[highlight_content]

Thiruvasiriyam

நம்மாழ்வார் அருளிச்செய்த

யஜுர்வேதஸாரமான

திருவாசிரியம்

தனியன்

(அருளாளப்பெருமாளெம்பெருமானார் அருளிச்செய்தது)

காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து

ஆசிரியப்பாவதனால் அருமறைநூல்விரித்தானை*

தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத்தாரானை*

மாசடையாமனத்துவைத்து மறவாமல்வாழ்த்துதுமே.

செக்கர் மாமுகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்

பரிதி சூடி * அஞ்சுடர் மதியம் பூண்டு *

பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய் *

திகழ் பசுஞ்சோதி மரதகக் குன்றம் *

கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல் *

பீதகவாடை முடிபூண் முதலா *

மேதகு பல்கல னணிந்து * சோதி

வாயவும் கண்ணவும் சிவப்ப * மீதிட்டுப்

பச்சை மேனி மிகப் பகைப்ப *

நச்சு வினைக் கவர்தலை யரவின மளியேறி *

எறிகடல் நடுவுள் அறிதுயி லமர்ந்து *

சிவனய னிந்திரனிவர் முதலனைத்தோர் *

தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த *

தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக ! *

மூவுலகளந்த சேவடியோயே! 1

உலகு படைத்துண்ட எந்தை * அறை கழல்

சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு * அவாவு ஆர்

உயிர் உருகி யுக்க * நேரிய காதல்

அன்பிலின் பீன் தேறல்* அமுத

வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு * ஒரு பொருட்கு

அசைவோர் அசைக * திருவொடு மருவிய

இயற்கை * மாயாப் பெரு விறலுலகம்

மூன்றினொடு நல்வீடு பெறினும் *

கொள்வ தெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? 2

குறிப்பில் கொண்டு நெறிப்பட * உலகம்

மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் * ஆணை

மெய் பெற நடாய தெய்வம் மூவரில்

முதல்வனாகிச் * சுடர் விளங் ககலத்து *

வரைபுரை திரை பொரு பெருவரை வெருவர *

உருமுர லொலிமலி நளிர் கடல் படவர

வரசு உடல் தடவரை சுழற்றிய * தனிமாத்

தெய்வத் தடியவர்க்கு இனி நாம் ஆளாகவே

இசையுங் கொல் ? * ஊழிதோறூழி ஓவாதே. 3

ஊழிதோறூழி ஓவாது * வாழிய

வென்று யாம் தொழ இசையுங்கொல் ? *

யாவகை யுலகமும் யாவரு மில்லா *

மேல் வரும் பெரும் பாழ்க் காலத்து * இரும்பொருட்-

கெல்லாம் அரும் பெறல் தனி வித்து * ஒருதா-

னாகித் தெய்வ நான்முகக் கொழுமுளை

யீன்று * முக்கணீசனொடு தேவு பலநுதலி *

மூவுலகம் விளைத்த உந்தி *

மாயக் கடவுள் மாமுதலடியே. 4

மாமுதலடிப் போதொன்று கவிழ்த் தலர்த்தி *

மண்முழுது மகப்படுத்து * ஒண் சுடரடிப் போது

ஒன்று விண் செலீஇ * நான்முகப் புத்தேள்

நாடு வியந்துவப்ப * வானவர் முறைமுறை

வழிபட நெறீஇ * தாமரைக் காடு

மலர்க் கண்ணொடு கனிவாயுடையது-

மாய் * இருநாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன *

கற்பகக் காவு பற்பல வன்ன *

முடி தோளாயிரந் தழைத்த *

நெடியோய்க் கல்லது அடியதோ உலகே? 5

ஓ ஓ ! உலகினதியல்வே ! * ஈன்றோ ளிருக்க

மணை நீராட்டிப் * படைத்திடந்து உண்டுமிழ்ந்து

அளந்து * தேர்ந்து உலகளிக்கும் முதற் பெரும்

கடவுள் நிற்பப் * புடைப்பல தானறி

தெய்வம் பேணுதல் * தனாது

புல்லறி வாண்மை பொருந்தக் காட்டிக் *

கொல்வன முதலா அல்லன முயலும் *

இனைய செய்கை இன்பு துன்பளி *

தொல் மாமாயப் பிறவியுள் நீங்காப் *

பல்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே. 6

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் *

தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா *

யாவகை யுலகமும் யாவரும் அகப்பட *

நிலம் நீர் தீ கால் சுடரிரு விசும்பும் *

மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க

ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்

அகப்படக் கரந்து * ஓராலிலைச் சேர்ந்த எம்

பெருமா மாயனை யல்லது *

ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே?  7

திருவாசிரியம் முற்றும்

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.