[highlight_content]

Thiruvezhukootririkai

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

திருவெழுகூற்றிருக்கை

தனியன்

(எம்பெருமானார் அருளிச்செய்தது)

 

வாழிபரகாலன் வாழிகலிகன்றி*

வாழிகுறையலூர் வாழ்வேந்தன் * – வாழியரோ

மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள்மங்கையர்கோன்*

தூயோன்சுடர்மானவேல்.

சீரார்திருவெழுகூற்றிருக்கையென்னும்செந்தமிழால்*

ஆராவமுதன்குடந்தைப்பிரான்தனடியிணைக்கீழ்*

ஏரார்மறைப்பொருள்எல்லாமெடுத்திவ்வுலகுய்யவே*

சோராமற்சொன்னஅருண்மாரிபாதம்துணைநமக்கே.

ஒருபேருந்தி இருமலர்த் தவிசில் *

ஒருமுறை அயனை யீன்றனை –* ஒருமுறை

இருசுடர் மீதினில் இயங்கா * மும்மதிள்

இலங்கை இருகால் வளைய* ஒருசிலை –

யொன்றிய ஈரெயிற்றழல் வாய் வாளியின்

அட்டனை * மூவடி நானிலம் வேண்டி *

முப்புரி நூலொடு மானுரி யிலங்கு

மார்வினின் * இரு பிறப்பு ஒரு மாணாகி *-

ஒரு முறை ஈரடி மூவுல களந்தனை *

நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை

யேறி * நால் வாய் மும்மதத்து இருசெவி

ஒருதனி வேழத்து அரந்தையை *- ஒரு நாள்

இரு நீர் மடுவுள் தீர்த்தனை * முத்தீ

நான்மறை ஐவகை வேள்வி * அறுதொழில்

அந்தணர் வணங்கும் தன்மையை* ஐம்புலன்

அகத்தினுள் செறுத்து * நான்குட னடக்கி

முக்குணத்து இரண்டவை யகற்றி * ஒன்றினில்

ஒன்றி நின்று * ஆங்கு இருபிறப் பறுப்போர்

அறியும் தன்மையை * முக்கண் நால்தோள்

ஐவாயரவோடு * ஆறுபொதி சடையோன்

அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை *

ஏழுலகு எயிற்றினில் கொண்டனை * கூறிய

அறுசுவைப் பயனுமாயினை* சுடர் விடும்

ஐம்படை அங்கையு ளமர்ந்தனை * சுந்தர

நால்தோள் முந்நீர் வண்ண ! * நின்னீரடி

ஒன்றிய மனத்தால் –* ஒருமதி முகத்து

மங்கைய ரிருவரும் மலரன * அங்கையின்

முப்பொழுதும் வருட அறிதுயி லமர்ந்தனை *

நெறிமுறை நால்வகை வருணமு மாயினை *

மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே *

அறுபத முரலும் கூந்தல் காரணம் *

ஏழ்விடை யடங்கச் செற்றனை * அறுவகைச்

சமயமும் அறிவரு நிலையினை * ஐம்பா

லோதியை ஆகத்திருத்தினை * அறம் முதல்

நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் *

இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து

நின்றனை * குன்றா மது மலர்ச் சோலை

வண்கொடிப் படப்பை * வருபுனல் பொன்னி

மாமணி யலைக்கும் * செந்நெலொண் கழனித்

திகழ்வன முடுத்த * கற்போர் புரிசைக்

கனக மாளிகை * நிமிர் கொடி விசும்பில்

இளம் பிறை துவக்கும் * * செல்வம் மல்குதென்

திருக்குடந்தை * அந்தணர் மந்திர மொழியுடன்

வணங்க * ஆடர வமளியில் அறிதுயில்

அமர்ந்த பரம ! * நின்னடியிணை பணிவன்

வருமிடரகல மாற்றோ வினையே. 1            திருக்குடந்தை (கும்பகோணம்)

திருவெழுகூற்றிருக்கை முற்றும்

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.