ஒன்பதாந் திருவாய்மொழி – சொன்னால் : ப்ரவேசம்
பன்னீராயிரப்படி – ஒன்பதாந்திருவாய்மொழியில், இப்படி தாமும் கரணக்ராமமுங் கூப்பிட்டபடியைக் கண்ட <•வரன் ‘லோகமடங்க இதரஸ்தோத்ரம் பண்ணி அநர்த்தப்படாநிற்க, நீர் நம்மை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணி?ேனாமே’ என்று இவருடைய பேற்றை ப்ரகா–ப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டராய்; அவனுடைய ஸ்துத்யத்வத்துக்கு ஏகாந்தமான ஸௌலப்யாதிஶயத்தையும், ஸுலபனுடைய ஸம்பந்தோத்கர்ஷத்தையும், நித்யஸூரிநிர்வாஹகத்வத்தையும், ஸ்துத்யதைக்கு அநுரூபமான (ஏகாந்தமான) ஶேஷித்வத்தையும், அபேக்ஷிதபலப்ரதத்வமான ஔதார்யாதிஶயத்தையும், அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீய:பதித்வத்தையும், ஸ்துதிவிஷயமான குணநாமபூர்த்தியையும், அவனுடைய ப்ராப்யபாவத்தையும், புருஷார்த்தப்ரதத்வத்தையும், ஜகத்ஸ்ரஷ்ட்ருத்வத்தையும் அநுஸந்தித்து ‘ஏவம் பூதவிஷயத்தை ஸ்தோத்ரம்பண்௰தே, நிஷ்ப்ரயோஜநமான இதர ஸ்தோத்ரங்களைப் பண்ணி, அநர்த்தப்படுகிறிகோளே’ என்று லௌகிகரைக் குறித்து ஸ்வநிஷ்டையை உபதே–த்தருளுகிறார்.
ஈடு: – இப்படி தம் இழவுக்குக் கூப்பிடுகிற இது தவிர்ந்து தங்களிழவுக்குக் கூப்பிடும்படி பண்ணினார்கள் ஸம்ஸாரிகள். தாமும் தம்முடைய கரணக்3ராமமுமாய்க் கேட்டாரெல்லாம் நீராம்படி கூப்பிட்டார் – கீழில் திருவாய்மொழியிலே; ‘பருகிக்களித்தேனே’ (2–3-9) என்று ‘பகவதநுபவம் பண்ணிக்களித்து அநந்தரம் போதயந்த: பரஸ்பரம்’ பண்ணுகைக்கு _அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ_ (2–3-10) என்று நித்யஸூரிகள் திரளிலே புகத்தேடுமாபோலே, இவர் இழவாலே கூப்பிட்ட அநந்தரம் ‘இத்விழவுக்குக் கூட்டாவர்களிறே’ என்று ஸம்ஸாரிகளைப் பார்த்தார்; அவர்கள் பேற்றுக்குக் கூட்டல்லாதாப்போலே இழவுக்கும் கூட்டன்றிக்கே இருந்தார்கள்; ‘அறியார் சமணர், அயர்த்தார் பவுத்தர், சிறியார் சிவப்பட்டார்’ (நான்.திரு.6) என்கிறபடியே அனுபபந்நங்களைச் சொல்லுவாரும், ப்ரத்யபி4ஜ்ஞார்ஹமாம்படி ஒரு சேதநனைக் கொள்ளாதே ஜ்ஞாநஸந்தாநத்தைக் கொள்ளுவாரும், தன்?ேனாட்டையான ஒரு க்ஷேத்ரஜ்ஞனையே ‘<•வரன்’ என்று இருப்பாரும், தேவதாந்தரங்களைப் பற்றியிருப்பாரும், ‘அவர்கள் தாங்கள் ஸர்வஜ்ஞர்’ என்னும்படி ஶப்தாதிகளைப்பற்றி அவற்றைப் பெறுகைக்காகப் பிறரைக் கவிபாடித் திரிவாருமாயிருந்தார்கள். அவர்களைக் கண்டவாறே, வாளேறுகாணத் தேளேறுமாயுமாபோலே தம்இழவை மறந்தார்; பராநர்த்தங்கண்டால் அத்தைப் பரிஹரித்துப் பின்பு, தம் இழவு பரிஹரிக்க நினைப்பார் ஒருவராகையாலே, ‘இவர்களநர்த்தத்தைப் பரிஹரித்து இவர்களையும் கூட்டிக்கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான நல்வார்த்தை அருளிச்செய்ய, அவர்கள் அதுகேளாதே பழையபடி நிற்க, அவர்களைவிட்டுத் தம் நிலையிலே போருகிற இவர், அவர்களில் தமக்கு உண்டான த்யாத்ருத்தியைப் பேசிக்கொண்டு போருகிறார். அவர்கள் தாங்கள்-ஸமஸ்தகல்யாண கு௰த்மகனாய், ஸ்ரீய:பதியாய், அத்யந்த ஸுந்தரனாகையாலே கவிபாடுகிறது பொய்சொல்லிற்றாகாதே கவிக்கு விஷயம் போரும்படியாய், இவன் பாடின கவியைக் கேட்பித்துக் கொண்டாடுகைக்கு <டாக *_கேட்டாரார் வானவர்கள்_ (10-6-11) என்றும், _தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள்_ (9-4-9) என்றும் சொல்லுகிற பரிஜநங்களையுடையனாய், கவிபாடினார்க்கு வழங்குகைக்கு _வேண்டிற்றெல்லாம் தருங்கோதிலென் வள்ளல்_
(3-9-5) என்கிறபடியே பரமோதாரனாய், அவர்களுக்குக் கொடுக்கைக்கு உபய விபூத்யை •வர்யத்தையுடையனாய், ‘வல்லதோர் வண்ணஞ் சொன்னால் அது உனக்காம் வண்ணம்’ (7-8-10) என்கிறபடியே இவன் ஏதேனுமொன்றைச் சொன்னாலும் தன்னையே சொல்லிற்றாம்படி ஸர்வ ஶப்த3வாச்யனாய், பாடின கவி கேட்பிக்க இருந்தவிடம் தேடிப்போய் அருமைப்பட வேண்டாதே _எங்குமுளன் கண்ணன்_ (2-8-9) என்கிறபடியே ஸர்வத்ர ஸந்நிஹிதனாய், ஸுலபனுமாய், கவிபாடினவர்களுக்கு போ4க3மோக்ஷாதி ஸகல புருஷார்த்த ப்ரதனாய், அவை கொடாவிடிலும் தன்னைக் கவிபாடுகைதானே ப்ரயோஜநம் போரும்படியிருக்கிற ஸர்வே•வரனை விட்டு, கவிபாடுகைக்கு <டான நன்மைகளொன்றுமின்றியே, தலையில் மயிரில்லாதா?ெனாருவனை ‘பனியிருங் குழலன்’ என்றும், இளிகண்ணனை ‘புண்டரீகாக்ஷன்’ என்றும் இப்புடைகளிலேயாயிற்றுக் கவிபாடுவது; கவிபாடினால் தான் தருவதொன்றில்லாமையாலே நூறுகற்றையாதல் ஒரு பொய்த்தரவாதலாயிற்று எழுதுவது; இவன்தான் நெடுநாள் கூடி நெஞ்சுகன்றக் கவிபாடி ஸஹகாரிகளையும் கூட்டிக்கொண்டு கேட்பிக்கச் செல்லுங்காட்டில் _‘அவரே மாண்டார்’ என்று எதிரே வரும்படி நிலைநில்லாதாருமாய், ஆக, இருந்தும் இழவாய், போயும் இழவாய், இப்படி அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவிபாடி ஒரு ப்ரயோஜநம் பெறாதொழிகை யன்றிக்கே, கவிபாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு ‘இருமருங்குந் துய்யான்’ என்னுமாபோலேயிறே கவிபாடுவது; ஆனால், வருவதென்? என்னில்-உத்பத்தியிலே சில குறைகள் உண்டாயிருக்குமே இவன் தனக்கு: மறந்தவற்றையிறே இது கேட்ட நாட்டார் நினைப்பது; அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அத்வழியாலே அவத்யாவஹராய், அப்ராப்த விஷயத்தைக் கவிபாடுகையாலே மேல் நரகமாய், ‘இன்னானைக் கவிபாடினவனன்?ேறா இவன்’ என்று ‘தீண்டாதே கடக்கப்போ’ என்னும்படியாயிருக்கிற க்ஷுத்ரரைக் கவிபாடித் திரிகிறபடியைக் கண்டு, ‘ஆத்மா <•வரஶேஷமாயிருக்க, அநந்யார்ஹமான உங்களுடைய கரணங்களைக் கொண்டு பிறரை ஸ்துதிக்கை <டல்ல’ என்று ஹிதத்தை அருளிச்செய்ய, ராவணனுக்கு ஸ்ரீவிபீஷ௰திகள் சொன்ன ஹிதம்போலே அது ப2லியாதொழிய, ‘ஹிதம்சொல்லச் செய்தேயும் செவிதாழாத இவர்களோடொத்த ப்ராப்தியிறே நமக்கு உள்ளது’ என்று பார்த்து, ‘இவர்கள் நடுவே இத்தேசத்தில் இத்தேஹத்தோடே வர்த்திக்கிற நாம் முந்துற முன்னம் பகவதர்ஹகரணராகப் பெற்?ேறாமிறே’ என்று, வழி பறிக்குமிடத்துத் தன் கையிற்பொருள்கொண்டு தப்பிப்போனார் உகக்குமாபோலே, தமக்கு உண்டான த்யாத்ருத்தியை அநுஸந்தித்து ஸ்வலாபத்தைப் பேசி ப்ரீதியோடே தலைக்கட்டுகிறார்.
முதல்பாட்டு
சொன்னால்விரோதமிது ஆகிலும் சொல்லுவன்கேண்மி?ேனா*
என்னாவிலின்கவி யா?ெனாருவர்க்குங்கொடுக்கிலேன்*
தென்னாதெனாவென்று வண்டுமுரல்திருவேங்கடத்து*
என்னானைஎன்னப்பன் எம்பெருமான்உளனாகவே.
ப – முதற்பாட்டில், ‘என்னை ஸ்துதிப்பிக்கைக்காகத் திருமலையிலே ஸந்நிதிபண்ணின உபகாரகனையொழிய வே?ெறாருவரை ஸ்தோத்ரம்பண்ணேன்’ என்று ஸ்வமதத்தை அருளிச்செய்கிறார்.
இது – (நீங்கள் இதரஸ்தோத்ரம் தவிருகைக்கு உறுப்பான) இந்த ஹிதம், சொன்னால் – சொன்னால், விரோதம் – (உங்களபிமதத்துக்கு) விரோதம்; ஆகிலும் – ஆயிருக்கிலும், சொல்லுவன் – (உங்களநர்த்தம் பொறுக்கமாட்டாமையாலே) சொல்லக்கடவேன்; கேண்மின் – (நீங்கள் செவிதாழ்த்துக்) கேளுங்கள்; வண்டு – வண்டுகளானவை, தென்னாதெனாவென்று – (மதுபாநப்ரீதியாலே) தென்னாதென்னாவென்று, முரல் – (ஆளத்திவைப்பாரைப்போலே) ஶப்திக்கிற, திருவேங்கடத்து – திருமலையிலே ஸந்நிஹிதனாய், என்ஆனை – எனக்குக் கவிபாடுகைக்கு விஷயம்போந்து, என் அப்பன் – (கவிக்குப் பரிசிலாகத்) தன்னைத்தரும் உபகாரகனாய், எம்பெருமான் – ப்ராப்தனான ஸ்வாமியானவன், உளன்ஆக – (இக்கவிபாட்டாலே) தான் உளனாயிருக்க, என் நாவில் – என் நாவினுடைய ஸத்தைக்கு ப்ரயோஜநமாய், இன் கவி – (கவிபாட்டுண்கிற <•வரனுக்கு) இனிதான கவியை, யான் – (அவனுக்கு அநந்யார்ஹஶேஷபூதனான) நான், ஒருவர்க்கும் – வே?ெறாருவர்க்கும், கொடுக்கிலேன் – கொடுக்க ஶக்தனல்லேன்.
ஈடு: – முதற்பாட்டில். க்ஷுத்ரவிஷயங்களைக் கவிபாடுகை உங்களுக்கு ஹிதமல்ல வென்று உபதே–க்கையிலே ப்ரத்ருத்தரானவர், அவர்களுக்கு ருசிபிறக்கைக்காக, ‘நான் இருக்கிறபடி கண்டிகோளே’ என்று தம்முடைய மதத்தை அருளிச்செய்கிறார்.
(சொன்னால் விரோதம் இது) – ப்ரயோஜநாந்தரபரராய்க் கவிபாடுகிற உங்களை. ‘கவிபாடாதே கொள்ளுங்கோள்’ என்கையாவது-உந்தம் ப்ரயோஜநத்தைத் தவிர்க்கையிறே; ‘நம்முடைய ப்ரயோஜநத்துக்கு இழவாக வார்த்தைசொல்லா நின்றானீ’ என்று விரோதமாய்த் தலைக்கட்டுமிறே உங்களுக்கு. ஆயிருக்க, சொல்லுகிறேன். அன்றிக்கே, *யோணவஸா தஸ் ஸ உச்யதாம்* என்று ‘திருநாமத்தைச் சொன்னால் அநந்தரம் இடிவிழும்’ என்று வரும் அநர்த்தத்தைச் சொன்னிகோளாதல், திருநாமத்தைச் சொன்னிகோளாதல் செய்யுங்கோளென்றான்’ இறே ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான் ஆஸுரப்ரஜைகளை; அப்படியே, இது உங்களுக்கு ‘அநர்த்தம்’ என்று ப்ரதிபந்நமா யிருந்ததேயாகிலும் சொல்லுகிறேன். அன்றிக்கே, _கர்ணமூலே_ என்று ‘ராஜதாரப்ராவண்ய நிஷேதத்தோபாதி, ஓலக்கத்திற் சொல்லும் வார்த்தையன்று இது. அஸேத்யஸேவை நிஷேத்யதயாவும் என்வாயாற் சொல்லவொண்௰து; இங்ஙனே இருக்கச் செய்தேயும் சொல்லும்படியிறே நீங்கள் நிற்கிற தெ3ளர்க்க3த்யம்; ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாமிறே’. (ஆகிலும் சொல்லுவன்) – ‘ஆயிருக்கவுஞ் சொல்லுகிறேன்’. ‘இப்படியாகிலும் சொல்லுகிறதென்?’ என்னில், – ‘நீங்கள் ஶமதமாத்யுபேதராய் ஸமித்பாணிகளாய் வர, சொல்லுகிறேனன்றே; உங்களநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்; ஆகையால் அதுக்குப் பரிஹாரம் பிறக்கு மளவும் சொல்லுகை தவிரேன். நீங்கள் உங்கள் அபிமதத்தினின்றும் மீளமாட்டாதாப் போலே நானும் உங்களுடைய ஹிதத்தினின்றும் மீளமாட்டாதபடி’. (கேண்மி?ேனா) – ‘இதுகேட்ட வநந்தரம் அநுஷ்ட்டாநபர்யந்தமாக வேணுமிறே’ என்று அஞ்சவேண்டா; செவிதாழ்க்க அமையும்; அநுஷ்ட்டிக்கவேண்டா. ‘அதுவென்? ஹிதகாமராயன்?ேறா சொல்லுகிற’தென்னில், – கேட்கவே, சேதநராகையாலே மேல்விழுவர்களிறே; ராகப்ராப்தமாய் வருமதுக்கு நாம் சொல்ல வேண்டாவிறே; ஆகையாலே, நாம் அத்தை விதித்தோமாகிறதென்? என்று ‘கேண்மின்’ என்கிறார். ‘கடலோசைக்குச் செவிபுதையாதே கேட்கிறமை உண்டிறே, அத்வோபாதியாகிலும் கேளுங்கோள்’. பன்மையால் – அநர்த்தம் எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே எல்லார்க்குஞ் சொல்லுகிறார். பால்குடிக்கக் கால் பிடிப்பாரைப்போலே பகவத்விஷயம் கேட்கக் கால்பிடிக்கிறாரிறே இவர்செல்லாமை. (என்நாவில் இத்யாதி) வழிகெடப் போகிற நீங்கள், ஒருவன் வழியே போகாநின்றால் ‘நாமும் அப்படியே போகவேணும்’ என்று இருக்க வேண்டாவோ சேதநரானால்? நான் இருக்கிறபடி கண்டிகோளே; அப்படியேயன்?ேறா உங்களுக்கும் இருக்க அடுப்பது என்கிறார். (என்நா) *யஸ்யைதே தஸ்ய தத்த3நம்* என்கிறபடியே நான் அவனுக்கு சேஷமாகையாலே எனக்குக் கரணமாய் அவனுக்கு சேஷமான என் நா. ‘என்னைப்போலே நாவால் கார்யங்கொண்டாருண்டோ?’ என்கிறார்; _வஞ்சனே என்னும் எப்போதும் என்வாசகம்_(3-8-2) என்னும்படியான நாவிறே. (இன்கவி) இவர்கவியை <•வரன் கேட்டு ப்ரஸந்நனாய் இனியனாக, அத்வழியாலே தமக்கு இனியதாயிருக்கிறபடி. ஶேஷிக்கு இனியதான வழியாலேயிறே ஶேஷபூதனுக்கு இனியதாவது. மிதுநமாய்க் கலவாநின்றால் இரண்டு தலைக்கும் உள்ள ரஸம், ஶேஷஶேஷிகள் பரிமாற்றத்திலும் உண்டிறே. அவனுக்கு இனியதாய் அத்வழியாலே தனக்கு இனியதாகையிறே ஶேஷபூதனுக்கு வாசி. (யான்) அவனுக்கு அநந்யார்ஹ ஶேஷபூத னென்றிருக்கிற நான். இத்தை நினைத்திறே கீழே _யஸ்யைதே_ என்றது. (ஒருவர்க்கும் கொடுக்கிலேன்) கீழ்ச்சொன்ன அத்யந்த பாரதந்த்ர்யத்தோடு சேர்ந்திருந்ததில்லையிறே இது; ‘புறம்பொருவர்க்குங்கொடேன்’ என்கையாலே இத்விஷயத்தில் கொடுப்பேனென்கை யாயிற்றிறே; ‘தனக்கென்று ஒன்று உண்டாய்க் கொடுப்பது கொள்ளுவதாகை சேருமோ ஸ்வரூபத்துக்கு?’ என்னில்,-அடியிலே <•வரன் அநுஸந்தாந ஸாமர்த்த்யத்தை (யும் ப்ரத்ருத்தி நித்ருத்தி ஶக்தியையும்) கொடுத்துவைத்தால், பின்பு, ‘நான் கொடுத்தேன்’ என்னலாமிறே. அவனதானதுதன்னை ‘நான் என்னத்தைக் கொடுத்தேன்?’ என்னலாம் படியிறே ஸம்பந்தம்இருப்பது. கோதாநத்தில், பிதா புத்ரன்கையிலே நீர்வார்த்துக் கொடுத்து, மீளவும் அவன் கொடுக்க, அவன்கையிலே தான் பெற்றானாயிருக்குமாபோலே; இவனும் தனக்கே ஸ்வம்மானத்தைத் தந்தானாய், இவன் ஸர்வஸ்வதாநம் பண்ணத் தான் பெற்றானாக நினைத்திருக்கும் <•வராபிப்ராயத்தாலே சொல்லுகிறார். _என்னால் தன்னை யின் தமிழ்பாடிய_ (7-9-1) என்று தான் இவரையிட்டுப் பாடுவித்து, இவர் தன்னைப்பாடினாராக நினைத்திருக்கு மவனிறே. அல்லாதார் புறம்புள்ளார்க்குத் தங்கள் கவியைக் கொடுத்து வைக்கையாலே, யான் ஒருவர்க்கும் கொடுக்கமாட்டேன் என்கிறார். (தென்னா இத்யாதி) இதுகாணும் இவர் கவிபாடினபடி. வண்டுகள் மதுபாநமத்தமாய் ப்ரீதிக்குப் போக்குவிட்டு முரன்றது இசையாய் விழுந்தாப்போலேயாயிற்று, இவரும் பகவதநுபவ ஜநித ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டது கவியானபடி. திர்யக்குக்களோடு முமுக்ஷுக்களோடு அவன் தன்?ேனாடு வாசியறத் ‘தென்னாதென்னா’ என்னுமித்தனை. பகவத் ப்ரத்யாஸந்நரெல்லார்க்கும் இதுவே பாசுரமானால் அவன்தனக்குச் சொல்லவேண்டாவிறே. _தென்னாவென்னும் என்னம்மான்_ (10-7-5) இறே. (திருவேங்கடத்து என் ஆனை) வேதத்திற் காட்டில் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம்போலே, ஸ்ரீவால்மீகி பகவான் கவிபாடின விஷயத்திற்காட்டில், தாம் கவிபாடின விஷயத்துக்கு உண்டான ஏற்றஞ் சொல்லுகிறார். (திருவேங்கடத்து என் ஆனை) ஆனைபெறக் கவிபாடுமவர் காணும் இவர்; இவர் கவிபாடிக் கட்டின யானையாயிற்று அவன். அத்வண்டுகளோடே ஸகோ3த்ரிகளாய் அநுபவிக்கிறார். அல்லாதாரைப் போலே, கவிபாடினவர்க்குத் தன்னையொழிய வே?ேறாரானையைக் கொடுத்துவிடு மவனன்றே. ஸதாதர்சநீயமாய் எப்போதும் ஸ்தோத்ரம்பண்ண வேண்டியிருக்குமவன். ‘வண்டுகளானவை மதுபாநப்ரீதியாலே தென்னாதென்னாவென்று ஆளத்திவைப்பாரைப் போலே ஶப்திக்கிற திருமலையிலே ஸந்நிஹிதனாய் எனக்கு ஆனைபோலே அநுபாத்யனானவனை’. (என் அப்பன்) நாட்டார் பிறரைக் கவிபாடித் திரியா நிற்க, அவர்களுக்கும் ஹிதஞ்சொல்லவல்லேனாம்படி பண்ணின மஹோபகாரகன். (எம்பெருமான்) அபகாரமேபண்ணினாலும் விடவொண்௰த ப்ராப்தி. (உளனாகவே) *ஆஶயா யதிவா ராம:* என்று ப்ரார்த்திக்கப்படுமவன் என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் தான் உளனாகா நிற்க, நான் வே?ெறாருவரைக் கவிபாடுவ?ேனா? _அஸந்நேவ’ என்று – தன்னைக்கிட்டாத அன்று ஸம்ஸாரிசேதநருடைய ஸத்தையில்லாதாப்போலே, தான் என்னைக் கிட்டாதவன்று தன்ஸத்தையில்லையாம்படி அவன் வந்து நிற்க’. ‘அவன் என்னைக்கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளுகைக்காக இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது, நான் புறம்பேபோய் ஒருவரைக் கவிபாடினால்? ஆனபின்பு, என்னைப்போலேயிருக்கை காணுங்கோள் உங்களுக்கும் அடுத்திருப்பது.’
இரண்டாம் பாட்டு
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத்தன்செல்வத்தை*
வளனாமதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடியென்?*
குளனார்கழனிசூழ் கண்ணன்குறுங்குடிமெய்ம்மையே*
உளனாய எந்தையை எந்தைபெம்மானையொழியவே.
ப – அநந்தரம், இந்தஸௌலப்யாதிகுணங்களோடே திருக்குறுங்குடியிலே நிற்கிற என்குலநாதனையொழிய மநுஷ்யரைக் கவிபாடி ப்ரயோஜநமென்? என்கிறார்.
குளன் ஆர் – நீர்நிலங்களால் நிறைந்த, கழனி சூழ் – கழனி சூழ்ந்து, கண் – இடமுடைத்தாய், நல் – நன்றான, குறுங்குடியே – திருக்குறுங்குடியிலே, மெய்ம்மை – பரமார்த்தமான ஸௌலப்யாதிகுணங்களை ப்ரகா–ப்பித்துக்கொண்டு, உளன் ஆய – நித்யஸந்நிதிபண்ணின, எந்தையை – உபகாரகனான, எந்தைபெம்மானை – என்குலநாதனை, ஒழிய – ஒழிய, தன்னை – (பகவத்ஜ்ஞாநமில்லாமையாலே அஸத்ஸமனாயிருக்கிற) தன்னை, உளனாகவே – ஸத்தாவானாய்க்கொண்டே, ஒன்றாக – ஒரு வஸ்துவாக, எண்ணி – நினைத்து, தன் செல்வத்தை – தனக்கின்றியேயிருக்கத் தன்னதாக அபிமாநித்த க்ஷுத்ரஸம்பத்தை, வளனா – அத்யந்த விலக்ஷணமாக, மதிக்கும் – தானே அபிமாநித்திருக்கும், இ மானிடத்தை – அதிக்ஷுத்ரையான இந்தமநுஷ்யஜாதியை, கவிபாடி என் – கவிபாடி என்ன ப்ரயோஜநமுண்டு? பரமார்த்தகுண விபூதி விசிஷ்டனையொழிய, ஆபிமாநிககுணஸம்பத்தையுடையாரைக் கவிபாடி ப்ரயோஜநமில்லையென்று கருத்து.
ஈடு:– இரண்டாம்பாட்டு. ‘ஸத்யமுமாய் ஸமக்3ரமுமான ஐ•வர்யத்தையுடையனாய், ஸ்வரூபரூபகுணங்களால் பூர்ணனுமாய், ப்ராப்தனுமான ஸர்வேஸ்வரனை விட்டு; ஒரு சொல்லுக்குப் பாத்தமில்லாத ஐ•வர்யமுமாய், அது தான் நிரூபித்தால் நிலைநில்லாமையாலே அஸத்யமுமாய், அதுதனக்கு ஆ•ரயமும் தேடிப்பிடிக்க வேண்டும்படியாயிருக்கிற க்ஷுத்ரரைக்கவிபாடி என்ன ப்ரயோஜநமுண்டு? என்கிறார்.’
(உளனாகவேயெண்ணி) இலனாகவே அத்யவஸித்திருக்கிறா ராயிற்று இவர். *நேஹ நா நாணஸ்தி* என்று அவனுக்குப் புறம்பாயிருப்பதொரு வஸ்துவில்லை என்றிருக்கும்படியாலே. ப்ரதிபத்தியிலும் வந்தால் அவனை உளனாக நினையாதபோது *அஸந்நேவ* என்று தாம் உளரன்றிக்கேயிருப்பரிறே. தான் உளனாகை யாவது ப்ரஹ்மவேதந முண்டாகையிறே. அவனை ‘உளன்’ என்று நினைத்துத் தான் உளனாகவேண்டியிருக்க, அவனை ‘இல்லை’ என்று தான் உளனாக விரகில்லையே. தன்னைக் கட்டிக்கொண்டுபோகாநிற்க, *நேயமஸ்தி புரீ லங்கா ந யூயம் ந ச ராவண, யஸ்மாதிக்ஷ்வாகுநாதேந பத்தம் வைரம் மஹாத்மநா* என்றானிறே திருவடி. (எண்ணி) ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதின்மேலே ஒருமேரு நிற்கிறதாகவும் நினைக்குமாபோலே குவாலாக மநோரதித்து. (தன்னை) _உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமனென்று முளன் கண்டாய்_ (முதல்.திரு.99) என்று ‘அவன் நமக்கு உளன்காண்’ என்றால் பின்னை நிர்ப4ரனாய் மார்விலே கைவைத்து உறங்கலாம்படி இருப்பா?ெனாருவனை, உளனென்றுதான் நினைக்கிறதோ? தன்னுடைய ஸத்பாவம் அவனுடைய உண்மையாலேயாயிருக்க, அவனையொழிய, *அஸந்நேவ* என்று இன்றிக்கேயிருக்கிற தன்னை. (ஒன்றாக) போரப்பொலிய அநுஸந்தித்து. (தன் செல்வத்தை) *ஸதி தர்மிணி தர்மா:* என்று தான்உண்டானாலிறே தர்மம் உண்டாவது; தன்னையே தேடிப்பிடிக்க வேண்டும்படியாயிருக்க, தனக்கு ஒரு ஸம்பத்து உண்டாக நினைக்கிறானிறே. (வளனா) ‘வளமாக’ என்றபடி. அதாவது ‘அழகியதாக’ என்னுதல், ‘மேலாக’ என்னுதல். <ச்வரன்ஐ•வர்யத்துக்கு மேலாகவிறே தன் ஐ•வர்யத்தை நினைத்திருப்பது. (மதிக்கும்) தானே இத்தைக் குவாலாக மதிக்கு மித்தனையிறே; புறம்பு இத்தை ஒன்றாக நினைக்கைக்கு இவன்தனை அவஸ்துக்களில்லையே. கல்ப்ரஹ்ம தேசத்திலே கரிக்கால் சோழ ப்ரஹ்மராயன் ‘திருவாய்மொழிக்கு த்யாக்யாநஞ் செய்தேன்’ என்று சீயர்க்குக்காட்ட, அவன் பக்கல் உபஜீவநங்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இத்தைக்கேட்டு ஸம்பாவியும்’ என்று அருளிச்செய்ய, அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடியொற்றி அவர் போனவழியே போம்படியே!_ என்ன, ‘ஆ! ஆ! பிள்ளை! ஆழ்வார்க்கும் எனக்கும் வாசிபுத்தி பண்ணிற்றில்லையோ? க்3ராமகார்யஞ் செய்து இடையிலே இதுவுஞ் செய்யவேண்டிற்றே எனக்கு’ என்றான். (இம்மானிடத்தை) கீழே உரித்து வைத்தாரிறே அவர்கள் ஸ்வரூபத்தை. (இம்மானிடத்தை) மநுஷ்யரென்று சொல்லவும் பாத்தம் காண்கிறிலர்காணும். அசேதநங்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார். தன்னை ‘மெய்யாக’ அறியாதவன் அசித்ப்ராயனிறே. (கவிபாடி என்) இவர்கள் மறைத்திட்டுவைக்கிற குற்றங்களை ப்ரபந்தீகரித்து வெளியிட்டால் உங்களுக்கு என்ன ப்ரயோஜந முண்டு? குளன் – குளம். ஆர்தல் – மிகுதல். (குளனார் கழனிசூழ்) விளைநிலங்களிற்காட்டில் ஏரிக்கட்டே விஞ்சியிருக்குமாயிற்று; இல்லையாகில் சாவிபோ மிறே. ரக்ஷ்யத்திலும் ரக்ஷகமே விஞ்சின ஊராயிற்று. (கண்ணன் குறுங்குடி) ஸர்வே•வரன் ‘என்னது’ என்று அபிமாநித்து வர்த்திக்கும் நகரமாயிற்று. ‘கண் நல் குறுங்குடி’ என்று த்யாக்யாநம் பண்ணினார்கள் தமிழர்; அப்போது, ‘இடமுடைத்தாய் நன்றான திருக்குறுங்குடியிலே’ என்று பொருள். (மெய்ம்மையே உளனாய) கவிகளில் கேட்டுப்போமித்தனையாய்த் தன்பக்கல் ஒரு நன்மையின்றிக்கே யிருக்கை யன்றிக்கே, சொன்னவையெல்லாம் மெய்யே பத்தும்பத்தாகக் காணலாம்படியிருக்கும் ஸ்வாமி. இத்விஷயத்தில் அர்த்தவாதமில்லை. புறம்புள்ளவற்றில் அர்த்தவாதமல்லதில்லை. இத்விஷயத்திலுள்ளதெல்லாம் சொல்லவொண்௰து, புறம்புள்ளவற்றில் சொல்லலாவதில்லை. (எந்தையை) நான் கவிபாடுகைக்குத் தன் குணங்களை ப்ரகா–ப்பித்து வைத்த உபகாரகனை. கவிபாடுகைக்கு ப்ராப்தவிஷய மென்னவுமாம். திருக்குறுங்குடியிலே சொன்ன குணங்களெல்லாம் பத்தும்பத்தாக வுடையனாய்; நமக்கு நாதனுமாய். (எந்தை இத்யாதி) ப்ராப்தி தம்மளவிலே பர்யவஸியாமையாலே, ‘என் குலநாதன்’ என்கிறார். ‘ஸமஸ்தகல்யாண கு௰த்மகனுமாய் ப்ராப்தனுமான இவனையொழிய, ஒருகுணலேசமு மின்றிக்கே அதிக்ஷுத்ரருமாய் அப்ராப்தருமா யிருக்கிற மநுஷ்யரைக் கவிபாடி என்ன ப்ரயோஜநமுண்டு?’
மூன்றாம் பாட்டு
ஒழிவொன்றில்லாத பல்லூழிதோறுழிநிலாவ* போம்
வழியைத்தரும் நங்கள்வானவரீசனைநிற்கப்போய்*
கழியமிகநல்ல வான்கவிகொண்டுபுலவீர்காள்!*
இழியக்கருதி ஓர்மானிடம் பாடல் என்னாவதே.
ப – அநந்தரம், நித்யஸூரிஸேத்யனான ப்ராப்யபூதனையொழிய, உங்களுக்கு விலக்ஷணமான கவிகளைக்கொண்டு க்ஷுத்ரஸ்தோத்ரம் பண்ணினால் ஒரு நன்மையில்லையென்கிறார்.
ஒன்று ஒழிவு இல்லாத – ஒரு விச்சேதம் இல்லாதபடி, பல் ஊழிதோறூழி – யாவதாத்மபாவியான காலமெல்லாம், நிலாவ – நிலைநின்று அநுபவிக்கும்படி, போம் – செல்லக்கடவதாயுள்ள, வழியை – வழிப்பாடான கைங்கர்யத்தை, தரும் – தரும், நங்கள் வானவரீசனை – நமக்குஶேஷியான நித்யஸூரிஸேத்யனை, நிற்க – ஒழிய, போய் – புறம்பே போய், கழிய-அதிலோகமாம்படி, மிக நல்ல – மிக்க நன்மையையுடைத்தான, வான் கவி கொண்டு – சீரிய கவிகளைக்கொண்டு, புலவீர்காள் – அறிவுடையரான நீங்கள், இழிய கருதி – (அறிவில்லாதாரைப்போலே)அத:பதிக்க நினைத்து, ஓர் மானிடம் – ஓர்பற்றாசில்லாத மநுஷ்யஜாதியை, பாடல் – பாடுகையாலே, என் ஆவது – என்ன லாபமுண்டாம்? ஸ்தோதாக்களான உங்களுக்கும், ஸ்துத்யரானவர்களுக்கும், ஸ்துதிக்கும் ஒரு நன்மையில்லை யென்று கருத்து.
ஈடு: – மூன்றாம்பாட்டு. ‘விலக்ஷணனாய் உபகாரகனா யிருக்குமவனையொழிய க்ஷுத்ர மநுஷ்யரைக் கவிபாடி என்ன ப்ரயோஜநமுண்டு?’ என்கிறார்.
(ஒழிவு இத்யாதி) காலதத்த்வமுள்ளதனையும் இடைவிடாதே, நிலாவ – வர்த்திக்கைக்கு. *ந ச புநராவர்த்ததே* என்கிறபடியே யாவதாத்மபாவி ப்ரக்ருதிஸம்பந்த மற்று, ‘வழுவிலா அடிமைசெய்’கைக்கு (3–3-1). காலக்ருதபரி௰மமில்லாத தேசத்தில் அனுபவத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும், காலம் நடையாடும் தேசத்திலே வர்த்திக்கிறவராகையாலே அத்தையிட்டுச் சொல்லுகிறார். (போம் வழியைத்தரும்) ‘போய் அநுபவிக்குமது பரிச்சிந்நம்’ என்னும்படி நிரவதிகபோ4க்யமான அர்ச்சிராதி மார்க்கத்தைத் தருமென்னுதல்; அன்றிக்கே, தன்னைக் கிட்டும் உபாயத்தைத் தருமென்னுதல்; என்றுமொக்க அநுவர்த்தித்துக் கொண்டு நடக்கையே ரீதியாயிருக்குமிறே. வழியென்று – ப்ராப்யமாதல். வழியைத் தருகையாகிறது – தான் உபாயமாகை. ப்ராப்யமானபோது, தான் போம் ரீதியாய், அதாகிறது – ஸ்வபாவமாய், ஸஹஜகைங்கர்யத்தைச் சொல்லுகிறது. (நங்கள் வானவரீசனை நிற்க) _புணைக்கொடுக்கிலும் போகவொட்டார்_ (பெரியாழ்.திரு.4-5-2) என்கிற பேற்றை. கவிபாடினார்க்கு அவன் கொடுத்தாலும், ‘இவன் செய்ததுக்கு நாம் செய்தது போருமோ?’ என்று மேன்மேலெனக் கொடுப்பிக்கும் பரிகரமுடையவனைவிட்டு, அவன் ‘இவன் ஒருசொல் சொல்லவல்லனே? என்று அவஸரப்ரதீக்ஷனாய் நிற்க என்றுமாம். (போய்) புறம்பே பாடுகைக்கு விஷயந்தேடிப் போய். ‘இவன் கவிபாடி வாராநின்றான்’ என்று கேட்டவாறே கழியப்போம், இவன்கவிகேட்டு ஏதேனும் தனக்குக் கொடுக்க வேண்டுகிறதாகக் கொண்டு; இவனும் அவன் புக்கவிடம் புக்கு ‘இத்தைக் கேட்பித்து ஒன்று பெற்?ேறாமாய் விடவேணும்’ என்று தொடர்ந்துபோமே; ஆக, அவன் போக இவன்போகப் போகாநிற்குமித்தனை. *ஆஜகா3ம* என்று பகவத்விஷயத்திலே ஓரடி வாரா நின்றவாறே பரக்ருஹத்தினின்றும் ஸ்வக்ருஹத்திலே புகுந்தாப்போலே யிருக்கும்; வேறே சிலரைப்பற்றி அருகேயிருக்கிலும் கழியப்போயிற்றதா யிருக்குமிறே. (கழிய இத்யாதி) கவி, பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை இட்டுச் சொல்லுகையாலே அவனுக்கு அடங்காததா யிருக்குமிறே; ‘இவன் ஆரைச் சொல்லுகிறது? நம்மையன்?ேறா?’ என்று ப்4ரமித்திருக்குமிறே; ஆகையாலே, இவனைவிட்டுக் கழிய. ‘இவனுக்கு இல்லாத வற்றை இட்டுப்பாடினால் அவற்றை உடையவனையிறே அக்கவி காட்டும்.’ (மிகநல்ல) எத்தனையேனும் நன்றான. (வான்கவி) – கனத்தகவி. *தது3பக3த ஸமாஸ ஸந்தியோகம்* என்கிறபடியே சொற் செறிவுடைத்தா யிருக்கை. மிகவும் நல்லவாய் அரணியவான கவிகளைக்கொண்டு. (புலவீர்காள்) இக்கவிக்கும் பாட்டுண்கிற விஷயத்துக்கும் வாசியறியும் நீங்கள். விசேஷஜ்ஞரான நீங்கள் இப்படி செய்யக்கடவிகோளோ? (இழியக்கருதி) அறிவுடையரானால் நின்ற நிலைக்குமேலே ஓரேற்றம் தேடிக்கொள்ளுமதொழிய, கீழேபோய் அத:பதிக்கத் தேடுவாருண்டோ? (ஓர் மானிடம் பாடல்) ஒரு க்ஷுத்ரனைப் பாடுகை. (என் ஆவது) ‘உங்கள் விசேஷஜ்ஞதைக்குச் சேருமதாயோ? அவர்களுக்கு ஒரு நன்மையுண்டாயோ? உங்களுக்கு ஒரு ப்ரயோஜநமுண்டாயோ? கவிக்கு அநுரூபமாயோ? எதுக்காகப் பாடுகிறீர்கள்?’
நான்காம் பாட்டு
என்னாவது?எத்தனைநாளைக்குப்போதும்? புலவீர்காள்!*
மன்னாமனிசரைப்பாடிப் படைக்கும்பெரும்பொருள்*
மின்னார்மணிமுடி விண்ணவர்தாதையைப்பாடினால்*
தன்னாகவேகொண்டு சன்மஞ்செய்யாமையுங்கொள்ளுமே.
ப – அநந்தரம், ஸர்வாதிகனானவனையொழிய அஸ்திரரான மநுஷ்யர்களைக் கவிபாடி என்ன ப்ரயோஜநமுண்டு? என்கிறார்.
புலவீர்காள் – (ஶப்தார்த்தங்களில் வாசியறியும்) புலவீர்காள்! மன்னா – (நீங்கள் பாடிச்செல்லுந்தனையும்) நிலைநில்லாத, மனிசரை – மநுஷ்யர்களை, பாடி – கவிபாடி, படைக்கும்-பெறாப்பேறாகப் படைக்கும், பெரும் பொருள் – (உங்கள் பாரிப்பாலே) பெரிய அர்த்தமானது, என் ஆவது – எது உண்டாம்? (உண்டானாலும்), எத்தனை நாளைக்கு போதும் – எத்தனைநாளைக்கு விநியோகார்ஹமாம்? மின் ஆர் – பேரொளியை யுடைத்தான, மணி முடி – ரத்நாபிஷேகத்தையுடையனாய், விண்ணவர் தாதையை – பரமபதவாஸிகளுக்கு ஸத்தாதிஹேதுபூதனான ஸர்வாதிகனை, பாடினால்-பாடினால், தன்னாகவே கொண்டு – தனக்கே அநந்யார்ஹமாக நினைத்து, சன்மம் செய்யாமையும் – (இதர ஸ்தோத்ரஹேதுவான) ஜந்மம் கழியும்படியும், கொள்ளும் – அங்கீகரிக்கும். ‘தன்னாகவே கொண்டு’ என்று – ஸாம்யாபத்தியைப் பண்ணிக்கொடுக்குமென்றுமாம்.
ஈடு::-நாலாம்பாட்டு. ‘கவிபாடினார்க்குத் தன்?ேனாடொத்த வரிசையைக்கொடுக்கு மவனைக் கவிபாடுமதொழிய, மந்தாயுஸ்ஸுக்களான க்ஷுத்ரரைக் கவிபாடிப் பெறுவது என்?’ என்கிறார்.
(என் ஆவது) ‘ஒன்றும் ஆவதில்லை. ஒரு ப்ரயோஜநத்துக்காகவன்?ேறா பிறரைக்கவி பாடுகிறது நீங்கள்? அதில் நீங்கள் நினைக்கிறது ஸித்தியாது’. ஆனால் ‘ஸித்திப்பதென்?’ என்னில் – கீழ்ச்சொன்ன தண்மையே ஸித்திப்பது. (என் ஆவது) உங்கள் நினைவால் சில அர்த்தஸித்தி; அர்த்தஸ்த்திதியில், அத:பதிக்கையே என் நினைவால். ‘ஒன்றுமில்லையாவதென்? கவிபாடுவாரும் பாடினவர்களுக்குக் கொடுப்பார்களு மாயன்?ேறா போருகிறது’ என்ன. (எத்தனைநாளைக்குப் போதும்) ‘இல்லை’ என்றவோபாதியாயன்?ேறா அதுதான் இருப்பது, நிரூபித்தால் கவிபாட்டு இட்டிறையாயிறே யிருப்பது: ‘கவி கேட்பிக்கைக்கு ஸஹகாரிகளையுங் கூட்டிக் கேட் பித்துப் பெறுமதும், கவிபாடின நாளைக்குப் பணையம்வைத்து வாங்கி ஜீவித்தது கொடுத்து மீட்கவும் போராது’. (புலவீர்காள்) உங்கள் விசேஷஜ்ஞதைக்குப் போருமோ இது? _பாடின கவியின் நேர்த்தியிது, பேறு இது, ‘இதுக்கு இதுபோரும், போராது’_ என்று நீங்களே அறிய வேண்டாவோ? (புலவீர்காள்) – ஶப்தார்த்தங்களின் வாசியறியுமவர்களே! (மன்னாமனிசரை) சிறிது உண்டாய் அல்பமாகிலும் நீங்கள் பெறுவது, நீங்கள் செல்லுமளவும் அவர்கள் தான் இருக்கிலிறே; _அவரே மாண்டார்_ (திருமொழி 6-2-5) என்று எதிரே வருவரே. (பாடிப்படைக்கும் பெரும் பொருள்) ‘இந்த ச்ரிய:பதி குறைவறக் கொடா?ேனா?’ என்று க்ஷேபிக்கிறார். (மின்னார் இத்யாதி) கவிபாடி முடிபெற்றவர்களன்?ேறா சென்றுகாணும் திரள். ஒளிமிக்க மணிகளையுடைய ‘முடியுடை வானவரிறே’ (10-9-8). *விபந்யவ:* என்று கவி பாடி முடிசூடியிருக்கிறவர்களிறே. கவி பாடிச் சென்றவர்களுக்கு ஓலக்கங்கொடுத்துக் கொண்டாடிக் கேட்பிப்பாரும் அவர்களன்?ேறா: ‘கேட்டு ஆரார் வானவர்களிறே’ (10-6-11). (விண்ணவர்தாதையைப் பாடினால்) நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனானவனைக் கவிபாடினால். முடி – அவன்தனக்கு விசேஷணமான போது, ‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை. (பாடினால்) இதுதானே ப்ரயோஜநம் போருமிறே. அதுக்குமேலே (தன்னாகவேகொண்டு) தனக்கேயாக வென்னுதல்; *மம ஸாத4ர்ம் யமாக3தா:*, *பரமம்ஸாம்ய முபைதி*, _தம்மையேயொக்க அருள் செய்வர்_ (திருமொழி 11-3-5) என்கிறபடியே தன்?ேனாடொக்கப்பண்ணி யென்னவுமாம். (சன்மஞ் செய்யாமையுங் கொள்ளுமே) பின்னை ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான ஜந்மத்தைப் போக்கும். பிறரைக் கவிபாடுகைக்கு அடி ஜந்மமிறே. நித்யஸூரிகள்தரத்தைக் கொடுத்து, பின்னைகாணும் ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுப்பது; ராஜபுத்ரன்தலையில் அபிஷேகத்தை வைத்து, பின்னை விலங்கு வெட்டி விடுமாபோலே. ஸ்ரீவிபீஷ௰ழ்வானை அபிஷேகம் பண்ணி, பின்பு ராவணனை வதித்தாப்போலே.
ஐந்தாம் பாட்டு
கொள்ளும்பயனில்லை குப்பைகிளர்த்தன்னசெல்வத்தை*
வள்ளல்புகழ்ந்து நும்வாய்மையிழக்கும்புலவீர்காள்!*
கொள்ளக்குறைவிலன் வேண்டிற்றெல்லாந்தரும்கோதில்* என்
வள்ளல்மணிவண்ணன்தன்னைக் கவிசொல்லவம்மி?ேனா.
ப – அநந்தரம், நிஷ்ப்ரயோஜநமான இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்ந்து ஸர்வப2லப்ரத3னான மஹோதா3ரனைக் கவிபாட வாருங்கோள் என்கிறார்.
கொள்ளும் பயன் – கொள்ளலாவது ஒரு ப்ரயோஜநம், இல்லை – இன்றியே, குப்பை கிளர்த்துஅன்ன – குப்பையைக் கிளறினாற்போலே தோஷமேதோற்றும்படியான, செல்வத்தை – ஸம்பத்தையுடைய க்ஷுத்ரஜாதியை, வள்ளல் – மஹோதாரையாக, புகழ்ந்து – புகழ்ந்து, நும் வாய்மை – உங்கள் ஸத்யவாதித்வமாகிற வாக்மித்வத்தை, இழக்கும் – இழக்கிற, புலவீர்காள் – புலவீர்காள்! கொள்ள – (கவிபாடுகைக்கு உள்ளுறையாகக்) கொள்ளுகைக்கும் (கவிக்குப்ரயோஜநம்) கொள்ளுகைக்கும், குறைவிலன் – குறைவற்ற பூர்ணனாய், வேண்டிற்று எல்லாம் – நாம்வேண்டினவற்றையெல்லாம், தரும் – தருமிடத்தில், கோது இல் – (தாரதம்யம்பார்த்தல், ப்ரத்யுபகாரம் பார்த்தல், கொடுத்தத்தை நினைத்தல்செய்யும்) குற்றம் இல்லாதவனாய் (இதுக்கு உதாஹரணமென்னலாம்படி), என் வள்ளல் – எனக்குத் தன்னையுபகரித்த மஹோதாரனாய், (உபகாரமில்லையே யாகிலும் விடவொண்௰தபடி), மணிவண்ணன் தன்னை – நீலரத்நம்போலே •லாக்யமான வடிவை யுடையவனை, கவிசொல்ல – கவிசொல்லும்படி, வம்மின் – வாருங்கோள்.
ஈடு:-அஞ்சாம்பாட்டு. ‘உபகாரகருமன்றிக்கே, கவிபாடுகிறவர்களுக்கு அவத்யமாம்படி ஹேயருமாயிருக்கிறவர்களைக் கவிபாடாதே, ஸமஸ்தகல்யாண கு௰த்மகனுமாய் ஸர்வாபேக்ஷிதப்ரதனுமான ஸர்வே•வரனைக் கவிபாட வாருங்கள்’ என்கிறார்.
(கொள்ளும் பயனில்லை) ‘பிறரைக் கவிபாட இழிகிறது அவர்களுத்தே•யராயன்றே: ஒரு ப்ரயோஜநத்துக்காகவே; அதில்லை’ என்கிறார். ‘நீங்களும் இசையவே ஸ்வயம்ப்ரயோஜந மன்றே; ப்ரயோஜநபரராயே கவிபாடுகிறது; அதில்லை’ என்னவே மீளுவரென்று பார்த்து, முந்துறமுன்னம் ‘இல்லை’ என்கிறார். (கொள்ளும் பயனில்லை) நெஞ்சு கன்றக் கவிபாடுகிற இதுக்குப் பெரிய லாபங்காணும்,
கொள்ளும்பயனில்லையென்கை: கொள்ளக்கடவதொரு ப்ரயோஜநமில்லை யென்கை. ஆக, ‘உங்களுக்காக ஒரு ப்ரயோஜநம் இல்லையாயிருந்தது’. ‘தங்களுக்கு ஒரு ப்ரயோஜநமில்லையேயாகிலும், பரஹிதமாகவும் ப்ரவர்த்திக்கக் கடவதிறே; அதுதான் உண்டோ?’ என்னில்,- (குப்பை இத்யாதி) ‘குப்பையைக் கிளறினாப்போலே யிருக்கிற ஸம்பத்தை’. அதாவது – ‘மறைந்துகிடக்கிற தோஷத்தை வெளியிடுகையாலே அவர்களுக்கு அவத்யாவஹமாமித்தனை. குப்பையைக்கிளறினால் உள்மறைந்துகிடக்கிற கறைச்சீரை முதலாவுள்ளவையிறே வெளிப்படுவது. அவர்களுக்கு அவத்யாவஹமாமளவன்றிக்கே, தங்களுக்கும் அஶுசிஸ்பர்ஶமுண்டாம்’ என்கை. (வள்ளல்புகழ்ந்து) உதாரமாகப் பாடி. அவன் தனக்கும் ஒருநன்மையின்றிக்கே பிறர்க்கும் உறுப்பன்றிக்கே இருக்கச்செய்தே, அவனுக்கு நன்மையுண்டாகவும் அதுதான் ஸ்வப்ரயோஜநத்துக்கு அடியாயிருக்கிறதாகவும் நன்றாகப் புகழ்ந்து. (நும்வாய்மையிழக்கும்) நீங்கள் கொள்ளும் பயன் இதுவே. ‘இரண்டுமில்லை’ என்று சொன்னாரிறே; ஆகையாலே, நீங்கள் ‘வாக்மிகள்’ என்கிற ப்ரஸித்தியை இழக்குமித்தனை. அன்றிக்கே, வாய்மையென்று – மெய்யாய், ‘நாடறிய இல்லாத அர்த்தங்களைச் சொல்லுகையாலே பொய்ச் சொல்லிகளாமத்தனை நீங்கள்’. (புலவீர்காள்) ‘பேறிழவறியும் நீங்கள் செய்யுமதோ இது? உங்கள் ஹிதம் நான் சொல்லவேண்டும் படியிருப்பதே: வர்௰•ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? ஸர்வஶப்தவாச்யன் அவனானால் அந்த ஶப்தங்கள் தனக்குச் சேருமோ?’ ‘நீர் சொல்லுகிற விஷயத்துக்கு, நாங்கள் கவிபாடுகிறவர்களிற் காட்டில் நன்மை யுண்டோ?’ என்னில், (கொள்ளக்குறைவிலன்) கீழ்ச்சொன்ன இரண்டையும் மாறாடிச் சொல்லுகிறார்: _கொள்ளும் பயனுமுண்டு, குப்பை கிளர்த்தன்ன செல்வமுமல்ல_. ‘நீங்கள் யாவை யாவை சில ஏற்றங்களையிட்டுக் கவிபாடினிகோள், அவற்றை ஸ்வீகரிக்குமிடத்தில் ஒரு குறையுடையனல்லன்; ஸமஸ்த கல்யாணகு௰த்மகன்’. (வேண்டிற்றெல்லாம் தரும்) கொள்ளும் பயனும் பெரிது. நீங்கள் கவிபாடினால் போ4க3மோக்ஷங்கள் வேண்டுமவையெல்லாம் தரும். ‘இவனையொழிந்தார், ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், கொள்ளுகிறவனுக்கு மற்?ெறான்று அபேக்ஷிதமானால் அது கொடுக்கமாட்டார்களிறே; இங்கு அபேக்ஷிப்பார் தாழ்வாலே இழக்கில் இழக்கு மித்தனை; அவன் தரமாட்டாமையாலே இழக்க வேண்டா.’ *பெ4ளமம் மநோரதம் ஸ்வர்க்யம் ஸ்வர்க்கி3வந்த்யஜ்ச யத்பதம் – த3தா3தி த்4யாயிநாம் நித்யமபவர்க்க3ப்ரதோ ஹரி:* *ஸகலப2லப்ரதோ3 ஹி விஷ்ணு:*. (கோதில்) ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் கோதற்றிருக்கும். கொடைக்குக் கோதில்லாமையாவது – தேச கால பாத்ரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுக்கிறவனுக்கு ‘ கொடுத்தோம்’ என்கிற அபிமாநம் அநுவர்த்தித்தல், கொள்ளுகிறவனுக்கு ப்ரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல்படுதல் செய்ய வேண்டாதபடியிருக்கை. ‘நீர் இது அறிந்தபடியென்?’ என்ன,- (என்வள்ளல்) நான் அநுபவித்தத்தைச் சொல்லுகிறேன். (மணிவண்ணன்) கொள்ளும்பயனுமின்றிக்கே ஐ•வர்யமுமின்றிக்கேயொழிந்தாலும் விடவொண்௰தபடியாயிற்று வடிவழகு. ரூபாபா4ஸம் கண்டு மேல்விழா நின்றதிறே புறம்பு. வடிவழகு கண்டு கவிபாடினாலும் இவனையே பாடவேணும். கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றதிறே ரூபாபா4ஸங்களையும். (மணிவண்ணன் தன்னைக் கவிசொல்ல வம்மி?ேனா) ‘நான் சொல்லுகிறபடியை உடையவனைக் கவிபாட வாருங்கோள். (வம்மின்) பிற்காலியாதே கடுகப்புகுரப் பாருங்கோள்.’
ஆறாம் பாட்டு
வம்மின்புலவீர்! நும்மெய்வருத்திக்கைசெய்து உய்ம்மி?ேனா*
இம்மன்னுலகினில் செல்வர் இப்போதில்லைநோக்கி?ேனாம்*
நும் இன்கவிகொண்டு நும்நும் இட்டாதெய்வமேத்தினால்*
செம்மின்சுடர்முடி என்திருமாலுக்குச்சேருமே.
ப– அநந்தரம், நீங்கள் ஆரையேனுங் கவிபாடிலும் •ரிய:பதியான ஸர்வஶேஷிக்கே அது சேருமித்தனை என்கிறார்.
புலவீர் – புலவராகையாலே விசேஷஜ்ஞரான நீங்கள், வம்மின் – (இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்ந்து) வாருங்கோள்; (தேஹயாத்ராஶேஷமாக), நும் மெய் வருத்தி-உங்கள் ஶரீரத்தை வருத்தி, கை செய்து – கைத்தொழில் செய்து, உய்ம்மி?ேனா – உஜ்ஜீவியுங்கோள்; மன்-ப்ரவாஹநித்யமான, இ – இந்த, உலகினில் – லோகத்தில், செல்வர் – ஸ்ரீமான்களாயிருப்பர், இப்போது-இக்காலத்தில், இல்லை – இல்லை, நோக்கி?ேனாம் – ஆராய்ந்துபார்த்தோம்; (இனி), நும் – உங்களுடைய, இன் கவி கொண்டு -•லாக்யமான கவிகளைக்கொண்டு, நும் நும் – உந்தம்முடைய ருச்யநுகுணமாக, இட்டாதெய்வம் – இஷ்டதேவதைகளை, ஏத்தினால் – ஸ்துதித்தால், (அவர்களுக்கு நீங்கள் சொல்லுகிற குணங்கள் ஸித்தியாமையாலே அவர்களுக்குச் சேராதே), செம் மின் சுடர்முடி – அப்ரதிஹதப்ரகாசமான தேஜஸ்ஸையுடைத்தாயிருக்கிற திருவபிஷேகத்தையுடையனாய், என் திருமாலுக்கே – எனக்கு ஸ்வாமியான •ரிய:பதிக்கே, சேரும் – சேருமித்தனை.
உங்களுக்கு பகவத்குணசௌர்யமே ப3லம். ஶப்தார்த்தங்களிரண்டும் •ரிய:பதிக்கே சேருவதென்று கருத்து.
ஈடு: – ஆறாம்பாட்டு. ‘ஜீவநார்த்தமாக மநுஷ்யாதிகளைக் கவிபாடுகி?ேறாம்’ என்ன ‘க்ஷுத்ரரைக் கவிபாடி ஜீவிப்பதிலும் உடம்புநோவப் பணிசெய்து ஜீவிக்கை நன்று’ என்கிறார்.
(வம்மின்) காட்டுத்தீயிலே அகப்பட்டாரை மடுவைக்காட்டி அழைப்பாரைப்போலே ‘வாருங்கள்’ என்கிறார். (புலவீர்) ‘நல்லதறியும் நீங்கள் வாருங்கோள்’. ‘எங்களை நீர் அழைக்கிறதென்? எங்களுடைய தேஹயாத்ரை நடக்க வேண்டாவோ, பிறரைக் கவிபாடியாகிலும்?’ என்ன, ‘மெய்யே ஜீவிக்க வேண்டினாலும் உங்கள் தரம்குலைய ஜீவிக்கவேணுமோ? உங்கள் தரம் குலையாமல் ஜீவிக்க வொண்௰தோ? (நும்மெய் இத்யாதி) உங்கள்சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் ஜீவிக்கப் பாருங்கோள்’. இதுக்கு எம்பார் அருளிச் செய்யும்படி:- கோட்டைசுமத்தல், புற்சிரைத்தல் செய்ய மாட்டீர்களோ? என்று. ‘அத்தால் எங்களுக்குப் பூர்ணமாக ஜீவிக்கக்கிடையாதே! பிறரைக் கவிபாடினால் எங்களுக்கு வேண்டுவது வாங்கி ஜீவிக்கலாம்’ என்ன, அது ஆமிறே பெறில்; (இம்மன்னுலகினில் செல்வர் இப்போதில்லை நோக்கி?ேனாம்) ப்ரவாஹரூபேண நித்யமான இந்த லோகத்தில் உங்கள் கவிகேட்டு இதுக்குத் தரமாகத் தருகைக்கு உதாரராயிருக்கும் ஸ்ரீமான்கள் இல்லை. (இப்போது நோக்கி?ேனாம்) ‘இவர்கள் நெஞ்சுகன்றக் கவிபாடுகிற இதுக்கு ப்ரயோஜநமுண்டோ?’ என்று இப்போது ஆராய்ந்து பார்த்தோம்; ஒருவரும் இல்லை யாயிருந்தது. அர்த்தாந்தரமாகில், ‘இப்போது இல்லை’ என்ன வேண்டாவே: முன்பு மில்லையே. முன்பு இவர்தாம் லோகயாத்ரையில் கண் வைக்குமவரன்றே. ‘இவர்கள் த்யர்த்தமே துக்கப்படுகிறார்களோ? ஏதேனும் ப்ரயோஜநமுண்டோ? என்று இப்போது பார்த்தோம்’ என்கிறார். ‘மநுஷ்யரிலன்?ேறா இல்லாதது; தேவர்கள் மநுஷ்யரில் த்யாத்ருத்தரே: இக்கருவிகளைக் கொண்டு எங்களுடைய இஷ்டதேவதைகளை ஸ்தோத்ரம் பண்ணுகி?ேறாம்’ என்ன. (நும் இத்யாதி) உங்களுடைய இனிய கவிகளைக் கொண்டு, ராஜஸராயும் தாமஸராயுமிருக்கிற உங்களுக்குப் பொருந்தும் ராஜஸராயும் தாமஸராயுமுள்ள தேவதைகளை ஸ்துதித்தால். அது – (செம்மின் இத்யாதி) நீங்கள் சில ஏற்றங்களைச் சொல்லியிறே கவிபாடுவது; அது அவர்களுக்குக் கூடாது; _புண்டரீகாக்ஷன்_ என்றால் அது உள்ளவிடத்தே போம்; விரூபாக்ஷன்பக்கல் போகாதே; ஆகையாலே, ஆதிராஜ்ய ஸூசகமான திருவபிஷேகத்தையுடைய ச்ரிய:பதிபக்கலிலே வந்து சேரும். ஆகையால் உங்களுக்கு ஸித்திப்பது சௌர்யபலமே. ‘ஸர்வாதிகன், ஸமஸ்தகல்யாண கு௰த்மகன், ஸர்வரக்ஷகன்’ என்றாப்போலேயிறே கவிபாடுவது; அது உள்ளவிடத்திலே வந்துசேருமிறே. அப்ரதிஹதப்ரகாஶமான தேஜஸ்ஸை யுடைத்தாயிருக்கிற திருவபிஷேகத்தையுடையனான. (என் திருமாலுக்குச் சேரும்) ‘உங்கள் ப்ரதிபத்தியொழிய, கவியின் ஸ்வபாவத்தாலும் •ரிய:பதிக்குச் சேரும்’. _ஒண்டாமரையாள்கேள்வ?ெனாருவனையே நோக்கு முணர்வு_ (முதல்.திரு.67) என்கிறபடியே, ஜ்ஞாநமாகில் அவனையே நோக்குமாபோலே, கவிகளானவை ஶப்தஸந்தர்ப்பமா யிருக்கையாலே, ஸர்வஶப்தவாச்யன் அவனாகையாலும் அவனுக்கே சேரும். அதாவது – ஸர்வ ஶப்தங்களும், அசித்தும் தத3பி4மாநிஜீவனும் தத3ந்தர்யாமியான பரமாத்மாவுமான இஸ்ஸங்காதத்துக்கு வாசகங்களாகையாலே விசேஷ்ய ப்ராதாந்யத்தாலே அவனையே சொல்லிற்றாம்: *யே யஜந்தி* இத்யாதிவத்.
ஏழாம் பாட்டு
சேருங்கொடைபுகழ் எல்லையிலானை* ஓராயிரம்
பேருமுடையபிரானையல்லால் மற்றுயான்கிலேன்*
மாரியனையகை மால்வரையொக்கும்திண்தோளென்று*
பாரிலோர்பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள்பேசவே.
ப – அநந்தரம், ஸ்துத்யமான குணங்களையும் திருநாமங்களையும் பூர்ணமாகவுடையவனையொழிய, வே?ெறாரு விஷயத்தைப் பொய்க்கவிபாட ஶக்தனல்லேன் என்கிறார்.
சேரும் – (தனக்குத்) தகுதியான, கொடை – கொடையும், புகழ் -(அத்தால்வந்த) குணப்ரதையும், எல்லை இலானை – எல்லையிறந்திருக்குமவனாய், ஓர் ஆயிரம் – அத்விதீயமாய் ஸஹஸ்ரஸங்க்யாதமான, பேரும் உடைய – திருநாமங்களையும் உடைய, பிரானை – மஹோபகாரகனை, அல்லால் – ஒழிய, மற்று – வேறு, பாரில் – பூமியிலே, ஓர் பற்றையை – தூறுபோலே நிஷ்ப்ரயோஜநமாயிருப்பதொரு பதார்த்தத்தை, கை – கைவழக்கங்கள், மாரி அனைய என்று – மேகத்தை ஒத்தனஎன்றும், திண் தோள் – திறலிய தோள்கள், மால் வரை – பெரிய மலையை, ஒக்கும் என்று – ஒக்குமென்றும், பச்சை பசும் பொய்கள் – மெய்கலவாத புதுப்பொய்களை, பேச – பேச, யான்-(பூர்ணவிஷயத்தைப்பற்றின) நான், கிலேன் – ஶக்தனல்லேன்.
ஈடு:-ஏழாம்பாட்டு. வழிபறிக்கும் நிலத்தில் தன்கைப்பொருள்கொண்டு தப்பினவன் உகக்குமாபோலே ‘இவர்களைப்போலன்றிக்கே பகவத் விஷயத்தை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் க்ஷமனன்றிக்கே ஒழியப்பெற்றேன்’ என்று ப்ரீதராகிறார்.
(சேரும் இத்யாதி) கொடையாலே சேர்ந்த புகழுக்கு எல்லையில்லாதவனை; அன்றிக்கே, தகுதியான கொடையாலுண்டான புகழுக்கு எல்லையில்லாதவ னென்னுதல்; அதாவது – ஒருவன் ஒருவனுக்கு ஒருபசுக் கொடுத்தானாகில், ‘இவனுக்கு இதுக்கு அடியென்?’ என்று இருப்பர்கள்; பெருமாள், ஸிம்ஹாஸநமும் ஸ்ரீஶத்ருஞ்ஜயனுமகப்படக் கொடுத்து வெறுவியராய் நிற்கிறவளவிலே த்ரிஜடன் வந்து அர்த்திக்க, ‘ஸரயூதீரத்துக்கு இத்வருகுபட்ட பசுக்களை யடையக் கொண்டுபோ’ என்று பெருமாள் கொடுக்க, ‘பெருமாள் கொடுத்தாராகில் சேரும்’ என்றார்களிறே; அப்படியே ‘தகுதியான கொடையால் வந்த புகழுக்கு எல்லையில்லாதவனை’. இத்விஷயத்தையாயிற்றுக் கவிபாடுகிறது. (ஓராயிரம் இத்யாதி) கவிபாடுமிடத்தில் ஒன்றிரண்டு பேராய், அதுதானும் ‘ஐலபில:’ என்றாப்போலேயாய், ஒருச்சந்தஸ்ஸிலடங்காதபடி இருக்கையன்றிக்கே, நினைத்தபடி பாசுரமிட்டுக் கவிபாடலாம்படி அநேகந்திருநாமங்களை உண்டாக்கிவைத்த மஹோபகாரகனை. (ஓராயிரம்) ஓரொன்றே கவிபாடுகைக்கு விஷயம் போரும்படி அத்விதீயமாயிருக்கை. (பிரானை) அவற்றை எனக்கு ப்ரகா–ப்பித்த மஹோபகாரகனை. (அல்லால் இத்யாதி) இவனையொழிய வே?ெறாருவரைக் கவிபாட நான் ஶக்தனாகிறிலேன். ‘எதுதான் நீர் மாட்டாதொழிகிறது?’ என்ன. (மாரியனைய கை) கொடுக்கைக்கு முதலின்றிக்கேயிருக்கிறா?ெனாருவனை, கொடைக்கு மேகத்தை ஒக்குமென்கை. அதாவது ப்ரயோஜந நிரபேக்ஷமாகக் கொடுக்கையும், கொடுக்கப்பெறாதபோது உடம்பு வெளுக்கையுமாகிற இத்யாதிகள். கையென்றது – கொடை. (மால்வரையொக்கும் இத்யாதி) கொடையை நினைத்துத் தேம்புகிற தோளைக்குறித்து, கொடுத்துப் பணைத்திருக்கிறதென்றும், இத்தோள் நிழலிலேயன்?ேறா லோகமாக ஜீவித்துக்கிடக்கிறதென்றும். (பாரில் ஓர்பற்றையை) போ4க3பூ4மியிலுள்ளார் சிலராகில் ஆமிறே; பூமியிலுள்ளார் சிலராய், பற்றையாய்; அதாவது – முளைத்தெழுந்து தீந்துபோவன சில சிறுதூறு உண்டாயிற்று. அப்படியே, உத்பத்தியே தொடங்கி விநாஶத்தளவும், தனக்கு உறுப்பாதல் பிறர்க்கு உறுப்பாதல் செய்யாதவர்களை. அன்றிக்கே, பாரென்று – நத்தமாய், அத்தால்-ஒரு குடிப்பற்றின்றிக்கேயிருக்கை. பற்றையை – ‘கைப்பட்டதை இறுகப்பிடித்து ஒருவர்க்கு ஒன்று <யாதவர்களை’ என்று ஒரு தமிழன் த்யாக்யாநம் பண்ணினான். ‘த்ருணஸமன்’ என்று சொல்லிப்போருவது. (பச்சைப்பசும் பொய்கள்பேசவே) மெய்கலவாத பொய்களைச் சொல்ல. ‘ஆயிரம்பேருமுடைய பிரானையல்லால் மற்று – பாரிலோர்பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் பேச – யான் கிலேன்’.
எட்டாம் பாட்டு
வேயின்மலிபுரைதோளி பின்னைக்கும௰ளனை*
ஆயபெரும்புகழ் எல்லையிலாதனபாடிப்போய்*
காயம் கழித்து அவன்தாளிணைக்கீழ்ப்புகும்காதலன்*
மாயமனிசரை என்சொல்லவல்லேன்என்வாய்கொண்டே?
ப – அநந்தரம், பரமப்ராப்யபூ4தனான க்ருஷ்ணனைக் கவிபாடி அவனைப்பெற ஆசைப்பட்டிருக்கிற நான், க்ஷுத்ரரைக் கவிபாடவல்லே?ேனா? என்கிறார்.
வேயின் – (பசுமைக்கும் திரட்சிக்கும் செத்வைக்கும்) வேயொப்பாமிடத்தில், மலி – அதிலும்மிகைத்து, புரை – விளங்குவதான, தோளி – தோளையுடைய, பின்னைக்கு – பின்னைக்கு, ம௰ளனை – நித்யாபிமதனான க்ருஷ்ணனை, ஆய – ஸ்வரூபாநுபந்தியாய், பெரும் – தனித்தனி அபரிச்சிந்நமாய், எல்லையிலாதன – அஸங்க்யாதமான, புகழ் – குணங்களை, பாடி – பாடி, போய் – நெடுங்காலம் நடந்து, காயம் – சரீரத்தை, கழித்து – கழித்து, அவன்தாளிணைக்கீழ் – (பரமப்ராப்யபூதனான) அவனுடைய திருவடிகளிலே, புகும் – ஒதுங்குகையிலே, காதலன் – ஆசையையுடைய நான், மாயம் மனிசரை – ப்ரக்ருதிவ•யரான மநுஷ்யரை, என் வாய் கொண்டு – (பகவத்ஸ்துதியோக்யமான) என்வாக்கைக் கொண்டு, என் சொல்ல வல்லேன்-எத்தைச் சொல்ல வல்லேன்? ‘போய்’ என்றது – காயங்கழித்து ஒருதேசவிசேஷத்தேறப்போய் என்றுமாம்.
ஈடு: – எட்டாம்பாட்டு. ‘நான் பிறரைக்கவிபாடுவேன் என்னிலும், என்வாக்கானது அவனையொழியப் பாடாது’ என்கிறார்.
(வேயின் இத்யாதி) ‘நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லப4னுமாய், ஸமஸ்த கல்யாண கு௰த்மகனுமான ஸர்வே•வரனைக் கவிபாடி, இப்படியிலே இச்சரீரத்தைக் கழித்து, இதின் அநந்தரம் அடிமைக்கு <டாயிருப்பதொரு சரீரத்தைப் பெற்று, அவனுக்கு அடிமைசெய்ய வேணுமென்று ஆசைப்பட்டிருக்கிற நான், என் வாயைக்கொண்டு நீர்க்குமிழிபோலேயிருக்கிற க்ஷுத்ரரைக் கவிபாட வல்லே?ேனா?’ என்கிறார். (வேயின் இத்யாதி) பசுமைக்கும், சுற்றுடைமைக்கும், செத்வைக்கும் – வேயிலும் விஞ்சின அழகையுடைத்தாய், பரஸ்பர ஸத்ருஶமான தோளையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லப4னானவனை. மலிதல் – மிகுதி; புரை – ஒப்பு. ‘பிறரைக் கவிபாடுகைக்கு யோக்யமான சரீரஸம்பந்தம் அறுக்கைக்கும், விலக்ஷணமான சரீரத்தைப் பெற்றுத் திருவடிகளிலே அடிமை செய்கைக்கும் புருஷகாரமான நப்பின்னைப் பிராட்டி’ யென்கை. ‘அச்சேர்த்தியிலே கவிபாடின நான் வேறு சிலரைக் கவிபாடவோ? இனி, கை கழியப் போகவல்லரோ, பிராட்டிகைப்புடையிலே நின்று கவிபாடுகிறவர்?’ (பின்னைக்கு ம௰ளனை) அவள்செத்வி கொள்ள இட்டுப்பிறந்தவனை. (ஆய) ஆயப் பட்டிருக்கை. ஹேய ப்ரதி ப4டமாயிருக்கை; அன்றியே, ஆயவென்றது – ஆனவென்றாய், ஸ்வரூபாநுப3ந்தி யென்றுமாம். (பெரும் புகழ்) ரூபகுணத்தோடு ஆத்மகுணத்தோடு வாசியற ஓரோவொன்றே நிரவதிக மாயிருக்கை. (எல்லையிலாதன) இப்படிப்பட்ட குணங்கள் அஸங்க்க்யாதமாயிருக்கை (பாடிப் போய்க் காயங்கழித்து) *பாண்ட3ரஸ்யாதபத்ரஸ்ய ச்சாயாயாம் ஜரிதம் மயா* என்று சக்ரவர்த்தி ப்ரஜாரக்ஷ௰ர்த்தமாகச் சுற்றும் பயணம் திரிந்து முத்தின்குடை நிழலிலே சரீரத்தைஜரிப்பித்தாப்போலே, பகவத்குணங்களை ப்ரீதிப்ரேரிதனாய்ச் சொல்லி இதுவே யாத்ரையாய்ச் சரீரத்தை விட்டு. (அவன் இத்யாதி) இத்தைக்கழித்த அநந்தரம், ஸ்வாநுபவம் பண்ணியிருத்தல், ப்ரயோஜநாந்தரங்களைக் கொள்ளுதல் செய்ய இராதே, அடிமைக்குப்பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய்முலைக்கீழேபோய் ஒதுங்கும் ஸ்தநந்தய ப்ரஜைபோலே, திருவடிகளின்கீழே ஒதுங்குவேன் என்னும் அபிநிவேஶத்தையுடைய நான். (மாய மனிசரை) உத்பத்தியோடே த்யாப்தமான விநாஶத்தையுடையவர்களை. அதாவது-பாடத்தொடங்கின கவி முடிவதற்கு முன்னே முடியும் மநுஷ்யரை. (என்வாய்கொண்டு என் சொல்லவல்லேன்) ‘கழுத்துக்குமேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’. (என்வாய் கொண்டு) வேறேசிலர் ‘வாக்காலே பாடினால் பாடலாம்’, *மந:பூர்வோ வாகு3த்தர:* அங்கே காதலைப்பண்ணிப் புறம்பே சிலரைக் கவிபாடப் போமோ? ‘ஆசைப்படுவது ஒரு விஷயமாய், பேசுவது ஒரு விஷயமா யிருக்குமோ? எல்லா இந்த்ரியங்களுக்கும் அடி மநஸ்ஸிறே, அத்தை அநுவர்த்திக்குமத்தனையிறே அல்லாத கரணங்கள். இப்போது இப்படி சொல்லுகைக்கு ப்ரஸங்கமென்?’ என்னில்; ப்ராப்தி ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவிபாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதில்நின்றும் தப்பப்பெற்றேன் என்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
வாய்கொண்டுமானிடம்பாடவந்த கவியேனல்லேன்*
ஆய்கொண்டசீர்வள்ளல் ஆழிப்பிரான்எனக்கேயுளன்*
சாய்கொண்டஇம்மையும்சாதித்து வானவர்நாட்டையும்*
நீகண்டுகொள்ளென்று வீடுந்தரும்நின்றுநின்றே.
ப – அநந்தரம், பரமபுருஷார்த்தப்ரதனானவன்தானே விஷயமாயிருக்க, இதர ஸ்தோத்ரத்துக்கு நான் அதிக்ருதனல்லேன் என்கிறார்.
வாய்கொண்டு – (ப்ராப்தவிஷயஸ்தோத்ரகரணமான) வாகிந்த்ரியத்தைக் கொண்டு, மானிடம் – (அப்ராப்தவிஷயமான) மநுஷ்யரை, பாட – பாடுகைக்கு, வந்த – வந்த, கவியேன் அல்லேன் – கவியானவன் அல்லேன்; ஆய் – (வேதாந்தங்களிலே) மீமாம்ஸிக்கப்பட்ட, சீர் – ஆநந்தாதி குணங்களை, கொண்ட – உடைய, வள்ளல் – மஹோதாரனாய், ஆழி – (கவிபாடுவார்நெஞ்சு தன் வசத்திலேயாம்படி நியமித்துக்கொடுக்கும்) திருவாழியையுடைய, பிரான் – மஹோபகாரகன், எனக்கே உளன் – எனக்கே அஸாதாரணவிஷயமாயுளன்; (அவன்தான்) சாய்கொண்ட – அதிசயிதௌஜ்ஜ்வல்யத்தையுடைத்தான, இம்மையும் – ஐஹிகமான அர்ச்சாவதாராநுபவத்தையும், சாதித்து – உண்டாக்கித்தந்து, வானவர் நாட்டையும் – நித்யஸூரிகளதான பரவிபூதியையும், (ஸேனைமுதலியாரைப்போலே), நீ கண்டுகொள் என்று – நீ ஆராய்ந்து நிர்வஹியென்று, வீடும் – (ஸ்வகைங்கர்யஜநிதமான) மோக்ஷாநந்தத்தையும், நின்றுநின்று – க்ரமத்திலே நின்றுநின்று, தரும்-கொடுக்கும். சாய்கொண்ட என்று தொடங்கி ‘உஜ்ஜ்வலமான ஐஹிகை•வர்யத்தையும் ஸ்வர்க்காதி ஸுகத்தையும் மோக்ஷத்தையும் தரும்’ என்பாரு முளர்.
ஈடு: – ஒன்பதாம்பாட்டு. ‘பரமோதா3ரனானவன் என் கவிக்குத் தன்னை விஷயமாக்கி வைத்தபின்பு இதர ஸ்தோத்ரத்துக்கு அதிகாரியல்லேன்’ என்கிறார்.
(வாய்கொண்டு இத்யாதி) வாய்வந்தபடி சொல்லவல்லார் இவரேயிறே. _*ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய* – ‘ஐயரையும், ஆய்ச்சியையும் அனுவர்த்தித்துப் பெருமாள் காடேற எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அனுவர்த்தித்துப் போகிறேன்’ என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடிவேணுமென்று அபேக்ஷையுண்டாகில், ‘முடிசூடுகைக்கு யோக்யனாயிருப்பா?ெனாருவன் வேணும்’ என்றதுக்கு <டாக நோன்புநோலே?ேனா? அவரை அநுவர்த்திக்கைக்காக வன்?ேறா நான் உம்மைப் பெற்றது; *ஸுஹ்ருஜ்ஜநே ராமே -ஸ்வநுரக்த:* – உபதேசநிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்லவேண்டுவதொன்று உண்டோ?’ அடிமையிலுண்டான ருசி செவி கண்௰கக் கண்டு அடிமை செய்யுமவரிறே. அன்றிக்கே, *ஸ்வநுரக்தஸ் ஸுஹ்ருஜ்ஜநே* – _கருமுகைமாலையை வெய்யிலிலேயிட்டாப் போலே, பெருமாள் தம்ஸௌகுமார்யம் பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலேபோகாநின்றார். என்புகுருகிறதோ?_ என்று வயிறெரிந்திருக்கிற ஸுஹ்ருஜ்ஜநங்களுக்கு நல்லீரிறே. ஸுஹ்ருஜ்ஜநமென்கிறது – திருத்தாயார் தொடக்கமான படை வீட்டிலுள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித் தாரீ’ என்றும். (ராமே) – நடக்கை மிகையாம்படி, வெறுமனேயிருந்தாலும் ஆகர்ஷகமான வடிவழகையுடையவர். *ராமே ப்ரமாதம் மாகார்ஷீ:*, (பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த்த:) என்று அவதாரகாலமே தொடங்கி அந்வயத்தில் த4ரித்து த்யதிரேகத்தில் த4ரியாதவர்க்கு, இன்றாக ஒருப்ரமாதம் புகுருகைக்கு ஶங்கையில்லையிறே; ஸம்பாவிதமான தொன்றைச் சொல்லுகிறாளாகவேணுமே. *ப்ராதரி கச்சதி* – அவர் உம்முடைய முன்னே நடப்பர்கிடீர்; அத்வழகிலே கண்வைத்து, நீர் அதிகரித்ததுக்குச் சோர்வுபிறவாதபடி குறிக்கொள்ளும். **அக்ரத:ப்ரயயௌ* – நடைச்சக்ரவத்துப்பிடிக்கலாம்படி. _ஆடல்பாடல்_ (பெரியாழ்.திரு. 3-6-4) இத்யாதி_. (வாய்கொண்டு இத்யாதி) ‘அவன்தன்னை ஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு க்ஷுத்ரரைக் கவிபாடுகைக்குப் பிறந்தவனல்லேன். நான் பிறரைக் கவிபாடினால் என்னுடைய ஸ்ருஷ்டிப்ரயோஜநம் அவன்பெற்றானாம்படியென்? ‘ஸ்வமுத்தி•ய’விறே ஸ்ருஷ்டி.’ (ஆய்கொண்ட இத்யாதி) நீர் ‘அவனைக் கவிபாடக்கடவேன்’ என்றிருந்தாலும், வேதங்களும் *யதோ வாசோ நிவர்த்தந்தே* என்று மீளுகிற விஷயமன்?ேறா? கவிபாடப்போமோ?’ என்ன, அவன் ‘*பக்தாநாம்* என்கிறபடியே தன்னை எனக்கு ஆக்கிவைத்தான்; எனக்குக் கவிபாடக் குறையென்?’ என்கிறார். (ஆய்கொண்ட சீர்) ஆயப்பட்ட சீர். ஹேயப்ரத்யநீக கல்யாணகுணங்கள். (வள்ளல்) பரமோதா3ரன். (ஆழிப்பிரான்) இக்குணங்களைக் காத்தூட்டவல்ல பரிகரத்தையுடையவன். (எனக்கே உளன்) என்கவிக்கே தன்னை விஷயமாக்கினான். (ஆழிப்பிரான் இத்யாதி) தானும் தன்பரிகரமுமாயிருக்கிற இருப்பை எனக்குக் கவிபாடலாம்படி எனக்கு விஷயமாக்கினான். _வலக்கையாழி_ (6-4-9) இத்யாதி.
(சாய்கொண்ட இம்மையும் சாதித்து) ஒளியையுடைத்தான ஐஹிகஸுகத்தையும் தந்து. சாய் – ஒளி. கொள்கை – உடைத்தாகை. மோக்ஷஸுகத்திலும் நன்றாம்படி ஐஹிகத்திலே ஸ்வாநுபவமே யாத்ரையாம்படி பண்ணித்தருகை. (சாதித்து) ஐஹிகங்களோடு மேலுள்ளவற்?ேறாடு வாசியற அவனே ஸாதநமாகக்காணும் இவர்பெறுவது. (வானவர்நாட்டையும்) குடியிருப்பாரோபாதியாயிற்று பரமபதத்தில் ஸ்ரீவைகுண்டநாதனுக்கு; ப்ராப்திதேசம் நித்யஸூரிகள் இட்ட வழக்காயிருக்கும். *பவத்விஷயவாஸிந:* என்னுமதுவும் தன்பக்கலிலே யாயிருக்கிறது. (நீ கண்டுகொள் என்று) *க்ருதம் த3ஶகுணம் மயா* என்று ஸ்ரீபண்டாரத்தை வளர்த்துவைத்து, பெருமாள் மீண்டெழுந்தருளின போதே ஸ்ரீபரதாழ்வான் காட்டிக்கொடுத்தாப்போலே. வானவர்நாட்டையும் நீ கண்டுகொள் என்கையாலே முன்பே அங்கே உளரான நித்யஸூரிகளோடு இன்றுபுக்கவ?ேனாடு வாசியற்றிருக்கை. அன்று <ன்ற கன்றின் பக்கல் வாத்ஸல்யத்தாலே முன் <ன்ற கன்றைக் காற்கடைக்கொள்ளும் ஸுரபியைப் போலே. * த்வயி கிஞ்சித் ஸமாபந்நே* இத்யாதிவத். (என்று) இப்படியே ஆதரத்தோடே சொல்லி. (வீடும்தரும்) கைங்கர்யஸுகத்தைத்தரும்; *மோக்ஷோமஹாநந்த:* (நின்றுநின்றே) ‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்று *ருணம் ப்ரத்ருத்3த4மிவ மே* என்று திருவுள்ளத்தாலே மிறுக்குப்பட்டு நிற்கும்’ என்று நம் ஆசார்யர்கள் நிர்வஹிக்கும்படி. ஒருதமிழன் ‘அடைவடைவே தரும் சொன்னவற்றை’ என்றான். முதல், ‘ஐஹிகத்தில் அநுபவிப்பித்து, பின்பு ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்து, பின்பு கைங்கர்யஸுகத்தைக் கொடுக்குமென்று’. அதவா, சாய்கொண்ட இத்யாதிக்கு – ‘ஐஹிகத்தில் ஸ்வாநுபவ ஸம்ருத்தியையும், தேசவிசேஷப்ராப்தியையும், கைங்கர்ய ஸுகத்தையும் தருமிடத்தில், ஸாத்மிக்க ஸாத்மிக்கத் தரும்’ என்றுமாம்.
பத்தாம் பாட்டு
நின்றுநின்றுபலநாளுய்க்கும் இத்வுடல்நீங்கிப்போய்*
சென்றுசென்றாகிலுங்கண்டு சன்மங்கழிப்பானெண்ணி*
ஒன்றியொன்றிஉலகம்படைத்தான் கவியாயினேற்கு*
என்றுமென்றும்இனி மற்?ெறாருவர்கவியேற்குமே?
ப-அநந்தரம், ஸ்துத்யர்த்தமான கரணகளேபரப்ரதனான அவனுக்குக் கவியான எனக்கு வே?ெறாருவரைக் கவிபாடுகை அநுரூபமன்று என்கிறார்.
பலநாள் – காலமுள்ளதனையும், நின்றுநின்று – இடைவிடாதேநின்று, உய்க்கும் – (தன்வஶததிலே சேதநனை) ஆக்கும், இத்வுடல் – இ•ஶரீரத்தை, நீங்கிப்போய் – விட்டுப்போய், சென்றுசென்றாகிலும் கண்டு – நெடுங்காலங்கழித்துச் சென்றாகிலும் (இச்சேதநன் தன்னை) அபரோக்ஷித்து, சன்மம் கழிப்பான் – ஜந்மத்தைக் கழிக்கைக்காக, எண்ணி – திருவுள்ளம்பற்றி, ஒன்றியொன்றி – ஸ்ருஷ்டிதோறும் நெஞ்சுபொருந்திப் பொருந்தி, உலகம் படைத்தான்- லோகத்தை ஸ்ருஷ்டித்தவனுடைய, கவியாயினேற்கு – கவியான எனக்கு, இனி-இனி, என்றுமென்றும் – காலமுள்ளதனையும், மற்?ெறாருவர் கவி – மற்?ெறாருவரைக் கவிபாடுகை, ஏற்குமே – தகுதியோ?
ஈடு: – பத்தாம்பாட்டு. ‘ஸர்வே•வரன்கவியான எனக்கு இதரஸ்தோத்ரகரணம் அநுரூபமன்று’ என்கிறார்.
(நின்றுநின்று இத்யாதி) அநாதிகாலம் இடைவிடாதே. (உய்க்கும்) செலுத்தும். இத்வாத்மாவுக்கு பா3த4கத்வேந நடத்தும். (இத்வுடல்) கூற்றங்கண்டாப்போலே ப4யாவஹமாயிருக்கிறபடி. (இத்வுடல்) வர்த்தமாநஶரீரத்தையும், அத்தோடு ஸஜாதீயமான முன்புள்ள ஶரீரங்களையும். முன்புள்ளவையும், வர்த்தமாநம்போலே ஒருபோகியாய்த் தோற்றுகிறதாயிற்று இவர்க்கு. (நீங்கிப்போய்) விட்டுப்போய். (சென்று சென்றாகிலும்): ஒன்றல்லா ஒரு ஜந்மத்திலேயாகிலும். (கண்டு) நம்மை இவன் கண்டு. (சன்மங்கழிப்பான்எண்ணி) ஜந்மஸம்பந்தமறும்படி பண்ணவேணுமென்று மநோரதித்து. அன்றியே, ‘சென்றுசென்றாகிலும்கண்டு’ என்று ஒரு சொல்லாய் நெடுங்காலங்கூடவாகிலும் நம்மையறிந்து இவை ஜந்மங்களிற்புகாதபடி பண்ணவேணுமென்று சிந்தித்து என்றுமாம். (ஒன்றியொன்றி யுலகம்படைத்தான்) _சோம்பாதிப்பல்லுருவை யெல்லாம் படர்வித்தவித்தா_ (பெரிய.திருவ.18) என்கிறபடியே, ஒருகால் ஸ்ருஷ்டித்து ப2லியாவிட்டால் சோம்பிக் கைவாங்காதே, ஒருப்பட்டு ஒருப்பட்டு லோகங்களை ஸ்ருஷ்டித்தவனுடைய; கர்ஷகன் ஒருகால் பயிர்செய்து பதர்த்தால், பின்பும் பயிர் தன்னையே செய்யுமாபோலே, இவனும் ‘ஒருநாளல்லா வொருநாளாகிலுமாம்’ என்றிறே ஸ்ருஷ்டிப்பது; ‘பத்தியுழவன் பழம்புனமிறே’ (நான்.திரு.23) இதுதான். ஒருநாளல்லா வொருநாளாகிலும் நம்மையறிந்து, பலநாளும் இடைவிடாதே இத்வாத்மாவுக்கு பா3தகமாய்க்கொண்டு நடத்துகிற இ•ஶரீரத்தை விட்டுப்போய், இனி இத்வாத்மாக்கள் பிறவாதபடி பண்ணவேணுமென்று மநோரதித்து, ஒன்றியொன்றி உலகம்படைத்தானாயிற்று. (உலகம் படைத்தான் கவியாயினேற்கு) அவன் _எதிர்சூழல்புக்குத்திரிந்து_ (2-7-6) பண்ணின க்ருஷி பலித்து; அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. (என்றும்என்றும் இத்யாதி) காலதத்த்வமுள்ளதனையும் வேறு சிலரைக் கவிபாடத் தகுமோ? அவன் ஸௌஹார்த்தமாகில் இப்படி ப2லித்தது, பின்னை எல்லார்க்கும் ப2லிக்கவேண்டாவே? என்னில்,-அவனுடைய ஸங்கல்பந்தானும், சென்று சென்றாகிலு மென்றிறே- ஒருநாளில் ப2லிக்குமதன்றிறே; ஆகையால், ப2லிக்கப்ப2லிக்கக் காணுமித்தனை. (என்றும் என்றும் இத்யாதி) இனி மேல் அநேகமாயுள்ள காலமெல்லாம் இ•ஶரீரமுள்ளதனையும் இதுவே யாத்ரையாயிருந்து, மேல் *ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே* என்றும், *அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்* என்று பாடப்புகுகிற எனக்கு. (மற்?ெறாருவர்கவியேற்குமே) ‘இப்படி யிருந்த பின்பு பகவத்த்யதிரிக்தர்க்குக் கவிபாடுகை போருமோ? வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ? என்னுதல். வேறு சிலர்கவியிலே நான் அந்வயிக்கத்தகுமோ?’ என்னுதல்.
பதி?ெனான்றாம் பாட்டு
ஏற்கும்பெரும்புகழ் வானவரீசன்கண்ணன்தனக்கு*
ஏற்கும்பெரும்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல்*
ஏற்கும்பெரும்புகழ் ஆயிரத்துள்ளிவையுமோர்பத்து*
ஏற்கும்பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லைசன்மமே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழி சொல்லவல்லார்க்கு ஜந்மமில்லை யென்று ப2லத்தை அருளிச்செய்கிறார்.
ஏற்கும்-(பரத்வஸௌலப்யங்களுக்குத்) தகுதியான, பெரும்புகழ் – குணப்ரதையையுடையனாய், வானவர் <சன் – நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனான மேன்மையோடே, கண்ணன் தனக்கு – (ஸுலபனாய் அவதரித்த) க்ருஷ்ணனுக்கு, ஏற்கும்-(ஸ்தோதாக்களாகைக்கு) அநுரூபமான, பெரும்புகழ் – ஜ்ஞாநாதி குணப்ரதையையுடையராய், வண்குருகூர் சடகோபன் – அழகிய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார், சொல் – அருளிச்செய்த, ஏற்கும் – (பகவத்கு௰திப்ரதி பாதநத்துக்கு) அநுரூபமான, பெரும்புகழ்-லக்ஷணப்ரதையை யுடைத்தாயிருக்கிற, ஆயிரத்துள்-ஆயிரந்திருவாய்மொழிக்குள்ளே, ஏற்கும் – (இதரஸ்தோத்ரத்தைத்தவிர்த்து பகவத்ஸ்தோத்ரத்தை ப்ரதிபாதிக்கையாகிற) ஸ்வரூபாநுரூபமான, பெரும்புகழ் – குணப்ரதையையுடைத்தாய்க்கொண்டு, ஓர் – அத்விதீயமான, இவைபத்தும் – இவைபத்தையும், சொல்ல வல்லார்க்கு – சொல்லவல்லார்க்கு, சன்மம் – (இதரஸ்துதி ஹேதுவான) ஜந்மம், இல்லை – இல்லை. இது கலித்துறை.
ஈடு: – நிகமத்தில், இத்திருவாய்மொழியின் இயல்மாத்ரத்தை அப்யஸித்தவர்களுக்கு பிறரைக்கவிபாட யோக்யமான ஜந்மம் இல்லை என்கிறார்.
(ஏற்கும் இத்யாதி) தகுதியான மிக்க புகழையுடையனாய், நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம்மேன்மையோடே வந்து அவதரித்து மநுஷ்யத்வே பரத்வத்தையுடையவன் தனக்கு: ஒன்பதாமோத்திலே நின்று மநுஷ்யத்வே பரத்வத்தை பரக்கப் பேசாநின்றதிறே. (ஏற்கும் இத்யாதி) ‘அவன் உபய விபூதியுக்தன்’ என்றால் தக்கிருக்குமாபோலே, ‘ஸர்வே•வரன் கவிகள் இவர்’ என்றால் அதுக்குப் போரும்படியிருக்கிற ஆழ்வார் அருளிச்செய்த. (ஏற்கும் பெரும்புகழாயிரம்) ‘*யதோவாசோ நிவர்த்தந்தே* என்ற விஷயத்தை விளாக்குலைகொண்ட ப்ரபந்தம்’ என்றால் அதுக்குப்போரும்படியான ஆயிரம். (இவையும் ஓர்பத்து ஏற்கும் பெரும்புகழ்) ஆயிரத்திலும் இப்பத்துத் தகுதியான பெரும்புகழையுடைத்து. அதாவது ‘இத்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அநநுரூபமாகப் பிறரைக் கவிபாடாதே கொள்ளுங்கோள்’ என்றும், ‘ஸ்வரூப ப்ராப்தமான விஷயத்தைக் கவிபாட வாருங்கோள்’ என்றும் சொன்ன பத்தாகையாலே சொன்ன சொன்ன ஏற்றமெல்லாம் தகும்படி இருக்குமாயிற்று. (இல்லை சன்மமே) நித்யஸூரிகளை ‘பிறரைக்கவிபாடாதே கொள்ளுங்கோள்’ என்று கற்பிக்கவேண்டுகிறதில்லையிறே; பிறக்கை சுட்டியிறே பிறரைக் கவிபாடவேண்டுகிறது. ‘பிறரைக் கவிபாடாதே கொள்ளுங்கோள்’ என்று கற்பிக்கவேண்டும் படியான தண்ணிய ஜந்மத்திலே அந்வயியார்கள்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்கு திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்ரமிடோபநிஷத் ஸங்கதி
அந்யஸ்தவெந விஷயாநதிகந்துமிச்சூந்
ஆலொக்ய விஸ்ம்ருத நிஜவ்யஸநொ தயாளு:।
தஸ்மாந்நிவார்ய மநுஜாந் விபல: ஸ ஶௌரெ:
அந்யெஷ்வநர்ஹ கரணம் நவமெஸ்வமாக்யத் ||
த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ
42 ரம்யஸ்தாநாதியோகாத் அமிதவிபவத: ஸத்பதப்ராபகத்வாத்
ஸம்யக்ஸாயுஜ்யதாநாத் அநகவிதரணாத் ஸர்வஶேஷித்வசிஹ்நாத் ।
ப்ரக்யாதாக்யாஸஹஸ்ரை: அவதரணரஸை: புக்திமுக்த்யாபிமுக்யாத்
த்ரைலோக்யோத்பாதநாச்ச ஸ்துதிவிஷயதநும் வ்யாஹரந்நிந்திதாந்ய: || (3-9)
திருவாய்மொழி நூற்றந்தாதி
சொன்னாவில்வாழ்புலவீர்! சோறுகூறைக்காக*
மன்னாதமானிடரை வாழ்த்துதலால் என்னாகும்?*
என்னுடனேமாதவனை ஏத்துமெனும்* குருகூர்
மன்னருளால் மாறும்சன்மம். 29
ஆழ்வார் திருவடிகளே சரணம் எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.