ஸ்ரீ:
ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவாய்மொழி
பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த
ஆறாயிரப்படி வ்யாக்2யாநம்
பகவத் விஷயம் – நான்காம் பத்து
ப்ரவேஶம் 4-1
ஒருநாயகமாய் – ப்ரவேஶம்
இப்படி எம்பெருமானுடைய நிரதிஶய போ4க்யமான ஸ்வரூபரூபகு3ண விப4வசேஷ்டித ஐஶ்வர்யாதி3களை யநுப4வித்து ப்ரீதராய், அந்த ப்ரீதியாலே பரரை உத்தி3ஶ்ய, ‘ஐஶ்வர்ய கைவல்யங்களை விட்டு, ஶ்ரிய:பதியாய் நிரவதி4க போ4க்யனா -யிருந்த எம்பெருமானுடைய திருவடி மலர்களையே பரமப்ராப்யமாக ஈண்டெனச் சென்று பற்றுங்கோள்’ என்கிறார்.
முதல் பாட்டு
ஒருநாயகமா யோடவுலகுடனாண்டவர்
கருநாய்கவர்ந்தகாலர் சிதைகியபானையர்
பெருநாடுகாண விம்மையிலேபிச்சைதாங்கொள்வர்
திருநாரணன்தாள் காலம்பெறச்சிந்தித்துய்ம்மினோ.
ஸ்வவஶாநுவர்த்தி ஸகலமநுஜராய், ஸப்தத்வீபவதியான மேதிநியெல்லாவற்றுக்கும் அத்விதீயாதி4பதிகளாய்க்கொண்டு ராஜ்யம் பண்ணினவர்களே, உத்தரக்ஷணம் அபஹ்ருத ஸகலராய் அதிக்ருபணராய் க்ஷுதா4த்த4ராய் ஸர்வஜநங்களும் காண ஆஹாரர்த்தி2களாய்த்திரிவர்; இப்படி ஐஶ்வர்யம் அஸ்தி2ரமாதலால் அத்தைவிட்டி ஶ்ரிய:பதியாயிருந்த நாராயாணன் திருவடிகளை ப்ராப்யமாகப் பற்றி உஜ்ஜீவியுங்கோள் என்கிறார். 4-1-1.
இரண்டாம் பாட்டு
உய்ம்மின் திறைகொணர்ந்தென்றுலகாண்டவ ரிம்மையே
தம்மின்சுவைமடவாரைப் பிறர்கொள்ளத்ததாம்விட்டு
வெம்மினொளிவெயிற்கானகம்போய்க் குமைதின்பர்கள்
செம்மின்முடித்திருமாலை விரைந்தடிசேர்மினோ.
இப்படி அபஹ்ருதராஜ்யராய்ப்போமித்தனையன்றியே, அபஹ்ருதஸ்வாபி4மதகளத்ராதிகளாய் அவ்வவதேஶாத் ப்4ரஷ்டருமாய் வநசரராய் தத்ராபி பூர்வஶத்ருபி4ர்ப்பாத்யமாநரு -மாவர்; ஆனபின்பு, கிரீடமகுடாதி3 தி3வ்யபூ4ஷணபூ4ஷிதனாய் ஶ்ரிய:பதியாயிருந்தவன் திருவடிகளை ஈண்டென ஆஶ்ரயி -யுங்கோள் என்கிறார். 4-1-2.
மூன்றாம் பாட்டு
அடிசேர்முடியினராகி அரசர்கள்தாந்தொழ
இடிசேர்முரசங்கள் முற்றத்தியம்பவிருந்தவர்
பொடிசேர்துகளாய்ப்போவர்க ளாதலில்நொக்கெனக்
கடிசேர்துழாய்முடிக் கண்ணன்கழல்கள்நினைமினோ.
இப்படி ஐஶ்வர்யம் அஸ்தி2ரமன்றியே, ஐஶ்வர்ய போ4க்தாக் – களானவர்கள் தாங்களும் அத்யந்தம் அஸ்தி2ரர்; ஆதலால், ஈண்டென நிரதிஶய போக்3ய பூ4தனய் ஆஶ்ரித ஸுலப4னாயிருந்த எம்பெருமானை நினையுங்கோள் என்கிறார். 4-1-3
நான்காம் பாட்டு
நினைப்பான்புகின் கடலெக்கலின்நுண்மணலிற்பலர்
எனைத்தோருகங்களும் இவ்வுலகாண்டுகழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால் மற்றுக்கண்டிலம்
பனைத்தாள்மதகளிறட்டவன் பாதம்பணிமினோ.
ஐஶ்வர்ய போ4க்தாக்களானவர்களெல்லாரும் ஸாந்வயமாக நஶித்துப்போன இத்தனையல்லது, மற்றும் ஸ்தி2ரராயிருப்பா -ரொருவரையும் கண்டிலோம்; ஆதலால், ஆஶ்ரித விரோதி4நிரஸந ஸ்வபா4வனாயிருந்தவன் திருவடிகளைப்பணியுங்கள் என்கிறார் 4-1-4.
ஐந்தாம் பாட்டு
பணிமின்திருவருளென்னும் அஞ்சீதப்பைம்பூம்பள்ளி
அணிமென்குழலா ரின்பக்கலவியமுதுண்டார்
துணிமுன்புநாலப் பல்லேழையர்தாமிழிப்பப்செல்வர்
மணிமின்னுமேனி நம்மாயவன்பேர்சொல்லிவாழ்மினோ.
இந்த ஆஜ்ஞாரஸம் போலே ஸ்த்ர்யாதி விஷயரஸமும் அத்யந்த அல்பத்வ – அஸ்தி2ரத்வாதி தோ3ஷதூ3ஷிதமாதலால் அவற்றைவிட்டு நிரதிஶயௌஜ்ஜ்வல்ய ஸௌந்த3ர்யாதி3 கல்யாணகு3ணக3ணநிதி4யாய் ஆஶ்ரித வத்ஸலனாயிருந்தவன் திருநாமங்களைச் சொல்லி வாழுங்கள் என்கிறார். 4-1-5.
ஆறாம் பாட்டு
வாழ்ந்தார்கள்வாழ்ந்ததுமாமழைமொக்குளின்மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தாரென்றல்லால் அன்றுமுதலின்றறுதியா
வாழ்ந்தார்கள்வாழ்ந்தேநிற்ப ரென்பதில்லைநிற்குறில்
ஆழ்ந்தார்கடற்பள்ளி யண்ணலடியவராமினோ.
ஐஶ்வர்யத்தைப்பெற்று வாழ்ந்தார் ஒருவருமில்லையோ வென்னில்; வாழ்ந்தார்கள் வாழ்ந்ததும் வர்ஷஜலபு3த்பு3த3ம்போலே அத்யல்பகாலம் வாழ்ந்து நஶித்துப்போனவத்தனை; பண்டு -வாழ்ந்தவர்கள் தாங்கள் வாழப்புக்க அன்று முதல் இன்று அறுதியாக வாழ்ந்தே நிற்கக்கண்டிலோம்; ஆனபின்பு, நித்யஸித்3த4மான ஐஶ்வர்யத்தை வேண்டியிருக்கில், ஆஶ்ரித பரித்ராணார்த்த2மாக வந்து திருப்பாற்கடலிலே கண்வளர்ந் -தருளுகிற பரமபுருஷன் திருவடிகளிலே அடிமை செய்கையாகிற நித்யஸித்3த4 திவ்யைஶ்வர்யத்தைப் பற்றுங்களென்கிறார். 4-1-6.
ஏழாம் பாட்டு
ஆமின்சுவையவை யாறோடடிசிலுண்டார்ந்தபின்
தூமென்மொழிமடவார் இரக்கப்பின்னுந்துற்றுவார்
ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவராதலின்
கோமின்துழாய்முடி யாதியஞ்சோதிகுணங்களே.
அந்நபாநாதி3 விஷயரஸங்களும் அத்யந்தம் அஸ்தி2ரம் அதிக்ஷுத்3ரமாதலால் துழாய்முடி ஆதி3யஞ்சோதி3 கு3ணங்களைக் கோமின்கள் என்கிறார். 4-1-7.
எட்டாம் பாட்டு
குணங்கொள்நிறைபுகழ்மன்னர் கொடைக்கடன்பூண்டிருந்து
இணங்கியுலகுடனாக்கிலும் ஆங்கவனையில்லார்
மணங்கொண்டபோகத்துமன்னியும் மீள்வர்கள் மீள்வில்லை
பணங்கொளரவணையான் திருநாமம்படிமினோ.
தா3நாதி3 க்ஷுத்3ரத4ர்மோபேதராய்க்கொண்டு ராஜ்யாநுப4வத்திலே ப்ரவ்ருத்தரானாலும் எம்பெருமானை ஆஶ்ரயியாதொழியில் அந்தராஜ்யம் ஸித்தி3யாது; அவனையாஶ்ர யித்துப் பெற்றாலும் சிலகாலம் அநுப4வித்து நிவ்ருத்தராவர்; ஆதலால், தன் திருவடிகளை ப்ராபித்தாரை ஒருநாளும் கைவிடாத எம்பெருமான் திருவடிகளையே ப்ராப்யமாகப் பற்றுங்கள். ‘அவன் திருவடிகளை ப்ராபித்தாரைக் கைவிடானோ?’ என்னில், – ‘திருவநந்தாழ்வானைக் கைவிடிலன்றோ திருவடிகளை ப்ராபித்தாரைக் கைவிடுவது’ என்கிறார். 4-1-8.
ஒன்பதாம் பாட்டு
படிமன்னுபல்கலன் பற்றோடறுத்துஐம்புலன்வென்று
செடிமன்னுகாயம்செற்றார்களும் ஆங்கவனையில்லார்
குடிமன்னுமின்சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள் மீள்வில்லை
கொடிமன்னுபுள்ளுடை அண்ணல்கழல்கள்குறுகுமினோ.
இப்படி ஐஹிகமான ஐஶ்வர்யம் அல்பமுமாய் அஸ்தி2ரமுமாயிருந்ததாகில், ஸ்வர்க்கா3த்யைஶ்வர்யத்தை ப்ராப்யமாகப்பற்றினாலோ? என்னில், ஸ்வர்க்கா3த்யைஶ்வர்ய வாஞ்சையாலே ஐஹிகவிஷயஸங்க3 பரித்யாக3 பூர்வகமாக இந்த்ரியங்களை ஜயித்து ஸ்வர்க்க3ப்ராப்தி விரோதி4 ஶரீரத்தைப் பரித்யஜித்தவர்களுக்கும் எம்பெருமானை ஆஶ்ரயியா தொழியில், அந்த ஸ்வர்க்கா3த்3யைஶ்வர்யம் ஸித்தி3யாது; த்தா3ஶ்ரயணத் -தாலே ஸித்தி3த்தாலும் அஸ்தி2ரம்; ஆதலால், இப்படி அல்ப அஸ்தி2ரத்வ ப3ஹுளது3:க2த்வ அநர்த்த2ஹேதுத்வாதி அநேக தோ3ஷதூ3ஷிதமான இந்த ஐஶ்வர்யத்தை விட்டு, பெரியதிருவடி -யைக் கைவிடிலும் ஸ்வாஶ்ரிதரை ஒர நாளும் ஒருதஶையிலும் கைவிடாத எம்பெருமான் திருவடிகளையே பரமப்ராப்யமாகப் பற்றுங்கள் என்கிறார். 4-1-9.
பத்தாம் பாட்டு
குறுகமிகவுணர்வத்தொடுநோக்கி எல்லாம்விட்ட
இறுகலிறப்பென்னும்ஞானிக்கும் அப்பயனில்லையேல்
சிறுகநினைவதோர்பாசமுண்டாம் பின்னும்வீடில்லை
மறுகலிலீசனைப்பற்றி விடாவிடில்வீடஃதே.
அஸ்தி2ரத்வாதி தோ3ஷாஸம்பி4ந்நமான கைவல்யத்தை ப்ராப்யமாகப் பற்றினாலோ? என்னில்; – ப்ராக்ருதவிஷய வைராக்ய பூர்வகமாக ஜ்ஞாநயோக3நிஷ்ட2னானவனுக்கும் எம்பெருமானை ஆஶ்ரயித்தாலல்லது ஆத்மாவலோகந விரொதி4கர்மம் போகாது; ப4க3வத் ஸமாஶ்ரயணத்தாலே ஆத்மாவலோகநம் பிறப்பது; பிறந்தாலும் அந்திமதஶையிலே ப4க3வத3நுஸந்தா4நம்பண்ணி ப்ரதிப3ந்த3கத்தைப்போக்காதொழியில் பின்னை ஆத்ம -யாதா2த்ம்யாவிர்ப்பா4வ லக்ஷணமோக்ஷம் ஸித்தி3யாது; முக்2யமான மோக்ஷமாகிறதும் அந்த ப4க3வத் கைங்கர்யமே: இப்படி கைவல்யோபாயதயா ப4க்3வத் ஸ்மாஶ்ரயணம் பண்ண -வேண்டுகையாலும், ப4க3வத் கைங்கர்யந்தானே பரமமோக்ஷ மாகையாலும், அந்த ப4க3வத் கைங்கர்யாபேக்ஷயா அத்யல்ப ஸுக2மான கைவல்யத்தை விட்டுப் ப4க3த் கைங்கர்யத்தையே பரமப்ராப்யமாகப் பற்றுங்கள் என்கிறார். 4-1-10.
பதினொன்றாம் பாட்டு
அஃதேஉய்யப்புகுமாறென்று கண்ணன்கழல்கள்மேல்
கொய்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்குற்றேவல்
செய்கோலத்தாயிரம் சீர்த்தொடைப்பாடலிவைபத்தும்
அஃகாமல்கற்பவர் ஆழ்துயர்போய்உய்யற்பாலரே.
ஆழ்வார் ஸர்வோஜ்ஜீவநார்த்த2மாக எம்பெருமானைப் பாடின இத்திருவாய்மொழியைத் தப்பாமல் கற்பார் நிரஸ்தாகி2ல து3:க2ராய்க்கொண்டு ப4க3வத் கைங்கர்ய மஹாரஸத்தைப் பெறுவார் என்கிறார். 4-1-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 4-2
பாலனாய் – ப்ரவேஶம்
(பாலனாய்) இப்படி பரமப்ராப்யபூ4தனான எம்பெருமானோடே கலந்து பரிமாறவேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாத நிரவதி4க வ்யஸநத்தாலே தாம் அலற்றுகிறபடியை அந்யாபதேஶத்தாலே பேசுகிறார்.
முதல் பாட்டு
பாலனாய் ஏழுலகுண்டுபரிவின்றி
ஆலிலைஅன்னவசஞ்செய்யும் அண்ணலார்
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
மாலுமால் வல்வினையேன்மடவல்லியே 4-2-1.
எம்பெருமான் ஒருபிள்ளையாய்ப் பிள்ளைத்தனத்தாலே முன்புகாணப்படுகிற இந்த ஏழுலகங்களையும் உண்டு அதனால் ஓர் அநிஷ்ட க3ந்த4மின்றியே ஆலிலையிலே கண்வளர்ந்தருளின போது அவன் திருவடிகளிலே யணிந்த திருத்துழாயை இக்காலத்- திலே பெறவேணுமென்று ஆசைப்படாநின்றாள்; இப்படி ஸர்வஶக்தியான எம்பெருமான் தன்னாலும் ஸம்பாதிக்க வொண்ணாத ஒன்றை இவள் ஆசைப்படுகிறது என்னுடைய பாபமிறே என்று இவளுடைய திருத்தாயார் அலற்றுகிறாள்.4-2-1.
இரண்டாம் பாட்டு
வல்லிசேர்நுண்ணிடை ஆய்ச்சியர்தம்மொடும்
கொல்லைமைசெய்து குரவைபிணைந்தவர்
நல்லடிமேலணி நாறுதுழாயென்றே
சொல்லுமால் சூழ்வினையாட்டியேன்பாவையே.
(வல்லிசேர்.) தன்னுடைய ஸௌந்த3ர்ய ஸௌக3ந்த4ய ஸௌகுமார்யாதி3 கல்யாண கு3ணாவிஷ்காரத்தாலே திருவாய்ப்பாடியில் பெண்பிள்ளைகளை வாயடித்துத் தம் திருவடிகளிலே வந்து விழும்படி வசீகரித்து அவர்களோடே திருக்குரவைகோத்தருளின வண்டுவரைப்பெருமாளுடைய அவ்வழகியதிருவடிகளிலே யணிந்த நாறுதுழாயை ஆசைப்படுகிறாள் என்கிறாள். 4-2-2.
மூன்றாம் பாட்டு
பாவியல்வேத நன்மாலைபலகொண்டு
தேவர்கள்மாமுனிவர் இறைஞ்சநின்ற
சேவடிமேலணி செம்பொன்துழாயென்றே
கூவுமால் கோள்வினையாட்டியேன்கோதையே.
(பாவியல்.) ஸாது4 பத3விரசிதமாய அதிமங்களமாய் அஸ்ங்க்2யேயமாயிருந்த வேத3ங்க3ளாகிற மாலைகளைக்கொண்டு சதுர்முகா2தி3 தே3வர்களும் ஸநகாதி3 முநிக3ளும் இறைஞ்சும்படி தன்னைக்கொடுத்துக்கொண்டு பாற்கடல்சேர்ந்த பரமனுடைய அழகிய திருவடிகளிலே யணிந்த செம்பொற்றுழாயென்று இவள் கூப்பிடாநிற்கும் என்கிறாள். 4-2-3.
நான்காம் பாட்டு
கோதிலவண்புகழ் கொண்டுசமயிகள்
பேதங்கள்சொல்லிப் பிதற்றும்பிரான்பரன்
பாதங்கள்மேலணி பைம்பொன்துழாயென்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடந்தோளியே.
(கோதில.) – ஓரொருகு3ண விஶேஷத்தை அநுப4வித்தால், ‘’இந்தக்கு3ணமல்லது மற்றொன்று அறியேன்’’ என்று அந்தக் -கு3ணத்துக்குத் தோற்று அடிமையாயிருக்கும் திவ்யபுருஷர்களாலே, இதராநுபூ4தகு3ணங்களிற்காட்டில் ஸ்வாநு பூ4தகு3ணத்துக்கு வைலக்ஷண்யத்தை விவஶராய்க்கொண்டு பரஸ்பரம் சொல்லிப் பிதற்றப்படுகிற எம்பெருமானுடைய பாதங்கள் மேலணி பைம்பொன்துழாயிலே யுள்ள ஆசையாலே அத்துழாயென்றே இவள் பலகாலும் அலற்றும் என்கிறாள். 4-2-4.
ஐந்தாம் பாட்டு
தோளிசேர்பின்னைபொருட்டு எருதேழ்தழீஇக்
கோளியார் கோவலனார் குடக்கூத்தனார்
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
நாளுநாள் நைகின்றதால் என்தன்மாதரே.
(தோளிசேர்.) – தன்திருத்தோளினழகாலே வண்டுவரைப் பெருமாளிலும் அதிகதரையாய் மற்றுமுள்ள தன்னுடைய திவ்யாவயவ ஸௌந்த3ர்யத்தினால் அவனோடு ஸத்3ருஶையா -யிருந்த நப்பின்னைப்பிராட்டியைத் திருமணம் புணருகைக்காக எருதேழ் தழுவிக்கொண்டு ஆஶ்ரிதஜந நயந ஸம்ருத்3யர்த்3த4மாகக் குடக்கூத்தாடியருளின வண்துவரைப்பெருமாளுடைய தாளிணை -மேல் அணி தண்ணந்துழாயென்றே நாளும்நாள் நைகின்றதால் என்தன்மாதர் என்கிறாள். 4-2-5.
ஆறாம் பாட்டு
மாதர்மாமண்மடந்தைபொருட்டு ஏனமாய்
ஆதியங்காலத்து அகலிடம்கீண்டவர்
பாதங்கள்மேலணி பைம்பொன்துழாயென்றே
ஓதும்மால்எய்தினள் என்தன்மடந்தையே.
(மாதர்.) நிரதிஶய ஸௌந்த3ர்ய ஸௌஶீல்யாதி3 கல்யாண கு3ண மஹோத3தி4யான ஸ்ரீ பூ4மிப்பிராட்டிக்காகப் போய்க் கல்பத்தினுடைய ஆதி3காலத்திலே அதிரமணீய தி3வ்ய வராஹ ரூபனாய்த் தன்னுடைய தி3வ்ய த்3ம்ஷ்ட்ரையாலே ப்ரளய ஸமயத்தில் ரஸாதலஸ்த2மான பூ4மண்டலத்தை இடந்தெடுத்தருளி – னவன் பாத3ங்கள் மேலணி பைபொந்துழாயென்றே ஓதும் மாலெய்தினள் என்தன்மடந்தை என்கிறாள். 4-2-6.
ஏழாம் பாட்டு
மடந்தையை வண்கமலத்திருமாதினைத்
தடங்கொள்தார்மார்பினில்வைத்தவர் தாளின்மேல்
வடங்கொள்பூந்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
மடங்குமால் வாணுதலீர்! என்மடக்கொம்பே.
(மடந்தையை.) ஸர்வலோகேஶ்வரியாய் ஸௌந்த3ர்ய ஸௌகுமார்யாத்3யநவதி4க கு3ணக3ண விபூ4ஷிதையாயிருந்த பெரிய பிராட்டியை, அதிவிஶாலமாய் அதிபரிமள துளஸீ விலஸிதமான திருமார்பில் வைத்தவர் தாளின்மேல் வடங்கொள் பூந்தண்ணந்துழாய்மலரை ஆசைப்பட்டுப்பெறாமையாலே முடிந்தாளென்று அலற்றுகிறாள். 4-2-7.
எட்டாம் பாட்டு
கொம்புபோல்சீதைபொருட்டு இலங்கைநகர்
அம்பெரியுய்த்தவர் தாளிணைமேலணி
வம்பவிழ்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
நம்புமால் நான்இதற்குஎன்செய்கேன்? நங்கைமீர்!
(கொம்பு.) அவையெல்லாம் ஆசைப்படலாம்; தி3வ்யாத்ம கு3ணங்களாலும் தி3வ்ய ரூபகு3ணங்களாலும் பரமபுருஷ தி3வ்ய மஹிஷியாய் ஸர்வ மஹேஶ்வரியான பெரியபிராட்டியிலும் உத்க்ருஷ்டதரையாயிருந்த ஸ்ரீஜநகசக்ரவர்த்தி திருமகளுக்காக இலங்கைநகர் அம்பெரியுய்த்த தயரதற்குமகன் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படுவாருளரோ? இவள் திருத்துழாயை ஆசைப்படாநின்றாள்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்? என்று கூப்பிடுகிறாள். 4-2-8.
ஒன்பதாம் பாட்டு
நங்கைமீர் நீரும் ஓர்பெண்பெற்றுநல்கினீர்
எங்ஙனேசொல்லுகேன் யான்பெற்றஏழையைச்
சங்கென்னும்சக்கரமென்னும் துழாயென்னும்
இங்ஙனேசொல்லும் இராப்பகல்என்செய்கேன்?
(நங்கைமீர்.) நங்கைமீர்! உங்களுடைய பெண்பிள்ளைகளும் எம்பெருமானை ஆசைப்பட்டுப் பெறாமையாலே அத்யந்தம் அவஸந்நைகளாணவர்கள் இப்பாடு பட்டாருமுளரோ? இவள்பட்டது என்தான்? என்னில், – எம்பெருமான் திருவாழியும் திருச்சங்கமும் ஏந்தியிருந்தருளும் அவ்வழகைக் காணவேணுமென்றும், மத்ஸ்ய கூர்ம வராஹாத்3யஸ்ங்க்2யேய தி3வ்யாவதார விஶிஷ்டனாயும் தி3வ்யக்ரீடா3 விஶிஷ்டனாயும் ஸ்ரீவைகுண்ட2நாத4னாயுமிருந்த -வனுடைய திருவடிகளில் திருத்துழாயைத் தத்தத்தஶையிலே பெறவேணுமென்று சொல்லப்புக்கு முடியச்சொல்லமாட்டாதே, சங்கென்னும், சக்கரமென்னும், துழாயென்னும்; இங்ஙனே இராப்பகல் கூப்பிடாநிற்கும்; என்செய்கேன்? என்கிறாள். 4-2-9.
பத்தாம் பாட்டு
என்செய்கேன் என்னுடைப்பேதை என்கோமளம்
என்சொல்லும் என்வசமுமல்லள் நங்கைமீர்
மின்செய்பூண்மார்பினன் கண்ணன்கழல்துழாய்
பொன்செய்பூண்மென்முலைக்கென்று மெலியுமே.
(என்செய்கேன்.) விவேகரஹிதையாய் விரஹவ்யஸநா -ஸஹிஷ்ணுவாயிருந்த என்னுடைய பெண்பிள்ளை என்சொல்லும் என்வசமுமல்லள்; நங்கைமீர்! நிரதிஶயௌஜ்ஜ்வல்ய மௌக்திக ஹாராதி3 தி3வ்ய பூ4ஷண பூ4ஷித வக்ஷஸ்த2லனாயிருந்த வண்டுவரைப்பெருமாள் திருவடிகளில் திருத்துழாய், தத்ஸம்ஶ்லேஷார்த்த2ம் மங்களமான பூ4ஷணங்களாலே அலங்க்ருதமான தன்னுடைய மென்முலைக்கென்று மெலியாநிற்கும்; என்செய்கேன்? என்று அலற்றுகிறாள். 4-2-10.
பதினொன்றாம் பாட்டு
மெலியும்நோய்தீர்க்கும் நம்கண்ணன்கழல்கள்மேல்
மலிபுகழ்வண்குருகூர்ச் சடகோபன்சொல்
ஒலிபுகழாயிரத்து இப்பத்தும்வல்லவர்
மலிபுகழ்வானவர்க்காவர் நற்கோவையே.
(மெலியும்.) இப்படி தன்னோடு ஸம்ஶ்லேஷிக்க ஆசைப்பட்டுப் பெறாமயாலே அத்யந்தம் அவஸந்நனான என்னுடைய அவஸாதமெல்லாம் போம்படி என்னோடே ஸம்ஶ்லேஷித்தருளின வண்துவரைப்பெருமாள் திருவடிகளிலே, தச்சே2ஷதைகாதி3த்வ மஹாயஶஸ்ஸை யுடையனான வண்குருகூர்ச்சடகோபன் சொல் ஒலிபுகழாயிரத்து இப்பத்தும் வல்லவர் அயர்வறும் அமரர்களுடைய தி3வ்யபரிஷத்துக்கு ஒருபூ4ஷணமாவர் என்கிறார். 4-2-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 4-3
கோவைவாயாள் – ப்ரவேஶம்
(கோவைவாயாள்.) இப்படி அவஸந்நரான தம்முடைய அவஸாத மெல்லாம் போம்படி தம்மோடே கலந்தருளின எம்பெருமானுடைய ப்ரணயித்வ கு3ணாநுப4வ ஜநித ப்ரீதியாலே அந்த ப்ரணயித்வ -த்தைப் பேசுகிறார்.
முதல் பாட்டு
கோவைவாயாள்பொருட்டு ஏற்றினெருத்தமிறுத்தாய் மதிளிலங்கைக்
கோவைவீயச்சிலைகுனித்தாய் குலநல்யானைமருப்பொசித்தாய்
பூவைவீயாநீர்தூவிப் போதால்வணங்கேனேலும் நின்
பூவைவீயாம்மேனிக்குப் பூசும்சாந்துஎன்னெஞ்சமே.
அதிபலவ்ருஷரூப அஸுரஸப்தக ஸபுத்ரஜநபா3ந்த4வத3ஶா – ஸ்ய குவலயாபீடகம் ஸாத்3யாஶ்ரித விரோதி4 நிரஸநஜநிதமான உன்னுடைய ஶ்ரமாபநோதநார்த்த2மான ஶிஶிரோபசாரங்களைத் தத்தத்காலங்களிலே உன்திறத்தில் நான் செய்யாதிருக்கச் செய்தேயும், என்னுடைய மநஸ்ஸானது ஶீதளமாய் நிரதிஶய ஸுக3ந்த4மாய் புஷ்பஹாஸ ஸுகுமாரமான உன்னுடைய திருவுடம்புக்கு ஸத்ருஶமாய் ஸர்வஶ்ரமாபநோதநமான தி3வ்யாங்கராகமாவதே! இது என்ன ப்ரணயித்வம்? என்கிறார். 4-3-1.
இரண்டாம் பாட்டு
பூசும்சாந்துஎன்னெஞ்சமே புனையும்கண்ணிஎனதுடைய
வாசகம்செய்மாலையே வான்பட்டாடையும்அஃதே
தேசமானஅணிகலனும் என்கைகூப்புச்செய்கையே
ஈசன்ஞாலமுண்டுமிழ்ந்த எந்தைஏகமூர்த்திக்கே.
(பூசும்சாந்து.) நிகி2லபு4வந நிகிரணோத்கிரணாவகத ஸர்வேஶ்வர ஸ்வபா4வனாய், ஸதைகரூபனாய்க்கொண்டு ஸ்ரீவைகுண்ட2நிலயனாயிருந்த எம்பெருமானுக்கு, ஸ்வவிஷயமாக மத் க்ருதமான ஸ்ம்ருதி கீர்த்தநாஞ்ஜலி ப்ரப்ருதி ஏகைக வ்ருத்தியே திவ்யகந்தா4நுலேபந தி3வ்யமால்யாம்பர நிரதிஶயதீ3ப்தியுக்த தி3வ்யபூ4ஷணாதி3 ஸர்வபோ4கோ3பகரணங்களுமாயின; ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும்படியே! என்கிறார். 4-3-2.
மூன்றாம் பாட்டு
ஏகமூர்த்தியிருமூர்த்தி மூன்றுமூர்த்திபலமூர்த்தி
யாகிஐந்துபூதமாய் இரண்டுசுடராய்அருவாகி
நாகமேறிநடுக்கடலுள்துயின்ற நாராயணனே! உன்
ஆகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல்மாய்த்ததே.
(ஏகமூர்த்தி.) அப்ராக்ருத நித்யஸித்த தி3வ்யரூப விஶிஷ்டனாய், ஸ்ரீவைகுண்ட2 நிலயனாய்க்கொண்டு ப்ரக்ருதி மஹத்த்ரிவிதா4ஹங்காரமந: ப்ரப்4ருதி3கரண பஞ்சபூ4த சந்த்ர ஸூர்யாதி3 பதார்த்த2ங்களுக்கும் தத3ந்தர்வர்த்தி சேதந ஜாதத்துக்கும் ஸ்ரஷ்டாவாய், அவற்றினுடைய ஸ்தி2த்யர்த்த3மாக அந்த்ர்யாமிதயாவஸ்தி2தனாய், ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷணார்த்தமாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி நாகபர்யங்க ஶாயியாயிருந்த நாராயணனே! உன் திருமேனிக்கு அபேக்ஷிதமான ஸர்வபோக்யங்களும் நான் உன்திறத்துப்பண்ணும் ஸ்ம்ருதி கீர்த்தநாதி வ்ருத்திகளேயாகக் கொண்டிருக்கிற உன்னுடைய மஹாகுணத்தை அநுப4வித்து என்னுடைய க்லேஶமும் தீர்ந்தேன் என்கிறார். 4-3-3.
நான்காம் பாட்டு
மாய்த்தலெண்ணி வாய்முலைதந்த மாயப்பேயுயிர்
மாய்த்த ஆயமாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண்மாலைகொண்டு உன்னைப்போதால்வணங்கேனேலும் நின்
பூத்தண்மாலைநெடுமுடிக்குப் புனையும்கண்ணிஎனதுயிரே.
(மாய்த்தல்.) ஆஶ்ரித விரோதி4 நிரஸந ஸ்வபா4வனாய், ஆஶ்ரித ஸமீஹிதப்ரதனாய், ஶ்ரிய:பதியாயிருந்த உன்னை ப்ராப்தகாலங்களிலே பூத்தண்மாலைகொண்டு வணங்காதிருக்கச் செய்தேயும், உன்னுடைய பூத்தண்மாலை நெடுமுடிக்கு என்னு – டைய ஆத்மாவே புனையுங்கண்ணியாயிற்று என்கிறார். 4-3-4.
ஐந்தாம் பாட்டு
கண்ணிஎனதுயிர் காதல்கனகச்சோதிமுடிமுதலா
எண்ணில்பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே
நண்ணிமூவுலகும் நவிற்றுங்கீர்த்தியுமஃதே
கண்ணனெம்பிரானெம்மான் காலசக்கரத்தானுக்கே.
(கண்ணி.) ப்ரதிகூலநிரஸந ஸ்வபா4வனான திருவாழி யுடையனான கண்ணனுக்கு, தன் திருவடிகளிலும் திருமார்விலும் திருத்தோளிலும் சாத்தியருளக்கடவ திருத்துழாய் என்னுடைய ஆத்மா; அஸங்க்2யேய நாநாவித4 தி3வ்ய பூ4ஷணங்க3ளும், ஸ்வோசித தி3வ்ய பீதாம்ப3ரமும், ஸர்வலோகங்க3ளும் சொல்லியேத்தும் தன்னுடைய கீர்த்தியும், மற்றுமெல்லாம் என் காதலே என்கிறார். 4-3-5.
ஆறாம் பாட்டு
காலசக்கரத்தொடு வெண்சங்கம்கையேந்தினாய்
ஞாலமுற்றும்உண்டுமிழ்ந்த நாராயணனே என்றென்று
ஓலமிட்டுநானழைத்தால் ஒன்றும்வாராயாகிலும்
கோலமாம்என்சென்னிக்கு உன்கமலமன்னகுரைகழலே.
(காலசக்கரத்தொடு.) – ஸர்வஜ்ஞனாய் ஸர்வஶக்தியா யிருந்த உன்னாலும் விஶ்லேஷிக்க வொண்ணாததொருபடி என்னோடே ஸம்ஶ்லேஷித்தருளினா யென்கிறார். ஆஶ்ரித விரோதி4 நிரஸந ஸ்வபா4வமான ஶங்கசக்ராதி3 தி3வ்யாயுதோ4 -பேதனாய், காருண்ய ஸௌஹார்த்த3 ஸௌஶீல்யாதி3 கால்யாண கு3ண விஶிஷ்டனாயிருந்த நீ இப்படி என்னோடு ஸம்ஶ்லேஷியா -தொழிந்தாலும் உன்னுடைய ஸத்தையே எனக்கு ஸர்வபோ4க்3ய -மாம்படி என்னைப் பண்ணியருளினாய் என்னவுமாம். 4-3-6.
ஏழாம் பாட்டு
குரைகழல்கள்நீட்டி மண்கொண்டகோலவாமனா!
குரைகழல்கைகூப்புவார்கள் கூடநின்றமாயனே!
விரைகொள்பூவும்நீரும்கொண்டு ஏத்தமாட்டேனேலும் உன்
உரைகொள்சோதித்திருவுருவம் என்னதாவிமேலதே.
(குரைகழல்கள்.) ப்ரணதஜநபரித்ராணார்த்த2மாக அவதீர்ணனாய், அத்யத்3பு4த தி3வ்ய சேஷ்டிதனாய், ப4க்த்யேக ஸமதி4கம்யனான உன் திருவடிகளிலே அதிஶீதள புண்யக3ந்த4 புஷ்ப தோயாதி3களைக்கொண்டு நான் சிலவ்ருத்திகளைப் பண்ணினால் அவை உனக்கு போ4க்யமாகையன்றிக்கே, நான் ஒரு வ்ருத்திபண்ணாதிருக்கச்செய்தேயும் வாங்மநஸாபரிச்சே2த்3ய தேஜோமய தி3வ்யரூபனான உனக்கு என்னுடைய ஆத்மஸத்தையே தா4ரகமும் போ4க்3யமுமாயிற்று என்கிறார். 4-3-7.
எட்டாம் பாட்டு
என்னதாவிமேலையாய் ஏர்கொளேழுலகமும்
துன்னிமுற்றுமாகிநின்ற சோதிஞானமூர்த்தியாய்
உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும்
இன்னவண்ணமேநின்றாய் என்றுரைக்கவல்லேனே.
(என்னதாவி.) நியந்த்ருதயா ஸர்வலோகாந்த:ப்ரவிஷ்டனாய், அவாப்த ஸமஸ்தகாமனாயிருந்துவைத்து மதேகதா4ரகனா யிருந்தவனே! என்னுடைய ஆத்மா நீ இட்டவழக்காய் உன்னுடைய தி3வ்யாத்ம ஸ்வரூபமும் நான் இட்டவழக்காம்படியாக என்னுடனே கலந்தருளினாயென்று தம்மோடே கலந்தருளினபடியைப் பேசி, அது ஒன்றும் போராமையாலே பின்னையும், இன்னபடி என்னோடே கலந்தருளினாய் என்று ஒன்றும் சொல்ல நிலமல்ல என்கிறார். 4-3-8.
ஒன்பதாம் பாட்டு
உரைக்கவல்லேனல்லேன் உன்னுலப்பில்கீர்த்திவெள்ளத்தின்
கரைக்கணென்றுசெல்வன்நான் காதல்மையலேறினேன்
புரைப்பிலாதபரம்பரனே பொய்யிலாதபரஞ்சுடரே
இரைத்துநல்லமேன்மக்களேத்த யானுமேத்தினேன்.
(உரைக்க.) நான் உரைக்கவல்லேனல்லேன். வல்ல அம்ஶத்தைச் சொன்னாலோ? என்னில்; – என்னோடே நீ கலந்த கலவியாகிற உன்னுடைய நிரவதி4க கீர்த்திவெள்ளத்தின் கரையி -னருகேதான் செல்ல முடியுமோ? இப்படி அபூ4மியான கீர்த்தியைச் சொல்லுவானென்? என்னில்; – உன்னை உள்ளபடியே எனக்கு காட்டித் தந்து, பின்னை அநந்ய ப்ரயோஜநனாய்க்கொண்டு என்னோடு கலந்த கலவியையே நிரவதி4க தேஜஸ்ஸாக வுடையவனே! இந்தக்கலவியைப் பரமப4க்தியுக்தரான அயர்வறுமமரர்கள் அபி4நிவேஶத்தலே எங்ஙனே பித்தேறி -யேத்தினார்கள், அப்படியே நானும் என்னுடைய அபி4நிவேஶாதி3 -ஶயத்தாலே பித்தேறி யேத்தினேன் என்கிறார். 4-3-9.
பத்தாம் பாட்டு
யானுமேத்தி ஏழுலகும்முற்றுமேத்திப் பின்னையும்
தானுமேத்திலும் தன்னையேத்தவேத்தஎங்கெய்தும்
தேனும்பாலும்கன்னலும் அமுதுமாகித்தித்திப்ப
யானும்எம்பிரானையேஏத்தினேன் யானுய்வானே.
(யானுமேத்தி.) ஏத்தவல்லீராய் ஏத்தினீரானாலோ? என்னில், – நானும் ஸர்வலோகவர்த்திகளான ஸர்வாத்மாக்களும் ஸ்வாபா4விக ஸார்வஜ்ஞாதி3 கு3ணவிஶிஷ்டனான எம்பெருமான் தானும் கூடநின்று ஸர்வகாலமும் ஏத்தினால்தான் அவனுடைய நிரவதி4கமான கீர்த்தி ஸமுத்3ரத்தினருகே செல்லமுடியுமோ? இப்படி எம்பெருமான் தன்னாலுங்கூட ஏத்தமுடியாத அவனுடைய கீர்த்தியை நீர் ஏத்துவானேன்? என்னில், – இனிதாயிருந்தவாறே ஏத்தினேன். இனிதென்றால் முடியாததொன்று தொடங்குவா -ருளரோ? என்னில், – நான் ஏத்தியல்லது த4ரிக்கமாட்டாமையாலே ஏத்தினேன் என்கிறார். 4-3-10.
பதினொன்றாம் பாட்டு
உய்வுபாயம்மற்றின்மைதேறிக் கண்ணனொண்கழல்கள்மேல்
செய்யதாமரைப்பழனத் தென்னன்குருகூர்ச்சடகோபன்
பொய்யில்பாடலாயிரத்துள் இவையும்பத்தும்வல்லார்கள்
வையம்மன்னிவீற்றிருந்து விண்ணும்ஆள்வர் மண்ணூடே.
(உய்வுபாயம்.) ‘பொய்யில்பாடல்’ என்றது – இப்படி எம்பெருமான் நிரவதி4கமான அபி4நிவேஶத்தோடே கூட என்னோடு கலந்து பரிமாறின பரிமாற்றம் இத்தனையும் மெய் என்கிறார். 4-3-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 4-4
மண்ணையிருந்து – ப்ரவேஶம்
(மண்ணையிருந்து.) இப்படி ப்ரணயஸ்வபா4வனான எம்பெருமானை விஶ்லேஷித்தா ளொரு பிராட்டி அந்த விஶ்லேஷ வயஸநத்தாலே பிச்சேறிச்சொல்லுகிற பாசுரங்களை அவளுடைய திருத்தாயார் சொல்லி அலற்றுகிறாள்.
முதல் பாட்டு
மண்ணையிருந்துதுழாவி வாமனன்மண்ணிதுவென்னும்
விண்ணைத்தொழுதுஅவன்மேவு வைகுந்தமென்றுகைகாட்டும்
கண்ணையுண்ணீர்மல்கநின்று கடல்வண்ணனென்னுமன்னே! என்
பெண்ணைப்பெருமயல்செய்தார்க்கு என்செய்கேன்பெய்வளையீரே.
(மண்ணையிருந்து.) எம்பெருமானைப் பிரிந்த வ்யஸநத்தை ஆற்றமாட்டாதே3 பண்டு எம்பெருமான் இந்த லோகத்தை அளந்தரு – ளினபோது அவன் திருவடிகளோடே ஸம்ப3ந்தி3த்தது, இம்மண் -ணென்று பார்த்து இந்தமண்ணைக்கொண்டு ஆஶ்வஸித்து அந்த ப்ரீதியாலே, அடியேன் வாமனன் மண் இதுவென்னும். ஆகாஶத்தை நாமஸாம்யத்தாலே திருநாடாகக்கருதித் தொழுது, அடியேன் அவன்மேவு வைகுந்தமென்று கைகாட்டும். அவனைக் காணா -தொழிந்தவாறே, கண்ணையுண்ணீர்மல்கநின்று கடல்வண்ணா வென்று அழைக்கும். இப்படி என் பெண்ணைப் பெருமயல் செய்தார்க்கு என்செய்கேன் பெய்வளையீரே? என்று அலற்றுகிறாள். 4-4-1.
இரண்டாம் பாட்டு
பெய்வளைக்கைகளைக்கூப்பிப் பிரான்கிடக்கும்கடலென்னும்
செய்யதோர்ஞாயிற்றைக்காட்டிச் சிரீதரன்மூர்த்திஈதென்னும்
நையும்கண்ணீர்மல்கநின்று நாரணனென்னுமன்னே! என்
தெய்வவுருவிற்சிறுமான் செய்கின்றதொன்றறியேனே.
(பெய்வளை.) இக்கடலை அவன் கண்வளர்ந்தருளுகிற திருப் – பாற்கடலாகக்கருதி, தன்னுடைய பெய்வளைக்கைகளைக் கூப்பி, பிரான் கிடக்கும் கடலென்னும். எம்பெருமானும் பிராட்டியும், ஆதி3த்யனும் அவனுடைய ப்ரபை3யும்போல் இருக்கையாலே, அந்த ஆதி3த்யனைக்காட்டி, சிரீதரன்மூர்த்தி ஈதென்னும். தன்கைக்கு அவன் எட்டாதொழிந்தவாறே நையும், அந்த வயஸநத்தை ஸஹிக்கமாட்டாமையாலே கண்ணீர்மல்க நின்று, நாரணனென்னும். ஆஶ்சர்ய பூ4தையான இவள் செய்கிற செயல் ஒன்றும் தெரிகிறதில்லை யென்கிறாள். 4-4-2.
மூன்றாம் பாட்டு
அறியும்செந்தீயைத்தழுவி அச்சுதனென்னும்மெய்வேவாள்
எறியும்தண்காற்றைத்தழுவி என்னுடைக்கோவிந்தனென்னும்
வெறிகொள்துழாய்மலர்நாறும் வினையுடையாட்டியேன்பெற்ற
செறிவளைமுன்கைச்சிறுமான் ய்கின்றதென்கண்ணுக்கொன்றே.
(அறியும்.) எல்லாராலும் தா3ஹகஸ்வபா4வத்வேந அறியப் படுகிறசெந்தீயை அதினுடைய ஔஜ்ஜ்வல்யத்தாலே எம்பெருமானாகக் கருதிச் சென்று ஸம்ஶ்லேஷித்து அந்த ஸம்ஶ்லேஷ ஜநித ப்ரீதியாலே, அச்சுதனென்னும்; மெய்வேவாள்; அதினுடைய ஶைத்யாதி3ஶயத்தாலே நிரஸ்த ஸம்ஸ்த ஸந்தாபையாயிருக்கும். அதிஶீதளமாய்க்கொண்டு வருகிற தென்றலை, பசுமேய்க்கப்பெற்றுவருகிற வண்டுவரைப் பெருமா -ளென்று நிஶ்சயித்து அக்காற்றைத் தழுவி, அடியேன் இவன் என்னுடைய கோவிந்தனென்னும். வெறிகொள்துழாய்மலர் நாறும். இப்படி எம்பெருமானைப் பிரிந்துபடுகைக்கு அர்ஹையன்றியே யிருக்கச்செய்தே, இவள் என்னுடைய பாபத்தாலே பிச்சேறிச் செய்கிற செயல்கள் இவ்வளவோ! என்கிறாள். 4-4-3.
நான்காம்பாட்டு
ஒன்றியதிங்களைக்காட்டி ஒளிமணிவண்ணனேயென்னும்
நின்றகுன்றத்தினைநோக்கி நெடுமாலே! வாவென்றுகூவும்
நன்றுபெய்யும்மழைகாணில் நாரணன்வந்தானென்றுஆலும்
என்றினமையல்கள்செய்தார் என்னுடைக்கோமளத்தையே.
(ஒன்றிய.) அதிஶீதள ப்ரபா4னான பூர்ணசந்த்ரனைக் காட்டி, இவன் ஒளிமணிவண்ணனே யென்னும். நின்றகுன்றத்தினை நோக்கி, இந்த லோகத்தை அளந்தருளுகைக்காக மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த எம்பெருமானென்று நிஶ்சயித்து, நெடுமாலேவா வென்று கூப்பிட்டழைக்கும். இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டியுண்ட பெருவயிற்ற கருமுடிலைக் காணில், நாரணன் வந்தானென்று மயில்கள் நின்று ஆலுமாபோலே ஆலும்., என்று இப்படியே பித்தேறப்பண்ணினான் என்னுடைக் கோமளத்தை என்கிறாள். 4-4-4.
ஐந்தாம் பாட்டு
கோமளவான்கன்றைப்புல்கிக் கோவிந்தன்மேய்த்தனவென்னும்
போமிளநாகத்தின்பின்போய் அவன்கிடக்கைஈதென்னும்
ஆமளவொன்றுமறியேன் அருவினையாட்டியேன்பெற்ற
கோமளவல்லியைமாயோன் மால்செய்துசெய்கின்றகூத்தே.
(கோமளம்.) கோமளவான் கன்றுகளைப்புல்கி, இவை கோ3விந்தன் மேய்த்தன என்னும். போம் இளநாகத்தின் பின்போய் அத்தைப்புல்கி, ‘இவ்விளமையும் மார்த்தலமும் அழகும் எம்பெருமானோடு கலந்த திருவநந்தாழ்வானுக் கல்லது கூடாது; ஆதலால், அவன் கிடக்கை ஈது’ என்னும். அருவினையாடியேன் பெற்ற கோமளவல்லியை மாயோன் மால் செய்து செய்கிற கூத்து என்னாய்விளையுமென்று அறிகிலேன் என்கிறாள். 4-4-5.
ஆறாம் பாட்டு
கூத்தர்குடமெடுத்தாடில் கோவிந்தனாமெனாஓடும்
வாய்த்தகுழலோசைகேட்கில் மாயவனென்றுமையாக்கும்
ஆய்ச்சியர்வெண்ணெய்கள்காணில்அவனுண்டவெண்ணெய் ஈதென்னும்
பேய்ச்சிமுலைசுவைத்தார்க்கு என்பெண்கொடியேறியபித்தே!
(கூத்தர்.) கூத்தர் குடமெடுத்தாடில், ‘கோவிந்தனல்லன்காண்’ என்றாலும்; ஆங்காணென்னா ஓடும்; அன்றியே ஒழிந்தவாறே தளரும். ‘அழகியகுழலோசைகேட்கில், இவளைப் பெற வொண்ணாது’ என்று கேளாததொருபடி காத்துச் செல்லாநிற்க ச்செய்தே, எங்கேனுமோரிடத்திலே பின்னையும் ல்ப்3த4மானவாறே, அடியேன் மாயவனென்று ஓடும்; அவனன்றியே யொழிந்தவாறே மோஹிக்கும். பின்னையும், ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், அவனுண்ட வெண்ணெய் ஈதென்னும். மாய்த்தலெண்ணி வாய்முலைதந்த பேய்ச்சியை மாய்த்த இச்செயல்கிடீர் இவளை இப்பாடு படுத்துகிறது என்கிறாள். 4-4-6.
ஏழாம் பாட்டு
ஏறியபித்தினோடு எல்லாவுலகும்கண்ணன்படைப்பென்னும்
நீறுசெவ்வேயிடக்காணில் நெடுமாலடியாரென்றோடும்
நாறுதுழாய்மலர்காணில் நாரணன்கண்ணிஈதென்னும்
தேறியும்தேறாதும்மாயோன் திறத்தனளேஇத்திருவே.
(ஏறிய.) எத்தனையேனும் பித்தேறினாலும் எல்லாவுலகும் கண்ணன் படைப்பென்னும்; இதொன்றும் தப்பாமல் சொல்லும் . த்3ரவ்யம் ஏதேனுமாகிலும் ஊர்த்4வமாக இடக்காணில், நெடுமாலடியாரென்று ஓடும். ததீ3ய வஸ்து ஸாத்3ருஶ்யாத்தாலே ததீ3யம்ல்லாதவற்றையும் ததீ3யமாகக் கருதிப் பிதற்றுகிற இவள் அவனுக்கு அஸாதா4ரண ஶேஷபூ4தமான திருத்துழாயைக் கண்டால் என்படும்! பலசொல்லியென்? இனி, தேறியும் தேறாதும் மாயோன் திறமல்லதறியாள் இத்திரு என்கிறாள். 4-4-7.
எட்டாம் பாட்டு
திருவுடைமன்னரைக்காணில்திருமாலைக்கண்டேனேயென்னும்
உருவுடைவண்ணங்கள்காணில் உலகளந்தானென்றுதுள்ளும்
கருவுடைத்தேவில்களெல்லாம் கடல்வண்ணன்கோயிலேயென்னும்
வெருவிலும்வீழ்விலு மோவாக் கண்ணன்கழல்கள்விரும்புமே.
(திருவுடை.) ஸ்ரீமான்களான ராஜாக்களைக் காணில், ‘ஏவம் விதை4யான ஸ்ரீமத்தையானது ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரனுக் கல்லது கூடாதாதலால் ‘இவன் ஶ்ரிய:பதியே’ என்று நிஶ்சயித்து, திருமாலைக்கண்டேனேயென்னும்; அழகிய நீலமேகங்கள் குவளைகள் காயாமலர்கள் கடல் என்னும் இவற்றைக் காணில், உலகளந்தானென்று துள்ளும்; கருவுடைத்தேவில்களெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும்; அங்கேபோய்ப் புக்கு அவனன்றியே யொழிந்தவறே ஏங்கிவிழும்;பின்னையும் தவிராதே கண்ணங்கழல்கள் விரும்பும் என்கிறாள். 4-4-8.
ஒன்பதாம் பாட்டு
விரும்பிப்பகவரைக்காணில் வியலிடமுண்டானேயென்னும்
கரும்பெருமேகங்கள்காணில் கண்ணனென்றேறப்பறக்கும்
பெரும்புலவாநிரைகாணில் பிரானுளனென்றுபின்செல்லும்
அரும்பெறல்பெண்ணினைமாயோன் அலற்றியயர்ப்பிக்கின்றானே.
(விரும்பி.) – அபரிமித ப4க3வத்3 ஜ்ஞாந விஶிஷ்டராய் அத2ஏவ ப4க3வத்3 வ்யதிரிக்த விஷயங்களில் நிரபேக்ஷராயிருப் -பாரைக் காணில், ஏவம்வித4 நைரபேக்ஷ்யம் எம்பெருமானுக்கல்லது கூடாதாதலால், வியலிகமுண்டானேயென்று ஸாதரமாகச் சொல்லும். கரும்பெருமேகங்கள் காணில், அடியேன் கண்ணனென்று தன்னுடைய ப்ரீத்யதி3ஶயமே சிறகாகக்கொண்டு ஏறப்பறக்கும்; தனக்கு எட்டாதொழிந்தவாறே தளரும். பின்னையும் லப்த4 ஸம்ஜ்ஞையாய், அதிஸம்க்3ரமான பசுநிரை காணில், அடியேன் பிரான் உளனென்று அவற்றின்பின் செல்லும். இப்படி என்னுடைய அரும்பெறற்பெண்ணினை மாயோன் தன்னை அலற்றி யயர்க்கும்படி பண்ணாநின்றான் என்கிறாள். 4-4-9.
பத்தாம் பாட்டு
அயர்க்கும்சுற்றும்பற்றிநோக்கும் அகலவேநீள்நோக்குக்கொள்ளும்
வியர்க்கும்மழைக்கண்துளும்ப வெவ்வுயிர்கொள்ளும்மெய்சோரும்
பெயர்த்தும்கண்ணாஎன்றுபேசும் பெருமானேவாவென்றுகூவும்
மயற்பெருங்காதலென்பேதைக்கு என்செய்கேன்வல்வினையேனே.
(அயர்க்கும்.) வ்யஸநாதி3ஶயத்தாலே அறிவழிந்து கிடக்கும். பின்னையும், நெடும்போது கூட ப்ரபு3த்தை4யாய், தன்னருகேவந்தானாகக் கருதிச் சுற்றும் பற்றிநோக்கி, அருகு காணாதொழிந்தவாறே அகலவே நீள்நோக்குக்கொள்ளும். தூரத்திலும் காணாதொழிந்தவாறே நீராய் உருகும். மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்கொள்ளும். மெய்சோரும். பின்னையும் கண்ணாவென்று பேசும். பெருமானே வாராயென்று கூப்பிட்டழைக்கும். இப்படி காதல் மையலேறினே எண் பேதைக்கு என்செய்கேன் பாவியேன்? என்று அலற்றுகிறாள். 4-4-10.
பதினொன்றாம் பாட்டு
வல்வினைதீர்க்கும்கண்ணனை வண்குருகூர்ச்சடகோபன்
சொல்வினையாற்சொன்னபாடல் ஆயிரத்துள்இவைபத்தும்
நல்வினையென்றுகற்பார்கள் நலனிடைவைகுந்தம்நண்ணித்
தொல்வினைதீரஎல்லாரும் தொழுதெழவீற்றிருப்பாரே.
(வல்வினைதீர்க்கும்.) ஆஶ்ரிதஹந ஸமஸ்த து3:கா2ப்நோதந ஸ்வபா4வனாய் ஆஶ்ரித ஸுலப4னாயிருந்த எம்பெருமானைச் சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவைபத்தும் அநந்ய ப்ரயோஜநராய்க்கொண்டு கற்பார்கள் நலனுடைவைகுந்த3ம் நண்ணி எல்லாரும் தொழுதெழ வீற்றிருப்பார் என்கிறார். 4-4-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 4-5
வீற்றிருந்து – ப்ரவேஶம்
(வீற்றிருந்து.) ஸ்ரீவைகுண்ட2 நிலயனாய் அநந்த போ4கி3நி ஶ்ரியாஸஹாஸீநனாய் ஶேஷஶேஷாஶந வைநதேய ப்ரப்4ருத்ய பரிமித பரிஜந பரிவ்ருதனாயிருந்த எம்பெருமானை அவனுடைய நிரவதி4க காருண்யத்தாலே கண்களாலே கண்டு, கைகளாரத் தொழுது, வாயாலே திருவாய்மொழி பாடப்பெற்ற எனக்கு இனி யென்ன குறையுண்டு? என்கிறார்.
முதல் பாட்டு
வீற்றிருந்துஏழுலகும் தனிக்கோல்செல்லவீவில்சீர்
ஆற்றல்மிக்காளும்அம்மானை வெம்மாபிளந்தான்தன்னைப்
போற்றியென்றேகைகளாரத் தொழுதுசொல்மாலைகள்
ஏற்றநோற்றேற்கு இனியென்னகுறைஎழுமையுமே?
ஸ்ரீவைகுண்ட2த்திலே திருவநந்தாழ்வான் மேலே தன்னுடைய ஸர்வலோகாதி4 ராஜ்யமெல்லாம் தோன்றும்படி யிருந் -தருளி, ஸ்வஸங்கல்ப ஸஹஸ்ரைகதே3ஶத்தாலே நிர்வாஹித ஸர்வலோகனாய், நித்யநிர்த்3தோ3ஷ நிரவதி4க கல்யாணகு3ண விஶிஷ்டனாய், இப்படி பரிபூர்ண்னாயிருக்கச்செய்தே அநுத்ரிக்த ஸ்வபா4வனாய், ஆஶ்ரித ப்ரித்ராணார்த்த2மாக வஸுதே3வ க்3ருஹே அவதீர்ணனாய் ஆஶ்ரித விரோதி4 நிரஸநைக ஸ்வபா4வனாயிருந்த எம்பெருமானைத் திருப்பல்லாண்டு பாடிக்கொண்டு என்கைகளினுடைய விடாயெல்லாம் தீரும்படி தொழுது, ‘திருவாய்மொழிபாடுகைக்கு பா4க்யம் பண்ணினேன்; எனக்கு இனி ஒருநாளும் ஒரு குறையில்லை’ என்கிறார்.4-5-1.
இரண்டாம் பாட்டு
மையகண்ணாள்மலர்மேலுறைவாள் உறைமார்பினன்
செய்யகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
மொய்யசொல்லால் இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன்
வெய்யநோய்கள்முழுதும் வியன்ஞாலத்துவீயவே.
(மையகண்ணாள்.) இப்படி ஸர்வலோகாதி4 ராஜ்யத்தைச் செலுத்திக்கொண்டு ஶேஷபோ4க3 பர்யங்கத்திலே, விதல இந்தீ3வரலோசநையாயிருந்த பெரியபிராட்டியாரோடேகூட ஸுகா2சீநனாய், தத்ஸம்ஶ்லேஷஜநித நிரதிஶய ப்ரீதியாலே செய்யகோலத்தடங்கண்ணனாய், அநந்த வைநதேய விஷ்வக்ஸேந ப்ரப்3ருதி அஸங்க்2யேய தி3வ்யபரிஜந பரிவ்ருதனாயிருந்த எம்பெருமானை என்னுடைய வெய்யநோய்கள் முழுதும் இந்த ப்ரக்ருதியிலே யிருக்கச்செய்தேவீயும்படி, அழகிய சொல்லாலே இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன் என்கிறார். 4-5-2.
மூன்றாம் பாட்டு
வீவிலின்பம் மிக எல்லைநிகழ்ந்தநம்அச்சுதன்
வீவில்சீரன்மலர்க்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
வீவில்காலமிசைமாலைகளேத்தி மேவப்பெற்றேன்
வீவிலின்பம்மிக எல்லைநிகழ்ந்தனன்மேவியே.
(வீவிலின்பம்.) ஆஶ்ரிதவாத்ஸல்ய ஸௌஶீல்யைஶ்வர்ய ஸௌந்த3ர்யாத்3யநவதி4க மங்களகு3ண விஶிஷ்டனாய், ஸ்வபரி -சரணபோ4க3 ஶேஷஶேஷாஶநாத்3யபரிமித நித்யஸித்3த4 பரமஸூரிபி4 ரநவரதஸம்ஸேவ்யமாநனாய், ஸ்ரீவைகுண்ட2 நிலயனாய், லக்ஷ்மீபூ4மிநீளா நாயகனாயிருந்த தன்னைத் தான் அநுப4வித்ததினாலே தனக்கு வந்த நிரவதி4காநந்த3மும், – தன்னைத் திருவாய்மொழிபாடுகையால் எனக்கு வந்த ஆநந்த3முமானால் இதிலே ஸஹஸ்ரைகதே3ஶத்துக்குப் போருமோ அது? என்கிறார். 4-5-3.
நான்காம் பாட்டு
மேவிநின்றுதொழுவார் வினைபோகமேவும்பிரான்
தூவியம்புள்ளுடையான் அடலாழியம்மான்தன்னை
நாவியலால்இசைமாலைகளேத்தி நண்ணப்பெற்றேன்
ஆவியென்னாவியை யானறியேன்செய்தவாற்றையே.
(மேவிநின்று.) கீழ்ச்சொன்ன விண்ணோராகிறார் – பெரிய திருவடி திருவாழி திருச்சங்கு திருவநந்தாழ்வான் ஸ்ரீஸேநாதி4பதி யாழ்வான் முதலான தி3வ்யபுருஷர்கள். அந்தத்தி3வ்ய புருஷர் -களாலே பரிசர்யமாண சரணாரவிந்த யுகளனாய், ப4க்தியுக்த ஜந ஸமஸ்த து3:கா2பநோதந ஸ்வபா4வனாய், தத்ஸம்ஶ்லேஷ ஸ்வபா4வனாயிருந்த எம்பெருமானைத் திருவாய்மொழி பாடிக்கொண்டு ஸம்ஶ்லேஷிக்கப்பெற்றேன்; அத்யந்த நிக்ருஷ்டனான என்னை இப்படி விஷயீகரித்தருளுவதே! ஒருவனுடைய குணவத்தை இருக்கும்படியே இது! என்கிறார். 4-5-4.
ஐந்தாம் பாட்டு
ஆற்றநல்லவகைகாட்டும் அம்மானை அமரர்தம்
ஏற்றை எல்லாப்பொருளும்விரித்தானைஎம்மான்தன்னை
மாற்றமாலைபுனைந்தேத்தி நாளும்மகிழ்வெய்தினேன்
காற்றின்முன்னம்கடுகி வினைநோய்கள்கரியவே.
(ஆற்றநல்ல.) அயர்வறுமமரர்களதி4பதியாய், வஸுதே3வ க்3ருஹே அவதீர்ணனாய், அர்ஜுந வ்யாஜத்தாலே ஸர்வாத்மாக்களுக்கும் ஸகலவேதா4ர்த்த2 ப்ரகாஶகனாயிருந்த தன்னை எனக்கு ஸாத்மிக்க ஸாத்மிக்கக் காட்டித் தந்தருளினான். நானும் அவனைக்கண்டு, காற்றின்முன்னம் கடுகி வினைநோய்கள் கரியும்படி திருவாய்மொழிபாடி, நாளும் மகிழ்வெய்தினேன் என்கிறார். 4-5-5.
ஆறாம் பாட்டு
கரியமேனிமிசை வெளியநீறுசிறிதேயிடும்
பெரியகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
உரியசொல்லால் இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியதுண்டோஎனக்கு இன்றுதொட்டும் இனியென்றுமே.
(கரியமேனி.) நீலமேக2நிப4தி3வ்யரூபோசித தி3வ்யாங்க ராக3த்தாலே அநுலிப்தனாய், அதிவிஶாலமாய் அதிரமணீயமாயி -ருப்பதொரு தாமரைத்தடாகம் போலேயிருந்த திருக்கண்களை யுடையனாய், அவ்வழகாலே விண்ணோர் பெருமானாயிருந்த எம்பெருமானை, அவனுக்கு ஸத்ருஶமான சொற்களாலே இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்ற எனக்கு இன்றுதொட்டும் இனியென்றும் அரியது உண்டோ? என்கிறார். 4-5-6.
ஏழாம்பாட்டு
என்றுமொன்றாகி ஒத்தாரும்மிக்கார்களும் தன்தனக்கு
இன்றிநின்றானை எல்லாவுலகும்உடையான்தன்னை
குன்றமொன்றால்மழைகாத்தபிரானைச் சொல்மாலைகள்
நன்றுசூட்டும்விதியெய்தினம் என்னகுறைநமக்கே.
(என்றுமொன்றாகி.) ஸர்வகாலமும் ஏகப்ரகாரமாக நிரஸ்த -ஸமாப்4யதி3கனாய், ஸர்வலோகேஶ்வரனாய்ப் பரமகாருணிகனா – யிருந்த எம்பெருமானைத் திருவாய்மொழி பாடுகைக்கு, அவனுடைய நிர்மர்யாத க்ருபையாகிற மஹாபா4க்3ய்த்தை -யுடையோ மானோம்; இனி நமக்கு என்ன குறையுண்டு? என்கிறார். 4-5-7.
எட்டாம் பாட்டு
நமக்கும்பூவின்மிசைநங்கைக்கும்இன்பனை ஞாலத்தார்
தமக்கும்வானத்தவர்க்கும்பெருமானைத் தண்தாமரை
சுமக்கும்பாதப்பெருமானைச்சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்கவல்லேற்கு இனியாவர்நிகர்அகல்வானத்தே.
(நமக்கும்.) இன்று தன்திருவடிகளை ஆஶ்ரயித்த நாமும் பெரியபிராட்டியாருமானால், பெரியப்ரியாட்டியார் பக்கலிற் காட்டிலும் நம்பக்கலிலே வ்யாமுக்தனாய், அநாஶ்ரிதரான தேவர்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் ஒருவாசியின்றியே ஒக்க அரியனாய், விதள தருணார விந்தாதி4க ஸௌகுமார்ய சரணயுகளனாயிருந்த எம்பெருமான் என்னை ‘ஒன்று சொல்லுங்காண்’ என்று அருளிச்செய்தருளினால், சொல்லலாம்படி சொல்மாலைகள் அமைக்கவல்லேற்கு இனித்திருநாட்டிலேதான் நிகருண்டோ? என்கிறார். 4-5-8.
ஒன்பதாம் பாட்டு
வானத்தும்வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும்மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்திசையும்தவிராதுநின்றான்தன்னை
கூனற்சங்கத்தடக்கையவனைக் குடமாடியை
வானக்கோனைக் கவிசொல்லவல்லேற்கு இனிமாறுண்டே.
(வானத்தும்.) ஸ்வர்க்3கா3த்3யுபரிதந லோகங்களுக்கும் ப்ருதி4வ்யாதி3 அத4ஸ்தந லோகங்ககளுக்கும் தத3ந்தர்வர்த்யகி2ல சராசரங்களுக்கும் ஆத்மபூ4தனாய், ஶங்க2சக்ரக3தா3த4ரனாய், ஆஶ்ரிதபரித்ராணார்த்த2மாக மநுஷ்யாதி3ரூபேண அவதீர்ணனாய், அதிமநோஹர தி3வ்ய சேஷ்டிதனாய், ஸ்ரீவைகுண்ட2நாத2னாயிருந்த எம்பெருமான் தன்னைக் கவிசொல்லவல்ல என்னோடு ஒக்குமோ, ஸர்வேஶ்வரனான எம்பெருமான்தான்?என்கிறார். 4-5-9.
பத்தாம் பாட்டு
உண்டும்உமிழ்ந்தும்கடந்தும்இடந்தும் கிடந்தும்நின்றும்
கொண்டகோலத்தொடுவீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்டவாற்றால் தனதேயுலகெனநின்றான்தன்னை
வண்தமிழ்நூற்கநோற்றேன் அடியார்க்குஇன்பமாரியே.
(உண்டும்.) நிகி2ல ஜக3ந்நிக3ரணோத்கரண க்ரமணோத் -த4ரண ஶயநஸ்தா2நாஸந ஸம்ஶ்லேஷாதி3 ஸ்வகீய தி3வ்ய சேஷ்டிதங்களாலும், ஸ்வாஸாதா4ரண தி3வ்யஸௌந்த3ர்ய -த்தாலும், ஸ்வகீய தி3வ்யரூபத்தாலும் தனதே உலகென நின்றான் தன்னைத் திருவாய்மொழி பாடுகைக்கு ஒரு மஹாபா4க்3யம் பண்ணினேன். ப4க3வத் ஸ்வரூப ரூபகு3ண விபூ4தியாதா2த்ம்ய ப்ரத3ர்ஶகமாய் அதிமது4ரமாய் அதிரமணீய ஸௌந்த3ர்யமாய் அதிமது4ர ஸ்வரமாயிருந்த இத்திருவாய்மொழியை, எம்பெருமானுக்கு நல்லராயிருப்பார் கேட்டால் என்படுவாரோ? என்கிறார். 4-5-10.
பதினொன்றாம் பாட்டு
மாரிமாறாததண்ணம்மலை வேங்கடத்தண்ணலை
வாரிமாறாதபைம்பூம்பொழில்சூழ் குருகூர்நகர்க்
காரிமாறன்சடகோபன் சொல்லாயிரத்துஇப்பத்தால்
வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்குமே.
(மாரிமாறாத.) ஸம்ஸார தா3வாக்3நி த3க்3த4 ஸர்வ ஜந்து ஸந்தாப நாஶகரமான தண் திருமலையைத் தனக்கு தி3வ்ய யாமமாக வுடையனான திருவேங்கடமுடையானுடைய ஆஶ்ரித வாத்ஸல்யாதி3 கல்யாணகு3ண ப்ரதிபாதகமான இத்திருவாய்மொழி வல்லாருடைய ஸமஸ்த து3:க2ங்களையும், ப4க3வதா3ஶ்ரித வாத்ஸல்யாதி கல்யாணகு3ணைக போ4கையான பெரியபிராட்டியார் போக்கும் என்கிறார். 4-5-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
பகவத் விஷயம் – நான்காம் பத்து
ப்ரவேஶம் 4-6
தீர்ப்பாரை – ப்ரவேஶம்
(தீர்ப்பாரையாமினி.) ஏவம்பூ4தனாயிருந்த எம்பெருமானை விஶ்லேஷித்து அத்யந்தம் அவஸந்நையாய் மோஹத3ஶாபந்நை -யாயிருந்த பிராட்டி திருத்தாயாரும் உறவுமுறை யாரும் இவளுடைய அவஸாத3த்தைக் கண்டு’இவளுக்கு இந்த அவஸாத3ம் எத்தாலே வந்தது?’ என்றும், ‘இதுக்குப் பரிஹாரமென்?’ என்றும் ஒரு கட்டுவிச்சியைக் கேட்க, அவளும் ‘க்ஷுத்3ர தே3வக்ருதம்’ என்றும், ‘இதுக்குப் பரிஹாரம் தத்3ப்ரீணநம்’ என்றும் சொல்ல, அவர்களும் அதுகேட்டு இவள் பக்கலுள்ள ஸ்நேஹாதி3ஶயத்தாலே ‘ஏதேனும் ஒரு தைவத்தை ஆஶ்ரயித்தாகிலும் இவளைப் பெறில் அதுவே எங்களுக்கு ஆத்மலாப4ம்’ என்று பார்த்து அந்த க்ஷுத்3ர தே3வ -ப்ரீணநத்திலே ப்ரவ்ருத்தராய்ச் செல்லாநிற்க, இப்பிராட்டியினு -டைய திருத்தோழியானவள் ‘நீங்கள் கருதுகிறவை ஈடல்ல, பரிஹார – முமல்ல; நோயும் நீங்கள் கருதுகிறதல்ல; இன்னது நோய், இன்னது பரிஹாரம்’ என்று சொல்லி அவர்களை நிவர்த்திப்பிக்கிறாள் என்கிறது.
முதல் பாட்டு
தீர்ப்பாரையாம்இனி எங்ஙனம்நாடுதும்? அன்னைமீர்!
ஓர்ப்பால்இவ்வொண்ணுதல் உற்றநல்நோயிதுதேறினோம்
போர்ப்பாகுதான்செய்து அன்றைவரைவெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள்சிந்தைதுழாய்த்திசைக்கின்றதே.
(தீர்ப்பாரை.) ‘இவளுக்கு இந்தநோய் எங்ஙனேவந்தது?’ என்று நிரூபித்து, ‘அந்நிரூபணத்தாலெ இவளுற்ற நன்னோயை அறிந்தோம்; இது எத்தாலே வந்தது?’ என்னில், – து3ர்யோத4நாதி3 -கள் நடுங்கும்படி ஸேனையை அணிவகுத்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப்பாகனாரை ஆசைப்பட்டுப் பெறாமையால் வந்தது. இந்தநோய் தீர்ப்பாரை நாம் எங்கே தேடுவோம்? அன்னைமீர்!’ என்றுகொண்டு, அவர்கள் பரிஹாரமாகச்செய்கிற செயல்களை இவளுடைய தோழி நிவர்த்திப்பிக்கிறாள். 4-6-1.
இரண்டாம் பாட்டு
திசைக்கின்றதேஇவள்நோய் இதுமிக்கபெருந்தெய்வம்
இசைப்பின்றி நீரணங்காடும் இளந்தெய்வமன்றிது
திசைப்பின்றியே சங்குசக்கரமென்றிவள்கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில்பெறுமிதுகாண்மினே.
(திசைக்கின்றதே.) நீங்கள் இவளுடைய நோயினை ஒன்றும் அறிகிறிலீர்; இந்நோய் மிக்கபெருந்தெய்வத்தாலே வந்தது. விஸத்ருஶமாக நீங்கள் நின்று அணங்காடுகிற க்ஷுத்3ர தை3வ க்ருத மல்ல. இதுக்குப் பரிஹாரம் என்? என்னில்; – சொல்லுவார் சொல்லிற்றைக் கேட்டுத் திகையாதே, சங்குசக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றிராகில் நன்றே இவளைப்பெறலாம். இப்போதே இப்பொருளை ப்ரத்யக்ஷிக்கலாமென்கிறாள். 4-6-2.
மூன்றாம் பாட்டு
இதுகாண்மின்அன்னைமீர்! இக்கட்டுவிச்சிசொற்கொண்டு நீர்
எதுவானும்செய்து அங்கோர்கள்ளும் இறைச்சியும்தூவேன்மின்
மதுவார்துழாய்முடி மாயப்பிரான்கழல்வாழ்த்தினால்
அதுவேஇவளுற்றநோய்க்கும் அருமருந்தாகுமே.
(இதுகாண்மின்.) இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர் எதுவானுமொன்றைச் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின். மற்றுச் செய்வதென்? என்னில், மது3வார் துழாய்முடி மாயப்பிரான் கழல் வாழ்த்துங்கோள்; வாழ்த்தினால், அதுவே இவளுற்ற நோய்க்கு அருமருந்துமாம்; யுக்தமும் அதுவே; இது நிஶ்சிதம் என்கிறாள். 4-6-3.
நான்காம் பாட்டு
மருந்தாகுமென்று அங்கோர்மாயவலவைசொற்கொண்டு நீர்
கருஞ்சோறும்மற்றைச்செஞ்சோறும் களனிழைத்தென்பயன்?
ஒருங்காகவே உலகேழும் விழுங்கியுமிழ்ந்திட்ட
பெருந்தேவன்பேர்சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே
(மருந்தாகும்.) மருந்தாகுமென்று, வஞ்சகையாய்த் தோற்றிற் – றுச்சொல்லக் கடவளாயிருப்பாளொரு கட்டுவிச்சி சொற்கொண்டு நீர் கருஞ்சோறும் மற்றைச்செஞ்சோறும் களனிழைத்து என்ன ப்ரயோஜநமுண்டு? ஒருங்காகவே உலகேழும் விழுங்கியுமிழ்ந்திட்ட பெருந்தேவனுடைய திருநாமத்தைச் சொல்லில் இவளைப் பெறலாம் என்கிறாள். 4-6-4.
ஐந்தாம் பாட்டு
இவளைப்பெறும்பரிசுஇவ்வணங்காடுதலன்றந்தோ
குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும்பயந்தனள்
கவளக்கடாக்களிறட்டபிரான் திருநாமத்தால்
தவளப்பொடிக்கொண்டுநீர் இட்டிடுமின்தணியுமே.
(இவளை.) க்ஷுத்3ர தை3வாவிஷ்டராய் நின்று நீர் அணங்காடுகிற இது இவளைப்பெருகைக்கு உபாயமன்று. இவள் குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்; ஆனபின்பு, ஈண்டு, கவளக்கடாக்களிறட்ட பிரான் திருநாமத்தைச் சொல்லிப் பரிசுத்த4மான பொடியைக்கொண்டு நீங்கள் இடுங்கோள்; இடவே இவள்நோய் தணியும் என்கிறாள். 4-6-5.
ஆறாம் பாட்டு
தணியும்பொழுதில்லை நீரணங்காடுதிர்அன்னைமீர்
பிணியும்ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்
மணியினணிநிறமாயன்தமரடிநீறுகொண்டு
அணியமுயலின் மற்றில்லைகண்டீர்இத்வணங்குக்கே.
(தணியும்.) தவளப்பொடியாகிறது இன்னதென்கிறது. நீர் அணங்காடுகிற இத்தால் ஒரு க்ஷணமாத்ரம் இவளுக்கு ஒரு ஸுக2லேஶமும் பிறக்கிறதில்லை. அதுவேயோ? பிணியும் ஒழிகின்றதில்லை, பெருகுகிற இத்தனையல்லது. ஆனபின்பு, மணியின் அணிநிறமாயன்தமரடிநீறுகொண்டு அணிய முயலுமித்தனையல்லது மற்று இவளுக்கு ஒரு பரிஹாரமும் இல்லை என்கிறாள். 4-6-6.
ஏழாம் பாட்டு
அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்கள்ளும்பராய்ச்
சுணங்கையெறிந்து நும்தோள்குலைக்கப்படும்அன்னைமீர்!
உணங்கல்கெடக் கழுதையுதடாட்டம்கண்டுஎன்பயன்?
வணங்கீர்கள்மாயப்பிரான்தமர் வேதம்வல்லாரையே.
(அணங்குகும்.) இவள் தளராநிற்க, இவளுக்கு அருமருந்தென்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்ச் சில அஸ்ங்க3தங்களைப் பண்ணினால் உங்களுக்கு என்ன ப்ரயோஜந -முண்டு? ஆனபின்பு, இவளுடைய நோயெல்லாம் தீரும்படி வேத3வித4க்ரேஸரரான ஸ்ரீவைஷ்ணவர்களைச் சென்று ஆஶ்ரயி -யுங்கோள் என்கிறாள். 4-6-7.
எட்டாம் பாட்டு
வேதம்வல்லார்களைக்கொண்டு விண்ணோர்பெருமான்திருப்
பாதம்பணிந்து இவள்நோயிது தீர்த்துக்கொள்ளாதுபோய்
ஏதம்பறைந்துஅல்லசெய்து கள்ளூடுகலாய்த்தூய்க்
கீதமுழவிட்டு நீரணங்காடுதல்கீழ்மையே.
(வேதம்.) ஸ்ரீவைஷ்ணவர்களை ஆஶ்ரயித்தல், ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக்கொண்டு எம்பெருமானை ஆஶ்ரயித்தல் செய்து இவள் நோயிது தீர்த்துக்கொள்ளாது போய் அவாச்யங்களைச்சொல்லி அக்ருத்யங்களைச்செய்து கள்ளூடுகலாய்த் தூய்க் கீதமுழவிட்டு நீர் அணங்காடும் இது சாலத்தண்ணியது என்கிறாள். 4-6-8.
ஒன்பதாம் பாட்டு
கீழ்மையினால்அங்கு ஓர்கீழ்மகனிட்டமுழவின்கீழ்
நாழ்மைபலசொல்லி நீரணங்காடும்பொய்காண்கிலேன்
ஏழ்மைப்பிறப்புக்கும்சேமம் இந்நோய்க்கும்ஈதேமருந்து
ஊழ்மையில்கண்ணபிரான் கழல்வாழ்த்துமின்உன்னித்தே
(கீழ்மையினால்.) கீழ்மையினால் அங்கோர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் நாழ்மை பலசொல்லி நீ அணங்காடும் இந்த வ்யர்த்த2 ப்ரவ்ருத்திகளால் ஒரு ப்ரயோஜநமுங் காண்கிறிலேன். இனி மெய்யாகப் பார்க்கில், எற்றைக்கும் இவளுக்கு ரக்ஷை; இந்நோய்க்கும் இதுவே மருந்து, இத்தை நீங்கள் நிரூபித்துச் செய்யுங்கோள். அது ஏதென்னில், – கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் என்கிறாள். 4-6-9.
பத்தாம் பாட்டு
உன்னித்துமற்றொருதெய்வம்தொழாள் அவனையல்லால்
நும்மிச்சைசொல்லி நும்தோள்குலைக்கப்படும்அன்னைமீர்!
மன்னப்படுமறைவாணனை வண்துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும்தொழுதாடுமே.
(உன்னித்து.) இவளுக்கு அவனையல்லது மற்றொரு தை3வத்தைத் தொழுகை அஸம்பா4விதமானாற்போலே, மற்றொரு தை3வத்தை ஸ்வப்நத்திலுங்கூட நினைக்கை அஸம்பா4விதம். இப்படி தே3வதாந்தர ஸம்பந்த3 கந்த4மின்றியே யிருந்த இவளுடைய நோய் தீர்க்கைக்கு, வேத3பா3ஹ்யமான க்ஷுத்3ர தை3வத்தை வ்யர்த்த2மாய் விரோதி4யுமாயிருந்த வேத3 ப3ஹிர்ப்பூ4த மார்க்கத்தாலே தொழுது து3:க2ப்படாதே, ஸாங்க ஸகலவேத3 வேத்3யனாய் ஆஶ்ரிதவாத்ஸல்யாத்யநவதி4க கல்யாணகு3ணகண் மஹோத3தி4யாயிருந்த வண்துவராபதி மன்னனை ஏத்துங்கோள்; ஏத்தவே உஜ்ஜீவிக்கும் என்கிறாள். 4-6-10.
பதினொன்றாம் பாட்டு
தொழுதாடித்தூமணிவண்ணனுக்கு ஆட்செய்துநோய்தீர்ந்த
வழுவாததொல்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல்
வழுவாதஆயிரத்துள் இவைபத்துவெறிகளும்
தொழுதாடிப்பாடவல்லார் துக்கசீலமிலர்களே.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
(தொழுதாடி.) ‘வண்துவராபதிமன்னன்’ என்கிற இந்த ம்ருதஸஞ்ஜீவநமான திருநாமத்தைக்கொண்டு ஜீவித்து நோய் தீர்ந்து தொழுது ஆடிப்படித் தூமணிவண்ணனுக்கு ஆட்செய்த வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் வழுவாத ஆயிரத்துள் தே3வதாந்தர ப4ஜந நிவ்ருத்தி பரமான இவைபத்தும் தொழுதாடிப்பாடவல்லார் து3க்க2சீலமிலர்கள் என்கிறார். 4-6-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 4-7
சீலமில்லா – ப்ரவேஶம்
(சீலமில்லா.) பரமபுருஷ விஶ்லேஷ ஜநித நிரவதி4க வ்யஸநத்தாலே மோஹ ஶாபந்நரான ஆழ்வார், அம்ருத கல்பமான ததீ3ய தி3வ்ய நாமங்க3ளினுடைய ஶ்ரவணத்தாலே லப்3த4 ஸம்ஜ்ஞராய், அந்த விஶ்லேஷ வ்யஸநம் அஸஹமாநராய் “காணவாராய்” என்று எம்பெருமானைக் கூப்பிட்டு அழைக்கிறார்.
முதல் பாட்டு
சீலமில்லாச்சிறியனேலும் செய்வினையோபெரிதால்
ஞாலமுண்டாய் ஞானமூர்த்தீ! நாராயணா! என்றென்று
காலந்தோறும்யானிருந்து கைதலைபூசலிட்டால்
கோலமேனிகாணவாராய் கூவியும்கொள்ளாயே.
ஆர்த்தருடைய ஆர்த்த்யைப் போ4க்ததாயல்லை, ஆர்த்தியை அறியாதாயல்லை, ஆர்த்தியைப் போக்கமாட்டாதாயல்லை யென்றென்று காலந்தோறும் நான் இருந்து உன்னைத்தொழுது இரந்தால் கோலமேனி காண வருகிறிலை; உன்பாடே என்னைக் கூவியும் கொள்ளுகிறிலை; இப்படி உன் க்ருபைக்கு விஷயமல்லாதபடி என்னை அகற்றின இந்த மஹாபாபத்துக்கெல்லாம் கீடாதி3களிலும் அதிக்ஷுத்3ரனான நான் ஆஶ்ரயமானபடி எங்ஙனேயோ? என்கிறார். 4-7-1.
இரண்டாம் பாட்டு
கொள்ளமாளாஇன்பவெள்ளம் கோதிலதந்திடும் என்
வள்ளலேயோ! வையங்கொண்டவாமனாவோ! என்றென்று
நள்ளிராவும்நன்பகலும் நானிருந்தோலமிட்டால்
கள்ளமாயா! உன்னை என்கண்காணவந்து ஈயாயே.
(கொள்ளமாளா.) இதரவிஷய வைராக்3ய பூர்வகமாக ஸகலேதர வைத்ருஷ்ண்யாவஹமான த்வத் கு3ணாநுப4வ ஜநித நிரவதி4காநந்த3 மஹௌக4த்தை எனக்குத் தந்தருளின என்னுடைய பரமோதா3ரனே! உன்னுடைய தா4த்ருத்வ லக்ஷண ஸ்வரூபத்தை அந்யதா2கரித்துக்கொண்டும் ஆஶ்ரிதருடைய அபேக்ஷிதத்தைச் செய்தருளாநிற்கும் ஆஶ்ரித வத்ஸலனேயோ! என்று என்று, த்வத் ஸம்ஶ்லேஷத்தாலே போக்கக்கடவ அழகிய காலமெல்லாம் நான் இருந்து ஓலமிட்டால் என்கண்களுக்கு உன்னைக் காட்டா தொழிகிறவனே! ஈண்டென வந்து என் கண்களுக்கு உன்னைக் காட்டித்தந்தருளாய் என்கிறார். 4-7-2.
மூன்றாம் பாட்டு
ஈவிலாததீவினைகள் எத்தனைசெய்தனன்கொல்?
தாவிவையங்கொண்டஎந்தாய்! தாமோதரா! என்றென்று
கூவிக்கூவிநெஞ்சுருகிக் கண்பனிசோரநின்றால்
பாவிநீயென்றொன்றுசொல்லாய் பாவியேன்காணவந்தே.
(ஈவிலாத.) மநுஷ்யாதி3ரூபேண அபர்யந்த தி3வ்யாவதாரங் -க3ளைப்பண்ணி ஆஶ்ரித பரித்ராணம் பண்ணுமவனே! என்றென்று கூவிக்கூவி நெஞ்சுருகிக் கண்பனிசோர நின்றால், உன்னைக்காண் – கைக்கு பா4க்3யம் பண்ணிற்றிலேனாகில், நான் நிராஶனா -யிருக்கும் படியாக, என்கண்ணெதிரே வந்து, ‘நீஎன்னைக் காண்கைக்கு பா4க்3யம் பண்ணிற்றிலைகானென்று சொல்லாய் பிரானே!’ என்று சொல்லி, பின்னையும் எம்பெருமான் ஒன்றுஞ் சொல்லாமையாலே ‘இப்படி எம்பெருமான் என்னை உபேக்ஷிக் -கைக்கு ஓரொன்றே காலதத்த்வமெல்லாம் அநுப4வித்தாலும் மாளாத பாபங்கள் எத்தனையாயிரம் செய்தேனோ?’ என்கிறார். 4-7-3
நான்காம் பாட்டு
காணவந்துஎன்கண்முகப்பே தாமரைக்கண்பிறழ
ஆணிசெம்பொன்மேனியெந்தாய்! நின்றருளாயென்றென்று
நாணமில்லாச்சிறுதகையேன் நானிங்கலற்றுவதென்?
பேணிவானோர்காணமாட்டாப் பீடுடையப்பனையே.
(காணவந்து.) ப்3ரஹமாதி3களுங்கூட ஆசைப்பட்டுக் காணமாட்டாதிருக்கிற பீடுடையப்பனை, ஆணி செம்பொன்மேனி யெந்தாய்! காணவந்து என் கண்முகப்பே தாமரைக்கண் திகழ நின்றருளா யென்றென்று, அதிக்ஷுத்3ரனான நான் இங்கே கிடந்து அலற்றுகிறதென் – என்ன நிர்லஜ்ஜனோ? என்கிறார்.4-7-4.
ஐந்தாம் பாட்டு
அப்பனே அடலாழியானே ஆழ்கடலைக்கடைந்த
துப்பனேஉன்தோள்கள்நான்கும் கண்டிடக்கூடுங்கொலென்று
எப்பொழுதும்கண்ணநீர்கொண்டு ஆவிதுவர்ந்துதுவர்ந்து
இப்பொழுதேவந்திடாயென்று ஏழையேன்நோக்குவனே.
(அப்பனே.) இப்படி ப்3ரஹ்மாதி3களுக்குங்கூட து3ர்த்த3ர்ஶ -னாயிருக்கச் செய்தே உன்னையே ‘அப்பனே! ஆஶ்ரித விரோதி4 நிரஸந ஸமர்த்த4மான திருவாழியை யுடையவனே! ஆஶ்ரித ஸமீஹித நிர்வர்த்த4ந ஶீலனே! உன் தோள்கள் நான்கும் கண்டிடக் – கூடுங்கொல்?’ என்று எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து, இப்பொழுதே வந்திடாயென்று அபேக்ஷித்து உன் வரவு பார்த்திருப்பன்; என்ன சபலனோ? என்கிறார். 4-7-5.
ஆறாம் பாட்டு
நோக்கிநோக்கிஉன்னைக்காண்பான் யானெனதாவியுள்ளே
நாக்குநீள்வன்ஞானமில்லை நாள்தோறும்என்னுடைய
ஆக்கையுள்ளும்ஆவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும்
நீக்கமின்றிஎங்கும்நின்றாய் நின்னையறிந்தறிந்தே.
(நோக்கி.) என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் ஸந்நிஹிதனாய் நின்று வைத்து உன்னை எனக்குக் காட்டாதொழிகிறது உன்னைக்காட்ட நினையாமை யென்னுமிடம் அறிந்து வைத்து, பின்னையும் நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் நான் என்னுள்ளே ஆசைப்படா -நிற்பன்; என்ன அஜ்ஞனோ? என்கிறார். 4-7-6.
ஏழாம் பாட்டு
அறிந்தறிந்துதேறித்தேறி யான்எனதாவியுள்ளே
நிறைந்தஞானமூர்த்தியாயை நின்மலமாகவைத்துப்
பிறந்தும்செத்தும் நின்றிடறும் பேதைமைதீர்ந்தொழிந்தேன்
நறுந்துழாயின்கண்ணியம்மா! நானுன்னைக்கண்டுகொண்டே.
(அறிந்தறிந்து.) ஜந்ம ஜராமரணாதி3 ஸாம்ஸாரிக து3:க2ம் அபி4பவிக்கிற தென்னும் ப4யத்தாலே கூப்பிடுகிறீரோ? என் தான் இப்படி ஆர்த்த2ராய்க்கிடந்து நீர்கூப்பிடுகிறது? என்னில், – ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்யாதி3 கு3ணங்களாலும் ஸௌந்த3ர்ய ஸௌக3ந்த்4ய ஸௌகுமார்யாதி3 கல்யாண கு3ணங்களாலும் பர்பூர்ணனான உன் திறத்திலுள்ள விஶத3 விஶத3தர விஶத3தம ப்ரத்யக்ஷதாபந்ந நிரதிஶய ப4க்திரூப ஜ்ஞாநத்தாலே, என்னுடைய அந்த ஸாம்ஸாரிக து3:க2மெல்லாம் நிரஸ்தமாயிற்றிறே; அதுக்கன்று நான் இப்போது படுகிறது என்கிறார். 4-7-7.
எட்டாம் பாட்டு
கண்டுகொண்டென்கைகளார நின்திருப்பாதங்கள்மேல்
எண்டிசையுமுள்ளபூக்கொண்டு ஏத்தியுகந்துகந்து
தொண்டரோங்கள்பாடியாடச் சூழ்கடல்ஞாலத்துள்ளே
வண்டுழாயின்கண்ணிவேந்தே! வந்திடகில்லாயே.
(கண்டுகொண்டு.) உம்முடைய ஸாம்ஸாரிக து3:க2மெல்லாம் போயிற்றாகில், மற்று எதுக்காகக் கூப்பிடுகிறது? என்னில்; – உன்னை என்கண்களாலே கண்டுகொண்டு என் கைகளார நின் திருப்பாதங்கள்மேல் எண்திசையுமுள்ள பூக்கொண்டு ஏத்தி உகந்துகந்து ஸ்ரீவைஷ்ண்வர்களோடே கூட நின்று பாடியாடவேணு மென்று ஆசைப்பட்டிறே கூப்பிடுகிறது; வண்துழாயின் கண்ணிவேந்தே! நான் இப்படி படாநிற்கச்செய்தே வந்தறுளுகிறிலை என்று எம்பெருமானை இன்னாதாகிறார். 4-7-8.
ஒன்பதாம் பாட்டு
இடகிலேனொன்றட்டகில்லேன் ஐம்புலன்வெல்லகில்லேன்
கடவனாகிக்காலந்தோறும் பூப்பறித்தேத்தகில்லேன்
மடவன்னெஞ்சங்காதல்கூர வல்வினையேன்அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்எங்குக்காண்பன் சக்கரத்தண்ணலையே?
(இடகிலேன்.) எம்பெருமானைக் காண்கைக்கு உபாயத்வேந பரிக்லுப்தமான கர்மயோக3 ஜ்ஞாநயோக3 ப4க்தியோக3ங்க3 ளொன்றும் எனக்கு இன்றியேயிருக்கச்செய்தே, ப4க3வத்3 கு3ணங்க3ளிலே விழும் ஸ்வபா4வமாய் விழுந்தால் எம்பெருமான் தன்னாலும் எடுக்கவொண்ணாத வண்மையை யுடைத்தாயிருந்த என்நெஞ்சம் காதல்கூர, அதினாலே அறிவழிந்து தடவாநின்றேன்; எங்ஙனே காணும்படி? என்கிறார். 4-7-9.
பத்தாம் பாட்டு
சக்கரத்தண்ணலேயென்று தாழ்ந்துகண்ணீர்ததும்ப
பக்கம்நோக்கிநின்றலந்தேன் பாவியேன்காண்கின்றிலேன்
மிக்கஞானமூர்த்தியாய வேதவிளக்கினை என்
தக்கஞானக்கண்களாலே கண்டுதழுவுவனே.
(சக்கரத்தண்ணல்.) சக்கரத்தண்ணலே யென்று தாழ்ந்து கண்ணீர்ததும்பப் பக்கம் நோக்கிநின்று சாலத் தள்ர்ந்தேன்; பாவியேன் காணப்பெறுகிறிலேன்; ஸர்வஜ்ஞனாய் ஸகல வேத3வேத்3யனாயிருந்த எம்பெருமானை, எனக்குத் தக்க சில ஞானக்கண்களாலே கண்டு தழுவுவன்; நான் எங்ஙனே த4ரிக்கும்படி? என்கிறார். 4-7-10.
பதினொன்றாம் பாட்டு
தழுவிநின்றகாதல்தன்னால் தாமரைக்கண்ணன்தன்னைக்
குழுவுமாடத்தென்குருகூர் மாறன் சடகோபன்சொல்
வழுவிலாத ஓண்தமிழ்கள் ஆயிரத்துளிப்பத்தும்
தழுவப்பாடியாடவல்லார் வைகுந்தமேறுவரே.
(தழுவிநின்ற.) ‘முடிவேன்’என்றாலும் முடியவொட்டாதிருந்த காதலாலே சொன்ன இத்திருவாய்மொழியை இப்பா4வயுக்தமாகப் பாடி ஆடவல்லார் வைகுந்தமேறுவர் என்கிறார். 4-7-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 4-8
ஏறாளும் – ப்ரவேஶம்
(ஏறாளும்.) இப்படி எம்பெருமானை விஶ்லேஷித்து அத்யந்தம் அவஸந்நராய்க் கிடந்து தாம் கூப்பிடா நிற்கச்செய்தேயும் அவன் எழுந்தருளாமையாலே தம்மை உபேக்ஷித்தானாக நிஶ்சயித்து, ‘இனி அவனால் உபேக்ஷிதமான ஆத்மாத்மீயங்களால் ஒரு ப்ரயோஜநமில்லை; இவை முடிந்துபோக அமையும்’ என்றுகொண்டு அந்யாபதே3ஶத்தாலே அருளிச்செய்கிறார்.
முதல் பாட்டு
ஏறாளுமிறையோனும் திசைமுகனும்திருமகளும்
கூறாளுந்தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை
நீறாகும்படியாக நிருமித்துப்படைதொட்ட
மாறாளன்கவராத மணிமாமைகுறைவிலமே.
நிரவதி4கஸௌஶீல்ய ஆஶ்ரித விரோதி4நிரஸந ஸாமர்த்ர்த்2 -யாதி3 கல்யாணகு3ண மஹோத3தி4யாயிருந்த எம்பெருமான் விரும்பாத என்னுடைய மணிமாமையால் எனக்கு ஓரபேக்ஷையு -மில்லை; இது முடிந்துபோக அமையும் என்கிறாள். 4-8-1.
இரண்டாம் பாட்டு
மணிமாமைகுறைவில்லா மலர்மாதருறைமார்பன்
அணிமானத்தடவரைத்தோள் அடலாழித்தடக்கையன்
பணிமானம்பிழையாமே அடியேனைப்பணிகொண்ட
மணிமாயன்கவராத மடநெஞ்சால்குறைவிலமே.
(மணிமாமை.) நிரதிஶய ஸௌந்த3ர்ய நிதி4யான திருத்தோள்களையுடையனாய் ஶங்க2சக்ராதி3 தி3வ்யாயுத4 பூ4ஷிதனாயிருந்த எம்பெருமான் பெரியபிராட்டியாரோடு கலந்தருளுமாபோலே என்னோடு பண்டு கலந்தருளினான்; அப்படியே எனக்கு ஸுலப4னாயிருந்தவன் கவராத மடநெஞ்சால் குறைவிலம் என்கிறாள். 4-8-2.
மூன்றாம் பாட்டு
மடநெஞ்சால்குறைவில்லா மகள்தாய்செய்தொருபேய்ச்சி
விடநஞ்சமுலைசுவைத்த மிகுஞானச்சிறுகுழவி
படநாகத்தணைக்கிடந்த பருவரைத்தோட்பரம்புருடன்
நெடுமாயன்கவராத நிறைவினாற்குறைவிலமே.
(மடநெஞ்சால்.) நாக3பர்யங்கஶாயியாய், தத் ஸமஸ்பர்ஶ நிரவதி4க ஸுக2த்தாலே வளர்ந்த திருத்தோள்களையுடையனாய், புருஷோத்தமனாய், திருத்தாயாரான யஶோதைப்பிராட்டி நெஞ்சும் வடிவும்போலே தன்னுடைய நெஞ்சையும் வடிவையும் அநுகூலமாக – ப்பண்ணிக்கொண்டு வந்த பேய்ச்சி முடியும்படி நஞ்சமுலை சுவைத்த மிகுஞானச்சிறுகுழவியா யிருந்த நெடுமாயன் கவராத நிறைவினால் குறைவிலம் என்கிறாள். 4-8-3.
நான்காம் பாட்டு
நிறைவினாற்குறைவில்லா நெடும்பணைத்தோள்மடப்பின்னை
பொறையினான்முலையணைவான் பொருவிடையேழடர்த்துகந்த
கறையினார்துவருடுக்கைக் கடையாவின்கழிகோற்கைச்
சறையினார்கவராத தளிர்நிறத்தாற்குறைவிலமே.
(நிறைவினால்.) ஆத்மகு3ணங்களாலும் ரூபகு3ணங்களாலும் பூர்ணையாய் கோ3ப வம்ஶோத்3ப4வையாயிருந்த நப்பின்னைப் -பிராட்டியோடே ஸம்ஶ்லேஷிக்கைக்காக அந்த கோ3ப குலோசித -மான வேஷத்தாலே பூ4ஷிதனாய், தத்ஸம்ஶ்லேஷோபாயமான வ்ருஷப4 ஸப்தக நிரஸநத்துக்கு அநுகு3ண ஸாமர்த்யத்தை யுடையனாய் அவற்றை நிரஶித்து ப்ரஹ்ருஷ்டனானவன் கவராத தளிர்நிறத்தால் குறைவிலம் என்கிறாள். 4-8-4.
ஐந்தாம் பாட்டு
தளிர்நிறத்தாற்குறைவில்லாத் தனிச்சிறையில்விளப்புற்ற
கிளிமொழியாள்காரணமாக் கிளரரக்கன்நகரெரித்த
களிமலர்த்துழாயலங்கல்கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான்கவராத அறிவினாற்குறைவிலமே.
(தளிர்நிறத்தால்.) அபரிமித ஸௌந்த3ர்ய மஹோத3தி4யாய் கலபாஷிணியாயிருந்த பிராட்டி அஶோகவநிகையிலே எழுந்தருளி யிருந்தமை திருவடி விண்ணப்பஞ்செய்யக் கேட்டருளி, அப்போதே ஸம்ஶ்லேஷ விரோதி4யான ராவணனை ஸபுத்ரஜந பா3ந்த4வ நகர மாக ஶராக்3நியாலே த3க்3த்4யமாக்கிப் பிராட்டியோடேகூட எழுந்தருளியிருந்து லோகத்தை ரக்ஷித்து, பின்னைத் திருமஞ்சந -மாடியருளி நிரதிஶய ஸுக3ந்த4 தி3வ்யமால்யாநுலேபநாலங்க்ருத – னாய் தி3வ்யபூ4ஷண பூ4ஷிதனா யிருந்தவன் கவராத அறிவினால் குறைவிலம் என்கிறாள். 4-8-5.
ஆறாம் பாட்டு
அறிவினாற்குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய
நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி
குறியமாணுருவாகிக் கொடுங்கோளால்நிலங்கொண்ட
கிறியம்மான்கவராத கிளரொளியாற்குறைவிலமே.
(அறிவினால்.) ஸ்வவிஷய ஜிஜ்ஞாஸையுங்கூட இல்லாத ஆத்மாக்களெல்லாரும் அறியும்படி ஸ்வப்ராப்த்யுபாயங்களெல்லா -வற்றையும் தத்த3ததி4காராநுகு3ணமாக எடுத்துரைத்த நிறைஞானத்தொரு மூர்த்தியாய், இப்படி உபாயாநுஷ்டா2நத்தாலே வரும் விளம்பம் பொறுக்க மாட்டாமை ப்ரதிகூலாநுகூலவிபா4க3 மின்றியே ஸர்வாத்மாக்களுக்கும் ‘காண்மின்களுலகீர்’ என்று தன்னைக்காட்டிக்கொடுத்தருளினவன் கவராத கிளரொளியால் குறைவிலம் என்கிறாள். 4-8-6.
ஏழாம் பாட்டு
கிளரொளியாற்குறைவில்லா அரியுருவாய்க்கிளர்ந்தெழுந்து
கிளரொளியவிரணியனது அகல்மார்பங்கிழித்துகந்த
வளரொளியகனலாழி வலம்புரியன்மணிநீல
வளரொளியான்கவராத வரிவளையாற்குறைவிலமே.
(கிளர்.) ஹிரண்ய விஷய நிரவதி4கரோஷத்தாலே அத்யந்தம் அநபி4ப4வநீயமாய் அதிது3ஸ்ஸஹமாய் யுக3பது3தி3த தி3நக3ர ஶதஸஹஸ்ர தேஜஸ்ஸத்3ருஶமாயிருந்த தேஜஸ்ஸை யுடைய -தொரு அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து, அதிப3ல பராக்ரமனான ஹிரண்யனைத் தன் திருவுகிராலே பிளந்தருளி ப்ரஹ்ருஷ்டனாய், நிஹத ஹிரண்யனாகையாலே ப்ரஶாந்த அஶேஷ ரோஷனாய், அதினாலே அதிசீதள ஸர்வாநுகூல நிரவதி4க தேஜோ விஶிஷ்டனாய், திருவுகிர்களாலே முந்துறவே ஹிரண்ய வக்ஷ -ஸ்த2லம் விதாரிதமாகையாலே தத3ர்த்த2மான ஸ்வோத்யோக3ம் நிர்விஷயமாதலால் அதிப்ரவ்ருத்த ரோஷாந்வித ஶங்க2 சக்ராதி3 தி3வ்யாயுதோ4பேதனாயிருந்தவன் கவராத வரிவளையால் குறைவிலம் என்கிறாள். 4-8-7.
எட்டாம் பாட்டு
வரிவளையாற்குறைவில்லாப் பெருமுழக்காலடங்காரை
எரியழலம்புகவூதி இருநிலமுன்துயர்தவிர்த்த
தெரிவரியசிவன்பிரமன் அமரர்கோன்பணிந்தேத்தும்
விரிபுகழான்கவராத மேகலையாற்குறைவிலமே.
(வரிவளையால்.) து3ர்யோத4நாதி3களுடைய ஹ்ருத3யத்திலே காலாக்3நி புகும்படியாக அதிக3ம்பீ4ரமான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை மடுத்தூதி இருநில முன்துயர் தவிர்த்து, ப்ரஹ்மேஶாநாதி3 ஸர்வ தே3வைஸ் ஸமஸ்தூயமாந விஜயஸ்ரீ கனாய்க்கொண்டு நின்றவன் கவராத மேகலையால் குறைவிலம் என்கிறாள். 4-8-8.
ஒன்பதாம் பாட்டு
மேகலையாற்குறைவில்லா மெலிவுற்றவகலல்குல்
போகமகள்புகழ்த்தந்தை விறல்வாணன்புயந்துணித்து
நாகமிசைத்துயில்வான்போல் உலகெல்லாம்நன்கொடுங்க
யோகணைவான்கவராத உடம்பினாற்குறைவிலமே.
(மேகலையால்.) ஸ்வாஶ்ரித ஸமீஹிதப4ஞ்ஜகனான பா3ணனுடைய தோள்களைத் துணித்துப் பின்னை நிர்ப்ப4யனாய், ஸர்வலோகமும் தன்னுடைய ஸங்கல்பத்தினுள்ளே செல்லும்படி செலுத்திக்கொண்டு நாக3பர்யங்கத்திலே ஸ்வாத்மாநுப4வரூப யோக3நித்3ரை பண்ணுகிறவன் கவராத உடம்பினால் குறைவிலம் என்கிறாள். 4-8-9.
பத்தாம் பாட்டு
உடம்பினாற்குறைவில்லா உயிர்பிரிந்தமலைத்துண்டம்
கிடந்தனபோல்துணிபலவா அசுரர்குழாந்துணித்துகந்த
தடம்புனலசடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையும்
உடம்புடையான்கவராத உயிரினாற்குறைவிலமே.
(உடம்பினால்.) ஸுத3ர்ஶந ஶகலீக்ருதகாலநேமி ப்ரப்3ருத் -யஸுரநிகரனாய், ஆஶ்ரிதக3தமான உத்கர்ஷ நிகர்ஷம் பாராதே எல்லாரோடுமொக்க ஸம்ஶ்லேஷிக்கும் ஸ்வபா4வனாயிருந்த எம்பெருமானுடைய ஸௌந்த்3ர்ய ஸௌஶீல்யாதி3 கு3ணங்க3ளாலும், அதிதை3வ அதிமாநுஷமான தி3வ்யசேஷ்டி -தங்களாலும் என்னோடே கலந்த கலவியாலும் உபஸ்க்ருதமாகாத என்னுடைய ஆத்மாவும் வேண்டா, இது முடிந்துபோக அமையும் என்கிறாள். 4-8-10.
பதினொன்றாம் பாட்டு
உயிரினாற்குறைவில்லா உலகேழ்தன்னுள்ளொடுக்கித்
தயிர்வெண்ணெயுண்டானைத் தடங்குருகூர்ச்சடகோபன்
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால்
வயிரஞ்சேர்பிறப்பறுத்து வைகுந்தம்நண்ணுவரே.
(உயிரினால்.) தே3வாதி3 ஸ்த்தா2வராந்த ஸகலபூ4தஜாத பரிபூர்ண ஸர்வலோக பாலகனாயிருந்துவைத்து மநுஷ்யாதி3 ரூபேண அவதீர்ணனாய்க்கொண்டு ஆஶ்ரித ஸுலப4னாயிருந்த எம்பெருமானைச் சொன்ன நிரவத்3யமான இத்திருவாய்மொழி வல்லார், நிரஸ்த ஸமஸ்த ப்ரதிப3ந்த4கராய் வைகுந்தம் நண்ணுவர் என்கிறார். 4-8-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 4-9
நண்ணாதார் – ப்ரவேஶம்
(நண்ணாதார்.) இப்படி பரமபுருஷ விஶ்லேஷ ஜநித ஶோகாக்3நி -யாலே த3ஹ்யமாநராயிருக்கச்செய்தே, அதின் மேலே, ப4க3வத்3 ஸம்ஶ்லேஷ விஶ்லேஷைக ஸுக2து3:க2 த்வரஹிதராய், சேதநாதே – நாத்மக ஸமஸ்த வஸ்துநேத்ரு ப3க3வச்சேஷதைகரதித்வ ஜ்ஞாந ரஹிதராய், ப4க3வத்3 வ்யதிரிக்த ப்ராக்ருத விஷயலாபா4லாபை4க ஸுக2து3:க2ராயிருந்த அவைஷ்ணவர்களோடு உள்ள ஸஹவாஸ மாகிற மஹாக்3நியாலே த3ஹ்யமாநரான ஆழ்வார், ‘இந்த அவைஷ்ணவ ஸஹவாஸத்தைக் காட்டிலும் முடிகையே நன்று; ஆன்பின்பு, அடியேனை முடித்தருளவேணும்’ என்று எம்பெருமானை அபேக்ஷிக்கிறார்.
முதல் பாட்டு
நண்ணாதார்முறுவலிப்ப நல்லுற்றார்கரைந்தேங்க
எண்ணாராத்துயர்விளைக்கும் இவையென்னவுலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கேவரும்பரிசு?
தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய்சாமாறே.
’க்ருஹ க்ஷேத்ர த4நாதி3 விஷய ஸ்ப்ருஹையாலே தத3பஹரனாத்3யநிஷ்ட2ங்களைப்பண்ண ப்ரதிகூலர் உகக்கவும், அநுகூலர் இன்னாதகவும், பிறர்க்கு து3:க2ங்களையே விளைத்து அந்யபரமாய், எம்பெருமான் திறத்துப் படக்கடவதன்றியே யிருந்த இந்த லோகப்ரஸ்தா2நம் இருந்தபடி யென்! இந்த லோகத்தோடு எனக்கு இருப்பு அரிது; ஆனபின்பு, ஆஶ்ரித ஸமீஹித நிர்வர்த்தநைக ஸ்வபா4வமாய் அபரிமிதகாருண்ய பரிபூர்ண்மாய் அதிசீதளமான உன்னுடைய திருக்கண்களாலே என்னைக் குளிரப்பார்த்தருளி, இவர்கள் நடுவில்நின்றும் உன் திருவடிக்ளிலே என்னை வாங்கியருளுதல், அன்றியே ஈண்டென என்னை முடித்தருளுதல் செய்யவேணும்’ என்று அபேக்ஷிக்கிறார். 4-9-1.
இரண்டாம் பாட்டு
சாமாறும்கெடுமாறும் தமருற்றார்தலைத்தலைப்பெய்து
ஏமாறிக்கிடந்தலற்றும் இவையென்னவுலகியற்கை?
ஆமாறொன்றறியேன் நான்அரவணையாய்அம்மானே!
கூமாறேவிரைகண்டாய் அடியேனைக்குறிக்கொண்டே.
(சாமாறும்.) “உன்னைக் காணப்பெறுகிறிலோம்” என்று அலற்றாதெ, புத்ராதி3 மரண விநாஶங்கள் காரணமாகத் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து ஏங்கிக்கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை? நானும் இங்கே லௌகிகரைப்போலேயாகில் செய்வதென்? ஆஶ்ரித ஸம்ஶ்லேஷைகபோ4க3நே! பிரானே! ‘நம் அடியான் இவன்’ என்று அடியேனை உன் திருவுண்ணத்திலே கொண்டு ஈண்டென என்னை திருவடிகளிலே வாங்கியருளவேணும் என்கிறார். 4-9-2
மூன்றாம் பாட்டு
கொண்டாட்டும்குலம்புனைவும் தமருற்றார்விழுநிதியும்
வண்டார்பூங்குழலாளும் மனையொழியவுயிர்மாய்தல்
கண்டாற்றேனுலகியற்கை கடல்வண்ணா! அடியேனைப்
பண்டேபோற்கருதாது உன்னடிக்கேகூய்ப்பணிகொள்ளே.
(கொண்டாட்டும்.) மரணதஶையிலும் “ஸம்பா4வநாபி4ஜநஜ் – ஞாதி3 பந்து4 த4ந களத்ர ப4வநாதி3களை யிழந்தோம்” என்று விஷண்ணராய், உன் திறத்துப் படாதே யிருக்கிற இந்த லோகத்தாருடைய ப்ரக்ருதியைக் கண்டு நான் படுகிற வ்யஸநம், உன்னைப்பிரிந்து நான் பண்டுபட்ட வ்யஸந்ம் போலன்று; அதிது3ஸ் – ஸஹங்கிடாய். அபரிச்சே2த்3ய மாஹாத்ம்யனானவனே! இந்த வ்யஸநத்தில் நின்றும் ஈண்ட உன் திருவடிகளிலே கூவிப்பணி -கொண்டருளவேணும் என்கிறார். 4-9-3.
நான்காம் பாட்டு
கொள்ளென்றுகிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்நெருப்பாகக்
கொள்ளென்றுதமம்மூடும் இவையென்னவுலகியற்கை?
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கேவரும்பரிசு
வள்ளல்செய்தடியேனை உனதருளால்வாங்காயே.
(கொள்ளென்று.) உன்னை ஆசைப்படாதே, அதிக்ஷுத்3ரமாய் அநர்த்த2கரமாயிருந்த ஐஶ்வர்யத்தை ஸ்வாஜ்ஞதையாலே ஆசைப் – படுகிற இந்த லௌகிகரோடு எனக்குள்ள ஸஹவாஸத்தைத் தவிர்த்து, பரமோதா3ரனே! பரமகாருண்யத் தாலே ஆஶ்ரித ஸுலப4னானவனே! உன்னுடைய பரமௌதா3ர்யத்தாலும் பரமகாருண்யத்தாலும் அடியேனை உனகழற்கே வரும் பரிசு வாங்கியருளவேணும் என்கிறார். 4-9-4.
ஐந்தாம் பாட்டு
வாங்குநீர்மலருலகில் நிற்பனவும்திரிவனவும்
ஆங்குயிர்கள்பிறப்பிறப்புப் பிணிமூப்பால்தகர்ப்புண்ணும்
ஈங்கிதன்மேல்வெந்நரகம் இவையென்னவுலகியற்கை?
வாங்கெனைநீமணிவண்ணா! அடியேனைமறுக்கேலே.
(வாங்கும்.) த்வத்3விஶ்லேஷ து3:க2ரன்றியே, ஜந்ம ஜரா மரணாதி3 வ்யாத்3யாதி3 து3:க2ரான இவ்வாத்மாக்கள் வர்த்திக்கிற இந்த லோகத்தில் நின்றும் அடியேனை மறுகப்பண்ணாதே, ஈண்ட என்னை வாங்கியருளவேணும் என்கிறார். 4-9-5.
ஆறாம் பாட்டு
மறுக்கிவல்வலைப்படுத்திக் குமைத்திட்டுக்கொன்றுண்பர்
அறப்பொருளையறிந்தோரார் இவையென்னவுலகியற்கை?
வெறித்துளவமுடியானே! வினையேனையுனக்கடிமை
யறக்கொண்டாய் இனியென்னாரமுதே! கூயருளாயே.
(மறுக்கி.) என்னுடைய விஶேஷதோ3ஷாஸ்பத3த்வத்தை ஒன்றும் பாராதே உன்னுடைய நிரவதி4க ஸௌந்த3ர்யாவிஷ்காரத் – தாலே என்னை தவ தா3ஸ்ய ஸுகை2க ஸங்கி3யாக்கி யருளினாய்; இனி என்னாரமுதே! நிர்க்4ருணராய் பரஹிம்ஸைக ப்ரவ்ருத்தி3க -ராய் த்வதௌ3ந்முக்2ய லேஶரஹிராயிருந்த இவர்கள் நடுவில் நின்றும் ஈண்ட என்னை வாங்கியருளவேணும் என்கிறார். 4-9-6.
ஏழாம் பாட்டு
ஆயேயிவ்வுலகத்து நிற்பனவுந்திரிவனவும்
நீயேமற்றொருபொருளு மின்றிநீநின்றமையால்
நோயேமூப்பிறப்பிறப்புப் பிணியேயென்றிவையொழியக்
கூயேகொள்ளடியேனைக் கொடுவுலகங்காட்டேலே.
(ஆயே.) த்வதா3த்மகமாகையாலே த்வச்சே2ஷதைகரஸமா யிருக்கச்செய்தே தவச்சே2ஷதைகரஸத்வ ஜ்ஞாநரஹிதமாய் த்வத்3 விஶ்லேஷைக து3:க2த்வ ரஹிதமுமாய் ஜந்மஜரா வ்யாதி3 மரணாதி3 து3:க2முமாயிருந்த இந்தப்பொல்லாத லோகத்தை என்கண்ணால் காணமாட்டுகிறிலேன். இங்கு நின்றும் ஈண்ட அடியேனை வாங்கியருள வேணுமென்கிறார். 4-9-7.
எட்டாம் பாட்டு
காட்டிநீகரந்துமிழும் நிலம்நீர்தீவிசும்புகால்
ஈட்டிநீவைத்தமைத்த இமையோர்வாழ்தனிமுட்டைக்
கோட்டையினிற்கழித்தென்னை உன்கொழுஞ்சோதியுயரத்துக்
கூட்டரியதிருவடிக்கள் எஞ்ஞான்றுகூட்டுதியே?
(காட்டி.) உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி3லீலைக்கு உபகரண பூ4தமாய் த்வத3தி4ஷ்ட்டித ப்ருதி2வ்யாதி3 பஞ்ச பூ4தாரப்த3மாய் ப்ராக்ருத விஷயைகபோ4க3 ப்ரஹ்மாதி3 க்ஷேத்ரஜ்ஞ வர்க்க3 பரிபூர்ணமாயிருந்த அண்டத்தைக் கழித்து, நிரவதி4க தேஜோ மயமாய் ஸத்வகு3ணாத்மகமாய் ப்ரக்ருதே: பரஸ்தாத்வர்த்த4மாந -மான ஸ்ரீவைகுண்ட2த்திலே கொண்டுபோய், ஸ்வயத்ந து3ர்ல்லப4 -மான உன் திருவடிகளிலே என்னை என்று கூட்டுவது? என்கிறார். 4-9-8.
ஒன்பதாம் பாட்டு
கூட்டுதிநின்குரைகழல்கள் இமையோரும்தொழாவகைசெய்து
ஆட்டுதிநீஅரவணையாய் அடியேனு மதுவறிவன்
வேட்கையெல்லாம்விடுத்தென்னை உன்திருவடியேசுமந்துழலக்
கூட்டரியதிருவடிக்கள் கூட்டினைநான்கண்டேனே.
(கூட்டுதி.) ப்3ரஹ்மாதி3களுக்குங்கூட து3ர்லப4னாயிருந்து வைத்து, எத்தனையேனும் தண்ணியரேயாகிலும் ஆஶ்ரிதரை உன் திருவடிகளோடே கூட்டுதி யென்னுமிடம் அடியேனுங்கூட அறியும் படி லோகத்திலே ப்ரதி2தமா யிருக்குமத்தை, நீ என் பக்கலிலே செய்தருளக் கண்டேன். எங்ஙனே யென்னில்; – ப்ராக்ருத விஷயைக போ4க3 லௌகிக ஜநஸஹவாஸ ஜநித நிரவதி4க து3:க2மெல்லாம் போம்படி, ப்ராக்ருத விஷயவைராக்3யபூர்வகமாக என்னை உன் திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிகளோடே கூட்டினாய் என்கிறார். 4-9-9.
பத்தாம் பாட்டு
கண்டுகேட்டுற்றுமோந்து உண்டுழலுமைங்கருவி
கண்டவின்பம்தெரிவரிய வளவில்லாச்சிற்றின்பம்
ஒண்டொடியாள்திருமகளும் நீயுமேநிலாநிற்பக்
கண்டசதிர்கண்டொழிந்தேன் அடைந்தேனுன்திருவடியே.
(கண்டு.) விஷயரஸங்களிலும் கைவல்யாநுப4வரஸத்திலும் வைராக்3யம் பிறந்தது எத்தாலே என்னில்; – நித்ய நிர்த்தோ3ஷ நிரவதி4க கல்யாணகு3ணைகதாநராய் தவைவோசிதராயிருந்த லக்ஷ்ம்யாதி3 தி3வ்யமஹிஷீ ஜநங்களும், ஸ்வபா4வத ஏவ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா4வ த்வத்பரிசர்யைகபோ4க3ரான இருப்பைக்கண்டு, அந்த – ஐஶ்ரவர்ய கைவல்யங்களை யொழிந்து, ததேகபோ4க3 த்வத்பராங்முக2 ஜநஸஹவாஸ ஜநித து3:க2 மெல்லாம் போம்படி உன் திருவடிகளை அடைந்தேன் என்கிறார். 4-9-10.
பதினொன்றாம் பாட்டு
திருவடியைநாரணனைக் கேசவனைப்பரஞ்சுடரைத்
திருவடிசேர்வதுகருதிச் செழுங்குருகூர்ச்சடகோபன்
திருவடிமேலுரைத்ததமிழ் ஆயிரத்துளிப்பத்தும்
திருவடியேயடைவிக்கும் திருவடிசேர்ந்தொன்றுமினே.
(திருவடியை.) எம்பெருமானைக்கண்ட ப்ரீத்யதி3ஶயத் -தாலே அவனையேத்தின இத்திருவாய்மொழி வல்லாரை, இத் திருவாய்மொழிதானே எம்பெருமான் திருவடிகளை யடைவிக்கும். திருவடிகளிலே தி3வ்யரேகைபோலே போய்ச் சேருங்கள் என்கிறார். 4-9-11.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 4-10
ஒன்றுந்தேவும் – ப்ரவேஶம்
(ஒன்றுந்தேவும்.) ‘அவைஷ்ணவ ஜந ஸஹவாஸத்திற்காட்டில் முடிகை நன்று’ என்று ‘ஈண்ட என்னை முடித்தருளவேணும்’ என்று எம்பெருமானை அபேக்ஷிக்கச் செய்தேயும் அவன் செய்தருளாமை யாலே, ‘இனி இவர்களோடுள்ள ஸஹவாஸம் அவர்ஜ்ஜநீயமான பின்பு இவர்களை வைஷ்ணவர்களாக்கிக் கொண்டாகிலும் இவர்களோடே கூட வர்த்திப்போம்’ என்று பார்த்து எம்பெருமானுடைய ஸர்வேஶ்வர்த்வ ஸர்வஸுலப4த்வாதி3க3ளை உபபாதித்து, அவனை ஆஶ்ரயியுங்கோள் என்று, அவர்களுக்கு அருளிச் செய்கிறார். எம்பெருமானைக் கண்டு ஸம்ஶ்லேஷித்த பக்ஷத்தில் அந்த ஸம்ஶ்லேஷ ஜநித ப்ரீத்யதிஶயத்தாலும், எம்பெருமனை இழந்து கிடக்கிற ஆத்மாக்கள் பக்கலுள்ள க்ருபையாலும், ‘எம்பெருமனை ஆஶ்ரயியுங்கோள்’ என்று அவர்களைக் குறித்து அருளிச்செகிய்றா ரென்னுமது.
முதல் பாட்டு
ஒன்றுந்தேவுமுலகுயிரும்மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன்தன்னொடு தேவருலகோடுயிர்படைத்தான்
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள்
நின்றவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்நாடுதிரே.
”இத3ம்வா அக்3ரே நைவகிஞ்ச நாஸீந்நத்3யௌராஸீந்ந ப்ருதி2வீ நாந்தரிக்ஷம் தத3ஸதே வஸந்மரோ குரு தஸ்யாமிதி”, “ஸதே3வ ஸோSம யேத3மக்3ர ஆஸீத்”, “ப்3ரஹ்மாவா இத3ம் – ஏகமேவ – அக்3ரஆஸீத்”, “ஆத்மாவா இத3மேக ஏவாக்3ர ஆஸீத்”, “ஏகோஹவை நாராயணா ஆஸீந் நப்3ரஹ்மா நேஶா நோ நேமேத்3யாவா ப்ருதி2வீ ந நக்ஷத்ராணி”, “யதோவா இமாநி பூ4தாநி ஜாயந்தே | யேந ஜாதாநி ஜீவந்தி | யத்ப்ரயந்த்யபி4ஸம் விஶந்தி | தத்3விஜிஜ்ஞாஸஸ்வ | தத்3ப்4ரஹ்ம”, “ஸர்வாணிஹ்வா இமாநி பூ4தாந்யா காஶாதே3வ ஸமுத்பத்3யந்தே. ஆகாஶம் ப்ரத்யஸ் மயந்தி ஆகாஶோஹ்யே வைப்4யோ – யாயாந் ஆகாஶபராயணம்”, “தஸ்மாத்3வா ஏதஸ் ஸாதா3த்மந ஆகாஶ பராயணம்”. “ஏதஸ்மாஜ்ஜாய க ப்ராணோமநஸ்ஸர்வேந்த்3ரியாணி ச | க2ம் வாயுர் ஜ்யோதிராப: ப்ருதி2வீ விஶ்வஸ்யதா4ரிண”, “த்த்தேஜோஸ்ருஜித”, “ஸோSகாமயத, ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி”, “ஸர்வேநிமேஷாஜஜ்ஞிரேஷ்டா2ய”, “ஸர்வாணி ரூபாணி விசித்ய தீ4ர:, நாமாநி க்ருத்வா பி4வத3ந்யதா3ஶ்தே”, “ஆகாஶோஹவை நாமரூபயோர்நிர்வஹிதா தேயத3ந்தரா”, “நாராயண பரம்ப்3ரஹ்ம தத்த்வம் நாராயண: பர: | நாராயண பரோஜ்யோதிராத்மா நாராயண: பர: | யச்சகிஞ்சிஜ் ஜக3த்யஸ்மிந் த்3ருஶ்யதே ஶ்ரூயதேபிவா | அந்தர்ப3ஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்ஸ்தி2த:”, “ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவஶ் ஸேந்த்3ரஸ் ஸோக்ஷர: பரமஸ்ஸ்வராட்”, இத்யாதிகளாய்; “நமேவிது3ஸ் ஸுரகு3ணா: ப்ரப4வம் நமஹர்ஷய: | அஹமாதிர்ஹி தே3வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஶ: “ “கஸ்மாச்சதே நநமேர ந்மஹாத் மங்க3ரீயஸே ப்3ரஹ்மணோப்யாதி3கர்தரே”, “மயாத்4யக்ஷேண ப்ரக்ருதிஸ்ஸூயதே ஸ சராசரம், ஜங்க3மா ஜங்க3மாசே2த3ம் ஜக3ந்நாராயணோத்3ப4வம்”; “ஸோSபி4த்2யாய ஶரீராத்ஸ்வாத் ஸிஸ்ருக்ஷுர்விவிதாம் ப்ரஜா:”, “ருக்மாப4ம் ஸ்வப்ந தீ4க3ம்யம் வித்3யாத்து புருஷம்பரம்”, “விஷ்ணோஸ்ஸகா ஶாது3த்பூ4தம் ஜக3த் தத்ரைவசஸ்தி2தம் | ஸ்திதி ஸம்யமகர்தாஸௌ ஜக3தோஸ்ய ஜக3ச்சஸம”, “க்ரீட3தோபா3லகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஶாமய”, “க்ருட3ஹரேரித3ம் ஸர்வம் க்ஷரமித்யுபதா3ர்யதாம்”, “யஸ்ய ப்ருஸாதா3த3 ஹமஸ்யுதஸ்ய பூ4த: ப்ரஜாஸ்ருஷிகரோந்த4காரீ | க்ரோதா4ச்சருத்3ர:, “ப்3ரஹ்மாத3 க்ஷாத3ய: காலஸ்ததை2வ கி2லஜந்தவ: | விபூ4தயோ ஹரேரே தாஜக3 தஸ்ஸ்ருஷ்டிஹேதவ: || விஷ்ணுர்மந்வாத3ய: காலஶ்த்தை3வாகி2லஜந்தவ: || ஸ்தி2தேர் ந்மித்த பூ4தஸ்ய விஷ்ணோரேதா விபூ4தய: || ருத்3ர: காலாந்தகாத்3 யாஶ்சஸ மஸ்தா ஶ்சைவ ஜந்தவ:|| சதுர்தாப்ரலயாயைதா ஜநார்த3நவிபூ4தய:”, “ தத்ரஸர்வமித3ம் ப்ரோத மோதம்சைவாகி2லம் ஜகத்”, “ஸவிகாரம் ப்ரதா4நம் யத்புமாம் ஶ்சைவாகி2லம் ஜகத்|| பி3ப4ர்தி புண்ட3ரீகாக்ஷஸ்ஸ்தை3வம் பரமேஶ்வர:”, “பரமாத்மாச ஸர்வேஷாமாதா4ரம் பரமேஶ்வர: | விஷ்ணு நாமாஸவேதே3ஷு வேதா3ந்தேஷு ச கீ3யதே”, “ மயாநுஶிஷ்டோ ப4விதாஸர்வபூ4த வரப்ரத3: || அஸ்யசைவாநுஜோ ருத்3ரோ ல்லாடாத்3யஸ்ஸமுத்தி2த: | ப்3ரஹ்மாநு ஶிஷ்டோப4விதாஸஹி ஸர்வ வரப்ரத3:”, “ஏதௌ த்3வௌ விபு3த4 ஶ்ரேஷ்டௌ ப்ரஸாத க்ரோத4ஜௌ ஸ்ம்ருதௌ | ததா3த3ர்ஶி தபந்தா2நௌ ஸ்ருஷ்டி ஸம்ஹாரகாரகௌ?, ஸப்3ரஹ்மகாஸ்ஸ ருத்3ராஶ்ச ஸேந்த்3ரா தே3வாஸ்ஸஹர்ஷய: | அர்சயந்தி ஸுரஶ்ரேஷ்ட2ம் தே3வம் நாராயணம் ஹரிம்”, “ நஹி விஷ்ணு: ப்ரண்ம கஸ்மை சித்3விபூ4தா4யது | ருத ஆத்மாநமேவ”, “ஸ்ரஷ்டாரம் ஸர்வலோகாநாம் ந்ந்தம் விஶ்வதோமுக2ம்”, “யஸ்மாது3த்பத்3யதே ப்3ரஹ்மா பத்3மயோநிம் பிதாமஹ:”, “ப்3ர்ஹ்மாதி ஷுப்ரலீநேஷு நஷ்டே லோகேச ராசரே | ஆபூ4த ஸமப்ல்வே ப்ராப்தே ப்ருலேநே ப்ரக்ருதௌமஹாந் | ஏகஸ்திஷ்ட2தி விஶ்வாத்மா ஸமேவிஷ்ணு: ப்ரஸீத3து”, “யஸ்மாத் பரதரம் நாஸ்தி தமஸ்மி ஶரணம்க3த:”, “சிந்தயந்தோஹியம் நித்யம் ப்3ரஹ்மேஶா நாத3யம் ப்ரபு4ம் | நிஶ்சயம் நாதி4க3ச்ச2ந்தி தமஸ்மி ஶரணம்க3த:”, “ ப3ஹுநாத்ரகி முக்தேந ஶ்ருணு தே3விஸ மாஸத: || ஸர்வே தே3வா வாஸுதே3வம் யஜந்தே ஸர்வே தே3வா வாஸு தே3வாதி4 தை3வம்”, “புராதி2 ப்ரலயே ப்ராப்தே நஷ்டேஸ்தா2 வரஜங்க3மே | ஆபூ4த ஸம்ப்லவே ப்ராப்தே பரலீநே ப்ரக்ருதௌ மஹாந்| ஏகஸ்திஷ்ட்தி விஶ்வாத்வா ஸது நாராயண: ப்ரபு4: | ஆபூ4த ஸம்ப்ல்வாந்தேத்2 த்3ருஷ்ட்வா ஸர்வம் தமோந்விதம் | நாராயணோ மஹாயோகீ3 ஸர்வஜ்ஞ: பரமாத்மவாந் | ப்3ரஹ்ம பூ4தஸ்த்தா3த் மாநம் ப்3ரஹ்மாண மஸ்ருஜத்ஸ்வயம்”, “ மோத3தே ப4க3வாந் பூ4தைர்பா3ல: க்ரீட3நகைரிவ”, “ பரம்ஹ்ய பரமேதஸ்மா த்3வி ஶ்வரூபாந்நவித்3யதே”, “ப்ருதி2வீஞ்சாந்தரிக்ஷஞ்ச புருஷோத்தம: | விசேஷ்ட யதிபூ4தாத்மா க்ரீடந்நிவஜநார்த3ந: | காலஸ்ய சஹி ம்ருத்யோஶ்ச ஜங்க3மஸ்தா2வரஸ்ய ச | ஈஶதே ப4க3வாநேகஸ் ஸத்ய மேதத்3 ப்3ரவீமிதே”, “வாஸுதே3வம் மஹாத்மாநம் லோகா நாமீ ஶ்வரேஶ்வரம்”, “யஸ்யாஸாவாத்ம ஜோப்3ரஹ்மா ஸர்வஸ்ய ஜக3த: பிதா”, “ ந பரம் புண்ட3ரீகாக்ஷாத்3 த்ருஶ்யதே ப4ரதர்ஷப3 | ஏஷதா4தாவிதா4 தாசஸர்வேஷாம் ப்ராணி நாம் ப்ரபு4:”, “பரம் ஹி புண்ட3ரீகாக்ஷாந பூ4தம் நப4விஷ்யதி”,”ஸ்ரஷ்டாரம் ஸர்வ லோகாநாம் பரமாத்மா நமச்யுதம்”, “அங்காநிசதுரோ வேதா யஶ்ச வேதே3ஷு கீ3யதே”, “ருத்3ரம் ஸ்மாஶ்ரிதாதே3வா ருத்3ரோ ப்3ரஹ்மாணமாஶ்ரித: || ப்3ரஹ்மா மாமா ஶ்ரிதோ ராஜந்நாஹம் கஞ்சிது3பாஶ்ரித: | மமாஶ்ரயோ நகஶ்சித்து ஸர்வேஷாமாஶ்ரயோ ஸ்ம்யஹம்”, “யஸ்ஸ்ரஷ்டா ஸர்வ பூ4தாநாம் கல்பாநதேஷு புந: புந: | அவ்யயஶ்ஶாஶ்வதோ தே3வோ யஸ்ய ஸர்வமித3ம் ஜக3த்”, “யோஸௌஸாக்ஷாத்3 விஶ்வ மூர்திர் யத்ரவேதா3: ப்ரதிஷ்டி2தா: தம்யாம ஶரணம் விஷ்ணும் ஸர்வே ஸேந்த்3ராதி3வௌகஸ: “ ப்3ரஹ்மணாஹம் புராஸ்ருஷ்ட: ப்ரோக்தஶ்ச ஸ்ருஜவை ப்ரஜா: | அவிஜ்ஞாதோஸமர்தோ2Sஹம் நிமக்3நஸ்ஸலிலேத்3விஜ”, “ப்3ருஹ்மணா சாஹமுக்தஸ்து ப்ரஜாஸ் ஸ்ருஜ இதிப்ரபோ4 | த்த்ர ஜ்ஞாநம் ப்ரயச்ச2 ஸ்வத்ரிவித4ம்பூ4தபா4வந || விஷ்ணு: || ஸர்வஜ்ஞ -ஸ்த்வம் நஸந்தே3ஹோஜ்ஞா நராஶிஸ்ஸநாதந:”, “தே3வாநாஞ்சபர: பூஜ்யஸ்ஸர்வதா3த்வம் ப4விஷ்யஸி”, “நாராயணாத் பரோதே3வோ நபூ4தோ நப4விஷ்யதி”, “ஏதத்3ரஹஸ்யம் வேதா3நாம் புராணா -நாஞ்ச ஸததம் |”, “ஸர்வே தே3வாஸ்ஸபிதரோ ப்3ரஹ்மாத்3யாஶ் சாண்ட3மத்4யகா:3 | விஷ்ணோஸ்ஸகா2 ஶாது3த்பந்நா இதீயம் வைதி3கீஶ்ருதிம்”, “ஆத்3யோ நாராயணோ தே3வஸ்தஸ்மாத்3 ப்3ரஹ்மாத் தோப4வ:”, “தவ விஷ்ணோ: ப்ரஸாதே3ந மயாதத த்ரிபுரம் ஹதம்”, “பூ4மி:| | ப்ரமாத்மா ஶிவ: புண்ய இதிகேசித்3 பவம்விது: | அபரேஹரி மீஶாந மிதி கேசிச்சதுர்முக2ம் | ஏதேஷாம் பரமோதே3வ: பர:கோவாதவாபர: | ஏதந்தே3வம்மாச்க்ஷுவ பரம் கௌதூஹலம்ஹிமே || ஸ்ரீ வராஹ: || பரோ நாராயணோ தே3வ ஸ்தஸ்மாஜ்ஜாதஶ் சதுர்முக2: | தஸ்மாத்3ருத்3ரோ ப4வத்3தே3வி ஸ ச ஸர்வஜ்ஞதாம்க3த: | யதே3த்த்பரம்ம் ப்3ரஹ்ம வேத3 வாதே3ஷு பம்யதே | ஸதே3வ: புண்ட3ரீகாக்ஷஸ்ஸ்வயம் நாராயண: பர:”, “நவிஷ்ணோ: பரமோ தே3வோ வித்3யதே ந்ருபஸத்தம
விஷ்ணுரேவ ஸதா3ராத்4ய ஸ்ஸர்வ தே3வைரபிப்ரபோ4”, “க இதி ப்3ரஹ்மணோ நாம ஈஶோSஹம் ஸர்வதே3ஹிநாம் | ஆவாந்தவ -ரங்கேஶஸம் பூ4தௌ தஸ்மாத் கேஶவநாமவாந்”, “க்ரீட3தே ப4க3வாந் லோகைர்பா3ல: க்ரீட3நகைரிவ | நப்ரமாதும் மஹாபா3ஹுஶ்ஶ்க்2யோSஸௌ மது4ஸூத3ந:” “யஸ்மாத்3 விஷ்டம்பி4தம் ஸர்வம் தஸ்ய ஶக்த்யா மஹாத்மந: |
தஸ்மாத் ஸ ப்ரோஸ்யதே விஷ்ணுர் விஶேர்தா4தோ: ப்ரவேஶநாத்”, “ஸர்வேச தேவாமநவஸ் ஸமஸ்தா ஸ்ஸப்3தர்ஷயோ யே மநுஸூந வஶ்ச| இந்த்3ராஶ்சயோSயம் த்ரித3ஶேஶ பூ4தோ விஷ்ணோ ரஶேஷாஸ்து விபூ4தயஸ்தா:”, “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்ய முத்3த்4ருத்யுபு4ஜமுச்யதே | வேத ஶாஸ்த்ராத்பரம் நாஸ்தி நதை3வம் கேஶவத்பரம்”, “ஆலோட்3ய ஸர்வ ஶாஸ்த்ராணி விசார்யச புந: புந: | இத3மேகம் ஸுநிஷ்பந்நம் த்4யேயோ நாராயணஸ்ஸதா3 | ஏத்த்3 த்3வைபாயநோ வ்யாஸ: படி2ஷ்யதி மஹாமநா: | பாண்ட3வாநாம் கு3ரூணாஞ்ச மத்4யே”, “ விஷ்ணுரேவ ஸதா3தா4ரோ ஜக3தஸ் ஸர்வதா3த்3விஜ| க:ஸ்தோதுமீ ஶஸ்தமஜம் யஸ்யை தத்ஸச சராசரம் | அவ்ய யஸ்யாப்ரமேயஸ்ய ப்3ரஹ்மாண்ட3முத3கேஶவம் | ருத்3ர: க்ரோதோ4த்3படிவோயஸ்ய ப்ரஸாதா3ச்ச பிதாமஹ: | தஸ்யதே3வஸ்ய கஶ்ஶக்த: ப்ரவக்தும் வாவிபூ4தய:”, “ ந வாஸு -தே3வாந் பரமஸ்திமங்க3லம் ந வாஸுதே3வாத் பரமஸ்திபாவநம்| ந வாஸுதே3வாத் பரமஸ்தி தை3வதம் ந வாஸுதே3வம் ப்ரணிபத்ய ஸீத3தி”, “தீவத் க்ரோத4 ஸம்ப4வோ ருத்3ரஸ் தமஸாச ஸமாவ்ருத: | த்வத் ப்ரஸாத3வஶாத்3 தா4தாரஜஸா ச ஸமாவ்ருத: “இத்யாதி ஸகல ஸம்ருதீதிஹாஸ புராணோபப்ரும்ஹிதங்களான ஸகலோபநிஷத் வக்ய ஜாதங்களாலே, சதுர்முக பசுபத் ப்ர்ப்4ருதி ஸகல பூ4தஜாத பரிபூர்ணா ஸங்க்யே யாண்ட மண்டலநிர்மாண தீராண ஸம்ஹரணாதி லீலதயா, ப்3ரஹ்ம ருத்3ராதி ஸர்வாத்ம ஶேஷிதயா, ஸர்வ ஜக3தா3தா4ரதயா, ஸாங்க3 ஸகல வேத3 வேத்3யதயா, ப்3ரஹ்ம ருத்3ராதி3 ஸர்வ தே3வ ஸர்வர்ஷி பூஜ்யதயா, ஸர்வதே3வ நமஸ்கார்யதயா, ஸர்வநியந்த்ருதயா, ஸர்வ வ்யாபிதயாச ப்ரதிபாத்3யமாநனாய் ஸர்வஸுலப4னாயிருந்த நாராயணனை யொழிய வேறொரு தைவத்தை ஸமாஶ்ரயணீயமாகத் தேடுகிறீர்கள்; மற்றுமொரு தைவமுண்டோ? என்று கொண்டு, தே3வதாந்தர ப்ரவணரானவர்களைக் குறித்து அருளிச்செய்கிறார். 4-10-1.
இரண்டாம் பாட்டு
நாடிநீர்வணங்குந்தெய்வமும் உம்மையும்முன்படைத்தான்
வீடில்சீர்ப்புகழாதிப்பிரானவன் மேவியுறைகோயில்
மாடமாளிகைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப்
பாடியாடிப்பரவிச்சென்மின்கள் பல்லுலகீர்பரந்தே.
(நாடிநீர்.) ஆதலால், இப்படி நீங்கள் ஆஶ்ரயிக்கிற தைவங்களுக்கும் உங்களுக்கும் காரண பூ4தனாய், “ஸர்வ பூ4தாத்ம பூ4தஸ்ய விஷ்ணோ: கோவேதி3 துங்கு3ணாந்”, “இஷுக்ஷயான் நிவர்த்தந்தே” , யதா2 ரத்நாநி ஜலதே4:”, “சதுர்முகா2யுர்யதி2 கோடி வக்த்ரோ ப4வேந்நர:” இத்யாதி ப்3ராஹ்ம வாமநவாராஹாதி3 புராண வாக்ய ப்ரதிபாத்3யமாக அநவதி4காதிரயாஸ்ங்க்2யேய கல்யாணகு3ணக3ணனான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருந்த திருநகரியை ஆஶ்ரயியுங்கள் என்கிறார். 4-10-2.
மூன்றாம் பாட்டு
பரந்ததெய்வமும்பல்லுலகும்படைத்து அன்றுஉடனேவிழுங்கிக்
கரந்துமிழ்ந்துகடந்திடந்தது கண்டும்தெளியகில்லீர்
சிரங்களாலமரர்வணங்கும் திருக்குருகூரதனுள்
பரன்திறமன்றிப்பல்லுலகீர்! தெய்வம்மற்றில்லைபேசுமினே.
(பரந்த.) – “ந்யக்3ரோத4ம் ஸுமஹாந்தம்வை விஶாலம் ப்ருத்2வீபதே” ஶாகா2யாம் தஸ்ய வ்ருக்ஷஸ்ய விஸ்தீர்னாயாம் நராதி4ப | பர்யங்கே ப்ருதி2வீ பாலதி3வ்யாஸ்தரண ஸமஸத்ருதே || உபவிஷ்டம் மஹாராஜ பூர்ணேந்து ஸத்ருஶாந்நம் | பு2ல்ல பத்ம விஶாலாக்ஷம் பா3லம் பஶ்யாமி பா4ரத || யச்சி கிஞ்சிந்மயா லோகே த்3ருஷ்டம் ஸ்தா2வர ஜங்க3மம் | த்த3பஶ்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷளமஹாத்மந: || இஹபூ4த்வா ஶிஶுஸ்ஸாக்ஷாத் கிம்ப4வா நிதி4 திஷ்க2தி | பீத்வாஜக3தி3த3ம் விஶ்வ மேத்தா3க்2யா துமர்ஹஸி; “க்3ரஸேத்ஸம்ஹாஅரஸ்மயே ஜக3ச்ச ப3த2ராண்ட3வத்| லீலயாயஸ்து ப4க3வாந் தங்க3ச்ச2 ஶரணம் ஹரிம்”, “இத3ம் விஷ்ணுர் விசக்ரமே”,”த்ரீணிபதா3 விசக்ரமே”, “க்ராந்த்வாத்4ரித்ரீம் க3க3நம் ததா2தி3வம் ம்ருத்பதேர்ய: ப்ரத்3தௌ3 த்ரிவிஷ்டபம்”, “ஶத யோஜந விஸ்தீர்ண முச்ச2ரிதம் த்ரிகு3ணம் தத: || நீல ஜீமூத ஸங்காஶம் மேக4ஸ்தநித நிஶ்வநம் | கி3ரி ஸம்ஹந நம்பீ4மம் ஶ்வேத் தீக்ஷ்ணோக்3ரத3ம் ஷட்ரிணம் || வித்3யுத3க்3நி ப்ர்தீ காஶமாதி3த்ய ஸமதேஜஸம் | பீநவ்ருத்தாய தஸ்கந்த4ம் த்3ருபத3 ஶார்தூ3ல கா3மிநம்|| பீநோந்நதகடீ தே3ஶம் வ்ருஷலக்ஷண மூர்ஜிதம் | ரூபமாஸ்தா2ய விபுலம் வாராஹமஜிதோ ஹரி: || ப்ருதி2வ்ய்த்3த2ரணார்தா2ய ப்ரவிவேஶ ரஸாதலம் | ரஸாதல ஜலேமக்3நாம் ரஸாதல தங்கத: || ப்ரபு4ர் லோகஹிதார்தா2ய த3ம்ஷ்ட்ராக்3ரேணோஜ்ஜஹாரகா3ம்”. 4-10-3.
நான்காம்பாட்டு
பேசநின்றசிவனுக்கும் பிரமன்தனக்கும்பிறர்க்கும்
நாயகனவனே கபாலநன்மோக்கத்துக்கண்டுகொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்தழகாய திருக்குருகூரதனுள்
ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவது? இலிங்கியர்க்கே.
(பேசநின்ற.) ப்3ர்ஹம ருத்3ரர்க3ளுடைய ஸர்வேஶ்வரத்வம் அநுமாநஶித்த4மிறே யென்னனில்; – அந்த அநுமாநம், “தத்ர நாராயண ஶ்ஶ்ரீமாந் மயா பி4க்ஷாம் ப்ரயாசித: | ததஸ்தே நஸ்வகம் பார்ஶ்வம் நகா2க்3ரேண விதா3ரிதம் | மஹதீ3ஸ்ரவதீ தா4ரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ்ஸ்ருதா | நஸம்பூர்ணம் கபாலந்து கோ4ர மத்3பு4த த3ர்ஶநம் | தி3வ்யம் வர்ஷ ஸஹஸ்ரந்து ஸாஅதா4ராSத்ர ப்ரவாஹிதா | ததோSஹம் ஸமநுப்ராஅப்த அவிமுக்தம் மஹாஶயம் | அவஸ்தி2தஸ்ஸ்வகேஸ்தா2 நேஶாபஶ்சவிக3தோ மம | விஷ்ணு ப்ரஸாதா3த்ஸு ஶ்ரோணி கபாலந்தத் ஸஹஸ்ரதா4 | பு2கிதம ப3ஹுதா4யாதம் ஸ்வப்நலப்3த4ம் த4நம் யதா2”, “ ததஸ்ஸஶம் அரோதே3 வஸ்த்வந்த4 கைராகுலேக்ருத: ,ஜகா3ம ஶரணம் தே3வம் வாஸுதே3வ மஜம் விபு4ம் | த்தஸ்ஸப4க3வாந் விஷ்ணு ஸ்ஸ்ருஷ்டவாந் ஶுஷ்க ரேவதீம் | யாப்பௌ ஸ்கலம் தேஷா மந்த4கா நாமஸ்ருக்க்ஷணாத்”, “ப்3ரஹ்மணாஹம் புரா ஸ்ருஷ்ட:” இத்யாதி ஶாஸ்த்ர பா3தி4தமாகையாலே, உங்களால் ஈஶ்வரத்வே சொல்லப்படுகிற ப்3ரஹ்ம ருத்3ரர்களுக்கும் நாயகன் அந்த நாராயணனே என்கிறார். 4-10-4.
ஐந்தாம் பாட்டு
இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும்
வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகிநின்றான்
மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள்
பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும்பொய்யில்லைபோற்றுமினே.
(இலிங்கத்திட்ட.) லைங்க3புராண நிஷ்ட2ரான நீங்களும், மற்றும் ஶாக்2யோலூக்4யாக்ஷபாத க்ஷபணகபில பதஞ்சலிமதாநு -ஸார்களானவர்களும், மற்றும் உங்களுடைய தைவங்களுமெல்லாம் நாராயணாத்மகம்; இவ்வர்த்த2த்தில் ப்ரமாணமென்? என்னில்; – “அந்த3: ப்ரவிஷ்டஶ்ஶா ஸ்தாஜநாநாம் ஸர்வாத்மா” , “அஹம் ப4வோ ப4வந்தஶ்ச ஸர்வம் நாராயணாத்மகம். தவாந்தராத்மா மமச தே3ஶாந்யே தேஹி ஸம்ஜ்ஞிதா: “ இத்யாதி வாக்யங்கள். ஆதலால், அவனை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார். 4-10-5.
ஆறாம் பாட்டு
போற்றிமற்றோர்தெய்வம் பேணப்புறத்திட்டு உம்மைஇன்னே
தேற்றிவைத்தது எல்லீரும்வீடுபெற்றால்உலகில்லையென்றே
சேற்றிற்செந்நெல்கமலமோங்கு திருக்குருகூரதனுள்
ஆற்றவல்லவன்மாயங்கண்டீர் அதறிந்தறிந்தோடுமினே.
(போற்றி.) இப்படி நாராயணனே ஸர்வ நியந்தாவாகில், தன்னையே ஆஶ்ரயிக்கும்படி எங்களைப்பண்ணாதே வேறொரு தெய்வங்களை யாஶ்ரயிக்கும்படி பண்ணுவானென்? என்னில்; – போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடுபெற்றால் ஸத3ஸத் கர்மயுக்த ஜந்துக்கள் தத்தத்கர்மாநுகு3ணப2லங்களை அநுப4விக்கக் கடவதான இந்த லோகமர்யாதை யழியு மென்ற் இந்த லோக மர்யாதாஶ்ரித்யர்த்த2மாக, அஸத் கர்மகாரிகளான உங்களை அந்த அஸத் கர்மாநுகு3ணமாக இப்படி தே3வதாந்தரத்தை ஆஶ்ரயித்து ஸம்ஸரிக்கும்படி ஸர்வஶக்தியான பரமபுருஷன் தானே பண்ணி யருளினான்; ஆதலால், அத்தை யறிந்து, இந்த ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமான பரமபுருஷ கைங்கர்யார்த்த2மாக அவனை ஈண்டச்சென்று ஆஶ்ரயியுங்கோள் என்கிறார். 4-10-6.
ஏழாம்பாட்டு
ஓடியோடிப்பலபிறப்பும்பிறந்து மற்றோர்தெய்வம்
பாடியாடிப்பணிந்து பல்படிகால்வழியேறிக்கண்டீர்
கூடிவானவரேத்தநின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடியாதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே.
(ஓடியோடி.) தே3வதாந்தரத்தை ஆஶ்ரயித்தால் மோக்ஷாதி3 ப்ரயோஜநங்கள் ஸித்தி4யதோ3? என்னில்; – ‘இவ்வளவும் வர இவ்வநாதி3காலமெல்லாம் தே3வதாந்தரத்தை ஆஶ்ரயித்து என்ன ப்ரயோஜநம் பெற்றீர்? ஆனபின்பு, இந்த தே3வதாந்தரங்களை விட்டு, பொலிந்து நின்ற பிரான் திருவடிகளை ஆஶ்ரயிப்பது’ என்கிறார். 4-10-7.
எட்டாம்பாட்டு
புக்கடிமையினால்தன்னைக்கண்ட மார்க்கண்டேயனவனை
நக்கபிரானுமன்றுய்யக்கொண்டது நாராயணனருளே
கொக்கலர்தடந்தாழைவேலித் திருக்குருகூரதனுள்
மிக்கவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்விளம்புதிரே.
(புக்கடிமையினால்.) ருத்3ரனை யாஶ்ரயித்தன்றோ மார்க்கண்டே3யன் ஸ்வாபி4லஷிதம் பெற்றது என்னில், அவனும் ஸ்வாபி4லஷிதம் பெற்றது நாராயணனுடைய ப்ரஸாத3த்தாலே; அவ்விடத்தில் ருத்3ரன் புருஷகாரமாத்ரமே; ஆதலால், இப்படி ஸர்வேஶ்வரனான நாராயணனை யொழிய மற்றென்ன தை3வத்தைக் கொண்டாடுகிறீர்? என்கிறார். 4-10-8.
ஒன்பதாம் பாட்டு
விளம்பும்ஆறுசமயமும் அவையாகியும்மற்றும்தன்பால்
அளந்துகாண்டற்கரியனாகிய ஆதிப்பிரானமரும்
வளங்கொள்தண்பணைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை
உளங்கொள்ஞானத்துவைம்மின் உம்மைஉய்யக்கொண்டுபோகுறிலே.
(விளம்பும்.) க்ஷுத்3ர தை3வங்களை விட்டு, வேத3பா3ஹ்ய குத்3ருஷ்டி ப்ரப்3ருதி ஸமஸ்த து3ஸ்தர்க்க3 து3ரபஹ்நவ ஸ்வரூப ரூபகு3ண விபூ4திகனான பரமபுருஷன் எழுந்தருளியிருக்கிற திருநகரியை ஆஶ்ரயியுங்கோள், உஜ்ஜீவிக்க வேண்டியிருந்திகோ -ளாகில் என்கிறார். 4-10-9.
பத்தாம் பாட்டு
உறுவதாவதெத்தேவும் எவ்வுலகங்களும்மற்றுந்தன்பால்
மறுவின்மூர்த்தியோடொத்து இத்தனையும்நின்றவண்ணம்நிற்கவே
செறுவிற்செந்நெல்கரும்பொடோங்கு திருக்குருகூரதனுள்
குறியமாணுருவாகிய நீள்குடக்கூத்தனுக்காட்செய்வதே.
(உறுவதாவது.) ஸ்வாஸாதா4ரண விக்3ரஹம்போலே விதே4யமான ஸர்வஜக3த்தையு முடையனாய் அஜஹத்ஸ்வபா4வ -னாய்க்கொண்டு, செறுவில் செந்நெல் கரும்பொடோங்கு திருக்குருகூரதனுள் நின்றருளின குறிய மாணுருவாகிய நீள் குடக்கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவதாவது என்கிறார். 4-10-10.
பதினொன்றாம் பாட்டு
ஆட்செய்தாழிப்பிரானைச்சேர்ந்தவன் வண்குருகூர்நகரான்
நாட்கமழ்மகிழ்மாலைமார்பினன் மாறன்சடகோபன்
வேட்கையாற்சொன்னபாடல் ஆயிரத்துள்இப்பத்தும்வல்லார்
மீட்சியின்றிவைகுந்தமாநகர் மற்றதுகையதுவே.
(ஆட்செய்து.) ப4கவத் கைங்கர்யாதி3 ஶீதளாம்ருதமய தடாகாவகா3ஹந ஸுப்ரஸந்நாத்ம ஸ்வரூபகா3த்ர நிரதிஶய ஸுக3ந்த4 விகஸத்கேஸரமாலாலங்க்ருத வக்ஷஸ்த2லரான ஆழ்வார், பரமபுருஷ விஷய நிரதிஶய ப4க்தியாலே சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்க்கு இதுவே வல்லராமதுவே பரமப்ராப்யம்; மற்றுத் திருநாடு வேண்டியிருக்கில், அது இவர்கள் கையது என்கிறார். 4-10-11.
ஆழ்வார் திருவடிகளே ஶரணம்
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்