திருப்பாணாழ்வார் அருளிச்செய்த
அமலனாதிபிரான்
தனியன்கள்
(பெரியநம்பிகள் அருளிச்செய்தது)
ஆபாதசூடமநுபூயஹரிம்ஶயாநம்
மத்யேகவேரதுஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ருஷ்ட்ருதாம்நயநயோர்விஷயாந்தராணாம்
யோநிஶ்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.
(திருமலைநம்பிகள் அருளிச்செய்தது)
காட்டவேகண்டபாதகமலம்நல்லாடையுந்தி*
தேட்டரும்உதரபந்தம் திருமார்வுகண்டம்செவ்வாய்
வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து *
பாட்டினாற்கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே.
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை யாட் படுத்த
விமலன் * விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத்தம்மான் * திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. 1 1 திருவரங்கம்,
திருவேங்கடம் திருப்பதி
உவந்த வுள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற *
நிவந்த நீள்முடியன் * அன்று நேர்ந்த நிசாசரரைக் *
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மான் *
அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாமென சிந்தனையே. 2 2 திருவரங்கம்
மந்திபாய் வடவேங்கட மாமலை * வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்தரவி னணையான் *
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் *
உந்தி மேலதன்றோ அடியேனுள்ளத் தின்னுயிரே. 3 3 திருவரங்கம்,
திருவேங்கடம் திருப்பதி
சதுரமா மதிள்சூழ் இலங்கைக் கிறைவன் தலை பத்து
உதிர வோட்டி * ஓர் வெங்கணை யுய்த்தவன் ஓத வண்ணன் *
மதுர மா வண்டு பாட மாமயிலா டரங்கத்தம்மான் * திருவயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்று உலாகின்றதே. 4 4 திருவரங்கம்
பாரமாய பழ வினை பற்றறுத்து * என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான் *
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் * திரு
வார மார்பதன்றோ அடியேனை ஆட் கொண்டதே. 5 5 திருவரங்கம்
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் * அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன் *
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை *
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே. 6 6 திருவரங்கம்
கையினார் சுரிசங்கன லாழியர் * நீள்வரை போல்
மெய்யனார் * துளப விரையார் கமழ் நீண்முடி எம்
ஐயனார் * அணியரங்கனார் அரவினணை மிசை மேய
மாயனார் * செய்யவாய் ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. 7 7 திருவரங்கம்
பரியனாகி வந்த அவுணனுடல் கீண்ட * அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத் தமலன் முகத்துக் *
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி * நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே. 8 8 திருவரங்கம்
ஆல மா மரத்தினிலை மேல் ஒரு பாலகனாய் *
ஞாலமேழும் உண்டான் அரங்கத் தரவி னணையான் *
கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும், முடிவில்லதோரெழில் *
நீல மேனி ஐயோ ! நிறை கொண்டது என் நெஞ்சினையே. 9 9 திருவரங்கம்
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெ
யுண்ட வாயன் * என்னுள்ளம் கவர்ந்தானை *
அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள் * மற்றொன்றினைக் காணாவே. 10 10 திருவரங்கம்
அமலனாதிபிரான் முற்றும்
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்