ஆறாந்திருவாய்மொழி
தீர்ப்பாரை : ப்ரவேசம்
*******
ப :- ஆறாந்திருவாய்மொழியில், கீழில்திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த ஹர்ஷப்ரகர்ஷம் மாநஸாநுபவஜநிதமாகையாலே ததநுரூபமாக அவனுடைய ஆலோகநாலாபாதிமுகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அநுபவிக்கப்பெறாத அவஸாதம்அதிஶயிக்க, அநுபாத்யனான அவனுடைய ஆஸ்ரிதவிஷயபக்ஷபாதத்தையும், ஆதிக்யஸூசகமான அஸாதாரணசிஹ்நங்களையும், அதிசயிதபோக்யத்வத்தையும், ஆபத்ஸகத்வத்தையும், விரோதிநிவர்த்தகத்வத்தையும், விலக்ஷண விக்ரஹயோகத்தையும், அத்யாஸ்சர்யமான உபகாரகத்வத்தையும், நித்யஸூரிஸேத்யத்வத்தையும், நிரதிசயஸௌலப்யத்தையும், நித்யப்ரமாண க3ம்யத்வத்தையும் அநுஸந்தித்து, ‘ஏவம்விதனானவன்நம்மையநுபவிப்பியாதொழிவதே!’ என்று அப்ரக்ருதிங்க3தராய் மோஹிக்க, பார்ஸ்வஸ்தனாரான பரிவர் இவரை ஆஸ்வஸிப்பிக்கத் தேடி, “ஸர்வாந் தே3வாந் நமஸ்யந்தி” என்கிற கணக்கிலே பரிவின் கனத்தாலே *‘அமார்க்கங்களாலே யாகிலும் பரிஹரிக்கப் போமோ?’ என்று உத்யோகிக்க, இவர் ப்ரக்ருதியறிந்த ப்ரக3ல்ப4 ஸுஹ்ருத்துக்களான ஸ்ரீமதுரகவிபோல்வார் அத்தைவிலக்கி, பகவந்நாம ஸங்கீர்த்தந ததீயபாதபராக3ஸ்பர்சாதிகளாலே பரிஹரணீயமென்று ப்ரதிபாதித்த பாசுரத்தை, நாயகனைப்பிரிந்து ஆற்றாளாகிய தலைமகள் வேறுபாடு கண்டு ப்ரதிபந்நபாஷிணியாயிருப்பாளொரு கட்டுவிச்சி வார்த்தை கேட்டு வெறியாட்டாலே பரிஹரிக்கத் தொடங்கின செவிலிதொடக்கமானாரைப்பார்த்து, இவள் ப்ரக்ருதியறிந்த ப்ரக3ல்பையானதோழி அவர்களுத்யோகத்தை விலக்கித் தான் இப்போது நிரூபித்து நோயின் நிதாநமறிந்தாளாக பாவித்து, ‘க்ருஷ்ணனடியாக வந்த நோவுக்கு அவனையநுஸந்தித்துப் பிழைப்பிக்குமதொழிய இது பரிஹாரமல்ல’ என்று வெறிவிலக்கின பாசுரத்தாலே அருளிச்செய்கிறார்.
ஈடு:- கீழ் “வீற்றிருந்தேழுல*காயிருக்க, அநந்தரம் “தீர்ப்பாரையாமினி” யாயிருக்கிறதிறே! எம்பார் கீழில்திருவாய்மொழியையும் இத்திருவாய்மொழியையும் அநுஸந்தித்து, ‘மோருள்ளதனையும் சோறேயோ? அதிலே – அப்படி நிரவதிக ப்ரீதியாய்ச் சென்றது; இதில் இப்படி மோஹத்தோடே தலைக்கட்டிற்று; இதுக்கு இருந்து அடைவுசொல்லுவேனோ? இதுக்கு அஸங்கதிரேவ ஸங்கதி:’ என்று அருளிச்செய்வராம். “பொய்ந்நின்றஞான” (திருவிரு.1)த்திலே – ப்ரக்ருதிதோஷத்தை அநுஸந்தித்து அஞ்சி, ஸ்ரீபரதாழ்வான் ‘பெருமாள் திருவபிஷேகத்துக்கு நம்மையழைத்து வந்தது’ என்று, ‘அவரைத் திருமுடிசூட்டி அடிமைசெய்யக்கடவோம்’ என்று பாரித்துவரக்கொண்டு, கைகேயி ‘ராஜந்’ என்று ‘உனக்குமுடிவாங்கிவைத்தேன்’ என்றபோது அவன் துடித்தாற்போலே துடித்தாராயிற்று; ‘நான் அவரடியேனன்றோ? அவர் என்சொல்லை மறுப்பரோ? இப்போதே மீட்டுக்கொண்டுவந்து திருவபிஷேகம் பண்ணுகிறேன்’ என்று திருச்சித்திரகூடத்திலே கிட்டுமளவும்பிறந்த தரிப்புப்போலேயாயிற்று – திருவாசிரியத்திற் பிறந்த தரிப்பு; பின்பு, பதினாலாண்டு கூடி ஆசை வளர்ந்தாற்போலேயாயிற்று – திருவந்தாதியில் ஆசை பெருகினபடி; “என்னெஞ்சினார்தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்” (பெரிய திருவ.7), “முயற்றிசுமந்தெழுந்து” (பெரிய திருவ.1), என்னும்படியிறே ஆசை பெருகினபடி. மீண்டு எழுந்தருளி திருவபிஷேகம் பண்ணி அவன்மநோரதம் தலைக்கட்டினாற்போலேயாயிற்று – திருவாய்மொழியில் இவரை அநுபவித்தபடி. கீழ் “வீற்றிருந்தேழுல*கில் பிறந்த நிரவதிகப்ரீதி மாநஸாநுபவ மாத்ரமாய் பாஹ்யகரணயோக்யமல்லாமையாலே, எத்தனையேனும் உயர ஏறினது தகரவிழுகைக்கு உடலாமாபோலே மோஹத்துக்கு உறுப்பாய்த் தலைக்கட்டிற்று. இப்படியிருக்கிற தம்தஶையை, ஸர்வேஸ்வரனோடே கலந்து பிரிந்து நோவுபடுகிறாளொரு பிராட்டி தன்ஆற்றாமையாலே மோஹித்துக்கிடக்க, இவள்தசையை அநுஸந்தித்த பந்துவர்க்கமும் மோஹித்து, ‘இது தேவதாந்தரங்களாலே வந்ததோ?’ என்று தேவதாந்தரஸ்பர்சமுடையாரைக்கொண்டு புகுந்து பரிஹாரம்பண்ணப் புக, இவள்ப்ரக்ருதியறிந்த தோழியானவள், ‘நீங்கள் பாரிக்கிறவை இவள் நோவுக்குப் பரிஹாரமல்ல; விநாசத்துக்கு உடலாமித்தனை; ஆனபின்பு, பகவந்நாமஸங்கீர்த்த நத்தாலும் பாகவதபாதரேணுவாலும் பரிஹரிக்கப் பாருங்கோள்’ என்கிற அவள்பாசுரத்தாலே ஸ்வதசையைப் பேசுகிறார். இவர்தாம், “ந ச ஸீதா த்வயா ஹீநா” என்றும், “குருஷ்வ மாமநுசரம்” என்றும் சொல்லுகிறபடியே, வ்யதிரேகத்திலே தரியாமைக்கு இளையபெருமாளோடொப்பர்; அவன்போகட்ட விடத்தே கிடக்கைக்கும் குணாநுஸந்தாநத்தாலே ஜீவித்திருக்கைக்கும் ஸ்ரீபரதாழ்வானோடொப்பர்; எத்தனையேனும் ஆற்றாமை கரைபுரண்டாலும் ‘அத்தலையாலே பேறு’ என்றிருக்கைக்குப் பிராட்டியோ டொப்பர். முதல் திருவாய்மொழியிலும் பரத்வமிறே பேசிற்று; அநந்தரம் – அவதாரஸௌலப்யத்தை அநுஸந்தித்து மோஹிக்கச் செய்தேயும், “அஞ்சிறையமடநாரை*(1.4.1)யிலே தூதுவிட வல்லராம்படி உணர்த்தியுடையரானார்; “வீற்றிருந்தேழுல*(4.5)கில் பரத்வத்தை அநுஸந்தித்த அநந்தரம், தாமும் மோஹித்துத் தம்தசையை அநுஸந்தித்த பந்துவர்க்கமும் மோஹித்து தேவதாந்தரஸ்பர்சமுடையார் புகுந்து கலக்கினாலும் உணர்த்தியறும்படியாயிற்று. பகவல்லாபத்திலுணர்த்தியும் அலாபத்தில் மோஹமுமாய்ச் செல்லும் இது, இவ்வாழ்வாரொருவர்க்குமேயுள்ள தொன்றாயிற்று. மற்றும் ஜ்ஞாநாதிகராய் பகவத்விஷயத்திலே கைவைத்தாராயிருக்குமவர் களிலும் ஸ்ரீவஸிஷ்டபகவான் புத்ரவியோகத்திலே வந்தவாறே கடலிலே புகுவது, மலையிலே யேறி விழுவதானான்; ஸ்ரீவேதவ்யாஸனும் சாயாஸுகனைக்கொண்டு ஜீவித்தான்; பகவத்விஷயத்தில் லாபாலாபமே பேறிழவாயிருக்கும் இது இவ்வாழ்வாரொருவர்க்குமேயிறே உள்ளது.
இப்படி இவள் மோஹித்துக்கிடக்க, இவளைக் கண்ட உறவுமுறையாருமெல்லாம் நாகபாசபத்தரைப்போலே மோஹித்து யுக்தாயுக்தநிரூபணக்ஷமரன்றிக்கே கலங்கிக் கிடக்க, அங்குப்போலே உணர்ந்திருந்து நோக்குகைக்கு ஸ்ரீஜாம்பவந்மஹாராஜர் திருவடிபோல்வாரு மில்லையாயிற்று; (சத்ருக்4நோநந்தரஸ்தி2த:) என்னும் இதுவும் இல்லையாயிற்று. (அஸ்ய ராஜகுலஸ்யாத்3ய த்வத3தீ4நம் ஹி ஜீவிதம்) – ‘பெருமாள் காடேற எழுந்தருளினார்; சக்ரவர்த்தி துஞ்சினான்; இனி நீயேயிறே ராஜ்யத்துக்குக் கடவாய்; உன்னைக்கொண்டன்றோ நாங்கள் ஜீவிக்கவிருக்கிறது’ என்கிறார்களல்லர்; ‘உன்முகத்திலுறாவுதல் காணக்காண உன்னையிழக்கமாட்டார், அவர்வரவு அணித்து என்றன்றோ நாங்கள் ஜீவிக்கிறது’ என்கிறார்களாயிற்று; அப்படியே இவளைக் கொண்டே ஜீவிக்க இருக்கிறார்களாகையாலே எல்லாருமொக்க இவள்தசையைக் கண்டு கலங்கிக்கிடக்க, இவ்வளவிலே நாட்டிலே வேரறிவார் விறகறிவார் மந்த்ரமறிவார் ஔஷதமறிவாரடங்கலும் வந்துபுகுர, அவ்வளவிலே தேவதாந்தரஸ்பர்சமுடையார் ‘வைஷ்ணவக்ருஹத்தை தூஷிக்க நமக்கு நல்லஅளவு’ என்று வந்துபுகுர, இவளுடைய பந்துவர்க்கத்திலுள்ளார் கலங்கியிருக்கையாலே, ‘இவளுடைய நோய் இன்னது’ என்றும், ‘பரிஹாரம் இன்னது’ என்றும் அறியாதே, அவர்களிலே ஒருத்தி ஒருகட்டுவிச்சியை, ‘இவள்நோய்எது? நோய்க்கு நிதாநம் எது?’ என்று கேட்டு, அவள் சொற்படியே, (த்3ரவ்யம் நிந்த்3யஸுராதி3 தை3வதமதிக்ஷுத்3ரஞ்ச பா3ஹ்யாக3மோ த்3ருஷ்டிர்தே3வலகாஸ்ச
தே3சிகஜநா:) என்கிறபடியே, நிந்த்யமான த்ரவ்யத்தை இவள்ரக்ஷணத்துக்குப் பரிகரமாகக் கொண்டு, க்ஷுத்ரதேவதை ஆவேசித்ததாகக் கொண்டு, பாஹ்யாகமங்களை த்ருஷ்டியாகக் கொண்டு, தேவதாந்தரஸ்பர்சமுடையாரை தேசிகராகக் கொண்டு, இவள் பக்கலுண்டான ஸ்நேஹாதிசயத்தாலே, ‘இவள் ஜீவிக்குமாகில் ஏதேனும் ஒரு வழியாலேயாகிலும் பரிஹரிக்க அமையும்’ என்று வழியல்லாவழியிலே இழிந்தார்கள். அப்படி கலங்கப்பண்ணுமிறே பரிவு; (ஸர்வாந் தே3வாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே2யசஸ்விந:) என்றார்களிறே திருவயோத்யையிலுள்ளார். இத்தைக்கண்ட உயிர்த்தோழியானவள், “இவர்கள்செய்கிற இவை இவளகவாயில் கிடக்கிற ஸத்தையையும் இழக்குமித்தனை; இனிநாம் இத்தை அறிந்தோமாகச் சொல்லில் ‘உன்காவற்சோர்வாலே வந்ததன்றோ?’ என்று சொல்லுவர்கள்; நாம் கைவாங்கியிருந்தோமாகில் இவளையிழக்கவரும்; இனி இதுக்குப் போக்கடியென்?” என்று விசாரித்து, “இவர்கள் தாங்களும் ‘இதுதான் ஏதோ?’ என்று ஆராயாநின்றார்களிறே; அவ்வோபாதி நாமும் நிரூபணத்திலேயிழிந்து இவள் ப்ரக்ருதியைக்கொண்டு சொன்னோமாகச் சொல்லுவோம்” என்று பார்த்து, “நீங்கள் இவளுக்கு ஓடுகிறநோவும் அறிந்திலிகோள்; நிதாநமும் அறிந்திலிகோள்; பரிஹாரமும் அறிந்திலிகோள்; நீங்கள் பரிஹாரமாகச் செய்கிறவை, கருமுகை மாலையைச் செவ்விபெறுத்த என்று நெருப்பிலே இடுவாரைப்போலே இவளையிழக்கைக்கு உடலாமித்தனை; ஆனபின்பு, இவற்றைவிட்டு, இக்குடியிலே பழையதாகச் செய்துபோரும் பரிஹாரத்தைப் பண்ணப்பாருங்கோள்; “உலகேழுமுண்டான் சொன்மொழிமாலையந் தண்ணந்துழாய்கொண்டு சூட்டுமினே” (திருவிரு.20) என்றும், “தண்ணந்துழாய்த்தாராயினும் தழையாயினும் தண்கொம்பதாயினும் கீழ்வேராயினும் நின்ற மண்ணாயினுங் கொண்டுவீசுமினே” (திருவிரு.53) என்றுமிறே முன்பும் விதித்தது; அங்கு “நின்ற மண்ணாயினும்” என்றாள்; இங்கு, “மாயன்தமரடிநீறு” (4.6.6) என்றாள்; இதிறே அடிப்படச் செய்து போந்த பரிஹாரம். ஆயிட்டு, இவள்நோய் இது, நோய்க்கு நிதாநமும் இது; இதுக்குப் பரிஹாரமும் – பகவந்நாமஸங்கீர்த்தநமும் பாகவதபாதரேணுவை ஸ்பர்சிப்பிக்கையும்” என்று சொல்லி, அவர்கள் செய்கிறவற்றை நிவர்த்திப்பிக்கிறாளாய்ச் செல்லுகிறது.
இதுதன்னிலோடுகிறதென்? என்னில்; அஜ்ஞாததசையிலும் தேவதாந்தர ஸ்பர்சமும் ததீயஸ்பர்சமும் ஸத்தயா பாதகமாய், பகவந்நாமஸங்கீர்த்தநமும் பாகவதஸஹவாஸமும் ஸத்தயா தா4ரகமாம்படி ஆழ்வார்க்கு வைஷ்ணவத்வம் முறுகினபடி சொல்லுகிறது. ‘ராவணன் மாயாசிரஸ்ஸைக்காட்டினபோது பிராட்டியும் அல்லாத ஸ்த்ரீகளோபாதி சோகித்துக் கண்ணநீர் விழவிட்டிருந்தாளாயிருந்தது; இதுக்கு அடி என்? இதுகேட்டபோதே முடியவன்றோ ப்ராப்தம்’ என்று சீயரைக் கேட்க, “அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே ‘மெய்’ என்றே சோகித்தாள்; ஜ்ஞாநமின்றியிலே ஜீவிக்கைக்கு ஹேது அவருடைய ஸத்தையாகையாலே உளளாயிருந்தாள்; இவ்வர்த்தம் மெய்யாகில் ஸத்தையுமில்லையாம்” என்று அருளிச்செய்தார்.
முதல் பாட்டு
தீர்ப்பாரையாம்இனி எங்ஙனம்நாடுதும்? அன்னைமீர்!
ஓர்ப்பால்இவ்வொண்ணுதல் உற்றநல்நோயிதுதேறினோம்
போர்ப்பாகுதான்செய்து அன்றைவரைவெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள்சிந்தைதுழாய்த்திசைக்கின்றதே.
ப:- முதற்பாட்டில், ‘இவள் பாண்டவபக்ஷபாதியான க்ருஷ்ணனுக்கு ஈடுபட்டாளென்னுமிடம் நிரூபித்தறிந்தோம்; ஆனபின்பு, இவள்நோய்தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்று தோழியானவள் தாயாரைக்குறித்துச் சொல்லுகிறாள்.
அன்னைமீர் – (இவள்பக்கல்பரிவாலே ‘ஏதேனும் ஒரு வழியாலும் இவள்நோய் சமிப்பிக்கவேணும்’ என்றிருக்கிற) அன்னைமீர்! இனி – அதுபரிஹாரமாகாதபின்பு, தீர்ப்பாரை – (இந்நோய்) தீர்ப்பாரை, யாம் – (என்னோடு உங்களோடு வாசியற நோயினடியறியாத) நாம், (‘எல்லாருங்கூடவாராய’ என்றாலும்), எங்ஙனம் – எங்ஙனே, நாடுதும் – ஆராய்வோம்? (இப்படி சொல்லுகிற நீ அறிந்தாயோ? என்னில்), ஓர்ப்பால் – இப்போது நிரூபிக்கையாலே, இ ஒள் நுதல் – இந்த அழகிய நுதலையுடையவள், உற்ற – உள்ளுறப்பெற்ற, நல் – ஸ்லாக்யமான, இது – இந்த, நோய் – நோயை, தேறினோம் – (‘இவள் ஸ்வபா4வத்தாலும்இவளவயவஶோபையாலும் நோய் ஆந்தரமாக உற்றபடியாலும் வேறொருசரீரரோகமல்ல, விலக்ஷணரூபப்ராவண்யரூபமான ஸ்லாக்யமான நோய்’ என்று) அறுதியிட்டோம்; (இது எந்த விஷயமடியாக வந்தது? என்னில்), போர் – யுத்தத்துக்கு வேண்டும், பாகு – நிர்வாஹங்களையடைய, தான் – (*யஸ்ய மந்த்ரீ ச கோ3ப்தா ச ஸுஹ்ருச்சைவ ஜநார்த3ந:” என்று) தானே, செய்து – செய்து, அன்று – (துர்யோதநாதிகள் பாண்டவர்களைமேலிட்ட) அன்று, (அவர்களை), ஐவரை – ஐவரும், வெல்வித்த – வெல்லும்படியாகப்பண்ணின, மாயம் – (‘ஆயுதமெடேன்’ என்று ஆயுதமெடுத்தும் பகலை இரவாக்கியும் பண்ணின) க்ருத்ரிம ரூபமான ஆஸ்சர்யசேஷ்டிதங்களையுடைய, போர் – யுத்தத்திலே, தேர் – அர்ஜுநன்தேரிலே, பாகனார்க்கு – (*பார்த2ம் ஸஞ்சா2த்3ய” என்று எதிரிகளம்பு தன்மேலேபடும்படி முன்னே) ஸாரதியாய் நின்றவனுக்கு, இவள் – இவளுடைய, சிந்தை – நெஞ்சானது, துழாய் – ப்ரமித்து, திசைக்கின்றது – அறிவழியாநின்றது.
தேறினோமென்ற பன்மையால் – அவர்கள் கலக்கம் தனக்குமொத்தவோபாதி, தன்தெளிவே அவர்களுக்கும் தெளிவென்று கருத்து.
ஈடு:- முதற்பாட்டு. தோழி, இவள்நோய்க்கு நிதாநத்தைச் சொல்லி, ‘நீங்கள்செய்கிறவை பரிஹாரமன்று’ என்று விலக்குகிறாள்.
(தீர்ப்பாரை யாம்இனி எங்ஙனம் நாடுதும்) – இதுக்கு மூன்றுபடியாக அருளிச்செய்தருளுவர்; ‘தீர்ப்பாரை – எங்ஙனம்நாடுதும்’ என்கையாலே – ‘நீங்கள்செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று அவற்றை நிஷேதிக்கையிலே தாத்பர்யம்; இவர்கள் பரிஹரியாநிற்கப் பரிஹரிப்பாரை எங்கே தேடுவோமென்கை – இது பரிஹாரமல்லவென்றதாய் வருமிறே. அங்ஙனன்றிக்கே, இவளோடொக்க மோஹிப்பாரைக் கிடைக்குமத்தனைபோக்கிப் பரிஹாரம்பண்ணுவாரை எங்கே தேடுவோம்? ஊரும்நாடும் உலகமும் தன்னைப்போல ஆக்கிக்கொண்டிறே இருப்பது. அன்றிக்கே, தானும் இப்போது பரிஹரிப்பாரை ஆராயாநிற்கிறாளென்று தோற்றியிருந்தது. அன்றிக்கே, “கடல்வண்ணரிதுசெய்தார்காப்பாரார்” (திருநெடு.11) என்கிறபடியே, ஔஷதமே அபத்யமானால் பரிஹாரமுண்டோ? ‘நச்சுமாமருந்த’ (3.4.5)மிறே அபத்யமாகிறது; “நிர்வாணம் பே4ஷஜம் பி4ஷக்” என்கிறவனாயிற்று பாதகனாகிறான். (யாம்) – “அன்னைமீர்” என்னாநிற்கச்செய்தேயிறே ‘யாம்’ என்கிறது; தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசியற்றபடி. தாய்மார் மங்களாசாஸநம்பண்ணிமீளாநிற்க, “சோகபா4ரேண சாக்ராந்தாஸ்சயநம் ந ஜஹுஸ்ததா3” என்று அதுவும் மாட்டாதே கிடந்தார்களிறே தோழன்மார்; ஆகையாலே, தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசியறுக்கும் விஷய மென்னுதல்; தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறதாதல். (இனி) – “நோயின்னது” என்று அறிந்தபின்பு. (எங்ஙனம் நாடுதும்) – இனிப்பரிஹாரமுண்டோ? ‘எங்கேதேடக் கடவோம்?’ என்றவாறே, ‘இவள்கையது நம்கார்யம், இவள் அறிந்தாளாக அடுக்கும்’ என்று பார்த்து பந்துவர்க்கமடைய இவள்மேலே ஒருமுகம்செய்தது; ‘இனி நாம் முன்னேயறிந்தோமாகச் சொல்லில் நம்காவற்சோர்வாலே வந்ததாம்; நாம் இப்போது நிரூபித்தோமாவோம்’ என்று பார்த்து, (ஓர்ப்பால்) – இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து. நீங்களும் ஆராயாநின்றிகோளிறே; உங்களோபாதி நானும் ஆராய்ந்துபார்த்தவிடத்தில் இங்ஙனேதோற்றிற்று. இவள்தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஒக்குங்காணும்; மநஸ்ஸை ப்ரத்யக் விஷயமாக்கினால் தத்வத்ரயத்தையும் அலகலகாகக் காணவல்லளாயிற்று. (இவ்வொண்ணுதல்) – இவ்விலக்ஷணமான நுதலையுடையவள். இம்முகத்தை யுடையவளுக்கு முகாந்தரத்தாலே வருவதொரு நோயுண்டோ? “கண்ணன் கோளிழைவாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றது” (7.7.8) என்கிறபடியே அம்முகத்தாலே வரவேண்டாவோ? இவள்நோயென்றால் அவன் அடியாக வேண்டாவோ? ஸ்ரீபரதாழ்வான் நோயென்றால் சாதுர்த்திகமாயிருக்குமோ? ராமவிரஹத்தாலே வந்ததென்று ப்ரஸித்தமன்றோ? இவளை இப்படி படுத்துவது ஒரு விஷயமாக வேண்டாவோ? அம்புபட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும், நீரிலேபுக்குமுடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ? குணாதிகவிஷயத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலுண்டான மோஹமாகையாலே முகத்தில் செவ்விக்கு ஆலத்திவழிக்கவேண்டும்படியாயிற்று இருக்கிறது. (உற்ற) – பரிஹாரமில்லாதபடி மறுபாடுருவக்கொண்ட நோய். (நல்நோய்) – இந்நோவுதான் பரிஹரிக்க வேண்டா. கைக்கூலிகொடுத்துக் கொள்ளவேண்டும் நோய்; பரிஹரிக்க வேண்டா. இந்நோய் கொள்ளுகைக்கிறே முமுக்ஷுக்கள் புருஷகாரம் பண்ணுகிறது. இந்நோய்கொள்ளுகையன்றிக்கே பரிஹாரம் சொல்ல இருப்பதே நான்! ஜ்ஞாநம்பிறந்தபின்பு சரீராவஸாநத்தளவும செல்ல தேஹயாத்ரைக்கு உறுப்பாய், பின்பு தானே நித்யப்ராப்யமான நோயிறே. இதரஸாதநாபேக்ஷயா ப்ராபகமாய், ஸாதநபுத்தி கழிந்தவன்று தானே ப்ராப்யமாயிருக்குமிறே. “பரமாபத3மாபந்ந:” – அடிக்கழஞ்சுபெற்ற ஆபத்தாயிற்று. இடர்ப்பட்டவிடத்திலே ஸர்வேஸ்வரன் அரைகுலையத் தலைகுலைய வந்து விழும்படியான ஆபத்தாயிற்று இது. “ப4க்த்யாத்வநந்யயாசக்ய:” என்கிற இது உண்டானால் பின்னை அவன் கைப்பட்டானேயன்றோ? (தேறினோம்) – இவர்கள் கோஷ்டியில் தெளிவு அரிதாயாயிற்று இருப்பது, ருஷிகள் கோஷ்டியில் கலக்கம் அரிதாயிருக்குமாபோலே. ‘இதரவிஷயப்ராவண்யம் ஆகாது’ என்கிற தெளிவிறே ருஷிகளுக்கு உள்ளது; பகவத்ப்ராவண்ய மடியாக வந்த கலக்கமிறே இது. ‘ஆகில், அதுசொல்லிக்காணாய்’ என்ன, (போர்ப்பாகு இத்யாதி) – இரண்டுதலைக்கும் உறவாய்ப் பொருந்தவிடச் சென்று, வினைத்தலையிலே வந்தவாறே, “யஸ்ய மந்த்ரீச கோ3ப்தாச” என்கிறபடியே – அவர்கள் பறித்துக்கொண்ட பரிகரமெல்லாம் தானேயாய் நின்றானாயிற்று. போர்க்குவேண்டும் நிர்வாஹமெல்லாம் தானே செய்து. பாகு என்று – நிர்வாஹகர்செய்யும் தொழில். (தான்செய்து) – ‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்த’ (4.5.1) தான் செய்து. தன் ஆஸநபலத்தாலே ஸர்வத்தையும் நடத்தக்கடவ தான் செய்து கைதொடனாய். தானென்று – மேன்மை சொல்லிற்று. இவள் மோஹிக்கிறது அவனுடைய ஸௌலப்யத்துக்கிறே. எளியவனெளிமைக்கு அகப்படுமளவன்றே இவள், அம்மேன்மையுடையவன் தாழநின்றதிலே அகப்படுமவளிறே இவள். (தான்செய்து அன்று ஐவரைவெல்வித்த) – அவர்கள் நூற்றுவராய் துர்வர்க்கமடங்க அங்கே திரண்டு, இவர்கள் தாங்கள் ஐவராய் வெருவியராய் நின்ற அன்று; தான் கையும் அணியும் வகுத்து, படைபொருத்தி, ஸாரத்யம்பண்ணி, குதிரைகள் இளைத்தவிடத்திலே வாருணாஸ்த்ரங்கள் விடலாமிடங்கள் காட்டி விடுவித்து, அங்கே குதிரைகளைவிட்டு நீருட்டிப்பூட்டி வென்றா னென்னுமிடம். அர்ஜுநன் மேலே ஆகவேண்டும் வ்யாபாரங்களையடையத் தானே செய்தானிறே. (ஐவரைவெல்வித்த) – துர்யோதநாதிகளைத் தோற்பித்தவதிலும் அரிதுகாணும் பாண்டவர்களை வெல்வித்தது. அவர்களை துர்மாநத்தாலே தோற்பிக்கை அரிது; இவளை ஸ்த்ரீத்வாபிமாநத்தாலே தோற்பிக்கை அரிது; அப்படியே, (நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண) என்ற இவர்களை ஜயிப்பிக்கையும் அரிதிறே. *(துர்யோதநாதிகளைத் தோற்பிக்கலாம், இவளைத் தோற்பிக்கை அரிது; அவர்களை ஸ்வாதந்த்ர்யாபிமாநத்தாலே தோற்பிக்கை அரிது, அப்படியே இவளை ஸ்த்ரீத்வாபிமாநத்தாலே தோற்பிக்கை அரிது). (மாயப்போர்) – ஆஸ்சர்யமான யுத்தமென்னுதல், க்ருத்ரிமயுத்த மென்னுதல். பகலை இரவாக்குவது, ‘ஆயுதமெடேன்’ என்று ஆயுதமெடுப்பது ஆனவை இத்தலையிலும் உண்டு; மஹாரதர் அநேகர் கூடி அபிமந்யு ஒருவனை நிரஸித்தவை தொடக்கமானவை அத்தலையிலும் உண்டு; இவற்றைச் சொல்லிற்றாகவுமாம். (தேர்ப்பாகனார்க்கு) – அர்ஜுநனை எதிரிகள் சீறினால் அழியச்செய்வது தன்னையாம்படி, உடம்புக்கீடிடாதே வெறுங்கையோடே தேர்த்தட்டிலே முன்னே நின்று ஸாரத்யம் பண்ணினபடியைச் சொல்லுகிறது. (அயமஸ்மி) – நான் உன்அடியானன்றோ? ஏவிக்கார்யங் கொள்ளலாகாதோ? என்னும். (இவள்) – அப்பாகிலே பிடிபட்ட இவள். “நிர்கு3ண: பரமாத்மாஸௌ தே3ஹந்தேவ்யாப்யதிஷ்ட2தி” என்கிறபடியே, ஸாரத்யவேஷம் இவள்வடிவிலே நிழலெழுந்து தோற்றுகிறதில்லையோ? இவள் நெஞ்சுகலங்கி மோஹிக்கிறது தேர்ப்பாகனார்க்கு; ‘கடல்கலங்கிற்று’ என்றால், ‘மந்த்ரத்தாலே’ என்று இருக்கவேண்டாவோ? ஸாரத்யவ்ருத்தாந்தத்தை யொழிய, பரமபதத்தில் முதன்மைக்கு மோஹிக்குமோ? ‘மயர்வறமதிநலமருளப்பெற்ற’ இவள். ‘மயர்வறமதிநலமருளப்’ பெற்றார் கலங்கும்போது அவனுடைய ஆஸ்ரிதபாரதந்த்ர்யத்திலே ஆகவேண்டாவோ? ஒருவனுக்கு சோகநிவர்த்தகனானவன் காணுங்கோள் இவளுக்கு சோகத்தை விளைத்தான். ஆணுக்கு சோகத்தைப்போக்கினான்; அபலைக்கு சோகத்தை விளைத்தான்.
இரண்டாம் பாட்டு
திசைக்கின்றதேஇவள்நோய் இதுமிக்கபெருந்தெய்வம்
இசைப்பின்றி நீரணங்காடும் இளந்தெய்வமன்றிது
திசைப்பின்றியே சங்குசக்கரமென்றிவள்கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில்பெறுமிதுகாண்மினே.
ப:- அநந்தரம், இவள்நோய் க்ஷுத்ரதேவதாமூலமல்ல, ஸர்வாதிகதேவதாமூலம், அவனுடைய அஸாதாரணசிஹ்நங்களைச் சொல்லில் இவளைக் கிடைக்கலாம் என்கிறாள்.
திசைக்கின்றது – (இவளோடு உங்களோடு வாசியற) மதிகெடுகிறது; இவள்நோய் – இவள் நோயாலாயிருக்கும், இது – இது, மிக்க பெரும் தெய்வம் – ஸர்வாதிகமாய் அபரிச்சேத்யமாஹாத்ம்யத்தையுடைய தேவமூலம்; இது – இது, இசைப்பு இன்றி – (உங்களுக்கும் இவள் தனக்கும் நோய்க்கும்) சேராதபடி, நீர் – நீங்கள், அணங்காடும் – தைவாவிஷ்டராயாடுகிற, இளந்தெய்வம் – அல்பதேவதை, அன்று – அன்று; திசைப்பு இன்றியே – (புறம்புசொல்லுவார் வார்த்தையைக்கேட்டு) ப்ரமியாதே, சங்குசக்கரம் – (அந்தஸர்வாதிகதேவதைக்கு அஸாதாரணசிஹ்நங்களான) சங்கசக்ரங்கள், என்று – என்று, இவள் – (மோஹித்துக்கிடக்கிற) இவள், கேட்க – கேட்க, நீர் – நீங்கள், இசைக்கிற்றிராகில் – சொல்ல வல்லீர்களாகில், நன்றே – நன்றாகவே, (இவள்), இல் பெறும் – இல்லிருப்புப்பெறும்; இது – இத்தை, காண்மின் – (அபரோக்ஷித்துக்) காணுங்கோள்.
இல்லென்று – இருப்பிடமாய், இவ்விடத்திலே இவள் ஸத்தையோடே யிருக்கப்பெறுமென்றபடி. அன்றியே, நாயகன்பக்கலிலே இல்வாழ்க்கையைப்பெறு மென்றுமாம்.
ஈடு:– இரண்டாம்பாட்டு. க்ஷுத்ரதேவதாசாந்தியால் இந்நோய்போக்குகை அரிது, பகவத் விஷயத்தைச் சொல்லில் இவளைப் பெறலாம் என்கிறாள்.
(திசைக்கின்றதே இவள்நோய்) – இவள் அவன்குணநிமித்தமாக அறிவுகெடாநின்றாள்; நீங்கள் இவள்நோய் நிமித்தமாக அறிவுகெடாநின்றிகோள். இவள் நோவுக்கு நிதாநம் நீங்கள் ‘அவனடியாக வந்தது’ என்று அறியமாட்டுகிறிலிகோள். ‘திசைக்கின்றதே’ என்கையாலே – தாய்மாராகையாலே கௌரவித்து வார்த்தைசொல்லவேணுமிறே. இவள்நோய்நிமித்தமாக அறிவு கெடுவதே நாம்! ‘நாங்கள் அறிந்திலோமாகில், இதுக்கு நிதாநமறிந்தாயாயிருக்கிற நீ பின்னைச் சொல்லிக்காணாய்’ என்ன, (இது மிக்கபெருந்தெய்வம்) (கம்பீர: பரமோதேவ:) என்றும், “வானோர்தலைமகனாம் சீராயின தெய்வநன்னோய்” (திருவிரு.53) என்றும் சொல்கிறபடியே, ஸர்வேஸ்வரனடியாக வந்த கனவிய நோவு இது; இவள் நோவுக்கும், இந்நோவுக்கு நிதாநபூதனானவனுக்கும் உண்டான அபேதத்தை புத்திபண்ணி, ‘இது மிக்கபெருந்தெய்வம்’ என்று இது தன்னை அவனாகச் சொல்லுகிறாள். (இசைப்பின்றி இத்யாதி) – நீங்கள் பண்ணுகிற பரிஹாரத்துக்கும் உங்களுக்கும் ஒருசேர்த்தியில்லை; இந்நோய்க்கும் இவளுக்கும் ஒருசேர்த்தியில்லை. முதல் தன்னிலே பகவத்விஷயத்திலே கைவைத்தார் கொள்ளுகைக்கு ஸம்பாவநையுடைய நோவன்று இதுதான். ஒரு வழியாலும் ஒரு சேர்த்தியின்றிக்கே, இது உங்களுக்குச் சேர்ந்ததல்ல; உங்கள் மகளாய் நோவுகொண்ட இவளுக்குச் சேர்ந்ததல்ல; நோவுக்கு நிதாந பூதனானவனுக்குச் சேர்ந்ததல்ல; இதரதேவதைகள் இந்நிலத்தில் வந்து புகுரமாட்டாமையாலே நீங்கள் நினைக்கிற தேவதைகளுக்குச் சேர்ந்ததல்ல. இங்கே அருளிச்செய்யும் வார்த்தை – பிள்ளையுறங்காவில்லிதாஸர் குடிமகனொருவனுக்கு ஐயனார் ஏறி வலித்து நலிந்தவாறே, ‘உனக்கு வேண்டுவ தென்?’ என்று கேட்க, ‘எனக்குப் பாலும் பழமுமாக உண்ணவேணும்; சாந்தும் புழுகும் பூசவேணும்; நல்லபுடைவை உடுக்கவேணும்; நல்ல ஆபரணம் பூணவேணும்; தண்டேறவேணும்; அணுக்கனிடவேணும்’ என்ன, அவர்களும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று, பிள்ளைதிருமாளிகையிலே வந்து, சாந்து புழுகு ஆபரணாதிகளை வாங்கிக்கொண்டுபோய் அவற்றை அலங்கரித்து சாந்தியும் பண்ணிவிட்டு வந்த அவ்விரா, பண்டையிலும் இரட்டியாக அவனை வலிக்க, ‘இதுஎன்?’ என்று கேட்க, ‘பிள்ளைசாத்துகிறவற்றையெல்லாம் கொண்டுவந்திகோள்; அவர்க்குச் சாத்துகிற அணுக்கனை யிட்டிகோள்; நான் அதின்கீழே போவேனோ? என்னை வெயிலிலே கொண்டுபோனிகோள், என் உடம்பிலே நெருப்பை வழியட்டினாற்போலே அவர் சாத்துகிறவற்றைப் பூசினிகோள், அரிகண்டமிட்டாற்போலே அவர் சாத்துகிற ஆபரணத்தைப் பூட்டினிகோள்; நீங்கள் செய்த செயலுக்கு இவனைக்கொண்டல்லது போகேன்’ என்று வலித்ததாம். ஆகையால், அவற்றுக்குச் சேராது. (நீர்) பகவத்விஷயத்திலே விக்ருதராகக்கடவ நீங்கள். (அணங்காடும் இளந்தெய்வமன்று இது) – தேவாவிஷ்டராய்க் கொண்டு ஆடுகிற மறுமுட்டுப் பொறாத க்ஷுத்ரதேவதையடியாக வந்த நோயன்று இது.
(திசைப்பின்றியே) – இவள்நோய்க்கு நிதாநத்தில் அறிவுகெட்டாற்போலே பரிஹாரத்திலும் மதிகெடாதே. நிதாநத்தில் கலக்கம் பிறந்தாலும் பரிஹாரத்தில் கலக்கம் பிறவாதொழியவே நோவு பரிஹ்ருதமாமிறே. நாங்கள் நிதாநத்தில் அறிவுகெட்ட அம்சமென்? பரிஹாரத்தில் அறிவுகெடாத வழியென்? என்னில், (சங்கு இத்யாதி) “சங்கென்னும் சக்கரமென்னும்” (4.2.9) என்றிறே இவள் நோய் இருப்பது; நீங்களும் சங்குசக்கரமென்று பரிஹரிக்கப் பாருங்கோள். நோவு வந்த வழியை அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ? “சங்கென்னும் சக்கரமென்னும்” என்று நீங்கள் சொல்லவன்றோ நானும் அறிந்தது; இப்போது பரிஹாரத்திலே வந்தவாறே அறிவு கெடுகிறதென்? அது செய்யுமிடத்தில் குளப்படியிலே கடலை மடுத்தாற்போலேயாகாமே, “சங்கென்னும் சக்கரமென்னும்” என்று இவள் சொன்னாற்போலே சொல்லப் பாருங்கோள். (இவள் கேட்க நீர் இசைக்கிற்றிராகில்) – மோஹித்துக்கிடக்கிற இவள் கேட்க வல்லளா மன்று காணும், தெளிந்திருக்கிற இவர்கள் சொல்லவல்லாராவது; ஆகையிறே, ‘திசைப்பின்றியே’ என்றது. இவளுக்கு இங்ஙன்சொல்லுமதொழிய மற்றொன்றுதான் செவிப்படாதுகாணும். இவள் செவியிலேபடும்படி, நீங்கள் தரித்துநின்று ஓருக்திமாத்ரம் சொல்லவல்லிகோளாகில். ஆய்ச்சிமகனுடைய அந்திமஸமயத்திலே பட்டர் ‘அறிய’ என்று எழுந்தருளியிருந்தாராய், தம்மையறியாதே கலங்கிக் கிடக்கிறபடியைக் கண்டு, பெருமாளுக்கு இவர் ஸ்நேஹித்திருக்கும்படியை அறிந்திருக்கையாலே, மெள்ளச் செவியிலே ஊதினாற்போலே ‘அழகியமணவாளப் பெருமாளே சரணம்’ என்றாராம்; அநந்தரம் அதிலே உணர்த்தியுண்டாய் நெடும்போதெல்லாம், ‘அழகியமணவாளப்பெருமாளே சரணம்’ என்று திருநாட்டுக்கு நடந்தாராம். “பெற்றமக்கள்பெண்டிரென்றிவர் பின்னுதவாதறிந்தேன் – பிறிந்தேன்” (திருமொழி 6.2.4). சரமதசையிலேயிருந்து ‘பொன்வைத்தவிடம் சொல்லிக்காணாய்’ என்னுமித்தனைபோக்கி, திருநாமத்தை அருகேயிருந்து சொல்லுவாரைக் கிடையாதிறே; “சோர்வினால் பொருள்வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்று” (பெரியா. 4.5.3) மிருக்குமித்தனையிறே. (நன்றே) – இது சால அழகியது! சால நன்றாம். நன்மைக்கு அவதியேது? என்ன, (இல்பெறும்) – ஆத்மாவுக்கு ஆயதநமான சரீரத்தைப் பெறுமென்னுதல்; ஒருதமிழன் இட்டுவைக்கிறான், ‘இல் – கிழத்தியாய், க்ருஹிணியாகப்பெறும்’ என்று; அன்றிக்கே, ‘ஏயில்பெறும்’ என்றாய், ஏயிலென்று – காநமாய், *”பண்ணைவென்ற இன்சொல் மங்கை” (திருச்சந்த. 105) யாகையாலே, இவள் வார்த்தை சொல்லுமென்று; (மதுராமதுராலாபா) என்னக்கடவதிறே. ஆக, சரீரத்தைப் பெறுமென்னுதல், க்ருஹிணியா மென்னுதல். வார்த்தைசொல்ல வல்லளா மென்னுதல். (இதுகாண்மினே) – தேவதாந்தர ஸ்பர்சமுடையாரும் புகுந்து ஸ்பர்சிக்க இராநின்றிகோளிறே; அவ்வோபாதி நான் சொன்ன பரிஹாரத்தையும் செய்துபார்க்க மாட்டிகோளோ? நான் இது ‘கைகண்ட’ன்றோ சொல்லுகிறது; நீங்களும் இத்தைச்செய்துபார்க்கமாட்டிகோளோ? ஒன்றேயோ பரிஹாரம்? இது நதீமாத்ருகம்போலே பலத்யாப்தம். அதவா, (இதுகாண்மினே) “வெள்ளைச்சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக்கண்ணனென்னெஞ்சினூடே, புள்ளைக்கடாகின்றவாற்றைக் காணீர்” (7.3.1) என்னுமாபோலே இவள் தன்நெஞ்சிலே ப்ரகாசிக்கிற படியை, ‘நான்சொன்ன மருந்து இவளுக்குச் செய்விகோள், தவிருவிகோள்; செய்தபடிசெய்ய, இப்போது இத்தைப்பாருங்கோள்’ என்று காட்டுகிறாளாகவுமாம். அப்போதைக்கு, நன்றேயில்பெறுமென்று – பாட்டு முடியும்; இது காண்மினென்று – தனியே வாக்யம்.
மூன்றாம் பாட்டு
இதுகாண்மின்அன்னைமீர்! இக்கட்டுவிச்சிசொற்கொண்டு நீர்
எதுவானும்செய்து அங்கோர்கள்ளும் இறைச்சியும்தூவேன்மின்
மதுவார்துழாய்முடி மாயப்பிரான்கழல்வாழ்த்தினால்
அதுவேஇவளுற்றநோய்க்கும் அருமருந்தாகுமே.
ப:- அநந்தரம், நிந்த்யமான ஸுராமாம்ஸங்களைக்கொண்டு இதரதேவதா சாந்திபண்ணாதே, நிரதிசயபோக்யனானவன் திருவடிகளை ஏத்தினால், அதுவே இவள்நோய்க்கு பேஷஜமாய் போக்யமுமாம் என்கிறாள்.
அன்னைமீர் – அன்னைமீர்! (பெற்றுவளர்த்தோமென்கிற மேன்மையாலே சொல்லிற்றுக் கேளாதிராதே), இது – (நான்சொன்ன) பரிஹாரத்தைப் பண்ணி, காண்மின் – (பலத்தைக்) காணுங்கோள்; இ – இந்தத் தண்ணியளான, கட்டுவிச்சி – கட்டுவிச்சியுடைய, சொல் – (தகுதியில்லாத) வார்த்தையை, கொண்டு – கைக்கொண்டு, நீர் – உங்கள் ஸ்வரூபத்தைப்பாராதே, எதுவானும் – (ஹேயதேவதாநுவ்ருத்திரூபமானது) ஏதேனுமொன்றை, செய்து – அநுஷ்டித்து, அங்கு – அந்தஸ்தலத்திலே, ஓர் – (ஹேயமாயிருப்பது) ஒரு, கள்ளும் – மதுவையும், இறைச்சியும் – மாம்ஸத்தையும், தூவேன்மின் – தூவி தூஷியாதே கொள்ளுங்கோள்; (ஆனால் பரிஹாரமேதென்னில்): (*பாலுமாய் மருந்துமாய்*என்னுமாபோலே), மதுவார் – மதுஸ்யந்தியான, துழாய் – திருத்துழாயாலே அலங்க்ருதமான, முடி – முடியையுடையனாய், மாயம் – ஆஸ்சர்யமான குணசேஷ்டிதங்களை, பிரான் – ஆசைப்பட்டார்க்கு அநுபவிப்பிக்கும் மஹோபகாரகனுடைய, கழல் – திருவடிகளுக்கு, வாழ்த்தினால் – மங்களாசாஸநம் பண்ணினால், அதுவே அந்தமங்களாசாஸநம் உங்கள் ஸ்வரூபாநு ரூபமாமளவன்றியே, இவள் உற்ற – இவள் உள்ளுறக்கொண்ட, நோய்க்கு – நோய்க்கு, அரு – பெறுதற்கரிய, மருந்துமாகும் – மருந்துமாய் இவளுக்கு போக்யமுமாய், இவள் நோய் கண்டு நீங்கள்படுகிற கலக்கத்துக்குப் பரிஹாரமுமாம்.
ஈடு:- மூன்றாம்பாட்டு. அயுக்தங்களைச் செய்யாதே அவன் திருவடிகளை ஏத்துங்கோள், அதுவே இந்நோய்க்கும் பேஷஜம் என்கிறாள்.
(இதுகாண்மின் அன்னைமீர்) – வயிற்றிலே பிறந்தவர்களென்னுங்காட்டில் சொன்னஹிதம் கேளாதொழியவேணுமோ? நியாமிகைகளென்னு மித்தனையோ வேண்டுவது? வயிற்றிலே பிறந்தவர்களாகிலும் சொன்ன வார்த்தை நன்றாயிருக்குமாகில் கைக்கொள்ளவேண்டாவோ? திருமாலைப் பாடக்கேட்டு ‘வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளும்’ (திருநெடு.14) உங்களிலே ஒருத்தியன்றோ? அது கிடக்க; (புத்ரகா இதிஹோவாச) இல்லையோ? ஆரேனும் சொல்லிலும் வார்த்தை நன்றாகில் கைக்கொள்ள வேண்டாவோ? (இக்கட்டுவிச்சி) “காணிலுமுருப்பொலார்” (திருச்சந்த. 69) (சொற்கொண்டு) – “செவிக்கினாதகீர்த்தியார்” (இதுவுமது) (இக்கட்டுவிச்சிசொற்கொண்டு) – பரிஹாரம்சொல்லுகிற இவள்படி கண்டிகோளே, இவள் வார்த்தை கேட்டிகோளே, இத்தையே ஆதரிப்பது! நான்சொல்லுகிற வார்த்தையையே இவள்சொன்னாலும் கைக்கொள்ளக்கடவதோ? இவள் சொன்ன வார்த்தையை நான்சொன்னாலும் என்னையுங்கூட த்யஜிக்கும்படியன்றோ வார்த்தையின் பொல்லாங்கு. (நீர்) – “பேய்முலைநஞ்சூணாகவுண்டானுருவொடுபேரல்லால் காணாகண் கேளாசெவி” (முதல். திரு. 11) என்றிருக்கக்கடவ நீர். நாஸ்திகரான பௌத்தார்ஹதாதிகளும் ‘பரஹிம்ஸை ஆகாது; கள் ஆகாது’ என்பர்களிறே; அவ்வழியாலே கைக்கொள்ளுமவர்களோ நாம்? “நஹிம்ஸ்யாத்ஸர்வாபூ4தாநி*யோபாதி வைதஹிம்ஸையும் கைக்கொள்ள வேண்டாவோ? (இக்கட்டுவிச்சி இத்யாதி) – (ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்சிந:) என்னுமவர்களன்றோ உங்களுக்கு உபதேசிப்பார்? (எதுவானும்செய்து) – அதுவுமாமிறே உங்களாசாரத்தோடு சேர்ந்திருக்கப் பெற்றதாகில். ஏதேனும் அஸங்கதங்களைச் செய்து. “செய்யாதனசெய்யோம்” (திருப்பாவை 2) என்றும், “மேலையார் செய்வனகள் வேண்டுவன” (திருப்பாவை 26) என்றுமன்றோ உங்கள்நிஷ்டை. (அங்கு ஓர் இத்யாதி) – நிஷித்த த்ரவ்யங்களைக் கொண்டு வைஷ்ணவ க்ருஹத்தை தூஷியாதே கொள்ளுங்கோள். ‘அங்கு’ என்று – முகத்தை மாறவைத்துச் சொல்லுகிறாள். ஆகில், தவிருகிறோம்; பரிஹாரத்தைச் சொல்லிக் காணாயென்ன, (மதுவார் இத்யாதி) – “விரைமட்டலர் தண்டுழா யென்னும்” (2.4.9) என்ற நீங்கள் சொல்லவன்றோ நான் கேட்டது? திருக்குழலில் ஸ்பர்சத்தாலே மதுஸ்யந்தியாநின்றுள்ள திருத்துழாயைத் திருவபிஷேகத்திலேயுடையனாய், ஸௌந்தர்ய
சீலாதிகளால் ஆஸ்சர்யபூதனாய், அந்த ஸௌந்தர்யாதிகளை ஆஸ்ரிதார்த்தமாக்கி வைக்கும் உபகாரகன் திருவடிகளை வாழ்த்தினால். இவர்கள் திருநாமம் சொல்லுவதுதான் மங்களாசாஸநமுகத்தாலே யாயிற்று. “உன்சேவடி செவ்விதிருக்காப்பு” (திருப்பல். 1) என்றிறே வாழ்த்துவது. “(கெண்டையொண்கணும் துயிலும்) – உறக்கத்தாலல்லது செல்லாதபடியாய் முக்தமாய் ஸுகுமாரமான கண்ணும் உறங்கும். (என்னிறம்பண்டுபண்டு போலொக்கும்) – அதாவது – கலப்பதற்கு முன்பு போலேயாம். கலக்கையாகிறது ஆற்றாமைக்கு அடியிடுகிறதிறே. ஒருவிஷயத்தில் வாசியறியாதார் நிரபேக்ஷரிறே. கண்ணுறங்குவதும், நிறம் பழையபடியேயாவதும் என்செய்தால்? என்னில், (மிக்கசீர் இத்யாதி) – அநந்யப்ரயோஜநரான ஸ்ரீவைஷ்ணவர்களிட்ட திருத்துழாயில் பரிமளத்தை ‘வண்டு கொண்டுவந்து ஊதுமாகில்’. இப்படி சீயர் அருளிச்செய்தவாறே, “துளவின்வாசமே” என்ன அமையாதோ? ‘மிக்கசீர்த்தொண்டர்’ என்கிற இவ்விசேஷணத்துக்குக் கருத்தென்?’ என்று நான் கேட்டேன்; இவள்தான் நோவுபடுகிறது ‘அத்தலைக்குப் பரிவரில்லை’ என்றாயிற்று; ‘அங்கே அநந்யப்ரயோஜநர் பரிமாறாநின்றார்கள்’ என்றவாறே உறங்காத கண்ணும் உறங்கும்; பழையநிறமும் வருங்காண்” என்று அருளிச்செய்தார் (திருமொழி 11.1.9). (அதுவே) – ப்ராப்தமுமாய் போக்யமுமான அதுதானே. (இவளுற்றநோய்க்குமருமருந்தாகும்) – இவள்மறுபாடுருவக் கொண்ட நோய்க்கும் அருமருந்தாகும் – பெறுதற்கரிய மருந்தாம். மேல்காற்றிலே காட்டப் பரிஹாரமாம்.
நான்காம் பாட்டு
மருந்தாகுமென்று அங்கோர்மாயவலவைசொற்கொண்டு நீர்
கருஞ்சோறும்மற்றைச்செஞ்சோறும் களனிழைத்தென்பயன்?
ஒருங்காகவே உலகேழும் விழுங்கியுமிழ்ந்திட்ட
பெருந்தேவன்பேர்சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே
ப:- அநந்தரம், க்ருத்ரிமையான கட்டுவிச்சி சொல்லிற்றுச் செய்து ஒரு ப்ரயோஜநமில்லை; ஆபத்ஸகனான ஸர்வேஸ்வரனுடைய திருநாமத்தைச் சொல்லில் இவளைக் கிடைக்கும் என்கிறாள்.
(பரிஹாரமில்லாதத்தை), மருந்துஆகும் என்று – பரிஹாரம் என்று ப்ரதிபத்தி பண்ணி, அங்கு ஓர் – ‘இன்னவிடத்திலால், இன்னாள்’ என்று சொல்லவுமொண்ணாதாளொரு, மாயம் – க்ருத்ரிமையாய், வலவை – ப்ரதிபந்நபாஷிணியானவளுடைய, சொல் – வார்த்தையை, கொண்டு – விஸ்வஸித்து, நீர் – (தேவதாந்தரஸ்பர்சயோக்யதையில்லாத) நீங்கள், (இவள்பக்கல்பரிவாலேகலங்கி, ஸாத்த்விகாந்நமான சுத்தாந்நமன்றியே தாமஸமாயும் ராஜஸமாயுமுள்ள), கருஞ்சோறும் – கருஞ்சோற்றையும், மற்றை – தத்வ்யதிரிக்தமான, செஞ்சோறும் – செஞ்சோற்றையுங்கொண்டு, களன் – தேவதாந்தரஸந்நிதாந ஸ்தலத்திலே, இழைத்து – (அவற்றுக்கு ப்ரீணநமாம்படி சொல்லுகிற கணக்கிலே) இட்டால், என் பயன் – என்ன ப்ரயோஜநமுண்டு?, உலகு ஏழும் – (ஆஸ்ரிதாநாஸ்ரிதவிபாகமற) ஸர்வலோகங்களையும், ஒருங்காகவே – ஒருகாலே, விழுங்கி – (ப்ரளயம்விழுங்காதபடி) தான்விழுங்கி ரக்ஷித்து, உமிழ்ந்திட்ட – (அதுபோனவாறே) மீளஉமிழ்ந்த, பெருந்தேவன் – பரதேவதையினுடைய, பேர் – திருநாமத்தை, சொல்லகிற்கில் – சொல்ல வல்லீர்களாகில், இவளை – (விலக்ஷணையான) இவளை, பெறுதிர் – பெறுதிகோள்.
ஈடு:- நாலாம்பாட்டு. வஞ்சகையாய்த் தோற்றிற்றுச் சொல்லுகிற இவளுடைய பஹுஜல்பாதிகளை விட்டு, ஆபத்ஸகனான ஸர்வேஸ்வரனுடைய திருநாமத்தைச் சொல்ல வல்லிகோளாகில் இவளைக் கிடைக்கும் என்கிறாள்.
(மருந்தாகுமென்று) – அபத்யஸேவைபண்ணுவார் ‘பத்யம்’ என்று வ்யவஹரித்துக் கொள்ளவும் வேணுமோ? மருந்தாமென்றபடி. (அங்கு ஓர்) – ‘அங்கேயொருத்தி’ என்று அநாதரோக்தி. (மாய வலவை சொற்கொண்டு) – வஞ்சகையாய் ப்ரதிபந்நங்களையே சொல்லக்கடவளான இவள் வார்த்தையைக் கேட்டு. (நீர்) – ஸாத்த்விகராய், பகவத்விஷயமல்லது சொல்லக்கடவரன்றிக்கே ருஜுக்களாயிருக்குமவர்கள் வார்த்தையைக் கேட்கக்கடவ நீங்கள் படும் எளிவரவே! (நீர்) – “போனகம்செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” (திருமாலை 41) என்ற ஸாத்த்விகர் அமுதுசெய்த ப்ரஸாத வைபவமறியும் நீர்; ஸாத்த்விகாந்நமல்லது ஸ்பர்சிக்கக்கடவரல்லாத நீர். (கருஞ்சோறும் இத்யாதி) – தாமஸாந்நமும், அத்தோடு தோள்தீண்டியான ராஜஸாந்நமும். (களனிழைத்து என்பயன்) – களனென்றது – களம் என்றபடி. இழைக்கை – இடுகை. அதாவது க்ஷுத்ரதேவதைகள் வந்து ஸந்நிதிபண்ணும் ஸ்தலங்களிலே – நாற்சந்தி தொடக்கமானவற்றிலே, இழைத்து – அவற்றுக்குச் சொல்லுகிற நியமங்களோடே இட்டு. ராஜஸ தாமஸ தேவதைகளுக்கு, அவ்வோதேவதைகள் வந்து ஸந்நிதிபண்ணும் ஸ்தலங்களிலே ராஜஸமாயும் தாமஸமாயுமுள்ள அந்நங்களைக்கொண்டு இடச்சொல்லுகிற க்ரமத்திலே இட்டால் என்னப்ரயோஜநமுண்டு? ப்ரயோஜநமில்லாமையேயன்று; விநாசத்தோடே பலிக்கும். ப்ரளயகாலத்தில் ஸர்வரக்ஷகனான ஸர்வேஸ்வரனையொழிய ப்ரளயாபத்து ரக்ஷிக்கலாமாகிலாயிற்று, இவளை க்ஷுத்ரதேவதைகளைக் கொண்டு ரக்ஷிக்கலாவது. ‘இதில் ப்ரயோஜநமில்லையாகில், மற்று ப்ரயோஜநமுண்டாக நீ நினைத்தத்தைச் சொல்லாய்’ என்ன, ‘உங்களுக்கு ஒரு பேரிறே நான்சொல்லுகிறது செய்விகோளாகில்’ என்கிறாள். (ஒருங்காகவே) ஒருவர் களனிழையாதிருக்கசெய்தே வந்து, வரையாதே ரக்ஷிக்குமவனைப் பற்றப் பாருங்கோள். ஒருவர் அர்த்தியாதிருக்க, ஆபத்தே ஹேதுவாக வந்து உதவுமவனாயிற்று. (உலகேழும்) – அதுதன்னிலும், ‘ஆஸ்ரிதர், அநாஸ்ரிதர்’ என்று பாராதே எல்லாரையுமொக்க ஏககாலத்திலே திருவயிற்றிலேவைத்து நோக்கி, ப்ரளயம் கழிந்தவாறே வெளிநாடு காணப்புறப்படவிட்ட. (பெருந்தேவன்) – பரதேவதை. ஸர்வரக்ஷகனாகையாலே ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரன்; தளர்ந்தார் தாவளமாயிற்று; முன்பு முகந்தோற்றாதே நின்றானாகிலும் ஆபத்து வந்தவாறே முகங்காட்டி ரக்ஷிக்குமவனாயிற்று. அவன் இப்படியிருப்பானொருவனாகையாலே ஸ்வாராதன்; நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளைப்போலே துஸ்சீலமாய், ‘அட்டதொழியச் சுட்டதுகொடுவா’ என்னும் துராராதனல்லன். தான் ரக்ஷிக்குமிடத்தில் இத்தலையில் ஆநுகூல்யத்துக்கு ஸூசகமான அப்ரதிஷேதமேயாயிற்று வேண்டுவது. (உலகேழும் இத்யாதி) – அந்த ப்ரளயம் தீர்த்தவனேகாணும் இந்தப்ரளயத்துக்கும். நம்மோடொக்க ப்ரளயத்திலே அழுந்தும் க்ஷுத்ரதேவதையையோ பற்றுவது? வரையாதே ஸர்வரக்ஷகனானவனையன்றோ பற்றுவது? (பேர்சொல்லகிற்கில்) – திருநாமத்தைச் சொல்லவல்லிகோளாகில். இப்படி நேர்த்தியற்றிருக்குமாகில் பலமும் அளவுபட்டிருக்குமோ? என்னில், (இவளைப்பெறுதிரே) – அங்கு – நேரவேண்டுவதெல்லாம் நேர்ந்தாலும், என்பயன்? என்று ப்ரயோஜநமில்லையாகச் சொல்லிற்று; இங்கு நேர்த்தி திருநாமமாத்ரம் சொல்லுகையாய், பேற்றில் வந்தால் இவளைப் பெறுகையாகிற பெரியபலத்தைப் பெறலாம். பேர்சொல்ல வல்லிகோளாகில் இவளைப் பெறலாம்; இல்லையாகில், இழக்குமித்தனை.
ஐந்தாம் பாட்டு
இவளைப்பெறும்பரிசுஇவ்வணங்காடுதலன்றந்தோ
குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும்பயந்தனள்
கவளக்கடாக்களிறட்டபிரான் திருநாமத்தால்
தவளப்பொடிக்கொண்டுநீர் இட்டிடுமின்தணியுமே.
ப:- அநந்தரம், நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் இவள்நோய் விஞ்சாநின்றது; ப்ரபல விரோதி நிவர்த்தகனான க்ருஷ்ணனுடைய திருநாமத்தை உச்சரித்துப் பரிசுத்தசூர்ணத்தை ஸ்பர்சிப்பியுங்கோள் என்கிறாள்.
இவளை – (நிரதிசயவைலக்ஷண்யத்தையுடைய) இவளை, பெறும் – பெறும், பரிசு – ப்ரகாரம், இ அணங்காடுதல் அன்று – இந்த அணங்கேறியாடுதல் அன்று; அந்தோ – ஐயோ! (இவளுக்குநோய்விஞ்சினபடி), குவளை தட கண்ணும் – குவளைப்பூப்போலே மைத்துப்பரப்பையுடைத்தான கண்களும், கோவை செம் வாயும் – கோவைப்பழம் போலே சிவந்த அதரமும், பயந்தனள் – தன்னிறமழிந்து பயந்த நிறத்தையுடையவாம்
படியானாள்; (இனி இதுக்குப் பரிஹாரமாவது), – கவளம் – (மதகரமான மருந்துகளைக்) கவளங்கொண்டு, கடாம் – கடமிழியும்படி மதித்த, களிறு – (குவலயாபீடமாகிற) ஆனையை, அட்ட – கொன்று, (*ஸக்2ய:பஸ்யத க்ருஷ்ணஸ்ய முக2ம்” என்று மதுரையிற் பெண்களுக்கு முகங்கொடுத்த), பிரான் – மஹோபகாரகனுடைய, திருநாமத்தால் – (விரோதிநிரஸநஸூசகமான) திருநாமோச்சாரணத்தாலே, (*ப்3ராஹ்மணா: பாத3தோமேத்4யா:” என்கிறபடியே ப்ரஹ்மநிஷ்டரான பாகவதருடைய) தவளம் – பரிசுத்தமான, பொடி – பாததூளியை, கொண்டு – கொண்டு, நீர் – (இவள் பக்கல் பரிவாலே வழியல்லாவழியேயாகிலும் பரிஹரிக்கத்தேடுகிற) நீங்கள், இட்டிடுமின் – (இவள் ஸ்பர்சிக்கும்படி சடக்கென) ப்ரயோகியுங்கோள்; தணியும் – (இவளுக்கு விஞ்சியிருக்கிற வைவர்ண்யம்) தணியும். குவளை – நெய்தல். கடாம் – மதமாதல், ஆனையின் கதுப்பாதல். தவளமென்று – வெளுப்பாய், சுத்தியைச் சொல்லுகிறது.
ஈடு:– அஞ்சாம்பாட்டு. நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை மிகப்பண்ணாநின்றது; அத்தைவிட்டு, நோய்க்கு யோக்யமான பரிஹாரத்தைப் பண்ணுங்கோள் என்கிறாள்.
(இவளைப்பெறும்பரிசு இவ்வணங்காடுதல்அன்று) – இந்நற்சரக்கைப்பெறப் பார்ப்பார் இந்நிஷித்தாநுஷ்டாநத்தாலேயோ பெறப் பார்ப்பது? இவ்விலக்ஷண மாயிருக்கிற இவளைப் பெறுகைக்கு உபாயம் இத்தேவதா விஷ்டமாயாடுமதன்று. இவள் இப்படி சொன்னவிடத்திலும் அவர்கள் மீளாதொழிகையாலே, (அந்தோ) – ஐயோ! இவளை இழந்தோமாகாதே யென்கிறாள். இது அநுவர்த்திக்குங்காட்டில் இவளையிழக்க வேணுமோ? என்ன, பார்க்கமாட்டிகோளோ? (குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்) – அவனுடைய வாய்புகுசோறன்றோ பறியுண்கிறது? “தொண்டையஞ்செங்கனிவாய்நுகர்ந்தானை” (திருமொழி 8.10.1) என்றும், “மணநோக்கமுண்டான்” (திருமொழி 3.7.2) என்றும் இவையிறே அவனுக்கு ஊண். “குவளையங்கண்ணி” (திருமொழி 2.7.1) என்னக்கடவதிறே; குவளைப் பூப்போலேயாய் போ4க்தாக்களளவல்லாத பரப்பையுடைத்தான கண்ணும்; கோவைவாயாளிறே, கோவைப்பழம் போன்ற சிவந்த அதரமும் விவர்ணமாயிற்றின; பசந்தனள் என்றபடி. பகவத் விரஹத்துக்கும் அகஞ்சுரிப்படாதவை, தேவதாந்தர ஸ்பர்சத்தாலும் ததீயஸ்பர்சத்தாலுமாக விவர்ணமாயிற்றினவென்றபடி. ஆனால், பரிஹாரம் சொல்லாயென்ன; நீங்களேயன்றோ “நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப்பாதம் பரவிப்பெற்ற” (திருவிரு. 37) என்று சொன்னிகோள்; அப்படியே க்ருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயித்து அவனாலே பரிஹ்ருதமாகவேணுமென்கிறாள். (கவளம் இத்யாதி) – இரண்டு அநீதியுண்டு இங்கே புகுந்தது; அவ்விரண்டுக்கும் இரண்டையுங் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள். கவளங்கொண்டிருப்பதாய், துர்த்ரவ்யங்களைப் பருக்கிப் பிச்சேற்றுவித்து நிறுத்தினார்களாயிற்று. கடாம் என்று – மதஜலம். மதஜலமொழுகா நின்றுள்ள குவலயா பீடத்தை முடித்த உபகாரகன். ப்ரப3ல ப்ரதி ப3ந்த4கங்க3ளை அநாயாஸேந போக்கவல்லவன் திருநாமத்தாலே பரிஹரிக்கப் பாருங்கோள். (தவளப்பொடிக்கொண்டு) – பரிசுத்தமான பொடியைக் கொண்டு (நீர்) – பாபம்பண்ணுகைக்கு ஸஹகரித்தார்க்கு, ப்ராயஸ்சித்தத்துக்கும் கூட்டுப்பட வேண்டாவோ? (இட்டிடுமின்) – இவள்மேலே இடுங்கோள். தேவதாந்தர ஸ்பர்சமுண்டானதுக்கு பகவந்நாமத்தைச் சொல்லிப் பரிஹரிக்கப் பாருங்கோள்; தேவதாந்தரஸ்பர்சமுடையாருடைய ஸ்பர்சத்துக்கு ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாதரேணுவைக்கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள். இப்படிசெய்தால் பரிஹாரப்படுமோ? என்ன, (தணியுமே) – இவள்கண்ணும் விழித்து நிறமும் வரும்படி காட்டித் தரக்கடவேன்.
ஆறாம் பாட்டு
தணியும்பொழுதில்லை நீரணங்காடுதிர்அன்னைமீர்
பிணியும்ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்
மணியினணிநிறமாயன்தமரடிநீறுகொண்டு
அணியமுயலின் மற்றில்லைகண்டீர்இத்வணங்குக்கே.
ப:- அநந்தரம், நீங்கள் இடைவிடாமல் அணங்காடுகிற இத்தால் இவள்நோய் வளருகிறதொழிய மீளுகிறதில்லை; ஆதலால், விலக்ஷணவிக்ரஹ விசிஷ்டனான ஸர்வேஸ்வரன் பக்கலிலே பந்தவான்களான பாகவதருடைய சரணரேணுவை தரிப்பிக்கையிலே உத்யோகியுங்கோள் என்கிறாள்.
அன்னைமீர் – அன்னைமீர்! (பெற்றியோளான பக்வதையாலே ‘பாலையன்றோ இவள்?’ என்று என்வார்த்தைகேளாதே), தணியும்பொழுது – தவிருவதொருபொழுது, இன்றி – இன்றி, நீர் – நீங்கள், அணங்காடுதிர் – அணங்காடாநின்றிகோள்; இது – இதுதானே ஹேதுவாக, பிணியும் – இவள்நோயும், பெருகும் அல்லால் – பெருகிவருகிறதொழிய, ஒழிகின்றது இல்லை – தவிருகிறது இல்லை; (இனி மீளுகைக்குப் பரிஹாரம்), மணியின் – நீலரத்நத்திற்காட்டில், அணி – நிரதிசயவிலக்ஷணமான, நிறம் – நிறத்தையுடையனாய், மாயன் – ஆஸ்சர்யபூ4தனான க்ருஷ்ணன் விஷயமாயுள்ள, தமர் – சேஷத்வஸம்பந்தஜ்ஞாநவான்களான பாகவதருடைய, அடிநீறு – (‘தவளப்பொடி’ என்று சொல்லப்பட்ட) பாததூளியை, கொண்டு அணிய – தரிப்பிக்கும்படி, முயலின் – உத்யோகிக்கப்பெறில், இ அணங்குக்கு – இந்த திவ்யஸ்வபா4வையான பெண்பிள்ளைக்கு, மற்று – இத்தோடொத்த வேறொருபரிஹாரம், இல்லைகண்டீர் – இல்லை காணுங்கோள்.
இது ப்ரயோகித்தபோதே ஆஸ்வாஸம்கண்டிகோளன்றோ என்று கருத்து. அழகுக்கு ஈடுபட்ட இவளுக்குப் பரிஹாரம் அத்துறையிலகப்பட்டடாருடைய அநுபந்தமே யென்றபடி. மணியினென்கிற ஐந்தாம் வேற்றுமை – உவமையாகவுமாம்.
ஈடு:- ஆறாம்பாட்டு. இப்பெருநேர்த்தியெல்லாம் வேண்டா; ‘தவளப்பொடி’ என்று சொன்னது இன்னதென்று விசேஷித்து அத்தைச்செய்ய உத்யோகிக்கவே இவள்நோய் தீரும் என்கிறாள்.
(தணியும் இத்யாதி) – நிஷேதிப்பாருண்டாகையாலே ‘இன்னபோது தவிரச் சொல்லுவர்கள்’ என்று அறியாமையாலே, உச்சிவீடுவிடாதே அவர்கள் ஆடத் தொடங்கினார்கள். (பிணியும் இத்யாதி) – காரணாநுவ்ருத்தியாலே கார்யமும் அநுவர்த்தியாநின்றது. (பெருகும் இதுவல்லால்) – கிண்ணகப்பெருக்குப்போலே மேன்மேலெனக் கிளர்ந்து வாராநின்றது. (மணியின் இத்யாதி) – நீலமணிபோலே அழகியநிறத்தையுடையனாய், குணசேஷ்டிதங்களால் ஆஶ்சர்யபூதனானவனுடையாருடைய பாதரேணுவைக் கொண்டுவந்து அணிய உத்ஸாஹிக்கில். விசிஷ்டகுலத்திற் பிறந்த அபவாதமாகையாலே ப்ராயஸ்சித்தத்தைக் கனக்க விதித்தோ மத்தனை; அது தன்னின் ப்ரபா4வத்தைப்பார்த்தால் இதெல்லாம் வேண்டா; உத்யோகமாத்ரம் அமையும். “தொண்டரடிப்பொடியாட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை யென்னாவதே” (பெரு.திரு. 2.2) என்றாரிறே. “ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்யவர்ஜநம்” – ஆநுகூல்யத்தில் ஸங்கல்பமாத்ரமே அமையும்; ப்ராதிகூல்யத்தில் வர்ஜ்ஜநமே வேணும். (மாயன்தமரடிநீறுகொண்டு) – வண்டரும் *சொண்டரும் என்கிறவர்களுக்கு அரையன்சொன்ன வார்த்தைக்குப் பிள்ளையுறங்காவில்லிதாஸர் பரிஹாரம் பண்ணின படியை நினைப்பது. அதாவது – அகளங்கநாட்டாழ்வான் இவர்களுக்கு அமணன்பாழியில் ஸிம்ஹத்தைக் காட்டி ‘திருமுற்றம்: திருவடி தொழுங்கோள்’ என்ன, அவர்களும் மெய்யென்று திருவடி தொழுது, ‘அதுஅமணன்பாழி’ என்று அறிந்தவாறே மோஹித்து விழ, பிள்ளையுறங்காவில்லிதாஸர்தம் ஸ்ரீபாததூளியை அவர்களுக்கு இட, உணர்ந்து எழுந்திருந்தார்கள். திருக்கொட்டாரத்தினருகே கைந்நிரைகட்டிக் கொண்டிருக்கிற நாளிலே, சீயர் இத்திருவாய்மொழி யருளிச்செய்கிறாராய் இவ்வளவிலே வந்தவாறே, “தேர்ப்பாகனார்க்கு” (4.6.1) என்று நோவுக்கு நிதாநம் சொன்னாளாகில், அவனையிட்டுப் பரிஹரியாதே ‘மாயன்தமரடி நீறுகொண்டு அணியமுயலின்’ என்று இத்தைப் பரிஹாரமாகச் சொல்லுவான் என்? நோவுக்கு நிதாநமொன்றும் பரிஹாரமொன்றுமாயோ இருப்பது?’ என்று நான் கேட்டேன்; “மோர்க்குழம்பு இழியாதே மோஹித்துக்கிடந்த ஸமயத்தில் சுக்கிட்டு ஊதிப்பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிஹரிப்பாரைப்போலே, ‘தேர்ப்பாகனார்க்கு’ என்றபோதே அவரைக்கொடுவந்து காட்டப்பெறாமையாலே, முற்பட இவ்வழியாலே ஆஸ்வஸிப்பித்துப் பின்னை அவனைக்கொடுவந்து காட்டுவதாகக் காணும்” என்று அருளிச்செய்தார். (மணியின் இத்யாதி) – ஸௌந்தர்ய சீலாதிகளாலேயாயிற்று இவள் மோஹித்தது; நீங்களும் ஸௌந்தர்ய சீலாதிகளிலே தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாதரேணுவைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள். ‘பொடிபட’த் தீரும். (மற்ற இத்யாதி) – இதல்லது பரிஹாரமில்லாதபடியான வைலக்ஷண்யத்தையுடைய இவளுக்கு இத்தையே பரிஹாரமாகப் பாருங்கோள்.
ஏழாம் பாட்டு
அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்கள்ளும்பராய்ச்
சுணங்கையெறிந்து நும்தோள்குலைக்கப்படும்அன்னைமீர்!
உணங்கல்கெடக் கழுதையுதடாட்டம்கண்டுஎன்பயன்?
வணங்கீர்கள்மாயப்பிரான்தமர் வேதம்வல்லாரையே.
ப:- அநந்தரம், இவள் ஸத்தை அழியும்படி தேவதாந்தரவிஷயப்ரத்ருத்தி பண்ணினால் ப்ரயோஜநமில்லை; ஆஸ்சர்யபூதனான ஸர்வேஸ்வரனுக்கு சேஷபூ4தரான வைதிகாக்ரேஸரரை ஆஸ்ரயியுங்கோள் என்கிறாள்.
அன்னைமீர் – அன்னைமீர்! (உங்கள் பக்வதைபாராதே), அணங்குக்கு – திவ்யையான பெண்பிள்ளைக்கு, அருமருந்து என்று – பெறுதற்கரிய மருந்து என்று நினைத்து, அங்கு – அந்ததேவதாந்தரவிஷயமாக, ஓர் ஆடும் – நிஷித்தமான ஆடறுக்கவும், கள்ளும் – மதுநிவேதிக்கவும், பராய் – ப்ரார்த்தித்து, (அத்தேவதாவேசத்தாலே உடம்பு) சுணங்கை எறிந்து – மயிர்க்கோள் எறிந்து, நும் தோள் – உங்கள் தோள்கள், குலைக்க – அசைத்தாட, படும் – படா நின்றது; உணங்கல் – உணங்குகிறநெல்லு, கெட – கெட, கழுதை – (அது தின்கிற) கழுதையினுடைய, உதடு ஆட்டம் – உதடாட்டத்தை, கண்டு – கண்டு, என் பயன் – என்ன ப்ரயோஜநமுண்டு? (அதுபோலே இவள் ஸத்தையழிய தேவதாந்தர விஷயத்யாபாரத்தால் ப்ரயோஜநமில்லை; ஆனால் என் செய்யப்பெறுமென்னில்), மாயம் – ஆஸ்சர்யகுண சேஷ்டிதங்களை, பிரான் – இவளுக்கு உபகரித்து அநுபவிப்பித்தவனுடைய, தமர் – அடியாராய், வேதம்வல்லாரை – வைதிகாக்ரேஸரரான பாகவதரை, வணங்கீர்காள் – வணங்கும்படி பாருங்கோள். சுணங்கை – மயிர்க்கோள். ‘துணங்கை’ என்று பாடமாய் – துணங்கையென்ற கூத்தாகவுமாம். “சுணம் கையாலே யெறிந்து” என்றுஞ் சொல்லுவர்.
ஈடு:- ஏழாம்பாட்டு. இதரதேவதைகளை ஆஸ்ரயித்தால் இவளுடைய விநாசமே பலித்துவிடும்; இவள் பிழைக்கவேண்டியிருந்திகோளாகில், ஸ்ரீவைஷ்ணவர்களை ஆஸ்ரயியுங்கோள் என்கிறாள்.
(அணங்குக்கு அருமருந்தென்று) – அணங்கென்று – தெய்வப்பெண், “சூரு மணங்குந்தெய்வப்பெண்பெயர்” என்னக்கடவதிறே. அப்ராக்ருத ஸ்வபா4வையான இவளுக்குத் தகுதியான பெறுதற்கரிய மருந்தென்று. இவள் வைலக்ஷண்யமும் அறிந்திலிகோள், செய்கிறதின்தண்மையும் அறிந்திலிகோள். (அங்கோராடும் கள்ளும் பராய்) – நிஷித்தத்ரவ்யங்களை ப்ரார்த்தித்து. பராய் – பராவி, ப்ரார்த்தித்து. (துணங்கையெறிந்து) – துணங்கையென்று ஒரு ந்ருத்த விசேஷம். எறிதல் – இடுதல். ஆடலிட்டு என்றபடி. துணங்கைக்கூத்தென்று – கைதட்டியாடுவதொரு கூத்து உண்டு, அத்தைச் சொல்லிற்றாதல்; மஞ்சட்பொடியைக் கையிலேபிடித்து ஒருவர்க்கொருவர் எறிந்து ஆடுவதொன்று உண்டு, அத்தைச் சொல்லிற்றாதல். (நும்தோள்இத்யாதி) – பகவத்விஷயத்தில் பண்ணின அஞ்சலிமாத்ரமும் ‘சரண்யன்நீர்மையாலே மிகை’ என்றிருக்கக்கடவ நீங்கள் படும் எளிவரவே இது. “தொழுது – எழுதுமென்னுமிது மிகை” (9.3.9) என்றிறே இவர்கள் இருப்பது. (உணங்கல் இத்யாதி) – ஜீவநஸாதநமான வ்ரீஹியானது நசித்துப்போம்படிக்கு ஈடாக, அத்தைத் தின்கிற கழுதையினுடைய உதட்டின் வ்யாபாரம் கண்டிருந்தால் என்ன ப்ரயோஜநமுண்டு? அப்படியே இவளைக்கொண்டு ஜீவிக்கவிருக்கிற நீங்கள் இவள்விநாசத்தைப்பலிப்பிப்பதான தேவதாந்தர ஸ்பர்சமுடையார் வ்யாபாரம் கண்டிருக்கிற இத்தால் என்ன ப்ரயோஜநமுண்டு? ப்ரயோஜநமில்லாமையே யன்று; விநாசமே பலிப்பது. அன்றிக்கே, ஐயன் திருக்குருகைப்பெருமாளரையர் நிர்வஹிக்கும்படி – “உணங்கல்கெட – இவளுடைய உணங்குதல் கெட. இவளிளைப்புத் தீர: கழுதென்றது – பேய், கழுதை – பேயை. உதடாட்டம் கண்டு என்பயன் – நீங்கள் ஆடும் கள்ளும் ப்ரார்த்தித்துக்கொடுக்க, அத்தை அது விநியோகம்கொள்ளும் போது அதினுடைய உதடாடுகிறத்தைக் கண்டிருக்கிறத்தா லென்ன ப்ரயோஜநமுண்டு?” என்று. “கழுது பேயும் பரணும்” என்றானிறே. ‘இதில் ப்ரயோஜநமில்லையாகில், ப்ரயோஜநவத்தாயிருக்குமத்தைச் சொல்லாய்’ என்ன, (வணங்கீர்கள்) – அவர்கள் திருவடிகளிலே விழப்பாருங்கோள். அவர்களென்கிறது ஆரை? என்ன, (மாயப்பிரான்இத்யாதி) – குணசேஷ்டிதங்களால் ஆஸ்சர்ய பூ4தனானவனுடைய குணங்களிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களை. “வேதை3ஸ்ச ஸர்வைரஹமேவ வேத்3ய:” என்றும், “ஸர்வே வேதா3யத்ரைகம் ப4வந்தி” என்றும், “நதாஸ்ஸ்மஸர்வவசஸாம் ப்ரதிஷ்டா2யத்ரசாஸ்வதீ” என்றும் சொல்லுகிறபடியே வேததாத்பர்யம் கைப்பட்டிருக்குமவர்களை. ‘வேதம்வல்லாரையே’ என்கிற இவ்விசேஷணத்துக்குக் கருத்தென்? என்னில்; தேவதாந்தர ஸ்பர்சமுடையார் புகுந்து சிகித்ஸிக்கிறதுக்குப் பரிஹாரமிறே இவள்சொல்ல இழிந்தது; அதில், ‘அவனையொழிந்ததொரு தேவதைக்குத் தனித்தோருயிர்ப்பில்லை; அவனே உத்தேஸ்யம்’ என்றிருக்குமவர்கள் காலிலே விழுங்கோ ளென்கை. ‘தேவதைகள்தோறும் தனித்தனியே கார்யமுண்டு’ என்றிராதே, ‘ஸகலசப்தங்களும் ஏகார்த்த வாசகம்’ என்றிருக்குமவர்களை ஆஸ்ரயிக்கப்பாருங்கோள்.
எட்டாம் பாட்டு
வேதம்வல்லார்களைக்கொண்டு விண்ணோர்பெருமான்திருப்
பாதம்பணிந்து இவள்நோயிது தீர்த்துக்கொள்ளாதுபோய்
ஏதம்பறைந்துஅல்லசெய்து கள்ளூடுகலாய்த்தூய்க்
கீதமுழவிட்டு நீரணங்காடுதல்கீழ்மையே.
ப:- அநந்தரம், பாகவதபுருஷகார பூர்வகமாக ஸூரிஸேத்யன் திருவடிகளை ஆஸ்ரயித்து இவள்நோயைப் பரிஹரியாதே, இதரதேவதா ப்ரீணநமான அணங்காடல் உங்களுக்குக் கீழ்மை என்கிறாள்.
வேதம்வல்லார்களை ஸகலவேததாத்பர்ய நிர்வாஹக்ஷமரான பாகவதரை, கொண்டு – (புருஷகாரமாகக்) கொண்டு, விண்ணோர்பெருமான் – நித்யஸூரிஸேத்யனான ஸர்வேஸ்வரனுடைய, திருப்பாதம் – நிரதிசயபோக்யமான திருவடிகளை, பணிந்து – ஆஸ்ரயித்து, இவள் – (அத்யந்தவிலக்ஷணையான) இவளுடைய, இது நோய் – லோகவ்யாவ்ருத்தமான இந்நோயை, தீர்த்துக்கொள்ளாது – சமிப்பித்துக்கொள்ளாதே, போய் – (இதரதேவதாபரராய்க்கொண்டு கைகழியப்) போய், ஏதம் – (ஸ்வரூபஹாநிகரமான) இதரதேவதாபரசப்தங்களை, பறைந்து – சொல்லி, அல்ல செய்து – அகர்த்தவ்யங்களான ததநுவ்ருத்திகளைப் பண்ணி, ஊடு – நடுவேநடுவே, (ஆராதநோபகரணங்களோடே) கள் – ஸுரையை, கலாய் – கலசி, தூய் – தூவி, கீதம் – (ததீயமான) கீதங்களுக்கீடாக, முழவு இட்டு – வாத்யகோஷத்தைப்பண்ணி, நீர் – (இவளோடு அநுபந்தமுடைய) நீங்கள், அணங்கு ஆடுதல் – தைவாவிஷ்டைகளாய் ஆடுகிறது, கீழ்மையே – (இக்குடிக்கு) இழுக்கேயாம்.
ஈடு:- எட்டாம்பாட்டு. ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம்புக்கு இவளுடைய நோயைத் தீர்த்துக்கொள்ளுகை தவிர்ந்து, க்ஷுத்ரதேவதா ஸமாஸ்ரயணம் உங்களுக்குக் கீழ்மையை விளைக்கும் என்கிறாள்.
(வேதம்வல்லார்களைக்கொண்டு) – ‘ஸர்வேஸ்வரனே ப்ராப்யமும் ப்ராபகமும்’ என்கிற வேததாத்பர்யம் கைப்பட்டவர்களைக்கொண்டு. “வேறாகவேத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார்தவம்” (நான்.திரு. 18) என்கிறபடியே, அவர்கள் காலிலே விழப்பெறில் ஆஸந்நமாக நோவு பரிஹ்ருதமாம். அது கூடாதிறே; ஸஜாதீய ப்ரதிபத்திபண்ணி யிருக்கையாலே ருசிவிஸ்வாஸங்கள் அவர்கள் பக்கல் கனக்கப்பிறவாதிறே; ஆனபின்பு, அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கப் பாருங்கோள். இங்கு இருக்கும் நாளைக்குப் புருஷகாரமாக முமுக்ஷுக்கள் உண்டு; அங்குத்தானே நித்யஸூரிகள் உண்டிறே. “ஸ ஏநாந் ப்3ரஹ்ம க3மயதி” என்று – அவர்கள் கொடுபுக்கிருத்தவிறே அவ்வோலக்கத்தில் இருப்பது. வேததாத்பர்யம் கைப்பட்டிருக்குமவர்களைக் கொண்டு. (விண்ணோர்பெருமான் திருப்பாதம் பணிந்து) – ‘அயர்வறுமமரர்களதிபதி’ திருவடிகளிலே பணிந்து. (இவள்நோயிது தீர்த்துக் கொள்ளாது) – நோய்கொள்ளுகிறாள் இவள், நோய்தான் இது; இதுக்கீடான பரிஹாரத்தைப் பண்ணாதே. (போய்) – நம்முடைய நிலைக்கு அதிதூரமாய் அப்ராப்தமானதிலே கைகழியப்போய். (ஏதம்பறைந்து) – உங்களுக்குக் குற்றமானவற்றை நீங்கள் சொல்லி. (அல்ல செய்து) – செய்யக்கடவதல்லாதத்தைச் செய்து, (கள்ளூடுகலாய்த்தூய்) – நிஷித்தத்ரவ்யங்களைக் கொண்டு க்ருஹமெங்கும் கலந்து தூஷித்து. நிஷித்த த்ரவ்யத்தை ஸ்பர்சித்தவோபாதியாயிற்று தேவதாந்தரஸ்பர்சமும். ‘விண்ணோர்பெருமான் திருப்பாதம்பணிந்து இவள் நோயிது தீர்த்துக்கொள்ளாது’ என்கையாலே – அவனைக்கொண்டு பெறப்பாராதே, அவனுக்குப்புறம்புமாய் அஹங்காரமமகாரகர்ப்பமான க்ரியாகலாபங்களாலே பெறப்பார்க்கையும் அத்தோபாதியாயிற்று. அறமேலாயிருக்கும் மருந்திறே இவள்சொல்லிற்று; அத்தையிறே இவர்கள் உதாஸித்து நிற்கிறது. (கீதம் இத்யாதி) – நிஷித்தமான கீதத்தோடே கூடின வாத்யங்களை ப்ரவர்த்திப்பித்து. (நீர் இத்யாதி) – பகவத்குணாநுபவத்தாலே, “உண்டு களித்தேற்கும்பரென்குறை” (10.8.7) என்னக்கடவ நீங்கள் தைவாவிஷ்டராய்க்கொண்டு ஆடுவது, (கீழ்மையே) – சாலத் தண்ணிது. உங்களளவில் போமதல்ல, உங்கள் ஸந்தாநத்துக்கும் கொத்தை. ஊடு – உள்ளே, கலாய் – கலந்து, தூய் – தூவி.
ஒன்பதாம் பாட்டு
கீழ்மையினால்அங்கு ஓர்கீழ்மகனிட்டமுழவின்கீழ்
நாழ்மைபலசொல்லி நீரணங்காடும்பொய்காண்கிலேன்
ஏழ்மைப்பிறப்புக்கும்சேமம் இந்நோய்க்கும்ஈதேமருந்து
ஊழ்மையில்கண்ணபிரான் கழல்வாழ்த்துமின்உன்னித்தே
ப:- அநந்தரம், நீங்கள் ஸ்வதந்த்ரமாகப் பண்ணுகிற நிஷ்ப்ரயோஜந ப்ரத்ருத்திகள் காணமாட்டுகிறிலேன்; இவள்நோய் சமிக்கைக்கு, ஸுலபனான க்ருஷ்ணன் திருவடிகளிலே மங்களாசாஸநம் பண்ணுங்கோள் என்கிறாள்.
கீழ்மையினால் – (அநிரூபணமடியாக வந்த) நிகர்ஷத்தாலே, அங்குஓர் – ‘இன்னவிடத்திலான், இன்னான்’ என்று சொல்லவொண்ணாத, கீழ்மகன் – நீசன், இட்ட – ப்ரவர்த்திப்பித்த, முழவின்கீழ் – வாத்யாநுத்ருத்தியைப்பண்ணி, நாழ்மைபல – தேவதாந்தரோத்கர்ஷங்களை மேனாணித்துப் பலபடியாக, சொல்லி – சொல்லி, நீர் – நீங்கள், அணங்கு ஆடும் – தைவாவிஷ்டைகளாய் ஆடுகிற, பொய் – நிரர்த்தகப்ரவ்ருத்தி, காண்கிலேன் – காணமாட்டுகிறிலேன்; ஏழ்மைப் பிறப்புக்கும் – “ஸப்தஸப்தச ஸப்தச” என்று ஏழுவகையால் வரக்கடவ ஸகலஜந்மங்களுக்கும், சேமம் – க்ஷேமரூபமாயிருந்துள்ள, ஈதே – இதுவே, இந்நோய்க்கும் மருந்து – இந்நோய்க்கும் மருந்து; ஊழ்மையில் – ஸ்வரூபப்ராப்தமாய்ப் பழையதாய்ப் போருகிற ப்ரகாரத்தைத் தப்பாதபடி, கண்ணபிரான் – ஸௌலப்யத்தாலே உபகாரகனான க்ருஷ்ணனுடைய, கழல் – திருவடிகளை, உன்னித்து – அநுஸந்தித்து, வாழ்த்துமின் – மங்களாசாஸநம்பண்ணுங்கோள்.
நாழ்மை – தகுதியில்லாத மேனாணிப்பு, ஊழ்மை – பழமை, உன்னித்து – நினைத்து.
ஈடு:- ஒன்பதாம்பாட்டு. நீங்கள் பண்ணுகிற நிஷ்பலப்ரவ்ருத்தி நான் காணமாடடேன்; க்ருஷ்ணன் திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள், இவள் பிழைக்கவேண்டியிருந்திகோளாகில் என்கிறாள்.
(கீழ்மையினால்) – உங்கள் தண்மையினாலே, இவர்களுக்குத் தண்மையாவது – ரஜஸ் தமஸ்ஸுக்களாலே அபிபூதராகை. ஆகையாலேயிறே, இக்கார்யம் செய்கிறது. (அங்கு ஓர் இத்யாதி) – ‘இன்னவிடத்திலான், இன்னான்’ என்று சொல்லவொண்ணாத ஒருசண்டாலன் ப்ரவர்த்திப்பிக்கிற வாத்யத்தின்கீழே புக்கிருந்து. (நாழ்மை பலசொல்லி) – நாழ்மை – குற்றம், அவற்றுக்கில்லாத ஏற்றங்களைப் பலவும் சொல்லி. “உண்டு முமிழ்ந்தும் கடந்து மிடந்தும்” (4.5.10) என்று ஸர்வேஸ்வரனைச் சொல்லுமாபோலே, ‘இவன் இன்னதுசெய்தான், இன்னது செய்தான்’ என்று சொல்லாநிற்பர்களிறே. நாழென்று – குற்றத்துக்கும், இல்லாததுசொல்லுகைக்கும், ‘நான்’ என்று அபிமாநித்திருக்கைக்கும் பேர். (நீர்இத்யாதி) – நீங்கள் தைவைாவிஷ்டைகளாயாடுகிற இப்பொய் என்கண்ணுக்கு ஒரு வஸ்துவாய்த் தோற்றுகிறதில்லை. “நேஹநாநாஸ்திகிஞ்சந” என்று, ‘அவனையொழிந்ததொரு தேவதைக்கு வஸ்துத்வமுண்டு’ என்றிருக்கிலிறே அவர்கள் செய்கிறது ‘மெய்’ என்று தோற்றுவது. ‘நாங்கள் செய்கிறவை பொய்யாகில், நீ சொல்லுகிறது மெய்யாய் எவ்வளவு பலிக்கும்?’ என்ன, (ஏழ்மைப்பிறப்புக்கும் சேமம்) – ஏழ்மை – ஒருநன்மையுண்டானால் அத்தை ஏழேழாகச் சொல்லக்கடவதிறே. எல்லாஜந்மங்களிலும் ரக்ஷையாம். ஏழ்மை – தண்மை. தண்ணிதான ஜந்ம மென்னவுமாம். நாங்கள் ஜந்மங்களில் ரக்ஷையாமதுவோ தேடுகிறது? இவள்நோய்க்குப் பரிஹாரமன்றோ? அத்தைச் சொல்லாதே மற்றொன்றைச் சொல்லுகிறதென்? என்ன; – ஆகில், சம்பறுத்தார்க்கைக்குப் போகவேணுமோ? (இந்நோய்க்கும் ஈதேமருந்து) – அடிபற்றின மருந்தன்றோ? ஊழ்மையில் – முறையிலே. ஊழென்பது – முறை. நீங்கள் செய்கிறவைபோலன்றிக்கே முறையிலே செய்ததாகவுமாம். (கண்ணபிரான் இத்யாதி) – உபகாரகனான க்ருஷ்ணன் திருவடிகளை வாழ்த்தப் பாருங்கோள். அடிக்கழஞ்சுபெறும் மருந்திறே. அதுசெய்யுமிடத்தில் – (உன்னித்து) – “ஸ்ம்ருதோயச்ச2திசோப4நம்” எல்லாருமொக்க அநுஸந்தித்து வாழ்த்தப் பாருங்கோள். இப்படி செய்யவே, எல்லா ஜந்மங்களிலும் ரக்ஷகமாய் இவள் நோய்க்கும் பரிஹாரமாம்; ப்ராப்தம் செய்ததுமாகலாம்.
பத்தாம் பாட்டு
உன்னித்துமற்றொருதெய்வம்தொழாள் அவனையல்லால்
நும்மிச்சைசொல்லி நும்தோள்குலைக்கப்படும்அன்னைமீர்!
மன்னப்படுமறைவாணனை வண்துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும்தொழுதாடுமே.
ப:- அநந்தரம், நித்யவேதப்ரதிபாத்யனான க்ருஷ்ணன்பக்கலிலே பாரமைகாந்த்யத்தையுடைய இவள், நீங்கள் அவனை ஸ்துதித்தபோதே ஆஸ்வஸ்தையாம் என்கிறாள்.
அவனையல்லால் – அவனையொழிய, (இவள்), மற்று ஒரு தெய்வம் – வேறு ஒரு தேவதையை, உன்னித்து – நினைத்து, தொழாள் – தொழும்படியல்லள்; (இப்படியிருக்க), அன்னைமீர் – பெற்றவர்களான நீங்கள் (இவளளவிற் பரிவாலே கலங்கி), நும் இச்சை – உங்கள் அபிமதங்களை, சொல்லி – சொல்லி, நும்தோள் – (பகவத்பரிசர்யோப கரணங்களான) உங்கள் தோள்கள், குலைக்க – (தேவதாந்தரவிஷயமாக) வ்யாபரிக்க, படும் – படாநின்றன; (அத்தைத் தவிர்த்து), மன்ன – நித்யதயா, படும் – (நெஞ்சிலே) படுவதான, மறைவாணனை – வேதத்துக்கு ப்ரதாநதயா ப்ரதிபாத்யனாய், (ஆஸ்ரிதர்க்கு முகங்கொடுக்கைக்காக) வண்துவராபதி மன்னனை – ஸ்ரீமத்த்வாரகைக்கு அதிபதியான க்ருஷ்ணனை, ஏத்துமின் – ஸ்தோத்ரம்பண்ணுங்கோள்; ஏத்துதலும் – அந்தஸ்துதிஸம காலத்திலே ப்ரபுத்தையாய், தொழுது – (அவனைத்) தொழுது, ஆடும் – ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணாநிற்கும்.
ஈடு:- பத்தாம்பாட்டு. இவளுக்கு க்ருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்த்யத்தை அநுஸந்தித்து அவனையேத்துங்கோள்; இவள் உஜ்ஜீவிக்கும் என்கிறாள்.
(உன்னித்து மற்றொருதெய்வம் தொழாள் அவனையல்லால்) – இன்னார்க்கு இன்னபரிஹாரமென்றில்லையோ? அது அறிந்து பரிஹரிக்கவேண்டாவோ? முழங்கால் தகர, மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாபோலே யன்றோ நீங்கள் பண்ணுகிற பரிஹாரம்? ‘தேவதாந்தரஸ்பர்சம் இவளுக்குப் பொறாது’ என்று அறியவேண்டாவோ? தன் நெஞ்சாலே மதித்து வேறொருதெய்வத்தைத் தொழுதறியாள் இவள். “பா3ல்யாத்ப்ரப்4ரருதிஸுஸ்நிக்3த4:” என்கிறபடியே, பிறைதொழும் பருவத்திலும் பிறைதொழுதறியாள். “முலையோமுழுமுற்றும்போந்தில – பெருமான்மலையோ திருவேங்கடமென்று கற்கின்றவாசகம் – இவள்பரமே” (திருவிரு. 60) என்று நீங்கள் ஆஸ்சர்யப்படும்படியன்றோ அப்பருவத்திலும்; இனி இப்போது பர்வதத்தை விட்டுப்பதர்க்கூட்டைப் பற்றுமோ? “அநந்யதை3வத்வம்” – ‘வேறேயொரு ஆஸ்ரயதேவதை உண்டு, அது ரக்ஷிக்கிறது’ என்று நினைக்க விரகில்லைகிடீர் எனக்கு. “ஸஹபத்ந்யா” என்று – பெரியபெருமாள் திருவடிகளில் இவர் புகும்போதும் இவர்க்கு எடுத்துக் கை நீட்டப்புகுமத்தனை போக்கி, பெரியபெருமாள்தாம் உத்தேஸ்யமாகப் புக்கறியேன். “இயம் க்ஷமா ச” – ராவணனுடைய ஜல்பங்களையும் ராக்ஷஸிகளுடைய தர்ஜநபர்த்ஸநங்களையும் பொறுத்திருந்ததும் ‘அவரது ஒரு இன்சொல் கேட்கலாம்’ என்று கிடீர். “பூ4மௌ ச சய்யா” – இத்தரைக்கிடை கிடந்ததும் “தவாங்கே ஸமுபாவிசம்” என்கிறபடியே ‘அவர்மடியிலிருப்பு ஒருகால் ஸித்திக்குமோ?’ என்னுமத்தாலேகிடீர். “நியமஸ்ச த4ர்மே” – ‘ரக்ஷகத்வத4ர்மம் அவர்தலையிலே’ என்னுமத்தாலேகிடீர் நான் இருந்தது; “நத்வாகுர்மி த3சக்3ரீவ ப4ஸ்மப4ஸ்மார்ஹதேஜஸா” என்றதும் அவரைப்பார்த்து. “பதித்ரதாத்வம்” – “ஏதத்வ்ரதம்மம” என்றவருடைய வ்ரதமொழிய, ‘எனக்கு’ என்ன ஒரு ஸங்கல்பத்தையுண்டாக்கி இவற்றையழிக்க நினைத்திலேன்கிடீர். “விபலம் மமேதம்” தப்பாதவையும் தப்பிற்றின. ஆர்க்குப்போலேயென்னில், “மாநுஷாணாம் – க்ருதக்4நேஷு – க்ருதமிவ” – “ஆத்மாநம்மாநுஷம்மந்யே” என்றவர்க்கும் உண்டிறே மனிச்சு; அவரையொழிந்தார் திறத்துச் செய்தவற்றோபாதியாய் விழுந்தது. தப்பாதது தப்பிற்று, அதுக்கு அடியென்? என்னில், “மமேதம்” – அவர்பக்கல் குறையில்லை, “அதுக்கு இலக்கு நானாகையாலே.” (நும் இச்சைசொல்லி) – உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி. அர்த்ததத்த்வத்தைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும் தேவதாந்தரஸ்பர்சம் பொறாதாயிருந்ததிறே, இனியுள்ளது உங்களுக்கு ப்ரதிபந்நங்களைச் சொல்லுகையாயிற்றிறே. (நுந்தோள்குலைக்க) – இவற்றுக்கு விக்ருதராமவர்களே நீங்கள். துர்வ்ருத்தர்செய்வதை ‘வ்ருத்தவான்’கள் செய்வர்களோ? “தோளவனையல்லால் தொழா” (முதல். திரு. 63) என்றன்றோ நீங்கள் சொல்லுவது. ஆனால், செய்யஅடுப்பதென்? என்ன, (மன்னஇத்யாதி) வேதைகஸமதிக3ம்யனானவனைப் பற்றப் பாருங்கோள். ஆக3மாதிகளில் சொன்னவற்றைக் கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது? மன்னுகையாவது – அப்யாஸமாய், அத்யயந விதிப்ராப்தமானத்தையாதல்; அன்றிக்கே, நித்யத்வமாய், புருஷபுத்தி ப்ரபவமல்லாமையாலே விப்ரலம்பாதிதோஷ ஸம்பாவநையின்றிக்கே, பூர்வபூர்வோச்சாரணக்ரமத்திலே உத்தரோத்தரோச்சார்யமாணத்வத்தைப் பற்றச் சொல்லிற்றாதல். நித்யமான வேதப்ரதிபாத்யனாகையாலே வந்த ஏற்றத்தையுடையவனை. (வண்துவராபதிமன்னனை) கேட்டார்வாய்க் கேட்டுப்போகாமே கண்ணாலேகண்டு அநுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை. நீரிலேபுக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத்தெளித்துப் பரிஹரிக்குமாபோலே, ‘தேர்ப்பாகனார்’ (4.6.1)க்கு மோஹித்த இவளை, வண்துவராபதிமன்னன் திருநாமத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பிக்கப் பாருங்கோள். (ஏத்துமின்) – வாய்படைத்த ப்ரயோஜநம் பெற ஏத்துங்கோள். “சீர்பரவாது உண்ண, வாய்தான் உறுமோவொன்று” (பெரிய. திருவ. 52) என்றன்றோ நீங்கள் சொல்லுவது? (ஏத்துதலும்) – நீங்கள் க்ருதார்த்தைகளாமளவேயன்று; “அத2ஸோ ப4யங்க3தோ ப4வதி” என்கிறபடியே, ஏத்தின ஸமநந்தரத்திலே ப்ரபுத்தையாய். (தொழுதாடுமே) – உணர்த்தியுண்டானால் செய்வது அதுபோலே காணும். தரித்து வ்யாபாரக்ஷமையுமாம்.
பதினொன்றாம் பாட்டு
தொழுதாடித்தூமணிவண்ணனுக்கு ஆட்செய்துநோய்தீர்ந்த
வழுவாததொல்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல்
வழுவாதஆயிரத்துள் இவைபத்துவெறிகளும்
தொழுதாடிப்பாடவல்லார் துக்கசீலமிலர்களே.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ப:- அநந்தரம், இத்திருவாய்மொழியை ப்ரேமத்தாலே விக்ருதராய் அநுஸந்திப்பார் பகவத்விஸ்லேஷாதி து:கரஹிதராவர்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.
தொழுது – (சேஷத்வாநுரூபமான) அஞ்சலியைப்பண்ணி, ஆடி – (அந்தப்ரீதியாலே) ஸஸம்ப்ரமந்ருத்தம்பண்ணி, தூமணி – உஜ்ஜ்வலமான நீலரத்நம்போலே யிருக்கிற, வண்ணனுக்கு – நிறத்தையுடைய க்ருஷ்ணனுக்கு, ஆள்செய்து – இதுதானே கைங்கர்யமாகச் செய்து, நோய் தீர்ந்த – தத்விஸ்லேஷது:கரூப த்யாதி சமிக்கும்படியாய், வழுவாத – (ஸர்வப்ரகாரத்தாலும் தேவதாந்தர ஸம்ஸர்க்கமாகிற) வழுவுதலின்றியே, தொல்புகழ் – ஸ்வாபா4விகமான பகவதேக சேஷத்வப்ரதையையுடையராய், வண் குருகூர் – விலக்ஷணமான திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்ததாய், வழுவாத – (பகவத்ஸ்வரூபாதிகளிலொன்றும்) நழுவாதபடி ப்ரதிபாதிக்குமதான, ஆயிரத்துள் – ஆயிரந்திருவாய்மொழிக்குள்ளே, வெறிகள் – வெறியாட்டுவிஷயமாக விலக்கியுரைத்த, இவை பத்தும் – இவை பத்தையும், தொழுது – (இதில் அர்த்தாநுஸந்தாநவித்தராய்க் கொண்டு) தொழுது, ஆடி – ஆடி, பாட – (ப்ரேமபாரவஸ்யத்தாலே) பாட, வல்லார் – வல்லவர்கள், துக்கம் – பகவத்விஸ்லேஷஜநிதது:கமும் தத்பரிஹாரார்த்த தேவதாந்தராநு த்ருத்திது:கமு முண்டாகும், சீலம் – ஸ்வபா4வம், இவர்கள் – இல்லாதவர்களாவர்கள். இது கலித்துறை.
வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே சரணம்
ஈடு:– நிகமத்தில், இத்திருவாய்மொழியை ஸஹ்ருதயமாக அப்யஸிக்கவல்லார், தாம் பிரிந்துபட்ட வ்யஸநம் படாதே பலத்திலே அந்வயிப்பர் என்கிறார்.
(தொழுது ஆடித் தூமணிவண்ணனுக்கு ஆட்செய்து நோய்தீர்ந்த) – என்றதுக்கு அம்மங்கியம்மாள் பணிக்கும்படி – “மோஹித்தவள் அல்பம் ஆஸ்வஸித்தவாறே, ‘மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண்விழித்தாள், வார்த்தைசொன்னாள்’ என்பர்களிறே; அதுபோலே காணும்” என்று. முன்புபிறந்த அவஸாதாதிசயத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது; மேல் “சீலமில்லாச்சிறிய” (7.1) னாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவேயிறே பிறந்தது. (தொழுது இத்யாதி) – இத்தோழிதானும் அறிந்திலள்காணும் பகவத்ப்ரபாவம்; அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே; அதெல்லாம் வேண்டாதே, தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இதுதானே அமைந்தது இவளுணருகைக்கு. பகவத் ப்ரபாவம் புறம்புள்ளார்க்கு அறியவொண்ணாதவோபாதி, உட்புகுந்தாராய் அறிந்தார்களாயுள்ளவர்களுக்கும் ‘இவ்வளவு’ என்று அறியவொண்ணாதாய்க் காணும் இருப்பது. வழுவாத தொல்புகழாகிறது – அஜ்ஞாநதசையிலும் தேவதாந்தரஸ்பர்சமும் ததீயஸ்பர்சமும் ஸத்தயாவிநாசஹேதுவாய், அவ்வளவிலும் பகவந்நாமமும் ததீயஸ்பர்சமும் ஸத்தயாதாரகமுமாம்படியான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயிலே நிலைநின்ற புகழ். ஒருவன் வைஷ்ணவனாகையாவது – இது; ‘ஸர்வேஸ்வரன் ரக்ஷகன்’ என்று ஒருவன்பக்கலிலே ஒருவார்த்தை கேட்டுவிட்டு, தேவதாந்தரஸ்பர்சமும் அபாகவதஸ்பர்சமும் உண்டாயிருக்க, வைஷ்ணவனாக விரகில்லையிறே. பூர்வார்த்தத்தை அநுஸந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்புநறுக்கவும் ப்ராப்தியில்லாதபடியாயிருக்கும்; உத்தரார்த்தத்தை அநுஸந்தித்தால் – இளையபெருமாளைப்போலே கண்ணுறங்கவும் விரகில்லையாயிருக்கும். “கழிவதோர்காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்*(திருவிரு. 97) என்றிறே இருப்பது. ‘ஸ்வரூபம் இது’ என்று அறிந்தால் ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தமும் அதுக்கு விரோதியானவற்றைக் காற்கடைக்கொள்ளுமதுவும் இல்லையாகில், ஜ்ஞாநம் பிறந்ததில்லையாமித்தனையிறே. இதில்லையாகில் ஆழ்வார்கள் போனவழியில் அந்வயித்திலனாமித்தனையிறே; *”திருவடிதன்னாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்” (நான்.திரு.68) என்றும், “திருவில்லாத்தேவரைத் தேறேன்மின் தேவு” (நான்.திரு. 53) என்றும், “எண்ணாதமானிடத்தை யெண்ணாதபோதெல்லா மினியவாறு” (திருமொழி 11.6.7) என்றும், “பேராளன் பேரோதும் பெரியோரையொருகாலும் பிரிகிலேன்” (திருமொழி 7.4.4) என்றுமிறே இவர்கள்படி. அநாதிகாலம் இவன்சூழ்த்துக்கொண்ட பாபங்கள் போகையும், நித்யகைங்கர்யம் பெறுகையுமாகிற இப்பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகுண்டோ? (வழுவாத இத்யாதி) – இவ்வாத்மாவுக்கு ஜ்ஞாதவ்யமான அர்த்தங்களிலொன்றும் தப்பாதபடி சொன்ன வெறிவிஷயமான இப்பத்தும். “வெறிவிலக்கு” என்று ஒருதுறையுண்டு தமிழரது: விரஹஜ்வரத்தாலே நோவுபடுகிறவளுக்கு ஆடறுப்பது, கள்ளுகுடிப்பது, பலியிடுவதாய்ப் பரிஹரிக்கப் புக, தோழியானவள் ‘இது ஒரு விஷயத்தில் பா4வப3ந்த4மடியாக வந்த நோயாயிற்று, மற்றொன்றாலன்று’ என்று அவர்கள் செய்கிறவற்றை விலக்குகை. (தொழுது ஆடிப் பாடவல்லார்) – பெண்பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்குள்ள ப்ரியம் ‘இதுகற்றார்க்குமுண்டு’ என்றிருக்கிறாராயிற்று இவர். (துக்கசீலமிலர்களே) – மோஹித்தவிடத்து தேவதாந்தரஸ்பர்சமுண்டாகையும், பாகவதஸ்பர்சமின்றிக்கே யொழிகையுமாயிற்று – து:கமாகிறது. அதில்லாமையே ஸ்வபா4வமாக வுடையராவர். சீலம் என்று – ஸ்வபா4வம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்
த்ரமிடோபநிஷத் ஸங்கதி – தீர்ப்பாரை
ஸ்வப்நோபமாதநுபவாதமுதோப்யலப்த
ஸ்வாபேக்ஷிதேஶடஜிதிவ்யஸநாத்விஸம்ஜ்ஞே।
யேக்ஷுத்ரதேவமுகத: பரிஹர்துகாமா:
தேவாரிதாஸ்ததுசிதஜ்ஞகிரைவ ஷஷ்டே|| ||36||
த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி — தீர்ப்பாரை
இச்சாஸாரத்யயோகாத் ப்ரஹரணநவநாச்ச்ரீதுலஸ்யாட்யமௌலே: ஸ்துத்யாங்க்ர்யோ: பாததூல்யாஸ்வஜநபஜநதத்பாததூலீநமோபி: । தந்மூலஸ்வாங்க்ரிந்ருத்யாததிதரபஜநத்யாகபூர்வோபஸத்த்யாத்
ஏவம்ப்ராசிக்யபத்ஸ்வப்ரணயிஷுபிஷஜம்கேஸரஸ்ரக்விபூஷ: || 4-6
திருவாய்மொழி நூற்றந்தாதி
தீர்ப்பாரிலாத மயல்தீரக்கலந்தமால்*
ஓர்ப்பாதுமின்றி உடன்பிரிய* – நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக்கலங்க * பேர்கேட்டு
அறிவுபெற்றான்மாறன்சீலம். 36
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்