளுக்கு, ஈசன் – நிர்வாஹகன், என்பன் – என்று சொல்லாநிற்பன்; என்றால் – இப்படிச்சொன்னால், நீசனேன்-(ஹேயகுணங்களால் பூர்ணனாகையாலே) தண்ணியனாய், நிறைவு – (ஸத்குணங்களாலே வரும்) பூர்த்தி, ஒன்றும்இலேன் – ஒன்றுமின்றியேயிருக்கையாலே, என்கண் – (தன்னுடைய ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநத்வத்துக்கு ப்ரதிபட ஸ்வபாவனான) என்பக்கலிலே, பாசம் – நிரவதிகஸங்கத்தை, வைத்த – வைத்து, பரஞ்சுடர் – (அத்தாலே) நிரதிசயௌஜ்ஜ்வல்யவி–ஷ்டமான, சோதிக்கு – தேஜோமய தித்யவிக்ரஹயுக்தனாய், திருவேங்கடத்தானுக்கு – (இந்நீர்மைக்குச் சிரமஞ்செய்த) திருமலையில் நிலையையுடையவனானவனுக்கு, அது – (வானவர்க்கு ஈசனென்ற) அது, தேசமோ – தேஜஸ்ஸோ?
ஈடு – நாலாம் பாட்டு. ‘நித்யஸூரிகளுக்குத் தன்னைக்கொடுத்தவன்’ என்றார் கீழ்; _அத்யந்தஹேயனான என்பக்கலிலே ஸங்கத்தைப் பண்ணினவனுக்கு ‘நித்யஸூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தான்’ என்னுமிது ஓர் ஏற்றமோ?_ என்கிறார்.
(ஈசன்வானவர்க்கென்பன்) -நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனென்று சொன்னேன். (என்றால்) – நான் இப்படி சொன்னால், (அதுதேசமோ திருவேங்கடத்தானுக்கு) திருமலையிலே வந்து ஸுலபனாய் நிற்கிறவனுக்கு _அயர்வறுமமரர்களதிபதி_ (1-1-1) என்றிருக்கிற இது ஓர் ஏற்றமாயிற்றதோ? ஸ்ரீவைகுண்டநாதனுக்(கிறே அது ஏற்றம், திருவேங்கடத்தானுக்)கு ஏற்றஞ் சொல்லுகிறேனாக ப்ரமித்தேன்; ‘கானமும் வானரமும் வேடுமானார்’ (நான்.திரு.47) ஓலக்கங்கொடுக்க நிற்கிறவனுக்கு நித்யஸூரிகள் ஓலக்கங்கொடுக்க நிற்கிறது ஓர் ஏற்றமோ?, பரமபதத்தைவிட்டு இங்கேவந்து இந்நிலத்தையிட்டு நிரூபிக்க வேண்டும்படியிருக்கிறவனுக்கு. முடிசூடி ராஜ்யம் பண்ணுமவனுக்கு ஏற்றஞ் சொல்லும்போது, தட்டியிலிருந்தபோதைப்படியையிட்டு ஏற்றஞ்சொல்ல வொண்ணாதே. திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ் சொல்லலாவது பின்னை நீர் ஏதாக நினைத்திருந்தீர்? என்ன, – ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ் சுடர்ச் சோதி’ என்ன வேண்டாவோ? இதுகிடக்க, அத்தையோ சொல்லுவது? (நீசனேன் நிறைவொன்றுமிலேன்) நீசத்வத்தையும், நிறைவில்லாமையையுங் கூட்டி இங்ஙனே ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று. *அமர்யாத3:* – ‘ந்ருபசு:’ என்னுமாபோலே, ஜநநிக்கும் மற்றொன்றுக்கும் வாசிவையாதே பரிமாறும் ஜந்மமிறே. சாஸ்த்ரங்கள் ‘ஆகாது’ என்று நிஷேதித்தவற்றை அநுஷ்ட்டித்து, அவற்றில்நின்றும் மீளமாட்டாதே போந்தேன். *க்ஷுத்3ர:* – ‘கெடுவாய், சாஸ்த்ர மர்யாதையைத் தப்பி நிற்க ஆகாதுகாண்’ என்று ஒருவன் சொன்னால், அத்தைக் கைக்கொள்ளுந்தனை நெஞ்சிலளவில்லாதானொருவன். *சலமதி:* – அதவா – சொல்லு வாரையும் பெற்று, அது நெஞ்சிலே படவும் பெற்றதாகில் அதுதன்னை விஸ்வஸிக்கப்படாது; _நின்றவாநில்லா நெஞ்சினையுடையேன்_ (திருமொழி 1-1-4) என்னுமாபோலே. *அஸூயாப்ரஸவபூ:4* – ஹிதஞ்சொன்னவனுடைய உத்கர்ஷமாயிற்றுப் பொறாதது: *க்ருதக்4ந:* – உபகரித்த விஷயத்திலே அத்தை இல்லைசெய்து அபகாரங்களைப் பண்ணிப்போந்தேன். *து3ர்மாநீ* – அபகாரங்களைப் பண்ணிப் போருகையன்றிக்கே, ஹிதஞ்சொன்னவர்களுக்கும் என்னை மேலாக நினைத்துப் போந்தேன். *ஸ்மரபரவச:* – அறிவுடையார்க்கு மேலாக நினைத்திருப்பது, காமுகர்க்குக் கீழாக நினைத்திருப்பது. *வஞ்சநபர:* – புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு ஸ்த்ரீ பக்கலிலே ஒதுக்குமாயிற்று; அங்கே திரண்டவாறே அத்விடந்தன்னில் நின்றும் அபஹரிக்குமாயிற்று. *ந்ருசம்ஸ:* – ‘நம்மை விஸ்வஸித்த விஷயத்திலே க்ருத்ரிமத்தைப் பண்ணினோம்’ என்று இரக்கமுமின்றிக்கேயிருக்கை. *பாபிஷ்ட2:* – இதுதான் உருவச்செல்லும்படியாயிற்று மேன்மேலெனக் காரியம் பார்ப்பது; பாபத்திலேயாயிற்று ஊன்ற அடியிட்டிருப்பது. ‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததே யாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்’ என்னுமாம் அநந்தாழ்வான். (நீசனேன் நிறைவொன்று மிலேன்) அநாத்மகுணமே என்பக்கலிலே யுள்ளது. ஆத்மகுணங்களொன்றுமில்லை. ‘என் தண்மையும் நிறைவில்லாமையுமிறே நான் இவ்வார்த்தை சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூரரையர். (இவ்வார்த்தை என்றது _ஈசன் வானவர்க்கென்பன்_ என்றத்தை) (என் கண் பாசம் வைத்த) என்பக்கலிலே பாசத்தை வைத்த. நித்யஸூரிகளுக்கு ஈசனாயிருந்தான், என் பக்கலிலே ஸங்கத்தைப் பண்ணினான். அவர்கள் ஸத்தையுண்டாகைக்காக அவர்களோடே கலந்தான், தன்ஸத்தை பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான். ப்ராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல்சீரைக்கும் ஜீவநம் வைப்பாரோபாதி அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு என்கிறார். அன்றியே, _எனக்குத்
தன்பக்கலிலே ஸங்கமுண்டாம்படி பண்ணினான் என்கிறார்-என்று நிர்வஹிப்பாரு முண்டு_ என்று அருளிச் செய்வர். அதாவது, (என்கண் பாசம் வைத்த) – என்னிடத்திலே ஸ்வவிஷயபாசத்தையுண்டாக்கினானென்றபடி. (பரஞ்சுடர்ச் சோதிக்கே) அஹ்ருதயமாயிருக்கச் செய்தே மனிச்சுக்காகக் கலந்தானாயிருக்கையன்றிக்கே, ஸஹ்ருதயமாகக்கலந்தானென்னுமிடந் தோற்றாநின்றதாயிற்று வடிவிற்பிறந்த புகர்; உஜ்ஜ்வலனாயிராநின்றான். கலந்த பின்பு முன்பில்லாத புகரெல்லாம் உண்டாயிராநின்றது வடிவிலே. பிராட்டியோடே கலந்தாப்போலே இராநின்றான்.
ஐந்தாம் பாட்டு
சோதியாகி எல்லாவுலகும்தொழும்*
ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ?*
வேதியர்முழுவேதத் தமுதத்தை*
தீதில்சீர்த் திருவேங்டத்தானையே.
ப – அநந்தரம், சீலவானென்கிற இவ்வளவோ? அந்த —சீலத்தோடேநிரதிசய போக்யபூதனானவனுக்கு ஸர்வேஸ்வரனென்றால் பெருமையோ? என்கிறார்.
வேதியர் – வைதிகருடைய, முழு வேதத்து – ஸமஸ்தவேதங்களிலும், (_ஆநந்தோ3 ப்3ரஹ்ம_, _ரஸோ வை ஸ:_ என்று ப்ரதிபாதிக்கப்பட்ட), அமுதத்தை – போக்யதாதிசயத்தை உடையனாய், தீது – (போக்தாக்களுடைய யோக்யதையைப் பார்த்து அநுபவிப்பிக்கையாகிற) தீது, இல் – இன்றியே, சீர் – (கானமும் வானரமும் வேடுமான தாழ்ந்தாரை அநுபவிப்பிக்கும்) குணத்தையுடையனான, திருவேங்கடத்தானை – திருவேங்கடமுடையானை, சோதியாகி – உஜ்ஜ்வலவிக்ரஹ விசிஷ்டனாய்க்கொண்டு, எல்லாவுலகும் – (உத்கர்ஷ அபகர்ஷ விபாகமற) எல்லாரும், தொழும் – ஆஸ்ரயிக்கும் படியாய், ஆதி – ஸமஸ்தகாரணபூதனான, மூர்த்தி – ஸர்வேஸ்வரன், என்றால் – என்றால், அளவாகுமோ – பெருமையோ?
மேன்மையும் ஆஸ்ரயணீயத்வமும் நீர்மையோடு கூடின போக்யதைக்குத் தகுதியல்லவென்று கருத்து. அளவு – பெருமை.
ஈடு – அஞ்சாம்பாட்டு. ‘நித்யஸூரிகளுக்கும் தன்னைக் கொடுத்தானென்றது ஓரேற்றமோ எனக்குத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார் கீழ்; ‘எனக்குத் தன்னைத் தந்தானென்கிற இதுதான் ஓரேற்றமோ, என்னிலும் தாழ நின்றாரைத் தேடிப் பெறாதே யிருக்கிறவனுக்கு?’ என்கிறார் இதில்.
(சோதியாகி) நிரவதிக தேஜோரூபமான திருமேனியையுடையனாய். *நீலதோயத3மத்4 யஸ்தா2* என்னா நிற்கச் செய்தே, *பீதாபா4* என்கிறது. அதாவது ஸ்ரமஹரமான வடிவைப் புகர் முட்டாக்கிட்டிருக்குமென்கையும், அந்தப்புகர்தன்னையே ஸ்ரமஹரமான வடிவுதான் க்ரஸித்துக்கொண்டிருக்குமென்கையும். இத்தால், ஒன்றையொன்று விடாதே இரண்டும் நிரபேக்ஷமென்கை. (*பீதாபா4* என்றது ஸ்வதேஜஸ்ஸை விக்ரஹந்தான் பாநம் பண்ணிக்கொண்டிருக்குமென்றபடி.) *தேஜஸாம் ராசிமூர்ஜிதம்* என்னக்கடவதிறே. (எல்லாவுலகுந் தொழும் ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ) இப்படி சொன்னால்தான் அவனுக்கு ஏற்றமாகப்போருமோ? ‘எல்லாவுலகுந்தொழும் ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ’ என்கைக்கு, ‘எல்லாவுலகுந் தொழும் ஆதிமூர்த்தி’ என்றாரோ பின்னை என்னில்? – ‘எண்ணில் தொல்புகழ் வானவரீசன்’ (3-3-3) என்னா, ஈசன் வானவர்க்கென்பன்’
(3-3-4) என்று அநுபாஷித்தவோபாதி, இங்கும் அப்படி சொன்னாரோ? என்னில்; – விழுக்காட்டாலே சொன்னார். எங்ஙனே சொன்னபடி? என்னில், – கீழே, _நீசனேன் நிறைவொன்றுமிலேன்_ (3-3-4) என்றாரே தம்மை; தாழ்வுக்குத் தம்மை எல்லாரிலும் இவ்வருகாகச் சொன்னாரே; தாம் தொழுதபோதே எல்லா லோகங்களும் விழுக் காட்டாலே தொழுததாயிற்று; ‘எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’ என்றால் ‘கீழ்ப்படி அமிழ்ந்தது’ என்று சொல்லவேண்டாவிறே. (தொழும்) ஸ*யதார்ஹம் கேஶவே த்ருத்தி மவஶா: ப்ரதிபேதிரே* – ‘தொழக்கடவோமல்லோம்’ என்று ஸங்கல்பித்திருந்தவர்களும் தொழுதார்களாயிற்று, கண்டவாறே. (ஆதிமூர்த்தி) ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ்யமென்னா, ஜிஜ்ஞாஸ்யமான ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் ஏது? என்ன, ஜகஜ்ஜந்மாதிகாரணமென்றதிறே. (காரணவாக்யங்கள் ஒருங்கவிட்டது எங்ஙனே? என்னில்;-*யதோவா இமாநி பூதாநி ஜாயந்தேசிதத் விஜிஜ்ஞாஸஸ்வ-தத்ப்ரஹ்ம* என்று) ஆஸ்ரயணீயவஸ்து ஏது? என்ன, *காரணந்து த்யேய:*, *யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம், முமுக்ஷுர்வைஸ்ஶரணமஹம் ப்ரபத்யே* என்று ஜகத்காரணவஸ்து என்றதிறே; அப்படியே, கீழ் ‘எல்லாவுலகுந்தொழு’மென்று ஆஸ்ரயணத்தைச் சொல்லி, ‘ஆதி மூர்த்தி’யென்று ஆஸ்ரணீயவஸ்துவைச் சொல்லிற்றிறே. ‘அளவாகா’தென்று சொல்லும்போதும் சிறிது இடஞ்சொல்லிப் பின்னை *யதோ வாசோ நிவர்த்தந்தே* என்னும் வேதம் வேண்டாவோ? (வேதியர் முழுவேதத்தமுதத்தை) *ஸாஹி ஸ்ரீரம்ருதா ஸதாம்* என்கிறபடியே வேத3த4நரான ப்ராஹ்மணருடைய எல்லா வேதங்களாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட போக்யதா ப்ரகர்ஷத்தையுடையவனை. *ஸர்வே வேதா யத்பதமாமநந்தி*, *ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி*, *வேதைஸ்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:* என்கிறபடியே எல்லா வேதங்களாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற ஆநந்த குணத்தையுடையவனை: *ஆநந்தோ ப்ரஹ்ம*, *ரஸோ வை ஸ:* என்னக்கடவதிறே. (தீதில்சீர்த் திருவேங்கடத்தானையே), தீதென்று-குற்றம். இல்லென்று-இல்லாமை: குற்றமற்ற குணங்களையுடையவனை. விஷயீகரிக்குமிடத்தில் ‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்னும் குற்றமின்றிக்கேயிருக்கை. கீழ் _எல்லாவுலகுந்தொழு மாதிமூர்த்தி யென்றாலளவாகுமோ_ என்றதிற் காட்டில் ஏற்றமாகச் சொன்ன அர்த்தம் என்? என்னில்,-_ ஈசன் வானவர்க்கென்பன்_ (3-3-4) என்றதிற்காட்டில், _என்கண் பாசம்வைத்த_
(3-3-4) என்னுமிடத்தில் ஏற்றங்கண்டோம்; அத்வோபாதி ‘எல்லாவுலகுந்தொழும்’ என்றதிற் காட்டில் ‘தீதில்சீர்’ என்றவிடத்தில் ஏற்றமென்? என்னில்; என்னை விஷயீகரித்தானென்ற இது ஓர் ஏற்றமோ? என்னில் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினிவிட்டு *ஆசயா யதிவா ராம:* என்கிறபடியே அவஸரப்ரதீக்ஷனாயிருக்கிறவனுக்கு. _நீசனேன் நிறைவொன்றுமிலேன்_ (3-3-4) என்ற இவருடைய குற்றத்தைக் குணமாகக்கொண்டு ஸ்வீகரித்து, இவருக்கு அத்வருகு குற்றமுடையாரைத் தேடிக் கிடையாமையாலே நிற்கிறானாயிற்று. ரக்ஷகனுக்கு ரக்ஷ்யவர்க்கம் பெற்றவளவிலே த்ருப்திவருமது ரக்ஷகத்வத்துக்குக் குற்றமாமிறே; *ஸந்துஷ்ட: க்ஷத்ரியஸ் ததா*. சீருக்குத்தீதாவது -ஆஸ்ரயிப்பார் குணாகுண நிரூபணம் பண்ணுகை.
ஆறாம் பாட்டு
வேங்கடங்கள் மெய்ம்மேல்வினைமுற்றவும்*
தாங்கள்தங்கட்கு நல்லனவேசெய்வார்*
வேங்கடத்துறைவார்க்கு நமவென்ன
லாங்கடமை* அதுசுமந்தார்கட்கே.
ப – அநந்தரம், அநிஷ்டநித்ருத்திபூர்வகமான பகவதநுபவபோகத்துக்கு உறுப்பான ஆஸ்ரயணஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.
வேங்கடத்து – திருமலையிலே, உறைவார்க்கு – (ஸர்வஸமாஸ்ரயணீயனாம்படி வந்து) நித்யவாஸம்பண்ணுகிற ஸ்வாமிக்கு (அநந்யார்ஹமாம்படி), நமவென்னலாம் – (ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியுக்தமான அத்யந்தபாரதந்த்ர்யஸூசகமாய், ஸுலபமாய் ஸ்வரூப ப்ராப்தமான) நமோவாசகமாகிற, அது கடமை – (_பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம_ என்று ஸ்ருதிஸித்தமான) அந்த த்யாபாரத்தை, சுமந்தார்கட்கு – (அதிகாரவிசேஷத்யோதகமாம்படி தங்கள் தலையிலே) சுமந்தவர்களுக்கு, கடங்கள் – (அநுபவவிநாஸ்யமாம்படி) ருணரூபமான பூர்வார்ஜிதபாபங்கள், மேல்வினை-(ஆஸ்ரயணாநந்தரபா4வியான) உத்தராகங்கள், முற்றவும்வேம் – (‘தீயினில் தூசாகும்’ என்கிறபடியே) தக்தங்களாம்; மெய் -(இது நிர்த்தோஷவேதாந்தஸித்த மாகையாலே) ஸத்யம்; (இப்படி அநிஷ்டம் ஸ்வயமேவ நித்ருத்தமாதலால்), தாங்கள் -(ஆஸ்ரிதரான) தாங்கள், தங்கட்கு – தங்கள் ஸ்வரூபத்துக்கு, நல்லனவே – இனிமையை விளைப்பதான பகவத்ஸ்வரூபாத்யநுபவத்தையே, செய்வார் – செய்வார்கள். ‘கடம்’ என்று ருணத்ரயத்தையும், ‘மெய்ம்மேல்வினை’ என்று – தேஹாநுபந்திகர்மங்களையுஞ் சொல்லுவர். உத்தராகத்தை ‘வேமெ’ன்றது – பலப்ரரோஹமில்லாத ஸாம்யத்தாலே; ‘சுமந்தா’ரென்றது – ‘அஞ்சலிபரம்’ என்னுமாபோலே, <ஸ்வர ஹ்ருதயத்தாலே கனத்திருக்கை.
ஈடு – ஆறாம் பாட்டு. கீழ் (3-3-1) திருமந்த்ரார்த்தத்தை அருளிச் செய்தார்; அதிலே அருளிச் செய்யாததோரர்த்த முண்டிறே நமஸ்சப்தார்த்தம். (அதாவது – அவித்யாதிகளும் கழிகை) அத்தை அருளிச் செய்கிறார். ‘அவன் ரக்ஷ்யவர்க்கத்திலே பெற்றவளவால் பர்யாப்தனன்றிக்கேயிருந்தாலும், நாம் அபிநிவிஷ்டரானாலும், சரீரஸம்பந்த நிபந்தநமாக அநாதிகாலம் நாம் பண்ணிவைத்த பகவத்ப்ராப்தி ப்ரதிபந்தக கர்மங்கள் செய்வதென்?’ என்ன, ‘நாம் இதிலே துணியவே அவை யெல்லாம் தன்னடையே நசிக்கு’ மென்கிறார்.
(வேங்கடங்கள்) கடமென்று – கடன் என்றபடி. கடங்களென்றது – கடன்களென்றபடி. அவையாவன *த்ரிபிர் ருணவா ஜாயதே* என்கிறபடியே மூன்று ருணத்தோடேகூடவாயிற்று இவன் வந்து பிறப்பது; _ப்ரஹ்மசர்யேண ருஷிப்ய: யஜ்ஞேந தேவப்ய: ப்ரஜயா பித்ருப்ய:_ என்கிறபடியே ப்ரஹ்மசர்யத்தாலும், யாகத்தாலும், ப்ரஜோத்பத்தியாலும் ருஷிகளுக்கும், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் தனிசு இறுக்கக்கடவன். (ருணாநி த்ரீண்யபாக்ருத்ய) என்னா நின்றதிறே. (மெய்ம்மேல் வினைமுற்றவும்) ப்ரக்ருதிஸம்பந்த நிபந்தநமாக வரக் கடவ பாபங்களைச் சொல்லுகிறது. ஆக, ‘கடன்கள், மெய்ம்மேல் வினைமுற்றவும், வேம்-நசிக்கும்’ என்று இங்ஙனே ஆளவந்தார் அருளிச்செய்யும்படி. இத்தை எம்பெருமானார் கேட்டருளி, ‘இதுக்கு வேதாந்தத்திற் சொல்லுகிற கட்டளையிலே பொருளாக அமையாதோ?’ என்று இங்ஙனே அருளிச் செய்வர். அதாவது- _உத்தரபூர்வாகயோரச்லேஷவிநாசௌ_ என்றும், _ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே_ என்றும் சொல்லுகிறபடியே, ‘வேம்’ என்கை யாலே – பூர்வாகத்துக்கு விநாசமும், உத்தராகத்துக்கு அஸ்லேஷமுமாகச் சொல்லுதல்; அன்றிக்கே இத்விநாஶந்தான் – மற்றையதுக்கும் உபலக்ஷணமாய், ஸ்லேஷியாமையைச் சொல்லிற்றாகவுமாம். பூர்வாகமாவது – ஜ்ஞாநம் பிறப்பதற்கு முன்பு புத்திபூர்வகமாகப் பண்ணிப்போரும் ப்ராதிகூல்யம். உத்தராகமாகிறது – ஜ்ஞாநம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணும் ப்ராதிகூல்யம். பின்பும் விரோதியான தேஹஸம்பந்தம் அநுவர்த்திக்கையாலே பாபங்களிலே ப்ரவர்த்தியா நிற்கும்; அநந்தரம், ஜ்ஞாநம் பிறவா, கடுகமீண்டு முன்பு செய்ததுக்கு ‘நாம் என் செய்தோமானோம்?’ என்று அநுதபித்துப்படும். கடங்கள் – மேல்வினை முற்றவும் – வேம்: இது மெய் – இது ஸத்யம். (ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே) என்றதிறே. ப்ரத்யக்ஷாதிகள் ப்4ரமத்துக்கு மூலமாய் ப்4ரமநிவர்த்தகமுமாயிருக்கும்; அங்ஙனன்றியே, * யதாபூதவாதி ஹி சாஸ்த்ரம்* என்கிறபடியே சாஸ்த்ரஞ் சொல்லிற்றென்றால், அத்வர்த்தம் மெய்யாயிருக்குமிறே. முதற்பாட்டிலே (3-3-1) சொல்ல வேண்டுவதோரர்த்தஞ் சொல்லாதே போந்ததிறே; அத்வம்ஶம் இங்கே சொல்லுகிறார். கடலுக்குத்தொடுத்த அம்பை, அவன் நாலடிவர நின்றவாறே, அநந்தரத்தே ‘உன்விரோதிகளைச் சொல்லாய்’ என்றானிறே. இத்விடத்திலே பட்டர் ஒரு இதிஹாஸம் அருளிச் செய்வர்; ‘பண்டு, தலையில் மயிரின்றிக்கேயிருப்பானொருவன் நெற்பரிமாறாநின்றானாய், அங்கே ஒருவன் சென்று ‘மயிரைப் பேணாதே நீர் தனியே நின்று பரிமாறாநின்றீர்’ என்ன, ‘ஏன்தான் நடந்ததீ!’ என்ன, ‘ஒன்றுமில்லை; கண்டு போக வந்தேன்’ என்ன, ‘ஆகில், ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்துவிட, அவன் அத்தைக் கொண்டு வாரா நிற்கச் செய்தே, எதிரே ஒருவன் வந்து ‘இது எங்கே பெற்றது?’ என்ன, ‘உன்தனை மொட்டைத் தலையன் தந்தான்’ என்றானாய், அவன் அத்தைச் சென்று அங்கே ‘இன்னான் உம்மை வைது போகாநின்றானீ!’ என்ன, ‘அடா! என் நெல்லையுங்கொண்டு என்னையும் வைது போவதே?’ என்று தொடர்ந்து வந்தானாய், அவன் புரிந்து பார்த்து ‘ஏன்தான் குழல்கள் அலையவலைய ஓடிவாராநின்றதீ!’ என்ன, ‘ஒன்றுமில்லை, இன்னம் ஒரு கோட்டை கொண்டு போகச் சொல்ல வந்தேன்’ என்றானாம்; அப்படியே, கடலை முகங்காட்டுவித்துக் கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது கோலைத் தொடுப்பதாகா நிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே, ‘உனக்கு அம்பு தொடுத்தோம்’ என்ன லஜ்ஜித்து, ‘உன் விரோதிகளைச் சொல்லு, நாம் இத்தைவிட’ என்றாரிறே. (தாங்கள் இத்யாதி) – இதுதான், ப2ல போ4க்தாவானவனுக்கு உத்தேஸ்யத்தோபாதி ப்ரார்த்தித்துப் பெறவேண்டியிருக்குமோ? என்னில், ‘அதுவேண்டா; தாங்கள் தங்களுக்கு நன்றான கைங்கர்யத்தைப் பண்ணாநிற்க அமையும்; இவ்விரோதி தன்னடையே போம்’ என்கிறார். ‘தாங்கள் தங்களுக்கு நன்றான ப்ரதிபந்நத்தைச் செய்ய அமையும்’ என்னவொண்ணாதிறே, _வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்_ என்கிற அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி வைலக்ஷண்யமும் த்ருத்தி வைலக்ஷண்யமும் தோன்றும்படி ‘தாங்கள் தங்கட்கு’ என்று இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அநந்தாழ்வான். (தாங்கள்) இதர விஷயங்களில் விரக்தராய்க் கைங்கர்ய ருசியுடையரா யிருக்குமவர்கள் (தங்கட்கு) இப்படிப்பட்ட ருசியுடையராயிருக்கிற தங்களுக்கு. (நல்லனவே செய்வார்) தங்கள் ஸ்வரூபத்தோடு சேர்ந்த கைங்கர்யத்தையே பண்ணுவார். ‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்கிறது – ‘இவர்களை எங்ஙனேயாக நினைத்து?’ என்னில், – (வேங்கடத்து இத்யாதி) ‘வேங்கடத் துறைவார்க்கு’ – சதுர்த்தியின் அர்த்தஞ் சொல்லுகிறது; ‘நம:’ – ‘எனக்கு அன்று, அவனுக்கு’ என்றபடி. (என்னல்), ‘இதுதான் நெஞ்சிலுண்டாகவும் வேண்டா; உக்திமாத்ரமே அமையும்.’ ‘இதுதான் அல்பமாகிலும் இவன்தனக்கு அருமையாயிருக்குமோ?’ என்னில், ஆம் – ஸுஶகம். ‘எளிது’ என்னா ஸ்வரூபத்தோடே சேராததாயிருக்குமோ? என்னில், (கடமை) ப்ராப்தம். (அது சுமந்தார்கட்கே) பெறுகிறபேற்றின் கனத்தையும், இவனுடைய நேர்த்தியில் அல்பதையையும் பார்த்து, ‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப்போலே. ‘அது சுமந்தார்கட்கு’ என்று தம் கருத்தாலே சொல்லிற்றாகவுமாம். பெறுகிறபேற்றின் கனத்தையும் பகவத் க்ருபையையும் அறிந்திருக்கிற இவர்கருத்தாலே சொல்லிற்றாதல். இவன் பக்கலுள்ளத்தைக் கனக்கநினைத்திருக்கும் அவன் கருத்தாலே சொல்லிற்றாதல்; * பூயிஷ்ட்டாம்* என்றிறே அவன் இருப்பது; த்ரௌபதி திருநாமஞ் சொல்ல _கோவிந்தா_ என்றவாறே, _நம் பேரைச் சொன்னாள்_ என்று திருவுள்ளம் புண்பட்டிருக்குமவனிறே. *க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்*. அவளைக் கொண்டாட, தன்னை நிந்தியா, த்யஸநப் பட்டானிறே. அப்போது ஸதஸ்ஸில் பிறந்த பரிபவம் பரிஹ்ருதமாகச் செய்தேயும், ‘நம் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவளுக்கு ஆற்றாமையிலே முகங் காட்டப் பெற்றிலோம்’ என்று உள்ளதனையும் இழவுபட்டிருந்தானிறே. _நம்பேர் தன்காரியஞ் செய்ததத்தனை போக்கி, நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோமிறே’ என்று இருந்தான். அஸங்கதமாக இரண்டு சப்தத்தைச் சேர்த்துச் சொல்ல, அது விஷஹரணத்துக்கு உடலாகா நின்றதிறே-சப்த சக்தியாலே; அத்வோபாதியும் போராமையில்லையிறே திருநாமம். (வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாம் கடமையது சுமந்தார்கட்கு; கடங்கள் மெய்ம் மேல் வினைமுற்றவும் வேம்; மெய்; ஆகையால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்).
ஏழாம் பாட்டு
சுமந்துமாமலர் நீர்சுடர்தூபங்கொண்டு*
அமர்ந்துவானவர் வானவர்கோனொடும்*
நமன்றெழும் திருவேங்கடம்நங்கட்கு*
சமன்கொள்வீடுதரும் தடங்குன்றமே.
ப – அநந்தரம், ப்ரஸ்துதமான ஆஸ்ரயணத்தினுடைய காஷ்டாஸூசநார்த்தமாக அவன் நின்றருளின திருமலைதானே பரமஸாம்யாபத்தியைத் தரும் என்கிறார்.
மா – ஸ்லாக்யமான, மலர் – புஷ்பங்களையும், மா – நன்றான, நீர் – ஜலத்தையும், மா – விலக்ஷணமான, சுடர் – தீபத்தையும், மா தூபம் – அகருதூபத்தையும், சுமந்துகொண்டு – ஸாதரமாக வஹித்துக்கொண்டு, அமர்ந்து – (ப்ரயோஜநாந்தரங்களில் பரகுபரகற்று) அநந்யப்ரயோஜநராய் அமர்ந்து, வானவர் – நித்யஸூரிகள், வானவர்கோனொடும் – (தங்களுக்கு நிர்வாஹகரான) ஸேநைமுதலியாரோடேகூட, நமன்று – (அத்யந்த பாரதந்த்ர்ய ப்ரகாசகமான) நமநத்தைப் பண்ணி, எழும் – (ஸ்வரூபலாபம்பெற்று)க்ருதார்த்தராம்படியாய், திருவேங்கடம் – திருவேங்கடமென்று திருநாமத்தையுடைத்தாய், தடம் – (லக்ஷ்மீஸஹாயனான ஸர்வேஸ்வரன் ஸ்வைரவிஹாரம்பண்ணும்படி) ஸுவிஸ்தீர்ணமான, குன்றம் – திருமலை, நங்கட்கு – (ப்ராப்யருசியையுடைய) நமக்கு, சமன் – பரமஸாம்யாபத்தியை, கொள் – உடைத்தான, வீடு – மோக்ஷாநந்தத்தை, தரும் – தரும்.
பகவச்சேஷதைகரஸமான ஸ்வஸாம்யத்தை மோக்ஷரூபபலமாகத் தரும் என்றுமாம். நமன்று – வணங்கி. வானவர்வானவர்கோனொடுமென்று – ப்ரஹ்மாதிகளோடு கூடின தேவர்கள் என்றுஞ் சொல்லுவர்.
ஈடு – ஏழாம்பாட்டு. முதற்பாட்டில் (3-3-1) ப்ரார்த்தித்த கைங்கர்யத்தைத் திருமலைதானே தரும் என்கிறார். ப்ராப்திபலமாய் வருமதிறே கைங்கர்யம்.
(சுமந்து இத்யாதி) ‘மாமலர், நீர், சுடர், தூபம் இவற்றைச் சுமந்துகொண்டு’ என்னவுமாம்; அன்றிக்கே; ‘மாமலர் சுமந்து, நீர், சுடர், தூபங்கொண்டு’ என்னவுமாம். ஒரு கருமுகைமாலையேயாகிலும், ‘இத்தைக் கண்டருளக்கடவனே, சாத்தியருளக் கடவனே, நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணக்கடவனே’ என்றிருக்கிற இவர்கள் ஆதராதிஶயத்தாலே கனத்துத் தோற்றிற்றாகவுமாம்; அன்றிக்கே, அநுகூலன் இட்டதாகையாலே ஸர்வேஸ்வரன்தனக்குக் கனத்துத் தோற்றிற்றாகவுமாம். ஸ்ரீபுருஷோத்தமமுடையானுக்கு ராஜபுத்ரன் செண்பகப்பூக் கொண்டு சாத்தினபடியை நினைப்பது. அதாவது ஸ்ரீபுருஷோத்தமமுடையான் செண்பகம் உகந்து சாத்துவர்; சில ராஜபுத்திரர்கள் செண்பகங்கொண்டு சாத்தத் தேடி, முன்பே பூவெல்லாம் விற்றுப்போய் ஒரு பூ இருந்தது கடையிலே; அப்பூவுக்குச் செருக்காலே ஒருவர்க்கொருவர் த்ரத்யத்தைப் போர ஏற்றி, இவர்களில் ஒருவன் நினைக்கவொண்ணாதபடி த்ரத்யத்தைப் போர இட்டுக்கொண்டு வந்து சாத்தினான்; அன்று இரா அவன் ஸ்வப்நம் காண்கிறான்; ‘நீயிட்ட பூ எனக்குக் கனத்துச் சுமக்க வொண்கிறதில்லை’ என்று அருளிச் செய்தார். (அமர்ந்து இத்யாதி) நித்யஸூரிகளையும் ஸ்ரீ ஸேநாபதியாழ்வானையும் சொல்லிற் றாகவுமாம்; தேவர்களையும் ப்ரஹ்மாவையும் சொல்லிற்றாகவுமாம். அமர்ந்து – பொருந்தி. ப்ரஹ்மாதிகளைச் சொல்லிற்றானபோது, அவர்கள் ப்ரயோஜநாந்தர பரரேயாகிலும் அவர்களையும் அநந்யப்ரயோஜநராக்குமாயிற்று இதுதன்னின் ஸ்வபாவம். இப்படி ஸமாராதநோபகரணங்களைக்கொண்டு, நமன்றெழுவர்களாயிற்று – வணங்கிக் கொண்டெழுவர்களாயிற்று. _துயரறு சுடரடி தொழுதெழு_ (1-1-1) என்கிற தம் வாஸநை அவர்களுக்கும் உண்டென்று இருக்கிறார். (நங்கட்கு) கைங்கர்ய ருசியையுடைய நமக்கு . (சமன்கொள் வீடு தரும்) *ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி* என்றும், *நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி*, *மம ஸாதர்ம்ய மாகதா:*, _தம்மையேயொக்க அருள்செய்வர்_ (திருமொழி 11-3-5) என்றுஞ் சொல்லுகிறபடியே, அவ?ேனாடு ஸாம்யாபத்திரூபமான மோக்ஷத்தைத் தருமென்னுதல்; அன்றிக்கே, *ஸ்வேநரூபேணாபிநிஷ்பத் யதே* என்கிறபடியே இத்வாத்மாவினுடைய ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தைத் தருமென்னுதல்; அங்ஙனுமன்றிக்கே, திருமலை தானே தன்னோடொத்தபேற்றைப் பண்ணித்தருமென்னுதல்; திருவேங்கடமுடையானைத் திருமுடியிலே எழுந்தருளுவித்துக் கொண்டிறே திருமலையாழ்வார் தாம் இருப்பது; அப்படியே _நின்செம்மாபாதபற்புத் தலைசேர்த்து_ (2-9-1) என்று இவர் ப்ரார்த்தித்த பேற்றை (தடங்குன்றமே தரும்) திருமலையாழ்வார்தாமே தந்தருளுவர். (தடங்குன்றம்) திருவேங்கடமுடையானுக்கு ஸ்வைரஸஞ்சாரம் பண்ணலாயிருக்கும்படி இடமுடைத்தாயிருக்கை. _*ஸுபக:*- வீறுடைத்தாயிருக்கை. *கிரிராஜோபம:* – திருமலையோடு ஒத்திருக்கை. *யஸ்மிந் வஸதி* – அதுக்கு ஹேது சொல்லுகிறது. *காகுத்ஸ்த்த:* – போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடி அநுபவிக்கும் குடியிலே பிறந்தவர் விடாதே விரும்பி வர்த்தித்தாரென்பது யாதொன்று உண்டு. *குபேர இவ நந்தநே* – துஷ்டஸத்த்வ ப்ரசுரமான தேசத்திலே செருக்கனான வைஸ்ரவணன் போதுபோக்குகைக்காகத் தன் உத்யாநத்தில் உலாவுமா போலே ஸஞ்சரித்தார்._
எட்டாம் பாட்டு
குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன்*
அன்றுஞாலம் அளந்தபிரான்* பரன்
சென்றுசேர் திருவேங்கடமாமலை*
ஒன்றுமேதொழ நம்வினை ஓயுமே.
ப – அநந்தரம், ஏவம்பூதமான திருமலையை அநுபவிக்க, ப்ராப்திப்ரதிபந்தகங்கள் ஸ்வயமேவ நசிக்கும் என்கிறார்.
குளிர்மழை-கல்மாரியாலே (கோ, கோபீஜநங்கள் ஈடுபட்டவன்று), குன்றம்-ஒருமலையை, ஏந்தி – சுமந்து, காத்தவன் – காத்தவனாய், அன்று – (மஹாபலியாலே அபஹ்ருதமான) அன்று, ஞாலம் – பூமியை, அளந்த – அளந்து த்யாபரித்து, பிரான் – (அநந்யார்ஹமாக்கிக்கொண்ட) உபகாரகனான, பரன் – பரமசேஷியானவன், (ஒருமலையைமேற்கொண்டு ரக்ஷிக்கலாமென்றும், நின்ற விடத்தேநின்று ரக்ஷிக்கலாமென்றும்), சென்று – சென்று, சேர் – சேர்ந்த, திருவேங்கடம் – திருவேங்கடமாகிற, மா – பெரிய, மலை – திருமலை, ஒன்றுமே-ஒன்றையுமே,
(தேசிகனளவுஞ் செல்ல வேணுமென்கிற நிர்ப்பந்தமற்று), தொழ – அநுபவிக்க, நம் – நம்முடைய, வினை – (தே–காநுபவ) ப்ரதிபந்தகபாபங்கள், ஓயும் – (தன்னடையே) கழலும்.
ஈடு – எட்டாம்பாட்டு. ‘வேங்கடங்கள்’ (3-3-6) என்கிற பாட்டிற் சொன்ன விரோதி நித்ருத்தியையும் திருமலையாழ்வார் தாமே பண்ணித்தருவர் என்கிறார். ஒரு புருஷார்த்தத்தைத் தரவேணுமோ? திருமலைதானே நமக்கு உத்தேஸ்யம்; சேஷிக்கு உத்தேஸ்யமானது சேஷபூதனுக்கு உத்தேஸ்யமாகச் சொல்லவேணுமோ?
என்கிறாராகவுமாம்.
(குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன்) என்றும் து:க்கநிவ்ருத்திக்குப் பரிகரம் மலையே யாயிற்று. *கோகோபீஜநஸங்குலம், அதீவார்த்தம்* என்கிறபடியே, பசுக்களும் இடையரும் வர்ஷத்திலே தொலையப்புக, கண்ணுக்குத் தோற்றிற்று ஒரு மலையைப்பிடுங்கி ஏழுநாள் ஒருபடிப்படத் தரித்துக்கொண்டு நின்று அவற்றை ரக்ஷித்தவன். (அன்று இத்யாதி) ஒரு ஊருக்காக உதவினபடி சொல்லிற்றாயிற்று – கீழ்; ஒரு நாட்டுக்காக உதவினபடி சொல்லுகிறது – மேல்; விரோதியான மஹாபலியாலே பூமி அபஹ்ருதையான அன்று, எல்லை நடந்து மீட்டுக் கொண்ட உபகாரகன். ஸர்வ ரக்ஷகனுமாய் ஆஸ்ரிதரக்ஷகனுமாயிருக்கிறபடி சொல்லுகிறது. (பரன்) ஸர்வஸ்மாத்பரன். (சென்றுசேர் திருவேங்கடமாமலை) அவன் ‘தனக்கு உத்தேஸ்யம்’ என்று வந்து வர்த்திக்கிற தேசம். (ஒன்றுமே தொழ) உள்ளே யெழுந்தருளியிருக்கிறவன் தானும் வேண்டா, திருமலையாழ்வார்தாமே அமையும். (நம்வினை ஓயுமே) ‘ப்ராப்யத்தைப் பெற்றிலோம்’ என்கிற வினையென்னுதல், ‘வேங்கடங்கள்’ (3-3-6) என்கிற பாட்டிற் சொன்ன ப்ராப்தி ப்ரதிபந்தகங்களைப் போக்கும் என்னுதல்.
ஒன்பதாம் பாட்டு
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப்பிணி*
வீயுமாறுசெய்வான் திருவேங்கடத்
தாயன்* நாள்மலராம் அடித்தாமரை*
வாயுள்ளும்மனத்துள்ளும் வைப்பார்கட்கே.
ப – அநந்தரம், தேசிகனான திருவேங்கடமுடையானுக்கும் விரோதிநிவர்த்தகத்வம் தேசஸம்பந்தத்தாலே என்கிறார்.
நாள்மலராம் – (_நாட்பூ மலர்ந்தது_ என்னலாம்படி) ஸுகுமாரமான, அடித்தாமரை – திருவடித்தாமரைகளை, வாயுள்ளும் – வாக்குள்ளும், மனத்துள்ளும் – நெஞ்சினுள்ளும், வைப்பார்கட்கு – வைக்குமவர்களுக்கு, ஓயும்-பலஹாநியைப் பிறப்பிக்கக்கடவ, மூப்பு-மூப்பு, பிறப்பு – (அந்த சரீரத்துக்கு அடியான) பிறப்பு, இறப்பு – (அதின்)விநாசம், பிணி – (மூப்போடு பிணைந்து வருகிற) த்யாதிகள், (இவற்றை) வீயுமாறு – ந–க்கும்படி, செய்வான் – பண்ணுமவன், திருவேங்கடத்து – திருமலையிலே வர்த்திக்கிற, ஆயன் – க்ருஷ்ணன்.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. நம் விரோதியையும் போக்கி ப்ராப்யத்தையும் திருமலை யாழ்வார்தாமே தருவர் என்றார் கீழ் இரண்டு பாட்டாலே; ‘இப்படி விரோதி பாபங்களைப் போக்கி ப்ராப்யத்தைத் தருகைக்குத் திருமலையாழ்வாரெல்லாம் வேணுமோ? திருமலை யாழ்வாரில் ஏகதேசம் அமையாதோ?’ என்கிறார் இதில். (*ஏகதேசம் என்கிறது, அப்பனை); _வடமாமலையுச்சி_ (திருமொழி 7-10-3) என்னக்கடவதிறே திருவேங்கட முடையானை.
(ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு) ஜந்ம ஜரா மரணாதிகள் ஓயும். இப்போது ‘ஓயும்’ என்கையாலே, முன்பு அநாதிகாலம் உச்சிவீடும் விடாதே போந்த தென்னுமிடம் தோன்றுகிறது. ‘பிணிவீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயன்’ என்று அவனோடே அந்வயம். பிணிவீயுமாறு செய்கைக்காகத் திருமலையிலே நிற்கிறவன். ‘இவர்கள் பிணியும் இங்ஙனே சென்றிடுவதாக’ என்றிருந்தானாகில் ‘கலங்காப் பெருநகரத்திலே’ (மூன்.திருவ.51) இரானோ? இங்கு, பிணியென்கிறது; சரீரஸம்பந்த நிபந்தநமாக வருமவையெல்லாவற்றையும் நினைத்து. கீழே, ‘ஓயுமூப்புப்பிறப்பிறப்பு’ என்றதாகில் இனி ‘பிணிவீயுமாறு செய்வான்’ என்றதுக்குக் கருத்தென்? என்னில் – இவனுடைய இங்குத்தை து:க்க நித்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கைக்காகவென்கை. ஆக, து:க்கத்தைப் போக்கும் ஸ்வபாவனென்கை. அவனே வந்து போக்கானாகில் இத்வெலியெலும்பனுக்குப் போக்கிக் கொள்ளப் போகாதிறே. (நாள்மலராம் இத்யாதி) அவன் கால்காண, _மூப்புப் பிறப்பிறப்புப்பிணி_ என்கிற இவையெல்லாம் ந–க்கும்; இத்வேப்பங்குடி நீராயிற்று குடிக்கச் சொல்லுகிறது, விரோதிபோகைக்கு. செத்விப் பூவைத் தலையிலே வைப்பாரைப் போலே யிருப்ப தொன்றிறே. (வாயுள்ளும் இத்யாதி) இவையிரண்டும் – காயிகத்துக்கும் உபலக்ஷணமாய், திருவடிகளை மநோவாக் காயங்களாலே அநுஸந்திப்பார்க்கு. வாயுள் வைக்கையாவது, – _ஓவாதுரைக்கும் உரை_ (முதல் திருவந்தாதி 95) என்கிறபடியே உரைக்கை. மனத்துள் வைக்கையாவது – மறவாதிருக்கை. இப்படி கரணங்களுக்கு அடைத்த காரியங்களைக் கொள்ளவே, ஸ்வரூபவிரோதியாய் வந்தேறியானவை தன்னடையே போம். (பிணிவீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயனுடைய நாண் மலராமடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு – மூப்புப்பிறப்பிறப்பு ஓயும்)
பத்தாம் பாட்டு
வைத்தநாள்வரை எல்லைகுறுகிச்சென்று*
எய்த்திளைப்பதன் முன்னம்அடைமினோ*
பைத்தபாம்பணையான் திருவேங்கடம்*
மொய்த்தசோலை மொய்பூந்தடந்தாழ்வரே.
ப:- அநந்தரம், நிரதிசயபோக்யமான திருமலையைப் பரமப்ராப்யமாகப் பற்றுங்கோள் என்று ஸ்வஜநத்தைக் குறித்து உபதேசிக்கிறார்.
பைத்த – விரிகிற பணங்களையுடைய, பாம்பு – அநந்தனை, அணையான்-அணையாகவுடையனான ஸர்வேஸ்வரன், திருவேங்கடம்-(தத்ஸாரூப்யத்தாலே ஆதரிக்கிற) திருமலையில், மொய்த்த – செறிந்த, சோலை – சோலையினுடைய, மொய் – அழகிய, பூ – பூக்களையுடைத்தான, தடம் – இடமுடைய, தாழ்வர் – திருத்தாழ்வரையை, வைத்த – (உங்களுக்கு) ஸங்கல்பித்து வைத்த, நாள் – நாளினுடைய, வரை – அவதியான, எல்லை – முதலெல்லையானது, குறுகி – உங்களைக்கிட்டி, எய்த்து – (கரணங்களுக்கு) பலஹாநிபிறந்து, இளைப்பதன் முன்னம் – (அதடியாக நெஞ்சு) இளைப்பதற்கு முன்னே, சென்று – (_போங்குமரருள்ளீர்புரிந்து_ என்கிறபடியே) சென்று, அடைமின் – ப்ராபியுங்கோள். தாழ்வர் – தாழ்வரை, மொய் – செறிவும், அழகும்.
ஈடு – பத்தாம்பாட்டு. ஆக, திருமலையாழ்வார் எல்லார்க்குமொக்க உத்தேஸ்யமான பின்பு எல்லாரும் ஒக்கத் திருமலையாழ்வாரை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.
(வைத்த நாள் வரை எல்லை குறுகி)ஸர்வேஸ்வரன் இச்சேதநனுக்கு சரீர ஸம்பத்தியைக் கொடுத்தது – நரகாவஹமான விஷயங்கள் இருந்தவிடம் தேடிப்போகைக்கு அல்ல, திருமலைக்குப் போகைக்கு என்றாயிற்று; *விசித்ரா தேஹஸம்பத்திரீஸ்வராய நிவேதிதும்* என்னக்கடவதிறே. *ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய* – ‘ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார், நானும்கூட ஸேவித்துப் போவேன்’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படைவீட்டிலே யிருக்கைக்கோ, நாம் உம்மைப் பெற்றது? நீர் இப்படி செய்தீராகில் நான் உம்மைப் பெற்ற ப்ரயோஜநம் பெற்றேனாகிறேன். அவர்க்கு யாதொருபோது துணை வேண்டிற்று, அப்போது நீர் துணையாகைக்காகவன்றோ நான் உம்மைப் பெற்றது. *ஸ்வநுரக்தஸ் ஸுஹ்ருஜ்ஜநே* – ‘நீர் ஸுஹ்ருஜ்ஜநத்தின்பக்கல் ஸ்வநுரக்தரல்லீரோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாரீர்’. அன்றிக்கே, *ஸுஹ்ருஜ்ஜநே – ராமே* – என்றாய், ‘பெருமாள்பக்கல் பண்டே ஸ்நேஹித்தன்றோ நீர் இருப்பது; இப்போது ‘போம்’ என்று நான் உமக்குச் சொல்லவேண்டியிருந்ததோ?. *ராமே ப்ரமாதம் மாகார்ஷீ:* – ‘இப்படியிருக்கிற உம்மை நியமிக்க வேண்டுவதொன்று உண்டு: ப்ரமாதத்தைப் பண்ணாதேகொள்ளும்.’ ‘என்தான்? ப்ரமாதமென்?’ என்னில், *புத்ர! ப்ராதரி கச்சதி* – ‘உங்கள் தமையனார் நடப்பர்கிடீர்; அவர் நடையிலே நடைகொள்வர்: அவர் நடையழகிலே கண்வைத்துக் காவற்சோர்வுபட விடாதே கொள்ளும்.’ அப்படியே இச்சேதநனையும் இங்குவைத்தது திருமலைக்குப் போகைக்காகவாயிற்று. (வைத்தநாள் வரை எல்லை குறுகிச்சென்று) ஈஸ்வரன் நியமித்துவைத்த ஆயுஸ்ஸினுடைய முடிவான எல்லையைச் சென்று கிட்டி. (எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ) ‘திருமலைக்குப் போகவேணும்’ என்னும் ஸ்ரத்தையும் அநுவர்த்தியா நிற்கச் செய்தே ‘பாவியேன் கரணபாடவதசையுண்டாகப் பெற்றிலேன்’ என்னும் தஶை வருவதற்கு முன்னே போகுங்கோள். (பைத்த இத்யாதி) தன்னோட்டை ஸ்பர்சத்தாலே விரித்த பணங்களையுடைய திருவநந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய ஸர்வேஸ்வரன், அப்படுக்கையிற்காட்டிலும் விரும்பிவர்த்திக்கிற தேசம். (_பாம்பணையான் திருவேங்கடம்_ என்ற பாடங்கொண்டு அருளிச்செய்தது, இந்த வாக்கியம்). அன்றியே, திருமலையாழ்வார்தம்மைத் திருவநந்தாழ்வானாகவும் சொல்லக்கடவதிறே. (மொய்த்த இத்யாதி) செறிந்த சோலையையும், பரப்புமாறப்பூத்த தடாகங்களையும் உடைத்தான திருத்தாழ்வரையை – எய்த்து இளைப்பதன்முன்னம் – சென்று அடைமினோ. எய்த்திளைக்கையாவது – ஒன்று நெஞ்சிளைப்பு, ஒன்று சரீரத்தினிளைப்பு.
பதினொன்றாம் பாட்டு
தாள்பரப்பி மண்தாவிய ஈசனை*
நீள்பொழில் குருகூர்ச்சடகோபன்சொல்*
கேழிலாயிரத்து இப்பத்தும்வல்லவர்*
வாழ்வர்வாழ்வெய்தி ஞாலம்புகழவே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் பலமாகக் கைங்கர்யை•வர்யலாபத்தை அருளிச்செய்கிறார்.
(படிக்களவாக), தாள் – திருவடிகளை, பரப்பி – பரப்பி, மண்- பூமியை, தாவிய – அளந்துகொண்ட, ஈசனை – ஸர்வேஸ்வரனை, நீள் – உயர்ந்த, பொழில் – பொழிலையுடைத்தான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்த, கேழ்இல் – ஒப்பு இல்லாத, ஆயிரத்து – ஆயிரத்து, இப்பத்தும் – இப்பத்தையும், வல்லவர் – (அர்த்தாநுஸந்தாநத்தோடே அப்யஸிக்க) வல்லார்கள், வாழ்வு – (இவர் ப்ரார்த்தித்த) கைங்கர்யஸாம்ராஜ்யத்தை , எய்தி – பெற்று, ஞாலம் – லோகமடங்க, புகழ – கொண்டாடும்படி, வாழ்வர் – அடிமை செய்து வாழப்பெறுவர். இது கலிவிருத்தம்.
ஈடு – நிகமத்தில், இத்திருவாய்மொழி அப்யஸிக்க வல்லார் ஆழ்வார் ப்ரார்த்தித்த படியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்யப் பெறுவர் என்கிறார்.
(தாள் பரப்பி மண்தாவிய ஈசனை) கடிநஸ்த்தலத்திலே பூவைப்பரப்பினாற்போலே ஸுகுமாரமான திருவடிகளைக்கொண்டு காடும் மலையுமான பூமியை அநாயாஸேந அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனையாயிற்றுக் கவிபாடிற்று. திருவேங்கடமுடையானை யன்றோ கவி பாடிற்று, என்னில், – _கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே விண்தோய் சிகரத் திருவேங்கடமேய அண்டா_ (திருமொழி 1-10-4) என்றும். _மண்ணளந்த இணைத்தாமரைகள்_ (6-10-6) என்றும், _உலகமளந்த பொன்னடியேயடைந்துய்ந்து_ (திருமொழி 5-8-9) என்றும் ஆழ்வார்கள் அருளிச் செய்யா நிற்பர்கள்; எல்லாரையும் க்ரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக்கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், வரையாதே ‘கானமும் வானரமுமான’ (நான்.திரு.47) இவற்றுக்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிறபடியாலும், திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமநனாகச் சொல்லக் கடவதிறே. (நீள்பொழில் இத்யாதி) திருவுலகளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கனிட்டாப்போலே நிழல் செய்யும்படி வளர்ந்த பொழிலையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த. (கேழிலாயிரம்) கேழென்று ஒப்பாய், ஒப்பில்லாத இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார்கள்; இப் பத்துக்கு ஒப்பில்லாமையாவது – ஆத்மாவினுடைய ஸ்வரூபாநுரூபமான கைங்கர்யத்தை மநோரதித்த பத்தாகையாலே வந்த ஒப்பில்லாமை. (வாழ்வர் வாழ்வெய்தி) கைங்கர்யத்தை மநோரதித்து விடுகையன்றிக்கே, இவருடைய மநோரதமே மநோரதமாகக் கைங்கர்யமாகிற ஸம்பத்தை ப்ராபித்து அநுபவிக்கப் பெறுவர்கள். (ஞாலம் புகழவே வாழ்வர்) ‘இளைய பெருமாளொருவரே! அவர்பெற்ற பேறுஎன்?’ என்று இங்ஙனே படை வீடாகக் கொண்டாடினாற்போலே. அன்றிக்கே, வாழ்வெய்தி, ஞாலம்புகழ, வாழ்வர் என்னவுமாம்; க்ரூரராயிருக்கும் ப்ரபுக்களை, அவர்கள் க்ரௌர்யமும் நெஞ்சிலே கிடக்கச் செய்தே ஏத்தா நிற்பர்களிறே ஜீவிக்கவேண்டுகையாலே; அங்ஙனன்றிக்கே. ‘இவனை ஏத்தப்பெற்றோமே. இற்றைவிடிவும் ஒருவிடிவே!’ என்று ப்ரீதியோடே ஏத்துவர்கள். (ஞாலம்புகழவே) விசேஷஜ்ஞரானார் ஏத்துகையன்றிக்கே, அதுதன்னிலும் சிலர் நெஞ்சிலே த்வேஷமுங் கிடக்கையன்றிக்கே, இருந்ததே குடியாக எல்லாரும் ப்ரீதியோடே புகழ்வர்கள்.
முதற்பாட்டில் – ‘திருவேங்கடமுடையான் திருவடிகளிலே ஸர்வதேசே ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்யவேணும்’ என்று மநோரதித்தார்; இரண்டாம் பாட்டில் – ‘அது ஒரு தேஶவிஶேஷத்திலே போனாற் பெறுமதன்றோ?’ என்ன ‘அங்குள்ளாரும் இங்கே வந்து அடிமை செய்கிற தேசமன்றோ? நமக்கு இங்கே பெறத் தட்டில்லை’ என்றார்; மூன்றாம் பாட்டில் – ‘நிறைவாளர்க்குத் தன்னைக் கொடுத்தவன் குறைவாளர்க்குத் தன்னைத் தரச் சொல்லவேணுமோ?’ என்றார். நாலாம் பாட்டில் – ‘அவர்களுக்குத் தன்னைக் கொடுத்தா னென்றது ஓரேற்றமோ, எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார்; அஞ்சாம்பாட்டில் – ‘எனக்குத் தன்னைத் தந்தானென்றது ஓரேற்றமோ, என்னிலும் தண்ணியாரைத் தேடிக்கிடையாமே நிற்கிறவனுக்கு?’ என்றார்; ஆறாம்பாட்டில் – ‘இவ்வடிமையிலே இழிய, விரோதிகளும் தன்னடையேபோம்’ என்றார்; ஏழாம்பாட்டில் – ‘இக்கைங்கர்யத்தைத் திருமலையாழ்வார் தாமே நமக்குத் தருவர்’ என்றார்; எட்டாம்பாட்டில் – ‘அத் திருமலையாழ்வார்தாமே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தருவர்’ என்றார்; ஒன்பதாம்பாட்டில் – ‘திருமலையாழ்வாரெல்லாம் வேணுமோ நமக்கு ப்ராப்யத்தைத் தருகைக்கு? அவரோட்டை ஸம்பந்தமுடையார் அமையும்’ என்றார்; பத்தாம்பாட்டில் – ‘சேஷிக்கு உத்தேஸ்யமாகையாலே சேஷபூதரானாரெல்லாரும் திருமலையாழ்வாரை ஆஸ்ரயியுங்கோள்’ என்றார்; நிகமத்தில் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்ரமிடோபநிஷத் ஸங்கதி
ஸர்வத்ர ஸர்வ ஸமயெ ஸகலாஸ்வவஸ்தாஸ்வப்யர்தயந்நிகிலதாஸ்ய ரஸாந்முநீந்த்ர:।
ஶ்ரீவெங்கடாத்ரி நிலயஸ்ய பரஸ்யபும்ஸ: நிஸ்ஸீமஶீலகுணமப்யவதத்த்ருதீயெ||
த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ
36 ஸ்தாநோத்கர்ஷாத் ஸுதீப்தம் ஶ்ரமஹரவபுஷம் ஸ்வாங்கபர்யாப்தபூஷம்
தேஜிஷ்டம் நீசயோகாத் ப்ரணமிதபுவநம் பாவநம் ஸந்நதாநாம் ।
ப்ராப்த்யர்ஹஸ்தாநமம்ஹ:ப்ரஶமநவிஷயம் பந்தவிச்சேதிபாதம்
பேஜே ஶீக்ராபியாநக்ஷமஶுபவஸதிம் லம்பிதார்சாபிமுக்ய: || (3-3)
திருவாய்மொழி நூற்றந்தாதி
**ஒழிவிலாக்காலம் உடனாகி மன்னி*
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு* எழுசிகர
வேங்கடத்துப்பாரித்த மிக்கநலம்சேர்மாறன்*
பூங்கழலை நெஞ்சே! புகழ். 23
ஆழ்வார் திருவடிகளே ஶரணம், எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்,
ஜீயர் திருவடிகளே ஶரணம்.