[highlight_content]

Thirupalliezuchi Moolam

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த

திருப்பள்ளியெழுச்சி

தனியன்கள்

(திருமாலையாண்டான் அருளிச் செய்தது)

 

தமேவமத்வாபரவாஸுதேவம்

ரங்கேசயம்ராஜவதர்ஹணீயம்

ப்ராபோதகீம்யோக்ருதஸூக்திமாலாம்

பக்தாங்க்ரிரேணும்பகவந்தமீடே.

(திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது)

மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்

தொண்டரடிப்பொடிதொன்னகரம்* வண்டு

திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானை*

பள்ளியுணர்த்தும்பிரானுதித்தஊர்.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்

கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய் *

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்

வானவ ரரசர்கள் வந்து வந்தீண்டி *

எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் *

அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்

அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 1            1          திருவரங்கம்

கொழுங்கொடி முல்லையின் கொழு மலரணவிக்

கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ *

எழுந்தன மலரணைப் பள்ளி கொள்ளன்னம்

ஈன்பனி நனைந்த தமிருஞ் சிறகுதறி *

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்

வெள்ளெயிறுற அதன் விடத்தினுக் கனுங்கி *

அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த

அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 2            2          திருவரங்கம்

சுடரொளி பரந்தன சூழ் திசை யெல்லாம்

துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப் *

படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ

பாயிரு ளகன்றது, பைம்பொழிற் கமுகின் *

மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற

வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ *

அடலொளி திகழ் தரு திகிரி அந்தடக்கை

அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 3            3          திருவரங்கம்

மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்

வேய்ங் குழலோசையும் விடை மணிக் குரலும் *

ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்

இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை *

வாட்டிய வரி சிலை வானவரேறே !

மாமுனி வேள்வியைக் காத்து * அவபிரதம்

ஆட்டிய அடுதிறல் அயோத்தி யெம்மரசே !

அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 4            4          திருவரங்கம்

புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்

போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி *

கலந்தது குணதிசைக் கனை கடலரவம்

களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த *

அலங்கலந் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்

அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா ! *

இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்

எம்பெருமான் ! பள்ளி யெழுந் தருளாயே. 5  5          திருவரங்கம்

இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ ?

இறையவர் பதினொரு விடையரும் இவரோ ? *

மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ ?

மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டிப் *

புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்

குமரதண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் *

அருவரை யனைய நின் கோயில் முன் இவரோ ?

அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 6            6          திருவரங்கம்

அந்தரத் தமரர்கள் கூட்டங்கள் இவையோ ?

அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ ? *

இந்திர னானையும் தானும் வந்திவனோ ?

எம்பெருமான் உன கோயிலின் வாசல் *

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க

இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் *

அந்தரம் பாரிட மில்லை மற்றிதுவோ?

அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 7            7          திருவரங்கம்

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க

மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா*

எம்பெருமான் ! * படிமைக் கலம் காண்டற்கு

ஏற்பன வாயின கொண்டு நன் முனிவர் *

தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ ?

தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி *

அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்

அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 8            8          திருவரங்கம்

ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி

யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி *

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்

கந்தருவ ரவர் கங்குலு ளெல்லாம் *

மாதவர் வானவர் சாரணர் இயக்கர்

சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் *

ஆதலில் அவர்க்கு நாளோலக்க மருள

அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 9            9          திருவரங்கம்

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?

கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ ? *

துடியிடையார் சுரி குழல் பிழிந்துதறித்

துகிலுடுத் தேறினர் சூழ் புனலரங்கா ! *

தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து

தோன்றிய தோள், தொண்டரடிப்பொடி யென்னும்

அடியனை * அளியனென் றருளி உன்னடியார்க்கு

ஆட்படுத்தாய், பள்ளி யெழுந் தருளாயே. 10   10        திருவரங்கம்

திருப்பள்ளியெழுச்சி முற்றும்

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.