[highlight_content]

03-10 12000/36000 Padi

பத்தாந்திருவாய்மொழிசன்மம்பலபல : ப்ரவேஶம்

பன்னீராயிரப்படி – பத்தாந்திருவாய்மொழியில், கீழ் – இதர ஸ்தோத்ரத்தினுடைய ஹேயத்வாதிகளையும் பகவத்ஸ்தோத்ரத்தினுடைய வைலக்ஷண்யத்தையும் உபதேசித்து, இப்படி விலக்ஷணமான பகவத்விஷயத்தை நாம் ஸர்வப்ரகாரத்தாலும் அநுபவிக்கப்பெறுவதேயென்று அதிப்ரீதராய், அநுபாத்யனான ஸர்வே•வரனுடைய அவதாரபலமான விரோதிநிரஸநத்தையும், அவதாரத்துக்கு மூலமான க்ஷீரார்ணவஶாயித்வத்தையும், அநவதிகாதிஶயையான ஸர்வவிதபோக்யதையையும், போகப்ரதிஸம்பந்தி ஸமஸ்தவிரோதி நிவர்த்தகத்வத்தையும், அர்த்திகளுக்கு அர்த்திதார்த்தகாரித்வத்தையும், அவதாரதஶையிலும் அதிமாநுஷசேஷ்டிதத்தையும், அவதார நிர்வாஹ்யமான லீலாவிபூதியோகத்தையும், இந்த நிலையிலும், பரத்வஸுசகமான லக்ஷ்மிபதித்வத்தையும், ஸர்வப்ரகார ரக்ஷகத்வத்தையும், ஸர்வாந்தராத்மத்வத்தையும் அநுஸந்தித்து, ஏவம்விதனான ஸர்வே•வரனை ஸர்வப்ரகாராநுபவம் பண்ணப்பெற்ற எனக்கு ஒரு வைகல்யம், விச்சேதம், மந: பீடை, மிறுக்கு, க்லேசம், அப்ரீதி, அலமாப்பு, து:கம், அவஸாதம், விநாஶம், என்று சொல்லப்பட்ட ஸமஸ்ததுரிதங்களும் இல்லையென்று அதிப்ரீதராய், இப்பத்துக்குத் தாத்பர்யமான ஸ்வரூபத்தினுடைய ததேகாநுபவத்தையும் உபபாதித்து முடிக்கிறார்.

ஈடு: – கீழில் திருவாய்மொழியிலே பிறரைக் கவிபாடுகிறவர்களை பகவத்விஷயத்தில் மீட்கப்பார்த்து, அவர்கள் மீளாதொழிய, இவர்களைப் போலேயாகாதே, ‘நான் முந்துறமுன்னம் இதர ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அநர்ஹகரணனாகப்பெற்றேன்’ என்கிறார்; இதரஸ்தோத்ரம் பண்ண அநர்ஹகரணனான மாத்ரமேயோ? ‘பகவத்ஸ்தோத்ரத்துக்கு அர்ஹகரணனாகவும் பெற்றேன்’ என்கிறார். இத்திருவாய்மொழியில் _முடியானே_(3-7)யில் – தாம் அவனை அநுபவிக்கக்கோலி, அதுபெறாமையாலே தாமும் தம்முடைய கரணக்3ராமமும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார்; தாம் இத்விஷயத்திலே கூப்பிடுகிறாப்போலே ஸம்ஸாரிகள் இதர விஷயங்களைப்பற்றிக் கூப்பிடுகிறபடியை அநுஸந்தித்து, அவர்களநர்த்தத்தைக் கண்டவாறே தமக்கு _முடியானே_யில் பிறந்த இழவுதானே பேறாய்த் தோற்றிற்று; அதுக்குமேலே, ‘ஆ•ரிதார்த்தமாகக் கர்மவ•யரைப்போலே, ஸம்ஸாரிகள் நடுவே அவர்களோ டொத்தவடிவைக்கொண்டு அவதரித்த தித்யாவதாரங்களையும், அவதார ஸித்தமான தித்யசேஷ்டிதங்களையும், வடிவழகையும், பூ4ஷணங்கள் சேர்ந்த சேர்த்தியையும்,  தித்யாயுதங்கள் சேர்ந்த சேர்த்தியையும்,  அக4டிதக4டநா ஸாமர்த்யத்தையும் இவற்றையெல்லாம் அநுபவிக்கப் பெற்றேன்; எனக்கு ஒரு குறைகளும் இல்லை’ என்கிறார்.

முதற்பாட்டு

சன்மம்பலபலசெய்துவெளிப்பட்டுச் சங்கொடுசக்கரம்வில்*

ஒண்மையுடைய உலக்கை ஒள்வாள் தண்டுகொண்டுபுள்ளூர்ந்து *உலகில்

வன்மையுடைய அரக்கர் அசுரரை மாளப்படைபொருத*

நன்மை உடையவன்சீர்பரவப்பெற்ற நான்ஓர்குறைவிலனே.

– முதற்பாட்டில், அநேகாவதாரமுகத்தாலே ஆ•ரிதவிரோதி நிரஸநம் பண்ணினவன்குணங்களை ஸ்துதிக்கப்பெற்ற நான் ஒருகுறையுடையேனல்லேன் என்கிறார்.

(_அஜாயமாந:_ என்கிறபடியே அகர்மவ•யனாய்வைத்து), பல – தே3வாதிஜாதி பே43த்தையும், பல – ஓரொன்றில் அவாந்தரபே43த்தையுமுடைத்தான, சன்மம்-ஜந்மவிஶேஷங்களை, செய்து – (ஸங்கல்பமாத்ரத்தாலன்றியே இதர ஸஜாதீயனாய்க்கொண்டு) பண்ணி, வெளிப்பட்டு – (அதீந்த்ரியமான விக்ரஹம் ஸம்ஸாரிகள்கண்ணுக்கு விஷயமாம்படி) ப்ராதுர்பவித்து, (அவதாரப்ரயோஜநமான ஸாது பரித்ராண துஷ்க்ருதவிநாஶத்துக்கு உறுப்பாயுள்ள), சங்கொடுசக்கரம் – (தன்னில்தான்பிரியாத)ஶங்கசக்ரங்கள், வில் – ஸ்ரீசார்ங்கம், ஒண்மையுடைய உலக்கை-விரோதிகளைப4க்3நராக்கும் முஸலாயுதம், ஒள் வாள் – எதிரிகளையழிக்குமிடத்தில் கைவிடாத நந்தகம், தண்டு – க3தை3 (ஆகிய இவற்றை), கொண்டு-உபகரணமாகக்கொண்டு, புள்-பெரியதிருவடியை, ஊர்ந்து – நடத்தி, உலகில் – (தனக்கு ரக்ஷணீயமான) லோகத்தில், வன்மை உடைய – (இத்வழகு கண்டு <டுபடாத) வன்மையை யுடையரான, அரக்கரை – ராக்ஷஸரையும், அசுரரை-அஸுரர்களையும், மாள – மாண்டுபோம்படியாக, படை பொருத – எதிரெதிரே படைவகுத்துப் பொருத, நன்மை – செத்வையாகிற நன்மையை, உடையவன் – உடையவனுடைய, சீர் – ஶௌர்யவீர்ய பராக்ரமங்களையும், ஆ•ரிதவிஷயத்தில் ஸ்வாமித்வவாத்ஸல்யங்களையும், பரவப்பெற்ற – பரக்கப்பேசி ஸ்துதிக்கப்பெற்ற, நான்-நான், ஓர் குறைவு இலன்-(தேஶாந்தரத்திலும் காலாந்தரத்திலும் தேஹாந்தரத்திலும் பகவத்விஷயத்தில் இன்ன அம்சம் அநுபவிக்கப்பெற்றிலோமென்று) ஒரு குறை யுடையேனல்லேன். குறைவு – வைகல்யம்.

ஈடு: – முதற்பாட்டில் இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற அர்த்தத்தை ஸங்க்ரஹேண அருளிச்செய்கிறார்; ‘தித்யாயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியை அநுஸந்திக்கப்பெற்ற எனக்கு ஒரு குறைகளும் இல்லை’ என்கிறார்; ‘ஆ•ரிதரக்ஷ௰ர்த்தமாக அநேகாவதாரங்களைப்பண்ணி அவர்கள் விரோதிகளை நிரஸியாநின்றுள்ள எம்பெருமானுடைய கல்யாணகுணங்களைப் புகழப்பெற்ற எனக்கு ஒருகுறைவில்லை’ என்கிறார். (சன்மம் பலபல இத்யாதி) – ‘அகர்மவ•யனான தான் கர்மவ•யருங்கூடப் பிறவாத ஜந்மங்களை ஏறிட்டுக்கொண்டு வந்து ரக்ஷிப்பானாயிருக்கிற படியை அநுஸந்திக்கப்பெற்ற எனக்கு ஒரு குறைகளுமில்லை’என்கிறார்; ‘ஸர்வே•வரனாய் மேன்மையடித்து இவற்?ேறாடே தோய்வின்றிக்கே  இருக்கை யன்றிக்கே, இவைபட்ட இடரைத் தானுமொக்க வந்துபட்டு ரக்ஷிப்பானாயிருக்கிறபடியை அநுஸந்திக்கப்பெற்ற எனக்கு ஒரு குறைகளுமில்லை’ என்கிறார்.

(சன்மம் பலபல செய்து) – அநேகாவதாரங்களைப் பண்௰நிற்குமாயிற்று. இத்வவதாரத்தை அடியறியுமவர்கள் அவதாரத்துக்கத்வருகு பரத்வத்திலும் போகமாட்டாதேயிறே இருப்பது; (தஸ்யதீ4ரா:பரிஜாநந்தியோநிம்) என்னக்கடவதிறே; (ஜந்ம கர்ம ச மே தித்யம்) என்று தானும் நெஞ்சுளுக்கியிறே இருப்பது.  _பிறந்தவாறும்_
(5-10-1) என்று தீ4மதாமக்3ரேஸரரான இவரும் வித்34ராயிருப்பர். ஜ்ஞாநாதிக்ய மாயிருந்ததிறே ஆழங்காற்படுகைக்கு ஹேது. இனியது விஞ்சின இடங்களிலே மிகவும் ஆழங்காற்படுகைக்கு உடலாமித்தனையிறே. (பல) – ஓரவதாரத்தை அநுஸந்தித்தால் _எத்திறம்!_ (1-3-1) என்று வித்34ராமவர் அநேகாவதாரத்தைப் பொறுக்கமாட்டாரிறே. (பலபல) – கர்மவ•யன்பிறவிக்கு எல்லைகா௰நின்?ேறாம்; அகர்மவ•யன்பிறவிக்கு எல்லை காண்கிறிலோம் என்றதாயிற்று. கர்மத்துக்கு அவதி4யுண்டு, அநுக்ரஹத்துக்கு அவதி4யில்லை. தன்னுடைய ஜந்மங்களைத் தானே சொல்லப்புக்காலும் *பஹுநி* என்னும்படியாயிறே இருப்பது. (பலபல) – தே3வாதி3யோநிபே43ங்களும், அவாந்த்தர பேதங்களும். (செய்து) – ஆவிர்பா4வமாத்ரமன்றிக்கே, கர்மவ•யன் பத்துமாஸம் க3ர்ப்பவாஸம் பண்ணுமாகில், (தத•சத்3வாத3ஶேமாஸே) என்று பன்னிரண்டு மாஸம் க3ர்ப்ப4வாஸம்பண்ணி வந்து அவதரிக்கை. _பன்னிருதிங்கள் வயிற்றிற் கொண்டவப்பாங்கினால்_ (பெரியாழ்.திரு. 32-8) என்றார்களிறே பெற்றவர்களும். (பிதாபுத்ரேணபித்ருமாந் யோநியோநௌ, நாவேத3விந்மநுதே தம் ப்3ருஹந்தம்) என்கிறபடியே ஸர்வகாரணபூதனான தான் ஸ்வகார்யங்களிலே ஒன்றுக்குக் கார்யமாயிறே வந்து அவதரித்தது. (வெளிப்பட்டு) (ந சக்ஷுஷா க்3ருஹ்யதே) என்கிற தன்னைக் கண்ணுக்குவிஷயமாக்கி. எப்போதும் போகிறவிடத்திலே நிதி கண்டெடுப்பாரைப்போலே, அப்ராக்ருத தி3த்யஸம்ஸ்த்தாநத்தை இதரஸஜாதீயமாக்கி வந்து அவதரிக்கை. அப்ராக்ருதமான த்3ருஷ்டிகளாலே ஸதா தர்ஶநம்பண்ணக்கடவ வடிவை மாம்ஸசக்ஷுஸ்ஸுக்களுக்கு விஷயமாக்கிக் கொண்டுவந்து காட்டுகை. _என்றேனும் கட்கண்௰ற்கா௰த அத்வுருவை_ (பெரிய.திருவ.28)யிறே கண்ணுக்கு இலக்காக்குகிறது. (சங்கொடு இத்யாதி) – தன்னிற்பிரியாத ஸௌப்ராத்ரம்; (க3ச்சதாமாதுலகுலம் ப4ரதேந) இத்யாதிவத். அவதரிக்கும்போது தித்யாயுதங்களோடே வந்தாயிற்று அவதரிப்பது. இங்குநின்றும் போவார்க்கு ப்ராப்யராமவர்களோடே கூட வந்தாயிற்று அவதரிப்பது. கண்டநுபவித்த அநந்தரம் _அடியார்கள்குழாங்களை – உடன்கூடுவதென்றுகோலோ_ (23-10) என்று ப்ரார்த்திக்கவேண்டாதபடி அவர்களோடே கூடக்காட்சி கொடுக்கை. (சங்கொடு சக்கரம்) – ஒன்றேயமைந்திருக்கச்செய்தே. (வில்) – ஒருகொத்துக்கு ஒருவரைக்கொண்டு வருகையன்றிக்கே. (ஒண்மையுடைய உலக்கை) ஒண்மை-அறிவு. ‘கருதுமிடம்’ (10-6-8) பொரும்படி ஜ்ஞாநாதிக4ராயிருப்பார்களே. (ஒள்வாள் தண்டுகொண்டு) – கையிலே தி3த்யாயுதங்களைக் கண்டால் ‘இவை வினைக்கு உடலாக த4ரித்துக் கொண்டிருக்கிறான்’ என்றிருப்பார் ஸம்ஸாரிகளாயிற்று; அங்ஙனன்றிக்கே, நித்யஸூரிகள் ‘அழகுக்கு உடலாக தரித்துக்கொண்டிருக்கிறான்’ என்றிருப்பர்கள்!  இவரும் அவர்களிலே ஒருவராகையாலே அழகுக்கு உடலாகவே அநுஸந்திப்பது. ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலேயாயிற்று வடிவும் தி3த்யாயுத4ங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது. (புள் ஊர்ந்து) இதுவும் ஒரு சேர்த்தியழகு; * பொன்மலையின் மீமிசைக்கார்முகில் (9-2-6) போலேயிறே இருப்பது. (உலகில்) – இத்வழகுதான் ஒருதேஶவிஶேஷத்தே நித்யஸூரிகள் அநுபவிக்குமதிறே; அங்ஙனேயிருக்கச்செய்தே இங்கே அநுபவிக்கும்படி பண்ணினான். (வன்மை இத்யாதி) – இத்வழகைக்கண்டு நெஞ்சுநெகிழாதவர்களான ராக்ஷஸர்களையும் அஸூரர்களையும். இத்விஷயத்தில் தம்முடைய மென்மைபோலே எல்லார்க்கும் இருக்குமோ? என்றிருக்கிறார். ‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகுமே’ (9-6-2) தமக்கு. _அவனைக் கா௰தபோது _<•வரோஹம்_ என்றிருக்கலாம்; தி3த்யாயுத4ங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘ஶரணம்’ என்னுதல், எழுத்துவாங்குதல் செய்கையன்றிக்கே எதிரிடுவதே பையல்கள்!_ என்கிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழமாட்டாதே, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார். (மாளப்படைபொருத) – அவர்கள் முடியும்படி ஆயுத4த்தாலே பொருத. யுத்தத்திலே புக்குநின்று, ஆரோதமடித்தல், ‘ஸ்வகீயஜந்துக்கள்’  என்று ஆந்ருஶம்ஸ்யங் கொண்டாடுதல் செய்யாதே, ‘ஆ•ரித விரோதிகள்’ என்று அழியச்செய்த நன்மையுடையவன். அன்றியே, ஸங்கல்பத்தாலே செய்யாதே, அவதரித்து யுத்தம்பண்ணி முடித்த நன்மை யாகவுமாம். ‘மழுங்காதஞானமே  படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால்  உன் சுடர்ச்சோதி மறையுமிறே’ (3-1-9) என்றாரிறே இவர்தாம். அக்நீஷோமீயஹிம்ஸைகளில் கைகூசினானாகில் ப்ராய•சித்தம் பண்ணவேண்டாநின்றதிறே. (நன்மையுடையவன்சீர் பரவப்பெற்ற நான்) – அவனுடைய கல்யாணகுணங்களை அக்ரமமாகச் சொல்லப்பெற்ற நான். (ஓர் குறைவிலனே) – முதலிலே ஸம்ஸாரிகளைப்போலே அறியாதொழிதல், அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப்பேச நிலமன்றிக்கேயிருத்தல்,
–ஶுபாலாதிகளைப்போலே ‘நம்மிலேயொருத்தன்’ என்று பரிப4வித்து முடிந்துபோதல். ஸ்ரீவிஸ்வரூபத்தில், அர்ஜுனனைப்போலே நீச்சுநீராதலன்றிக்கே இத்விஷயத்தைப் புகழ்பெற்ற எனக்கு ஒருகுறைகளுமில்லை யென்கிறார். (ஸோ•நுதே ஸர்வாந் காமாந்) என்று ஒரு தேஶவிஶேஷத்திலே அநுபவிக்கக்கடவ கு௰நுப4வத்தை இங்கே அநுப4விக்கப்பெற்ற எனக்கு ‘பரமபதத்தில் போகப்பெற்றிலேன்’ என்கிற குறையுண்டோ?

இரண்டாம் பாட்டு

குறைவில்தடங்கடல்கோளரவேறித் தன்கோலச்செந்தாமரைக்கண்*

உறைபவன்போல ஓர்யோகுபுணர்ந்த ஒளிமணிவண்ணன்கண்ணன்*

கறையணிமூக்குடைப்புள்ளைக்கடாவி அசுரரைக்காய்ந்த அம்மான்*

நிறைபுகழேத்தியும்பாடியும் ஆடியும் யான் ஒருமுட்டிலனே.

– அநந்தரம், இத்விரோதிநிரஸநார்த்தமான அவதாரத்துக்கு மூலமான க்ஷீரார்ணவஶாயியினுடைய ரக்ஷ௰ர்த்த ப்ரத்ருத்தியால் வந்த புகழை ப்ரீதிபூர்வகமாக அநுபவிக்கப்பெற்ற நான்ஒரு விச்சேதமுடையேனல்லேன் என்கிறார்.

குறைவு இல் – தன்னுடைய ஸம்•லேஷத்தாலே பரிபூர்ணமாய், தடம் கடல் – (கண்வளருகைக்கு) இடமுடைத்தான கடலிலே, கோள் அரவு – பெருமிடுக்கனான திருவநந்தாழ்வான்மேல், ஏறி – ஏறி, தன் கோலம் – தன் <•வரத்வ ஸூசகமான அழகை யுடைத்தாய், செந்தாமரைக் கண்ணுறைபவன்போல – சிவந்த தாமரைபோலே யிருக்கிற திருக்கண்கள் மலரும்படி உறங்குவான்போலே, ஓர்யோகு புணர்ந்த – அத்விதீயமான  தித்யாத்மஸ்வரூபாநுஸந்தாநத்திலும், ஜகத்ரக்ஷணசிந்தையிலும் பொருந்தி, மணி – தகட்டிலழுத்தின மாணிக்கம்போலே, ஒளி – பேரொளியை யுடைத்தான, வண்ணன் – வடிவை யுடையனாய், கண்ணன் – (அக்கிடையை விட்டு _ஆகதோ மதுராம்புரீம்_ என்று) க்ருஷ்ணனாய் அவதரித்து, கறை அணி-(அண்டம் பக்வமாவதற்கு முன்னே உடைக்கையாலே அக்3ரத்திலே) கருகுதலாகிற அடையாளத்தை ஆபரணமாக வுடைத்தான, மூக்குடை – திருமூக்கையுடைய, புள்ளை – பெரியதிருவடியை, கடாவி – நடத்தி, அசுரரைக் காய்ந்த – அஸுரரை ஸ்வப்ரதாபத்திலே நசிப்பித்த, அம்மான் – ஸர்வாதிகனுடைய, நிறை புகழ் – பரிபூர்ணமான விஜயப்ரதையை, ஏத்தியும் – (ப்ரீதியுக்தனாய்க்கொண்டு) ஸ்தோத்ரம் பண்ணியும், பாடியும் – இசையிலே வைத்துப்பாடியும், ஆடியும் – (ஹர்ஷத்தாலே)ந்ருத்தம் பண்ணியும் வர்த்திக்கிற, யான் – நான், ஒருமுட்டு இலன் – ஒரு விச்சேதம் உடையேனல்லேன்.  முட்டு – விலக்கு. கறையணி மூக்கென்று – விரோதிகளைத் துண்டிக்கையாலே கறையேறின மூக்கென்றுமாம். கோள் – மிடுக்கு; ஒளியுமாம்.

ஈடு: – இரண்டாம் பாட்டு. முதற்பாட்டில் திருவவதாரங்களைச் சொன்னார்; இதில் ‘திருவவதார கந்தமாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்து, அங்குநின்றும் ஸ்ரீவஸுதேவகுமாரனாய் வந்து திருவவதாரம்பண்ணி ஆ•ரிதவிரோதிகளை அழியச்செய்த க்ருஷ்ணனுடைய புகழைப் பேசப்பெற்ற எனக்கு ஒரு தட்டில்லை’ என்கிறார்.

(குறைவில் தடங்கடல்) – நானேயன்று,  என்னிலும் குறைவற்றாருண்டு. ‘தடங்கடல்’ என்னாநிற்கச்செய்தே, குறைவில் தடங்கடலென்றது – _திருமேனி நீ தீண்டப்பெற்று – மாலுங்கருங்கடலே என்?ேனாற்றாய்_ (முதல்.திரு. 19) என்னுமாபோலே, அவ?ேனாட்டை ஸ்பர்ஶஸுகத்தாலே குறைவற்றிருக்கை. யஶோதைப்பிராட்டி க்ருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உகக்குமாபோலே, ஸர்வே•வரனைத் தன்னுள்ளே யிட்டுக்கொண்டு அத்தாலே உகந்து குறைவற்றிருக்கை. (தடங்கடல்) அஸங்குசிதமாகக் கண்வளர்ந்தருளும் படி இடமுடைத்தான கடல். (கோளரவு ஏறி) கோளென்று – ஒளியாய், திருமேனியோட்டை ஸ்பர்ஶத்தாலே நிரவதிகதேஜஸ்ஸையுடையனான திருவநந்தாழ்வான்மேலே ஏறி யென்னுதல்; அன்றிக்கே, கோளென்று – மிடுக்காய், (ப்ரக்ருஷ்டவிஜ்ஞாநப3லைகதாமநி) என்கிறபடியே ஸர்வே•வரனும் ஸர்வே•வரியுங் கூடித் துகையாநின்றால் பொறுக்கைக்கு <டான தா4ரணஸாமர்த்த்யத்தை யுடையனாயிருக்குமென்னுதல். (அரவு) மென்மை, குளிர்த்தி, நாற்றம் இவற்றை ப்ரக்ருதியாகவுடையனாயிருக்கை. (தன் இத்யாதி) வெறும்புறத்திலே ஆலத்திவழிக்க வேண்டும்படியாய், ஸர்வை•வர்யஸூசகமாய், பெரிய பிராட்டியாரோட்டைக் கலவியாலே வந்த ஆநந்தஸூசகமாய், அப்போதலர்ந்த செத்வித் தாமரையை ஓரு பமை சொல்லலாம்படி அழகியதாய்ச் சிவந்திருந்துள்ள திருக்கண்கள். (உறைகை – உறங்குகை). கண்ணுறைகை-கண்வளர்ந்தருளுகை. கண்வளருகையென்று பேராய், ஜகத்ரக்ஷணசிந்தாயுக்தனாகை. (ஓர்யோகுபுணர்ந்த) – ‘ஸகலப்ராணிகளும் நம்மைக்கிட்டிக் கரைமரஞ்சேர்ந்ததாம் விரகேதோ?’ என்று இவற்றினுடைய ரக்ஷ?ே௰பாய சிந்தை பண்ணினால் அத்வநுஸந்தானம் பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரநிகரம் வாயிலேயிடுவாரைப்போலே, (ஆத்மாநம் வாஸு தே3வாக்2யம் சிந்தயந்) என்று தன்னைத் தானே அநுஸந்தியாநிற்கும். இப்படி அநுஸந்தித்தவாறே ரக்ஷ?ே௰பாயம் தோற்றுமே: (ஒளிமணிவண்ணன் கண்ணன்) – ரக்ஷ்யவர்க்கத்தைத் தன்வடிவழகாலே கரைமரஞ்சேர்க்கைக்காக க்ருஷ்ணனாய்வந்து அவதரித்தவன். _ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோ_ (பெரியாழ்.திரு.1-6-11) இறே. ஒளியையுடைய நீலமணிபோலேயிருக்கிற வடிவையுடைய க்ருஷ்ணன். (கறையணி இத்யாதி) – ப்ரதிபக்ஷத்தைக் கொன்று கறைகழுவ அவஸரமின்றிக்கேயிருக்கையாலே கறையேறி, அதுவே ஆபரணமாயிருக்கும் மூக்கு என்னுதல்; அன்றிக்கே, தாயார் ‘புத்ரமுகங் காணவேணும்’ என்னும் அபிநிஶேத்தாலே முட்டையாயிருக்கிற பருவத்திலே ஒருஉத்யோகத்தைப் பண்ணினாளாய், அத்தால்  ஓரடையாளம்பிறந்து, அதுதான் எம்பெருமானுக்கு ஸ்ரீவத்ஸத்தோபாதியாய், அத்தை ஆபரணமாகவுடைய புள் என்றுமாம். (கடாவி) – ரதாதிகளை நடத்துமாபோலே, திருமேனியோட்டை ஸ்பர்ஶத்தாலே திமிர்ந்து, வடிம்பிட்டுத் தாக்கி நடத்தவேண்டியிருக்கிறபடி. (த்வத3ங்க்ரி ஸம்மர்த்த3கி௰ங்கஶோபிநா) என்னக்கடவதிறே. (அசுரரைக்காய்ந்த) – இப்படி பெரியதிருவடியை நடத்தாநின்றுகொண்டு ஆஸூரவர்க்கத்தை நசிப்பித்த. ஆ•ரிதருடைய போ4கோ3பகரணமே ஆ•ரிதவிரோதிநிரஸந பரிகரமு மென்கை. (அம்மான்) – இப்படி சிறியத்தைப் பெரியது நலியாதபடி நோக்கும் நிருபாதிகஶேஷி. (நிறைபுகழ் இத்யாதி) – ‘இந்த ரக்ஷணத்தாலே குறைவற்ற புகழை, ப்ரீதிப்ரகர்ஷத்தாலே ஏத்தியும் பாடியும், ப்ரேமபாரவ•யத்தாலே இருந்தவிடத்திலிராதே ஆடியும் வர்த்திக்கிற நான், பகவத்போ4கத்துக்கு ஒரு ப்ரதிஹதியுடையேனல்லேன்’ என்கிறார். முட்டு – விலக்கு.

மூன்றாம் பாட்டு

முட்டில்பல்போகத்தொருதனிநாயகன் மூவுலகுக்குரிய*

கட்டியைத்தேனையமுதை நன்பாலைக்கனியைக்கரும்புதன்னை*

மட்டவிழ்தண்ணந்துழாய்முடியானைவணங்கி அவன்திறத்துப்

பட்டபின்னை* இறையாகிலும் யான் என்மனத்துப்பரிவிலனே.

– அநந்தரம், நிரவதிக ஸர்வப்ரகாரபோக்யதையை அநுபவித்த நான் ஒரு மந: பீடையையுடையேனல்லேன் என்கிறார்.

மூவுலகுக்கு உரிய-த்ரிவிதசேதநாசேதநங்களுக்கு அஸாதாரணபூதனாய், முட்டு இல் – அவிச்சிந்நமாய், பல்போகம் – பஹுவிதமான போகஸம்ருத்தியையுடைய, ஒரு-அத்விதீயனான, தனிநாயகன் – ப்ரதாநநாயகனாய், நல்கட்டியை – அந்தர்பஹி•ச
ரஸகநமான கருப்புக்கட்டி, நல்தேனை – ஸர்வரஸஸமவாயமான தேன், நல் அமுதை – நித்யபோக்யமான அம்ருதம், நல் பாலை – ஸ்வாபாவிகரஸமான நன்மையையுடைய பால், நல் கனியை – அப்போதே நுகரவேண்டும் பக்வமான கனி, நல் கரும்புதன்னை – கணுத்தோறுமினிதான கரும்பு, (என்னலாம்படி ஸர்வவிதபோக்யதையையுடையனாய்), மட்டு – (இந்தபோக்யதாஸூசகமாய்) மதுஸ்யந்தியாய், அவிழ் – விகஸிதமாய்க்கொண்டு, தண் – குளிர்ந்து, அம் – அழகியதான, துழாய் – திருத்துழாயாலே அலங்க்ருதமான, முடியானை – திருவபிஷேகத்தையுடையவனை, வணங்கி – (இந்த போக்யத்வஶேஷித்வங்களுக்குத் தோற்று) வணங்கி, அவன்திறத்து – அவன்விஷயத்திலே, பட்டபின்னை-(அநந்யார்ஹமாம்படி) உட்பட்டபின், யான் – (பரிபூர்ணவிஷயாவகாஹியான) நான், இறையாகிலும் – ஏகதேசமாகிலும், பரிவு – (இதரவிஷய ஸம்பாவிதமான அலாபவைகல்ய விச்சேத து:கோத்தரத்வாதி நிபந்தநமான) பரிப்பானது, என் மனத்து – என்மநஸ்ஸில், இலன் – உடையேனல்லேன். பரிவு – பரிப்பாய், மந:பீடை யென்கிறபடி. மூவுலகுக்குரிய கட்டி யென்று – ஶேஷித்வத்தோபாதி போக்யதையும் ஸாதாரண மென்றுமாம்.

ஈடு: – மூன்றாம் பாட்டு. ‘ஸர்வே•வரனுடைய போ4க்யதாநுஸந்தாந ப்ரீதிப3லாத்காரத்தாலே அவனுக்கு அடிமை செய்கையிலே ப்ரத்ருத்தனான எனக்கு, க்ஷுத்ரவிஷய ப்ராவண்யத்தால் வரும் ஹ்ருதயது:க்கம் இல்லை’ என்கிறார்.

(முட்டில் இத்யாதி) – சிலநாள் சென்றவாறே முட்டுப்படக்கடவதன்றிக்கே, அஸங்க்க்யேயமான போ43ங்களையுடையனாய், அத்3விதீயனான தனிநாயகன். அதாவது – தன்னை ‘நாயகன்’என்றால், பின்னை இரண்டாம்விரலுக்கு ஆளில்லாதபடி யிருக்கை. ப்ரஹ்மாதிகளுக்கும் ஏகாதிபத்யஞ் சொல்லக்கடவது; அவர்களை  த்யாவர்த்திக்கைக்காக  அத்3விதீயனான தனிநாயகனென்கி­றார். ‘மூவுலகுக்கு உரிய – ஒரு தனிநாயகன்’ என்று கீழே கூட்டுவது.  ஸ(முட்டில்பல்போகம்) – ஐ•வர்ய கைவல்யங்களை த்யாவர்த்திக்கிறது.ூ ‘(த்ரைலோக்யமபிநாதேந யேநஸ்யாந்நாதவத்தரம்) என்கிறபடியே, (ஸர்வலோக ஶரண்யாய) என்று என்?ேனாபாதி பெருமாளுக்கு உங்களால் சொல்லலாவது உண்டோ?’ என்னும்படியிறே இருப்பது. அன்றிக்கே _மூவுலகுக்குரிய கட்டியைத்தேனை_ என்று – போக்யதையும் ஸர்வ ஸாதாரணமாயிருக்கை. (கட்டியை) உள்ளோடு புறம்போடு வாசியற ரஸக4நமாயிருக்கை; (ரஸோவை ஸ:) (தேனை) – கட்டியின்  காடி2ந்யம் தவிர்ந்திருக்கை. (அமுதை) – சாவாமல் காப்பதுமாய் விலக்ஷணபோ4க்3யமுமாயிருக்கை. (நன்பாலை) – அவிலக்ஷணர்க்கும் போ4க்3யமாயிருக்கை. ‘நன்மை’ எங்கும் கூடக்கடவது. (கனியை) – கண்டபோதே நுகரலாம்படி பக்வப2லமாயிருக்கை. (கரும்புதன்னை) – கைதொட்டு ரஸிப்பிக்கவேண்டுங் குற்றமின்றிக்கே யிருக்கை. ஆக, (ஸர்வரஸ:) என்கிறபடியே  கீழ்ச்சொன்னவை யெல்லாம் உபமாநமாகப் போராமையாலே அதுதன்னையே சொல்லுகிறது. இவருடைய  ஷட்3ரஸம் இருக்கிறபடி. (மட்டவிழ் இத்யாதி) – மது4ஸ்யந்தியாநிற்கிற திருத்துழாயாலே அலங்க்ருதமான திருவபிஷேகத்தை யுடையவனை. ஆக, ஆ•ரயணீய வஸ்துவுக்கு ஸ்வரூபம் சொல்லிற்று. (வணங்கி அவன்திறத்துப்பட்ட பின்னை) – வணங்கிக்கொண்டு அவன்திருவடிகளிலே கிட்டுகை ஶேஷபூதனுக்கு ஸ்வரூபம். காலயவந ஜராஸந்தாதிகளைப்போலே படைவீட்டை அடைமதிட்படுத்தி வந்து கிட்டுகையன்றிக்கே, முறையிலே அவன் பக்கலிலே அந்வயித்த பின்பு. (இறையாகிலும்) – அத்யல்பமாகிலும். (யான்) – விஷயாந்தர விமுகனான நான். (என் மனத்துப் பரிவிலனே) ‘(ரஸம் ஹ்யேவாயம் லப்த்4வாநந்தீ3 பவதி) என்று ‘ஒரு தேச விஶேஷத்தில் போனால் பூர்௰நுபவம் பண்ணலாவது, இங்கேயிருந்து குறைய அநுபவியாநின்றேன்’ என்னுமத்தால் வரும் மநோது:கமுண்டோ எனக்கு?’ என்கிறார்.

நான்காம் பாட்டு

பரிவின்றிவாணனைக்காத்துமென்று அன்றுபடையொடும்வந்தெதிர்ந்த*

திரிபுரஞ்செற்றவனும்மகனும் பின்னும்அங்கியும்போர்தொலைய*

பொருசிறைப்புள்ளைக்கடாவியமாயனை ஆயனைப்பொற்சக்கரத்து

அரியினை* அச்சுதனைப்பற்றி யான்இறையேனும்இடரிலனே.

அநந்தரம், போகப்ரதிபந்தகஸமஸ்தவிரோதிநிவர்த்தகனாய், ஆ•ரிதரைக் கைவிடாத அவனைப் பற்றின நான் ஒருமிறுக்குடையேனல்லேன் என்கிறார்.

அன்று – (அநிருத்தனுக்காகத் தானேயெழுந்தருளின) அன்று, வாணனை – வாணனை, பரிவு இன்றி – மிறுக்கு அற, காத்தும் – காக்கக்கடவோம், என்று – என்று பஹுமாநோக்தி பண்ணி, படையொடும் – ஆயுதங்களோடே, வந்து எதிர்ந்த – வந்து எதிரேறின, திரிபுரம்செற்றவனும் – த்ரிபுரதஹநஶக்த்யபிமாநியான ருத்ரனும், மகனும் – அவன்மகனாய் தேவஸேநாபதியான ஏற்றத்தையுடைய ஸுப்ரஹ்மண்யனும், பின்னும் – அதுக்குமேலே, அங்கியும் – (‘ருத்ரன் தான்’ என்னலாம்படி க்ரௌர்யத்தையுடைய) அக்நியும், போர் தொலைய – ‘இனி ஒரு யுத்தம் என்று வாரோம்’ என்று நித்ருத்தராய்ப் போம்படி, பொரு – பொருகிற, சிறை – திருச்சிறகையுடைய, புள்ளை – பெரிய திருவடியை, கடாவிய – நடத்தின, மாயனை – ஆ•சர்யபூதனாய், ஆயனை – அவதாரமுகத்தாலே தன்னைத் தாழவிட்டு நிற்குமவனாய், பொன் – தர்ஶநீயமான, சக்கரத்து – திருவாழியையுடையனாய்க்கொண்டு, அரியினை – விரோதிகளை யழியச்செய்து, அச்சுதனை – ஆ•ரிதரைக்கைவிடாதவனை, பற்றி – ப்ராபித்து, யான் – (அநுபவிக்கிற) நான், இறையேனும் – ஏகதேசமும், இடர்இலன் – மிறுக்கை யுடையேனல்லேன். இடர் – இடைஞ்சலாய், மிறுக்கு என்றபடி.

ஈடு: – நாலாம் பாட்டு. ‘தேவதாந்தரங்களைப்பற்றினார்க்கு அவர்கள் தஞ்சமல்லரென்னுமிடத்தையும், தன்னைப் பற்றினார்களைத் தான் விட்டுக்கொடான் என்னுமிடத்தையும் காட்டின இவனைப் பற்றின எனக்கு ஒருது:க்கமில்லை’ என்கிறார்.

(பரிவின்றி இத்யாதி) – அநிருத்தாழ்வானைப்பற்ற க்ருஷ்ணன் எடுத்துவிட்ட அளவிலே, வாணன் ருத்ரன் பக்கலிலே சென்று, ‘க்ருஷ்ணன் நமக்கு எதிரியாய் வாராநின்றான்’ என்று சொன்னவாறே, ‘தலையில்வைத்த பூ வாடாமல் வருத்தமற வாணனைக் காக்கக்கடவோம்’ என்று சொன்னானாயிற்று, க்ருஹத்துக்குள்ளே யிருந்து தந்தாம் சேவகஞ் சொல்லுவாரைப்போலே; இச்சக்கரவர்த்திதிருமகன் (ஏதத்த்ரதம்மம) என்கிறா?ேனா? (அன்று) – அநிருத்தாழ்வானைச் சிறையில்வைத்த அன்று. (படையொடும் வந்தெதிர்ந்த) – ‘தனக்கு விஜயம் த்யவஸ்த்திதம்’ என்று அது காண்கைக்கு ஸேநையைத் திரட்டிக்கொண்டு வந்த; _முண்டனீறன்_ (திருச்சந்த.71) இத்யாதி. படை – ஆயுத மென்றுமாம்; (பாரவ•யம் ஸமாயாத• ஶூலீ) என்று ஆயுதத்தோடே மோஹித்தபடி. ‘தன் வெறுமையை முன்னிட்டு அஞ்சலியைக்கொண்டுவந்துகிட்டும் விஷயத்தை இப்படி ஸாயுதனாய் எதிரிடுகைக்கு ஹேதுவென்?’ என்ன, (திரிபுரம் செற்றவனும்) – த்ரிபுரதஹநமாகிற அபதா3நத்தாலே ஸஞ்ஜாதாபிமாநனாகையாலே. கடல் கடைகிறபோது எட்டுவடிவுகொண்டுநின்று கடைந்தாற்போலே, த்ரிபுரதஹநஸமயத்திலே வில்லுக்கு மிடுக்காயும், நாணிக்குத் திண்மையாயும், அம்புக்குக் கூர்மையாயும், தனக்கு அந்தராத்மாவாயும் எதிரிகளைத் தலைசாயும்படிபண்ணி த்ரிபுரத்தை அழித்துக் கொடுத்தான்; அத்தை யறியாதே அஜ்ஞரானவர்கள் இத்தை அவன் தலையிலே வைத்துக் கவிபாட, இத்தைத் தானும் கேட்டு ‘மெய்யிறே’ என்று ப்4ரமித்து, ‘அதுசெய்த நமக்கு இவனை வெல்லத் தட்டென்?’ என்று வந்து எதிரிட்டானாயிற்று. இத்தால் சொல்லிற்றாயிற்று – ருத்ரன், தன்னை அபா•ரயமாகப் பற்றினாரை ஆபத்து வந்தவாறே காட்டிக்கொடுத்து ஓடும் என்னுமிடமும், ஸர்வே•வரன், தன்னைப் பற்றினாரை எல்லா அளவிலும் ரக்ஷிக்கும் என்னுமிடமும். (மகனும்) – பிதாவான ருத்ரன் வளர்ந்த பின்பு செய்தவற்றைப் பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்து இளமறியாய்ப் பெருமிடுக்கனாய் தேவஸேநாதிபதியான ஸூப்ரஹ்மண்யனும். (பின்னும் அங்கியும்) – அவனுக்குமேலே நாற்பத்தொன்பது அக்நிகளும். (போர்தொலைய) போரிலே மாள. ( பொருசிறைப்புள் இத்யாதி) ப்ரதிபக்ஷத்தின் மேலே பொருகிற பக்ஷத்தையுடைய பெரிய திருவடியைக் கருத்தறிந்து நடத்தவல்ல ஆ•சர்ய பூ4தனை. இங்கு ஆ•சர்யமாவது – வாணனுடைய கரத்தைக் கழித்து அவனை இறையிலிசெய்து, நாட்டுக்குத் தானே நின்றிறையான ஆ•சர்யம். _வாணனாயிரங் கரங்கழித்த ஆதிமால்_ (திருச்சந்த.53) இறே. (ஆயனை) – அவன்தோற்றது தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; இவன் வென்றதும் தன்னைத்தாழவிட்டவிடத்திலே. (பொற்சக்கரத்தரியினை) – அநுகூலர்க்கு ஸ்ப்ருஹணீயமான திருவாழியைத்தரித்து ஶத்ருக்களுக்கு அப்ரத்4ருஷ்யனானவனை. (க்ருஷ்ணக்ருஷ்ண மஹாபா3ஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்) – தோள்வலி கண்ட பின்பாயிற்று ஸர்வே•வரன் என்று அறிந்தது. (அச்சுதனை) – ஆ•ரிதரை நழுவவிடாதவனை. ருத்ரன், தன்னை ஆ•ரயித்த வாணனைக் கைகழியவிட்டு ஓடினானிறே; _சடையா?ேனாட வடல்வாணன் தடந்தோள்துணித்ததலைவன்_ (திருமொழி 5-1-7) இறே இவன். தலைமையாவது – வாணனைக் கைம்முதலறுத்துத் தலையழியாமே வைத்த தலைமை. அநிருத்தாழ்வானுக்காக மார்விலே அம்பேற்கையாலே ‘ஆ•ரிதர்க்குத் தஞ்சம்’ என்று வி•வஸிக்கத் தட்டில்லை. (பற்றி யான் இறையேனும் இடரிலனே) – இவனைப்பற்றின எனக்கு அல்பது:கமுமில்லை. ‘பேரன்’ என்றிருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலுநாள் சிறையிலிருக்க வேண்டிற்று; ‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்றில்லை.

ஐந்தாம் பாட்டு

இடரின்றியேஒருநாளொருபோழ்தில் எல்லாவுலகுங்கழிய*

படர்புகழ்ப்பார்த்தனும்வைதிகனும் உடனேறத்திண்தேர்கடவி*

சுடரொளியாய்நின்றதன்னுடைச்சோதியில் வைதிகன்பிள்ளைகளை*

உடலொடுங்கொண்டுகொடுத்தவனைப்பற்றி ஒன்றும் துயரிலனே.

– அநந்தரம், அர்த்தியான வைதிகனுடைய அர்த்திதார்த்தகாரியானவனைப் பற்றின நான் ஒருக்லேஶ முடையேனல்லேன் என்கிறார்.

இடர் இன்றியே – மிறுக்கு இன்றிக்கே, ஒருநாள் – ஒருதிவஸத்திலே, ஒருபோழ்தில்-(ஒருகர்மம் சமைந்து கர்மாந்தராநுஷ்டாநத்துக்கு இடையா யிருப்பது)ஒருகாலத்திலே, எல்லாவுலகும் – ஸர்வலோகத்துக்கும், கழிய – அத்வருகே கழிந்துபோம்படியாக, படர்புகழ் – (க்ருஷ்௰•ரயத்வாதியாலே) விஸ்தீர்ண யஶாவான, பார்த்தனும் – அர்ஜுநனும், வைதிகனும் – ப்ராஹ்மணனும், உடன் ஏற – கூட ஏறிப்போம்படி, திண் தேர் – (காரணதத்த்வாந்வயத்திலும் கார்யரூபஶைதில்யம் பிறவாதபடி) திண்மையையுடைத்தான தேரை, கடவி – கடவி, சுடர் ஒளியாய் நின்ற – அத்யுஜ்ஜ்வல தேஜோமயமாய்ப் பரி௰மாதிரஹிதமாய்நின்ற, தன்னுடைச் சோதியில் – தன்னதான பரஞ்ஜ்யோதி•ஶப்தவாச்யமான தேசத்திலே, வைதிகன்பிள்ளைகளை – அந்த வைதிகபுத்ரர்கள் நால்வரையும், உடலொடும் – (காலக்ருத பரி௰மமில்லாத தேஶமாகையாலே) அந்த ஶரீரத் தோடேயும், கொண்டு கொடுத்தவனை – கொண்டுவந்து அவனுக்குக்கொடுத்தவனை, பற்றி – கிட்டியநுபவித்து (அத்தாலே), ஒன்றும் – ஒரு ப்ரகாரத்தாலும், துயர் இலன் – ஸம்ஸாரக்லேஶம் இன்றியிலேயொழிந்தேன்.

ஈடு: – அஞ்சாம் பாட்டு. வைதிகபுத்ராநயநத்தை அநுஸந்தித்து,  ‘இவனைப்பற்றின எனக்கு ஒரு து:க்கமுமில்லை’ என்கிறார்.

(இடரின்றியே) – ஒருவருத்தமு மின்றியே. (ஒருநாள்) – ஏகாஹதீக்ஷையான க்ரதுவிலே. (ஒரு போழ்தில்) – ப்ராதஸ்ஸவநம் தலைக்கட்டி மாத்4யந்திநஸவநத்துக்கு முன்னே. (எல்லாவுலகும் கழிய) – ஆவரண ஸப்தகங்களுக்கும் அத்வருகுபட.  (படர்புகழ் பார்த்தனும்) – (யஸ்ய மந்த்ரீச கோ3ப்தாஸ ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:) என்கிறபடியே, க்ருஷ்ணனையே ஸர்வவித ப3ந்து4வுமாகப் பற்றின புகழையுடைய அர்ஜுநனும். (வைதிகனும்) – க்ருஷ்ணன் திருவடிகளிலே நிரவதிகமான ஸ்நேஹத்தையுடைய ப்ராஹ்மணனும். (உடன் ஏற) – தன்?ேனாடே கூட ஏற. (திண்தேர்கடவி) – இவர்களைத் தேரிலேயேற்றிக்கொண்டு, கார்யாகாரம் குலையாமே, மூலகாரணமான ப்ரக்ருதிபர்யந்தமாகத் தேருக்குத் திண்மையைக்கொடுத்து நடத்தி; பிண்ட3ா வஸ்த்தையிலும் கட4ம் அநுவர்த்திக்குமாபோலே. ஒளி – அழகு. (சுடரொளியாய்நின்ற) நிரவதிகதேஜோரூபமாய் ஏகரூபமாய் நின்ற. (தன்னுடைச் சோதியில்) – தனக்கு அஸாதாரணமான தேஶம். தன்னுடைய காந்தி வெள்ளமிட்டாற்போலேயிருக்கை. (அத்யர்க்காநலதீ3ப்தம் தத் ஸ்த்தாநம் விஷ்?ே௰ர் மஹாத்மந:) என்கிறபடியே ஆயிரங்கோடி அக்ந்யாதித்யர்களுடைய தேஜஸ்ஸை ஓடவைத்து ஒருதேசமாக வகுத்தாற்போலேயிருக்கையாலே இவர்களுக்குக்  கண் கொண்டுபார்க்க வொண்௰து; ஆகையாலே, தமஸ்ஸளவிலே இவர்களை நிறுத்தி, தன்னிலமாகையாலே தானேபோய்ப் புக்கான். ஜலத்திலே மத்ஸ்யம் உலாவுமாபோலே தே3சிகரே புகவேண்டும் நிலமிறே. (வைதிகன் பிள்ளைகளை) – ப்ராஹ்மண புத்ரர்களை. (உடலொடும் இத்யாதி) – கொண்டு போகிறபோதைப்  படியில் ஒன்றுங் குறையாதபடி கொண்டுவந்து கொடுத்தானாயிற்று, காலக்ருத பரி௰மமில்லாத தேஶ மாகையாலே.  (உடலொடும் இத்யாதி) ‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப்பூணூலும், இட்ட காதுபணிகளுமான ஒப்பனையில் ஒன்றுங்குறையாதபடி கொண்டுவந்து கொடுத்தவனை’ என்றுமாம். ‘பிறக்கப் பிறக்கக் கொண்டுபோனார்களாகில் இப்போது இவையெல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க ‘ருஷிபுத்ரர்களாகையாலே பிறக்கிற போதே அவற்?ேறாடே பிறப்பர்காணும்’ என்று அருளிச்செய்தார். (பற்றி இத்யாதி) ஸமுத்ரத்தில் நீரை  ஸஹ்யத்திலே ஏற்றுமதுவே வருத்தமுள்ளது;ஸஹ்யத்தில்நீரை ஸமுத்ரத்திலே கொண்டுவருமன்று ஒரு வருத்தமில்லையே; அப்படியே அங்குப் புக்காரை இங்கே மீட்கையாகிறது அவன் திருவுள்ளத்தோடு சேராது; இங்குள்ளாரை அங்கே கொண்டுபோகையாயிற்று அவன் திருவுள்ளத்திற் பொருந்துவது. ‘புத்ரார்த்தியானவளவன்றியே ஸ்வரூபாநுரூபமாக அவன் திருவுள்ளத்துக்குப் பொருந்தின செயலை ஆசைப்பட்ட எனக்கு ஒருது: கமுண்டோ?’ என்கிறார். கர்மஸம்பந்தமற்றுப் போகாமையாலேயாயிற்று, இவர்களுக்கு மீளவேண்டிற்று. ‘கர்மஸம்பந்தமற்றார் போகக்கடவ தேஶத்திலே இவர்கள் போனபடி என் பின்னை?’ என்னில்;- ‘நாய்ச்சிமார் தங்கள் ஸ்வாதந்த்ர்யம் காட்டுகைக்காக இவர்களை அங்கே அழைப்பித்தார்களாயிற்று’. அங்ஙனன்றிக்கே, _இந்நின்றநீர்மை இனியாமுறாமை_ (திருவிருத்.1) என்று தொடங்கி, _மங்கவொட்டு_ (10-7-10) என்று மடிபிடித்துக் கூப்பிடும்படி ஸம்ஸாரத்தில் விரக்திபிறந்தும், _காதல் கடலின் மிகப்பெரிதால்_ (7-3-6) என்றும், _மண்திணிஞாலமு மேழ்கடலும் நீள்விசும்புக் கழியப்பெரிதால்_ (7-3-8) என்றும், _அதனிற் பெரிய வென்னவா_ (10-10-10) என்றும் ‘இப்படி பகவத்விஷயத்திலே கண்ணழிவற்ற பக்தி விளைந்துபோக ஆசைப்படுகிற எனக்கு ஒருது:கமில்லை’ என்கிறார்.

ஆறாம் பாட்டு

துயரில்சுடரொளிதன்னுடைச்சோதி நின்றவண்ணம்நிற்கவே*

துயரில்மலியும்மனிசர்பிறவியில் தோன்றிக்கண்காணவந்து*

துயரங்கள்செய்துதன்தெய்வநிலை உலகில் புகவுய்க்கும் அம்மான்*

துயரமில்சீர்க்கண்ணன்மாயன்புகழ்துற்ற யான்ஓர்துன்பமிலனே.

– அநந்தரம், ‘இதர ஸஜாதீயனாய் அவதரித்து நிற்கிற நிலையிலே அதிமாநுஷத்யாபாரங்களைப் பண்ணும் க்ருஷ்ணனுடைய குணங்களைப் பூர்ணமாக அநுபவிக்கப் பெற்ற நான் ஒரு அப்ரீதியை யுடையேனல்லேன்’ என்கிறார்.

துயர்இல் – (அப்ராக்ருதமாகையாலே) து:காதிப்ரதிபடமாய், சுடர் ஒளி – (சுத்த ஸத்வாத்மகமாகையாலே)அத்யுஜ்ஜ்வலதேஜோரூபமான, தன்னுடைச் சோதி – ஸ்வாஸாதாரணமான பரஞ்ஜ்யோதி•ஶப்தவாச்யமான விக்ரஹமானது, நின்றவண்ணமே-யதாபூர்வாவஸ்த்தாயியாயே, நிற்க – நிற்க, (தீபாத்தீபப்ரத்ருத்தி போலே தத்ஸஜாதீயமான அப்ராக்ருதவிக்ரஹத்தையுடையனாய்க்கொண்டு), துயரில் – து:கத்திலே, மலியும் – வர்த்தித்து வரக்கடவதான, மனிசர் பிறவியில்-மநுஷ்யருடைய ஜந்மத்திலே, தோன்றி-ஆவிர்பவித்து, கண் காணவந்து – (அதீந்த்ரியவிக்ரஹத்தை) மாநுஷ சக்ஷுஸ்ஸுக்கு விஷயமாக்கிக்கொண்டுவந்து ஸந்நிஹிதனாய், துயரங்கள்செய்து-(ரூபௌதார்ய குணங்களாலும் ஶௌர்யவீர்யாதிகுணங்களாலும், ஆ•ரிதாநா•ரித விபாகமற) <டுபடுத்தி, (தூத்ய ஸாரத்யாதிகளைப் பண்ணித் தாழநிற்கிற நிலையிலே), தன்-தனக்கு அஸாதாரணமாய், தெய்வம் நிலை-தித்யமான பரத்வஸ்திதியை, (வை•வரூப்யாத்யாவிஷ்காரத்தாலே), உலகில் – (தன்வாசியறியாத) லோகத்திலே, புக உய்க்கும் – நிலைநிறுத்தக்கடவனான, அம்மான் – ஸர்வாதிகனாய், துயரமில் சீர் – ஹேயப்ரத்யநீகனாய் கல்யாண கு௰த்மகனான, கண்ணன் – க்ருஷ்ணனாகிற, மாயன் – ஆ•சர்யவானுடைய, புகழ் – குணசேஷ்டிதாதிப்ரதையை, துற்ற – நெருங்க அநுபவிக்கப்பெற்ற, யான் – நான், ஓர் துன்பம் – ஒரு அப்ரீதியை, இலன் – உடையேனல்லேன். துன்பம் – இன்பத்துக்கு எதிர்த்தட்டான அப்ரீதி.

ஈடு: – ஆறாம் பாட்டு. ‘தன்னுடைய அப்ராக்ருத விக்ரஹத்தை இதரஸஜாதீயமாக்கி ஸம்ஸாரிகள் கண்ணுக்கு விஷயமாக்கின க்ருஷ்ணகுணங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு து:3க்க க3ந்தமில்லை’ என்கிறார்.

(துயர் இல் இத்யாதி) – ஹேயப்ரத்யநீகமாய், ஶுத்34 ஸத்த்வமய மாகையாலே நிரவதிகதேஜோரூபமாய், பிறர்க்கு உள்ளதொன்றன்றிக்கே தனக்கு அஸாதாரணமான விக்ரஹமானது. (நின்றவண்ணம்நிற்கவே)-அங்கிருக்கும்படியில் ஒன்றுங்குறையாமே, விளக்கிற்கொளுத்தியவிளக்குப்போலே, அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க. (ஸ்வாம்ப்ரக்ருதி மதி4ஷ்ட்டாய) இறே. (துயரில் இத்யாதி) – து:3க்கஸாகரத்திலே அழுந்தாநின்றுள்ள மநுஷ்யருடைய ஜந்மங்களிலே ஆவிர்ப4வித்து. (தேவகீபூர்வ ஸந்த்4யாயா மாவிர்ப்பூ4தம்) என்கிறபடியே வந்து தோற்றி. (கண்காணவந்து)-மாம்ஸசக்ஷுஸ்ஸுக்கு விஷயமன்றியே நித்யஸூரிகளுக்கு ஸதா த4ர்ஶநவிஷயமான தன்னை மாம்ஸசக்ஷுஸ்ஸுக்கு விஷயமாக்கி. (துயரங்கள்செய்து) – அநுகூலரை அழகாலே நோவுபடுத்தியும், ப்ரதிகூலரை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்.  (க்ருத்வா பாராவதரணம் ப்ருதித்யா: ப்ருது2லோசந: – மோஹயித்வா ஜகத்ஸர்வம் க2தஸ் ஸ்வம் ஸ்த்தாநமுத்தமம்) – ப்ரதிகூலரை முட்கோலாலே சாடியும், அநுகூலரைக் கண்ணழகாலே சாடியும் போனபடி. _இணைக்கூற்றங்கொலோ_ (7-7-1) என்னும்படியிறே கண்ணற்று நலியும்படி. (தன்தெய்வநிலை) – தன்னுடைய அப்ராக்ருதமான ஸ்வபாவத்தை. (உலகில்) – இதுக்கிடடுப்பிறவாத ஸம்ஸாரத்திலே. (புக உய்க்கும்) – ப்ரவே–ப்பிக்கும். (அம்மான்) – அபேக்ஷாநிரபேக்ஷமாக ஸம்ஸாரிகளுக்குத் தன்படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் ப்ராப்தி சொல்லுகிறது. பரமபதத்திலே நடையாடக்கடவ ஸ்வபாவத்தை ஸம்ஸாரிகளுக்குத் தெரிவித்தது – அங்குள்ளாரோடு உள்ள ப்ராப்தி இங்குள்ளாரோடும் ஒத்திருக்கையாலே. தூ3த்ய ஸாரத்யங்களைப் பண்ணித் தன்படியைத் தெரிவித்து, இச்செயலாலே லோகத்தை எழுதிக்கொண்டவனென்றுமாம். (துயரமில் சீர்க்கண்ணன்) – ஹேயப்ரத்யநீக கல்யாண குணங்களையுடைய க்ருஷ்ணன். (மாயன்) – ஆ•சர்யமான குண சேஷ்டிதங்களையுடையவன். (புகழ் துற்ற யான்) – அவனுடைய கல்யாண குணங்களை நெருங்கி புஜிக்கப்பெற்ற நான். (ஓர் துன்பமிலனே) ‘அவன் தன் அப்ராக்ருத தித்யமங்களவிக்ரஹத்தைக் கொண்டுஇத்வுடம்போடே அணையலாம்படி கிட்டுவானாயிற்ற பின்பு, நான் இ•ஶரீரத்தைவிட்டு அங்கேபோய் அத்வுடம்போடே அணைவேன்’ என்றால் எனக்கு அவன் அருமைப்படுத்துமோ?

ஏழாம் பாட்டு

துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய்உலகங்களுமாய்*

இன்பமில்வெந்நரகாகி இனியநல்வான்சுவர்க்கங்களுமாய்*

மன்பல்லுயிர்களுமாகிப் பலபலமாயமயக்குக்களால்*

இன்புறும் இத்விளையாட்டுடையானைப்பெற்று ஏதும் அல்லல் இலனே.

அநந்தரம், கர்மாநுரூபமாக லீலாவிபூதியை நிர்வஹிக்கிறவனைப் பெற்று ஏகதேஶமும் அல்லலிலேன் என்கிறார்.

துன்பமும் – (அப்ரீதிரூபமான) து:கமும், இன்பமும் – (ப்ரீதிரூபமான) ஸுகமும், ஆகிய – உண்டாம்படி, செய் – (சேதநனால்) செய்யப்பட்ட, வினை – (பாபரூபமாயும் புண்யரூபமாயுமுள்ள) கர்மங்களுக்கு, ஆய்-நிர்வாஹகனாய், உலகங்களும் – (இவற்றையநுஷ்ட்டிக்கைக்கீடான) பூலோகப்ரதேஶங்களுக்கு, ஆய்-நிர்வாஹகனாய், (இக்கர்மபலங்களாய்), இன்பம் இல் வெம் நரகு-ஸுகந்தரஹிதமான நரகத்துக்கும், ஆகி-நிர்வாஹகனாய், இனிய-ப்ரீதிகரமான போக்யவஸ்துக்களாலே, நல் – நன்றாய், வான் – சீரியதான, சுவர்க்கங்களும் – ஸ்வர்க்கப்ரதேசங்களுக்கும், ஆய் – நிர்வாஹகனாய், மன்-(கர்மாநுஷ்டாநதஶையோடு பல2போகதஶையோடு வாசியற அநுத்ருத்தராகையாலே) நித்யராய், பல் உயிர்களும் – அஸங்க்யாதரான ப்ராணிகளுக்கும், ஆகி-நிர்வாஹகனாய், பலபல – (குணபேதத்தாலும், மதிபேதத்தாலும், ருசிபேதத்தாலும்) அஸங்க்யேயமாய், மாயம் மயக்குக்களால் – ப்ரக்ருதிகார்யமான சேதநனுடைய மோஹவிகாரங்களாலே, இன்புறும் – ரஸாவஹமான, இத்விளையாட்டுடையானை – இத்விபூதியில் லீலையையுடையவனை, பெற்று – உள்ளபடி கிட்டப்பெற்று, ஏதும் – ஏகதேசமும், அல்லல் – (இக்கர்மவ•யமான ஸம்ஸாரத்தில்) அலமாப்பு, இலன் – உடையேனல்லேன். அல்லல் – அலமாப்பு.

ஈடு: – ஏழாம்பாட்டு. ‘அகர்மவ•யனாகையாலே <•வரனுக்கு  இத்விபூதியிலுள்ளது லீலாரஸமாத்ரமாகையாலே, அத்தை அநுஸந்தித்த எனக்குக் கர்மவ•யதையுமில்லை; இந்த லீலாவிபூதியில் அந்தர்ப4விக்கவும் வேண்டா’ என்கிறார்.

(துன்பம் இத்யாதி) – ஸுகது3:க்கங்களுக்கு ஹேதுவான புண்யபாபரூபகர்மங் களுக்கு நியாமகனாய். (உலகங்களுமாய்) – இவற்றை ஆர்ஜிக்கும் பூ4மியைச் சொல்லுதல், போ34 பூ4மியைச் சொல்லுதல். (இன்பமில் வெந்நரகாகி) – ஸுகலேஶமின்றிக்கே இருக்கிற நரகத்துக்கு நிர்வாஹகனாய். (இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய்) நரகத்திற்காட்டில் அல்பஸுகத்தையுடைத்தான ஸ்வர்க்காதிகளுக்கு நிர்வாஹகனாய். ‘உலகங்களுமாய்’ என்ற இடம் – ஆர்ஜநபூ4மியைச் சொல்லிற்றாகில், இவை போ43பூ4மிகளாகின்றன; அன்றிக்கே, அங்கே – போ43பூ4மியைச் சொல்லிற்றாகில், இங்கு – ஸுகது:3க்கமாத்ரங்களிலேயாகிறது. (மன்பல்உயிர்களுமாகி) கர்ம கர்த்தாக்களும் தத்ப2லபோக்தாக்களுமாய், நித்யராய் அஸங்க்2யாதரான ஆத்மவர்க்கத்துக்கு நிர்வாஹகனாய். (பல பல இத்யாதி) – அஸங்க்2யேயமான ப்ரக்ருதி விகார முகத்தாலுண்டான சேதநருடைய மதி விப்4ரமங்களாலே ப்ரீத்யாவஹமான லீலைகளை உடையவனைப் பெற்று. ‘ஸர்வ ஸுஹ்ருத்தாய்ப் பரமகாருணிகனான ஸர்வே•வரனுக்கு, தன்னையகன்று சேதநர் து:3க்கப்படுகிற இது ப்ரீதிஹேதுவாகிறபடி எங்ஙனே?’ என்னில் – இவற்றைத் தன் த3யையாலே ரக்ஷிக்க நினைத்தால் அது இவற்றுக்கு அநிஷ்டமா யிருக்கும் இருப்பு அவனுக்கு ஹாஸ்யஹேதுவாய், அத்வழியாலே லீலாரஸஸாதநமாய்விட்டது; இதுக்கு நேர்கொடு நேரே தாத்பர்யம் இது. கொடுத்த சைதந்யந்தான் பொதுவாய் ருசிபே4தத்தாலே வழிவிலங்கிப்போய் அநர்த்தத்தை விளைத்துக்கொண்டிருக்கிற படியைக் கண்டு, ‘நாம் ஒன்றை நினைத்துச்செய்ய இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்டபடி கண்டாயே’ என்று பிராட்டி முகத்தைப் பார்த்து ஸ்மிதம்பண்ண, அது கோல்விழுக்காட்டாலே லீலாரஸமாய்த் தலைக்கட்டும். (ஏதும் அல்லலிலனே) ‘அவனுடைய அகர்மவ•யதையை அநுஸந்தித்த எனக்குக் கர்மவ•யதை இல்லை; ஜகத்ஸ்ருஷ்ட்யாதிகளை அவனுடைய லீலையாக அநுஸந்தித்த எனக்கு லீலாவிபூத்யந்வயமாகிற து:3க்கமில்லை’ என்கிறார். (நமாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா – இதிமாம்யோணபி4ஜாநாதி கர்மபி4ர் நஸப3த்4யதே), (மமமாயா து3ரத்யயா – மாமேவயே ப்ரபத்யந்தே மாயாமேதாம்தரந்திதே) என்றும் இப்படி நம்மை அறிந்தவன் கர்மங்களால் ப3ந்திக்கப்படமாட்டானென்றும்; நான் ப3ந்தித்த ப3ந்த4த்தை யாவ?ெனாருவன் என்னையே கால்கட்டி அவிழ்க்கப்பார்க்கிறான், அவன் இத்தைக் கடக்கு மென்றும் அவன் சொல்லிவைத்தபடியே, ‘அவன்தன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு க்லேஶ மில்லை’ என்கிறார்.

எட்டாம் பாட்டு

அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும் அழகமர் சூழொளியன்*

அல்லிமலர்மகள்போகமயக்குக்களாகியும் நிற்குமம்மான்*

எல்லையில்ஞானத்தன் ஞானமஃதேகொண்டுஎல்லாக்கருமங்களுஞ்செய்*

எல்லையில்மாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யான் ஓர்துக்கமிலனே.

அநந்தரம், ‘ஸர்வஸ்மாத்பரனாய் ஸ்ரீய:பதியாய்க்கொண்டு ஸங்கல்ப மாத்ரத்தாலே ஸகல நிர்வாஹகனானவன் திருவடிகளை ஆ•ரயித்த நான் ஒரு து:கத்தையுடையேனல்லேன்’ என்கிறார்.

அல்லல் இல் – க்லேஶப்ரஸங்கரஹிதமான, இன்பம் – ஆநந்தகுணத்துக்கு, அளவு இறந்து – அவதி யின்றியே, எங்கும் அமர் – ஸர்வப்ரதேசங்களிலும் பரம்பின, அழகு – அவயவஸௌந்தர்யத்தோடு, சூழ் – சேர்ந்த, ஒளியன் – ஸமுதாயரூப –
லாவண்ய ப்ரபையையுடையனாய், ‘(இத்வாநந்தத்தோடும் வடிவழகோடும்)’, அல்லிமலர் மகள் – தாமரைப்பூவை வாஸஸ்த்தாநமாகயுடையளாகையாலே நிரதிஶயபோக்ய பூதையாய் நாரீ௰முத்தமையான பிராட்டியோட்டை, போகம்-கலவியாலே, மயக்குக்களாகியும், _அந்யோந்யாத்3வைத நிஷ்டா3தந ரஸக3ஹநாந்_ என்று ஸ்வபரவிபாகப்ரதிபத்தி மயங்கும்படியான) போகாநந்தரூபனாய்க்கொண்டும், நிற்கும் – நிற்கிற, அம்மான் – ஸர்வாதிகனாய், எல்லை இல் – (கீழுக்தமான ஆநந்தமும் அழகும் போகமும்போலே) எல்லையிறந்திருக்கக்கடவதான, ஞானத்தன் – ஜ்ஞாந வைபவத்தை உடையனாய், அஃது – நிரபேக்ஷமான அந்த, ஞானமே – ஜ்ஞாநத்தையே, கொண்டு – கொண்டு, எல்லாக்கருமங்களும் – கார்யபூதஸமஸ்தஜகத்தையும், செய் – (ஸங்கல்பமாத்ரத்தாலே) நிர்வஹிக்குமவனாய், எல்லை இல் – அபர்யந்தமான, மாயனை – ஆ•சர்யசேஷ்டிதங்களையுடையனான, கண்ணனை – க்ருஷ்ணனை, தாள்பற்றி – திருவடிகளைச் சிக்கெனப்பிடித்து, யான் – நான், ஓர் துக்கம் – ஒரு து:கத்தை, இலன் – உடையேனல்லேன். து:கமாவது – அநிஷ்டாநுபவம்.

ஈடு:– எட்டாம்பாட்டு. ‘நித்யவிபூதியை அநுபவித்துக்கொண்டிருக்கிற மேன்மையையுடையவன் ஜகத்ரக்ஷணம் பண்ணும் நீர்மையை அநுஸந்திக்கப்பெற்ற எனக்கு ஒரு து:கமில்லை’ என்கிறார்.

(அல்லல் இத்யாதி) – ஸ்வர்க்கா3திகளிற்போலே து:கமி•ரமாய்ப் பரிச்சிந்நமாயிராதே, து:3க்க க3ந்தரஹிதமாய் ஸுகைகதாநமாய் அபரிச்சிந்நமான ஆநந்தத்தையுடையவன். (எங்கும் அழகமர்) – த்ரிபாத்விபூதி யெல்லாம் வெள்ளமிடும் காந்தியையுடையவன். (சூழொளியன்) – அழகென்று – அவயவ ஶோபையாய், சூழொளியென்று – ஸமுதாய சோபையைச் சொல்லுகிறது. அன்றிக்கே, (எங்குமழகமர்) – பாதாதிகேஶம் அவயவங்களைத் தனித்துப்பார்த்தால், ‘இங்கே அழகு குடிகொண்டது’ என்னும்படி பாதாதிகேஶம் பழிப்பற்று. (சூழொளியன்) – த்ரிபாத்விபூதியடங்கலும் காந்திபூரத்தாலே வெள்ளமிடாநிற்குமாயிற்று. லாவண்யமானது எங்குமொக்க த்யாபித்து அலையெறியும்படியா யிருக்கை. (அல்லிமலர்மகள் இத்யாதி) – இத்வழகு காட்டிலெறித்த நிலாவாகாதபடி நெஞ்சோடே அநுபவிப்பாரைச் சொல்லுகிறது. புஷ்பத்தில் பரிமளம் வடிவுகொண்டிருக்கிறாப்போலே நிரதிஶயபோ4க்யையான பெரியபிராட்டியாரோட்டை ஸம்•லேஷத்தாலே பிறந்த ஆ•சர்யமான மயக்கத்தையுடையனான ஸர்வே•வரன். மயக்குக்கள் – ஆநந்தங்கள். மயங்கல் – கூடலும், கலத்தலும். (ஆகியும் நிற்கும்) – தன்னுடைய) ஆநந்தத்துக்கு மேலே •ரிய:பதித்வத்தால் வந்த ஆநந்தத்தையுடையனா யிருக்கும். (அம்மான்) – ஆநந்தமயனாய் •ரிய:பதியாமவனிறே ஸர்வே•வரன். (எல்லையில் ஞானத்தன்) – (மநஸ்வீ) என்னுமாபோலே, ப்ரணயதா4ரையில் அவளுக்கும் ஆனைக்குக் குதிரை வைக்கவல்ல ஜ்ஞாநாதிக்யத்தை உடையவன். (ஞானமஃதே கொண்டு இத்யாதி) தானும் அவளுமான சேர்த்தியிற் பிறந்த வெளிச்சிறப்பே ஸஹாயாந்தர நிரபேக்ஷமான ஸாதநமாகக்கொண்டு, இக்கார்யஜாதத்தையெல்லாம் உண்டாக்குமாயிற்று.  (யஸ்யாவீக்ஷ்ய முக2ம் ததி3ங்கித3பராதீ4நோ வித4த்தேணகிலம்) என்றாரிறே. இம்முகத்தாலேயிறே (பஹுஸ்யாம்) என்பது. அல்லாதார்க்கடைய, விஷயங்களோட்டைச்சேர்த்தி ஜ்ஞாநஹாநியையும் ப2லஹாநியையும் ரூபஹாநியையும் பண்ணுவிக்கும்; இத்விஷயம் அவற்றுக்கு எதிர்த்தட்டாயிருக்கும். (எல்லையில் மாயனை) – ஸங்கல்ப ரூபஜ்ஞாநத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணவல்ல ஆ•சர்ய ஶக்தியுக்தனை. ‘இப்படிப்பட்டவன் ஆரென்னில்,’ (கண்ணனை) – க்ருஷ்ணனை, (க்ருஷ்ண ஏவஹி லோகாநாம்). (கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கமிலனே) – பிராட்டி ஸந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக ஸஹகாரி நிரபேக்ஷமாக நம் காரியம் செய்யுமவனுமாய், (ஏஷ ஹ்யேவாநந்தயாதி)’ என்கிறபடியே ‘ஆநந்தாவஹனானவனைப் பற்றின எனக்கு ஒரு து:கமில்லை’ என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

துக்கமில்ஞானச்சுடரொளிமூர்த்தி துழாயலங்கல்பெருமான்*

மிக்கபன்மாயங்களால்விகிருதஞ்செய்து வேண்டுமுருவுகொண்டு*

நக்கபிரா?ேனாடு அயன்முதலாக எல்லாரும் எவையும்* தன்னுள்

ஒக்கவொடுங்கவிழுங்கவல்லானைப்பெற்று ஒன்றும் தளர்விலனே.

அநந்தரம், ஸர்வ ப்ரகார ரக்ஷகனான ஆபத்ஸகனைப்பற்றி நான் ஒரு தளர்த்தியையுடையேனல்லேன் என்கிறார்.

துக்கம் இல் – து:கஸ்பர்ஶம் இல்லாத, ஞானம்-ஜ்ஞாநத்தையுடையனாய், சுடரொளி – அத்யுஜ்ஜ்வலதேஜோமயரூபமான, மூர்த்தி – விக்ரஹத்தையுடையனாய், துழாய் அலங்கல் – திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனான, பெருமாள் – ஸர்வாதிகனாய்வைத்து, மிக்க – (_பராஸ்ய ஶக்திர்விவதை4வ_ – என்கிறபடியே) அநவதிகாதிஶயையாய், பல் மாயங்களால் – பஹுவிதைகளான ஆ•சர்யசக்திகளாலே, வேண்டும் உருவு-(இச்சாக்ருஹீதமான) அபிமத விக்ரஹங்களை, கொண்டு-பரிக்ரஹித்து, விகிருதம் செய்து-(இதர ஸஜாதீயப்ரதிபத்தி பண்ணலாம்படியான) சேஷ்டா விகாரங்களைப் பண்ணுமவனாய், (அத்வளவன்றியே), நக்கபிரா?ேனாடு-திகம்பரனாய் <•வராபிமாநியான ருத்ரனும், அயன் – (அவனுக்கு உத்பாதகனாய்) அஜனென்று ப்ரஸித்தனான ப்ரஹ்மாவும், முதலாக-முதலாக, எல்லாரும்-எல்லாச்சேதநரையும், எவையும்-அசேதநங்களையும்,  ஒக்க – தாரதம்யமில்லாதபடி, தன்னுள் ஒடுங்க – அகவாயில் ஏகதேசத்திலே ஒதுங்கும்படியாக, விழுங்கவல்லானை – விழுங்கவல்ல ரக்ஷணஶக்தியுக்தனை, பெற்று – லபித்து, ஒன்றும் தளர்வு – ஒரு தளர்த்தியை, இலன் – உடையேனல்லேன். தளர்வு – பலஹாநி.

ஈடு: – ஒன்பதாம்பாட்டு. ‘அகடிதகடநாஸமர்த்தனான வடதளஶாயியை அநுபவிக்கப்பெற்ற எனக்கு ஒரு தளர்வு மில்லை’ என்கிறார். மஹாப்ரளய த்ருத்தாந்தத்தை அநுஸந்திக்கிறாரென்னவுமாம்.

(துக்கமில் இத்யாதி) – ஹேயப்ரத்யநீகமான ஜ்ஞாநத்தையும், நிரவதிகதேஜோ ரூபமான விக்3ரஹத்தையு முடையனாய், அத்வடிவுக்கு அலங்காரமாகப் போரும்படியான திருத்துழாய் மாலையை உடையனான ஸர்வே•வரன். அலங்கலென்பது – மாலை. (மிக்க இத்யாதி) – அபரிச்சேத்3யமாய்ப் பலவகைப்பட்ட ஆ•சர்ய ஶக்தியோகத்தாலே.  (வேண்டு முருவு கொண்டு விகிருதஞ்செய்து) – இச்சாக்ருஹீதமான விக்ரஹங்களைப் பரிக்ரஹித்து விக்ருதங்களைப் பண்௰நிற்கும். அதாவது – சிறிய வடிவைக்கொண்டு பெரியலோகங்களை வயிற்றிலேவைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளுகையாகிற அக4டிதக4டநா ஸாமர்த்யத்தைச் சொல்லுகிறது. (நக்கபிரான் இத்யாதி) – ஸ்வகோ3ஷ்டிக்கு உபகாரகனாக ப்ரஸித்தனா யிருக்கிற ருத்ர?ேனாடே கூட, அவனுக்கும் ஜநகனான ஏற்றத்தையுடைய சதுர்முகன் தொடக்கமான எல்லாச்சேதநாசேதநங்களையும் ஒருகாலே ப்ரளயம் தேடிலுங் காணவொண்௰தபடி வயிற்றிலேவைத்து ரக்ஷிக்கவல்ல ஸர்வ ரக்ஷகனை. ஒடுங்க விழுங்குகையாவது – _ஏழுலகுமுண்டு மிடமுடைத்து_ (திருமொழி11-5-3) என்கிறபடியே, சிறுவயிற்றிலே பெரிய லோகங்களை வைத்தால், <ர்க்கில் அத்திக்காய் கோத்தாற்போலே விசைத்து வேறாயிராதே அடங்கித் தகுதியாயிருக்கை. இப்படிப்பட்டவனை, (பெற்று ஒன்றும் தளர்விலனே) – ‘ஸர்வசக்தியாய், ப்ரஹ்மாதிகளுக்கும் ரக்ஷகனானவனை அநந்ய ப்ரயோஜநனாய் ஆ•ரயித்த எனக்கு ஒரு து:கமுண்டோ?’ என்கிறார். நைமித்திகப்ரளயமானபோது, அவர்களுக்கு ரக்ஷ்யமான த்ரைலோக்யத்தை ரக்ஷிக்கையாலே அவர்களுக்கும் ரக்ஷக னென்கை.

பத்தாம் பாட்டு

தளர்வின்றியே  என்றும் எங்கும்பரந்த தனிமுதல்ஞானமொன்றாய்*

அளவுடை ஐம்புலன்களறியாவகையால் அருவாகிநிற்கும்*

வளரொளியீசனைமூர்த்தியைப் பூதங்களைந்தை இருசுடரை*

கிளரொளிமாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யான் என்றுங்கேடிலனே.

அநந்தரம், ‘ஸர்வாந்தராத்மபூதனான க்ருஷ்ணனைப் பற்றின நான் ஒரு அழிவையுடையேனல்லேன்’ என்கிறார்.

என்றும் – ஸர்வ காலத்திலும், எங்கும் – ஸர்வ தேசத்திலும், தளர்வு இன்றியே – (தன்னுடைய நியந்த்ருத்வஶக்திக்குத்) தளர்த்தியில்லாத பூர்த்தியோடே, பரந்த-த்யாபித்திருக்குமவனாய், தனி – அத்விதீயமாய், முதல் – ஸமஸ்தகாரணமான, ஞானம் ஒன்றாய் – ஜ்ஞாநைகநிரூபணீயனாய், அளவுடை – விஷய பரிச்சேதங்களான, ஐம்புலன்கள்-இந்த்ரியங்களைந்துக்கும், அறியாவகை – அறிய வொண்௰தபடி, அருவாகி – நிரவயவஸ்வரூபனாய், நிற்கும் – வர்த்திக்குமவனாய், வளர் – (இப்படி த்யாப்தியால் வந்த நியந்த்ருத்வத்தாலே) அபித்ருத்தமான, ஒளி – ஔஜ்ஜ்வல்யத்தையுடைய, <சனை – ஸ்வாமியாய், மூர்த்தியை – அசாதாரண தித்ய விக்ரஹ யுக்தனாய், பூதங்களைந்தை – ஸமஷ்டிரூப பூதங்களையும், இருசுடரை – த்யஷ்டிரூப சந்த்ராதித்யர்களையும் (சரீரமாகவுடையனாகையாலே அவை தானென்று சொல்லலாம்படியாய்), கிளர் – அவதாரப்ரயுக்தமான அபித்ருத்தியை யுடையவாய், ஒளி – அத்யுஜ்ஜ்வலமான, மாயனை – ஆ•சர்ய குணங்களையுடைய, கண்ணனை – க்ருஷ்ணனை, தாள்பற்றி – திருவடிகளை ஆ•ரயித்திருக்கிற, யான் – நான், என்றும் – ஸர்வகாலத்திலும், கேடு இலன் – ஒரு அழிவை உடையேனல்லேன்.

ஈடு: – பத்தாம்பாட்டு.  ‘ஜகச்சரீரியாய் ஸத்தையையும் நோக்குமவனாய், ஆபி4முக்யம் பண்ணினாரை அஸாதாரணவிக்ரஹத்தோடே வந்து அவதரித்து ரக்ஷிக்குமவனைப் பற்றின எனக்கு ஒரு கேடில்லை’ என்கிறார்.

(தளர்வின்றியே இத்யாதி) – என்றுமுண்டாய் எங்குமொக்க த்யாபியாநின்றால் ஒரு தளர்த்தியின்றிக்கே, ஸ்ருஷ்டிக்குமிடத்தில் அத்விதீயகாரணமாயுள்ள ஸங்கல்பரூபஜ்ஞாநத்தையுடையனாய். அன்றியே, தளர்வு இத்யாதிக்கு – ஒரு பதார்த்தத்திலும் குறைவுபடாதபடி எங்குமொக்க ஏகரூபமாக எல்லாக்காலத்திலும் த்யாபித்து, இவற்றை ஸ்ருஷ்டிக்குமிடத்தில் த்ரிவிதகாரணமும் தானேயாய், விலக்ஷணஜ்ஞாநஸ்வரூபனாய். (அளவுடை இத்யாதி) – உழக்காலே கடலை முகக்கவொண்௰தாப்போலே, பரிச்சிந்நவஸ்து க்3ராஹகமான இந்த்ரியங்களாலே அபரிச்சேத்யவஸ்துவை க்3ரஹிக்கவொண்௰திறே. (அருவாகிநிற்கும் ) – அவற்றால் அறியவொண்௰தபடி அவிஷயமாயிருக்கும். (வளரொளியீசனை) – ‘இப்படி சேதநாசேதநங்களோடே கூடி அவற்றுக்கு அந்தராத்மாவாய்ப் புக்குநின்றால் தத்33ததோ3ஷங்கள் அவனுக்கு ஸ்பர்–யாதோ?’ என்னில்; (அந•நந்நந்யோஅபி4சாக—தி) என்கிறபடியே தத்33ததோஷை: அஸ்மஸ்ப்ருஷ்டனாய், நியந்த்ருத்வத்தால் வந்த புகரையுடையனாயிருக்கும். (மூர்த்தியை) – இப்படி ஜகச்சரீரியாயிருக்கச்செய்தே அப்ராக்ருத தித்யவிக்ரஹயுக்தனாய்க்கொண்டு நித்யவிபூதியிலிருக்குமிருப்பைச் சொல்லுகிறது. (பூதங்களைந்தை இருசுடரை) – அஸாதாரணவிக்ரஹத்தோபாதி ஜக3ச்சரீரியாய்நிற்கிற அதுவும் இவர்க்கு அநுபா4த்யமாம்படியிறே; அத்தோடொக்க, (பூதங்களைந்தை இருசுடரை என்றது) – காரணமான ப்ருதித்யாதி பூ4தபஞ்சகங்களையும், கார்யவர்க்கத்தில் தலையான சந்த்ரஸூர்யர்களையுமுடையனாய் லீலாவிபூதிக்கு  நிர்வாஹகனாயிருக்குமிருப்பைச் சொல்லுகிறது. (கிளரொளி மாயனைக் கண்ணனை) – இத்விபூதிக்குள்ளே அப்ராக்ருத தித்யஸம்ஸ்த்தாநத்தை இதரஸஜாதீயமாக்கிக் கொண்டுவந்து க்ருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை. (கண்ணனைத் தாள்பற்றி) – (மாமேகம் ஶரணம் த்ரஜ) என்றவன் திருவடிகளைப் பற்றி. (யான் என்றும் கேடிலனே) – ‘இவன் விமுக2னான அன்றும் ப்ராப்தியாலே ஸத்தையை நோக்கி, இவன் ஆபி4முக்யம் பண்ணின அன்று கண்ணுக்குத் தோற்றி நின்று ரக்ஷிக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒருநாளும் அநர்த்தமில்லை’. ‘மூர்த்தியை – தனிமுதல் ஞானமொன்றாய் – பூதங்களைந்தை இருசுடரை – என்றுமெங்கும் பரந்து – தளர்வின்றியே – அளவுடை ஐம்புலன்களறியாவகையால் அருவாகிநிற்கும் வளரொளியீசனை – கிளரொளிமாயனைக் கண்ணனைத்தாள்பற்றி யானென்றுங்கேடிலன்’ இத்யந்த்ய:

பதி?ெனான்றாம் பாட்டு

கேடில்விழுப்புகழ்க்கேசவனைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன*

பாடலோராயிரத்துள் இவையுமொருபத்தும் பயிற்றவல்லார்கட்கு* அவன்

நாடும்நகரமும்நன்குடன்காண நலனிடையூர்திபண்ணி*

வீடும்பெறுத்தித்தன்மூவுலகுக்குந்தரும் ஒருநாயகமே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் பலமாக ஸ்வாராஜ்யப்ராப்தியை அருளிச்செய்கிறார்.

கேடு இல் – (ஹேயப்ரத்யநீகமாகையாலே) அழிவற்று, விழு – (கல்யாணமாகை யாலே)விழுப்பத்தையுடைத்தான, புகழ் – குணப்ரதையையுடைய, கேசவனை –
கே–ஹந்தாவான க்ருஷ்ணனை, குருகூர்-திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், சொன்ன – அருளிச்செய்த, பாடல் – கீதரூபமாய், ஓர் – அத்விதீயமான, ஆயிரத்துள் – ஆயிரத்துள், ஒரு – பகவதநுபவப்ரதிபாதகமான, இவை பத்தும் – இவைபத்தையும், பயிற்ற வல்லார்கட்கு – சப்தார்த்தங்களிற் செறிவு தோன்றும்படி சொல்லவல்லார்களுக்கு, அவன் – அந்த க்ருஷ்ணன், நாடும் – (அவிஶேஷஜ்ஞப்ரசுரமான) நாடும், நகரமும் –  (விசேஷஜ்ஞ ப்ரசுரமான) நகரமும், நன்குடன் – •லாகாரூபமான நன்மையோடேகூட, காண – காணும்படியாக, நலனிடை – பகவத்பாகவதவிஷயத்திலே ஶேஷத்வஸம்பத்தோடே, ஊர்திபண்ணி – நடக்கும்படி பண்ணி, வீடும் – மோக்ஷாநந்தத்தையும், பெறுத்தி – கொடுத்து, தன் மூவுலகுக்கும்-தன்?ேனாபாதி சேதநாசேதநங்களையும் தத்ஸம்பந்தாநு ஸந்தாநத்தாலே ஸ்வபோக்யத்வேந அபிமாநிக்கும்படி, (அவற்றுக்கு), ஒருநாயகம் – அத்விதீயநாயகத்வத்தை, தரும் – தரும். இவனுக்கு அத்விதீயநாயகத்வம் – பகவத்ஸ்வரூபாந்தர்பாவத்தால் வந்த ததாத்மகத்வத்தா லென்று கருத்து. பயிற்றவல்லாரென்று – பயிலுவிக்கவல்லாரென்றுமாம். இது – அறுசீராசிரியவிருத்தம்.

ஈடு: – நிகமத்தில், இத்திருவாய்மொழியை அப்4யஸித்தாரை ஸர்வலோக ப்ரஸித்த3மாம்படி ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயிலே நடத்தி, மேலே பரமபதத்தில் சென்றால் தன் ஐ•வர்யம் இவர்களிட்ட வழக்காக்குமென்கிறார்.

(கேடுஇல் இத்யாதி) – கேடின்றிக்கே விழுப்பத்தையுடைத்தான, புகழ் – நித்யஸித்த கல்யாணகுணங்களையுடைய, கேசிஹந்தாவையாயிற்றுக் கவிபாடிற்று. (குருகூர்ச்சடகோபன் சொன்ன) – (ரகுவரசரிதம் முநிப்ரணீதம்) என்கிறபடியே அவதாரத்துக்கு அத்வருகு போகமாட்டாத ஆழ்வாராயிற்றுக் கவிபாடினார். (பாடல் ஓராயிரம்) – (பாட்2யே கே3யச மது4ரம்) என்னுமாபோலே, இசையோடேயாயிற்றுப் பிறந்தது. (இவையும் ஒரு பத்தும்) – முத்து முகமறிந்துகோத்துச் சேர்வைபார்க்குமா போலே, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார். (பயிற்ற வல்லார்கட்கு) – சொல்லவல்லார்க்கு, ‘பயிற்ற’ என்கிற இத்தை, ‘பயில’ என்றாக்கி, அப்யஸிக்க வல்லார்கட்கு என்னுதல். அவன் தருமென்று அந்வயம். (நாடு) அவிஶேஷஜ்ஞர். (நகரம்) த்ரத்ய விசேஷமறிந்திருக்கும் விஶேஷஜ்ஞர். (நன்குடன் காண) – நன்மையோடே காண. _இவனுமொருவனே_ என்று கொண்டாட. (நலனிடையூர்தி பண்ணி) நன்மைக்கு நடுவே நடக்கும்படி பண்ணி. நன்மையாவது – ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ. (வீடும் பெறுத்தி) – பரமபுருஷார்த்தமோக்ஷத்தையும் கொடுத்து. (தன்மூவுலகுக்குந் தரும் ஒருநாயகம்) – தன்னதான த்ரிவிதா4த்மவர்க்க3த்துக்கும் இவன்தான் அத்3விதீயநாயகனாம்படி பண்ணிக்கொடுக்கும். அவன்தன்னதான ஐ•வர்யத்தை இவன் ‘என்னது’ என்னும்படி பண்ணும். அதாகிறது – இவனுக்கு ஐ•வர்யங் கொடாநிற்கச்செய்தே, இது தனக்குப் புறம்பாம்படியிருக்கையன்றிக்கே தன்ஐ•வர்யத்திலே அந்தர்பூ4தமாம்படி பண்ணிக்கொடுக்கும்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

 

த்ரமிடோபநிஷத் ஸங்கதி

பூயொऽவதீர்ய புவி திவ்யவபு: ஸ்வகீயம்

ப்ரத்யக்ஷயந்தம் அகிலாம்ஶ்ச குணாந் அநந்தம்।

ஸ்துத்வாமுநி: ஸ்வசரிதார்ததயா ந கிஞ்சித்

து:கம் மமெதி அதிதராம் தஶமெ துதொஷ||

 

த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ

43 ப்ராதுர்பாவாநுபாவாத் பரிஜநவிபவாத் பாவநாலம்க்ரியத்வாத்

ஜைத்ரவ்யாபாரயோகாத் அகடிதகடநாத் தேவபாவப்ரஸித்தே: ।

ஆஶ்சர்யக்ரீடநத்வாத் ஸரஸிஜநிலயாநந்தநாத் சந்தவ்ருத்தே:

ஐஶ்வர்யவ்யக்திமத்த்வாத் அகஶமநதநும் கேஶவம் வ்யாஜஹார || (3-10)

44 ஏவம் ஸௌந்தர்யபூம்நா தநுவிஹிதஜகத்க்ருத்யஸௌபாக்யயோகாத்

ஸ்வேச்சாஸேவ்யாக்ருதித்வாத் நிகிலதநுதயோந்மாததாநார்ஹகாந்த்யா ।

லப்யார்சாவைபவத்வாத் குணரஸிககுணோத்கர்ஷணாத் அக்ஷக்ருஷ்ட்யா

ஸ்துத்யத்வாத் பாபபங்காத் ஶுபஸுபகதநும் ப்ராஹ நாதம் த்ருதீயே || (3)

திருவாய்மொழி நூற்றந்தாதி

சன்மம்பலசெய்துதான் இவ்வுலகளிக்கும்*

நன்மையுடையமால்குணத்தை நாள் தோறும்* இம்மையிலே

ஏத்துமின்பம்பெற்றேன்  என்னும் மாறனை உலகீர்!*

நாத்தழும்ப ஏத்தும்ஒருநாள். 30

 

ஆழ்வார் திருவடிகளே சரணம். எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

ஜீயர் திருவடிகளே சரணம்.

 

பகவத்விஷயம் மூன்றாம் பத்து முற்றிற்று.

 

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.